Wednesday, April 18, 2012

கடன் தொல்லை தீர்வே இல்லையா ?
 கேள்வி :

 கடன் தொல்லையில் இருந்து தப்பிக என்ன செய்வது .. அந்த நிலைக்கு தள்ளபடுவத்தின் காரணம் என்ன ??? கடன் வாங்காமல் செல்வா நிலை நல்ல நிலையில் இருக்க என்ன செய்ய வேண்டும் ??


 ஜோதிடம் தெரியாத நபர்களிடம் ( அரை குறை ) இருந்து வரும் பதில் :
 
திருமதி பழனி சாமியில் நம்ம கவுண்டர் ( மணி)  செய்ததை நாமும் செய்யலாம், ஒருவேளை அந்த படத்தை பார்க்காதவர்கள் பலமுறை பார்த்து தெளிவாக அவர் செய்ததை செய்யலாம் , இது மிக சுலபமான வழி. அல்லது நமது நண்பர்கள் உறவினர்கள் யாராவது பெயரில் வாங்கி கொண்டு கம்பி நீட்டி விடலாம் இது அதை விட சுலபமான வழி. 

கடன் வாங்கி கொண்டு சொத்துகளை எல்லாம் பினாமி பெயரில் எழுதி வைத்து விட்டு , மஞ்சள் நோட்டிஸ் கொடுத்துவிட்டு , பென்ஸ் காரில் வளம் வரலாம் , இல்லை என்றால் ஈமு கோழி பண்ணை அமைக்கலாம் , அல்லது சென்னை சென்று அக்டிவேசன் டியாக்டிவேசன் ஜோதிடரை கண்டு பலன் பெறலாம், இதனால் உங்களது கோவணம் உருவ பட்டால் அதற்க்கு நான் பொறுப்பல்ல.

 வாங்குவதை கோடி கணக்கில் வாங்கி விட்டால் ஒரு பயலும் நம்மை கடன் கேட்டு வரமாட்டான் , மீறி கேட்டு வந்தால் எழுதி வைத்து விட்டு  தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டலாம்.

 மேலும் பல சுலபமான வழிகள் நிறைய உண்டு அதற்க்கு , ஆத்து குடு குடு குடுப்பாயி, ஐஸ் வெள்ளியங்கிரி சுவாமிகளை கேட்டு அதன் படி நடப்பது சால சிறந்தது .

( கோவையில் இருக்கும் குழந்தைக்கு காதில் புகை வருவது போல் பவானிக்கு   வாடை வருகிறது )

எங்களிடம் இருந்து வரும் பதில் :

சுய ஜாதக அமைப்பில் 2  , 6 , 8 , 12  , ஆகிய வீடுகள் (  6  ம் வீடு சர ராசியாக வந்து  ) 6  ம்   வீட்டுடன் தொடர்பு பெற்று 100  சதவிகிதம் பாதிப்படைந்து இருந்தால் ஜாதகர் மீள முடியாத கடனாளியாக மாறும் நிலைக்கு தள்ள படுவார் , மேலும் இந்த அமைப்பை பெற்ற ஜாதகர்கள் அனைவரும் , தமது குடும்பத்தில் 6  ம் வீடு பாதிப்பை பெறாத ஜாதகர் மீது கடன் பெறுவது விரைவில் கடனை திருப்பி செலுத்தி நல்ல நிலைக்கு வர இயலும்.

 மேலும் ஜாதகரே கடன் பெரும் சூழ்நிலை வந்தால் தலை , உடல் , கால் அற்ற நட்சத்திரங்கள் வரும் நாளை தவிர்த்து விட்டு மற்ற நாட்களில் கடன் பெறுவது விரைவில் கடனை திருப்பி செலுத்திவிடும் திறனை தந்துவிடும்.

அல்லது ஜாதகருக்கு எந்த திசையில் குடியிருந்தால் சகல நலமும் பெற முடியும் என்று,  சுய ஜாதக நிலையில் இருந்து தெரிந்து கொண்டு, அந்த திசை வாயிற்படி அமைந்த வீடுகளில் குடியிருப்பது விரைவில் கடன் வாழ்க்கையில் இருந்து மீட்டு எடுத்து நல்ல வாழ்க்கையை அமைத்து தரும் .

ஒன்றுமே முடியாத நிலை ஏற்ப்பட்டால் ஜாதகர் மூன்று வியாழ கிழமைகளில் காளிக்கு 48 எலுமிச்சை பழ மாலையை தனது கையாலேயே  கோர்த்து எடுத்து  சென்று சாற்றி வழிபாடு செய்தால் நிச்சயம் தீர்வு கிடைக்கும் .

அல்லது ஆறாம் வீட்டுக்கு அதிபதியான கிரகத்தின் மீது தவம் மேற்கொள்ளுவது விரைவில் பலன் தரும் . மேலும் வளர் பிறை செவ்வாய் கிழமை அன்று கடன் கொடுத்தவரிடம் சிறிது பணத்தை திரும்ப செலுத்தி விட்டால் நிச்சயம் கடன் தீர்ந்து விடும் .

ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்வது நலம் தரும் கோடி ரூபாய் செலவு செய்யலாம் , ஒரு ரூபாய் கூட விரயம் செய்ய கூடாது . இது நம்மை கடனில்ல வாழ்க்கையை அமைத்து தரும் .

கடன் கொடுத்தவர்கள் வந்தால் தப்பி செல்வதை விட சரியான பதிலை சொல்வது மிக சிறந்த வழிமுறை இது நம்மீது உள்ள நம்பிக்கையை அவர்களுக்கு அதிகரிக்க செய்யும் .

  கடன் பெறாமல் செல்வ வளத்துடன் வாழ்க்கை நடத்த உங்களது சுய  ஜாதக ரீதியாக எந்த திசையில் வாயிற்படி அமைந்த வீட்டில்   குடியிருந்தால் சரியாக இருக்குமோ அங்கு குடி இருப்பது கடன் பெறாமல் செல்வ வளத்துடன் வாழ்க்கை நடத்த நிச்சயம் உங்களால் முடியும் .

ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

2 comments:

 1. //சுய ஜாதக அமைப்பில் 2 , 6 , 8 , 12 , ஆகிய வீடுகள் ( 6 ம் வீடு சர ராசியாக வந்து ) 6 ம் வீட்டுடன் தொடர்பு பெற்று 100 சதவிகிதம் பாதிப்படைந்து இருந்தால் ஜாதகர் மீள முடியாத கடனாளியாக மாறும் நிலைக்கு தள்ள படுவார் , மேலும் இந்த அமைப்பை பெற்ற ஜாதகர்கள் அனைவரும் , தமது குடும்பத்தில் 6 ம் வீடு பாதிப்பை பெறாத ஜாதகர் மீது கடன் பெறுவது விரைவில் கடனை திருப்பி செலுத்தி நல்ல நிலைக்கு வர இயலும்.//

  நல்ல விளக்கம்

  //மேலும் ஜாதகரே கடன் பெரும் சூழ்நிலை வந்தால் தலை , உடல் , கால் அற்ற நட்சத்திரங்கள் வரும் நாளை தவிர்த்து விட்டு மற்ற நாட்களில் கடன் பெறுவது விரைவில் கடனை திருப்பி செலுத்திவிடும் திறனை தந்துவிடும்.//

  கேள்விபடாத பரிகாரம்


  .

  //ஒன்றுமே முடியாத நிலை ஏற்ப்பட்டால் ஜாதகர் மூன்று வியாழ கிழமைகளில் காளிக்கு 48 எலுமிச்சை பழ மாலையை தனது கையாலேயே கோர்த்து எடுத்து சென்று சாற்றி வழிபாடு செய்தால் நிச்சயம் தீர்வு கிடைக்கும் .//


  அனைவராலும் செய்ய கூடிய எளிய பரிகாரம்


  //அல்லது ஆறாம் வீட்டுக்கு அதிபதியான கிரகத்தின் மீது தவம் மேற்கொள்ளுவது விரைவில் பலன் தரும் . மேலும் வளர் பிறை செவ்வாய் கிழமை அன்று கடன் கொடுத்தவரிடம் சிறிது பணத்தை திரும்ப செலுத்தி விட்டால் நிச்சயம் கடன் தீர்ந்து விடும் .//

  நான் எதிர்பார்த்தது இது தான் .. நாம் திருப்பி கொடுக்கும் போது குறிப்பிட்ட நாளில் பணத்தை திருப்பி செலுத்தினால் கடன் தீர்ந்து விடும் என்று படித்து உள்ளேன் .. விளக்கத்திற்கு நன்றி  //ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்வது நலம் தரும் கோடி ரூபாய் செலவு செய்யலாம் ,ஒரு ரூபாய் கூட விரயம் செய்ய கூடாது . இது நம்மை கடனில்ல வாழ்க்கையை அமைத்து தரும்//


  செலவு என்பது வேறு விரயம் என்பது வேறு. உண்மை .

  //கடன் கொடுத்தவர்கள் வந்தால் தப்பி செல்வதை விட சரியான பதிலை சொல்வது மிக சிறந்த வழிமுறை இது நம்மீது உள்ள நம்பிக்கையை அவர்களுக்கு அதிகரிக்க செய்யும் .//

  ஹ ஹ ஹ சிரமமான பரிகாரம்

  //கடன் பெறாமல் செல்வ வளத்துடன் வாழ்க்கை நடத்த உங்களது சுய ஜாதக ரீதியாகஎந்த திசையில் வாயிற்படி அமைந்த வீட்டில் குடியிருந்தால் சரியாக இருக்குமோ அங்கு குடி இருப்பது கடன் பெறாமல் செல்வ வளத்துடன் வாழ்க்கை நடத்த நிச்சயம் உங்களால் முடியும் .//


  கடன் பெறாமல் இருக்க நல்ல வழி

  ReplyDelete
 2. //ஜோதிடம் தெரியாத நபர்களிடம் ( அரை குறை ) இருந்து வரும் பதில் :

  திருமதி பழனி சாமியில் நம்ம கவுண்டர் ( மணி) செய்ததை நாமும் செய்யலாம், ஒருவேளை அந்த படத்தை பார்க்காதவர்கள் பலமுறை பார்த்து தெளிவாக அவர் செய்ததை செய்யலாம் , இது மிக சுலபமான வழி. அல்லது நமது நண்பர்கள் உறவினர்கள் யாராவது பெயரில் வாங்கி கொண்டு கம்பி நீட்டி விடலாம் இது அதை விட சுலபமான வழி. //

  நல்ல காமெடி ... all time favorite comedy ... பழனிச்சாமி நீ எங்கே கூப்டாலும் வருவேன் ..இந்த பள்ளபாளையம் பபம்பட்டி பக்கம் வர மாட்டேன்
  ஏன் கடன் கிடன் வங்கிடய
  ச்சே ச்சே


  //கடன் வாங்கி கொண்டு சொத்துகளை எல்லாம் பினாமி பெயரில் எழுதி வைத்து விட்டு , மஞ்சள் நோட்டிஸ் கொடுத்துவிட்டு , பென்ஸ் காரில் வளம் வரலாம் , இல்லை என்றால் ஈமு கோழி பண்ணை அமைக்கலாம் , அல்லது சென்னை சென்று அக்டிவேசன் டியாக்டிவேசன் ஜோதிடரை கண்டு பலன் பெறலாம், இதனால் உங்களது கோவணம் உருவ பட்டால் அதற்க்கு நான் பொறுப்பல்ல.//

  கை முழுவதும் மோதிரம் வங்கி போட்டுக்க வேண்டியதுதான் ... டவுசர் கிளிசலும் அங்க தான் போறங்களே ? என்ன பன்ன??


  // மேலும் பல சுலபமான வழிகள் நிறைய உண்டு அதற்க்கு , ஆத்து குடு குடு குடுப்பாயி,ஐஸ் வெள்ளியங்கிரி சுவாமிகளை கேட்டு அதன் படி நடப்பது சால சிறந்தது .//

  யாரு அந்த குடு குடு ????
  எங்க குரு பதனிக்கு தினமும் பூஜை செய்தால் பணம் வரும்

  யாருக்கு
  யாருக்கோ

  ReplyDelete