Sunday, April 15, 2012

விவாகரத்து அதிகரிக்க காரணம் என்ன ?தமிழகத்தில் நடப்பு வருட கணக்கெடுப்பின் படி இல்லறவாழ்வில் ஏற்ப்படும் பிரச்சனைகளால் விவாகரத்து சதவிகிதம் 8 . 82 உயர்ந்துள்ளதாக நீதிமன்றத்தில் பதிவாகி உள்ள வழக்குகள் எண்ணிக்கையை வைத்து அறிவித்துள்ளனர் .

இந்த செய்தியை வைத்துக்கொண்டு ஒரு தனியார் செய்தி தொலை காட்சியில்  ( தொல்லை காட்சியில் ) பல நிபுணர்கள் விவாதித்துகொண்டு இருந்தனர் , இவர்களின் விவாதத்தை பார்த்த பொழுது எனக்கு சிரிப்புதான் வந்தது , விவாகரத்து சதவிகிதம் அதிகரிக்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தை சொல்லி தனது கருத்தை திணிக்கவே 
செய்தனர் .

உண்மையில் நாம் நமது பாரம்பரிய ( கூட்டு குடும்ப )  வாழ்க்கையில் இருந்து என்று தடம் மாறி வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்தோமோ அன்றே இது ( கணவன் மனைவி தாம்பத்திய பிரிவு ) நமக்கு அறிமுகம் ஆகிவிட்டது , மேலும் கணவன் மனைவி தாம்பத்திய வாழ்க்கை என்னவென்றே தெரியாமல் போனது காலத்தின் கொடுமை . 

ஆராய்ச்சியில் கிடைத்த விவாகரத்து சதவிகிதம் 8 . 82  ஆக இருந்தாலும்,   உண்மையில் வாழ்க்கையில் மன போராட்டத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கும் தம்பதியினர் எண்ணிக்கை 88 .82  ஆக இருக்கும் என்பது முற்றிலும் உண்மை .

இப்படி விவாகரத்துக்காக நீதிமன்ற படியேறும் ஒவ்வொரு கணவனும் மனைவியும் நிச்சயம் வெட்க்கப்பட வேண்டும் தன்னை நம்பி வந்த ஒரு பெண்ணை வைத்து சரியாக வாழ முடியவில்லை என்றால், ஒரு   ஆண்மகனுக்கு இதை விட அவமானம் ஒன்றும் இல்லை, அவன் நிச்சயம் பெண்மையையும் தாய்மையும் மதிப்பவனாக இருக்க முடியாது .

 தமக்கு அமைந்த  கணவனையும், தனது குழந்தையையும் குடும்பத்தையும் நேசித்து , அனுசரித்து , விட்டுகொடுத்து குடும்பம் நடத்த தெரியாமல் ஒரு பெண் இருக்கிறாள் என்றால் நிச்சயம் அவள் தமிழ் மரபில் வந்தவளாக இருக்க முடியாது , மேலும் தமிழ் குல பெண்களுக்கே உரித்தான அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு போன்ற உயரிய குணங்களை தொலைத்துவிட்ட மங்கையாகவே இருப்பாள் . நமது தமிழ் பெண்களின் தியாகமும் வீரமும் தான் போற்றுதலுக்கு உரியதாக இருக்கிறது. 

மேலும் இந்தநிலை வருவதற்கு மிக முக்கிய காரணம் பெற்றோர்களின் வளர்ப்பே காரணம், பெற்றோர்கள் தமது குழந்தைகளை சரியாக வளர்த்து இருந்தால் இந்த நிலை ஏன் வருகிறது , சரியான அறிவுரை சொல்லி நமது பாரம்பரியத்தையும் , தாம்பத்திய உறவுமுறையையும் உணர்த்தியிருந்தால் இந்த நிலை வருமா ? நிச்சயம் இல்லை .

மாறுகின்ற நாகரிக வாழ்க்கையில், மனிதன் தொழில் நுட்பத்தை மட்டும்  நவீனமாக நுகர்ந்து கொண்டு , ஐந்தறிவு வாழ்க்கையை வாழும் நிலைக்கு  தள்ளப்பட்டு விட்டான் என்பதே உண்மை . நல்ல வேலை மறைந்த  நமது ஆன்மீக அருட் தந்தை வேதாத்திரி அய்யா  , மற்றும் ஞான வள்ளல் பரஞ்சோதியார் அவர்களும் ,  பரஞ்சோதி நகரில் தற்பொழுது தம்மை நாடி வருபவர்களுக்கு சரியான பாதையை வழிகாட்டும் அய்யா பரஞ்சோதி மகான்  போன்றோர்கள் , நமது பாரம்பரியத்தையும் , உறவுகளின் உன்னதத்தையும் , கணவன் மனைவி தாம்பத்திய புனிதத்தையும் எப்படி போற்றி  பாதுகாப்பது அதன் வழி முறைகளையும் இன்றளவும் நமக்கு அறிவுரித்திகொண்டு இருப்பது  தமிழகம் செய்த தவ பலன்.  


மன நல மருத்துவர் ஷாலினி அவர்கள் 


தமிழகத்தில்  தாம்பத்திய வாழ்க்கையில் பிரிவை நோக்கி சென்றுகொண்டு இருக்கும் , காதலர்களும் , தம்பதியினரும் சந்திக்க வேண்டிய ஒரு மிகசிறந்த மன நல மருத்துவர் 
டாக்டர் ஷாலினி அவர்கள் . இவரிடம் ஆலோசனை பெற வரும் அனைவருக்கும் நிச்சயம் வாழ்க்கை ஒரு புதிய  பூந்தோட்டமாக மலர்ந்து  மனம் வீசும் என்பதில் சந்தேகமே இல்லை .

இறுதியாக  ஒன்று :

திருமண பந்தத்தை  எந்த சட்டத்தை போட்டும் நல்ல வாழ்வினை தந்துவிட முடியாது இதை தான் " அடுத்தவன் படுக்கை அறையை எட்டி பார்க்காதே " என்று பெரியவர்கள் சொன்னார்கள் , தனது குடும்ப பிரச்சனைகளை எக்காரணத்தை கொண்டும் மற்றவரிடம்  ( அரசு , நீதிமன்றம் ) தீர்வு கிடைக்கும்  என்று எண்ணுவது முற்றிலும் தவறானது. அதற்க்கான தீர்வு அவர்களிடமே ( தமபதியரிடம் ) இருப்பதை உணர்ந்தால் நிச்சயம் எதிர்காலத்தில்  நமது தமிழகம் உலகத்திற்கே பாடம் கற்று தரும் .

விவாகரத்துக்கு ஜோதிட ரீதியான காரணங்களை பின் வரும் பதிவுகளில்  காணலாம் !?

ஜோதிடன் வர்ஷன் 
                                                                                                                                            9443355696 

No comments:

Post a Comment