Wednesday, April 18, 2012

கல்வியில் சிறந்து விளங்க !? கேள்வி: 
கல்வியில் சிறந்து விளங்க மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன ?? ஒரு மாணவருக்கு படிப்பு சரியாக வரவில்லை என்றால் ஜோதிட ரீதியாக என்ன காரணமாக இருக்கும் ... ?


பதில் :


முதலில் கல்வியில் சிறந்து விளங்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம் , தனது பெற்றோரை விட்டு ஹாஸ்டலில் தங்கி படிப்பதை வீட்டு விட வேண்டும்.

 ஏனெனில் தாயின் அன்பே ஒரு குழந்தைக்கு சிறந்த கல்வி அறிவை 
போதிக்கும் , மேலும் தகப்பனின் கண்டிப்பே அந்த குழந்தைக்கு 
ஒழுக்கத்தையும் , நல்லறிவையும் , தன்னம்பிக்கையையும் , 
சுய கட்டுபாடையும் , மனோ தைரியத்தையும் தரும் , 

மேலும் பெரியவர்களின் ( தாத்த பாட்டி ) அன்பும் வழிகாட்டுதலும் வளரும் இளம் பருவத்தினருக்கு  மனோ ரீதியான பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும் ,  மேலும் உறவுகளின் உன்னதம் புரியும் , தனது  பாரம்பரியம் என்ன ?  கௌரவம் என்ன ? வாழ்க்கையில் எது நல்லது எது கெட்டது என்று தீர்மானிக்கும் சுய சிந்தனை வேலை செய்யும் , தனது பெற்றோரிடம் இருந்து வளரும் குழந்தைகள் நிச்சயம் தனது வாழ்நாளில் எவ்வித சிரமங்கள் கஷ்டங்கள் வந்தாலும் தாங்கும் மனோ நிலையும், அறிவு பூர்வமாக எந்த பிரச்சனைகளையும் எதிர்கொண்டு  சமாளிக்கும்  திறன் இயற்கையிலேயே அமைந்து விடும் .
 
 ஹாஸ்டலில் தங்கி படிக்கும் குழந்தையின் வாழ்க்கை மிகவும் பரிதாபத்திற்கு உரிய அமைப்பில்  தற்பொழுது இருக்கின்றது மேலும் செய்திதாள்களில் வரும் செய்திகளை பார்க்கும் பொழுது மிகவும்  கவலையாக  இருக்கின்றது , இப்படி வளரும் குழந்தைகள் தனது பெற்றோர்கள் என்ன தனக்கு செய்தனரோ அதை தானும் தனது பெற்றோருக்கு செய்கின்றனர். 

நீங்கள் எப்படி என்னை ஹாஸ்டலில் விட்டு படுத்தி எடுத்தீர்களோ அதே போல் இப்பொழுது  உங்களது நேரம் என்று முதியோர் இல்லத்தில் கொண்டு சென்று தள்ளிவிட்டு வெளிநாடு சென்று விடுகின்றனர் , அல்லது வயதான காலத்தில் தனியாக விட்டு விட்டு வேலை நிமித்தமாக வெளியே சென்று விடுகின்றனர் , வயதான காலத்தில்  இவர்கள் ஒரு தலை வலி மாத்திரை வாங்குவது என்றால் கூட பக்கத்தில் இருப்பவருடன் கெஞ்சி கொண்டு இருப்பதை பார்த்தால் மிகவும் கவலையாக இருக்கிறது .


  இப்படி படிக்கும் குழந்தைகள் படிப்பில் முதலில் வந்து  தனது பணி நிமித்தமாக ஏதாவது  வெளிநாடுகளில் இருக்கும் பெரிய பண்ணையாமாக பார்த்து மாடு மேய்க்க அல்லது சாணி அள்ள சென்று விடுகின்றனர்.

 அதற்க்கு அவர்கள் சொல்லும்  சாக்கு போக்கு  எங்களது மாட்டு கொட்டகையில் ஏசி அமைத்து வைத்துள்ளனர் என்று பெருமை அடித்து கொள்கின்றனர் , 24  மணி நேரம் அந்த வெளிநாட்டு பாண்ணைய காரன் இவர்களை சாட்டையால் அடித்து நன்றாக வேலை வாங்கி கொண்டு சிறிது ஊதியம் இவர்களுக்கு கொடுத்துவிட்டு, அவன் நன்றாக அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டே பணத்தை அள்ளுகிறான் , இது தெரியாத அவர்களது பெற்றோர்கள் நம்மிடம்  யுரோ டாலர்  மதிப்பு உனக்கு தெரியுமா ? என்று கேட்கின்றனர் , நமக்கு மட்டும் தானே தெரியும், அவர்களது செல்லப்பிள்ளை  கோவணத்தை இறுக்கி கட்டிக்கொண்டு வெளிநாட்டு பண்ணைய காரனிடம் சாணி அள்ளிக்கொண்டு இருப்பது அவர்களுக்கு என்ன தெரியும் .

( இது அமெரிக்காவில் எனது நண்பன் படும்பாடு அவனின் புலம்பல் இங்கு பதிவாக வந்துள்ளது

மேலும் இவர்களது திறமைகளை வெளிநாட்டை சேர்ந்தவன் நன்றாக உபயோகித்து கொள்கிறான், இவர்களும் இளமையில் வாழ்க்கையை தொலைத்து விட்டு வயதான பிறகு சக்கரை இன்னும் பிற நோய்களில் மாட்டிக்கொண்டும் , மன அழுத்தினாலும் வெகுவாக பாதிக்க படுகின்றனர்.

இவர்களெல்லாம் என்று சுயமாக தான் பண்ணைக்காரன் ஆகவேண்டும் என்று நினைக்கிறார்களோ அன்று நமது இந்தியா வல்லரசு மற்றும் நல்லரசு , இன்னும்பல முன்னேற்றங்களை பெரும் .

யப்பா போதுமட சாமி  இனிமேல் குழந்தைகள் நன்றாக படிக்க சுய ஜாதக அமைப்பின் படி என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம் .

 தனது குழந்தைக்கு , ஜாதக ரீதியாக, அல்லது  அந்த குழந்தையின் விருப்பத்திற்கு ஏற்ற கல்வியை அதுவாக தேர்ந்து எடுக்க விட்டு விட வேண்டும் , குழந்தையின் விருப்பத்திற்கே விட்டு விட்டால் ஜாதக ரீதியாக என்ன கல்வியை அமைய வேண்டுமோ அதுவே அமைந்துவிடும் ,  

எவ்வளவு மக்கான குழந்தையையும் தினமும் அதிகாலை 5  மணிக்கே எழுப்பி  குளிர்ந்த நீரில் குளிக்க வைத்து , ( சலதோஷம் ஆரம்பத்தில் பிடித்தாலும்  போக போக சரியாகி விடும் ) சூரிய நமஸ்காரம் செய்ய சொல்லி வழக்கத்திற்கு கொண்டு வந்து விட்டால் அந்த குழந்தை நிச்சயம் படிப்பில் சிறப்பாக வந்துவிடும்.

 இதற்காக ராசி கல்  ஆலோசனை ( என்ற பெயரில் குழந்தைகள் தலையில் பெரிய கல்லையெல்லாம் போட தேவையில்லை கோவையில் இருக்கும் வெண்கோ தாத்தா வறுத்த படவேண்டாம் ) மற்ற பரிகாரங்கள் செய்ய தேவையில்லை.

மேலும் ஒவ்வொரு குழந்தைக்கும் சரிவிகித உணவும், நன்றாக விளையாட விடுதல்  உடல் மற்றும் மனதுக்கு புத்துணர்ச்சியை தரும் , எல்லாத்தையும் விட பணம் பிடுங்கும் தனியார் பள்ளியில் சேர்ப்பதை விட.

கல்விக்கு ஒழுக்கத்திற்கு முன்னுரிமை தரும் சிறந்த அரசு பள்ளியில் அல்லது தனியார் பள்ளியில்  படிப்பதே சிறப்பான கல்வியை 
பெற்று தரும் , அந்த கல்வி முறையால் ( அந்த குழந்தை நிறைய மதிப்பெண் பெறுகிறதோ இல்லையோ நல்ல மனிதனாக வளர்ந்து தனது பெற்றோருக்கும் சமுதயத்திற்கும் ,மிகசிரந்தவராகவும் பயன்படும் விதத்திலும் இருப்பார்கள் .   

ஜோதிடன் வர்ஷன் 
 9443355696

No comments:

Post a Comment