புதன், 18 ஏப்ரல், 2012

ஜோதிட ரீதியாக உள்ள மூட நம்பிக்கைகளை கலைவதே எங்களது நோக்கம் .





வணக்கம் சார், 

தங்களுடைய தீபத்தை நாள் ஆரம்பம் முதலே தரிசித்து வருகிறேன்.அதில் மேலும்
கூடுதல் ஒளி தேவைப்படுகிறது.எனது இருட்டுகளை அளிக்கிறேன்.அங்கேயும்
உங்கள் தீப ஒளியை அளியுங்கள்.நன்றி. 

கேள்விகள்:  
1.திருமணப் பொருத்தத்தில் நட்சத்திரப் பொருத்தம் என்பது ராசி பலன்
பார்ப்பதுபோல பொதுவானதே.அதைத் தவிர ஜாதக ரீதியாக பொருத்தம்
பார்க்கவேண்டும் என்ற தங்கள் கூற்றை ஏற்கிறேன்.அந்த வகையில் எனது
கேள்விகள்


ஒரு பாவம் உதாரணமாக களத்திர பாவம் அல்லது தன/குடுப்ப பாவம் 100% நன்மை
செய்யும் அமைப்பு. 100% தீமை செய்யும் அமைப்பில், 100%
பாதிக்கப்பட்டுள்ளது....என்ற வார்த்தைகளை உங்கள் பதிவில் அடிக்கடி
பயன்படுத்துகிறீர்கள்.இதை எப்படி தெரிந்துகொள்வது?

 பதில் : 
ஒரு பாவம் நன்றாக இருப்பதையும் பாதிப்படைந்து இருப்பதையும் எபிமெரிஸ் ஜோதிட கணிதம் மூலம் 100 சதவிகிதம் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும் ,  மேலும் தற்பொழுது  நடக்கும் திசை, புத்தி , அந்தரம் , சூட்சமம் எந்த வீடுகளின் பலனை நடத்துகிறது என்று தெளிவாக,  தெரிந்து கொண்டு  ஜாதக  பலனை துல்லியமாக சொல்ல நிச்சயம் நம்மால் முடியும் , இதற்க்கு தேவை எபிமெரிஸ் கணிதம் வழியில் ஜோதிட கல்வி மட்டுமே , முறையாக இந்த வழியில் ஜோதிடம் கற்று கொண்டால் மட்டும் போதும் , நிச்சயம் ஜோதிட கலையில் நாம் சிறந்து விளங்க முடியும் .



 2.உதாரணமாக இரண்டாமிடத்திலோ ஏழாமிடத்திலோ சர்ப்ப கிரகம் இருந்து சுப கிரக
பார்வை இன்றி இருந்தால் அந்த பெண்னுக்கு/ஆணுக்கு அதே போல் சம தோஷம் உள்ள
ஆணை/பெண்னை த்தான் திருமணம் செய்விக்கவேண்டுமா?அதாவது மைனஸ் இன்ட் மைனஸ்
ப்ளஸ் என்கிறார்கள் இது சரியா?

பதில் :

மேலும் நவகிரகங்கள் சுய ஜாதகத்தில் உச்சம் , ஆட்சி , நட்பு, சமம், போன்ற நிலைகளில் இருந்தால் நன்மை செய்யும் என்றும் , நீச்சம் , பகை பெற்றால் தீமை செய்யும் என்றும் கணிப்பது முற்றிலும் தவறான கணித முறை , மேலும் இவ்வாறு கணிப்பது ஜாதக பலனுக்கு சரியாக வருவதில்லை , இதற்க்கு நமது கணித முறை சிறப்பாக இருக்கும். 

 பாரம்பரிய முறையில் சூரியன் , செவ்வாய் , சனி , தேய்பிறை சந்திரன் , சூரியனுடன் 14  பாகைக்குள் சேர்ந்த புதன், ஆகிய கிரகங்களும் , ராகு கேதுவும் இயற்க்கை பாவிகள் என்றும் , சுக்கிரன் , குரு , வளர் சந்திரன் , தனித்த புதன் ஆகிய கிரகங்களை சுப கிரகங்கள் என்றும் , கருதி பலன் சொல்லுவார்கள் இது ஜோதிட ரீதியாக பலன்கள் சரியாக வர வாய்ப்பில்லை மேலும் ஜோதிடத்தில் அந்த ஜோதிடருக்கே குழப்பத்தை மட்டுமே ஏற்ப்படுத்தும் . ஜோதிடம் என்றாலே தெளிவான பதில் கிடைக்க வேண்டும் அதுதானே ஜோதிட  கலைக்கு சிறப்பு.

  தோஷம் என்று ஜோதிடர்கள் சொல்வதெல்லாம் கிரகங்களின் உண்மை நிலை என்ன வென்று தெரியாமல் சொல்வதே ஆகும் .   

( மைனஸ் இன்ட் மைனஸ் ப்ளஸ் என்கிறார்கள் இது சரியா? )


இது அரை குறை ஜோதிடர்களின் கற்பனையே !  அன்றி வேறில்லை , சர்ப்ப கிரகங்கள் அந்த ஜாதகத்தில் அந்த வீடுகளுக்கு  என்னவிதமான பலனை தருகிறது என்று சரியாக கணிதம் செய்ய முடியவில்லை என்றால் தான் இந்த நிலை வரும் .




 ஒரு ஜாதகத்தில் எந்த ஒரு கிரகமும் எந்த இடத்தில் இருந்தாலும் சரி ஜாதகத்தில் அது தரும் பலன் என்ன என்று சரியாக கணிதம் செய்வதே சரியானது அது சுப கிரகமானாலும் சரி , அசுப கிரகமானாலும் சரி  மேலும் அவரே சிறந்த ஜோதிடனாக இருக்க முடியும் ( எத்தனை துணை நடிகர்கள் திரை படத்தில் நடித்தாலும் கதாநாயகனே முக்கியத்துவம் பெறுவார். )


 3.புத்திர ஸ்தானம் சர்ப்ப கிரகத்தாலோ சூரியனாலோ,சனியாலோ பாதிக்கப்ட்டால்
அல்லது அந்த இட அதிபதி 6,8,12 ல் அமர்ந்து  சுப கிரக பார்வை இன்றி
இருக்கும் ஒரு ஆண்/பெண் ஜாதகருக்கு அதே போல புத்திர பாவம் பாதிக்கப்பட்ட
பெண்/ஆண் ஜாதகரைத்தான் சேர்க்க வேண்டுமா?அல்லது புத்திர பாவம்
பாதிக்கப்பட்டவருக்கு புத்திர பாவம் பலம் உள்ள ஜாதகரைத்தான்
சேர்க்கவேண்டுமா?



பதில் :

இதில் ஜோதிடர்களே பல குழப்பங்கள் ஏற்ப்படுத்தி கொள்கின்றனர், ராகு கேது  அல்லது பாவ கிரகங்கள் ஐந்தில் இருந்தாலே அல்லது  அந்த இட அதிபதி 6,8,12 ல் மறைந்தாலோ ,  புத்திர ஸ்தானம் பாதிக்க பட்டு விட்டது என்று கணிதம் செய்வது தவறான அணுகு முறை,

 மேலும் புத்திர ஸ்தான  அதிபதி 6,8,12 ல் மறைதல் என்பது அந்த பாவகத்துக்க அல்லது லக்கினத்துக்க என்று பார்ப்பது நலம் , எந்த ஒரு பாவக அதிபதியும் அந்த பவகத்துக்கு மட்டும் 6  , 8  , 12  , மறைவது 
கெடுதல் , லக்கினத்துக்கு மறைவு பெறுவதை பற்றி கவலை பட தேவையில்லை. 

குழந்தை பெற இயலாத ஒரு பெண்ணுக்கு , ஆண்மை இல்லாத ஒருவனை திருமணம் செய்து வைத்தால் எப்படி குழந்தை பிறக்கும், 
 அது போல் புத்திர ஸ்தானம் 100  சதவிகிதம் பாதிக்க பட்ட ஒருவனுக்கு இதே போன்ற அமைப்புள்ள பெண்ணை திருமணம் செய்து வைத்தால் எப்படி குழந்தை பிறக்கும், தம்பதியர் இருவரில் ஒருவருக்கு புத்திர ஸ்தானம் வழுவாக இருப்பது குழந்தை பாக்கியத்தை நிச்சயம்  கொடுக்கும் என்ன அது பெண் குழந்தையாக இருக்கும் அதுமட்டுமே குறை என்று சொல்ல முடியும் , மேலும் எந்த ஒரு பாவகமும் 40  சதவிகிதம் நன்றாக இருந்தாலே நிச்சயம் அந்த பாவக பலனை சிறப்பாக செய்யும்


  3.ஒரு பாவம் பாதிக்கப்பட்டால் உதாரணமாக
ஒருவருக்கு தனுசு லக்னம்.லக்னாதிபதி நீசமாகி இருக்க.புத்திர பாவத்தில்
சூரிய ராகு சேர்க்கை.5ம் அதிபதி செவ்வாய் 6ல் அமர்ந்துள்ளார்.சுப கிரக
பார்வை இல்லை.சோ அந்த பாவம் 100% காலி.இது பூர்வ புண்ணியத்தையும்
குறிப்பதால் இவருக்கு எல்லாமே மைனசாகவே உள்ளது.இதை இவர் சரி
செய்யவேண்டும் எனில் பாதிப்பை ஏற்படுத்திய சூரிய,ராகு வுக்கு பரிகாரம்
செய்யவேண்டுமா?அல்லது அந்த வீட்டோன் 6ல் அமர்ந்த செவ்வாய்கு பரிகாரம்
செய்யவேண்டுமா?


பதில் :
தனுசு  லக்கினத்திற்கு லக்கினாதிபதி நீச நிலை மகரத்தில் பெறுவார் ஒருவேளை ஜாதகருக்கு லக்கினம் 265 பாகையில் ஆரம்பித்து குரு பகவான் மகரத்தில் 275 பாகையில் இருப்பதாக வைத்து கொண்டால் , குரு நிச்சநிலை பற்றி கவலை பட தேவையில்லை.


 ஏனெனில் ஜாதகருக்கு லக்கினம் என்னவோ தனுசு தான் , லக்கினம் எனும் முதல் பாவகம் தனுசு ராசியில்  265 பாகையில் ஆரம்பித்து, மகர ராசி 295  பாகையில் முடிவடையும்  . 


எனவே ஜாதகருக்கு குரு பகவான் மகரத்தில் உள்ள முதல் பாவத்திலேயே அமர்ந்து 100  சதவிகித நன்மையை செய்து கொண்டிருப்பார்.


 மேலும் ராகு அல்லது  கேது கிரகங்கள் தனுசுவிலோ , மகரத்திலோ முதல் பாவகத்தில்( ராகு அல்லது கேது தனுசு ராசியில்  265 பாகையில் இருந்து மகரத்தில் 295 பாகைக்குள் ) அமர்ந்து இருந்தால் குரு பகவான் நீச்ச நிலையை பற்றி கவலை பட தேவையில்லை சம்பந்த பட்ட ஜாதகர் முதல் பாவக வழியில் இருந்து 100  சதவிகித நன்மையை பெறுவார் .
 (புத்திர பாவத்தில் சூரிய ராகு சேர்க்கை.5ம் அதிபதி செவ்வாய் 6ல் அமர்ந்துள்ளார்.சுப கிரக
பார்வை இல்லை.சோ அந்த பாவம் 100% காலி. இதை எபிமெரிஸ் முறையில் கணிக்க வேண்டும் )
 தனுசு லக்கினமானால் புத்திர பாவம் நிச்சயம் மேஷ ராசியாக வரும் இதற்க்கு அதிபதியான செவ்வாய் ரிஷபத்தில் ( பாகை அமைப்பில்  6  ல்  அமர்வது அந்த பாவகத்திர்க்கு 100  சதவிகிதம் நன்மையை செய்யும் மேலும் சூரியன் அந்த பாவகத்தில் அமர்வது மிகுந்த நன்மையே செய்யும் , ஒருவேளை ஐந்தாம் வீட்டுக்கு உட்பட்ட பாகைக்குள் ராகு மேஷத்தில் இருப்பது மட்டும்  புத்திர ஸ்தானத்தை 100  சதவிகிதம் பாதிக்கும் .
  

 4.ஒரு கிரகம் நீசம் அடைந்தது என்கிறோம்.ஒரு கிரகம் வக்ரம் அடைந்தது என்கிறோம்

A..நீசத்திற்கும் வக்ரத்திற்கும் என்ன வித்யாசம?
நீச்சம் என்பது கிரகங்கள் ராசியில் அமரும் பொழுது  பெரும் தன்மை ,  வக்கிரம் என்பது கிரகங்களுக்கு சூரியனால் ஏற்ப்படும் நிலை .
 
B.சுப கிரகம் வக்ரம் அடைந்தால் என்ன பலன்?



 சுப கிரகம் வக்ரகம் அடைந்தால் , அமரும் இடத்திற்கு ஏற்றார் போல் நன்மையோ தீமையோ பலனை தடையில்லாமல் வாரி வழங்கும் , அந்த கிரகம் எந்த பாவத்திற்கு அதிபதியாக வருகிறதோ அதற்க்கு ஏற்றார் போல் நன்மை தீமை பலனை தரும் .

C.அசுப கிரகம் வக்ரம் அடைந்தால் என்ன பலன்



ஜாதகர்  மனதாளவில் வெகுவாக பாதிக்க படுவது , தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமை ஆவது , முரண் பட்ட வாழ்க்கை முறையை மேற்கொள்வது , எதையும் தாங்கும் மனநிலை , திருமண வாழ்க்கையில் திருப்தியின்மை , தொழில் சரியாக அமையாத நிலை , போராட்ட வாழ்க்கை, போன்ற பலன்கள் சுய ஜாதகத்திற்கு உட்பட்டு நடக்கும் . மேலும் சரியான பலன்களை தெரிந்து கொள்ள சுய ஜாதகத்தை வைத்து சொல்வதே சரியாக இருக்கும் .

D.லக்னாதிபதி வக்ரம் அடைந்தால் என்ன பலன்?




 வக்கரகம் பெற்று தீமையான பலனை செய்தால்  ஜாதகர் தனது வாழ்க்கையை தானே கெடுத்துகொள்ளும் நிலை ஏற்ப்படும் , நேர்மையான வழியில் நடப்பதை விட்டு விட்டு குறுக்கு வழியை தானே தேர்ந்தெடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவார் , தனிமையை விரும்பும் சூழ்நிலைக்கு வந்து விடுவார் , மனதில் உள்ளதை வெளியே சொல்லவும் தெரியாது , இதனால் மன அழுதத்திர்க்கு ஆளாகும் சூழ்நிலை வரும் . எதையும் போராடி பெரும் நிலை வரும் , வளரும் சூழ்நிலை சிறப்பாக இருக்காது , சிந்தனை செய்யாமல் செயல்களை செய்துவிட்டு பிறகு வருந்தும் தன்மை ஏற்ப்படும் , நல்ல நண்பர்கள் அமைய மாட்டார்கள் . 

 வக்கரகம் பெற்று நன்மையான பலனை செய்தால் ஜாதகுக்கு நிகர் ஜாதகர் மட்டுமே, ஜாதகரை பகைத்து கொள்பவர்களின் சொத்து இவருக்கு வந்து சேரும் , எந்த காரியத்தை தொட்டாலும் பொன்னாகும் , வெற்றி மேல் வெற்றி வந்து சேரும் , விரைவான முன்னேற்றம் , ரகசிய வழியில் பணம் வருவது , திடீர் அதிர்ஷ்டம் , போன்ற அமைப்புகள் ஜாதகருக்கு அமையும் , சொத்து சுக சேர்க்கை குறுகிய காலத்தில் அடைந்து விடும் தன்மை ஜாதகருக்கு ஏற்ப்படும்  , ஒன்றுக்கு மேற்ப்பட்ட மனைவிகள் ஜாதகருக்கு அமையும் வாய்ப்பை பெறுவார் , உடல் நிலை மிகவும் சிறப்பாக இருக்கும் பல நல்ல பலன்களே ஜாதகருக்கு நடக்கும் .

பொதுவாக லக்கினாதிபதி வக்கிரகம் பெற்றால் அந்த ஜாதகரின் மனது கல் மனது என்று தெளிவாக சொல்லிவிட முடியும் அது நன்மையாகவும் இருக்கலாம் , தீமையாகவும் இருக்கலாம் , சுய ஜாதக அமைப்பை கொண்டே  நிர்ணயம் செய்ய இயலும் .

E.லக்னாதிபதி வக்ரம்+நீசம் என்ன பலன்?


 லக்கினத்திபதி வக்ரகம் பெற்றால் என்ன ?  நீசம் பெற்றால் என்ன ? சுய ஜாதகத்தில் இலக்கின அமைப்பிற்கு நன்மை செய்தால் லக்கினம் சிறப்பு பெரும் , தீமை செய்தால் ஜாதகர் அந்த வழியில் இருந்து தொல்லைகள் , சிரமங்களை அனுபவிக்க வேண்டும் . சுய ஜாதகத்தில் லக்கினத்திபதி  வக்ரகம் பெற்றாலும் , நீசம் பெற்றாலும் லக்கினத்திற்கு என்ன பலனை தருகின்றது என்று பார்த்தல் தெரிந்து விடுகிறது .

F.தொழில் ஸ்தானாதிபதி நீசம் அடைந்தால் என்ன பலன்?

தொழில் ஸ்தான அதிபதி நீசம் அடைந்தால் அடைந்து விட்டு போகட்டும் , தொழில் ஸ்தானம் எப்படி  இருக்கின்றது என்று பார்பதே சிறந்த ஜோதிட கணிதம் ஆகும் .

மேற்கன்டதுபோல பல கேள்விகள் உள்ளன.நீங்கள் விரும்பினால் இதற்கான பதில்களை
விரிவாக தங்கள் ப்ளாக்கில் எழுதலாம்.நன்றி



 எனக்கு பதில் சொல்வதில் எந்த சிரமமும் இல்லை , சரியான ஜோதிடம் மக்களை சென்றடைவதே முக்கியம், மக்களிடம் ஜோதிட ரீதியாக உள்ள மூட நம்பிக்கைகளை கலைவதே எங்களது நோக்கம் .

வாழ்க வளமுடன் 

ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

 

2 கருத்துகள்:

  1. Sir mithuna laknam puthan asthamanam 10l suruayan + sevaai gov job kidaikuma..10yrs a I'm trying.18/3/83@ 1.25pm erode Lavanya pls reply me .,. krishnaninnovation@gmail.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இலவச ஆலோசணை வழங்கப்படுவதில்லை முறையாக ஜாதக ஆலோசணை பெற்று நலம் பெறுங்கள் 9443355696

      நீக்கு