நவகிரகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நவகிரகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 29 நவம்பர், 2014

ஆதார் அடையாள அட்டையும், சுய ஜாதகத்தில் பாவகத்தின் தன்மைகளும் !


ஆதார் அடையாள அட்டை என்பது இந்திய குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் அடையாள எண் தாங்கிய அட்டை ஆகும். இந்த அட்டையில் கண்ணின் விழித்திரை, கைரேகை போன்ற உயிரியளவுகளும், இவற்றுடன் சேர்த்து பெயர், முகவரி, பிற சுய குறிப்புகளும், புள்ளி விவரங்களும் உள்ளீடு செய்யப்படும். பிற அடையாள அட்டைகளிளுருந்து முற்றிலும் தனிப்பட்டதாக வடிவைக்கப் பட்டுள்ளது. இந்திய அரசால் 12 இலக்க எண் பொறித்த அட்டையாக வழங்கப்படும்.

சுய ஜாதகம் என்பது 12பாவகங்களுடன்12 இலக்க எண் பொறித்த அட்டையை போல் தனிப்பட்ட வலிமையுடன் ) இறை அருளால், ஒவ்வொருவரும் தாம் செய்த வினை பதிவிற்கு ஏற்றார் போல் 12 பாவக அமைப்பில் இருந்து பாவக வலிமை மற்றும் சிறப்பு தன்மை என்ற அடிப்படையில் வழங்கபடுகிறது, எப்படி ஒரு நபருக்கு ஆதார் அடையாள அட்டையில் உள்ள விபரங்கள் மற்ற ஒருவருக்கு ஒத்து போகாதோ, அதை போன்றே ஒருவரின் ஜாதகத்தில் உள்ள பாவகத்தின் தன்மை மற்ற ஒருவருக்கு ஒத்து போகாது, ஆதார் அடையாள அட்டையில் உள்ள பொதுவான விஷயங்களான கண்ணின் விழித்திரை, கைரேகை,பெயர், முகவரி, பிற சுய குறிப்புகள்,புள்ளி விவரங்கள் ஆகியவை அனைவருக்கும் பொதுவாக இருப்பது போல், நவகிரகங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரே விதமான அமைப்புடன், தனது ஜீவ சக்தியை வழங்குகிறது, மேற்கண்ட குறிப்புகளான கண்ணின் விழித்திரை, கைரேகை,பெயர், முகவரி, பிற சுய குறிப்புகள்,புள்ளி விவரங்கள் ஒவ்வொருவருக்கும் வித்தியாசம் பெறுவது போல், சுய ஜாதகத்தில் 12 பாவகங்களும் வலிமை மற்றும் வலிமை அற்ற நிலை என்ற அமைப்பில் வித்தியாசபடுகிறது. எனவே நவகிரகங்கள் பூமியில் ஜெனனம் செய்யத மனிதர்கள் அனைவருக்கும், ஒரே மாதிரியான ஜீவ காந்த சக்தியையே தருகிறது, மனிதர்களின் சுய ஜாதகத்தில் உள்ள பாவகங்கள் தனது கொள்ளளவுக்கு ஏற்றவகையில் கிரகங்களின் ஜீவசக்தியை பெற்று ஒரு ஜாதகருக்கு தனது பாவக வழியில் இருந்து யோக பலன்களையோ, அவயோக பலன்களையோ வாரி வழங்குகிறது.

அன்பர்களே மேற்கண்ட உதாரணம் எதற்காக என்பதை தங்களுக்கு ஜோதிடதீபம் விளக்கம் தர கடமைபட்டுள்ளது, மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு மனிதர்களுக்கும் அவர்களது சுய ஜாதக வலிமைக்கு ஏற்றார் போலவே வாழ்க்கையில் பலாபலன்கள் நடைபெறுகிறது என்பதை தெளிவு படுத்தவே, ஒரு வேலை தாங்கள் ஒரே மாதிரியான ஜாதகம் எம்மிடம் உள்ளது என்றால் எங்களுக்கு தெரியபடுத்துங்கள், அப்படி பட்ட ஜாதகங்கள் பாவக அமைப்பில் எப்படி தனித்துவம் பெறுகிறது என்பதை ஜோதிடதீபம் தங்களுக்கு உண்மையான விளக்கத்தை தர கடமைபட்டுள்ளது, ஒருவரின் ஜாதகத்திற்கு ஜோதிட ரீதியாக கணிதம் கொண்டு பலன் காண முற்படும் பொழுது, அவர்களது ஜாதகத்தில் பாவகத்தின் தன்மை அறிந்து ஜாதக பலன்களை கூறுவதே மிக துல்லியமாக இருக்கும், ஏனெனில் ஒட்டி பிறந்த இரடையர்கள் ( சில வினாடிகள் வித்தியாசத்தில் ) ஜாதகத்தில் கூட பாவகங்களின் தன்மை வித்தியாசம் பெறுகிறது என்பதை, அந்த ஜாதகத்தில் பாவக வலிமையை ஜோதிட கணிதம் கொண்டு நிர்ணயம் செய்யும் பொழுது நமக்கு மிக தெள்ள தெளிவாக புரியும்.

நவகிரகங்கள் மனித ஜீவன்களுக்கு தரும் ஜீவகாந்த சக்தி என்பது பொதுவானது, ஆனால் ஜாதகத்தில் 12 பாவகங்களின் வலிமை என்பது ஒவ்வொருவருக்கும்  நிச்சயம் வித்தியாசம் பெரும் என்பதை எவராலும் மறுக்க இயலாது, உண்மையும் அதுதான், பொதுவாக ஒருவரின் ஜாதகத்தை காணும் ஜோதிடர்கள், இதற்க்கு முன் வாழ்ந்த ஜாதகர்களுக்கு ஒப்பிட்டு பலன் சொல்வதுண்டு, இது உண்மைக்கு புறம்பானது ஏனெனில் ஒருவரது ஜாதகத்தில் உள்ளதுபோல் நவகிரகங்கள் அமர்ந்து இருக்கலாம், ஆனால் பாவக வலிமை என்பது நிச்சயம் ஒருவருக்கு இருப்பதை போல் மற்றவருக்கு இருக்க வாய்ப்பில்லை என்பதே முற்றிலும் உண்மை, பாவக வலிமை என்பது இறையருள் அவருக்கு கொடுக்கும் தனிப்பட்ட அடையாளமாகவே ( ஆதார் அடையாள அட்டையை போல் ) இருக்கும் என்பதை ஜோதிடதீபம் இந்த இடத்தில் ஆணித்தரமாக வலியுறுத்துகிறது, இதற்க்கு தங்களின் விமர்சனங்கள் வரவேற்க படுகிறது, ஒருவரது ஜாதகத்தை போல் மற்றொருவருடைய ஜாதகத்தை தாங்கள் ஜோதிட தீபத்திற்கு காட்டி விளக்கம் தந்து நிருபித்து விட்டால் அவர்களுக்கு ஜோதிடதீபம் 5000/- ரூபாய் பரிசாக தருகிறது என்று உறுதி அளிக்கிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


புதன், 24 செப்டம்பர், 2014

ஒருவரின் சுய ஜாதகத்தில் யோக அவயோக பலன்களை வழங்குவதும், ஜாதகத்தை ஆளுமை செய்வதும் நவ கிரகங்களா ? பனிரெண்டு பாவகங்களா ?



சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதும், யோக அவயோக பலன்களை வழங்குவதும் லக்கினம் முதற்கொண்டு 12 பாவகமே இதில் எவ்வித சந்தேகமும் இல்லை அன்பர்களே!

 பொதுவாக பாரம்பரிய ஜோதிடத்தில் பலன் காண வரும் அன்பர்களுக்கு, சுய ஜாதகத்தில் ராசி நிலையில் நவகிரகங்கள் ஆட்சி, உச்சம், நட்பு நிலைகளில் இருக்கும் அமைப்பை பார்த்தவுடன், ஆட்சி, உச்சம், நட்பு நிலைகளில் இருக்கும் கிரகங்கள் யோக பலன்களை வாரி வழங்குவது போலவும், பகை,நீசம் போன்ற நிலைகளில் அமரும் கிரகங்கள் அவயோக பலன்களை தருவது போலவும் ஒரு மாய தோற்றத்தையே ஜோதிடர்கள் உருவாக்கி வைத்துள்ளனர், இது முற்றிலும் தவறான ஒரு அணுகு முறையே.

 மேலும் இந்த கருத்தை நாம் ஆமோதிக்கிறோம் என்று வைத்து கொண்டாலும், ஆட்சி உச்சம் பெற்ற கிரகம் இரட்டையர்கள் ஜாதகத்தில் ஏன்?  மாறுபட்ட பலன்களை தருகிறது, குறிப்பாக இரண்டரை வருடம் துலாத்தில் உச்சம் பெரும் சனிபகவான் அந்த இரண்டரை வருடம் பிறக்கும் அனைவருக்கும் யோக பலன்களையே வாரி வழங்குகிறார்? 

 இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டும் எனில் பிரபஞ்சத்தில் குறிப்பிட்ட நீள்வட்ட பாதையில் சஞ்சாரம் செய்யும் நவகிரகங்கள் பூமியின் மீது வாழும் ஜீவன்களுக்கு எவ்வித பாகுபாடும் இன்றி தனது காந்த அலைகளை செலுத்தி கொண்டு இருக்கிறது, இதில் பாமரன் முதல் பாராளும் அரசன் வரை அனைவருக்கு ஒரேவிதமான காந்த அலைகளின் ஜீவ கலப்பே ஏற்ப்படுகிறது, நீ ஒரு நாட்டின் மன்னன் எனவே உனக்கு நான் தனிப்பட்ட முறையில், அதி சக்தி வாய்ந்த காந்த அலைகளை அனுப்புகிறேன், நீ ஒரு சாதாரண கூலி தொழிலாளி உனக்கு சக்தி வாய்ந்த காந்த அலைகளின் தன்மையை மிக குறைவாக தருகிறேன் என்று எந்த ஒரு கிரகமும் சொல்வதில் என்பதை கருத்தில் கொள்வது நலம் அன்பர்களே!

 இதில் சாய கிரகமான ராகு கேதுவிற்கு மட்டும் விதி விளக்கு உண்டு, எப்படி எனில் தான் அமர்ந்த பாவகத்தை தனது கட்டுப்பட்டிற்குள் கொண்டுவரும் தன்மை 100% ராகு கேது கிரகத்திற்கு உண்டு மற்றபடி ஒருவரின் சுய ஜாதகத்தில் மற்ற கிரகங்கள் தனிப்பட்ட ஆளுமையை செய்ய இயலாது என்பதே ஜோதிடதீபத்தின் கருத்து, தான் செய்த வினை பதிவிற்கு ஏற்ப ஒருவரின் ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெற்றோ, வலிமை இழந்தோ இறை அருளால் நிர்ணயிக்க படுகிறது, இதன் அடிப்படையில் நவகிரகங்கள் தனது காந்த அலைகளை ஜாதகரின் 12 பாவக அமைப்பில் இருந்து நடைமுறை படுத்துகிறது.

இதில் வலிமை பெற்ற பாவகத்தின் அமைப்பில் இருந்து ஜாதகர் யோக பலன்களையும், வலிமை இழந்த பாவகத்தின் அமைப்பில் இருந்து ஜாதகர் அவயோக பலன்களையும் நவகிரகங்களின் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சம அமைப்பில் பெறுகிறார், கோட்சார கிரகங்கள் இயக்க நிலைக்கு ஏற்ப ஜாதகர் யோக அவயோக பலன்களையும் அனுபவிக்கும் தன்மையை தருகிறது.

ஒருவரின் பிறந்த நேரம்,இடம்,தேதி ஆகியவை 12 பாவகங்களின் வலிமையை நவ கிரகங்கள் நிலை உணர்ந்து நிர்ணயம் செய்யபடுகிறது, இதன் பிறகு பாவக வலிமைக்கு ஏற்ப ஜாதகருக்கு யோக அவயோக பலன்களை நடைமுறைக்கு கொண்டு வருகிறது, ஒரே நாளில் ஒரே இடத்தில் சில வினாடிகள் வித்தியாசத்தில் பிறந்தவர்களின் ஜாதக பலன்கள் வேறுபடுவதற்கு, பாவகத்தின் வலிமையின் நிலையே என்றால் அது மிகையில்லை அன்பர்களே! எனவே ஒருவர் யோக அவயோக பல்னகளை பெறுவது ஜாதகரின் பாவக வலிமையே 100% சதவிகிதம் நிர்ணயம் செய்கிறது.

இதில் ஒருவரின் ராசியோ, நட்சத்திரமோ, நவகிரகன்களோ தனிப்பட்ட முறையில் யோக அவயோக பலன்களை வாரி வழங்குவதில்லை அன்பர்களே! நவகிரகங்கள் பூமியில் ஜீவிக்கும் ஜீவன்கள் அனைத்திற்கும் ஒரே விதமான காந்த அலைகளையே வழங்குகிறது, இதில் அவரவர் பிறந்த நேரத்திற்கு ஏற்ப்பவும், கிரகங்கள் வழங்கும் காந்த அலைகளை பெற்று கொள்ளும் பாவகங்களின் நிலைக்கு ஏற்ப்பவும் நன்மை தீமை பலன்களை அனுபவிக்கின்றன.

 எனவேதான் ஜோதிடதீபம் ஒவ்வொருவரின் சுய ஜாதகத்தில் பாவக வலிமையை பற்றி முன்னிறுத்தி பேசுகிறது, சுய ஜாதகத்தில் 12 பாவகமும் வலிமை பெற்று இருப்பின், ஜாதகர் 12 பாவக வழியில் இருந்து மிகுந்த  யோக பலன்களை பெறுகிறார், மேலும் கோட்சார ரீதியான கிரகங்களின் காந்த அலைகளை  பெரும் பாவகங்கள் மேலும் வலிமை அடைந்து ஜாதகருக்கு யோக பலன்களை உறுதி செய்கிறது, இதற்க்கு மாறாக பாவகங்கள் வலிமை இழந்து காணப்படும் ஜாதகர், வலிமை இழந்த பாவக வழியில் இருந்து அதிக இன்னல்களுக்கும் துன்பத்திற்கு ஆளாகும் சூழ்நிலையை தரும்.

ஜோதிடம் காண்பதே ஒருவரின் ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவகங்கள் எவையெவை, வலிமை இழந்த பாவங்கள் எவையெவை என்பதை உணர்ந்து பாதிக்க பட்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்கவும், பாதிக்கபட்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை ஏற்றுகொள்ளும் மனபக்குவத்தை வளர்த்துக்கொள்ளவும், அல்லது பாதிக்க பட்ட பாவகங்களின் வலிமையை இறை நிலையில் அமைப்பில் இருந்து பெற்று கொள்ளவுமே, எனவே சுய ஜாதகம் ஒருவரின் வாழ்க்கை பற்றிய தெளிவும், தனது வாழ்க்கையை சிறப்பாக அமைத்து கொள்ள உறுதுணையாக அமையும்.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696