அரசுவேலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசுவேலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், 30 ஜனவரி, 2024
சனி, 14 ஜூலை, 2018
ஜாதகஆலோசணை : அரசு வேலை அமையுமா ? தனியார் துறையில் பணியாற்றும் வாய்ப்பு உள்ளதா?
கேள்வி :
வணக்கம் எனக்கு இரு மகன்கள் உள்ளனர் ( இரட்டை குழந்தைகள் ) , இதில் இளையவர் சிறப்பு மிகுந்த இந்திய ஆட்சி பணியில் தேர்ச்சி பெற்று அரசு பணியில் உள்ளார், மூத்தவருக்கு இதுவரை யாதொரு வேலையும் அமையவில்லை, இருவருக்கும் பிறந்த நேரம் வெறும் 5நிமிடம் மட்டுமே வித்தியாசம், இருவரது ஜாதகமும் ஒன்றை போலவே உள்ளது, ஒரே லக்கினம், ஒரே நட்ஷத்திரம், ஒரே ராசி, நடைபெறும் திசாபுத்திகளும் ஏறக்குறைய ஒரே அமைப்பில் உள்ளது இருப்பினும் இருவருக்கும் முரண்பட்ட பலாபலன்கள் நடைபெற காரணம் என்ன ? மூத்தவருக்கு அரசு வேலை அமையுமா ? தனியார் துறையில் பணியாற்றும் வாய்ப்பு உள்ளதா? சற்று தெளிவுபடுத்த வேண்டுகின்றேன் .
பதில் :
இரட்டை குழந்தைகள் ஜாதகத்தில் பிறந்த நேரம் என்பது சில நிமிடங்கள் வித்தியாசம் இருப்பினும், ஜாதகத்தில் லக்கினம்,ராசி,நட்ஷத்திரம் மற்றும் திசாபுத்திகள் ஒரேமாதிரியாக இருப்பது வியப்பில்லை, ஆனால் சுய ஜாதக வலிமை என்பது ( லக்கினம் முதல் பனிரெண்டு வீடுகள் தொடர்பு பெரும் பாவக நிலை ) வெகுவான வித்தியாசங்களை கொண்டு இருக்கும், சில நிமிட இடைவெளியில் பிறந்த இரட்டையர் ஜாதகம் மேலோட்டமாக பார்க்கும் பொழுது ஒன்றைப்போலவே ஒன்று இருப்பினும், பாவக வலிமை என்பது ஒன்றைப்போல் ஒன்று இருக்காது என்பதை கருத்தில் கொள்வது நல்லது, தங்களது மகன்கள் இருவரும் இரட்டை பிறவிகள் என்பதாலும், 5 நிமிட வித்தயாசத்தில் பிறந்து இருப்பதாலும் இருவருக்கும் ஒரே மாதிரியான பலாபலன்கள் நடைமுறைக்கு வரும் என்று கருதுவது முற்றிலும் தவறான அணுகுமுறை அன்பரே ! இதை பற்றி இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.
அண்ணன் ஜாதகம் :
லக்கினம் : சிம்மம்
ராசி : மகரம்
நட்ஷத்திரம் : அவிட்டம் 1ம் பாதம்
ஜாதகருக்கு பாவக தொடர்புகள் :
1,5,7,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 1,5,7,11ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் என்பதால் ஜாதகத்தில் மேற்கண்ட பாவக தொடர்பு வலிமை மிக்கதாக எடுத்துக்கொள்ளலாம்.
4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 4ம் பாவக வழியில் இருந்து சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், வீடு நிலம், இடம், வண்டி வாகனம் போன்ற அமைப்பில் இருந்து சுகபோகங்களை வாரி வழங்கும் என்பதால் ஜாதகத்தில் மேற்கண்ட பாவக தொடர்பையும் வலிமை மிக்கதாக எடுத்துக்கொள்ளலாம்.
2,6,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 2,6,10,12ம் பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களை தரும் மேலும் ஜாதகரின் 12ம் பாவகம் கடக ராசியில் 9 பாகைகளையும், அரசு துறையை குறிக்கும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் ராசியான சிம்மத்தில் 21 பாகைகளையும் கொண்டு வலுவிழந்து நிற்பது ஜாதகருக்கான அரசுத்துறை பணி என்ற விஷயத்தை "கானல்நீராக" மாற்றிவிடும் என்பதால் ஜாதகருக்கு மேற்கண்ட பாவக தொடர்புகள் ஜாதகத்தில் வலிமை அற்று இருப்பதாக எடுத்துக்கொள்ளலாம்.
3,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர் 3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் முயற்சிகளில் படுதோல்வியையும், வீரியமிக்க செயல்திறன் அற்றவர் என்பதையும் தெளிவுபடுத்துகிறது, 9ம் பாவக வழியில் இருந்து உயர் கல்வி மற்றும் ஆய்வு படிப்பு போன்றவற்றில் தேர்ச்சி பெற வலிமையற்றவர் என்பதை உறுதி செய்கிறது, ஜாதகர் வீண் கற்பனையில் உலகில் சஞ்சரிக்கும் தன்மை பெற்றவர் என்பதையும் அறுதியிட்டு சொல்கிறது, மேலும் சுய ஜாதகத்தில் 3,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 200% விகித இன்னல்களை தரும் என்பதை கருத்தில் கொள்வது நல்லது, எனவே ஜாதகர் இந்தியாவின் உயரிய படிப்பான இந்திய ஆட்ச்சிப்பணிக்கு படிப்பது என்பது " எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போகிறார் " என்பதற்கான நிலையை தந்துவிடும் என்பதே சுய ஜாதகத்தில் உள்ள உண்மை நிலை.
8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு பூர்ண ஆயுளை தந்த போதிலும், திடீர் இழப்புகளையும், ஏமாற்றங்களையும் தவிர்க்க இயலாது, தொடர் தோல்விகளை தரக்கூடும், நிம்மதியின்மை என்பது ஜாதகரின் வாழ்க்கையை வெகுவாக பாதிக்கும்.
மேற்கண்ட ஜாதகத்தில் 1,4,5,7,11ம் வீடுகளை தவிர மற்ற 7வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது, குறிப்பாக 3,9ம் வீடுகள் பாதக ஸ்தான தொடர்பை பெறுவது ஜாதகருக்கு மிகுந்த இன்னல்களை சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து வாரி வழங்கும்.
நடைபெறும் குரு திசையில் சனி புத்தி 5ம் பாவக வழியில் இருந்து நன்மையை தந்த போதிலும், தேர்வுக்கான முயற்சி செய்த நேரத்தில் ஜாதகருக்கு பாதக ஸ்தான பலனை நடைமுறைக்கு கொண்டு வந்தது யாதொரு நன்மையையும் பெற இயலாத நிலையை தந்து விட்டது, மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் பாவக வழியிலான வலிமை இன்மை சரியான ஜீவனத்தை வழங்கவில்லை என்பதே உண்மை நிலை.
தம்பி ஜாதகம் :
லக்கினம் : சிம்மம்
ராசி : மகரம்
நட்ஷத்திரம் : அவிட்டம் 2 ம் பாதம்
1,3,5,7,9,11ம் வீடுகள் அனைத்தும் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 1,3,5,7,9,11ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும், குறிப்பாக 1ம் பாவக வழியில் இருந்து வளரும் சூழ்நிலையில் சிறப்பு, சுய கட்டுப்பாடு, நல்ல உடல் மன ஆரோக்கியம் என்ற வகையிலும், 3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, லட்சியங்களை அடைதல், சிறந்த தகவல் தொழில்நுட்ப அறிவு, வீரியமிக்க செயல்பாடுகள், வெற்றியை பெறுதல், தன்னம்பிக்கை என்ற வகையிலும், 5ம் பாவக வழியில் இருந்து சமயோசித அறிவு திறன், அதிபுத்திசாலித்தனம், வாய்ப்புக்களை பரிபூர்ணமாக பெற்று நலம் பெறுதல், இறை அருள் கருணையினால் அனைத்தும் எளிதாக கிடைத்தல், கற்ற கல்வி வழியிலான அபரிவித முன்னேற்றம் என்ற வகையிலும், 7ம் பாவக வழியில் இருந்து நல்ல நண்பர்கள், சிறந்த கூட்டாளிகள், அவர்கள் வழியிலான ஆதரவு, பொதுமக்கள் ஆதரவு, செல்லும் இடங்களில் கிடைக்கும் மதிப்பு மரியாதை, பரிபூர்ண நன்மைகளை சுவீகரிக்கும் வல்லமை என்ற வகையிலும், 9ம் பாவக வழியில் இருந்து மிகசிறந்த அறிவு திறன், உயர்கல்வி, ஆய்வுக்கல்வி, நிர்வாக படிப்பு போன்றவற்றில் அதீத தேர்ச்சி, கற்ற கல்வி வழியிலான நன்மைகளை ஜாதகர் சுவீகரிக்கும் வல்லமை, அரசு துறை ஆதரவு என்ற வகையிலும், 11ம் பாவக வழியில் இருந்து நீடித்த அதிர்ஷ்டம், முற்போக்கு சிந்தனை, மிக எளிதாக அனைத்தும் கிடைத்தல், தெய்வீக அனுக்கிரகம், அறிவார்ந்த முயற்சிகள் வழியிலான ராஜயோக பலன்கள் என்ற வகையிலும் சிறப்பான நன்மைகளை தரும் என்பது கவனிக்கத்தக்கது.
2ம் வீடு குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர் சிறந்த வாக்கு வன்மையும், பேச்சு திறனும் கொண்டவர் என்பதை தெளிவு படுத்துகிறது, தனம் சார்ந்த விஷயங்களில் தன்னிறைவு கொண்டவர் என்பதுடன் ஒழுக்கம் மற்றும் நேர்மையை கடைபிடிக்கும் வல்லமை பெற்றவர் என்பதுடன், நிறைவான பொருளாதர முன்னேற்றம் மற்றும் இனிமையான குடும்ப வாழ்க்கையை பெற்று மகிழ்ச்சியுடன் இல்வாழ்க்கையை நடத்த தகுதி கொண்டவர் என்பதை உறுதிப்படுத்துகிறது.
4,8,10,12ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 4ம் பாவக வழியில் இருந்து சொத்து சுக சேர்க்கை, வண்டி வாகன யோகம், நல்ல குணம், சுய உழைப்பில் வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுபவர் என்பதையும், 8ம் பாவக வழியில் இருந்து திடீர் அதிர்ஷ்டம், அந்தஸ்த்து கவுரவம் போன்றவற்றை விரைவாக பெறுதல், சகல வசதிமிக்க உத்தியோகம், பதவியில் திடீர் உயர்வு என்ற வகையிலும், 10ம் பாவக வழியில் இருந்து சிறந்த உத்தியோகம், வியாபார முன்னேற்றம், செய்யும் தொழில் வேலை முதலியவற்றில் அபரிவித வளர்ச்சி, வெற்றிகரமான யோக வாழ்க்கை, கம்பீரமான பேச்சு, தீர்க்கமான வாத திறன் என்ற வகையிலும், 12ம் பாவக வழியில் இருந்து எதிரிகளின் சூழ்ச்சியே ஜாதகருக்கு சாதகமாக மாறும், அரசு பதவியில் திடீர் உயர்வு, தொழில் மற்றும் பணியில் திடீர் அதிர்ஷ்டம், ரகசிய ஏஜென்ட் என்ற வகையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும்.
6ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது பங்கு கொள்ளும் அனைத்து தேர்விலும் தேர்ச்சியை தரும், வழக்குகளில் வெற்றி என்றவகையில் நன்மையை தந்த போதிலும், உடல் நலம் சார்ந்த பாதிப்புகள் சில நேரங்களில் தொந்ததரவை தரக்கூடும் என்பது மட்டும் சற்று கவனிக்க வேண்டிய விஷயமாகும்.
இந்த ஜாதகருக்கு லக்கினம் முதல் பனிரெண்டு வீடுகளும் தாம் தொடர்பு பெரும் பாவக வழியில் இருந்து சகல யோகங்களையும் தருவது கவனிக்கத்தக்கது, மேலும் நடைபெறும் குரு திசை ஜாதகருக்கு 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவக தொடர்பை பெற்று ஜாதகருக்கான அரசு வேலையை உறுதி செய்தது, குரு திசையில் சனி புத்தி 5ம் பாவக வழியில் இருந்து கற்ற கல்வி வழியிலான அதிர்ஷ்டத்தை பரிபூர்ணமாக தந்தது, ஜாதகருக்கான ஜீவன மேன்மையை மேலும் அதிர்ஷ்டகரமானதாக மாற்றியது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.
இருவரது ஜாதகத்திலும் 5நிமிட வித்தியாசம் என்ற போதிலும் பாவக வழியிலான தொடர்புகள் வெகுவாக மாறியிருப்பது கவனிக்கத்தக்கது, இது நிமிடத்திற்கு நிமிடம் மாற்றம் பெரும் என்பதுடன், இருவரும் சுவீகரிக்கும் பலாபலன்கள் என்பது முற்றிலும் வேறுபடும் என்பதே உண்மை நிலை, இரட்டை பிறவிதானே இருவருக்கும் ஒரே பலாபலன்கள் நடைபெறும் என்று கருதுவது சுய ஜாதக கணிதம் பற்றிய நுணுக்கம் அறியாமல் வைக்கப்படும் வாதமாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது.
தங்களின் கேள்விக்கான பதில்
தங்களின் மூத்த மகனுக்கு அரசு பணி கிடைக்க வாய்ப்பு என்பது சற்று குறைவு, ஜாதகர் சிறு வியாபாரம் அல்லது ஓர் அடிமை தொழிலை தேர்வு செய்து அதில் வெற்றி பெறலாம், மற்றவர்கள் விஷயத்தில் தலையீடு செய்வது ஜாதகருக்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்தும், தனது முயற்சியை கைவிடாமல் போராடி நலம் பெறுவது அவசியமாகிறது.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

சனி, 16 செப்டம்பர், 2017
தொழில் ஸ்தானம் தரும் யோக வாழ்க்கை : கூட்டு தொழில் செய்வது சரியானதா ? சுய தொழில் செய்வது சரியானதா ?
" அவனின்றி ஓர் அணுவும் அசையாது, அனைத்து இயக்கங்களுக்கும் காரணம் இறைவன் ” என்பதற்க்கு இணங்க சுய ஜாதகத்தில் " லக்கினம் " எனும் முதல் பாவகம் ஓர் ஜாதகரை இயக்குவதில் முன்னுரிமை பெறுகிறது, லக்கினம் என்பது அவரவர் பிறந்த தேதி,நேரம் மற்றும் இடம் ஆகிய காரணிகளால் நிர்ணயம் செய்படுகிறது, லக்கினத்தில் அடிப்படையாக கொண்டு 12பாவகங்களின் வலிமை நிலையும் சுய ஜாதகத்தில் நிர்ணயிக்கபடுகிறது என்றால் அது மிகையில்லை அன்பர்களே ! இதில் தொழில் ஸ்தானம் எனும் 10ம் பாவகம் நான்காவது கேந்திரமாகவும், ஜாதகரின் ஜீவன வாழ்க்கையை பற்றியும் தெளிவுபடுத்துகிறது, சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம் வலிமை பெற்று கேந்திரம் மற்றும் கோண பாவகங்களுடன் தொடர்பு பெற்றோ, வீரியம் மற்றும் லாப ஸ்தானத்துடன் தொடர்பு பெற்றோ இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகரின் ஜீவன வாழ்க்கை என்பது அபரிவிதமான முன்னேற்றங்களுடன், தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகளை பெற்று இந்த புவியில் சுயமரியாதை,கௌரவம் மற்றும் அந்தஸ்து குறையாத யோக வாழ்க்கையை தனது வாழ்நாளில் சுவீகாரம் செய்யும் வல்லமை பெற்றவர் என்பது உறுதியாகும்.
மாறாக சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10 வீடு, மறைவு ஸ்தானமான 6,8,12ம் பாவகங்களுடன் சம்பந்தம் பெற்றோ, தனது லக்கினத்திற்கு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றோ இருப்பின் ஜாதகரின் ஜீவன வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிடும், ஜாதகருக்கு தனது ஜீவனத்தை கௌரவமாக நடத்த வாய்ப்பு இல்லாத சூழ்நிலைகளை உருவாக்கும், ஜீவன ரீதியாக ஜாதகர் வெறும் திட்டமிடுதல்களை மட்டுமே செய்ய இயலும் நடைமுறைக்கு கொண்டுவருவது என்பது குதிரை கொம்பாக இருக்கும், குறிப்பாக ஜாதகரின் 10ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் தொழில் மற்றும் வேலைவாய்ப்பை கடுமையாக பாதிக்கும், மேலும் கௌரவ குறைவான வாழ்க்கையை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், ஜாதகர் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்து எடுக்கும் முயற்சிகள் யாவும் மிகப்பெரிய தோல்விகளை வாரி வழங்கும், ஜாதகரின் நம்பிக்கையும், செயல்திறனும் முற்றிலும் பாதிக்கப்பட்டு, போராட்டம் ஒன்றே வாழ்க்கையாக மாறிவிட வாய்ப்பு உண்டு, ஜாதகரின் அறிவுரையை ஏற்கும் அனைவரும் வெற்றிமேல் வெற்றி பெறுவார், ஆனால் ஜாதகருக்கோ தோல்வி ஒன்றே பரிசாக கிடைக்கும், இதை தவிர்க்க ஜாதகர் தனது சுய ஜாதகத்தில் உள்ள மற்ற பாவகங்களின் வலிமை பயன்படுத்தி நலம்பெறலாம், இதற்க்கு தனது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையை பற்றி தெளிவு பெற்று இருப்பதும், நடைபெறும் திசா புத்திகள் மற்றும் எதிவரும் திசா புத்திகள் ஏற்று நடத்தும் பாவகங்களின் வலிமை பற்றி தெளிவு பெற்று இருப்பதும் அவசியமாகிறது.
சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று நடைமுறையில் உள்ள திசா புத்தியும், எதிர்வரும் திசாபுத்தியும் வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் ஜாதகரின் ஜீவன வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றி உண்டாகும், செய்யும் தொழில் மற்றும் பணியில் தன்னிறைவான முன்னேற்றங்களை பெற்றும் ஜீவன ரீதியாக யோக வாழ்க்கையை பெறுவார் என்பது உறுதி, கிழ்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் ஜீவன பாவக வலிமை, கூட்டு தொழில் யோகம் மற்றும் தற்பொழுது நடைபெறும் திசை தரும் பலன்கள், எதிர்வரும் திசை தரும் பலாபலன்கள் பற்றிய விரிவான விளக்கத்தை சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !
லக்கினம் : துலாம்
ராசி : கும்பம்
நட்சத்திரம் : அவிட்டம் 4ம் பாதம்
ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானத்துடன் தொடர்பு பெரும் வீடுகள், தொடர்பு படுத்தும் பாவகம் பற்றி பார்ப்போம் அன்பர்களே 4,8,9,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் மிகுந்த வலிமையுடன் இருப்பதை தெளிவு படுத்துகிறது, மேலும் ஜாதகரின் ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்க்கு சுக ஸ்தானம் எனும் 4ம் வீடாக அமைவது வரவேற்க தக்க சிறப்பு அம்சமாகும், இதானால் ஜாதகரின் ஜீவன வலிமை மேலும் மெருகேறி அதி அற்ப்புதமான ஜீவன முன்னேற்றங்களை வாரி வழங்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை, ஜாதகருக்கு 4,8,9,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மாத்ரு ஸ்தான வழியில் இருந்து நல்ல சுக போகங்களை தான் செய்யும் தொழில் வழியில் இருந்து ஜாதகர் பெறுவார், மண் மனை, வண்டி வாகனம் சார்ந்த தொழில்களில் கொடிகட்டி பறக்கும் யோகத்தை தரும், தனது தாயார் வழியில் இருந்து சொத்து சுக சேர்க்கையையும், நிதி உதவிகளையும் பெரும் யோகம் பெற்றவர், போக்குவரத்து தொழில் வண்டிவாகனம் சார்ந்த தொழில்கள் ஜாதகருக்கு அபரிவிதமான வளர்ச்சியை தரும், சரக்கு உந்து, போருந்து, சொகுசு வாகனங்கள் மூலம் வாழ்க்கையில் ஜாதகருக்கு நல்ல வருமானமும், முன்னேற்றமும் உண்டாகும்.
ஆயுள் ஸ்தான வழியில் இருந்து ஜாதகருக்கு மருத்துவ துறை, அல்லது மருந்து பொருட்கள், ஆயுள் காப்பீடு, இன்சூரன்சு, மருத்துவ உபகரணம் சார்ந்த தொழில்களில் அபரிவிதமான வெற்றிகளை வாரி வழங்கும், ஜாதகரின் வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் பொருளாதார உதவிகள் ஜாதகரை மதிப்பு மிக்க தொழில் அதிபர் என்ற நிலைக்கு குறுகியகாலத்தில் உயர்த்தும், தனது திருமணத்திற்கு பிறகான வளர்ச்சி என்பது ஜாதகரே நினைத்து பார்க்காத வண்ணம் அமையும் என்பது சுய ஜாதகத்தில் உள்ள உண்மை நிலை, மேலும் ஜாதகரின் ஆயுள் பாவகம் வலிமை பெறுவது ஜாதகருக்கு நீண்ட ஆயுளையும், வாழ்க்கை துணை வழியிலான தன சேர்க்கையையும் எதிர்பாராத நேரங்களில், திடீர் அதிர்ஷ்டமாக வாரி வழங்கும், தனம் சார்ந்த தொழில்களில் குறிப்பாக நிதி நிறுவனம், வட்டி தொழில், வாக்கு வன்மையின் மூலம் பெரும் வாருமானம் என ஜாதகரின் ஜீவன வாழ்க்கைக்கு மேலும் மேலும் மெருகேற்றும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அமசமாகும்.
பாக்கிய ஸ்தான வழியில் இருந்து ஜாதகர் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் யோகத்தை தரும், குறிப்பாக ஜாதகர் பேராசிரியர், கல்வி துறை சார்ந்த தொழில்களில் மிகப்பெரிய வருமான வாய்ப்புகளை தரும், கல்வி கூடங்கள் நடத்துவது, கல்வி பணி சார்ந்த தொழில்களில் ஈடுபடுவது மூலம் அபரிவிதமான வெற்றிகளை வாரி வழங்கும், குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகள் நடத்துவது மூலம் மிகப்பெரிய வெற்றிகளை பெறலாம், அல்லது தனது முன்னோர்கள் செய்து வந்த பாரம்பரிய தொழில்களில் நல்ல வெற்றி வாய்ப்புகளை பெறலாம், அறிவு சார்ந்த தொழில்கள், ஆன்மீக தொழில் போன்றவற்றில் சிறப்புகளை தரும்
ஜீவன ஸ்தான வழியில் இருந்து ஜாதகர் தான் செய்யும் தொழில் வழியிலான பலாபலன்களை முழு அளவில் பெறுவதற்கு தகுதி உள்ளவர் என்பது உறுதியாகிறது, ஜாதகரின் ஜீவன ஸ்தான அதிபதி புதன் என்பதால் ( உயர் கணித ஜோதிட விதிபடி ) ஜாதகரின் மன ஆற்றலும் அறிவு திறனும் ஒருங்கே இணைந்து செயல்படும், இதனால் ஜாதகரின் மனதில் எண்ணிய காரியங்கள் மற்றும் தொழில் முன்னேற்றங்களை வெற்றிகரமாக தனது அறிவு திறன் கொண்டு தொடர்ந்து பெற்ற வண்ணமே இருப்பார் என்பது மேற்கண்ட ஜாதகத்தில் உள்ள சிறப்பு அம்சமாகும், ஜாதகரின் தொழில் வன்மையும், தெளிவான திட்டமிடுதல்களும் ஜாதகருக்கு தொடர் வெற்றிகளையும், கை நிறைவான வருமானங்களையும் வாரி வழங்கிய வண்ணமே இருக்கும், ஜாதகர் கை தேர்ந்த வியாபாரியாகவும், திறமை மிக்க தொழில் அதிபராகவும் பரிணமிக்க சுய ஜாதகத்தில் உள்ள ஜீவன ஸ்தான வலிமை நூறு சதவிகிதம் உதவி புரியும், ஜீவன ஸ்தானம் சர ராசியில் வலிமை பெற்று இருப்பது குறுகியகாலத்தில் "கோடிஸ்வர " யோகத்தை நல்கும், ஜாதகரின் ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சர நீர் தத்துவ ராசியில் வலிமை பெற்று இருப்பது ஜாதகர் செய் தொழிலில் தன்னிறைவான முன்னேற்றங்களை தொடர்ந்து பெறுபவர் என்பதுடன், அழிவு நிலை பொருட்களான உணவு பொருட்கள், தானியம், எண்ணை பொருட்கள், துணி மற்றும் நீர் தத்துவம் சார்ந்த தொழில்களில் அபரிவிதமான வளர்ச்சியை பெறுபவர் என்பதை உறுதி செய்கிறது.
மேற்கண்ட ஜாதகரின் சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமையுடன் இருப்பதும், ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பாவகங்கள் வழியில் இருந்து ஜாதகர் சுப யோகங்களை தடையின்றி பெறுவார் என்பதும் தெளிவாகிறது, அடுத்து தற்பொழுது நடைபெறும் குரு திசை ஜாதகருக்கு தரும் பலன்களை சிந்தனைக்கு எடுத்துகொள்வோம், குரு திசை ஜாதகருக்கு 7,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் 200% விகித இன்னல்களை நடத்தி கொண்டு இருப்பது ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று இருந்தும், அதனால் உண்டாகும் யோக வாழ்க்கை பெற இயலாத சூழ்நிலையை உருவாக்கும், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்றநிலையை தருவது வருத்தத்திற்கு உரிய ஒன்றாக் கருத வேண்டியுள்ளது, அடுத்து வரும் சனி திசை ஜாதகருக்கு 9ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக பலனை தருவது தொழில் ரீதியான யோக பலன்களை அனுபவிக்கும் யோக அமைப்பை தரும், குரு திசை ஜாதகருக்கு சிறப்பை தரவில்லை என்பதே உண்மை நிலை, நடப்பது குரு திசை தானே, நன்மையை செய்யும் என்று கருதி ஜாதகர் செயல்பட்டால், அனைத்தையும் பாதக ஸ்தான வழியில் இழந்து இன்னலுற நேரும் என்பதை கருத்தில் கொள்வது ஜாதகருக்கு நன்மையை தரும், ஏனெனில் நடைபெறும் குரு திசை பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்திக்கொண்டு இருக்கின்றது.
ஜாதகர் கூட்டு தொழில் செய்யலாமா ?
சுய ஜாதகத்தில் 7ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகத்திலேயே மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட பாவக தொடர்பு ஆகும், இது ஜாதகரின் வாழ்க்கையில் 7,11ம் பாவக வழியில் இருந்து அளவில்லா இன்னல்களை தரும், குறிப்பாக கூட்டாளி, நண்பர்கள், வெளிவட்டாரம் சார்ந்த விஷயங்களில் இருந்து ஜாதகருக்கு 200% விகித இன்னல்களை வாரி வழங்கும், கூட்டு தொழில் செய்ய சுய ஜாதகத்தில் 7ம் வீடு மிக மிக வலிமையுடன் இருப்பதும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு துலாம் வலிமை பெற்று இருப்பதும் அவசியமாகிறது, மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 7ம் வீடு பாதக ஸ்தான தொடர்பை பெறுவது கூட்டு தொழில் மூலம் மிகப்பெரிய தோல்விகளையும், நஷ்டங்களையும் ஏற்ப்படுத்தும், எதிர்பால் இன சேர்க்கை மூலம் ஜாதகர் தனது ஜீவன முன்னேற்றத்திற்கு தானே தடைகளை ஏற்ப்படுத்திகொண்டு இன்னளுருவார் என்பது உறுதியாக தெரிவதால், தயவு செய்து கூட்டு தொழில் செய்வதை தவிர்ப்பதே சால சிறந்தது, பொருளாதர கஷ்டத்தில் இருந்து ஜாதகர் தப்பிக்க இயலும் என்பதே சுய ஜாதகத்தில் உள்ள உண்மை நிலை.
குறிப்பு :
சுய ஜாதகத்தில் 7ம் வீடு வலிமை அற்று இருப்பது ( பாதக ஸ்தான தொடர்பு ) ஜாதகர் கூட்டு தொழில் செய்ய அருகதை அற்றவர் என்பதை உறுதிபடுத்துகிறது, மேலும் நடைபெறும் குரு திசை சாதகம் இன்றி இருப்பது ஜாதகர் ஏதாவது ஓர் பணியில் ஈடுபடுவதே நன்மைகளை தரும், எதிர்வரும் சனி திசையில் சுய தொழில் சார்ந்த முயற்சிகளை மேற்கொண்டு நலம் பெறலாம், "வாழ்த்துகள் "
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
வியாழன், 9 மார்ச், 2017
தொழில் யோகங்களை வழங்கும் பத்தாம் பாவக வலிமையும், ஜாதகருக்கு அமையும் தொழில் வாய்ப்புகளும் !
" செய்யும் தொழிலே தெய்வம், அதில் திறமை நமது செல்வம் " என்ற வாசகத்தை மெய்ப்பிக்க சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம் வலிமை பெறுவது மிக மிக அவசியமாகிறது, ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவதுடன் சுய ஜாதகத்தில் மற்ற பாவகங்கள் வலிமை பெறுவது, ஜாதகரின் வாழ்க்கையில் தொழில் ரீதியான விருத்திகள் பன்மடங்கு அதிகரிக்கும், தமக்கு உகந்தது சுய தொழிலா? அல்லது அடிமை தொழிலா? என்பதை தேர்வு செய்ய சுய ஜாதகத்தில் ஜீவனஸ்தானம் எனும் 10ம் வீடு தொடர்பு பெரும் பாவக வழியில் இருந்து மிக தெளிவாக உணர இயலும், மேலும் தான் தேர்வு செய்ய வேண்டிய துறை எதுவென்று நிர்ணயம் செய்யவும் ஜீவன ஸ்தானம் தொடர்பு பெரும் பாவகம் நமக்கு நன்கு உணர்த்தும்.
தொழில் துறையில் மூன்று பிரிவுகள் உண்டு 1) உற்பத்தி துறை 2) விற்பனை துறை 3) சேவை துறை மேற்கண்ட மூன்று பிரிவுகளில் ஜாதகருக்கு உகந்ததை தேர்வு செய்யவோ அல்லது இயற்கையாக அமையவோ சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் மிகவும் வலிமையுடன் இருப்பது அவசியாமாகிறது, சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் வீடு தொடர்பு பெரும் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு எந்த ராசியாக அமைகிறது என்பது மிக முக்கியம், ஏனெனில் ஜாதகரின் ஜீவனத்தை நிர்ணயம் செய்வதில் சம்பந்தப்பட்ட ராசி மிக முக்கிய பங்கு வகிக்கிறது, மேலும் சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் வீடு எக்காரணத்தை கொண்டும் 6,8,12ம் பாவகங்களுடன் சம்பந்தம் பெறாமல் இருப்பது ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளை தரும், மேலும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறாமல் இருப்பது, ஜாதகருக்கு தொழில் ரீதியான வெற்றிகளை சரளமாக வாரி வழங்கும், மாறாக மேற்கண்ட பாவகங்களுடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் வாழ்க்கையை ஜீவன ரீதியாக கடும் நெருக்கடிகளையும், சுய மரியாதை குறைவான தொழில்களை தேர்வு செய்து ஜீவனம் செய்யு சூழ்நிலைக்கு ஆளாக்கும், குறிப்பாக பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் ஜீவன வாழ்க்கையையே கேள்விக்குறியாக மாற்றிவிடும் என்பது கவனிக்கத்தக்க விஷயம், சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் பெரும் யோக வாழ்க்கையை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வோம் அன்பர்களே !
லக்கினம் : கும்பம்
ராசி : மேஷம்
நட்ஷத்திரம் : அஸ்வினி 3ம் பாதம்
கால புருஷ தத்துவ அமைப்பிற்கு லாபம் மற்றும் அதிர்ஷ்டத்தை குறிக்கும் வீடான கும்பராசியை லக்கினமாக பெற்ற மேற்கண்ட ஜாதகருக்கு, சுய ஜாதகத்தில் 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளை தரும் அமைப்பாகும், ஜாதகரின் ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 8ம் வீடாக அமைந்து வலிமை பெற்று இருப்பது ஜாதகர் தான் செய்யும் தொழில் வழியிலான யோகங்களை புதையலுக்கு நிகராக பெறுவார் என்பதை தெளிவு படுத்துகிறது, மேலும் ஜீவன ஸ்தானம் ஜாதகருக்கு ஸ்திர நீர் தத்துவ அமைப்பை பெறுவது ஜாதகரின் மன எண்ணத்தில் எண்ணியபடி ஜீவன வாழ்க்கை சிறப்பாக அமையும், மனதில் என்ன நினைக்கின்றாரோ அதன்படியே ஜீவன முன்னேற்றமும், தொழில் வழியிலான விருத்தியையும் பெறுவார், மேலும் ஜாதகர் தனது மன உறுதியான செயல்பாடுகள் மூலம் உலகையே தன்பக்கம் திரும்பி பார்க்க வைக்கும் வல்லமை பெற்றவராக திகழ்வார்.
கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் வீடான கும்ப ராசியை லக்கினமாக பெறுவதும், லக்கினமும் 100% விகித வலிமையை பெறுவதும் ஜாதகர் மிகுந்த அதிர்ஷ்டசாலி என்பதை தெளிவு படுத்துகிறது, பிறப்பில் இருந்தே ஜாதகர் அதிர்ஷ்டகரமான யோக வாழ்க்கையை பெறுபவர் என்பதை வலிமை பெரும் லக்கின வழியில் இருந்து நாம் தெளிவாக உணர்ந்துகொள்ள முடியும், மேற்கண்ட ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகருக்கு யோக வாழ்க்கையை வழங்குகிறது என்பது ஓர் சிறப்பு அம்சம் என்ற போதிலும், ஜீவன ஸ்தானத்துடன் மற்ற வீடுகள் எந்த வகையிலாவது தொடர்பை பெருகின்றதா ? என்பதில் தெளிவு பெறுவது ஜாதகரின் ஜீவன ரீதியான முன்னேற்றம் பற்றியும், ஜீவனம் சார்ந்து ஜாதகர் பெரும் முழு வலிமையை பற்றியும் தெளிவாக அறிந்துகொள்ள உதவும்.
மேற்கண்ட ஜாதகருக்கு 10ம் வீடு ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதுடன் மட்டும் அல்லாமல் 1,4,7,8ம் வீடுகளும் ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு லக்கின வழியில் இருந்து அந்தஸ்து, சுய மரியாதை, பெயரும் புகழும் கிடைத்தால், செல்வாக்கு, அரசு மரியாதை ஆகியவை தேடி வரும், 4ம் பாவக வழியில் இருந்து சுயமாக சொத்து சுக சேர்க்கை, வீடு நிலம், வண்டி வாகன யோகம், தொழில் நிறுவனங்களை திறம்பட நடத்தும் வல்லமை, தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகளை வாரி வழங்கும், 7ம் பாவக வழியில் இருந்து கூட்டாளிகள் வழியில் யோகம், நண்பர்கள் உதவி, வாழ்க்கை துணையின் ஆதரவு, பொதுமக்கள் ஆதரவு, நிறுவன தொழிலாளர்கள் ஆதரவு என அனைத்து வழிகளிலும் சிறப்பான ஆதரவை தரும், 8ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் செய்யும் தொழில் வழியில் புதையலுக்கு நிகரான அதிர்ஷ்டங்களையும், தன சேர்க்கையையும் தரும், மேற்கண்ட ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 8ம் ராசியாக அமைவதும், சுய ஜாதகத்தில் 8ம் வீடு அதே ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதும் ஜாதகத்திலே சிறப்பான அம்சமாக கருதலாம், ஏனெனில் ஜாதகரின் ஜீவனம் புதையலுக்கு நிகரான தன சேர்க்கையை தருவதற்கு மேற்கண்ட அமைப்பே மூல காரணமாக அமையும், மேலும் இது சார்ந்த நன்மைகளை ஜாதகர் தனது வாழ்க்கை துணை வழியில் ( திருமணத்திற்கு பிறகு ) முழு அளவில் அனுபவிப்பார்.
மேற்கண்ட ஜாதகருக்கு ஜீவன ரீதியான பாவக தொடர்புகள் வலிமை பெற்று இருப்பினும், தற்போழுது நடைபெறும் சூரியன் திசையிலும், அடுத்து வரும் சந்திரன் திசையிலும் நடைமுறைக்கு வாராது, அதற்க்கு பிறகு வரும் ராகு திசையில்தான் மேற்கண்ட பலாபலன்களை ஜாதகர் அனுபவிக்க இயலும் என்பதே ஜாதகத்தில் உள்ள "சூட்சமம்" என்றால் அது மிகையில்லை.

சனி, 5 நவம்பர், 2016
சுய தொழில் அல்லது அடிமைத்தொழில் எதை தேர்வு செய்வது?
கேள்வி :
வணக்கம், கடந்த 10 வருடங்களுக்கு முன் சுயமாக தொழில் செய்து, மிகப்பெரிய நஷ்டம், தற்போழுது திருப்தி இன்றி ஓர் நிறுவனத்தில் பணியாற்றி கொண்டு இருக்கின்றேன், வருமான பற்றாக்குறை, பொருளாதார சிக்கல்கள் அதிகம் உள்ளது, சுய தொழில் செய்ய வாய்ப்பு தற்போழுது நண்பர்கள் வழியில் இருந்து வருகின்றது, துணிந்து செய்யலாமா? அல்லது தற்போழுது உள்ள வேலையிலேயே தொடர்ந்து இருக்கலாமா ? தெளிவான விளக்கம் தேவை.
பதில் :
ஒருவரது சுய ஜாதகத்தில் தொழில் வெற்றிகளை வழங்கும் பாவகங்கள் (1,4,7,10,11 ) வலிமை பெற்று இருந்தால் நிச்சயம் சுய தொழில் செய்யலாம், தட்டாமல் செய்யும் தொழிலில் வெற்றிகளை வாரி குவிக்கும், அபரிவிதமான தொழில் வளர்ச்சியை வாரி வழங்கும், குறிப்பாக ஒருவரது ஜீவன ஸ்தானம் உபய ராசியில் அமைந்து ( உபய லக்கின அன்பர்கள் அனைவரையும் சாரும் ) வலிமை பெற்றும், லாபம் மற்றும் அதிர்ஷ்டத்தை குறிக்கும் 11ம் வீடு தனது பாவகத்துடன் தொடர்பு பெற்றும் வலிமையுடன் இருந்தால் ஜாதகர் சுய தொழில் செய்வதற்கு யோகம் பெற்றவர் எனலாம், தங்களது ஜாதக வலிமை நிலை மிகவும் அபரிவிதமாக உள்ளது தெளிவாகிறது, பெரும்பாலான பாவகங்கள் தங்களுக்கு மிகவும் வலிமையுடன் காணப்படுகிறது, தொழிலை குறிக்கும் 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம், லாபம் மற்றும் அதிர்ஷ்டத்தை குறிக்கும் 11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடனே சம்பந்தம், இது தங்களது ஜாதகத்தில் சுய தொழில் செய்வதற்கு உகந்த அமைப்பாகும், எனவே தங்கள் சுய தொழில் செய்ய வல்லமை உடையவர் எனலாம்.
மேலும் தங்களது ஜாதகத்தில் சுய தொழில் செய்வதற்கு வலிமை சேர்க்கும் பாவகங்களான லக்கினம் எனும் முதல் வீடு வலிமை பெறுவது, தங்களின் தொழில் ஆர்வத்தையும், முழு வீச்சில் செயல்படும் தன்னம்பிக்கையும் தெளிவு படுத்துகிறது, நான்காம் பாவகம் வலிமை பெறுவது வண்டி வாகன தொழில் சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றத்தையும், எதிர்காலத்தையும் தரும் என்பதை தெளிவு படுத்துகிறது, களத்திர ஸ்தானம் வலிமை பெறுவது நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் மூலம் வாழ்க்கையில் தொழில் முன்னேற்றங்களை பெறுபவர் என்பதை தெளிவு படுத்துகிறது, ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது ஓர் இடத்தில் பணியாற்றுவதைவிட, சுய தொழில் செய்வதே தங்களுக்கு பொருத்தமானது என்பதை தெளிவு படுத்துகிறது, லாப ஸ்தானம் வலிமை பெறுவது செய்யும் தொழிலில் அபரிவிதமான அதிர்ஷ்டத்தையும் மிகப்பெரிய லாபங்களை பெரும் யோகம் கொண்டவர் என்பது 100% சதவிகிதம் தெளிவாகிறது, மேற்கண்ட விஷயங்கள் ஒருவரது ஜாதகத்தில் சுய தொழில் செய்ய வல்லமை உள்ளவரா? என்பதை உறுதி படுத்த பயன்படும்.
மேலும் தங்களின் ஜாதகத்தில் வீரிய ஸ்தானம் வலிமை பெறுவது, சிறந்த வியாபார நுணுக்கம் பெற்றவர் என்பதும் செய்யும் தொழிலில் நல்ல விருத்தியை பெறுபவர் என்பதும் தெளிவாகிறது, சரியான திடடமிடுதல்களுடன் தனது தொழிலினை முன்னேற்ற பாதையில் நடத்திச்செல்லும், தன்மை பெற்றவர் என்பதும் தெளிவாகிறது, பூர்வ புண்ணியம் வலிமை பெறுவது தங்களின் அறிவு திறனும், புத்திசாலித்தனமும், தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய அதிர்ஷ்ட வாய்ப்புகளை நல்கும் என்பதை தெளிவுபடுத்துகிறது, சத்ரு ஸ்தானம் வலிமை பெறுவது தொழில் முறை எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாகவும், எதிரிகளின் வழியில் நன்மையை அனுபவிக்கும் யோகம் பெற்றவர் என்பதனையும், பாக்கிய ஸ்தானம் வலிமை பெறுவது செய்யும் தொழிலில் நற்பெயரும், பிரபல்யமும் வழங்கும் என்பது உறுதியாகிறது.
தங்களது சுய ஜாதகம் சுய தொழில் செய்வதற்கு முழு தகுதி கொண்டதாக இருப்பதால் 100% சதவிகிதம் தங்கள் சுய தொழில் செய்வதே சாலசிறந்து, ஓர் இடத்தில் பணியாற்ற உகந்தது அல்ல என்பதை ஜோதிடதீபம் தெளிவுற விளக்கம் தர கடமைப்பட்டுள்ளது, அடுத்து சுய ஜாதகம் மிகவும் வலிமை பெற்று இருந்தும் இதற்க்கு முன் செய்த தொழில் பெரும் நஷ்டத்தை வழங்கியதற்கு இரண்டு காரணங்களை சொல்லாம்,
1) தாங்கள் தொழில் துவங்கிய நேரத்தில் தங்களுக்கு நடைபெற்ற சந்திரன் திசை 2,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, 8ம் பாவக பலனை ஏற்று நடத்தியது, இதன் காரணமாகவே தாங்கள் செய்த தொழிலில் மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்க நேர்ந்தது, ஒருவரது சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெறுவது முக்கியம் அல்ல, நடைமுறையில் உள்ள திசையும், எதிர்வரும் திசையும் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டும் அதற்குண்டான யோக பலன்களை ஜாதகர் அனுபவிக்க இயலும், தற்போழுது நடைபெறும் செவ்வாய் திசையும், எதிர்வரும் ராகு மற்றும் குரு திசையும் தங்களுக்கு மிகப்பெரிய அளவிலான நன்மைகளையும் அதிர்ஷ்டத்தையும் தர தயாராக உள்ளதால், இதுவே தாங்கள் சுய தொழில் செய்ய சரியான நேரம் எனலாம்.
2) தங்களது சுய ஜாதகத்தில் பூர்வபுண்ணியம் எனும் 5ம் பாவகம் வலிமை பெற்று இருப்பது சிறப்பான நன்மைகளை தரும் அமைப்பாகும், தங்கள் இதற்க்கு முன் துவங்கிய தொழில் தங்களது பூர்வீகத்தில் இல்லமால், வெகு தொலைவு சென்று வேறு மாவட்டத்தில் ஆரம்பித்தது தவறு, சுய ஜாதகத்தில் பூர்வபுண்ணியம் வலிமை பெற்று இருப்பின், ஜாதகர் எந்த ஒரு தொழிலையும் தனது பூர்வீகத்திர்க்கு உற்ப்பட்ட இடத்திலேயே நிர்வகிப்பது நல்ல முன்னேற்றத்தை தரும், தங்களுக்கு நடந்த சந்திரன் திசை சிறப்பான நன்மைகளை தாராததும், செய்யும் தொழில் பூர்வீகத்தில் அமையாததும் மட்டுமே தங்களுக்கு திடீர் பேரிழப்பை தந்தது என்று தெளிவுற சொல்லலாம், இனிவரும் காலங்களில் இந்த தவறை செய்யாமல் நன்மை பெறுக.
சுய தொழில் செய்ய தகுதி உள்ள ஜாதகம் என்ற போதிலும், தங்களது ஜாதகத்தில் 2ம் பாவகம் பாதிக்கப்படுவது, தங்களுக்கு வாக்கு வழியில் இன்னல்களையும், வரும் வருமானத்தை வீண் செலவு செய்யும் தன்மையையும் தெளிவுபடுத்துகிறது, 8ம் பாவகம் பாதிக்கப்படுவது மற்றவர்களை நம்பி முதலீடு செய்வது உகந்தது அல்ல, தங்களின் கட்டுப்பாட்டில் அனைத்தையும் நிர்வகிப்பதே சாலசிறந்தது, மேற்க்கண்ட இரண்டு விஷயங்களிலும் தங்கள் அதிக கவனமுடன் செயல்படுவது தங்களின் முன்னேற்றத்திற்கு சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும், நீர்த்துவம் சார்ந்த தொழில்களை தவிர்ப்பது நலம் தரும், வண்டி வாகனம் மற்றும் கட்டுமான துறை தங்களுக்கு அளவில்லா தொழில் வளர்ச்சியை வாரி வழங்கும்.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
வெள்ளி, 24 அக்டோபர், 2014
ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் பாவகம் வழங்கும் தொழில் மேன்மை - மேஷ லக்கினம் பாகம் 5
கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் ராசியான மேஷ ராசியை லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு, ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று அமரும் பொழுது தரும் யோக பலன்களையும், வலிமை அற்று அமரும் பொழுது தரும் அவயோக பலன்களை பற்றியும் இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே! மேஷ லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு மகரம் ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் பாவகமாக அமையும், இந்த மகரம் மேஷ லக்கினதிர்க்கும் சரி, கால புருஷ தத்துவ அமைப்பிற்கும் சரி 10ம் வீடாகவே அமைகிறது, மேலும் சர மண் தத்துவ அமைப்பில் இயங்குகிறது, இந்த மகரம் மேஷ லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு 6,8,11,12ம் பாவகங்களுடன் தொடர்பு பெறாமல் இருந்தால் ஜாதகரின் ஜீவன மேன்மை மிகவும் சிறப்பாக இருக்கும் குறிப்பாக பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறாமல் இருப்பது மிகுந்த யோகத்தை தரும்.
மேஷ லக்கினத்திற்கு ஜீவன ஸ்தானம் தொடர்பு பெரும் பாவகங்களும், ஜாதகர் பெரும் நன்மைகளும்:
ஜீவன ஸ்தானம் ஒன்பதாம் பாவகத்துடன் தொடர்பு பெரும் பொழுது :
ஜாதகர் சிறந்த பேராசிரியாராக விளங்குவார், பல கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் தாளாளர், கல்வி துறையில் சிறந்து விளங்கும் மிக பெரிய மனிதராக வலம் வரும் யோகத்தை தரும், சமுதாயத்தில் நல்ல அந்தஸ்து மற்றும் மிகுந்த நற்ப்பெயரை பெரும் யோகத்தை தரும், சிறு கல்வி நிறுவனமாக துவங்கி, மிகப்பெரிய கல்வி சாம்ராஜ்ஜியத்தை நிறுவும் தன்மை பெற்றவர்கள் எனாலாம், இந்த அமைப்பை பெற்ற அனைவரையும் நாம் ஏணியுடன் ஒப்பிடலாம், இவரது அறிவும் திறனும் மற்றவர்களுக்கு மிகப்பெரிய அளவில் வெற்றியை தரும், ஜாதகர் பொது நலவாதியாக இருப்பார், தன்னம்பிக்கையும் மன உறுதியும் ஜாதகருக்கு மிகவும் அதிகமாக காணப்படும், எந்த ஒரு சூழ்நிலையிலும் ஜாதகர் நேர்மையை விட்டுத்தர விரும்ப மாட்டார், நமது தேசத்தின் பல உயரிய விருதுகளை பெரும், உண்மையான தகுதி பெற்றவர்கள் இவர்களே என்றால் அது மிகையில்லை, தனுசு உபய நெருப்பு தத்துவ அமைப்பில் இருப்பதால், ஜாதகர் ஆன்மீகம் சார்ந்த ஜீவன வாழ்க்கையும், கல்வி துறை மற்றும் சாஸ்திரம், எழுத்து, பத்திரிகை துறையில் மிகப்பெரிய வெற்றிகளை வாரி வழங்கும்
மேற்கண்ட அமைப்பை பெரும் ஜாதகர்கள் பலர் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் நபர்களாக காணப்படுகிறார்கள், விளையாட்டு துறையில் தனி நபர் அல்லது குழுவாக செயல்படும் யோகம் பெற்றவர்கள், தனது வெற்றிக்காக அல்லது தனது குழுவின் வெற்றிக்காக அயராது பாடுபடும் தன்மையை பெற்றவர்கள், எந்த ஒரு செயலையும் சரியான திட்டமிடுதலுடன் செய்து வெற்றி காணும் அன்பர்கள் இவர்களே ! இதை தவிர கிராமத்தில் ஊர் பெரியவர், அல்லது பஞ்சாயத்து தலைவர், தனது சமுகத்திற்கு தலைமை பொறுப்பேற்று நடத்தி செல்லும் தலைமை பதவியை அலங்கரிக்கும் நபர்கள், நகரம் அல்லது வட்டம் போன்றவற்றிற்கு தலைவர் செயலாளர், கட்சியில் நல்ல பொறுப்புள்ள பதவிகளில் சிறப்பாக செயலாற்றும் நபர்கள் அனைவரும் மேற்கண்ட அமைப்பை நிச்சயம் பெற்று இருப்பார்கள், அரசியல் ரீதியான பதவிகள் ஜாதகரை தேடிவரும், பொதுமக்களிடம் நல்ல மதிப்பு மரியாதையை பெரும் யோகம் பெற்றவர்கள் என்றால் அது மிகையில்லை.
குறிப்பு : ( பொதுமக்கள் அல்லது குழு ஆகியவற்றை சார்ந்த தொழில்களை, அல்லது பதவிகளை அலங்கரிக்கும் தன்மை பெற்றவர்கள், இவர்கள் அனைவரும் தனித்து செயல்படுவதை விட ஜீவன அமைப்பில் கூட்டு முயற்ச்சியில் பணியாற்றுவது சிறந்த யோகத்தை தரும்.)
ஜீவன ஸ்தானம் பத்தாம் பாவகத்துடன் தொடர்பு பெரும் பொழுது :
கால புருஷ தத்துவ அமைப்பிற்கும் லக்கினம் என்ற அமைப்பிற்கும் ஜீவன ஸ்தானமாக வருவதாலும், சர மண் தத்துவ அமைப்பாக மகரம் அமைவதாலும் , ஜாதகர் பன்முக தொழில் திறமை பெற்றவர் எனலாம், குறிப்பாக மண் தத்துவம் சார்ந்த தொழில்களில் கொடிகட்டி பறக்கும் யோகம் பெற்றவர்கள், எவரது சுய ஜாதகத்தில் இந்த மகரம் வலுபெற்று அமர்ந்து இருக்கின்றதோ, அந்த ஜாதகர் சர நில தத்துவத்தை குறிக்கும் மனித உடலின் உள்ள உறுப்புகள் சார்ந்த ஆய்வில் சிறந்து விளங்குவார்கள், ஒரு மனிதனை பார்த்த உடன் அவர் எவ்வித உடல் ரீதியான பாதிப்பில் உள்ளார் இவருக்கு என்ன செய்தால் நலம் பெறுவார் என்பதை மிக துல்லியமாக கண்டுணர்ந்து செயல்படும் வல்லமையை இறை அருள் இவர்களுக்கு இயற்கையிலேயே கொடுத்து இருப்பது ஆச்சரியாமான ஒன்றாகவே ஜோதிடதீபம் கருதுகிறது, பல சிறந்த சித்த மருத்துவர்கள் அனைவரது ஜாதகத்திலும் மகரம் மிகவும் வலிமை பெற்று அமர்ந்து இருப்பதை காண முடிகிறது, மேலும் மருத்துவம் சார்ந்த அனைத்து துறைகளிலும் இவர்கள் சிறந்து விளங்க இந்த மகரம் வலிமை பெற்றதே காரணமாக அமைகிறது.
இது உடல் சார்ந்த அமைப்பை மற்றும் தெளிவு படுத்துவதில்லை, மண் தத்துவம் சார்ந்த அனைத்து விஷயங்களிலும் ஜாதகரை தன்னிகரற்று விளங்க வைத்துவிடுகிறது, குறிப்பாக நிலம், வீடு, வண்டி வாகனம், பல தொழில்களில் சிறந்து விளங்கும் யோகம், பல பெரிய நிறுவனங்களை சிறப்பாக நடத்தி முன்னேற்றம் காணும் வல்லமை, பல துறைகளில் சிறந்து விளங்கும் யோகம், ஜாதகர் செய்யும் தொழில்களில் தனிப்பட்ட யுக்திகளை பயன்படுத்தி வெற்றி காணும் அதி புத்திசாலித்தனம், சிறந்த அறிவாற்றல், புதிய மருந்து மற்றும் மருத்துவ உபகரணம் கண்டுபிடிக்கும் ஆற்றல், போக்கு வரத்து துறையில் சேவை சார்ந்த தொழில்களில் அபரிவிதமான வெற்றி, விவசாயம் சார்ந்த துறைகளில் எவரும் எதிர்பாராத வளர்ச்சியை பெரும் யோகம், அனைத்து விஷயங்களையும் நிர்வகிக்கும் வல்லமை, தனக்கு கிழ் வேலை பார்க்கும் அனைவரையும் தனது ஆணைக்கு கட்டுபட்டு நடக்கும் விதமான செயல்திறன், எந்த ஒரு பிரச்சனையையும் துணிவுடன் எதிர்கொள்ளும் திறனும், அதில் வெற்றி பெரும் யோகத்தையும் தரும்.
குறிப்பு : ( சுய ஜாதகத்தில் மேற்கண்ட அமைப்பு காணப்படுமாயின், ஜாதகர் எக்காரணத்தை கொண்டும் மற்றவரிடம் வேலை செய்வது, அல்லது கூட்டாக செயல்படுவது சரியானது அல்ல, ஜாதகர் செய்யும் தொழில் சிறியதாக இருந்தாலும் கூட தனித்து இயங்குவது சிறப்பான வெற்றிகளை குவிக்க உதவும், மேலும் இவர்களுக்கு அரசு துறை வேலை வாய்ப்பு என்பது எதிர்பாராத வகையில் திடீர் என கிடைக்கும்)
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)