செவ்வாய், 17 ஏப்ரல், 2012

1978 , 1979 , 1982 , ஆண்டு பிறந்தவர்களுக்கு ஒரு எச்சரிக்கை !






1978 , 1979 , 1982 , 


 ஆண்டுகளில்  பிறந்தவர்களுக்கு தற்பொழுது நடக்கும் , பலன் சற்றே கடுமையானதாக இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது .

இந்த ஆண்டுகளில் பிறந்த ஆண் என்றாலும் , பெண் என்றாலும்  தனது 45 வயதுவரை  வாழ்க்கையை சற்றே கவனமுடன்  நடத்துவது சகலத்திற்கும் நலம் தரும் , மேலும் இந்த காலங்களில் வரும் உடல் உபாதைகளை கவனிக்காமல் விடுவது , அதிக பாதிப்பை தருவதற்கு வாய்ப்பளிக்கும் .

சுய தொழில் புரிவோர் நிச்சயம் அதிக கவனமுடன் தனது தொழிலை செய்வது தொழில் ரீதியான பாதிப்புக்களை தவிர்க்க இயலும் , பணியில் உள்ளவர்கள் நிச்சயம் மேலதிகாரிகள் , வேலையாட்கள்  உடன் அனுசரித்து செல்வது மிக நல்லது , வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது அதிக கவனத்துடன் , பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளுவது மிகுந்த நன்மை பயக்கும் .

இந்த ஆண்டுகளில் பிறந்த தம்பதியர்களுக்கு மற்றவர்களால் நிச்சயம் பாதிப்பு ஏற்ப்பட வாய்ப்பு உள்ளது மேலும் தேவையில்லாத நபர்களுடன் நட்பு பாராட்டுவது 100  சதவிகித தீமையான பலனையே தரும். உறவினர்களுடன் அளவுடன் நடந்துகொள்வது நன்மைதரும் .

இந்த ஆண்டுகளில் பிறந்த பெண்கள் அனைவரும் உடல் ரீதியாக முதுகு வலி அல்லது தண்டுவட பிரச்சனைகள் ஏற்ப்பட அதிக வாய்ப்பு உள்ளது, முறையான உடற் பயிற்ச்சிகளை மேற்கொள்ளுவது உடல்ரீதியான பாதிப்புகளில் இருந்து காத்துக்கொள்ள இயலும் , உணவு கட்டுப்பாடு மிக அவசியம் , சரிவிகித உணவை எடுத்து கொள்வது ரத்தத்தில் சத்து குறைவை போக்கும் , மன அழுத்தம் காரணமாக கோப உணர்வு தலை தூக்க வாய்ப்பு உள்ளது கவனம் தேவை .

    இந்த ஆண்டுகளில் பிறந்த ஆண் என்றாலும் , பெண் என்றாலும்  தனது 45 வயதுவரை நடக்கும் பலன்கள் கொஞ்சம் சிரமமாக இருக்கின்ற காரணத்தினால், சம்பந்த பட்டவர்கள் வருடம் தவறாமல் சனி பிரதோஷ வழிபாடு செய்வது மிகுந்த நன்மை தரும் .

அல்லது சூரிய உதயத்திற்கு முன் எழுந்து சூரிய நமஸ்காரம் செய்வது அனைத்து  கேடு பலன்களில் இருந்தும் தங்களை 45  வயது வரை   
காப்பாற்றும் . இறைநிலை அனைவருக்கும் நன்மை வழங்கட்டும் .

இந்த ஆண்டுகளில் பிறந்து திருமண வாழ்க்கை அமையாதவர்கள் எங்களை தொடர்பு கொண்டு திருமணம் இனிதே அமைய பெறுங்கள்.

ஜோதிடன் வர்ஷன் 
9443355696  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக