வெளியூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெளியூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

வெளிநாட்டில் தொழில் யோகம் உண்டா ? எதிர்வரும் செவ்வாய் திசை தரும் பலன்கள் என்ன?



வெளிநாடு வெளியூர் சென்று தொழில் மேன்மையும், வேலை வாய்ப்பில் நன்மைகளும் பெறுவதற்கு சுய ஜாதகத்தில் அடிப்படையில் 7ம் வீடான களத்திர ஸ்தானம் மிகவும் வலிமை பெற்று இருப்பதும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியான துலாம் வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, மேலும் மேற்கண்ட வீடுகளுக்கு 1,4,10ம் வீடுகள் உறுதுணையாக அமைவது ஜாதகரின் வாழ்க்கையில் பரிபூர்ண அயல் தேச ஜீவன மேன்மையை வாரி வழங்கும், தொழில் அல்லது வேலை என்ற அமைப்பில் இது சிறப்பான நன்மைகளை ஜாதகருக்கு வாரி வழங்கும், குறிப்பக தற்போழுது நடைமுறையில் உள்ள திசையும், எதிர்வரும் திசையும் ஜாதகருக்கு மேற்கண்ட வலிமை பெற்ற 7ம் பாவக பலனை ஏற்று நடத்தினால், ஜாதகருக்கான முன்னேற்றம் வெளிநாடுகளில் இருந்து சரளமாக கிடைக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை, இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம்.


லக்கினம் : மீனம்
ராசி : சிம்மம்
நட்ஷத்திரம் : மகம் 1ம் பாதம்

ஜாதகத்தில் மிகவம் வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

2ம் வீடு குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு அளவற்ற செல்வம், குடும்ப ஒற்றுமை, நல்ல உணவு, சிறந்த பேச்சு திறன் என்ற வகையில் சிறப்பை தரும்,
3,4ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவக தொடர்பை பெறுவது மண் மனை வண்டி வாகன யோகம், முதுமையிலும் சுகபோகம், பெண்கள் ஆதரவு, போட்டி பந்தயங்களில் எளிதில் வெற்றி, போக்குவரத்து துறை, வீட்டு மிருகங்கள், விவசாயம் மூலம் லாபம் உண்டு, 4ம் பாவக வழியில் இருந்து, வடக்கு திசை வாயிற்படி வீடுகளில் குடியிருப்பது சகல சௌபாக்கியத்தையும் தரும், சுய முன்னேற்றம் பெறுவதற்கான யோகம் உண்டு, மண் மனை வண்டி வாகன யோகம் உண்டு.

5,8,10,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவக தொடர்பை பெறுவது ஜாதகருக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து பரிபூர்ண அதிர்ஷ்டங்களை வாரி வழங்கும், குறிப்பாக லாட்டரி யோகம், புத்திசாலித்தனம் மூலம் லாபம், எப்போதும் மகிழ்ச்சி, குழந்தைகள் வழியில் யோகம், குடும்பம் வாழ்க்கை துணை வழியிலான ஒற்றுமையை வெகுவாக தரும், நீண்ட ஆயுள், திடீர் அதிஷ்டம், எதிர்பாராத பொருளாதார வசதி வாய்ப்புகள் உண்டு, நல்ல அந்தஸ்து, நண்பர் உதவி, மன நிறைவான யோக வாழ்க்கை, சுய தொழில் முன்னேற்றம், நல்ல நிதி மேலாண்மை, அனைவரிடமும் அனுசரித்து செல்லுதல், எல்லாம் வெற்றி மயம், மிகுந்த அதிர்ஷ்டம்,அனைத்திலும் லாபம், நல்ல குணம் என்ற வகையில் சிறப்பை தரும்.

6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவக தொடர்பை பெறுவது ஜாதகருக்கு கடன் தொல்லை, வேலை வாய்ப்பில் இன்னல்கள், தேவையற்ற மருத்துவ செலவுகள், பிறந்த ஊரை விட்டு வெகு தொலைவில் சென்று முன்னேற்றம் பெறுதல், நிறைய செலவினங்கள், பங்கு சந்தையில் திடீர் இழப்புகள், திருப்தி இல்லா வாழ்க்கை, அனைவராலும் இன்னல்கள் என்ற வகையில் இன்னல்களை தரக்கூடும்,

1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவக தொடர்பை பெறுவது ஜாதகருக்கு லக்கின பாவக வழியில் இருந்து வளரும் சூழ்நிலையில் இன்னல்கள், கல்வியில்  தடை, சுய முன்னேற்றத்தில் பாதிப்பு, தெளிவில்லாத முடிவுகள் மூலம் பாதிப்பை தானே சுவீகரிக்கும் நிலை, எதிர்ப்புகளை அதிக அளவில் சம்பாதிக்கும் நிலை, உடல் மனம் சார்ந்த விஷயங்களில் சிறு சிறு இன்னல்கள் என்ற வகையில் பாதிப்பை தரும், 7ம் பாவக வழியில் இருந்து நண்பர்கள் கூட்டாளிகள் வழியில் இருந்து வரும் இன்னல்கள், கூட்டு முயற்சியால் வரும் பாதிப்புகள், வெளியூர் அல்லது வெளிநாட்டில் முயற்சிக்கும் காரியங்கள் பெரும் பாதிப்பு, வெளிநாட்டில் யோகமின்மை, எதிர்பாலின சேர்க்கை மூலம் வரும் கடுமையான பாதிப்பு என்ற வகையில் இன்னல்களை தரும், பொது வாழ்க்கையில் மிகப்பெரிய இன்னல்களையும் தோல்வியையும் கடுமையாக தரும்.

நடைபெறும் சந்திரன் திசையில் அடுத்தது வரும் சூரியன் புத்தி மட்டும் ஜாதகருக்கு சில இன்னல்களை தரக்கூடும், இருப்பினும் அதற்க்கு அடுத்து வரும் செவ்வாய் திசை ஜாதகருக்கு 2ம் வீடு குடும்ப ஸ்தானமான 2ம் பாவக தொடர்பை பெற்று யோக பலனையும், 3,4ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவக தொடர்பை பெற்று சுபயோக பலாபலன்களை வாரி வழங்குவது ஜாதகருக்கான யோக வாழ்க்கையை சிறப்பாக வாரி வழங்கும், கைநிறைவான வருமானம், பொருளாதார வசதி வாய்ப்புகள், தெய்வீக அனுகிரகம், புதிய சொத்து சுக சேர்க்கை, வண்டி வாகன யோகம், வீடு நிலம் வாங்கும் யோகம் என்ற வகையில் சிறப்புகளை தரும், ஜாதகருக்கான யோக வாழ்க்கை எதிர்வரும் செவ்வாய் திசையில் பரிபூர்ணமாக கிடைக்கும்.

குறிப்பு :

 ஜாதகருக்கு பூர்வீக அமைப்பிலேயே சிறப்பான யோகங்கள் நடைமுறைக்கு வரும் என்பதால், ஜாதகர் வடக்கு திசை சார்ந்த வீட்டில் குடியிருப்பது மட்டுமே ஜாதகத்தில் உள்ள சுபயோகங்களை பரிபூர்ணமாக வாரி வழங்கும், மேலும் எதிர்வரும் செவ்வாய் திசை 2,3,4ம் பாவக வழியில் இருந்து சுபயோகங்களை வாரி வழங்குவது, ஜாதகருக்கு தன்னிறைவான யோக வாழ்க்கையை வாரி வழங்கும், வெளிநாடு யோகம் ஜாதகருக்கு இல்லை என்பதே ஜோதிடதீபத்தின் கருத்து, "வாழ்த்துகள்"


வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

திங்கள், 18 ஜூன், 2018

வெளிநாடுகளில் யோக வாழ்க்கையை பெரும் ஜாதக நிலையும் ! புதன் திசை தரும் பொருளாதார தன்னிறைவும் !


  சுய ஜாதகத்தில் லக்கினத்தில் இருந்து 7ம் வீடாகிய களத்திர ஸ்தானமும், 10ம் வீடாகிய ஜீவன ஸ்தானமும், 11ம் வீடாகிய லாப ஸ்தானமும் வலிமை பெறுவது ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளை வெளியூர், வெளிநாடு மற்றும் வியாபாரம் சார்ந்த வெற்றிகளை வாரி வழங்கும், குறிப்பாக சுய ஜாதகத்தில் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியான துலாம் மிகவும் வலிமை பெற்று இருப்பது ஜாதகருக்கு வெளிநாடு யோகம், வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானம் என்ற வகையில் சிறப்புகளை தரும், தன்னிறைவான சுபயோகங்களை ஜாதகர் தங்கு தடையின்றி அனுபவிக்கும் வல்லமை உண்டாகும், மேலும் லக்கினம் வலிமை பெற்று இருப்பது ஜாதகர் வெளிநாடுகளில் இருந்து வரும் யோக வாழ்க்கையை சுயமாக சுவீகரிக்கும் தன்மையை தரும், பிரபல்ய யோகம், சமூக அந்தஸ்து, மதிப்பு மரியாதை, வெளிவட்டார பழக்க வழக்கங்கள் மூலம் ஜாதகருக்கு கிடைக்கும் சுபயோக வாழ்க்கை என்ற வகையில் பரிபூர்ண நன்மைகளை தரும்.

 மேலும் சுய ஜாதகத்தில்  5,12ம் வீடுகள் வலிமை பெறுவது , 5ம் பாவக வழியில் இருந்து தனது அறிவு திறன் சமயோசித புத்திசாலித்தனம் மூலம் வெளிநாடுகளில் சிறப்பான யோக வாழ்க்கை பெறுவதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கி தரும், ஜாதகரின் அறிவார்ந்த முயற்சிகள் மூலம் பொருளாதார ரீதியான வெற்றிகளை மிக எளிதாக பெறுவதற்கும், குடியுரிமை சார்ந்த நன்மைகளை பெறுவதற்கும் ஜாதகருக்கு ஓர் அங்கீகாரத்தை நல்கும், 12ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் வெளிநாடுகளில் பெரும் பொருளாதர தன்னிறைவை குறிப்பதுடன், திருப்தியுடன் கூடிய நிம்மதிகாரமான யோக வாழ்க்கையை நல்கும், தெளிவான சிந்தனை நல்ல உறக்கம், மற்ற நாடுகளில் உள்ள சீதோஷன நிலையை ஏற்றுக்கொள்ளும் திரேகம், வேற்று மதத்தினர், வேற்று இனத்தினருடன் இணக்கமான உறவை கையாளும் வல்லமையை தருவதும் அயன சயன ஸ்தானத்தின் வலிமையே என்றால் அது மிகையில்லை. 


லக்கினம் : விருச்சிகம்
ராசி : கும்பம்
நட்ஷத்திரம் : பூரட்டாதி 2 பாதம்

ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு லக்கின பாவக வழியில் இருந்து நீண்ட ஆயுள், சிறந்த உடல் மற்றும் மனநலம், வளரும் சூழ்நிலையில் சிறப்பு, கல்வியில் மேன்மை, பொதுமக்கள் தொடர்பில் யோகம், சிறந்த நிர்வாக திறமை, தனித்தன்மையான ஆளுமை திறன், எதிர்ப்புகளை சந்தித்து வெற்றிகொள்ளும் யோகம், அனைவரின் ஆதரவையும் பெரும் யோகம், வசீகரிக்கும் செயல்பாடுகள், எதிர்பாலின அமைப்பினரிடம் இருந்து பெரும் நன்மைகள் என்ற வகையில் ஜாதகருக்கு சிறப்பை தரும்.

7ம் பாவக வழியில் இருந்து வெளியூர் அல்லது வெளிநாடுகளில் இருந்து வரும் முன்னேற்றத்தை ஜாதகர் பரிபூர்ணமாக சுவீகரிக்கும் யோகம், பிரபல்ய யோகம், நல்ல நண்பர்கள், சிறந்த கூட்டாளிகள், வலிமை மிக்க கூட்டுத்தொழில், அதன் வழியிலான ஜீவன மேன்மை என்ற வகையில் சிறப்புகளை  தரும், ஜாதகருக்கு களத்திர ஸ்தானமான 7ம் பாவகம் ரிஷப ராசியில் 5 பாகைகளையும், மிதுன ராசியில் 23 பாகைகளையும் கொண்டு இருப்பது சிறப்பானது, ஜாதகரின் அறிவு திறன் வெளிநாடுகளில் சிறப்பான வரவேற்பை கொண்டுள்ளதாக அமைவதும், ஜாதகரின் சிறந்த மேலாண்மை திறன் வெளிநாடுகளிலேயே மிகவும் பிரகாசமாக அமைவதையும், ஜாதகர் தெளிவாக உணர்ந்துகொண்டு, அதன் வழியிலான வெற்றிநடை போடுவது வரவேற்கத்தக்கது,  ஜாதகரின் உழைப்பு மிக குறைவாக அமைந்த போதிலும் பெரும் நன்மைகள் அபரிவிதமானதாக இருப்பதற்கு காரணம் என்ன ? என்பதை அடுத்த வரிகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!

ஜாதகரின் 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த வலிமையுடன் இருப்பது வரவேற்கத்தக்கது மேலும் ஜாதகரின் ஜீவன ஸ்தானம் சிம்ம ராசியில் 3 பாகைகளையும், கன்னி ராசியில் 28 பாகைகளையும் கொண்டு இருப்பது சிறப்பான ஓர் விஷயமாக கருதலாம், இது ஜாதகருக்கு தொழில் நுட்பம் மற்றும் கைதேர்ந்த தொழில் மேலாண்மை திறனை வழங்கி இருப்பது கவனிக்கத்தக்கது, பெரும்பாலும் கைதேர்ந்த, திறமை வாய்ந்த, தொழில் நுட்பம் சார்ந்த அறிவுத்திறன் மிக்க அனைவரும் பெரிய அளவிலான வெற்றிகளை பெற்று விடுகின்றனரா ? என்றால் இல்லை என்பதே பதில், ஆனால் இவர் அபரிவிதமான வெற்றிகளை குவிக்க மேற்கண்ட விஷயங்கள் மட்டுமே கைகொடுக்கவில்லை, ஆம் அதிர்ஷ்டம் என்பதே ஜாதகருக்கு மிதந்தமிஞ்சிய யோக வாழ்க்கையை வாரி வழங்கிக்கொண்ட இருக்கின்றது என்பதே உண்மை, திறமை மட்டும் இருப்பது ஜாதகருக்கு வெற்றிகளை தருவதில்லை, அதிர்ஷ்டம் எனும் 11ம் பாவக வலிமையே திறமைக்கான அங்கீகாரத்தை உலகிற்கு எடுத்துரைத்து, திறைமைக்கான அதிர்ஷ்ட வாழ்க்கையை நிலைநிறுத்துகிறது என்பதை அடுத்த வரிகளில் தெளிவாக காண்போம்.

ஜாதகருக்கு மேற்கண்ட பாவகங்கள் வலிமை பெற்றது, 30 % விகித நன்மைகளை தந்த போதிலும் 2,4,5,8,11,12ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்டத்தை குறிக்கும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழுவீச்சில் 100% விகித நன்மைகளை தருவதே ஜாதகரின் வெற்றிக்கு அடிப்படை காரணமாக அமைகிறது, சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானத்துடன் 1,7ம் வீடுகள் சம்பந்தம் பெறுவதும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் வீடான துலாம் ராசி வலிமை பெறுவதும் ஜாதகரின் வெளிநாடு சார்ந்த அமைப்பில் இருந்து அதிர்ஷ்டத்துடன் கூடிய யோக வாழ்க்கையை வாரி வழங்குகிறது, 2,4,5,8,11,12ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்டத்தை குறிக்கும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் 11ம் பாவகம் ஜாதகருக்கு கன்னி ராசியில் 1 பாகையில் ஆரம்பித்து 28 பாகைகள் துலாம் ராசியில் வியாபித்து நிற்பது கவனிக்கத்தக்கது, மேலும் லாப ஸ்தானத்துடன் பொருளாதர மேன்மை மற்றும் சுகபோகத்தை குறிக்கும் வீடுகள் யாவும் ( 2,4,5,8,11,12ம் வீடுகள் ) சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கான யோக வாழ்க்கையை மிக பெரிய அளவில் வாரி வழங்குவது கவனிக்கத்தக்கது.

ஒரு ஜாதகருக்கு மிதம் மிஞ்சிய செல்வவளத்தை தாறுமாறாக வாரி  வழங்கும் வல்லமை பெற்றது மறைவு ஸ்தானம் என்று உணரப்பட்ட 6,8,12ம் வீடுகளே, ஜாதகருக்கு வரும் பொருளாதார வளர்ச்சி எப்படி வந்தது என்று மற்றவர்கள் கண்டுஅறிய இயலாவண்ணம், ஜாதகருக்கு தன்னிறைவான பொருளாதார முன்னேற்றத்தை வாரி வழங்கும் வல்லமை பெற்றது மேற்கண்ட 6,8,12ம் வீடுகள், அப்படிப்பட்ட வீடுகள் எல்லாம் ஜாதகருக்கு அதிர்ஷ்ட ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கான பொருளாதார வெற்றியை எதிர்பாரா அளவில் நிர்ணயம் செய்துள்ளது என்பதே உண்மை, இதற்குஎல்லாம் சிகரம் வைத்தார் போல் அமைவதுதான் அடுத்து வரும் பத்திகளில் நமக்கு ஆச்சரியங்களை வழங்க இருக்கின்றது.

ஆம் ஜாதகருக்கு கடந்த சனி திசை 19 வருடமும், 1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான  7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் , 4,12ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக சுப பலனை வாரி வழங்கியது இளமையில் சகல யோகத்தையும், திறமைக்கான வெற்றிகளையும் அங்கீகாரம் செய்தது, தற்போழுது நடைமுறையில் உள்ள புதன் திசை ஒருபடி மேலே சென்று 2,5,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அதிர்ஷ்டங்களை வாரி வழங்கிக்கொண்டு இருப்பது ஜாதகருக்கு நன்மையை தருகின்றது என்ற போதிலும், 3,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகித இன்னல்களை தருவது, செல்வம், சுகபோகம் உண்டு ஆனால் வாரிசு இல்லை என்ற நிலையை தந்துள்ளது, 9ம் பாவகம் ஜாதகருக்கு கடக ராசியில் ஆரம்பித்த போதிலும் அதில் 5 பாகைகளையே கொண்டுள்ளது, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பூர்வ புண்ணியமான சிம்மராசியில் 27 பாகைகளை கொண்டு 9ம் பாவகம் பாதக ஸ்தானமாக அமைவது ஜாதகருக்கு புத்திர பாக்கிய தடைக்கு அடிப்படை காரணமாக அமைகிறது என்பது இது தெளிவுபடுத்துகிறது.


குறிப்பு :

 சுய ஜாதகத்தில் அயல் தேச யோக வாழ்க்கையை குறிக்கும், 1,7,10,12ம் பாவகங்களுடன் அதிர்ஷ்டத்தை தரும் 11ம் பாவகமும் வலிமை பெற்று இருப்பது அவசியமாகிறது, மேலும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு துலாம் ராசி  மற்றும் மீன ராசி வலிமையையும் நாம் கருத்தில் கொண்டு " திரைகடல் ஓடி திரவியம் தேடுவது " சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

புதன், 4 அக்டோபர், 2017

வெளிநாடு அல்லது வெளியூர் சென்று தொழில் முன்னேற்றம் பெரும் யோகம் உண்டா ?


 சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் வலிமை பெறுவது என்பது சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் சுப யோகங்களை வாரி வழங்கும், மாறாக சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை இழப்பது ஜாதகருக்கு பாதிக்கப்பட்ட பாவக வழியில் இருந்து கடுமையான நெருக்கடிகளை தரும், குறிப்பாக சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு வீடுகளில் எந்த ஒரு வீடும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது என்பது சம்பந்தப்பட்ட  ஜாதகருக்கு நன்மையை தரும் அமைப்பு அல்ல என்பதே உண்மை நிலை, சுய ஜாதகத்தில் வெளியூர் அல்லது வெளிநாடு சென்று ஜீவனம் செய்யும் அமைப்பிற்க்கு அந்த காலத்தில் "பரதேஷ ஜீவனம்" என்று அழைத்தனர், இன்று அது மிகவும் பெருமைக்கு உரிய ஒன்றாக கருதப்படுகிறது.

 சுய ஜாதகத்தில் 5ம் வீடு வலிமை இழப்பதும், 7,12ம் வீடுகள் வலிமை பெறுவதும் ஓர் ஜாதகருக்கு வெளியூர் அல்லது வெளிநாடுகளில் ஜீவன வாழ்க்கையை அமைத்து தரும், 8,11ம் வீடுகள் வலிமை பெறுவது ஜாதகருக்கு வெளிநாடுகளில் இருந்து தன்னிறைவான பொருளாதார முன்னேற்றம்  மற்றும் கைநிறைவான தன சேர்க்கையை வாரி வழங்கும், லக்கினம் முதல்  பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலை ஜாதகரின் வாழ்க்கையில் எங்கு இருப்பினும் சுபயோகங்களையே நல்கும், கீழ்கண்ட ஜாதகரின் கேள்வியான, வெளிநாடு அல்லது வெளியூர் சென்று தொழில் முன்னேற்றம் பெரும் யோகம் உண்டா ?  தற்ப்பொழுது வெளியூரில் செய்து வரும் தொழில் இன்னல்களையும் கடன் சுமையையும் ஏற்படுத்தியதற்க்கு காரணம் என்ன ? என்பதற்கு உண்டான பதிலை இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : தனுசு
ராசி : மகரம்
நட்ஷத்திரம் : உத்ராடம்

 வெளிநாடு சென்று வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவதற்கு சுய ஜாதகத்தில் அடிப்படையில் களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் வலிமை பெற்று இருப்பது அவசியமாகிறது, மேற்கண்ட ஜாதகருக்கு 7ம் வீடு விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் வெளிநாடு வெளியூர் கனவை நிராசையாக மாற்றுகிறது, வெளிநாடு சென்று ஜீவனம் தேடும் யோகம் அற்றவர் என்பதை தெளிவு படுத்துகிறது, மேலும் சுய ஜாதகத்தில் அயன சயன ஸ்தானம் என்று அழைக்கப்படும் 12ம் பாவகம் வலிமை பெறுவது வெளிநாடுகளில் ஜாதகரின் வாழ்க்கை முறையை தெளிவுபடுத்தும், இந்த ஜாதகத்தி மேற்கண்ட அயன சயன ஸ்தானம் வலிமை குறைந்து காணப்படுவது ஜாதகரின் வெளியூர் வெளிநாடுகளில் வாழும் வாழ்க்கையானது மனநிம்மதி அற்றதாகவும், அதிக போராட்டங்களை எதிர்கொள்ளும் தன்மையை கொண்டதாகவும் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை, மேற்கண்ட விஷயங்களை விட தற்போழுது நடைபெறும் திசை தரும் பலன்கள் என்ன ? என்பதே ஜாதகரின் நிகழ்கால வாழ்க்கையை படம்பிடித்து காட்டும்.

ஜாதகருக்கு தற்போழுது நடைமுறையில் உள்ள திசை ராகு திசை தரும் பலாபலன்கள் : ( 12/04/2006 முதல் 12/04/2024 வரை )

ராகு தனது திசையில் ஜாதகருக்கு சத்ரு ஸ்தானம் என்று அழைக்கப்படும் 6ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் சத்ரு ஸ்தான வழியில் விரையங்களை வாரி வழங்கி கொண்டு இருக்கின்றது, இதனால் ஜாதகர் கடன்பட்டு செய்த தொழில்கள் யாவும் கடும் நஷ்டத்தை தந்தது, ஜாதகருக்கு அதிக அளவிலான கடன் சுமை ஜாதகரின் மனநிம்மதியை வெகுவாக பாதித்தது, இதனால் ஜாதகரின் மன நிம்மதி கெட்டு தெளிவற்ற செயல்பாடுகள் மூலம் கடும் நெருக்கடிகளை ஏற்படுத்திக்கொண்டார், பொதுவாக சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எனும் 5ம் பாவகம் மற்றும் பாக்கியம் எனும் 9ம் பாவகம் வலிமை பெற்று இருப்பின் ஜாதகர் வெளியூர் அல்லது வெளிநாடு செல்லாமல் தான் அமர்ந்த இடத்தில் ( பூர்வீகம் ) இருந்துகொண்டே சகல சௌபாக்கியங்களையும் தன்னை தேடிவர செய்யலாம், பூர்வீகம் பாதிப்பு அடைந்து இருந்தால் மட்டுமே ஜாதகர் வெளியூர் வெளிநாடு ( பரதேசஜீவனம் ) சென்று ஜீவனம் தேடலாம், அதுவும் சுய ஜாதகத்தில் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாவகங்கள் வலிமை பெற்று, நடைமுறையில் உள்ள திசை ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால், மாறாக குறிப்பிடப்பட்டுள்ள பாவகங்கள் வலிமை அற்று இருப்பின் தனது பூர்வீகத்திற்கு அருகிலேயே ஜீவன வாழ்க்கையை அமைத்துக்கொள்வது சாலசிறந்தது.

மேற்கண்ட ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் ராகு திசை சத்ரு ஸ்தானமான 6ம் வீட்டு பலனை, விரைய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று தருவது, ஜாதகரின் வாழ்க்கையில் பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகளை தருகின்றது மேலும் ஜாதகரின் 6ம் வீடு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் வீடாக அமைவது ஜாதகரின் வருமானம் சார்ந்த விஷயங்களை கேள்விக்குறியாக மாற்றுகிறது, ஜாதகருக்கு வரும் வருமானம் வீண் விரையம் ஆகிறது, ஜாதகரின் பேச்சு மிகப்பெரிய இன்னல்களுக்கு ஆளாக்குகிறது, 12ம் வீடு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் வீடாக அமைவது வெளிநாடு வெளியூர் சென்று ஜீவிப்பது ஜாதகருக்கு மிக பெரிய இழப்புகளையும், அறிவு சார்ந்த முயற்சிகளில் தோல்வி மற்றும் மனநிம்மதி இழப்பையும் வாரி வழங்கிக்கொண்டு இருக்கின்றது.

சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை அற்றும், நடைபெறும் ராகு திசை வலிமை  அற்ற பாவக பலனையும் ஏற்று நடத்துவதே ஜாதகரின் வெளியூர் சார்ந்த தொழில் வழியில் இருந்து கடுமையான தோல்வியை தந்து இருக்கின்றது, மேலும் ஜாதகர் வெளியூர் அல்லது வெளிநாடு சென்று ஜீவனம் தேடி நலம் பெறுவதற்க்கு உண்டான வாய்ப்புகள் சிறிதும் இல்லை என்பதே மேற்கண்ட ஜாதகத்தில் உள்ள உண்மை நிலை, அடுத்து வரும் குரு திசையும் ஜாதகருக்க சாதகமின்றி இருப்பது ஜாதகரின் வெளியூர் வெளிநாடு கனவுகளை வெகுவாக சிதைக்கும் என்பதை கருத்தில் கொண்டு நலம் பெறுவதே ஜாதகருக்கு உகந்தது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696