வெள்ளி, 27 ஏப்ரல், 2012

செவ்வாய் தோஷமும்! ஆராய்ச்சி கூடமும் !





வணக்கம்,


பொதுவாக செவ்வாய் லக்னாத் 2,4,7,8,12ல் இருந்தால் செவ்வாய் தோஷம் என்றும் அது போதுவிதி என்றும் அதற்கு சில விதிவிலக்குகளையும் அளித்துள்ளனர்.அதில் சில சந்தேகம் உள்ளது.அவை,
 
கேள்வி : 

1.கடகம் லக்னமாக இருந்து செவ்வாய் எங்கிருந்தாலும் தோஷம் இல்லை
என்கிறார்கள்.காரணம் செவ்வாய் நெருப்பு கிரகம்.கடக அதிபதி சந்திரன் நீர்
கிரகம் .எனவே நெருப்பு நீரில் பலம் இழந்துவிடுகிறது.எனவே செவ்வாய்
தோஷமற்றதாகிவிடுகிறது என்கிறார்கள்.இது சரியா?
 
பதில் :

ஒரு பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து கொண்டே இருங்கள் இறுதியில் என்னவாகும், தொடர்ந்து எரியும் நெருப்பின் வெப்பம் தாளாமல் பாத்திரத்தில் இருக்கும் நீர் ஆவி ஆகிவிடும் , இந்த இடத்தில் நெருப்புக்கு அதிக சக்தியா? , நீருக்கு அதிக சக்தியா ?  


என்ன அதிர்ச்சி அடைந்து விட்டீர்களா நண்பரே, நான் இப்பொழுது சொன்ன கதை போல் , நீங்கள் கேட்ட கேள்வியிலும் ஒரு கதையை சொல்லி மக்களை மூட நம்பிக்கையில் தள்ளுவது சில ஜோதிடர்களின் பிழைப்பு அதைபற்றி நமக்கு என்ன கவலை , உண்மை என்ன என்பதை பற்றி இனி நாம் பார்ப்போம் :

கால புருஷ தத்துவத்தில் மேஷம் முதல் வீடாக வந்து அதற்க்கு அதிபதி செவ்வாய் ஆகிறார் , அந்த வீடு நெருப்பு தத்துவத்தில் செயல்படுகிறது சர ராசியாக வருகிறது , அடுத்து  கால புருஷ தத்துவத்தில் எட்டாம் வீடு விருச்சகம்,  இது  செவ்வாய்க்கு உண்டான மற்றொரு வீடு, இந்த அமைப்பு ஸ்திர அமைப்பு நீர் ராசியாக அமைகிறது . 
இதன் செயல் பாடுகள் என்ன ?

  இயற்கையில் நவகிரகங்களுக்கு ஒரு தன்மை உண்டு அதாவது எந்த காரணத்தை கொண்டும், சுய ஜாதகத்தில் லக்கினத்திற்கும் , தனது வீட்டிற்கும் நன்மையை செய்யும் அமைப்பில் அமருமாயின்,  அது ஆட்சியோ , உச்சமோ , நட்போ , சமமோ , பகையோ , நீச்சமோ எந்த தன்மையை அந்த கிரகம் ராசியில் பெற்றாலும் நன்மை மட்டுமே செய்யும்.

இதுவே மாறி லக்கினத்திற்கும் , தனது வீட்டிற்கும் தீமையை செய்யும் அமைப்பில் அமருமாயின்,  அது ஆட்சியோ , உச்சமோ , நட்போ , சமமோ , பகையோ , நீச்சமோ எந்த தன்மையை அந்த கிரகம் ராசியில் பெற்றாலும் தீமையை மட்டுமே செய்யும். இதுவே கிரகங்களின் வலிமை .  

செவ்வாய் பகவானும்  2,4,7,8,12ல் இருந்தாலும் அல்லது லக்கினத்திற்கு எந்த வீடுகளில் இருந்தாலும் நன்மையோ தீமையோ சுய ஜாதகத்திற்கு உட்ப்பட்டு அந்தந்த வீடுகளுக்கு உண்டான பலனை மட்டுமே செய்யும் .

அப்படி பார்க்கும் பொழுது கடக லக்கினமாக வந்து செவ்வாய் பகவன் சிம்மம் , துலாம் , மகரம் , கும்பம் , மேஷம் , மிதுனம் ஆகிய ராசிகளில் செவ்வாய் இருப்பின் பாரம்பரிய முறையில்  செவ்வாய் தோஷம் என்று சொல்லக்கூடும் , இதில் நமது ஜோதிட கணித முறைப்படி , தேய்பிறை சந்திரனாக வந்து கடக இலக்கின ஜாதகருக்கு  செவ்வாய் , மகரத்தில் அமர்வது மிக சிறந்த நன்மைகளை தரும் , தனது வீட்டுக்கு 10 மற்றும் 6 வீடுகளுக்கு 100  சதவிகித நன்மையே  செய்யும் . 

வளர் பிறை சந்திரனாக வந்து கடக இலக்கின ஜாதகருக்கு  செவ்வாய் , மகரத்தில் ( 7  ல் ) அமர்வது லக்கினத்திற்கு மட்டும் தீமையை தரும் , தனது வீட்டுக்கு 10 மற்றும் 6 வீடுகளுக்கு 100  சதவிகித நன்மையே  செய்யும் . 

இந்த வகையில் செவ்வாய் 100  சதவிகித  நன்மையையும் .

கடக லக்கினத்திற்கு 10  ல் செவ்வாய் அமருவது ஜீவன ( 10 வீடு  ), மற்றும் ரண ருண  ( 6 வீடு  ), வழியில் 100  சதவிகித  தீமையான பலன்களையே தரும் மேலும் தேய்பிறை சந்திரனாக இருப்பின் லக்கினத்திற்கு மட்டும் நன்மை செய்யும் , வளர் பிறை சந்திரனாக இருப்பின் லக்கினத்திற்கும் 100  சதவீதம் தீமையை மட்டும் செய்யும்.

இந்த வகையில் செவ்வாய் 100  சதவிகித தீமையும்   செய்யும் பொழுது எப்படி கடக இலக்கின ஜாதகருக்கு செவ்வாய் எங்கு அமர்ந்தாலும் நன்மை செய்யும் என்று எடுத்து கொள்வது 

மேலும் துலாத்தில் 4  ல்  அமரும் செவ்வாய் ஜீவன ( 10 வீடு  ), வழியில் நன்மையையும்  ரண ருண  ( 6 வீடு  ), வழியில் தீமையும் , இலக்கணத்திற்கு எவ்வித பலனையும் தராமலும் அமையும் .

சிம்மத்தில்  2  ல் அமரும் செவ்வாய்  ஜீவன ( 10 வீடு  ), வழியில் தீமையும்   ரண ருண  ( 6 வீடு  ), வழியில் நன்மையையும், இலக்கணத்திற்கு எவ்வித பலனையும் தராமலும் அமையும் .
   
  மிதுனத்தில் 12  ல் அமரும் செவ்வாய் ஜீவன ( 10 வீடு  ), வழியில் நன்மையையும்  ரண ருண  ( 6 வீடு  ), வழியில் தீமையும், இலக்கணத்திற்கு எவ்வித பலனையும் தராமலும் அமையும் .

இதில் செவ்வாய் எந்த வகையில் தீமை செய்யாது என்று நிர்ணயம் செய்வது .

இதிலிருந்து நமக்கு தெரிவது என்னவென்றால் சுய ஜாதக அமைப்பை வைத்தே கிரகங்களின் வலிமையை நிர்ணயம் செய்ய வேண்டும் .

2,4,7,8,12ல் இருந்தால் செவ்வாய் தோஷம்  என்று சொல்வதே தவறு , செவ்வாய் தோஷம் என்ற ஒன்று இல்லை என்பதே எனது ஆணித்தரமான கருத்து , ஜோதிடர்கள் தனது பிழைப்புக்காக இடையில் புகுத்தியதே இந்த செவ்வாய் தோஷம் .

நவகிரகம் அனைத்தும் ஜீவன் ( உயிர் ) போன்றது , சுய ஜாதகத்தில் உள்ள 12  வீடுகளும் உடல் போன்றது , நாம் செய்யும் கர்மவினைக்கு ஏற்றார் போல்  இந்த 12  வீடுகளையும் வலிமை , வலிமை அற்ற தன்மை என்ற இரு  நிலைகளில் நவகிரகங்கள் ஆளுமை செய்கின்றது , எனவே ஒரு கிரகத்தை மட்டும் வைத்துகொண்டு தோஷம் என்று நிர்ணயம் செய்வது முற்றிலும் தவறான அணுகு முறை .

 செவ்வாய் கடகம் என்ற ஒரு லக்கினத்திர்க்கே பலவித பலனை அமரும் தன்மைக்கு ஏற்ப செய்கிறது , எனும் பொழுது மற்ற லக்கினத்திற்கும் ,  அமரும் தன்மைக்கு ஏற்ப நன்மை தீமை பலனையே வழங்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

 சரி எனில் அந்த ஜாதகத்தில் செவ்வாயின் அனைத்து காரகங்களும் பலமற்றதாக அல்லவா ஆகிவிடும்.எனவே அந்த ஜாதகருக்கு செவ்வாயால் அனுகூலமற்ற தன்மை அல்லவா ஏற்படும்?இதை விளக்கவும்.
 
பதில் : 

இல்லவே இல்லை சுய ஜாதகத்திற்கு உட்ப்பட்டு அந்தந்த பாவகத்துக்கு உண்டான பலனை நிச்சயம் செய்யும் இதில் பாகுபாடு என்பதே இல்லை , ஏனெனில் நவகிரகங்கள் தனது கடமைகளில் இருந்து  ஒருபோதும் தவறுவது இல்லை , மனிதர்கள் வேண்டுமானால் அதுபற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கலாம் .

 


கேள்வி :
 

2.சிம்ம லக்ன காரர்களுக்கு செவ்வாய் எங்கிருந்தாலும் தோஷமில்லை
என்கிறார்கள்.காரணம் சிம்மம் செவ்வாயின் நட்பு வீடு என்கிறார்கள்.இது
எந்த வகையில் சரியாகும்?
 

 பதில் : 

சிம்ம இலக்கின ஜாதகருக்கு செவ்வாய் 9  வீடு 4  வீடு என்ற அமைப்பில் இரு வீடுகளுக்கு  அதிபதியாக வருவார் இந்த வகையில் விருச்சகம் , தனுசு ராசியில் செவ்வாய் அமர்ந்தால் சிம்மலக்கினத்திற்கு 100  சதவிகிதம் தீமையை மட்டுமே செய்வார் , இந்த அமைப்பை சேர்ந்த ஜாதகரை கேட்டால் தெரியும் அவர் படும் பாடு .

 இந்தவைகை அமைப்புள்ள  ஜாதகருக்கு  பாதிக்கும் காரகம் நான்கா பவம் , பூர்வ புண்ணியம் வழியில் இருந்து அதிக தீமையான பலனை மட்டுமே அனுபவிக்கும் தன்மை ஏற்ப்படும் , நடக்கும் திசைகளில் இந்த வீடுகளின் பலன் நடந்தால், சற்றே ஆய்வுக்கு எடுத்துகொண்டு பாருங்கள் நண்பரே !   

இந்த இரு ராசிகளை ( விருச்சகம் , தனுசு ) தவிர மற்ற ராசிகளில் செவ்வாய்  அமரும் பொழுது சிம்ம லக்கினத்திற்கு  தனது வீடுகளுக்கு,  ஒன்றுக்கோ அல்லது இரண்டிற்குமோ நன்மையை செய்யும் என்பதாலோ இந்த காரணம் சொல்ல பட்டு இருக்கலாம் ?

இந்த விதி சரி எனில் எந்த கிரகமும் தன் நட்பு வீட்டில் இருந்தால் அது
தோஷத்தை ஏற்படுத்தாதா?ஒருவருக்கு 5ல் ராகு அமர்ந்தால் தோஷம்.அதுவே அந்த 5ம் இடம் ராகுவின் நட்பு வீடாக இருந்தால் தோஷம் இல்லை என கூறலாமா?


பதில் : 

 இயற்கையில் நவகிரகங்களுக்கு ஒரு தன்மை உண்டு அதாவது எந்த காரணத்தை கொண்டும், சுய ஜாதகத்தில் லக்கினத்திற்கும் , தனது வீட்டிற்கும் நன்மையை செய்யும் அமைப்பில் அமருமாயின்,  அது ஆட்சியோ , உச்சமோ , நட்போ , சமமோ , பகையோ , நீச்சமோ எந்த தன்மையை அந்த கிரகம் ராசியில் பெற்றாலும் நன்மை மட்டுமே செய்யும்.

இதுவே மாறி லக்கினத்திற்கும் , தனது வீட்டிற்கும் தீமையை செய்யும் அமைப்பில் அமருமாயின்,  அது ஆட்சியோ , உச்சமோ , நட்போ , சமமோ , பகையோ , நீச்சமோ எந்த தன்மையை அந்த கிரகம் ராசியில் பெற்றாலும் தீமையை மட்டுமே செய்யும். இதுவே கிரகங்களின் வலிமை . 


கேள்வி :

3.செவ்வாய் தனது உச்ச,ஆட்சி ,நீச வீடுகளில் இருந்தால் தோஷமில்லை
என்கிறார்கள்.இது முரண்பாடாக இல்லையா?
ஒரு கிரகம் தன் வீட்டிலோ,உச்ச வீட்டிலோ இருக்கும்போது அது பலம் அதிகமாக உள்ளதாக அல்லவா இருக்கும்.
எனவே செவ்வாய் அதிக தோஷம்தானே ஏற்படுத்துவார்?நீச வீட்டில் செவ்வாய் பலம் குன்றிவிடும்.சோ செவ்வாயின் காரகம் குன்றிவிடும்தானே?


பதில் : 

செவ்வாய் எங்கு இருப்பினும் அது எந்த இலக்கணம் ஆனாலும் , தனது பாவத்திற்கும் அமரும் வீடுகளுக்கும் , எவ்வித பலனை தர வேண்டுமோ அதை சரியாக செய்யும் இதில் நிச்சயம் விதி விளக்கு என்பதே இல்லை , இது செவ்வாய்க்கு மட்டும் அல்ல அனைத்து கிரகங்களுக்கும்  பொருந்தும் .




கேள்வி :

4.குரு,சந்திரன்,புதன் இவர்களுடன் சேர்ந்தாலும் பார்த்தாலும் தோஷமில்லை
என்கின்றனர்.அதேபோல சூரியன்,சனி,ராகு,கேது இவற்றுடன் சேர்ந்தாலும்
பார்த்தாலும் தோஷமில்லை என்கின்றனர்.இது முரண்பாடாக இல்லையா?
சுபகிரகத்துடன் சேர்ந்தாலும் பார்த்தாலும் தோஷமில்லை என்றால்
ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் அசுப கிரகத்துடன் சேர்ந்தாலும் பார்த்தாலும்
தோஷமில்லை என்பது லாஜிக்காக இல்லையே!இது பற்றிய தங்கள் கருத்து?
 


 பதில் :

ஒன்பது கிரகமும் உச்சம் பெற்ற ஒருவன் , " ஒருவன்  " செல்போனில் பேட்டரி போட்டாலும் பேசலாம் போடாவிட்டாலும் பேசலாம் என்பதை போல்,

ஒன்பது கிரகமும் உச்சம் பெற்ற ஒரு ஜோதிடன் சொல்லும் ஜோதிட பொன்மொழிகள் இது,  இதை தஞ்சாவூர் கல்வெட்டில் பதித்து வைத்துகொண்டு அந்த இடத்திலேயே அமர்ந்து விடவேண்டும் , அவர்களுக்கு பிறகு வரும் பரம்பரை ஜோதிடர்கள் இதை பார்த்து  அதன் படி நடந்துகொள்வார்கள் .
 
இதைதான் ஜோதிடத்தில் வாய் ஜாலம் என்று சொல்வார்கள் , எதிரில் அமர்ந்து ஜோதிட பலன் கேட்பவர் என்ன  வானவியலில் ஆராய்ச்சி செய்துவிட்ட வந்திருக்க போகிறார், என்ற ரீதியில் வரும் பதில் இது கிரகங்களின் தன்மையும் சுய ஜாதகத்தில் அமரும் நிலையம் அதன் வலிமையையும் பற்றி தெரியவில்லை என்றாலும் இந்த நிலையே ஜோதிடர்களுக்கு ஏற்ப்படும் , அதாவது காக்காய் சிட்டிங் , பனங்காய் பாலிங் .


மேலும் கிரகங்கள் பற்றிய பொதுவான கருத்துக்களை மக்களிடம் சொல்லிவிட்டு வருமானத்தை மட்டுமே குறியாக இருப்பவர்களிடம் இருந்து வரும் பதில் இது , ஜோதிடம் கேட்க வந்தவர் எப்படி போனால் நமக்கு என்ன என்ற எண்ணமமும் இதற்க்கு காரணம்,  தோஷம் என்று சொல்வதே தவறு என்று நினைப்பவன்,  சுய ஜாதகத்தில் கிரகங்களின் வலிமையை பொருத்தும் வீடுகளின் வலிமையை பொருத்தும் ஜாதகரின் வாழ்க்கை அமையும் என்பதே உண்மை. 

நாம் கோவில் வழிபாடும் , இரத்தின ஆகர்ஷ்ணமும் செய்துகொள்வது கிரகங்களின் வலிமையை, வீடுகளின் வலிமையை உயிர்கலப்பு பெறுவதற்கே . என்ற உண்மையை உணர்வது அவசியம் .

 

5.செவ்வாய் தோஷம் என்றால் அந்த ஜாதகருக்கு என்ன மாதிரியான பிரச்சனை ஏற்படும்?



 பதில் :
என்ன பிரச்சனை வந்தாலும் அதற்க்கு தீர்வுன்று ஒன்று நிச்சயம் இருக்கும் , அதை பெறுவதற்கு அறிவு என்ற ஒரு மிகப்பெரிய சக்தியை நம் அனைவருக்கும் இறைவன் கொடுத்து இருக்கிறார், நமக்கு தேவை அறிவு வழி தேடுதல் மட்டுமே , தேடுதல் இருப்பின் நிச்சயம் வழி கிடைக்கும் .

கேள்வி :

6.ரத்த வகைக்கும் செவ்வாய்கும் சம்மந்தம் உண்டு என்கிறார்களே,அதாவது
செவ்வாய் தோஷம் உள்ளவர்,தோஷம் அற்றவர்,பரிகார செவ்வாய் என்ற அமைப்பில் 3விதமாக ரத்தவகை வேறுபடும் என்கிறார்களே.இது பற்றிய தங்கள் கருத்து?

பதில் :

எந்த ஆராய்ச்சி கூடத்தில் இது நிருபிக்க பட்டு இருக்கிறது என்று எங்களுக்கு இதுவரை தகவல் இல்லை நண்பரே! அப்படி ஏதாவது ஒரு இடத்தில் நிருபிக்க பட்டு இருப்பின் தயவு செய்து அதன் முகவரியை எங்களுக்கு தாருங்கள் நாங்களும் அதை பற்றி தெரிந்து கொண்டு பலன் பெறுவோம்.

இது உலக மகா நகைச்சுவையாக இருக்கிறது நண்பரே ! 

செவ்வாய் பகவான் மட்டும் இங்கு இருந்தால், கைபுள்ள கணக்காக 
( டேய் ! கட்ட துறைக்கு (ஜோதிடர்கள் ) கட்டம் சரியில்ல  நம்ம கூட விளையாடறதே வேலையா போச்சு கிளம்புங்கட அவர்களை ஒரு கை பாக்கலாம் ) என்று கிளம்பியிருப்பார் . இதுவும் ஜோதிடத்தில் ஒரு மூட நம்பிக்கை .


கேள்வி :

7.வக்ர செவ்வாய்க்கு செவ்வாய் தோஷத்தில் பங்கு இல்லையா?

பதில் :

ஜாதகத்தில் அமரும் இடத்திற்கு ஏற்ப வீடுகளுக்கு உண்டான பலனை மட்டும்  தரும், எடுத்துகாட்டாக நீர் ராசியில் அமர்ந்து வக்கிரகம் பெற்று , அந்த வீடு பாதிக்க பட்டு இருக்குமாயின், மன ரீதியான போராட்டங்களை அதிகம் தரும் , மண் தத்துவ ராசியில் அமர்ந்து, அந்த வீடு பாதிக்க பட்டு இருப்பின் உடல் நிலையில் பாதிப்பை தரும் . இதை தவிர மற்ற ராசிகளில் மற்ற வீடுகளில் அமருமாயின் பாதிப்பான பலனை தருவதற்கு வாய்ப்பு இல்லவே இல்லை .


கேள்வி :

8.மேலும் செவ்வாய் தோஷம் பற்றி தாங்கள் கூற நினைக்கும் கருத்துக்களை வழங்கவும்.
நன்றி


எங்களை கேட்டால் :

செவ்வாயும் மற்ற கிரகங்கள்  போல்  ஒன்றே , நமது கர்ம  வினை பதிவிற்கு ஏற்றவாறு நன்மையோ தீமையோ பலனை தரும் தன்மை கொண்டது என்றும் , தனியாக செவ்வாய் தோஷம் என்ற ஒன்று இல்லை என்றும் சரியான பதில் வரும் .


மற்ற ஜோதிடரை கேட்டால் :

செவ்வாய் தோஷம் நிச்சயம் உண்டு , இதில் பல்வேறு  வகை உள்ளது , தங்களுக்கு தெரியாத  செவ்வாய் ஒன்றும் இல்லை ,   இதில் எது  சிறந்த செவ்வாயோ அதை தேர்ந்தெடுத்து நல்ல செவ்வாயை கொடுக்க வேண்டும் மை லார்ட் !  என்று ஜாதகத்தை வாங்கும் பொழுதே  கடவுளிடம் வேண்டிகொல்வார்கள் .

பிறகு அதற்க்கு பரிகாரமாக செவ்வாய் கிரகத்துக்கு சென்று வழிபாடு செய்து ,  நன்மை பெற வேண்டும் என்று சொன்னால்,  கூட ஆச்சரிய படுவதிற்கில்லை.  

ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

1 கருத்து:

  1. ஐயா, எனது பிறந்ததிகதி 30.8.1988 8.30pm Jaffna, Srilanka. Male, எனது ஜாதகத்தில் செவ்வாய் உள்ளதா? பரிகாரம்...?
    ( ல என்ற இடத்தில் செ என்று உள்ளது...)

    பதிலளிநீக்கு