சனி, 21 ஏப்ரல், 2012

அஷ்டமி , நவமி நாட்களில் நடக்கும் நல்ல காரிங்கள் அனைத்தும் வெற்றிபெறும் !





வணக்கம்,
 
திதிகளிலே ப்ரதமை முதல் பூரணை/அமாவாசை வரை 15 திதிகள் உள்ளன.இந்த 15
திதிகளிலும்
நாம் எல்லா செயல்களையும் செய்துவிடுவதில்லை.குறிப்பாக
அஷ்டமி
,நவமிகளில் எந்த சுப நிகழ்வுகளையும் நாம் செய்வதில்லை.அதுபோல சிலர்
திதிகளின்
நிறைவான பௌர்ணமி/அமாவாசைகளிலும் சுபங்களை செய்வதில்லை.இப்படி
அனைவருமே
பொத்தாம் பொதுவாக மேற்குறிப்பிட்ட திதிகளை விலக்குவது
சரியா
?அல்லது சுய ஜாதக அமைப்பின் படி எந்தெந்த திதிகள் குறிப்பிட்ட
ஜாதகருக்கு
நன்மை செய்யும் என்றும், எந்தெந்த திதிகள் சுய ஜாதக
அமைப்பின்படி
ஜாதகருக்கு நன்மை செய்யாது என்று தெரிந்துகொள்வது எப்படி?
 
எட்டாம் தேதி பிறந்தவர்களுக்கும்,கூட்டு எண் 8 வருபவர்களுக்கும் அஷ்டமி
நல்ல
நாளாகவே அமையும் என எங்கோ படித்த ஞாபகம்.இது சரியா?

மேற்கண்ட
ஐயங்களுக்கான விளக்கத்தை விரிவாக தெரிவித்தால் என்போன்ற ஜோதிட
ஆர்வலர்களுக்கு
உதவியாக இருக்கும்.
நன்றிகளுடன்
,
By.
ஜோதிட
பித்தன்


 பதில் :

 நாட்களில் எந்த நாளும் நல்ல நாள் கெட்ட நாள் என்றில்லை , நமது முன்னோர்கள் சில முக்கிமான பொது காரியங்களை செய்யும் பொழுது அஷ்டமி, நவமி நாட்களில், நல்ல விஷயங்கள் அனைத்தும் ஆயிரம் நன்மையாக விருத்தி அடைந்து இருக்கிறது , தவறுதலாக பாதிப்பை தரும் விஷயங்கள் அனைத்தும் தொடர்ந்து பாதிப்பையே தந்து இருக்கிறது.

 இதை அனுபவ ரீதியாக உணர்ந்தவர்கள் , அஷ்டமி , நவமி நாட்களில் நடக்கும்  நல்ல காரிங்கள் அனைத்தும் வெற்றிபெறும் , ஒருவேளை மாறி நடந்து விட்டால் பாதிப்பை தொடர்ந்து தரும் என்பதாலேயே அஷ்டமி நவமி நாட்களை தவிர்த்து இருக்கின்றனர் .

மேலும் ஒருவருக்கு சுய ஜாதக அமைப்பில் நடக்கும் திசை நன்றாக உள்ள வீடுகளின் பலனை நடத்துமாயின் ஜாதகருக்கு அனைத்து நாட்களும், மிகுந்த நன்மையே செய்யும், மாறாக பாதிப்படைந்த வீடுகளின் பலன் நடக்குமாயின், எந்த நாட்களும் நன்மையை செய்ய வாய்ப்பில்லை .

மேலும் அஷ்டமி , நவமி நாட்களில் செய்யும் அனைத்து நன்மையான காரியங்களும், 100  சதவிகிதம் வெற்றியையே தரும் தொடர்ந்து நன்மையையே செய்துகொண்டு இருக்கும் என்பதில் சந்தேகம் 
இல்லை ,  எனது நெருங்கிய நண்பர் ஒருவர் தங்க நகைகளை அஷ்டமி , நவமி நாட்களில் மட்டுமே வாங்குவார், இதனால் தொடர்ந்து அவருக்கு தங்க நகைகளாக சேர்ந்து கொண்டே இருப்பதை அனுபவத்தில் கண்டுள்ளேன்.

அஷ்டமி நவமி என்று நாம் அந்த நாட்களை ஒதுக்குவது, சம்பந்த பட்டவரின் மன நிலையை பொறுத்து , ஒருவேளை நீங்கள் செய்யும் நல்ல விஷயம் நல்ல காரியங்கள் அனைத்திற்கும் அஷ்டமி , நவமி நாட்களில் செய்வதால் 100  சதவிகிதம் தொடர்ந்து நன்மையை மட்டுமே செய்யும் உங்களின் சுய ஜாதகத்திற்கு உட்பட்டு . 

இதை பற்றி எனது கருத்தது அஷ்டமி , நவமி நாட்களில் ஒரு நல்ல காரியங்கள் செய்வதால் சம்பந்த பட்டவருக்கு எந்தவித பாதிப்பில்லை என்பதே ஆகும் .

ஜோதிடன் வர்ஷன் 
9443355696  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக