புதன், 4 ஏப்ரல், 2012

ஜோதிட ஆலோசனை!



 

கேள்வி :
 என் பெயர் V.சிவக்குமார்    (16.11.1985 , 10:26 PM ,
PLACE: Tirupur) எப்பொழுது சொந்தத்தொழில் மேன்மை அமையும் தயவு செய்து உதவுங்கள் , எந்த கிரகம் (அ) தெய்வ வழிபாடை மேற்க்கொள்ள வேண்டும், காப்பாற்றுங்கள்?

 பதில் :

 ஜோதிட ஆலோசனை கட்டணமாக  உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட ஒரு பத்து பேருக்கு அண்ணதானம் செய்துவிடு தம்பி.

சரி உனது ஜாதகரீதியான பலன்களை இனி பார்ப்போம் :


அருமையான கடக லக்கனத்தில் பிறந்து தனுசு ராசியை பெற்றிருக்கும் சிவக்குமார், உங்களது ஜாதகத்தில் , பாதிப்படைந்த வீடுகள் கீழ்கண்டவாறு :

5 ,7 ,11 வீடுகள்  - 11 ம் வீடு எனும் பாதக ஸ்தனத்துடன் சம்பந்தம்.

(சர லக்கினத்திற்கு  11 ம் வீடு  பாதக ஸ்தானம் ஆகும் எனவே 200  மடங்கு தீமை தரும்)  

6  , 9  , வீடுகள் - 8 ம் வீட்டுடன் சம்பந்தம். 

( 8 ம வீடு ஸ்திர காற்று தத்துவமாக வருகிறது எனவே இந்த பாவக வழியில் ஜாதகர் 66  சதவிகிதம் தீமையான பலனை அனுபவிப்பார் .)

தம்பி சிவகுமார் உனது பூர்வீகத்தை விட்டு ஒரு 100  கிலோமீட்டருக்கு அப்பால் சென்றுவிடு இரண்டு வருட காலத்திற்க்குள் அபரிவிதாமான செல்வ நிலையினை பெற்று விடுவாய், மேலும் தற்பொழுது தொடர்பு கொண்டுள்ள பெண் நண்பர்களை விட்டுவிட்டு விலகி இருப்பது நலம் தரும் அல்லது  பெண் நண்பர்கள் தொடர்பு வருங்காலத்தில் ஏற்ப்படகூடும் எனவே விழிப்பாக இருப்பது நலம் ? 

 இதனால் உனக்கு அவ பெயர் உண்டாக வாய்ப்பு ஏற்ப்படும், உனது ஜாதகம் மிகவும் சிறப்பாக உள்ளது உனது ஜாதகத்தை நீயே கெடுத்து கொள்ள வேண்டாம். 

உனது தாய் தாந்தையுடன் சேர்ந்து இருப்பது உனது முன்னேற்றத்தை அதிகம் பாதிக்கும். மேலும் சுய தொழில் செய்து மிக விரைவாக வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் அமைப்பு உள்ளது, இது உனது 30  வயது முதல் வாழ்க்கையின் இறுதி வரை அமையும் .

கடன் பெறுவது உன்னை படு குழியில் தள்ளிவிடும் மேலும் அவ பெயரை ஏற்ப்படுத்திவிடும் எனவே எச்சரிக்கையாக இருக்கவும் .  

வரும் வருவாயை சிக்கனமாக செலவு செய்வதும் , சேமிப்பை வைத்து கொள்வதும் உனக்கு நலம் தரும்.

புதன் சுக்கிரன் இரு கிரகங்களையும் வழிபாடு செய்வதும் , வலு செய்வதும் உனக்கு நலன்களையும் வாரி வழங்கும், தினமும் அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்து சூர்யா நமஸ்காரம் செய்துவருவது வெற்றிகரமான வாழ்வினை தரும் .

உனது நல வாழ்விற்காக ஒரு மணி நேரம் ஒதுக்கி எங்களை நேரில் வந்து சந்தித்து ஜோதிட ஆலோசனை பெறுவது நலம் தரும். முயற்ச்சி செய், இங்கு சொன்ன ஜோதிட ஆலோசனை வெறும் 10  சதவிகிதம் மட்டுமே ! 

 ஜோதிடன் வர்ஷன் 
9842421435 
9443355696  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக