Thursday, April 26, 2012

உள்ளதை உள்ளபடி உண்மையாக உரைப்பதே
வணக்கம்,
(எவ்வளவு கேள்வி கேட்டாலும் கொஞ்சம் கூட ஒளிவு மறைவு இன்றி உங்களின்
தெளிவான விளக்கத்தை அளிக்கிறீர்கள்.இதை பாராட்ட வார்த்தைகளே இல்லை.இது
ஐஸ் அல்ல நிஜமான வார்த்தை.மேலும் தங்களின் பதில் மற்ற ஜோதிடரை காட்டிலும்
வித்யாசமாக உள்ளது.நான் 4 ஜோதிட ப்ளாக்குகளை கவனிக்கிறேன்.
 

1.சுப்பையா அவர்களின் வகுப்பரை என்ற ப்ளாக்.அவர் தொழில்முறை ஜோதிடர் அல்ல
எனவே ,எனக்கு எப்படிப்பட்ட மனைவி அமைவாள் என்று கேட்டால்,எப்படிப்பட்ட
மனைவி கிடைத்தாலும் அதை சந்தோஷமாக அனுபவி என்று கூறுவது அவர் பாணி.ரொம்ப
அலட்டிக்கொண்டு விதிகளை ஆராயமாட்டார்.இருந்தாலும் அதில் பல தகவல்கள்
கிடைக்கின்றன.மேலும் அஷ்டவர்கத்தை அடிப்படையாக வைத்து பலன் சொல்வது அவர்
பாணி.

பதில் : 

ஜோதிடத்தை பற்றிய கணித அறிவு இருப்பின் , பதில் சொல்ல இயலும் , அலட்டிக்கொள்ளவில்லை என்று நீங்கள் சொல்வது , அவருக்கு ஜோதிட கலையின் உண்மை புரியவில்லை என்றே அர்த்தம் , நன்றாக கதைமட்டும் சொல்ல தெரிந்தவர் போல் இருக்கிறது .

அடுத்து...

அனுபவ ஜோதிடம்.காம் எழுதும் திரு சித்தூர் முருகேசன்.
இவர் உங்களைப்போல ஜோதிடத்தை மாறுபட்ட கோணத்தில் அலசுபவர்.ஆனால் சில
நேரங்களில் அவரது எழுத்து நடை புரியாது.


பதில் : 

யாருக்கும் புரியவில்லை என்றால் ஒருவேளை அவர் இந்தியாவில் இல்லாத மொழியில் எழுதுகிறாரோ ?
 


அடுத்து...

நல்லநேரம் திரு சதீஷ்குமார்.
இவர் வழிவழியாக ஜோதிடம் பார்ப்பவர் என நினைக்கிறேன்.பாரம்பரிய ஜோதிட
விதிகளின் படியே பலன் கூறுவார்.


பதில் : 

பரம்பரை, பரம்பரையாக வருவதற்கு ஜோதிடம் என்ன குடும்ப சொத்த நண்பரே ?

அடுத்து உங்கள் ப்ளாக்.நீங்கள் எழுதும் பதிவுகள் மாறுபட்ட கண்ணோட்டத்தில்
உள்ளதால் அனைவராலும் விரும்பப்படும் என்பதே உண்மை.நன்றி)
 
இதற்க்கு காரணம் நிச்சயம் இறை அருளின் கருணையே !
 
நண்பரே தங்களின் ஆதரவுக்கு நன்றி
ஜோதிட கலை என்பது இறை அருளின் கருணையினால், எனது குரு அருள் வேல் அய்யா அவர்களாலும் , பரஞ்சோதி மகான்  அருளாசியினாலும், இல்லத்தரசி கார்த்திகா ஸ்ரீ அவர்களாலும்  எனக்கு கிடைத்தது, மேலும் இவர்களே எனது ஜோதிட ஆசிரியார்கள் .

இதை நான் அலட்ச்சியமாக எடுத்துகொள்ள இயலாது. 
மேலும் ஜோதிடம் என்பது கதை சொல்லி கதை கேட்பது இல்லை , கணிப்பும் அல்ல,  இது கணிதம் ஜோதிட கணிதம் எந்த காலத்திலும் பொய்பதில்லை .


 நமது வலை பூவிற்கு வருபவர்களுக்கு ஜோதிடத்தை பற்றி தெளிவான விளக்கம் தருவது எனது கடமை.


 காரணம் தண்ணீர் இல்லாத ஊரில் இருப்பவனுக்குதான் தண்ணீரின் அருமை புரியும், ஜோதிட ரீதியாக சரியான ஆலோசனை 
கிடைக்காமலும் , ஜோதிட ரீதியான மூட நம்பிக்கையாலும் எத்தனை எத்தனை மக்கள் பாதிக்க படுகின்றனர் என்பதை கண் முன்னே கண்டவன்


மேலும் ஆய கலைகள் 64 இதில் ஒன்று நமக்கு கிடைக்கிறது, என்றால்  அது நமது பிறவி பயன் அதில் முழு ஈடுபாட்டுடன் , அர்பணிப்புடன் இருப்பவர்களை இறை நிலை மேன்மைக்கு எடுத்து செல்லும் , இதை அனுபவ ரீதியாக நன்றாக உணர்ந்தவன் . இதை உணராமல் இருப்பவர்களை படு குழியில் தள்ளிவிடும் என்பதையும் கண்ணார கண்டவன் .


இறைநிலை நம்மை ஒரு கருவியாக கொண்டு மக்களுக்கு சேவை செய்ய கொடுத்த நல்ல வாய்ப்பாக நாம் கருதுவதே முக்கியம் . மேலும் ஜோதிடம் என்பதே உள்ளதை உள்ளபடி உண்மையாக உரைப்பதே எனும் பரஞ்சோதி மாகானின் வார்த்தைகளின் படி அமைவதே ஆகும் .
எங்களிடம் வரும் ஒவ்வோர் ஜாதக அமைப்பிலும் ஒரு புதுமையான விஷயங்களை தெரிந்துகொண்டு இருக்கிறேன், எனவே எனக்கு ஜோதிட கலையில் எந்த காலத்திலும் ஆர்வ குறைவு ஏற்ப்பட வாய்ப்பே இல்லை , மேலும் ஜோதிடத்தை உயிராக நேசிக்கும் தன்மை கொண்டவன் எனவே எனக்கு ஒவ்வொரு ஜாதகமும் , ஒவ்வொரு கேள்விகளும் மேலும் மேலும் பல விசயங்களை தந்து கொண்டே இருக்கின்றது .


எங்களின் ஜோதிடம் மற்றவர்கள் வாழ்க்கையில் சரியான வழிகாட்டியாகவும் , சரியான ஆலோசனை சொல்லுவதில் சிறந்து விளங்கும் என்பதில் சந்தேகமே இல்லை, எங்களை நாடி வருபவர்கள் அனைவரும் சுய ஜாதகத்திற்கு உட்பட்டு படி படியான முன்னேற்றம் மட்டுமே பெறுவார்கள் என்பது நிச்சயம் .  


ஜோதிடன் வர்ஷன் 
9443355696 கேள்வி:

1.ஒரு ஜாதகத்தை பார்க்கும்போது எடுத்த உடன் என்னென்ன விஷயங்களை பார்க்கவேண்டும்?
எந்தெந்த வீடுகள் பலமாக உள்ளது?
எந்தெந்த கிரகங்கள் பலமாக உள்ளது என்பதை எப்படி தெரிந்துகொள்வது?


பதில் :
 வீடுகள் பலமாக இருக்கிறதா என்றே பார்க்க வேண்டும்  இதில் சந்தேகமே வேண்டாம் , காரணம் நடக்கும் திசைகள் அனைத்தும் பாவக வழியில் நின்றே பலனை செய்யும் , வீடுகள் நன்றாக இருந்தாலே நிச்சயம் கிரகங்கள் ஜாதகத்தில் வழு பெற்று நிற்கும் , இதில் கோட்சார ரீதியான கிரகங்கள் அந்த வீடுகளுக்கு எவ்வித பலனை செய்கிறது என்று தெரிந்தால் போதும் ஜாதக அமைப்பை பற்றிய முழு நிலையையும் தெரிந்து கொள்ள இயலும்  .எந்தெந்த வீடுகள் பலமாக உள்ளது?
எந்தெந்த கிரகங்கள் பலமாக உள்ளது என்பதை எப்படி தெரிந்துகொள்வது? 


இது ஒரு பதிவில் நிச்சயம் தெரிந்து கொள்ள வாய்ப்பு இல்லை , வரும் காலங்களில் நிச்சயம் தெரிந்துகொள்ள இறை அருள் துணை புரியும் .


ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

No comments:

Post a Comment