வெள்ளி, 13 ஏப்ரல், 2012

எண்ணம் போல் வாழ்க்கை !





எண்ணம் போல் வாழ்க்கை ! இது எங்களது கிராமத்தில் வயது முதிர்ந்த அனுபவம் நிறைந்த பெரியவர்கள் சொன்னது. 

இதை பற்றி நிறைய நான் சிந்திப்பது உண்டு, பல காலமாக இதன் உள் அர்த்தம் தெரியாமல் குழம்பியது உண்டு காலப்போக்கில் பெரியவர்களின் ஆலோசனையில் இதன் உள் அர்த்தம் தெரிந்த பொழுது வியப்பாக இருந்தது .

ஒரு மனிதன் தனது மனதில் உறுதியாக  நினைக்கும் எண்ணங்கள் செயல்வடிவம் பெறுவது நிச்சயம் என்பதே அதன் சாராம்சம் . அது நன்மையாகவும் இருக்கலாம் , தீமையாகவும் இருக்கலாம் . இதுவே  எண்ண ஆற்றலின் சக்தி .

மேலும் ஒவ்வொரு மனிதனும்   தனது சுய  ஜாதக நிலைக்கு உட்பட்டும் , கர்மவினைக்கு உட்பட்டும் , ஜாதகர்  நினைக்கும் எண்ணங்கள் இறைநிலையால் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதற்க்கு உட்ப்பட்டே அவரது வாழ்க்கையில் அமைகிறது , இதை ஒருவரது சுய ஜாதகத்தை வைத்து தெளிவாக  தெரிந்துகொள்ள இயலும்.

ஒருவன் வாழ்க்கையில் கோபுரத்தில் அமருவதும் குப்பை தொட்டியில்  கிடப்பதும் அவரவர் எண்ண ஆற்றலே காரணம், மன ஆற்றல் ஒருவருக்கு இயற்கையாக அமைந்து விடுமாயின் ஜாதகர் எந்த சூழ்நிலையையும் மாற்றும் தன்மை கொண்டவராக இருப்பார் . 

கடந்த வாரம் ஜோதிட ஆலோசனை பெற வந்த ஒரு அன்பர் கடன் தொந்தராவால் மிகுந்த பாதிக்கபட்டு தற்கொலை முடிவு வரை சென்றுவிட்டேன் எனது நிலை ஜாதகரீதியாக என்ன ? என்பது அவரின் கேள்வியாக இருந்தது . 

அவரின் ஜாதக நிலையை கணிதம் செய்த பொழுது மிகவும் சிறப்பாக இருந்தது ஒரு விஷயத்தை தவிர,
 பூர்வீக ஸ்தானம் முழுவதும் பாதிப்படைந்து ஜாதகர் தனது பூர்வீகத்திலேயே  ஜீவனம் செய்தது மட்டும் இந்த நிலைக்கு காரணம் என்று  ஆலோசனை கூறி பூர்வீகத்தை விட்டு 100 கிலோ மீட்டருக்கு அப்பால்  சென்று ஜீவனம் செய்துகொள்ள ஆலோசனை வழங்கினோம் . 

இதற்க்கு இதுவே மிகசிறந்த வழி , இவர் தனது பூர்வீகத்தை விட்டு சென்றுவிட்டால் ஜாதகரின் மனநிலை மிகவும் சிறப்பாக செயல்படும் , தோல்வி நிலையிலிருந்து வெகு விரைவில் மீண்டு விடுவார், இறைவன் அருளால் வெகுவிரைவில் சகல நலமும் வளமும் பெற எங்களது ஜோதிடம்  வாழ்த்துகிறது .

ஜோதிடம் என்பது இறைநிலை அருளால் நமக்கு கிடைத்த ஒரு மிகசிறந்த வரபிரசாதம், இதன் வழியே நாம் நமது வாழ்வினை சிறப்பாக ஜோதிடம் நிச்சயம் அருள் புரியும் .

பிரச்சனை என்று ஒன்று இருந்தால் அதற்க்கு தீர்வு என்று ஒன்று நிச்சயம் இருக்கும் . நாம் செய்ய வேண்டியது ஒன்றுதான் அதற்க்கான தேடுதலும் அறிவின் வழியில் விழிப்புணர்வும் மட்டுமே இது இருந்தால் வெற்றி  நிச்சயம். 

இதை பெரியார் " மனித அறிவினால் முடியாதது எதுவும் இல்லை" என்று சொன்னதை இந்த இடத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் .

ஜோதிடன் வர்ஷன் 
98424 -21435 
94433 - 55696   

1 கருத்து:

  1. //
    மேலும் ஒவ்வொரு மனிதனும் தனது சுய ஜாதக நிலைக்கு உட்பட்டும் , கர்மவினைக்கு உட்பட்டும் , ஜாதகர் நினைக்கும் எண்ணங்கள் இறைநிலையால் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதற்க்கு உட்ப்பட்டே அவரது வாழ்க்கையில் அமைகிறது , இதை ஒருவரது சுய ஜாதகத்தை வைத்து தெளிவாக தெரிந்துகொள்ள இயலும்.

    ஒருவன் வாழ்க்கையில் கோபுரத்தில் அமருவதும் குப்பை தொட்டியில் கிடப்பதும் அவரவர் எண்ண ஆற்றலே காரணம், மன ஆற்றல் ஒருவருக்கு இயற்கையாக அமைந்து விடுமாயின் ஜாதகர் எந்த சூழ்நிலையையும் மாற்றும் தன்மை கொண்டவராக இருப்பார் .//


    என் சந்தேகம் எண்ணம் போல் வாழ்கை என்றால் ஒருவரின் ஜாதக நிலை மற்றும் கர்ம வினை நன்றாக இல்லாமல் இருந்து எண்ணம் நல்லாக இருந்தால் அந்த எண்ணம் நடக்கு மா??? குழப்பமாக உள்ளது


    //ஜோதிடம் என்பது இறைநிலை அருளால் நமக்கு கிடைத்த ஒரு மிகசிறந்த வரபிரசாதம், இதன் வழியே நாம் நமது வாழ்வினை சிறப்பாக ஜோதிடம் நிச்சயம் அருள் புரியும் .
    //
    கண்டீப்பாக ...

    //பிரச்சனை என்று ஒன்று இருந்தால் அதற்க்கு தீர்வு என்று ஒன்று நிச்சயம் இருக்கும் .//

    அந்த தீர்வு என்பது நம் தேடல் பொருது அமையும் என்பது என் கருத்து

    பதிலளிநீக்கு