Friday, April 13, 2012

பிரம்ம சூத்திரம் மற்றும் பிரம்ம ரகசியம் - உங்களுக்கு தெரியுமா ???

 
 
 
பிரம்ம சூத்திரம் மற்றும் பிரம்ம ரகசியம் - உங்களுக்கு தெரியுமா ???
கேள்வி :
 
1 பரிகாரம் என்ற முறையில் சாமி சிலை அல்லது நாக சிலையை வீட்டில் வைத்து ஒரு மண்டலம் பூஜை பண்ணலாமா ?? பின் சிலையை கோயிலில் சென்று வைக்கலாமா 
 அதன் சாதக பாதக முறை விளக்கவும்...
 
2  ஒரு குடும்ப வாழ்கையில் உள்ள ஒருவன்... ஒருவன் அடிக்கடி கோயில் கோயிலாக செல்லலாமா 
நண்பர் ஒருவர் மாதத்தில் 30 நாட்களில் 
ஒரு பௌர்ணமி 
ஒரு அம்மாவாசை 
இரண்டு பிரதோஷம்
நான்கு செவ்வாய் 
நான்கு வெள்ளி 
சதுர்த்தி 
ஒரு தேய் பிறை பூஜை 

இப்படி செல்லும் ஆட்கள் இருகின்றநேர்.. இவர்கள் கல்யாணத்திற்கு பிறகு கோயில் செல்வார.. பிசினஸ் கவனிப்பார ???
 
 
பதில் :
 

 
நண்பரே கணக்கு சூத்திரமே சரியாக தெரியாத என்னிடம் ,  பிரம்ம சூத்திரம் மற்றும் பிரம்ம ரகசியம் பற்றி கேள்விகேட்டால், நான் என்ன செய்ய முடியும் ? ( இறைநிலையே என்னை காப்பாற்று ) மேலும் இதைப்பற்றி   சம்சார வாழ்வில் உள்ளவர் தெரிந்து கொண்டு என்ன ஆகப் போகிறது . 
 
இறைவன் நம்மை மனிதனாக பிறக்க வைத்தது எதற்கு என்றே தெரியாத  சிலர் இதுமாதிரி பல முயற்ச்சிகளை செய்துகொண்டு தானும் கெட்டு , தன்னை சுற்றியுள்ளவர்களையும் கெடுத்துகொண்டுதான் உள்ளனர்  இந்த பூமியில். 
 
 அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது என்ற மூத்தோர் வாக்கின் படி மனிதனாக பிறந்த இந்த பிறப்பே மிகவும் சிறப்பு  வாய்ந்தது , இந்த மனித வாழ்க்கையினை சிறப்பாக வாழ ஒவ்வொருவரும் அறிவின் வழியில் செயல்படுவது இந்த மனித வாழ்க்கையினை மேலும் சிறப்படைய  செய்யும் .
 
மேலும் இறைநிலையின் தத்துவத்தை உணராத அனைவரும் இந்தமாதிரி   மன நலம் கெட்டு பிதற்றிகொண்டு இருப்பதில் ஆச்சரியம் இல்லை என்பதே உண்மை . மேலும் இறைநிலை ஒவ்வொரு இடத்திலும் ,  ஒவ்வொரு ஜீவன்களிலும், எல்லா நிலைகளிலும் , எல்லா இடத்திலும் , உயிர் உள்ள , உயிர் அற்ற ஜீவன்கள் , பொருட்டகள் அனைத்திலும் நீக்கமற நிறைந்து உள்ளார் , இதை உணர்ந்தவர்கள் இறைநிலை வேறு தான் வேறு என்ற எண்ணம் வர வாய்ப்பு இல்லை .
 
 மேலும் தான்னையே  சுவாமி , கடவுள் ,  அவதார புருஷன் , ஆத்த , ஒம்  சக்தி, பரமானந்தம் ,  அப்பா பகவான் , மற்றும் சுரைக்காய் கடவுள் , பாம்பாட்டி பைரவன் , சுங்குடி சுவாமி , என்று தன்னையும் ஏமாற்றி கொண்டு தன்னிடம் வருபவர்களையும் ஏமாற்றி கொண்டு இறுதியில் தீராத மான நோயால் பாதிக்கப்பட்டு கர்ம வினை பதிவை நீக்கி கொள்ள இயலாமல்  இறந்து போகின்றவர்களே அதிகம் .
 
 
எப்பொருள் யார் யார் வாய் கேட்ப்பினும் அப்பொருள்
மெய் பொருள் காண்பது அறிவு  .
 
 
கடவுள் என்பதின் அர்த்தம் தெரியாமல் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் விழிப்புணர்வு இல்லாமல் மூட நம்பிக்கையில் மூழ்கி திளைத்துகொண்டுதான் உள்ளனர்,   இந்த கலி யுகத்தில் .
கடவுள் பிரித்து பார்த்தாலே இதன் உண்மை தெரிந்து விடும் 
( கட+உள் ) உன்னில் இருக்கும் இறைநிலையை உள்நோக்கி பார்த்தாலே இறைநிலையின் ( கடவுள் ) தன்மை தெரிந்து விடும் .
இது எல்லோரிடத்திலும் உள்ள இறை சக்தி ( குண்டலினி ) இதை உணர சுய அறிவில் விழிப்புணர்வும் , சிறந்த  ஆன்மீக குருவின் வழிகாட்டுதலும் நிச்சயம் வேண்டும் , இந்த அமைப்பை பெற்றவர்கள் அனைவரும் பெரும் பாக்கியம் செய்தவர்களே .

நவகிரகங்கள் அனைத்தும் மனிதர்களுக்கு தங்களின் அலை கதிர்கள் மூலம் நல  வாழ்வினை தரும் அமைப்பை பெற்றவை , இதை ஒரு சிறு எடுத்துகாட்டு மூலம் விளக்கலாம் :
 
நமக்கு எதிரில் ஒரு சுவர் இருப்பதாக வைத்துகொள்வோம் அதை கிரகமாக பாவித்துகொள்க , அந்த சுவரில் இருக்கும் சுண்ணாம்பு கிரக சக்தியாக பாவித்து கொள்க . நாம் அந்த சுவரை  நாம் தொடாமல்  ( கிரகம் ) நமது  கைகளில் சுண்ணாம்பு ( கிரக சக்தி ) வாருவது எப்படி சாத்திய படும் ?

ஒரு பந்தை கொண்டு சுவற்றில் எறிந்தால் அந்த பந்து சுவற்றில்  பட்டு நமது கைக்கு வரும் அந்த பந்தில் பட்ட சுவற்று சுண்ணாம்பு ( கிரக சக்தி ) நமது  கைகளில் படும் இந்த முறையில் தொடர்ந்து செய்யும் பொழுது சுண்ணாம்பு ( கிரக சக்தி ) நமக்கு தேவையான அளவிற்கு நமது கைகளில் கிடைத்து விடும் . சரி அந்த பந்து எதுவென்று குழம்ப வேண்டாம் அது உங்களின் எண்ண ஆற்றலே ஆகும் , இது சுலபமாகவும் எளிமையாகவும் ஒவ்வொரு மனிதரும் நவகிரகங்கள் அமைப்பில் இருந்துவரும் சக்தியினை யாருடைய உதவியும் இன்றி பெற்றுகொள்ள இயலும் ஒரு எளிமையான வழிமுறை . 

கடவுள் சிலை , மற்றும் நவகிரகங்களை சிலையாக வீட்டில் வைத்து வழிபடுவதால் எவ்வித நன்மையையும் கிடைக்க வாய்ப்பு எனக்கு தெரிந்து இல்லை என்பதே உண்மை , மேலும் இதை செய்துவருபவர்களிடம்  கேட்டால் ஒருவேளை பதில் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது நண்பரே !
 
 ஆகம விதிகளின் படி கடவுள் சிலை , மற்றும் நவகிரகங்களை சிலையாக  உயிர்களை ( உயிர்கலப்பு ) செய்து கோவில்களில் வழிபடுவதே சால சிறந்ததாக இருக்கும் என்பது எனது கருத்து . 
 
ஒரு வேலை சம்பந்தபட்டவர் நாக சிலையை வீட்டில் வைத்து ஒரு மண்டலம் பூஜை செய்வதைக்காட்டிலும் , ( காட்டில் இருக்கும் இரண்டு நாக பாம்புகளை கொண்டுவந்து வீட்டில் வைத்து பூசை புனஷ்காரம் செய்தால் விரைவில் பலன் தெரியும். சம்பந்த பட்டவர் பூசை போட்டால் பரவாஇல்லை , ஒருவேளை  இரண்டு நாக பாம்புகளும் சம்பந்த பட்டவரை போட்டு விட்டால்  நான் ஒன்றும் செய்ய முடியாது ) சாதகர் ராகு கேதுவால் பாதிக்கப்பட்டு இருந்தால், தனது  தாய் வழி பெற்றோரையும்  , தனது  தந்தை வழி பெற்றோரையும் பேணி காப்பாற்றினால் நிச்சயம் சாதகர் ராகு கேதுவால் அதிக நன்மைகளை பெற முடியும் . 

மனிதர்களை இறைநிலை படைக்கும் பொழுதே ஒவ்வொருவருக்கும் ஒரு கடமையை செய்து மனிதகுலம் மேம்பட அறிவினையும் கொடுத்துள்ளார் , ஒரு விவசாயி விவசாய விளை பொருட்களை விதைக்காமல் , தானியம் வீட்டிற்கு வர வாய்ப்பில்லை, அவர் கடவுள் சிலையை வைத்துகொண்டு மாதம் முழுவதும் கடவுளை வழிபட்டுக்கொண்டு இருந்தால், மற்றவர்கள் உன்ன உணவிற்கு எங்கு செல்வது , அது போல் ஒவ்வொருவரும் தமது கடமைகளில் சரியாக செய்வதின் மூலம் கடவுளை காண இயலும் .
 
 ஒரு நாட்டின் அரசன் தனது ஆட்சியை செம்மையாக நடத்துவதின் மூலம் இறைநிலையை காணலாம் , ஒரு மந்திரி அரசனுக்கு நல்ல ஆலோசனை சொல்வதின் மூலம் இறைநிலையை காணலாம் , ஒரு தளபதி மக்களை எதிரிகளிடம் இருந்து காப்பார்ருவதின் மூலம் இறைநிலையை   காணலாம் , மக்கள் தமது கடமை சரிவர செய்வதின் மூலம் இறைநிலையை காணலாம்.
 
தமது கடமையே கடவுள் என் செய்து வருபவர்களுக்கு, கடவுள்  அவர்களுக்கு  தொண்டனாக மாறி தனது கடமையை செவ்வனே செய்வார் என்பது அனுபவ உண்மை .
 
மனிதனால் இறைநிலைக்கு எதுவும் கொடுக்க இயலாது , இறைநிலையால் மட்டுமே மானிதனுக்கு அனைத்தும் கொடுக்க இயலும் என்பதை நன்கு உணர்ந்து செயல் படுவது நலம் தரும் .
 
இறைநிலையின் கருணையை உணர்ந்து , நமது பெற்றோர்க்கு செய்ய வேண்டிய கடமைகளை செவ்வனே செய்வதும் , தமது இல்லத்து அரசிக்கு செய்ய வேண்டிய கடைமைகளை செவ்வனே செய்வதும் , தமது குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பதும் . தம்மால் சமுதாயத்திற்கு இயன்ற அளவு நன்மை செய்வதும் ஒரு ஆண்மகனின் முக்கிய  கடைமையாகும்  .
 
வாழ்க்கையினை வாழ்ந்து பாருங்கள் நண்பரே !
 
ஜோதிடன் வர்ஷன் 
98424 -21435 
94433 - 55696 
  

2 comments:

 1. //மேலும் தான்னையே சுவாமி , கடவுள் , அவதார புருஷன் , ஆத்த , ஒம் சக்தி, பரமானந்தம் , அப்பா பகவான் , மற்றும் சுரைக்காய் கடவுள் , பாம்பாட்டி பைரவன் , சுங்குடி சுவாமி , என்று தன்னையும் ஏமாற்றி கொண்டு தன்னிடம் வருபவர்களையும்ஏமாற்றி கொண்டு இறுதியில் தீராத மான நோயால் பாதிக்கப்பட்டு கர்ம வினை பதிவை நீக்கி கொள்ள இயலாமல் இறந்து போகின்றவர்களே அதிகம் .//


  பரமானந்தம் பிரமாதம் பிரமாதம் -சட்டை அடி......
  ஹ ஹ ஹ பாம்பாட்டி பைரவர் சுங்கிடி சாமி நல்ல வெய்கரங்க பேரை ???  //ஒரு வேலை சம்பந்தபட்டவர் நாக சிலையை வீட்டில் வைத்து ஒரு மண்டலம் பூஜை செய்வதைக்காட்டிலும் , ( காட்டில் இருக்கும் இரண்டு நாக பாம்புகளை கொண்டுவந்து வீட்டில் வைத்து பூசை புனஷ்காரம் செய்தால் விரைவில் பலன் தெரியும். சம்பந்த பட்டவர் பூசை போட்டால் பரவாஇல்லை , ஒருவேளை இரண்டு நாக பாம்புகளும் சம்பந்த பட்டவரை போட்டு விட்டால் நான் ஒன்றும் செய்ய முடியாது ) சாதகர் ராகு கேதுவால் பாதிக்கப்பட்டு இருந்தால், தனது தாய் வழி பெற்றோரையும் ,தனது தந்தை வழி பெற்றோரையும் பேணி காப்பாற்றினால் நிச்சயம் சாதகர் ராகு கேதுவால் அதிக நன்மைகளை பெற முடியும் //


  சூப்பர் சம்பந்தப்பட்ட பாம்பை வீட்டுக்கு கொண்டுவந்து பூஜை பண்ணவேண்டியதுதானே ???

  பூசை போட்டால் பரவாஇல்லை , ஒருவேளை இரண்டு நாக பாம்புகளும் சம்பந்த பட்டவரை போட்டு விட்டால் நான் ஒன்றும் செய்ய முடியாது

  நல்ல காமெடி ...

  ReplyDelete
 2. நீங்கள் சொல்வது உண்மை

  சம்சாரி வேறு சந்நியாசி வேறு

  சம்சாரி கடமை வேறு சந்நியாசி கடமை வேறு


  சம்சாரி கோயில் கோயிலாக சென்றால் அது சம்சாரி வாழ்கை அல்ல ... மாதத்தில் எல்லா நாளும் விசேசமான நாட்கள் தான் ..அதற்காக ell

  //
  இறைநிலையின் கருணையை உணர்ந்து , நமது பெற்றோர்க்கு செய்ய வேண்டிய கடமைகளை செவ்வனே செய்வதும் , தமது இல்லத்து அரசிக்கு செய்ய வேண்டிய கடைமைகளை செவ்வனே செய்வதும் , தமது குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பதும் . தம்மால் சமுதாயத்திற்கு இயன்ற அளவு நன்மை செய்வதும் ஒரு ஆண்மகனின் முக்கிய கடைமையாகும் .


  சாதகர் ராகு கேதுவால் பாதிக்கப்பட்டு இருந்தால், தனது தாய் வழி பெற்றோரையும் ,தனது தந்தை வழி பெற்றோரையும் பேணி காப்பாற்றினால் நிச்சயம் சாதகர் ராகு கேதுவால் அதிக நன்மைகளை பெற முடியும்


  //
  நீங்க என்னதான் சொன்னாலும் சிலைய வச்சு கும்பிடுவார்களே தவிர தாய் வழி பெற்றோரையும் ,தனது தந்தை வழி பெற்றோரையும் காப்பாற்ற மாட்டார்கள் ..என என்றால் ஜோசியர் சிலைதான் கும்பிட சொன்னாருன்னு சொல்லுவாங்க

  சம்சாரி வேலை என்ன என்பது தெளிவாக சொல்லியாதிருக்கு நன்றி

  ReplyDelete