குருபெயர்ச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குருபெயர்ச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 21 செப்டம்பர், 2025

மேஷம் குருபெயர்ச்சி பலன்கள் ( 2025 - 2026 ) சுகபோக வாழ்வை பெரும் மேஷராசியினர் !

மேஷம் குருபெயர்ச்சி பலன்கள் 



 குருதிசை அல்லது குருபுத்தி தற்போழுது நடைமுறையில் உள்ள மேஷ ராசியினர் மட்டும் நிகழவிருக்கும் குருபெயர்ச்சியினை சிந்தனைக்கு எடுத்துக்கொள்ளவும், கடக ராசியில் புனர்பூசம்(குரு) பூசம்(சனி) ஆயில்யம்(புதன்) நட்சத்திரத்தில் ( 18/10/2025 முதல் 31/10/2026 வரை ) சஞ்சாரம் செய்யும் குருபகவான் குருதிசை அல்லது குருபுத்தி நடைமுறையில் உள்ள மேஷ ராசி அன்பர்களுக்கு வழங்கும் சுபயோகங்கள் என்ன என்பதை கருத்தில் கொள்வோம் அன்பர்களே !

 சுக ஸ்தானமான 4ம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குருபகவான் மேஷ ராசி அன்பர்களுக்கு நீண்ட நாள் கனவான சொந்த வீடு இடம் வண்டி வாகன யோகத்தை தன்னிறைவாக வாரி வழங்கிய போதிலும் ஆண்களுக்கு தனது தாய் வழியிலும், பெண்களுக்கு தமது தந்தை வழியிலும் இன்னல்களை வீண் செலவினங்களை தரக்கூடும், தங்களின் கண்காணிப்பு திறன் அதிகரிப்பதுடன், ஆளுமை திறனும் மேம்படும், தாய் வழி சொத்துக்கள் கிடைக்கும், புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு, எதிர்பாராத பதவி உயர்வு, மேலதிகாரி ஆதரவு, புதிய யுக்தி மூலம் பெரும் வருமான உயர்வு என்ற நிலையில் நன்மைகள் உண்டாகும், விவசாயம் செழிக்கும், விவசாயி வாழ்க்கை முன்னேற்றம் பெரும், திடீர் தன சேர்க்கை தங்களின் செல்வாக்கை உயர்த்தும், வெளிநாடு சென்றுவரும் யோகமும் அதன் மூலம் பொருளாதார முன்னேற்றமும் உண்டாகும், உறவுகளின் ஏளனத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து அவர்களுக்கு தங்களின் பெருமையை உணர்த்துவீர்கள், இதுவரை மதிக்காத சொந்தபந்தம் தங்களின் உறவுக்காகவும் நட்புக்காகவும் ஏங்குவார்கள், குறிப்பாக காதலில் ஏமாற்றம் அடைந்தவர்கள் மேன்மை நிறைந்த இல்லற வாழ்க்கை துணையை பெரும் யோக காலமிது.

 குரு பகவான் தனது 5ம் சுபபார்வையை திடீர் அதிர்ஷ்டத்தை தரும் தனது வர்க கிரக (செவ்வாய் ) வீடான விருச்சிக ராசியை ( 8ம் பாவகம் ) வசீகரிப்பது தடைபட்ட திருமண வாழ்க்கையை சீரும் சிறப்புமாக நடைபெற வைப்பார், தங்களது வாழ்க்கை துணை மூலம் எதிர்பாராத மாற்றங்களைகளும் முன்னேற்றங்களையும் சுவீகரிக்கும் நேரமிது, தங்களுக்கு தொடர்ந்து துன்பத்தை தந்துகொண்டு இருந்த நபர்கள் அனைவரும் சிதறி ஓடுவர், எதிரிகளுக்கு தோல்வியை பரிசளிக்கும் அற்புதமான நேரமிது எதிர்த்தவர்கள் அனைவரும் உங்கள்முன் மண்டியிடும் சூழ்நிலை உருவாகும், அதிகாரமிக்க பொறுப்புகள் திடீர் என தங்கள் திறமைக்கும் கைவரப்பெறும், போட்டி பந்தயம் வம்பு வழக்குகள் மூலம் வெற்றிகள் வந்து சேரும், நல்ல நண்பர்கள் துணையிருப்பார்கள், தீயவர் விலகி ஓடுவார்கள், பொதுமக்கள் ஆதரவு பன்மடங்கு பெருகும், பிரிந்து இருந்த கணவன் மனைவி ஒன்றுசேரும் வாய்ப்பை தரும், காதலர்களுக்கு யோகமான காலமிது மனதில் நினைத்தவரையே  வாழ்க்கை துணையாக அடையும் யோகம் உண்டாகும், உறவுகள் ஆதரவு பெற்றோர் ஆதரவு திடீர் சொத்துக்கள், பூர்வீகத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் தீர்வுக்கு வரும், கனவுகள் நனவாகும், அரசியல் ரீதியான உயர் பதவி தேடி வரும்.

 குரு பகவான் தனது 7ம் சுபபார்வையை தொழில் ஸ்தானமான தனது எதிர்வர்க்க கிரக ( சனி ) வீடான மகர ராசியை ( 10ம் பாவகம் ) வசீகரிப்பது தங்களுக்கு அதீத தனித்திறமை இருந்த போதிலும் வேலைப்பளுவின்  காரணமாக சற்று சோர்ந்து போக வாய்ப்பு உண்டு, தேவையில்லாத இடத்தில் தங்களின் கடின உழைப்பை நீங்கள் விரையம் செய்ய கூடும் என்பதால் சற்று விழிப்புணர்வுடன் இருப்பது நலம் தரும், தேங்கி இருக்கும் சரக்குகள் தங்களுக்கு தற்போழுது நல்ல லாபத்தை ஈட்டி தரும், வியாபாரிகளுக்கு எதிர்பாராத லாபமும் அதிர்ஷ்டமும் உண்டாகும், புதிய தொழில் வாய்ப்புகள், வியாபார யுக்திகள் தங்களை சிறந்த தொழில் அதிபராக பரிணமிக்க வைக்கும், வேறு எவரையும் சார்ந்து இல்லாமல் தனித்து இயங்கி வெற்றி பெரும் யோகம் உண்டாகும், கூட்டு முயற்சி சில நேரங்களில் தங்களுக்கு அதீத நெருக்கடியை தரக்கூடும், இதுவரை நல்ல தொழில் அல்லது வேலை அமையாமல் சிரமபட்டு கொண்டு இருந்த மேஷ ராசி அன்பர்களுக்கு தகுதி திறமைக்கான நல்ல வேலைவாய்ப்பும், தொழில் யோகமும் உண்டாகும், கவுரவமான யோக வாழ்க்கையை தொழில் வழியில் இருந்து இந்த குருமாற்றம் தங்களுக்கு தன்னிறைவாக வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், ஆண்கள் தனது தந்தை வழியிலும் பெண்கள் தனது தாய் வழியிலும் மிகப்பெரிய தனசேர்க்கையை பெரும் நேரமிது.

 குரு பகவான் தனது 9ம் சுபபார்வையை நிறைவான மனநிலையை தரும் தனது வர்க கிரக (குரு ) வீடான மீன ராசியை ( 12ம் பாவகம் ) வசீகரிப்பது முதலீடுகள் வழியிலான லாபத்தை அதிகரிப்பதுடன், புதிய முதலீடுகளில் தங்களின் ஆளுமையை செயல்படுத்தும் யோகத்தை தருவார், புதியவர்கள் வெளிநாட்டினர் தங்களின் முன்னேற்றத்திற்க்கு உறுதுணையாக அமைவர், உறவினர் ஆதரவு அதிகரிக்கும், இதுவரை இருந்துவந்த மனக்கவலை நீங்கி  நல்ல மனநிம்மதி கிட்டும், ஆன்மீகத்தில் மிகப்பெரிய வெற்றி கிட்டும், தெய்வீக அனுகூலமும், பெரியோர்களின் ஆசீர்வாதமும் சிறப்பான மாற்றத்தை தங்களுக்கு தருவதுடன் பொருளாதர தன்னிறைவை சுவீகரிக்கும் யோகத்தையும் வழங்கும், பங்கு வர்த்தகம், ரியல் எஸ்டேட் தொழில், இடம் வீடு வண்டி வாகன தொழில், ஆடை ஆபரண தொழில்களில் அபரிவிதமான முன்னேற்றங்கள் உண்டாகும், வியாபாரம் விருத்தி அடைவதுடன் ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் மிகப்பெரிய அதிர்ஷ்டம் உண்டாகும், கடன் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து விரைவாக வெளியேறும் யோகமும், கைநிறைவான வருமான வாய்ப்பையும் பெறுவீர்கள்.

குறிப்பு : தங்களின் சுயஜாதக வலிமையை கருத்தில் கொண்டு ஜாதக பலன்களை காண்பதே 100% விகிதம் சரியான பலன்களாக அமையும். 

வாழ்க வளமுடன் 

ஜோதிடன் வர்ஷன் 

9443355696 

வியாழன், 29 நவம்பர், 2018

குரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - சிம்மம் )


 சுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினாலும், அமர்ந்த இடத்தில் இருந்தும் எதிர்வரும் ஒருவருட காலத்திற்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி விருச்சிகம் முதல் துலாம் வரை, ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !

 ''எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்'' என்பதற்கு இணங்க ஒருவரது வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தில் அதிமுக்கிய பங்கு வகிப்பது உடல் உயிராகிய " ஜென்ம லக்கினமாகும் " ஒருவரது வாழ்க்கையில் நிகழும் யோக அவயோகம், நன்மை தீமை போன்றவற்றை ஜென்ம லக்கினமே நிர்ணயம் செய்கிறது, இதில் ஏதும் மாற்று கருத்து இல்லை, எனவே நவகிரகங்களின் பெயர்ச்சியை ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் காண முற்படுவதே மிக துல்லியமானதாக அமையும், இதுவே அவரவர் சுய தேடுதலுக்கும், முன்னேற்றமிகு யோக வாழ்க்கைக்கும் அடிப்படையாக அமையும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

மேலும் இயல்பாக கடந்த இரண்டு வருடங்களாக எதிர் வர்க்க ( கன்னி-புதன், துலாம்-சுக்கிரன் ) கிரகங்களின் வீடுகளில் சஞ்சாரம் செய்த குரு பகவான் தனது இயற்க்கை குணத்திற்கு மாறாக செயல் இழந்த நிலையில் சுபயோகங்களை வாரி வழங்கும் வல்லமை அற்று காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது, தனது வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டில் ( விருச்சிகம் ) சஞ்சாரம் செய்யும் குருபகவான் தரும் பலாபலன்களை இனி லக்கின வாரியாக சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

லக்கினம் : சிம்மம்

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் ராசியாகவும், ஸ்திர நெருப்பு தத்துவ தன்மையை பெற்றதுமான சிம்ம ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, தனது சுய வர்க்க வீட்டில் ( விருச்சிகம் )  பெயர்ச்சியாகும் குரு பகவான் நல்லதொரு மாற்றங்களை தனது சஞ்சார நிலையில் இருந்தும், பார்வை செய்யும் பாவக வழியில் இருந்தும் வாரி வழங்குவது வரவேற்க்கதக்கது, சுக ஸ்தானமான 4ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் சிம்ம லக்கின அன்பர்களுக்கு நல்ல சுகபோக யோக வாழ்க்கையை நல்குவதில் யாதொரு தடையும் தர வாய்ப்பில்லை, புதிய நல்ல வண்டி வாகன யோகம், சொகுசு மிக்க வீடு வசதி வாய்ப்புகள், சொத்து சுக சேர்க்கை, வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானம், பொருளாதார உதவிகள், தெய்வீக அனுகிரகம் மூலம் வாழ்க்கையில் ஏற்பாடும் முன்னேற்றம், வாழ்க்கை துணை வழியிலான பொருளாதார ஆதரவு, தாய் வழி சொத்துக்கள் கிடைத்தல், வண்டி வாகன தொழில் மூலம் கிடைக்கும் எதிர்பாராத வருமான வாய்ப்புகள், இறக்குமதி பொருட்கள் வழியிலான ஜீவன மேன்மை, புதிய வாய்ப்புகள் மற்றும் சந்தர்ப்பங்களை முறையாக பயன்படுத்தி முன்னேற்றம் பெரும் வல்லமை, அரசு உதவி, மருத்துவ துறையில் உள்ளோருக்கு கிடைக்கும் அசுர வளர்ச்சி, பொருளாதார நன்மைகள், இன்சூரன்ஜ் மற்றும் கமிஷன் தொழில் செய்யும் அன்பர்களின் வாழ்க்கையில் ஏற்படும் முன்னேற்றம் மற்றும் நன்மைகள், தெளிவான சிந்தனை கொண்டு பெரும் புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கை என சிம்ம லக்கின அன்பர்களுக்கு சுக ஸ்தான வழியில் இருந்து பரிபூர்ண நன்மைகளே நடைமுறைக்கு வரும் என்பது கவனிக்கத்தக்கது, வாழ்த்துக்கள்.

 குரு பகவான் தனது 5ம் பார்வையால் சிம்ம  லக்கின அன்பர்களுக்கு ஆயுள்  ஸ்தானமான 8ம் பாவகத்தை கோண பலம் பெற்று வசீகரிப்பது, 100% விகித இன்னல்களையே வாரி வழங்கும், மரணத்திற்கு இணையான பேரிழப்பையும், மனம் சார்ந்த அழுத்தம் மற்றும் போராட்டங்களையும் தரும் என்பதுடன், இவை அனைத்தும் வாழ்க்கை துணை, நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் மூலம் வரும் என்பது கவனிக்கத்தக்கது, மீனம் உபய நீர் தத்துவ ராசி என்பதால் சிம்ம லக்கின அன்பர்கள் மனதை செம்மையாக வைத்துக்கொள்வது  நல்லது ஏனெனில், ஒருநிலையில் இல்லாத மனம் தவறான செயல்பாடுகளையும், பின்விளைவு அறியா துன்பங்களையும் வாரி வழங்கிவிடும், பெரியோர்களின் ஆசியின்றி செய்யும் காரியங்கள் யாவும் பேரிழப்பையும், பெரும் துன்பத்தையும் வாரி வழங்கிவிடும், ஆயுளுக்கு பங்கம் தரும் காரியங்களை செய்வதை தவிர்ப்பதே சகல நன்மைகளையும் தரும், குறிப்பாக வண்டி வாகனங்களில் பாதுகாப்பான பயணம் அவசியமாகிறது, தாங்கள் எடுக்கும் திடீர் முடிவுகள் யாவும் மிக மிக தவறானதாக அமைந்துவிட வாய்ப்பு உண்டு, வாழ்க்கை துணையுடனான இணக்கமான சூழ்நிலையை கடைபிடிப்பதே இல்லற வாழ்க்கையில் சகல நலன்களையும் தரும், முடிந்த அளவிற்கு தாங்கள் பணிந்து செல்வதே இல்லற வாழ்க்கையில் இன்பத்தை வாரி வழங்கும், மனதில் தெளிவு பெறுவது மிக மிக அவசியமானதாக " ஜோதிடதீபம் " கருதுகிறது.

குரு பகவான் தனது 7ம் பார்வையால் சிம்ம லக்கின அன்பர்களுக்கு ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகத்தை வசீகரிப்பது, தொழில் விருத்தியை மிக பெரிய அளவில் வழங்கிய போதிலும், பொருளாதார சிக்கல்களை தரும், வருமானம் சார்ந்த திட்டமிடுதல்கள் சிறப்பாக அமையவில்லை எனில் தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய பொருளாதார சீர்குலைவை சந்திக்கும் சூழ்நிலையை தரும், அதே போன்று குடும்ப வாழ்க்கையில் மிகவும் சீரான வார்த்தை பிரயோகம் தங்களின் மனநிம்மதிக்கு குந்தகம் விளைவிக்காது, செலவுகள் எவ்வளவு செய்தாலும் விரையம் செய்வதை தவிர்ப்பது தங்களின் வாழ்க்கையில் இனிவரும் காலங்களில் நன்மையை தரும், மிகுந்த பொறுப்புடன் இல்லற வாழ்க்கையை கையாள்வது மிக மிக அவசியமானதாக அமைகிறது, கொடுக்கல் வாங்கல்களில் தாங்கள் ஒரு நேர்த்தியை இனி கடைப்பிடிப்பதும், கடன் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட முயற்சிப்பதும் தங்களின் வாழ்க்கையில் நிறைவான நன்மைகளை தரும், எதிப்புகளை மிக எளிதாக கையாண்டு வெற்றி பெறுங்கள், புதுவித முயற்சிகளை மேற்கொள்ளும் முன் பலமுறை ஆலோசனை செய்து காரியத்தில் இறங்குவதே சிறப்பான நன்மைகளை தரும், பேச்சில் நிதானம் தேவை என்பதையும் நாவடக்கம் சிம்ம இலக்கின அன்பர்களுக்கு சகல நன்மைகளையும் தரும் என்பதையும் கவனத்தில்கொண்டு செயல்படுங்கள் வாழ்த்துகள்.

குரு பகவான் தனது 9ம் பார்வையால் சிம்ம லக்கின அன்பர்களுக்கு விரைய ஸ்தானம் எனும் 12ம் பாவகத்தை வசீகரிப்பதும், கடகம் சுய வர்க்க கிரகத்தின் ( சந்திரன் ) வீடாக இருப்பதும் ராஜ யோக பலன்களை தரும், முதலீடுகள் வழியிலான நன்மைகள் தேய்பிறை காலங்களில் சிறப்பாக வந்து சேரும், தெய்வீக ஈடுபாடு, தாம்பத்திய வாழ்க்கையில் சந்தோசம், மனரீதியான போராட்டங்களில் இருந்து விடுபடும் தன்மை என மிகுந்த நன்மைகளை தரும், இருப்பினும் புதிய முதலீடுகளை செய்யும் முன் ஆழ்ந்து சிந்தனை செய்து செயல்படுங்கள், தேவையற்ற எதிர்பாலின சேர்க்கை ஏற்ப்பட அதிக வாய்ப்பு உள்ளதால் ஸ்திரமான மன நிலையுடன் தவிர்த்துவிடுவதே தங்களுக்கான முன்னேற்றத்தை சிறப்பாக வாரி வழங்கும், முற்போக்கு சிந்தனையுடன் அனைத்தையும் எதிர்கொள்ளுங்கள், பிற்போக்கு தனமான செயல்பாடுகள், மூடநம்பிக்கைகளில் அதீத ஈடுபாடுகள் கொண்டு இருப்பின் தங்களின் வாழ்க்கையில் தாங்களே இன்னல்களை தேடிகொள்வீர்கள், எனவே மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு நலம் பெறுவது அவசியமானதாகும், நிறைய எதிர்ப்புகள் வர அதிக வாய்ப்பு உண்டு என்பதால், இனிமையான பேச்சு திறமை கொண்டு எதிர்ப்பை  வெற்றி கொள்ளுங்கள்.

குறிப்பு :

சிம்ம  லக்கின அன்பர்களுக்கு, தற்போழுது நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் சுய ஜாதகத்தில் 4,8,10,12ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக அவயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 4,8,10,12ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வெள்ளி, 16 நவம்பர், 2018

குரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - கடகம் )



( குரு பெயர்ச்சியின் வழியில் 100% விகித பரிபூர்ண சுபயோக பலனை சுவீகரிக்கும் வல்லமை பெற்றவர்கள்  என்கிற முறையில் 3ம் இடத்தை பெறுபவர்கள் கடக லக்கின அன்பர்களே என்றால் அது மிகையில் ) சுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினாலும், அமர்ந்த இடத்தில் இருந்தும் எதிர்வரும் ஒருவருட காலத்திற்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி விருச்சிகம் முதல் துலாம் வரை, ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !

 ''எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்'' என்பதற்கு இணங்க ஒருவரது வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தில் அதிமுக்கிய பங்கு வகிப்பது உடல் உயிராகிய " ஜென்ம லக்கினமாகும் " ஒருவரது வாழ்க்கையில் நிகழும் யோக அவயோகம், நன்மை தீமை போன்றவற்றை ஜென்ம லக்கினமே நிர்ணயம் செய்கிறது, இதில் ஏதும் மாற்று கருத்து இல்லை, எனவே நவகிரகங்களின் பெயர்ச்சியை ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் காண முற்படுவதே மிக துல்லியமானதாக அமையும், இதுவே அவரவர் சுய தேடுதலுக்கும், முன்னேற்றமிகு யோக வாழ்க்கைக்கும் அடிப்படையாக அமையும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

மேலும் இயல்பாக கடந்த இரண்டு வருடங்களாக எதிர் வர்க்க ( கன்னி-புதன், துலாம்-சுக்கிரன் ) கிரகங்களின் வீடுகளில் சஞ்சாரம் செய்த குரு பகவான் தனது இயற்க்கை குணத்திற்கு மாறாக செயல் இழந்த நிலையில் சுபயோகங்களை வாரி வழங்கும் வல்லமை அற்று காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது, தனது வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டில் ( விருச்சிகம் ) சஞ்சாரம் செய்யும் குருபகவான் தரும் பலாபலன்களை இனி லக்கின வாரியாக சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

லக்கினம் : கடகம்

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 4ம் ராசியாகவும், சர  நீர் தத்துவ தன்மையை பெற்றதுமான கடக ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, தனது சுய வர்க்க வீட்டில் ( விருச்சிகம் )  பெயர்ச்சியாகும் குரு பகவான் நல்லதொரு மாற்றங்களை தனது சஞ்சார நிலையில் இருந்தும், பார்வை செய்யும் பாவக வழியில் இருந்தும் வாரி வழங்குவது வரவேற்க்கதக்கது, கடக இலக்கின அன்பர்கள் இனிவரும் ஒவ்வொரு நாட்களும் முன்னேற்ற பாதையில் வெற்றிகரமாக நடைபோடும் வாய்ப்பை நல்கும், குறிப்பாக லக்கினத்தில் இருந்து 5ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் தனது வர்க்க கிரகம் என்பதால், ஜாதகரின் சிந்தனை திறனும் செயல் திறனும் ஒரே நேர்கோட்டில் இயங்கி வெற்றிகளை பெற்று தரும், புதிய சிந்தனை புதிய செயல்பாடுகள் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், தனது நுண்ணறிவு திறன் மற்றும் ஆராய்ச்சி அறிவு இதுவரை இல்லாத புதிய மாற்றங்களையும், நிறைவான வருமான வாய்ப்பையும் வாரி வழங்கும், நல்ல ஆண் வாரிசு அமையும், தனது குழந்தைகள் வழியில் இருந்து வரும் யோக வாழ்க்கையை வெகு சிறப்பாக கொண்டாடும் வல்லமையை தரும், லாட்டரியில் யோகம் பங்கு சந்தை லாபம், குல தெய்வ ஆசி, ஆன்மீக பெரியோர் மற்றும் ஆன்மீக குரு வழியில் இருந்து சுபயோகங்களை பரிபூர்ணமாக அனுபவிக்கும் வல்லமை கொண்டவர்களாக கடக இலக்கின அன்பர்கள் திகழ்வார்கள், " மனமது செம்மையானால் " மந்திரம் செபிக்க தேவையில்லை என்பதற்கு இணங்க கடக இலக்கின அன்பர்களின் மனம் தெளிந்த நீரோடை போன்று ஓர் சீரான கட்டுபாடுடன் இயங்கும் என்பதால், இவர்களின் ஆசை மற்றும் லட்சியங்கள் மிக விரைவில் நடைமுறைக்கும் வந்து வெற்றியை வாரி வழங்கும், இதுவரை மனதில் இருந்த நிறைவேறாத ஆசைகள் யாவும் நிறைவேறும் என்பதுடன், மங்களகரமான நிகழ்வுகளில் வழியில் கடக இலக்கின அன்பர்களுக்கு மனமகிழ்வு அதிகரிக்கும், திருமணம், குழந்தை பாக்கியம், நல்லோதோர் வேலை அல்லது தொழில், புதிய சொத்துகள் வண்டி வாகனம், வீடு நிலம் போன்றவை அமைய அதிக வாய்ப்பு உண்டு என்பதை கருத்தில் கொண்டு நலம் பெறுங்கள்.

குரு பகவான் தனது 5ம் பார்வையால் கடக லக்கின அன்பர்களுக்கு பாக்கிய  ஸ்தானமான 9ம் பாவகத்தை கோண பலம் பெற்று வசீகரிப்பது, 100% விகித யோக வாழ்க்கையை வாரி வழங்கும், இதுவரை உதவி செய்யாதவர்கள் கூட தேடி வந்து உதவி செய்வார்கள், இறை அருளின் கருணையினால் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும், பல ஆன்மீக திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம் உண்டு, தங்களின் அறிவு திறன் தங்களுக்கு வியக்கத்தக்க நல்ல மாற்றங்களை வாரி வழங்கும், மதிநுட்பம் கொண்டு வாழ்க்கையில் சுபயோகங்களை மிக எளிதில் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும், அறிவார்ந்த செயல்கள் மூலம் பொது மக்களிடமும், மேல் அதிகாரிகளிடமும் நற்ப்பெயர் உண்டாகும், அரசியல், ஆசிரிய பணியில் உள்ளோருக்கு இனிவரும் காலம் சிறந்த மாற்றங்களை வாரி வழங்கும்.தெய்வீக அனுபவம் தங்களின் வாழ்க்கையை புத்துணர்வு மிக்கதாக மாற்றும் என்பதுடன், புதுவித அறிமுகங்களை வழங்கும், காதல் வெற்றி பெரும், திருமண வாழ்க்கை கைகூடிவரும், தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக அமையும், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவார்கள், வாழ்க்கையில் புதுவித மாற்றங்களை சந்திக்கும் யோகம் உண்டு என்பதுடன், முதலீடுகளில் இருந்து வரும் லாபம் தங்களின் பொருளாதர சிக்கலுக்கு நல்ல தீர்வை தரும், வெளியூர் வெளிநாடு செல்ல விரும்பும் அன்பர்கள் தனது முழு முயற்சியின் வழியில் இருந்து வெற்றி காண்பார்கள், சமூக மதிப்பும், அந்தஸ்துடன் கூடிய பதவிகளை அலங்கரிக்கும் யோகம் உண்டாகும்  என்பது கவனிக்கத்தக்கது.

குரு பகவான் தனது 7ம் பார்வையால் கடக லக்கின அன்பர்களுக்கு லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகத்தை வசீகரிப்பது, அதிர்ஷ்டத்தின் தாக்கத்தை முழு அளவில் வாரி வழங்கும், தனது வருமானம் என்பது கடக லக்கின அன்பர்களுக்கு கை நிறைவாகவும், மிதம்மிஞ்சியதாகவும் அமையும் என்பது வரவேற்கத்தக்கது, தன்னம்பிக்கையும், மனோ தைரியமும் செயற்கரிய காரியங்களை சாதிக்கும் வல்லமையை தரும், பொது காரியங்களில் நன்மதிப்பும், புதிய உத்வேகமும் உண்டாகும், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும், எதிர்ப்புகள் யாவும் தங்களுக்கு சாதகமாக மாறும், எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்வீர்கள், அதிர்ஷ்ட தேவதையின் அருள் கடாட்சம் தங்களின் வாழ்க்கையில் எதிர்பாராத நன்மைகளையும், பொருளாதர தன்னிறைவையும் வாரி வழங்கும், உடல் நலம் மனநலம் மேலோங்கும், தங்களின் வாக்கு வன்மை சிறக்கும் என்பதனால் அனைவரும் தங்களின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு செயலாற்றுவார்கள், எல்லையில்லா சந்தோஷமும், சுபயோகத்தின் தாக்கமும் தங்களின் வாழ்க்கையில் ராஜ யோக பலன்களை அனுபவிக்க வைக்கும் என்பதுடன், திருமணம் மற்றும் வாழ்க்கை துணை வழியில் இருந்து நன்மைகளை சுவீகரிக்கும் யோகத்தை தரும், எதையும் துணிந்து சாதிக்கும் வல்லமையை தரும் என்பதுடன், புதுவித யுக்தி மற்றும் புதுவித தொழில் நுட்பம் கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவது தங்களுக்கே சற்று வியப்பை தரும், வாழ்க்கை துணை, பொதுமக்கள், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் மூலம் வாழ்க்கையில் சகல நலன்களையும் தன்னிறைவாக பெறுவீர்கள் என்பதுமட்டும் உறுதி வாழ்த்துக்கள்.

குரு பகவான் தனது 9ம் பார்வையால் கடக லக்கின அன்பர்களுக்கு லக்கினம் எனும் 1ம் பாவகத்தை வசீகரிப்பதும், கடகம் சுய வர்க்க கிரகத்தின் ( சந்திரன் ) வீடாக இருப்பதும் ராஜ யோக பலன்களை தரும் உடல் நலம், மன நலம் மேலோங்கும், சுகபோக யோக வாழ்க்கைக்கான அடித்தளத்தை இனிவரும் காலம் சிறப்பாக அமைத்து தரும், புதிய சொகுசு வண்டி வாகனம், வீடு, சொத்து சுக சேர்க்கை மூலம் வாழ்க்கையில் அந்தஸ்தும் கவுரவமும் அதிகரிக்கும், புதிய மாற்றங்களும், புதிய சந்தர்ப்பங்களும் கடக லக்கின அன்பர்களுக்கு சந்தோஷம் மிக்க யோக வாழ்க்கையை தரும், புதிய தொழில்  முயற்சிகள் வாழ்க்கையில் நல்ல வெற்றிகளையும், வருமான வாய்ப்பையும் தரும், நீர் தத்துவ சார்ந்த தொழில்களில் உள்ளோருக்கு இனிவரும் காலம் யோக காலமாக அமையும், மருத்துவ துறையில் உள்ளோருக்கு சிறப்பான முன்னேற்றம் உண்டு, ஏற்றுமதி இறக்குமதி தொழில் புரிவோர், வண்டி வாகன தொழில் புரிவோர், கட்டடம் மற்றும் கட்டுமான தொழில் செய்வோர் வாழ்க்கையில் எதிர்பாராத அதிர்ஷ்டமும், பொருளாதர முன்னேற்றமும் பரிபூர்ணமாக அமையும், பண்ணை தொழில் மற்றும் விவசாயம் சார்ந்த துறையில் உள்ளோருக்கு ஏற்றமிகு யோக காலமாக அமையும், பால் பண்ணை மற்றும் பால் பொருட்கள் சார்ந்த வியாபாரம் விருத்தி அடையும் என்பதுடன் அதிர்ஷ்டகரமான நன்மைகளையும் சுவீகரிக்கும் வல்லமை உண்டாகும், மனதளவில் நல்ல மாற்றங்களும், செயல்பாட்டில் நல்ல முன்னேற்றத்தையும் தரும், எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும் என்பதுடன் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும்.

குறிப்பு :

கடக லக்கின அன்பர்களுக்கு, தற்போழுது நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் சுய ஜாதகத்தில் 5,9,11,1ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக அவயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 5,9,11,1ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்

9443355696


புதன், 14 நவம்பர், 2018

குரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - மிதுனம் )


( குரு பெயர்ச்சியின் வழியில் சற்று இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலைக்கு ஆளாகும் லக்கினமாக மிதுன லக்கின அன்பர்கள் உள்ளனர் என்பது கவனிக்க தக்கது ) சுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினாலும், அமர்ந்த இடத்தில் இருந்தும் எதிர்வரும் ஒருவருட காலத்திற்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி விருச்சிகம் முதல் துலாம் வரை, ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !

 ''எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்'' என்பதற்கு இணங்க ஒருவரது வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தில் அதிமுக்கிய பங்கு வகிப்பது உடல் உயிராகிய " ஜென்ம லக்கினமாகும் " ஒருவரது வாழ்க்கையில் நிகழும் யோக அவயோகம், நன்மை தீமை போன்றவற்றை ஜென்ம லக்கினமே நிர்ணயம் செய்கிறது, இதில் ஏதும் மாற்று கருத்து இல்லை, எனவே நவகிரகங்களின் பெயர்ச்சியை ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் காண முற்படுவதே மிக துல்லியமானதாக அமையும், இதுவே அவரவர் சுய தேடுதலுக்கும், முன்னேற்றமிகு யோக வாழ்க்கைக்கும் அடிப்படையாக அமையும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

மேலும் இயல்பாக கடந்த இரண்டு வருடங்களாக எதிர் வர்க்க ( கன்னி-புதன், துலாம்-சுக்கிரன் ) கிரகங்களின் வீடுகளில் சஞ்சாரம் செய்த குரு பகவான் தனது இயற்க்கை குணத்திற்கு மாறாக செயல் இழந்த நிலையில் சுபயோகங்களை வாரி வழங்கும் வல்லமை அற்று காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது, தனது வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டில் ( விருச்சிகம் ) சஞ்சாரம் செய்யும் குருபகவான் தரும் பலாபலன்களை இனி லக்கின வாரியாக சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

லக்கினம் : மிதுனம் 

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 3ம் ராசியாகவும், உபய காற்று தத்துவ தன்மையை பெற்றதுமான மிதுன ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, தனது சுய வர்க்க வீட்டில் ( விருச்சிகம் )  பெயர்ச்சியாகும் குரு பகவான் மிதுன லக்கினத்திற்க்கு, களத்திர ஸ்தானம் மற்றும் ஜீவன ஸ்தானம் என்ற இரு அமைப்பிலும் கேந்திர ஆதிபத்திய தோஷ நிலையில் நிற்பது மிதுன லக்கின அன்பர்களுக்கு இன்னல்களை தரும் அமைப்பாகும், தனது சத்ரு ஸ்தான சஞ்சார நிலையில் மிதுன லக்கின அன்பர்களுக்கு எதிரிகளை வெல்லும் வல்லமையை தந்த போதிலும், தானாகவே எதிர்ப்புகளை சம்பாதித்து கொள்ளும் நிலைக்கு ஆளாக்குவார், தனது உடல் நிலையில் அக்கறை இன்மை வெகுவான பிரச்சனைகளை தரும், கடன் தொந்தரவுகள் எதிர்பாராத பிரச்சனைகள் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்ற தடையாக விளங்கும், இருப்பினும் போட்டி பந்தயம், சூது போன்றவற்றில் வெற்றி உண்டு, நிதானமான சிந்தனை வாழ்க்கையில் நன்மைகளை தரும், பொது வாழ்க்கையில் உள்ளோர் சிறிது ஏற்றம் காணும் நல்ல நேரம் என்ற போதிலும் கடுமையான இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும், மனம் போன போக்கில் செயல்படுவது வாழ்க்கையில் கடுமையான இன்னல்களையும் துன்பங்களையும் தரும் என்பதால் தெளிவான சிந்தனையுடன் ஒவ்வொரு முடிவுகளையும் மேற்கொண்டு வாழ்க்கையில் நலம் பெறுவது அவசியமாகிறது.

குரு பகவான் தனது 5ம் பார்வையால் மிதுன லக்கின அன்பர்களுக்கு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்தை கோண பலம் பெற்று வசீகரிப்பது, மிதுன லக்கின அன்பர்களுக்கு ஜீவன ரீதியான இன்னல்களை வெகுவாக தரக்கூடும், தொழில் வழியிலான தடைகள், முன்னேற்ற பாதிப்புகள் அதிக அளவில் ஏற்படக்கூடும் என்பதுடன் பெற்றோர் உடல் நலனிலும் அதிக அக்கறை கொள்ள வேண்டி வரும், கவுரவ குறைவான காரியங்களில் ஈடுபடாமல் இருப்பதே சகல நன்மைகளையும் தரும், பொதுவாக தனது முடிவையே மற்றவர்கள் மேல் திணிக்கும் வழக்கம் மிதுன இலக்கின அன்பர்களுக்கு கைவந்த கலை என்பது எதார்த்தமான உண்மை என்ற போதிலும் தற்போதைய சூழ்நிலையில் இது பலன் தாராது, தங்களுக்கே எதிர்ப்பாக கிளம்பி நிற்கும் என்பதால், மற்றவர்கள் ஆலோசனைக்கும் மதிப்பளித்து நடந்துகொள்வதே ஜீவன ரீதியான நன்மைகளை தரும், சுய விருப்பு வெறுப்பு இன்றி நடந்தால் மட்டுமே வாழ்க்கை சற்று நிம்மதியுடன் இயங்கும், வாழ்க்கை துணை நண்பர்கள் மற்றும் உறவுகளுடன் மிகுந்த இணக்கமாக இருப்பது தங்களுக்கு வரும் தொழில் ரீதியான இன்னல்களுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்ப்படுத்தும்.

குரு பகவான் தனது 7ம் பார்வையால் மிதுன லக்கின அன்பர்களுக்கு விரைய ஸ்தானம் எனும் 12ம் பாவகத்தை வசீகரிப்பது, தேவையற்ற மன உளைச்சலை தரும், மன போராட்டம் மன அழுத்தம் இரண்டும் தங்களின் எதிர்காலத்தை வெகுவாக பாதிக்கும், தாம்பத்திய வாழ்க்கையில் சிரமங்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், தம்பதியரின் வாழ்க்கையில் மகிழ்ச்சி வெகுவாக பாதிக்கும், வருமானம் சார்ந்த இழப்புகள் தங்களின் பொருளாதார வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும் என்பதால், சேமிப்பை தங்களது வசமாக்குவது அவசியமானதாக உள்ளது, புது வித உடல் தொந்தரவுகள் தங்களுக்கு வெகுவான மருத்துவ செலவினங்களை அதிகரிக்க கூடும், எதிர்பாராத விபத்து அல்லது உடல்நல குறைவு தங்களுக்கு கடுமையான பாதிப்பை தரக்கூடும் என்பதால், வண்டி வாகனங்களில் பாதுகாப்பான பயணம் அவசியமாகிறது, முதலீடுகளில் இருந்து வரும் வருமானம் மட்டும் தங்களுக்கு சற்று ஆறுதலை தரும், உறக்கம் பாதிக்கும், எனவே நல்ல ஆன்மீக திருத்தலங்களுக்கு சென்று வருவது தங்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை வாரி வழங்கும் என்பதுடன், விரைய ஸ்தான பாதிப்பை வெகுவாக குறைக்கும்.

குரு பகவான் தனது 9ம் பார்வையால் மிதுன லக்கின அன்பர்களுக்கு குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகத்தை வசீகரிப்பதும், கடகம் சுய வர்க்க கிரகத்தின் ( சந்திரன் ) வீடாக இருப்பதும் ஒருவகையில் நன்மையை தந்த போதிலும் குடும்பத்தில் சண்டை சச்சரவுக்கு பஞ்சம் இருக்காது என்பதானால் மிதுன இலக்கின அன்பர்கள் தனது நாவை அடக்கி ஆள்வது அவசியமாகிறது, தேவையற்ற  வீண் வாதங்களில் ஆர்வம் செலுத்தினால் மன நிம்மதி பறிபோவதுடன், செலவினங்களும் கட்டுக்கடங்காமல் வீண் விரையமாகும், மேலும் நீர் தத்துவம் சார்ந்த விஷயங்கள் மூலம் வாழ்க்கையில் எதிர்பாராத நஷ்டங்கள் ஏற்ப்பட அதிக வாய்ப்பு உண்டு, வாழ்க்கை துணை உடனான இணக்கமான சூழ்நிலையை மிதுன இலக்கின அன்பர்கள் பேணி பாதுகாப்பது அவசியமாகிறது, இருப்பினும் ஏதாவது ஒரு வழியில் இருந்து வருமானம் வந்துகொண்டே இருக்கும் என்பதுடன், பொருளாதார சிக்கல்களுக்கு தீர்வுகளும் உண்டாகும், இனிமையான பேச்சு திறன் கொண்டு வாழ்க்கையில் நலம் பெறவேண்டிய நேரமிது என்பதால், மிகுந்த கவனமுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளுங்கள் " வாழ்த்துகள் "

குறிப்பு :

மிதுன லக்கின அன்பர்களுக்கு, தற்போழுது நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் சுய ஜாதகத்தில் 6,10,12,2ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக அவயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 6,10,12,2ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

செவ்வாய், 13 நவம்பர், 2018

குரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - ரிஷபம் )


( இந்த குரு பெயர்ச்சியின் மூலம் லாப ஸ்தானம் மற்றும் வீரிய ஸ்தான வழியில் இருந்து 100% விகித நன்மைகளை சுவீகரிக்கும் வல்லமை பெற்றவர்கள் ரிஷப லக்கின அன்பர்கள் என்றால் அது மிகையில்லை ) சுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினாலும், அமர்ந்த இடத்தில் இருந்தும் எதிர்வரும் ஒருவருட காலத்திற்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி விருச்சிகம் முதல் துலாம் வரை, ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !

 ''எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்'' என்பதற்கு இணங்க ஒருவரது வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தில் அதிமுக்கிய பங்கு வகிப்பது உடல் உயிராகிய " ஜென்ம லக்கினமாகும் " ஒருவரது வாழ்க்கையில் நிகழும் யோக அவயோகம், நன்மை தீமை போன்றவற்றை ஜென்ம லக்கினமே நிர்ணயம் செய்கிறது, இதில் ஏதும் மாற்று கருத்து இல்லை, எனவே நவகிரகங்களின் பெயர்ச்சியை ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் காண முற்படுவதே மிக துல்லியமானதாக அமையும், இதுவே அவரவர் சுய தேடுதலுக்கும், முன்னேற்றமிகு யோக வாழ்க்கைக்கும் அடிப்படையாக அமையும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

மேலும் இயல்பாக கடந்த இரண்டு வருடங்களாக எதிர் வர்க்க ( கன்னி-புதன், துலாம்-சுக்கிரன் ) கிரகங்களின் வீடுகளில் சஞ்சாரம் செய்த குரு பகவான் தனது இயற்க்கை குணத்திற்கு மாறாக செயல் இழந்த நிலையில் சுபயோகங்களை வாரி வழங்கும் வல்லமை அற்று காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது, தனது வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டில் ( விருச்சிகம் ) சஞ்சாரம் செய்யும் குருபகவான் தரும் பலாபலன்களை இனி லக்கின வாரியாக சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

லக்கினம் : ரிஷபம் 

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் ராசியாகவும், ஸ்திர மண் தத்துவ தன்மையை பெற்றதுமான ரிஷப ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, தனது சுய வர்க்க வீட்டில் ( விருச்சிகம் )  பெயர்ச்சியாகும் குரு பகவான் ரிஷப லக்கினத்திற்க்கு, சத்ரு ஸ்தான அதிபதி என்ற நிலையில் கேந்திர ஆதிபத்திய தோஷம் தரும் அமைப்பிலும், லாப ஸ்தான அதிபதி என்ற நிலையில் சகல சௌபாக்கியங்களையும் தன்னிறைவாக வாரி வழங்கும் வல்லமை பெற்றவர் ஆகிறார், தனது களத்திர ஸ்தான சஞ்சார நிலையில் இருந்து ரிஷப லக்கின அன்பர்களுக்கு சற்று சிரமங்களை வாரி வழங்க தவறமாட்டார் என்பதுடன், எதிர்பாலின சேர்க்கை மூலம் தேவையற்ற இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலைக்கு ஆளாக்குவார் என்பது கவனிக்க தக்கது, உயர்பதவிகளில் உள்ளோர் சற்று கவனமுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளவேண்டிய நேரமிது, வெளிநாடு அல்லது வெளியூரில் ஜீவனம் தேடும் அன்பர்களுக்கு சில நல்ல வாய்ப்புகள் தேடிவரும், தன்னம்பிக்கை அதிகரிக்கும், மன நிலையில் நல்ல மாற்றங்களும், தெய்வீக அனுக்கிரகமும் தங்களின் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களை வாரி வழங்கும், கூட்டு முயற்சிகள் மட்டும் தங்களுக்கு பேரிழப்பையும், தடை தாமதங்களையும் வழங்க கூடும், வண்டி வாகனங்களில் பயணம் மேற்கொள்ளும் பொழுது மிகுந்த எச்சரிக்கையுடன் பாதுகாப்புடன் இருப்பது மிக மிக அவசியமாகிறது.

குரு பகவான் தனது 5ம் பார்வையால் ரிஷப லக்கின அன்பர்களுக்கு லாப ஸ்தானமான 11ம் பாவகத்தை கோண பலம் பெற்று வசீகரிப்பது, மிகுந்த லாபத்தையும் அதிர்ஷ்டகரமான யோக வாழ்க்கையையும் வாரி வழங்கும், முதலீடுகளில் இருந்து வரும் வருமானம் மற்றும் லாபம் தங்களின் வாழ்க்கையில் தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்பை அதிகரிக்கும், நல்ல நிம்மதியும், தெளிவான மனநிலையும் தங்களின் வாழ்க்கையில் அபரிவிதமான  யோக வாழ்க்கையை வாரி வழங்கும், புதிய முயற்சிகள் வழியிலான லாபங்கள் தங்களின் வாழ்க்கையில் எதிர்பாராத சுபயோகங்களை வாரி வழங்கும், தன்னம்பிக்கை மிக்க செயல்பாடுகள் மூலம் வாழ்க்கையில் அபரிவிதமான நன்மைகளையும் சுபயோகங்களையும் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் இனிவரும் ஒருவருட காலத்தில் தேடிவரும், தங்களுக்கு இதுவரை இருந்த எதிர்ப்புகள் யாவும் நீங்கி, புதிய யோக வாழ்க்கையை நல்கும் என்பதுடன், அதிர்ஷ்டத்தின் தாக்கம் தங்களுக்கு பரிபூர்ணமாக கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்கது, போதிய விழிப்புணர்வுடன் செயல்பட்டு வாழ்க்கையில் தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகளையும், சுகபோக யோக வாழ்க்கையையும் சுவீகரியுங்கள், குறிப்பாக முதலீடுகளில் அதிக கவனம் செலுத்தலாம்.

குரு பகவான் தனது 7ம் பார்வையால் ரிஷப லக்கின அன்பர்களுக்கு லக்கினம் எனும் முதல் பாவகத்தை வசீகரிப்பது, உடல் நிலை சார்ந்த இன்னல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு, வரும் வருமானத்தை சரியான மேலாண்மை செய்ய இயலவில்லை எனில் அதீத பொருளாதர சிக்கல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், பேசும் வார்த்தைகளில் அதீத கவனம் தேவை, வாக்கு தவறினால் வாழ்க்கையில் நிறைய இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும், மனம் கவலைகொள்ளவும், அதீத போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகும், மன பயம் தங்களின் வாழ்க்கையில்  அதிகப்படியான துன்பங்களை சந்திக்கும் நிலைக்கு தள்ளும் என்பதால், தைரியமான  முடிவுகளை மேற்கொண்டு நலம் பெறுங்கள், அரை குறை மனதுடன் செய்யும் காரியங்கள் யாவும் தங்களுக்கு மீள இயலா இன்னல்களை தரும் என்பதை கவனத்தில் கொள்க, மேலும் பொது காரியங்கள், பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமுடன் நடந்துகொள்வது நல்லது, குறிப்பாக குடும்பத்தில் பகைமை பாராட்டாமல் அனைவருடன் இணக்கமாக நடந்துகொள்வது சகல விதங்களில் இருந்தும் நன்மைகளை  தரும்.

குரு பகவான் தனது 9ம் பார்வையால் ரிஷப லக்கின அன்பர்களுக்கு வீரிய ஸ்தானம் எனும் 3ம் பாவகத்தை வசீகரிப்பதும், கடகம் சுய வர்க்க கிரகத்தின் ( சந்திரன் ) வீடாக இருப்பதும் எடுக்கும் காரியங்கள் யாவிலும் வெற்றி மேல் வெற்றியை தரும், வீரியமிக்க செயல்பாடுகள் மூலம் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் சுவீகரிக்கும் நேரமிது, தரகு, கமிஷன், ஒப்பந்த சார்ந்த வியாபரங்கள் மூலம் அபரிவிதமான யோக வாழ்க்கையை சந்திக்கும் நேரமிது, புதிய தொழில் வாய்ப்புகள் தங்களின் வாழ்க்கையில் சிறப்புமிக்க முன்னேற்றங்களை வாரி வழங்கும், காண்ட்ராக்ட் தொழில் செய்வோருக்கும், கட்டுமான துறை மற்றும் வண்டி வாகன துறையில் இருப்போருக்கும் அபரிவிதமான நன்மைகளும் முன்னேற்றங்களும் வந்து சேரும், எதிர்பார்ப்புகள் யாவும் நிறைவேறும், உணவு பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள், மருத்துவ துறை போன்றவற்றில் பணியாற்றும் அன்பர்களுக்கு இது ஒரு யோக காலமாக கருதலாம், கலைத்துறை மற்றும் விளையாட்டு துறையில் உள்ள அன்பர்களும்  மிகப்பெரிய சாதனைகளை சாதிக்கும் வாய்ப்பை வாரி வழங்கும், புதிய வீடு வண்டி வாகனம் சொத்து சுக சேர்க்கை என  வாழ்க்கையில் தன்னிறைவான சுகபோகங்களை பரிபூர்ணமாக சுவீகரிக்கும் யோகத்தை இந்த குரு பெயர்ச்சி ரிஷப இலக்கின அன்பர்களுக்கு வாரி வழங்கும் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை " வாழ்த்துகள் "

குறிப்பு :

ரிஷப  லக்கின அன்பர்களுக்கு, தற்போழுது நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் சுய ஜாதகத்தில் 7,11,1,3ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக அவயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 7,11,1,3ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வெள்ளி, 9 நவம்பர், 2018

குரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - மேஷம்)


 சுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினாலும், அமர்ந்த இடத்தில் இருந்தும் எதிர்வரும் ஒருவருட காலத்திற்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி விருச்சிகம் முதல் துலாம் வரை, ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !

 ''எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்'' என்பதற்கு இணங்க ஒருவரது வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தில் அதிமுக்கிய பங்கு வகிப்பது உடல் உயிராகிய " ஜென்ம லக்கினமாகும் " ஒருவரது வாழ்க்கையில் நிகழும் யோக அவயோகம், நன்மை தீமை போன்றவற்றை ஜென்ம லக்கினமே நிர்ணயம் செய்கிறது, இதில் ஏதும் மாற்று கருத்து இல்லை, எனவே நவகிரகங்களின் பெயர்ச்சியை ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் காண முற்படுவதே மிக துல்லியமானதாக அமையும், இதுவே அவரவர் சுய தேடுதலுக்கும், முன்னேற்றமிகு யோக வாழ்க்கைக்கும் அடிப்படையாக அமையும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

மேலும் இயல்பாக கடந்த இரண்டு வருடங்களாக எதிர் வர்க்க ( கன்னி-புதன், துலாம்-சுக்கிரன் ) கிரகங்களின் வீடுகளில் சஞ்சாரம் செய்த குரு பகவான் தனது இயற்க்கை குணத்திற்கு மாறாக செயல் இழந்த நிலையில் சுபயோகங்களை வாரி வழங்கும் வல்லமை அற்று காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது, தனது வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டில் ( விருச்சிகம் ) சஞ்சாரம் செய்யும் குருபகவான் தரும் பலாபலன்களை இனி லக்கின வாரியாக சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

லக்கினம் : மேஷம்

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 1ம் ராசியாகவும், சர நெருப்பு தத்துவ தன்மையை பெற்றதுமான மேஷ ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, தனது சுய வர்க்க வீட்டில் ( விருச்சிகம் )  பெயர்ச்சியாகும் குரு பகவான் மேஷ லக்கினத்திற்க்கு, அஷ்டமாதிபதி மற்றும் விரைய ஸ்தான அதிபதி என்ற நிலையை பெறுவது கவனிக்கத்தக்கது, மேலும் குருபகவான் அஷ்டம ஸ்தானமான 8ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்வது மேஷ லக்கின அன்பர்களுக்கு சிறப்பை தரும் விஷயமல்ல, மற்றவர்களை நம்பி செய்யும் முதலீடுகளில் அதீத எச்சரிக்கை தேவை, பயணங்களில் மிகுந்த பாதுகாப்பும், உடல் நலனில் அதிக அக்கறையும் கொள்வது நல்லது, தெய்வீக வழிபாடுகளில் ஈடுபாடு காட்டுவது சிறப்பை தரும், திடீரென எடுக்கும் முடிவுகள் யாவும் தங்களுக்கு மிகப்பெரிய தோல்வியை தரக்கூடும், தன்னம்பிக்கை குறையும், இருப்பினும் வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானம் மற்றும் இறக்குமதி பொருள் சார்ந்த விஷயங்களில் நல்ல லாபம் உண்டு, தனது வாழ்க்கை துணை வழியிலான ஆதரவு அதிகம் என்பதால் வரும் இன்னல்களை மிக சிறப்பாக கையாண்டு வெற்றிகொள்ளும் வாய்ப்பை நல்கும், வண்டி வாகனங்களில் மட்டும் மிகுந்த பாதுகாப்புடன் பயணம் மேற்கொள்வது அவசியமாகிறது, மேலும் முதலீடு செய்யுமுன் மிகுந்த கவனமுடன் இருப்பதும் மேஷ லக்கின அன்பர்களுக்கு நன்மை பயக்கும்.

குரு பகவான் தனது 5ம் பார்வையால் மேஷ லக்கின அன்பர்களுக்கு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்தை வசீகரிப்பது, நிம்மதியின்மையை உருவாக்கும், மனம் ஒரு நிலைப்படுவது என்பது சற்று கடினமான காரியமாக அமையும், தெளிவில்லாத நிலை, எடுக்கும் காரியங்களில் தொய்வு, மன உறுதியின்மை, துவங்கும் காரியங்களில் திருப்தி இன்மை, பொழுதுபோக்கு விஷயங்களில் அதீத ஆர்வம், தன்னம்பிக்கை வெகுவாக குறையும் தன்மை, எந்த ஓர் காரியத்தையும் ஆர்வத்துடன் செய்ய இயலாமை, கடமைக்கு செய்து இன்னலுறும் தன்மை, பணியில் நிம்மதியின்மை, தொழில் வழியில் பாதிப்பு, மனதிருப்திக்காக செய்யும் காரியங்கள் யாவும் கடும் தோல்வியை சந்திக்கும் நிலை, வீண் விரையங்கள், முன்பின் அறிமுகம் இல்லாத நபர்கள் வழியில்  இருந்து வரும் தொந்தரவுகள், மற்றவர்கள் விஷயங்களில் தலையீடு செய்வதால் வரும் பாதிப்பு என்ற வகையில் கடுமையான இன்னல்களை தரும், சிறிது கவனமின்றி செயல்பட்டால் கூட வாழ்க்கையில் வெகுவான பாதிப்புகளை சந்திக்கும் நிலையை தரும்.

குரு பகவான் தனது 7ம் பார்வையால் மேஷ லக்கின அன்பர்களுக்கு குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகத்தை வசீகரிப்பது, குடும்ப வாழ்க்கையில் சற்று இன்னல்களை தரக்கூடும், குறிப்பாக வருமானம் சார்ந்த இன்னல்கள் என்பது அதிக அளவில் இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது, வீண் வாக்குவாதம் குடும்பத்தில் நிம்மதியிழப்பை தரும், செலவினங்களை கட்டுப்படுத்துவது இயலாத காரியமாக அமையும், தனம் சார்ந்த விஷயங்களிலேயே அதீத இன்னல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு, திட்டமிட்டு செயல்படுவதும், நிதி சார்ந்த விஷயங்களில் முறையான மேலாண்மையை கடைபிடிப்பது மட்டுமே சற்று நிம்மதியை தரக்கூடும், போதிய நிதி இன்மை காரணமாக மற்றவர்களிடம் கடன் பெரும் சூழ்நிலை உருவாகலாம், வக்கிரக காலங்களில் மட்டும் தங்களுக்கு எதிர்பாராத சுபயோகங்கள் தேடி வரக்கூடும், எதிர்பார்ப்புகள் யாவும் நிறைவேற வாய்ப்பு உண்டு என்பதால் சரியான நேரமறிந்து செயல்பட்டு வெற்றிகாணலாம்.

குரு பகவான் தனது 9ம் பார்வையால் மேஷ லக்கின அன்பர்களுக்கு சுக ஸ்தானம் எனும் 4ம் பாவகத்தை வசீகரிப்பதும், கடகம் சுய வர்க்க கிரகத்தின் ( சந்திரன் ) வீடாக இருப்பதும் தேய்பிறை காலங்களில் நன்மையை தரும், திடீர் வண்டிவாகன யோகம், வீடு நிலம் சொத்து சுக சேர்க்கை உருவாக கூடும், மற்றவர்கள் தனம் தனது கையிருப்பாக உயரும், மனதில் உள்ள ஆசைகள் யாவும் நிறைவேறும் நேரமிது, எதிர்பாராத அதிர்ஷ்ட வாழ்க்கையை சுவீகரிக்கும் யோகத்தை தரும், வண்டி வாகன தொழில் அல்லது கட்டுமான துறை சார்ந்த அன்பர்களுக்கு புதிய வாய்ப்புகளும், புதிய தொழில் முன்னேற்றமும் உண்டாகும், வீட்டு உபயோக பொருட்கள் வியாபாரம் செய்யும் அன்பர்களின் வாழ்க்கையில் புதுவித தொழில் விருத்தி உண்டாகும், கலைத்துறையில் உள்ள அன்பர்களுக்கு திடீரென முன்னேற்றமும், நிறைவான வாய்ப்புகளும், பிரபல்ய யோகமும் உண்டாகும், தங்களின் முயற்சிகளில் எதிர்பாராத வெற்றியை சுக ஸ்தான அமைப்பில் இருந்து இந்த  குரு பகவானின் வசீகர பார்வை வாரி வழங்கும்.

குறிப்பு :

மேஷ  லக்கின அன்பர்களுக்கு, தற்போழுது நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் சுய ஜாதகத்தில் 8,12,2,4ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக அவயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 8,12,2,4ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

திங்கள், 29 அக்டோபர், 2018

குரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - மீனம் )


( குரு பெயர்ச்சியின் மூலம் அபரிவித ராஜ யோக பலன்களை அனுபவிக்கும் வல்லமை பெற்றவர்களில் இரண்டாம் இடம் பெறுபவர்கள் மீன லக்கினத்தினரே என்றால் அது மிகையாகாது ) சுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினாலும், அமர்ந்த இடத்தில் இருந்தும் எதிர்வரும் ஒருவருட காலத்திற்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி விருச்சிகம் முதல் துலாம் வரை, ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !

 ''எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்'' என்பதற்கு இணங்க ஒருவரது வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தில் அதிமுக்கிய பங்கு வகிப்பது உடல் உயிராகிய " ஜென்ம லக்கினமாகும் " ஒருவரது வாழ்க்கையில் நிகழும் யோக அவயோகம், நன்மை தீமை போன்றவற்றை ஜென்ம லக்கினமே நிர்ணயம் செய்கிறது, இதில் ஏதும் மாற்று கருத்து இல்லை, எனவே நவகிரகங்களின் பெயர்ச்சியை ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் காண முற்படுவதே மிக துல்லியமானதாக அமையும், இதுவே அவரவர் சுய தேடுதலுக்கும், முன்னேற்றமிகு யோக வாழ்க்கைக்கும் அடிப்படையாக அமையும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

மேலும் இயல்பாக கடந்த இரண்டு வருடங்களாக எதிர் வர்க்க ( கன்னி-புதன், துலாம்-சுக்கிரன் ) கிரகங்களின் வீடுகளில் சஞ்சாரம் செய்த குரு பகவான் தனது இயற்க்கை குணத்திற்கு மாறாக செயல் இழந்த நிலையில் சுபயோகங்களை வாரி வழங்கும் வல்லமை அற்று காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது, தனது வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டில் ( விருச்சிகம் ) சஞ்சாரம் செய்யும் குருபகவான் தரும் பலாபலன்களை இனி லக்கின வாரியாக சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

லக்கினம் : மீனம்

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 12ம் ராசியாகவும், உபய நீர் தத்துவ தன்மையை பெற்றதுமான மீன ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, சுய வர்க்க கிரகத்தின் வீட்டில் ( விருச்சிகம் )  பெயர்ச்சியாகும் குரு பகவான் மீன லக்கினத்திற்க்கு, லக்கினாதிபதி, ஜீவன ஸ்தான அதிபதி என்ற வலிமையை பெறுகின்றார், இவர் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்வது மீன லக்கின அன்பர்களுக்கு கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் தன்மையை தரும், பெரிய மனிதர்கள் ஆதரவு , சாஸ்திர ஞானம், தெய்வீக  அனுக்கிரகம், கோவில் திருப்பணிகளை சிறப்பாக செய்யும் ஆற்றல், சமூக அந்தஸ்து, பல புனித திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம், அரசியல்வாதிகள் மூலம் பிரபல்ய யோகம், உயர்கல்வி, பட்டய படிப்பில் தேர்ச்சி, பதவி உயர்வு, முன்னோர்களின் சொத்துக்களை பெரும் யோகம், பித்ரு ஆசியின் மூலம் நினைத்த காரியங்கள் மற்றும் லட்சியங்களை அடையும் தன்மை, கலைத்துறை, ஜோதிடம், ஆன்மிகம் போன்றவற்றில் அபரிவிதமான வளர்ச்சி, நல்லோர் அனைவரும் தர்ம்மத்தை காக்கும் யோகம், வெளிநாடு வெளியூர்களில் இருந்து வரும் அபரிவித வளர்ச்சி, வியாபாரத்தில் நார்ப்பெயர், எதிர்பாலின சேர்க்கை வழியில் இருந்து வரும் முன்னேற்றம், தன்னம்பிக்கையும், தைரியமும் அதீத அளவில் ஜாதகருக்கான வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் "வாழ்த்துக்கள்"

குரு பகவான் தனது 5ம் பார்வையால் மீனா லக்கின அன்பர்களுக்கு உடல் உயிர் ஸ்தானமான லக்கின பாவகத்தை வசீகரிப்பது, சிறப்பிலும் சிறப்பை தரும் அமைப்பாகும், குரு தனது பார்வையின் மூலம் நன்மையை தருகிறார் என்பதற்கு இதுவே நல்ல உதாரணம், குரு பகவான் எந்த ஒரு லக்கினம் என்றாலும் சரி 1,5,9ம் பாவகங்களில் சஞ்சாரம் செய்யும் பொழுதும் சரி, தனது 5,9ம் பாவக சுவீகரிப்பின் மூலமும் சரி, சுபயோகங்களை தன்னிறைவாக வாரி வழங்குவார், குறிப்பாக மீன லக்கின அன்பர்களுக்கு லக்கினாதிபதி என்ற முறையில் கோண பாவகத்தில் சஞ்சாரம் செய்து, தனது வீட்டை தானே பார்ப்பது 100% யோக வாழ்க்கையை தரும் அமைப்பாகும், ( சுய ஜாதகத்தில் இந்த அமைப்பு இருப்பின் ஜாதகர் மிகுந்த யோகசாலியாக திகழ்வார் ) உடல் நலம் மன நலம் சிறப்பாக அமையும், தெய்வீக ஆற்றல் ஓங்கும், புதிய சிந்தனை புதிய திட்டமிடுதல்கள் தங்களின் வாழ்க்கையில் சிறப்பு மிக்க யோக வாழ்க்கையை நல்கும், இதுவரை சமுதாயத்தில் போராடிக்கொண்டு இருந்தவர்கள் சுயமாக முன்னேற்ற பாதையில் வெற்றிநடை போடுவார்கள், மனநிம்மதியான யோக வாழ்க்கை, முதலீடுகளில் இருந்துவரும் வருமானம், தெய்வீக அனுக்கிரகம், பல தொழில் செய்யும் யோகம், அந்நிய நபர்கள் மூலம் வாழ்க்கையில் அபரிவித யோக வாழ்க்கையை பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும், லக்கின வழியில் இருந்து 100% விகித நன்மைகளை பெறுவது உறுதி  வாழ்த்துக்கள் .

குரு பகவான் தனது 7ம் பார்வையால் மீன லக்கின அன்பர்களுக்கு வீரிய ஸ்தானம் எனும் மூன்றாம் பாவகத்தை வசீகரிப்பது, வரவேற்கத்தக்கது என்ற போதிலும், சகோதரம் மற்றும் எடுக்கும் முயற்சிகள் வழியில் இருந்து சிறு சிறு இன்னல்கள் உருவாகும், குல தெய்வ ஆசி ஜாதகருக்கு சுபகாரிங்கள் அனைத்திலும் வெற்றியை தரும், கற்ற கல்வி வழியில் இருந்து யோக  வாழ்க்கையும், அபரிவிதமான வருமானமும் தங்களின் வாழ்க்கையில் மேலும் சிறப்பை சேர்க்கும், கலைத்துறையில் உள்ளவர்களுக்கு பெயரும் புகழும் உண்டாகும், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும், தெய்வீக அனுக்கிரகம் கொண்டு வாழ்க்கையில் அறிய பல சாதனைகளை குவிக்கும் நேரமிது, தனது சமயோசித புத்திசாலித்தனம் வாழ்க்கையில் ஏற்றமிகு நல்ல முன்னேற்றங்களை நல்கும், ஆசிரிய பணியில் கல்வி துறையில் உள்ளோருக்கு இந்த குரு பெயர்ச்சி அபரிவித நன்மைகளை வாரி வழங்கும், ஆராய்ச்சியில் உள்ளார்கள் வெற்றி பெறுவார், வியாபாரம் மற்றும் கமிஷன் ஏஜென்ட்  போன்ற தொழில் செய்வோர் வாழ்க்கையில் அபரிவித  முன்னேற்றங்களை  பெறுவார்கள், எதிர்பார்ப்புகள் யாவும் நிறைவேறும் நல்ல நேரமிது, வீரிய ஸ்தான வழியில் இருந்து மீன லக்கின அன்பர்கள் பரிபூர்ண நன்மைகளையும் யோகங்களையும் பெறுவார்கள்.

 குரு பகவான் தனது 9ம் பார்வையால் மீன லக்கின அன்பர்களுக்கு பூர்வபுண்ணிய ஸ்தானம் எனும் 5ம் பாவகத்தை வசீகரிப்பதும், கடகம் சுய வர்க்க கிரகத்தின் ( சந்திரன் ) வீடாக இருப்பதும் வளர்பிறை காலங்களில் நன்மையை தரும், ஜாதகருக்கு திருமண தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிட்டும், கல்வியில் முன்னேற்றம் உண்டு, உயர் கல்வியில் தேர்ச்சி அடைவர், புது முயற்சிகள் யாவும் தன்னிறைவான வெற்றியை தரும், உறவுகள் வழியிலான நன்மைகள் தேடிவரும், கல்வி துறையில் வெற்றி உண்டாகும், குல தெய்வ ஆசி வாழ்க்கையில் அபரிவிதமான முன்னேற்றங்களை நல்கும், ஆய்வு கல்வியில் தேர்ச்சியும் முன்னேற்றமும் உண்டாகும், பல தொழில் செய்யும் யோகம் உண்டு, உணவு பொருட்கள் சாந்த வியாபாரம் செய்வோர் வாழ்க்கையில் அபரிவித வளர்ச்சியை பெறுவார்கள், நல்ல ஆண் வாரிசு அமையும், அறிவில் சிறந்து விளங்கும் தன்மையும், புதிய கண்டுபிடிப்பின் மூலம் உலக புகழும் ஏற்படும், இந்த குரு பெயர்ச்சியின் மூலம் தன்னிறைவான வாழ்க்கையை பெறுவார்கள் மீன லக்கின அன்பர்கள்.

குறிப்பு :

மீன  லக்கின அன்பர்களுக்கு, தற்போழுது நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் சுய ஜாதகத்தில் 9,1,3,5ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக அவயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 9,1,3,5ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்

9443355696

வெள்ளி, 7 அக்டோபர், 2016

குரு பெயர்ச்சி வழங்கும் யோக வாழ்க்கை - ரிஷப லக்கினம் !


திருக்கணித பஞ்சாங்க முறைபடி வரும் 11.08.2016 வியாழன் அன்று இரவு 9.35 மணிக்கு சிம்ம இராசியில் இருக்கும் குரு பகவான், கன்னி இராசிக்கு செல்கிறார், இனிவரும் ஒரு வருடம் கன்னி ராசியில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி இனிவரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே! லக்கினம் என்பதே ஒருவரின் ஜாதகத்தை இயக்குவதில் 100% விகித பங்கை வகிக்கிறது என்பதால் ஒருவரின் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும், தற்போழுது நடைபெறும் திசாபுத்தி ஏற்று நடத்ததும் பாவகங்களுக்கு, குரு பகவான் தரும் கோள் சாரா பலன்களை அடிப்படையாக கொண்டும், ஜாதக பலன்களை நிர்ணயம் செய்யும் பொழுது சம்பந்த பட்ட ஜாதகருக்கு நடைபெறும் யோக அவயோக பலன்களை பற்றி தெளிவாக உணர இயலும், அதன் அடிப்படையில் தற்போழுது பெயர்ச்சி பெற்றுள்ள குரு பகவான் "ரிஷப" லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!                  

ரிஷப லக்கினம் :

5ல் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் ரிஷப லக்கின அன்பர்களுக்கு இனிவரும் ஒருவருட காலம் வழங்கு பலாபலன்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே, இந்த குரு பெயர்ச்சியினால் ராஜயோக பலன்களை பெறுவதில் ரிஷப இலக்கின அன்பர்களுக்கு அதிக பங்கு உண்டு எனலாம், லக்கினத்திற்கு பூர்வ புண்ணியத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் தங்களுக்கு நிறைவான அறிவுத்திறனை வாரி வழங்குகிறார், சமயோசித புத்திசாலித்தனம், தெளிவான சிந்தனை மற்றும் நல்லறிவு மூலம் தங்களின் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றங்களை தங்கு தடையின்றி பெறுவீர்கள், எதிர்ப்புகள் அனைத்தும் தங்களுக்கு வெற்றிகளை வாரி வழங்கும், சந்தோசம் நிறைந்த வாழ்க்கை தங்களை தேடிவரும், அனைவரும் தங்களுக்கு மிகுந்த உதவிகளை வாரி வழங்குவார்கள், நினைக்கும் காரியங்கள் யாவும் வெற்றியை தரும், தடைபட்ட நற்காரியங்கள் யாவும் தொய்வின்றி நடைபெறும், எதிர்பாராத அதிர்ஷ்டம் தங்களின் வாழ்க்கையில், மிகப்பெரிய திருப்பு முனையை அமைத்து தரும், நல்லோர் சேர்க்கையும், நல்ல நண்பர்கள் உதவியும் தங்களின் எதிர்காலத்தை மிகுந்த பிரகாசமாக மாற்றும், குல தெய்வத்தின் அருளும், கடவுள் அனுகிரகமும் தங்களின் வாழ்க்கையில் சகல யோகங்களையும் வாரி வழங்கும், சிரமங்கள் யாவும் குறைந்து மகிழ்ச்சி உண்டாகும், குலம் காக்க நல்ல வாரிசு அமையும், குழந்தைகள் வழியில் இருந்து மகிழ்ச்சியும் முன்னேற்றமும் அபரிவிதமாக வந்து சேரும், உறவுகளின் உதவி ஆதரவு தங்களுக்கு பரிபூர்ணமாக கிடைக்கும், சகலமும் வெற்றியை தரும்.

 குரு பகவான் தனது 5ம் பார்வையை பாக்கிய ஸ்தானம் எனும் 9ம் பாவகத்தை வசீகரிப்பது, ரிஷப லக்கின அன்பர்களுக்கு, ஆன்மீக வெற்றியை உறுதி செய்யும், சிறப்பான அறிவு திறன், ஆன்மீக பெரியோர் ஆசிர்வாதம், புண்ணிய திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம், சமூகத்தில் அந்தஸ்து மற்றும் மரியாதை, தனது சொல்லுக்கு நல்ல மதிப்பு, சிறந்த மனிதர்களின் அறிமுகம், அதன் வழியில் இருந்து வரும் லாபங்கள், புதிய கௌரவ பதவிகள், என சிறப்பான நன்மைகளை வாரி வழங்குவார், மேலும் சுய தொழில் செய்பவர்களுக்கு இது ஒரு சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும் காலமாக கருதலாம், இதுவரை ஜீவனம் இன்றி சிரமபட்ட அனைவருக்கும் நல்லதொரு வாய்ப்புகள் வந்து சேரும், தெய்வீகத்தால் நன்மையையும் முன்னேற்றமும் உண்டாகும், ஆசிரிய பணியில் உள்ள அன்பர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் உண்டாகும், சுய தொழில் செய்யும் அன்பர்களுக்கு நல்லதொரு முன்னேற்றமும் அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளும் வந்து சேரும், பொதுநலம் சார்ந்த விஷயங்களில் ஈடுபடும் அன்பர்களுக்கு யோகமிகுந்த காலமாக கருதலாம், பொது வாழ்க்கை மற்றும் அரசியலில் உள்ளவர்களுக்கு வெற்றிகள் மற்றும் பதவி தேடி வரும், பொதுமக்கள் ஆதரவு தங்களுக்கு அபரிவிதமாக வந்து சேரும்.

குரு பகவான் தனது 7ம் பார்வையை லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகத்தை வசீகரிப்பது, ரிஷப லக்கின அன்பர்களுக்கு, அளவில்லா அதிர்ஷ்டங்களை வாரி வழங்கும், மேலும் தாம்பத்திய வாழ்க்கை சிறக்கும், திருமணம் ஆகாத அன்பர்களுக்கு திருமணம் தடையின்றி சிறப்பாக நடைபெறும், எதிர்ப்புகள் அனைத்தும் களைந்து வெற்றி நடை போடும் காலநேரம் இதுவாகும், சுய முயர்ச்சியும், தன்னம்பிக்கையும் தங்களின் வாழ்க்கை முன்னேற்றத்தை சிறப்பாக நிர்ணயம் செய்யும், மன நிம்மதியும், திருப்திகரமான மன நிறைவும் தங்களின் வாழ்க்கையில் மகிழ்சியை அதிகரிக்கும், தாங்கள் நினைக்கும் அனைத்து நற்காரியங்களும் எவ்வித தடையும் இன்றி நிறைவேறும், முதலீடுகளில் இருந்து நல்ல லாபமும், பெருந்தொகையும் வந்து சேரும், உறவுகள் வழியில் இருந்து உதவிகள் வந்து சேரும், மாற்று மதத்தினர் வழியில் இருந்து அதிர்ஷ்டங்கள் வந்து சேரும், புதிய சொத்துகள் மற்றும் வண்டி வாகனங்கள் வாங்க இதுவே சிறப்பான நேரமாக கருதலாம், மேலும் வெளிநாடுகளில் வேலை மற்றும் கல்வி சார்ந்த முயற்ச்சிகளுக்கு சிறப்பான வெற்றிகளை வாரி வழங்கும், இந்த குரு பெயர்ச்சி மன நிறைவையும், சந்தோசத்தையும் வாரி வழங்கும்.

குரு பகவான் தனது 9ம் பார்வையை லக்கினம் எனும் 1ம் பாவகத்தை வசீகரிப்பது, ரிஷப லக்கின அன்பர்களுக்கு, உடல் மற்றும் மனம் சார்ந்த ஆரோக்கியத்தை நல்குவார், எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தியாகும், நல்லறிவும், தெளிவான சிந்தனையும் தங்களின் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றங்களை வாரி வழங்கும், புதிய திட்டமிடுதல்கள், முயற்ச்சிகள் யாவும் வெற்றியை வாரி வழங்கும், பேச்சு திறமை அதிகரிக்கும், தீர்கமான வாத திறமையும், சிறப்பான நிர்வாகத்திறனும் தங்களின் வருமான வாய்ப்பை உறுதி செய்யும், தன்னம்பிக்கை அதிகரிக்கும் விதமாக பல சுப நிகழ்வுகள் நடைமுறைக்கு வரும், அனைவரின் ஆதரவும் தங்களுக்கு அறிய பல நிகழ்வுகளை சிறப்பாக சாதிக்க வல்லமையை தரும், குறிப்பாக தன சேர்க்கை அபரிவிதமாக வரும் வாய்ப்பு உண்டாகும், மனதில் உள்ள கவலைகள் அனைத்தும் நீங்கும், வீண் மன பயம் தங்களை விட்டு அகலும், புதிய தைரியம் பிறக்கும், எதிர்பவர்கள் மூலமே தங்களுக்கு நன்மைகள் வந்து சேரும், மண் மனை வண்டி வாகன யோகம் உண்டாகும்  தங்களின் வாழ்க்கையில் சிறப்பான வெற்றிகளை தற்பொழுது 5ல் சஞ்சாரம் செய்யும் குருபகவான் வாரி வழங்குவார் என்பது மட்டும் நிச்சயம் வாழ்த்துகள்.

குறிப்பு :

ரிஷப லக்கின அன்பர்களுக்கு  தற்போழுது நடைபெறும் திசாபுத்திகள் 5,9,11,1ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், தற்போழுது நடைபெறும் திசா புத்திகள் மேற்கண்ட பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில், குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மையையும் தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க, மேலும் குரு பெயர்ச்சி பலனை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ள, சுய ஜாதகத்துடன் நேரில் ஆலோசனை பெற்று கொள்வதே சாலச்சிறந்தது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வியாழன், 6 அக்டோபர், 2016

குரு பெயர்ச்சி வழங்கும் யோக வாழ்க்கை - மேஷ லக்கினம் !


திருக்கணித பஞ்சாங்க முறைபடி வரும் 11.08.2016 வியாழன் அன்று இரவு 9.35 மணிக்கு சிம்ம இராசியில் இருக்கும் குரு பகவான், கன்னி இராசிக்கு செல்கிறார், இனிவரும் ஒரு வருடம் கன்னி ராசியில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி இனிவரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே! லக்கினம் என்பதே ஒருவரின் ஜாதகத்தை இயக்குவதில் 100% விகித பங்கை வகிக்கிறது என்பதால் ஒருவரின் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும், தற்போழுது நடைபெறும் திசாபுத்தி ஏற்று நடத்ததும் பாவகங்களுக்கு, குரு பகவான் தரும் கோள் சாரா பலன்களை அடிப்படையாக கொண்டும், ஜாதக பலன்களை நிர்ணயம் செய்யும் பொழுது சம்பந்த பட்ட ஜாதகருக்கு நடைபெறும் யோக அவயோக பலன்களை பற்றி தெளிவாக உணர இயலும், அதன் அடிப்படையில் தற்போழுது பெயர்ச்சி பெற்றுள்ள குரு பகவான் "மேஷ" லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!                    

மேஷ லக்கினம் :

6ல் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் மேஷ லக்கின அன்பர்களுக்கு இனிவரும் ஒருவருட காலம் வழங்கு பலாபலன்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே, மேஷ இலக்கின அன்பர்களுக்கு சத்ரு ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் எதிர்பாராத உடல் நல குறைவை தர வாய்ப்பு அதிகம் உண்டு, குறிப்பாக உள் உறுப்புகள், வயிறு சார்ந்த தொந்தரவுகள் அதிக அளவில் ஏற்பட கூடும், உணவு கட்டுபாடும், உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறையும் தங்களின் வாழ்க்கையில் வீண் விரையங்களை தவிர்க்க உதவும், கடன் சார்ந்த தொந்தரவுகள் அதிகம் சந்திக்கும் சூழ்நிலையை தரும், எதிரிகளினால் சிறு சிறு இன்னல்களும், காரிய தடைகளும் ஏற்ப்பட வாய்ப்பு உண்டு, பயணங்கள் மூலம் எதிர்பாராத இழப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு, புதிய முயற்ச்சிகளை தவிர்ப்பது தங்களுக்கு உகந்த நன்மைகளை தரும், புதிய அறிமுகம் இல்லாத நபர்கள் மூலம் தங்களுக்கு மிகப்பெரிய இன்னல்கள் ஏற்ப்பட வாய்ப்பு உள்ளதால், எச்சரிக்கை உணர்வுடன் நடந்துகொள்வது தங்களுக்கு உகந்தது, கடன் வாங்குவது கொடுப்பது இரண்டும் தங்களுக்கு இனிவரும் ஒரு வருட காலம் இழப்புகளை தரலாம், புதிய சொத்துகள், வண்டி வாகனங்கள் வாங்கும் பொழுது, ஆவணங்களை சரி பார்த்து வாங்குவது சிறப்பு, உடல் நலம், கடன், எதிரி வகையில் இருந்து வரும் இன்னல்களை எதிர்கொள்ள ஆயத்தமாக இருப்பது தங்களுக்கு மிகுந்த நன்மைகளை தரும்.

 குரு பகவான் தனது 5ம் பார்வையை ஜீவன் ஸ்தானம் எனும் 10ம் பாவகத்தை வசீகரிப்பது, மேஷ லக்கின அன்பர்களுக்கு, ஜீவன ஸ்தான ரீதியான முன்னேற்றங்களை தந்த போதிலும், பொருளாதார ரீதியான சிக்கல்களையும், வருமான சிக்கல்களையும் வெகுவாக அதிகரிக்கும், புதிய சொத்துகள் மற்றும் வில்லங்கங்கள் தங்களின் மன நிம்மதி இழப்பையும், ஜீவன தடைகளையும் தர வாய்ப்பு உண்டு, எதிர்பார்த்த பதவிகள் கிடைக்க வாய்ப்பு குறைவு, அசையும் அசைய சொத்துகளை நிர்வகிப்பது தங்களுக்கு சற்று சிரமங்களை தர கூடும் என்பதால், சிறந்த நிர்வாகிகளை நியமிப்பது தங்களின் வேலை பளுவை வெகுவாக குறைக்கும், கௌரவ குறைவான செயல்களை தாங்கள் தவிர்ப்பதே நல்லது இல்லை எனில் வீண் அவமானங்கள் வந்து சேர வாய்ப்பு உண்டு, தொழில் ரீதியான மாற்று சிந்தனை தங்களின் வாழ்க்கையில் சிறப்பான எதிர்காலத்தை அமைத்து தரும், மேலும் நிதி நிர்வாகத்தில் தனிகவனம் செலுத்துவது தங்களின் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றங்களை வாரி வழங்கும், வேலை ஆட்கள்  பொதுமக்கள் மற்றும் நண்பர்கள் கூட்டாளிகளிடம் சுமுக போக்கை கடைபிடிப்பது தங்களின் இன்னல்களை வெகுவாக குறைக்கும், தெளிவான சிந்தனையும், சரியான திட்டமிடுதல்களும் இந்த ஒருவருட குரு பெயர்ச்சியில் அதிக அளவு தேவை படும்.

குரு பகவான் தனது 7ம் பார்வையை விறைய ஸ்தானம் எனும் 12ம் பாவகத்தை வசீகரிப்பது, மேஷ லக்கின அன்பர்களுக்கு, மிகுந்த மன உளைச்சல்களை வாரி வழங்கும். கவனமின்மையினால் சில எதிர்பாராத இழப்புகளையும் வீண் விரையங்களையும் சந்திக்கும் சூழ்நிலையை தரும், இல்லற வாழ்க்கையில் மனஸ்தாபங்களும் பிரிவு நிலையையும் தரக்கூடும், எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடைமுறைக்கு வர அதிக தாமதமாகும், மன தைரியத்தை அதிக அளவில் தாங்கள் வளர்த்து கொள்வது தங்களின் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றங்களை பெற உதவும், ஆன்மீக வாழ்க்கை மற்றும் கோவில் வழிபடு மூலம் மிகுந்த நன்மைகளை பெற தங்களுக்கு அதிகாரம் உண்டு என்பதை நினைவில் கொள்க, மேலும் ஆன்மீக பெரியோர், மஹான்கள் சந்திப்பின் மூலம் வாழ்க்கையில் சிறப்பான நன்மைகள் தங்களுக்கு வந்து சேரும், பெரிய அளவிலான முதலீடுகளை தாங்கள் தவிர்ப்பது நல்லது, இல்லை எனில் தங்களுக்கு வரும் பேரிழப்பை தவிர்க்க இயலாது.

குரு பகவான் தனது 9ம் பார்வையை குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்தை வசீகரிப்பது,மேஷ லக்கின அன்பர்களுக்கு, வருமான வாய்ப்பை குறைக்கும், வரும் வருமானம் தங்களின் செலவுகளை கட்டுபடுத்த இயலாமல், கடன் பெற்று ஜீவனம் மேற்கொள்ளும் சூழ்நிலையை தரும், குடும்ப வாழ்க்கையில் அதிக அளவு சிக்கல்களையும் சிரமங்களையும் மேற்கொள்ளும் சூழ்நிலையை தரும், பேச்சு, வாக்கு ஆகியவை சிறப்பாக பயன்படுத்த வேண்டும் முடிந்த அளவிற்கு அனைவரிடமும் இனிமையாக பேசி காரிய சாதனை செய்து நலம் பெறுவதே தங்களுக்கு உகந்தது ஆகும், மேலும் திருமணம் மற்றும் சுப காரியங்களுக்காக சுப விறைய செலவுகளை தாங்கள் எதிர்கொள்ள வேண்டி வரும், உறவுகள் வழியில் இருந்து எதிர்பாராத செலவுகளும், இன்னல்களும் வர வாய்ப்பு உள்ளது, செய்வதை திருந்த செய்யுங்கள், மற்றவர்களின் அதரவு தங்களுக்கு இனிவரும் காலங்களில் அதிக அளவு தேவை படுவதால், அனைவரிடமும் அனுசரணையாக அனுசரித்து ஒற்றுமையாக வாழக்கையில் வரும் இன்னல்களை தவிர்த்து சிறப்பாக வாழுங்கள், வருமானம் பற்றிய சரியான திட்டமிடுதல்கள் மூலம்  இனிவரும்  எதிர்காலத்தை சிறப்பாக எதிர்கொள்ளுங்கள்.

குறிப்பு :

மேஷ லக்கின அன்பர்களுக்கு  தற்போழுது நடைபெறும் திசாபுத்திகள் 6,10,12,2ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், தற்போழுது நடைபெறும் திசா புத்திகள் மேற்கண்ட பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில், குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மையையும் தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க, மேலும் குரு பெயர்ச்சி பலனை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ள, சுய ஜாதகத்துடன் நேரில் ஆலோசனை பெற்று கொள்வதே சாலச்சிறந்தது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வெள்ளி, 30 செப்டம்பர், 2016

குரு பெயர்ச்சி வழங்கும் யோக வாழ்க்கை - மீனம் லக்கினம் !


திருக்கணித பஞ்சாங்க முறைபடி வரும் 11.08.2016 வியாழன் அன்று இரவு 9.35 மணிக்கு சிம்ம இராசியில் இருக்கும் குரு பகவான், கன்னி இராசிக்கு செல்கிறார், இனிவரும் ஒரு வருடம் கன்னி ராசியில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி இனிவரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே! லக்கினம் என்பதே ஒருவரின் ஜாதகத்தை இயக்குவதில் 100% விகித பங்கை வகிக்கிறது என்பதால் ஒருவரின் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும், தற்போழுது நடைபெறும் திசாபுத்தி ஏற்று நடத்ததும் பாவகங்களுக்கு, குரு பகவான் தரும் கோள் சாரா பலன்களை அடிப்படையாக கொண்டும், ஜாதக பலன்களை நிர்ணயம் செய்யும் பொழுது சம்பந்த பட்ட ஜாதகருக்கு நடைபெறும் யோக அவயோக பலன்களை பற்றி தெளிவாக உணர இயலும், அதன் அடிப்படையில் தற்போழுது பெயர்ச்சி பெற்றுள்ள குரு பகவான் "மீன" லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!                     

மீன லக்கினம் :

7ல் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் மீன லக்கின அன்பர்களுக்கு இனிவரும் ஒருவருட காலம் வழங்கு பலாபலன்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே, பொதுவாக குரு பகவான் லக்கினத்திற்கு 7ல் சஞ்சாரம் செய்வது சிறப்பான நன்மைகளை தரும் என்று கூறுவது உண்டு ஆனால் மீன இலக்கின அன்பர்களுக்கு இது பொருந்தாது, களத்திர பாவகத்தில் சஞ்சார நிலை மீன இலக்கின அன்பர்களுக்கு அதிக இன்னல்களையே தரும் , கூட்டு முயற்ச்சிகள் எதிர்பாராத பின்னடைவை தரும், திருமண வாழ்க்கையில் இன்னல்களும், பொருளாதார சிக்கல்களையும் அதிகஅளவில் சந்திக்கும் சூழ்நிலையை தரும், வெளிநாடு வெளியூர் சார்ந்த பயணங்களில் மிகுந்த எச்சரிக்கை தேவை, பொது நலம் சார்ந்த சேவைகளை செய்வது தங்களுக்கு நன்மைகளை தரும், கூட்டு தொழில் செய்யும் அன்பர்கள் சற்று கவனமுடன் செயலாற்றுவது நல்லது, வீண் விவாதம் மற்றும் சச்சரவுகள் வர அதிக வாய்ப்பு உள்ளது, தங்களின் உடல் நலனில் அதிக அக்கறையும், மன நலனில் இருமடங்கு அதிக அக்கறையும் கொள்வது நலம் தரும், தங்களுக்கு உகந்தது அல்ல எனும் விஷயங்களில் தாங்கள் தலையீடு செய்யாமல் இருப்பதே சாலசிறந்தது.

 குரு பகவான் தனது 5ம் பார்வையை லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகத்தை வசீகரிப்பது, மீன லக்கின அன்பர்களுக்கு, அளவில்லா அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் சுய தொழில் செய்யும் அன்பர்களுக்கு எதிர்பாராத லாபங்களும், தொழில் முன்னேற்றங்களும் வந்து சேரும், கௌரவம் குறையாத யோக வாழ்க்கை நிச்சயம் உண்டு, தன சேர்க்கை அளவில்லாமல் வரும் யோகமுண்டு, புதிய தொழில் முயற்ச்சிகள், நல்ல வேலை வாய்ப்புகள் தங்களின் வாழ்க்கையில் சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும், எதிர்ப்புகள் அனைத்தும் விலகும், வெற்றி வாய்ப்புகள் தங்களை தேடி வரும், அரசு கெளரவம், புகழ், பதவி உயர்வு, சிறந்த நிர்வாக திறமை, புதிய சொத்துகள் வண்டி வாகனங்கள், சுப விசேஷங்கள் என இந்த குரு மாற்றம் தங்களின் வாழ்க்கையில் எதிர்பாராத வெற்றிகளை வாரி குவிக்கும், தன்னம்பிக்கையும், மனோ தைரியமும் தங்களின் வாழ்க்கையில் எதிர்பாராத வருமான வாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை வாரி வழங்கும், புதிய சிந்தனை, புதிய யுக்திகள் தங்களின் வாழ்க்கை முன்னேற்றத்தை பெரிய அளவில் விருத்தியடைய செய்யும் என்பதில் மாற்று கருத்து இல்லை, எதிர்பாராத இடத்தில் இருந்து வரும் உதவிகள் தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய ஜீவன முன்னேற்றத்தை வாரி வழங்கும், செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பான வரவேற்ப்பும், வெற்றிகளும் தங்களின் வாழ்க்கையில் புதுவித உற்சாகத்தை வாரி வழங்கும், ஜீவன ரீதியான வெற்றிகளை இந்த குரு மாற்றம் தங்களுக்கு தவறாமல் வாரி வழங்கும் என்பது கவனிக்க தக்க அம்சமாகும்.

குரு பகவான் தனது 7ம் பார்வையை லக்கினம் எனும் 1ம் பாவகத்தை வசீகரிப்பது, மீன லக்கின அன்பர்களுக்கு, உடல் மனம் சார்ந்த இன்னல்களை அதிகரிக்கும், தங்களுக்கு வரும் நல்ல வாய்ப்புகளை தாங்களே தவிர்க்கும் சூழ்நிலையை தரும், உடல் உபாதைகள் உள்ளவர்கள் சற்று சிரமங்களை அதிக அளவில் எதிர்கொள்ளும் நிலையை தரும், சிந்திக்கும் திறனும், சரியானதை தேர்வு செய்யும் திறனும் தங்களுக்கு வெகுவாக குறையும், பொது வாழ்க்கையில் உள்ள அன்பர்களுக்கு இது ஒரு சோதனை காலம் எனலாம், மற்றவர்கள் விஷயங்களில் தலையீடு செய்யும் பொழுது தங்களின் வாழ்க்கை வெகுவாக பாதிக்கும், தாமதமாக செயல்படும் காரியங்களில் நிச்சயம் வெற்றி கிட்ட வாய்ப்பு இல்லை, எதிர்பாராத இன்னல்களை தாங்கள் சிறப்பாக கையாளவில்லை எனில் பெரிய பொருள் இழப்புகளும், மன நிம்மதியும் வெகுவாக கெடும், ஆன்மீக வழிபாடும், பெரியோர் ஆசியும் தங்களின் வாழ்க்கையில் சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும், முடிந்த அளவு பெரியோர்களுக்கு தான தர்மங்களை செய்து நலம் பெறவும்.

குரு பகவான் தனது 9ம் பார்வையை வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்தை வசீகரிப்பது, மீன லக்கின அன்பர்களுக்கு, வியாபர விருத்தியை வாரி வழங்கும், கமிஷன்,தரகு, இடம்,நிலம், வீடு வாங்குவது விற்பது போன்ற தொழில்களை செய்துகொண்டு இருக்கும் அன்பர்களுக்கு இந்த குரு மாற்றம் அளவில்லா வெற்றிகளை வாரி வழங்கும், வண்டி வாகன துறையில் உள்ள அன்பர்களுக்கும், பங்கு வர்த்த தொழில் செய்துகொண்டு இருக்கும் அன்பர்களுக்கும் சிறப்பான வருமான வாய்ப்புகள் வரும், அந்நிய மொழி பேசும் அன்பர்கள் மற்றும் வேற்று மதத்தினர் மூலம் அளவில்லா லாபங்கள் உண்டாகும், வெளியூர் பயன்கள் மூலம் சிறப்பான தொழில் முன்னேற்றத்தை பெறலாம், பல இடங்களுக்கு சென்று தொழில் சார்ந்த அறிவு திறனை பெற்று மிகப்பெரிய தன சேர்க்கையை பெறுவதற்கு உண்டான திட்டமிடுதல்களை தாங்கள் மேற்கொள்வீர்கள், தங்களின் எதிரிகள் மூலம் லாபம் பெரும் யோகம் உண்டாகும், செய்யும் காரியங்களில் எதிர்பாராத நன்மைகளையும், லாபங்களையும் பெறுவீர்கள், தங்களின் வீரியம் மிக்க செயல்பாடுகள் தங்களின் முன்னேற்றத்தை முழு சதவிகிதத்தில் உறுதிபடுத்தும், வட்டி தொழில், ஜோதிடம், ஆசியர், எழுத்தாளர்கள், கலை துறை அன்பர்கள், விவாசாயம் சார்ந்த தொழில் புரிவோருக்கு இந்த குரு மாற்றம் அளவில்லா நன்மைகளையும் யோகங்களையும் வாரி வழங்கும்.

குறிப்பு :

மீன லக்கின அன்பர்களுக்கு  தற்போழுது நடைபெறும் திசாபுத்திகள் 7,11,1,3ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், தற்போழுது நடைபெறும் திசா புத்திகள் மேற்கண்ட பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில், குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மையையும் தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க, மேலும் குரு பெயர்ச்சி பலனை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ள, சுய ஜாதகத்துடன் நேரில் ஆலோசனை பெற்று கொள்வதே சாலச்சிறந்தது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 29 செப்டம்பர், 2016

குரு பெயர்ச்சி வழங்கும் யோக வாழ்க்கை - கும்ப லக்கினம் !


திருக்கணித பஞ்சாங்க முறைபடி வரும் 11.08.2016 வியாழன் அன்று இரவு 9.35 மணிக்கு சிம்ம இராசியில் இருக்கும் குரு பகவான், கன்னி இராசிக்கு செல்கிறார், இனிவரும் ஒரு வருடம் கன்னி ராசியில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி இனிவரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே! லக்கினம் என்பதே ஒருவரின் ஜாதகத்தை இயக்குவதில் 100% விகித பங்கை வகிக்கிறது என்பதால் ஒருவரின் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும், தற்போழுது நடைபெறும் திசாபுத்தி ஏற்று நடத்ததும் பாவகங்களுக்கு, குரு பகவான் தரும் கோள் சாரா பலன்களை அடிப்படையாக கொண்டும், ஜாதக பலன்களை நிர்ணயம் செய்யும் பொழுது சம்பந்த பட்ட ஜாதகருக்கு நடைபெறும் யோக அவயோக பலன்களை பற்றி தெளிவாக உணர இயலும், அதன் அடிப்படையில் தற்போழுது பெயர்ச்சி பெற்றுள்ள குரு பகவான் "கும்ப" லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!                     

கும்ப லக்கினம் :

8ல் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் கும்ப லக்கின அன்பர்களுக்கு இனிவரும் ஒருவருட காலம் வழங்கு பலாபலன்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே, ஆயுள் பாவகமான 8ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் கும்ப இலக்கின அன்பர்களுக்கு உடல் ரீதியான சிறு சிறு தொந்தரவுகளை தரகூடும், பொருளாதார சிக்கல்களை வழங்கவும் வாய்ப்பு உள்ளது, அவசரகதியில் செய்யும் காரியங்கள் யாவும் மிகுந்த இன்னல்களை தங்களுக்கு வழங்கும் நிலை இருப்பதால், பொறுமையை கடைபிடிப்பது சகல நலன்களையும் தரும், மேலும் மருத்துவ செலவினங்களை தவிர்க்க வாய்ப்பு இல்லை எனலாம், வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் வீண் செலவினங்களை தவிர்க்க இயலாது, எதிர்பார்ப்புகள் சற்று ஏமாற்றத்தை தரும், தன்னம்பிக்கை வெகுவாக குறையும், போராட்டம் அதிகரிக்கும், முரட்டு சுபாவும், பிடிவாத குணமும் தங்களின் வாழ்க்கையில் எதிர்பாராத இன்னல்களை வாரி வழங்கும், சுய கௌரவம் வெகுவாக பாதிக்கப்படும், குடும்பம் சார்ந்த பிரச்சனைகளை கவனமாக எதிர்கொண்டு நலம் பெறுவது அவசியமாகிறது, இல்லை எனில் தங்களின் வாழ்க்கை பாதையே மாறிவிட வாய்ப்பு அதிகம் மேலும் தேவையில்லாத எதிர்பாலின தொடர்புகள் தங்களின் அந்தஸ்து மற்றும்  கௌரவத்தை வெகுவாக பாதிக்கும் என்பதை கவனத்தில் கொள்வது தங்களுக்கு நல்லது, எதிர்பாராத விபத்துகளை தவிர்க்க பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வதும், பாதுகாப்பை உறுதி செய்தபின் வாகனத்தை இயக்குவதும் தங்களுக்கு மிகுந்த நன்மைகளை வழங்கும்.

குரு பகவான் தனது 5ம் பார்வையை விறைய ஸ்தானம் எனும் 12ம் பாவகத்தை வசீகரிப்பது, கும்ப லக்கின அன்பர்களுக்கு, ஜீவன வழியிலான மன நிம்மதி இழப்பை தரும், இதனால் வெகுவாக உடல் மற்றும் மன நலம் பாதிக்க வாய்ப்பு உண்டு, செய்யும் தொழிலில் மிகுந்த கவனமாக இருப்பது தங்களுக்கு வரும் வீண் விரையத்தை தவிர்க்க உதவும், பணிபுரியும் அன்பர்கள் தங்களின் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது சகல நன்மைகளையும் தரும், உயர் அதிகாரிகளிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்துகொள்வது சகல நன்மைகளையும் தரும், எதிர்பார்ப்புகள் நிறைவேற காலதாமதம் ஆக வாய்ப்பு உண்டு, பொறுமையை கடைபிடித்து நலம் பெருக, தங்களுக்கு வரும் உடல் உபாதைகளை உடனடியாக சிகிச்சை பெற்று நலம் பெறுவது அவசியமாகிறது, இல்லை எனில் மிகப்பெரிய பாதிப்பிற்கு தங்களை அழைத்து சென்று விடும், தாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பெரியோர் ஆலோசனையை பெற்று செய்வது சகல நலன்களையும் தரும், இல்லற வாழ்க்கையில் எதிர்ப்புகள் வர அதிக வாய்ப்பு உண்டு என்பதால், வாழ்க்கை துணையுடன் சுமுக போக்கையும், அன்பார்ந்த செயல்பாடுகளையும் தாங்கள் மேற்கொள்வது இல்லற வாழ்க்கையில் இனிமை சேர்க்கும், வெளிநாடுகளில் உள்ள அன்பர்கள் தங்களது பணியில் மிக கவனமுடன் இருப்பதும், வெளிநாடு சார்ந்த ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்யும் அன்பர்கள், பெரிய முதலீடுகளை செய்யாமல் இருப்பதும் தங்களுக்கு சகல நன்மைகளையும் மன நிம்மதியையும் வாரி வழங்கும், வீண் கற்பனை தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய இன்னல்களை வாரி வழங்கிவிடும் என்பதால், மிகுந்த விழிப்புணர்வுடன் தங்களுக்கு வரும் பிரச்சனைகளை எதிர்கொள்ள " ஜோதிடதீபம் " அறிவுறுத்துகிறது.

குரு பகவான் தனது 7ம் பார்வையை குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்தை வசீகரிப்பது, கும்ப லக்கின அன்பர்களுக்கு, வருமான வாய்ப்புகளை பாதிக்கும், இதனால் மன பயமும், மன அழுத்தமும் உருவாக வாய்ப்பு உண்டு என்பதை கவனத்தில் கொள்க, மற்றவர்களிடம் பேசும் பொழுது வாக்குவாதம் செய்வது தங்களின் மன நிம்மதியை வெகுவாக பாதிக்கும், தங்களுடன் பழகும் அன்பர்களிடம் பகைமை பாராட்டாமல் இருப்பதே தங்களுக்கு நலம் தரும், குடும்ப வாழ்க்கையில் வரும் இன்னல்களையும், பணம் சார்ந்த பிரச்சனைகளை தாங்களே தீர்வு காண்பது சிறப்பான நன்மைகளை தரும், மேலும் ஜாமீன் கையெழுத்து, பொருளாதார உதவி மற்றவர்களுக்கு செய்வது தங்களின் எதிர்கால வாழ்க்கையை வெகுவாக பாதிக்கும், எந்த ஒரு காரியத்திலும் வாக்கு சாதூர்யத்தை கடைபிடிப்பது தங்களின் முன்னேற்றத்தை உறுதி செய்யும், சுப விரயம் செய்ய வாய்ப்பு உண்டு என்பதால், வண்டி வாகனம், வீடு நிலம் வாங்க தங்களுக்கு இந்த குரு பெயர்ச்சி வழிவகுக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை, மேலும் புதிய ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும், வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி சேர்க்கும் யோகம் உண்டாகும்.

குரு பகவான் தனது 9ம் பார்வையை சுக ஸ்தானமான 4ம் பாவகத்தை வசீகரிப்பது, கும்ப லக்கின அன்பர்களுக்கு, சொகுசு வண்டி வாகன சேர்க்கையையும், புதிய சொத்து சுக சேர்க்கையையும் வாரி வழங்கும், இருப்பினும் அது சார்ந்த இன்னல்களும் வர வாய்ப்பு உண்டு, பெற்றோருடன் தாங்கள் அதிக அன்பு பாராட்டுவது தங்களின் ஜீவன மேன்மையையும், சுக போக யோகங்களையும் நல்கும், பயணங்கள் மூலம் எதிர்பாராத வருமானம் வர வாய்ப்பு உண்டாகும், வெளிநாடு வெளியூர் பயணம் மேற்கொள்ளும் யோகம் உண்டாகும், வியாபாரிகளுக்கு சிறப்பான வருமானங்கள் வந்து சேரும், வாக்கை தொழிலாக கொண்ட அன்பர்களுக்கு எதிர்பாராத லாபங்களும் முன்னேற்றமும் நிச்சயம் உண்டு என்பதால், தன சேர்க்கை மிகவும் அபரிவிதமாக அமையும், வண்டி வாகன தொழில் செய்யும் அன்பர்களுக்கு மிகுந்த முன்னேற்றத்தை வாரி வழங்கும், சரளமான பண வசதி வாய்ப்புகள் உண்டாகும், செல்லும் இடங்களில் எல்லாம் நல்ல வரவேற்ப்பையும், சிறப்பான அறிமுகத்தையும் வாரி வழங்கும், உறவுகள் சார்ந்த உதவிகள் தங்களை தேடி வரும், பொருளாதாரம் சார்ந்த முன்னேற்றத்திற்கு தங்களின் சரியான திட்டமிடுதல்கள் சிறப்பான வளர்ச்சியினை தரும், சேமிக்கும் வல்லமையை தாங்கள் இனிவரும் காலங்களில் மேற்கொள்வது நல்லது, இல்லை எனில் எதிர்பார்ப்புகள் அனைத்தும் வீண் கனவாக மாறிவிட வாய்ப்பு உள்ளது.

குறிப்பு :

கும்ப லக்கின அன்பர்களுக்கு  தற்போழுது நடைபெறும் திசாபுத்திகள் 8,12,2,4ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், தற்போழுது நடைபெறும் திசா புத்திகள் மேற்கண்ட பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில், குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மையையும் தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க, மேலும் குரு பெயர்ச்சி பலனை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ள, சுய ஜாதகத்துடன் நேரில் ஆலோசனை பெற்று கொள்வதே சாலச்சிறந்தது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

புதன், 28 செப்டம்பர், 2016

குரு பெயர்ச்சி வழங்கும் யோக வாழ்க்கை - மகர லக்கினம் !




திருக்கணித பஞ்சாங்க முறைபடி வரும் 11.08.2016 வியாழன் அன்று இரவு 9.35 மணிக்கு சிம்ம இராசியில் இருக்கும் குரு பகவான், கன்னி இராசிக்கு செல்கிறார், இனிவரும் ஒரு வருடம் கன்னி ராசியில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி இனிவரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே! லக்கினம் என்பதே ஒருவரின் ஜாதகத்தை இயக்குவதில் 100% விகித பங்கை வகிக்கிறது என்பதால் ஒருவரின் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும், தற்போழுது நடைபெறும் திசாபுத்தி ஏற்று நடத்ததும் பாவகங்களுக்கு, குரு பகவான் தரும் கோள் சாரா பலன்களை அடிப்படையாக கொண்டும், ஜாதக பலன்களை நிர்ணயம் செய்யும் பொழுது சம்பந்த பட்ட ஜாதகருக்கு நடைபெறும் யோக அவயோக பலன்களை பற்றி தெளிவாக உணர இயலும், அதன் அடிப்படையில் தற்போழுது பெயர்ச்சி பெற்றுள்ள குரு பகவான் "மகர" லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!                    

மகர லக்கினம் :

9ல் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் மகர லக்கின அன்பர்களுக்கு இனிவரும் ஒருவருட காலம் வழங்கு பலாபலன்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே, பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் மகர இலக்கின அன்பர்களுக்கு இனி வரும் ஒரு வருட காலம் பாக்கிய ஸ்தான வழியில் மிகுந்த யோகங்களை வாரி வழங்குவது உறுதியாகிறது, உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்பு சார்ந்த விஷயங்களை மேற்கொள்ளும் அன்பர்களுக்கு தட்டாமல் வெற்றிகளை வாரி வழங்கும், பெரிய மனிதர்கள் மற்றும் ஆன்மீக பெரியோர்களின் ஆசியும், உதவியும் சரளமாக கிடைக்க பெரும் யோக காலமாக இந்த குரு பெயர்ச்சி அமையும், பயணங்கள் மூலம் அதிக லாபம் உண்டாகும், இதுவரை தடைபெற்ற நற்காரியங்கள் யாவும் சிறப்பாக நடைபெறும், திருமணம், புதிய வீடு வாகனம் போன்றவை வாங்கும் யோகம் உண்டாகும், அறிவு சார்ந்த முயற்ச்சிகள் யாவும் தங்கு தடையின்றி நிறைவேறும், சகல யோகங்களையும் பெறுவதற்கு உண்டான வாய்ப்புகள் தங்களுக்கு விரைவாக வந்து சேரும், பல புண்ணிய திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகமும், அதனால் ஐஸ்வர்யமும் நிறைவாக கிடைக்க பெரும் வாய்ப்பு உண்டாகும், தங்களது வார்த்தைகளுக்கு இனிவரும் காலங்களில் அனைவரும் செவி சாய்ப்பார், மற்றவர்களை தங்களது கட்டுபாட்டில் வைத்திருக்கும் வல்லமை உண்டாகும், சிறந்த நிர்வாக திறமையின் காரணமாக இனிவரும் காலங்களில் தங்களின் தொழில் அபரிவிதமான வெற்றிகளை குவிக்கும், தாங்கள் பணியாற்றும் இடத்தில் பதவி உயர்வுகள் தேடி வரும், சுய ஜாதகத்தில் புதன் கோண அதிபதியாக இருப்பின் மேற்கண்ட பலாபலன்கள் 100 சதவிகிதம் நடைமுறைக்கு வரும் என்பதில் சந்தேகம் இல்லை, மேலும் இதுவரை வாழ்க்கையில் போராட்டங்களை சந்தித்து கொண்டு இருந்த அன்பர்களுக்கு, இனிவரும் காலம் மிகுந்த யோகபலன்களை வாரி வழங்கும் என்பது உறுதி.

 குரு பகவான் தனது 5ம் பார்வையை லக்கினம் எனும் 1ம் பாவகத்தை வசீகரிப்பது, மகர லக்கின அன்பர்களுக்கு, புகழ் மிக்க யோக வாழ்க்கையை நல்கும், இருப்பினும் உடல் சார்ந்த தொந்தரவுகள் வர வாய்ப்பு உள்ளது, பொது வாழ்க்கையில் உள்ள அன்பர்களுக்கு சிறப்பான நன்மைகள் உண்டாகும், சுய தொழில் செய்யும் அன்பர்களுக்கு நல்ல விருத்தியும், அதிக லாபங்களும் வந்து சேரும், ஜீவன ரீதியான முன்னேற்றம் என்பது எதிர்பாராத வகையில் இருக்கும் என்பது கவனிக்க தக்க அம்சமாகும், கல்வி துறை மற்றும் மருத்துவ துறையில் உள்ள அன்பர்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை வாரி வழங்கும், தன்னம்பிக்கை அதிகரிக்கும், புதிய ஆராய்ச்சி மற்றும் முயற்ச்சிகள் தங்களுக்கு மிகுந்த நன்மைகளையும் லாபங்களையும் வாரி வழங்கும், அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் உள்ள அன்பர்களுக்கு பதவி உயர்வு, அதிகார பதவிகளை அலங்கரிக்கும் யோகம் உண்டாகும், வெளிநாடு செல்லும் யோகம் அல்லது வெளிநாடுகளில் இருந்து வரும் லாபம் தங்களின் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றங்களை வாரி வழங்கும், வீட்டில் தடைபெற்ற சுப காரியங்கள் தங்களின் எண்ணப்படி இனிதே நடைபெறும், குறிப்பாக தங்களின் வாழ்க்கையில் லட்சியங்கள் அனைத்தும் நிறைவேறும் யோக காலமாக இந்த குரு பெயர்ச்சி அமையும்.

குரு பகவான் தனது 7ம் பார்வையை வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்தை வசீகரிப்பது, மகர லக்கின அன்பர்களுக்கு அளவில்லா செல்வ வளங்களை வாரி வழங்கும், எடுக்கும் முயற்ச்சிகள் யாவும் வெற்றி பெரும், போட்டி, பந்தையம், வழக்குகளில் வெற்றி கிட்டும், நிம்மதியான மன நிலை, போதும் என்ற மனம், திருப்தியான வாழ்க்கை என தங்களின் வாழ்க்கையில் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும், சகோதர வழி ஆதரவு தங்களுக்கு நல்ல மன தைரியத்தை வழங்கும், இல்லற வாழ்க்கையில் நல்ல மகிழ்ச்சி கிட்டும், குடும்பத்தில் உள்ளோர் ஆதரவும், அரவணைப்பும் தங்களுக்கு புதிய உலகத்தில் பிரகாசிக்க செய்யும், வியாபர விருத்தி என்பது தாங்கள் எதிர்பாராத வண்ணம் மிக பெரிய அளவில் அமையும், அதிர்ஷ்டம் மற்றும் திறமைகளின் தாக்கத்தை இனிவரும் காலங்களில் தாங்கள் சிறப்பாக உணரலாம், சுய மரியாதை கௌரவம், அந்தஸ்து ஆகியவை தங்களை தேடிவரும், எதிர்பாராத உதவிகள் தங்களின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியத்தையும் வாரி வழங்கும், குறிப்பாக ஏஜென்சி துறை, கமிஷன் வியாபரம், தரகு தொழில், வட்டி தொழில் ஆகியவற்றில் உள்ள அன்பர்கள் இனிவரும் காலங்களில் நல்ல முன்னேற்றத்தையும், கை நிறைவான வருமான வாய்ப்புகளையும் தங்கு தடையின்றி சரளமாக பெறுவார்கள் என்பது கவனிக்க தக்க விஷயமாகும், இந்த குரு பெயர்ச்சி தங்களுக்கு வெற்றி மேல் வெற்றியை வாரி வழங்கும்.

குரு பகவான் தனது 9ம் பார்வையை பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்தை வசீகரிப்பது, மகர லக்கின அன்பர்களுக்கு, பூர்வ புண்ணிய ஸ்தான அமைப்பில் இருந்து சிறப்பான நன்மைகள் நடைமுறைக்கு வரும் வாய்ப்பினை தரும், புத்திர பாக்கியமற்ற தம்பதியருக்கு நல்ல வாரிசு அமையும், குல தெய்வத்தின் ஆசியின் மூலம் வாழ்க்கையில் பல வியக்க தக்க அதிசயங்கள் நடைபெறும், சுய அறிவு திறனும், புத்திசாலி தனமும் தங்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு பேருதவியாக அமையும், கல்வி கேள்விகளிலும், கலைத்துறையிலும் பிரகாசிக்கும் வல்லமையை தரும், கலைத்துறையில் உள்ள அன்பர்களுக்கு யோகம் மிகுந்த வாழ்க்கையையும், லாபங்களையும் வாரி வழங்கும், புதிய முயற்ச்சிகள் மூலம் வெளி உலக பிரபல்யம் கிட்டும், எதிர்பாராத அதிர்ஷ்டத்தின் மூலம் வாழ்க்கையில் வெற்றி படிக்கட்டுகளில் ஸ்திரமாக நின்று அதிர்ஷ்டத்தின் முழு பலனையும் அனுபவிக்கும் யோகத்தை தரும், குறிப்பாக தங்களை ஏளனமாக பார்த்த அனைவருக்கும் சரியான விளக்கத்தை தங்களின் வளர்ச்சி வழங்கும், வருமானம் என்பது தன்னிறைவாக அமையும், எதிர்பாராத சொத்து சுக சேர்க்கை, வண்டி வாகன வசதி, புதிய வீடு என்ற வகையில் தங்களுக்கு தங்கு தடையின்றி வந்து சேரும், தங்களின் பல வருட உழைப்பிற்கு உண்டான பலாபலன்களை இனிவரும் ஒருவருட காலத்தில் முழு வீச்சில் அனுபவிக்கலாம், நினைத்ததை சாதிக்கும் வல்லமையும், சகல முயற்ச்சிகளில் முழு வெற்றியையும் தங்களின் குல தெய்வத்தின் அருளால் தங்கு தடையின்றி பெரும் யோகத்தை தரும், மேலும் திருமண தடை, புத்திர பாக்கிய தடை, தொழில் முன்னேற்றம் இன்மை, வருமான பற்றாகுறை அனைத்தும் நீங்கி தங்களின் வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும்.

குறிப்பு :

மகர லக்கின அன்பர்களுக்கு  தற்போழுது நடைபெறும் திசாபுத்திகள் 9,1,3,5ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், தற்போழுது நடைபெறும் திசா புத்திகள் மேற்கண்ட பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில், குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மையையும் தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க, மேலும் குரு பெயர்ச்சி பலனை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ள, சுய ஜாதகத்துடன் நேரில் ஆலோசனை பெற்று கொள்வதே சாலச்சிறந்தது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 27 செப்டம்பர், 2016

குரு பெயர்ச்சி வழங்கும் யோக வாழ்க்கை - தனுசு லக்கினம் !


திருக்கணித பஞ்சாங்க முறைபடி வரும் 11.08.2016 வியாழன் அன்று இரவு 9.35 மணிக்கு சிம்ம இராசியில் இருக்கும் குரு பகவான், கன்னி இராசிக்கு செல்கிறார், இனிவரும் ஒரு வருடம் கன்னி ராசியில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி இனிவரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே! லக்கினம் என்பதே ஒருவரின் ஜாதகத்தை இயக்குவதில் 100% விகித பங்கை வகிக்கிறது என்பதால் ஒருவரின் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும், தற்போழுது நடைபெறும் திசாபுத்தி ஏற்று நடத்ததும் பாவகங்களுக்கு, குரு பகவான் தரும் கோள் சாரா பலன்களை அடிப்படையாக கொண்டும், ஜாதக பலன்களை நிர்ணயம் செய்யும் பொழுது சம்பந்த பட்ட ஜாதகருக்கு நடைபெறும் யோக அவயோக பலன்களை பற்றி தெளிவாக உணர இயலும், அதன் அடிப்படையில் தற்போழுது பெயர்ச்சி பெற்றுள்ள குரு பகவான் "தனுசு" லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!                      

தனுசு லக்கினம் :

10ல் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் தனுசு லக்கின அன்பர்களுக்கு இனிவரும் ஒருவருட காலம் வழங்கு பலாபலன்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே, தனசு லக்கினத்திற்கு அதிபதியான குரு பகவான் ஜீவன ஸ்தானமான 10 ம் இடத்தில் சஞ்சாரம் செய்வது தனுசு இலக்கின அன்பர்களுக்கு உகந்தது அல்ல என்றே சொல்லலாம், ஜீவன ரீதியான இன்னல்களை அதிக அளவில் தரக்கூடும், மேலும் கௌரவம் சுய மரியாதை, பதவி ஆகியவற்றிற்கு இன்னல்கள் வர அதிக வாய்ப்புள்ளது, அடிமை தொழில் செய்யும் தனுசு இலக்கின அன்பர்கள் இனிவரும் காலங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது, பணிபுரியும் இடத்தில் இருந்து அதிக தொல்லைகள் வர வாய்ப்பு உண்டு, எதிர்பால் அமைப்பினரிடம் அதிக கவனமாக இருப்பது சகல நலன்களையும் தரும், இல்லை எனில் வீண் அவபெயரும் துன்பமும் உண்டாகும், மேல் அதிகாரிகளிடம் சுமுக போக்கை கடைபிடிப்பது தங்களின் ஜீவன வாழ்க்கையில் மேன்மையை தரும், வாக்குவாதத்தை தவிர்ப்பது தங்களின் முன்னேற்றத்தை உறுதி படுத்தும், மேலும் உடல் நலம் சார்ந்த தொந்தரவுகள் இருப்பின் உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது தங்களுக்கு மிகுந்த நன்மைகளை தரும், வீண் விரையத்தை தவிர்க்க உதவும், தொழில் செய்யும் அன்பர்கள் புதிய முயற்ச்சிகளை மேற்கொள்வது மிகுந்த இன்னல்களை தர கூடும், செய்யும் தொழிலில் எவ்வித தடைகளும் ஏற்ப்படாமல் சிறந்த நிர்வாகத்தை மேற்கொள்வது தங்களின் தொழில் ரீதியான வெற்றிகளை உறுதிபடுத்தும், பெரிய அளவிலான முதலீடுகளை தவிர்ப்பது சகல நலன்களையும் தரும், கடன் பெற்று செய்யும் தொழில்கள் அல்லது காரியங்கள் தங்களுக்கு மிகப்பெரிய இன்னல்களை தரக்கூடும் என்பதால் மிகுந்த கவனத்துடன் தொழில் அல்லது ஜீவனத்தை மேற்கொள்வது தனுசு இலக்கின அன்பர்களுக்கு மிகுந்த பாதுகாப்பை தரும்.

குரு பகவான் தனது 5ம் பார்வையை குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்தை வசீகரிப்பது, தனுசு லக்கின அன்பர்களுக்கு, வருமான ரீதியான பிரச்சனைகளையும், குடும்ப வாழ்க்கையில் இன்னல்களையும் தரக்கூடும், தங்களின் கட்டுப்பாடு அற்ற வார்த்தைகள் தங்களின் மன நிம்மதியை கேள்விக்குறியாக்கும், வரவுக்கு மீறிய செலவினங்கள் தங்களின் கடன் சுமையை அதிகரிக்கும், தேவையற்ற செலவுகளை தவிர்ப்பதே தங்களுக்கு தனசு இலக்கின அன்பர்களுக்கு  நன்மைகளை தரும், வாழ்க்கை துணையுடன் உண்டான பிரச்சனைகளை சுமுகமாக பேசி தீர்வு காண்பதும், முடிந்த அளவு எதிர்வாதம் புரியாமல் இருப்பதும் தங்களின் இல்லறவழ்க்கையை இனிமையாக நடத்த வழிவகுக்கும், மேலும் இதுவரை இருந்த வருமானத்தை விட அதிகபடியான வருமான வாய்ப்புகளை தாங்கள் தேடிகொள்வது மிகுந்த நன்மையை தரும், பெரும்பாலும் தங்களின் வாக்கின் வழியில் இருந்தே இன்னல்கள் வர கூடும் என்பதால், எவரிடம் பேசினாலும் வார்த்தைகளில் கவனம் கொள்வது தங்களுக்கு மிகுந்த நன்மையை தரும்.

குரு பகவான் தனது 7ம் பார்வையை சுக ஸ்தானமான 4ம் பாவகத்தை வசீகரிப்பது, தனுசு லக்கின அன்பர்களுக்கு இடம் வீடு வண்டி வாகனம் சார்ந்த சிறு விரையங்களை அல்லது சுப  விரையங்களை ஏற்படுத்த கூடும், மேலும் புதிய சொத்துகளை வாங்கும் பொழுதும் வண்டி வாகனங்களை வாங்கும் பொழுது மிகுந்த எச்சரிக்கையுடன் கையாள்வது நலம் தரும் ஏமாற்றங்களை தவிர்க்க உதவும், தாயார் உடல் நிலையில் அதிக அக்கறை கொள்வது நலம் தரும், தேவைகளை வெகுவாக குறைத்துகொல்வதும், ஆடம்பர விஷயங்களை தவிர்த்து விடுவதும் தங்களுக்கு மிகுந்த யோகத்தை தரும், முடிந்த அளவு கோவில் வழிபடு ஆன்மீக ஈடுபாடு தங்களின் இன்னல்களை களைய வழிவகுக்கும், கையில் உள்ள சொத்துகளை விற்று பணம் சேர்க்க உகந்த காலமாக இந்த குரு பெயர்ச்சி அமையக்கூடும், பொது வாழ்க்கையில் உள்ள அன்பர்கள் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டிய காலம் இது இல்லை எனில் வீண் அவபெயரும், பதவியில் சிக்கல்களும் ஏற்பட கூடும், அதிக அளவில் மன உறுதியுடன் செயல்படுவது எதிர்கால வாழ்க்கையில் தங்களின் முன்னேற்றத்தை அதிகரிக்கும், பொது காரியங்களில் அல்லது மற்றவர் விஷயங்களில் ஆர்வம் செலுத்துவதை தவிர்ப்பது நலம் தரும் மேலும், சுய முன்னேற்றத்திலும் உடல் ஆரோக்கியத்திலும்  மிகுந்த அக்கறையுடன் இருப்பதும், குடும்பத்தில் உள்ள நபர்களை அனுசரித்து செல்வதும் தங்களின் வாழ்க்கையில் சகல நலன்களையும் வாரி வழங்கும்.

குரு பகவான் தனது 9ம் பார்வையை சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்தை வசீகரிப்பது, தனசு லக்கின அன்பர்களுக்கு, சிரசு சார்ந்த இன்னல்களை தர கூடும், மேலும் உடல் ரீதியான தொந்தரவுகளும் இன்னல்களும் அதிகரிக்கும், அக உறுப்புகள் சார்ந்த கோளாறுகள் தங்களுக்கு சிறு சிறு இன்னல்களை தரக்கூடும், கடன் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கை உடன் இருப்பது நலம் தரும், எதிர்பார்ப்புகள் சில நேரங்களில் நடைபெறாமல் போக வாய்ப்பு உண்டு, மன பயமும் மன கிலேசமும் தங்களின் முன்னேற்றத்தை பாதிக்க கூடும், இருப்பினும் தன வரவு சரளமாக இருக்கும், மற்றவர்கள் செல்வம் தங்களின் கட்டுப்பாட்டில் வரும் என்பதால் கவனமாக கையாள்வது தங்களின் பெயருக்கு புகழ் சேர்க்கும், மறை பொருள் வழியில் இருந்து வருமானம் உண்டாகும், வட்டி தொழில் அல்லது கமிஷன் வியாபாரத்தில் உள்ள அன்பர்களுக்கு அளவில்லா செல்வ சேர்க்கை உண்டாகும், பொது மக்களிடம் அதிக நம்பிக்கையும் ஆதரவும் எதிர்பாராமல் கிடைக்கக் பெறுவீர்கள், போட்டி பந்தையம், தேர்தலில் பிரகாசமான வெற்றி வாய்ப்பும், சிறப்பான எதிர்காலமும் உண்டாகும்.

குறிப்பு :

தனுசு லக்கின அன்பர்களுக்கு  தற்போழுது நடைபெறும் திசாபுத்திகள் 10,2,4,6ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், தற்போழுது நடைபெறும் திசா புத்திகள் மேற்கண்ட பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில், குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மையையும் தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க, மேலும் குரு பெயர்ச்சி பலனை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ள, சுய ஜாதகத்துடன் நேரில் ஆலோசனை பெற்று கொள்வதே சாலச்சிறந்தது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696