ரச்சு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரச்சு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

10 பொருத்தம் அமைந்தும் திருமண வாழ்க்கை சிறப்பாக அமையாததிர்க்கு காரணம் என்ன ?



கேள்வி :

திருமணம் செய்வதற்க்கு ஆலோசனை கேட்ட போது ....இரண்டு ஜாதகத்துக்கும் 10 பொருத்தம் உள்ளது.வசிய பொருத்தம் உள்ளது..அருமை பெருமை என்று சொன்னார்கள் ஜோதிடர்கள். அது மட்டும் இல்லாமல் ஆண் ஜாத்கத்தில் 7 வது இடத்தில் சனி உள்ளது பெண் ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் சனி உள்ளது..செம பொருத்தம் என்று சொன்னார்கள்.

கல்யாணம் முடிந்து ஒரு வருடம் ஆகி விட்டது...வசிய பொருத்தம் எல்லாம் ஒரு 60 நாள் தான் வேலை செய்தது. ஏக பட்ட முரண் பாடுகள். வாழ்க்கையே வெறுத்து விட்டது...இத்தனைக்கும் என் சித்தப்பா 5,6 இடங்களில் ஜோதிடம் பார்த்தார், உண்மையில் இரு ஜாதகத்தில் யாரிடம் தான் பிரச்சினை உள்ளது.? தயவு செய்து விளக்கவும்

பதில் :

 பொதுவாக நட்சத்திர பொருத்தம் என்பது இல்லற வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் பரிபூர்ண நலன்களையும் வாரி வழங்குவதில்லை, குறிப்பாக சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் வலிமை பெற்று அமையாத பொழுது, வரன் வதுவின் ஜாதகத்தில்  நட்சத்திர பொருத்தம் 10க்கு 10 அமைந்தாலும் இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய சிறிதும் வாய்ப்பில்லை, தம்பதியரின் ஜாதக அமைப்பில் இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய அடிப்படையில் குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் வீடும், களத்திர ஸ்தானம் எனும் ஏழாம் வீடும் வலிமை பெற்ற பாவக தொடர்பை பெற்று மிகவும் நல்ல வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, ( குறிப்பாக திருமணம் நடைபெறும் தருணத்தில் சுய ஜாதகத்திலும் சரி, கோட்சார அமைப்பிலும் சரி ) அது மட்டுமல்ல இல்லற வாழ்க்கையில் இணைந்த பிறகு தம்பதியருக்கு நடைமுறையில் வரும் நவகிரகங்களின்  திசை மற்றும் புத்திகள், இருவருக்கும் சுய ஜாதக அமைப்பில் வலிமை பெற்ற பாவக பலனை  ஏற்று நடத்துவது நடத்துவது தாம்பத்திய வாழ்க்கையில் வெற்றியையும் மிகுந்த யோகத்தை தரும் .

இன்றைய பதிவில் தங்களது ஜாதகத்தையும், தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தையும் இந்த ஆய்வுக்கு எடுத்து கொள்வோம் :

தங்களது ஜாதக நிலை 

தங்களது ஜாதக அமைப்பில் நல்ல நிலையில் இருக்கும் பாவகங்கள் :

2,5,8,11ம் வீடுகள் அதிர்ஷ்டத்தை குறிக்கும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், தங்களது ஜாதக அமைப்பில் நல்ல நிலையில் இருக்கும் பாவகங்கள் ஆகும்.

தங்களது ஜாதக அமைப்பில் பதிக்க பட்ட நிலையில் இருக்கும் பாவகங்கள் :

1,6,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 3,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் அதிக தீய பலன்களை வழங்கும் அமைப்பாக கருதலாம்.

தங்களது ஜாதகத்தில் தற்பொழுது நடக்கும் சுக்கிரன் திசை தரும் பலன்கள் :

4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நன்மையான பலனையே செய்துகொண்டு இருக்கிறது.



தங்களது வாழ்க்கை துணையின் ஜாதக நிலை 

தங்களது வாழ்க்கை துணையின் ஜாதக அமைப்பில் நல்ல நிலையில் இருக்கும் பாவகங்கள் :

1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 2,3,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் ஜாதகத்தில் சிறந்த அமைப்பு.

தங்களது வாழ்க்கை துணையின் ஜாதக அமைப்பில் பதிக்க பட்ட நிலையில் இருக்கும் பாவகங்கள் :

6ம் வீடு எதிரி ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 5,8,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் கடுமையான பாதிப்பை தரும் அமைப்பாக கருதலாம்.

தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் தற்பொழுது நடக்கும் சுக்கிரன் திசை தரும் பலன்கள் :

3,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தருவது சிறப்பான அம்சம், ஆனால் தற்பொழுது நடந்துகொண்டு இருக்கும் கோட்சார பலன்கள் சிறப்பாக இல்லை.



மேற்கண்ட இரண்டு ஜாதக அமைப்பில் தங்களது ஜாதக அமைப்பில் லக்கினம் என்ற பாவகம் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தங்களது வாழ்க்கையில்  மன நிம்மதியை குலைக்கும் விதமான பலன்களை வழங்கும், 6ம் வீடு விரைய பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தேவையில்லாத விஷயங்கள் தங்களுக்கு எதிராக உருவெடுத்து தங்களது மன நிம்மதியை பதம் பார்க்கும், 10ம் வீடு விரைய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜீவன வழியில் இருந்து வரும் இன்னல்களை அதிகரிக்கும், 12ம் வீடு விரைய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது இல்லற வாழ்க்கையையும் அதனால் வரும் பிரச்சனைகளால், மன நிம்மதியை குறைக்கும்.

3,9ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது 200 மடங்கு தீமையை தரும் அமைப்பாக கருதலாம் எடுத்துகாட்டாக, 9ம் பாவக வழியில் இருந்து தேவையில்லாமல் மற்றவர்களிடம் அவ பெயரை பெற்று தரும், 3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் முயற்சிகள் யாவும் தோல்வியை தரும் .

தங்களது வாழ்க்கை துணையின் ஜாதக அமைப்பில் 5ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது குல தேவதை சாபத்தையும், திருமண வாழ்க்கையில் நிம்மதி அற்ற நிலையை தரும்.

8ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது தனது வாழ்க்கை துணையின் அமைப்பில் இருந்து வரும் இன்னல்களையும், இழப்புகளையும் தரும்.

11ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது தனது வாழ்க்கையில் வரும் அதிர்ஷ்டங்களை, நல்ல வாய்ப்புகளை தவிர்க்கும் தன்மையை தரும்.

6ம் வீடு எதிரி ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது உடல் ரீதியான பிரச்சனைகளையும், வயிறு சம்பந்தபட்ட தொந்தரவுகளையும் தரும் ( தனது வாழ்க்கை துணையை சிறப்பாக வைத்திருக்க உதவுவது 6ம் பாவகமே, இந்த 6ம் பாவகம் பாதிப்பது நல்லதல்ல )

12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மன நிம்மதியையும், திருமண வாழ்க்கையில் அதிக இன்னல்களையும் தரும் .

தற்பொழுது தங்களது வாழ்க்கை துணையின் ஜாதக அமைப்பில் தற்பொழுது நடக்கும் திசையில், கோட்சார பலன்கள் மிகவும் தீய பலன்களை தந்து கொண்டு இருப்பது நல்லதல்ல இது எதிர் வரும் 06/11/2014 வரையில் நடை முறையில் உள்ளது .

தங்களது இருவரது ஜாதக அமைப்பிலும் முக்கியமான பாவகங்கள் பாதிக்க பட்டு இருப்பது மிகுந்த பாதிப்பை தரும் அமைப்பாக கருதலாம், குறிப்பாக எந்த ஒரு பாவகமும் பாதக ஸ்தான பலனை தருவது 200 மடங்கு தீமையை செய்யும்.

சனியை வைத்தெல்லாம் திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்ய இயலாது, உண்மையில் தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் துலாம் ராசியில் உள்ள 6ம் பாவகத்தில் சனி பகவன் அமர்ந்திருக்கிறார்.

மேற்கண்ட ஜாதகங்களின் முழு பலன்களையும் தெளிவாக தெரிந்து கொள்ளவும், ஜாதக ரீதியான சரியான தீர்வை பெறவும், அலைபேசியில் முன் அனுமதி பெற்று ஜோதிட ஆலோசனை பெற்று கொள்ளுங்கள் .

ஒருவருடைய திருமண வாழ்க்கையை சிறப்பாக அமைத்து வைப்பது 10 பொருத்தம் அல்ல, நல்ல நிலையில் அமைந்திருக்கும் பாவக வலிமையே என்றால் அது மிகையில்லை, நட்சத்திர பொருத்தம் பார்த்து திருமணம் செய்யும் பொழுது இது மாதிரியான பாதிப்புகள் வருவது இயற்கையே, ஜாதகத்தில் பாவக வலிமையை கருத்தில் கொண்டு திருமணம் செய்தால் திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
 jothidadeepam@gmail.com

சனி, 6 அக்டோபர், 2012

நட்சத்திர பொருத்தத்தில் ரச்சு பொருத்தம் இல்லை எனில் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ?




அய்யா வணக்கம்  எனது பெற்றோர்கள்  எனக்கும் , எனது முறை பெண்ணிற்கும் ( மாமன் மகள் ) திருமணம் செய்யலாம் என முடிவு எடுத்து பொருத்தம் பார்த்தனர் , இதில் நட்சத்திர பொருத்ததில் ரச்சு பொருத்தம் ( கயிற்று பொருத்தம் ) இல்லை எனவும் திருமணம் செய்தால் , கணவனை இழக்க வேண்டி வரும் எனவும் ,நாங்கள் பார்த்த அனைத்து ஜோதிடர்களும் சொல்லுகின்றனர் , மேலும் பெண்ணிற்கு சர்ப்ப தோஷம் இருக்கிறது , பையனுக்கு சர்ப்ப தோஷம் இல்லை எனவும் இது திருமண வாழ்க்கையில் பிரிவை ஏற்ப்படுத்தும் என்று சொல்வதாலும் , எனது பெற்றோரும், மாமாவும் மிகவும் கவலை அடைந்துள்ளனர் , எங்களது இருவரது ஜாதகத்தையும் அனுப்பி வைத்துள்ளோம் தாங்கள் ஜாதகத்தில் உள்ள சரியான பலனை சொல்லவும் , உண்மையில் எனது மாமன் மகளும் நானும் மனதார விரும்புகிறோம் , நல்ல பதிலை தருவீர்கள் என்று நம்புகிறோம் .

அன்பு தம்பிக்கு ,

தங்களது இருவரது ஜாதக அமைப்பை வைத்து பார்க்கும் பொழுது , நட்சத்திர பொருத்ததில் மட்டுமே குறை உள்ளது ( அதாவது ரச்சு பொருத்தம் இல்லை ) இதை தாங்களும் தங்களது குடும்பத்தாரும் பெரிதாக எடுத்து கொள்ள தேவையில்லை , இதனால் தங்கள் உயிருக்கு எவ்வித பாதிப்பும் நிச்சயம் வராது , காரணம் தங்களது ஜாதகம் மிகவும் வலிமையாக காணப்படுகிறது , குறிப்பாக ஆயுள் பாவகம் 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருக்கிறது , மேலும் திருமண செய்ய பொருத்தம் பார்க்கும் பொழுது நட்சத்திர பொருத்தத்தை மட்டும் அடிப்படையாக கொண்டு திருமணம் செய்வது தவறான அணுகு முறை , மேலும் சர்ப்ப தோஷம் , நாக தோஷம் , செவ்வாய் தோஷம் என்று சொல்வதெல்லாம் ஜோதிடத்தை பற்றி சரியான  புரிதல் இல்லாதவர்களும் ஜோதிடத்தில் அடிப்படை அறிவு அற்றவர்களும் , கற்று குட்டிகளும் , அரை குறை ஜோதிடர்களும் சொல்லும் வாய் ஜாலமே அன்றி வேறில்லை , இதையெல்லாம் மக்கள் நம்பிக்கொண்டு தனது அருமை மகள் மகனின்  வாழ்க்கை பாதிக்க பெற்றோர்களே காரணமாக அமைந்து விடுகின்றனர் , எனவே இதில் இந்த பதிவை காணும் பெற்றோர்களாவது இனி விழிப்புணர்வுடன் இருப்பார்கள் என்று நம்புவோம் .

திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது ஆண் பெண் இருவரின் ஜாதக அமைப்பிலும் நல்ல நிலையில் இருக்க வேண்டிய பாவகங்கள் மொத்தம் நான்கு அவையாவன :

1 ) குடும்ப ஸ்தானம் 2 ) பூர்வ புண்ணியம்  3 ) களத்திர ஸ்தானம் 4 ) ஆயுள் பாவகம் 

மேற்கண்ட பாவகங்கள் நல்ல நிலையில் இருவருக்கும் இருந்தால் நிச்சயம் அவர்களின் திருமண வாழ்க்கையில் எவ்வித சிக்கலையும் தராது திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமைந்து விடும் , இதில் குடும்ப ஸ்தானம் நல்ல நிலையில் இருப்பது ஜாதகரின் வருமானம் ,பேச்சு, மனைவியுடன் சந்தோஷமாக வாழும் தன்மையை நிர்ணயம் செய்யும் , பூர்வ புண்ணியம்  ஜாதகருக்கு கிடைக்கும் வாரிசு அமைப்பையும் , இறை அருளின் கருணையினால் வாழ்க்கையில் ஏற்ப்படும் முன்னேற்றத்தையும் வழங்கும் , களத்திர பாவகம் தம்பதியரின் ஒற்றுமையும் , களத்திர வாழ்க்கையில் பெரும் சந்தோஷத்தையும் , சமுதாயத்தில் கிடைக்கும் மதிப்பு மரியாதையையும் குறிக்கும் , ஆயுள் பாவகம் வாழ்க்கையை துணையின் வழியில் இருந்து பெரும் நன்மைகளையும் , நீண்ட ஆயுளையும் , ஒருவொருக்கு ஒருவர் விட்டு கொடுத்து செல்லும் மனப்பான்மையையும் நிர்ணயம் செய்யும் .

எனவே மேற்கண்ட பாவகங்கள் நல்ல நிலையில் இருந்தால் நட்சத்திர பொருத்தம் எதுவும் தேவையில்லை , தாரளமாக திருமணம் செய்யலாம் எவ்வித பாதிப்பும் நிச்சயம் வர வாய்ப்பில்லை , ஒருவேளை நட்சத்திர பொருத்தம் 10 க்கு 10 இருந்தாலும் , மேற்கண்ட பாவகங்கள் 6 ,8,12 ம் வீட்டுடன் தொடர்பு பெற்று இருந்தாலும் , பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்று இருந்தால் மட்டுமே  திருமண வாழ்க்கை மூன்று மாதங்கள் கூட நிலைக்காது இதற்க்கு பல எடுத்துகாட்டுக்கள் நம்மிடம் உண்டு  .

ஆனால் தங்களது ஜாதக நிலையிலும் , தங்களது மாமன் மகள் அவர்களின் ஜாதக நிலையிலும் மேற்கண்ட வீடுகள் மிகவும் நல்ல நிலையில் இருக்கின்றது , உண்மையில் தங்களது மாமன் மகளின் ஜாதக நிலையில் குடும்ப ஸ்தானத்தையும் , ஆயுள் ஸ்தானத்தையும் வலிமையுடன் வைத்திருக்க காரனகர்த்தவே இந்த ராகுவும் கேதுவும்தான் . அப்படி இருக்கையில் தங்களது மாமன் மகளின் ஜாதகத்தில் சர்ப்ப தோஷம் என்று எந்த ஜோதிடர் சொன்னார் என்று எங்களுக்கு தெரியவில்லை, ராகு கேது என்றாலே கெடுதல்தான் செய்யும் என்பதின் வெளிப்பாடாகவே கருத வேண்டி இருக்கிறது , மேலும் பூர்வ புண்ணிய ஸ்தானம் தங்களது இருவரது ஜாதக அமைப்பிலும் மிகவும் நல்ல நிலையில் இருப்பதால் , திருமணம் ஆனா சில மாதங்களிலேயே நல்ல யோகமான ஆண் வாரிசு கிடைக்கும் . 

தாங்கள் தங்களின் மாமன் மகளை திருமணம் செய்துகொள்வதால் தங்களுக்கு எவ்வித துன்பமும் வர வாய்ப்பில்லை என்பது உறுதி , மேலும் வாழ்க்கையில் சகல முன்னேற்றமே ஏற்ப்படும் , தொழில் , குடும்பம் , வாரிசு , தம்பதியர் ஒற்றுமை , மகிழ்வான இல்லற வாழ்க்கை என அனைத்துமே சிறப்பாக இருக்கும் , இதில் இந்த ரச்சு பொருத்தம் வந்து எந்த வித தொந்தரவும் தராது என்பது எமது தெளிவான பதில் , எனவே விரைவில் நல்ல முகூர்த்தம் பார்த்து திருமணம் செய்துகொண்டு நலமாக வாழ ஜோதிட தீபம் தங்களை வாழ்த்துகிறது இறை அருளின் கருணையினால் 16  வகை  செல்வமும் பெற்று புகழோடு வாழ்க வளமுடன் .


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
jothidadeepam@gmail.com
  


செவ்வாய், 17 ஏப்ரல், 2012

நட்சத்திர பொருத்தமும் , ஜாதக பொருத்தமும் திருமண வாழ்க்கையும் !






 கேள்வி : 


அய்யா !   நட்சத்திர ரீதியாக பொருத்தம் பார்த்து 10  பொருத்தங்களும் அமைந்து திருமணம் செய்தவர்களின் வாழ்க்கையில் பிரிவு வருகிறது இது ஏன் ? நான் இந்த விஷயத்தால் பாதிக்க பட்டவள் ? மேலும் எனது கணவரது நட்சத்திரதிர்க்கும் எனது நட்சத்திரதிர்க்கும் 10  பொருத்தங்களும் உண்டு என்று  திருமணம் நடத்தி வைத்தனர் , திருமணம் ஆன சில வருடங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டோம் இது ஏன் ? சரியான விளக்கம் தருமாறு பணிவுடன் வேண்டுகிறேன் .

குறிப்பு : இருவரது ஜாதக பிரதிகளை இத்துடன் இணைத்து இருக்கிறேன் 

இப்படிக்கு 
அருள் மொழி 




பதில் : 

 சகோதரிக்கு வணக்கம் தங்களது ஜாதகரீதியாக இருவருக்கும் நட்சத்திர பொருத்தம் என்னவோ 10 /10 உண்டு , ஆனால் ஜாதக ரீதியான 
பொருத்தம் 20  சதவிகதம் மட்டுமே உள்ளது .

 மேலும் தங்களது இருவரது ஜாதக ரீதியாகவும் குடும்ப ஸ்தானம் எனும் 2  ம் வீடு 100  சதவிகிதம் பாதிக்க பட்டுள்ளது மேலும் தங்களது கணவர் ஜாதக ரீதியாக களத்திர பாவகம் எனும் ஏழாம் வீடு பாதக ஸ்தானம் எனும் 11  ம் வீட்டுடன் தொடர்பு , எனவே அவரிடம் குடும்பம் நடத்துவது என்பது நிச்சயம் உங்களால் இயலாது , உங்களுக்குள் பிரிவு ஏற்ப்பட காரணம் உங்களது ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் பாதிக்க பட்டதும்.  அவரது ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம்  மற்றும் களத்திர ஸ்தானம்  எனும் இரு வீடுகளும் பாதிக்க பட்டதுமே காரணம் .


ஆனால் நீங்கள் மறுமணம் செய்துகொண்டால் இல்லற வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக அமையும் பிரிவு என்பதே இல்லை . உங்களது வாழ்வில் சந்தோசம் நிறைய இறை அருள் கருணை செய்யட்டும் . மறுமணம் செய்துகொள்வதற்கு முன் ஒரு சரியான ஜோதிடரிடம் பொருத்தம் பார்த்துகொள் , அல்லது நீ விரும்புபவரை திருமணம் செய்துகொள்.

வாழ்க வளமுடன் .

திருமணம் செய்து கொள்ளும் முன்  ஜாதக ரீதியாக  கவனிக்க  வேண்டியவை  :


திருமணம் செய்துகொள்ளும் ஆண் பெண் இருவருக்கும் ஜாதக ரீதியாக நட்சத்திரம் பொருத்தம் , ராகு கேது தோஷம் , செவ்வாய் தோஷம் என்று சொல்லி , அவர்கள் வாழ்க்கையில் பல ஜோதிடர்கள்  மண்ணை அள்ளி போடுவதை தயவு செய்து சம்பந்தபட்ட ஆண் பெண்ணின் பெற்றோர்கள் உணர்ந்து கொள்வது நலம் தரும் .

மேலும்  ஒருவரது ஜாதகத்தில்  குடும்ப ஸ்தானம்  மற்றும் களத்திர ஸ்தானம் எனும் இருவீடுகளும் 100  சதவிகிதம்   பாதிக்க பட்ட வதுவையோ , வரனையோ நட்சத்திர பொருத்தம் நன்றாக இருக்கிறது என்று தேர்ந்தெடுத்தால், நிச்சயம் திருமண வாழ்க்கை நிலைக்க வாய்ப்பு இல்லாமல் போகும் எனும் விஷயத்தை புரிந்துகொண்டு தமது குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலத்தை அமைத்து தாருங்கள் .

அதே சமயம் நட்சத்திர பொருத்தம் இல்லை என்றாலும் ( ரச்சு பொருத்தம் உட்பட ) சுய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம்  மற்றும் களத்திர ஸ்தானம் எனும் இருவீடுகளும் 100  சதவிகிதம் நன்றாக இருந்தால் நிச்சயம் திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை .

 ஜோதிடன் வர்ஷன் 
9443355696