விருச்சகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விருச்சகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

ராகு பகவான் சுய ஜாதகத்தில் பெரும் வலிமையும், தனது திசையில் தரும் பலாபலன்களும் !


தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் 
தோன்றலின் தோன்றாமை நன்று.

என்ற திருக்குறளுக்கு சரியான எடுத்துகாட்டாக விளங்க, ஒருவர் ஜாதகத்தில் சாயா கிரகங்களான ராகு கேது பெரும் வலிமையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட ஜாதகர் சகல யோகங்களையும் பெறுவார் என்று தெளிவாக கூறிவிட முடியும், சுய ஜாதகத்தில் சாயகிரகங்கள் வலிமை பெறும் அமர்வதும், தனது திசாபுத்திகளில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவதும், ஜாதகரை மேற்கண்ட குறளுக்கு பொருத்தமான வாழ்க்கையை பிறவியிலே நல்கும், ஜாதகர் பிறப்பில் இருந்தே வாழ்க்கையில் யோக பலாபலன்களை அனுபவிக்கும் வல்லமை பெற்றவராக திகழ்வார், சுய ஜாதகத்தில் சாயாகிரகங்கள் வலிமை பெறுவது சம்பத்தப்பட்ட ஜாதகருக்கு வழங்கும் யோக வாழ்க்கை என்பது கற்பனைக்கு கூட எட்டாத வகையில் அமையும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

ஒரவர் ஜாதகத்தில் சாயா கிரகங்கள் வலிமை பெரும் பொழுது எப்படி பட்ட யோக பலன்களை தருகின்றதோ, அதற்க்கு நிகரான இன்னல்களையும் சுய ஜாதகத்தில் ராகு கேது வலிமை அற்று நிற்பதும், தனது திசையில் பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்றுநடத்துவதும் ஜாதகருக்கு பாகுபாடு இன்றி கடுமையான இன்னல்களை தரும், சுய ஜாதகத்தில் ராகு வலிமை அற்று நிற்பதும், தனது திசையில் வலிமையற்ற பாவக பலனை ஏற்று நடத்துவதும் எவ்வித இன்னல்களை தரும் என்பதனை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே!


லக்கினம் : ரிஷபம் 
ராசி : விருச்சகம் 
நட்சத்திரம் : கேட்டை 4ம் பாதம் 

ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

1,4ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம்.
2,10,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம்.
5ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகத்தில் வலிமை பெற்ற அமைப்பாகும்.

ஜாதகருக்கு வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

3,7,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயில் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம்.
6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகத்தில் வலிமை அற்ற அமைப்பாகும்.

ஜாதகருக்கு ராகு பகவான் மேலோட்டமாக காணும் பொழுது ஜீவன ஸ்தானமான 10ம் வீட்டில் அமர்ந்து இருப்பதை போன்ற தோற்றத்தை  தந்தாலும், பாவக நிலையை கருத்தில் கொண்டு காணும் பொழுது ( கும்பத்தில் ) பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்தில் வலிமையற்றும், தான் அமர்ந்த பாவகத்தை 100% விகித பாதிப்பிற்கு ஆளாக்கி அமர்ந்திருப்பது தெளிவாகும், எனவே மேற்கண்ட ஜாதகருக்கு சாயா கிரகமான ராகு சுய ஜாதகத்தில் தாம் அமர்ந்த நிலையில் கடுமையான பாதிப்பை பிறவியில் இருந்தே வழங்கி கொண்டு இருப்பதும், அமர்ந்த பாவகம் ஜாதகருக்கு பாக்கிய ஸ்தானம்  என்பதால் ஜாதகருக்கு நடக்க வேண்டிய சுப நிகழ்வுகள் யாவும், கடுமையான தடைகளையும், தாமதங்களும் வழங்கி கொண்டு இருந்து இருக்கின்றது, அதாவது ஜாதகருக்கு அடிப்படையில் நல்ல கல்வி அறிவு இல்லை, சுய சிந்தனையும் தனித்திறனும் பலன்தரவில்லை, கால தாமத திருமணம், மற்றவர்களை சார்ந்து வாழும் சூழ்நிலை, சொத்து வசதிகள் இருந்த போதிலும் அதனால் ஜாதகருக்கு யாதொரு பலனும் இல்லை, ஆண் வாரிசு அற்ற சூழ்நிலை, சிறு வயது முதலே ஜாதகர் உடல் ரீதியான தொந்தரவுகளை கடுமையாக சந்தித்துக்கொண்டு இருக்கின்றார்.

மேலும் சுய ஜாதகத்தில் 7ம் வீடு திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு அமைந்த வாழ்க்கை துணை வழியிலான இன்னல்கள் மற்றும் பொருத்தம் அற்ற வாழ்க்கை துணை வழியிலான சிரமங்களையும் ஜாதகர் எதிர்கொள்ளும் நிலை என ஜாதகரை வாட்டி வதைத்து எடுத்துவிட்டது.

 தற்போழுது நடைபெறும் ராகு திசை ஜாதகருக்கு 7ம் வீடு திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று கடுமையான இன்னல்களை கடந்த பல வருடமாக  தந்துகொண்டு இருக்கின்றது, வயதான காலத்தில் வாழ்க்கை துணையின் அரவணைப்பு இன்றி தவிக்கும் சூழ்நிலை. வெளிவட்டார பழக்க வழக்கங்கள் மூலம் இன்னல்கள், திடீர் இழப்புகள்,  எதிர்பாராத மருத்துவ  செலவினங்கள், தொடர்ந்து உடல்நிலையில் முன்னேற்றம் அற்ற சூழ்நிலை, வாழ்நாளை எண்ணிக்கொண்டு ஜீவிக்கும் தன்மை, ஆதரவு அற்ற சூழ்நிலை, சந்தர்ப்பவாதிகள் மற்றும் சுயநலம் கொண்டோரின் மூலம் வாழ்க்கையில் இன்னலுறும் தன்மை என தற்போழுது  நடைபெறும் ராகு திசை 6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று  மேற்கண்ட பாவக வழியிலான இன்னல்களை தொடர்ந்து வழங்கிகொண்டு இருக்கின்றது.

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் ராகு பகவான் பாதிக்கப்பட்டும், தனது திசையில்  பாதிக்கப்பட்ட பாவக தொடர்பு பெற்றும் இன்னல்களை தந்து கொண்டு இருப்பது ஜாதகரின் வாழ்க்கையை வெகுவாக பாதித்து இருப்பது ராகு பகவானின் வலிமை அற்ற தன்மையை பறைசாற்றுகிறது, ஜாதகரின் கடுமையான உடல் நல பாதிப்பிற்கு, ராகு பகவானின் ஆதிக்கம் பெற்ற போதை வஸ்துக்கள் காரணமாக அமைந்துஇருப்பது ராகுவின் தாக்கம் ஜாதகரை படுத்திஎடுத்து இருப்பதை தெளிவு படுத்துகிறது, ஜாதகர் ராகு திசையினை பூர்ணம் பெற செய்வது இறையருளின் கருணையில் உள்ளது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696    

சனி, 9 மார்ச், 2013

ரிஷப ராசி லக்கினமும், பிரதோஷ வழிபாடும் சம்பந்தம் உண்டா ?



ஜோதிட கலை என்பது மிகுந்த புனிதமான கலை என்றால் அது மிகையாகாது , இந்த ஜோதிட கலை என்பது இருபக்கம் கூர்முனை கொண்ட கத்தியை போன்றது , முறையாக இதை பயன்படுத்தவில்லை என்றால் இது ஜோதிடம் காண வந்தவரையும் பாதிக்கும் , ஜோதிடம் சொல்பவரையும் கடுமையாக பாதிக்கும் .

இன்று தொலைகாட்சியில் நான் பார்த்த ஒரு விஷயம் , ஜோதிடர்கள் அறியாமல் செய்யும் விஷயம் மக்களை வெகுவாக பதிப்பதை தெளிவாக உணர முடிந்தது , அவர் சொன்ன விஷயம் தன்னிடம் ஜோதிட ஆலோசனை கேட்க வந்த ஒரு பெண்ணிற்கு 28 வயது என்றும் , அந்த பெண் ரிஷப ராசி ரிஷப லக்கினம் என்றும் இதுவரை அந்த பெண்ணிற்கு திருமணம் ஆகவில்லை என்பதாகவும் , தான் பிரதோஷ வழிபாடு செய்ய சொன்னதால் திருமணம் ஆனதாகவும் , இதற்க்கு காரணம் அந்த பெண்ணின் ரிஷப ராசி ரிஷப லக்கினம் என்பதால் பிரதோஷ நந்தி வழிபாடு செய்ய சொல்லி பரிந்துரை செய்ததாகவும் ஜோதிடத்தின் உண்மை நிலையை உணராமல் கதை விட்டு கொண்டு இருந்தார் .

ஒருவர் ரிஷப ராசி அல்லது ரிஷப லக்கினத்தை கொண்டு இருந்தால் , ஜாதகரின் எண்ணமும் செயலும் ஒரு பசுவின் குனாதிசையத்துடன் ஒருமித்து இருக்கும் , இதற்கும் நந்திபகவானுக்கும் பிரதோஷ வழிபாட்டிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை உணராமலேயே , மேலும் ரிஷபம் கால புருஷ தத்துவத்திற்கு இரண்டாவது இடத்திலும், ஸ்திர  மண் தத்துவ ராசியாகவும் , வருகிறது எனவே ஜாதகி பூமியை போன்று ( மண் தத்துவம் என்பதால் ) பொறுமையான குணத்தை பெற்றவராகவும் , சிறந்த உடல் நிலையை கொண்டவராகவும் , சிறப்பான வளரும் சூழ்நிலையை பெற்றவராகவும் இருப்பார் என்பது ரிஷப ராசி லக்கினத்திற்கு உண்டான சூட்சம உண்மை , ஜோதிடர் இதை உணருவது அவசியம் .

மேலும் ஜாதகிக்கு திருமணம் 28 வயது வரை நடைபெறவில்லை என்பதிற்கு உண்டான காரணம் பெண்ணின் ஜாதகத்தில் குடும்ப ஸ்தானமான 2ம் பாவகம் மிதுனம் பாதிப்பு அடைந்திருந்தாலோ , அல்லது களத்திர ஸ்தானமான 7ம் பாவகம்  விருச்சகம்  பாதிப்பு அடைந்திருந்தால் மட்டுமே திருமணம் தாமத படும் , உதாரணமாக மிதுனம் உபய காற்று ராசியாக வருவதால் 2ம் பாவகம் பாதிக்கப்படும்பொழுது , ஜாதகி தனக்கு அமைய வேண்டிய நல்ல வாழ்க்கையை தனது வாயினாலேயே கெடுத்து கொள்வார்  அல்லது ஜாதகியுடன் பிறந்த சகோதர அமைப்பை சார்ந்தவர்கள் இவரது  திருமணத்திற்கு பெரும் தடையாக இருப்பார்கள் .

ஒருவேளை 7ம் பாவகம் பாதிக்க பட்டு இருந்தால் , இது ஸ்திர நீர் தத்துவ ராசியாக இருப்பதால் ஜாதகியின் எண்ணம் மற்றும்  கற்பனைக்கு ஒத்துவராத வரன் வருவதால் ஜாதகி இதை தவிர்த்து கொண்டே இருப்பார் அல்லது அக்கம் பக்கம் உள்ளவர்களின் துர் போதனையால் , திருமணம் தடை பெற்றுகொண்டே இருக்கும் , இதுவே ஜாதக ரீதியான  உண்மை காரணம், பிரதோஷ நந்தி வழிபாட்டிற்கும் ரிஷப ராசி லக்கினத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதே உண்மை .

இறை வழிபாடு என்பது தனது ஆன்மாவை உணரும் தன்மையாகவும் , அறிவில் விழிப்புணர்வு பெறுவதற்கும் வழிபட்டு ஸ்தலங்கள் வழியாக நமக்கு  கிடைக்கும் ஒரு சூட்சம தொடர்பு நிலையே என்பதை உணருவது அவசியம் , இவர் சொல்வதை பார்க்கும் பொழுது ரிஷப ராசி ,லக்கினத்தை பெற்றவர்கள் அனைவரும் நந்தி வழிபாடு செய்தால் போதும் திருமணம் உடனடியாக  நடந்துவிடும் என்பதாக இருக்கிறதே ? இறை வழிபாட்டின் தன்மையை  உணராது செய்யும் வழிபாடுகள் அனைத்தும் கடலில் பயன்படாமல் கலக்கும் நல்ல குடிநீரை போன்றதே .

 வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969

வெள்ளி, 30 நவம்பர், 2012

ஜோதிட ஆலோசனை : தொழில் விருத்தி பொருளாதார முன்னேற்றம் தரும் யோக ஜாதக நிலை !




ஜாதக பொது பலன்கள் 

ஜாதக அமைப்பில் நல்ல நிலையில் இருக்கும் பாவகங்கள் :

1,7 ம் வீடுகள் களத்திர ஸ்தானம் எனும் ஏழாம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது , ஜாதகருக்கு மிகுந்த யோக வாழ்க்கையை அளிக்கும் ஒரு சிறந்த அமைப்பாகும் , இதனால் ஜாதகருக்கு இருக்கும் எதிர்ப்புகள் அகலும் , நண்பர்கள் கூட்டாளிகள் மூலம் லாபம் ஏற்ப்படும் , தனது வாழ்க்கை துணையின் வழியில் இருந்து மிகுந்த யோக வாழ்க்கையை பெறுவார் , ஆண் பெண் நண்பர்களுடன் கலகலப்பாக பழகும் வாய்ப்பு உண்டாகும் , ஜாதகருக்கு மக்கள் ஆதரவு எப்பொழுதும் உண்டு , ஜாதகரின் தொழில் முறை கூட்டாளி மிகவும் சக்தி வாய்ந்தவராகவும் , பொருளாதரத்தில் தன்னிறைவு பெற்றவராகவும் திகழ்வார் , கூட்டு தொழில் செய்வதால் ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளே உண்டாகும் .

2 ம் வீடு குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகதுடன் சம்பந்தம் பெறுவது , வாழ்க்கையில் அளவற்ற செல்வத்தையும் , குடும்ப ஒற்றுமையும் , குடும்பத்தில் எப்பொழுதும் மகிழ்ச்சியும் , பொருளாதரத்தில் படிப்படியான முன்னேற்றத்தையும் தந்துகொண்டே இருக்கும் , ஜாதகருக்கு நல்ல உணவு எங்கு சென்றாலும் கிடைக்கும் , வருமானத்திற்கு எவ்வித பிரச்சனையும் வாழ்நாள்  முழுவதும் இருக்காது , வாழ்க்கை துணை வழியில் இருந்து அழகான குடும்ப வாழ்க்கை அமையும், நிம்மதியான குடும்ப வாழ்க்கை ஜாதகருக்கு நிச்சயம் உண்டு .

3,5,8 ம் வீடுகள் ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது , மூன்றாம் பாவக வழியில் இருந்து நிலையான முன்னேற்றம் , சுலப பொருள் வரவு , சகல சௌபாக்கியம் , இசையில் ஈடுபாடு , மின்துறை மற்றும் பொறியியல் துறைகளில் பணியாற்றும் யோகம் நினைத்ததை சாதிக்கும் பேராற்றல் , பெரியோரிடம் மதிப்பு மரியாதை , புத்தி கூர்மை , சாஸ்திர ஆராய்ச்சி , லாட்டரி யோகம் , வழக்கில்  வெற்றி , கோவில் தரிசனம் , வெளிநாடுகளில் செல்வ சேர்க்கை , புகழ் பணம் கிடைத்தல் , போன்ற நன்மைகளும் , ஐந்தாம் பாவக வழியில் கலைகளில் ஆர்வம் , சினிமா மற்றும் திரைப்பட துறையில் இருந்து மிகுந்த லாபம் , தனது குழந்தைகளால் யோக வாழ்க்கை , வியாபாரத்தில் மிகுந்த வெற்றி மற்றும் முன்னேற்றம் உண்டாகும்  தனது பூர்வீகத்தில் இருப்பதால் நன்மை உண்டாகும் , எட்டாம் பாவக வழியில் இருந்து , நல்ல அந்தஸ்தை வசதி வாய்ப்பினை விரைவில் அடைதல் , வசதியான  உத்தியோகம் , பதவி உயர்வு , தொழில் ரீதியான வெற்றிகள் , வெளிநாடுகளில் யோக வாழ்க்கை அமையும் .

4,9 ம் வீடு பாக்கிய ஸ்தானம் எனும் ஒன்பதாம் பாவகதுடன் சம்பந்தம் பெறுவது , ஜாதகரை உயர்கல்வி பயில்வதால் மிகப்பெரிய வெற்றிகளை தரும் , விஞ்ஞான ஆராய்ச்சி வெளிநாடுகளில் தொழில் செய்யும் யோகம் சமுதயத்தில் நல்ல மதிப்பு மரியாதை , ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் வெற்றிமேல் வெற்றி , பொது வாழ்க்கையில் சாதிக்கும் யோகம் தன்னம்பிக்கை  , சுய கட்டுபாடு என ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளையே வாரி வழங்கும் .

10 ம் வீடு ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் வீட்டுடன் தொடர்பு பெறுவது சுய தொழில் செய்வதால் மிக பெரிய வெற்றியை ஜாதகர் பெறுவார் காரணம் ஜீவன ஸ்தானம் கலபுருஷ தத்துவ அமைப்பிற்கும் , இலக்கின அமைப்பிற்கும் ஜீவன ஸ்தனமாகவே வருவதும் , ஜீவன ஸ்தானம் மகரத்தில் அமர்ந்து சர நில ராசியாக வருவது 200 சதவிகித வெற்றியை வாரி வழங்கும் , ஜாதகர்  செய்யும் தொழில்கள் யாவும் வெற்றி மேல் வெற்றி தரும் , பல தொழில் செய்யும் யோகம் உண்டாகும் , தங்களின் ஜாதக அமைப்பில் மேற்கண்ட பாவக அமைப்பில் இருந்து தாங்கள்  மிகுந்த நன்மைகளை பெறுவீர்கள் அன்பரே !

ஜாதக அமைப்பில் பாதிக்க பட்ட பாவகங்கள் :

6,11,12 ம் வீடுகள் ஆயுள் பாவகமான 8 ம் பாவகதுடன் சம்பந்தம் பெறுவது 6 ம் பாவக வழியில் இருந்து அதிக கோப உணர்வினையும் , மன உளைச்சலையும் ,தேவையில்ல விசயங்களை மனதில்  போட்டு குழப்பி கொண்டு மன நிம்மதியை கெடுத்து கொள்ளும் தன்மையை உருவாக்கும் , எதிரிகளால் சில நேரங்களில் அதிக இன்னல்களை சந்திக்க வேண்டி வரும் , உடல் நிலை கடுமையாக  பாதிக்க வாய்ப்பு உண்டு , குறிப்பாக வயிறு சம்பந்த பட்ட தொந்தரவுகள் ஏற்ப்பட வாய்ப்பு உண்டு , லாப ஸ்தான அமைப்பில் இருந்து ஜாதகர் கவனமாக இருக்க்க வில்லை  எனில் ஜாதகருக்கு வர வேண்டிய நன்மைகள் யாவும் மற்றவர்கள் தட்டி பறிக்க வாய்ப்பு உண்டு , அதிர்ஷ்ட வாய்ப்புகளை ஜாதகர் வீண் விரையம் செய்யும் தன்மை உண்டாகலாம் , வண்டி வாகனங்களில் செல்லும்பொழுது அதிக கவனமும் பாதுக்காப்பாகவும் பயணம் மேற்கொள்ளுவது அவசியம் , மேற்கண்ட பாவக அமைப்பில் இருந்து ஜாதகருக்கு தீமையான  பலன்கள் நடை பெற வாய்ப்பு உண்டு என்பதால் 8 ம் பாவக வழியில் ஜாதகர் அதிக கவனமாக இருப்பது நல்லது 8 ம் பாவகம் திடீர் இழப்பு , விபத்து , ஏமாற்றம் ,அதிக மன உளைச்சல்  , அதிக கோப உணர்வினை தரும் .

தற்பொழுது நடை பெரும் சுக்கிரன் திசை தரும் பலன்கள் : ( 03/10/2008 முதல் 03/10/2028 வரை )

1,7 ம் வீடுகள் களத்திர ஸ்தானம் எனும் ஏழாம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் ,10 ம் வீடு ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் வீட்டுடன் தொடர்பு பெற்றும் சுக்கிரன் திசை நன்மையான பலன்களையே  வாரி வழங்கி கொண்டு இருக்கிறது எனவே ஜாதகர் 7 ம் பாவக வழியிலும் 10 ம் பாவக வழியிலும் 100 சதவிகித நன்மையை பெரும் யோகம் உண்டாகும் , குறிப்பாக கூட்டு தொழில்  , சுய தொழில் , வெளிநாடுகளில் தொழில் அல்லது வேலை செய்வதால் வாழ்க்கையில் அளவில்லா முன்னேற்றம் , திருமணம் மூலம் யோக வாழ்க்கை , வாழ்க்கை துணையின்  வழியில் இருந்து  மிகுந்த நன்மைகளையும் , கூட்டு நண்பர்கள் வழியில் இருந்து அதிக நன்மைகளையும் பெரும் யோகம் உண்டாகும் , ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் ஜாதகருக்கு அபரிவிதமான  வளர்சியும் முன்னேற்றமும் உண்டாகும்  ஆக சுக்கிரன் திசை யோக பலன்களையே வாரி வழங்கி கொண்டு இருக்கிறது என்பது ஜாதகருக்கு மகிழ்ச்சியான விஷயம் வாழ்த்துகள்  அன்பரே !

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969