வெள்ளி, 20 ஏப்ரல், 2012

பஞ்சமஹாபுருஷ யோகம் !?


வணக்கம்,
ஜாதகத்தை எடுத்தாலே இரண்டு விஷயங்கள் முக்கியமாக பார்க்கப்படுகின்றன.அவை
1.யோகம்
2.தோஷம்
 
*யோகம்* 

யோகம் என்றால் சேர்க்கை/இணைவு என்று பொருள்.ஒரு வீட்டில் இன்னென்ன கிரகம்
இணைந்தால் அதற்கு இன்ன பெயர்.உதாரணமாக ஒரு வீட்டில் குருவும் செவ்வாயும்
இணைந்தால் குருமங்கள யோகம்.அதுவே குரு சனியுடன் இணைந்தால் குருசண்டாள
யோகம் .அதாவது யோகம் என்ற வார்த்தை சேர்க்கையை குறிக்கிறதே தவிர
அதிஷ்டத்தை அல்ல.அந்த வகையில் ஒரு ஜாதகருக்கு பல வித கிரக யோகங்கள்(கிரக
சேர்க்கைகள் ) இருக்கலாம்.அந்த யோகத்தால் இன்ன பலன் என இருக்கலாம்.அந்த
பலன்கள் ஜாதகருக்கு எப்போது கிடைக்கும்?அதாவது அந்த கிரகங்களின் தசை
நடக்கும் காலத்திலா?

சில ஜாதகங்களில் பஞ்சமஹாபுருஷ யோகங்களெல்லாம் இருக்கும்.ஆனால் அவருக்கு
அதனால் எந்த நன்மையும் ஏற்பட்டிருக்காது.அதற்கு காரணம் என்ன?
அந்த கிரகங்களின் தசை வராமல் போனதா?
அந்த கிரகம் பாதக ஸ்தானத்தில் அமர்ந்ததாலா?
அந்த கிரகங்கள் நீசம்,வக்ரம் அடைந்ததாலா?
அல்லது வேறு காரணத்தாலா?

ஒரு ஜாதகத்திலுள்ள யோகம் அந்த ஜாதகருக்கு எந்த அளவு முக்கியம்?


 இதை ஒரு உதாரணத்துடன் விளக்கி ஒரு பதிவை அளிக்கும்படி தங்களை கேட்டுக்கொள்கிறேன்.
 By
ஜோதிட பித்தன்


 சில ஜாதகங்களில் பஞ்சமஹாபுருஷ யோகங்களெல்லாம் இருக்கும்.ஆனால் அவருக்கு
அதனால்
எந்த நன்மையும் ஏற்பட்டிருக்காது.அதற்கு காரணம் என்ன?

பதில் : 

ஒரு ஜாதகத்தை மேலோட்ட்டமாக பார்க்கும் பொழுது இந்த தவறுகள் ஏற்ப்பட வாய்ப்பு அதிகம் கிழ்காணும் ஜாதகம் மூலம் விளக்கம் பெறலாம் :


இந்த மிதுன இலக்கின ஜாதக அமைப்பில் , குரு + சந்திரன் சேர்க்கை தனுசு ராசியில் இந்த அமைப்பை பொதுவாக பார்த்து  குரு சந்திர யோகம் என்று ஜோதிடர்கள் கணிதம் செய்வார்கள்.  ஆனால் ஜாதகத்தில் உண்மை நிலை என்ன என்று காண்போம் ஜாதகரின் 7  ம் பாவகம் தனுசு ராசியில் ( 253 .22 .57 )  பாகையில் துவங்கி மகர ராசியில் ( 281 .38 .52 ) பாகையில் முடிவடைகிறது.

குரு இருப்பது தனுசு ராசி ஏழாம் பாவத்தில் ( 253 . 30 . 03 ) பாகையில்  .
சந்திரன் இருப்பது தனுசு ராசி ஆறாம் பாவத்தில் ( 244 . 29 . 36 ) பாகையில் .

இந்த அமைப்பில் ஒரே பாவகத்தில் குருவும் சந்திரனும் சேர்க்கை பெறவில்லை , மேலும் ராசியில் ஒன்றாக இருப்பதை வைத்தே மற்ற ஜோதிடர்கள் இதை  குரு சந்திர யோகம் என்று கணிதம் செய்வார்கள். ஆனால் உண்மையில் இந்த ஜாதக அமைப்பில் குரு சந்திர யோகம் சிறிது கூட வேலை செய்யாது . 

ஒருவேளை ஒரே பாவத்தில் குருவும் சந்திரனும் சேர்க்கை பெற்று, அந்த பாவகம் 100  சதவிகிதம் நன்றாக இருந்தால் மட்டுமே, அந்த பாவகத்திர்க்கு உட்பட்டு யோக நிலையை  தரும். அதுவும் அந்த வீட்டுக்குண்டான பலன் நடக்கும் திசை புத்தி அந்தரம் சூட்சமம் ஆகியவற்றுடன் சம்பந்தம் பெற வேண்டும் . இந்த ஜாதகத்தில் களத்திர பாவ அமைப்புடன் சம்பந்தம், எனவே  ஜாதகர் தனது மனைவி மூலமாகவும் , கூட்டாளி மூலமாகவும் யோகத்தை முழுமையாக அனுபவிப்பார் சம்பந்த பட்ட திசை நடப்பின் , ஒருவேளை ஜாதகருக்கு திருமண வாழ்க்கை , கூட்டு தொழில் அமைத்து கொள்ள வில்லை என்றால்  இதன் பலன் நடக்கவே நடக்காது .

அந்த கிரகங்களின் தசை வராமல் போனதா?

ஜாதகத்தில் யோகம் நிச்சயம் இருந்தால்,  திசை வராவிட்டாலும் ,புத்தி அந்தரம், சூட்சமம், மூலம், பலனை நிச்சயம் நடத்தும் .
 
அந்த கிரகம் பாதக ஸ்தானத்தில் அமர்ந்ததாலா?

பாதக ஸ்தானத்தில் அமர்ந்தாலோ, அல்லது தொடர்பு கொண்டாலோ நிச்சயம் தீமையான பலனையே 200  சதவிகிதம் தரும் .


அந்த கிரகங்கள் நீசம்,வக்ரம் அடைந்ததாலா?

நிச்சயம் இல்லை இதனால் யோகத்தில் பாதிப்பு 100  சதவிகிதம் ஏற்ப்படாது .

அல்லது
வேறு காரணத்தாலா?

 யோக அமைப்பை பெற்ற ஜாதகர் , அவயோகம் பெற்ற எதிர்பாலினரிடம் உடல் வழி தொடர்பு கொண்டால் யோக பங்கம் ஏற்ப்படும் .


 ஒரு ஜாதகத்திலுள்ள யோகம் அந்த ஜாதகருக்கு எந்த அளவு முக்கியம்?

யோகம் என்பது சுய ஜாதகத்தில் இருந்தால் , யோகத்தின் முழு பலனையும் ஜாதகர் நிச்சயம் அனுபவிக்கும் நிலை ஏற்ப்படும் .

அனைவரும் சகல யோகங்களையும் பெற்று வாழ்க வளமுடன் 

ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக