செவ்வாய், 24 ஏப்ரல், 2012

அற்ப ஆயுளும் 8 ம் இடமும் !?



தனது ஆயுள் அமைப்பை பற்றி தெரிந்து கொள்ள விரும்பம் இல்லாத மனிதரே கிடையாது எனலாம், பிறப்பு என்று ஒன்று இருந்தால் இறப்பு என்ற ஒன்று நிச்சயம் இது இயற்க்கை நியதி .

 கடந்த மாதம் ஜோதிட ஆலோசனை பெற வந்த ஒருவரின் மரணம்  என்னை வெகுவாக பாதித்து விட்டது, காரணம் ஜாதகர்  நன்கு படித்தவர் நல்ல அனுபவம் பெற்றவர்  வயதும் இளம் வயதே ஆனாலும் ஜாதகரின் மன கவலை மிகுதியால், தனது குடும்பத்தை பற்றி சிறிதும் கவலை கொள்ளாமலும்  தன் உயிரை தானே மாய்த்து கொண்டார் . 

தனது உயிரை தானே போக்கி கொண்டாலும் கர்ம வினை பதிவுகளில் இருந்து தப்பித்து கொள்ள இயலாத நிலையே ஏற்ப்படும், கர்மவினை பதிவினை முழுவதும் தமது வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்களை அனுபவித்து போக்கி கொள்வதே மிகவும் சரியான வழி , இதை விடுத்து  தனது உயிரை மாய்த்து கொண்டால் அந்த ஆன்மாவுக்கு முக்தி கிடைக்காமலும் , சாந்தி அடையாமலும், அடையும் துன்பத்திற்கு ஒரு அளவு கிடையாது , மேலும் ஆன்மாவை கட்டுப்படுத்தும் சில மந்திர வாதிகளிடம் அந்த ஆன்மா சிக்கி விடுமாயின் அதை விட கொடுமை எதுவும் இல்லை .

இவர்களிடம் சிக்கும் ஆன்மாவை தமது காரியத்திற்கா ஏவிவிட்டு சுயலாபம் காண்பார்கள்,  இதனால் ஏற்ப்படும் கர்ம பதிவுகளையும் அந்த ஆன்மா மறு பிறவியில் கழிக்க வேண்டி வரும் , இந்த வாழ்க்கையை விட அது மிகவும் துன்பம் தருவதாக இருக்கும்,  மேலும் இந்த பிறவியில் போக்கி கொள்ள வேண்டிய கர்ம வினை பதிவையும்  சேர்த்து அனுபவிக்க வேண்டி வரும் . 

மனிதனாக பிறவி கண்டதே தனது அறிவின் வழி நடந்து நன்மையை மட்டும் தமது வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டு,  தீமையை தவிர்த்து தாமும்  தம்மை சார்ந்தவர்களுக்கும் துன்பம் எந்த விதத்திலும் தராமல் வாழ்க்கையை நடத்தி இறை நிலையை அடைவதே பிறவி பயன் ஆகும் .

 வரும் துன்பங்கள் யாவும் நிரந்தரம் அல்ல என்பதை மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் உணர்வது மிக முக்கியம் , இந்த மன நிலையும் தன்னம்பிக்கையும் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் ஏற்ப்படும் துன்பத்திலிருந்து வெகு விரைவில் மீட்டெடுத்து சரியான  பாதையில் நடத்தி செல்லும் .

உங்களுக்கு வரும் துன்பங்கள் யாவையும் கண்டு பயம் கொள்ளாமல் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள் ஏனெனில் கர்ம வினை பதிவை போக்கி கொள்ள இறைநிலை உங்களுக்கு தரும் ஒரு வாய்ப்பாக நினைத்து வாழ்க்கையை செம்மையாக நடத்துங்கள் உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே.

 அதே போல் தன்னம்பிக்கை என்பதும் உங்களை சார்ந்ததே அதை மற்றவரால் தர முடியாது , உங்களின் நம்பிக்கையே தன்னம்பிக்கை இதை நீங்களாகவே உணர்வது முக்கியம், பிறகு பாருங்கள் உங்களின் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் , ஒவ்வொரு மணித்துளியிலும் நம்பிக்கை மிகுந்ததாகவும் , ஒரு சிறப்பான எதிர்காலத்தி நோக்கி நீங்கள் பயணம் செய்வது தெளிவாக தெரியும் பிறகு உங்களை எதிர்க்க எந்த  எமனாலும் முடியாது .

தற்கொலை செய்து கொள்ளும் தன்மை உள்ள ஜாதக நிலைகள் :

ஜாதகருக்கு 8  ம் வீடு, லக்கினம் ஆகியவை சர மண் தத்துவமாகவோ அல்லது சர நீர் தத்துவமாகவோ அமைந்து 8  ம் வீட்டுடன் சம்பந்தம் பெற்றால் , ஜாதகர் தனது மரணத்தை தானே தேடிக்கொள்ளும் துர் பாக்கியத்திற்கு ஆளாகும் நிலை ஏற்ப்படும் . மக்களின் நலன் கருதி வேறு அமைப்புகள் பற்றி எழுதவில்லை

 இந்த நிலை பெற்ற ஜாதகர்கள் அனைவருக்கும் தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை நேசிக்க கற்று கொள்வது மிகுந்த நன்மையை தரும் . இந்த அமைப்பை சேர்ந்தவர்களுக்கு குடும்ப உறவுகளும் , அவர்களது  வாழ்க்கை துணையும் ஆறுதலாக இருப்பது வாழ்க்கையை வெற்றிபெற செய்ய உறுதுணை புரியும் .

இதில் வளரும் இளம் பருவத்தினர் மிகவும் கவனமுடன் வாழ்க்கையை சவாலாக ஏற்றுக்கொண்டு வாழ்வது முக்கியம் .

இறை நிலையின் கருணையினால்  இறந்த அந்த ஆன்மா சாந்தி பெறட்டும் வரும் காலங்களில் இதுமாதிரியான ஜாதகங்களை எங்களின் கணிதத்திற்கு வராமல் இருக்க  இறைநிலை கருணை புரியட்டும் .


ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக