வெள்ளி, 27 ஏப்ரல், 2012

போவோம காசி ராமேஸ்வரம் ?



கடந்த வாரத்தில் எங்களிடம் ஜோதிட ஆலோசனை பெற ஒரு நண்பர் வந்திருந்தார் அவருடைய தோற்றமும் பேச்சும் , பார்க்கும் பொழுது வாழ்க்கையில் ரொம்ப பாதிக்க பட்டது போல் இருந்தது , வந்தவர் அய்யா எனது நண்பர் தங்களிடம் ஜோதிட  ஆலோசனை பெற கடந்த மூன்று மாதங்களுக்கு முன் வந்திருந்தார்.

 அவர் பெயர் மூர்த்தி (தலை நகருக்கு சென்று  கிரகங்களை அக்டிவேசன் செய்து தன்னிடம் இருந்த இரண்டு லாரிகளையும் டீ அக்டிவேசன் செய்தவர் )   மற்றும்  எனது நெருங்கிய நண்பர் தங்களின் ஆலோசனையின் படி தற்பொழுது செய்துவரும் தொழில் படிப்படியான முன்னேற்றத்தை பெற்று வருகிறார் , நானும் அவர் செய்யும் தொழிலை வேறு இடத்தில் செய்து வருகின்றேன்.

 கடந்த ஆறு மாதங்களுக்கு முன் ஒரு  ஜோதிடர் என்னை குடும்பத்துடன் காசி ராமேஸ்வரம் சென்று வாருங்கள் , உங்கள் ஜாதகத்தில் சூரியன் சந்திரன் இரண்டும் கெட்டுவிட்டது என்று சொன்னதை கேட்டு நம்பி !  குடும்பத்துடன் காசி சென்று வந்தோம் வந்ததிலிருந்து,  எனது தொழில் நீட்டி நெடுங்கடையாக படுத்து விட்டது , மேலும் அவர் பேச்சை கேட்டு கோமேதகமும் , வைடுரியமும் வலது இடது கையில் போட்டு இருக்கிறேன் . குடும்பத்தில்  நிம்மதிஎன்பதே இல்லை எனக்கு ஒரு நல்ல வழியை காட்டுங்கள் என்று கேட்டார் .


சரி தொழில் எப்படி பாதிக்க பட்டது என்றேன் , காசி ராமேஸ்வரம் சென்றிருந்த போது இவர் நம்பிக்கையாக தனது நிறுவனத்தை நிர்வாகிக்க விட்டுருந்த மேலாளரும் , அவரது நண்பரும்  சேர்ந்து அவரது நிறுவனத்திற்கு வந்த வாய்ப்புக்ளை எல்லாம் வசப்படுத்தி , இவரது நிறுவனத்திற்கு பக்கத்திலேயே  ஒரு புதிய நிறுவனத்தை ஆரம்பித்து நன்றாக பயன்   படுத்திகொண்டு முன்னேற்றம் பெற வழி வகுத்துகொண்டனர் என்றார் , மேலும் இவர் வந்தவுடன் அந்த மேலாளர் சில காரணங்களை சொல்லி வேலையை விட்டு விலகி விட்டார் என்றும்  வருத்தத்துடன் கூறினார் .


பிறகு  அவரது ஜாதகத்தை வாங்கி கணிதம் செய்த பொழுது ஜோதிடர் சொன்னது போல் சூரியனும் , சந்திரனும் எவ்வித பாதிப்பான பலனையும் தரவில்லை , மேலும் ஜாதகருக்கு வயது 28 இந்த வயதில் ஜாதகர் தொழிலை கவனிக்காமல்  காசி ராமேஸ்வரம் என்று போனால் தொழில் நீட்டி நெடுங்கடையாக படுக்காமல் , 100  சதவிகித வளர்ச்சியினையா  பெரும் ?

யாராவது திண்ணையில் உட்கந்துகொண்டு பொழுதை போக்க எதையாவது உளறினால், அதை அப்படியே நம்பிக்கொண்டு செய்தால் விளைவு இதுதான் .

 திண்ணையில் உட்காந்து கொண்டு சொல்கிறவனுக்கு உன்னை பற்றி என்ன கவலை , அவனுக்கு வருவது வந்தால் போதும் என்று அவன் சொல்லுவதை சொல்லத்தான் செய்வான்,  உனக்கு எங்கு போயிற்று புத்தி என்று கேட்டதற்கு ஜாதகர் தலையை கவிழ்ந்து கொண்டார் , பிறகு ஜோதிட ரீதியான சரியான பலன்களை சொல்லி தொழில் வளர்ச்சி பெற, செய்ய வேண்டியவைகளையும் அறிவுறுத்தி அனுப்பி வைத்தோம் .

எனக்கு தெரிந்து காசி ராமேஸ்வரம் எல்லாம் வாழ்க்கையின் இறுதி காலங்களில்  வாழ்ந்து முடித்தவர்கள் செல்ல கூடிய இடங்கள், செய்த பாவங்களையும் வினைகளையும் தீர்த்து கொண்டு இறை நிலையை அடைய செல்வார்கள் என்பது  ஐதிகம் , ஆனால் இந்த தம்பிக்கு வயது 28 இவன் என்ன வாழ்க்கையை வாழ்ந்து முடித்திருப்பான் என்று இதை சொன்ன அந்த  ஜோதிடனுக்கே  வெளிச்சம் .

மேலும் ரத்தினங்களில் கோமேதகமும் , வைடுரியமும் மனிதர்கள் அணிந்துகொள்ள  ஏற்றது இல்லை என்பதை கூடவா அந்த ஜோதிடனுக்கு தெரியாது , இதை கோவில்களுக்கு  தானம் செய்வதே சிறந்தது என்று  இரத்தின சாஸ்திரம் சொல்வதை அந்த  ஜோதிடன் ஒருவேளை படிக்க வில்லை போலும் .

 கோமேதகம் அணிவதால் வாழ்க்கையில் பெரிய பாதிப்புகளை சந்திக்க வேண்டும் , வைடுரியம் அணிதால் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டும் என்ற அடிப்படை கூடவா தெரியாது . சரி எப்படியோ போகட்டும் நமக்கு என்ன ? அவன் செய்யும் கர்ம வினை அவனே அனுபவிக்க வேண்டும்.

வயதுக்கு ஏற்றார்  போல் ஒவ்வொருவருக்கும் , ஒவ்வொரு கடமை உண்டு சிறுவயதில் நன்றாக படிப்பது , வாலிபத்தில் நல்ல வேலை வாய்ப்பை செய்து வருமானம் செய்து தனது குடும்பத்தையும் , பெற்றோர்களையும் காப்பாற்றுவது .

 நல்ல குழந்தைகளை பெற்று நல்ல விதமாக வளர்ப்பது , தம்மை நாடி வரும் உறவினர்களுக்கும் , நண்பர்களுக்கும் ,தம்மால் இயன்ற உதவியை செய்வது .  

தொழிலில் கண்ணும் கருத்துமாக இருந்து அதன் வளர்ச்சிக்காக பாடு படுவது இவையே ஆயிரம் கோவில் சென்று வழிபாடு செய்வதற்கு சமம் கடமையே கடவுள் . தனது கடமைகளில் இருந்து தவருபவனுக்கு எந்த கடவுளும் கருணை தந்தாக சான்று இல்லை.


காசி வழிபாட்டின் தத்துவம் :

காசி தீர்த்தம் என்பது நெருப்பு தத்துவம் ஆகும் . நெருப்பு மட்டும் தானும் புனிதமாகவும் தன்னிடம் சேரும் அனைத்தையும் சுத்தம் செய்து புனிதமாக்கும்  தன்மை கொண்டது , மற்ற நதிகள் அனைத்தும் நீரின் தன்மை கொண்டவை மலை நீரையும்  , ஊற்று நீரையும் அடிப்படையாக கொண்டவை .

 கங்கை மட்டும் பனிமலையில் உருவாகி வரும் தன்மையால் நெருப்பு
 ( ஐஸ் கட்டியை கையில் வைத்து பாருங்கள் கைகளை சுடும் )தத்துவம் கொண்டது .

 எனவே இதில் குளிப்பவர்கள் புனித தன்மையை பெறுகிறார்கள் , மேலும் அவர்கள் வினை பதிவை செய்யாமல் இறுதியில் இறை நிலையை பெறுகிறார்கள்,  அதற்க்கு ஏற்ற வயது  ஒவ்வொருவரின் இறுதி காலங்களே. 

சிறுவயதில் காசி சென்று வந்தால் மீண்டும் வினை பதிவினை தொடரும் சூழ்நிலை ஏற்ப்படும் .

காசி சென்று வழிபாடு செய்தால் கிடைக்கும் பலனை நாம் தமிழகத்தில் உள்ள ஒரு சிறப்பு மிகுந்த கோவிலுக்கு சென்று வழிபடுவதால் நிச்சயம் பெற முடியும் , 

அந்த திருத்தலம் திருவெண்காடு இங்கு சென்று அக்கினி , சூரிய  , சந்திர தீர்த்தங்களில் நீராடி சிவபெருமானை தரிசனம் செய்தால் , காசிக்கு சென்று வந்த பலன் நிச்சயம் கிடைக்கும் , கையில் வெண்ணையை வைத்துகொண்டு நாம் ஏன் நெய்க்கு அலைய வேண்டும்.

தமிழகத்தில் இல்லாத திருத்தளங்களா என்ன ? நாங்கள் இருக்கு பவானியில் உலகின் மிக சிறந்த  திருத்தலங்களில்  ஒன்றான சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது இதன் அருமை , இங்கு வந்தவர்களுக்கு நிச்சயம் தெரியும்  .

ஜோதிடன் வர்ஷன் 
9443355696 .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக