செவ்வாய், 3 ஏப்ரல், 2012

நெருப்பு , நிலம், காற்று, நீர் தத்துவ ராசிகள் ஜாதகத்தில் நடத்தும் பலன்கள் !




நெருப்பு

ஒரு ஜாதகருக்கு நடப்பு திசை, புத்தி, அந்தரம் , சூட்சமம் , ஆகியவை முறையே நெருப்பு தத்துவ ராசியுடன் சம்பந்தம் பெற்று நன்மையை செய்தால் கிழ்கண்ட பலன்கள் நடைபெறும் :

ஜாதகர் மிகவும் நேர்மையான தன்மையுடன் நடந்துகொள்ளும் தன்மையை தரும் , மேலும் சுய ஒழுக்கம் , சுய கட்டுப்பாடு , அதிகாரம் செய்யும் அமைப்பு , கௌரவம் , சுய மரியாதை மற்றும் கடமை உணர்ச்சி கொண்டுள்ளவராக காணப்படுவார் , மேலும் இது சம்பந்தப்பட்ட தொழில் செய்து சமுதாய முன்னேற்றத்திற்கு பயனுள்ளவராக இருப்பார் .

 ஒரு ஜாதகருக்கு நடப்பு திசை, புத்தி, அந்தரம் , சூட்சமம் , ஆகியவை முறையே நெருப்பு தத்துவ ராசியுடன் சம்பந்தம் பெற்று தீமை செய்தால் கிழ்கண்ட பலன்கள் நடைபெறும் :

ஜாதகர் மூர்க்கத்தனம் , முன்கோபம் , சுயநலம் , போதை , போகம் , முதலியவற்றில்  ஈடுபட்டு, தானும் கேட்டு , தன குடும்பத்தையும் , சமுதாயத்தையும் கெடுப்பார் , மேலும் மற்றவர்களுக்கு தொல்லை கொடுத்து அதில் இன்பம் காணும் கொடூர குணம் கொண்டவராக இருப்பார் , இவரால் மற்றவர்கள் எவ்வித நன்மையையும் பெற வாய்ப்பே இல்லை , மேலும் இது சம்பந்தம் பெற்ற தொழில்களை ஈடுபட்டு , சமுதாய குற்றவாளியாக மாறிவிடுவார் .


 நிலம் 

 ஒரு ஜாதகருக்கு நடப்பு திசை, புத்தி, அந்தரம் , சூட்சமம் , ஆகியவை முறையே நில தத்துவ ராசியுடன் சம்பந்தம் பெற்று நன்மையை செய்தால் கிழ்கண்ட பலன்கள் நடைபெறும் : 

ஜாதகர் சகிப்புத்தன்மை கொண்டவராகவும் , நிதானம் , மற்றவரை அனுசரித்து செல்லும் குணம் உடையவராகவும் , மற்றவரையும் தன்னை போல் கருதும் தன்மை கொண்டவராக இருப்பார் , மேலும் அனைவரிடமும் கண்ணியத்துடனும் ,  மரியாதையுடன் நடந்துகொள்ளும் தன்மையுடையவராக  இருப்பார் , மேலும் கடின உழைப்பாளியாகவும் , மண் மனை , வண்டி , வாகன யோகம் உடையவராகவும் , உணவில் நாட்டம் உள்ளவராகவும் இருப்பார் . மேற்கண்ட அமைப்பில் ஜாதகருக்கு தொழில் நல்ல நிலையில் செய்து வெற்றி பெறுபவராக இருப்பார் .

ஒரு ஜாதகருக்கு நடப்பு திசை, புத்தி, அந்தரம் , சூட்சமம் , ஆகியவை முறையே நெருப்பு தத்துவ ராசியுடன் சம்பந்தம் பெற்று தீமை  செய்தால் கிழ்கண்ட பலன்கள் நடைபெறும் : 

ஜாதகர் எதை செய்வதாலும் தயக்கம் உள்ளவராக இருப்பார் , மேலும் பயந்த சுபாவத்தால் ஜாதகர் செய்யும் அனைத்து காரியங்களும் தோல்வி அடையும் , மேலும் தனது பிடிவாத குணத்தால் தனக்கே பெரிய கெடுதல்களை தேடிகொல்வார்  , மற்றவரை குறை சொல்வதே வழக்கமாக கொண்டு திரியும்  தன்மை ஏற்ப்படும் , இவர்களது சோம்பேறித்தனம் உலக அளவில் பெயர் பெரும் அளவிற்கு ஜாதகர் நடந்து கொள்வார் , போகத்தில் ஈடுபட்டு தனது உடல்  நிலையை கெடுத்துகொள்வார், மேலும் நன்றாக சாப்பிடுவதே வாழ்க்கை  என்ற நிலைக்கு வந்துவிடுவார் , அதற்காக எதையும் இழக்கவும் தயாராக இருப்பார் , தன்னை அழகு படுத்தி கொள்வதில் அதிக அக்கறை காட்டுவார் .

  
காற்று


ஒரு ஜாதகருக்கு நடப்பு திசை, புத்தி, அந்தரம் , சூட்சமம் , ஆகியவை முறையே  காற்று தத்துவ ராசியுடன் சம்பந்தம் பெற்று நன்மையை செய்தால் கிழ்கண்ட பலன்கள் நடைபெறும் : 

ஜாதகரின் புத்திசாலித்தனம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் , ஜாதகரால் இயலாத காரியம் ஒன்றும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு ஜாதகரின் செயல்பாடுகள் இருக்கும் , மேலும் இவரின் சுய சிந்தனை மற்றவர்களின் வாழ்க்கைக்கு சரியான பாதையை அமைத்து தரும் , இவரின் அறிவாற்றல் சமுதாயத்திற்கு பல நல்ல பலனை தரும் , முற்ப்போக்கு சிந்தனை உள்ளவராக காணப்படுவார் . மேலும் டாக்டர் , வக்கீல் , எஞ்சினியர் , ஆடிட்டர் போன்ற அறிவை  முதலீடாக கொண்ட தொழில்களில் ஜாதகர் தனது வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருப்பார் .

ஒரு ஜாதகருக்கு நடப்பு திசை, புத்தி, அந்தரம் , சூட்சமம் , ஆகியவை முறையே காற்று  தத்துவ ராசியுடன் சம்பந்தம் பெற்று தீமை  செய்தால் கிழ்கண்ட பலன்கள் நடைபெறும் :

ஜாதகரின் முட்டாள் தனத்திற்கு ஒரு அளவே இருக்காது , மேலும் சபல புத்தி உள்ளவராகவும், முட்டாள் தான செய்கையால் தனக்கே பெரிய ஆப்பாக  அடித்து கொள்வார் , மேலும் சுயநல வாதியாகவும் குறுகிய மனம் படைத்தவராகவும் , சமுதாயத்திற்கு  முரண்பாடான  வாழும் வாழ்க்கை அமைந்துவிடும் . 



 நீர்

ஒரு ஜாதகருக்கு நடப்பு திசை, புத்தி, அந்தரம் , சூட்சமம் , ஆகியவை முறையே நீர் தத்துவ ராசியுடன் சம்பந்தம் பெற்று நன்மையை செய்தால் கிழ்கண்ட பலன்கள் நடைபெறும் :

ஜாதகர் சகல கலைகளிலும் தேர்ச்சி பெரும் அமைப்பை பெறுவார் , அருங்கலைகளில்  ஈடுபாடு , கற்பனை திறனால் சாதனை செய்யும் அமைப்பு , இவர்களின் கற்பனை நிச்சயம் உயிர் பெரும் . மேலும் திட்டமிட்டு செயல்படுவதில் இவர்களுக்கு நிகர் இவர்களே ! சுயகட்டுபாடு, உள்ளதை வைத்து வாழும் திறமை , மனித நேயம், அன்பு, பாசம் இவற்றிற்கு இலக்கணமாக திகழ்வார்கள் . நல்ல ஞான மார்க்கம் ஏற்ப்படும் , மேற்கண்ட அமைப்பில் தொழில் ஜாதகருக்கு அமையும் .

ஒரு ஜாதகருக்கு நடப்பு திசை, புத்தி, அந்தரம் , சூட்சமம் , ஆகியவை முறையே நீர்  தத்துவ ராசியுடன் சம்பந்தம் பெற்று தீமை  செய்தால் கிழ்கண்ட பலன்கள் நடைபெறும் : 

ஜாதகர் பிடிவாதகுணம் , சபலம் , உணர்ச்சிவசப்படுதல் , மற்றவரை சார்ந்து அல்லது இம்சித்து வாழ்க்கை நடத்துதல் , போதை வஸ்துக்களுக்கு அடிமையாகும் நிலை , ஆடம்பர கேளிக்கைக்கு வீண் செலவு செய்யவது , தனது வாழ்க்கைக்கு தானே கெடுதல் செய்துகொள்ளுதல் போன்ற நிலை , இது சம்பந்தம் பெற்ற தொழில்களில் ஈடுபடுவதால் பாதிப்படைவார் .

 ஜோதிட கணிதம் செய்யும் பொழுதும், பலன் சொல்லும் பொழுதும் இவற்றுடன் சர, திர, உபய தத்துவத்தை இணைத்து பலன் சொல்ல வேண்டும் .


ஜோதிடன் வர்ஷன் 
9842421435 
9443355696 
  

1 கருத்து:

  1. //
    காற்று

    //ஜாதகரின் முட்டாள் தனத்திற்கு ஒரு அளவே இருக்காது//


    ///தனக்கே பெரிய ஆப்பாக அடித்து கொள்வார் ,//




    பாஸ் காமெடிக்கு அளவே இல்லாம போச்சு ... நல்ல இங்கே உக்காந்து சிரிச்சுட்டு இருக்கேன் ..... ஆனாலும் உண்மையில் ஒருசிலர் அப்படிதான் உள்ளனர் ... ஆப்புக்கு அவங்களே காரணம் என்றால் கற்று தத்துவம் ஒன்று

    பதிலளிநீக்கு