செவ்வாய், 4 செப்டம்பர், 2018

கடக லக்கினத்திற்க்கு சனி மகாதிசை கடுமையான இன்னல்களையும் வெகுவான பாதிப்பையும் தருவதேன் ?



 ஏழரை சனி, அஷ்டம சனி, பாத சனி, அதார்ஷ்டமசனி, சனி திசை, சனி புத்தி காலங்களில் ஒருவருக்கு சனி பகவான் தரும் துயரம் என்பது தாங்க இயலாத வண்ணம் இருக்கும் என்பதும், சனி பகவான் ஒருவருக்கு இன்னல்களை தர ஆரம்பித்துவிட்டால் அவர் அதில் இருந்து தப்புவது அரிதிலும் அரிது என்றும் பல கருத்துக்கள் நம்மிடையே உள்ளது, இதற்க்கு பல்வேறு புராணங்கள் இதிகாசங்களில் இருந்து பலதரப்பட்ட கதைகளும், விளக்கங்களும் நமக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, இவை அனைத்தும் சுய ஜாதக கணிதத்திற்க்கு சிறிதும் பொருத்தமற்றதும், உண்மைக்கு புறம்பானது என்பதுவே " ஜோதிடதீபத்தின் " கருத்தாகும்.

ஒருவருக்கு சுய ஜாதக ரீதியாக நன்மை தீமை, யோகம் அவயோகம் போன்ற பலன்களை வழங்கும் வல்லமை லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையின் அடிப்படையிலேயே நடைமுறைக்கு வருகின்றது, நமது சுய ஜாதகம் பிறந்த தேதி நேரம் மற்றும் இடம் ஆகியவற்றின் அடிப்படையில் கணிதம் செய்யப்பட்டு, லக்கினம் முதல் பனிரெண்டு பாவகமும் வலிமையுடன் காணப்பட்டால், கடக லக்கினம் மட்டுமல்ல, எந்த லக்கினம் என்றாலும் ஜாதகருக்கு சுபயோக பலன்களையே நவ கிரகங்களின் திசா புத்திகள் வழங்கும், மாறாக நமது சுய ஜாதகத்தில் சில பாவகங்களோ பல பாவகங்களோ வலிமையற்று இருப்பின், அப்படி வலிமையற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் திசா புத்திகள் ஜாதகருக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து இன்னல்களை தரும் என்பதில் சந்தேகம் இல்லை, இதற்க்கு நவகிரகங்களின் திசா புத்திகள் இன்னல்களை தருகின்றது என்று தவறான புரிதல்களை கொண்டிருப்பது, ஜாதக கணிதம் பற்றிய அறியாமையினால் ஏற்படும் ஓர் நிலையே அன்றி, உண்மை என்பது சிறிதும் இல்லை.

கீழ்கண்ட ஜாதகருக்கு கடக லக்கினம், சனி திசை நடைமுறையில் உள்ளது, நடைபெறும் சனி திசை சுயமாக தனது திசையிலும் புத்தியிலும் துன்பத்தை தருவதாக கருதுவது, ஜாதகரின் வினாவில் பிரதிபலிக்கிறது, அது உண்மை அல்ல தங்களது சுய ஜாதக பாவக வலிமையையே தனது திசையில் சனி பகவான் ஏற்று நடத்துகிறார் என்பதை ஜாதக கணிதம் கொண்டு தெளிவுபடுத்த " ஜோதிடதீபம் " கடமைப்பட்டுள்ளது, அது சார்ந்த விளக்கங்களை இன்றை பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !  


லக்கினம் : கடகம் 
ராசி : ரிஷபம் 
நட்ஷத்திரம் : கிருத்திகை 2ம் பாதம் 

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் வலிமை பெற்றுள்ள பாவக தொடர்புகள் 

1,3,7,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவக தொடர்பை பெறுவது ஜாதகருக்கு 1,3,7,9ம் பாவக வழியில் இருந்து சகல சௌபாக்கியங்களையும் தரும் அமைப்பாகும்.

4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவக தோடர்பை பெறுவது 4ம் பாவக வழியில் இருந்து சிறப்பான யோக பலனை வாரி வழங்கும்.

5ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவக தொடர்பை பெறுவது ஜாதகருக்கான முன்னேற்றங்களை பரிபூரணமாக வாரி வழங்கும்.

6,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவக தொடர்பை பெறுவது 6,10ம் பாவக வழியில் ஜீவன மேன்மை,செல்வச்செழிப்பை தன்னிறைவாக வாரி வழங்கும்.

  மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் பெரும்பாலான பாவகங்கள் மிகவும் வலிமையுடன் காணப்படுகிறது, சுய ஜாதகத்தில் 8 பாவகங்கள் மிகவும் வலிமையுடன் இருப்பது வரவேற்கத்தக்கது.

ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவக தொடர்புகள் :

2,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவக தொடர்பை பெறுவது ஜாதகருக்கு 100% விகித இன்னல்களை தரும் குறிப்பாக ஜாதகரின் 12ம் பாவகம் கடக ராசியில் 29 பாகைகளை கொண்டிருப்பது ஜாதகருக்கு உகந்ததல்ல, இது ஜாதகருக்கான சுக போகங்களை வெகுவாக பாதிக்கும்.

8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு நீண்ட ஆயுளை தந்த போதிலும், திடீர் இழப்புகளை தவிர்க்க இயலாது, மருத்துவ செலவு, வீண் விரையம், மற்றவர்களால் ஏற்படும் பொருளாதர தடைகள் என்ற வகையில் இன்னல்களை தரும்.

ஜாதகருக்கு சர நீர் ராசியான கடகமும், உபய நீர் ராசியான மீனமும் கடுமையாக பாதிக்கப்படுவது ஜாதகரின் மனம் சார்ந்த பாதிப்புகளை வெகுவாக அதிகரிப்பதுடன், சுகபோகங்களை தடைசெய்யும் என்பது கவனிக்கத்தக்கது.

ஜாதகத்தில் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட பாவக தொடர்பு :

11ம் வீடு பாதக ஸ்தானமான ( சர லக்கினத்திற்க்கு 11ம் வீடு பாதக ஸ்தானம் ) 11ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது ஜாதகத்தில் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட பாவக தொடர்பு எனலாம், ஜாதகர் பாதக ஸ்தான வழியில் இருந்தே 200% விகித இன்னல்களை அனுபவிக்கும் சூழ்நிலையை தரும்.

நடைபெறும் சனி திசை தரும் பலன்கள் :

மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் வலிமை, வலிமை அற்ற பாவக தொடர்புகள் பற்றியே ஓர் தெளிவு நமக்கு கிடைத்து விட்டது, அடுத்து தற்போழுது நடைமுறையில் உள்ள சனி திசை மற்றும் புதன் புத்தி ( இன்றோடு நிறைவு பெரும் புதன் புத்தி ) ஏற்று நடத்தும் பாவக தொடர்பு என்ன? அடுத்து  வரும் கேது புத்தி, சுக்கிரன் புத்தி தரும் பலாபலன் என்ன? என்பதை சற்று விரிவாக ஆய்வு செய்வோம், ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் சனி திசை ( 23/12/2012 முதல் 23/12/2031 வரை ) 11ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவக தொடர்பை பெற்று முழு வீச்சில் சனி திசையில் பாதக ஸ்தான பலனை நடைமுறை படுத்துகிறது என்பதால் ஜாதகர் சனி திசையில் 200% விகித இன்னல்களை சந்திக்கிறார் என்பதுடன், தற்போழுது நடைமுறையில் உள்ள புதன் புத்தியும் ( 26/12/2015 முதல் 04/09/2018 வரை ) ஜாதகருக்கு 11ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவக தொடர்பை பெற்று முழு வீச்சில் புதன் புத்தியும் பாதக ஸ்தான பலனை தருவது ஜாதகருக்கான நெருக்கடிகளை வெகுவாக வாரி வழங்கியுள்ளது, ஒருவருடைய சுய ஜாதகத்தில் தாங்க இயலாத துன்பங்களை தருவது பாதக ஸ்தான தொடர்பை பெரும் வீடுகளே என்றால் அது மிகையல்ல, இதற்க்கு சரியான உதாரணமாக மேற்கண்ட ஜாதகம் அமைந்திருப்பது கவனிக்கத்தக்கது.

எதிர்வரும் கேது புத்தி மற்றும் சுக்கிரன் புத்திகள் தரும் பலன்கள் :

 ஜாதகருக்கு இன்று முதல் நடைமுறைக்கு வரும் கேது புத்தி சுய ஜாதகத்தில் 1,3,7,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவக தொடர்பை பெற்றும், 5ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவக தொடர்பை பெற்றும் 1,3,5,7,9ம் வீடுகள் வழியில் பூர்வபுண்ணியம் மற்றும் பாக்கிய ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கான யோக வாழ்க்கையை உறுதி செய்கிறது, குறிப்பாக ஜாதகருக்கு சனி திசையில் கேது புத்தி சுபயோகங்களை வாரி வழங்க காத்துகொண்டு இருப்பது வரவேற்கத்தக்கது, அடுத்து வரும் சுக்கிரன் புத்தி ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 1,3,7,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவக தொடர்பை பெற்று முழு வீச்சில் பாக்கிய ஸ்தான பலனையே தொடர்ந்து நடத்துவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், ஜாதகருக்கு சனி திசை பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்திய போதிலும், எதிர்வரும் கேது மற்றும் சுக்கிரன் புத்திகள் சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கான சுபயோகங்களையும், நன்மைகளையும் வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்கது.

 அதற்க்கு அடுத்து வரும் சூரியன் சந்திரன் புத்திகள் ஜாதகருக்கு சற்று இன்னல்களை 2,12ம் பாவக வழியில் இருந்து இன்னல்களையும் , செவ்வாய் புத்தி 4ம் பாவக வழியில் இருந்து யோகத்தையும், ராகு புத்தி 6,10ம் பாவக வழியில் சுபயோகங்களையும் வாரி வழங்கும், என்பதுடன் குரு புத்தி ஆயுள் ஸ்தான வழியில் இருந்து உடல் நல பாதிப்பை தரக்கூடும். சுய ஜாதகத்தில் 8ம் வீடு மிக வலிமையுடன் இருப்பது ஜாதகருக்கான ஆயுளை உறுதி செய்யும் என்ற போதிலும் உடல் நலம் அல்லது பொருளாதர பாதிப்பை ஜாதகர் சிறப்பாக நிர்வகிப்பது அவசியமாகிறது.

 குறிப்பு :

 நவ கிரகங்கள் சுய ஜாதகத்தில் உள்ள பாவக தொடர்புகள் தரும் பலாபலன்களையே தனது திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷம காலங்களில் நடைமுறைக்கு கொண்டு வரும் என்பதை உணர்வது அவசியமாகிறது, தன்னிசையாக ஒருவருக்கு யோக அவயோக பலன்களை தர நவகிரகங்களுக்கு சக்தி இல்லை என்பதை சுய ஜாதக கணிதம் உணர்ந்தவர்கள் அனைவரும் அறிவர், மேற்கண்ட ஜாதகருக்கும் அதுவே நடைமுறைக்கு வருகிறது, சனி திசை பாதக ஸ்தான பலனை நடைமுறைப்படுத்துவதாலே, ஜாதகர் கடுமையான இன்னல்களை எதிகொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார், சுய ஜாதகத்தில் பெரும்பாலான வீடுகள் வலிமையுடன் இருந்த போதிலும், நடைபெறும் சனி திசை, புதன் புத்தி ஜாதகருக்கு சாதகமற்று இருப்பதே அனைத்து துன்பத்திற்கும் காரணமாகும், எதிர்வரும் புத்திகள் வலிமையான வீடுகளின் பலனை தருவது ஜாதகருக்கான யோக வாழ்க்கையை உறுதி செய்கிறது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

சனி, 1 செப்டம்பர், 2018

சகோதர ஸ்தானத்தில் பகை பெற்று அமர்ந்த ராகு திசை துன்பத்தை தருமா ?



 இயற்கையில் சாயா கிரகங்களான ராகு கேது சுய ஜாதகத்தில் வலிமை பெற்று இருப்பது ( தான் அமர்ந்த பாவகத்தை வலிமை பெற செய்வதின் மூலம் பெரும் வலிமை ) சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சாயா கிரகங்கள் அமர்ந்த பாவக வழியில் இருந்து மிகுந்த சுபயோகங்களை வாரி வழங்கும், மேலும் உயர் கணித சார ஜோதிட அமைப்பின் படி சாயா கிரகங்கள் அமர்ந்த வீடுகள் வலிமை பெற்ற பாவக தொடர்பை பெறுவது ஜாதகருக்கான யோக வாழ்க்கையை உறுதி செய்யும் என்பதில் மாற்று கருத்து இல்லை அன்பர்களே, கீழ்கண்ட ஜாதகர் சகோதர ஸ்தானத்தில் பகை பெற்று அமர்ந்த ராகு திசை துன்பத்தை தருமா ? என்ற கேள்வியை முன்வைத்திருக்கிறார், இதற்கான பதில் என்ன ? மேலும் சுய ஜாதகத்தில் சாயா கிரகங்கள் வலிமை பெறுவதால் சம்பந்தப்பட்ட ஜாதகர் பெரும் நன்மைகள் என்ன ? என்பதனை இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.


லக்கினம் : தனுசு 
ராசி : சிம்மம் 
நட்ஷத்திரம் : பூரம் 3ம் பாதம்

மேற்கண்ட ஜாதகர் தனது கேள்வியில் சகோதர ஸ்தானத்தில் பகை பெற்று ராகு அமர்ந்து இருப்பதாக குறிப்பிட்டு இருக்கின்றார், இது மேலோட்டமாக காணும் பொழுது தனுசு லக்கினத்திற்கு கும்பத்தில் ராகு அமர்வது சகோதர ஸ்தானமான 3ம் வீடாக கருதுவது இயற்கையே, இருப்பினும் ஜாதகத்தில் பாவக கணிதத்தின் அடிப்படையில் காணும் பொழுது சகோதர ஸ்தானமான 3ம் பாவகம் கும்ப ராசியில் 326:19:46 பாகையில் ஆரம்பித்து மீன ராசியில் 359:08:15 பாகையில் நிறைவு பெறுகின்றது, இதற்க்கு உற்பட்ட பாகையில் ராகு அமரவில்லை மாறாக, கும்ப ராசியில் உள்ள 2ம் பாவகத்திற்க்கு உற்பட்ட 322:55:04 பாகையில் ராகு அமர்ந்திருப்பது கவனிக்கத்தக்க உண்மை நிலை, எனவே ஜாதகருக்கு கும்ப ராசியில் ராகு அமர்ந்து இருந்தாலும் அது 2ம் பாவகத்திலேயே அமர்ந்திருக்கின்றது, மேலும் கேது பகவான் சிம்மராசியில் அமர்ந்து இருந்தாலும், அவரும் சிம்மத்தில் உள்ள 8ம் பாவகத்திலேயே அமர்ந்து இருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.

அடிப்படையிலேயே ஜாதகருக்கு சாயா கிரகங்களான ராகு கேது முறையே 2ம் பாவகம் மற்றும் 8ம் பாவகத்தில் அமர்ந்திருப்பதே உண்மை நிலை, மேலும் தான் அமர்ந்த பாவகத்திற்கு சாயா கிரகங்கள் 100% வலிமையை தரும் அமைப்பில்  காணப்படுவது ஜாதகருக்கு மிகுந்த யோக வாழ்க்கை தரும் அமைப்பாகும், மேலும் சுய ஜாதகத்தில் 2ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவக தொடர்பை பெறுவது வரவேற்கத்தக்கது, ஜாதகர் இரண்டாம் பாவக வழியில்  இருந்து இசையில் ஆர்வம், இனிமையான பேச்சு திறன், கலைத்துறையில்வெற்றி, நிறைவான வருமான வாய்ப்புகள், பொழுது போக்கு அம்சங்களில் ஆர்வம், குழந்தைகள் வழியிலான யோக வாழ்க்கை, தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகள், இனிமையான இல்லற வாழ்க்கை, தொழில் நுட்பம் சார்ந்த விஷயங்களில் தனி திறன், சிறந்த நிர்வாக திறன் என்ற வகையில் நன்மைகளை வாரி வழங்கும், 8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு நீண்ட ஆயுளை  தரும் என்பது கவனிக்கத்தக்கது.

இனி ஜாதகரின் கேள்விக்கான பதிலை கருத்தில் கொள்வோம்.

நடைபெறும் ராகு திசை  தரும் பலன்கள் : ( 23/12/2016 முதல் 23/12/2034 வரை ) 

ராகு தனது திசையில் 6ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவக தொடர்பை பெற்று பாதக ஸ்தான பலனை சத்ரு ஸ்தானமான 6ம் பாவக வழியில் இருந்து  தருவது ஜாதகருக்கு உகந்தது அல்ல ஏனெனில் ஜாதகருக்கு வரும் எதிர்ப்புகள் மிகவும் அதிக அளவில் இருக்கும், ஜாதகரின் பாதக ஸ்தானம் பெரும் பகுதி சர நீர் ராசியான கடகத்தில் வியாபித்து நிற்பது மிகுந்த மன உளைச்சலையும், போராட்டங்களையும் தரும், ஜாதகருக்கு வரும் எதிர்ப்புகள் மனதளவில் வெகுவான பாதிப்புகளை தரக்கூடும், மேலும் கடன் , உடல் நலம் சார்ந்த விஷயங்களில் அதீத கவனம் செலுத்துவது அவசியமாகிறது, குறிப்பாக செலவுகளை கட்டுக்குள் வைப்பது மிகுந்த நன்மைகளை ஜாதகருக்கு வாரி வழங்கும், சிறந்த நிதி நிர்வாகம் ஜாதகரின் வாழ்க்கையில் வரும் நெருக்கடிகளை வெகுவாக குறைக்கும், சுய ஜாதகத்தில் ராகு பகவான் 2ல் வலிமை பெற்று அமர்ந்த போதிலும், தனது திசா புத்தியில் 6ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவக பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு சற்று இன்னல்களை தரும் அமைப்பாகவே கருத வேண்டியுள்ளது, ராகு திசை ராகு புத்தியில் மட்டும் ஜாதகர் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட்டு, தனக்கு வரும் சத்ரு ஸ்தான இன்னல்களில் இருந்து விடுபடுவது அவசியமாகிறது, யாரிடமும் பகைமை பாராட்டாமல், நட்பு கொள்வது மிகுந்த யோகத்தை தரும், மேலும் தனது முயற்சியில் சற்றும் மனம் தளராமல் மீண்டும் மீண்டும் போராடுவது நல்ல வெற்றிகளை வாழ்க்கையில் வாரி வழங்கும்.

சுய ஜாதகத்தில் 7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவக தொடர்பை பெறுவது வெளிநாடு சார்ந்த வகையில் இருந்து இன்னல்களை தரக்கூடும் என்பதால் அது சார்ந்த முயற்சியை கைவிடுவது நல்லது, சுய ஜாதகத்தில் மிகவும் வலிமை பெற்ற பாவக தொடர்பான ( 2,11ம் வீடுகள் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவக தொடர்பு, 3,9ம் வீடுகள் அதிர்ஷ்டம் மற்றும் லாப ஸ்தானமான 11ம் பாவக தொடர்பு ) 2,3,5,9ம் பாவக வழியில் இருந்து வரும் யோக வாழ்க்கையை சுவீகரிக்கும் தன்மையை ஆய்வு செய்து அதனை நடைமுறைப்படுத்துவதே ஜாதகருக்கு உகந்த நன்மைகளை தரும்.

குறிப்பு :

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் சாயா கிரகங்களான ராகு கேது வலிமை பெற்று 2,8ம்  பாவகத்தில் அமர்ந்த போதிலும், ராகு தனது திசையில் 6 ம் வீடு பாதக ஸ்தான தொடர்பை பெற்று  பலாபலனை தருவது உகந்தது அல்ல, கேது தனது திசையில் 4,10ம்  வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவக தொடர்பை பெற்று யோக பலனை தருவது மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும் அமைப்பாகும், நவகிரகங்கள் சுய ஜாதகத்தில்  வலிமை பெற்ற பாவக தொடர்பை ஏற்று நடத்தினால் ஜாதகரின் வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும் என்பதில் மாற்று கருத்தென்பதே இல்லை எனலாம், வலிமை அற்ற பாவக பலனை தரும் பொழுதே ஜாதகர் சம்பந்த பட்ட பாவக வழியில் இருந்து இன்னல்களை அனுபவிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார், " வாழ்த்துக்கள் "

 வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696