Tuesday, April 17, 2012

திரிஷா இல்லேன்னா ஒரு திவ்யா!ஜோதிட கேள்வி :

1.ஒருவர் தானே தொழில் தொடங்கி தொழில் அதிபர் ஆகும் வாய்ப்பு யாருக்கு கிடைக்கும்???
சுய ஜாதக அமைப்பில் ஜீவன ஸ்தானம் சர ராசியாக வந்து அந்த வீட்டுடனே தொடர்பு கொண்டு இருக்குமாயின் அந்த ஜாதகர் நிச்சயம் சுய தொழில் துவங்கி வெகு விரைவில் முன்னேற்றம் அடைவார் , சுய ஜாதக அமைப்பில் வாக்கு  ஸ்தானம்,  லாப ஸ்தானம் , எனும் இருவீடுகளும்  அந்த வீட்டுடனே தொடர்பு கொண்டு இருப்பினும் , அல்லது ஜீவன ஸ்தானம் ,  வாக்கு  ஸ்தானம்,  லாப ஸ்தானம் , வீட்டுடனே தொடர்பு கொண்டு இருப்பினும்.
  சுய தொழில் துவங்கி வெகு விரைவில் முன்னேற்றம் அடைவார். ஜிவன ஸ்தானம் சர ராசியுடன் சம்பந்தம் பெரும் அமைப்பை கொண்டவர்கள் நிச்சயம் தொழில் அதிபர் ஆகும் வாய்ப்பு நிச்சயம் உண்டு .


ஜீவன  ஸ்தானம் 8  ம் வீட்டுடன் தொடர்புகொள்வது ௧௦௦ சதவிகத கெடுதல் தரும்
2.ஒருவரின் ஜாதகத்தை வைத்து ஒருவர் சொந்த தொழில் தொடங்கலாமா அல்லது அடிமை தொழில் ,அதாவது பிறரிடம் வேலை செய்வது அல்லது வெளிநாடு வேலைக்கு முயற்சிக்கு செய்யலாமா என்று சொல்லிவிட முடியுமா 
தொழில் ஸ்தானம் கெட்டு இருந்தால் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன ??
சுய ஜாதகத்தை வைத்து நிச்சயம் சரியாக சொல்லிவிட முடியும் ! ஜீவன ஸ்தானம் முழுவதும் கெட்டு விட்டால் லக்கினம், தனம் ,களத்திர , லாப ஸ்தானத்தை வைத்தும் தொழிலை அமைத்து கொள்ள முடியும் (  திரிஷா இல்லேன்னா ஒரு   திவ்யா ) இறைநிலை ஒரு கதவை திறந்து வைத்து விட்டுதான் , ஒரு கதவை மூடும் .

3.படித்து முடித்து நெறைய பேருக்கு வேலை கிடைக்காமல் உள்ளனர் / ஒருவேளை அவர்களின் பூர்வ புண்ணியமா அல்லது பூர்விகத்தை சார்ந்து அல்லது வெளியில் செல்வது நல்லதா .. அவர்கள் செய்ய வேண்டியது என்ன ???
வேலை கிடைக்காமல் இருப்பதற்கு ஜீவன ஸ்தானம் 100  சதவிகிதம் பாதிப்படைந்து இருந்தால் மட்டுமே வேலை கிடைக்காது ,   சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் 100  சதவிகிதம் பாதிப்படைந்து இருந்தால் மட்டுமே பரதேச ஜீவனம் அமையும், மேலும் இந்த அமைப்பை பெற்றவர்கள் மட்டுமே வெளியில் செல்வது நலம் தரும் .
 
 4.திருமணம் செய்யும் போது பார்க்க வேண்டிய விசயங்கள் என்ன .. நட்சத்திர பொருத்தம் .... ராசி மற்றும் கட்டத்தில் உள்ள கிரக நிலை மற்றும் விட்டின் நிலை ?
இதற்க்கு பதில் நட்சத்திர பொருத்தமும் , ஜாதக பொருத்தமும் , திருமணமும் என்ற பதிவில் தெளிவாக பதிவு செய்து உள்ளேன் .

5. மேல்நிலை படித்த ஒருவருக்கு வேலை வெளிநாட்டில் தான் கிடைக்கும் அவர் படித்த படிப்புக்கு சரியான வேலை அங்கு தான் உள்ளது என்று வைத்துகொள்வோம் .. ஆனால் அவர் பூர்விகம் நன்றாக இருந்து அவர் பூர்விகத்தில் இருக்க வேண்டும் என்றால் என்ன செய்வது ???
வேறு வழியில்லை பூர்வீகத்திலேயே சுய தொழில் செய்வது நல்லது , சம்பந்த பட்ட படிப்பின் மூலம் வரும் முன்னேற்றத்தை விடவும் சுய தொழிலால் அதிக வருவாய் அதிக நிம்மதியான வாழ்வினை பெறலாம் , ஒரு வேலை வெளிநாடு சென்றால் டங்குவாரு அந்து விடும் , வேலையை விட்டு துரத்தும் நிலைக்கு தள்ள படுவார் .

6 நெறைய போலி ஜோதிடர்கள் டிவியிலும் பேப்பரிலும் ஆன்மிக புத்தகத்திலும் வந்து பயபடுதுவது , உண்மையில் பயத்தில் உள்ள ஒருவன் அவரிடம் சென்று காசை இழக்க வண்டி உள்ளது .. எப்படி இதை தாண்டி வருவது 
 சரியான ஜோதிட ஆலோசனை பெற நிச்சயம் உங்களின் குல தெய்வம் 100  சதவிகிதம் வழிகாட்டும் . எனவே நிச்சயம் குல தெய்வ வழிபாடு செய்வது முக்கியம் .


7 . என்ன தொழில் எந்த எந்த ஜாதகர் செய்தால் 100 %  அவருக்கு பிட் ஆகும், 100 % மன நிறைவை தரும்.. லாபத்தைவிட மன நிறைவு என்பது முக்கியம் ... 

சுய ஜாதக அமைப்பில் ஜீவன ஸ்தானம் எந்த தொழிலை சுட்டி காட்டுகிறதோ, அந்த வகை தொழிலால் ஜாதகர் மேன்மை அடைவார் ,  ஜீவன ஸ்தானம்  சர ராசியானால் பல தொழில்கள் மூலம் வருமான வரும் , ஸ்திர சர ராசியானால் சில தொழில்கள் மூலம் வருமான வரும், உபய ராசியானால் ஒரு தொழில்  மூலம் வருமான வரும். சமபந்த பட்ட ராசி தத்துவத்தின் படி ஜீவனம் அமையும் .

8 ஜோதிடத்திற்கும், யோகா விருக்கும் உள்ள தொடர்பு என்ன ???


ஜோதிடம் ( விதி எனும் )  வாழ்க்கை வழிகாட்டி , 
யோக நிலையால்  விதியை மதியால் 
( அறிவை துணை கொண்டு ) வெல்லலாம் .

9 கரு மைய தூய்மை ஏற்பட ... ஆரா விரிவடைய நாம் செய்ய வேண்டிய என்ன ???? அதனால் நாம் கிடைக்கும் பலன் என்ன ...???? வாழ்வில் கிடைக்கும் நன்மை என்ன ????
 மிக சிறந்த ஆன்மீக வாதியிடம் அல்லது குருவிடம் ஆக்கினை தீட்சை பெறுவது, பிறகு தவறாமல் யோக நிலை பயிற்ச்சி செய்வதும் , கருமையம் துய்மை பெரும்  . இதனால் நிச்சயம் அறிவில் விழிப்பு நிலை ஏற்ப்படும் கர்ம வினை பதிவிலிருந்து நாம் காப்பாற்ற படுவோம் , பதினாறு வகை செல்வங்களும் நிறைந்த வாழ்க்கையாக அமையும் .  இதனால் நாமும் நமது குடும்பமும் , சமுதாயமும் நலன் பெரும் .
 ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

No comments:

Post a Comment