அம்சம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அம்சம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

சுய ஜாதகத்தில் வலிமை பெற்றுள்ள கிரகங்கள் தனது திசாபுத்தி காலங்களில் அவயோக பலன்களை வழங்குவதேன் ?




ஜாதகத்தில் ஒரு கிரகம் வலிமை பெறுவதை நிர்ணயம் செய்வதில் பல்வேறு குழப்பங்கள் நடைமுறையில் உள்ளது, பொதுவாக ஜெனன ஜாதகத்தில் ராசியிலோ, அமசத்திலோ ஒரு கிரகம் அல்லது ஒன்றுக்கு மேற்ப்பட்ட கிரகங்ககள், ஆட்சி,உச்சம் பெற்று இருப்பது, ஆட்சி,உச்சம் பெற்ற கிரகங்களின் பார்வையை பெரும் பாவகம் மற்றும் கிரகங்கள் சுய ஜாதகத்தில் மிகவும் வலிமை பெற்றதாக கருதப்படுகிறது, மேலும் வலிமை பெற்ற கிரகங்கள் தனது திசா புத்தி காலங்களில் யோக பலன்களை, ஜாதகருக்கு நிச்சயம் வழங்கும் என்ற கருத்தும் உள்ளது, இது பெரும்பாலும் அனைவருக்கும் பொருந்துவதில்லை, ஏனெனில் சுய ஜாதகத்தில் ஆட்சி,உச்சம் பெற்ற கிரகத்தின் திசாபுத்திகள் பல ஜாதகர்களுக்கு அவயோக பலன்களை வழங்கி இருக்கிறது, பகை,நீச்சம் பெற்ற கிரகத்தின் திசாபுத்திகள் நிறைய அன்பர்களுக்கு யோக பலன்களை தங்கு தடையின்றி வழங்கி இருக்கின்றது, இந்த முரண்பாடுகள் ஏன் ? என்பதை பற்றி இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே!

சுய ஜாதகத்தில் ஒரு கிரகம் வலிமை பெறுவதை வைத்தோ, அல்லது வலிமை இழப்பதை வைத்தோ அந்த கிரகத்தின் திசாபுத்திகள் நன்மை தீமையை வழங்கும் என்று கருதுவது முற்றிலும் சுய ஜாதக கணிதத்திற்கு புறம்பானதாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது, ஒரு குறிப்பிட்ட கிரகம் ஆட்சி உச்சம் பெறுவது அந்த நாளில் பிறந்த பல அன்பர்களுக்கு சுய ஜாதகத்தில் பொருந்தி வரும், ஆனால் குறிப்பிட்ட சில நபர்களே யோக பலன்களை அனுபவிக்கின்றனர், பல அன்பர்கள் அவயோக பலன்களை ( கிரகங்கள் ஆட்சி உச்சம் பெற்று இருந்தாலும் கூட ) அனுபவிக்கின்றனர், எனவே ஒருவரது சுய ஜாதகத்தில் நடைபெறும் நன்மை தீமை பலாபலன்களுக்கு காரணமாக அமைவது, நவகிரகங்களின் ஜீவ சக்தியை பெற்று சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையே, சுய ஜாதகத்தில் பாவக வலிமையை நிர்ணயம் செய்வது சம்பந்தபட்ட ஜாதகரின் பிறந்த நேரமும்,இடமும் மிக முக்கியமாக அமைகிறது, மேலும் சுய ஜாதகத்தில் வலிமை பெரும் அல்லது வலிமை இழக்கும் பாவகங்களின் பலனையே நடைபெறும் நவகிரகங்களின் திசாபுத்திகள் ஏற்று நடத்துகிறது, சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவகத்தின் பலனை ஏற்று நடத்தும் கிரகத்தின் திசாபுத்திகள் யோக பலன்களையும், சுய ஜாதகத்தில் வலிமை அற்ற பாவகத்தின் பலனை ஏற்று நடத்தும் கிரகத்தின் திசாபுத்திகள் அவயோக பலன்களையும், ஜாதகருக்கு தங்கு தடையின்றி வழங்குகிறது, இதில் கோட்சார கிரகங்களின் சஞ்சாரம் சம்பந்தபட்ட பாவகங்களுக்கு தமது கோட்சார பலன்களையும் சேர்த்து வழங்குகிறது, எனவே சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் வலிமை பெறுவது ஜாதகருக்கு வாழ்நாளில் யோக பலன்களையும், சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் வலிமை இழப்பது அவயோக பலன்களையும் தருகின்றது.

இனி ஓர் உதாரண ஜாதகம் கொண்டு, பாவக வலிமை, வலிமை அற்ற நிலையை பற்றியும், நவகிரகங்கள் தனது திசாபுத்தி காலங்களில் ஜாதகருக்கு தரும் பலாபலன்கள் பற்றியும் சிந்திப்போம் அன்பர்களே!


ஜாதகிக்கு லக்கினம் : தனுசு 
ராசி : மேஷம் 
நட்சத்திரம் : அஷ்வினி 3ம் பாதம் 

சுய ஜாதகத்தில் வலிமை பெற்றுள்ள பாவகங்கள் :

2,5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 100% யோகத்தை 11ம் பாவக வழியில் இருந்து தரும்.

3,4ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சிறப்பான யோக பலன்களை 4ம் பாவக வழியில் இருந்து தரும்.

9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிகுந்த நன்மைகளை 9ம் பாவக வழியில் இருந்து தரும்.

6,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜீவன வழியில் சிறப்பான நன்மைகளை தரும்.

சுய ஜாதகத்தில் வலிமை அற்ற பாவகங்கள் :

1,7,12ம் வீடுகள் விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 12ம் பாவக வழியில் இருந்து ஸ்திரமான இன்னல்களை தரும்.

8ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவக்த்துடன் சம்பந்தம் பெறுவது 6ம் பாவக வழியில் இருந்து ஸ்திரமான இன்னல்களை தரும்.

மேற்கண்ட விஷயங்கள் ஜெனன ஜாதகத்தில், ஜாதகிக்கு 12 பாவகங்களின் வலிமை மற்றும் வலிமை அற்ற நிலையாகும், இனி ஜாதகிக்கு நவ கிரகங்கள் தனது திசாபுத்தி காலங்களில் எந்த பாவகங்களின் தொடர்பை பெற்று பலன்களை தருகிறது என்பதை ஆய்வு செய்வோம் அன்பர்களே !

ஜாதகிக்கு ஜெனன காலத்தில் கேது திசை 2வருடம், 7மாதம், 2நாள் நடைமுறையில் இருந்துள்ளது ( 21/03/1969 முதல் 24/10/1971 வரை ) இந்த கேது திசை ஜாதகிக்கு வலிமை பெற்ற 4,9,10 பாவக பலனை தந்து தனது பெற்றோரும், தானும் நன்மைகளையும் யோகத்தையும் பெற்றனர்.

( 24/10/1971 முதல் 24/10/1991 வரை ) நடைபெற்ற சுக்கிரன் திசை வலிமை பெற்ற 10,11ம் பாவக பலனை ஏற்று நடத்தி ஜாதகியின் கல்வி காலங்கள், வளரும் சூழ்நிலைகள், ஜீவன வெற்றிகள், அதிர்ஷ்டம் நிறைந்த யோக வாழ்க்கை, இனிமையான திருமண வாழ்க்கை என சகல அமைப்புகளில் இருந்தும் நன்மைகளை தங்கு தடையின்றி 100% விகிதம் பெற்றார்.

( 24/10/1991 முதல் 24/10/1997 வரை ) நடைபெற்ற சூரியன் திசையும் வலிமை பெற்ற 10,11ம் பாவக பலனை ஏற்று நடத்தியது, ஜாதகியின் யோக வாழ்க்கையை உறுதி செய்தது.

( 24/10/1997 முதல் 24/10/2007 வரை ) நடைபெற்ற சந்திரன் திசை ஜாதகிக்கு வலிமை பெற்ற 11ம் பாவக  வழியில் இருந்து யோகத்தையும், வலிமை அற்ற 12ம்  பாவக வழியில் இருந்து மன நிம்மதி இழப்பு, மன அழுத்தம், மன போராட்டம், வாழ்க்கை துணை வழியில் இருந்து மன உளைச்சல்களையும் வாரி வழங்க ஆரம்பித்தது.

(24/10/2007 முதல் 23/10/2014 வரை) நடைபெற்ற செவ்வாய் திசை ( ஜாதகிக்கு ராசியில் செவ்வாய் 11ம் பாவகத்தில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கின்றது ) வலிமை அற்ற 12ம் பாவக பலனை ஏற்று நடத்தியது, ஜாதகி சுயமாகவும், தனது வாழ்க்கை துணை, நண்பர்கள், கூட்டாளிகள் வழியில் இருந்து வீண் விரையங்களையும், மன போராட்டத்திற்கும் ஆளாகும் சூழ்நிலையை தந்து மிகுந்த துயரத்திற்கும் துன்பத்திற்கும் ஆளாக்கியது.

( 23/10/2014 முதல் 23/10/2032 வரை ) தற்பொழுது நடைபெறும் ராகு திசை வலிமை அற்ற 12ம் பாவக பலனையே ஏற்று நடத்துவது ஜாதகியின் வாழ்க்கையில் அளவில்லா துன்பங்களையும், வீண் விரையங்களையும், மன நிம்மதி இழப்பையும் தொடர்ந்து வழங்கி வருவது வருத்தத்திற்கு  உரிய விஷயம் மேலும், இதன் தாக்கம் ஜாதகியின் குடும்பத்தாருக்கும் அதிக அளவில் பாதிப்புகளை வாரி வழங்குவது சற்று சிரமமே.

எனவே சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெறுவது முக்கியமல்ல, வலிமை பெற்ற பாவகத்தின் பலனை நடைபெறும் திசாபுத்திகள் ஏற்று நடத்தினால் மட்டுமே  ஜாதகருக்கு யோக பலன்கள் நடைமுறைக்கு வரும், மாறாக வலிமை அற்ற பாவக பலனை மட்டுமே திசாபுத்திகள் ஏற்று நடத்தினால், சுய ஜாதகத்தில் யோகங்கள் இருந்தாலும் " குடத்தில் இட்ட விளக்கு போல் " ஜாதகருக்கு பலனற்று போகும்.

மேலும் சுய ஜாதகத்தில் நவ கிரகங்கள் ராசி,அம்சத்தில் ஆட்சி,உச்சம் பெறுவதால் ஜாதகருக்கு மிகப்பெரிய யோக பலன்கள்  நடைபெறுவதும் இல்லை, பகை, நீசம் பெறுவதால் அவயோக பலன்கள் நடைபெறுவதும் இல்லை, அவரவர் சுய ஜாதகத்தில் உள்ள பாவகத்தின் வலிமைக்கு உண்டான பலாபலன்களையே நடைபெறும் நவகிரகத்தின் திசாபுத்திகள் ஏற்று நடத்தும் என்ற உண்மையை உணர்வது அவசியமாகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வெள்ளி, 4 டிசம்பர், 2015

சுய ஜாதகத்தில் ஆட்சி உச்சம் பெற்ற கிரகங்களின் திசா புத்திகள் யோகபலன்களை வாரி வழங்குமா?


தங்களின் கேள்விக்கு ஜோதிட அன்பர்களின் கருத்து பெரும்பாலும் யோக பலன்களை வாரி வழங்கும் என்பதாகேவே இருக்கும், இந்த கேள்வி தங்களின் ஜாதகத்தை அடிப்படையாக வைத்தே கேட்கபட்டதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது, எனவே தங்களின் ஜாதகத்தையே உதாரணமாக கொண்டு விளக்கம் தருகிறோம் அன்பரே !

பொதுவாக ஒருவரின் சுய ஜாதகத்தில் நவகிரகங்கள் ஆட்சி,உச்சம் பெற்று ( ராசி அல்லது அம்சம் ) அமர்ந்து இருந்தால் ஆட்சி,உச்சம் பெற்ற கிரகத்தின் திசா புத்திகள் யோக பலன்களை வாரி வழங்கும் என்று முடிவு செய்வது மிகவும் தவறு என்றே கருதுகிறோம், பொதுவாக ஒரு ஜாதகர் யோக பலன்களை அனுபவிப்பதும், அவயோக பலன்களை அனுபவிப்பதும் சுய ஜாதகத்தில் 12 பாவகங்களின் வலிமை நிலையும், வலிமை பெற்ற பாவகத்தின் பலனை ஏற்று நடத்தும் திசா புத்திகளுமே என்றால் அது மிகை இல்லை, உதாரணமாக தங்களது ஜாதகத்தையே ஆய்வு செய்வோம் அன்பரே!



லக்கினம் : துலாம் 
ராசி : கடகம் 
நட்சத்திரம் : ஆயில்யம் 4ம் பாதம் 

தங்களது ஜாதகத்தில் நவ கிரகங்கள் ராசி அமைப்பில், சந்திரன் சனி  ஆட்சி பெற்றும், சுக்கிரன் ராகு  உச்சம் பெற்றும், சூரியன் செவ்வாய் பகை பெற்றும், குரு நட்பு நிலையிலும், புதன் சம நிலையிலும், கேது நீசம் பெற்றும் அமர்ந்து இருக்கின்றனர்.

தங்களது ஜாதகத்தில் நவ கிரகங்கள் நவாம்ச நிலையில், புதன் ஆட்சி பெற்றும், சூரியன் சனி உச்சம் பெற்றும், குரு ராகு கேது பகை பெற்றும், சந்திரன் சம நிலையிலும், செவ்வாய் சுக்கிரன் நட்பு நிலையிலும் அமர்ந்து இருக்கின்றனர்.

தாங்கள் பிறந்த பொழுது நடந்தது புதன் திசை, இந்த புதன் தங்களது சுய ஜாதகத்தில் ராசியில் சம நிலையிலும், நவாம்சத்தில் ஆட்சி பெற்றும் இருக்கின்றது எனவே தங்களுக்கு யோக பலன்களை தந்திருக்கும் என்று கணிப்பது சரியாக இருக்குமா ? நிச்சயம் இல்லை அன்பரே ஏனெனில் தங்களது லக்கினத்தை அடிப்படையாக கொண்டு 12 பாவகங்களின் வலிமை நிலையை தெளிவாக உணர்ந்தால் மட்டுமே தங்களுக்கு புதன் திசை எந்த பாவக பலனை ஏற்று நடத்தியது என்பது தெரிய வரும்.

எனவே தங்களது ஜாதகத்தில் பாவகன்களின் தொடர்புகளை அறிவது அவசியமாகிறது, அதன் அடிப்படையில் கிழ்கண்டவாரு தங்களது சுய ஜாதகத்தில் 12 பாவகங்களின் தொடர்பு நிலையும் அமைகிறது.

1,2,5,6,7,10,11,12 ம் வீடுகள் பாதக ஸ்தானமான ( சர லக்கினத்திற்கு பாதக ஸ்தானம் 11ம் பாவகம் ஆகும் ) 11ம் பாவகத்துடன் தொடர்பு.
3,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு.
4,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் தொடர்பு.

பிறப்பில் தங்களுக்கு நடந்த புதன் திசை ( ராசியில் சமம், நவாம்சத்தில் ஆட்சி ) 2,6,10,12ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவக பலனை ஏற்று நடத்தியிருக்கிறது,

அடுத்து வந்த கேது திசை ( ராசியில் நீசம்,நவாம்சத்தில் பகை ) தங்களுக்கு 4,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று 8ம் பாவக பலனை ஏற்று நடத்தியிருக்கிறது.

தற்பொழுது நடைமுறையில் உள்ள ( 23/07/2002 முதல் 23/07/2022 வரை ) சுக்கிரன் திசை ( ராசியில் உச்சம், நவாம்சத்தில் நட்பு ) தங்களுக்கு 1,5,7,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவக பலனை ஏற்று  நடத்தி கொண்டு இருக்கிறது, எனவே தற்பொழுது நடைமுறையில் உள்ள சுக்கிரன் திசை தங்களுக்கு எவ்வித பலனை தருகிறது என்பதை ஆய்வு செய்வோம் அன்பரே! மேலோட்டமாக தங்களது ஜாதகத்தை காணும் அன்பர்கள் சுக்கிரன் உச்சம் பெற்று தனது திசை நடத்துவதால் தங்களுக்கு மிகுந்த யோகமும் நன்மையையும் உண்டாகும் என்பதாக கருதக்கூடும், ஆனால் தங்களது சுய ஜாதக அமைப்பின் படி, சுக்கிரன் தனது திசையை 1,5,7,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு படுத்தி நடத்துவது வருந்தத்தக்கதே.

சுய ஜாதகத்தில் எந்த ஒரு வீடுகளும் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவது நல்லதல்ல, அப்படி தொடர்பு பெற்றாலும், நவ கிரகங்கள் தனது திசையில் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தாமல் இருந்தால் ஜாதகருக்கு நல்லது, ஆனால் தங்களது சுய ஜாதகத்தில் பிறப்பில் வந்த புதன் திசையும், தற்பொழுது நடைமுறையில் உள்ள சுக்கிரன் திசையும் தங்களுக்கு பாதக ஸ்தான பலனையே ஏற்று நடத்துகிறது.

 எனவே தாங்கள் 1,5,7,11ம் பாவக வழியில் இருந்து அதிக அளவில் சுக்கிரன் திசையில் அவயோக பலன்களை அனுபவிக்கும் சூழ்நிலை உருவாக கூடும், குறிப்பாக இலக்கின வழியில் இருந்து உடல் மனம் பாதிக்கும், 5ம் பாவக வழியில் இருந்து கற்ற கல்வியும், சிந்தனையும் அறிவு திறனும் பாதிக்கும், தனது பூர்வீகத்தை விட்டு பரதேச ஜீவனம் மேற்கொள்ளும் தன்மையை தரும், 7ம் பாவக வழியில் இருந்து நண்பர்கள் மற்றும் வெளிவட்டார பழக்க வழக்கங்களில் இன்னல்களையும், எதிர்பால் அமைப்பில் இருந்து துன்பங்களையும், 11ம் பாவக வழியில் இருந்து தன்னம்பிக்கை குறைவையும், வீண் அலைச்சல் மற்றும் அதிக போராட்டங்களையும் சந்திக்கும் சூழ்நிலையை தரக்கூடும்.

பாதக ஸ்தானம் என்பது ஒருவருக்கு 200% சதவிகித இன்னல்களை தங்குதடையின்றி வாரி வழங்கும் என்பதை கவனத்தில் கொள்வது அவசியமாகிறது, எனவே சுக்கிரன் திசை முழுவதும் தாங்கள் 1ம் பாவக வழியில் இருந்து சுய கட்டுபாடு நல்ல ஒழுக்கம் மற்றும் பழக்க வழக்கங்களை கையாள்வதும், 5ம் பாவக வழியில் இருந்து குல தேவதை வழிபாடும், எந்த ஒரு காரியத்தையும் பொறுமையாக கையாளும் தன்மையையும், 7ம் பாவக வழியில் இருந்து நண்பர்கள்,பெண்கள் மற்றும் பொதுமக்கள் என்ற அமைப்பில் எச்சரிக்கையுடனும், 11ம் பாவக வழியில் இருந்து மூடநம்பிக்கைகளை விட்டுவிட்டு தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டும், அதிர்ஷ்டத்தை நம்பாமல், தீவிர உழைப்பை நம்பி செயல்படுவதும் தங்களுக்கு சுக்கிர திசை பாதக ஸ்தான பலன்களில் இருந்து காப்பாற்றும், குறிப்பாக தனது பூர்வீகத்தை விட்டு வெகு தொலைவு சென்று ஜீவனம் செய்தாலே 90% சதவிகித இன்னல்கள் குறைந்துவிடும்.

தங்களது ஜாதகத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று திசையை நடத்துகிறது, எனவே இனி மிகுந்த யோகத்தை தரும் என்று யாரவது சொல்வதை கேட்டுக்கொண்டு தங்களது பூர்வீகத்திலேயே ஜீவனம் செய்தீர்களா என்றால், அன்றாட வாழ்க்கைக்கே திண்டாடும் சூழ்நிலையை தந்துவிடும் என்பதால், தங்களது பூர்வீகத்தை விட்டு வெளியேறி, சிறப்பாக திட்டமிட்டு வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதே புத்திசாலித்தனம்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696