மனைவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனைவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 8 மார்ச், 2017

தொழில் வெற்றிகளை வழங்கும் ஜீவன ஸ்தான வலிமை - 1



சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் வீடு வலிமை பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில், தொழில் மற்றும் வேலை வாய்ப்பினை சிறப்பாக அமைத்து தரும், சுய ஜாதகத்தில் 10ம் வீடு பாதிப்பது சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் ஜீவன ரீதியான சிரமங்களை தரக்கூடும், சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவதும் , சரியான இளம் வயதில் நடைபெறும் திசாபுத்திகள் வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துவதும், ஜாதகருக்கு ஜீவன ரீதியாக யாதொரு தடையும் இன்றி, அவருக்கு உகந்த தொழில் வாய்ப்பினை சுயமாகவோ, அடிமை தொழிலாகவோ இயற்கையாக அமைத்து தந்துவிடும், ஜாதகர் ஜீவன ரீதியாக யாதொரு இன்னல்களையும் சந்திக்கமால், தனது வாழ்க்கையில் வெற்றிநடை போட ஆரம்பித்து விடுவார், மேலும் ஜீவன முன்னேற்றம் என்பது ஜாதகருக்கு தன்னிரைவாகவும், பொருளாதார ரீதியான வசதி வாய்ப்புகளையும் வாரி வழங்கி விடும்.

மாறாக சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் வீடு வலிமை அற்று காணப்படுவது ( 6,8,12ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது அல்லது பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவது ) ஜாதகரின் வாழ்க்கையில் ஜீவன ரீதியான கடுமையான போராட்டங்களை தந்து விடும், குறிப்பாக ஜீவன ஸ்தானம் எனும் 10ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது என்பது ஜாதகரின் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவிலான இன்னல்களை தந்துவிடும், அடிப்படையில் ஜாதகருக்கு சரியான வயதில் ஓர் வேலை அல்லது தொழில் அமைவது குதிரை கொம்பாக மாறிவிடும், தனக்கு ஏற்ற வேலை எது என்று உணர்ந்துகொள்ளவே ஜாதகருக்கு பல வருடங்கள் பிடிக்கும், தனக்கு உகந்த வேலையைதான் செய்து வருகிறோமா ? என்று அறியாமலே சூழ்நிலை கைதி போல் மற்றவருக்காக தனது உழைப்பை சிந்தும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவர், சுய கவுரவம் வெகுவாக பாதித்த போதிலும், ஜீவனத்தை கருத்தில் கொண்டு, அடிமை சேவகம் செய்யும் சூழ்நிலையை தரும், அடிப்படையிலேயே ஜாதகருக்கு பரதேஷ ஜீவனம் வாய்த்துவிடும், தனது குடும்பம், பெற்றோர், உடன் பிறப்பு, குழந்தைகள் மற்றும் உறவுகளை விட்டு  வேறு இடத்தில் சென்று ஜீவிக்கும் சூழ்நிலையை தரும்.

சுய ஜாதகத்தில் மற்ற பாவகங்கள் வலிமை பெற்று இருந்தாலும், அதன் வழியிலான பலாபலன்களை ஜாதகர் அனுபவிக்க இயலாது சூழ்நிலையை தரும், தனது தகுதிக்கு உகந்த வேலை இல்லை என்று தெரிந்தும் ஜாதகர்  அதில்  இருந்து வெளிவர ஜாதகரின் பொருளாதாரம் இடம் தாராது, ஜாதகர் செய்யும்  சுய முயற்சிகள் யாவும் கடும் தோல்வியை தரும், பொதுவாக ஜீவன ஸ்தான வலிமை பெறுவது என்பது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு, சுய தொழில் செய்தாலோ, அல்லது அடிமை தொழில் செய்தாலும் குறுகிய காலத்தில் ( 3 வருடங்களில் இருந்து 5 வருடங்களுக்குள் ) தன்னிறைவான பொருள் வசதியையும், மிகப்பெரிய தொழில் முன்னேற்றங்களையும் வாரி வழங்கி விடும், ஜீவன ஸ்தான பாதிப்பு என்பது கிணற்றில் போட்ட கல் மாதிரி யாதொரு சிறு அசைவும் இன்றி துவங்கிய நிலையில் ஜாதகர் எப்படி இருந்தாரோ அதே நிலையில் வைத்திருக்கும், ஜீவன ரீதியான முன்னேற்றங்கள்  என்பது ஜாதகருக்கு சிறிதும் ஏற்படாது, இந்த சூழ்நிலையில் உள்ள அன்பர்கள் தனது சுய ஜாதக வலிமையை பற்றி தெளிவாக உணர்ந்து கொண்டு மாற்று வழிகளை நடைமுறைக்கு கொண்டுவந்து வாழ்க்கையில் வெற்றி பெறலாம், அதற்க்கு உறுதுணையாக அமைவது அவர்களது சுய ஜாதகத்தில்  உள்ள பாவக வலிமையே என்றால் அது மிகையில்லை.

சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை குன்றும் பொழுது ஜாதகர் பெரும் இன்னல்களை பற்றி ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : தனுசு
ராசி : கடகம்
நட்ஷத்திரம் : புனர்பூசம் 4ம் பாதம்

மேற்கண்ட ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் எனும் 10ம் வீடு திடீர் இழப்பை தர கூடிய  ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பது ஜாதகரின் ஜீவன ரீதியான இன்னல்களை தரும், குறிப்பாக தொழில் அல்லது வேலை வழியிலான சங்கடங்கள், அதிக வேலை பளு, திருப்தி அற்ற வேலை, வேலை செய்யும் இடத்திலும், பொது வாழ்க்கையிலும் கடுமையான சிக்கல்கள், ஓர் ஸ்திரமான முடிவு எடுக்க இயலாமல் தடுமாறும் சூழ்நிலை, செய்யும் காரியங்கள் யாவிலும் ஏமாற்றம், அடிக்கடி வேலையை ராஜினாமா செய்துவிட்டு வேறு வேலையை தேடிக்கொண்டு இருப்பது, ஜீவன ரீதியான ஸ்திர தன்மை இல்லாமல் வீண் அலைச்சல் அலையும் தன்மை என்ற வகையில் கடுமையான இன்னல்களை தரும்.

மேற்கண்ட ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் மட்டும் அல்ல கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன வீடான மகரம் தொடர்பு பெறுவது பாதக ஸ்தானத்துடன் என்பது மிகுந்த இன்னல்களை தொழில் மற்றும் ஜீவன ஸ்தான வழியில் இருந்து தரும், சுய ஜாதகத்திலும் ஜீவன ஸ்தானம் பாதிக்கப்பட்டு, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ராசியான மகரமும் பாதிக்கப்படுவது ஜாதகரின் அடிப்படை ஜீவனத்தை கேள்விக்குறியாக மாற்றும், ஜாதகருக்கு கிட்டத்தட்ட 27 வயது நெருங்கிவிட்டது இருப்பினும் நல்லதொரு சிறு வேலையும் இதுவரை  கிடைக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது, சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் பாதிக்கப்படுவது ஜாதகருக்கு எவ்வித பலன்களை தருகிறது என்பது  மேற்கண்ட ஜாதகமே ஓர் சரியான உதாரணம்.

சரி சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் வீடும், கலபுருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமான மகரமும் கடுமையாக பாத்திக்கப்பட்டு விட்டது, நடைபெறும் திசா புத்தியாவது ஜாதகருக்கு யோக பலன்களை தருகின்றதா? என்பதை கவனத்தில் கொண்டு ஆய்வு செய்யும் பொழுது, தற்போழுது  நடைபெரும் புதன் திசை ஜாதகருக்கு 4,6,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 4,6,7ம் பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை தந்து கொண்டு இருக்கின்றது, புதன் திசையில் தற்போழுது நடைபெறும் சந்திரன் புத்தி ஜாதகருக்கு 12ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, அவமானம், உடல் நல பாதிப்பு, அனைத்திலும் நஷ்டம், அமைதி இல்லா மனம், தேவையற்ற சவகாசம் மற்றும் பூர்வீகத்தை விட்டு பரதேச ஜீவனத்தை தந்து கொண்டு இருக்கின்றது .

ஜாதகரின் சுய ஜாதக வலிமையின் அடிப்படையில் மற்றவர்களை நம்பி முதலீடு செய்து தொழில் செய்ய விரும்பினால் திடீர் இழப்பு நிச்சயம் உண்டு, கூட்டு முயற்சி செய்து தொழில் செய்யலாம் என்றால் சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது கூட்டாளிகள் வழியில்  கோவணம் வரை உருவிவிட்டு விடும், பொருட்களை வைத்து ( வீடு நிலம் வண்டி வாகனம், தொழில் உபகரணம் ) தொழில் செய்யலாம் என்றால் அடிப்படையே ஆட்டம் காணும், எனவே ஜாதகருக்கு உள்ள ஜீவன ரீதியான வாய்ப்புகளை ஆய்வு செய்வோம் (3,9) பாக்கிய ஸ்தானம் வலிமை பெறுவது சிறு வியாபாரம் செய்யலாம், அல்லது கல்வி நிறுவனத்தில் வேலை செய்யலாம், (11 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு களத்திர ஸ்தானம் ) லாப ஸ்தானம் வலிமை பெறுவதால் ஒருவேளை திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை துணையின் ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு தொழில் முயற்சிகளில் இறங்கலாம், இருப்பினும் திருமணம் நடைபெறவே மிகுந்த  கால  தாமதம் ஆக கூடும், ஆனால் குருட்டு அதிர்ஷ்டம் ஜாதகருக்கு உண்டு என்பதால் 11ம் பாவக வழியிலான ஜீவனத்தை ஆய்வு செய்து, 11ம் பாவக சம்பந்தம் பெற்ற தொழில்களை செய்து வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.

ஜாதகருக்கு 3,9,11ம் பாவகங்களை தவிர மற்ற அனைத்து பாவகங்களும் பாதிக்கப்பட்டு உள்ளது, குறிப்பாக 2,4,5,6,7ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை வாரி வழங்கும், ஜாதகர் பாதிக்கப்பட்ட பாவக வழியிலான பிரீதி பரிகாரங்களை மேற்கொண்டு நலம் பெறுவது அவசியமாகிறது.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை அற்ற ஜாதகர்கள் சுய தொழில் செய்ய சிறிதும் யோகம் அற்றவர்கள் என்பதை அவர்களது ஜீவன ஸ்தானம் வலிமையே நன்றாக உணர்த்துகிறது என்பது கவனிக்கத்தக்க அம்சமாகும்.

அடுத்த பதிவில் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்ற ஓர் ஜாதகத்தை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வெள்ளி, 29 ஜூலை, 2016

ஜாதக ஆலோசனை, திருமணம் எப்பொழுது? வாழ்க்கை துணை எப்படி அமையும்?


ஜாதக ஆலோசனை : 

சந்தேகங்களும் அதற்க்கு உண்டான உண்மை விளக்கங்களும்.

Opinions from other Astrologers about my horoscope:

1. Marriage will happen before Aug 2016.
2. No possibilities of marriage in kethu thissai.I should do marriage before kethu thisai starts.
3. Marriage possibilities would be less in my horoscope.
4. Suriyan in 7th house in my horoscope, so i will have problems in my marriage, marriage life. I have kalathira dosham and sarpa dosam. Sun is placed badly in 7th house, so problem will be more in my life.
5. Last minute marriage will cancel.If i marry also,I will stay alone for long time without wife.
6. I have pen(women) sabam in my horoscope. So, i could choose the girl who is a widower or divorcee or short time separated girl from husband or inter caste girl or engagement cancelled girl.
7. I should do only job. I should not invest money in business, if i do business, there will be a huge loss.
8. I will have extra affair or may be possibility of second marriage.
9. I have less luck in my horoscope.
10.I will loose my properties and wealth.
11.Future wife will be short tempered nature. Marriage life will not be happy.
12.Some problems will come in before marriage.
13.Rahu in 2nd place and kethu in 8th place, so i have sarpa dosam. Because of this, marriage is getting delayed.
14.I will loose many big opportunities in my life.

15.I will get a very old age wife.


1) நிச்சயமாக நடக்க வாய்ப்பில்லை, ஏனெனில் தற்போழுது நடைபெறும் புதன் திசையும் தங்களுக்கு விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்துகிறது, புதன் திசையில் நடைபெறும் சனி புத்தியும் தங்களுக்கு விரைய ஸ்தான பலனையே ஏற்று நடத்துகிறது, எனவே தங்கள் எடுக்கும் திருமண முயற்ச்சிகள் யாவும் தோல்வியையே தழுவும்.

2) கேது திசையில் திருமணம் செய்ய வாய்ப்பில்லை என்பது, முற்றிலும் தவறான கருத்து, ஏனெனில் கேது திசை தரும் பலாபலன்கள் பற்றியும், கேது திசை ஏற்று நடத்தும் பாவகங்களின் வலிமை பற்றியும் அறியாமல் சொல்லும் பொது பலனாகவே இது உள்ளது, தங்களது ஜாதகத்தில் அடுத்து வரும் கேது திசை தங்களுக்கு லாப ஸ்தானமான 11ம் பாவக பலனை ஏற்று நடத்துவது தங்களுக்கு அதிர்ஷ்டமிக்க யோகவாழ்க்கையை வாரி வழங்கும், மேற்கண்ட கூற்று முற்றிலும் தவறானது, கேது திசை தங்களுக்கு முழு அளவில் யோகத்தையே தருகிறது, ( கேது திசை வழங்கும் பலாபலன்கள் பற்றி தனி பதிவு இடப்படும் ) மேலும் கேது திசைக்கு முன்னாள் தற்போழுது நடைபெறும் புதன் திசையும் சரி, புதன் திசை சனி புத்தியும் சரி தங்களுக்கு விரைய ஸ்தான  பலனையே நடத்துவதால் நிச்சயம் திருமணம் நடைபெற வாய்ப்பில்லை என்பதை உணருங்கள், தங்களுக்கு எதிர்வரும் கேது திசையே  யோகம் மிகுந்த திருமண வாழ்க்கையை அமைத்து தரும்.

3) இது தங்களது ஜாதக வலிமைக்கு புறம்பான உண்மையற்ற கருத்து, சுய ஜாதகத்தில் ஒருவருக்கு குடும்பம் எனும் 2ம் பாவகமும், களத்திரம் எனும் 7ம் பாவகமும் கடுமையாக பாதிக்கப்பட்டால் மட்டுமே ( பாதக ஸ்தான தொடர்பை பெற்று, நடைபெறும் திசா புத்திகளும் ஜாதகருக்கு பாதிக்கப்பட்ட 2,7ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே) ஜாதகருக்கு திருமண வாழ்க்கை இல்லை என முடிவு செய்யலாம், தங்களது சுய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகம் வலிமை உடனும், களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் மிக மிக வலிமையுடன் இருப்பது, மனதிற்கு உகந்த இல்லற வாழ்க்கையை வாரி வழங்கும், இது கேது திசையில் கேது புத்தியிலேயே நடைமுறைக்கு வரும்.

4) சூரியன் 7ம் பாவகத்தில் அமர்ந்தாலே தீமையை மட்டுமே செய்யும் என்ற கூற்று முற்றிலும் உண்மைக்கு புறம்பானது, தங்களது சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் மிகவும் வலிமை பெற்று உள்ளது எனவே, இங்கு அமர்ந்த சூரியபகவான் தங்களுக்கு நன்மைகளையும் யோகத்தியுமே நல்குவார், குறிப்பாக வெளிநாடு, வெளியூர் வழியில் இருந்து யோகம் உண்டாகும், களத்திர ஸ்தானம் தங்களுக்கு உபய மண் தத்துவத்தில் அமைவது, தங்களது வாழ்க்கை துணை வழியில் இருந்து பரிபூரண யோகங்களை அனுபவிக்க வல்லவர் என்பதை தெளிவுபடுத்துகிறது, மேலும் இங்கு அமர்ந்த சூரிய பகவானால் தங்களுக்கு எவ்வித இன்னல்களும் இல்லை, இல்லற வாழ்க்கையிலும் யாதொரு துன்பமும் நிகழாது என்பதை கருத்தில் கொள்வது தங்களுக்கு  நன்மையை தரும், மேலும் களத்திர ஸ்தானம் வலிமை பெற்றுள்ளது யோகமே, இதில் யாதொரு களத்திர தோஷமும் இல்லை, சர்ப்ப தோஷமும் இல்லை என்பதே உண்மை.

5) திருமண முயற்ச்சிகள் கடைசி நேரத்தில் தோல்வியை தந்தத்திற்கு தற்போழுது தங்களுக்கு நடைபெறும் திசை மற்றும் புத்தி (புதன்,சனி  ) வலிமை அற்ற விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்திடுவது, மட்டுமே காரணமாக சொல்ல இயலும், ஆகவே தற்போழுது  நடைபெறும் திசை மற்றும் புத்தி சாதகமாக தங்களுக்கு இல்லாமல் இருப்பதே இதற்க்கு முழு முதற் காரணமாக அமைந்து விடுகிறது, மேலும் வாழ்க்கை துணை இல்லாமல் வெகு காலம் எல்லாம் தாங்கள் அவதிப்படும் நிலையை தாராது, நடைபெறும் புதன் திசை சனி புத்தி  நிறைவுக்கு பிறகு வரும் கேது திசை, கேது புத்தியில் நல்ல வாழ்க்கை துணை அமையும் .

6) தங்களுக்கு எந்த ஒரு பெண்ணின் சாபமும் இல்லை ( அப்படி இருப்பின் சுய ஜாதகத்தில் 2,7,8ம் பாவகங்கள் காட்டி கொடுத்துவிடும் ) மேலும் விதவை பெண்ணை திருமணம் செய்யும் அளவிற்கு தங்களுக்கு எந்த ஒரு குறையும் ஜாதக ரீதியாக இல்லை, வேற்று ஜாதியில் திருமணம் செய்யும் நிலையும் தங்களுக்கு வாராது, கணவனை குறுகிய காலத்தில் பிரிந்த பெண்ணையும் திருமணம் செய்யும் நிலையும் வாராது, ஒருவேளை இதை சொன்னவர்களுக்கு வேண்டுமானால் பெண் சாபம் இருக்க கூடும், அதனால் தான் மேற்கண்ட பலனை தங்களுக்கு வழங்கி உள்ளனர்.

7) சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவதும், லாப ஸ்தானம் மிகவும் வலிமை பெறுவதும் தங்களுக்கு நல்ல தொழில் வெற்றிகளை வாரி வழங்கும், இது திருமணத்திற்கு பிறகும், கேது மற்றும் சுக்கிரன் திசையில் நடைமுறைக்கு வரும், ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று இருக்கும் ஜாதகர்கள் சுய தொழில் செய்ய அருகதை உடையவர்கள், லாப ஸ்தானம் வலிமை பெறுவது செய்யும் தொழில் வழியில் இருந்து நல்ல லாபங்களை முன்னேற்றத்தையும் வாரி வழங்கும், தாங்கள் ஓர் இடத்தில் பணிபுரிவதை விட சுய தொழில் செய்வது சகல நிலைகளில் இருந்து லாபத்தை வாரி வழங்கும், அதற்க்கு உண்டான வாய்ப்புகள் தங்களுக்கு வந்துகொண்டு இருக்கின்றது வாழ்த்துக்கள்.

8) இரண்டாவது திருமணத்துக்கு தங்களுக்கு வாய்ப்பில்லை, உங்களுக்கு விருப்பம் இருந்தால் முயற்ச்சி செய்யலாம், அதற்க்கு " ஜோதிடதீபம் " பொறுப்பு ஏற்காது.

9) ஒருவரது ஜாதகத்தில் லக்கினம் எனும் முதல் பாவகம் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதை விட  வேறு அதிர்ஷ்டம் உலகில் இல்லை எனலாம், தங்களுக்கு 1,5,7,8,11ம் வீடுகள் அனைத்தும் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, அதிர்ஷ்டத்தின் தன்மையை தங்களது ஜாதகத்திற்கு இறைஅருள் பரிபூரணமாக வாரி வழங்கி உள்ளது, ஆனால் என்ன தற்போழுது நடைபெறும் புதன் திசை தங்களுக்கு லாப ஸ்தான பலனை ஏற்று நடத்தவில்லை, அடுத்து வரும் கேது மற்றும் சுக்கிரன் திசைகளில் அதிர்ஷ்டத்தின் முழு பலாபலன்களை தாங்கள்  பரிபூர்ணமாக அனுபவிக்கலாம் என்பது வரவேற்க தக்க அம்சமாகும், (அவயோகம் பெற்றவர்களிடம் தாங்கள் ஆலோசனை பெற்றால் மேற்கண்ட கருத்தைத்தான் தங்களுக்கு வழங்குவார்கள்.)

10) தங்களின் அறிவு சார்ந்த முடிவுகள் மட்டுமே தங்களுக்கு சுக குறைவை தரும், எந்த விதத்திலும் தங்களுக்கு பொருள் இழப்பு, சொத்து இழப்பு, மற்றும் பொருளாதார இழப்பு வர வாய்ப்பில்லை.

11) தங்களது களத்திர ஸ்தானம் வலிமை பெற்று இருப்பது, தங்களுக்கு வரும் வாழ்க்கை துணையின் விசாலமான மனப்பக்குவம் கொண்டவர் என்பதை உறுதி செய்கிறது, மேலும் அழகும் அறிவும் ஒருங்கே அமையப்பெற்ற பொறுமைசாலியாக இருப்பர் என்பதும் தெளிவாகிறது. தங்களது இல்லற வாழ்க்கை 100% விகித மகிழ்சசியுடன் சிறப்பாக இருக்கும் என்பதே உண்மை.

12) ஒன்றும் வராது, ஏனெனில் சுய ஜாதகம் மிகவும் வலிமையுடன் உள்ளது, இதை சொன்னவர்களுக்கு வேண்டுமானால் ஏதாவது வராதது வரக்கூடும்.

13) 2ல் ராகு,8ல் கேது இருப்பது தங்களது ஜாதகத்தில் வலிமையாக உள்ளதா? வலிமை அற்று உள்ளதா? என்பதில் தெளிவு தேவை, தங்களது ஜாதகத்தில் 2ல் உள்ள ராகு தங்களுக்கு சிறப்பான நன்மைகளை வழங்குகிறார், 8ல் உள்ள கேது சற்று இன்னல்களை தருகிறார் அவ்வளவே, இதில் சர்ப்ப தோஷத்திற்கு எவ்வித வாய்ப்பும் இல்லை, சாயா கிரகங்கள் வழங்கு பலாபலன்கள் பற்றிய தெளிவு இல்லாத பொழுது, சர்ப்ப தோஷம் என்று கூறிவிடுவது சிலரது இயல்பாக உள்ளது என்பதே முற்றிலும் உண்மை, இதற்கும் தங்களது திருமண தாமதத்திற்கு யாதொரு காரணமும் இல்லை, ராகு வின் வலிமையை தங்களுக்கு வரும் வருமானத்தை கொண்டு தாங்களே சுய மதிப்பீடு செய்யலாம், ராகு கேது பற்றி விரிவாக பதிவு செய்யப்படும்.

14) அப்படி ஒரு நிகழ்வு தங்களின் வாழ்க்கையில் நடைபெறாது, ஏனெனில் லாப ஸ்தானம் வலிமை பெற்று இருப்பது தங்களின் வாழ்க்கையில் அனைத்து வாய்ப்புகளையும் பரிபூரணமாக அனுபவிக்க வைக்கும், குறிப்பாக அடுத்து வரும் கேது திசை மற்றும் சுக்கிரன் திசை தங்களின் வாழ்க்கையில் யோகங்களை வாரி வழங்கும்.

15) களத்திர ஸ்தான வலிமை மற்றும் களத்திர ஸ்தான அதிபதி ஆகியவை தங்களுக்கு மிகவும் சிறப்பாக இருப்பது நிச்சயம் இளம் வயது வாழ்க்கை துணையை பெற்று தரும், மேற்கண்ட கூற்றில் சிறிதும் உண்மை இல்லை அன்பரே, கேது திசை சுக்கிரன் திசை இரண்டு திசைகளும் தங்களுக்கு லாப ஸ்தான பலனை வாரி வழங்குவது அதிர்ஷ்டகரமான எதிர்காலத்தை வாரி வழங்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை அன்பரே!

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

திங்கள், 29 பிப்ரவரி, 2016

சுப கிரகமான குருபகவான் தனது திசாபுத்தி காலங்களில் அவயோகத்தை தருவது ஏன் ?


இயற்க்கை சுபகிரகங்கள் தனது திசா புத்தி காலங்களில் யோக பலன்களை தரும் என்று கணிப்பது முற்றிலும், சுய ஜாதக கணிதத்திற்கு புறம்பானதாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது, சுப கிரகமோ, பாவ கிரகமே தனிப்பட்ட பலாபலன்களை ஜாதகருக்கு தருவதில்லை, சுய ஜாதகத்தில் உள்ள பாவகங்களின் வலிமைக்கு ஏற்ப, தனது திசையில் குறிப்பிட்ட ஒரு பாவகத்தின் பலனையோ அல்லது ஒன்றுக்கு மேற்ப்பட்ட பாவகங்களின் பலனையோ ஏற்று நடத்துகிறது என்பதே உண்மை, சுப கிரகங்களின் திசா புத்திகள் ஜாதகருக்கு நன்மையை தரும், பாவக கிரகங்களின் திசா புத்திகள் ஜாதகருக்கு தீமையை தரும் என்று கணிப்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பான கற்பனையே அன்றி வேறு எதுவும் இல்லை, சுய ஜாதகத்தில் பாவக வலிமையின் பலாபலன்களையே நவகிரகங்கள் தனது திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில் ஏற்று நடத்துகிறது என்பதே 100% விகித உண்மையாகும், எனவே சுய ஜாதகங்களில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் வலிமையாக இருப்பின், நடைபெறும் பாவக கிரகத்தின் திசா புத்திகளும், தாம் ஏற்று நடத்தும் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நன்மையையும் யோகத்தையும் வாரி வழங்கும், மாறாக லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் வலிமை அற்று இருப்பின், சுப கிரகங்களின் திசாபுத்திகள் நடைபெற்றாலும், தாம் ஏற்று நடத்தும் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு அவயோக பலன்களே நடைமுறைக்கு வரும்.

இதற்க்கு சரியான உதாரண ஜாதகம் கொண்டு விளக்கம் பெறுவோம் அன்பர்களே !

ஜாதகருக்கு லக்கினம் : துலாம் 
ஜாதகருக்கு ராசி : மகரம் 
ஜாதகருக்கு நட்சத்திரம் : உத்திராடம் 4ம் பாதம் 


சுய ஜாதகத்தில் ஜாதகருக்கு  தற்பொழுது குரு திசை நடைமுறையில் உள்ளது, இதற்க்கு முன் நடந்த ராகு திசையில் செவ்வாய் புத்தி காலத்தில் இருந்து ஜாதகரின் வாழ்க்கையில் அதிக அளவு இன்னல்களையும் துன்பங்களையும் எதிர்கொள்ளும் சூழ்நிலைக்கு ஆளானார், குறிப்பாக ஜாதகரின் வேலை பறிபோனது, வருமான வாய்ப்புகளை இழந்தார், கடன் சார்ந்த தொந்தரவுகள், திடீர் இழப்புகளை ஜாதகர் தவிர்க்க இயலாத சூழ்நிலைகளை சந்திக்கும் தன்மையை தந்தது, ராகு திசை முடிந்து, குரு திசை ( 11ல் குரு ) ஜாதகருக்கு யோகத்தை தரும் என்ற எண்ணத்தில் மிகப்பெரிய இடியே விழுந்தது, குரு திசை குரு புத்தியும் ஜாதகருக்கு மிகுந்த துன்பங்களையே வழங்கி கொண்டு இருப்பது, ஜாதகரின் எதிர்கால வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியது, ஜாதகர் மேற்கண்ட இன்னல்களை சந்திக்க காரணம் என்ன ? சுப கிரகமான குரு தனது திசையில் ஏன் நன்மையை செய்யவில்லை என்பதை இனி "ஜாதக ரீதியாக" ஆய்வு செய்வோம் அன்பர்களே!

சம்பந்த பட்ட ஜாதகருக்கு கடந்த ராகு திசை 1ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தந்த போதிலும், ராகு திசை செவ்வாய் புத்தி நடைமுறைக்கு வந்த உடன் செவ்வாய் புத்தி ஜாதகருக்கு 4ம் வீடு திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவக்த்துடன் சம்பந்தம் பெற்று, ஜாதகரின் வருமானத்திற்கும் சுக போக வாழ்க்கைக்கும்  தடைகளை வழங்கியது ( 8ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு குடும்பம் மற்றும் தன ஸ்தானமாக  அமைகின்றது ) மேலும் ஜாதகருக்கு தற்பொழுது  (12/07/2015 முதல் 29/08/2017 வரை) நடைபெறும் குரு திசை குரு புத்தியும் 12ம் வீடு  விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலன்களை தருவது ஜாதகரின் மன நிம்மதி இழப்பு, வீண் விரையங்கள், மன அழுத்தம் மற்றும் மன போராட்டம் என்ற வகையில் அதிக இன்னல்களையே வாரி வழங்குவது ஜாதகருக்கு சாதகமற்ற சூழ்நிலையே நீடிப்பது உறுதியாக தெரிகிறது, சுய ஜாதகத்தில் பாதக ஸ்தானத்தில் அமர்ந்து இருக்கும் குரு பகவான் ஜாதகருக்கு வலிமை அற்ற 12ம் பாவக பலனை தனது திசை மற்றும் புத்தியில் ஏற்று நடத்துவது ஜாதகருக்கு விரைய ஸ்தான வழியில் இருந்து அதிக  அளவு இன்னல்களையே தரும் என்பது கவனிக்க தக்க விஷயமாகும்.

ஜாதகரின் கேள்வி :

திருமணம் தாமதம் ஆக காரணம் என்ன?

சுய ஜாதகத்தில் 2ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று வலிமை இழப்பதும், 8ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு  குடும்ப ஸ்தானமாக அமைந்து பாதிக்க படுவதும் ஜாதகரின் திருமண வாழ்க்கையில் தாமதத்தையும் தடைகளையும் தருகிறது.

வேலை தொழில் எப்பொழுது அமையும் ?

நிச்சயம் சுய தொழில் அமைய வாய்ப்பில்லை சுய ஜாதகத்தில் 10ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது சுய தொழில்  வாய்ப்பை கனவாக்கும், 7ம் பாவகம் வலிமை பெறுவதால் கூட்டு தொழில் அல்லது திருமணதிற்கு பிறகு கூட்டு தொழில் துவங்குவதால் நல்ல  வெற்றிகளை பெற இயலும், மேலும் வெளிநாடுகளில் நல்ல ஜீவன முன்னேற்றத்தை தரும், லக்கினம் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது ஜாதகர் ஏதாவது ஒரு நிறுவனத்தில் பணியாற்றுவது அல்லது  அடிமை தொழில் மேற்கொள்வதே ஜாதகரின் வாழ்க்கையில் சகல  நலன்களையும் தரும்.

தற்பொழுது நடைபெறும் குரு திசையில், குரு புத்தி, சனி புத்தி மற்றும் புதன் புத்திகள் சிறப்பான ஜீவன முன்னேற்றத்தை வழங்க வாய்ப்பில்லை என்பதால், ஜாதகர் ஏதாவது வேலையை தேடிக்கொள்வது சால சிறந்தது, மேலும் வெளியூரில் சென்று வலை பார்ப்பது சகல நன்மைகளையும், திருமண யோகத்தையும் தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 11 பிப்ரவரி, 2016

திருமணம் நடைபெறும் கால நேரம் எப்பொழுது? திருமணம் தாமதமாக காரணம் என்ன ?


சுய ஜாதக அமைப்பின்படி ஒருவருக்கு திருமணம் நடைபெறும் கால நேரத்தை துல்லியமாக அறிவது எப்படி என்பதை இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே! பொதுவாக திருமணம் வாழ்க்கை ஒருவருக்கு அமைவதை பற்றி சுய ஜாதகத்தில் 2,7ம் பாவக வலிமை வைத்து மிக எளிதாக உணர்ந்துகொள்ள முடியும், சுய ஜாதகங்களில் குடும்பம் மற்றும் களத்திரம் எனும் இரண்டு பாவகங்களும் வலிமையாக இருப்பின், சம்பந்தபட்ட ஜாதகருக்கு இளம் வயதில்  சரியான நேரத்தில் திருமண வாழ்க்கை அமைந்துவிடும், குடும்பம் மற்றும் களத்திரம் எனும் இரண்டு பாவகங்களில் ஏதாவது ஒன்று பாதிக்க படும் பொழுது , ஜாதகருக்கு திருமண வாழ்க்கை என்பது சற்று கால தாமதமாக தேடுதல்களுக்கு பிறகு  அமையும், குடும்பம் மற்றும் களத்திரம் எனும் இரண்டு பாதிக்க படும் பொழுது ஜாதகரின் திருமணம் தடை பெற்ற திருமணமாக அமையும் அல்லது வெகுகால தாமதத்திற்கு  பிறகு அமையும்.

திருமண வாழ்க்கை அமைவதை நிர்ணயம் செய்வது சம்பந்த பட்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் உள்ள குடும்பம் மற்றும் களத்திரம் எனும் இரண்டு பாவகங்களின் வலிமையே, பொதுவாக திருமண வாழ்க்கை அமைவது ( குரு பலம் ) எனப்படும் சந்திர ராசிக்கு கோட்சார ரீதியாக குரு சிறப்பன இடங்களில் சஞ்சாரம் செய்யும் காலங்களில் என்பதில் "ஜோதிடதீபம்" மாற்று கருத்தை முன்வைக்கிறது, அதாவது குரு பலம் அற்ற நேரங்களிலும், சுய ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திரம் எனும் இரண்டு பாவகங்கள் வலிமை பெற்று, வலிமை பெற்ற குடும்பம் மற்றும் களத்திர ஸ்தான பலனை நடைபெறும் பெரும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஏற்று நடத்தினால், அந்த திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் ஜாதகருக்கு திருமண வாழ்க்கையை சிறப்பாக அமைத்து தரும் என்பதை உறுதியாக பதிவு செய்கிறது.

உதரணமாக :


ஜாதகருக்கு லக்கினம் : மகரம் 
ராசி : தனுசு 
நட்சத்திரம் : மூலம் 2ம் பாதம் 

சுய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் வீடு விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று கடுமையாக பாதிக்க பட்டு இருக்கிறது, ஆனால் 7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடனே சம்பந்தம் பெற்று மிகவும் வலிமையாக இருக்கிறது, எனவே ஜாதகருக்கு 2ம் பாவக வலிமை அற்ற தன்மையினால் திருமணம் தாமதமாகும் ( ஜாதகருக்கு வயது 32 ) 7ம்  பாவக வலிமை ஜாதகருக்கு திருமணம் தாமதமாக நடைபெற்றாலும் யோகம் மிகுந்த வாழ்க்கை துணையை பெற்று தரும்.

இனி ஜாதகருக்கு திருமணம் நடைபெறும் கால நேரம் எப்பொழுது என்பதை ஆய்வு செய்வோம் அன்பர்களே, ஜாதகருக்கு திருமணம் நடை பெரும் கால நேரத்தை துல்லியமாக உணர, சுய ஜாதகத்தில் எந்த திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் 7ம் பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்பதை ஆய்வு செய்வது  அவசியமாகிறது, ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறுவது சந்திரன் திசை எனவே சந்திரன் எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறார் என்பதை காண்போம், ஜாதகருக்கு சந்திரன் தனது திசையில் 8ம் வீடு ஆயுள் பாவக பலனை ஏற்று நடத்துவது உகந்ததல்ல, சந்திரன் திசையில் தற்பொழுது நடைபெறும் ராகு புத்தி 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு  பெற்று யோக பலனை தருவது வரவேற்க தக்கது, சந்திரன் திசை, ராகு புத்தியில் எதிர் வரும் கேது அந்தரமே ( 21/10/2016 முதல் 26/11/2016 வரை ) ஜாதகருக்கு களத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்துகிறது என்பதால், சந்திரன் திசை, எதிர்வரும் ராகு புத்தியில், கேது அந்தரத்தில் ஜாதகருக்கு திருமணம் நிச்சயம் அமையும், அந்த காலத்தில் அமையும் வாழ்க்கை துணை வழியில் இருந்து ஜாதகர் சகல யோகங்களையும் அனுபவிக்கும் நல்ல வாய்ப்பு உண்டாகும் என்பதை கவனத்தில் வைத்து ஜாதகர் சரியான முடிவுகளை எடுப்பது மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும்.

எனவே திருமண வாழ்க்கையை சிறப்பாக அமைத்து தருவது சுய ஜாதகத்தில் உள்ள  2,7ம் பாவக வலிமையும் சரியான வயதில் வலிமை பெற்ற 2,7ம் பாவக பலனை ஏற்று நடத்தும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் அன்றி வேறு எதுவும் இல்லை அன்பர்களே! அதே போன்று திருமணம் தாமதம் அல்லது தடை ஏற்ப்படுவதர்க்கும் சுய ஜாதகத்தில் 2,7ம் பாவக வலிமை அற்ற நிலையே காரணமாக அமையும், உதாரணமாக திருமணமே நடைபெறாமல் இருக்கும் அன்பர்களின் சுய ஜாதகத்தில் 2,7ம் வீடுகள் 6,8,12ம் பாவகங்களுடன் தொடர்பு பெற்றோ அல்லது பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றோ இருக்கும் என்பதை அவர்களது சுய ஜாதக ஆய்வில் அறியலாம், 

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

புதன், 3 பிப்ரவரி, 2016

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - கும்ப லக்கினம்




சாய கிரகங்கள் என்று போற்றப்படும் " ராகு கேது" பெயர்ச்சி, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் ராசியான கும்ப ராசியை, லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு, லக்கினத்திற்கு 1ல் ராகு பகவானும், 7ல் கேதுபகவானும் சஞ்சாரம் செய்து, இனி வரும் 18 மாதங்களுக்கு வழங்கும் பலாபலன்களை பற்றி ஆய்வு செய்வோம் அன்பர்களே!

கும்ப இலக்கின சிறப்பு இயல்புகள் :

கும்ப  ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, லக்கினம் வலிமை பெறும் பொழுது, ஜாதகரின் தன்னம்பிக்கையும், சமயோசித புத்திசாலித்தனமும் அதிகரிக்கும், எந்த ஒரு சூழ்நிலையையும் தனது அறிவு திறனால் சமாளிக்கும் யோகம் பெற்றவர்கள், தன்னிறைவான சுக போக வாழ்க்கையை தனது சுய முயற்ச்சி  மூலம் ஈட்டும் வல்லமை பெற்றவர்கள், தனது சிந்தனைக்கும் அறிவு திறனுக்கும் வரும் சவால்களை சிறப்பாக எதிர்கொண்டு வெற்றி பெரும் அன்பர்கள், எப்பொழுதும் சுறு சுறுப்பான இயக்கத்துடனும் புதிய உத்வேகத்துடனும் செயலாற்றும் தன்மை பெற்றவர்கள், தனது அறிவு திறன், விடா முயற்ச்சி, கடின உழைப்பின் மூலம் வாழ்க்கையில் சகல நலன்களையும் தன்னை தேடி வரசெய்யும் வல்லமை பெற்றவர்கள், வருமுன் உணரும் சக்தியும், செய்யும் செயல்களின் முடிவினையும் தெளிவாக தெரிந்து வைத்திருப்பார்கள், சரியான திட்டமிடுதல்கள் இவர்களின் வெற்றிகரமான வாழ்க்கையை 100% விகிதம் நிர்ணயம் செய்யும், மனதில் நினைத்த எண்ணங்களையும், லட்சியங்களையும் தமது வாழ்க்கையில் நடைமுறைக்கு கொண்டுவரும் திறமை இயற்கையாகவே அமைய பெற்றவர்கள், வாழ்க்கையில் நடந்ததை மறந்து "வந்தது வரட்டும் வருவதை எதிர்கொள்வோம்" என்று எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துகொள்ளும் மன தைரியமும், தன்னம்பிக்கையும் இவர்களது சிறப்பு என்றால் அது மிகையல்ல.

கடந்த ராகு கேது பெயர்ச்சி கும்ப இலக்கின அன்பர்களுக்கு 2ல் கேதுவும்,  8ல் ராகுவும்,  சஞ்சாரம் செய்து குடும்ப ஸ்தான அமைப்பில் இருந்து அதிக இன்னல்களையும், துன்பங்களையும், வருமான இழப்புகளையும் வழங்கியது, 8ல் கேது சில சமயம் தவிர்க்க இயலாத திடீர் இழப்பையும், உடல்நல குறைவையும் தந்தது, முதலீடுகளில் இருந்து வீண் விறையங்களையும் எதிர்பாராத சந்தர்பங்களில் வழங்கியது, ஆனால் தற்பொழுது பெயர்ச்சி அடைந்துள்ள ராகு கேது பெயர்ச்சியினால் மிகுந்த யோக பலன்களையே வாரி வழங்குகிறது, லக்கினத்தில் கேது பகவானின் சஞ்சார நிலை தங்களுக்கு அறிவு திறன், புத்திசாலித்தனம் மூலம்  வரும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் யோகத்தை தரும், திடீர் அதிர்ஷ்டம், எதிர்பாராத உதவிகள், சுய தொழில் முன்னேற்றம், அனைவரின் ஆதரவு கிடைத்தல்,  முற்போக்கு சிந்தனையுடன் அனைத்தையும் எதிர்கொள்ளும் வாய்ப்பு, சிந்தித்து சரியான விஷயங்களை கையாளும் வல்லமை, எதிர்ப்புகள்    அனைத்தும்  அகன்று வெற்றி வாய்ப்பினை மிக எளிதாக பெரும் யோகம், உடல் மற்றும் மன நலனில் ஆர்வம், இதுவரை தீராத உடல் தொந்தரவுகளுக்கு சரியான மருத்துவம் மூலம் நலம் உண்டாகுதல், சிறந்த  ஆன்மீக குருவின் ஆசி மூலம் வாழ்க்கையில் நலம் பெறுதல், சிறப்பு வாய்ந்த ஆன்மீக திருத்தலங்களுக்கு சென்று வரும் யோக, புதிய மாற்றங்களையும் புதிய வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்தி கொண்டு வாழ்க்கையில் லாபமும், அதிர்ஷ்டமும் பெரும் யோகம், செல்லும் இடங்களில் நல்ல வரவேற்ப்பு, அன்னியர்கள் மூலம் அளவில்லா லாபமும் அதிர்ஷ்டமும் உண்டாகும், எனவே லக்கினத்தில் கேது சஞ்சாரம் தங்களின் வாழ்க்கையில் புதிய மாற்றங்களை வாரி வழங்கும்.

7ல் சஞ்சாரம் செய்யும் ராகுவினால், தங்களின் வாழ்க்கை துணை வழியில் இருந்து 100% விகித ஸ்திரமான நன்மைகளை பெற இயலும், குறிப்பாக இதுவரை திருமண தடைகளை சந்தித்து கொண்டு இருந்த அன்பர்களுக்கு, அதிஷ்டம் மிகுந்த சிறப்பான வாழ்க்கை துணை பெரும் யோகம் உண்டாகும், காதலில் வெற்றியும், திருமண வாழ்க்கையில் சந்தோஷமும் உண்டாகும், நண்பர்கள் கூட்டாளிகள் தங்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு உதவிகரமான செயல்களில் ஈடுபடுவார்கள், கூட்டு தொழில் மூலம் லாபமும் அதிர்ஷ்டமும் உண்டாகும், வெளிநாடுகளில் உள்ள அன்பர்களுக்கு இது ஒரு யோக காலமாக கருதலாம், ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் உள்ள அன்பர்களுக்கு அளவில்லா லாபமும் அதிர்ஷ்டமும் உண்டாகும், தொழில்   விருத்தி தங்களுக்கு தங்கு தடையின்றி அமையும், மருத்துவ துறையில் உள்ள அன்பர்களுக்கு இது ஒரு பொற்காலம், மருத்துவம் சார்ந்த கல்வி கற்றுகொண்டு  இருக்கும் மாணவர்களுக்கு சிறந்த முன்னேற்றமும், நல்ல வேலை வாய்ப்பும் அமையும், வெளிநாடு வாய்ப்புகள் தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றங்களை வாரி வழங்கும்,  எதிர்பார்ப்புகள் நிறைவேறும், சமூக அந்தஸ்தும்,கௌரவமும் அதிகரிக்கும், அரசியலில் உள்ள அன்பர்களுக்கு ஸ்திரமான வெற்றி கிட்டும், வெளிவட்டார பழக்க வழக்கங்கள் மூலம் அதிர்ஷ்டமும், லாபமும் அதிகரிக்கும், கூட்டு தொழிலில் உள்ள அன்பர்களுக்கு அபரிவிதமான லாபம் நிச்சயம் கிடைக்கும்.

மொத்தத்தில் எதிர்வரும் ராகுகேது பெயர்ச்சி கும்ப இலக்கின அன்பர்களுக்கு 100% விகிதம் சுய முன்னேற்றத்தையும் எதிர்பாராத மக்கள் செல்வாக்கையும் வாரி  வழங்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, கும்ப  இலக்கின அன்பர்கள் அனைவரும் ராகுகேது பெயர்ச்சியால் லக்கினம் மற்றும்  களத்திர ஸ்தான வழியில் இருந்து மிகுந்த நன்மைகளை பெறுகின்றனர் என்பது  கவனிக்க தக்க அம்சமாகும்.

குறிப்பு :

மேற்கண்ட பலாபலன்கள் கும்ப இலக்கின அன்பர்களுக்கு, தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 01 மற்றும் 07ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே 100% சதவிகிதம் நடைபெறும், எனவே கும்ப இலக்கின அன்பர்கள் சுய ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 01,07ம் பாவக பலனை ஏற்று நடத்துகிறதா? என்பதில் தெளிவு பெறுவது அவசியமானதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

திருமண தடைகளையும், திருமணத்திற்கு பிறகு இன்னல்களையும் அனுபவிக்கும் ஜாதக நிலை !


 திருமணம் ஒருவருக்கு சரியான வயதில், சிறப்பாக அமைவது என்பது அவரின் வாழ்க்கையில் வரும் முன்னேற்றங்களுக்கு சரியான அடித்தளத்தை அமைத்து தரும், ஜாதகத்தில் உள்ள யோக பலன்களை பரிபூரணமாக அனுபவிக்கும் சந்தர்ப்பங்களையும் சூழ்நிலைகளையும் தங்கு தடையின்றி வாரி வழங்கும், ஆண்  என்றாலும் சரி பெண் என்றாலும் சரி, திருமண வயது வந்தவுடன் எந்த காரணத்தை கொண்டு திருமணத்தை தள்ளிபோடாமல், இல்லற வாழ்க்கையில் இணைந்து நன்மைகளையும் யோகங்களையும் அனுபவிப்பதே சிறந்த வாழ்க்கையை தரும்.

தன் ஜாதகம் சற்று பாவக வலிமை அற்று இருப்பினும், தனது வாழ்க்கை துணையின் ஜாதகம் சிறப்பாக அமைந்தால் இல்லற வாழ்க்கையில் இனிமையும் மகிழ்ச்சியும் பொங்கும், இதற்க்கு தனது சுய ஜாதகத்தின் பாவக வலிமை நாம் உணர்ந்து இருப்பது நல்ல ஏனெனில், நமது ஜாதக நிலையை பற்றிய தெளிவு இருந்தால் மட்டுமே, வாழ்க்கை துணையுடன் நமது இல்லற வாழ்க்கை எப்படி அமையும் என்ற விழிப்புணர்வுடன் நடந்துகொள்ள இயலும், மாறாக நமது ஜாதக வலிமையை உணராத பொழுது, விதியின் மீது காரணம் சொல்லிக்கொண்டு முரண்பட்ட இல்லற வாழ்க்கையை, போராட்டத்துடன் சந்திக்கும் சூழ்நிலையை தரும்.

சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 பாவகங்களின் வலிமைக்கு ஏற்ப்பவே நமக்கு நடைபெறும் பலாபலன்கள் நடைமுறைக்கு வருகிறது, சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து யோக பலன்களும், வலிமை அற்ற பாவக வழியில் இருந்து அவயோக பலன்களும் நடைபெறுகிறது, இதை திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் நடைமுறைக்கு கொண்டுவருகிறது, ஒரு சில வினாடிகள் வித்தியாசத்தில் பிறந்த இரட்டையர்களுக்கு கூட ஒரே பலாபலன்கள் நடைமுறைக்கு வருவதில்லை, காரணம் பாவக வலிமை என்பது ஒரு வினாடியில் மாற்றம் பெறக்கூடும், சுய ஜாதக வலிமையை பற்றி தெளிவு பெரும் பொழுது தமது வாழ்க்கை பாதையை மிகவும் சிறப்பாக அமைத்துக்கொண்டு, வாழ்க்கையில் பல வெற்றிகளை மிக எளிதாக பெற இயலும் அன்பர்களே!

கிழ்கண்ட ஜாதகத்தில் பாவகங்களின் வலிமையை பற்றியும், நடைபெறும் திசை, எதிர்வரும் திசை தரும் பலாபலன்கள் பற்றியும், தனது ஜாதக வலிமைக்கு ஏற்ப தனது வாழ்க்கையை எவ்வாறு சிறப்பாக 
அமைத்துக்கொண்டு வெற்றி பெறுவது என்பதை பற்றியும் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே!

இயற்கையாக நமது சுய ஜாதகம் வலிமை பெரும் பொழுதும், நடைமுறையில் அல்லது எதிர்வரும் திசைகள் வலிமை பெற்ற பாவகத்தின் பலனை ஏற்று நடத்தும் பொழுதும் சம்பந்தபட்ட பாவக வழியில் இருந்து யோக பலன்களை நாம் தங்குதடையின்றி அனுபவிக்க இயலும், மாறாக சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை குறைந்து, நடைபெறும் அல்லது எதிர்வரும் திசைகள் வலிமை அற்ற பாவகத்தின் பலனை ஏற்று நடத்தினால், எப்படிபட்ட தீர்வுகளை  விழிப்புணர்வுடன் நாம் கையாண்டு, நன்மைகளை பெறுவது என்பதை பற்றி இனி பார்ப்போம்.

கிழ்கண்ட ஜாதகிக்கு 

லக்கினம் : மேஷம் 
ராசி : ரிஷபம் 
நட்சத்திரம் : ரோகிணி 4ம் பாதம் 


ஜாதகத்தில் பாவகங்களின் வலிமை நிலை 

1,4,5,7,9,11,12ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம்,
2,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம்,
3ம், வீடு சகோதர ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம்,
6ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம்,
10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம்,

எனவே ஜாதகி 1,4,5,7,9,11,12ம் பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களையும், 2,6,8ம் பாவக வழியில் இருந்து 60% விகித இன்னல்களையும், 3ம் பாவக வழியில் இருந்து 30% விகித நன்மைகளையும், 10ம் பாவக வழியில் இருந்து 100% விகித நன்மைகளையும் அனுபவிக்கும் தன்மையை தரும்.

தற்பொழுது நடைமுறையில் உள்ள ராகு திசை ஜீவன ஸ்தான பலனையும், பாதக ஸ்தான பலனையும் கலந்து நடைமுறை படுத்துகிறது, எனவே ஜாதகி ஜீவன வழியில் இருந்து யோக பலன்களையும், பாதக ஸ்தான வழியில் இருந்து அவயோக பலன்களையும் அனுபவிக்கும் தன்மையை தரும், எதிர்வரும் குரு திசை ஜாதகிக்கு பாதக ஸ்தான பலனை மட்டுமே நடைமுறைபடுத்துவது, மிகுந்த இன்னல்களுக்கும் சிரமங்களுக்கும் ஆளாக்கும் என்பதால், இனி வரும் காலங்களில் ஜாதகி அதிக விழிப்புணர்வுடன் வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும்.

பெரும்பாலான பாவகங்கள் (3,10 பாவகங்களை தவிர ) ஜாதகிக்கு மிகுந்த பாதிப்பை தருவதால் ஜாதகி பாதிக்க பட்ட பாவகங்களில் இருந்து வரும் இன்னல்களை எதிர்கொள்ளும் மன நிலைக்கு வந்துவிடுவது, ஜாதகியை பாதிக்கபட்ட பாவக வழி இன்னல்களை மிக எளிதாக கையாளும் வாய்ப்பை தரும், ( உதாரணமாக 7ம் பாவக வழியில் இருந்து இன்னல்கள் வரும் எனும் பொழுது ஜாதகி அடிப்படையில் தனது நண்பர்களை தேர்வு செய்யும் பொழுது எச்சரிக்கையுடன் இருக்கலாம், கூட்டு முயற்ச்சியை தவிர்க்கலாம், வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் பொழுது அவரது ஜாதகம் மிகவும் வலிமை உடையதாக தேர்வு செய்யலாம், பொது காரியங்களில் ஈடுபடாமல், தனது வேளையில் மட்டும் கவனம் செலுத்தலாம் ) தனது ஜாதகம் வலிமை அற்று இருப்பதை உணர்ந்தால் மட்டுமே மற்ற விஷயங்களில் ஜாதகி கவனமுடன் இருந்து நன்மைகளை பெற இயலும், தனது ஜாதக வலிமையை பற்றி தெரியாத பொழுது ஜாதகி பாவகங்களின் தன்மைக்கு ஏற்ப விதி பயனை அனுபவிக்கும் சூழ்நிலையை தந்துவிடும்.

ஜாதகிக்கு வயது 25, இதுவரை தனக்கு வந்த நல்ல வரன்கள் அனைத்தையும் ஏதாவது காரணங்களை சொல்லி தவிர்த்து வருகிறார், தனது ஜாதக வலிமையை பற்றி தெரியாமல், ஜாதகி விதி பயனை அனுபவித்துக்கொண்டு இருப்பது எதார்த்தமான உண்மை, மேற்கண்ட ஜாதக வலிமையை பற்றிய விஷயத்தை ஜாதகிக்கு எடுத்து கூறி, சரியான இல்லற வாழ்க்கையை அமையை " ஜோதிடதீபம் " அறிவுறுத்தியது, ஜாதகியின் பாவக வலிமைக்கு ஏற்றப்ப, மிகவும் வலிமையான பாவகங்களை பெற்ற, வரனின் ஜாதகத்தை தேர்வு செய்து ஜாதகிக்கு பரிந்துரை செய்தது, ஜாதகியும் ஜாதகியின் பெற்றோரும் இதை ஏற்றுக்கொண்டு சரியான இல்லற வாழ்க்கையை தமது மகளுக்கு அமைத்து தர இசைந்தது இறை அருளின் கருணையே.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696   

புதன், 26 ஆகஸ்ட், 2015

தாமத திருமணம் அல்லது திருமண வாழ்க்கையில் தடை ஏன் ?


" இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே " என்ற பாடல்தான் நமக்கு நினைவுக்கு வருகிறது கிழ்கண்ட ஜாதகத்தை ஆய்வு செய்யும் பொழுது அன்பர்களே ! 

மேலும் தம்மிடம் உள்ளது முயலா? ஆமையா ? என்பதும் தெரியாமல் ஆமையை பிடித்துகொண்டு முயலை போல் ஓடவேண்டும் என்று கட்டளையிட்டால் எப்படி சாத்தியமாகும், பொதுவாக ஆணாக இருந்தால் திருமணம் செய்ய உகந்த வயது 25, அதுவே பெண்ணாக இருப்பின் திருமணம் செய்ய உகந்த வயது 21, இது இயற்கையாக உள்ள நடைமுறை, இதற்க்கு மாறாக திருமண வயதை தள்ளிபோடுவது என்பது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி சரியான விஷயமாக படவில்லை, அது ஜோதிட ரீதியாக இருந்தாலும் சரி, மருத்துவ ரீதியாக இருந்தாலும் சரி.

 திருமணத்தை தள்ளிபோடுவதர்க்கு இன்றைய இளம் தலைமுறையினர் சொல்லும் காரணம் பொருளாதார தன்னிறைவு, பொருளாதார தன்னிறைவை அடைந்த பிறகே திருமணம் என்ற வாதம் இன்றைய இளம் தலைமுறையினரை, சரியான முன்னேற்றத்தை நோக்கி அழைத்து செல்லும் என்று நிச்சயம் சொல்ல இயலாது, காரணம் ஒவ்வொரு வயதுகளிலும் பொருளாதார தேவைகள்  நிச்சயம் இருந்துகொண்டே இருக்கும், இந்த பொருளாதார தேவைகளை முடிவுக்கு கொண்டு வருவது என்பது சாத்தியமில்லாத ஒன்று, அதுவும் திருமணம் ஆகாமல் தனியாளாக சமாளிப்பது என்பது நிச்சயம் இயலாது, காரணம் திருமணதிற்கு பிறகே ஒருவரின் சுய ஜாதகத்தில் களத்திர பாவக பலன்கள் நடைமுறைக்கு வருகிறது,.
 
அதன்பிறகே ஜாதகருக்கோ அல்லது ஜாதகிக்கோ சமுதாயத்தில் மதிப்பு மரியாதையும், சமூக அந்தஸ்தும் உண்டாகிறது, வெளிவட்டடார பழக்கவழக்கங்களும், 7ம் பாவக வழியில் இருந்து பெரிய மனிதர்களின் ஆதரவும் ஜாதகருக்கு முழு வீச்சில் செயல்பட துவங்குகிறது, ஜாதகர் ஒருவேளை களத்திர பாவக பலனை நடைமுறைக்கு கொண்டு வராமல் இருப்பின் 7ம் பாவக வழியில் இருந்து வரும் எவ்வித யோக பலனையும் அனுபவிக்க தகுதியற்றவராக மாறிவிடுகிறார், இதை கருத்தில் கொண்டே சரியான வயதில் திருமணத்தை நடத்தி வைத்து சம்பந்தபட்ட தம்பதியருக்கு சமூகத்தில் ஒரு அந்தஸ்தையும், அங்கீகாரத்தையும்  நமது பெரியோர்கள் கொடுத்தார்கள், இதன் அடிப்படையிலேயே தம்பதியரின் நல்வழ்க்கையும் சிறப்படைந்தது.

திருமணம் எனும் விஷயம் என்று பெரியவர்களின் கைகளை விட்டு, இளைய தலைமுறையினரின் கைகளுக்கு சென்றதோ, அன்றே நமது இளைய தலைமுறையினரின் வாழ்க்கை வெகுவாக பாதிப்பிற்கு உள்ளாகியது எனலாம், கிழ்கண்ட ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே!


லக்கினம் : ரிஷபம்  
ராசி : மேஷம் 
நட்சத்திரம் : அஷ்வினி 4ம் பாதம் 

ஜாதகிக்கு வயது 40, தனது 21 ஒரு வயதில் இருந்து ஜாதகிக்கு வரன் பார்க்கின்றனர், இன்னும் வரன் அமைந்தபாடில்லை, ஜாதகி ஓரளவு படித்தவர் மேலும் தனது வருமானத்தில் சுயமாக வாழும் தன்மையை பெற்றுள்ளது குறிப்பிட தக்கது, மேலும் ஜாதகிக்கு தனது மனதில் தனது கணவனை பற்றிய கற்பனையில் வரன் தேடியதால், தனது கற்பனைக்கு நிகரான ஒரு வாழ்க்கை துணையை ஜாதகி இதுவரை சந்திக்கவில்லை, மேலும் தனது பேச்சுக்கு குடும்பத்தில் யாரும் எதிர்த்து பேசாததால், ஜாதகியின் போக்கே திருமண தாமதத்திற்கு காரணமாக அமைந்தது, தனக்கு வரும் நல்ல வரன்களை கூட ஜாதகி தட்டி கழிப்பது  இன்னும் நடைமுறையில் உள்ளது , ஜாதகி செய்யாத பரிகாரங்கள் இல்லை எனலாம், இனி ஜாதகியின் சுய ஜாதகத்தை ஆய்வு செய்வோம் அன்பர்களே !

ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற அமைப்புகள் :

1ம் வீடு முதல் பாவகமான லக்கினத்துடன் தொடர்பு பெற்றதும்,
10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றதும் மிகவும் வலிமையான அமைப்பு.

ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் வலிமை அற்ற அமைப்புகள் :

2,4,7,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றதும்,
3,6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றதும்,
5,11ம் வீடுகள் சத்துரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றதும், மிகவும் வலிமை அற்ற அமைப்பு.

மேற்கண்ட ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானம் எனும் 2பாவகங்களும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகியின் திருமண வாழ்க்கையை வெகுவாக பாதிப்பிற்கு ஆளாக்கியது, ஜாதகியின் 8ம் பாவகம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமாக அமைந்து தனது முன்னோர்கள் செய்த வினை பதிவின் தன்மையை ஜாதகி குடும்பம் மற்றும் களத்திர ஸ்தான அமைப்பில் இருந்து அனுபவிக்கும் சூழ்நிலையை தந்தது, தந்துகொண்டு இருக்கிறது எனவே ஜாதகிக்கு வயது 40 ஆகியும் திருமணம் நடைபெறாமல் இன்னும் முதிர்கன்னியாகவே வாழும் சூழ்நிலையை தந்துகொண்டு இருக்கிறது, ஜாதகியும் தனது ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையை உணராமல், தனக்காக ஒரு ராஜகுமாரன் வருவான் என்ற கற்பனையில், கோட்டை கட்டி வாழ்ந்துகொண்டு இருக்கிறார், தனது பேச்சுக்கு எவரும் எதிர்த்து பேசாத சூழல் உள்ளதால் ( பெற்றோருக்கு வயதாகிவிட்டதால் ) தான் வைத்ததே சட்டம் என்று வாழ்ந்துகொண்டு இருக்கிறார்.

சுய ஜாதகத்தில் 1,10ம் பாவகங்களை தவிர மற்ற அனைத்து பாவகமும் கடுமையாக பாதிக்கபட்டு இருப்பது, ஜாதகியின் விதிபயனை சரியாக அனுபவித்துக்கொண்டு இருப்பதை உறுதி செய்கிறது, லக்கினம் வலுபெருவது உடல் மற்றும் மன நலனில் நன்மையையும், ஜீவன ஸ்தானம் வலுபெருவது நல்ல வேலையும் அதன் வழியில் இருந்து வரும் வருமானத்தையும் உறுதி செய்கிறது.

2ம் பாவகம் பாதிப்பது 40 வருடங்கள் ஆகியும் குடும்ப வாழ்க்கை அமையாமல் சிரமத்தையும், வரும் வருமானம் அனைத்தையும் வீண் விரையத்தையும் தருகிறது, ஜாதகியின் பேச்சும் மற்றவர்கள் ரசிக்கும்படி இனிமையாக இல்லாதது கவனிக்கதக்கது, 4ம் பாவகம் பாதிப்பது சுக போக வாழ்க்கை இல்லாமல், தடுமாறும் சூழ்நிலையும், ஜாதகியின் பெயரில் எவ்வித சொத்து வண்டி வாகனம் இல்லாத நிலையை தருகிறது,7ம் பாவக வழியில் இருந்து நல்ல நண்பர்கள் இல்லை, சரியான வாழ்க்கை துணை அமையவில்லை, 8ம் பாவக வழியில் இருந்து பூர்ண ஆயுள் உள்ள போதும், வீண் இழப்புகளை தவிர்க்க இயலவில்லை, வாழ்க்கை துணை வழியில் இருந்து பெரும் வருமான வாய்ப்பையும் தவிர்க்க வைக்கிறது.

3ம் பாவாகம் பாதிப்பது சகோதர ஆதரவு இல்லை, எடுக்கும் செயல்களிலும், முயற்ச்சிகளிலும் தொடர் தோல்விகளை சந்திக்கும் தன்மையை தருகிறது, 6ம் பாவகம் பாதிப்பது ஜாதகிக்கு நிறைய எதிர்ப்புகளும், எதிரிகளும் மிக அதிக அளவில் உள்ளது ஜாதகியின் திருமண வாழ்க்கையை தாமத படுத்த ஒரு காரணமாக அமைகிறது, 9ம் பாவகம் பாதிப்பது பெரியமனிதர்களின் உதவி இல்லாமல் அவர்களின் வெறுப்பிற்கு ஆளாகும் சூழ்நிலையை தந்தது, 12ம் பாவகம் பாதிப்பது ஜாதகியை வீண் கற்பனையில் கனவு கோட்டை கட்டி வாழும் சூழ்நிலையை தந்தது.

5ம் பாவகம் பாதிப்பது, சொல்புத்தியும் இல்லாமல் சுய அறிவும் இல்லாமல், தான்தோன்றி தனமாக நடக்கும் நிலையை தந்துகொண்டு இருக்கிறது, 11ம் பாவகம் பாதிப்பது ஜாதகிக்கு எவ்வித அதிர்ஷ்டமும் இல்லாமல், 400 வரன்கள் வந்த போதிலும் தனக்கு பொருத்தம் இல்லை என வரன்கள் அனைவரையும் தவிர்க்க வைத்து, சரியான வயதில் நடக்கவேண்டிய விஷயங்கள் யாவும் நடைபெறாமல் துரதிர்ஷ்ட வாழ்க்கையும், மூட பழக்க வழக்கங்களில் திளைத்து தனது வாழ்க்கையை தானே பாழ்படுத்திகொள்ளும் சூழ்நிலையை தந்துள்ளது.

சுய ஜாதகத்தில் ஜாதகிக்கு 12 பாவகங்களில் 10 பாவகங்கள் வலிமை அற்று காணப்பட்டாலும், இதற்க்கு முன் நடந்த சந்திரன் திசை 24/08/2012 வரை நல்ல நல்ல வாய்ப்புகளையும், வரன்களையும் வழங்கிய போதும் ஜாதகியின் கற்ப்பனை ஜாதகியின் வாழ்க்கையை வெகுவாக பாதித்தது, குறிப்பாக திருமணம் எனும் ஒரு விஷயம் இதுவரையிலும் தடையாகவே அமைந்துவிட்டது, ஜாதகிக்கு பிறகு இரண்டு சகோதரிகள் உண்டு அவர்களுக்கும் திருமணம் இன்னும் நடைபெறவில்லை என்பது வருந்தத்தக்க ஒரு விஷயமாகவே படுகிறது, தற்பொழுது நடைபெறும் செவ்வாய் திசை 12ம் பாவக பலனை ஏற்று நடத்துவது ஜாதகியின் கற்பனை வாழ்க்கைக்கு இன்னும் சற்று அதிகமாகவே தூபம் போடும் என்பது மட்டும் மறுக்க இயலாத உண்மை.

குறிப்பு :

ஜாதகி இனிவரும் காலங்களிலாவது, தனது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 2,7ம் வீடுகள் வலிமையுள்ள சாதகமாக தேர்ந்தெடுத்து இல்லறவாழ்க்கையில் இணைய, இறையருள் கருணை செய்யட்டும் என ஜோதிடதீபம் வேண்டுகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 30 ஜூன், 2015

திருமணம் மூலம் யோக வாழ்க்கையும், களத்திர பாவக வலிமையையும் !


 சில ஜாதகங்களில் திருமணத்திற்கு பிறகு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றமும், அளவில்லா சொத்து சுக சேர்க்கையும், சமுதாயத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும், உயர்தரமான யோக வாழ்க்கையும் அமைவதுண்டு, நேற்றுவரை சாதாரண மனிதராக இருந்த நபர்கள்கூட, திடீரென அந்தஸ்த்து மற்றும் புகழ் பெறுவது, வாழ்க்கை துணை அமைந்தால் வந்த யோகமகவே  கருதலாம், இந்தநிலை முரண்பட்டதாகவும் அமைவதுண்டு நேற்று வரை சுகவாசியாக இருந்தவர் திருமணதிற்கு பிறகு ஆதாலபாதலத்திர்க்கு செல்வதும் உண்டு, இவை அனைத்தையும் நிர்ணயம் செய்வது ஒருவரது ஜாதகத்தில் உள்ள வலிமை மற்றும் வலிமை அற்ற களத்திர ஸ்தான பலனே, பொதுவாக சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் மிகவும் வலிமையுடன் இருப்பது ஜாதகருக்கு மிகுந்த யோகத்தை தரும்.

 குறிப்பாக களத்திர ஸ்தானம் லாப ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று, லாப ஸ்தானம் சர ராசியாக அமைவது ஜாதகருக்கு அபரிவிதமான யோகத்தை 100% விகிதம் வாரி வழங்கும், மேலும் லாப ஸ்தானம் கடகமாக அமைந்தால் ஜாதகரின் யோக போக சுக  வாழ்க்கையின் தரத்தை யாராலும் நிர்ணயம் செய்ய இயலாது இந்த வாய்ப்பு இரண்டு லக்கினத்திற்கு மட்டுமே பொருந்தும் 1) சிம்மம் 2) கன்னி இந்த இரண்டு லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு மட்டுமே லாப ஸ்தானம் கடகத்தில் அமையும். ( கன்னி லக்கினத்திற்கு கடகம் 11ம் பாவகமாக வருவது இயற்க்கை, சிம்ம லக்கினத்திற்கு கடகத்தில் 11ம் பாவகம் அமைவது பற்றி பின்பு விளக்கப்படும் ) 

பொதுவாக இன்றைய சூழ்நிலையில் திருமண வயதில் உள்ள ஆண் பெண் இருபாலரின் எண்ணமும் நல்ல வேலை நல்ல சம்பாத்தியம், அதன் பிறகே திருமணம் என்ற சிந்தனையிலேயே உள்ளது, இது வரவேற்க தக்கதல்ல, மேலும் சுய ஜாதகத்தில் ஒருவருக்கு நல்ல தொழில் அமைவதற்கும் சமூகத்தில் நல்ல  மதிப்பு மரியாதை கிடைப்பதற்கும், களத்திர ஸ்தானம் வழிவகுக்கும் என்ற உண்மை வெகுவாக எவருக்கும் புரிவதில்லை, திருமணம் என்பது  " பருவத்தே பயிர் " என்ற முதுமொழிக்கு ஏற்ப சரியான வயதில் அமைந்தால் ஜாதகருக்கோ ஜாதகிக்கோ 100% விகித தொழில் வாய்ப்புகள் மிக சிறப்பாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை, மேலும் களத்திர பாவக வழியில் இருந்து ஜாதகர் அனுபவிக்க வேண்டிய யோகங்களை திருமணத்திற்கு பிறகே அனுபவிக்க இயலும், களத்திர பாவக வழியில் இருந்து யோகங்கள் திருமணத்திற்கு பிறகே செயல்படும்.

ஒருவரது ஜாதகத்தில் ( ஆண் அல்லது பெண் ) களத்திர பாவகம் நல்ல வலிமையுடன் இருப்பின் ஜாதகர், திருமணத்தை தள்ளி போட போட, ஜாதகர் களத்திர பாவக வழியில் இருந்து வரும் யோகங்களை அனுபவிக்க இயலாமல் போக நேரலாம், தொழிலை காரணம் காட்டி மறுக்கப்படும் திருமணங்கள்  மூலம் வதுவும், வரணும் மிகப்பெரிய யோக வாழ்க்கையை இழக்கின்றனர் என்பது கண்கூடான உண்மை, மேலும் சாதரணமாக ஜாதகருக்கு கிடைக்க வேண்டிய விஷயங்கள் கூட கிடைக்க பெறாமல், வாழ்க்கையில் அதிக அளவில் போராட்டங்களை கடுமையாக சந்தித்து கொண்டு இருக்கு பல ஜாதகங்களை ஜோதிடதீபம் கண்டுள்ளதால், சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் வலிமை பெற்று இருப்பின் சம்பந்த பட்ட ஜாதகரோ, ஜாதகியோ எந்த காரணத்தை கொண்டும், திருமணத்தை தள்ளிபோடாமல் மணவாழ்க்கையை அமைத்து கொண்டு வாழ்க்கையில் மிக பெரிய அதிர்ஷ்டங்களையும், யோகங்களையும் பெறுவதே சாலசிறந்தது.

களத்திர வழியில் அவயோக ஜாதக நிலை :

கிழ்கண்ட ஜாதகருக்கு குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானம் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பது, ஜாதகர் திருமணத்திற்கு பிறகு எதிர்கொள்ளும் இன்னல்களை கட்டியம் கூறுகிறது.


ஜாதகருக்கு அமையும் வாழ்க்கை துணையின் மூலமாக மிகப்பெரிய இன்னங்களையும் துன்பங்களையும் சந்திக்கும் சூழ்நிலையை தரும், தந்துகொண்டு இருப்பது கண்கூடான உண்மை, இருப்பினும் ஜாதகரால் அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வர இயலவில்லை என்பது கவனிக்கத்தக்கது, சரியான வாழ்க்கை துணை அமையாத காரணத்தால், ஜாதகர் வாழ்க்கை மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது வருந்ததக்கது.

களத்திர வழியில் யோக ஜாதக நிலை :

கிழ்கண்ட கன்னி இலக்கின ஜாதகருக்கு களத்திர பாவகம் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம், இருப்பினும் ஜாதகர் தனக்கு வரும் நல்ல திருமண வாய்ப்புகளை தவிர்த்து கொண்டு இருப்பது, ஜாதகருக்கு களத்திர பாவக  வழியில் இருந்து வரும் நல்ல வாய்ப்புகள் அனைத்தும் வீணாவது தனது சுய ஜாதக வலிமையை உணராத தன்மையே அன்றி வேறு இல்லை.



 இதனால் ஜாதகருக்கு வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் யோகமும் கிடைக்கவில்லை, நண்பர்கள்,கூட்டாளிகள் மற்றும் பொதுமக்கள் வழியில் இருந்து கிடைக்கும் யோகமும் தவிர்க்கபடுவது ஜாதகராலேயே என்றால் அது மிகையில்லை, எனவே சுய ஜாதகத்தில் உள்ள வலிமையின் நிலையை சிறந்த ஜோதிடர் மூலம் உணர்ந்து வாழ்க்கையை சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் அமைத்துகொல்வதே சிறந்தது என்று ஜோதிடதீபம் இன்றைய இளைஞர் இளைஞிகளுக்கு வலியுறுத்துகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

திங்கள், 22 ஜூன், 2015

சுய ஜாதகத்தில் திருமண யோக நிலையும், குருபலமும், நடைபெறும் திசை வழங்கும் பலன்களும்!


 திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில், சுய ஜாதகத்தில் குருபலம் பெறுவது அவசியமானதாக பெரும்பாலான ஜோதிடர்கள் கருதுகின்றனர், அதாவது சுய ஜாதகத்தில் ராசிக்கு குருபகவான் 2,5,7,9,11ம் ராசிகளில் சஞ்சாரம் செய்யும் பொழுது, ஜாதகருக்கு திருமண வாழ்க்கை கைகூடிவரும், இதுவரை திருமண வாழ்க்கை அமையாத அன்பர்களுக்கு, குருபகவான் ராசிக்கு 2,5,7,9,11ம் ராசிகளில் சஞ்சாரம் செய்யும் பொழுது நிச்சயம் திருமணம் மிகவும் சிறப்பாக நடைபெறும் என்பதும், சுய ஜாதகத்தில் நடைபெறும் திசை புத்திகள் வழங்கும் பலன்களை கருத்தில் கொள்ள தேவையில்லை என்பது போன்ற மாய தோற்றம் உள்ளது, இதை பற்றி இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்ர்களே !




லக்கினம் : சிம்மம் 
ராசி : கன்னி 
நட்சத்திரம் : உத்திரம் 3ம் பாதம் 

 மேற்கண்ட சிம்ம இலக்கின ஜாதகருக்கு  ( 21/03/2001 முதல் 22/03/2019 வரை ) ராகு திசை நடைமுறையில் உள்ளது, நடைபெறும் ராகு திசை 2,4,8,10,12 ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 12ம் பாவகம் சர ராசி என்றமுறையில் 100% அவயோக பலன்களை வாரி வழங்கிக்கொண்டு இருக்கிறது, மேலும் இந்த ஜாதகருக்கு ராகு திசையில் கடந்த 15 வருடங்களில் குருபகவான் சந்திரன் நின்ற ராசிக்கு 2,5,7,9,11ம் ராசிகளில் 1முறைக்கு மேல் கோட்சார சஞ்சாரம் செய்துவிட்டார், அதாவது குரு பலம் பெற்று சஞ்சாரம் செய்துவிட்டார், ஜாதகருக்கும் வயது 35 ஆகிவிட்டது, ஆனால் திருமணம் மட்டும் கைகூடி வரவில்லை, மேலும் சிம்ம லக்கினத்திற்கு குருபகவான் யோகத்தை செய்பவர் என்ற நிலைவேறு உள்ளது, ஆக இந்த ஜாதகருக்கு குரு பலம் பலன் தர இயலாமைக்கு காரணம் ஏன் ? என்பதை இனி ஆய்வு செய்வோம் அன்பர்களே.

பொதுவாக சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 பாவகங்களின் வலிமை, நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் ஏற்று நடத்தும் பாவகங்களின் தன்மை, திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் ஏற்று நடத்தும் பாவகங்களுடன் தொடர்பு பெரும் கோட்சார கிரகங்கள் வழங்கும்  பலாபலன்கள் என்ற விஷயங்களை கருத்தில் கொண்டால் மட்டுமே ஒருவருடைய சுய ஜாதகத்தில் நடைபெறும் நடைமுறை பலன்களை துல்லியமாக கூற இயலும் அன்பர்களே! மாறாக சந்திரனை அடிப்படையாக கொண்டு கோட்சார கிரக நிலைகளின் பலன்களை காண முற்படும் பொழுது, சுய  ஜாதகத்திற்கு உண்டான பலன்களை நிச்சயம் தெளிவாக கூற இயலாது என்பது மட்டும் உறதி, மேலும் முரண்பட்ட பலன்களையே ஜாதகருக்கு சொல்லவேண்டி வரும், உதாரணமாக மேற்கண்ட ஜாதக பலன்களை ஆய்வு செய்வோம்.

ஜாதகருக்கு தற்பொழுது நடைமுறையில் உள்ள ராகு திசை எவ்வித யோக பலன்களையும் வழங்கவில்லை 2,4,8,10,12 ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 12ம் பாவக பலனை ராகு திசை ஏற்று நடத்துகிறது, ராகு திசையில் குரு புத்தியை தவிர நடைபெற்ற அனைத்து புத்திகளும் ஜாதகருக்கு 12ம் பாவக பலனையே ஏற்று நடத்தியிருக்கிறது.

 மேலும் தற்பொழுது நடைமுறையில் உள்ள சுக்கிரன் புத்தியும் ( 08/10/2012 முதல் 09/10/2015 வரை ) 12ம் பாவக வழியில் இருந்து மிகுந்த அவயோக பலன்களையே வாரி வழங்குவது கவலைக்கு உரிய விஷயமாகவே படுகிறது, மேலும் சுய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 100% அவயோக பலன்களை தருவது ஜாதகரின் குடும்ப வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றுகிறது, களத்திர ஸ்தானம் எனப்படும் 7ம் பாவகம் மட்டும் 30% வலிமையுடன் இருப்பது ஜாதகருக்கு திருமணம் நடக்கும் என்பதை உறுதி செய்கிறது, திருமண வாழ்க்கை அமையும் காலம் எது ? என்ற கேள்விக்கு அடுத்து வரும் சூரியன் புத்தி திருமண வாழ்க்கையை அமைத்து தரும் என்பது பதில், ஏனெனில் அடுத்து வரும் சூரியன் புத்தி சுய  ஜாதக   ரீதியாக 7ம் பாவக பலனை ஏற்று நடத்துவதால் இந்த வாய்ப்பை நிச்சயம் வழங்கும், ஜாதகர்  விழிப்புணர்வுடன் செயல்பட்டு திருமண வாழ்க்கையை அமைத்து கொள்வது சால சிறந்தது.

இந்த ஜாதகருக்கு சுய ஜாதக அமைப்பின் படி குரு பகவான், தற்பொழுது நடைமுறையில் உள்ள ராகு திசையில் கடந்த 15 வருடங்களில் ஒன்னே கால் சுற்று வந்து விட்டார், இந்த கால கட்டங்களில் ராசிக்கு குரு பகவான் 6 முறைக்கு மேல் குரு பலம் பெற்று சஞ்சாரம் செய்த போதிலும், சுய ஜாதகத்தில் பாவகம் வலிமை அற்ற காரணத்தினாலும், நடைபெறும் ராகு திசை விரைய ஸ்தான பலனை தந்தாலும், ஜாதகருக்கு திருமணம் நடைபெறவில்லை, ராகு திசையில் ஜாதகருக்கு வந்த சில திருமண வாய்ப்புகளை ஜாதகரே தவிர்த்தது ஜாதகரின் குடும்ப ஸ்தானம் வலிமை அற்ற தன்மையை தெள்ள தெளிவாக காட்டுகிறது.

எனவே சுய ஜாதகத்தில் 2,7 ம் பாவகங்கள் வலிமை அற்று இருந்தாலும், நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்தினாலும், ஜாதகருக்கு எவ்வித குரு பலமும் வாழ்க்கையில் திருமணத்தை அமைத்து தந்துவிடாது, சுய ஜாதகத்தில் 2,7ம் பாவகங்கள் வலிமை பெற்று, நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் வலிமை பெற்ற பாவகங்களின் பலனை ஏற்று நடத்தினால், குரு பலம் இல்லாவிட்டாலும் திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும் என்பதில் எவ்வித மாற்று கருத்துக்கும் இடமில்லை அன்பர்களே!

ஆக திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்வது கோட்சார கிரகங்களின் பலன்கள் அல்ல சுய ஜாதகத்தில் பாவக வலிமையின் அடிப்படையிலேயே நடைபெறுகிறது என்பது உறுதி, மேலும் சந்திரனை ( ராசியை ) அடிப்படையாக கொண்டு ஜாதக பலன் காண முற்படுவது கணிப்பாகவே அமையுமோ அன்றி சுய ஜாதக கணிதமாக அமைய வாய்ப்பில்லை என்பது நிதர்சனமான உண்மை,  ஜாதக கணிதம் மூலம் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் காணும் பொழுது ஜாதக ரீதியான தெளிவான பலன்களை 100% துல்லியமாக காண இயலும் என்பது ஜோதிடதீபத்தின் கருத்து.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வெள்ளி, 1 மே, 2015

திருமணத்திற்கு பிறகு அவயோக பலன்களை அனுபவிக்கும் ஜாதக நிலை !


தனது வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் முன் ஓவ்வொருவரும் தனது ஜாதக நிலையை கருத்தில் கொண்டு தேர்வு செய்வது, ஜாதகரின் வாழ்க்கையில் ஏற்ப்படும் இன்னல்களில் இருந்து வெகுவாக காப்பாற்றும், ஒருவரின் சுய ஜாதகத்தில் உள்ள பலன் தான் நடைமுறைக்கு வரும் என்றாலும் கூட, தன்னுடன் சேர்ந்து இல்லற வாழ்க்கையை மேற்கொள்ளும் ஜாதகத்தை பொருத்தும் சிலரது வாழ்க்கை நிர்ணயம் செய்யபடுகிறது, உதாரணமாக பொருத்தம் காணும் பொழுது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகமும், களத்திரம் எனும் 7ம் பாவகமும், ஆயுள் ஸ்தானம் எனும் 8ம் பாவகமும் , வலிமையுடன் இருப்பது திருமண வாழ்க்கையில் சீரும் சிறப்பையும் வாரி வழங்கும்.

இதில் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 2,7,8ம் பாவகங்கள் 6,8,12ம் பாவகங்களுடன் தொடர்பு பெற்று இருப்பது ஜாதகருக்கு 2,7,8ம் பாவக வழியில் இருந்து இன்னல்களை தந்த போதிலும் அது பெரிய அளவில் ஜாதகரை பாதிப்பதில்லை, மாறாக ஒருவரது ஜாதகத்தில் 2,7,8ம் பாவகங்கள் பாதக ஸ்தானம் எனும் 11,9,7 ( சரம் 11, ஸ்திரம் 9, உபயம் 7 ) பாவகங்களுடன் தொடர்பு பெரும் பொழுது ஜாதகரின் திருமண வாழ்க்கைக்கு பிறகு வரும் காலங்களை சோதனைக்கு ஆளாக்கும், தம்பதியரின் ஒற்றுமை குறைவு, விபத்து, பொருள் இழப்பு, மனோரீதியான போராட்டம் மற்றும் மன அழுத்தம், நிம்மதியின்மை, உடல் மனம் இரண்டும் வெகுவாக பாதிக்கும் தன்மை, தனது ஜாதகத்தில் யோக நிலை இருந்த போதிலும், அதை அனுபவிக்க இயலாத தன்மை, முரண்பட்ட கருத்து வேறுபாடு, மன வாழ்க்கையில் பிரிவு, தவறான உறவுகள், அதன் வழியில் இருந்து வரும் தொல்லைகள் துன்பங்கள், உறவுகள் மற்றும் சமூக அமைப்பில் இருந்து வரும் எதிர்ப்புகள், தனது குழந்தைகளின் எதிர்காலமும் கடுமையாக பாதிக்கும் தன்மை, சுமுகமாக தீர்வு காணும் பிரச்சனைகளை பெரிதாக்கி அதன் வழியில் துன்பம் காணும் மன நிலை, வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் சுமைகள், மற்றும் துன்புறுத்தல், உதவி செய்பவரின் மூலம் பெரும் அவயோக நிலை என ஜாதகரை வாட்டி வதைத்து விடும், இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவடைவது சிறப்பானதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது.

  
ஜாதகி லக்கினம் : மிதுனம் 
ராசி : மகரம் 
நட்சத்திரம் : திருவோணம் 3ம் பாதம் 

அடிப்படையில் இந்த ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானத்தை குறிக்கும் 2,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சுய ஜாதக ரீதியாக ஜாதகி திருமணத்திற்கும் குடும்ப வாழ்க்கைக்கும் யோகம் அற்றவர் என்பது 200% விகிதம் உறுதியாகிறது, ஆனால் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு களத்திர ஸ்தானமான துலாம் நல்ல வலிமை பெறுவது, ஜாதகிக்கு திருமணம் செய்யும் வாய்ப்பை வழங்கியது, ஆயுள்  பாவகமான 8ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை பெற்று இருப்பது, ஜாதகிக்கு தன் கணவர் வழியில் இருந்து வரும் நல்ல யோக வாழ்க்கையையும், பெருளாதார வசதியும், நல்ல வருமான வாய்ப்பையும் வாரி வழங்கியது, இருப்பினும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு குடும்ப ஸ்தானம் ஆனா ரிஷபம் ஜாதகிக்கு 12ம் வீடாக அமைந்து விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடனே சம்பந்தம் பெற்று இருப்பது குடும்ப வாழ்க்கையில் ஜாதகி பெரும் மன நிம்மதி இழப்பையும், வீண் விரையங்களையும், உடல் மற்றும் மன நலமின்மையையும்,  அனைவராலும் தொல்லைக்கு ஆளாகும் சூழ்நிலையை  உறுதி செய்தது.

ஆக ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு களத்திர ஸ்தானமான துலாம் வலிமை பெற்றது திருமண வாழ்க்கையை சர காற்று தத்துவ அமைப்பில் நின்று 100% யோகமுள்ள கணவனை ( ஜாதகியின் கணவர் அரசு துறை பணியாளர் ) திருமணம் செய்யும் வாய்ப்பை வழங்கிய போதும், சுய ஜாதகத்தில் பாதிக்க பட்ட 2,7ம் பாவகமும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு குடும்ப ஸ்தானமான ரிஷபமும், ஜாதகியின் திருமண வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியது, மேலும் பாதக ஸ்தான பலனை நடத்தும் ராகு திசையில் ஜாதகிக்கு திருமணம் நடந்தது மிகுந்த துன்பத்தை அனுபவிக்கும் சூழ்நிலையை தந்தது, 6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவக பலனை ஏற்று நடத்தும் குரு திசையில் குரு புத்தியில் ஜாதகியின் கணவருக்கு விபத்து ஏற்ப்பட்டு, கணவருக்கு வைத்தியம் செய்யும் சூழ்நிலையை தந்தது, வைத்தியம் பலன் தாராமல், 2,7ம் வீடுகள் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தும் குரு திசை கேது புத்தியில் ஜாதகி கணவனை இழக்கும் சூழ்நிலையை தந்தது, அவரது மறைவுக்கு பிறகு ஜாதகியின் ஜீவன ஸ்தானம்  நல்ல நிலையில் இருப்பதால் அவரது அரசுப்பணி ஜாதகிக்கு கிடைத்தது.

இந்த சூழ்நிலையில் ஜாதகிக்கு வேறு தொடர்புகள் ஏற்ப்பட ( 3,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு  ) தேவையில்லாத அவ பெயர்களை சந்திக்கும் சூழ்நிலையை தந்தது, இதனால் உறவுகளுடன் இணக்கமில்லாத சூழ்நிலை, மன நிம்மதி இழப்பு, பொருள் இழப்பு உடல் நலக்குறைவு ஏற்ப்பட்டது, ஜாதகிக்கு எத்தனை சிரமங்கள் வந்த போதிலும், சுய ஜாதகத்தில் 5ம் பாவகம் வலிமை பெற்று இருப்பதால் ஜாதகியின் குழந்தைகள் ஜாதகிக்கு அதரவாக நின்றது, இறை அருளின் கருணையும், சமயோசித புத்திசாலித்தனமும் பாதக ஸ்தான வழியில் இருந்து வரும் இன்னல்களை களையும் வாய்ப்பினை ஜாதகிக்கு வாரி வழங்கியது.

ஜாதகிக்கு 2,7ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலன்களை வழங்கிய போதும், தன் கணவன் மூலம் பெரும் வருமானம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை குறிக்கும் ஆயுள் பாவகமான 8ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது, தனது கணவனின் மறைவுக்கு பிறகும் வசதி வாய்ப்புடன் வாழும் யோகத்தை தந்தது, மேலும் தற்பொழுது நடைபெறும் குரு தசை ஜாதகிக்கு 6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவக பலனை ஏற்று நடத்துவது ஸ்திரமான மன கவலை, குடும்ப வாழ்க்கையில் இன்னல்களை தந்த போதிலும், எதிர் வரும் சனி திசை 11ம் வீடு பாக்கிய ஸ்தான பலனை ஏற்று நடத்துவதும், பாக்கய ஸ்தானம் ஜாதகிக்கு மகரம் மற்றும் கும்ப ராசிகளுடன் சம்பந்தம் பெறுவது சிறந்த யோக வாழ்க்கையை வாரி வழங்கும் என்பதும், 5ம் பாவக வழியில் இருந்து தான் பெற்ற குழந்தைகள் ஜாதகிக்கு முழு ஆதரவாக நிற்பார்கள் என்பது வரவேற்க தக்கதே, மேலும் இந்த ஜாதகி களத்திர வாழ்க்கைக்கும், குடும்ப வாழ்க்கைக்கும் யோகம் அற்றவர் என்பது உறுதியாகிறது.

இந்த ஜாதகியின் வாழ்க்கை துணைவரின் ஜாதகத்திலும், 2,7ம் வீடுகள் கடுமையாக பாதிக்கபட்டு இருப்பதும், 8ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பதும் கவனிக்க தக்கது, லக்கினம் அல்லது ஆயுள் பாவகம் பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்ற ஜாதகத்தை பெற்றவர்கள், எவ்வித தீய பழக்கத்திற்கும் ஆற்ப்படாமல் இருப்பது நல்லது ( ஜாதகர் குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்தை சந்தித்தார் ) ஏனெனில் இவர்களது வாழ்க்கை முடிவிற்கு இவர்களது செய்கையே காரணமாக அமைந்துவிடும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

ஞாயிறு, 1 மார்ச், 2015

யோகம் உள்ள மனைவி அமையுமா ?வாழ்க்கை துணை வழியில் இருந்து அதிர்ஷ்டம் உண்டா?




கேள்வி :

அய்யா எனக்கு யோகம் உள்ள மனைவி அமையுமா ? வாழ்க்கை துணை வழியில் இருந்து அதிர்ஷ்டம் உண்டா ?

பதில் : 

அன்பரே தங்களது ஜாதக அமைப்பில் குடும்பம்,பூர்வபுண்ணியம்,களத்திரம் மற்றும் ஆயுள் பாவகம் வலிமை பெற்று இருப்பின் தங்களின் கேள்விக்கு உண்டான பதில் நிச்சயம் உண்டு, மேலும் தங்களது ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் நல்ல வலிமையுடனே உள்ளது, இருப்பினும் தாங்கள் பொருத்தம் பார்க்க அனுப்பிய பெண்ணின் ஜாதகத்தில் இதற்க்கு நேர்மாறாக அமைந்திருக்கிறது, அந்த ஜாதகத்தில் உள்ள பாவகங்களின் வலிமையை பற்றி கிழ்கண்ட வரிகளில்  தெளிவு படுத்துகிறோம், அதன் பிறகு தங்களின் முடிவை நிர்ணயம் செய்யுங்கள்.

பொதுவாக திருமணம் செய்துகொள்வதற்கு வது வரன் ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துகொள்ளும் பொழுது, அவர்களது ஜாதக ரீதியாக கவனிக்க பட வேண்டிய சில விஷயங்கள் கிழ்கண்டவாறு அமையும்.

1) ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகம் நல்ல நிலையில் இருப்பது அவசியம், குடும்ப ஸ்தானம் வலிமை பெற்று அமைவது தம்பதியரின் குடும்ப வாழ்க்கையில் நல்ல வருமான வாய்ப்புகளையும், பொருளாதார வசதிகளையும் வாரி வழங்கும், தம்பதியரின் ஒருமித்த கருத்துகளை புரிந்துகொள்ளும் வல்லமையை தரும், ஒருவர் நினைப்பதை குறிப்பால் உணர்ந்து குடும்ப வாழ்க்கையை சிறப்பாக நடத்தும் யோகத்தை தரும், இருவரின் பேச்சிலும் இனிமை மேலோங்கும், வெறுப்பு கலந்த வார்த்தைகள் அல்லது வீண் விவாதங்களுக்கு இடமளிக்காமல், குடும்பத்தையும், குடும்பத்தில் உள்ளோரையும் அனுசரித்து செல்லும் சிறப்பான வாழ்க்கையை தரும், மேலும் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் வீடு  6,8,12ம் வீடுகளுடன் தொடர்பு பெறாமலும், பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறாமலும் இருப்பது நல்லது.

2) குழந்தை பாக்கியத்தை வழங்கும் 5ம் பாவகம் வலிமையுடன் இருப்பது தனது சந்ததிக்கு நல்ல வாரிசை பெற்று தரும், எனவே 5ம் பாவகம் 6,8,12ம் வீடுகளுடன் தொடர்பு பெறாமலும், பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறாமலும் இருப்பது அவசியமாகும் மேலும் சிறப்பாக கவனிக்க வேண்டிய பாவகமாக 5ம் பாவகத்தை கருதலாம், தம்பதியருக்குள் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் வந்த போதிலும் இறை அருளின் கருணையினால், தன்பதியரை பிரிவு என்ற நிலைக்கு தள்ளாமல், பெரியோர்களின் ஆசியுடன் நீண்ட நெடுங்காலம் சிறப்பாக வாழ இந்த பாவகம் துணை புரியும்.

3) கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் சிறப்பாக புரிந்துகொண்டு, ஒருவருக்கு ஒருவர் விட்டுகொடுத்து செல்லும் இனிய வாழ்க்கையை வாரி வழங்குவது களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் என்பதால், இந்த 7ம் பாவகம் இருவரது ஜாதகத்திலும் நல்ல வலிமையுடன் இருப்பது சிறப்பு, மேலும் 6,8,12ம் வீடுகளுடன் தொடர்பு பெறாமலும், பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறாமலும் இருப்பது திருமண வாழ்க்கையின் வெற்றியை, பொருத்தம் காணும் பொழுதே உறுதி செய்துவிடும்.

4) கணவன் வழியில் இருந்து மனைவியும், மனைவி வழியில் இருந்து கணவனும் பெரும் யோக வாழ்க்கையை நிர்ணயம் செய்வது ஆயுள் ஸ்தானம் என்று அழைக்கப்படும் 8ம் பாவகம் என்பதால் இருவரது சுய ஜாதகத்திலும் 8ம் பாவகம் வலிமை பெற்று இருப்பது சிறப்பு, மேலும் இருவரது ஆயுள் பலத்தையும் விருத்தி செய்யும் என்பதால் இந்த பாவக வழிமையை பற்றி கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம், மேலும் இந்த ஆயுள் பாவகம் 1,6,12ம் வீடுகளுடன் தொடர்பு பெறாமலும், பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறாமலும் இருப்பது தம்பதியரின் யோக வாழ்க்கையை உறுதி செய்யும்.

5) ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம் இருவரது ஜாதகத்திலும் மிக மிக வலிமையுடன் இருப்பது அவசியம் ஏனெனில், தம்பதியரின் கெளரவம் அந்தஸ்து மற்றும் சமுதாயம் மதிக்கும் வழியில் வாழும் யோக வாழ்க்கையை  வாரி வழங்குவது ஜீவன ஸ்தானம் என்பதால் இருவரது சுய ஜாதகத்திலும் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று இருப்பது சகல நிலைகளில் இருந்தும் யோகத்தை தரும், கௌரவம் குறையாத, கருத்து வேறுபாடற்ற, மணவாழ்க்கையில் பிரிவு நிலையை தாராத தாம்பத்திய வாழ்க்கையை வழங்கும், மேலும் ஜீவன ஸ்தானம் 6,8,12ம் வீடுகளுடன் தொடர்பு பெறாமலும், பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறாமலும் இருப்பது நல்லது.

தாங்கள் அனுப்பிய வதுவின் ( பெண் ) ஜாதக நிலை :



1) குடும்ப ஸ்தானம் 6ம் வீட்டுடன் தொடர்பு அடிப்படையில் குடும்ப ஸ்தானம் பாதிப்படைந்திருக்கிறது,
2) பூர்வ புண்ணிய ஸ்தானம் எனும் 5ம் பாவகம் 6ம் வீட்டுடன் தொடர்பு, குழந்தை பாக்கிய அமைப்பில் ஆண்  வாரிசு கேள்விக்குறியாக மாற வாய்ப்புகள் அதிகம்.
3) களத்திர பாவகம் எனும் 7ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம், பெறுவது திருமண வாழ்க்கையில் வரும் இன்னல்களை குறிக்கிறது.
4) ஆயுள் பாவகமான 8ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது, இந்த ஜாதகியை மனம் செய்து கொள்பவருக்கு மன நிம்மதி என்பது கேள்வி குறி? மேலும் வீண் விரையங்களையும் இழப்புகளையும் தவிர்க்க இயலாது. 
5) நடைபெறும் சந்திரன் திசை பூர்வ புண்ணியமான 5ம் பாவகம் எதிரி ஸ்தானமான 6ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று பலனை தருவது மிகுந்த இன்னல்களை சம்பந்தபட்ட பாவக வழியில் இருந்து 100% விகிதம் தரும்.

ஜாதகத்தில் உள்ள உண்மை நிலை இதுவே, எனவே இறுதி முடிவு தங்களின் பார்வைக்கே விட்டு விடுகிறது ஜோதிடதீபம்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 27 நவம்பர், 2014

வாழ்க்கை துணை மூலம் ஒரு ஜாதகருக்கு யோக வாழ்க்கையா ? அவயோக வாழ்க்கையா ? என்பதை நிர்ணயம் செய்வது எப்படி ?


ஒருவரின் சுய ஜாதகத்தை வைத்து தனக்கு வரும் வாழ்க்கை துணை வழியில் இருந்து யோகத்தை அனுபவிப்பாரா ? அல்லது அவயோக வாழ்க்கையை அனுபவிக்கும் சூழ்நிலையை தருமா ? என்ற எதிர்பார்ப்பு திருமணம் ஆகாத அன்பர்களுக்கு நிச்சயம் இருக்கும், இந்த விஷயத்தை சம்பந்தபட்ட ஜாதகரின் சுய ஜாதகத்தில் இருந்தே மிக தெளிவாக நாம் தெரிந்துகொள்ள இயலும், சில அன்பர்கள் திருமண வாழ்க்கைக்கு முன்பு வரை சாதராரண வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருந்தவர்களுக்கு, திருமணம் நடந்தவுடன் குறுகிய காலத்தில் மிகப்பெரிய முன்னேற்றத்தை பெறுகின்றனர், சில அன்பர்கள் திருமண வாழ்க்கைக்கு முன்பு வரை நல்ல நிலையில் இருந்தவர்கள், திருமணத்திற்கு பிறகு மிகப்பெரிய இழப்புகளை சந்தித்து வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்து கொண்டு போராட்ட வாழ்க்கையை மேற்கொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

ஆக ஒருவரின் வாழ்க்கையில் திருமணதிற்கு பிறகு யோக வாழ்க்கையோ அல்லது அவயோக வாழ்க்கையோ சுய ஜாதக ரீதியாக அனுபவிக்கும் தன்மையை தருகிறது என்பதை மறுக்க இயலாது, நமது கிராமங்களில் ஒரு இடத்தில் பெண் எடுத்து திருமணம் செய்யது வந்த பிறகு சம்பந்தபட்டவர்களின் குடும்பம் நல்ல முன்னேற்றத்தை காணும் பொழுது, அருகில் உள்ள மக்கள் அல்லது உறவினர் குறிப்பிட்ட பெண்ணை பார்த்து, மகராசி வந்தவுடன் இந்த குடும்பம் செழித்து நலம் பெற்றதாக வாழ்த்துவார்கள், இதற்க்கு நேர்மாறாக நடைபெற்றால் அந்த பெண்ணை வசைபாடுபவர்களும் உண்டு, உண்மையில் இது பெண்களுக்கு மட்டும் பொருந்தாதது, ஆண்களுக்கும் பொருந்தும் என்பதை மறந்து விடுகின்றனர், இதை ஒரு உதாரணா ஜாதகம் கொண்டு காண்போம் அன்பர்களே !



இந்த ஜாதகர் ஒரு பெண்ணை தீவிரமாக காதலித்தார், ( பெரியோர்களால் நிச்சயம் செய்த பிறகு ) இடையில் சிறு பிரச்சனையின் காரணமாக திருமணம் பாதியில் நின்றது, இருப்பினும் அந்த பெண்ணும் இவரும் தொடர்ந்து காதலித்து வந்தனர், இந்த விஷயம் பெண் வீட்டாருக்கு தெரிந்து பிரச்சனை ஆரம்பித்தது, அந்த பெண்ணின் கல்வி தடை பெற்றது, காதலர்கள் இருவரும் சந்திக்க இயலாத சூழ்நிலை வந்தது, இதற்க்கு பிறகு நடந்த விஷயம் தான் ஜாதகரையும், அந்த பெண்ணின் குடும்பத்தையும் பெரிய அதிர்ச்சிக்கு ஆளாக்கியது, காதலர்களுக்கு பிரிவு ஏற்ப்பட்ட 5மாத இடைவெளியில் அந்த பெண் வேற்று மதத்தை சார்ந்த ஒரு நபரை காதலித்து திருமணம் செய்துகொண்டு ஊரை விட்டே வெளியூருக்கு சென்று விட்டார், இந்த அவமானத்தையும், அதிர்ச்சியையும் அந்த பெண்ணின் குடும்பத்தார் தாங்க இயலாத சூழ்நிலையை தந்துவிட்டது, ஜாதகருக்கு கிட்டதட்ட தற்கொலை செய்து கொள்ளும் நிலை வரை சென்று, உறவினர்களால் காப்பாற்றபட்டு உடல்நலம் பெற்றார் , ஆனால் மனதளவில் இன்னும் கடுமையாக பாதிக்கபட்டே இருக்கிறார் என்பது வருத்தத்திற்கு உரியது, இனி அவரது ஜாதகத்தை ஆய்வுக்கு  எடுத்துகொள்வோம் அன்பர்களே!

பொதுவாக ஒருவரின் சுய ஜாதகத்தில் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து  பெரும் யோக வாழ்க்கையை குறிப்பிடும் பாவகம் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகம் என்றால் அது மிகையில்லை ஏனெனில் 7ம் வீட்டிற்கு இரண்டாம் பாவகம் 8ம் வீடாகும், ஒரு ஜாதகர் தனது வாழ்க்கை துணை வழியில் ( 7ம் வீடு )  இருந்து குடும்ப வாழ்க்கையில் ( 8ம் வீடு ) பெரும் யோக அவயோக பலன்களை குறிப்பிடுவதால், திருமண வாழ்க்கையில் வாழ்க்கை துணை வழியில் இருந்து யோகங்களை பெற ஒருவரின் சுய ஜாதகத்தில் 8ம் பாவகம் மிக மிக வலிமையாக இருப்பது அவசியம் என்பதால், திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது விபரம் அறிந்த ஜோதிடர்கள் வரன் வது இருவரின் ஜாதகத்தில் ஆயுள் பாவகத்தின் தன்மையை ஆய்வு செய்து, ஆயுள் பாவகத்திர்க்கு முக்கியதுவம் தந்து பொருத்தம் நிர்ணயம் செய்வார்கள், எனவே வாழ்க்கை துணை வழியில் இருந்து ஒருவர் யோகங்களை அனுபவிக்க ஆயுள் பாவகம் வலிமை பெறுவது அவசியம்.

இந்த ஜாதகரின் சுய ஜாதகத்தில் 8ம் வீடு, ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடனே சம்பந்தம் பெற்று 100% பாதிப்பை பெறுகிறது, இந்த ஆயுள் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் வீடாக வருவதால், ஜாதகருக்கு பூரண ஆயுளை தந்த போதிலும், தனது அறிவை கொண்டு வெற்றிபெறும் யோகத்தை தடுத்து நிறுத்தியது, குல தெய்வத்தின் அருளாசியை பெற இயலாமல், குல தெய்வ சாபத்திற்கு ஆளாகும் சூழ்நிலையை தந்தது, அடிப்படையில் இந்த ஜாதகருக்கு 8ம் பாவகம் பாதிக்க பட்டு ஸ்திரமான இன்னல்களை தருகிறது, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 8ம் ராசியான விருச்சிகம் ஜாதகருக்கு பாதக ஸ்தானமாக அமைந்து 3,5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிக கடுமையான பாதிப்பை பெற்று இருக்கிறது, ஆக இவரது ஜாதகத்தில் சுய இலக்கின அடிப்படையில் 8ம் பாவகமும் பாதிக்க பட்டு, கால புருஷ தத்துவத்திற்கு 8ம் ராசியான விருச்சிகமும் பாதக ஸ்தானமாக அமைந்து 11ம் வீடான பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்றதால், ஜாதகர் அந்த பெண்ணின் குடும்பத்தில் கால் வைத்தவுடன் ஸ்திர நீர் தத்துவ விருச்சிகமும், ஸ்திர நெருப்பு தத்துவ சிம்மமும் தனது விளைவுகளை காட்ட ஆரம்பித்தது, இதற்க்கு இவரது ஜாதகமே காரணம் என்று முடிவு செய்ய இயலாது, அந்த பெண்ணின் ஜாதகத்திலும் களத்திர ஸ்தானம் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்று இருந்ததை இங்கே குறிப்பிட விரும்புகிறோம், விதி அமைப்பு ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இப்படி தொடர்பு படுத்தி தனது விளையாட்டை மிக செம்மையாக நடத்துவதை ஜோதிடதீபம் குறிப்பிட விருபுகிறது.

இவரது ஜாதகத்தில் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 8ம் வீடான விருச்சிக ராசி 11ம் பாவகமாக வந்து பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றது, தனது வாழ்க்கை துணையாக நினைத்தவரின் வழியில் இருந்து அதிக மனக்கவலையும் ( ஸ்திர நீர் என்பதால் ஆறாத மனக்காயம் ) , தனது லக்கினபடி 8ம் பாவகம் பாதிக்க பட்டது ஜாதகரின் செயல் திறனையும் ஸ்திரமாக முடக்கியது ( ஸ்திர நெருப்பு ஜாதகரின் செயல்திறனை குறிக்கும் ) இவர் அந்த குடும்பத்தில் நுழையும் வரை எந்த பிரச்சனையும் இல்லை, இவர் நுழைந்த பிறகு அவர்களது குடும்பமும் பல மான அவமானங்களை சந்திக்கும் சூழ்நிலையை தந்தது, மேற்கண்ட பலன்கள் யாவும் ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் சுக்கிரன் திசை, சுக்கிரன் புத்தி( 08/03/2013 முதல் 07/07/2016 வரை ) 3,5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தந்த காலத்திலேயே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அன்பர்களே தங்களது வாழ்க்கை துணை வழியில் இருந்து யோக வாழ்க்கையை பெறவேண்டும் எனில் தங்களின் ஜாதகத்தில் ஆயுள் பாவகமான 8ம் பாவக வலிமையை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள் அல்லது தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 8ம் பாவகம் வலிமை பெற்று இருக்கிறதா என்பதையும் தெளிவாக தெரிந்துகொண்டு நலம் பெறுங்கள், 8ம் பாவகம் நல்ல நிலையில் இருப்பின் புதையலுக்கு ஈடான பொருள் வரவையும், அதிர்ஷ்டத்தையும் தரும், 8ம் பாவகம் பாதிக்க பட்டால் திடீர் இழப்புகளை அளவுக்கு அதிகமாக தகுதிக்கு மீறி தரும் என்பதால், திருமணதிற்கு பிறகு சிலர் திடீர் முன்னேற்றம் பெறுவதும், திடீர் விழ்சியை பெறுவதும் ஏன் என்பது வாசகர்களுக்கு புரியும் என்று ஜோதிடதீபம் கருதுகிறது .

குறிப்பு : 

அன்பர்களே மேற்கண்ட விஷயங்கள் யாவும் வாழ்க்கை துணைக்கு மட்டும் பொருந்தும் என்று முடிவு செய்வது சரியாக இருக்கும் என்று தெரியவில்லை, சில நபர்களுக்கு தேவையில்லாத தவறான தொடர்புகள் மூலமும் யோகம் அவயோக பலன்கள் நடைமுறைக்கு வருகிறது, சுய ஜாதகத்தில் 8ம் பாவகம் வலிமை பெற்று இருக்கும் அன்பர்களுக்கு பெரிய பாதிப்பை தருவதில்லை, சுய ஜாதகத்தில் 8ம் பாவகம் வலிமை இன்றியோ, பாதக ஸ்தான அமைப்புடன் தொடர்பு பெற்று இருந்தாலோ ஜாதகர் எக்காரணத்தை கொண்டும் முறை தவறிய தொடர்புகளை தவிர்த்து விடுவதோ, அல்லது இது போன்ற சூழ்நிலைக்கு ஆட்படாமல் தப்பித்து கொள்வது சால சிறந்தது, இல்லையெனில் வாழ்க்கையில் பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி வரும், அதன் பாதிப்புகளை ஜாதகரால் தாங்க இயலாது என்பது ஜோதிடதீபத்தின் அறிவுரைகள் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696