செவ்வாய்தோஷம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய்தோஷம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 21 மார்ச், 2019

சுய ஜாதகத்தில் பாவக வலிமை வழியில் இருந்து ஜாதகர் பெரும் யோக வாழ்க்கை !


சுய ஜாதக பலன்கள்

ஒருவரது பிறந்த தேதி நேரம் மற்றும் இடம் ஆகிய குறிப்புகளை வைத்து முறையாக உயர் கணித சார ஜோதிட முறைப்படி கணிதம் செய்து, சுய ஜாதகத்தில் உள்ள லக்கினம் முதல் 12 பாவகங்களின் வலிமை உணர்ந்து, நவகிரகங்களின் திசா புத்தி அந்தரம் மற்றும் சூட்சமம் லக்கினம் முதல் 12 பாவகங்களின் எந்த தொடர்பை பெற்று பலன்களை வழங்குகிறது என்பதில் தெளிவு பெற்று சுய ஜாதக பலன் கூறும் பொழுது, சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக துல்லியமான பலாபலன்கள் கிடைக்க பெறுவதுடன், சிறப்பான நன்மைகளையும் எதிர்காலத்தில் யோகமிக்க வாழ்க்கையையும் தன்னிறைவாக பெறுவார் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை அன்பர்களே! இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம்.
 

லக்கினம் : துலாம்
ராசி : ரிஷபம்
நட்ஷத்திரம் : கிருத்திகை 3ம் பாதம்

1,5,9,ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவக தொடர்பை பெறுவது ஜாதகிக்கு லக்கின பாவக வழியில் இருந்து மதிப்பு மிக்க செயல்பாடுகள், அதிகாரம் மிக்க பொறுப்புகள், புகழ் மிக்க பதவிகள், வெகுமதி, கவுரவம், சமூகம் மற்றும் தொழில் துறையில் அபரிவித வளர்ச்சி அரசியலில் வெற்றி, வியாபாரத்தில் அதீத லாபங்கள் என்ற வகையிலும், நல்ல உடல் ஆரோக்கியம், மனதில் தெளிவு, மதி நுட்பம் கொண்டு அனைத்திலும் வெற்றி காணும் யோகம், என்ற வகையில் நன்மைகளை வாரி வழங்கும், சுய தொழில் வெற்றி, ஜீவன வழியில் முன்னேற்றம் என வாழ்க்கையில்  சகல சௌபாக்கியமும் உண்டாகும்.

5ம் பாவக வழியில் இருந்து கலைத்துறையில் வெற்றி, ஆராய்ச்சியில் வெற்றி , இயல் இசை நாடகம் சார்ந்த விஷயங்களில் நல்ல ஞானம், குழந்தைகள் வழியில் இருந்து பெரும் யோக வாழ்க்கை, சமயோசித புத்திசாலி தானம் கொண்டு  வாழ்க்கையில் வரும் இன்னல்களுக்கு தீர்வு காணும் தன்மை என சகல சௌபாக்கியங்களையும் தரும், விளையாட்டில் ஆர்வம் குலதெய்வ அனுக்கிரகம், மேன்மை மிக்க பொறுப்புகள், புத்திசாலித்தனமான செயல்பாடுகள் மூலம் வாழ்க்கையில் புதிய மாற்றங்களை பெரும் யோகம் என்ற வகையில் சிறப்பான எதிர்காலத்தை தரும்.

9ம் பாவக வழியில் நுண்ணறிவு திறன், ஆராய்ச்சி கல்வியில் வெற்றி, அனைவரிடமும் நற்பெயர், ஆன்மீக பெரியோர்களின் ஆசிர்வாதம், உயர்ந்த பாரம்பரியத்தை கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர், ஆன்மீகத்தில் வெற்றி,கடவுள் அனுக்கிரகம், செய்யும் காரியங்களில் பரிபூர்ண நன்மைகளை பெரும் யோகம், பித்ருக்களின் ஆசிர்வாதம், மிதம்மிஞ்சிய ஞானம் என்ற வகையில் சிறப்பை தரும்.

2,6,8,12ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவக தொடர்பை பெறுவது  ஜாதகிக்கு 2ம் பாவக வழியில் இருந்து கல்வியில் தேர்ச்சி, நல்ல ஜீவனம் அமையும் தன்மை, கை நிறைவான வருமான வாய்ப்புகள், வியாபார ஞானம், நிர்வாக திறன், இனிமையான பேச்சு திறன், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி, நல்ல நண்பர்கள், புகழ் பரிசு அனைத்திலும் வெற்றி என்ற வகையிலும், பொது மக்கள் ஆதரவு, வெளியூர் வெளிநாடு சென்று வரும் யோகம், ஏற்றுமதி இறக்குமதி தொழில் மூலம் பெரும் அதீத வருமான வாய்ப்புகள் என சகல சௌபாக்கியமும் உண்டாகும்.

6ம் பாவக வழியில் இருந்து பதவியில் வெற்றி, உத்தியோக ஆர்வம், பதவியில் திடீர் உயர்வு, அதிகாரிகளிடம் இருந்து வரும் ஆதரவு, சொந்த முயற்சியில் முன்னேற்றம் பெரும் தன்மை, உடல் நலனில் அக்கறை, கடன் சார்ந்த வகையில் முன்னேற்றம், எதிர்பார்ப்புகள் அணைத்த்தும் நிறைவேறும் தன்மை, நோய் எதிர்ப்பு சக்தி என்ற வகையில் நன்மையை தரும்.

8ம் பாவக வழியில் இருந்து விபத்து அறுவை சிகிக்சை மூலம் உடல் ஆரோக்கியம் பெரும் தன்மை, மருத்துவ செலவினங்கள், வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் ஆதரவு மற்றும் அன்பு, மனமகிழ்ச்சி, திருமணம் மூலம் யோக வாழ்க்கை, சரியான முடிவுகளை சரியான நேரங்களில் மேற்கொண்டு சகல வழிகளில் இருந்தும் நலம் பெரும் தன்மை, எதிர்ப்புகள் வழியில் இருந்து வரும் அபரிவித முன்னேற்றம் என்ற வகையில் சுக போகங்களை வாரி வழங்கும்.

12ம் பாவக வழியில் இருந்து முதலீடுகள் வழியில் இருந்து வரும் அதீத வருமானம், தெய்வீக அனுக்கிரகம், ஆன்மீகத்தில் ஈடுபாடு, பொருளாதார தன்னிறைவு, அதிகப்படியான பொருளாதார வரவுகள், தெய்வீக ஆற்றல் வழியில் இருந்து வரும் முன்னேற்றம், புதிய வாய்ப்புகளை முறையாக பயன்படுத்திக்கொண்டு வாழ்க்கையில் நலம் பெரும் தன்மை, உறவுகள் வழியிலான ஆதரவு, அனைவரின் ஆதரவு மூலம் பெரும் பொருளாதர முன்னேற்றம், மனநிம்மதி, தெளிவான சிந்தனை, நல்ல அயன சயன சுக போக வாழ்க்கை எதிர்ப்புகளை கண்டு அஞ்சாத மனவலிமை என்ற வகையில் சுக போகங்களை வாரி வழங்கும்.

3,11ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவக தொடர்பை பெறுவது ஜாதகிக்கு 3ம் பாவக வழியில் இருந்து நிலையான முன்னேற்றம், சுலப பொருள் வரவு, வீரியமிக்க செயல்பாடு, சகல சௌபாக்கியம், முயற்சிக்கும் காரியங்களில் வெற்றி, இசை ஆர்வம், தொழில் முன்னேற்றம், வியாபார விருத்தி, அரசியலில் உயர் பதவி, தீர்க்காயுள், பெரியோர் ஆதரவு மற்றும் ஆசிகள், புத்தி கூர்மை, நியாயமான முறையில் வியாபார வெற்றி,  விவசாயத்தில் அதீத ஆர்வம், தெய்வீக சிந்தனை, லட்சியங்களை அடைதல், தன்னம்பிக்கை, நூல் ஆசிரியர், பத்திரிக்கை நிருபர், தகவல் தொழில் நுட்பத்தில் தேர்ச்சி, துணிந்து செயலாற்றும் திறன், அதிர்ஷ்டத்தின் தன்மையை முழுவதும் சுவீகரிக்கும் தன்மை சுய ஜாதகத்தில் உள்ள  யோக பலன்களை முழுவதும் அனுபவிக்கும் வல்லமை என சிறப்பான யோக வாழ்க்கையை நல்கும்.

11ம் பாவக வழியில் இருந்து நீடித்த அதிர்ஷ்டம், தொழில் வழியிலான அதிர்ஷ்ட வாய்ப்புகளை சுவீகரிக்கும் வல்லமை, முற்போக்கு சிந்தனை மற்றும் செயல்பாடுகள், புதுமை விரும்பி, அனைத்தையும் யூகிக்கும் வல்லமை, எதிர்ப்புகளை கண்டு அஞ்சாமல் போராடி வெற்றி பெரும் மனவலிமை, போதுமென்ற மனம், பல தொழில் செய்யும் யோகம், உறவுகள் பெற்றோர்  வழியில் இருந்து பெரும் அதிர்ஷ்டங்கள் என வெகு சிறப்பான நன்மைகளை ஜாதகி பரிபூர்ணமாக பெறுவார்.

4ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவக தொடர்பை பெறுவது ஜாதகிக்கு 4ம் பாவக வழியில் இருந்து தந்தையாருக்கு மிகுந்த பாதிப்பு, ஜாதகியின் குணாதிசயம் வெகு சிறப்பாக அமையும், நல்ல தொழில் முன்னேற்றம், நல்ல குணம், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, மண் மனை வண்டி வாகன யோக வழியில் பாதிப்பு, வீடு நிலம் இடம் போன்றவற்றில் இருந்து வரும் இழப்புகள், வாகனத்தில் வரும் வீண் செலவினங்கள், வசதிகள் இருந்தும் அதை அனுபவிக்க இயலாத சூழ்நிலை, கருத்து வேறுபாடுகள், பிடிவாத குணம் அல்லது மனப்போராட்டம் வழியில் இருந்து வரும் இழப்புகள், திருமணத்திற்கு பிறகான யோக வாழ்க்கை என்ற வகையில் நன்மையை தரும்.

7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவக தொடர்பை பெறுவது ஜாதகிக்கு 7ம் பாவக வழியில் இருந்து தாமத திருமணம், நல்ல அந்தஸ்துள்ள வாழ்க்கை துணை , அரசியலில் வெற்றி, வியாபாரத்தில் வெகு சிறப்பு, சமூக அந்தஸ்த்து, வாழ்க்கை துணையின் ஆதரவு பரிபூர்ணமாக கிடைக்கும் தன்மை, வெளிநாடுகள் சென்று வரும் யோகம், பிறந்த இடத்தை விட்டு வெகு  தொலைவு சென்ற பிறகு கிடைக்கும் ஜீவன மேன்மை, கூட்டு தொழில் வழியில் பெரும் சிறப்புகள், நல்ல நண்பர்கள், சிறந்த கூட்டாளிகள், கூட்டு முயற்சியின்  வழியில் இருந்து பெரும் யோக வாழ்க்கை என்ற வகையில் மிகுந்த சிறப்பை தரும்.

10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவக தொடர்பை பெறுவது ஜாதகிக்கு 10ம் பாவக வழியில் இருந்து சிறந்த உத்தியோகம், அரசு துறையில் பணியாற்றும் வல்லமை, ஜீவன வழியில் இருந்து வரும் படிப்படியான முன்னேற்றம், கவுரவம் குறையாத யோக வாழ்க்கை, எதிர்பார்த்த விஷயங்கள் ஜாதகிக்கு தேடி வரும் தன்மை, கம்பீரமான வாழ்க்கை முறை, தீர்க்கமான வாத திறமை, சுய தொழில் செய்வதால் வரும் அபரிவித முன்னேற்றம், தெளிவான தொழில் ஞானம், திட்டமிட்டு செயலாற்றும் தன்மை, அனைவரையும் அனுசரித்து செல்லும் யோகம், புதிய மாற்றங்களை  ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் என்ற வகையில் சிறப்பான நன்மைகளை தரும்.

குறிப்பு :

பெரும்பாலான பாவக தொடர்புகள் மிகவும் வலிமையுடன் இருப்பது ஜாதகிக்கான யோக வாழ்க்கையை உறுதி செய்கிறது, சுய ஜாதகத்தில் ராகு பகவான் லக்கினத்தில் ( துலாம் ) அமர்ந்து இருப்பது ஜாதகிக்கு ஜென்ம லக்கினம் 100% விகித வலிமையை பெற்று சிறப்பான யோக வாழ்க்கையை வாரி வழங்கும், மேலும் ஜாதகியின் அறிவுத்திறன் வெகுவாக பிரகாசிக்கும், வியாபாரத்தில் மிகப்பெரிய வெற்றி கிட்டும், மேலும் கேது பகவான் களத்திர ஸ்தானத்தில் ( மேஷம் ) அமர்ந்து இருப்பது ஜாதகிக்கு நல்ல யோகமிக்க வாழ்க்கை துணையை அமைத்து தரும் என்பதுடன், பிரபல்ய யோகமும் வியாபாரத்தில் விருத்தி, அரசியலில் வெற்றி என்ற நிலையை வாரி வழங்கும், கணவருக்கு மிகப்பெரிய வெற்றிகளை வாரி வழங்கும், தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக அமையும், களத்திர ஸ்தான வழியில் இருந்து ஜாதகி பரிபூர்ண நன்மைகளை சிறப்பாக பெறுவார், வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

திங்கள், 20 ஆகஸ்ட், 2018

அதிர்ஷ்டகரமான யோக வாழ்க்கையை அள்ளித்தரும் சுய ஜாதக பாவக வலிமை!



பிறந்த தேதி,நேரம் மற்றும் இடம் ஆகிய குறிப்புகளின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படும் நமது சுய ஜாதகம் வலிமை பெற்று அமைவது நமது வாழ்க்கையில் சிறப்பான நன்மைகளையும், தன்னிறைவான பொருளாதார வசதியுடன் கூடிய முன்னேற்றங்களை தங்குதடையின்றி வாரி வழங்கும் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை, சுய ஜாதக வழியில் இருந்து வரும் யோக வாழ்க்கையை சுவீகரிக்க அடிப்படையில் நமது ஜாதகத்தில் லக்கினம் வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, மேலும்  நமது ஜாதகத்தில் சுபயோகங்களை எந்த எந்த பாவக வழியில் இருந்து சுவீகரிக்க இயலும் என்பதில் தெளிவு பெற்று இருப்பது மிக மிக அவசியமாகும், இதை ஓர்  உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : விருச்சிகம்
ராசி : சிம்மம்
 நட்ஷத்திரம் : பூரம் 2ம் பாதம்

மேற்கண்ட விருச்சிக லக்கின ஜாதகருக்கு லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் நல்ல வலிமையுடனே காணப்படுகிறது, பனிரெண்டு வீடுகளும் தாம் தொடர்பு பெரும் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளையே தரும் அமைப்பில் இருப்பது கவனிக்கத்தக்கது, சுய ஜாதகத்தில் பாவக தொடர்புகள் வழியில் இருந்து ஜாதகர் பெரும் நன்மைகளை பாவக  வலிமையின் அடிப்படையில் ஆய்வு செய்வோம் அன்பர்களே !

1,4,7,9ம் வீடுகள் லாப  ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு உயிர் உடலாகிய லக்கின பாவக வழியில் இருந்து பரிபூர்ண அதிர்ஷ்டம் நிறைந்தவர் என்பதை உறுதி செய்கிறது மேலும் ஜாதகர் முற்போக்கு சிந்தனையுடன் எதையும் எதிர்கொண்டு வெற்றிபெறும் யோகம் பெற்றவர் என்பதையும் தெளிவாக்குகிறது, தான் வளரும் சூழ்நிலையில் நல்ல ஆரோக்கியம், சிறந்த மனவலிமை கொண்டுள்ளவராகவும், திறன்மிக்க செயல்களை சிறப்பாக  செய்யும் ஆற்றல் பெற்றவராகவும் திகழ்வார், தெளிவான சிந்தனை, தெய்வீக அனுக்கிரகம் போன்றவற்றின் மூலம் வாழ்க்கையில் வியக்கத்தக்க நன்மைகளை அனுபவிக்கும் தன்மை பெற்றவர், நோய் எதிர்ப்புத்திறனுடன் வலிமை மிக்க உடல் அமைப்பை பெற்றவர் என்பதை உறுதி செய்வதுடன், ஜாதகருக்கு அறிவார்ந்த முயற்சிகள் வழியில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும்  என்பது கவனிக்கத்தக்கது, ஜாதகரின் லக்கினம் லாப ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கான அதிர்ஷ்ட வாய்ப்புகளை வாழ்நாள் முழுவதும் வாரி வழங்கும் என்பதுடன் நீடித்த அதிர்ஷ்டம் பெற்றவர் என்பது உறுதியாகிறது.

4ம் பாவக வழியில்  இருந்து ஜாதகருக்கு நிறைவான மனம், நல்ல குணம், நண்பர்கள் ஆதரவில் சுகபோக யோக வாழ்க்கையை சுவீகரிக்கும் தன்மையை தரும், ஜாதகரின் தாய் வழியில் இருந்து வரும் சுபயோகங்களை பரிபூர்ணமாக பெரும் தன்மையை தரும், தாய் வழி சொத்துக்கள் கிடைக்கும், அனைத்திலும் வெற்றியை தரும், மண் மனை வண்டி வாகன யோகம் உண்டாகும், தனது சுய உழைப்பில் மேற்கண்டவற்றை சுவீகரிக்கும் யோகத்தை தரும், அரசியல் அல்லது  அரசு சார்ந்த உதவிகள் உண்டு, பெரியமனிதர்களின் ஆதரவின் வழியில் குறுகியகால வெற்றிகளை பெறுவார், அந்நியர், வேற்று மதத்தினர் வழியில் இருந்து வரும் யோக வாழ்க்கை ஜாதகருக்கு தன்னிறைவான பொருளாதர முன்னேற்றத்தை வாரி வழங்கும், எளிதான வெற்றிகள், உடல்நலம் சார்ந்த இன்னல்களில் இருந்து விரைவில் குணம் பெரும் தன்மையை தரும், பொருத்தன்மையான நடவடிக்கை ஜாதகருக்கு மிகப்பெரிய  அந்தஸ்த்தை வாரி வழங்கும்.

7ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு, யோகம் மற்றும்  அதிர்ஷ்டமிக்க வாழ்க்கை துணையை பெறுவார் என்பதுடன், திருமணத்திற்கு பிறகான வளர்ச்சி ஜாதகருக்கு மிகவும் அபரிவிதமானதாக அமையும், ஜாதகரின் லாப ஸ்தானம் பெரும் பகுதி கால புருஷ தத்துவ  அமைப்பிற்கு 7ம் வீடான துலாம் ராசியில் 21 பாகைகளை கொண்டு இருப்பது ஜாதகருக்கான வாழ்க்கை துணை வெளியூர் அல்லது வெளிநாட்டில் இருந்து வருவார் என்பதை குறிப்பதுடன் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றங்களை  வெளியூர் அல்லது வெளிநாடுகளில் இருந்து தனது சுய அறிவு திறன் கொண்டு சுவீகரிக்கும் வல்லமையை  தரும் என்பதை ஜாதகர் தனது கருத்தில் நிறுத்துவது அவசியமாகிறது, மேலும் ஜாதகர் திருமணம் செய்வதை தாமதம் செய்வது ஜாதகருக்கான வெற்றி வாய்ப்புகளை வெகுவாக குறைக்கும், சுய ஜாதகத்தில்  களத்திர ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகருக்கான யோக வாழ்க்கையை  தனது  வாழ்க்கை துணை, நண்பர்கள், கூட்டாளிகள், கூட்டு தொழில் மற்றும் வெளியூர் வெளிநாடுகளில் இருந்து வாரி வழங்கும்.

9ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் தெய்வீக அனுக்கிரகமும், ஆன்மீக பெரியோர்களின் சந்திப்பின் வழியில் இருந்து யோக  வாழ்க்கையையும் பெறுவார், பல அறிய  புனித திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகத்தை தரும், எதிர்பாராத ஆன்மீக பெரியோர்களின் தரிசனம் ஜாதகரின் வாழ்க்கையில் சிற்பபு மிக்க வெற்றிகளை வாரி வழங்கும், தனது அறிவு திறன் மூலம் சகல இன்னல்களில் இருந்தும் மீண்டு வரும் யோகத்தை தரும், பயணங்களில் வெற்றியும், வெளிநாட்டில் கல்வி அதன் வழியில் இருந்து வரும் ராஜயோக வாழ்க்கை  என்ற விதத்தில் சுபயோகங்களை வாரி வழங்கும், ஜாதகரின் ஆன்ம பலமும், தெய்வீக  தன்மையும் ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும், எளிதில் அனைத்தையும் பெரும் தன்மை உண்டு.

2ம் வீடு குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 2ம் பாவக வழியில் இருந்து அளவற்ற செல்வசேர்க்கை, இனிமையான  பேச்சு திறன், வாக்கு வன்மை, இனிமையான இல்லற வாழ்க்கை, சிறந்த உணவு மற்றும் விருந்து அனுபவிக்கும் யோகம், சேமிப்பு திறன், செல்லும் இடங்களில் இருந்துவரும் சிறப்பான வரவேற்பு, குடும்பத்தில் ஒற்றுமை , அனைவரையும் அனுசரித்து செல்லும் வல்லமை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை என்ற வகையில் சுபயோகங்களை வாரி வழங்கும்.

3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் காரியங்களில் வெற்றி, லட்சியம் நிறைவேறும் தன்மை, செல்வசெழிப்பு, எதிரிகள் எதிர்ப்புகளை வெற்றிகொள்ளும் தன்மை,  நல்ல மனநிலை, எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வல்லமை, உண்மை பேசுதல், சத்தியத்தை மதித்தல்,  சாகச ஆர்வம், அதீத பயனவிருப்பம், கல்வியில் ஆர்வம், விளையாட்டில் ஆர்வம் கலைத்துறையில் வெற்றி, ஆய்வு  செய்வதில் வெற்றி, தன்னம்பிக்கை மனோதிடம்,  புதிய சூழ்நிலைகளில் விருப்பம், எஜென்சி துறையில் அபரிவித வளர்ச்சி மற்றும் தன சேர்க்கை என்ற வகையில் சிறப்புகளை தரும்.

5ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு  கலைகளில் தேர்ச்சியை தரும், தெய்வீக அனுகிரகமும் உண்டாகும், மிகசிறந்த புத்திசாலித்தனமும், சமயோசித அறிவுத்திறனையும் தரும் , குல தெய்வ ஆசியின் மூலம் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் பெற்று வாழும் யோகத்தை தரும், சிறந்த  தீர்வுகளை காணும் அறிவு திறனும், சரியான வழியை பரிந்துரைக்கும் வல்லமையை தரும், கல்வியில் ஆராய்ச்சியில் வெற்றியை தரும், அனைவராலும் நன்மைகளை பெறுவதுடன் நற்ப்பெயரும் உண்டாகும், தெளிவான சிந்தனை, சான்றோர் ஆதரவு ஜாதகரின் வாழ்க்கையில் சுபயோகங்களை வாரி வழங்கும், சிறந்த வாதத்திறமை உண்டாகும், குழந்தைகளுடன் இணக்கம், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி, தன்னிறைவான பொருளாதார முன்னேற்றங்களை பெரும் அமைப்பை தரும்.

8,11ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 8ம் பாவக வழியில் இருந்து திடீர் விபத்து, பொருள் இழப்பு, உடல் நல பாதிப்பு, மருத்துவ செலவினங்கள், எதிர்பாராத முன்னேற்ற தடைகள், காதல் தோல்வி, எதிர்பாலின அமைப்பினரால் வரும் பாதிப்பு என்ற வகையில்  இன்னல்களை தரும், மனம் ஒருநிலை படுவது ஜாதகரின் வாழ்க்கையில் சகல நன்மைகளுக்கும் நல்ல ஆரம்பத்தை தரும்.

11ம் பாவக வழியில் இருந்து மண் மனை வண்டி வாகன யோகத்துடன் நவீன கருவிகளை பயன்படுத்தும் யோகம், அதீத வசதி வாய்ப்புகளை அனுபவிக்கும் தன்மை, புதிய வண்டி வாகனங்கள், அதிநவீன வசதி வாய்ப்புகள், சொகுசு வாழ்க்கை என்ற வகையில் சுபயோகங்களை வாரி வழங்கும், ஜாதகரின் நல்ல குணம் அனைவராலும் பாராட்டப்படும்.

10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது உத்யோகம், வியாபாரம் தொழில் முதலியவற்றில் அபரிவித வளர்ச்சியை வாரி  வழங்கும், கவுரவம் குறையாத யோக வாழ்க்கையை தரும், கம்பீரமான தொழில் வாய்ப்புகள், தீர்க்கமான முடிவுகளை மேற்கொள்ளும் தைரியம், சிறந்த நிர்வாக வல்லமை, திட்டமிட்டு செயலாற்றி வெற்றிபெறும் யோகம், குறுகிய காலத்தில் அபரிவித வளர்ச்சி என்ற வகையில் சிறப்புக்களை வாரி வழங்கும், கூட்டு தொழில் வழியிலான நன்மைகளை ஜாதகர் பரிபூர்ணமாக பெறுவதுடன், எதிர்பாராத நன்மைகளையும் பெறுவார்.

6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 6ம் பாவக வழியில் இருந்து கடன் சார்ந்த இன்னல்கள் வெகுவான பாதிப்புகளை வாரி வழங்கும், கடன் மற்றும் வேலை ஆட்கள் மூலம் அதீத தொல்லைகளை  வாரி வழங்கும், உடல் நலம் கடுமையாக பாதிக்க கூடும், எதிரி தொல்லை ஜாதகருக்கு சற்று அதிக அளவிலேயே இருக்கும், உடல் நலம் மனநலம் சார்ந்த பாதிப்புகளை ஜாதகர் அனுபவிக்கும் தன்மையை தரும்.

12ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நிறைய செலவினங்களை தரும், பங்கு சந்தை லாட்டரியில் நஷ்டத்தை தரும், அதிக அளவிலான முதலீடுகள் ஜாதகரின் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை தந்து தொழில் முடக்கத்தை வழங்க கூடும், உறவுகள் வழியில் இருந்து ஜாதகர் சில நேரங்களில் அதீத மனஉளைசலுக்கும், போராட்டத்திற்கும் ஆளாகும் சூழ்நிலையை தரும்.

நடைபெறும் செவ்வாய் திசை தரும் பலன்கள் : ( 28/04/2016 முதல் 29/04/2023 வரை )

 நடைபெறும் செவ்வாய் திசை ஜாதகருக்கு 8,11ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன்  சம்பந்தம் பெற்று யோக பலன்களை தருவது, ஜாதகருக்கு ஆயுள் ஸ்தான வழியில் இருந்து திடீர் இழப்பு, மருத்துவ செலவினங்கள், பொருளாதார  தடைகள், எடுக்கும் காரியங்கள் பின்னடைவை சந்தித்தல் எதிலும் திருப்தி இன்மை என்ற வகையில் இன்னல்களை தந்த போதிலும், லாப ஸ்தான வழியில் இருந்து சுபயோகங்களை வாரி வழங்கும், குறிப்பாக ஜாதகருக்கு எதிர்பாராத நல்ல வாய்ப்புகள் வந்து சேரும், தனது வாழ்க்கை முன்னேற்றத்திற்கான சரியான முடிவுகளை மேற்கொள்ளும் யோகம் உண்டாகும், புதிய சிந்தனை, புதிய யுக்திகளை கையாண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் யோகம் உண்டு, வெளியூர் வெளிநாடுகளை சார்ந்த அன்பர்களின் ஆதரவில் சுகபோக யோக வாழ்க்கையை பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் தேடி வரும், எதிர்வரும் சனி புத்தி ஜாதகருக்கு எடுக்கும் காரியங்களில் நல்லதொரு வெற்றிகளை வாரி வழங்கும், திருமண முயற்சி, வேலைவாய்ப்பிற்க்கான முயற்சி, தொழில் வழியிலான செயல்பாடுகளில் பரிபூர்ண நன்மைகளையும் யோகங்களையும் வாரி வழங்கும் என்பது ஜாதகருக்கான சிறப்பு நினைவூட்டல் ஆகும்.

எதிர்வரும் ராகு திசை தரும் பலன்கள் ( 29/04/2023 முதல் 29/04/2041 வரை )

எதிர்வரும் ராகு திசை ஜாதகருக்கு 1,7,9ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவக தொடர்பை பெற்றும், 11ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும் வாரி வழங்குகிறது என்பது கவனிக்கத்தக்கது, இருப்பின் இதே ராகு திசையில் ஜாதகருக்கு 6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவக தொடர்பை பெற்று அவயோக பலனையும், 8ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவக தொடர்பை பெற்று அவயோக பலனையும் தருவது 6,8,12ம் பாவக வழியிலான இன்னல்களை தவிர்க்க இயலாத சூழ்நிலையை தரும், ஜாதகர் வெளியூர் அல்லது வெளிநாட்டில் ஜீவனம் மேற்கொள்வது  மேற்கண்ட பாதிப்பில் இருந்து விடுபட நல்லதோர் வாய்ப்பை நல்கும் என்பது கவனிக்கத்தக்கது, ஜாதகர் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து நன்மைகளையும், வலிமை அற்ற பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்கவும் தயார் நிலையில் இருப்பது நல்லது, ராகு திசை ஜாதகருக்கு பெரிய அளவிலான நன்மைகளையே தரும் என்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

பரிகாரம் :

1) ஜாதகர் திருவக்கரை சென்று முறையாக குரு பகவானுக்கு வக்கிரக நிவர்த்தி செய்து நலம் பெறுவது அவசியமாகிறது, வக்கிரக நிவர்த்தி செய்வதன் மூலம் ஜாதகர் சுய ஜாதகத்தில் உள்ள யோகங்களை சுவீகரிக்கும் வல்லமையை பரிபூர்ணமாக தரும்.

2) தினமும் சூரிய நமஸ்காரம் செய்து வருவது ஜாதகரின் வாழ்க்கையில் சிறப்பு மிக்க முன்னேற்றங்களை வாரி வழங்கும், தொழில் வழியிலான நன்மைகள் அதிகரிக்கும்.

3) திருவெண்காடு சென்று முக்குணநீராடி  சகல சௌபாக்கியங்களையும் பெறுக , சிவபெருமான் தரிசனம் சகல யோகங்களையும் சுவீகரிக்கும் வல்லமையை தரும்.

4) 48 நாட்கள் ஜாதகர் வீட்டில் விளக்கேற்றுவது சகல நன்மைகளையும் தரும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வெள்ளி, 20 ஜூலை, 2018

12ல் செவ்வாய் தோஷம் தனது திசையில் நன்மை செய்யுமா? எதிர்வரும் ராகு திசை தரும் பலன் என்ன ?


கேள்வி :
12ல் செவ்வாய் தோஷம் உள்ளது, தற்போழுது செவ்வாய் திசையே நடைமுறையில் உள்ளது செவ்வாய் தோஷம் என்பதால் தனது திசையில் இன்னல்களை தருமா ? லாப ஸ்தானமான 11ல் நின்ற ராகு திசை எனக்கு யோக வாழ்க்கையை வழங்குமா? எதிர்காலம் எப்படி இருக்கும் ?

பதில் :

 " ஜோதிடம் ஒரு கடல் " இதில் நீச்சல் தெரிந்தவர்கள் மூழ்கி முத்துஎடுக்கலாம், தெரியாதோர் கரையில் நின்று வேடிக்கை மட்டும் பார்க்க இயலும் என்பது உண்மை நிலை, தங்களது கேள்வியிலேயே, செவ்வாய் தோஷம் உள்ளதால் செவ்வாய் திசை இன்னல்களை தரும் என்ற எண்ணமும், 11ல் அமர்ந்த ராகு தனது திசையில் யோக வாழ்க்கையை தரும் என்ற எதிர்பார்ப்பும் இழையோடி நிற்பது தெளிவாகிறது அன்பரே, தங்களின் மனஓட்டம் நிறைவேறுகின்றதா ? என்பதை தங்களது சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு தெளிவு பெறுவோம்.


லக்கினம் : கடகம் 
ராசி : தனுசு 
நட்ஷத்திரம் : பூராடம் 1ம் பாதம் 

தங்களது ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் செவ்வாய் திசை ( 15/01/2017 முதல் 16/01/2024 வரை ) லக்கினத்திற்கு விரைய ஸ்தானமான 12ல் அமர்ந்து நடைபெற்ற போதிலும் தனது திசையில் தங்களது ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது வரவேற்கத்தக்கது, அதாவது செவ்வாய் தனது திசையில் 3,7ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவக தொடர்பை பெற்று சகோதரம் மற்றும் வீரிய ஸ்தானமான 3ம் பாவக வழியில் இருந்தும், களத்திரம் மற்றும் வியாபர விருத்தியை தரும் 7ம் பாவக வழியில் இருந்து தங்களுக்கு மிகுந்த சுபயோகங்களை நல்குவது வரவேற்கத்தக்கது, 3,7ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவக தொடர்பை பெறுவது தங்களுக்கு 3ம் பாவக வழியில் இருந்து நிலையான சுய முன்னேற்றம், எளிதான பொருள் வரவு, செய்யும் தொழில் வழியில் அபரிவித முன்னேற்றம், வீரியமிக்க செயல்பாடுகள், சகல சௌபாக்கியம், கலையில் தேர்ச்சி, சமூக அந்தஸ்து, அரசியலில் வெற்றி, தீர்க்காயுள், பெரியோர் வழியிலான ஆசி, அறிவு திறன் புத்திகூர்மை மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுதல், நியாமான வியாபார விருத்தி, விவசாயம் பத்திரிக்கை துறையில் முன்னேற்றம், சாஸ்திர ஆராய்ச்சி மூலம் லாபம், விளையாட்டு, இசை துறையில் ஆர்வம், லாட்டரி யோகம், வழக்கு போட்டி பந்தயங்களில் வெற்றி, வெளியூர் வெளிநாடு பயணம், ஆன்மீக திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம், என்ற வகையில் சிறப்புகளை தரும், எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றி மேல் வெற்றியை தரும், முன்னேற்றம் என்பது தன்னிறைவாக அமையும், மனோதைரியமும், தன்னம்பிக்கையும் வெகுவாக யோக பலன்களை வாரி வழங்கும்.

7ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் வாழ்க்கை துணை வழியிலான ஆதரவு பன்மடங்கு பெருகும், அவர் வழியிலான உதவிகள் ஜாதகருக்கு மிதமிஞ்சிய லாபங்களை வாரி வழங்கும், அரசியல், கூட்டு தொழில், நண்பர்கள் மூலம் வியாபாரம் விருத்தி அடையும், பிரபல்ய யோகம் உண்டு என்பதால் ஜாதகரின் முன்னேற்றம் வெகு விரைவில் அமையும் என்பது கவனிக்கத்தக்கது, நல்ல நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் ஜாதகருக்கு சிறப்பாக அமைவார்கள், தனசேர்க்கை ஜாதகருக்கு பெரிய திட்டமிடுதல்களை மிக எளிதாக வெற்றிகொள்ளும் வாய்ப்பை நல்கும், சமூகத்தில் ஜாதகருக்கு மதிப்பு  மரியாதையும், கவுரவ பதவிகளும் தேடி வரும், எதிர்பாரத தொழில் வெற்றிகளை சுவீகரிக்கும் வல்லமையை தற்போழுது நடைபெறும் 12ல் அமர்ந்த செவ்வாய் திசையையே ( 12ல் செவ்வாய் தோஷம் ) தங்களுக்கு வாரி வழங்குகிறது என்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

எதிர்வரும் ராகு திசை தரும் பலன்கள் : ( 16/01/2024 முதல் 16/01/2042 வரை )

ராகு தனது திசையில் தங்களுக்கு 1,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தர இருப்பதும், 5,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தர இருப்பதும் தங்களுக்கு திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவக வழியில் இருந்தும், 200% விகித இன்னல்களை தரும் பாதக ஸ்தான வழியில் இருந்து ஏக காலத்தில் வெகுவான இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும், ராகு திசையில் தாங்கள் எடுக்கும் முடிவுகள் யாவும் கடும் சேதாரத்தையே வாரி வழங்கும், லக்கின  பாவக வழியில் இருந்து உடல் நலம் மற்றும் மனநலம் பாதிக்கும், சூழ்நிலை சந்தர்ப்பங்களை அடிபணியும் நிலையை தரும், நினைத்த காரியங்கள் நடைபெற கடும் போராட்டத்தை மேற்கொள்ளும் சூழ்நிலையை தரும், சரியான முடிவுகளை மேற்கொள்ள பகிர்தனா முயற்சிகள் எடுக்கும் சூழ்நிலையை தரும், உதவி செய்ய யாருமற்ற நிலையை தரும், எதிர்பார்ப்புகள் யாவும் பொய்த்துப்போகும், நிம்மதியை வெகுவாக பாதிக்கும், 11ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டமின்மையால் மிகுந்த சிரமங்களை எதிகொள்ளும் சூழ்நிலையை தரும், பிற்போக்குத்தனம், கற்பனையில் சஞ்சரிக்கும் நிலை, மூடநம்பிக்கையில் ஆர்வம், மற்றவருடன் குற்றம் கண்டுபிடிக்கும் மனநிலை என்ற வகையில் தங்களின் முன்னேற்றத்தை வெகுவாக பாதிக்கும்.

5ம் பாவக வழியில் இருந்து தங்களின் பூர்வீக இடத்தில் இருந்து வெகு தொலைவு  சென்று பரதேஷ ஜீவனம் மேற்கொள்ளும் நிலையை தரும், குழந்தைகள் வழியிலான இன்னல்கள் அதிகரிக்கும், தெளிவில்லாத சிந்தனை, தவறான முடிவுகள் மூலம் மிகப்பெரிய இழப்புகளை சந்திக்கும் சூழ்நிலையை தரும், உறவுகள் வழியிலான மனக்கசப்பு அதிகரிக்கும் என்பது கவனிக்கத்தக்கது, 8ம் பாவக வழியில் இருந்து திடீர் இழப்பு, உடல் நல பாதிப்பு, வீண் விரையம், மருத்துவ செலவினங்கள், விபத்தின் மூலம் பாதிப்பு, வண்டி வாகனம் மூலம் வரும் பெரும்செலவுகள், உடலில் காயங்கள் ஏற்படுதல் அதனால் வரும் மருத்துவ செலவினங்கள், நம்பிக்கை இன்மை, அனைவராலும் தொல்லை, பொது வாழ்க்கையில் அவப்பெயர் என்ற வகையில் தங்களுக்கு 11ல் வலிமை பெற்று அமர்ந்து இருக்கும் ராகு திசை மிகுந்த இன்னல்களையே வாரி வழங்க உள்ளது என்பதை கருத்தில் கொண்டு விழிப்புணர்வுடன் செயல்பட்டு அவயோக பலாபலன்களை தவிர்க்க முற்படுங்கள்.

குறிப்பு :

12ல் தோஷம் தரும் செவ்வாய், தனது திசையில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தி யோக பலன்களையும், 5ல் வலிமை பெற்று அமர்ந்து இருக்கும் ராகு தனது திசையில் கடுமையாக பாதிக்கப்பட்ட பாதகம் மற்றும் ஆயுள் ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கான விதி அமைப்பு இதை ஜாதகர் தனது மதிகொண்டு வெல்ல இறையருள் கருணைபுரியட்டும் வாழ்த்துகள்......

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 7 ஜூலை, 2018

திருமணம் நடைபெற வாய்ப்பு உள்ளதா ? அல்லது சன்னியாச வாழ்க்கையை தந்துவிடுமா ?



 "இல்லற வாழ்க்கை" பருவ வயதில் அமையவில்லை எனில் தங்களின் மனஓட்டமே அனைவருக்கும் ஏற்படும், திருமண வாழ்க்கை சரியான வயதில் அமையவில்லை எனில் நமது சுய ஜாதக வலிமையை பற்றி ஜாதக ஆலோசணை பெற்று கொள்வதே சாலச்சிறந்தது, ஏனெனில் நமது ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை குறிக்கும் 2,5,7,8,12ம் வீடுகள் வலிமை பெற்று இருக்கின்றதா ? என்பதில் தெளிவு கிடைக்கும், நடைபெறும் திசாபுத்திகள், எதிர்வரும் திசாபுத்திகள் சுய ஜாதகத்தில் ஏற்று நடத்தும் பாவக வலிமையை பற்றியும், அது தரும் யோக அவயோக பலாபலன்கள் பற்றியும் அறிந்துகொள்ள இயலும், இதன் அடிப்படையில் திருமணம் கால தாமதமாக காரணம் என்ன? சுய ஜாதக வலிமை இன்மையா ? நடைபெறும் திசா புத்திகள் திருமண வாழ்க்கைக்கு தடைக்கற்களாக அமைந்து வலிமையற்ற பாவக பலனை ஏற்று நடத்துகின்றதா ? என்பது பற்றி ஓர் முடிவுக்கு வர இயலும், தங்களது ஜாதக வலிமையின் அடிப்படையில் இல்லற வாழ்க்கையில் இணைய இயலாமல் கால தாமதம் ஏற்பட என்ன காரணம் என்பதை இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பரே !


லக்கினம் : துலாம்
ராசி : கன்னி
நட்ஷத்திரம் : அஸ்தம் 2ம் பாதம்.

 தங்களது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 வீடுகளில் பெரும்பாலான வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது தங்களது இல்லற வாழ்க்கைக்கான தடைகளுக்கு அடிப்படை காரணமாக விளங்குகிறது, குறிப்பாக 1,5,7,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தங்களுக்கு 1,5,7,11ம் வீடுகள் வழியில் இருந்து 200% விகித இன்னல்களை தரும் அமைப்பாகும், களத்திர ஸ்தானம் எனும் 7ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தங்களுக்கு நல்லொதொரு வாழ்க்கை துணை அமைவதற்கான சந்தர்ப்பங்களை வெகுவாக பாதிக்கிறது, மேலும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியான துலாமும் தங்களுக்கு ஜென்ம லக்கினமாக அமைந்து 200% விகித இன்னல்களை தரும் பாதக ஸ்தான தொடர்பை பெறுவது வெகுவாக கவலை தரும் விஷயமாகும், சுய ஜாதகத்தில் லக்கினத்திற்கு 7ம் வீடும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியான துலாமும் ஏக காலத்தில் வலிமையின்றி பாதக ஸ்தான தொடர்பை பெறுவது தங்களது இல்லற வாழ்க்கை கனவை தகர்த்தெறிகிறது, இதுவே தங்களது திருமண வாழ்க்கை தடைபெறவும் அடிப்படை காரணமாக விளங்குகிறது.

 மேலும் சுய ஜாதகத்தில் 4,6,8,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தங்களை மேலும் இன்னல்களுக்கு ஆளாக்கும் தன்மை பெற்றது, 5,7 பாத ஸ்தான தொடர்பை பெறுவதும், 8,12 விரைய ஸ்தான தொடர்பை பெறுவதும் தங்களது திருமண முயற்சிகள் யாவற்றையும் படுதோல்வியுற செய்யும் என்பதை கருத்தில் கொள்க, ஏனெனில் இல்லற வாழ்க்கையை குறிக்கும் 2,5,7,8,12 வீடுகளில் 5,7,8,12 எனும் வீடுகள் கடுமையாக பாதிக்கப்படுவது தங்களுக்கு நன்மையை தரும் அமைப்பு அல்ல என்பதை கவனத்தில் கொள்க.

பருவ வயதில் நடைபெற ராகு திசை ( 12/09/1994 முதல் 11/09/2012 வரை ) தங்களுக்கு 4,8,10ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் விரைய ஸ்தான பலனை நல்கியதும், தற்போழுது நடைபெறும் குரு திசை  ( 11/09/2012 முதல் 11/09/2028 வரை )  தங்களுக்கு உயிர் உடலாகிய லக்கினம் எனும் 1ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகித இன்னல்களை தருவது தங்களது வாழ்க்கையில் மிகுந்த துன்பங்களை தரும் அமைப்பாகும், தாங்க இயலாத இன்னல்களும், உதவி செய்ய யாருமற்ற சூழ்நிலையையும் தரும், எடுக்கும் காரியங்கள் யாவும் தடை தாமதம் என்ற நிலைக்கு ஆளாகும் என்பதனால், ஒவ்வொரு செயலையும் கவனமுடன் செய்வதே தங்களுக்கு நன்மையை தரும்.

தங்களது ஜாதகத்தில் 2ம் வீடு குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 3,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் சிறப்பான நன்மைகளை தரும் அமைப்பாகும் , எனவே மேற்கண்ட பாவக தொடர்பை ஏற்று நடத்தும் கிரகங்களின் திசாபுத்தி  காலம் அறிந்து திருமணத்திற்கான முயற்சிகளை மேற்கொண்டால் உறுதியாக தங்களுக்கு ஓர் நல்ல வாழ்க்கை துணையும், சிறந்த இல்லற வாழ்க்கையும் அமையும், மேலும் தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 2,5,7,8,12ம் வீடுகள் வலிமை பெற்ற பாவக தொடர்பை பெற்று இருப்பது அவசியமாகிறது என்பதை கருத்தில் கொண்டு நலம் பெறுங்கள்.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் 2ம் வீடு குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது வரவேற்கத்தக்கது, இது ஜாதகருக்கு திருமணம் தாமதமானாலும் நல்லதோர் இல்லற வாழ்க்கை அமையும் என்பதை தெளிவுபடுத்துகிறது, தற்போழுது நடைபெறும் குரு திசை புதன் புத்தியில் வரும் சனி அந்தரத்தில் திருமண முயற்சிகளை ஜாதகர் மேற்கொள்வது சிறந்த இல்லற வாழ்க்கையை நல்கும், சனி அந்தரமே ஜாதகருக்கு 2ம் வீடு குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழுவீச்சில் 2ம் பாவக வழியில் இருந்து திருமணத்திற்க்கான சுபயோகத்தை வழங்குகிறது, "வாழ்த்துகள்"

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வியாழன், 28 ஜூன், 2018

ராகுகேது தோஷம் என்ன செய்யும் ? திருமணம் தாமதமாக ராகுகேது தோஷம் காரணமாக இருக்கின்றதா ?


 கேள்வி :

 ஐயா வணக்கம்.என் மகனின் ஜாதகம் அனுப்பி உள்ளேன். 6 வருடமாக பெண் பார்த்து வருகிறேன் எதுவும் அமையவில்லை. 2ல் கேதுவும், 8ல் ராகுவும் இருப்பதல் திருமணம் நடக்க வாய்ப்பு குறைவு என்று கூறுகிறார்கள். அவர்கள் சொன்ன எல்லா பரிகாரங்களும் செய்து விட்டேன். தங்கள் என்ன காரணம் என்று பார்த்து கூறும்படி கேட்டுக் கொள்கிறேன்.

பதில் :

2ல் கேதுவும், 8ல் ராகுவும் இருப்பதல் திருமணம் நடக்க வாய்ப்பு குறைவு என்பது தவறான கருத்தாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது, ஏனெனில் தங்களது மகனின் ஜாதகத்தில் பாவக அமைப்பின் படி லக்கினம் எனும் முதல் பாவகம் கன்னி ராசியில் 167:04:58 பாகையில் ஆரம்பித்து, துலாம் ராசியில் 197:29:04 பாகைவரை வியாபித்து நிற்கிறது, கேது பகவான் லக்கினத்திற்கு உற்ப்பட்ட 195:14:48 பாகையில் அமர்ந்து இருப்பதே சரியானது, மேலும் ராகு பகவானும் களத்திர ஸ்தானத்திற்கு உற்ப்பட்ட 15:14:48 பாகையில் அமர்ந்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது, மேலும் சாயா கிரகங்களான ராகு கேது தான் அமர்ந்த பாவாக அமைப்பிற்கு வலிமை சேர்க்கும் விதத்தில் இருப்பது வரவேற்கத்தக்கது, எனவே ஜாதகருக்கு ராகு கேது யாதொரு இன்னல்களும்  தான் அமர்ந்த பாவக வழியில் இருந்து தரவில்லை என்பதை கருத்தில் கொள்க, மேலும் சுய ஜாதகத்தில் லக்கினத்தில் கேது, களத்திர ஸ்தானத்தில் ராகு என்பதே சரியான நிலை, அடுத்து தங்களது மகனுக்கு திருமணம் தாமதமாக காரணம் என்ன ? என்பதை இன்றைய சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பரே !



லக்கினம் : கன்னி
ராசி : மிதுனம்
நட்ஷத்திரம் : புனர்பூசம் 2ம் பாதம்

தங்களது மகனின் ஜாதகத்தில் 7ல் அமர்ந்த ராகு சம்பந்தப்பட்ட பாவகத்திற்கு வலிமை சேர்க்கும் அமைப்பில் இருந்தாலும், பாவக தொடர்பு வழியில் கடுமையாக பாதிக்கப்படுவது ஜாதகருக்கு உகந்ததல்ல, சுய ஜாதகத்தில் ஜாதகருக்கு 3,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு திருமண வாழ்க்கையில் வரும் தடை தாமதத்திற்கு அடிப்படை காரணமாக விளங்குகிறது, ஒருவரது சுய ஜாதகத்தில் எந்த காரணத்தை கொண்டும் இல்லற வாழ்க்கையை குறிக்கும் 2,5,7,8,12ம் வீடுகள் பாதிக்கப்படுவது நல்லதல்ல, அதுவும் தங்களது ஜாதகத்தில் 7ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதும், 8ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், தங்களுக்கு கடுமையான நெருக்கடிகளை தரும் அமைப்பாகும்.

கடந்த சனி திசை தங்களது மகனுக்கு 3,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் பாதக ஸ்தான பலனை வாரி வழங்கியது திருமண வாழ்க்கை சார்ந்த முயற்சிகள் யாவிலும் பெரும் தோல்வியை தந்து இருக்க கூடும், தற்போழுது நடைமுறையில் உள்ள கேது புதன்  திசை 12ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முதலீடு செய்வதால் வரும் அதிர்ஷ்டத்தை மட்டுமே வழங்குகிறது, புதன் திசை கேது புத்தி 6.10ம் வீடுகள் ஆயுள் ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று இன்னல்களையும், 1,5,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும் வழங்கி இருக்கின்றது, தற்போழுது நடைபெறும் சுக்கிரன் புத்தி 7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகித இன்னல்களை தருவது தாங்கள் எடுக்கும் திருமண முயற்சிகளை வெகுவாக பாதிப்பதுடன், ஜாதகருக்கு எதிர்பாலின அமைப்பினரிடம் இருந்து இன்னல்களையும் தரும்.

தங்களது மகனுக்கு திருமண முயற்சிகளை மேற்கொள்ளும் முன் முறையாக ஜாதக ஆலோசனை பெற்று, அதன் பிறகு முயற்சி செய்து நலம் பெறுங்கள்.

குறிப்பு :

 ஜாதகருக்கு களத்திர ஸ்தான பாதிப்பு என்பது மிகுந்த இன்னல்களை ( 200% விகிதம் ) தரும் அமைப்பில் உள்ளதால், சரியான தீர்வை தேடுவதே தங்களுக்கு மிகுந்த நன்மைகளை தரும், மேலும் ஜாதகருக்கு 6 பாவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதும், எதிர்வரும் சந்திரன் செவ்வாய் புத்திகள் வலிமையற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது மிகுந்த இன்னல்களை தரும் என்பதால், முறையாக  ஜாதக ஆலோசணை பெற்று நலம் பெறுக.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வெள்ளி, 22 ஜூன், 2018

பொருத்தமற்ற கணவரை தேர்வு செய்துவிட்டேனா ? மணமுறிவுக்கு காரணம் என்ன ?



 திருமணம் நடைபெற்று 1 வருடம் கூட நிறைவு பெறவில்லை, இல்லற வாழ்க்கையில் மனக்கசப்பு, எங்களது விருப்பப்படி காதல் திருமணம் செய்துகொண்டோம், இருப்பினும் விவாகரத்து கேட்கிறார், என்னிடம் தவறு உள்ளதா? அல்லது எனது கணவரிடம் தவறு உள்ளதா? நிறைய ஜோதிடர்களை கண்டும் தெளிவான ஜாதக பலனையே இதுவரை அறிய இயலவில்லை, பொருத்தமற்ற கணவரை தேர்வு செய்துவிட்டேனா ? மணமுறிவுக்கு உண்மையான காரணம் என்ன ? தயவு செய்து சரியான விளக்கங்களை தர வேண்டுகின்றேன், ஏதாவது பரிகாரம் மேற்கொண்டால் சேர்ந்து வாழ்வதற்கு வழியுண்டா? தயவு செய்து கூறவும்.


லக்கினம் : மீனம்
ராசி : மேஷம்
நட்ஷத்திரம் : பரணி 1ம் பாதம்

வணக்கத்திற்கு உரிய சகோதரி அவர்களுக்கு, இன்றைய எந்திரவியல் வாழ்க்கையில் இல்லறம் நல்லறமாக அமைவதற்கு அடிப்படை தகுதியே பெண்களின் விட்டுக்கொடுக்கும் தன்மை, சகிப்பு தன்மை, தாய்மை உள்ளம், பொறுமை, அனைவரையும் அனுசரித்து செல்லும் குணம், பெருந்தன்மையான நடவடிக்கைகள், கணவர், குழந்தைகள் மற்றும் புகுந்த வீட்டில் உள்ள அனைவரிடமும் அன்பு காட்டுதல் போன்றவையே என்றால் அது மிகையில்லை, தங்களது இல்லற வாழ்க்கை மணமுறிவை நோக்கி செல்வதற்கு காரணம் என்ன ? என்பதை பற்றி தாங்களே ஓர் சுய மதிப்பீடு செய்துகொள்வது நல்லது, உதாரணமாக தங்களது செயல்பாடுகள் பற்றிய மதிப்பீடுகள் தங்களுக்கு உண்மையை உணரவைக்கும், இருப்பினும் தங்களது சுய ஜாதகத்தில் உள்ள பாவக தொடர்புகள் வழியிலான பலாபலன்களை மணமுறிவுக்கு காரணம் என்ன? என்பது பற்றியும் விளக்கம் தர "ஜோதிடதீபம்" கடமைப்பட்டுள்ளது, தங்களது ஜாதக வலிமையை பற்றியும், தங்களது வாழ்ககை துணையின் ஜாதக வலிமை பற்றியும் மேலோட்டமாக இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

தங்களது சுய ஜாதகத்தில் பாவக தொடர்புகளின் வலிமை நிலை :

1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தங்களுக்கு மேற்கண்ட பாவாக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை தரும். ( அடிப்படையே சறுக்குகிறது )

2,5,8,10,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மேற்கண்ட பாவக வழியில் இருந்து 100% விகித நன்மைகளை தரும். ( 11ம் பாவகம் சர ராசியான மகரத்தில் 22 பாகைகளையும், ஸ்திர ராசியான கும்பத்தில் 9 பாகைகளையும் கொண்டிருப்பது அதிர்ஷ்டத்தின் தாக்கத்தை பரிபூர்ணமாக தரும் )

3,6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தங்களுக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து ஸ்திரமான இன்னல்களை மிக கடுமையாக வாரி வழங்கும்.

4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தங்களுக்கு சிறப்பான யோக பலன்களை சுக ஸ்தான வழியில் இருந்து வாரி வழங்கும், மேலும் தங்களது நல்ல குணம் மற்றவர்கள் வழியில் இருந்து நன்மைகளை சுவீகரிக்கும் வல்லமையை தரும்.

அடிப்படையில் தங்களது கணவரது ஜாதகத்தை விட தங்களது ஜாதகம் சற்று வலு குறைவாகவே காணப்படுகிறது, குறிப்பாக 1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தங்களுக்கு இல்லற வாழ்க்கையில் மனக்கசப்பையும், பிரிவு நிலையையும் ஏற்படுத்த காரணமாக அமைகிறது, தாங்கள் தேர்வு செய்த இல்லற வாழ்க்கைக்கான துணை சரியானது என்ற போதிலும், தங்களது சுய ஜாதகத்தில் லக்கினம் மற்றும் களத்திர ஸ்தான வலிமை கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது, தங்களுக்கு இனிமையான இல்லற வாழ்க்கையை நல்காது என்பதுடன், வரும் பிரச்சனைகளுக்கு அடிப்படை காரணமாக தாங்களே இருப்பீர்கள் என்பதே உண்மை நிலை, மேலும் 3,6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மேற்கண்ட பாவக வழியில் இருந்து கடுமையான மன உளைச்சலையும், மன போராட்டத்தையும் தரும், 3ம் பாவக வழியில் இருந்து ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் தன்மையை குறைக்கும், 6ம் பாவக வழியில் இருந்து உடல் நலம் மனநலம் கெடும், 9ம் பாவக வழியில் இருந்து பெரியவர்கள் அறிவுரை வீணாகும், அவப்பெயர் உண்டாகும், 12ம் பாவக வழியில் இருந்து தாம்பத்தியம், மனப்போராட்டம், நிம்மதியின்மை அதிகரிக்கும்.

எனவே அடிப்படையில் தங்களது ஜாதகமே இல்லற வாழ்க்கையில் மணமுறிவுக்கு காரணமாக அமைகிறது என்பதை தாங்கள் உணர்வது அவசியமாகிறது, தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 5ம் பாவகத்தை தவிர மற்ற பாவகங்கள் மிக மிக வலிமையுடன் இருப்பது கவனிக்கத்தக்கது, இது தங்களுக்கு கிடைத்த ஓர் வரப்பிரசாதம் ஆகும், தங்களது ஜாதகத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட களத்திர ஸ்தானம் தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் மிகவும் சிறப்பாக இருப்பது கவனிக்கத்தக்கது எனவே, பாதக ஸ்தான தொடர்பு வழியில் இருந்து வரும் சந்தேகம், தவறான புரிதல், பிடிவாதம், வீண்வாதம் போன்ற வற்றை களைந்து, தங்களது வாழ்க்கை துணையுடன் பல்லாண்டு கால வாழ "ஜோதிடதீபம்" வாழ்த்துகிறது.

தங்களது சுய ஜாதகத்தில் அதிர்ஷ்டம் என்று அழைக்கப்படும் லாப ஸ்தானம் மிகவும் சிறப்பான நன்மைகளை வாரி வழங்கிக்கொண்டு இருக்கின்றது, இதை அறியாமல் தங்களது லக்கினம் மற்றும் களத்திர ஸ்தானம் தரும் பாதக ஸ்தான பலனை முன்னிறுத்தி உங்களது யோக வாழ்க்கைக்கு தாங்களே மூடுவிழா நடத்திவிடாதீர்கள், தங்களின் சகிப்பு தன்மையும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் தங்களது இல்லற வாழ்க்கையை மீண்டும் சிறப்பாக அமைத்து தரும் என்பதை கருத்தில் கொண்டு நலம் பெறுங்கள், தற்போழுது நடைமுறையில் உள்ள 3,6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 12ம் பாவக பலனை முழுவீச்சில் நடத்துவதே, தங்களது இல்லற வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படுவதற்கு காரணமாக அமைகிறது, எனவே மேற்கண்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தங்களது அறிவுத்திறன் கொண்டும், பெரியோர்கள் அறிவுரை கொண்டும் வெற்றிபெறுங்கள்.

தற்போழுது நடைபெறும் சூரியன் திசையில் சனி புத்தி 4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நன்மைகளை தருவது மீண்டு இல்லற வாழ்க்கையில் சிறந்த துவக்கத்தை தரும் என்பதில் சந்தேகம் இல்லை, மேலும் தாங்கள் குடியிருக்கும் வீடு வடக்குதிசை வாயிற்படி கொண்டதாக அமைவது சகல சௌபாக்கியங்களையும் தரும், சுகபோக யோக வாழ்க்கைக்கு நல்ல அடித்தளத்தை அமைத்து தரும்.

பரிகாரம் :

 தங்களின் மனமாற்றமே சிறந்த பரிகாரமாகும், இருப்பினும் சர்ப்ப சாந்தி பரிகாரமும், பிராமண ஆசிர்வாதமும் தங்களது வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை வாரி வழங்கும், இல்லற வாழ்க்கையில் வரும் இன்னல்களுக்கும், சுய ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவக வழியில் இருந்து வரும் துன்பங்களுக்கும் சரியான தீர்வை தரும், சனி வக்கிரக நிவர்த்தி திருவக்கரை சென்று செய்து வருவது சகல நிலைகளில் இருந்தும் சுபயோகங்ளை வாரி வழங்கும், வாழ்த்துகள்

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696 

செவ்வாய், 12 ஜூன், 2018

ஜாதக ஆலோசனை : பெண்கள் ஜாதகத்தில் சுபயோகங்கள் தரும் நன்மைகள் !

  

 ஓர் வலிமை மிக்க பெண்ணின் ஜாதகம் தன்னையும், தன்னை சார்ந்து ஜீவிப்பவர்களையும் வாழ்க்கையில் வெற்றி பெற செய்யும் வல்லமை கொண்டது, மேலும் வலிமை பெரும் பாவக வழியில் இருந்து, பெற்றோர்,சகோதர சகோதரிகள், உறவுகள், வாழ்க்கை துணை, குழந்தைகள், வாழ்க்கை துணை வழியிலான உறவுகள் அனைவரின் எதிர்பார்ப்பையும் நிறைவு செய்யும் யோகம் பெற்றவர்கள், எனவே நமக்கு வலிமை மிக்க ஜாதகம் பெற்ற தாய்,வாழ்க்கை துணை,குழந்தை கிடைப்பது நாம் செய்த புண்ணியம் மற்றும் பாக்கியத்தின் வலிமையே ஆகும், கீழ்கண்ட ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையின் தன்மையை இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !



லக்கினம் : மகரம் 
ராசி : மிதுனம் 
நட்ஷத்திரம் : மிருகசீரிடம்

ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் வலிமை பெற்றுள்ள பாவக தொடர்புகள் :

ஒருவரது சுய ஜாதகத்தில் 1,4,7,10ம் வீடுகள் வலிமை பெற்று அமைவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு நாற்காலியில் நான்கு கால்களும் வலிமை பெற்று இருப்பதற்கு நிகரான யோக பலன்களை தரும், மேற்கண்ட ஜாதகிக்கு 1,4,7,10ம் வீடுகள் மிகவும் வலிமை பெற்று நான்கு பாவகங்களும் முறையே, மகரம்,மேஷம்,கடகம் மற்றும் துலாம் ராசிகளில் வியாபித்து நிற்பது ஜாதகி ஸ்திரமான வலிமை பெற்ற யோக ஜாதகம் பெற்றவர் என்பதை கட்டியம் கூறுகிறது மேலும் மேற்கண்ட ராசிகள் யாவும் சர இயக்கத்தில் இயங்குவது யோக பலன்களை 100% விகிதம் சுவீகரித்து வழங்கும் என்பதை கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாக "ஜோதிடதீபம்" கருதுகிறது.

1ம் வீடு ஜாதகிக்கு உயிர் உடலாகிய லக்கின பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு நீண்ட ஆயுளையும், நிறைவான செல்வத்தையும் வாரி வழங்கும், மேலும் லக்கினம் சர மண் தத்துவத்தில் 18 பாகைகளும், ஸ்திர காற்று தத்துவத்தில் 15 பாகைகளையும் கொண்டு இருப்பது ஆரோக்கியமான திரேகத்தையும், சிறந்த அறிவு திறனையும் வழங்கும், மேலும் ஜாதகியின் செயல்பாடுகள் யாவும் நேர்மை மிக்கதாகவும், அதன் வழியிலான அதிர்ஷ்டங்களை பரிபூர்ணமாக பெறுபவராகவும் இயங்க செய்யும், நிறைந்த நல்லறிவு, நேர்மையான குணம், செய்யும் காரியங்களில் சத்தியத்தை கடைபிடித்தல், அனைத்திலும் வெற்றி வாய்ப்பு, மனதில் எண்ணிய காரியங்கள் யாவும் பரிபூர்ணமாக நிறைவேறும் தன்மை, எதிர்ப்பவர்களை வென்று நலம் பெரும் தன்மை, மேன்மையான நோக்கங்கள், எதையும் சமாளிக்கும் வல்லமை என்ற வகையில் சிறப்புகளை தரும்.

4,7,10ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகிக்கு நல்ல குணாதிசயத்தை தரும், இளகிய மனமும், பரோஉபாகர மனநிலை ஜாதகியின் முன்னேற்றத்திற்கு பெரிய அளவில் உதவி புரியும், மக்கள் தொடர்புள்ள துறைகளில் ஜாதகியை விருத்தி பெற செய்யும், மருத்துவம், ஹீலிங், மற்றும் மனநலம் சார்ந்த துறைகளில் ஜாதகிக்கு முழு வெற்றி கிட்டும், சமாதான குணம், பெருந்தன்மையான நடவடிக்கை மூலம் அனைவரையும் கவரும் தன்மையை தரும், மிக பெரிய சொத்து சுக சேர்க்கையை பெறுவதற்கான வல்லமை பெற்றவர், வீடு நிலம், இடம் ஆகியவற்றின் மூலம் நல்ல செல்வசேர்க்கை உண்டாகும், வண்டி வாகன யோகம்  உண்டு, வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானம் தன்னிறைவான பொருளாதர வளர்ச்சியை தரும், உறவுகள் வழியிலான ஆதரவு, தந்தைக்கு யோகம், தந்தையுடன் பாசமாக இருத்தல், தந்தையின் உறவுகள் வழியிலான யோக வாழ்க்கையை ஜாதகி பரிபூர்ணமாக பெறுவார்.

7ம் பாவக வழியில் இருந்து ஜாதகிக்கு நல்ல நண்பர்கள், சிறந்த கூட்டாளிகள் மூலம் யோக வாழ்க்கை அமையும், திருமணத்திற்கு பிறகான வாழ்க்கை மிகவும் யோகமிக்கதாக அமையும், நல்ல வாழ்க்கை துணை ஜாதகியின் முன்னேற்றத்திற்கு பேருதவியாக அமைவார், கணவர் வழியிலான நன்மைகளை வாழ்நாள் முழுவதும் பெறுவதற்கான யோகம் பெற்றவர், பொதுமக்களிடம் செல்வாக்கும், நம்பிக்கையும் மிக எளிதாக பெறுவதற்கான வாய்ப்புகளை தரும், செய்யும் செயல்களில் யாவிலும் பொதுநலம் பிரதிபலிக்கும், நேர்மறையான எண்ணங்கள் ஜாதகிக்கு பரிபூர்ண நன்மைகளை வாரி வழங்கும், முடியாதது எதுவும் இல்லை என்பதை நிரூபிக்கும் யோகம் உண்டாகும், ஜாதகியின் வாழ்க்கை மிகவும் பிரகாசம் மிக்கதாக அமையும், வியாபாரம் தொழில், கூட்டு தொழில், கூட்டு முயற்சிகள் யாவும் ஜாதகிக்கு நல்லதோர் வெற்றிகளை தொடர்ந்து வாரி வழங்கும், இல்லற வாழ்க்கை மிக இனிமையா அமையும், வாழ்க்கை துணையுடனான புரிதல்கள் இல்லற வாழ்க்கையையும், குடும்பத்திலும் சிறப்பான சுபயோகங்களை வாரி வழங்கும்.

10ம் பாவக வழியில் இருந்து ஜாதகி வெளியூர் அல்லது வெளிநாடுகளில் ஜீவன மேன்மையை 100% விகிதம் பெறுவார், நல்ல வியாபர நுணுக்கங்களை தரும், பொதுமக்கள் ஆதரவு மற்றும் மரியாதை முழு அளவில் கிடைக்கும், சமூகத்தில் மதிக்கத்தக்க அந்தஸ்த்தை வெகு விரைவில் பெறுவார், தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகள் ஜாதகியை தேடி வரும், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் செல்வாக்கு அதிகரிக்கும், தெய்வீக அனுக்கிரகம் மூலம் ஜாதகிக்கு செய்யும் தொழில் வழியிலான விருத்தி வெகு விரைவில் சீராகவும் அமையும், பல தொழில் புரியும் யோகம் உண்டு, தனது தாய்க்கு மிகுந்த யோகத்தை தருபவர், தாய் வழியிலான ஆதரவும், ஆசியையும் பரிபூர்ணமாக பெரும் யோகம் உண்டு, நிறைய சொத்து சுக சேர்க்கையை தனது சுய உழைப்பின் மூலம் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிக அளவில் உண்டாகும், அரசு மரியாதை மற்றும் கவுரவம் ஜாதகிக்கு தேடிவரும், செய்யும் தொழிலில்  வழியில் நேர்மையும், பெரும் புகழும் உண்டாகும், கவுரவம் குறையாத யோக வாழ்க்கை ஜாதகிக்கு வாழ்நாள் முழுவதும் சிறப்பாக அமையும்.

9ம் வீடு ஜாதகிக்கு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது எதிர்பார்ப்புகள் அனைத்தையும் நிறைவேற்றும், மிதமிஞ்சிய அறிவு திறன் ஜாதகியின் வாழ்க்கையில் வியக்கத்தகு முன்னேற்றங்களை நல்கும், தெய்வீக அனுக்கிரகமும், பித்துருக்கள் ஆசியும் ஜாதகிக்கு சுபயோக வாழ்க்கையை வாரி வழங்கும், முன்னேற்றம் என்பது ஜாதகிக்கு சிறப்பாக அமையும், தெளிவான சிந்தனை அறிவு, எதையும் சமாளிக்கும் சமயோசித அறிவு திறன், ஆன்மீக ஈடுபாடு ஆகியவை ஜாதகிக்கு பரிபூர்ண நன்மைகளை வாரி வழங்கும், ஜாதகியின் கல்வி அறிவு மிகப்பெரிய வெற்றிகளை வாரி வழங்கும், ஆராய்ச்சி கல்வி, பட்டய படிப்பில் நல்ல தேர்ச்சியும், அதன் வழியிலான சுபயோகங்களையும் ஜாதகி பரிபூர்ணமாக பெறுவார், சுபயோகங்களை  பெறுவதில் தடையேதும் இருக்காது.

ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

2,3,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 2ம் பாவக வழியில் இருந்து மருத்துவ துறையில் வேலை வாய்ப்பு, கலைகளில் ஆர்வம் மற்றும் தேர்ச்சி, ஆய்வு கல்வியில் தேர்ச்சி, தாமத திருமணம், வருமானம் சார்ந்த இன்னல்கள், வாக்கின் வழியிலான இன்னல்கள், வீண் விரையம், வருமானம் சில நேரங்களில் தடைபடும் தன்மை என்ற வகையில் இன்னல்களை தரக்கூடும், குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சனைகளை எதிர்கொள்ளும் சூழ்நிலையைத்தரும்.

3ம் பாவக வழியில் இருந்து மருந்துகள் மூலம் அபரிவித லாபத்தை தரும், அறிய கலைகளில் ஆர்வத்தையும் தேர்ச்சியையும் நல்கும், விட்டுக்கொடுக்கும் தன்மை, அயலார் மூலம் நல்ல லாபம், நீண்ட பயணம், சட்டம் மூலம் அதீத நன்மைகள், புதிய கண்டுபிடிப்புகள், தர்ம சிந்தனை, சத்தியத்தை மதித்து நடத்தல் என்ற வகையில் நன்மைகளை தரும், தைரியமும், தன்னம்பிக்கையும் ஜாதகிக்கு நல்ல வெற்றிகளை தரும், விடாமுயற்சி ஜாதகிக்கு சுபயோக வாழ்க்கையை நல்கும்.

12ம் பாவக வழியில் இருந்து நிறைய செலவுகள், வீண் விரையம் மருத்துவ செலவினங்கள், மன அழுத்தம், மனபோராட்டம், அனைவராலும் தொல்லைகள், துன்பங்கள், எதிர்பாராத இழப்புகள், நிம்மதி குறைவு, நல்ல உறக்கம் இன்மை, தாம்பத்தியம் சார்ந்த இன்னல்கள் என்ற வகையில் சிரமங்களை தரக்கூடும்.

8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு நீண்ட  ஆயுளை தரும், இருப்பினும் திடீர் இழப்புகள், மருத்துவ செலவினங்கள் அதிகரிக்கும், பாதுகாப்பான பயணம் ஜாதகிக்கு மிகுந்த நன்மையை தரும், திருப்தி இல்லாத சூழ்நிலையில் அதீத மனஅழுத்தம் மற்றும் மனப்போராட்டத்தை தரக்கூடும், இழப்புகளை தவிர்க்க முன்னெச்சிரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது, வாழ்க்கை துணை வழியிலான சிறு சிறு விரயம் தவிர்க்க இயலாது.

5,6,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்த்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு 5ம் பாவக வழியில் இருந்து புத்திர பாக்கியத்தில் தாமதத்தையும், கற்ற கல்விக்கு உண்டான வருமானம் அற்ற நிலையையும் தரும், குல தெய்வ சாபம் ஜாதகிக்கு பெரும் இன்னல்களை தரக்கூடும், சுபயோக நிகழ்வுகள் யாவும் ஜாதகிக்கு பெரும் தடை தாமதங்களை தரக்கூடும் என்பதால், குல தெய்வ வழிபாடு முறையாக செய்து நலம் பெறுவது அவசியமாகிறது.

6ம் பாவக வழியில் இருந்து எதிரிகள் தொந்தரவு அதிக அளவில் ஜாதகிக்கு இன்னல்களை தரக்கூடும், வயிறு சார்ந்த உடல் தொந்தரவுகள் கடுமையாக பாதிக்க கூடும், எவரிடமும் பகைமை பாராட்டாமல் ஜாதகி மிக இலகுவாக நடந்துகொள்ளது சகல நிலைகளில் இருந்தும் நன்மையை தரும், தனது சொத்துக்கள் மீது கடன் வாங்குவது மிகுந்த பாதிப்பை தரும், மற்றவருக்கு கடன் கொடுப்பது ஜாதகிக்கு பெரிய அளவிலான பாதிப்புகளை தரக்கூடும்.

11ம் பாவக வழியில் இருந்து, அதிர்ஷ்டம் சார்ந்த பின்னடைவுகள் ஜாதகிக்கு பெரும் பாதிப்பை தரும், விரக்தி மனப்பான்மை ஜாதகிக்கு மிகுந்த இன்னல்களை தரக்கூடும், தோல்வியை கண்டவுடன் அதீத மனபயம் சார்ந்த இன்னல்களை எதிகொள்ளும் சூழ்நிலையை தரும், கடின உழைப்பே ஜாதகிக்கு மிகுந்த நன்மைகளையும் சுபயோகங்களையும் வாரி வழங்கும்.

நடைபெறும் குரு திசை தரும் பலன்கள் ( 20/12/2012 முதல் 20/12/2028 வரை )

குரு திசை ஜாதகிக்கு 8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை அற்ற ஆயுள் பாவக பலனை தந்த போதிலும், தற்போழுது நடைமுறையில் உள்ள புதன் புத்தி ஜாதகிக்கு 1ம் வீடு ஜாதகிக்கு உயிர் உடலாகிய லக்கின பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 1ம் பாவக வழியில் இருந்து சிறப்புகளை தருவது, ஜாதகிக்கு தொழில் ரீதியான வெற்றிகளை 100% விகிதம் வாரி வழங்கும், எதிர்பாராத சுப நிகழ்வுகள் நடைமுறைக்கு வரும், தெய்வீக அனுக்கிரகத்தால், ஜாதகிக்கு உயர் கல்வி, திருமணம், புதிய வண்டி வாகனம், சொத்து சுக சேர்க்கை, வெளிநாடு யோகம் என்றவகையில் சிறப்புகளை தரும் என்பதால்,  நடைபெறும் புதன் புத்தி ஜாதகிக்கு சிறப்பான யோக வாழ்ககையே வாரி வழங்குகிறது.

குறிப்பு :

ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் 5,6,11ம் வீடுகள் பாதக ஸ்தான தொடர்பை பெறுவது மட்டுமே சற்று கடுமையான இன்னல்களை தரும், விரைய ஸ்தான தொடர்பை பெரும் பாவக வழியில் இருந்து பெரிய அளவில் இன்னல்கள் நடைமுறைக்கு வாராது என்பதால், ஜாதகி 5,6,11ம் பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க முறையான பிரீதி பரிகாரங்களை மேற்கொண்டு நலம் பெறுக.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வெள்ளி, 8 ஜூன், 2018

சுபயோக ஜாதகத்தில் பாவக தொடர்புகள் வழியில் இருந்து ஜாதகர் பெரும் நன்மைகள் !

 

 சுய ஜாதகம் வலிமை பெறுவது ஒவ்வொருவருக்கும் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து சுபயோகங்களையும், நன்மைகளையும் வாரி வழங்கும், இறை அருளின் கருணையினால் வெகு சில ஜாதகங்களே லக்கினம் முதல் பனிரெண்டு பாவகமும் வலிமை பெற்று அமைகிறது, சுய ஜாதகம் வலிமை பெற்ற ஓர் ஜாதகத்தை இன்றை பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே ! ஜாதகர் சுய ஜாதக வலிமையின் அடிப்படையில் பெரும் நன்மைகளையும் யோக வாழ்க்கையையும் இக்கட்டுரையில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம்.


லக்கினம் : ரிஷபம்
ராசி : மகரம்
நட்ஷத்திரம் : திருவோணம் 1ம் பாதம்

 ஜாதகருக்கு ரிஷப லக்கினம், லக்கினம் மற்றும் சில வீடுகளும் சுபத்துவம் பெற்ற பாவகங்களுடனே சம்பந்தம் பெற்று இருப்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், மேலும் தற்போழுது நடைபெறும் திசா புத்தி, எதிர்வரும் திசாபுத்திகள் தரும் சுபயோகங்கள் பற்றி விரிவாக பார்ப்போம்,

ஜாதகருக்கு பாவக தொடர்புகள் :

1,2,6,8ம் வீடுகள் உயிர் உடலாகிய லக்கின பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 1ம் பாவக வழியில் இருந்து வளரும் சூழ்நிலையில் சிறப்பு, ஒழுக்கம் சுய கட்டுப்பாடு மற்றும் தன்னம்பிக்கை அதிகம் உள்ளவர், நோய் எதிர்ப்பு சக்தி அதிகம், சிறந்த மனப்பக்குவம், அனைத்தையும் அனுசரித்து செல்லும் குணம், எடுக்கும் காரியங்களில் வெற்றி, சுய உழைப்பின் மூலம் வாழ்க்கையில் வெற்றி பெரும் யோகம், பல்துறை நுண்ணறிவு, பொறுமை சகிப்பு தன்மை, திட்டமிட்டு செயல்படும் யோகம், நீண்ட ஆயுள், மனதில் தெளிவு, எதிரிகளை வெல்லும் வல்லமை, இனிமையான பேச்சு திறன், கடவுள் ஈடுபாடு ஆன்மீக வெற்றி மனமும் உடலும் ஒருங்கே சிறப்பாக செயல்படும் தன்மை, வெற்றி, புகழ், கீர்த்தி மற்றும் சுய அந்தஸ்துடன் வாழ்க்கையில் சகல யோகங்களையும் பெரும் தன்மையை தரும்.

2ம் பாவக வழியில் இருந்து இனிமையான வாக்குவன்மை, பேச்சின் மூலம் காரியம் சாதிக்கும் யோகம், வார்த்தைகளில் வெளிப்படும் கம்பீரம் மற்றும் தைரியம், உறுதியான நிலைப்பாடு, குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி, குடும்பத்தாருடன் நல்லுறவு, பொருளாதார ரீதியான வெற்றி வாய்ப்புகள், தன்னிறைவான வசதி வாய்ப்புகள், கைநிறைவான வருமானம், தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் வல்லமை, சுய தொழில் வழியிலான வருமானம், வியாபாரம் மூலம் வரும் அபரிவித தனசேர்க்கை, பேச்சில் உறுதி, அனைவரையும் மதிக்கும் குணம், வலிமை மிக்க பதவிகள், வாழ்க்கை துணை வழியிலான பொருள் வரவு மற்றும் தன சேர்க்கை, வாக்கு வன்மையை தொழில் முதலீடாக பெரும் யோகம், எதிர்ப்புகளை சமாளித்து வெற்றிபெறும் வல்லமை என்ற வகையில் சிறப்புகளை தரும்.

6ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்படும், வயிறு சார்ந்த தொந்தரவுகள் சற்று பாதிப்பை தரக்கூடும், செய்யும் தொழில் மற்றும் பணியில் நேர்மையை தரும், எடுத்த காரியங்களில் அபரிவிதமான வெற்றியை பெறுவார், அதிகார பதவிகளை அலங்கரிக்கும் யோகம் உண்டாகும், புதிய சிந்தனை ஜாதகருக்கு நல்ல வெற்றிகளை வழங்கும், கடன் சார்ந்த இன்னல்கள் ஜாதகருக்கு சற்று சிரமங்களை தரக்கூடும், பொது காரியங்களில் ஈடுபாடு, சமூக அக்கறை அதிகரிக்கும், எதிர்ப்புகளை வெற்றிகொள்ளும் வல்லமை தரும்.

8ம் பாவக வழியில் இருந்து நீண்ட ஆயுள் உண்டு, தொல்லைகள் யாவும் ஜாதகருக்கு புது உத்வேகத்தை தரும், நினைத்ததை சாதிக்கும் வல்லமை, மிக எளிதாக அனைத்தையும்  சாதிக்கும் வல்லமை, இன்சூரன்ஸ் துறையில் அபரிவித லாபத்தை வாரி வழங்கும், விபத்து மருத்துவ சிகிசையை தவிர்க்க இயலாது, அறுவை சிகிக்சை மூலம் உடல் நலம் பெரும் வாய்ப்பு உண்டு, மற்றவர்களை நம்பி செய்யும் முதலீடுகளில் அதீத கவனம் ஜாதகருக்கு தேவை என்பதை மனதில் கொள்வது அவசியமாகிறது.

3,5,9,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 3ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் அபிலாசைகள் அனைத்தும் நிறைவேறும், லட்சியம் மற்றும் கனவுகள் ஜாதகருக்கு குறுகிய காலத்தில் நடைமுறைக்கு வரும், வியாபாரத்தில் நல்ல விருத்தியும், அதிகப்படியான வண்டி வாகன யோகமும் ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும், விவசாயம் மற்றும் விவசாய உபகரணம் மூலம் பெருத்த லாபம் உண்டாகும், நிறைய சொத்து சுக சேர்க்கை, வீடு நிலம் சார்ந்த லாபம், தர்மத்தை நம்புதல் கடைபிடித்தல், கணிதம் மற்றும் சாஸ்திரத்தில் தேர்ச்சி, திருமணத்திற்கு பிறகான அபரிவித வளர்ச்சி, தெய்வீக அனுக்கிரகம் என்ற வகையில் ஜாதகர் பரிபூர்ண நன்மைகளை பெறுவார்.

5ம் பவாக வழியில் இருந்து ஜாதகருக்கு லாட்டரியில் யோகம் உண்டாகும், முதலீடுகள் மற்றும் வியாபாரம் சார்ந்த லாபங்கள் அதிக அளவில் கிடைக்கும், தனது சமயோசித புத்திசாலித்தனத்தால் ஜாதகர் பன்மடங்கு வளர்ச்சியை குறுகிய காலத்தில் பெறுவார், எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் வல்லமையை தரும், எப்பொழுதும் மகிழ்ச்சி, மனைவி மற்றும் குடும்பத்துடன் சுமுக போக்கு, குழந்தைகள் வழியிலான அதிர்ஷ்டம், கற்ற கல்வி  வழியிலான யோகம், வருமுன் காக்கும் வல்லமை, தெய்வீக அனுக்கிரகம்  மற்றும் குலதெய்வ ஆசிர்வாதம் மூலம் வாழ்க்கையில் சகல  சௌபாக்கியங்களையும் அனுபவிக்கும் வல்லமை என்ற வகையில் சிறப்புகளை  தரும், நல்ல ஆண் வாரிசு அமையும்.

9ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் தெய்வீக அனுக்கிரகம் பெற்ற திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம் உண்டாகும், ஆன்மீக பெரியோர்களின் ஆசியை பெற்று வாழ்க்கையை மிக  யோகமிக்கதாக மாற்றிக்கொள்ளும் வல்லமை உண்டாகும், தெளிந்த நல்லறிவு ஜாதகருக்கு சிறப்பான வெற்றிகளை வாரி வழங்கும், முன்னோர்களின் புண்ணிய பதிவுகள் வழியில் இருந்து ஜாதகர் சிறப்பான சுபயோகங்களை பெறுவார், யோகமிக்க புத்திரபேறுகளை அடையும் நிலையம், அவர்கள் வழியிலான யோக பலன்களையும் ஜாதகர் தங்கு தடையின்றி  பெறுவார், எதிர்பார்ப்புகள் யாவும் ஜாதகருக்கு நிறைவேறும், வருமுன் உணர்ந்து செயல்படும் தன்மையை தரும், எவ்வளவு பெரிய சிரமங்கள் ஏற்பட்டாலும் அதில் இருந்து குறுகிய காலத்தில் வெளிப்படும் தன்மையை தரும், ஜாதகரின் அறிவாற்றல் பெருமைப்படத்தக்க விஷயங்களில் ஈடுபட்டு அதன்வழியிலான நன்மைகளை  பரிபூர்ணமாக அனுபவிக்க வைக்கும், ஆன்மீகத்தில் வெற்றி உண்டாகும்.

11ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் மிகுந்த அதிர்ஷ்டத்தை சுவீகரிக்கும் வல்லமை பெற்றவராக திகழ்வார், ஜாதகரின் மேன்மையான நல்ல குணம் அனைவரிடத்திலும் நற்ப்பெயரை பெற்று தரும், யோகமிக்க எதிர்காலம் ஜாதகருக்கு சிறப்பு மிக்க நன்மைகளை தரும், மனநிம்மதியும், ஒருமைப்பாடும் ஜாதகருக்கு வியக்கத்தக்க வெற்றி வாய்ப்புகளை நல்கும், பல தொழில் புரிவதற்கான சந்தர்ப்பங்கள் வந்து  சேரும், ஜாதகரின் தன்னம்பிக்கையும், முற்போக்கு சிந்தனையும் எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளை நல்கும், புதிய முயற்சிகள் ஜாதகருக்கு நல்ல முன்னேற்றத்தை தரும், நம்பிக்கை மிகுந்த மனவலிமை ஜாதகரின் வெற்றிகளுக்கு அடிப்படை காரணமாக அமையும்.

4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு மண் மனை வண்டி வாகனம், சொத்து சுகம், இடம் நிலம் சார்ந்த அமைப்புகளில் இருந்து சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும், தனது சுய உழைப்பின் மூலம் வாழ்க்கையில் மிக பெரிய சொத்துக்களை வாங்கும் வல்லமையை தரும், ஜாதகரின் நல்ல குணம் செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பை தரும், போதிய வசதி வாய்ப்புகளை ஜாதகர் குறுகிய காலத்தில் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிக அளவில் ஏற்படும், வடக்கு திசை வாயிற்படி கொண்ட வீடுகளில் ஜாதகர் ஜீவனம் மேற்கொள்வது சகல சௌபாக்கியத்தையும், பெரும் செல்வ சேர்க்கையையும் வாரி வழங்கும், குறிப்பாக ஜாதகரின் வளர்ச்சி வடக்கு திசை வாயிற்படி கொண்ட வீடுகளில் மிகவும் அபரிவிதமானதாக அமையும், சொத்துக்களை நிர்வகிக்கும் வல்லமையை ஜாதகர் பெறுவது அவசியமாகிறது.

7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு வாழ்க்கை துணை வழியிலான முழு ஆதரவை தரும்,  திருமணத்திற்கு பிறகான வளர்ச்சி மிகவும் சிறப்பாக அமையும், இணக்கமான சூழ்நிலையை வாழ்க்கை துணையுடன் பெறுவது ஜாதகருக்கு மென்மேலும் யோக வாழ்க்கையை நல்கும், தாம்பத்திய வாழ்க்கையில் வெற்றி, அன்னியோனிய இல்லற வாழ்க்கை, குடும்பத்தில் மகிழ்ச்சி என்ற வகையில் சிறப்புகளை வாரி வழங்கும், மேலும் ஜாதகருக்கு  நல்ல நண்பர்கள், சிறந்த கூட்டாளிகள், வலிமை மிக்க கூட்டு தொழில் வழியிலான முன்னேற்றம், வெளிநாடுகளில் யோகம், குடியுரிமை பெரும் வாய்ப்பு, பிரபல்ய யோகம், பொது வாழ்க்கையில் வெற்றி, மக்கள் ஆதரவு, வியாபாரம் சுய தொழில் செய்வதன் மூலம் அதீத லாபம் என்ற வகையில் சிறப்புகளை தரும், கலைத்துறையில் ஈடுபாடு, கலைகளில் தேர்ச்சியும் உண்டாகும்.

10,12ம்  வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு, தொழில், வணிகம், வியாபாரம் போன்றவற்றில் சிறப்பான வளர்ச்சியை தரும், சுய தொழில் செய்வதன் மூலம் அபரிவித முன்னேற்றம் உண்டாகும், கவுரவம் மிக்க பதவிகள் தேடி வரும், சுய முன்னேற்றம் சார்ந்த  நடவடிக்கைகள் ஜாதகருக்கு தொடர் வெற்றிகளை வாரி வழங்கும்,  ஜீவன ஸ்தானம் ஜாதகருக்கு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் வீடான கும்ப ராசியில் அமைவது வரவேற்கத்தக்கது, ஜாதகரின் அறிவு திறன் சார்ந்த ஜீவன அமைப்புகளில் மிக பெரிய வெற்றிகளை வாரி வழங்கும், தொழில் வழியில் எதிர்பாராத லாபங்களும் அதிர்ஷ்டமும் உண்டாகும், சுய தொழில் செய்வதே ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளை தரும்.

12ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நீண்ட கால தொழில் முதலீடுகள் அபரிவித வளர்ச்சியை தரும், குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சியை ஜாதகர் முதலீடுகள் வழியில் இருந்தும், தொழில் வழியில் இருந்தும் பெறுவார், ஆன்மீகத்தில் நல்ல வெற்றி உண்டாகும், போதும் என்ற மனமும், திருப்தியான மனநிறைவும் ஜாதகருக்கு அயன சயன ஸ்தான வழியில் இருந்து முழுமையாக கிடைக்கும், மனதில் உள்ள ஆசைகள் மற்றும் விருப்பங்கள் யாவும் நிறைவேறும், திடீர் மாற்றங்கள் ஜாதகருக்கு திகைப்பை தந்தபோதிலும், அதுவே ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும், எதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை பெற்று இருப்பது அவசியமாகிறது.

எதிர் வரும் குரு திசை தரும் பலன்கள் ( 19/07/2018 முதல் 19/07/2034 )

3,5,9,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று எதிர்வரும் குரு திசை ஜாதகருக்கு லாப ஸ்தான வழியில் தொடர்பு பெரும் வீடுகள் அமைப்பில் இருந்து மிகுந்த நன்மைகளை வாரி வழங்க தயார் நிலையில் இருப்பது ஜாதகருக்கு மிகுந்த யோக வாழ்க்கையை நல்கும், நடைமுறையில் உள்ள ராகு திசை ஜாதகருக்கு 6ம் வீடு லக்கினத்துடன் சம்பந்தம் பெற்று சற்று சிரமங்களை தந்துகொண்டு இருப்பது போராட்ட வாழ்க்கை தரும், ஆனால் எதிர்வரும் குரு திசை வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்திடுவது ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளை தரும் என்பதில் சந்தேகமில்லை, ஜாதகர் 3,5,9,11ம் பாவக வழியிலான பலன்களை சுவீகரிக்க ஆயத்தமாக இருப்பது அவசியமாகிறது, வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

செவ்வாய், 29 மே, 2018

செவ்வாய் தோஷம் என்ன செய்யும் ( 8ல் செவ்வாய் ), செவ்வாய் திசை தரும் பலாபலன்கள் என்ன ?

 

  சுய ஜாதகத்தில் லக்கினத்தில் இருந்து 2,4,7,8,12ல் செவ்வாய் அமர்வது "செவ்வாய் தோஷம்" என்றும், இங்கு அமரும் செவ்வாய் பகவான் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு கடுமையான தோஷத்தை தரும் என்றும், சம்பந்தப்பட்ட ஜாதகர் இதனால் செவ்வாய் அமர்ந்த பாவக வழியில் இருந்து பெரிய அளவிலான பாதிப்புகளை எதிர்கொள்ளவேண்டி வரும் என்பது பொது கருத்தாக உள்ளது, இது முற்றிலும் தவறான கருத்தாக ஜோதிடதீபம் கருதுகிறது, சுய ஜாதகத்தில் 2,4,7,8,12ம் பாவகங்களின் செவ்வாய் பகவான் அமர்ந்த போதிலும், மேற்கண்ட பாவகங்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் மட்டுமே ஜாதகர் இன்னலுற நேரும், மேற்கண்ட பாவகங்கள் மிகவும் வலிமையுடன் இருப்பின் சம்பந்த பட்ட பாவக வழியில் இருந்து மிகுந்த சுபயோகங்களை ஜாதகர் அனுபவிக்கும் நிலையை தரும், மேற்கண்ட பாவகங்களில் செவ்வாய் அமர்ந்து சுபயோகங்களையும், அவயோகங்களையும் தரும் அமைப்பை பற்றி, ஒரு சில உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : மகரம்
ராசி : மேஷம்
நட்ஷத்திரம் : கிருத்திகை 1ம் பாதம்

மேற்கண்ட ஜாதகருக்கு மேலோட்டமாக பார்க்கும் பொழுது செவ்வாய் பகவான் லக்கினத்தில் இருந்து 8ல் அமர்ந்து இருப்பதை போன்ற தோற்றத்தை  தரும், ஆனால் ஜாதகருக்கு ஆயுள் ஸ்தானம் எனும் 8ம் பாவகம் சிம்ம ராசியில் 143:29:52 பாகையில் ஆரம்பித்து கன்னி ராசியில் 177:38:14 பாகையில் நிறைவு பெறுகிறது, செவ்வாய் பகவான் சிம்ம ராசியில் உள்ள 139:22:02 பாகையில்  களத்திர ஸ்தானத்திற்க்கு உற்ப்பட்ட 7ம் பாவகத்தில் அமைந்திருப்பது ஜாதகருக்கு செவ்வாய் 8ல் அமர்ந்தத்திற்க்கான பலனை நல்காது, செவ்வாய் 7ல் அமர்ந்ததிற்க்கான பலாபலன்களையே  வழங்கும், எனவே ஜாதகருக்கு செவ்வாய் பகவான் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்து இருப்பதே மிகவும் சரியான ஜோதிடகணிதமாகும்.

சுய ஜாதகத்தில் செவ்வாய் பகவான் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்தில் அமர்ந்து இருப்பதும், 7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 100% விகித வலிமையுடன் காணப்படுவதும் ஜாதகருக்கு பரிபூர்ண நன்மைகளை களத்திர ஸ்தான வழியில் இருந்து சுவீகரிக்கும் வல்லமையை தரும், ஜாதகருக்கு 7ம் பாவக வழியில் இருந்து நல்ல வாழ்க்கை துணை, நல்ல நண்பர்கள் சேர்க்கை, சிறந்த கூட்டாளிகள், வெளிநாடுகளில் இருந்து வரும் யோக வாழ்க்கை மற்றும் பொருளாதர முன்னேற்றங்கள், கூட்டு முயற்சியில் மூலம் கிடைக்கும் அபரிவித வெற்றி வாய்ப்புகள், பொதுமக்கள் மூலம் கிடைக்க பெரும் ஆதரவு மற்றும் அதீத லாபங்கள், மிகவும் சக்தி வாய்ந்த கூட்டாளிகள் அமையும் யோகம் என்ற வகையில் ஜாதகருக்கு களத்திர ஸ்தான வழியில் இருந்து பரிபூர்ண நன்மைகளை வாரி வழங்கும்.

மேலும் ஜாதகருக்கு திருமணத்திற்கு பிறகான வளர்ச்சி என்பது மிகவும் அபரிவிதமானதாக அமையும், எதிர்பாலின அமைப்பினரால் ஜாதகர் தொடர்ந்து சுபயோகங்களை பெற்றுக்கொண்டே இருப்பர் என்பது கவனிக்கத்தக்கது, கூட்டு தொழில் மிகப்பெரிய வளர்ச்சியையும், தன்னிறைவான பொருளாதார முன்னேற்றங்களையும் வாரி வழங்கும், தெய்வீக அனுக்கிரகத்தால் ஜாதகர் மிகுந்த சுபயோகங்களை பெறுவார், ஜாதகரின் களத்திர ஸ்தானம் கடகத்தில் 12 பாகைகளையும், சிம்மத்தில் 23 பாகைகளையும் கொண்டு மிகவும் வலிமை பெற்று இருப்பது ஜாதகருக்கான யோக பலன்களை மிகவும் அபரிவிதமாக வாரி வழங்கும், மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் லக்கினத்தில் இருந்து 7ம் பாவகத்தில் " மங்களன் " எனும் செவ்வாய் பகவான் அமர்ந்து இருந்த போதிலும் ஜாதகருக்கு தான் அமர்ந்த பாவகம் வலிமை பெற்றுள்ளதால், களத்திர ஸ்தான வழியில் இருந்து சுபயோகங்களையே பரிபூர்ணமாக அனுபவிப்பார் என்பதை மிக உறுதியாக சொல்லலாம்.

நடைபெறும் செவ்வாய் திசை ஜாதகருக்கு வழங்கும் பலாபலன்கள் : ( 11/09/2012 முதல் 12/09/2019 வரை )

 செவ்வாய் பகவான் ஜாதகருக்கு தனது திசையில் 5,11ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு அளவிலான சுபயோகங்களை நல்குவது ஜாதகருக்கு மிகுந்த சிறப்புகளை வாரி வழங்கிக்கொண்டு இருக்கிறது, குறிப்பாக 5ம் பாவக வழியில் இருந்து கல்வியில் வெற்றியும், சமயோசித புத்திசாலித்தனமா செய்கையின் மூலம் அபரிவித லாபங்களை, குலதெய்வ ஆசியின் மூலம் அபரிவித நன்மைகளையும் பரிபூர்ணமாக பெரும் யோகத்தை தரும், ஜாதகருக்கு 11ம் பாவக வழியிலான அதிர்ஷ்டம் சொத்து சுக சேர்க்கை, வண்டி வாகன யோகம், எதிர்பாராத பொருள் வரவும், நல்ல குணம், தெய்வீக அனுக்கிரகம் என்ற வகையில் மிகுந்த சுபயோகங்களை வாரி வழங்கும், எனவே மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 7ல் செவ்வாய் அமர்ந்த போதிலும், களத்திர ஸ்தானம் வலிமை பெற்று இருப்பது ஜாதகருக்கு சிறப்புகளையும், நடைமுறையில் உள்ள செவ்வாய் திசை ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவதால் சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து சுபயோகங்களையும் பரிபூரணமாக பெற்று கொண்டு இருக்கின்றார்.

குறிப்பு :

 ஜாதகருக்கு செவ்வாய் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்து இருப்பினும், செவ்வாய் தோஷம் இல்லை என்பதும், செவ்வாய் தனது திசையில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தி சுபயோகங்களை வாரி வழங்குகிறது என்பதும் கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், ஆனால் எதிர்வரும் ராகு திசை ஜாதகருக்கு மிகுந்த இன்னல்களை தரும் என்பதை " ஜோதிடதீபம் " இந்த பதிவின் மூலம் எச்சரிக்கை செய்கிறது, எதிர்வரும் ராகு திசை ஜாதகருக்கு 10ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று கடுமையான இன்னல்களை ஜீவன ஸ்தான வழியில் இருந்து வாரி வழங்க தயார் நிலையில் உள்ளது என்பதால், ஜாதகருக்கு மிகுந்த எச்சரிக்கையை உடன் வாழ்க்கையை எதிர்கொள்வது சகல நலன்களையும் தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

திங்கள், 12 மார்ச், 2018

ராகு 3 6 9 11 ல் ( மேசம் ரிசபம் கடகம் கன்னி மகரம் ஆகிய ராசிகளில் ) இருந்தால் யோக பலன்களை வாரி வழங்குமா ?


ஐயா ...வணக்கம்!

1--10--1967 காலை 10: 30 மணி திண்டுக்கல் ...இந்த ஜாதகருக்கு ராகுதிசை குரு புத்தி நடக்கிறது .பலன்கள் ஜோதிடவிதிகள் முரண்படுகின்றன.இதை ஆய்வு ஜாதகமாக தாங்கள் எடுத்து கொள்ளலாம் ..ஜோதிடஅடிப்படை விதிகள் இந்த ஜாதகத்திற்கு பொருந்தவில்லை...உங்கள் கருத்து என்ன ....

ஐயா தற்போது ராகுதிசை குரு புத்தி நடக்கிறது ...
ராகு 3 6 9 11 ல் இருந்தால் யோகம் மேசம் ரிசபம் கடகம் கன்னி மகரம் ஆகிய ராசிகளில் இருந்தால் யோகம் இந்த ராகுவிற்கு குரு பார்வை கிடைத்தால் யோகம் ...ராகு நின்ற அதிபதி ஆட்சி பெற்றால் யோகம் .....இதில் எதுவும் இந்த ஜாதகத்திற்கு வேலை செய்யவில்லை .... இப்போது நிலமை இந்த ஜாதகருக்கு மிக மோசம்......எப்போது யோகம் வேலை செய்யும் ....ஐயா

பொதுவாக சுய ஜாதக வலிமை என்பது நவகிரகங்கள் ஓர் பாவகத்திலோ அல்லது ராசியிலோ அமர்ந்து இருப்பதால் வருவது அல்ல, ஜெனன நேரத்தில் கிரகங்களின் ஆளுமையின் அடிப்படையில் லக்கினம் முதல் பணிரெண்டு பாவகங்களும் பெரும் தொடர்பின் அடிப்படையில் அமைவதாகும், பெரும்பாலும் நாம் ஒருவரது சுய ஜாதகத்தில் நவகிரகங்கள் ராசிகளில் அமர்ந்து இருப்பதை அடிப்படையாக கொண்டு பலன் காண்கின்றோம், இது முற்றிலும் தவறான அணுகுமுறை என்பதுடன், ஒருவரின் சுய ஜாதகத்தில் பாவகங்களின் வலிமை என்ன ? என்பதை தெளிவாக உணர்ந்து கொள்ள இயலாது, கிழ்கண்ட ஜாதகருக்கு ராசியில் ராகு மேஷத்தில் அமர்ந்து இருப்பதால் 6ல் ராகு அமர்ந்து இருப்பதாக கருதிக்கொண்டு கேள்வி எழுப்பி இருக்கின்றார் அது தவிர உப கேள்விகளும் உண்டு, இதை இன்றை பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் .


லக்கினம் : விருச்சிகம்
ராசி : சிம்மம்
நட்ஷத்திரம் : மகம் 3ம் பாதம்

ராகு 3 6 9 11 ல் இருந்தால் யோகம்  இந்த ஜாதகத்திற்கு பலன் தர மறுப்பதேன் ?

கிரகங்கள் ஓர் ராசியில் அமர்ந்தாலே யோகத்தை தரும் என்று கருதுவது ஜாதக கணிதத்திற்க்கு புறம்பானது, ( ராகு கேது கிரகங்களுக்கு விதி விளக்கு உண்டு  என்ற போதிலும் ) சுய ஜாதகத்தில் பாவக தொடர்புகள் மிகவும் வலிமை  பெற்று இருப்பது அவசியமாகிறது, மேற்கண்ட ஜாதகருக்கு 6ல் ராகு அமர்ந்து இருக்கின்றார் என்பதே முற்றிலும் தவறானது, ஜாதகரின் 6ம் பாவகம் மேஷ ராசியில் 18:59:40 பாகையில் ஆரம்பித்து, ரிஷப ராசியில் 45:57:51 பாகையில் முடிவடைகிறது, ராகு மேஷ ராசியில் 05:27:27 பாகையில் அமர்ந்து இருப்பதால், மேஷ ராசியில் உள்ள பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு அமர்ந்து இருக்கிறார் என்பதே உண்மையானது, அடிப்படையில் ராகு 6ல் அமர்ந்து இருக்கின்றார் என்பதே தவறானதா அமைந்து விடுகிறது.

அடுத்து மேஷத்தில் உள்ள 5ம் பாவகத்தில் அமர்ந்துள்ள ராகு பகவான் ஜாதகருக்கு தான் அமர்ந்த பாவக வழியில் இருந்து 100% சதவிகித பாதிப்பை தரும் அமைப்பில் காணப்படுகிறார், எனவே ராகு ஜாதகருக்கு 5ம் பாவகத்தை 100% விகிதம் கெடுத்து விடுகிறார் என்பதால், ஜாதகரின் பூர்வீகம் கடுமையாக பாதிக்கப்படுகிறது, சமயோசித அறிவு திறன் செயல்பட மறுக்கும், அறிவார்ந்த செயல்திறன் வெகுவாக குறைவதுடன், ஜாதகருக்கு யாரும் உதவி செய்ய முன்வர மாட்டார்கள் என்பது கவனிக்கத்தக்க விஷயமாகவும், ஜாதகரின் விளைவு  அறியாத செயல்கள் யாவும் பெரும் சேதத்தை விளைவிக்கும் என்பது ராகு 5ல் அமர்ந்து பாதிப்பிற்க்கு ஆளாக்குவதால் ஏற்படும் இன்னல்கள், சுய ஜாதகத்தில் ராகு தான் அமர்ந்த பாவகத்திற்கு வலிமை சேர்க்கவில்லை என்பதுடன் சுய ஜாதகத்தில் 5ம் வீடு திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் என்பது கூர்ந்து கவனிக்க வேண்டிய விஷயமாகும்.

ராகுவிற்கு குரு பார்வை கிடைத்தால் யோகம்

குரு 9ம் பாவகத்தில் அமர்ந்து தனது 9ம் பார்வையை 5ம் பாவகத்தை வசீகரித்த போதிலும், 5ல் அமர்ந்த ராகு சம்பந்தப்பட்ட பாவகத்தை தனது கட்டுப்பாட்டில்  எடுத்துக்கொள்வதால் குரு பகவானின் பார்வைக்கும் வலிமை அற்று போகிறது, பொதுவாக குரு பார்வை நல்லது என்ற போதிலும், பார்க்கும் பாவகம் கேந்திரமா கோணமா என்பதில் வித்தியாசம் உண்டு, கோண பாவகங்களுக்கும், சம பாவகங்களுக்கும் குரு வின் பார்வை யோகத்தை நல்கும், இருப்பினும் கோண சம பாவகங்களில் ராகு அல்லது கேது தனது ஆளுமையை நிகழ்த்திக்கொண்டு இருக்கும் பொழுது குரு பகவானின் பார்வையும் பலன் தாராது, அனைத்து கிரகங்களையும் சாயாகிரகங்கள் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வல்லமை பெற்றது என்பது கவனிக்கத்தக்கது.

ராகு நின்ற அதிபதி ஆட்சி பெற்றால் யோகம்

ராகு நின்ற அதிபதி ஆட்சி பெற்றால் யோகம் உண்டாகும் என்பது ஓர் கட்டுக்கதையே, சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 பாவகங்களின் வலிமை நிலையே ஓர் ஜாதகருக்கு சுபயோகங்களையும், அவயோகங்களையும் நல்குகிறது என்பதை கருத்தில் கொள்வது நல்லது, இதுபோன்ற உண்மைக்கு புறம்பான கருத்துக்களை நம்பி, வாழ்க்கையில் இன்னலுறுவதை தவிர்ப்பதே சாலச்சிறந்தது, மேலும் நவகிரகங்கள் ஒருவருக்கு நன்மையையும், ஒருவருக்கு தீமையும் வழங்காது, அவரவர் சுய ஜாதக வலிமையே ஜாதகருக்கான நன்மை தீமை பலாபலன்களை நிர்ணயம் செய்யும் என்ற உண்மையை உணர்ந்து நமது சுய ஜாதக வலிமை பற்றி தெளிவு பெற்று வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்வதே புத்திசாலித்தனம்.

எதுவும் இந்த ஜாதகத்திற்கு வேலை செய்யவில்லையே இது ஏன் ?

அடிப்படியில் சுய ஜாதகம் வலிமை இன்றி காணப்படுவதே இதற்க்கு காரணம் குறிப்பாக ஜாதகருக்கு 1,3,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பதும், ஜாதகரின் பாக்கிய ஸ்தானம் பெரும் பகுதி சிம்ம ராசியில் அமைந்து இருப்பதும் ஜாதகருக்கு கடுமையான இன்னல்களை 1,3,9ம் பாவக  வழியில் இருந்து வாரி வழங்கும்.

ராகுதிசை குரு புத்தி நடக்கிறது .பலன்கள் ஜோதிடவிதிகள் முரண்படுகின்றன இது ஏன் ?

ராகு தனது திசையில் வலிமை அற்ற 11ம் பாவக பலனை சத்ரு ஸ்தான அமைப்பில் இருந்து வாரி வழங்குவதும், சத்ரு ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு மேஷம் மற்றும் ரிஷப ராசியில் அமைவதும் ஜாதகருக்கு கடுமையான நெருக்கடிகளை தரும் அமைப்பாகும், ராகு திசையில் தற்பொழுது நடைபெறும் குரு புத்தி மட்டும் ஜாதகருக்கு வலிமை பெற்ற களத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்துவது, சிறந்த நன்மைகளை தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

குறிப்பு :

சுய ஜாதகத்தில் பாவக வலிமையை கருத்தில் கொண்டு பலன் காண்பதே மிக துல்லியமான பலாபலன்களை காண உதவும், ராசிகளில் கிரகங்கள் அமர்ந்து இருப்பதை கருத்தில்கொண்டு அவை நன்மை செய்யும், தீமை செய்யும் என்று பலன் கூறுவது சுய ஜாதக கணிதம் ( பாவக கணிதம் மற்றும் தொடர்பு  ) என்னவென்றே தெரியாமல் பிதற்றும் வாய் ஜாலம் என்பதை கருத்தில் கொள்வது நல்லது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

புதன், 21 பிப்ரவரி, 2018

திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் 7ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றால் என்னவாகும் ?


கேள்வி :

 திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் 7ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றால் என்னவாகும் ?

பதில் : 

  சுய ஜாதகத்தில் எந்த ஒரு வீடும் ( லக்கினம் முதல் விரைய ஸ்தானம் வரை ) பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது நல்லதல்ல, ஏனெனில் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பாவக வழியில் இருந்து ஜாதகர் கடுமையான இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும், அதாவது தாங்க இயலாத துன்பத்தையும் துயரத்தையும் தரும், இல்லற வாழ்க்கையை சிறப்பிக்கும் 7ம் வீடு எக்காரணத்தை கொண்டும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது நல்லதல்ல, ஜாதகருக்கு திருமணம் சார்ந்த தடைகளும் தாமதங்களும் நிச்சயம் ஏற்படுவதுடன், தாம்பத்திய வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படும், இந்த அமைப்பை பெற்றவர்கள் தனது வாழ்க்கை துணையின் சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தான வலிமையை தெளிவாக தெரிந்துகொண்ட பிறகே திருமண வாழ்க்கையில் இணைவது சகல நலன்களையும் தரும், தனக்கு வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் எனும் 7ம் வீடு நல்ல வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம்.



லக்கினம் : தனுசு 
ராசி : ரிஷபம் 
நட்ஷத்திரம் : ரோஹிணி 3ம் பாதம் 

மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகத்திலே மிகவும் பாதிக்கப்பட்ட அமைப்பாக கருதலாம், ஜாதகருக்கு தற்போழுது 30 வயது நடைமுறையில் உள்ளது, திருமணம் என்பது இன்னும் எட்டா கனியாகவே இருப்பது ஏன் ? என்ற கேள்விக்கு பதிலாக அவரது செயல்பாட்டையே காரணமாக சொல்லலாம், தனக்கு வந்த நல்ல திருமண வாய்ப்புகளை தட்டிக்கழிக்கும் போக்கு நெடுங்கால தாமதத்தை தந்துகொண்டு இருப்பது கவனிக்கத்தக்கது, இதற்க்கு காரணமாக ஜாதகரின் லக்கினம் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதே என்றால் அது மிகையாகாது, லக்கினம் சுய ஜாதகத்தில் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு அவ்வளவு சிறப்புகளை தருவதில்லை, உதாரணமாக ஜாதகருக்கு வளரும் சூழ்நிலை சிறப்பாக அமையாது, முரண்பட்ட கருத்துக்களை கொண்ட மனநிலையை பெற்று இருப்பார், உடல் மனம் இரண்டும் ஓர் நேர்கோட்டில் இயங்காது, இயற்க்கைக்கு புறம்பான செயல்பாடுகளில் ஆர்வத்தை தரும், அதீத கற்பனையில் ஜீவனம் செய்யும் அமைப்பை பெற்று இருப்பதுடன், மற்றவர்களுடனான புரிதல் மிக மிக குறைவாக அமைந்திருக்கும், மேற்கண்ட காரணங்களால் பாதிக்கப்பட்ட ஜாதகர் தனது திருமண வாழ்க்கையினை இவ்வளவு காலமும் தள்ளிபோட்டுக்கொண்டே வருவது ஏன் என்பது ஜாதகருக்கே வெளிச்சம், நமது ஜாதக கணித முறையின் படி ஜாதகரின் பாதக ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 3ம் வீடான மிதுனத்தில் அமைவதால், ஜாதகரின் அசட்டு தனமும், அலட்சியமும், முயற்சி இன்மையும் திருமண தாமதத்திற்கு அடிப்படை காரணமாக சொல்லலாம்.

7ம் வீடு பாதக ஸ்தானமான  7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகரின் இல்லற வாழ்க்கையில் சிறப்பின்மையை மிக தெளிவாக காட்டுகிறது, திருமண வாழ்க்கை மூலம் நலம் பெறுவதற்கான சிறு அறிகுறியும் தெரியவில்லை, முரண்பட்ட நட்பு, அதீத கற்பனை, ஆர்வமின்மை போன்ற பாதிப்புகளால் ஜாதகர் பாதிக்கப்படுவது கவனிக்கத்தக்கது, 7ம் வீடு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமான மிதுனத்தில் அமைவது, ஜாதகரின் உடல் ரீதியான பாதிப்புகள் தாம்பத்திய ரீதியான வீரியத்தை வெகுவாக இழக்க செய்வதுடன், வீண் மனபயத்தையும் வாரி வழங்குகிறது, சுப காரியங்களை வெகு விரைவில் நிறைவேற்றி வைக்கும் தன்மை பெற்ற பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் வீடும் ஜாதகருக்கு திடீர் இழப்பை தரும் 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதால், ஜாதகருக்கு வரும் நல்ல நல்ல திருமண வாய்ப்புகளை தட்டிப்பறிப்பதுடன், சுப நிகழ்வுகளை நிறைவேற்றும் வல்லமையை தடுக்கிறது, ஜாதகரின் சிந்தனையும் செயல்பாடுகளும் விலாசமான பார்வையில் இல்லாதது 5ம் பாவக வலிமை இன்மையை தெளிவு படுத்துகிறது, சுய புத்தி அல்லது சொல்புத்தி இரண்டில் சுய புத்தி ஜாதகருக்கு சிறப்பாக செயல்பட மறுப்பதால், அனைத்தையும் உதறித்தள்ளும் நிலையில்  ஜாதகர் இருக்கின்றார்.

கடந்த ராகு திசை ( 09/11/1999 முதல் 09/11/2017 வரை ) ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட 1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழுவீச்சில் 200% விகித இன்னல்களை பாதக ஸ்தான வழியில் இருந்து லக்கினம் மற்றும் களத்திர ஸ்தானத்திற்கு வாரி வழங்கி இருப்பது திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற நிலையை தந்து இருக்கிறது , மேலும் ராகு திசையில் சூரியன்,சந்திரன் மற்றும் செவ்வாய் புத்திகள் வலிமையற்ற பாவக பலனையே ஏற்று நடத்தியது ஜாதகருக்கு கடுமையான தடைகளை வாரி வழங்கி உள்ளது கவனிக்கத்தக்கது.

தற்போழுது நடைபெறும் குரு திசை ( 09/11/2017 முதல் 09/11/2033 ) வரை ஜாதகருக்கு  சுய ஜாதகத்தில் 5,8ம் வீடுகள் வழியில் இருந்து இன்னல்களையும், 4,10ம் வீடுகள்  வழியில் இருந்து சுபயோகங்களையும் வாரி வழங்குவது வரவேற்கத்தக்கது, எனவே பெற்றோர் மற்றும் உறவுகள் சொல்லும் அறிவுரைகளை ஏற்று, 2,5,7,8,12ம் வீடுகள் வலிமை பெற்ற ஓர் வாழ்க்கை துணையை தாமதமாகாமல் தேர்வு செய்து, இல்லற வாழ்க்கையில் இணைவதே சகல நன்மைகளையும் தரும் என்பது  " ஜோதிடதீபம் " வழங்கு அறிவுரையாகும்.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் 7ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது தான வாழ்க்கையில் வாழ்க்கை துணையாக வரும் எதிர்பாலின அன்பரிடம் இருந்து அதீத இன்னல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், எனவே சுய ஜாதகத்தில் 7ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பின், தனக்கு வரும் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 2,5,7,8,12ம் வீடுகள் மிகவும் வலிமையுடன் உள்ளதா ? என்பதை கருத்தில் கொண்டும், தனக்கும் வாழ்க்கை துணைக்கும் நடைபெறும், எதிர்வரும் திசா புத்திகள் வலிமையான பாவக பலனை ஏற்று நடத்துகிறதா ? என்பதை கருத்தில் கொண்டு இல்லற வாழ்க்கையில் இணைவதே சகல நன்மைகளையும் தரும், இதற்க்கு மாறாக செயல்படுவது திருமண வாழ்க்கையையே கேள்விக்குறியாக மாற்றிவிடும் என்பது கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயமாகும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

செவ்வாய், 9 ஜனவரி, 2018

ஜாதகத்தில் உள்ள சந்தேகங்களுக்கு விளக்கமும், கேள்விகளுக்கான பதில்களும் !



வணக்கம் அண்ணா 

நான் குமார் ,நானும் நண்பரும் இரு வாரங்களுக்கு முன் தங்களிடம் சோதிடம் காண தங்கள் இல்லத்திற்கு வந்திருந்தோம்.சோதிடத்தில் ஐயம் இருந்தால் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ள சொன்னீர்கள்.சில ஐயங்கள் உள்ளன அதற்கு விளக்கம் அளியுங்கள்.


லக்கினம் : மீனம் 
ராசி : ரிஷபம் 
நட்ஷத்திரம் : ரோகிணி 3ம் பாதம்
 
கேள்வி :

1)2ம்,7ம் பாதிக்கப்பட்டுள்ளது என கூறினீர்கள் மேலும் வைகாசிக்குள் திருமணம் அமைய வாய்ப்புள்ளது என்றும் கூறினீர்கள்.2ம்7ம் பாதிக்கப்படும் போது விரைவில் எவ்வாறு நடந்திடும்?

பதில் : 

ராகு திசையில் எதிர்வரும் சந்திரன் புத்தி தங்களுக்கு வலிமை பெற்ற 5ம் பாவக பலனை ஏற்று நடத்துவதால் குலதெய்வ ஆசியினால் நல்லதோர் வாழ்க்கை துணை அமைய வாய்ப்பு உள்ளது, சுய ஜாதகத்தில் 2,7ம் வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்ட போதிலும் எதிர்வரும் சந்திரன் புத்தி தங்களுக்கு நல்ல திருமண வாய்ப்பை நல்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை, தாங்கள் இதை உதாசீனப்படுத்தினால், தங்களுக்குத்தான் சிரமம் என்பதை கருத்தில் கொள்க.

கேள்வி :

2)மனைவியின் கல்வி நிலை மற்றும் குணங்கள்.

பதில் : 

களத்திர ஸ்தானமும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியான துலாமும் சற்று கடுமையாகவே பாதிக்கப்பட்டுள்ளது, எனவே தங்களின் கல்வி தரத்திற்கு நிகரான பெண் அமைய வாய்ப்பில்லை, சற்று குறைவான கல்வி தகுதியுடன் இருக்க வாய்ப்பு உள்ளது, ஆனால் நல்ல குணமும், பெருந்தன்மையான நடவடிக்கையும் பெற்ற பெண்ணாக இருப்பார்.

கேள்வி :

3) பெண் எந்த வாசல் வீட்டில் இருப்பார் ?

பதில் :
வடக்கு வாசல் வாயிற்படி கொண்ட வீட்டில் இருப்பது தங்களுக்கு சிறப்பை தரும் வாழ்க்கை துணையாக அமையும்.

கேள்வி :

4) தற்சமயம் பணியமைவதற்கான  காலத்தை கூறிடுங்கள் ?

பதில் : 

ராகு திசை சூரியன் புத்தியில் அமையாது, சந்திரன் புத்தி மற்றும் அந்தரத்தில் தேடினால் நல்ல வேலைவாய்ப்பு அமையும்.

கேள்வி :

5)அடுத்து வரும் சந்திர புத்தி எந்த வீட்டின் பலனை நடத்திடும்

பதில் :

5ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 5ம் பாவக வழியில் இருந்து சுபயோகத்தை நல்குகிறது, மேலும் 5ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு கடக ராசியில் வியாபித்து இருப்பது திடீர் அதிர்ஷ்டம் மூலம் சிறப்பான யோக பலனை தரும், இதில் தங்களின் சமயோசித அறிவுத்திறன் சிறப்பாக செயல்படும்.

கேள்வி :

6) 11ம் பாவம் நல்ல நிலை எனில் என்ன பயன் அதாவது 2,7மற்றும் 10 ம் பாவகம் பா தி க் கப் பட்டிருக்கும் போது 11 ஆல் என்ன பலன்

பதில் : 

ஒருவரது சுய ஜாதகத்தில் மிகவும் வலிமையுடன் இருக்க வேண்டிய பாவகம் லாபஸ்தானம் எனும் 11ம் பாவகம், அது தங்களுக்கு மிகவும் வலிமையுடன் இருக்கின்றது, மேலும் தங்களின் லாப ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் ராசியான மகரத்தில் அமைவது கெளரவம் மிக்க தொழில் வாய்ப்பின் மூலம் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் யோகத்தை தரும், பாதிக்கப்பட்ட பாவக வழியிலான இன்னல்களுக்கு இது ஒரு மாற்று மருந்தாக செயல்படும், நடைபெறும், எதிர் வரும்  திசா புத்திகள் வலிமை பெற்ற 11ம் பாவக பலனை ஏற்று நடத்தினால், பாதிக்கப்பட்ட பாவக வழியிலான இன்னல்கள் ஏதும் நடைமுறைக்கு வாராது.

கேள்வி :

7) அடுத்து வரும் குருவின் திசை எடுத்து நடத்தும் பாவகம் நன்றி.

பதில் :

4,9ம் வீடுகள் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று குரு திசை  பலாபலன்களை தர ஆயத்தமாக உள்ளது, இதனால் தகப்பனார் வழி சொத்து கிடைக்கும், உயில் இஞ்சுரன்ஸ் மூலம் தனவரவு உண்டாகும், போனஸ் லாபம் உண்டு, இருப்பினும் வாகன பழுது விபத்து தவிர்க்க இயலாது, எதிர்பாலின வழியில் இருந்து இன்னல்கள் உண்டாகும். பெயருக்கு களங்கம் உண்டாகும், நம்பிக்கை குறையும், இவையாவும் குரு திசை, குரு புத்தி, குரு அந்தரத்தில் மட்டும் நடைமுறைக்கு வரும்.

குறிப்பு :

சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து நன்மைகளை பெற தேவையான நடைமுறைகளை மேற்கொண்டு சிறப்பான எதிர்காலத்தை பெறுங்கள் வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

ஞாயிறு, 26 நவம்பர், 2017

திருமண தடை மற்றும் இல்லற வாழ்க்கையில் இன்னல்களை தரும் நவகிரக திசாபுத்திகள் !



 சுய ஜாதகத்தில் சிறப்பான யோகங்கள் இருப்பினும், நடைபெறும் திசாபுத்தி அல்லது எதிர்வரும் திசாபுத்திகள் யோகங்களை தரும் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் சுபயோகங்கள் இருந்தும் பயனற்ற நிலையையே தரும், குறிப்பாக ஜாதகர் கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய் க்கு அலைந்த நிலையை தந்துவிடும், கீழ்கண்ட ஜாதகருக்கு வயது 41 கடந்தும் திருமணம் எனும் பந்தத்தில் இணையாத சூழ்நிலையை தந்து, ஜாதகரையும் ஜாதகரின் பெற்றோரையும் மிகுந்த மனவேதனைக்கு ஆளாக்கிக்கொண்டு இருக்கின்றது, சுய ஜாதகத்தில் ஜாதகருக்கு 6,12ம் வீடுகள் 9ம் வீடு என மூன்று வீடுகள் மட்டுமே கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது, மற்ற 9 வீடுகளும் மிகவும் வலிமையுடன் இருந்தும் ஜாதகர் வலிமை பெற்ற பாவக வழியிலான யோக பலன்களை சிறிதும் அனுபவிக்க இயலாத சூழ்நிலையில் தத்தளித்துக்கொண்டு இருக்கின்றார், சுய ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை குறிக்கும் வீடுகளில் 12ம் வீடுமட்டும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது ஒரு வகையில் இன்னல்களை தந்த போதிலும் 2,5,7,8ம் பாவக வழியில் இருந்து வரும் யோக பலன்களை அனுபவிக்க இயலாத சூழ்நிலையை ஏன் ஏற்படுகிறது என்பதை இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : கும்பம்
ராசி : மேஷம்
நட்ஷத்திரம் : அஸ்வினி 2ம் பாதம் 

ஜாதகத்தில் வலிமை பெற்றுள்ள பாவக தொடர்புகள் :

1,5,7,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம்.
2,4,8,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம்.
3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம்.

ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம்.
9ம் வீடு பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம்.

ஜாதகருக்கு பெரும்பாலான பாவகங்கள் நல்ல வலிமையுடன் இருப்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், குறிப்பாக சுய ஜாதகத்தில் 1,2,3,4,5,7,8,10,11 எனும் ஒன்பது பாவகங்களும் மிக மிக வலிமையுடன் இருப்பது ஜாதகரின் வாழ்க்கையில் சிறப்பான நன்மைகளை மேற்கண்ட பாவக வழியில் இருந்து வாரி வழங்கும், 6,9,12ம் எனும் மூன்று பாவகங்கள் மட்டுமே சுய ஜாதகத்தில் வலிமை அற்று காணப்படுகிறது இதில் 6,12ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் கடுமையான பாதிப்புகளையும், 9ம் பாவக வழியில் அளவில்லா கடுமையான பாதிப்புகளையும் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், மேற்கண்ட பாவக வழியிலான நன்மை தீமைகளை ஜாதகர் எந்த காலகட்டத்தில் அனுபவிப்பார் என்பதில் இருக்கிறது ஜாதகரின் முன்னேற்றம் என்பது, ஜெனன காலம் முதல் தற்போழுது  வரை நடைபெற்ற நவகிரக திசை ஜாதகருக்கு தந்த பலாபலன்களை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

ஜெனன கால கேது திசை 4வருடம் 2மாதம் ஜாதகருக்கு 1,5,7,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வலிமை பெற்ற லாப ஸ்தான பலனை தடையின்றி வாரி வழங்கியது ஜாதகருக்கு வளரும் சூழ்நிலையில் சிறப்பான யோக பலன்களை  வாரி வழங்கியிருக்கின்றது, ஜாதகர்  மாற்றும் ஜாதகரின் பெற்றோர் மேற்கண்ட பாவக வழியில் இருந்து சிறப்பான யோக பலன்களை பெற்று இருக்கின்றனர்.

சுக்கிரன் திசை 20 வருடம் ஜாதகருக்கு 2ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு அளவில் ஜாதகருக்கும் ஜாதகரின் தகப்பனாருக்கு பரிபூர்ண நன்மைகளை வாரி வழங்கி இருப்பது சிறப்பான யோக பலன்களை தந்து இருக்கின்றது, ஜாதகரின் அடிப்படை கல்வி, உயர்கல்வி மற்றும் பட்டயபடிப்பு பரிபூர்ண சுபயோகங்களை வழங்கி இருக்கின்றது, கல்வி காலம் சிறப்பாக நிறைவு பெற்ற உடன் ஜாதகருக்கு நல்லதோர் தொழில் வாய்ப்பும் அமைந்து நிறைவான வருமானத்தை பெற ஆரம்பித்தார் என்பது ஜாதகருக்கு சுக்கிரன் திசை வழங்கிய சிறப்பு பலன்களாகும்.

சூரியன் திசை 6 வருடம் ஜாதகருக்கு 5ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சிறப்பான நன்மைகளை 5ம் பாவக வழியில் இருந்து வாரி வழங்கியது ஜாதகர் தான் கற்ற கல்வி வழியில் இருந்து ராஜயோக பலன்களை பெற்றார் என்பது ஜாதகருக்கு சூரியன்  திசையால் கிடைத்த அதிர்ஷ்டம் என்று சொல்லலாம்.

சந்திரன் திசை 10 வருடங்கள் ஜாதகருக்கு 2,4ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சிறப்பான யோக பலன்களை வழங்கியது, ஜாதகருக்கு தொழில் ரீதியான சுபயோகங்களை வழங்க ஆரம்பித்தது, அதன் வழியில் ஜாதகர் பெற்ற தன்னிறைவான பொருளாதார வளர்ச்சி ஜாதகரின் வாழ்க்கை பாதையை வெகுவாக சீர்குலைக்க ஆரம்பித்தது, குறிப்பாக சந்திரன் திசையில் செவ்வாய் மற்றும் ராகு புத்திகள் ஜாதகருக்கு தவறான எதிர்பாலின சேர்க்கையையும், தீய பழக்க வழக்கங்களை கொண்ட நண்பர்களின் சேர்க்கை ஜாதகரின் வாழ்க்கையை புரட்டிப்போட ஆரம்பித்தது, செவ்வாய் புத்தியில் ஜாதகருக்கு ஏற்பட்ட அவப்பெயர் மற்றும் தவறான பழக்க வழக்கங்கள் ஜாதகரின்  வாழ்க்கையில் திருமணம் எனும் முயற்சிகளில் பிரதிபலித்தது, ஜாதகரின் திருமண முயற்சிகள் அனைத்திற்கும்  வெகுவான தடை தாமதத்தை வழங்க ஆரம்பித்தது தற்போழுது வரை நிறைவடையவில்லை, திருமணத்திற்க்கான பகிர்தன முயற்சிகள் யாவும் ஜாதகருக்கு கடுமையான தோல்வியை மட்டுமே வழங்கிக்கொண்டு இருக்கின்றது.

தற்போழுது நடைபெறும் செவ்வாய் திசை ( 05/05/2016 முதல் 05/05/2023 வரை ) ஜாதகருக்கு 6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 9ம் வீடு பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் பாதகம் மற்றும் விரைய ஸ்தான வழியில் இருந்து கடுமையான இன்னல்களை வாரி வழங்கிக்கொண்டு இருப்பது, ஜாதகரின் திருமண வாழ்க்கைக்கான முயற்சிகள் அனைத்திற்கும் நல்லதோர் திண்டுக்கல் பூட்டை பலமாக பூட்டி சாவியை தன்வசம் வைத்துக்கொண்டது என்பதுடன் அடுத்துவரும் ராகு திசையிடம் தன்வசம் உள்ள சாவியை பொறுப்பாக தந்துவிடும் என்பதை நினைக்கும் பொழுது ஜாதகரின் இல்லற வாழ்க்கையை பற்றிய கேள்விக்குறி மிக பெரியதாக நம்முன் நிற்கின்றது.

மேற்கண்ட ஜாதகருக்கு 1,2,3,4,5,7,8,10,11 எனும் ஒன்பது பாவகங்கள் வழியில் இருந்து சுபயோக அமைப்புகள் இருப்பினும், நடைபெறும் திசை வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தாமல் வலிமையற்ற பாதகம் மற்றும் விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு அதிர்ஷ்டம் இருந்தும்  துரதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கும் நிலையை ஏற்படுத்துகிறது, பெரும்பாலும் சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்புகள் இருப்பினும், நடைமுறையில், எதிர்காலத்தில் வலிமை பெற்ற பாவக பலனை நவக்கிரக திசாபுத்திகள் ஏற்று நடத்தவில்லை எனில் ஜாதகரின் பாடு பெரும் தர்மசங்கட நிலைக்கு ஆளாகும் சூழ்நிலையை தரும், அதற்க்கு மேற்கண்ட ஜாதகமே நல்ல உதாரணம்.

ஜாதகருக்கு திருமணம் தாமதமாக காரணம் என்ன ?

1) சுய ஜாதகத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட பாதக ஸ்தானம் என்பது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் வீடாகவும் களத்திர ஸ்தானமாகவும் அமைகிறது, சுய ஜாதகத்தில் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் வீடு கடுமையாக பாதிக்கப்பட்டாலும் ஜாதகருக்கு திருமணம் தாமதம் ஆக அதிக வாய்ப்பு உள்ளது.

2) கடந்த சந்திரன் திசையில், செவ்வாய் புத்தியில் ஜாதகருக்கு ஏற்பட்ட எதிர்பாலின தவறான தொடர்பு ஓர் அவயோக ஜாதகமாகும் ( தரித்திர யோகம் ) இதன் தாக்கத்தை ஜாதகர் தற்போழுது வரை அனுபவித்துக்கொண்டு இருக்கின்றார் என்பதுடன், செவ்வாய் புத்திக்கு அடுத்து வந்த ராகு புத்தி ஜாதகரின் திருமண முயற்சிக்கான வாய்ப்பை தட்டிப்பறிக்கும் களங்கத்தை ஏற்ப்படுத்தியது.

3) தற்போழுது நடைபெறும் செவ்வாய் திசையும் ஜாதகருக்கு கடுமையாக பாதிக்கப்பட்ட பாதகம் மற்றும் விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகரின் வாழ்க்கையை ஜீவனம் மற்றும் களத்திர வழியில் கடுமையான இன்னல்களை வாரி வழங்கிக்கொண்டு இருக்கின்றது, இதுவே ஜாதகரின் திருமண தாமதத்திற்கு அடிப்படை காரணமாக அமைகிறது.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் நடைமுறையில் அல்லது எதிர்வரும் திசை எதுவென்றாலும் சரி சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை
எனில் ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் யோகங்கள் இருந்தாலும் பலனேதும் இருக்காது, சுய ஜாதகத்தில் அவயோகங்கள் இருந்தாலும் நடைபெறும் அல்லது எதிர்வரும் திசை சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலனை மட்டும் ஏற்று நடத்தினால் சுய ஜாதகத்தில் உள்ள அவயோகங்கள் யாவும் ஜாதகருக்கு நடைமுறைக்கு வாராமல், ஏற்று நடத்தும் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து ஜாதகர் சுபயோக பலன்களையே அனுபவிப்பார் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696