துலாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
துலாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 1 மார்ச், 2019

ராகு கேது பெயர்ச்சி தரும் யோக வாழ்க்கை : துலாம் லக்கினம் ( 2019-2020 )


 துலா லக்கின அன்பர்கள் சகல சௌபாக்கியங்களையும் பரிபூர்ணமாக பெரும்  நேரமிது, நவகிரகங்களில் மிகவும் வலிமை பெற்றதும், சாயாகிரகங்கள் என்று போற்றப்படுவதுமான ராகு கேது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமான மிதுன ராசியிலும், பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியிலும் இனி வரும் 18 மாதங்களில் சஞ்சாரம் செய்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு தனது சஞ்சார நிலையில்  இருந்து வழங்கும் யோக அவயோக பலாபலன்கள் பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!

 லக்கினம் : துலாம் 

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு களத்திர ஸ்தானமாகவும், சர காற்று ராசியாகவும் விளங்கும் துலாம் ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்திலும், வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகங்கள் இனிவரும் 18 மாதங்கள் வழங்கும் பலாபலன்கள் பற்றி இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே, ராகுவின் சஞ்சாரம் பாக்கிய ஸ்தானத்தில் அமைவது மிகசிறந்த யோக பலன்களை தரும் என்ற போதிலும், புதன் கோணாதிபதியாக சூரியனுடன் 14 பாகைக்கு மேல் சேராமல் சஞ்சாரம் செய்யும் நிலையில் மட்டுமே சுபயோக பலாபலன்கள் துலா லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும். தனது அறிவு திறன் கொண்டு வாழ்க்கையில் வரும் இன்னல்களை வெகு எளிதாக கடந்து செல்லும் வாய்ப்பை தரும், தன்னம்பிக்கை அதிகரிக்கும், முயற்சிக்கும் காரியங்கள் இறை அருளின் கருணையினால் சிறப்பான வெற்றிகளை வாரி  வழங்கும், உயர் கல்வி சார்ந்த விஷயங்களில் எதிர் பாராத நன்மைகளையும் பாராட்டு மற்றும் பரிசுகளையும் பெறுவதற்கான வாய்ப்பை வாரி வழங்கும், முன்னோர்கள் ஆசிர்வாதம், பெரியமனிதர்கள் ஆதரவு, மக்கள் செல்வாக்கு, பிரபல்ய யோகம், பல ஆன்மீக திருத்தலங்களுக்கு சென்றுவரும் வாய்ப்பு, சரியான வழியில் வாழ்க்கையில் முன்னேற்றங்களை பெரும் தன்மை, அதீத போராட்டங்களை கடந்து சிறப்பான யோக வாழ்க்கையை பெரும் தன்மை, நல்ல மனிதர்களின் சேர்க்கை, ஆன்மீக பெரியோர்களின் சந்திப்பு, அவர்கள் வழியிலான வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள், புதுவித சிந்தனைகளின் வழியில் சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளும் தன்மை என முழு அளவில் நன்மையான பலன்கள் நடைமுறைக்கு வரும், பயணங்கள் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம், எதிர்பாராத சந்திப்புகள் மூலம் நலம் பெரும் தன்மை, அந்நியர் மற்றும் மேல்நாட்டினர் மூலம் வழியில் இருந்து பெரும் ஆதாயம் என ராகுவின் சஞ்சாரம் சுபயோகங்களை வாரி வழங்கும்.

 அதே சமயம் புதன் கேந்திர அதிபதியாக 14 பாகைக்குள் சஞ்சாரம் செய்யும் நிலையில்  துலா லக்கின அன்பர்களுக்கு சற்று இன்னல்களை வெகுவாக தரக்கூடும், குறிப்பாக பெயருக்கு களங்கம் ஏற்படும் விதத்தில் செயல்படுவதை தவிர்ப்பது நல்லது, பெரியோர்களை மதித்து நடப்பதும், அவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதும் சிறப்பான நன்மைகளை தங்களுக்கு வாரி வழங்கும், முறையான பித்ரு காரியங்களை மேற்கொண்டு அவர்களின் ஆசியின் மூலம் நன்மைகளை சுவீகரிப்பது அவசியமாகிறது, மிக சிறந்த ஆன்மீக திருத்தலங்களுக்கு சென்று முறையான நிவர்த்தி பரிகாரங்களை மேற்கொண்டு சகல சௌபாக்கியங்களையும் பெற "ஜோதிடதீபம்" அறிவுறுத்துகிறது.

 வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் கேது பகவான் துலாம் லக்கின அன்பர்களுக்கு இனிவரும் 18 மாதங்கள் தான் சஞ்சரிக்கும் 3ம் பாவக வழியில் இருந்து மிதமிஞ்சிய சுபயோகங்களை வாரி வழங்குவார் என்பதில்  சந்தேகம் இல்லை, எடுக்கும் காரியங்கள் யாவும் வெற்றி மேல் வெற்றி தரும், வியாபார துறையில் உள்ள அன்பர்களுக்கு இது ஒரு யோக காலமாக கருதலாம், தெய்வீக சிந்தனை மேலோங்கும், கமிஷன் அல்லது தரகு வழியில் ஜீவனம் மேற்கொள்ளும் அன்பர்களுக்கு திடீர் யோக வாழ்க்கை அமையும், எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும், லட்சியம் மற்றும் அபிலாசைகள் அனைத்தும் கைகூடி வரும் சுபயோக நேரமிது, புதிய சிந்தனைகள் அறிவார்ந்த செயல்பாடுகள் அனைத்தும் தங்களுக்கு வெகுவாக கைகொடுக்கும், சகோதர வழி ஆதரவு, உறவுகள் வழியில் இருந்து வரும் உதவிகள் என ஒவ்வொரு நாளும் தங்களுக்கு வெகு சிறப்பான நன்மைகளையும், முன்னேற்றங்களையும் பரிபூர்ணமாக வாரி வழங்கும், இதுவரை இல்லாத அதிர்ஷ்ட வாழ்க்கையை அனுபவிக்கும் யோகம் உண்டாகும், கல்வி துறையில் அரசு பணியில் உள்ள அன்பர்களுக்கு எதிர்பாராத நன்மைகளும் முன்னேற்றங்களும் கிடைக்க பெறுவார்கள், வியாபாரிகளுக்கு லாபம் பன்மடங்கு கூடி வரும், புதிய தொழில் செய்வோருக்கு இனிவரும் காலம் மிகுந்த சிறப்புக்களையும், அதிர்ஷ்டம் நிறைந்த நல்ல வாய்ப்புக்களையும் வாரி வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்பதனால் முயற்சித்து சகல சௌபாக்கியங்களையும் பரிபூர்ணமாக பெறுங்கள்.

தகவல் தொழில் நுட்பம், உயர் கல்வி, பட்டய படிப்பு என துலா லக்கின  அன்பர்களுக்கு கேது பகவானின் சஞ்சாரம் வெகுவான சிறப்புகளை வாரி வழங்கும், புதிய யுக்தியை கையாண்டு குறுகிய காலத்தில் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றங்களை பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும், சுய அறிவு வெகுவாக பிரகாசிக்கும், பல தொழில் செய்யும் யோகம் உண்டாகும், நல்லவர்கள் சேர்க்கை தங்களின் வாழ்க்கையில் வெகுவான நன்மைகளை வாரி வழங்கும், உயர் ரக தொழில் நுட்பம் சார்ந்த உபகரணங்கள் மூலம் அதீத லாபம் உண்டாகும், வெளிநாடுகளில் இருந்துவரும்  பொருட்கள் மூலம் நல்ல லாபம் உண்டாகும், ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்யும் அன்பர்களுக்கு மிதம் மிஞ்சிய லாபம் கிட்டும், சுய உழைப்பிற்க்கான பாராட்டுதல்கள் ஊக்குவிப்பு தங்களுக்கு பரிபூர்ணமாக கிடைக்கும், எழுத்து சார்ந்த துறை பத்திரிக்கை துறையில் உள்ள அன்பர்களுக்கு சீரிய முன்னேற்றம் உண்டாகும், கேது பகவானின் வீரிய ஸ்தான சஞ்சாரம் துலா லக்கின அன்பர்களுக்கு சாதிக்க இயலாதது எதுவும் இந்த உலகில் இல்லை என்பதை உறுதி செய்து வெற்றியாளனாக பரிணமிக்க செய்யும் அன்பர்களே, வாழ்த்துக்கள்.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 9,3ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக, அவயோக பலாபலன்கள் துலா லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும், நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 9,3ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் மேற்கண்ட சாயா கிரகங்களின் சஞ்சார நிலையின் வழியில் இருந்து துலா லக்கின அன்பர்களுக்கு யாதொரு நன்மை தீமையையும் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்க...

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

ஞாயிறு, 14 ஜனவரி, 2018

சுய தொழில் செய்யலாமா ? எதிர்காலம் தொழில் ரீதியாக சுபயோகங்களை வழங்குமா ?



கேள்வி :

எனது ஜாதகம் சுய தொழில் செய்ய ஏற்ற ஜாதகமா ? கூட்டு தொழில் சிறப்பை தருமா ? எதிர்வரும் சூரியன் திசை மற்றும் சந்திரன் திசை எவ்வித பலாபலன்களை தரும் ?

பதில் :

 ஒருவரின் சுய ஜாதகத்தில் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமான மகர ராசி வலிமை பெற்று, 1,4,7,10ம் வீடுகள் வலிமை பெற்ற பாவக தொடர்பை பெற்று இருப்பின் ஜாதகர் சுய தொழில் செய்ய அதீத வல்லமை உடையவர் என்பது தெளிவாகும், மேலும் லாப ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகர் தான் செய்யும் தொழில் வழியிலான நன்மைகளை பரிபூர்ணமாக பெறுவதற்கான வாய்ப்புகளை நல்கும், பூர்வ புண்ணியம் வலிமை பெறுவது ஜாதகரின் தொழில் ரீதியான வெற்றிகளை சமயோசித அறிவாற்றலுடன் உறுதியாக பெறுவார் என்பதை தெளிவு படுத்தும், 6,8,12ம் வீடுகள் வலிமை பெறுவது ஜாதகர் தாம் செய்யும் தொழில் வழியிலான பொருளாதார முன்னேற்றங்களை அபரிவிதமாக பெறுவதை உறுதி செய்யும், 3,9ம் வீடுகள் வலிமை பெறுவது ஜாதகர் தாம் செய்யும் தொழிலில் எடுக்கும் உறுதி மிக்க செயல்களையும், முடிவு எடுக்கும் விஷயங்களில்  சிறப்பான செயல்திறனையும், அதீத லாபம் பெறுவதற்கான திட்டமிடுதல்களையும், தொழில் வழியிலான நற்ப்பெயர், நீடித்த தொழில் வாய்ப்புகள் தலைமுறை கடந்த தொழில் வெற்றிகளை உறுதி செய்யும், 2ம் வீடு வலிமை பெறுவது ஜாதகருக்கு வரும் வருமான வாய்ப்புகளையும், பொருளாதார ஸ்திர தன்மையையும் உறுதி படுத்தும், ஒருவர் தொழில் வழியிலான மிகப்பெரிய வெற்றிகளை பெற மேற்சொன்ன பாவாக வலிமைகளை கொண்டிருப்பது அவசியமாகிறது, ஆனால் இது அனைவருக்கும் சாத்தியமல்ல, எனவே சுய ஜாதகத்தில் கேந்திர கோணங்கள் வலிமை பெற்று இருப்பதுடன் நடைபெறும் திசா புத்தி எதிர்வரும் திசா புத்தி வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் அன்பர்கள் சுய தொழில் செய்வதால் நிச்சயம் சிறப்பான வெற்றிகளை பெற இயலும்.


லக்கினம் : மிதுனம் 
ராசி : விருச்சிகம் 
நட்ஷத்திரம் : அனுஷம் 4ம் பாதம் 

தங்களது சுய ஜாதக அமைப்பின் படி 1,3,5,9,10,11ம் வீடுகள்  மிகவும் வலிமையுடன் காணப்படுகிறது, 4ம் வீடு வலிமையுடனும், 2,6,7,12ம் வீடுகள் வலிமை அற்றும், 8ம் வீடு கடுமையான பாதிப்புடனும் இருப்பது தங்களின் சுய ஜாதக வலிமை நிலையாகும், தங்களின் முதல் கேள்விக்கான பதில் தாங்கள் நிச்சயம் சுய தொழில் செய்யலாம், ஏனெனில் சுய ஜாதகத்தில் 1,4,7,10ம் வீடுகளில் 7ம் வீட்டை தவிர மற்ற வீடுகள் வலிமை பெற்ற பாவக தொடர்பை பெறுவது சிறப்பான ஜீவன யோகத்தை நல்கும் 7ம் வீடு பாதிப்பது தங்களுக்கு கூட்டு தொழில் சிறப்பாக அமையாது என்பதுடன் வியாபாரம் சார்ந்த தொழில்களும் சற்று சிரமத்தை தரக்கூடும் என்பதை தெளிவுபடுத்துகிறது.

சுய ஜாதகத்தில் நெருப்பு தத்துவ ராசியான மேஷமும், காற்று தத்துவ ராசியான துலாமும் மிகவும் வலிமையுடன் இருப்பதால் தாங்கள் தொழில் நுட்பம் அல்லது அறிவார்ந்த தொழில்களில் மிகப்பெரிய வெற்றிகளை பெற இயலும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

கூட்டு தொழில் சிறப்பை தருமா ?

நிச்சயம் வாய்ப்பில்லை ஏனெனில் சுய ஜாதகத்தில் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு  7ம் ராசியான துலாம் வலிமை பெற்ற போதிலும் அது வாழ்க்கை துணை  வழியிலான நன்மைகளை மட்டுமே நடைமுறைக்கு கொண்டுவரும், கூட்டு தொழில் செய்வதற்கு உண்டான களத்திர ஸ்தான வலிமை என்பது தங்களுக்கு சிறிதும் இல்லை என்பதை கருத்தில் கொள்வது தங்களது தொழில்  மேன்மைக்கு சிறப்பான வெற்றிகளை தரும்.

 எதிர்வரும் சூரியன் திசை மற்றும் சந்திரன் திசை எவ்வித பலாபலன்களை தரும் ?

சூரியன் திசை தங்களுக்கு 5ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் பூர்வபுண்ணிய ஸ்தான பலனை  ஏற்று நடத்திடுவது, தங்களின் அறிவார்ந்த முயற்சிகளுக்கு கிடைக்கும் மாபெரும்  வெற்றிகளை குறிக்கின்றது, தெய்வீக அனுக்கிரகத்தால் கலைகளில் தேர்ச்சி, புத்திசாலித்தனத்தால் ஆதாயம், பெற்ற குழந்தைகள் வழியிலான யோக வாழ்க்கை, விரைவான பொருளாதார முன்னேற்றம், சுய சிந்தனை மூலம் பூர்வீகத்தில் யோக வாழ்க்கையை பெரும் அமைப்பு என எதிர்பாராத பரிபூர்ண நன்மைகளை தர சூரியன் திசை தங்களுக்காக காத்துகொண்டு இருக்கின்றது, அதற்க்கு அடுத்து வரும் சந்திரன் திசை சுக ஸ்தான வழியில் இருந்து சுகபோக யோக வாழ்க்கையை தன்னிறைவாக வாரி வழங்க தயார் நிலையில் இருப்பது தங்களின் வெற்றிகரமான யோக வாழ்க்கைக்கு கட்டியம் கூறுகிறது என்பதை தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை, வாழ்த்துக்கள்.

குறிப்பு :

சுய ஜாதகத்தில் நிதி நிலையை சிறப்பிக்கும் 2,6,7,8,12ம் வீடுகள் பாதிக்கப்படுவது தங்களின் நிதி மேலாண்மையை கடுமையாக பாதிக்கும், எனவே நிதி நிலை சார்ந்த மேலாண்மையை தெளிவாக கற்றுணர்ந்து சுய தொழில் செய்வதே சிறப்பான நன்மைகளை தரும் அதிர்ஷ்டம் உள்ளது என்ற போதிலும் நிதி மேலாண்மை இல்லை எனில் யாதொரு பலாபலனும் முழுமை பெறாது என்பதை கருத்தில் கொள்க, மேலும் 8ம் வீடு கடுமையாக பாதிக்கப்படுவது மற்றவர்களை நம்பி அதிக முதலீடுகளை செய்வது தங்களின்  தொழில் வாழ்க்கைக்கு தாங்களே மூடுவிழா நடத்துவதற்கு நிகரான பலாபலன்களை வழங்கிவிடும் என்பதை கருத்தில் கொள்க.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 9 மே, 2017

சுய ஜாதகம் என்றால் என்ன ? சுய ஜாதகத்தால் நமக்கு என்ன பயன் ? ( வலிமை பெற்ற சுயஜாதகம் )



சுய ஜாதகம் வலிமை பெறுவது என்பது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு, அவரது வாழ்க்கையில் வலிமை பெற்ற பாவக வழியிலான சுபயோகங்களை ஸ்திரமாக பெற்று தரும், லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் சுய ஜாதகத்தில் வலிமை பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளையும் சுப யோகங்களையும் வாரி வழங்கும், வலிமை பெற்ற சுய ஜாதகம் ஜாதகருக்கு வழங்கும் சுப யோகங்களை பற்றி ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !

அதற்க்கு முன் ஒருவரது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் வலிமை பெறுவது, ஜாதகருக்கு எப்படி சுப யோகங்களை வாரி வழங்குகிறதோ? அதை போன்றே சுய ஜாதகத்தில் சில பாவகங்கள் மட்டும் வலிமை பெற்று இருந்தாலும், ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக பலனை மட்டும் நடைபெறும் திசாபுத்திகள் ஏற்று நடத்தினாலும், ஜாதகருக்கு சுப யோக பலன்களே நடைமுறைக்கு வரும், மேலும் பாதிக்கப்பட்ட பாவக வழியிலான இன்னல்களை ஜாதகர் எதிர்கொள்ளும் சூழ்நிலை வர வாய்ப்பில்லை என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், எனவே சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெறுவது மட்டுமே சிறப்பான நன்மைகளை ஜாதகருக்கு தந்துவிடாது, நடைபெறும் திசாபுத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக வழியிலான நன்மைகள் நடைமுறைக்கு வரும்.


லக்கினம் : தனுசு
ராசி : துலாம்
நட்ஷத்திரம் : விசாகம் 1ம் பாதம்

ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

1,3,4,6,9,10,12ம் வீடுகள் வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 1ம் பாவக வழியில் இருந்து சிறந்த மனநிலை, தைரியம், ஆர்வம், வீரியமிக்க செயல்திறன், உடல் வலிமை மனவலிமை, பயணம் மூலம் லாபம், சகோதர வழியிலான ஆதரவு, அனைவருடன் இணக்கமாக பழகும் தன்மை, அனைவரின் ஆதரவு மற்றும் உதவிகளை பெறுதல், முற்போக்கு சிந்தனை, நீண்ட ஆயுள், வலி தாங்கும் தன்மை, விரைவில் குணம் பெரும் உடல் அமைப்பு, செய்யும் காரியங்களில் பாதுகாப்பு துறையில் பணியாற்றும் யோகம் என்ற வகையில் நன்மைகளை தரும்.

3ம் பாவக வழியில் இருந்து செல்வசெழிப்பு, எதிரிகளை வெல்லும் தன்மை, நல்ல மனநிலை, சிறப்பாக சிந்திக்கும் ஆற்றல், சத்தியத்தை மதித்தல், தைரியம், பயணங்களில் விருப்பம், கல்வியில் ஆர்வம், மாற்றம் மற்றும் புதிய சூழ்நிலைகளில் விருப்பம், ஏஜென்சி துறையில் நல்ல வெற்றி வாய்ப்புகள், அறிவுபூர்வமான செயல்பாடுகள், தகவல் தொழில் நுட்ப துறையில் வெற்றி வாய்ப்புகள், தன்னம்பிக்கை குறையாத மனநிலை, நினைத்ததை சாதிக்கும் வல்லமை, மக்கள் ஆதரவு, எதிர்ப்புகள் அற்ற யோக வாழ்க்கை, என்ற வகையில் சுப யோகத்தை தரும்.

4ம் பாவக வழியில் இருந்து மனநிலையில் தெளிவு,  ஞாபக சக்தி மற்றும் நுண்ணறிவு பாதிப்பு, வீடு வண்டிவாகனம் பாதிப்பு, அடிக்கடி மாற்றுதல், கால்நடைகள் மூலம் விரையம், பயணம் மூலம் பாதிப்பு, அமைதியின்மை, பேரம் மாறும் மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுப்பதால் நஷ்டம், மற்றவர்கள் விஷயங்களில்  தலையீடு செய்வதால் இன்னல்கள்  என்ற வகையில் சிரமங்களை தந்த போதிலும், நல்ல குணம் அமையும், அறிவு திறன் மூலம் தனது  பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் யோகம் உண்டாகும்.

6ம் பாவக வழியில் இருந்து சிறு சிறு அதிர்ஷ்ட வாய்ப்புகள், ஏஜென்சி மற்றும் காண்ட்ராக்ட் விஷயங்களில் லாபம், உடல் நிலையில் நல்ல முன்னேற்றம், எதிர்ப்புகள் நன்மையை தரும், எதிரிகளால் செல்வாக்கு உண்டாகும், சகல சௌபாக்கியம் மற்றும் திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும், தெய்வீக சிந்தனை மேலோங்கும், எதிரிகள் பலம் குறையும், எதிர்பாராத வகையில் சொத்தது சுக சேர்க்கை உண்டாகும்.

9ம் பாவக வழியில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்று வரும் வாய்ப்பு,  பிரயாணங்களில் விருப்பம், ஆராய்ச்சி துறையில் வெற்றி, பணியில் இடம் மாற்றம், புதிய சூழ்நிலைகளில் ஆர்வம், சகோதர வழி நற்பெயர், தனது அறிவு திறனை எழுத்துருவாக மாற்றும் வல்லமை, அதன் வழியிலான சுய முன்னேற்றம், சுயநலம் கருதா நிலை என்ற வகையில் சுப யோகங்களை நல்கும்.

10ம் பாவக வழியில் இருந்து ஏஜென்சி துறையில் ஜாதகர் புகழ் பெற்ற வியாபாரியாக திகழும் வாய்ப்பை தரும், எழுத்து மற்றும் பத்திரிக்கை துறையில் பெயரும் புகழும் உண்டாகும், வியாபார ஆலோசனை வழங்கும் துறையில் ஜாதகருக்கு பெயரும் புகழும் உண்டாகும், வீரியமிக்க தொழில் துறையில் ஜாதகர் வெற்றி பெறுவார், விளையாட்டு மற்றும் பாதுகாப்பு துறையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும், தெய்வீக சிந்தனை மூலம் ஜாதகர் தொடர் வெற்றிகளை பெறுவார், எதிர்பார்ப்புகள் யாவும் நிறைவேறும், செய்யும் தொழில் முன்னேற்றம் என்பது மிகவும் அபரிவிதமானதாக அமையும், திடீர் செல்வத்தை தொழில் மூலம் ஜாதகர் பெறுவார், அனைத்து செயல்களிலும் வெற்றி உண்டாகும்.

12ம் பாவக வழியில் இருந்து வெளிநாடு யோகம் மற்றும் வெளிநாட்டில் இருந்து வரும் வருமானம் அதிகரிக்கும், செய்த முதலீடுகள் வழியிலான லாபம் பெரிய அளவில் வந்து சேரும், நல்ல உறக்கம், சிறந்த ஆன்மீக வழியிலான தேடுதல்கள் மூலம் வாழ்க்கையில் வெற்றி பெரும் அமைப்பை தரும், பல புண்ணிய திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகமும், திருப்தியான மனநிலையையும் தரும்.

  2,5,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 2ம் பாவக  வழியில் இருந்து அதிர்ஷ்டம், நண்பர் உதவி, செல்வச்செழிப்பு, இனிமையான பேச்சு திறன், தன்னம்பிக்கை மிக்க மனநிலை, வாக்கு சாதுர்யம், செய்யும் தொழில் வழியிலான சிறப்பான வருமானம், தெய்வீக சிந்தனை, பரிவு மிக்க செயல்பாடுகள், சிறந்த குடும்ப வாழ்க்கை, பல தொழில் செய்யும் யோகம், முற்போக்கு சிந்தனை மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் காணும் அமைப்பு என்ற வகையில் சுபயோகங்களை வாரி வழங்கும்.

5ம் பாவக வழியில் இருந்து நல்ல ஆண் வாரிசு, குழந்தைகள் , மூலம் வாழ்க்கையில்  செல்வச்செழிப்பு மற்றும் அதிர்ஷ்டம், லாட்டரி யோகம் அறிவு திறனால் பெரும் வளர்ச்சி, எப்பொழுதும் சந்தோசம், குழந்தைகள் மற்றும் வாழ்க்கை துணையுடன் எப்பொழுதும் மகிழ்ச்சியாக வாழும் யோகம், திருமணத்திற்கு பிறகான தொழில் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம், குலதெய்வ அனுக்கிரகம், சந்தர்ப்பங்களை சரியாக கையாளும் வல்லமை, எதிர்பாராத வளர்ச்சி மற்றும் அதிர்ஷ்டம், தனது அறிவு திறன் மூலம் சகல செல்வங்களையும் பெரும் யோகம் என்ற வகையில் சுபயோகங்களை வாரி வழங்கும்.

8ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நினைத்த ஆசைகள்  நிறைவேறும்யோகம், மிக சுலபமாக அனைத்தையும் வெற்றி கொள்ளுதல், திருப்தியான  மனநிலை, வாழ்க்கை துணை, நண்பர்கள், கூட்டாளிகள் வழியிலான  வருமான வாய்ப்புகள், திடீர் அதிர்ஷ்டம், புதையல் யோகம், எதிர்பால் அமைப்பினரால் பெரும் வருமானம், நீண்ட ஆயுள், திடீர் பொருள் வரவு, மருத்துவ உபகரணம் மூலம் அல்லது மருத்துவ துறையிலான லாபங்களை குறுக்கியகாலத்தில் பெரும் யோகம், ஆயுள் காப்பீடு, ஊக்க தொகை மூலம் பெரும் சொத்தது சேர்க்கை மற்றும் வருமானம் என்றவகையில்  சுபயோகங்களை வாரி வழங்கும், திருமணத்துக்கு பிறகான வளர்ச்சி ஜாதகருக்கு அபரிவிதமானதாக அமையும்.

11ம் பாவக வழியில் இருந்து மனதில் எண்ணிய எண்ணங்கள் யாவும் திடீரென  பலிதம் பெரும் யோகம், தெய்வீக சிந்தனை, புதிய முயற்சிகள் மூலம் வாழ்க்கையில் அதிர்ஷ்டங்களை தேடி பெரும் யோகம், எதிர்பாராத வருமானம் மூலம் ஜாதகர் பெரும் பொருளாதர தன்னிறைவு, எதிர்ப்புகளை கடந்து  வெற்றிபெறும் யோகம், போட்டி பந்தயங்களில் வெற்றி, வழக்குகளில் வெற்றி, நல்ல மனநிலை, பின்யோக ஜாதகம் ( திருமணத்திற்கு பிறகான முன்னேற்றம் )

ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம்  பெறுவது ஜாதகத்திலே மிகவும் மோசமான அமைப்பை தரும், மேலும் களத்திர ஸ்தான வழியிலான  இன்னல்கள்  ஜாதகருக்கு 200% விகித துன்பங்களை தரக்கூடும் என்பதால் வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் பொழுது ஜாதகர் மிகவும் கவனமுடன் இருப்பது நலம் தரும், ஜாதகருக்கு நல்ல வாழ்க்கை துணை அமைவது  சற்று சிரமம், நல்ல நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் அமைவது குதிரை கொம்பு என்றே சொல்லலாம், பொதுமக்கள் வழியிலான வளர்ச்சி வெகுவாக குறையும், மற்றவர்கள் விஷயங்களில் தலையீடு செய்வது ஜாதகருக்கு கடுமையான நெருக்கடிகளை தரும், குறிப்பாக எதிர்பாலின அன்பர்களின் பிரச்சனைகளில்  தலையீடு செய்யலாம் இருப்பதே ஜாதகருக்கு சகல அமைப்புகளில் இருந்தும் நன்மையை தரும்.

நடைபெறும் சனி திசை தரும் பலன்கள் : ( 30/05/2002 முதல் 30/05/2021 வரை )

ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் சனி திசை 1,3ம் வீடுகள் வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவதும், 3ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் ராசியாக அமைத்து லாபங்களை அதிர்ஷ்டங்களையும் தான் எடுக்கும் முயற்சிகள் வழியில் இருந்து வாரி வழங்கும், தெளிவான சிந்தனை, விளையாட்டுகளில் ஆர்வம், பாதுகாப்பு துறையில் பணியாற்றும் யோகம் என்றவகையில் ஜாதகருக்கு சனி திசை முழு அளவிலான நன்மைகளையே ஸ்திரமாக வாரி வழங்கும், தெய்வீக அனுக்கிரகம் வாழ்க்கையில் நல்ல வெற்றிகளை பெற்று தரும், எந்த  சூழ்நிலையையும் சிறப்பாக எதிர்கொண்டு வாழ்க்கையில்  வெற்றிநடைபோடும் வாய்ப்பினை தற்போழுது நடைமுறையில் உள்ள சனி திசை 1,3ம் பாவக வழியில் இருந்து தரும், நல்ல ஆரோக்கியம், ஸ்திரமான மனநிலை, பயம் அறியா குணம், வீரியமிக்க செயல்திறம், அரசு துறையிலான ஆதரவு என்ற வகையில் ஜாதகருக்கு  சீரிய முன்னேற்றங்கள் வந்து சேரும், சனி திசை ஜாதகருக்கு வலிமை பெற்ற வீரிய ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு பல சிறப்பான யோகங்களை வாரி வழங்கும்.

சனி திசையில் தற்போழுது நடைபெறும் ராகு புத்தி தரும் பலன்கள் ( 11/01/2016 முதல்  17/11/2018 வரை )

ஜாதகருக்கு சனி திசையில் ராகு புத்தி 2ம் வீடு திடீர் அதிர்ஷ்டத்தை தரும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு பரிபூர்ண நன்மைகளை தரும், ஜாதகருக்கு திடீர் அதிர்ஷ்டம் மூலம் நல்ல பொருளாதார முன்னேற்றம் உண்டாகும், நிறைவான வருமான வாய்ப்பு வரும்படியான நல்ல பணி அமையும், தெய்வீக சிந்தனை மேலோங்கும், எதையும் சாதிக்கும் துணிச்சல் உண்டாகும், தன்னம்பிக்கை  அதிகரிக்கும், திடீரென எதிர்பாராத சந்தோஷங்கள் மற்றும் மன நிறைவை தரும் காரியங்கள் நடைபெறும், குறிப்பாக திருமண வாய்ப்பு ஜாதகருக்கு திடீரென அமைய  வாய்ப்பு உண்டு என்பதால், விழிப்புணர்வுடன் இருந்து நன்மை பெறுவது  அவசியமாகிறது மேலும் ஜாதகரின் பணியில் நல்ல முன்னேற்றமும், எதிர்பாராத அதிர்ஷ்டங்களை பெரும் யோகம் உண்டு என்பதால் ஜாதகருக்கு ராகு புத்தி மிகுந்த யோகத்தையே வாரி வழங்குகிறது.

மேற்கண்ட ஜாதகத்தில் 1,2,3,4,5,6,8,9,10,11,12 பாவகங்கள் மிகவும் வலிமையுடன் இருப்பது கவனிக்கத்தக்க அம்சமாகும், மேலும் பாதிக்கப்பட்ட பாவகம் என்பது களத்திர  ஸ்தானம் எனும் 7ம் பாவகம் ஒன்று மட்டுமே மேலும் களத்திர ஸ்தான பாதிப்பு என்பது மிகவும் கடுமையானதாக இருப்பது கவனிக்கத்தக்க விஷயமாகும், ஜாதகர் திருமணம் செய்துகொள்ளும் பொழுது வலிமை பெற்ற ஜாதகத்தை  வாழ்க்கை துணையாக தேர்வு செய்யவில்லை எனில், ஜாதகரின் வாழ்க்கை முற்றிலும்  கடுமையான பாதிப்பை சந்திக்கும் சூழ்நிலையை தரும் என்பதில் கவனம் கொள்ளக.

திசா புத்திகள் ஏற்று நடத்தும் பாவக தொடர்புகள் :

கேது : 

2ம் வீடு வலிமை பெற்ற 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை கேது திசை மற்றும் புத்திகளில் தருகின்றது.

சுக்கிரன் : 

4,6,9,10,12ம் வீடுகள் வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுக்கிரன் திசை மற்றும் புத்திகளில் யோக பலன்களை தருகின்றது.

சூரியன் : 

1ம் வீடு வலிமை பெற்ற 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை சூரியன் திசை மற்றும் புத்திகளில் தருகின்றது.

சந்திரன் : 

5,8,11ம் வீடுகள்  வலிமை பெற்ற 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை சந்திரன் திசை மற்றும் புத்திகளில் தருகின்றது.

செவ்வாய் : 

1,3ம் வீடுகள்  வலிமை பெற்ற 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை செவ்வாய் திசை மற்றும் புத்திகளில் தருகின்றது.

ராகு : 

2ம் வீடு வலிமை பெற்ற 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை கேது திசை மற்றும் புத்திகளில் தருகின்றது.

குரு : 

3ம் வீடு வலிமை பெற்ற 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனையும், 11ம் வீடு வலிமை பெற்ற 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனையும் குரு திசை மற்றும் புத்திகளில் தருகின்றது. 

சனி : 

1,3ம் வீடுகள்  வலிமை பெற்ற  3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை சனி திசை மற்றும் புத்திகளில் தருகின்றது.

புதன் : 

7ம் வீடு பாதகஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று ஜாதகருக்கு  7ம் பாவக வழியில் இருந்து 200 % விகித கடுமையான இன்னல்களையும் , மிகுந்த பாதிப்பையும் தருகின்றது.

மேற்கண்ட ஜாதகருக்கு  நவகிரகங்களின் திசா புத்திகளில் புதன் திசை,புத்தி, அந்தரம் மற்றும் சூட்சமம் மட்டுமே கடுமையான தவிர்க்க இயலாத இன்னல்களை வாரி வழங்கும், மேலும் இதன் பாதிப்பு என்பது எதிர்பால் இனம் அல்லது மற்றவர்களால் நடைபெறும் என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும், எனவே ஜாதகர் புதன் திசை,புத்தி, அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில் மட்டும் சற்று எச்சரிக்கையாக இருப்பது நன்மை தரும், மற்ற திசா புத்திகள் யாவும் ஜாதகருக்கு பரிபூர்ண யோக பலன்களையே வாரி வழங்குகிறது.

வலிமை பெற்ற ஜாதகத்திற்க்கு மேற்கண்ட ஜாதகமே நல்ல உதாரணம். வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


புதன், 5 ஏப்ரல், 2017

சனி பெயர்ச்சி பலன்கள் ( 2017 - 2020 ) லக்கினம் துலாம் !



சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் என்று வர்ணிக்கப்படும், இலக்கின பாவகாத்திற்க்கே முதல் உரிமை உண்டு, மேலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதகத்திற்கு பலன் காணும் பொழுது துல்லியமான பலாபலன்களை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக தெளிவாக கூற இயலும், எனவே நவ கிரகங்களின் பெயர்ச்சியை சுய ஜாதக  பாவக வலிமையின் அடிப்படையில் கணிதம் செய்து பார்க்கும் பொழுது சம்பந்தம் பட்ட ஜாதகருக்கு நவ கிரகங்களின் பெயர்ச்சியினால் வரும் நன்மை தீமை பலாபலன்களை பற்றி துல்லியமாக கணிதம் செய்ய இயலும், ( 2017 முதல் 2020 வரை )  கால புருஷ தத்துவத்திற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான்,  தனது சஞ்சார நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு தரும் யோக அவயோக நிகழ்வுகளை பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

துலாம் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஏழாம் ராசியான துலாம் ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, இந்த சனி பெயர்ச்சி, வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார், சஞ்சாரம் செய்யும் இரண்டறை வருட காலத்திற்கு சஞ்சார நிலையில் இருந்தும், 6,7,10 என்ற திருஷ்டி நிலையில் இருந்தும், துலாம் லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலன்களை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், பொதுமக்கள் செல்வாக்கு, சுய அறிவு திறன் கொண்டு தனது வாழ்க்கையில் அறிய பல சாதனைகளை செய்யும் அன்பர்களான துலாம் லக்கின அன்பர்களுக்கு இதுவரை லக்கினத்திற்கு 2ல் நின்று கடும் பொருளாதார நெருக்கடிகளை தந்து கொண்டு இருந்த சனி பகவான், தற்போழுது வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்வது துலா லக்கின அன்பர்களுக்கு, முன்னெடுக்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றிமேல் வெற்றியை வாரி வழங்குவார், சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்த்தில் உள்ள அன்பர்களின் ஆதரவும் உதவிகளும் தங்களை தேடிவரும், பொறுப்பு மிக்க பதவிகள் அரசு ஆதரவு, செல்வச்செழிப்பு, வசதி வாய்ப்புகள் என தங்களின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களும் வந்து சேரும் யோக நேரமாக இதை  கருதலாம், தங்களின் லட்சியங்கள் நிறைவேற சரியான சந்தர்ப்பங்களை இயற்க்கை தங்களுக்கு வாரி வழங்கும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் யோகம் உண்டாகும், இதுவரை இல்லாத பொருளாதார முன்னேற்றம் தங்களின் வாழ்க்கையில் சிறப்பு அந்தஸ்த்தை வாரி வழங்கும், ஜாதகரின் திட்டமிடுதல்களும், செயல்திறனும் மற்றவர்களை  மிரள செய்யக்கூடும், அதிரடியான சில நடவடிக்கைகள் தங்களை சார்ந்தவர்களை சிறிது பாதித்த பொழுதும் நெடுநாள் நன்மைகளை எதிர்காலத்தில் வாரி வழங்கும், தன்னம்பிக்கையும், தைரியமும் தங்களின் வாழ்க்கையில் அடுத்தகட்ட நகர்வுக்கு அழைத்து செல்லும், சுய தொழில் செய்வோர்க்கு பெரிய அளவிலான தொழில் விருத்தியும், பணியாற்றுவோருக்கு திடீர் உயர்பதவிகளும் தேடிவரும், சனிபகவானின் வீர்ய ஸ்தான  சஞ்சாரம்  வாழ்க்கையில் எதிர்பாராத வெற்றிகளை சரளமாக வாரி வழங்கும்.

   8ம் பாவகத்தை தனது 6ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் துலாம் லக்கின அன்பர்களுக்கு மிதமிஞ்சிய வருமான வாய்ப்புகளை வாரி வழங்குவார், கைநிறைவான வருமானம் தங்களுக்கு எப்பொழுதும் வந்துகொண்டே இருக்கும், புதையலுக்கு நிகரான வருமான வாய்ப்பை பெறுவதற்கு தங்களுக்கு திடீர் சந்தர்ப்பங்கள் ஏற்படும், குடும்ப வாழ்க்கையில் சந்தோசம், செய்யும் தொழில் வழியிலான வருமானம் அதிகரிப்பது, புதிய தொழில் ஆரம்பம் அதன் வழியிலான வருமானம், இனிமையான பேச்சு திறமை , திருமண தடைகள் நீங்குதல், நல்ல வாழ்க்கை துணை அவர் வழியிலான ஆதரவு, செல்வசேர்க்கை, மறைமுக வருமானம், சிறந்த உடல்  ஆரோக்கியம் , இதுவரை உடல் நலபாதிப்பு இருப்பின் சரியான மருத்துவம் மூலம் குணம் பெறுதல், இன்சூரன்ஜ் பங்கு வர்த்தகத்தில் லாபம், பொறுமையுடன் அனைத்தையும் கையாண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுதல், மருத்துவ துறையில் உள்ள அன்பர்களுக்கு எதிர்பாராத முன்னேற்றம், தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகளை  பெரும் யோகம், தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் சொத்து சுக  சேர்க்கை மற்றும் திடீர் அதிர்ஷ்டம், என சனிபகவானின் 6ம் பார்வை துலா லக்கின  அன்பர்களுக்கு பொருளாதார முன்னேற்றங்களை தடையின்றி தரும், சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் துலா லக்கின அன்பர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும்.

9ம் பாவகத்தை தனது  7ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் துலா லக்கின அன்பர்களுக்கு, எதிர்பாலின அன்பர்களால் சிறு சிறு அவப்பெயரை ஏற்படுத்த கூடும், மற்றவர்களுக்கு உதவ செல்வதுகூட தங்களுக்கு  பெரும் வினையாக மாறிவிடும், வீண் அவப்பெயர்களை சந்திக்கும் சூழ்நிலை வரும் என்பதால் அதிக கவனம் தேவை, தங்களது விஷயங்களில் யாரும் தலையீடு செய்வது  பெருவாரியான இன்னல்களை தரக்கூடும், தெய்வீக அனுக்கிரகம் கூட முறையான கோவில் வழிபாடுகளை மேற்கொள்வது  தங்களது இன்னல்களை வெகுவாக குறைக்கும், குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் வயதில் அதிகம் உள்ள அன்பர்களின் ஆலோசனை தங்களின் வாழ்க்கையில் சிறப்பான நன்மைகளை வாரிவழங்கும், கல்வியில் \நல்ல  முன்னேற்றம் உண்டாகும், மாணவ மாணவியருக்கு தேர்வில் வெற்றிகளை  வரி வழங்கும் , ஆன்மீக சுற்றுப்பயணம் சென்றுவரும் அதிர்ஷ்டம் உண்டு என்பதால், வாய்ப்புகளை முறையாக பயன்படுத்தி நலம் பெறுக, முறையான குலதெய்வ வழிபாடு மற்றும் அன்னதானம் தங்களின் வாழ்க்கையில் வரும் இன்னல்களை  வெகுவாக குறைக்கும்.

12ம் பாவகத்தை தனது  10ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் துலா லக்கின  அன்பர்களுக்கு முதலீடுகள் வழியிலான லாபங்களை பன்மடங்கு அதிகரிக்கும் பங்கு வர்த்தக லாபங்கள் எதிர்பார்த்த வகையில் அமையும், நல்ல அயன சயன சுகத்தையும், வெளிநாடுகள் பயணத்தையும் அதன் வழியிலான முன்னேற்றங்களை வாரி வழங்குவார், எதிர்ப்புகள் அனைத்தும் தங்களுக்கு வெகு சாதகமாக மாறும், மனநிம்மதி மற்றும்  திருப்திகரமான யோக வாழ்க்கையை தங்களுக்கு சனிபகவான் நிறைவாக வழங்குவார், இதுவரை  தடைபட்ட காரியங்கள் யாவும் நல்ல முறையில் நடைபெறு வெற்றிகளை தரும், தெய்வீக அனுபவம் மற்றும் ஆன்மீக தொடர்புகள் மூலம் சிறப்பான எதிர்காலம் அமையும், பெரும் முதலீடுகளை  செய்து தொழில் செய்யும் நல்லதொரு வாய்ப்புகள் தங்களுக்கு உண்டாகும், மனதில் அமைதியும்  சாந்தியும் கிட்டும், தெளிவான சிந்தனையும், நிம்மதியான வாழ்க்கையையும் சனிபகவான் தனது 10ம் பார்வையால் தங்களுக்கு இனிவரும் காலங்களில் வாரி வழங்குவர் .

குறிப்பு :

துலாம் லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 3,8,9,12ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள்  3,8,9,12  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் துலா லக்கின அன்பர்களுக்கு மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

சனி பகவான் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் காலங்கள் :

( 26/01/2017 முதல் 21/06/2017 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும்.

( 21/06/2017 முதல் 26.10.2017 ) வரை
சனி பகவான் மீண்டும் வக்கிரக கதியில் விருச்சிக ராசியிலும்.

( 26/10.2017 முதல் 24/01/2020 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும் சஞ்சாரம் செய்கின்றார்.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 30 மார்ச், 2017

சத்ரு ( 6ம் வீட்டில் ) ஸ்தானத்தில் அமரும் லக்கினாதிபதி ஜாதகருக்கு மிகுந்த பாதிப்பை தருவாரா ?


சுய ஜாதகத்தில் லக்கினம் வலிமை பெறுவது என்பது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் உள்ள யோக பலாபலன்களை முழுவதும் பெறுவதற்கு உண்டான வாய்ப்புகளை சிறப்பாக அமைத்துத்தரும், குறிப்பாக சுபயோகங்களை ஜாதகர் பெறுவதற்கு யாதொரு தடைகளும் இருக்காது, சரியான நேரம் காலம் கூடி வரும்பொழுது யாருடைய உதவியும் இன்றி ஜாதகரே தன்னிறைவாக பெறுவார், எதிர்ப்புகள் இல்லாமல் சுப நிகழ்வுகள் யாவும் ஜாதகருக்கு தொய்வின்றி நடைபெறும், ஜாதகரின் நடவடிக்கையும் செயல்பாடுகளும் அனைவரும் மெச்சும்வண்ணம் இருக்கும், ஜாதகரும் வாழ்க்கையில் ஒழுக்கம், நேர்மை, சுய கட்டுப்பாடு மற்றும் பண்பாடு கொண்டவராக திகழ்வார், வாழ்வியல் நெறிமுறைகளை கடைபிடித்து வெற்றிகரமான யோக வாழ்க்கையை பெறுவார்.

சுய ஜாதகத்தில் லக்கினம் அல்லது லக்கினாதிபதி பாதிக்கப்படுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு கடுமையான நெருக்கடிகளை தரும், குறிப்பாக ஜாதகரே தனது  வாழ்க்கை முன்னேற்றமின்மைக்கு காரணகர்த்தாவாக விளங்குவார், ஜாதகரின் மனம் எப்பொழுதும் எதிர்மறை எண்ணங்களால் நிரப்பப்பட்டு இருக்கும், சிந்தனையும் செயல்திறனும் அற்று வீண் கற்பனையும் மனபயமும் கொண்டவராக காணப்படுவார், வரும் எதிர்ப்புகளை சந்திக்க திறன் இன்றி மற்றவர் ஆளுமையின் கீழ் வாழ்க்கையை எதிர்கொள்ளும் தன்மையை தரும், பொறுப்புகளை தட்டிக்கழிப்பதும், மற்றவர்கள் மீது காரணம் காட்டி தப்பித்துக்கொள்வதும், ஜாதகரின் வாழ்க்கையில் பல தோல்விகளை பெறுவதற்கு காரணமாக அமைந்துவிடும், வாழ்க்கையில் நேர் வழியை கடைபிடிக்காமல், மாற்றுவழியில் சென்று தனது வாழ்க்கைக்கு பொருத்தமில்லா செயல்களை செய்து இன்னலுறும் தன்மையை தரும், சுய ஜாதகத்தில் மற்ற பாவக வழியில் இருந்து வரும் யோகங்களையும் ஜாதகர் பெற இயலாமல் வீண் விரயங்களை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்படுவார் என்பதில் இருந்தே லக்கினம் என்ற முதல் பாவகத்தின் வலிமை மற்றும் லக்கினாதிபதி பெரும் வலிமையின் அவசியம் நமக்கு  புரிய வரும்.

லக்கினம் என்பது மனிதனின் இதயம் போன்றது, இதயம் செயல் இழந்தால் எப்படி உயிர் இயக்கம் பெறாதோ ? அதைப்போன்றே லக்கினம் வலிமை குறைவது ஜாதகரின் இயக்கத்தை பாதிக்கும், சுய ஜாதகத்தில் பலவித யோகங்கள் இருப்பினும் அதனால் யாதொரு பயனும் ஜாதகருக்கு கிடைக்காது, யோகங்கள் தரும் பாவக வழியிலான உறவுகள் ஜாதகரை பயன்படுத்திக்கொண்டு நன்மைகளை பெறுவார்கள், ஜாதகரின் ஆசைகள் யாவும் நிராசையாக மாற அதிக வாய்ப்புகள் உண்டு, கீழ்கண்ட ஜாதகத்தை இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!


லக்கினம் : மீனம்
ராசி : ரிஷபம்
நட்ஷத்திரம் : கிருத்திகை 4ம் பாதம்

ஜாதகருக்கு லக்கினாதிபதி குரு, கன்னி ராசியில் உள்ள 6ம் பாவகத்தில் உள்ளார், லக்கினாதிபதி 6ல் மறைவு, லக்கினம் தொடர்பு பெறுவது விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் எனவே ஜாதகருக்கு லக்கினாதிபதியும் பாதிக்கப்பட்டு, லக்கினமும் கடுமையாக பாதிக்கப்படுகிறது, ஜாதகர் மனதளவில் எப்பொழுதும் கவலையும் போராட்டத்தையும் எதிர்கொள்ளும் சூழ்நிலையில் ஜீவித்துக்கொண்டு இருக்கின்றார், சிந்தனையும் செயல்பாடுகளும் நம்பிக்கை அற்ற தன்மையுடன் இருப்பதால் ஜாதகர் செய்யும் காரியங்கள் யாவும் தோல்வியை தருகின்றது, மற்றவர்களின் கடுமையான விமர்சனத்திற்கும் ஆளாகிறது, ஜாதகரின் வளரும் சூழ்நிலை சிறப்பாக அமையவில்லை, கல்வியில் தடை, வேலை வாய்ப்பில் தடங்கல், தனக்கு வரும் நல்ல வாய்ப்புகளை தவிர்த்து, இன்னல்களை தரும் காரியங்களில் ஆர்வம் செலுத்தியதால், இன்று வரை ஜாதகர் ஓர் தன்னிறைவான பொருளாதார மேம்பாட்டை பெற இயலவில்லை, திருமண வாழ்க்கையிலும் தடை, ஜாதகருக்கு லக்கினாதிபதி குரு என்றாலும் அவர் சத்ரு ஸ்தானத்தில் வலிமை அற்று அமர்வதால் நல்ல ஞானத்தை வழங்கவில்லை, சாஸ்திர ஞானம் அற்ற நிலையையும், தனது உடல் நிலையில் அக்கறை கொள்ளாத தன்மையையும் தருவது வருத்தத்திற்கு உரிய விஷயமாகும்.

மேலும் தற்போழுது நடைமுறையில் உள்ள ராகு திசை ஜாதகருக்கு வலிமை அற்ற  5,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 5,8ம் பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களை தருவதும், ராகு திசை ஜாதகருக்கு பருவ வயதில் வருவதும் ஜாதகரின் வாழ்க்கையை வெகுவாக பாதித்துகொண்டு இருக்கின்றது, குல தேவதையின் அருளாசி இன்மையும், ஜாதகருக்கு ஏற்படும் திடீர் இழப்புகளும் ஜாதகருக்கு கடுமையான நெருக்கடிகளை தருவது கவனிக்கத்தக்கது, மேலும் ஜாதகரின் 8ம்  பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியாக அமைவது ஜாதகரின் கூட்டாளி, நண்பர்கள் மற்றும் எதிர்பால் இன அமைப்பினரால் பெரிய அளவிலான பொருளாதார நெருக்கடிகளை சந்தித்துக்கொண்டு இருக்கின்றார், தேவையற்ற தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாகி உடல் நிலையும் கடுமையாக பாதித்துக்கொண்டு இருக்கின்றது, இந்த நிலை இப்படியே நீடித்தால் ஜாதகர் ராகு திசை இறுதியில் கடுமையான நெருக்கடிகளை  சந்திக்க வேண்டி வரும்.

ஜாதகருக்கு வாழ்க்கையில் நல்ல மாற்றம் ஏற்பட ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே உள்ளது, அதாவது ஜாதகரை திருமணம் செய்துகொள்ளும் ஜாதகியின் சுய ஜாதகத்தில் அனைத்து பாவகங்களும் வலிமை பெற்று இருந்தால், ஜாதகரின் வாழ்க்கையிலும் சுபயோகங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது, அதற்க்கான சாத்தியக்கூறுகள் சிறிது உள்ளது என்று சொல்லலாம் ஏனெனில் சுய ஜாதகத்தில் ஜாதகர் 2ம் பாவக வழியில் ( குடும்பம் ) இருந்து மட்டும் நன்மைகளை பெரிய அளவில் பெற இயலும், இறுதி வரை குடும்ப வாழ்க்கையை ஜாதகர் சிதைக்காமல் வாழ்வது அவர் முன் உள்ள சவாலாக இருக்கும், மேற்கண்ட ஜாதகத்தில் லக்கினாதிபதி சத்ரு ஸ்தானத்தில் அமர்வது ஜாதகருக்கு பாதிப்படைந்து, ஜாதகருடன் சேர்பவரையும் பாதிப்படைய செய்யும் என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

சனி, 4 மார்ச், 2017

பாதக ஸ்தானம், பாதக ஸ்தான அதிபதி தனது திசையில் தரும் பலன்கள் !


 சர லக்கினத்திற்கு 11ம் வீடு பாதக ஸ்தானமாகவும், ஸ்திர லக்கினத்திற்கு 9ம் வீடு பாதக ஸ்தானமாகவும், உபய லக்கினத்திற்கு 7ம் வீடு பாதக ஸ்தானமாகவும் இறைநிலை நிர்ணயம் செய்து உள்ளது, ஒருவரது ஜாதகத்தில் பாதக ஸ்தான அதிபதியின் திசை நடைமுறைக்கு வரும் பொழுது, இன்னல்களை மட்டுமே தரும் என்று கருதுவது, முற்றிலும் ஜோதிட கணிதத்திற்கு புறம்பானதாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது, மேலும் நடைபெறும் பாதக ஸ்தான அதிபதி திசை, சுய ஜாதகத்தில் எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறார் என்ற அடிப்படை விஷயமே அறியாமல், பாதக ஸ்தான அதிபதி திசை என்பதால் இன்னல்களை மட்டுமே தருவார் என்று கற்பனை செய்துகொண்டு ஜாதகபலன் காண முற்படுவதாகவே தோன்றுகிறது, இதைப்பற்றி இன்றைய பதிவில் சற்று சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

அடிப்படையில் நாம் ஒரு விஷயத்தில் தெளிவு பெறுவது அவசியமாகிறது, ஒருவரது ஜாதகத்தில் பாதக ஸ்தானத்திற்கு அதிபதியாக வரும் கிரகம் தனது திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில் பாதக ஸ்தான அதிபதி என்ற ஒரே காரணத்திற்க்காக இன்னல்களை தரும் என்று கருதுவது மிக மிக தவறான அணுகுமுறை ( ஒரு வேலை பாதக ஸ்தான அதிபதியின் திசை,  பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே ஜாதகருக்கு கடுமையான இன்னல்கள்  நடைமுறைக்கு வரும்)  , ஏனெனில் சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையையே தனது திசா புத்தி காலங்களில் நவகிரகங்கள் ஏற்று நடத்தும், எனவே ஒருவரது ஜாதகத்தில் பாதக ஸ்தான அதிபதியின் திசை,புத்தி சுய ஜாதகத்தில் எந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்துகிறது என்பதில் தெளிவும், அப்படி ஏற்று நடத்தும் பாவகத்தின் வலிமையையும் கருத்தில் கொண்டே பலன் காண முற்பட வேண்டும், குத்துமதிப்பாக பாதக ஸ்தான அதிபதி திசை என்பதால் அவர் இன்னல்கள்தான் தருவார் என்று கருதுவது "குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவதற்கு " பொருத்தமானதாக மாறிவிடும்.

ஒருவரது சுய ஜாதகத்தில் பாதக ஸ்தான அதிபதியின் திசை வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால், சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு பாதக ஸ்தான அதிபதியின் திசை நடைபெற்றாலும் சுபயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே ஜாதகர் சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து இன்னல்களை சந்திக்க நேரும், மேலும் சுய ஜாதகத்தில் யோகாதிபதியின் திசை நடைபெறும் பொழுது, அந்த திசை பாதிக்கப்பட்ட பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் யோகாதிபதியின் திசை என்ற போதிலும் சம்பந்தப்பட்ட ஜாதகர் பாதக ஸ்தான பலாபலன்களையே அனுபவிக்கும் சூழ்நிலையை தரும், தொடர்பு பெரும் பாதக ஸ்தான வழியில் இருந்து, யோகாதிபதி திசையிலும் ஜாதகர் கடுமையான இன்னல்களை சந்திக்க நேரும்.

இதை உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம்:


லக்கினம் : துலாம் 
ராசி : துலாம் 
நட்ஷத்திரம் : ஸ்வாதி 1ம் பாதம்

மேற்கண்ட ஜாதகத்தில் பாதக ஸ்தானம் : சிம்மம் 
மேற்கண்ட ஜாதகத்தில் பாதக ஸ்தான அதிபதி : சூரியன் 
( உண்மையில் மேற்கண்ட ஜாதகத்திற்கு பாதக ஸ்தான அதிபதி வேறு என்பது நன்கு ஜோதிடத்தில் புலமை உள்ளவருக்கு தெளிவாக  தெரியும் )

பாதக ஸ்தான அதிபதியான சூரியன் தனது திசையில் ஏற்று நடத்தும் பாவக தொடர்புகள் அயன சயன ஸ்தானமான 12ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவக பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு வெளிநாடுகளில் யோக வாழ்க்கை, பயணம் மூலம் நல்ல லாபங்கள், உல்லாசம், சுக போகம், தொழில் மற்றும் இடமாற்றத்தில் விருப்பம், தெய்வீக அனுபவம் என்ற வகையில் சுபயோகங்களை நல்குகிறது.

எனவே சூரியன் பாதக ஸ்தான அதிபதி என்ற போதிலும், தனது திசாபுத்திக்காலத்தில்  வலிமை பெற்ற அயன சயன ஸ்தான பலனை ஏற்று நடத்தி ஜாதகருக்கு சுப யோகங்களை வாரி வழங்குகிறார்.

ஜாதகரின் பாதக ஸ்தானம் 11ம் வீடாகிய சிம்மம், எனவே ஜாதகருக்கு பாதக ஸ்தானத்துடன்  தொடர்பு பெரும் பாவகங்கள் எவை எவை? பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தும் நவக்கிரகத்தின் திசைபுத்தி எது? என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது, இதை கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது மேற்கண்ட ஜாதகருக்கு....

1,3,5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுகின்றது .

நவகிரகங்களில் ( குரு ) திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மட்டுமே பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துகிறது, தற்போழுது நடைபெறுவது குரு திசை என்பதால் ( 03/09/2013 முதல் 03/09/2029 வரை ) ஜாதகர் லக்கின பாவக வழியில் இருந்து, வளரும் சூழ்நிலையில் இன்னல்கள் , முரட்டு சுபாவம், அசட்டை தனம், அறிவுபூர்வமற்ற செய்கைகள் மூலம் தானே தன்னை கெடுத்து கொள்ளுதல், தன்னம்பிக்கை அற்ற மனநிலை, பிற்போக்குத்தனமான எண்ணங்கள் என ஜாதகர் பாதக ஸ்தான வழியில் இருந்து கடுமையான இன்னல்களை அனுபவித்து கொண்டுள்ளார் , மேலும் பாதக ஸ்தான வழியில் இருந்து ஜாதகர் 200% விகித இன்னல்களை அனுபவிக்கும் சூழ்நிலையில் இருக்கின்றார் என்பதே உண்மை நிலை, இதை கருத்தில் கொள்வது பாதக ஸ்தானம் தரும் இன்னல்கள் பற்றி தெளிவு பெற உதவும்.

பாதக ஸ்தான அதிபதியின் திசை இன்னல்களை தரும் என்று கருதுவது அடிப்படை ஆதாரம் அற்ற விஷயமாகவே  "ஜோதிடதீபம்" கருதுகிறது எனவே சுய ஜாதக வலிமை உணர்ந்து ஜாதக பலன்காண முற்படுவதே மிக சரியானதாக அமையும்.

குறிப்பு :

நடைபெறுவது பாதக ஸ்தான அதிபதியின் திசை என்றாலும், அவர் ஏற்று நடத்துவது வலிமை பெற்ற பாவகம் எனில், சம்பந்தப்பட்ட ஜாதகர் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து பாதக ஸ்தான அதிபதியின் திசையில் சுபயோகங்களையே அனுபவிப்பர், இதில் ஏதும் மாற்று கருத்து இல்லை அன்பர்களே.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

திருமண பொருத்தம் : வாழ்க்கை துணையாக ( மனைவியாக ) இந்த ஜாதகியை தேர்வு செய்யலாமா ?

திருமண பொருத்தம் 


இல்லறவாழ்க்கை இனிதே அமைய ஒருவர் திருமணத்திற்கு முன்பே, தனது ஜாதக வலிமை நிலையை பற்றியும், தனக்கு வர இருக்கும் வாழ்க்கை துணையின் ஜாதக வலிமை நிலையை பற்றியும் ஒரு தெளிவான முடிவுக்கு வந்த பிறகு திருமண வாழ்க்கையில் இணைவது, மணவாழ்க்கையில் வெற்றியையும், சிறப்பையும் தரும், குறிப்பாக தனது வாழ்க்கை துணையாக வரும் பெண்ணின் ஜாதகத்தை பற்றி தெளிவு பெறுவது சம்பந்தப்பட்ட ஆணுக்கு சகல யோகங்களையும், தாம்பத்திய வாழ்க்கையில் சந்தோஷங்களையும் வாரி வழங்கும், பொருத்தமான வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் ஆண் பெண் இருவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி மற்றும் சந்தோஷத்திற்கு குறைவிருக்காது, மேலும் சகல சௌபாக்கியங்களையும் பெரும் சுபயோக வாழ்க்கையை தம்பதியர் இருவரும் பெறமுடியும்.

தங்களின் கேள்விக்கு உண்டான பதில்களை இன்றை பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் !

வாழ்க்கை துணையாக வர இருக்கும் வதுவின் ஜாதகத்தில் 2,5,7,8,12ம் பாவகங்கள் வலிமை பெற்று இருப்பதும், தற்போழுது நடைமுறையில் உள்ள திசாபுத்தி, எதிர்வரும் திசாபுத்திகள் ஜாதகிக்கு வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவதும் தாம்பத்திய வாழ்க்கையில் நன்மைகளையும் யோகங்களையும் தரும், தனது கணவருக்கு சிறப்பான யோக வாழ்க்கையை வாரி வழங்கும், கீழ்கண்ட ஜாதகிக்கு 2,5,7,8,12ம் பாவகங்களின் வலிமையை பற்றியும், நடைபெறும், எதிர்வரும் திசாபுத்திகள் தரும் நன்மை தீமைகள் பற்றியும், தனது இல்லறவாழ்க்கையில் ஜாதகி பெரும் யோக அவயோகங்கள் பற்றியும் ஆய்வு செய்வோம் அன்பர்களே !


லக்கினம் : கும்பம் 
ராசி : துலாம் 
நட்சத்திரம் : சித்திரை 3ம் பாதம் 

ஜாதகிக்கு 2,5,7,8ம் வீடுகள் லாபஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 2ம் பாவக வழியில் இருந்து ஜாதகி இனிமையான குடும்ப வாழ்க்கை , கை நிறைவான வருமான வாய்ப்பு, இனிமையான பேசிச்சு திறன், குடும்பத்தில் அனைவருடன் அனுசரித்து செல்லும் அமைப்பு, சிறப்பாக குடும்பத்தை நடத்திச்செல்லும் வல்லமை, அதிர்ஷ்டம் மற்றும் நட்புகள் வழியில் யோகம் என்றவையில் சுபயோகங்களை தரும்.

5ம் பாவக வழியில் இருந்து அறிவு புத்திசாலித்தனத்தால் ஆதாயம், எப்பொழுதும் மனமகிழ்ச்சி, குல தெய்வ அனுக்கிரகம், குழந்தைகள் வழியில் யோகம், நல்ல குழந்தை பாக்கியம், அனைவரிடமும் பாசமாக நடந்துகொள்ளும் தன்மை, பெருந்தன்மையான குணம், எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் அதிபுத்திசாலித்தனம், கடவுள் அனுக்கிரகத்தை பரிபூர்ணமாக பெரும் யோகம் என்றவகையில் சுபயோகங்களை தரும்.

7ம் பாவக வழியில் இருந்து கணவருடன் இணக்கம், நல்ல நண்பர்கள் உதவி, தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சி, தம்பதியர் ஒருவருக்கு ஒருவர் புரிந்துகொண்டு, மணவாழ்க்கையை சிறப்பிக்கும் யோகம், எந்த சூழ்நிலையிலும் கணவனை விட்டு பிரியாமல் வாழும் யோகம், வியாபர விருத்தி, கணவருடன் செய்யும் சுயதொழில் வளர்ச்சி, எதிர்பாராத அதிர்ஷ்டங்களை தம்பதியர் பெரும் யோகம் என்றவகையில் சுபயோகங்களை தரும்.

8ம் பாவக வழியில் இருந்து பூர்ண சுமங்கலி, தன்கணவனுக்கு மிதம்மிஞ்சிய சொத்து சுக சேர்க்கையை நல்கும் யோகம் திடீர் அதிர்ஷ்டம்  மூலம் தம்பதியரின் வாழ்க்கை எதிர்பாராத அதிர்ஷ்டங்களை பெறுதல், போதும் என்ற மனநிறைவு, திருப்தியான யோகம் வாழ்க்கை, நீண்ட ஆயுள், தம்பதியர் இருவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து செல்லும் தன்மை, வாழ்நாள் முழுவதும் கணவருக்கு சேவை செய்யும் யோகம் பெற்றவர்.

ஜாதகிக்கு 12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மட்டும் சற்று பாதிப்பு, தங்களின் ஜாதகத்தில் 12ம் பாவகம் மிகவும்  வலிமையுடன் இருப்பதால் யாதொரு இன்னல்களும் இல்லை, திருமண வாழ்க்கையில் சந்தோசம் மற்றும் வெற்றி உண்டாகும்.

நடைபெறும் குரு திசை 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவக தொடர்பை பெற்று  ஸ்திரமான ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துவது சிறப்பான யோகமே, மேலும் அடுத்து வரும் சனி திசை ஜாதகிக்கு 1,2,5,7,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவக தொடர்பை பெற்று முழுவீச்சில் லாபஸ்தான பலனை ஏற்று நடத்துவது வரவேற்கதக்க சிறப்புஅம்சம் ஆகும், மேலும் ஜாதகிக்கு 9 பது பாவகங்கள் மிக மிக வலிமையுடன் இருப்பதால் தங்களுக்கு யோக வாழ்க்கையையே தரும், குறிப்பாக 2,5,7ம் பாவகங்கள் வலிமை பெற்று இருப்பது தாம்பத்திய வாழ்க்கையில் 100% விகித வெற்றியை  வாரி வழங்கும், இருவரது ஜாதகமும் 100% விகிதம் பொருந்துவதால் தங்கள் தேர்வு செய்த ஜாதகியையே திருமணம் செய்துகொள்வது  தங்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை அமைத்து தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

லக்கினாதிபதி திசை நன்மையையே செய்யும் என்றனர், கடுமையான இன்னல்களை தர காரணம் என்ன ? எனது ஜாதகம் யோக ஜாதகமா?


கேள்வி :

எந்த லக்கனம் என்றாலும், அந்த லக்கினத்திற்கு அதிபதியான கிரகத்தின் திசை நன்மையையே தரும் என்றும், யோக அதிபதிகளின் திசையும் ஜாதகருக்கு பரிபூர்ண யோகங்களை நல்கும் என்றும் கூறுகின்றனர், ஆனால் கடந்த சனி திசை ( லக்கினாதிபதி ) எனக்கு மிகப்பெரிய இன்னல்களையும் மீள முடியா துயரங்களையுமே பலனாக தந்தது, சனி திசையில் நான்பட்ட கஷ்டத்திற்கு ஓர் அளவில்லை எனலாம், இது எதனால், தற்போழுது நடைபெறும் புதன் திசையாவது எனக்கு நன்மைகளை தருமா ? 6,9க்கு உடையவன் இன்னல்களை தரக்கூடும் என்கின்றனர், எனது ஜாதகம் யோக ஜாதகமா?

பதில் :

ஒருவரது ஜாதகத்தில் உள்ள பாவகங்களின் வலிமையை அறியாமலும், நவகிரகங்களின் திசாபுத்தி ஏற்று நடத்தும் பாவகங்கள் ஜாதகருக்கு தரும் நன்மை தீமையை பற்றி அறியாமலும், பொது கருத்தாக , சுப கிரகங்களின் திசாபுத்தி நன்மையையும், அசுப கிரகங்களின் திசாபுத்தி இன்னல்களையும் தரும்  என்று பலன் கூறுவதும், ஜாதக கணிதம் அறியாமல் கூறும் தவறான அணுகுமுறையாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது, மேலும் காலபுருஷ தத்துவத்திற்கு நவகிரகங்கள் பெரும் ஆட்சி,உச்சம்,நட்பு, சமம்,பகை,நீச்சம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு
ஆட்சி,உச்சம்,நட்பு, சமம் நிலையில் இருக்கும் கிரகம் மற்றும் கிரகத்தின் திசை யோகங்களை தரும் என்றும், பகை,நீச்சம் நிலையில் இருக்கும் கிரகம் மற்றும் கிரகத்தின் திசை அவயோகங்களை தரும் என்று பலன் கூறுவதும், ஜாதக கணிதம் அறியாமல் நவகிரகங்கள் தனது திசாபுத்தியில் ஏற்று நடத்தும் பாவகங்களின் வலிமை மற்றும் யோகம் அவயோகம் பற்றிய புரிதல் இல்லாமலும் கூறும் பொது பலனாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது.

ஒருவரது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையை பற்றி ஓர் தெளிவு இல்லை எனில் நிச்சயம் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சரியான பலாபலன்கள் கூற இயலாது, மேலும் நடந்த,நடைபெறும், எதிர்வரும் திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவக வலிமையை பற்றிய புரிதல் இல்லாத பொழுது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு தனது கற்பனை மூலம் " ஜாதக பலன்களை " வாய் ஜாலம் மூலம் நிகழ்த்த இயலுமோ அன்றி, கூறும் பலாபலன்கள் ஜாதக வலிமையின் அடிப்படையிலானதாக அமைய சிறிதும் வாய்ப்பு இல்லை, இதை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட ஜாதகர் தனது வாழ்க்கையின் முன்னேற்றங்களுக்கு உண்டான திட்டமிடுதல்களை நடைமுறை படுத்துவது, சம்பந்தபட்ட ஜாதகருக்கு மிகப்பெரிய சவால்களை வாரி வழங்கும், என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.

சுய ஜாதக பாவக வலிமையின் அடிப்படையிலேயே ஜாதகர் இயங்குகிறார், பாவக வலிமை தரும் யோக அவயோகங்களையே நவ கிரகங்களின் திசாபுத்தி காலத்தில் ஜாதகர் அனுபவிக்கின்றார், என்பதை கீழ்கண்ட அன்பரின் ஜாதகத்தின் மூலம் சிந்தனைக்கு எடுத்துக்கொண்டு, தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : மகரம்
ராசி : துலாம்
நட்ஷத்திரம் : விசாகம் 1ம் பாதம்

லக்கினாதிபதி திசை நன்மையையே செய்யும் என்றனர், கடுமையான இன்னல்களை தர காரணம் என்ன ?

 நவகிரகங்கள் சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையையே தனது திசாபுத்திகளில் காலங்களில் ஏற்று நடத்துகிறது, தனிப்பட்ட முறையிலான யோக அவயோகங்களை தர நவ கிரகங்களுக்கு வலிமை இல்லை என்பதை அடிப்படையில் புரிந்துகொள்வது நல்லது, மேற்கண்ட ஜாதகருக்கு லக்கினாதிபதியின் திசையான சனிதிசை, லக்கினாதிபதி என்பதால் ஜாதகருக்கு யோகங்களை தருவார் என்று ஜாதக பலனாக கூறப்பட்டு இருக்கின்றது, ஆனால் லக்கினாதிபதியான சனி திசை ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 1,7,8,10ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தனது திசை முழுவதும், பாதக ஸ்தானத்தால் 200% விகிதம் பாதிக்கப்பட்ட 1,7,8,10ம் வீடுகளின் பலனை ஏற்று நடத்தியிருக்கிறது, இதனால் ஜாதகர் சனி திசை முழுவதும் பாதக ஸ்தானம் தரும் கடுமையான இன்னல்களின் பிடியில் மாட்டிக்கொண்டு இன்னலுறும் சூழ்நிலையை தந்து இருக்கின்றது, லக்கினவழியில் இருந்து ஜாதகர் நல்ல வளரும் சூழ்நிலையில் இல்லாமல் தவிக்கும் தன்மையையும், உடல்நலம் மற்றும் மனநலம் சார்ந்த இன்னல்களில் துன்புறும் தன்மையையும், லக்கினாதிபதி திசை தந்து இருக்கின்றது, மேலும் ஜாதகரின் வளர்ச்சி சீரிய முறையில் இல்லாமல் பல தடைகளையும் தாமதங்களையும் சந்தித்து இருக்கின்றார், அடிப்படையில் கல்வி, உடல்நலம், வருமானம், தொழில், திருமணம் ஆகிய வழிகளில் ஜாதகர் அதிக இன்னல்களை சந்தித்து இருக்கின்றார்.

7ம் பாவக வழியில் இருந்து நல்ல நண்பர்கள் சேர்க்கை இன்மை, கூட்டு முயற்சி தோல்வி, சமூகத்தில் போராட்டம், குறுகிய வட்டத்தில் ஜாதகர் இன்னலுறும் தன்மை என்ற வகையிலும், எதிர்பால் அமைப்பினரால் இன்னல்களையும் சந்திக்கும் நிலையை தந்து இருக்கின்றது, 8ம் பாவக வழியில் இருந்து திடீர் இழப்புகள், மருத்துவ செலவினங்கள், வீண் தனவிரையம், உடல்நல கேடு, எதிர்பாராத செலவினங்கள், மற்றவர்களை நம்பி செய்யும் காரியங்களின் திடீர் இழப்பு என்ற வகையிலும், 10ம் பாவக வழியில் இருந்து வேலை தொழிலில் முன்னேற்றம் இன்மை, ஜீவன ரீதியான கடுமையான  இன்னல்கள், போராட்டம், தன்னம்பிக்கை பாதிக்கும் விதமான செயல்பாடுகள், தெளிவில்லாத வாழ்க்கை முறை, சுய முன்னேற்றத்தில் அக்கறை இன்மை, தகுதிக்கு உகந்த செயல்களை செய்யாமல், பொழுது போக்கு அம்சங்களில் அதீத ஆர்வம் மற்றும் ஈடுபாடு ஜாதகரின் வாழ்க்கையை கடுமையாக பதித்து இருக்கின்றது, கடந்த லக்கினாதிபதியின் திசையான சனி திசையில்.

எனவே ஜாதகருக்கு நடைபெற்ற திசை லக்கினாதிபதியின் (சனி ) திசை என்றாலும், அவர் ஏற்று நடத்தியது 1,7,8,10ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவக பலன் என்பதனால் ஜாதகர் 1,7,8,10ம் பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை சனி திசையில் அனுபவிக்கும் நிலையை தந்தது, எனவே சுய ஜாதகத்தில் நடைபெறும் திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டே சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு பலன் கூற வேண்டும், அதுவே ஜாதகரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு சிறந்த வழி காட்டுதல்களாக அமையும், மாறாக லக்கினாதிபதி திசை, யோகாதிபதி திசை, ராசியாதிபதி திசை, சுப கிரகத்தின் திசை என்பதால் நன்மையை செய்யும் என்று கூறுவது முற்றிலும் பாவக வலிமையை பற்றிய தெளிவு இல்லாமல் கூறும் வார்த்தைகளாகவே அமையும், தங்களுக்கு கடந்த சனி திசை ( லக்கினாதிபதி திசை என்ற போதிலும் ) அவர் ஏற்று நடத்தியது பாதக ஸ்தான பலன் என்பதால் தாங்கள் 1,7,8,10ம் பாவக வழியிலான கடுமையான இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தந்தது என்பதே முற்றிலும் உண்மை அன்பரே !

நடைபெறும் புதன் திசை நன்மையை தருமா ?

நிச்சயமாக மிகுந்த யோக பலன்களை வாரி வழங்கும், ஏனெனில் நடைபெறும் புதன் தசை தங்களுக்கு 6,12ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று விபரீத ராஜயோகத்தை வாரி வழங்குகிறது, குறிப்பாக தொழில் ரீதியான வெற்றிகள் மிதமிஞ்சிய அளவில் இந்த புதன் திசை தங்களுக்கு தரும், சொந்த முயற்சியில் வாழ்க்கையில் தன்னிறைவான பொருளாதார முன்னேற்றம், சொத்து சுக சேர்க்கை, திடீர் அதிஷ்டம் என புதன் திசை தங்களுக்கு சிறந்த நன்மைகளை 100% விகிதம் தர காத்துகொண்டு இருக்கின்றது, 6,9க்கு அதிபதி என்ற போதிலும் அவர் ஏற்று நடத்துவது வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலன் என்பதால் மிகுந்த யோகமும், நன்மையையும் ஜீவன ஸ்தான வழியில் இருந்து வாரி வழங்கும், "வாழ்த்துக்கள்"

எனது ஜாதகம் யோக ஜாதகமா ?

சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக வழியிலான நன்மைகளை தாங்கள் உணர்ந்து செயல்படுவது அவசியமாகிறது, அடிப்படையில் லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது தங்களுக்கு வரும் சிறப்பான யோகங்களை தாங்களே உதறித்தள்ளும் தள்ளும் சூழ்நிலையை தரும், மேலும் போதிய விழிப்புணர்வு இன்றி வாழ்க்கையில் வரும் நன்மைகளை  தாங்கள் தட்டி கழிக்க கூடும், எனவே முறையான ஜாதக ஆலோசனை தங்களுக்கு சுய ஜாதகத்தில் உள்ள யோக பலன்களை அனுபவிக்க வழிவகுக்கும், முறையான பீரிதி பரிகாரங்கள், தங்களுக்கு சகல சௌபாக்கியங்களையும், வாரி வழங்கும். முறையான ஜாதக ஆலோசனை தங்களுக்கு அவசியம் தேவை என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

திங்கள், 30 ஜனவரி, 2017

திருமண வாழ்க்கையில் பரிபூர்ண யோகங்களை வாரி வழங்கும், பொருத்தமான வாழ்க்கை துணை தேர்வு !


" மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் " என்ற வார்த்தை உண்மையாக்க, சரியான வாழ்க்கை துணையை தேர்வு செய்வது இன்றைய இளைஞர்களுக்கு அவசியமாகிறது, இயற்கையாக சில அன்பர்களுக்கு இந்த வாய்ப்பு இறை அருளின் கருணையினால் வழங்கப்பட்டு விடுகிறது ( அதற்க்கு சம்பந்தப்பட்டவரின் சுய ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானம் மிகவும் வலிமையுடன் இருக்கும் என்பது வேறு விஷயம் ) இல்லற வாழ்க்கையை சிறப்பிக்க யோகம் நிறைந்த வாழ்க்கை துணையை தேர்வு செய்தவர்களுக்கு யாதொரு கவலையும் இல்லை, ஏனெனில் பொருத்தமான வாழ்க்கை துணையை தேர்வு செய்ப்பவர்களுக்கு சகல ஐஸ்வர்யங்களும், கடவுளின் கருணையினால் தேடிவரும், பொருத்தமான வாழ்க்கை துணையை தேர்வு செய்த அன்பர்கள், எதிர்கால வாழ்க்கையை பற்றி யாதொரு பயமும் இன்றி மிக சிறப்பாகவும், முழு யோகத்துடன் எதிர்கொள்ள இயலும், இன்றை சூழ்நிலையில் தனக்கு உகந்த வாழ்க்கை துணையை தேர்வு செய்வதில் தவறிவிடும் தற்கால இளைஞர்கள் தமது வாழ்க்கையையே பணயம் வைக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்பது, மறுக்க இயலாத உண்மையாக உள்ளது.

இதுபோன்ற தவறான, பொருத்தமற்ற தேர்வுகளை தவிர்க்க " ஜோதிட சாஸ்த்திரம் " இன்றைய சந்ததியருக்கு 100% விகிதம் உதவுகிறது என்றால் அது மிகையில்லை, ஆனால் இன்றைய சந்ததியினர் " ஜோதிட சாஸ்த்திரம் " எந்த அளவிற்கு நம்புகின்றனர் என்பது கேள்விக்குறியே !, முழு மனதாக " ஜோதிட சாஸ்த்திரம் " எனும் கலையை நம்பும் அன்பர்களுக்கு நிச்சயம் சரியான தீர்வுகளையும், யோகம் நிறைந்த நல்வாழ்க்கையையும் வாரி  வழங்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை அன்பர்களே !

இன்றைய சிந்தனைக்கு தனது ஜாதக வலிமையின் மூலம், தனது கணவனுக்கு மிகுந்த சுபயோகங்களை நல்கும் ஓர் ஜாதகத்தை  சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே ! 


லக்கினம் : விருச்சிகம் 
ராசி : துலாம் 
நட்ஷத்திரம் : விசாகம் 3ம் பாதம் 

ஜாதகிக்கு பாவக தொடர்பு :

1,3,5ம் வீடுகள் வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகிக்கு லக்கின வழியில் இருந்து நல்ல உடல் நலம் மற்றும் சிறந்த மனவலிமையை  தரும், அனைவருடன் சுமுக போக்கு, பெருந்தன்மையான குணம், மற்றும் கண்டிப்பு என்ற வகையிலும், 3ம் பாவக வழியில் இருந்து மிகுந்த செல்வ செழிப்பு , எதிரிகளை வெல்லும் ஆற்றல், நல்ல மனநிலை, சிறப்பான சிந்தனை, சத்தியத்தை மதித்தல், கல்வி வழியில் யோக வாழ்க்கை, சிறந்த வியாபார வல்லமை, கமிஷன் தொழில் மூலம் சிறப்பான முன்னேற்றம், ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் எதிர்பாராத வெற்றி மற்றும் லாபங்கள் வந்து சேரும் அமைப்பு, 5ம் பாவக வழியில் இருந்து குலதெய்வ அனுக்கிரகம், ஆய கலைகளில் தேர்ச்சி, குழந்தைகளிடம் அன்பு, எதிர்ப்புகளை மிக எளிதாக கையாளும் தன்மை, புதிய சூழ்நிலையில் ஆர்வம், எஜென்ஜி துறையில் நல்ல லாபம் என்ற வகையில் நன்மைகளை தரும்.

2,4,8,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 2ம் பாவக வழியில் இருந்து சிறந்த குடும்ப வாழ்க்கையை, இனிமையான பேச்சு திறன், கைநிறைவான வருமான வாய்ப்பு, கணவருடன் பாசம் மற்றும் சகல வசதி வாய்ப்புகளையும் பெரும் யோகம் என்ற வகையிலும், 4ம் பாவக வழியில் இருந்து நிறைவான சொத்து சுக சேர்க்கை, வண்டி வாகன யோகம், பொருளாதார முன்னேற்றம், சகல வசதிகளும் கொண்ட வீடு, பண்ணை தோட்டம் என்ற வகையிலும், 8ம் பாவக வழியில் கணவருக்கு திடீர் அதிர்ஷ்டத்தையும், கணவரால் தனது வாழ்க்கையில் சிறப்பான யோகங்களையும், நீண்ட ஆயுளுடன் சுமங்கலியாக திகழும் சுப யோகத்தையும் ஜாதகி பெறுவார், 10ம் பாவக வழியில் இருந்து ஜாதகிக்கு கவுரவம், தாய் வழியிலான யோக வாழ்க்கை, பாரம்பரியம் மிக்க விஷயங்களை கடைபிடிக்கும் யோகம், கவுரவ பதவி, கணவருக்கு தொழில் வழியிலான நன்மைகளை தரும் அமைப்பு என்ற வகையில் நன்மைகளை ஸ்திரமாக வாரி வழங்கும்.

7,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 7ம் பாவக வழியில் இருந்து தனது வாழ்க்கை துணையின் வழியில் இருந்து சகல அதிர்ஷ்டங்களை பெரும் யோகம், தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சி, தனது  கணவருக்கு தேவையான விஷயங்களை சிறப்பாக செய்து கொடுக்கும் வல்லமை, தனது கணவருக்கு எந்த சூழ்நிலையிலும் நன்மையை தரும் யோகம், தாம்பத்திய வாழ்க்கையில் யாதொரு இன்னல்களும் இன்றி சுமுகமாக, சந்தோஷத்துடன் வாழும் யோகம், கூட்டு முயற்சியின் மூலம் வாழ்க்கையில் எதிர்பாராத அதிர்ஷ்டங்களை பெரும் யோகம், ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் கொடிகட்டி பறக்கும் யோகம் என்றவகையில் நன்மைகளை தரும்.

11ம் பாவக வழியில் இருந்து ஜாதகி  பரிபூர்ண மஹாலக்ஷ்மி யோகம் நிறைந்தவர் என்பது உறுதியாகிறது, தனது கணவருக்கு சகல நிலைகளில் இருந்தும் அதிர்ஷ்டங்களை வாரி  வழங்குபவர் என்பது 100% விகிதம் உறுதி மேலும் தன்னம்பிக்கையும், முற்போக்கு சிந்தனையும் தன்னகத்தே கொண்டவர், மெய்பொருள் காண்பது அறிவு என்பதற்கு இணங்க, தனது அறிவு திறனால் சகல விஷயங்களையும் சீர்துக்கி பார்க்கும், சமயோசித அறிவாற்றல் பெற்றவர் என்பதுடன், அதிர்ஷ்டம் நிறைந்தவர் என்பது ஜாதகத்தில் உள்ள சிறப்பு அம்சம் ஆகும்.

6,9ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு, ரண சிகிச்சையும், மற்றவர்கள் விஷயத்தில் தலையீடு செய்தால் வீண் இன்னல்களையும் சந்திக்கும் நிலையை தரும்.

12ம் வீடு விரைய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது, மனஅழுத்தம் மற்றும் மனப்போராட்டங்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும்.

நடைபெறும் புதன் திசை ( 05/05/2012 முதல் 05/05/2029 வரை ) 

தற்போழுது நடைபெறும் புதன் திசை, ஜாதகிக்கு 7,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, புதன் திசை முழுவதும் தனது  கணவருக்கு முழு வீச்சில் அதிர்ஷ்டத்தை வாரி வழங்கி கொண்டு இருப்பது கவனிக்கத்தக்கது, மேலும் களத்திர ஸ்தான வழியில் இருந்தும், லாப ஸ்தான வழியில் இருந்தும் தன்னிறைவான யோக வாழ்க்கையை பெறுபவர்  என்பதும் உறுதியாகிறது, புதன் திசைக்கு பிறகு வரும் கேது மற்றும் சுக்கிரன் முறையே 11ம் பாவக பலன் மற்றும் 3ம் பாவாக பலனையே தனது திசைகளில்  ஏற்று நடத்துவது வரவேற்க தக்க அம்சமாகும், எனவே ஜாதகியும், ஜாதகியின் கணவரும் முழு அளவிலான யோக வாழ்க்கையை சிறப்பாக வாழும் தன்மையை தரும் என்பது மேற்கண்ட ஜாதகத்தில் உள்ள சுபயோக  அமைப்பாகும்.

குறிப்பு :

 பெண்களின் ஜாதகத்தில் இல்லற வாழ்க்கைக்கு சுபயோகங்களை நல்கும் 2,5,7ம் வீடுகள் மிகவும் வலிமை பெற்று இருப்பதும், நடைபெறும் திசை மற்றும் எதிர்வரும் தசை வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவதும், மிகசிறந்த யோக வாழ்க்கையை தம்பதியருக்கு வாரி வழங்கும் என்பதில் ஐயம் இல்லை, மேலும் தனது வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் பொழுது அவரது ஜாதகத்தில் 2,5,7ம் வீடுகள் வலிமை பெற்று இருப்பது அவசியமாகிறது என்பதை கருத்தில் கொண்டு தேர்வு செய்தால், காதல்  திருமணமோ, நிச்சயிக்க பட்ட திருமணமோ 100% வெற்றியை பெரும், இல்லற வாழ்க்கையில் சகல ஐஸ்வர்யங்களும் வந்து சேரும் என்பதில் மாற்று கருத்து இல்லை அன்பர்களே !

வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 10 செப்டம்பர், 2016

குரு பெயர்ச்சி வழங்கும் யோக வாழ்க்கை - துலாம் லக்கினம் !


திருக்கணித பஞ்சாங்க முறைபடி வரும் 11.08.2016 வியாழன் அன்று இரவு 9.35 மணிக்கு சிம்ம இராசியில் இருக்கும் குரு பகவான், கன்னி இராசிக்கு செல்கிறார், இனிவரும் ஒரு வருடம் கன்னி ராசியில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி இனிவரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே! லக்கினம் என்பதே ஒருவரின் ஜாதகத்தை இயக்குவதில் 100% விகித பங்கை வகிக்கிறது என்பதால் ஒருவரின் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும், தற்போழுது நடைபெறும் திசாபுத்தி ஏற்று நடத்ததும் பாவகங்களுக்கு, குரு பகவான் தரும் கோள் சாரா பலன்களை அடிப்படையாக கொண்டும், ஜாதக பலன்களை நிர்ணயம் செய்யும் பொழுது சம்பந்த பட்ட ஜாதகருக்கு நடைபெறும் யோக அவயோக பலன்களை பற்றி தெளிவாக உணர இயலும், அதன் அடிப்படையில் தற்போழுது பெயர்ச்சி பெற்றுள்ள குரு பகவான் "துலாம்" லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!

துலாம் லக்கினம் 

துலாம் லக்கின அன்பர்களுக்கு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான், துலாம் லக்கின அன்பர்களுக்கு இனி வரும் ஒருவருட காலம், விரைய ஸ்தான வழியில் இருந்து சில இன்னல்களை தரக்கூடும், குறிப்பாக உடல் நலம் சார்ந்த தொந்தரவுகள், வயிறு சார்ந்த தொந்தரவுகள், வீண் விரையம் என்ற வகையில் இன்னல்களை தர கூடும், வீடு நிலம், வண்டி வாகன யோகம் என்ற வகையில் சுப விரைய செலவுகளையும், திருமணம் மற்றும் சுப விசேஷங்கள் என்ற வகையில் செலவுகளையும் தர வாய்ப்புண்டு, விவசாயம் மற்றும் பண்ணை தொழில் செய்ப்பவர்க்ளுக்கு நல்ல வருமானம் வர வாய்ப்பு அதிகம் உண்டு, பயணங்களில் நல்ல லாபமும் அதிர்ஷ்டமும் உண்டாகும், போட்டி பந்தயங்களில் வெற்றி உண்டாகும், எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்பட்ட வாய்ப்பு உண்டு, தமது உடமைகளை மிகவும் கவனமாக பார்த்துக்கொள்வதும், பயணங்களில் அதிக பாதுகாப்பை கையாள்வதும், தங்களக்கு திடீர் இழப்புகளில் இருந்து காப்பாற்றும்.

குரு பகவான் தனது 5ம் பார்வையை சுக ஸ்தானமான 4ம் பாவகத்தை வசீகரிப்பது, தங்களின் தொழில் மற்றும் சொத்து சார்ந்த தொந்தரவுகளை அதிகரிக்க கூடும், மேலும் விரைந்து முடிவெடுக்கும் விஷயங்கள் யாவும் தங்களுக்கு அதிக இன்னல்களையும் துன்பங்களையும் தர கூடும், ஏமாற்றங்கள் அதிக அளவில் வர வாய்ப்பு உண்டு, குறிப்பாக தொழில் தொழிலாளர் மாற்று வேலை ஆட்களுடன் அதிக விழிப்புணர்வுடன் நடந்துகொள்வது நலம் தரும், மருத்துவ துறையில் உள்ள அன்பர்களுக்கு நல்ல விருத்தியை தந்த போதிலும், மிகப்பெரிய சட்ட சிக்கல்களை அதிகரிக்கும், வாகன தொழில் விருத்தி அடையும் இருப்பினும் நிலையற்ற தொழில் அமைப்பினை வழங்கும், புதிய சொத்துக்கள் வீடு நிலம் போன்றவற்றை வாங்கும் முன் அதிக கவனம் தேவை, மற்றவர்கள் விஷயங்களில் தலையிடுவது மிகப்பெரிய அவ பெயரையும், பின்னடைவையும் தரக்கூடும், வாழ்க்கை துணையுடன் சுமுக போக்கை கையாள்வது நல்லது இல்லையெனில்  தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய இன்னல்களை வாரி வழங்க கூடும்,

 குரு பகவான் தனது 7ம் பார்வையை சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்தை வசீகரிப்பது, துலாம்  லக்கின அன்பர்களுக்கு, எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ செய்யும் யோகத்தை தரும், வம்பு வழக்கு, போட்டி பந்தயம் மற்றும் எதிர்ப்புகள் யாவும் அகன்று நன்மைகளும் அதிர்ஷ்டமும் உண்டாகும், இருப்பினும் தீராத மன கவலையையும், குறையையும் தரும், மருத்துவ செலவை தவிர்க்க இயலாது, முதலீடுகளில் இருந்து திடீர் வருமானம் உண்டாக வாய்ப்பு உண்டு, நிம்மதியான உறக்கம் கெடும், வீண் அலைச்சல் தங்கள் உடல் நிலையை வெகுவாக பாதிக்கும், எதிர்பால் இன அமைப்பினரிடம் அதிக கவனமாக இருப்பது நலம் தரும், இல்லை எனில் தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய அவ பெயரை சந்திக்கும் சூழ்நிலையை தரும், மற்றவர்களுக்கு ஜாமீன் வழங்குவது, ஆதரவு தருவது இரண்டும் தங்களின் வாழ்க்கையை வெகுவாக பதம்பார்க்கும், உறவுகளின் ஆதரவின்மை தங்களுக்கு நல்ல வாழ்க்கை பாடத்தை கற்று தரும், தாம் உண்டு தமது வேலை உண்டு என்று இருப்பது தங்களின் மனதுக்கும், உடலுக்கும்  சகல நலன்களையும் வாரி வழங்கும்.

குரு பகவான் தனது 9ம் பார்வையை ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்தை வசீகரிப்பது, துலா லக்கின அன்பர்களுக்கு, புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையை வழங்க கூடும், வெளிநாடுகளில் இருந்து அல்லது வாழ்க்கை துணை நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியில் இருந்து அதிகப்படியான வருமானம் திடீரென வந்து சேரும், இருப்பினும் விபத்து மற்றும் வீண் செலவுகள் தங்களை வெகுவாக சிரமப்படுத்தும், பெரிய சொத்துக்கள் வாங்க இனிவரும் காலம் வழிவகுக்கும், பொது வாழ்க்கையில் சிறப்பான எதிர்காலம் உண்டு, அரசியலில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உண்டாகும், இன்சூரன்ஸ் மற்றும் வாகன காப்பீடு துறையில் உள்ள அன்பர்களுக்கு ஏற்றம் மிகுந்த யோக காலம் இதுவாக அமைய  வாய்ப்பு உண்டு, பொதுமக்கள் வழியில் இருந்து அதிகப்படியான வருமான வாய்ப்புகள் வந்து சேரும், வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டாகும், வெளிநாட்டில் உள்ள சில அன்பர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டாக வாய்ப்பு உண்டு, மன வாழ்க்கையில் உள்ள அன்பர்களுக்கு இது சோதனை மிகுந்த காலமாக அமையும், வீண் பேச்சு, வீண் வாதம் தங்களின் இல்லற வாழ்க்கையை  வெகுவாக பாதிக்கும் என்பதால்  மௌனம் காப்பது சகல நலன்களையும் தரும் இல்லற வாசிகளுக்கு, மேலேயும் மனபயம் துலாம் லக்கின அன்பர்களை வாட்டி வதைக்கும்.

 குறிப்பு :

துலா லக்கின அன்பர்களுக்கு  தற்போழுது நடைபெறும் திசாபுத்திகள் 12,4,6,8ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், தற்போழுது நடைபெறும் திசா புத்திகள் மேற்கண்ட பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில், குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மையையும் தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க, மேலும் குரு பெயர்ச்சி பலனை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ள, சுய ஜாதகத்துடன் நேரில் ஆலோசனை பெற்று கொள்வதே சாலச்சிறந்தது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

சுய ஜாதகத்தில் உள்ள யோகங்கள் ( அவயோகங்கள் ) ஜாதகருக்கு பலன் தராமல் போவதற்கு காரணம் என்ன?


சில அன்பர்களுக்கு சுய ஜாதகத்தில் ராஜ யோகங்கள் ( பாவக வலிமை ) இருந்த போதிலும், ஜாதகர் அதனால் பலன் ஏதும் பெற இயலாமல், வாழ்க்கையில் இன்னல்களை சந்தித்து கொண்டு இருப்பர், சில அன்பர்களுக்கு சுய ஜாதகத்தில் அவயோகங்கள் ( பாவக வலிமை அற்ற நிலை ) இருந்த போதிலு, அதனால் ஜாதகர் எவ்வித இன்னல்களையும் அனுபவிக்காமல் சுக போக வாழ்க்கையை நடத்திக்கொண்டு இருப்பர், இது எப்படி சாத்தியம் என்ற கேள்வி வருவது இயற்கையே, இதன் உண்மை நிலையை பற்றி இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே ! 

ஒருவரது சுய ஜாதகத்தில் சுபயோகங்கள் இருப்பது மட்டும் சம்பந்த ஜாதகருக்கு, நன்மைகளையும், வெற்றிகளையும் வழங்கி விடாது, சுபயோகங்கள் வழங்கும் பாவக தொடர்பை, ( நடைமுறையில் உள்ள திசாபுத்திகளோ அல்லது எதிர்வரும் திசாபுத்திகளோ ) ஏற்று நடத்தினால் மட்டுமே ஜாதகருக்கு  சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து சுபயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், இது சுபயோகங்களுக்கு உண்டான சிறப்பு அம்சம்.

 ஒருவரது சுய ஜாதகத்தில் அவயோகங்கள் இருந்து அந்த அவயோகங்களை வழங்கும் பாவக பலனை ( வலிமை அற்ற பாவகம் ) நடைபெறும் திசா புத்திகள் ஏற்று நடத்தவில்லை எனில், சுய ஜாதகத்தில் உள்ள அவயோக பலாபலன்கள் ஜாதகருக்கு நிச்சயம் நடைமுறைக்கு வாராது, மேலும் பாதிக்கப்பட்ட பாவக வழியிலான உறவுகளுடன் உள்ள நல்லுறவு பாதிக்கப்படும் அவ்வளவே, எனவே சுய ஜாதகத்தில் உள்ள அவயோக பலாபலன்களை திசாபுத்திகள் ஏற்று நடத்ததே, சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு " மிகுந்த நன்மையாக " கருதலாம்.

இதை பற்றி இரண்டு உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே!

சுய ஜாதகம் வலிமை பெற்று இருந்தும், அவயோக பலனை அனுபவிக்கும் ஜாதக நிலை :


லக்கினம் : சிம்மம் 
ராசி : கன்னி 
நட்ஷத்திரம் : உத்திரம் 4ம் பாதம் 

இந்த சிம்ம லக்கின ஜாதகருக்கு 1,5ம் வீடுகள் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது லக்கினம் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தான வழியில் இருந்து பரிபூர்ண யோகங்களை அனுபவிக்கும் தன்மையை  தரும், 2,8,10,12ம் வீடுகள் வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்த்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 2,8,10,12ம் பாவக வழியில் இருந்து நன்மைகளையும், யோகங்களையும் வாரி வழங்கும், மேலும் 3ம் வீடு லாப ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதும், 4ம் வீடு சுக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதும், 11ம் வீடு களத்திர ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதும் ஜாதகருக்கு 3,4,11ம் பாவக வழியில் இருந்து யோகங்களை வாரி வழங்கும் அமைப்பாகும்.

ஜாதகருக்கு 6ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 7ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் ஜாதகருக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து அதிக அளவில் இன்னல்களையும், 9ம் வீடு பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது 200% மடங்கு கடுமையான இன்னல்களை வாரி வழங்கும் என்பது  இவரது ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட நிலை ஆகும்.

இவரது ஜாதகத்தில் சுபயோக பலன்களை 1,2,3,4,5,8,10,11,12 வீடுகள் ஆகிய 9பாவகங்கள் வழங்குகின்றது.

இவரது ஜாதகத்தில் அவயோக பலன்களை 6,7,9 வீடுகள் ஆகிய 3பாவகங்கள் மட்டுமே  வழங்குகின்றது.

இருப்பினும் தற்போழுது நடைபெறும் ராகு திசை ஜாதகருக்கு ( 18/01/2013 முதல் 18/01/2031 வரை ) பாதக ஸ்தானமான 9ம் பாவக பலனையே ஏற்று நடத்துகிறது, இது ஜாதகருக்கு பாதக ஸ்தான வழியில் இருந்து 200%  சதவிகித இன்னல்களையும்  துன்பங்களையும் வாரி வழங்கும் அமைப்பாகும், மேலும் இதனால் ஜாதகர் ராகு திசை முழுவதும், வீண் அவப்பெயர், கல்வியில் தடை, தீய செய்கையின் மூலம் தமது ஆரோக்கியத்தை தாமே கெடுத்து கொள்ளுதல், வீண் அலைச்சல், முன்னேற்ற தடை, ஜீவன மேன்மை இன்றி சிரமம் அனுபவிக்கும் தன்மை என்ற வகையில் இன்னல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும்.

அடுத்து வரும் குரு திசை ஜாதகருக்கு ( 18/01/2031 முதல் 18/01/2047 வரை ) சத்ரு ஸ்தானமான  6ம் பாவக பலனையே ஏற்று நடத்துகிறது, இது ஜாதகருக்கு 6ம் பாவக வழியில் இருந்து 100% விகித இன்னல்களை தரும் அமைப்பாகும், இதனால் ஜாதகரின் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்படும், கடன் தொந்தரவுகள், மறைமுக எதிரி தொல்லை அதிகரிக்கும், தொழில் முடக்கம் மற்றும் பணியில் எதிர்ப்பு நிரந்தரம் இல்லாத நிலை என்ற வகையில் இன்னல்களை வாரி வழங்கும், ஜாதகர் கற்றுக்கொண்ட தீய பழக்கங்களினால் ஏற்படும் உடல் தொந்தரவுகளை, குரு திசை காலகட்டத்தில் எதிர்கொள்ளும் நிலையை தரும்.

அதற்க்கு அடுத்து வரும் சனி திசை ஜாதகருக்கு ( 18/01/2047 முதல் 18/01/2066 வரை ) 7ம் வீடு களத்திர ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று  12ம் பாவக பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு மிகுந்த மன உளைச்சலையும், மனப்போராட்டத்தையும் வாரி வழங்கும், நிம்மதியற்ற நிலை, வீண் மனபயம் என்ற வகையில் இன்னல்களை தரும், ஏற்படும் விரயத்தை ஜாதகரால் தடுத்து நிறுத்த இயலாது என்பதுடன், அனைவராலும் தொல்லைகளை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும்.

எனவே மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகம் வலிமை பெற்று இருந்த போதிலும், நடைபெறும் திசாபுத்தி, எதிர்வரும் திசாபுத்தி ஜாதகருக்கு வலிமை பெற்ற ( சுபயோகம் ) பாவக பலனை ஏற்று நடத்தாத காரணத்தால், சுய ஜாதகத்தில் யோகங்கள் இருந்த போதிலும் யாதொரு நன்மையையும் ஜாதகருக்கு நடைமுறைக்கு வாராது.

சுய ஜாதகம் வலிமை அற்று இருந்தும், யோக பலனை அனுபவிக்கும் ஜாதக நிலை :


லக்கினம் : துலாம் 
ராசி : ரிஷபம் 
நட்ஷத்திரம் : மிருகசீரிடம் 2ம் பாதம் 

மேற்கண்ட துலாம் லக்கின ஜாதகருக்கு 1,3,5,9,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மேற்கண்ட பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களையும், 2,4,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மேற்கண்ட பாவக வழியில் இருந்து ஸ்த்திரமான இன்னல்களையும், 6,12ம் வீடுகள் முறையே சத்ரு ஸ்தானத்துடனும், விரைய ஸ்தானத்துடனும் சம்பந்தம் பெறுவது மேற்கண்ட பாவக வழியில் இருந்து மிகுந்த துன்பங்களை, இன்னல்களையும் தரும்.

மேலும் 7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 7ம் பாவக வழியில் 100% விகித யோகத்தையும்,

10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 10ம் பாவக வழியில் 100% விகித யோகத்தையும் வாரி வழங்கும்.

 இவரது ஜாதகத்தில் 1,2,3,4,5,6,8,9,11,12 வீடுகள் ஆகிய 10 பாவகங்கள் அவயோக பலன்களை வழங்குகிறது.

இவரது ஜாதகத்தில் 7,10 வீடுகள் ஆகிய 2 பாவகங்கள் மட்டுமே யோக பலன்களை வாரி வழங்குகிறது.

இருப்பினும் தற்போழுது நடைபெறும் ராகு திசை ( 07/09/2009 முதல் 07/09/2027 வரை  ) ஜாதகருக்கு வலிமை பெற்ற 7,10ம் பாவக பலனையே ஏற்று நடத்துகிறது, எனவே ஜாதகருக்கு நல்ல நண்பர்கள், கூட்டாளிகள், பொதுமக்கள் ஆதரவு, பிரபல்ய யோகம், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் நல்ல வாய்ப்புகள், கூட்டு முயற்ச்சியால் பெரும் வெற்றி வாய்ப்புகள், புகழ் மற்றும் அரசு கவுரவம், சமூகத்தில் அனைவரும் மதிக்கும் வண்ணம் அமையும் ஜாதகரின் செயல்பாடுகள், நல்ல ஜீவனம், செய்யும் தொழில் வழியில் இருந்து நல்ல முன்னேற்றம் என்ற வகையில் ராகு திசை முழுவதும் 7,10ம் பாவக வழியில் இருந்து யோக பலன்களையே ஜாதகருக்கு வாரி வழங்கும்.

அடுத்தது வரும் குரு திசையும் ( 07/09/2027 முதல் 07/09/2043 வரை ) ஜாதகருக்கு வலிமை பெற்ற 7ம் பாவக பலனையே ஏற்று நடத்துவது, வரவேற்க தக்க அம்சமாகும், இந்த காலத்தில் ஜாதகர் தமது வாழ்க்கை துணை வழியில் இருந்து யோகங்களையும், நண்பர்கள்,கூட்டாளிகள் மற்றும் பொதுமக்கள் வழியில் இருந்து அதிக ஆதாயம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தையும், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து அதிக செல்வ சேர்க்கையையும் தங்கு தடையின்றி பெறுவார், மேலும் குரு திசை முழுவதும் 7ம் பாவக வழியில் இருந்து யோக பலன்களையே ஜாதகருக்கு வாரி வழங்கும்.

மேற்கண்ட இரண்டு ஜாதகங்களில் யோகம் மற்றும் அவயோகங்கள் இருந்த போதிலும் நடைமுறை மற்றும் எதிர்வரும் திசாபுத்திகள் முதல் ஜாதகருக்கு பாதகமாகவும், இரண்டாம் ஜாதகருக்கு சாதகமாகவும் அமைவது, " விதி வலியது "  என்பதை தெளிவாக விளங்க செய்கிறது.

முதல் ஜாதகருக்கு சுபயோகங்கள் இருந்தும் அவை நடைமுறைக்கு வாராதது ஜாதகரின் துர்பாக்கிய நிலையையும், இரண்டாம் ஜாதகருக்கு அவயோகங்கள்  இருந்தும் அவை நடைமுறைக்கு வாராதது ஜாதகரின்  அதிர்ஷ்டத்தையும் கட்டியம் கூறுகிறது.

இதைத்தான் பெரியோர்கள் முதல் ஜாதகருக்கு  "கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை" என்றும்.

இரண்டாம் ஜாதகருக்கு " தலைக்கு வந்தது தலை பாதுகையுடன் சென்றது " என்றும்  சிலேடையாக சொல்லியிருக்க கூடும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 16 ஜூன், 2016

சுய ஜாதகத்தில் வலிமைபெற்ற கிரகம், தனது திசாபுத்தி காலங்களில் யோகங்களை வாரி வழங்குமா ?

 

 நவகிரகங்கள் சுய ஜாதகங்களில் வலிமை பெறுவது, தனது திசா புத்தி காலங்களில் நன்மைகளையும் யோகங்களையும் தரும் என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது, சுய ஜாதகத்தில் ஒரு கிரகமோ அல்லது ஒன்றிற்க்கு மேற்ப்பட்ட கிரகமோ ராசியிலோ அல்லது நவாம்சத்திலோ  ஆட்சி,உச்சம் பெறுவது ஜாதகருக்கு யோகங்களையும் நன்மைகளையும் தமது திசா புத்திகாலங்களில் வாரி வழங்கும் என்பது பொதுவான கருத்து, இந்த பதிவில் நாம் கிரகங்கள் இலக்கின வழியில் இருந்து, பாவகங்களுக்கு தரும் வலிமையை அடிப்படையாக கொண்டு காண்போம் அன்பர்களே!

ராசி சக்கிரத்தில்  கிரகங்களின் ஆட்சி உச்சம் என்பது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு  உண்டானது, இந்த வலிமை சுய ஜாதகத்தில் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு 12 பாவகங்களுக்கு எவ்வித  வலிமையை தருகிறது என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது, மேலும் ராசியிலோ அம்சத்திலோ நவகிரகங்கள் ஆட்சி உச்சம் பெறுவது, தமது திசா புத்தியிலும் நன்மையை தரும் என்று உறுதியாக சொல்ல இயலாது, சுய ஜாதகங்களில் பாவக வலிமையே, திசா புத்திகளில் பலாபலன்கலாக பிரதிபலிக்கிறது, உதாரணமாக கிழ்கண்ட ஜாதகத்தை ஆய்வு செய்வோம் அன்பர்களே !


லக்கினம் : சிம்மம் 
ராசி : துலாம் 
நட்சத்திரம் : சித்திரை 4ம் பாதம் 

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் ராகு கேது முறையே 12,6ம் பாவகங்களில் அமர்ந்து 12ம் பாவகத்தையும், 6ம் பாவகத்தையும் 100% விகித வலிமை பெற செய்கின்றனர், ( இங்கே கிரக வலிமை என்பது ஆட்சி,உச்சம்,நட்பு,சமம்,பகை,நிச்சம்  என்பதை வைத்து நிர்ணயம் செய்யவில்லை, சுய ஜாதகத்திற்கு லக்கினத்திற்கு பாவக வழியில் தரும் வலிமையை வைத்து நிர்ணயம் செய்யபடுகிறது மேலும் ராகுகேது லக்கினம் மற்றும் களத்திர ஸ்தானங்களில் அமரவில்லை 12,6ம் பாவகங்களில் அமர்ந்து இருப்பது லக்கினம் ஆரம்பிக்கும் பாகையை வைத்து கணிதம் செய்தால் தெளிவாகும் ) 12ல் அமர்ந்த ராகு ஜாதகருக்கு நல்ல அயன சயன சுகத்தையும், 6ல் அமர்ந்த கேது ஜாதகருக்கு எதிர்ப்பற்ற யோக வாழ்க்கையையும், சத்ரு வழியில் யோகங்களையும் தருவது புலனாகும், எனவே சுய ஜாதகத்தில் ராகுவும், கேதுவும் தாம் அமர்ந்த பாவகங்களுக்கு 100% விகித நன்மையை தரும் அமைப்பில் உள்ளனர், எனவே ஜாதகருக்கு ராகு திசையும், கேது திசையும் யோகங்களை வாரி வழங்குமா ?

இந்த கேள்விக்கு பதில் சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற ராகுவும், கேதுவும் தமது திசா புத்தி காலங்களில் லக்கினம் முதல் 12 பாவகங்களில் எந்த பாவக பலனை ஏற்று நடத்துகின்றார் என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது, எனவே நடைபெற்ற ராகு திசை ஏற்று நடத்திய பாவக பலனை ஆய்வு செய்வோம் அன்பர்களே !

சுய ஜாதகத்தில் 12ம் பாவகத்தில் வலிமை பெற்ற ராகு தனது திசையில் 1.3,5,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று 200% விகித அவயோக பலன்களையும், 6ல் வலிமை பெற்ற கேது எதிர்வரும் தனது திசையில் 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 100% விகித யோக பலன்களையும் வாரி வழங்கும் என்பது தெளிவாகிறது, எனவே ராகு திசாபுத்தி காலங்கள் ஜாதகருக்கு பாதக ஸ்தான பலனையும், கேது திசாபுத்தி காலங்கள் ஜாதகருக்கு ஜீவன ஸ்தான பலனையும் ஏற்று நடத்துவது ஜாதகருக்கு ராகு திசாபுத்தி காலங்கள் கடுமையான அவயோக பலன்களையும், கேது திசாபுத்தி காலங்கள் மிகுந்த யோக பலன்களையும் தரும் என்பது உறுதியாகிறது.

எனவே சுய ஜாதகத்தில் வலிமை ( பாவக வழியில் ) பெற்ற கிரகங்கள் தமது திசாபுத்தி காலங்களில் யோக வாழ்க்கையை தரும் என்று கருதுவதும், சுய ஜாதகத்தில்  வலிமை அற்ற கிரகங்கள் தமது திசாபுத்தி காலங்களில் அவ யோகங்களை தரும் என்று கருதுவதும் ஜாதக கணித உண்மைக்கு புறம்பானதே, நவகிரகங்கள் தமது திசாபுத்தி காலங்களில் லக்கினம் முதல் 12 வீடுகள் தொடர்பு பெற்ற பாவக பலனையே ஏற்று நடத்துகிறது, வலிமை பெற்ற பாவாக பலனை ஏற்று நடத்தும் பொழுது ஜாதகருக்கு யோக பலன்களையும், வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் பொழுது ஜாதகருக்கு அவயோக பலனையும் நவகிரங்கள் தமது திசாபுத்தி காலங்களில் வழங்குகிறது என்பதே உண்மை, மேலும் சுய ஜாதகத்தில் பாவக வலிமைக்கு ஏற்ப்பவே ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அமைகிறது, நவகிரகங்களின் திசாபுத்திகள் சுய ஜாதகத்தில் வலிமைபெற்ற வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் ஒரு கருவியே அன்றி, தனிப்பட்ட யோக அவயோக பலனை வழங்க தகுதி அற்றவை என்பதை மறுக்க இயலாது, சுய ஜாதக பாவக வலிமைக்கு ஏற்ப்பவே நன்மை தீமை பலன்கள் நடைமுறைக்கு வரும் என்பது கவனிக்கத்தக்கது.

குறிப்பு : 

சுய ஜாதகங்களில் ஆட்சி உச்சம் பெற்ற கிரகத்தின் திசாபுத்திகள் ஜாதகருக்கு யோகத்தை தரும் என்பதும், பகை நீச்சம் பெற்ற கிரகத்தின் திசாபுத்திகள் அவ யோகத்தை தரும் என்பதும், உண்மைக்கு புறம்பானதே அவரவர் சுய ஜாதக பாவக வலிமையையே நவ கிரகங்களின் திசாபுத்திகள்  ஏற்று நடத்தும் என்பதே உண்மை.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

புதன், 20 ஏப்ரல், 2016

சித்திரை,ஆடி மாதத்தில் குழந்தை பிறந்தால் குடும்பத்திற்கு தீங்கு ஏற்ப்படுமா ?


இயற்கையாகவே இந்தியா வெப்பம் மிகுந்த நாடு, தமிழகத்தின் நிலை சொல்லி தெரிய வேண்டியது இல்லை, மேலும் கோடை காலமான பங்குனி,சித்திரை,வைகாசி மாதங்களில் வெப்பத்தின் தாக்கம் மிக கடுமையானதாக இருக்கும், குறிப்பாக சித்திரை மாதத்தில் சூரியனின் வெப்பம் தகிக்கும், இந்த காலங்களில் குழந்தை பிறப்பு அமைந்தால், தாயுக்கும் சேயுக்கும் சிறு சிறு உடல் நல குறைவு ஏற்பட கூடும் என்ற காரணத்தினால் சித்திரை மாதத்தில் குழந்தை பிறப்பை நமது முன்னோர்கள் தவிர்த்தனர், இதுவே உண்மையான காரணமாக இருக்ககூடும் அன்பர்களே ! 

மாறாக சித்திரை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளால், குடும்பத்திற்கு ஆகாது, பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் ஆகாது என்பதெல்லாம் முற்றிலும் மூட நம்பிக்கையே அன்றி, சிறிதும் உண்மையில்லை என்பதை அனைவரும் உணர்வது அவசியமாகிறது, இந்த நவீன உலகில் இயற்க்கை வெப்பத்தின் கொடுமையில் இருந்து நம்மை காத்துக்கொள்ள, பல கருவிகள் வந்துவிட்டது, குளிர்ஊட்டி, மின் விசிறி என அதிநவீன கருவிகள் உள்ளது, எனவே சித்திரை மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் உடல் நலம் மற்றும் தாயின் உடல் நலம் காக்க வழியுண்டு, சித்திரை ஆடி மாதங்களில் பிறக்கும் குழந்தைகள், குடும்பத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்ற கருத்தில் உண்மை இல்லை என்பதை "ஜோதிடதீபம்" கிழ்கண்ட உதாரண ஜாதகம் கொண்டு உறுதியாக பதிவு செய்கிறது, மேலும் கண்ணில் தெரியும் கடவுளான சூரியபகவான் உச்ச நிலையை பெரும் மாதம் சித்திரை மாதம் ஆகும், இந்த சித்திரையில் பிறக்கும் குழந்தைகள் இயற்கையாகவே ஆதிக்க சக்தி மிகுந்ததாகவும், அதிகாரம் செய்யும் யோகம் கொண்டதாகவும், தேசஸ் மிகுந்து உடல் வலிமை பெற்றதாகவும் திகழும், சந்திரன் ஆட்சி பெரும் மாதம் ஆடி மாதமாகும், இந்த மாதத்தில் பிறந்த குழந்தைகள் அதிர்ஷ்டம் மிகுந்ததாகவும், குறுகிய காலத்தில் மிகப்பெரிய பதவிகளையும், அந்தஸ்தையும் அடையும் என்பதால, மற்ற குழந்தைகளில் இருந்து சிறு வயது முதல் வித்தியாசமான நடவடிக்கைகளை சித்திரை மற்றும் ஆடி மாதங்களில் பிறக்கும் குழந்தைகள் கொண்டிருக்கும் என்பதே உண்மை, இதை அறிந்தவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திகொண்டனர், அறியாதோர் மேற்கண்ட மூட நம்பிக்கைகளில் மூழ்கி முத்து எடுத்துகொண்டு இருக்கின்றனர் .

ஒருவரது சுய ஜாதகத்தில் சூரியன் வலிமை பெற்று இருப்பதும், சந்திரன் வலிமை பெற்று இருப்பதும் சம்பந்த பட்ட ஜாதகருக்கு மிகுந்த யோக பலன்களை வாரி வழங்கும், குறிப்பாக ஜாதகர் பிறப்பில் ஏழ்மை நிலையில் இருந்தாலும் ஜாதகர் வளர வளர, வாழ்க்கையில் சகல யோகங்களையும் தங்கு தடையின்றி அனுபவிக்கும் நிலையை தரும், ( சித்திரை மாதத்திலும், ஆடி மாதத்திலும் பிறந்த பல அன்பர்கள் அரசு பதவிகளிலும், அதிகார பதவிகளிலும் சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருப்பது கவனிக்கத்தக்கது )  ஜாதகருக்கு சிறப்பான உடல் மற்றும் மன நிலையை தரும், எண்ணமும் அறிவு திறனும் சிறப்பாக செயல்படும், ஜாதகரின் லட்சியங்கள் யாவும் வெற்றி பெரும், நினைத்ததை சாதிக்கும் வல்லமையை தரும், மிகப்பெரிய அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், மற்றும் மக்கள் செல்வாக்கினை பெற்ற மனிதர்கள் அனைவரின் சுய ஜாதகத்திலும், வலிமை பெற்ற சூரியன் அல்லது சந்திரன் 12 பாவக வழியில் இருந்து சிறப்பான நன்மைகளை வாரி வழங்கிக்கொண்டு இருப்பார்கள் என்பதை கவனத்தில் கொள்வது அவசியமாகிறது.

ஒருவரது வாழ்க்கையை நிர்ணயம் செய்வது, பிறந்த மாதமோ, நட்சத்திரமோ, ராசியோ, கிழமையோ நிர்ணயம் செய்வதில்லை, ஜாதகரின் பிறந்த  நேரமும் அதன் அடிப்படையில் அமைந்த லக்கினமும், 12 பாவகங்களின் வலிமை நிலையும், வலிமை பெற்ற 12 பாவகங்களின் பலன்களை, நவகிரகங்கள் தமது திசா புத்திகளில் ஏற்று நடத்தும் பலாபலன்கள் அடிப்படையிலேயே ஒருவரது வாழ்க்கை யோக பலன்களையும், அவயோக பலன்களையும் தருகிறது, மேலும் சுய ஜாதகத்தில் ஓரிரு வினாடிகள் கூட மிகப்பெரிய பாவக வலிமை வித்தியாசங்களை தரக்கூடும், எனவே பிறந்த நேரம் என்பதே சுய ஜாதகத்தை நிர்ணயம் செய்யும் என்பதால், சித்திரை மாதத்தில் குழந்தை பிறப்பது தீமையை தரும் என்ற மூட நம்பிக்கையை களைவதே சால சிறந்தது.

சித்திரை மாதம் பிறந்த ராஜயோக ஜாதகத்தை இன்றைய சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !



லக்கினம் : மீனம் 
ராசி : துலாம் 
நட்சத்திரம் : விசாகம் 2ம் பாதம் 

சித்திரை மாதத்தில் பிறந்த இந்த ஜாதகருக்கு லக்கினம் முதல் 12 பாவகங்களும் மிகவும் வலிமையான நிலையில் அமைந்திருக்கின்றது, ஜாதகர் பிறந்ததில் இருந்தே இவரது குடும்பம் நல்ல முன்னேற்றங்களையும், பொருளாதார வளர்ச்சியையும் தொடர்ந்து பெற்று கொண்டுதான் இருக்கின்றது, நல்ல உடல் நிலை, சிறந்த மன நிலை, தெளிவான அறிவு திறன், கௌரவம் குறையாத யோக வாழ்க்கை என ஜாதகர் இதுவரை யோக  பலன்களையே அனுபவித்து கொண்டு இருக்கின்றார்.

சுய ஜாதக வலிமை அடிப்படையில் ஜாதகருக்கு நல்ல வளரும் சூழ்நிலையை தந்தது, பால்ய வயதில் அடிப்படை கல்வி சிறப்பாக கற்றார், இளமையில் சிறப்பாக பட்டய கல்வியில் முதன்மையில் தேர்ச்சி பெற்றார், அரசு துறையில் பணியாற்றும் யோகத்தை பெற்றார், சரியான வயதில் திருமணம் அமைந்து நல்ல வாரிசும் அமைந்தது, பதவி உயர்வு ஜாதகரை தேடி வந்தது, சுயமாக தொழில் ஒன்றை கூட்டு முறையில் அமைத்துக்கொண்டு அதில் வெற்றியும் பெற்றார், அனைத்து வசதி வாய்ப்புகளையும் அனுபவிக்கும் யோகம் ஜாதகருக்கு கிடைத்துள்ளது கவனிக்க தக்க அம்சமாகும், சுய ஜாதகத்தில்  இதற்க்கு முன் நடைபெற்ற சனி திசை ஜாதகருக்கு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் வீடு வாக்கு குடும்பம் எனும் 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை வாரி வழங்கி உள்ளது, 2ம் பாவகம் ஜாதகருக்கு சர நெருப்பு ராசியான மேஷத்தில் அமைவது, ஜாதகரின் வெற்றிகளை 100% விகிதம் உறுதிபடுத்தியது.

 தற்பொழுது நடைபெறும் புதன் திசை ஜாதகருக்கு 7ம் வீடு அதிர்ஷ்டம் மற்றும் லாபத்தை தரும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோகபலன்களை வழங்குவது, ஜாதகருக்கு புதன் திசையும் அதிர்ஷ்டங்களையும் லாபங்களையும் தொடர்ந்து வாரி வழங்கிக்கொண்டு இருக்கின்றது, எனவே சுய ஜாதக பாவக வலிமையே ஜாதகருக்கு யோக, அவயோக பலன்களை   வழங்குகிறது, பிறந்த மாதங்களோ, பிறந்த நாட்களோ, ஜென்ம நட்சத்திரமோ, ஜென்ம ராசியோ அல்ல என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது, எனவே சித்திரை மாதம் ஆடி மாதம்  பிறக்கும் குழந்தைகள், குடும்பத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்ற மூட நம்பிக்கையை களைவது அனைவருக்கும் நன்மை பயக்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696