ஐந்தில்ராகு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஐந்தில்ராகு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 21 செப்டம்பர், 2017

ராகு திசை தரும் பலனும், சுய ஜாதகத்தில் பாதக ஸ்தான தொடர்பும் !



 ஒருவரின் வாழ்க்கையில் அதிக அளவிலான இன்னல்களையும் துன்பங்களையும் பாரபட்சம் பார்க்காமல் வாரி வழங்கும் வல்லமை பாதக ஸ்தானத்திற்கு உண்டு, ஒருவரின் ஜாதகத்தில் நடைபெறும் திசை எந்த கிரகத்தின் திசை என்றாலும் சரி எக்காரணத்தை கொண்டும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்ற பாவக பலனை ஏற்று நடத்த கூடாது, அப்படி பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் ஜாதகரின் வாழ்க்கை நித்திய கண்டம் பூர்ண ஆயுசு என்ற முதுமொழிக்கு பொருத்தமான பலாபலன்களை தர ஆரம்பித்துவிடும், ஜாதகர் செய்யும் செயல்கள் யாவும் பெரும் பின்னடைவையும், படுதோல்விகளையும் வாரி வழங்கும், சுய ஜாதகத்தில் சுப யோகங்கள் இருப்பினும் அவையாவும் பாதக ஸ்தான பலன் நடைமுறையில் உள்ள பொழுது சுபயோக பலன்கள் அனைத்தையும் தடை செய்யும், வாழ்க்கையில் ஜாதகரின் ஆசை, கனவுகள் யாவும் கானல் நீராக போக அதிக வாய்ப்பு உள்ளது, மேலும் ஜாதகர் பல திறமைகளை தன்னகத்தே கொண்டவர் என்ற போதிலும், குடத்தில் இட்ட விளக்கு போல், பிரகாசம் குறைந்து பலனேதும் அற்ற வாழ்க்கையை ஜாதகர் எதிர்கொள்ள வேண்டிவரும், பாதக ஸ்தானம் தரும் பலாபலன்கள் பற்றி ஓர் சுய ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : மேஷம் 
ராசி : தனுசு 
நட்ஷத்திரம் : பூராடம் 3ம் பாதம் 

 நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள் : ( 10/12/2003 முதல் 10/12/2021 வரை )

 ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் ராகு திசை 2ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலாபலன்களை வழங்கி கொண்டு இருப்பது ஜாதகரின் வாழ்க்கையை வெகுவாக பாதிப்பை வழங்கி கொண்டு இருக்கின்றது, ஜாதகரின் குடும்ப ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ரிஷப ராசியில் பாதியும், மிதுன ராசியில் பாதியும் வியாபித்து நின்று பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பது, ஜாதகரின் குடும்ப வாழ்க்கை சார்ந்த இன்னல்களையும், வருமானம் சார்ந்த இன்னல்களையும் கடுமையாக தருவதுடன், எடுக்கும் முயற்சிகள் யாவும் ஜாதகருக்கு பெரிய அளவிலான தொடர் தோல்விகளை வாரி வழங்கி கொண்டு இருப்பது, ஜாதகருக்கு மனம் உடல் சார்ந்த தொந்தரவுகளையும், மனசோர்வையும் தந்து கொண்டு இருக்கின்றது, ஜாதகரின் வருமானம் முழுவதும் மற்றவர்களுக்கே சென்றுகொண்டு இருக்கின்றது, ஜாதகரின் உழைப்பும், அறிவு திறனும் வீண் விரயமாகிறது, எந்த ஓர் விதத்திலும் ஜாதகர் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க இயலாமல் தனது வாழ்க்கையை தானே போராட்ட நிலைக்கு ஆர்படுத்தி இருப்பது பாதக ஸ்தான வலிமையின் தாக்கத்தை காட்டுகிறது.

ஜாதகருக்கு கடந்த 15 வருடங்களாக ராகு திசை பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது என்பது சொல்ல இயலாத துன்பங்களையும் துயரங்களையும், எதிர்பாராத நஷ்டங்களையும், திடீர் இழப்புகளையும், மருத்துவ செலவினங்களையும் பாரபட்சம் பார்க்காமல் வழங்கி கொண்டு இருக்கின்றது, ஜாதகரின் திட்டமிடுதல்கள் யாவும் மிக பெரிய தோல்விகளையும், நஷ்டங்களையும் மட்டுமே இதுவரை வழங்கி உள்ளது, ஜாதகரின் பாதக ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு கும்பம் மற்றும் மீனா ராசியில் வியாபித்து நிற்பது ஜாதகரின் அதிர்ஷ்டமின்மையும், தன்னம்பிக்கை குலையும் விதமான நிகழ்வுகளையும் இதுவரை தந்துகொண்டு இருப்பது, ஜாதகரை  மனவிரக்கத்தியின் உச்சத்துக்கே அழைத்து சென்று கொண்டு இருக்கின்றது, ஒவ்வொரு நாளும் ஜாதகர், பொருளாதார நெருக்கடிகளை கடுமையாக அனுபவித்து கொண்டு இருப்பதும், வெளியில் சொல்ல இயலாத துன்பங்களை அனுபவித்து கொண்டு இருப்பதும் சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் ராகு திசை ஏற்று நடத்தும் பாதக ஸ்தான பலாபலன்கள் என்றால் அது மிகையில்லை, எனவே ஒருவர் சுய ஜாதகத்தில் நடைபெறும் திசை பாதக ஸ்தான பலனை ஏற்று  நடத்தினால் ஜாதகர் படும் பாடு சொல்ல இயலாத துன்பங்களை தரும் என்பதற்கு மேற்கண்ட  ஜாதகமே நல்ல உதாரணம்.

இருப்பினும் ராகு திசையில் தற்போழுது நடைபெறும் சுக்கிரன் புத்தி, அதற்க்கு அடுத்து வரும் சூரியன் புத்தி இரண்டும் ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக பலனை முறையே ஜீவனம் மற்றும் களத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்துவது, ஜாதகருக்கு பாதக ஸ்தான இன்னல்களுக்கு இடையே சிறிதளவு நன்மைகளை தரும், அதற்க்கு பிறகு வரும் சந்திரன் மற்றும் செவ்வாய் புத்திகள் ஜாதகருக்கு சாதகமாக இல்லை என்பது மிகுந்த இன்னல்களை ஏற்படுத்தும், ராகு திசைக்கு பிறகு வரும் குரு திசை ஜாதகருக்கு 3,8,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக பலன்களை தருவது ஜாதகருக்கு பாதக ஸ்தான இன்னல்களில் இருந்து விடுதலையை தரும்.

சுய ஜாதகத்தில் 5ம் பாவகம் வலிமை  பெற்று இருப்பது ஜாதகரின் சொந்த புத்தியை குறிக்கும் மேற்கண்ட ஜாதகருக்கு 5ம் வீடு விரைய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதால் ஜாதகரின் சொந்த புத்தியில் செய்யும் காரியங்கள் யாவும் வீண் விரயத்தையும் பெரும் நஷ்டங்களையும் தரும், சுய ஜாதகத்தில் 9ம் பாவகம் வலிமை பெற்று இருப்பது ஜாதகருக்கு பெரியோர் வழங்கும் சொல்புத்தியை குறிக்கும், மேற்கண்ட ஜாதகருக்கு 9ம் வீடு பாக்கிய ஸ்தானத்துடன்  சம்பந்தம் பெறுவதால் ஜாதகர் பெரியோர், நல்ல நண்பர்கள் மாற்றும் ஆன்மீக குரு மார்கள் வழங்கும் அறிவுரையை ஏற்று நடந்து வாழ்க்கையில் சுப யோகங்களை அனுபவிக்கலாம், எதிர்வரும் குரு திசையும் அதையே " கட்டியம் " கூறுகிறது என்பது ஜாதகருக்கு இறைஅருள் வழங்கும் நல்ல வாய்ப்பாகவும், ஜாதகரின் முன்னோர்கள் செய்த பாக்கியம் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை அன்பர்களே !

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் நடைபெறும் திசை  ஏற்று நடத்தும் பாவக பலன் என்ன? என்பதில் தெளிவு இல்லாத பொழுது, ஜாதகர் செய்யும் காரியங்கள் யாவும் கண்ணை கட்டிக்கொண்டு வழிதேடுவதற்கு இணையான பலாபலன்களை  வழங்கி விடும் என்பதை அனைவரும் கருத்தில் கொள்வது நலம் தரும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

சனி, 29 செப்டம்பர், 2012

ஜோதிட ஆலோசனை : திருமண தடை ஏன் ? ஐந்தில்ராகு புத்திரபாக்கியம் உண்டா ?




கேள்வி :

ஜோதிடர் அவர்களுக்கு வணக்கம் எனது ஜாதகத்தில் ஐந்தில் ராகு இருப்பதால் குழந்தை பாக்கியம் இல்லை என்றும் ,  இந்த ராகு ஐந்தில் அமருவதால் பூர்வ புண்ணியம் கெட்டு விட்டதாகவும்,  வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது இல்லை எனவும் திருமண வாழ்க்கை பாதிக்க படும் என்றும் , பல ஜோதிடர்கள் கூறுகிறார்கள் , மேலும் ஐந்தில் ராகு இருப்பதால் குழந்தை பாக்கியம் இல்லை என்று பல ஜோதிடர்கள் முடிவு செய்து,  பொருத்தம் நன்றாக இருக்கும் வரனின்  ஜாதகங்களை எல்லா வற்றையும்  தட்டி கழித்து விடுகின்றனர் , உண்மையில் எனக்கு குழந்தை பாக்கியம் இல்லையா ? திருமண தாமதத்திற்கு காரணம் என்ன ? சரியான ஜோதிட ஆலோசனை தேவை .



பதில் :

அன்பு  சகோதரிக்கு தங்களது ஜாதக அமைப்பை வைத்து பார்க்கும் பொழுது உண்மையில் ஐந்தாம் பாவகம் எவ்வித பாதிப்பும் இல்லாமல் நல்ல நிலையிலேயே இருக்கிறது , மேலும் ஜோதிட பலன்கள் கணிதம் செய்யும் பொழுது பொது பலனை அடிப்படையாக கொண்டு பலனை சொன்னால் இதுமாதரியான தவறுகளே நடக்கும் , பொதுவாக ஐந்தில் ராகு இருந்தால் புத்திர பாக்கியம் இல்லை என்பது பொதுவான கருத்து , ஆனால் ஐந்தில் அமரும் ராகு எந்த இடத்தில் எந்த ராசியில் அமருகிறார் என்று தெளிவாக தெரிந்து கொண்டு ஜாதக பலனை கணிதம் செய்து சொல்வது சிறப்பு , குறிப்பாக ஒருவருடைய ஜாதக அமைப்பில் , ரிஷபம்,துலாம் , கடகம் ( வளர்பிறை சந்திரன் ) மிதுனம் , கன்னி ( சூரியனுடன் 14 பாகைக்கு மேல் இருக்கும் புதன் ) தனுசு , மீனம் ஆகிய ஐந்தாம் பாவகமாக வருமாயின் , இங்கு அமரும்  ராகு அல்லது கேது  பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் பாவகத்தை 100 சதவிகிதம் வலிமை பெற செய்து விடுகிறார், மேலும் ராகு கேது முறையே ஐந்தாம் பாவகம் & பதினொன்றாம் பாவகம் என்ற முறையில் அமரும் பொழுது இரண்டு பாவகத்திர்க்கும் 100 சதவிகித நன்மையை வாரி வழங்குவார்கள் என்பது சிறப்பான விஷயம் .

பொதுவாக ஐந்தில் ராகு அமர்ந்தால் பூர்வ புண்ணியம் கெட்டு விட்டது என்றும் , புத்திர சந்தானம் இல்லை என்றும் முடிவு செய்வது ஜோதிடத்தை பற்றி தெரியாதவர்கள் ஜோதிட அறிவு அற்றவர்கள்  சொல்லும் பொது பலன் . உண்மையில் மேற்கண்ட அமைப்பில் ராகு அல்லது கேது அமரும் ஜாதக அமைப்பை சார்ந்த ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி நிச்சயம் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு , அதுவும் முதலிலேயே தனது குலம் செழிக்க  ஆண் வாரிசு கிடைக்கும் என்பது 100 சதவிகிதம் உறுதி, மேலும் தங்களது ஜாதக அமைப்பில் மீனத்தில் அமரும் ராகு ஐந்தாம் பாவகத்தை 100 சதவிகித வலிமை செய்கிறார் , கன்னியில் அமரும் கேது 11 ம் பாவகத்தை 100 சதவிகித வலிமை செய்கிறார் , எனவே தங்களது ஜாதக அமைப்பில் ராகு கேது கிரகங்களால் பாதிப்பு என்பது நிச்சயம் இல்லை என்பது உறுதி .

தங்களின் திருமண தாமதத்திற்கு முக்கிய காரணம் குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகம் 8  ம் வீட்டுடன் தொடர்பு பெற்று கடுமையாக பாதிப்படைந்து இருக்கிறது  , இந்த அமைப்பே  தங்களது திருமண தாமதத்திற்கு அதிமுக்கிய காரணம் , குடும்ப ஸ்தானம் பாதிக்கும் பொழுது திருமண வாழ்க்கை 27 வயதிற்கு மேலேயே அமையும், தங்களது ஜாதக அமைப்பில் களத்திர பாவகம் நல்ல நிலையில் இருப்பதால் பயம் தேவையில்லை , நிச்சயம் இனி தங்களுக்கு திருமணம் நடக்கும் , இருப்பினும் தங்களது ஜாதக அமைப்பில் குடும்ப ஸ்தானம் கடுமையாக பாதிக்க படுவதால் திருமணதிற்கு பிறகு தங்களது கணவருடன் அதிகமாக அனுசரித்து செல்வது அவசியம் , காரணம் தங்களது களத்திர பாவகம் நல்ல நிலையில் இருக்கிறது தங்களுக்கு அமையும் கணவர் மிகவும் நல்லவராக இருப்பார் , தங்களது ஜாதக அமைப்பிலேயே குடும்ப ஸ்தானம் பாதிக்க படுகிறது எனவே நல்ல முறையில் குடும்பம் நடத்த வேண்டும் எனில் தங்களது கணவருடன் அதிகமாக அனுசரித்தும் , விட்டு கொடுத்தும் வாழ்க்கையை செம்மையாக நடத்துவது உங்களின் கடமை .

சிறப்பான திருமண வாழ்க்கை தங்களுக்கு இனி வரும் சில மாதங்களில் அமையும் வாழ்த்துகள் !


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

ஐந்தில் ராகு அமைந்த ஜாதகருக்கு ஆண் வாரிசு உண்டா? இல்லையா?




 ஐந்தில் ராகு அமைந்த ஜாதகருக்கு ஆண் வாரிசு உண்டா? இல்லையா?

பொதுவாக ஒருவருடைய ஜாதக அமைப்பில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் வீட்டில் ராகு அல்லது கேது அமர்ந்துவிட்டால் அந்த ஜாதகருக்கு ஆண் வாரிசு கிடையாது , பூர்வ புண்ணியம் கெட்டு விட்டது , ஜாதகர் தனது பூர்வீகத்தை  விட்டு வெளியில் சென்றால் மட்டுமே , வாழ்க்கையில் நலம் பெற முடியும் என்றும் , தனது பூர்வீகத்தில் இருக்கும் வரை ஜாதகருக்கு நன்மையில்லை என்றும் , புத்திர பாக்கியத்திற்கு வாய்ப்பு இல்லை என்றும் பொதுவான கருத்து நிலவுகிறது , மேலும் பல ஜோதிடர்களின் கருத்தும் இதுவாகவே 
இருக்கிறது , இதில் உண்மை என்ன என்பதை பற்றி நாம் இந்த பதிவில் காணலாம் .

ஒருவருடைய ஜாதக அமைப்பை கணிதம் செய்யும் பொழுது லக்கினத்தில் இருந்து , ஐந்தாம் பாவகத்தில் ராகு கேது  இருக்கிறதா (ஐந்தாம் பாவகத்திர்க்கு உட்ப்பட்ட பாகைக்குள் ) என்பதை முதலில்  உறுதி செய்துவிட்டு , ஜாதக பலன் காணுவது சரியான ஜாதக பலனை சொல்ல உதவி புரியும் , மேற்கொண்டு ஐந்தாம் பாவகத்தில் ராகுவோ கேதுவோ இருப்பின்  (அதாவது  ஐந்தாம் பாவகத்திர்க்கு உட்ப்பட்ட பாகைக்குள் ) எந்த ராசியில் இருக்கிறார் என்பதை சரியாகவும், தெளிவாகவும் தெரிந்து கொள்வது பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகத்தின் தன்மையை உறுதி செய்ய நமக்கு உதவி புரியும், ( அதாவது பூர்வ புண்ணிய ஸ்தானம் நன்றாக இருக்கிறதா? , கெட்டு விட்டதா ? என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள முடியும் .

மேற்கண்ட அமைப்பில் கணிதம் செய்யும்பொழுது ஒருவருடைய ஜாதக அமைப்பில் கிழ்க்கண்ட ராசிகள் 
ஜாதகருக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமாக வருமாயின் , இந்த ராசிகளில் ராகுவோ கேதுவோ அமரும் பொழுது ஜாதகருக்கு பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் வீடு 100  சதவிகிதம் நல்ல நிலையில் இருப்பதாகவும் , தனது பூர்வீகத்தில் இருப்பதால் எவ்வித தீமையும் ஏற்ப்படாது என்றும் , புத்திர பாக்கியத்திற்கு எவ்வித குறையும் ஏற்ப்படாது என்றும் உறுதியாக சொல்ல முடியும்.
ஒருவருடைய ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானமாக   அமைந்து , அதில் ராகுவோ கேதுவோ அமர்ந்தால் 100 சதவிகிதம் நன்மை தரும் ராசிகள் :

1 ) ரிஷபம் , துலாம் ராசிகள் ஒருவருடைய ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானமாக   அமைந்து , 
இதில் ராகுவோ கேதுவோ அமர்ந்தால் 100  சதவிகிதம் ஜாதகருக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு 
நன்மையையும், புத்திர சந்தானத்தையும் தரும் என்பதில் சந்தேகமே இல்லை .

 2) மிதுனம் , கன்னி ( புதன் சூரியனுக்கு 14  பாகைக்கு மேற்பட்டு இருக்க வேண்டும் )  ராசிகள் ஒருவருடைய ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானமாக   அமைந்து , இதில் ராகுவோ கேதுவோ அமர்ந்தால் 100  சதவிகிதம் 
ஜாதகருக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு நன்மையையும், புத்திர சந்தானத்தையும் தரும் என்பதில் 
சந்தேகமே இல்லை .

3 ) தனுசு , மீன ராசிகள் ஒருவருடைய ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானமாக   அமைந்து , இதில் ராகுவோ கேதுவோ அமர்ந்தால் 100  சதவிகிதம்  ஜாதகருக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு நன்மையையும்,
புத்திர சந்தானத்தையும் தரும் என்பதில் சந்தேகமே இல்லை .



மேற்கண்ட ராசிகள் ஒரு ஜாதகருக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமாக அமைந்து இந்த ராசிகளில் ஐந்தாம் பாவகத்திர்க்கு உட்ப்பட்ட பாகைக்குள் ராகு கேது அமர்ந்தால் ஜாதகருக்கு பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் வீடு 100  சதவிகிதம் நல்ல நிலையில் இருக்கும் , பூர்வீகத்தில் ஜாதகர் குடியிருப்பதால்  வாழ்க்கையில் சகல முன்னேற்றமும் ஏற்ப்படும் , குழந்தை பாக்கியத்தில் ஜாதகருக்கு எவ்வித குறையும் ஏற்ப்படாது , பேர்சொல்ல ஆண் வாரிசு நிச்சயம் உண்டாகும் .



எனவே ஒருவருடைய ஜாதக  அமைப்பில் ராகு கேது பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்தால் , புத்திர பாக்கியம் இல்லை என்று முடிவு செய்வது ஜோதிட கலையை பற்றி தெரியாத கத்துக்குட்டிகள், குண்டு சட்டியில் குதிரை ஓட்டும் போலி ஜோதிடர்கள் சொல்லும் ஒரு வாய்ஜாலம் என்பதை மக்கள் உணரவேண்டும் என்பதே ஜோதிட தீபத்தின் ஆவல் , மேலும் ராகு கேது எந்த பாவகத்தில் அமர்ந்தாலும் சரி அவைகள் ஜாதகருக்கும் , அமர்ந்த பாவகத்திர்க்கும் நன்மை செய்கிறதா ? தீமை செய்கிறதா ? என்பதை தெளிவாக தெரிந்துகொண்டு பலன் சொல்வதே சரியான ஜோதிட பலனாக இருக்கும் , அதுவே ஜோதிடர்களை நம்பி வருபவர்களுக்கு  வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை தரும் .



வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696