கூட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கூட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 21 ஜூலை, 2016

தொழில் தேர்வு, ஜீவன ஸ்தான வலிமை, நடைபெறும் திசை வழங்கும் பலாபலன்கள் !


" உத்தியோகம் புருஷ லட்சணம் " ஒரே வாக்கியத்தில் ரத்தினைசுருக்கமாக ஓர் ஆண் மகனுக்கு ஜீவனத்தின் அவசியத்தை முன்னோர்கள் தெளிவாக உணர்த்திவிட்டனர், சரியான இளம் வயதில் தாம் விரும்பிய தொழிலை தேர்வு செய்து, ஆர்வமுடனும் முழு அர்ப்பணிப்பையும்  தமது சுய உழைப்புடன் விதைத்தால், அதன் பலனானது மிகப்பெரிய விருச்சமாக நம்மையும் காத்தருளும், தம்மை நாடி வருவோரையும் காத்தருளும், கடனுக்காக பணியாற்றும் தன்மையானது தொழில் விருத்தியையும், அடிப்படை முன்னேற்றத்தையும் வெகுவாக பாதிக்கும், இன்றைய சூழ்நிலையில் தமக்கு உகந்த தொழிலை தேர்வு செய்து வெற்றிகரமாக நடத்தும் யோகம் எத்தனை அன்பர்களுக்கு வாய்க்கிறது என்பதை சிந்தனைக்கு எடுத்துக்கொண்டால் மிக மிக குறைவான சதவிகித அளவிலேயே உள்ளது தெளிவாக தெரிய வரும்.

 சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் மற்றும் அதற்க்கு உதவி செய்யும் சில பாவகங்களின் தன்மை ஆகியவை வைத்தே ஒருவரின் தொழில் முன்னேற்றம் நிர்ணயம் செய்யப்படுகிறது, சுய ஜாதகங்களில் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று இருப்பது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு, நல்ல தொழில் வெற்றிகளை வழங்குவதில் தவறுவது இல்லை, ஜீவன ஸ்தானம் வலிமை அற்ற நிலையில் உள்ள அன்பர்களுக்கு நல்ல தொழில் அல்லது ஜாதகருக்கு உகந்த தொழில் அமைவது குதிரை கொம்பாகவே உள்ளது, ஒருவரின் சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எவ்வித வலிமை பெற்று இருக்கின்றது என்பதில் தெளிவு பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில், தமக்கு உகந்த தொழில் வாய்ப்பினை பெறுவதற்கு துல்லியமாக வழிகாட்டும், மேலும் ஜீவன வழியில் இருந்து யோக பலன்களை பரிபூர்ணமாக பெறுவதற்கு உண்டான வழிமுறைகளை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு இந்த பதிவில் ஆய்வு செய்வோம் அன்பர்களே !



லக்கினம் : ரிஷபம் 
ராசி : மகரம் 
நட்ஷத்திரம் : திருவோணம் 4ம் பாதம் 

ஒருவரின் சுய ஜாதகத்தில் லக்கினம் வலிமை பெறுவது ஜாதகர், தன் உடல் உயிர், வளரும் சூழ்நிலை, சுய அறிவு திறன், தனிப்பட்ட திறமைகள், திட்டமிடுதல்கள், திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வல்லமை என ஜாதகரை சிறப்பாக இயக்கும், மேற்கண்ட ஜாதகத்தில் ஜாதகருக்கு லக்கினம் எனும் முதல் வீடு சம்பந்தம் பெறுவது ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகத்துடன், எனவே ஜாதகர் இயற்கையாகவே சுய தொழில் செய்து அதில் நிச்சய வெற்றியை பெறுவார் என்பது தெளிவாகிறது, லக்கினம் வலிமை பெறுவது ஜாதகரை மற்ற பாவக வழியில் இருந்து வரும் யோகங்களை அனுபவிக்கும் வல்லமையை பெற்று தரும், மேலும் ஜாதகரின் எண்ணங்கள் யாவும் நடைமுறைக்கு வரும், மேலும் உடல்,மனம்,அறிவு ஆகியவற்றை எந்த சூழ்நிலையிலும் சிறப்பாக இயங்க வைக்கும், ஜாதகர் தொழில் செய்வதற்கெனவே படைக்கப்பட்டவர் என்பது லக்கினம் ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதில் இருந்தே தெளிவாக அறியலாம், லக்கினம் முதல் கேந்திரம்/கோணமாக அமையும்.

அடுத்து சுக ஸ்தானம் எனும் நான்காம் வீடு வலிமை பெறுவது ஜாதகர் தான் ஈட்டிய செல்வத்தை நுகரும் சக்தி கொண்டவரா? அற்றவரா? என்பதை மிக தெளிவாக அறிவித்துவிடும், மேலும் ஜாதகரின் குண நலன்கள், சொத்து சுக போகம், வண்டி வாகனம், வீடு நிலம் போன்றவற்றின் மூலம் ஜாதகர் பெரும் லாபம் மற்றும் நன்மைகளை தெளிவு படுத்தும், மேற்கண்ட ஜாதகருக்கு மாத்ரு ஸ்தானமான 4ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது, தனது உழைப்பின் மூலம் சொத்து,வீடு,வண்டி,வாகன யோகத்தை பெற தகுதியானவர் என்பதும், மேற்கண்ட விஷயங்களில் இருந்து தொழில் வாய்ப்பினை பெரும் யோகம் பெற்றவர் என்பதும் தெளிவாகிறது, சுய ஜாதகத்தில்  4ம் பாவகம் வலிமை பெறுவது சுக போக வாழ்க்கையையும், வீடு வண்டி வாகன யோகத்தையும் நல்கும், மேலும் ஜாதகரின் குண நலன்களும் மற்றவர்களுடன் ஜாதகர் பழகும் தன்மை நிலையை பற்றியும், தனது தாய் வழியில் இருந்து யோகங்களையும் வாரி வழங்கும், சுக ஸ்தானம் மூன்றாம் கேந்திரமாக அமையும்.

அடுத்து களத்திர ஸ்தானம் எனும் ஏழாம் வீடு வலிமை பெறுவது ஜாதகர் பொதுமக்களுடன் கொண்டுள்ள நல்லுறவையும், நண்பர்கள் மற்றும் தொழில் முறை கூட்டாளிகள் வழியில் இருந்து பெரும் ஆதரவு மற்றும் ஒத்துழைப்பையும் தெளிவுபடுத்தும், மேலும் ஜாதகர் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து பெரும் ஜீவன உதவிகளையும், வியாபார வழியில் இருந்து பெரும் முன்னேற்றங்களையும், வெளியூர் வெளிநாடுகளில் இருந்து பெரும் ஆதரவு, தொழில் விருத்தியையும் தெளிவு படுத்தும், வியாபாரத்தில் பொதுமக்கள் செல்வாக்கினை உறுதிப்படுத்தும், மேற்கண்ட ஜாதகருக்கு களத்திர ஸ்தானம் எனும் 7ம் வீடு தமது பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு வியாபாரம் மற்றும் மக்கள் செல்வாக்கு ஆகியவற்றை சிறப்பாக வழங்கும் என்பதும், தமது வாழ்க்கை துணை வழியில் இருந்தும், நண்பர்கள் வழியில் இருந்தும், தொழில் முறை கூட்டாளிகள் மற்றும் பொதுமக்கள் வழியில் இருந்தும் மிகுந்த யோகங்களை அனுபவிக்கும் வல்லமை பெற்றவர் என்பது தெளிவாகிறது, களத்திர ஸ்தான வலிமை ஜாதகருக்கு சமூகத்தில் நன்மதிப்பையும் சிறப்பான அறிமுகத்தையும், பெருமை மிக்க வரவேற்பையும் பெற்றுத்தரும், சுய ஜாதகத்தில் ஒருவருக்கு களத்திர ஸ்தானம் ஆறாம் கேந்திரமாக அமையும்.

அடுத்தது ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் வீடு வலிமை பெறுவது ஜாதகரின் தொழில் வல்லமையை வெளிப்படுத்தும், ஜாதகர் தனது தொழிலில் கொண்டுள்ள ஆர்வத்தையும் கடின உழைப்பையும் ஜீவன ஸ்தான வலிமை மூலம் உணரலாம், தொழில் ஞானம் என்பது ஜாதகருக்கு ஜீவன ஸ்தான வலிமையின் அடிப்படையிலேயே அமைகின்றது, தனது தொழில் பற்றிய விசாலமான பார்வை, அதன் வளர்ச்சி மீது ஜாதகர் கொண்டுள்ள அக்கறை மற்றும் திட்டமிடுதல்கள், போட்டியாளர்கள் மூலம் வரும் எதிர்ப்பை கிரகித்து வலிமையை வெளிப்படுத்தும் தன்மை, தொழில் மீது கொண்டுள்ள பற்று மற்றும்  நிலையான உண்மை தன்மை, பிரபல்யம் பெரும் யோகம், அபரிவிதமான விருத்தி என தாம் செய்யும் தொழில் வழியில் ஜாதகர் பெரும் முன்னேற்றத்தின் தன்மையை மிக தெளிவாக ஜீவன ஸ்தான வலிமையின் அடிப்படையில் புரிந்துகொள்ள இயலும், மேற்கண்ட ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் எனும் 10ம் வீடு தமது பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது, சிறப்பான தொழில் வெற்றிகளை வாரி வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை, மேலும் ஜீவன ஸ்தானம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு லாப ஸ்தானமாக அமைவதும், ஸ்திர காற்று தத்துவத்தில் நிற்பதும், ஜாதகரின் தொழில் விருத்தியை தமது அறிவு திறன் கொண்டு நிர்ணயம் செய்வார் என்பதும், அது பரிபூர்ணமாக ஜாதகருக்கு அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் என்பதும் வரவேற்கத்தக்கது, பொதுமக்கள் விரும்பும் ஆடை ஆபரணங்கள், உயர் ரக சொகுசு பொருட்கள், கேளிக்கை கருவிகள், வீட்டு உபயோக பொருட்கள், மூலம் ஜாதகர் தன்னிறைவான தொழில் முன்னேற்றத்தை பெறுவார் என்பது உறுதியாகிறது, சுய ஜாதகத்தில் ஒருவருக்கு ஜீவன ஸ்தானம் எட்டாம் கேந்திரமாக அமையும்.

ஜாதகர் 1ம் பாவக வழியில் இருந்து வட்டிதொழில், வாக்கின் வழியில் தொழில், நிலம் இடம் சார்ந்த தொழில் செய்யவும், 4ம் பாவக வழியில் இருந்து, வண்டிவாகனம், வீடு, மற்றும் வீட்டு உபகரண பொருட்கள் விற்பனை, உதிரி பாகங்கள் விற்பனை தொழில் செய்யவும், 7ம் பாவக வழியில் இருந்து ஏற்றுமதி இறக்குமதி, வெளியூர் வெளிநாடுகளில் இருந்து வரும் பொருட்கள் விற்பனை, பொழுது போக்கு அம்சங்கள் சார்ந்த தொழில்கள் செய்யவும், 10ம் பாவக வழியில் இருந்து தரகு தொழில், பங்கு வர்த்தகம், அறிவு சார்ந்த வர்த்தகங்கள், சந்தை முதலீடு, பெரிய அளவிலான நிறுவனங்களுடன் இணைந்து செயலாற்றும் தொழில்கள், மின்னணு, கணினி சார்ந்த தொழில்கள் செய்யவும் தகுதி பெற்றவர் ஆகிறார், மேற்கண்டவற்றில் ஜாதகரின் விருப்பமே தொழில் விருத்தியை  மிகவும் சிறப்பாக நிர்ணயம் செய்யும்.

சுய ஜாதகத்தில் ஜீவனத்தை வழங்கும் பெரும்பாலான பாவகங்கள் மிகவும் வலிமையுடன், இருப்பது ஜாதகருக்கு சிறப்பான தொழில் முன்னேற்றத்தை வாரி வழங்கும் என்ற போதிலும், நடைபெறும் திசை அல்லது எதிர்வரும் திசை தரும் பலாபலன்கள் ஜாதகரின் தொழில் வெற்றியை 100% விகிதம் நிர்ணயம் செய்யும், மேலும் சுய ஜாதகத்தில் பூர்வபுண்ணியம் எனும் 5ம் பாவகம் பாதிக்கப்படுமாயின் மேற்கண்ட யோக பலன்களை தனது பூர்விக்கத்தில் இருந்து பெறுவதற்கு பகிதரான முயற்சசிகளை மேற்கொண்டாலும் நடைமுறைக்கு வாராது, மேலும் தடைகளும் இடர்பாடுகளும் வெகுவாக அதிகரிக்கும், தொழில் செய்வதற்கு தடையாக யாராவது ஒருவர் காரணமாக இருந்துகொண்டே இருப்பார்கள், பூர்வீகத்தை விட்டு வெளியில் சென்று தொழில் துவங்குவது ஜாதகரின் ஜீவன முன்னேற்றத்தை சிறப்பாக அமைத்து தரும், தன்னிறைவான பொருளாதார முன்னேற்றத்தையும், கைநிறைவான லாபங்களை ஜாதகர் தொடர்ந்து பெரும் யோகத்தை தங்கு தடையின்றி வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 18 பிப்ரவரி, 2016

தொழில் ஸ்தான வலிமையின் அடிப்படையில், ஜாதகருக்கு உகந்த தொழில் அல்லது வேலையை தேர்வு செய்வது எப்படி ?


" உத்தியோகம் புருஷ லட்சனம் " இந்த முதுமொழிக்கு சரியான பாதையை வகுத்து தருவது சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் என்று அழைக்கப்படும் பத்தாம் பாவக வலிமையே, ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லாமல் கல்வி காலம் இனிதே நிறைவடைந்ததும், உடனடியாக அனைவரும் தேடுவது நல்ல வேலை வாய்ப்பினையே,  சிறந்த கல்வியை கற்று இருந்த போதிலும், தனிப்பட்ட திறமைகள் இருந்த போதிலும், அனைவருக்கும் சரியான வேலை அமைந்து விடுவதில்லை, சரியான தொழில் அமைந்து விடுவதில்லை, ஜாதகருக்கு தனிப்பட திறமைகளும், கல்வியில் நல்ல ஞானமும் இருந்த போதிலும் வேலை தொழில் என்று வரும் பொழுது சுய ஜாதகத்தில் உள்ள ஜீவன ஸ்தான வலிமையே ஜாதகரை இயக்குகிறது, சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று இருப்பது ஒவ்வொருவருக்கும் மிகுந்த நன்மைகளை வேலை மற்றும் தொழில் அமைப்புகளில் இருந்து நிச்சயம் தரும், சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தான வலிமையின் அடிப்படையிலான கல்வியை ஜாதகர் பெரும் பொழுது சம்பந்தபட்ட துறைகளில், அல்லது தொழிலில் பெரிய அளவில் பிரகாசிக்க செய்கிறது, தனக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத கல்வியை தேர்வு செய்து, அதன் பிறகு சரியான வேலை அமையவில்லை, தொழில் அமையவில்லை என்று அல்லலுறும் அன்பர்களின் எண்ணிக்கையே அதிகம்.

 மேலும் சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் எவ்வித கல்வி அறிவு இல்லாத போதிலும் தொழில் ரீதியாக சகல வெற்றிகளையும் பெறுவது எதார்த்தமான உண்மை நிலையாகும், எனவே சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது சம்பந்தபட்ட ஜாதகருக்கு தொழில் மற்றும் வேலை  வாய்ப்பில் சிறப்பான வெற்றிகளை வாரி வழங்கும், தன்னிறைவான ஜீவன மேன்மையை தரும், பல்வேறு தொழில்களில் பொருளாதார மேன்மை பெறுவதற்கு உண்டான வாய்ப்புகளை வாரி வழங்கும், ஜீவன ஸ்தான வலிமையை பற்றி உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வோம் அன்பர்களே!


ஜாதகருக்கு கும்ப லக்கினம், தனுசு ராசி, மூல நட்சத்திரம், ஜாதகருக்கு பூர்வ புண்ணியம் 200% விகிதம் பாதிப்படைவதால், சிறு வயதிலேயே தனது பூர்வீகத்தை விட்டு வெளியேறி வேறு இடத்தில் ஜீவிக்கும் சூழ்நிலையை தந்தது, 5ம் பாவகம் பாதிப்பது ஜாதகருக்கு அடிப்படை கல்வியிலேயே பாதிப்பை தந்து தொடர்ந்து கல்வி பெற இயலாத சூழ்நிலையை தந்தது, ஜாதகர் தனது  இளம் வயதிலேயே வேலைக்கு செல்லும் சூழ்நிலை உருவானது, ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகரின் தொழில் திறமையை அதிகரித்தது, குறுகிய காலத்தில் தொழில் அனுபவங்களை பெற்ற ஜாதகர் சுயமாக தனது 21வது வயதிலேயே சூரியன் திசையில் புதிய தொழில் துவங்கி தனித்து  செயல்பட ஆரம்பித்தார், சூரியன் ஜாதகருக்கு 1,4,8,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவக்த்துடன் சம்பந்தம் பெற்று தொழில் வெற்றிகளை ஸ்திரமாக வாரி வழங்கியது, மேலும் 11ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தொழில் லாபங்களை அபரிவிதமாக அதிர்ஷ்டத்துடன் வழங்கியது.

சூரியனுக்கு அடுத்ததாக தற்பொழுது நடைமுறையில் உள்ள சந்திரன் திசையும் ஜாதகருக்கு 11ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தொழில் லாபங்களை அபரிவிதமாக அதிர்ஷ்டத்துடன் வாரி வழங்கி கொண்டு இருப்பது, ஜாதகரின் தொழில் விருத்தியை எவ்விதத்திலும் பாதிப்பில்லாமல் இயங்க செய்து கொண்டு இருப்பதுடன், திடீர் அதிர்ஷ்டத்துடன் புதிய தொழில்களையும் அறிமுகம் செய்து கொண்டு இருக்கிறது, ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் மிகவும் வலிமை பெறுவது, அவருக்கு உண்டான தொழில் வாய்ப்புகளை சரியான வயதில், சரியான நேரத்தில் தகுந்த நபர்கள் வழியில் இருந்து அறிமுகம் செய்து ஜாதகரை தொழில் ரீதியான வெற்றிகளை எவ்வித சிரமும் இல்லாமல் பெற செய்கிறது, ஜாதகருக்கு 5ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது செய்தொழிலில் நுண்ணறிவும், புத்திசாலித்தனமும் இல்லாவிட்டலும், 11ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது குருட்டு அதிர்ஷ்டத்தை தங்கு தடையின்றி, சூரியன் திசையிலும், சந்திரன் திசையிலும் வாரி வழங்கி கொண்டு இருக்கின்றது என்பது ஜாதகருக்கு, சாதகமான விஷயமாக அமைகிறது.

 சந்திரன் திசைக்கு அடுத்து வரும் செவ்வாய் திசையும் ஜாதகருக்கு 3,9ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அதிர்ஷ்டங்களை வாரி வழங்குவது, வரவேற்க தக்க அம்சமாகும், ஆக ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று, நடைபெறும் திசை வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் ஜாதகர் தொழில் அல்லது வேலை வாய்ப்பில் தன்னிறைவு பெறுவார் என்பது உறுதியாகிறது.


ஜாதகிக்கு விருச்சிக லக்கினம், ரிஷப ராசி, ரோஹிணி நட்சத்திரம்1ம் பாதம், சுய ஜாதகத்தில் 5ம் பாவகம் வலிமை பெறுவது, நல்ல கல்வியையும், சிறந்த மதிநுட்பத்தையும், வாரி வழங்கியது, அளவுக்கு மிஞ்சிய கல்வி அறிவையும் சுய புத்திசாலிதனத்தையும் ஜாதகிக்கு வாரி வழங்கியது, இருப்பினும் சுய ஜாதகத்தில் 10ம் வீடு பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகியின் கல்வி அறிவும் மதி நுட்பமும் சிறிதும் பயன்படவில்லை, பயன்படுத்த இயலவில்லை, எந்த ஒரு வேலை வாய்ப்பும் ஜாதகிக்கு அமைய வில்லை, இதற்க்கு தகுந்தாற்போல், தற்பொழுது நடைமுறையில் உள்ள ராகு திசையும் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தி "எரியும் நெருப்பிற்கு எண்ணையை வார்க்கிறது" மேலும் நடைபெறும் ராகு திசை, புதன் புத்தியாவது ஜாதகிக்கு நன்மையை செய்கிறதா என்றால் ? அதுவும் (புதன்  புத்தியும்) 10,12ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தருவது ஜாதகியின் வேதனையை அதிகமாக்கி இன்னலுற செய்கிறது.

எனவே சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது எவ்வளவு முக்கியம் என்பது இந்த பதிவில் உணரமுடியும் அன்பர்களே! ஒருவர் தொழில் ரீதியான வெற்றிகளை பெறுவதற்கு சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது அவசியம், அந்த தொழிலில் ஜாதகர் அபரிவிதமான தொடர் வெற்றிகளை பெற மதி நுட்பத்தை வழங்கும் பூர்வபுண்ணியம் வலிமை பெறுவது அவசியம், சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானமும், பூர்வ புண்ணியமும் வலிமை பெற்று, நடைமுறையில் உள்ள திசாபுத்திகள் ஜாதகருக்கு மேற்கண்ட 10,5ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் ஜாதகர் குறுகிய காலத்தில், தொழில் ரீதியான விருத்திகளை பெறுவார், ஒரு வேலை ஜீவன  ஸ்தானம் மட்டும் வலிமை பெறுவது ஜாதகரை "செக்கு மாட்டுக்கு " ஒப்பான பலனை வழங்கி விடும், கடமைக்கு தொழில் செய்து வெற்றிகளை பெறுவார், தனது தொழிலில் புதிய யுக்திகளையும், புதுமைகளையும்  பயன்படுத்தி ஜீவன விருத்தியை பெறுவதற்கு உண்டான அறிவு திறனையும், மதி நுட்பத்தையும் வழங்காது என்பது கவனிக்க தக்க விஷயமாகும்.

 முதல் ஜாதகத்தில் ஜாதகருக்கு ஜீவன ஸ்தான அதிபதியாக சுக்கிரன் வருவதால், ஆடை ஆபரண தொழிலில் மிகப்பெரிய வெற்றிகளை வழங்கியது, வழங்கிக்கொண்டு இருக்கிறது, இரண்டாவது ஜாதகத்தில் ஜாதகிக்கு ஜீவன ஸ்தான அதிபதியாக சுக்கிரன் வருவது, ஆடை ஆபரண தொழில்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது, மேலும் சுக்கிரன் அம்சம் பெற்ற தொழிலில் ஈடுபடாமல், வலிமை பெற்ற ராகு அம்சம் பெற்ற  கூட்டு தொழில்களில் ஜாதகி ஈடுபடுவது அபரிவிதமான தொழில் வெற்றிகளை வாரி  வழங்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 10 மே, 2014

திருமணதிற்கு பிறகு முன்னேற்றம் பெரும் யோக அமைப்பு !





சுய ஜாதக அமைப்பில் களத்திர ஸ்தானம் என்று வர்ணிக்கப்படும் 7ம் பாவகம் ஒருவருக்கு நல்ல நிலையில் வலிமை பெற்று இருக்குமெனில், அந்த ஜாதகரின் வாழ்க்கையில் பொருளாதார முன்னேற்றமும், கௌரவம், சமுதாய அந்தஸ்து, தன்னிறைவான வாழ்க்கை என்ற விஷயங்கள் அனைத்தும் திருமணத்திற்கு பிறகே நடைமுறைக்கு வரும், மேலும் களத்திர பாவகம் எனும் 7ம் வீடு தொடர்பு பெரும் பாவகம் சர ராசியாக இருப்பின் ஜாதகரின் யோக வாழ்க்கை, திருமணதிற்கு பிறகு விரைவாக குறுகிய காலத்தில் மிக பெரிய யோக வாழ்க்கையை தந்துவிடும்.

உதாரணமாக :


மேற்கண்ட ஜாதகருக்கு மிதுன லக்கினம்,  களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம்  சர ராசி மற்றும் லாபஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிகுந்த யோகத்தை தரும் அமைப்பாக கருதலாம், ஜாதகரின் வாழ்க்கையில் பொருளாதார ரீதியான தன்னிறைவு வாழ்க்கை, சமுதாய அந்தஸ்து, செய்யும் தொழில் வெற்றி என்ற வகையில் அனைத்து நன்மையையும் திருமண வாழ்க்கைக்கு பிறகே என்பது தெளிவாகிறது, மேலும் ஜாதகரின் இலக்கின மிகுந்த வலிமையுடன் இருப்பதால் ஜாதகர் களத்திர பாவக வழியில் இருந்து வரும் யோக பலன்களை 100 சதவிகிதம் தங்கு தடையின்றி அனுபவிக்கும் யோகத்தை தரும்.

பொதுவாக சுய ஜாதகத்தில் களத்திர பாவகம் வலிமை பெரும் பொழுது குறிப்பாக லாப ஸ்தானதுடன் தொடர்பு பெரும் பொழுது, ஜாதகர் காலத்திற பாவக வழியில் இருந்து யோக வாழ்க்கையை அனுபவிக்க பிறந்தவர் என்பது உறுதி, எனவே ஜாதகர் களத்திர பாவகம் குறிப்பிடும் நபர்கள் வழியில் இருந்து யோக வாழ்க்கையை பெறுவார், களத்திர பாவகம் தொடர்பு படுத்தும் முதல் நபர் ஜாதகரின் வாழ்க்கை துணை, ஜாதகர் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து சொத்து சுகம், தொழில் முன்னேற்றம், பொருளாதார முன்னேற்றம், சமுதாயத்தில் கௌரவம் மற்றும் அந்தஸ்து என்ற வகையில் நன்மைகளை பெறுவார்.

களத்திர பாவகம் தொடர்பு படுத்தும் இரண்டாவது நபர் ஜாதகரின் நண்பர்கள், மேற்கண்ட ஜாதக அமைப்பில் வாழ்க்கை துணைக்கு அடுத்ததாக ஜாதகரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்க்காக பாடுபடும் நபர்கள் ஜாதகரின் நண்பர்கள் என்றால் அது மிகையில், ஜாதகரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு அவரின் நண்பர்கள் துணை நின்று ஜாதகரை சிறப்பாக வழிநடத்தி செல்வார்கள், ஜாதகரின் வெற்றிக்கு அவரின் நண்பர்கள் உறுதுணையாகவும், பக்க பலமாகவும் நிற்பார்கள், எவ்வித சூழ்நிலையிலும் ஜாதகரை விட்டு பிரியாமல் துணை நிற்பது ஜாதகர் செய்த புண்ணியமே.

 களத்திர பாவகம் தொடர்பு படுத்தும் மூன்றாவது  நபர் ஜாதகரின் தொழில் முறை கூட்டாளிகள், ஜாதகருடன் தொழில் முறையில் கூட்டு சேரும் நபர்கள் யாவரும் மிகவும் நல்ல குணம் கொண்டவர்களாகவும், நேர்மையான நன்னடத்தை உள்ளவர்களாகவும் காணப்படுவார்கள், தன்னுடன் கூட்டு தொழில் புரியும் ஜாதகரின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை கொண்டவர்களாக காணப்படுவார்கள், ஜாதகரின் தொழில் முன்னேற்றத்தில் தானும் பலன் பெற்று ஜாதகரையும் மிக பெரிய இடத்திற்கு எடுத்து செல்லும் தன்மை பெற்றவர்களாக இருப்பர்கள்.

களத்திர பாவகம் தொடர்பு படுத்தும் நான்காவது நபர், பொது மக்கள் ஜாதகர் எடுத்து வைக்கும் முன்னேற்ற பாதையின் ஒவ்வொரு படிக்கட்டுகளாக அமைவது பொதுமக்களே என்றால் அது மிகையில்லை, ஒரு ஊருக்கு, ஒரு நகரத்திற்கு, ஒரு மாநிலத்திற்கு, ஒரு நாட்டிற்கு தலைமை பொறுப்பேற்கும் நபர்களின் ஜாதகத்தில் நிச்சயம் மேற்கண்ட களத்திர பாவகம் வலிமை பெற்று இருக்கும், சுய மரியாதை, கௌரவம், ஏகோபித்த மக்கள் ஆதரவு என்ற வகையில் காலத்திற பாவகம் ஜாதகருக்கு யோக பலன்களை வாரி வழங்கும் என்றால் அது மிகையில்ல, மேற்கண்ட நன்மைகள் யாவும் ஜாதகருக்கு நடைபெற வேண்டும் எனில் ஜாதகர் காலத்திற பாவகதிர்க்கு உண்டான திருமண வாழ்க்கை அமைந்தால் மட்டுமே சாத்தியம்.

மாறாக சுய ஜாதகத்தில் களத்திர பாவகம் வலிமை பெற்று, ஜாதகார் ஏதாவது ஒரு காரணதிற்காக திருமண வாய்ப்பை தட்டிகழிக்கும் பொழுது மேற்கண்ட பாவக வழியில் இருந்து வரும் ஒரு நற்பலன்களையும் அனுபவிக்க இயலாத சூழ்நிலையை தந்துவிடும், ஒரு வேலை தனக்கு அமைந்த வாழ்க்கை துணையின் (திருமணம் அல்லாத )  ஜாதகத்தில் களத்திர பாவகம் பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்று இருப்பின் ஜாதகரின் யோக நிலைகள் யாவும், பங்கபட்டு ஜாதகருக்கு எவ்வித யோக வாழ்க்கையையும் அனுபவிக்க இயலாத சூழ்நிலையை தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

புதன், 12 மார்ச், 2014

1,7,10ம் பாவகம் வலிமை பெரும் பொழுது ஜீவன வழியில் இருந்து ஜாதகர் பெரும் வெற்றி வாய்ப்புகள் !



 சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது, சம்பந்தபட்ட ஜாதகரின் வாழ்க்கையில் தொழில் மற்றும் வேலை வாய்ப்பில் மிகுந்த முன்னேற்றத்தை வாரி வழங்கும், தங்கு தடையின்றி ஜீவன முன்னேற்றத்தை தரும், ஜாதகர் எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளித்து வெற்றி காணும் யோக வாழ்க்கையை பெற்று தரும்.

 கிழ்கண்ட மகர இலக்கின ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே !




லக்கினம் : மகரம் 
ராசி : மீனம் 
நடசத்திரம் : ரேவதி 4ம் பாதம் 

 ஜாதகருக்கு 1,7,10ம் பாவகங்கள் ஜீவன ஸ்தானமான 10 ம் வீட்டுடனே தொடர்பு பெறுவது மிகுந்த யோகத்தை தரும் அமைப்பாக கருதலாம் , இதில் ஜீவன ஸ்தனத்துடன் தொடர்பு  பெரும் 1,7,10 ம் பாவகங்கள் ஜாதகருக்கு எவ்வித யோக பலன்களை வாரி வழங்கும் என்பதனை சற்று ஆய்வுக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே !

 உடல், உயிராகிய லக்கினம் ஜீவன ஸ்தானமான 10 ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சிறப்பான ஒரு விஷயமே, ஜீவன ஸ்தானம் ஜாதகருக்கு துலாம் ராசியில் அமைவதும், அந்த துலாம் ராசி கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் பாவகமாக வருவதும், சர காற்று தத்துவ அமைப்பை ஏற்று நிற்பதும் ஜாதகருக்கு பரிபூரண யோகத்தை வழங்கும , பொதுவாக சர காற்று தத்துவ ராசி நல்ல நிலையில் இருப்பது ஜாதகருக்கு தன்னிறைவான அறிவாற்றலை வாரி வழங்கும் , அடிப்படையில் இந்த ஜாதகருக்கு லக்கினம் ஜீவன ஸ்தனத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர் சிறு வயது முதல் தந்தையின் அரவணைப்பில் கட்டுப்பாட்டில் வளரும் சூழ்நிலையை தரும், மேலும் கௌரவமான வாழ்க்கை மேற்கொள்ளும் யோகத்தை தரும், தனது சுய அறிவாற்றல் கொண்டும், சுய உழைப்பை கொண்டும் வாழ்க்கையில் முன்னேற்றம் பெற்றவராக இருப்பார்.

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு  7ம் வீடான துலாம் ராசியுடன் ஜாதகரின் லக்கினம் தொடர்பு பெறுவதால், ஜாதகருக்கு அமையும் வாழ்க்கை துணை மிகுந்த யோகம் கொண்டவராக காணப்படுவார், ஜாதகரின் வாழ்க்கையில் முன்னேற்றம் என்பதே திருமண வாழ்க்கைக்கு பிறகுதான் என்றால் அது மிகையில், மேலும்  ஜாதகரின் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பவர்கள் மனைவி, நண்பர்கள், பொது மக்கள் என்ற அமைப்பில் ஜாதகருக்கு இலக்கின வழியில் இருந்து பலன் தரும்.

 களத்திர ஸ்தானமான 7ம் பாவகம் 10ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது, ஜாதகர் மனைவி வழியில் இருந்து யோக வாழ்க்கையை பெறுபவர் என்ற அமைப்பையும் தரும், மேலும் ஜாதகரின் வெளி வட்டார பழக்க வழக்கங்கள் மற்றும் தொடர்புகள் அனைத்தும் மிக பெரிய அந்தஸ்து கொண்ட நபர்களுடன் இருக்கும் என்பதே குறிப்பிடத்தக்கது, மேலும் அரசியல்வாதிகளின் அதாரவும் ஜாதகருக்கு பரிபூரணமாக கிடைக்கும், அரசு சார்ந்த அமைப்புகளில் இருந்து லாபம் பெரும் யோகத்தை தரும், குறிப்பாக ஜாதகர் வியாபாரம் செய்தால் பொதுமக்கள் ஆதரவும், அரசு ஆதரவும் தடையின்றி கிடைக்கும், மேலும் வாழ்க்கை துணை, நண்பர்களின் ஆதரவும் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும்.

 ஜாதகருக்கு வெளிநாடுகளில் இருந்து நிறைவான பொருள் வரவு உண்டாகும், வெளிநாடுகள் பலவற்றிற்கு சென்று வரும் யோகத்தை தரும், ஜீவன வாழ்க்கை வெளிநாடுகளில் அமைந்தால் ஜாதகர் பொருளாதார ரீதியான தன்னிறைவை குறுகிய காலத்தில் பெரும் யோகம் உண்டாகும், அல்லது வெளிநாடுகளில் இருந்து வரும் பொருட்களை வாங்கி விற்பனை செய்தாலோ, ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த தொழில்களை மேற்க்கொண்டாலோ கை நிறைவான வருமானம் தடையின்றி 100 சதவிகிதம் கிடைக்கும், ஜாதகரின் வாழ்க்கை குறுகிய காலத்தில் முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கும்

 ஜீவன ஸ்தானம் 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகர் சுய தொழில் செய்வதே வெற்றி மிகுந்த வாழ்க்கை பெற்றுத்தரும் என்பது உறுதியாகிறது, மேலும் ஜாதகர் வேறு ஒரு இடத்தில் பணியாற்றுகிறார் என்றால் ஜாதகரின் வெற்றி வாய்ப்புகள் யாவும், அவர் வேலை செய்யும் தொழில் நிறுவனத்திற்கு சென்று விடும், குறிப்பிட்ட நிறுவனத்திற்கு  மிக பெரிய முன்னேற்றத்தை பெற்று தந்து விடும், மாறாக ஜாதகர் சுயமாக தொழில் செய்தால் ஜாதகருக்கே பரிபூரண வெற்றிகளை வாரி வழங்கிவிடும், இந்த கருத்தை இங்கே பதிவு செய்ய காரணம் ஜாதகரின் ஜீவன ஸ்தானம் சர ராசியாக அமைவதாலும், துலாம் காற்று தத்துவ ராசியா இருப்பதாலுமே இதை குறிப்பிடுகிறோம், சர ராசி ஜாதகருக்கு 100 சதவிகித வெற்றியை தரும், காற்று தத்துவம் ஜாதகருக்கு செலவில்லா மக்கள் விளம்பரத்தையும், தொழில் நேர்மையையும் உலகுக்கு எடுத்து சொல்லும், துலாம் ராசி உலக புகழ் பெற வைக்கும்.

மேலும் ஜாதகரின் ஜீவன ஸ்தானம், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் வீடாக வருவது ஜாதகர் தனித்தும் தொழில் செய்து வெற்றி பெற முடியும், கூட்டு முயற்ச்சி, அல்லது கூட்டு தொழில் மூலமாகவும் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை பெற இயலும், ஜாதகர் சுய தொழில் ஆரம்பிக்க சரியான நேரம் எதுவென்றால் மேற்கண்ட 1,7,10ம் பாவகங்கள் ஜீவன ஸ்தானமான  10ம் வீட்டுடன் தொடர்பு பெற்று பலனை நடத்தும், திசை,புத்தி,அந்தரம்,சூட்சமம் இவைகளில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து தொழில் துவங்கினால் ஜாதகருக்கு நிச்சயம் 100 சதவிகித தொழில் வெற்றியை வாரி வழங்கும் என்பது நிச்சயம்.

ஜோதிடன் வர்ஷன் 
வாழ்க வளமுடன் 
9443355696,9842421435