கடந்த
வாரத்தில் ஒரு திரை படத்தில் ஒரு சிறந்த காட்சியை
காண
நேர்ந்தது ,
திரைப்படத்தில் கதாநாயகனாக தெலுங்கு நடிகர்
மகேஷ்
பாபு
நடித்து இருந்தார் , ஒரு
சிறப்பான காட்சி
கடவுளை
பற்றி
எளிமையாக அனைவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் அமைத்து இருந்தார் திரைப்படத்தின் இயக்குனர், அந்த
காட்சி
:
கதை
படி
கதாநாயகன் சாதாரண
ஒரு
ஓட்டுனர் என்றாலும் , அவரிடம் இறையருள் அதிகம்
உண்டு
என்பதை
ஒரு
சோதனையின் மூலம்
கதாநாயகனே உணரும்
அமைப்பில் அந்த
காட்சி
அமைந்திருந்தது .
கதாநாயகன் முதலில் எதிரில் வரும்
ஒருவனிடம் ஒரு
பத்து
ரூபாய்
கேட்கிறார் , அவர்
கண்டபடி திட்டிவிட்டு நிற்காமல் சென்று
விடுகிறார் , சிறிது
நேரத்திற்கு பிறகு இரண்டாவதாக எதிரில் காரில்
வருபவரை நிறுத்தி அவரிடம் ஒரு
பத்து
ரூபாய்
கேட்கிறார், அவர்
100 ரூபாயை
தந்து
விட்டு
என்னிடம் பத்து
ரூபாய்
இல்லை
பரவாயில்லை 100 ரூபாயையும் நீயே
வைத்து
கொள்
என்று
கூறிவிட்டு சென்று
விடுகிறார்.
அதற்க்கு பிறகு
தன்னிடம் உள்ள
இறைநிலையின் தன்மையை பற்றி
பரிசோதிக்க சொன்ன,
தன்
நண்பனிடம் கதாநாயகன் கீழ்
கண்டவாறு தனது
அனுபவத்தை சொல்கிறார் !
நண்பா
கடவுள்
என்றால் என்ன
என்று,
இன்று
நான்
உணர்ந்து விட்டேன் , முதலில் எனக்காக பத்து ருபாய் கேட்டேன் பணம்
கிடைக்க வில்லை
திட்டு
மட்டுமே கிடைத்தது , இரண்டாவதாக பசியால் வாடி
கொண்டிருந்த அந்த
பெரியாவருக்கு சாப்பிட எதாவது
வாங்கி
தரலாம்
என்று
பத்து
ரூபாய்
கேட்டேன் 100 ரூபாயாக கிடைத்தது , ஆக
கடவுள்
மற்றவருக்கு உதவும்
மனப்பான்மையை பெற்றவருக்கு உடனடியாக ஒடி வந்து உதவி
செய்கிறார், கடவுள் வேறு எங்கும் இல்லை நம் உள்ளத்தில்தான் இருக்கிறார் என்பார்,
அது போல் ஜோதிடகலையும் தம்மை நாடி வருபவர்களின் வாழ்க்கையில் நன்மையையும்
முன்னேற்றத்தையும் தரும் அமைப்பில், நமது ஆலோசனை இருக்க வேண்டும் அப்படி
இருந்தால் இறைநிலை அவர்களுக்கும் நலம் தரும், நமக்கும் நன்மைகளை வாரி
வழங்கும் இதுவே உண்மை .
ஜோதிடம் என்பது
மக்களின் வாழ்க்கையில் எதிர்
வரும்
பல
நிகழ்வுகளை, வருமுன் உணர்த்தும் ஒரு
சிறப்பான கணித
முறையாகும் , இந்த
சிறப்பான ஜோதிட
கலையை
கற்றுக்கொள்ள ஒருவருக்கு என்ன
என்ன
தகுதிகள் வேண்டும் என்பதை
பற்றி
தற்பொழுது காண்போம் :
சரியான
ஜோதிட
கணிதம்
கற்றுக்கொள்ள :
ஒருவருக்கு ஜோதிட
கலையில் அதிக
ஆர்வம், அதிக ஈடுபாடு மட்டும் இருந்தால் போதும்
நிச்சயம் அவர்கள் இந்த
ஜோதிட
கலையை
கற்றுக்கொள்ள இறைநிலை அருள்
புரியும் , ( இது ஜோதிட கலைக்கு மட்டும் அல்ல ஆய கலைகள் 64 ம் பொருந்தும் ) மேலும்
தேடுதல் இருப்பின் ஜோதிட கலையை
கற்று
கொள்ள
சிறந்த
குரு
கிடைக்க யோகமுண்டு.
குரு முகமாக கற்றுகொள்ளும் கலை மட்டுமே வாழ்க்கையில் அனைத்திற்கும் நலம் தரும் .
ஜாதகருக்கு கருமையமும் , ஆக்கினையும் நன்றாக
செயல்படுவது அவசியம் , இந்த அமைப்பு தம்மை
நாடி
வருபவர்களுக்கு வாழ்க்கையில் நலம்
பெற
சரியான
வழிகாட்டுதலை தரும்,
ஜோதிடருக்கு வாழ்க்கையில் சகல
முன்னேற்றமும் தந்து
புகழ்
பெற
செய்யும் .
தம்மை
நாடி
வருபவர்களை அவர்களின் நிலையில் இருந்து பார்க்கும் தன்மை
ஜோதிடருக்கு வேண்டும் , அவர்களின் பிரச்சனைகளுக்கு சரியான
ஜாதக
ரீதியான ஆலோசனை
வழங்கும் அதி
நுட்ப
அறிவாற்றல் நிச்சயம் வேண்டும் . இதற்கு
துரியம் நன்றாக
இயங்க
வேண்டும் .
தம்மை
நாடி
வருபவர்களிடையே எவ்வித பாகுபாடு பார்க்காமல் தனது
கடமையை
சரியாக
செய்ய
வேண்டும், இது
ஜோதிடரிடம் இருக்க
வேண்டிய முக்கிய பண்பாகும் .
தம்மை நாடி வருபவர்கள் பலவித பிரச்சனைகள் , மனக்கவலை , மன போராட்டத்துடன்
வருகின்றனர் அவர்களின் மனநிலையை நன்கு உணர்ந்து தன்னம்பிக்கை தரும் உளவியல் அறிவு ஜோதிடனுக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான தனி தன்மையாகும், நமது
ஆலோசனையில் ஜாதகர் தனக்குள் இருக்கும் திறமையை நன்கு உணர்ந்து சுயமாக
வாழ்க்கையில் முன்னேற்றம் பெறவேண்டும் .
ஏனெனில் மனிதராக பிறந்த
ஒவ்வொருவருக்கும் ஒரு தனி திறமை உண்டு அதை ஜாதக ரீதியாக நாம் அறிந்து
அவர்களுக்கு உணர்த்துவது அவசியம், கடமையும் கூட .
நமது வாக்கு பலிதம் பெரும் தன்மை உண்டு ( உண்மை ஜோதிடனுக்கு ) எனவே தவறிகூட மற்றவருக்கு தீமையான பலனை சொல்லிவிட கூடாது .
மற்ற
முறையில் ஜோதிடம் கற்றுக்கொள்ள :
1 பரம்பரை பரம்பரையாக அவரது
குடும்பம் ஜோதிடத்தை தொழிலாக கொண்டு இருக்க
வேண்டும் , அப்படி
இருந்தால் தான்
அவருக்கு ஜோதிட
கலை
சிறப்பாக வரும்
. ( ஏனெனில் ஜோதிடம் பரம்பரை சொத்து
)
2 நெற்றியில் குங்குமம் சந்தானம் நிச்சயம் இருக்க
வேண்டும் அப்படி
இருப்பவர்களுக்கு மட்டுமே ஜோதிடம் நன்றாக
வரும்
. ( பார்த்தவுடன் மக்கள்
அவரை
ஜோதிடன் என்று
ஏற்றுகொள்ள இந்த
அமைப்பு நன்றாக
உதவும்
)
3 நன்றாக
சாபாரி
சூட்
அணிந்து இருக்க
வேண்டும் , காரணம்
சொல்வதை மக்கள்
அப்படியே நம்பிவிட வாய்ப்பு அதிகரிக்கும் , இத்துடன் ஆங்கிலத்தில் உரையாடும் சிறப்பான ஆற்றல்
மிகவும் நன்மை
தரும்
( துரை
இங்கிலிசெல்லாம் பேசுது
)
4 தனியார் தொலைகாட்சியில் தினமும் அரைமணி
நேரம்
பொது
மக்களுக்கு ஜோதிட
ஆலோசனை
வழங்க
வேண்டும் , முக்கியமாக பல்கலைகழகத்தில் ஜோதிடத்தில் நிறைய
பட்டங்கள் பெற்றிருக்க வேண்டும், கோட்டு
சூட்டு
அணிந்து இருப்பது முக்கியம் (பிறகு பாருங்கள் உங்களை பார்க்க மக்கள் அலைகடலென திரண்டு வந்துவிடுவார்கள் நீங்கள் என்ன சொன்னாலும் யோசிக்காமல் செய்வார்கள் )
5 நன்றாக
வாய்ஜாலம் தெரிந்திருக்க வேண்டும் இது
இல்லை
எனில்
ஜோதிடத்தில் ஒன்றும் செய்ய
இயலாது,
தம்மை
நாடி
வருபவர்கள் தலையில் தண்ணீர் தெளிக்காமல் மிளகாய் அரைக்க
தெரிந்திருக்க வேண்டும் , வந்தவர் எப்படி
போனால்
நமக்கு
என்ன
? நமக்கு
வரவேண்டியது வந்தால் சரி
!?
6 நவகிரகங்களின் சக்தியை எப்பொழுதும் நமது
சட்டை
பாக்கெட்டிலேயே வைத்திருக்க வேண்டும் அப்பொழுதுதான் வருபவர்களுக்கு , நல்ல
விலைக்கு விற்க
முடியும் , மேலும்
ஜோதிடருக்கு மட்டும் தான்
நவகிரகங்களை தனது
மாட்டு
கொட்டகையில் கட்டி
வைத்து
தீனி
போட்டு
வளர்க்க முடியும் .
7 நம்மை
நாடி
வருபவர்களுக்கு ஜாதகத்தில் சரியில்லாத ராகு
கேது , தீமை செய்யும் கிரகங்கள் அனைத்ததையும் ஜாதகத்தை விட்டே
எடுத்துவிட ஆலோசனை
கூறவேண்டும்!? அல்லது இதற்க்கு உண்டான
போலி
ரத்தினங்களை தந்து
அவர்களை சுயமாக
சிந்திக்கவே விடகூடாது , நாம்
என்ன
சொன்னாலும் கேட்பவர்கள் தானே,
நம்மை
என்ன
செய்து
விட
போகிறார்கள். முயலுக்கு மூன்று
கால்
என்றாலும் நம்புவார்கள் , முயலுக்கு காலுக்கு பதில்
வீல்
இருக்குது என்றாலும் நம்புவார்கள் .
8 பக்க
துணைக்கு கடவுள்
ஒருவரை
ஜோதிடர் வைத்து
கொள்ளலாம், இது
ரொம்ப
முக்கியம் காரணம்
ஜோதிடர்களுக்கு மட்டும் தான்
கடவுள்
அருள்
வழங்குவார் வரம் தருவார் , நேரில்
காட்சி
கொடுப்பார், கடவுள்
தரும்
அனைத்தையும் ஜோதிடர்கள் மட்டும் வாங்கி
பத்திர
படுத்தி நம்மை
காண
வரும் அன்பர்களுக்கு கொடுத்து அருள்
பாலிக்கலாம். (மேலும்
நாலு
காசுபாக்கலாம்) , இல்லை எனில்
ஒரு
எந்திரத்தை ( தகடு தகடு ) வைத்து
நான்கு
மண்டலம் பூஜை
செய்ய
சொல்லி
விடலாம் மக்கள்
மண்டை
காயட்டும் நமக்கு
என்ன
?
9 அதி
முக்கியமாக ஆக்டிவேசன் டிஆக்டிவேசன் செய்யும் அலைபேசி நிறுவனத்தில் 10 வருட
முன்
அனுபவம் இருக்க
வேண்டும் அப்படி
இருந்தால் தான்
தம்மை
நாடி
வருபவர்களுக்கு நவகிரகங்களை ஆக்டிவேசன் டிஆக்டிவேசன் செய்துவிட முடியும் . நம்மிடம் வரும் ஒருவருக்கு கூட நவகிரகங்கள் நன்மை செய்யாது ஆக அனைவருக்கும் ஆக்டிவேசன் டிஆக்டிவேசன்
செய்வது முக்கியம், அல்லது காசி ராமேஸ்வரம் என்று குடும்பத்துடன் பயணம்
மேற்கொள்ள சொல்ல வேண்டும், மேலும் கை விரல்களில் ஒன்றுவிடாமல் நவகிரக
மோதிரம் அணிய சொல்ல வேண்டும் முடிந்தால் விரலுக்கு இரண்டு ராசி கல் மோதிரம்
அணிய சொல்லாலம் .
10
முக்காலம் காலம் குறி சொல்லும் அஞ்சன மை நம்மிடம் இருப்பது அவசியம்,
அல்லது குட்டி சாத்தனை நமது வீட்டு வாயிற்படியில் கட்டி போட்டு
வைத்திருப்பது மிக மிக முக்கியம் வருபவர்களிடம் குட்டி சாத்தானை காட்டி
பயமுறுத்தலாம். ( இல்லைனா ரத்தம் கக்கி சாவாய் என மயில் சாமி கனக்காக பிலிம் காட்டலாம் ) மேலும் நம்மை நாடி வருபவர்களுக்கு கவுண்ட மணிகணக்காக ( இஸ்தலக்கடி லாலா சுந்தரி கோல கொப்பற கொய்யா ) என்ற மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரித்தால் பிறவி பயன் கிடைக்க பெறுவீர்கள் என்று சொல்லலாம்.
11 ஜோதிடராகிய நாம் மட்டும், நன்றாக ஜோதிடம் தெரிந்த ஒரு ஜோதிடரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும்.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696