யோகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யோகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 27 டிசம்பர், 2018

சுய ஜாதகத்தில் கடக ராசி வலிமை இழப்பும், ஜாதகர் படும் துயரங்களும் !



பொதுவாக சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் மிக மிக வலிமையுடன் இருப்பது ஜாதகரின் சுபயோக வாழ்க்கைக்கும் முன்னேற்றம் நிறைந்த எதிர்கால வாழ்விற்கும் சிறந்த அடித்தளத்தை அமைத்து தரும், இது ஜாதகரின் வாழ்க்கையில் சிறப்பு மிக்க யோக வாழ்க்கையை நல்கும் என்பதுடன், நன்மையான பலாபலன்களை வாரி வழங்கும். கால புருஷ தத்துவ அமைப்பிற்கு மாத்ரு ஸ்தானமான கடகம்  சுய ஜாதகத்திலும் வலிமை பெற்ற பாவக தொடர்பை பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு தொடர்பு பெற்ற பாவக வழியில் இருந்து சுபயோகங்களை வாரி வழங்க தவறுவது இல்லை, அதே சமயம் வலிமை அற்ற பாவக தொடர்பை பெரும் பொழுது ஜாதகரின் வாழ்க்கையில் கடுமையான பாதிப்புக்களை வழங்குவதிலும் தவறுவது இல்லை, இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம்.


லக்கினம் : தனுசு 
ராசி : கன்னி 
நட்ஷத்திரம் : அஸ்தம் 3ம் பாதம் 

இந்த தனுசு லக்கின ஜாதகருக்கு கடக ராசியில் களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம்  14 பாகைகளையும், ஆயுள் ஸ்தானம் எனும் 8ம் வீடு 16 பாகைகளையும் கொண்டு இருப்பது வரவேற்க தக்கது, இதில் களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் ஜீவன ஸ்தானமான 10ம் பாவக தொடர்பை பெறுவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சங்களை வாரி வழங்கும், அதே சமயம் 16 பாகைகளை கொண்டுள்ள ஆயுள் பாவகம் ஜாதகருக்கு கடுமையான திடீர் பாதிப்புகளை வாரி வழங்கும், சுய ஜாதகத்தில் கடக ராசியில்  பெரும் பகுதி 7ம் பாவக வழியில் இருந்து பெருவாரியான நன்மைகளை தருவது கவனிக்கத்தக்கது இது ஜாதகருக்கு, வியாபாரம், வெளியூர் அல்லது வெளிநாடுகளில் இருந்து வரும் நன்மைகளை அதிக அளவில் தரும், எதிர்பாலின சேர்க்கை மூலம் வாழ்க்கையில் சிறப்பான யோகங்களை பெறுவார், திருமணத்திற்கு பிறகான ஜீவன முன்னேற்றம் சிறப்பாக அமையும், வண்டி வாகனம் மற்றும் வீடு நிலம் சொத்து சுக சேர்க்கை சிறப்பாக அமையும், நல்ல நண்பர்கள் சேர்க்கை, சிறந்த வியாபர யுக்தி, பல தொழில் செய்யும் வல்லமை, மனதில் உள்ள எண்ணங்கள் மற்றும் ஆசைகள் யாவும் நிறைவேறும் தன்மையை தரும், சிறந்த வியாபாரி என்ற அந்தஸ்த்தை நல்கும், ஜாதகரின் முற்போக்கு சிந்தனை, நேர்மறை எண்ணங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத அதிர்ஷ்டங்களை வாரி வழங்கும்.

குறிப்பாக நடைபெறும் குரு திசை ஜாதகருக்கு 2,5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவக தொடர்பை பெறுவது 2,5,11ம் பாவக வழியில் இருந்து வருமானம், நல்ல குடும்ப வாழ்க்கை, வாக்கு வன்மை வழியில் இருந்து வரும் முன்னேற்றம், சிறந்த நல்லறிவு, சமயோசித புத்திசாலித்தனம், குழந்தைகள் வழியில் முன்னேற்றம், கற்ற கல்வி தரும் யோக வாழ்க்கை, கலைத்துறையில் பெரும் முன்னேற்றம், சாஸ்த்திர ஞானம், கலைகளில் தேர்ச்சி, தெய்வீக அனுக்கிரகம், குல தெய்வம் தரும் யோக வாழ்க்கை, சிறந்த புத்திசாலித்தனம், நுணுக்கமான அறிவு திறன் என்ற வகையிலும், நீடித்த அதிர்ஷ்டம், நிறைவான மனநிலை, நல்ல குணம், பெருந்தன்மையான மனநிலை, எதிர்ப்புகளை வென்று முன்னேற்றம் காணும் யோகம், புதிய வாய்ப்புகள் அல்லது புதிய சிந்தனை வழியில் வெற்றி பெரும் தன்மை என்ற வகையில் நன்மைகளை வாரி வழங்கும்.

குரு திசையில் தற்போழுது நடைபெறும் சுக்கிரன் புத்தி ( 25/05/2018 முதல் 23/01/2021 வரை ) ஜாதகருக்கு கடக ராசியில் வியாபித்து இருக்கும் 7ம் பாவக பலனை 7,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, 10ம் பாவக பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கான முன்னேற்றத்தை எதிர்பாராத அளவில் வாரி வழங்கும், ஜாதகருக்கு 7ம் பாவகம் சர நீர் ராசியாகவும், 10ம் பாவகம் சர காற்று ராசியாகவும் அமைவது வரவேற்கத்தக்கது, இது ஜாதகருக்கு மனம் அறிவு வழியில் இருந்து சுபயோகங்களை பரிபூர்ணமாக வாரி  வழங்கும், மனதில் எண்ணிய எண்ணங்களை தனது அறிவார்ந்த முயற்சிகள் வழியில் மிகப்பெரிய வெற்றிகளாக மாற்றும் வல்லமையை தரும், குறிப்பாக ஜாதகர் தற்போழுது மேற்கொள்ளும் எவ்வித முயற்சிகளும் நல்ல பலனை தரும், மனம் அறிவு இரண்டும் சிறப்பாக ஒத்துழைப்பை நல்கி ஜாதகருக்கான யோக வாழ்க்கையை உறுதி செய்யும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை, கடக ராசியில் வியாபித்து நிற்கும் ஆயுள் பாவகம் ஜாதகருக்கான இன்னல்களை வெகு குறைவாகவே தரும் என்பது கவனிக்கத்தக்கது, ஜாதகர் மேற்கொள்ளும் சில அவசர முடிவுகள் மட்டுமே பெருத்த பின்னடைவை தரக்கூடும் என்பதால் பொறுமையாக சிந்தித்து செயலாற்றுவது நல்லது வாழ்த்துக்கள்.

குறிப்பு :

சுய ஜாதகத்தில் ஜாதகருக்கு கடுமையாக பாதிக்கப்பட்ட பாவகம் ஆயுள் ஸ்தானம் எனும் 8ம் பாவகம் ஒன்று மட்டுமே, இது ஜாதகருக்கு கடக ராசியில் 16 பாகைகளையும், சிம்ம ராசியில் 17 பாகைகளையும் கொண்டு இருப்பது சற்று கவலை தரும் விஷயமாகவே உள்ளது என்ற போதிலும், நடைபெறும் திசாபுத்திகள் வலிமை அற்ற ஆயுள் பாவக பலனை ஏற்று நடத்த வில்லை என்பது ஆறுதல் தரும் விஷயமாகும், மேலும் ஜாதகர் ஆயுள் பாவக பலனை ஏற்று நடத்தும் சூரியன் மற்றும் ராகு திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷம காலங்களில் மட்டும் மிகுந்த  பாதிப்பை தரும் என்பதால் கவனமுடன் செயல்பட்டு நலம் பெறுவது அவசியமாகிறது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வியாழன், 29 நவம்பர், 2018

குரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - சிம்மம் )


 சுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினாலும், அமர்ந்த இடத்தில் இருந்தும் எதிர்வரும் ஒருவருட காலத்திற்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி விருச்சிகம் முதல் துலாம் வரை, ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !

 ''எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்'' என்பதற்கு இணங்க ஒருவரது வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தில் அதிமுக்கிய பங்கு வகிப்பது உடல் உயிராகிய " ஜென்ம லக்கினமாகும் " ஒருவரது வாழ்க்கையில் நிகழும் யோக அவயோகம், நன்மை தீமை போன்றவற்றை ஜென்ம லக்கினமே நிர்ணயம் செய்கிறது, இதில் ஏதும் மாற்று கருத்து இல்லை, எனவே நவகிரகங்களின் பெயர்ச்சியை ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் காண முற்படுவதே மிக துல்லியமானதாக அமையும், இதுவே அவரவர் சுய தேடுதலுக்கும், முன்னேற்றமிகு யோக வாழ்க்கைக்கும் அடிப்படையாக அமையும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

மேலும் இயல்பாக கடந்த இரண்டு வருடங்களாக எதிர் வர்க்க ( கன்னி-புதன், துலாம்-சுக்கிரன் ) கிரகங்களின் வீடுகளில் சஞ்சாரம் செய்த குரு பகவான் தனது இயற்க்கை குணத்திற்கு மாறாக செயல் இழந்த நிலையில் சுபயோகங்களை வாரி வழங்கும் வல்லமை அற்று காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது, தனது வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டில் ( விருச்சிகம் ) சஞ்சாரம் செய்யும் குருபகவான் தரும் பலாபலன்களை இனி லக்கின வாரியாக சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

லக்கினம் : சிம்மம்

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் ராசியாகவும், ஸ்திர நெருப்பு தத்துவ தன்மையை பெற்றதுமான சிம்ம ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, தனது சுய வர்க்க வீட்டில் ( விருச்சிகம் )  பெயர்ச்சியாகும் குரு பகவான் நல்லதொரு மாற்றங்களை தனது சஞ்சார நிலையில் இருந்தும், பார்வை செய்யும் பாவக வழியில் இருந்தும் வாரி வழங்குவது வரவேற்க்கதக்கது, சுக ஸ்தானமான 4ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் சிம்ம லக்கின அன்பர்களுக்கு நல்ல சுகபோக யோக வாழ்க்கையை நல்குவதில் யாதொரு தடையும் தர வாய்ப்பில்லை, புதிய நல்ல வண்டி வாகன யோகம், சொகுசு மிக்க வீடு வசதி வாய்ப்புகள், சொத்து சுக சேர்க்கை, வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானம், பொருளாதார உதவிகள், தெய்வீக அனுகிரகம் மூலம் வாழ்க்கையில் ஏற்பாடும் முன்னேற்றம், வாழ்க்கை துணை வழியிலான பொருளாதார ஆதரவு, தாய் வழி சொத்துக்கள் கிடைத்தல், வண்டி வாகன தொழில் மூலம் கிடைக்கும் எதிர்பாராத வருமான வாய்ப்புகள், இறக்குமதி பொருட்கள் வழியிலான ஜீவன மேன்மை, புதிய வாய்ப்புகள் மற்றும் சந்தர்ப்பங்களை முறையாக பயன்படுத்தி முன்னேற்றம் பெரும் வல்லமை, அரசு உதவி, மருத்துவ துறையில் உள்ளோருக்கு கிடைக்கும் அசுர வளர்ச்சி, பொருளாதார நன்மைகள், இன்சூரன்ஜ் மற்றும் கமிஷன் தொழில் செய்யும் அன்பர்களின் வாழ்க்கையில் ஏற்படும் முன்னேற்றம் மற்றும் நன்மைகள், தெளிவான சிந்தனை கொண்டு பெரும் புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கை என சிம்ம லக்கின அன்பர்களுக்கு சுக ஸ்தான வழியில் இருந்து பரிபூர்ண நன்மைகளே நடைமுறைக்கு வரும் என்பது கவனிக்கத்தக்கது, வாழ்த்துக்கள்.

 குரு பகவான் தனது 5ம் பார்வையால் சிம்ம  லக்கின அன்பர்களுக்கு ஆயுள்  ஸ்தானமான 8ம் பாவகத்தை கோண பலம் பெற்று வசீகரிப்பது, 100% விகித இன்னல்களையே வாரி வழங்கும், மரணத்திற்கு இணையான பேரிழப்பையும், மனம் சார்ந்த அழுத்தம் மற்றும் போராட்டங்களையும் தரும் என்பதுடன், இவை அனைத்தும் வாழ்க்கை துணை, நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் மூலம் வரும் என்பது கவனிக்கத்தக்கது, மீனம் உபய நீர் தத்துவ ராசி என்பதால் சிம்ம லக்கின அன்பர்கள் மனதை செம்மையாக வைத்துக்கொள்வது  நல்லது ஏனெனில், ஒருநிலையில் இல்லாத மனம் தவறான செயல்பாடுகளையும், பின்விளைவு அறியா துன்பங்களையும் வாரி வழங்கிவிடும், பெரியோர்களின் ஆசியின்றி செய்யும் காரியங்கள் யாவும் பேரிழப்பையும், பெரும் துன்பத்தையும் வாரி வழங்கிவிடும், ஆயுளுக்கு பங்கம் தரும் காரியங்களை செய்வதை தவிர்ப்பதே சகல நன்மைகளையும் தரும், குறிப்பாக வண்டி வாகனங்களில் பாதுகாப்பான பயணம் அவசியமாகிறது, தாங்கள் எடுக்கும் திடீர் முடிவுகள் யாவும் மிக மிக தவறானதாக அமைந்துவிட வாய்ப்பு உண்டு, வாழ்க்கை துணையுடனான இணக்கமான சூழ்நிலையை கடைபிடிப்பதே இல்லற வாழ்க்கையில் சகல நலன்களையும் தரும், முடிந்த அளவிற்கு தாங்கள் பணிந்து செல்வதே இல்லற வாழ்க்கையில் இன்பத்தை வாரி வழங்கும், மனதில் தெளிவு பெறுவது மிக மிக அவசியமானதாக " ஜோதிடதீபம் " கருதுகிறது.

குரு பகவான் தனது 7ம் பார்வையால் சிம்ம லக்கின அன்பர்களுக்கு ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகத்தை வசீகரிப்பது, தொழில் விருத்தியை மிக பெரிய அளவில் வழங்கிய போதிலும், பொருளாதார சிக்கல்களை தரும், வருமானம் சார்ந்த திட்டமிடுதல்கள் சிறப்பாக அமையவில்லை எனில் தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய பொருளாதார சீர்குலைவை சந்திக்கும் சூழ்நிலையை தரும், அதே போன்று குடும்ப வாழ்க்கையில் மிகவும் சீரான வார்த்தை பிரயோகம் தங்களின் மனநிம்மதிக்கு குந்தகம் விளைவிக்காது, செலவுகள் எவ்வளவு செய்தாலும் விரையம் செய்வதை தவிர்ப்பது தங்களின் வாழ்க்கையில் இனிவரும் காலங்களில் நன்மையை தரும், மிகுந்த பொறுப்புடன் இல்லற வாழ்க்கையை கையாள்வது மிக மிக அவசியமானதாக அமைகிறது, கொடுக்கல் வாங்கல்களில் தாங்கள் ஒரு நேர்த்தியை இனி கடைப்பிடிப்பதும், கடன் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட முயற்சிப்பதும் தங்களின் வாழ்க்கையில் நிறைவான நன்மைகளை தரும், எதிப்புகளை மிக எளிதாக கையாண்டு வெற்றி பெறுங்கள், புதுவித முயற்சிகளை மேற்கொள்ளும் முன் பலமுறை ஆலோசனை செய்து காரியத்தில் இறங்குவதே சிறப்பான நன்மைகளை தரும், பேச்சில் நிதானம் தேவை என்பதையும் நாவடக்கம் சிம்ம இலக்கின அன்பர்களுக்கு சகல நன்மைகளையும் தரும் என்பதையும் கவனத்தில்கொண்டு செயல்படுங்கள் வாழ்த்துகள்.

குரு பகவான் தனது 9ம் பார்வையால் சிம்ம லக்கின அன்பர்களுக்கு விரைய ஸ்தானம் எனும் 12ம் பாவகத்தை வசீகரிப்பதும், கடகம் சுய வர்க்க கிரகத்தின் ( சந்திரன் ) வீடாக இருப்பதும் ராஜ யோக பலன்களை தரும், முதலீடுகள் வழியிலான நன்மைகள் தேய்பிறை காலங்களில் சிறப்பாக வந்து சேரும், தெய்வீக ஈடுபாடு, தாம்பத்திய வாழ்க்கையில் சந்தோசம், மனரீதியான போராட்டங்களில் இருந்து விடுபடும் தன்மை என மிகுந்த நன்மைகளை தரும், இருப்பினும் புதிய முதலீடுகளை செய்யும் முன் ஆழ்ந்து சிந்தனை செய்து செயல்படுங்கள், தேவையற்ற எதிர்பாலின சேர்க்கை ஏற்ப்பட அதிக வாய்ப்பு உள்ளதால் ஸ்திரமான மன நிலையுடன் தவிர்த்துவிடுவதே தங்களுக்கான முன்னேற்றத்தை சிறப்பாக வாரி வழங்கும், முற்போக்கு சிந்தனையுடன் அனைத்தையும் எதிர்கொள்ளுங்கள், பிற்போக்கு தனமான செயல்பாடுகள், மூடநம்பிக்கைகளில் அதீத ஈடுபாடுகள் கொண்டு இருப்பின் தங்களின் வாழ்க்கையில் தாங்களே இன்னல்களை தேடிகொள்வீர்கள், எனவே மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு நலம் பெறுவது அவசியமானதாகும், நிறைய எதிர்ப்புகள் வர அதிக வாய்ப்பு உண்டு என்பதால், இனிமையான பேச்சு திறமை கொண்டு எதிர்ப்பை  வெற்றி கொள்ளுங்கள்.

குறிப்பு :

சிம்ம  லக்கின அன்பர்களுக்கு, தற்போழுது நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் சுய ஜாதகத்தில் 4,8,10,12ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக அவயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 4,8,10,12ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

புதன், 14 நவம்பர், 2018

குரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - மிதுனம் )


( குரு பெயர்ச்சியின் வழியில் சற்று இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலைக்கு ஆளாகும் லக்கினமாக மிதுன லக்கின அன்பர்கள் உள்ளனர் என்பது கவனிக்க தக்கது ) சுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினாலும், அமர்ந்த இடத்தில் இருந்தும் எதிர்வரும் ஒருவருட காலத்திற்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி விருச்சிகம் முதல் துலாம் வரை, ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !

 ''எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்'' என்பதற்கு இணங்க ஒருவரது வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தில் அதிமுக்கிய பங்கு வகிப்பது உடல் உயிராகிய " ஜென்ம லக்கினமாகும் " ஒருவரது வாழ்க்கையில் நிகழும் யோக அவயோகம், நன்மை தீமை போன்றவற்றை ஜென்ம லக்கினமே நிர்ணயம் செய்கிறது, இதில் ஏதும் மாற்று கருத்து இல்லை, எனவே நவகிரகங்களின் பெயர்ச்சியை ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் காண முற்படுவதே மிக துல்லியமானதாக அமையும், இதுவே அவரவர் சுய தேடுதலுக்கும், முன்னேற்றமிகு யோக வாழ்க்கைக்கும் அடிப்படையாக அமையும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

மேலும் இயல்பாக கடந்த இரண்டு வருடங்களாக எதிர் வர்க்க ( கன்னி-புதன், துலாம்-சுக்கிரன் ) கிரகங்களின் வீடுகளில் சஞ்சாரம் செய்த குரு பகவான் தனது இயற்க்கை குணத்திற்கு மாறாக செயல் இழந்த நிலையில் சுபயோகங்களை வாரி வழங்கும் வல்லமை அற்று காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது, தனது வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டில் ( விருச்சிகம் ) சஞ்சாரம் செய்யும் குருபகவான் தரும் பலாபலன்களை இனி லக்கின வாரியாக சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

லக்கினம் : மிதுனம் 

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 3ம் ராசியாகவும், உபய காற்று தத்துவ தன்மையை பெற்றதுமான மிதுன ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, தனது சுய வர்க்க வீட்டில் ( விருச்சிகம் )  பெயர்ச்சியாகும் குரு பகவான் மிதுன லக்கினத்திற்க்கு, களத்திர ஸ்தானம் மற்றும் ஜீவன ஸ்தானம் என்ற இரு அமைப்பிலும் கேந்திர ஆதிபத்திய தோஷ நிலையில் நிற்பது மிதுன லக்கின அன்பர்களுக்கு இன்னல்களை தரும் அமைப்பாகும், தனது சத்ரு ஸ்தான சஞ்சார நிலையில் மிதுன லக்கின அன்பர்களுக்கு எதிரிகளை வெல்லும் வல்லமையை தந்த போதிலும், தானாகவே எதிர்ப்புகளை சம்பாதித்து கொள்ளும் நிலைக்கு ஆளாக்குவார், தனது உடல் நிலையில் அக்கறை இன்மை வெகுவான பிரச்சனைகளை தரும், கடன் தொந்தரவுகள் எதிர்பாராத பிரச்சனைகள் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்ற தடையாக விளங்கும், இருப்பினும் போட்டி பந்தயம், சூது போன்றவற்றில் வெற்றி உண்டு, நிதானமான சிந்தனை வாழ்க்கையில் நன்மைகளை தரும், பொது வாழ்க்கையில் உள்ளோர் சிறிது ஏற்றம் காணும் நல்ல நேரம் என்ற போதிலும் கடுமையான இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும், மனம் போன போக்கில் செயல்படுவது வாழ்க்கையில் கடுமையான இன்னல்களையும் துன்பங்களையும் தரும் என்பதால் தெளிவான சிந்தனையுடன் ஒவ்வொரு முடிவுகளையும் மேற்கொண்டு வாழ்க்கையில் நலம் பெறுவது அவசியமாகிறது.

குரு பகவான் தனது 5ம் பார்வையால் மிதுன லக்கின அன்பர்களுக்கு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்தை கோண பலம் பெற்று வசீகரிப்பது, மிதுன லக்கின அன்பர்களுக்கு ஜீவன ரீதியான இன்னல்களை வெகுவாக தரக்கூடும், தொழில் வழியிலான தடைகள், முன்னேற்ற பாதிப்புகள் அதிக அளவில் ஏற்படக்கூடும் என்பதுடன் பெற்றோர் உடல் நலனிலும் அதிக அக்கறை கொள்ள வேண்டி வரும், கவுரவ குறைவான காரியங்களில் ஈடுபடாமல் இருப்பதே சகல நன்மைகளையும் தரும், பொதுவாக தனது முடிவையே மற்றவர்கள் மேல் திணிக்கும் வழக்கம் மிதுன இலக்கின அன்பர்களுக்கு கைவந்த கலை என்பது எதார்த்தமான உண்மை என்ற போதிலும் தற்போதைய சூழ்நிலையில் இது பலன் தாராது, தங்களுக்கே எதிர்ப்பாக கிளம்பி நிற்கும் என்பதால், மற்றவர்கள் ஆலோசனைக்கும் மதிப்பளித்து நடந்துகொள்வதே ஜீவன ரீதியான நன்மைகளை தரும், சுய விருப்பு வெறுப்பு இன்றி நடந்தால் மட்டுமே வாழ்க்கை சற்று நிம்மதியுடன் இயங்கும், வாழ்க்கை துணை நண்பர்கள் மற்றும் உறவுகளுடன் மிகுந்த இணக்கமாக இருப்பது தங்களுக்கு வரும் தொழில் ரீதியான இன்னல்களுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்ப்படுத்தும்.

குரு பகவான் தனது 7ம் பார்வையால் மிதுன லக்கின அன்பர்களுக்கு விரைய ஸ்தானம் எனும் 12ம் பாவகத்தை வசீகரிப்பது, தேவையற்ற மன உளைச்சலை தரும், மன போராட்டம் மன அழுத்தம் இரண்டும் தங்களின் எதிர்காலத்தை வெகுவாக பாதிக்கும், தாம்பத்திய வாழ்க்கையில் சிரமங்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், தம்பதியரின் வாழ்க்கையில் மகிழ்ச்சி வெகுவாக பாதிக்கும், வருமானம் சார்ந்த இழப்புகள் தங்களின் பொருளாதார வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும் என்பதால், சேமிப்பை தங்களது வசமாக்குவது அவசியமானதாக உள்ளது, புது வித உடல் தொந்தரவுகள் தங்களுக்கு வெகுவான மருத்துவ செலவினங்களை அதிகரிக்க கூடும், எதிர்பாராத விபத்து அல்லது உடல்நல குறைவு தங்களுக்கு கடுமையான பாதிப்பை தரக்கூடும் என்பதால், வண்டி வாகனங்களில் பாதுகாப்பான பயணம் அவசியமாகிறது, முதலீடுகளில் இருந்து வரும் வருமானம் மட்டும் தங்களுக்கு சற்று ஆறுதலை தரும், உறக்கம் பாதிக்கும், எனவே நல்ல ஆன்மீக திருத்தலங்களுக்கு சென்று வருவது தங்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை வாரி வழங்கும் என்பதுடன், விரைய ஸ்தான பாதிப்பை வெகுவாக குறைக்கும்.

குரு பகவான் தனது 9ம் பார்வையால் மிதுன லக்கின அன்பர்களுக்கு குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகத்தை வசீகரிப்பதும், கடகம் சுய வர்க்க கிரகத்தின் ( சந்திரன் ) வீடாக இருப்பதும் ஒருவகையில் நன்மையை தந்த போதிலும் குடும்பத்தில் சண்டை சச்சரவுக்கு பஞ்சம் இருக்காது என்பதானால் மிதுன இலக்கின அன்பர்கள் தனது நாவை அடக்கி ஆள்வது அவசியமாகிறது, தேவையற்ற  வீண் வாதங்களில் ஆர்வம் செலுத்தினால் மன நிம்மதி பறிபோவதுடன், செலவினங்களும் கட்டுக்கடங்காமல் வீண் விரையமாகும், மேலும் நீர் தத்துவம் சார்ந்த விஷயங்கள் மூலம் வாழ்க்கையில் எதிர்பாராத நஷ்டங்கள் ஏற்ப்பட அதிக வாய்ப்பு உண்டு, வாழ்க்கை துணை உடனான இணக்கமான சூழ்நிலையை மிதுன இலக்கின அன்பர்கள் பேணி பாதுகாப்பது அவசியமாகிறது, இருப்பினும் ஏதாவது ஒரு வழியில் இருந்து வருமானம் வந்துகொண்டே இருக்கும் என்பதுடன், பொருளாதார சிக்கல்களுக்கு தீர்வுகளும் உண்டாகும், இனிமையான பேச்சு திறன் கொண்டு வாழ்க்கையில் நலம் பெறவேண்டிய நேரமிது என்பதால், மிகுந்த கவனமுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளுங்கள் " வாழ்த்துகள் "

குறிப்பு :

மிதுன லக்கின அன்பர்களுக்கு, தற்போழுது நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் சுய ஜாதகத்தில் 6,10,12,2ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக அவயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 6,10,12,2ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

செவ்வாய், 13 நவம்பர், 2018

குரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - ரிஷபம் )


( இந்த குரு பெயர்ச்சியின் மூலம் லாப ஸ்தானம் மற்றும் வீரிய ஸ்தான வழியில் இருந்து 100% விகித நன்மைகளை சுவீகரிக்கும் வல்லமை பெற்றவர்கள் ரிஷப லக்கின அன்பர்கள் என்றால் அது மிகையில்லை ) சுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினாலும், அமர்ந்த இடத்தில் இருந்தும் எதிர்வரும் ஒருவருட காலத்திற்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி விருச்சிகம் முதல் துலாம் வரை, ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !

 ''எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்'' என்பதற்கு இணங்க ஒருவரது வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தில் அதிமுக்கிய பங்கு வகிப்பது உடல் உயிராகிய " ஜென்ம லக்கினமாகும் " ஒருவரது வாழ்க்கையில் நிகழும் யோக அவயோகம், நன்மை தீமை போன்றவற்றை ஜென்ம லக்கினமே நிர்ணயம் செய்கிறது, இதில் ஏதும் மாற்று கருத்து இல்லை, எனவே நவகிரகங்களின் பெயர்ச்சியை ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் காண முற்படுவதே மிக துல்லியமானதாக அமையும், இதுவே அவரவர் சுய தேடுதலுக்கும், முன்னேற்றமிகு யோக வாழ்க்கைக்கும் அடிப்படையாக அமையும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

மேலும் இயல்பாக கடந்த இரண்டு வருடங்களாக எதிர் வர்க்க ( கன்னி-புதன், துலாம்-சுக்கிரன் ) கிரகங்களின் வீடுகளில் சஞ்சாரம் செய்த குரு பகவான் தனது இயற்க்கை குணத்திற்கு மாறாக செயல் இழந்த நிலையில் சுபயோகங்களை வாரி வழங்கும் வல்லமை அற்று காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது, தனது வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டில் ( விருச்சிகம் ) சஞ்சாரம் செய்யும் குருபகவான் தரும் பலாபலன்களை இனி லக்கின வாரியாக சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

லக்கினம் : ரிஷபம் 

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் ராசியாகவும், ஸ்திர மண் தத்துவ தன்மையை பெற்றதுமான ரிஷப ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, தனது சுய வர்க்க வீட்டில் ( விருச்சிகம் )  பெயர்ச்சியாகும் குரு பகவான் ரிஷப லக்கினத்திற்க்கு, சத்ரு ஸ்தான அதிபதி என்ற நிலையில் கேந்திர ஆதிபத்திய தோஷம் தரும் அமைப்பிலும், லாப ஸ்தான அதிபதி என்ற நிலையில் சகல சௌபாக்கியங்களையும் தன்னிறைவாக வாரி வழங்கும் வல்லமை பெற்றவர் ஆகிறார், தனது களத்திர ஸ்தான சஞ்சார நிலையில் இருந்து ரிஷப லக்கின அன்பர்களுக்கு சற்று சிரமங்களை வாரி வழங்க தவறமாட்டார் என்பதுடன், எதிர்பாலின சேர்க்கை மூலம் தேவையற்ற இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலைக்கு ஆளாக்குவார் என்பது கவனிக்க தக்கது, உயர்பதவிகளில் உள்ளோர் சற்று கவனமுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளவேண்டிய நேரமிது, வெளிநாடு அல்லது வெளியூரில் ஜீவனம் தேடும் அன்பர்களுக்கு சில நல்ல வாய்ப்புகள் தேடிவரும், தன்னம்பிக்கை அதிகரிக்கும், மன நிலையில் நல்ல மாற்றங்களும், தெய்வீக அனுக்கிரகமும் தங்களின் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களை வாரி வழங்கும், கூட்டு முயற்சிகள் மட்டும் தங்களுக்கு பேரிழப்பையும், தடை தாமதங்களையும் வழங்க கூடும், வண்டி வாகனங்களில் பயணம் மேற்கொள்ளும் பொழுது மிகுந்த எச்சரிக்கையுடன் பாதுகாப்புடன் இருப்பது மிக மிக அவசியமாகிறது.

குரு பகவான் தனது 5ம் பார்வையால் ரிஷப லக்கின அன்பர்களுக்கு லாப ஸ்தானமான 11ம் பாவகத்தை கோண பலம் பெற்று வசீகரிப்பது, மிகுந்த லாபத்தையும் அதிர்ஷ்டகரமான யோக வாழ்க்கையையும் வாரி வழங்கும், முதலீடுகளில் இருந்து வரும் வருமானம் மற்றும் லாபம் தங்களின் வாழ்க்கையில் தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்பை அதிகரிக்கும், நல்ல நிம்மதியும், தெளிவான மனநிலையும் தங்களின் வாழ்க்கையில் அபரிவிதமான  யோக வாழ்க்கையை வாரி வழங்கும், புதிய முயற்சிகள் வழியிலான லாபங்கள் தங்களின் வாழ்க்கையில் எதிர்பாராத சுபயோகங்களை வாரி வழங்கும், தன்னம்பிக்கை மிக்க செயல்பாடுகள் மூலம் வாழ்க்கையில் அபரிவிதமான நன்மைகளையும் சுபயோகங்களையும் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் இனிவரும் ஒருவருட காலத்தில் தேடிவரும், தங்களுக்கு இதுவரை இருந்த எதிர்ப்புகள் யாவும் நீங்கி, புதிய யோக வாழ்க்கையை நல்கும் என்பதுடன், அதிர்ஷ்டத்தின் தாக்கம் தங்களுக்கு பரிபூர்ணமாக கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்கது, போதிய விழிப்புணர்வுடன் செயல்பட்டு வாழ்க்கையில் தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகளையும், சுகபோக யோக வாழ்க்கையையும் சுவீகரியுங்கள், குறிப்பாக முதலீடுகளில் அதிக கவனம் செலுத்தலாம்.

குரு பகவான் தனது 7ம் பார்வையால் ரிஷப லக்கின அன்பர்களுக்கு லக்கினம் எனும் முதல் பாவகத்தை வசீகரிப்பது, உடல் நிலை சார்ந்த இன்னல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு, வரும் வருமானத்தை சரியான மேலாண்மை செய்ய இயலவில்லை எனில் அதீத பொருளாதர சிக்கல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், பேசும் வார்த்தைகளில் அதீத கவனம் தேவை, வாக்கு தவறினால் வாழ்க்கையில் நிறைய இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும், மனம் கவலைகொள்ளவும், அதீத போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகும், மன பயம் தங்களின் வாழ்க்கையில்  அதிகப்படியான துன்பங்களை சந்திக்கும் நிலைக்கு தள்ளும் என்பதால், தைரியமான  முடிவுகளை மேற்கொண்டு நலம் பெறுங்கள், அரை குறை மனதுடன் செய்யும் காரியங்கள் யாவும் தங்களுக்கு மீள இயலா இன்னல்களை தரும் என்பதை கவனத்தில் கொள்க, மேலும் பொது காரியங்கள், பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமுடன் நடந்துகொள்வது நல்லது, குறிப்பாக குடும்பத்தில் பகைமை பாராட்டாமல் அனைவருடன் இணக்கமாக நடந்துகொள்வது சகல விதங்களில் இருந்தும் நன்மைகளை  தரும்.

குரு பகவான் தனது 9ம் பார்வையால் ரிஷப லக்கின அன்பர்களுக்கு வீரிய ஸ்தானம் எனும் 3ம் பாவகத்தை வசீகரிப்பதும், கடகம் சுய வர்க்க கிரகத்தின் ( சந்திரன் ) வீடாக இருப்பதும் எடுக்கும் காரியங்கள் யாவிலும் வெற்றி மேல் வெற்றியை தரும், வீரியமிக்க செயல்பாடுகள் மூலம் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் சுவீகரிக்கும் நேரமிது, தரகு, கமிஷன், ஒப்பந்த சார்ந்த வியாபரங்கள் மூலம் அபரிவிதமான யோக வாழ்க்கையை சந்திக்கும் நேரமிது, புதிய தொழில் வாய்ப்புகள் தங்களின் வாழ்க்கையில் சிறப்புமிக்க முன்னேற்றங்களை வாரி வழங்கும், காண்ட்ராக்ட் தொழில் செய்வோருக்கும், கட்டுமான துறை மற்றும் வண்டி வாகன துறையில் இருப்போருக்கும் அபரிவிதமான நன்மைகளும் முன்னேற்றங்களும் வந்து சேரும், எதிர்பார்ப்புகள் யாவும் நிறைவேறும், உணவு பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள், மருத்துவ துறை போன்றவற்றில் பணியாற்றும் அன்பர்களுக்கு இது ஒரு யோக காலமாக கருதலாம், கலைத்துறை மற்றும் விளையாட்டு துறையில் உள்ள அன்பர்களும்  மிகப்பெரிய சாதனைகளை சாதிக்கும் வாய்ப்பை வாரி வழங்கும், புதிய வீடு வண்டி வாகனம் சொத்து சுக சேர்க்கை என  வாழ்க்கையில் தன்னிறைவான சுகபோகங்களை பரிபூர்ணமாக சுவீகரிக்கும் யோகத்தை இந்த குரு பெயர்ச்சி ரிஷப இலக்கின அன்பர்களுக்கு வாரி வழங்கும் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை " வாழ்த்துகள் "

குறிப்பு :

ரிஷப  லக்கின அன்பர்களுக்கு, தற்போழுது நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் சுய ஜாதகத்தில் 7,11,1,3ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக அவயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 7,11,1,3ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

திங்கள், 27 ஆகஸ்ட், 2018

சுய ஜாதக ஆலோசணை மூலம் வாழ்க்கையில் நலம் பெறுவது எப்படி ? சுக்கிரன் திசை சுபயோக வாழ்க்கையை தருமா ?


ஒவ்வொருவரும் சுய ஜாதக ஆலோசணை மூலம்  வாழ்க்கையில் நலம் பெறுவது அவசியமாகிறது, நமது பிறப்பின் ரகசியம்  அறியவும், படைப்பின் சாராம்சம் பற்றி தெளிவாக தெரிந்துகொள்ளவும் நமது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவக வலிமை பற்றியும், நடைபெறும், எதிர்வரும் திசா புத்திகள் ஏற்று நடத்தும் பாவக தொடர்பு பற்றியும் துல்லியமாக அறிந்துகொண்டு, அதன் வழியில் சரியான திட்டமிடுதல்களை மேற்கொண்டு வெற்றி பெறுவது மிக மிக அவசியமாகிறது, கீழ்கண்ட ஜாதகருக்கு லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் சுய ஜாதக ரீதியாக பெற்றுள்ள வலிமை பற்றியும், நடைபெறும் திசா புத்திகள் தரும் யோக அவயோக பலாபலன்கள் பற்றியும் இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : மீனம்
ராசி : கடகம்
நட்ஷத்திரம் : ஆயில்யம் 2ம் பாதம்

ஜாதகத்தில் பாவக தொடர்புகள் :

1,3,5,7,11,12ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவக தொடர்பை பெறுவது ஜாதகருக்கு 1ம் பாவக வழியில் இருந்து சிறப்பான வளரும் சூழ்நிலை, நிறைவான கல்வி, அதீத லாபங்கள் மற்றும் அதிர்ஷ்டம், செல்வச்செழிப்பு, அனைவர் வழியில் இருந்து வரும் உதவிகள், நோய் பாதிப்பில் இருந்து விரைவில் விடுபடும் தன்மை, வருமுன் காக்கும் வல்லமை, நினைத்த எண்ணங்கள் யாவும் பலிதம் பெறுதல், திருமண வாழ்க்கையில் சந்தோசம் மற்றும் அதிர்ஷ்டம், அதிக குழந்தைகள் அவர்கள் வழியில் இருந்து வரும் யோக வாழ்க்கை, தன்னம்பிக்கை மிக்க மனநிலை, எதிர்ப்புகளை கண்டு அஞ்சாமல் போராடும் வலிமை, புதிய சிந்தனை, முற்போக்கு சிந்தனை மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் தன்மை, நீடித்த அதிர்ஷ்டம் மற்றும் நீண்ட ஆயுள் உண்டாகும்.

3ம் பாவக வழியில் இருந்து எண்ணத்தின் வலிமை அதிகரிக்கும், நல்ல வியாபர முன்னேற்றம், மிகத்தைரியமான மனநிலை, எதையும் சாதிக்கும் வல்லமை, எடுக்கும் முயற்சிகளில் இருந்து வரும் வெற்றிகள், அதிக வாகன வசதி சொகுசு வாகன யோகம், விவசாய வழியில் இருந்து வரும் முன்னேற்றம், நிறைய சொத்து சுக சேர்க்கை, தர்மத்தை மதித்து நடத்தல், சாஸ்திர அறிவு, அதன் வழியில் இருந்து பெரும் யோக வாழ்க்கை, கணிதத்தில் தேர்ச்சி, விளையாட்டில் ஆர்வம், திருமணத்திற்கு பிறகான  அதிர்ஷ்ட வாழ்க்கை, வீரியமிக்க செயல்திறன், எதையும் வெற்றிகொள்ளும் மனப்பான்மை, துல்லியமான கணிப்பு திறன் என்ற வகையில் சுபயோகங்களை தருவதுடன், தகவல் தொழில் நுட்ப அறிவையும் அதிகரிக்கும், நிறைவான நல்லறிவு ஜாதகருக்கு சிறப்பான எதிர்காலத்தை வாரி வழங்கும்.

5ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் லாட்டரி யோகம், தனது புத்திசாலித்தனத்தால் ஆதாயம், குலதெய்வ அனுக்கிரகம் மூலம் வாழ்க்கையில்  சுபகாரியங்களை சிறப்பாக செய்யும் தன்மை, கற்ற கல்வி வழியில் இருந்து வரும் யோகம், தெளிவான சிந்தனை, சமயோசித புத்திசாலித்தனம் மற்றும் நுண்ணறிவு கொண்டு வாழ்க்கையில் அனைத்தையும் வெற்றிகொள்ளும் தன்மை, தெய்வீக திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம், எதிர்பார்த்த நன்மைகள் நடைமுறைக்கு வரும் தன்மை, பெற்ற குழந்தைகள் வழியில் இருந்து வரும் யோக வாழ்க்கை, நல்ல  ஆண்வாரிசு, பூர்வீகத்தில் இருந்து அபரிவித முன்னேற்றங்களை சுவீகரிக்கும் யோகம் என மிகுந்த நன்மைகளை தரும்.

7ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நல்ல யோகமிக்க வாழ்க்கை துணை அமையும், சிறந்த நண்பர்கள் வழியில் ஆதரவும், உதவி செய்யும் நல்ல கூட்டாளிகளும் ஜாதகருக்கு அமைவார்கள், வெளியூர் அல்லது வெளிநாடுகளில் இருந்து சிறப்பான வருமான வாய்ப்புகள் உண்டாகும், வியாபாரம் ஜாதகருக்கு மிகச்சிறப்பாக அமையும், தம்பதிய வாழ்க்கையில் வெற்றியும், பொதுமக்கள் வழியில் இருந்துவரும் ஆதரவும் ஜாதகருக்கு மிகவும் அபரிவிதமானதாக அமையும், வெளியூர் வெளிநாடு பயணங்கள் மூலம் ஜாதகர் தன்னிறைவான முன்னேற்றங்களை பெறுவார், ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் கைகொடுக்கும், ஏஜென்சி தரகு தொழில் ஜாதகருக்கு அபரிவித வளர்ச்சியினை வாரி வழங்கும்.

11ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு ஜாதகர் மிகுந்த அதிர்ஷ்டசாலி , ஜாதகர் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயல்களிலும் வெற்றியும், லாபமும் உண்டாகும், ஜாதகரின் முற்போக்கு சிந்தனை எதிர்பாராத வெற்றிகளுடன் கூடிய அதிர்ஷ்ட வாய்ப்புகளை வாரி வழங்கும், நேர்மறை எண்ணங்களால் ஜாதகரின் வாழ்க்கை மிகுந்த சுவாரஷ்யம் மிக்கதாக அமைந்திருக்கும், மற்றவர்களையும் தன்னையும் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்கும் வலிமை உண்டாகும், ஜாதகரின் நேர்மையான குணம் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்கது.

12ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நிறைவான லாபங்கள் உண்டாகும், வியாபாரத்தில் அபரிவித வளர்ச்சி உண்டு, சுபவிரையங்கள் அதிகரிக்கும், ஆன்மீகத்தில் நல்ல நாட்டமும், தெய்வீக திருத்தலங்களுக்கு சென்றுவரும் யோகமும் உண்டாகும், நல்ல ஆன்மீக குருவின் மூலம் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் பெறுவதற்கான வாய்ப்பு உண்டாகும், தாம்பத்திய வாழ்க்கையில் திருப்தியும், மனநிறைவான யோக வாழ்க்கை அமையும், முதலீடுகள் வழியில் பெருத்த லாபங்கள் உண்டாகும், தெய்வீக குணம் அதிகரிக்கும், மனதில் உள்ள லட்சியங்கள் யாவும் நிறைவேறும்.

2,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு, 2ம் பாவக வழியில் இருந்து தந்தையின் ஆசியின் மூலம் வருமான அதிகரிக்கும் என்ற போதிலும் நிதி மேலாண்மை சார்ந்த விஷயங்களில் ஓர் நேர்த்தி இருக்காது, இன்சூரன்ஸ், உயில், போனஸ், கிராஜுவிட்டி போன்றவற்றின் மூலம் லாபம் கிட்டும், திருமணம் தாமதமாக வாய்ப்பு உள்ளது, ஆயுள் பாவக தொடர்பை பெரும் 2ம் வீடு ஜாதகருக்கு நிதானமான நிதி மேலாண்மை திறன் இல்லை எனில் வெகு வேகமாக தனம் கரையும் என்பதை கருத்தில் கொள்க.

8ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நீண்ட ஆயுள் உண்டு என்ற போதிலும், திடீர் இழப்புகளை தவிர்க்க இயலாது, குறிப்பாக மருத்துவ செலவுகள், வீண் விரையம், தொழில் வழியிலான பாதிப்புகள், வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் வீண் செலவினங்கள், வாகனம் சார்ந்த விரைய செலவுகள் போன்றவை கடுமையான பாதிப்பை தரும் என்பதால் ஆயுள் காப்பீடு போன்றவற்றில் முதலீடு செய்து வரும் பாதிப்பில் இருந்து விடுபடலாம், குறிப்பாக அனைத்து பொருட்கள் இடம், வேண்டி வாகனம் போன்றவற்றை காப்பீடு செய்துகொள்வது சகல நிலைகளில் இருந்தும் நன்மைகளை தரும்.

4,6,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 4ம் பாவக வழியில் இருந்து நல்ல ஞானத்தையும், சிறந்த நற்குணத்தையும் தரும், உயர்கல்வி ஆய்வு கல்வியில் தேர்ச்சியை தரும், வருமுன் உணரும் தன்மையையும், இரசாயனம், கனிம பொருட்கள் சுரங்க பொருட்கள் வழியில் அபரிவித லாபத்தையும் வாரி வழங்கும், பல  அறிய திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம் உண்டு, தர்மத்தையும் சத்தியத்தையும் மதித்து போற்றும் குணத்தை தரும், மதம் சார்ந்த நன்மைகள் உண்டாகும், ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் சிறந்து விளங்கும் தன்மையை தரும், தகவல் தொழில் நுட்பம் சார்ந்த விஷயங்களில் அபரிவித யோகம் உண்டு, வண்டி வாகன தொழில் வழியில் லாபம் உண்டு, சுய   உழைப்பின் மூலம் வெற்றி பெற்ற மனிதராக திகழ்வார் என்பது கவனிக்கத்தக்கது.

6ம்  பாவக வழியில் இருந்து பயணம் மூலம் லாபம் உண்டாகும், சமாதான  முறையால் சகல சௌபாக்கியங்களையும் பெறுவார், மதம் சார்ந்த விஷயங்களில் நன்மைகளும் ஆதரவும் தேடி வரும், உடல் நல பாதிப்பில் இருந்து விரைவாக குணம் பெரும் தன்மையை தரும், கடன் சார்ந்த தொல்லைகள் ஜாதகரின் நடவடிக்கைகள் மூலம் நிறைவடையும், நீண்ட நாள் ஆசை லட்சியம் யாவும் நிறைவேறும், அதீத எதிர்ப்புகள் உண்டான போதிலும் இறுதியில் வெற்றியே ஜாதகர் பெறுவார், பொறுமையை கடைபிடிப்பது ஜாதகருக்கான வெற்றிகளை அதிகரிக்கும்.

9ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு வரும் துன்பங்களை ஜாதகரே தனது அறிவுத்திறன் கொண்டு வெற்றி பெறுவார், ஜாதகரின் முன்னோர்கள் செய்த பாக்கியத்தின் பலாபலன்களை முழுவதும் சுவீகரிக்கும் வல்லமை உண்டாகும், தெளிந்த நல்லறிவு, அதீத செயல்திறனும் ஜாதகருக்கு உலக புகழை பெற்று தரும், அனைவரிடமும் நற்ப்பெயரை பெறுவதற்கான சந்தர்ப்பம் உண்டாகும், தனது நிறுவனத்தின் பெயரை மக்கள் மத்தியில் பிரபல்யம் அடையச்செய்யும் யோகம் பெற்றவர் என்பதுடன், தொழில் வழியில் அழியா புகழை பெறுவார், இடமாற்றம் மற்றும் சூழ்நிலை மாற்றத்தில் அதீத ஆர்வம் உண்டாகும்.

10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு , உத்தியோகம் வியாபாரம் மற்றும் சுய தொழில் வழியிலான தன்னிறைவான வெற்றிகளை வாரி வழங்கும், கம்பீரமான நிர்வாக திறனை தரும், தீர்க்கமான வாத திறமையையும், விரைவான செயல்பாடுகளையும் தரும், பொது வாழ்க்கையில் வெற்றி உண்டாகும், தான் செய்யும் தொழில் வழியில் இருந்து 100% விகித வெற்றிகளையும் லாபங்களை பெறுவதுடன், கவுரவம் அந்தஸ்து குறையாத யோக வாழ்க்கையை தரும், ஜாதகரின் ஜீவன ஸ்தானம் மிகவும் வலிமையுடன் இருப்பதால் எதிர்கால வாழ்க்கை பரிபூர்ண வெற்றிகள் நிறைந்ததாக விளங்கும்.

நடைபெறும் திசாபுத்திகள் தரும் பலாபலன்கள் :

சுக்கிரன் திசை தரும் பலாபலன்கள் ( 20/03/2009 முதல் 20/03/2029 வரை )

நடைபெறும் சுக்கிரன் திசை ஜாதகருக்கு 2,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவக பலனை ஏற்று நடத்துவது, மேற்கண்ட பாவக வழியில் இருந்து சற்று இன்னல்களை தரக்கூடும், வருமானம், இழப்பு என்ற  வகையில் இன்னல்கள் உண்டாக வாய்ப்பு உண்டு என்பதால் ஜாதகரின் நிதி சார்ந்த மேலாண்மை மிகவும் சிறப்பாக அமைவது அவசியமாகிறது, முடிந்த அளவு கடன் சார்ந்த இன்னல்களில் இருந்து விடுபட முயற்சிப்பது அவசியமாகிறது, அதீத தன்னம்பிக்கை ஜாதகருக்கான பொருளாதார முன்னேற்றங்களை அபரிவிதமானதாக மாற்றி அமைக்கும், தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசையில் ராகு புத்தி 5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவக தொடர்பை பெறுவது வரவேற்கத்தக்கது, தன்னிறைவான பொருளாதர முன்னேற்றங்களையும், எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் நல்கும், குலதெய்வத்தின் ஆசியின் மூலம் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும்.
எதிர்வரும் குரு புத்தியும் தங்களுக்கு 1,3,7,12ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவக பலனை  ஏற்று  நடத்துவது தங்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளில் இருந்து விடுதலையும், பொருளாதார மேன்மையையும் வாரி வழங்கும், புதிய சிந்தனை புதிய செயல்பாடுகள் தங்களின் வாழ்க்கையில் எதிர்பாராத நன்மைகளை வாரி வழங்குவதுடன் இல்லற வாழ்க்கையில் சந்தோசம், குழந்தை பாக்கியத்தை தடையின்றி வழங்கும், சுக்கிரன் திசை 2,8ம் பாவக வழியில்  இருந்து இன்னல்களை தந்த போதிலும், நடைபெறும், எதிர்வரும் புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை தருவது வரவேற்க்கத்தக்கது " வாழ்த்துக்கள் "

வாழ்க வளமுடன் 
 ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 19 ஜூலை, 2018

சுய ஜாதக ஆலோசணை : ராகு திசை மற்றும் ராகு புத்தியால் என்ன நடக்கும் ?



கேள்வி :

 பிறந்த தேதி : ( 12/07/2017 )  நேரம் இரவு : (11.10) இடம் : சென்னை

எனது மகனின் பெயர்  கோகுல், ராகு  திசை ராகு புத்தி பிறந்துள்ளான், தற்போழுது உடல் வலிமை இல்லாமல் இருக்கின்றான், இதற்கான காரணம் என்ன ? ராகு திசை மற்றும் ராகு புத்தியால்  என்ன நடக்கும் ? எனது மனம் மிகுந்த  குழப்பத்தில் உள்ளது, சரியான பதில் மற்றும் தீர்வை தர இயலுமா ?

பணிவுடன்
வேல்முருகன்
சென்னை



பதில் :

 பொதுவாக நாம் நமது சுய ஜாதக வலிமையை பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பது நமது ஜாதகத்தில் உள்ள சுபயோகங்களை சுவீகரிக்கவும், அவயோகங்களை தவிர்க்கவும் நமக்கு நல்லதோர் வழிகாட்டுதல்களை வாரி வழங்கும், தாங்கள் வினவியிருக்கும் தங்களது மகனின் ஜாதகத்திற்க்கான பதில்களை இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பரே! சுய ஜாதகத்தில் லக்கினம் எனும் முதல் பாவகம் வலிமை பெற்று இருப்பது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு வளரும் சூழ்நிலையில் சிறப்பு, உடல் ஆரோக்கியம், மனநலம், தெய்வீக அனுக்கிரகம், தன்னம்பிக்கை மிக்க மனநிலை, நோய் எதிர்ப்பு சக்தி, புகழ், வெற்றி, எதிர்ப்புகள் அனைத்தையும் சமாளிக்கு வல்லமை, தெளிவான சிந்தனை, நீண்ட ஆயுள், சுய ஜாதகத்தில் உள்ள யோகங்களை சுவீகரிக்கும் வல்லமை என்ற வகையில் நன்மைகளை தரும் என்பது கவனிக்கத்தக்கது.

 ஆனால் தங்களது மகனின் ஜாதகத்தில் 1,2,7,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது லக்கினம் சற்று வலிமை இழந்து காணப்படுகிறது, மேலும் குடும்ப ஸ்தானமான 2ம் வீடு, களத்திர ஸ்தானமான 7ம் வீடு, அயன சயன ஸ்தானமான 12ம் வீடுகள் அனைத்தும் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கான நெருக்கடிகளை அதிக அளவில் தரும் என்பது கவனிக்கத்தக்கது, தங்களுக்கு உண்டான நல்ல செய்தி என்னவென்றால் ஜாதகருக்கு விரைய ஸ்தானமான 12ம் பாவகம் கும்ப ராசியில் 22பாகைகளையும்,  மீன ராசியில் 13பாகைகளையும் கொண்டிருப்பது ஆறுதல் அளிக்கும் விஷயமாகும், காற்று தத்துவம் மற்றும் நீர் தத்துவ ராசிகள் விரைய ஸ்தான அமைப்பில் வியாபித்து நிற்பது உடல் தொந்தரவை தந்த போதிலும் அதில் இருந்து ஜாதகருக்கு நிவாரணத்தையும் தரும் என்பதுடன், பாதிப்பு கடுமையாக இருக்காது, எனேவ ஜாதகருக்கு ஏற்படும் உடல் நல குறைவிற்க்கான காரணத்தை அறிந்து மருத்துவம் மூலம் குணம் அடைய செய்யுங்கள்.

ராகு திசை, ராகு புத்தி

ஜாதகன் ராகு திசை ராகு புத்தியில் ஜெனனித்து இருந்தாலும், ராகு தனது திசையிலும் , புத்தியிலும் 2ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவக பலனை மட்டும் ஏற்று நடத்துவது  வீண் விரையத்தை பொருளாதர ரீதியாக வாரி வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை, தங்களது வருமானம் மருத்துவ செலவுகள் என்ற வகையில் விரையமாகலாம், எதிர்பாராத வீண் செலவுகளை தரலாம் எனவே ராகுதிசை, ராகு புத்தி தங்களது பொருளாதர முன்னேற்றத்தை சற்று கடுமையாக பாதிக்கும் என்பதுடன் , வீண் மனக்கவலை, மனப்போராட்டம் என்ற வகையில் இன்னல்களை  தரக்கூடும்.

மேலும் தங்களது மகனின் சுய ஜாதகரீதியாக பலாபலன்களை மின் அஞ்சல் அல்லது அலைபேசி மூலம் அறிந்து நலம் பெறுங்கள் " வாழ்த்துகள் "

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696


செவ்வாய், 17 ஜூலை, 2018

ஜாதக ஆலோசணை : திருமணம்,தொழில்,பொருளாதரம் எப்படி அமையும் ?

  
 சுபயோகம் மிக்க ஓர் ஜாதகத்தை ஆய்வு செய்வது என்பதே அலாதியான மகிழ்வை தரக்கூடிய நிகழ்வுதான் என்றால் அது மிகையில்லை, தங்களது ஜாதகமும் அதுபோன்று லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் மிகவும் வலிமை மிக்கதாக இருப்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், தங்களது ஜாதகம் வெகுவாக வலிமை பெற்று இருந்த போதிலும் திருமணம், தொழில், போன்றவை சிறப்பாக அமையவில்லை என்பதற்கான காரணத்தை தங்களது ஜாதக ஆய்வு மூலம் மிக தெளிவாக அறிந்துகொள்ள முற்படுவோம் அன்பரே, தங்களது ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்புகள் வழியில் இருந்து பெரும் நன்மைகளை பற்றி தெளிவாக காண்போம், நடைமுறையில் உள்ள திசாபுத்திகள், எதிர்வரும் திசாபுத்திகள் தரும் பலாபலன்களையும், இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.


லக்கினம் : தனுசு
ராசி : கன்னி
நட்ஷத்திரம் : அஸ்தம் 3ம் பாதம்

சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

1,3,4ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு லக்கின பாவக வழியில் இருந்து சகல  சௌபாக்கியங்களையும் சுய உழைப்பின் மூலம் சுவீகரிக்கும் வல்லமையை தரும், அடிப்படையில் ஜாதகரின் நல்ல குணமும், வளரும் சூழ்நிலையில்  மற்றவர்கள் மூலம் பெரும் சிறப்புகளும் ஜாதகருக்கு பரிபூர்ணமாக அமைந்துஇருக்கும், வண்டிவாகன யோகம், சொத்து சுக சேர்க்கை, இடம் வீடு, நிலம் சார்ந்த வரவுகள் ஜாதகருக்கு தேடிவரும், உடல் ஆரோக்கியம் மற்றும் மனநலம் ஜாதகருக்கு சிறப்பாக அமையும், செய்யும் செய்யும் செயல்களில் வெற்றியும் புகழும் உண்டாகும், தெய்வீக அனுகிரகம் ஜாதகருக்கு புதுவித உத்வேகத்தையும், சரியான வாழ்க்கை பாதையையும் அமைத்துத்தரும், ஜாதகரின் எண்ணமும் செயலும் நேர்மை நிறைந்தததாகவும், ஒழுக்கத்தை கடைபிடிக்கும் விதமாகவும் அமைந்திருக்கும், ஜாதகரின் பரோஉபகார நடவடிக்கைகள் பொதுமக்கள் ஆதரவையும், அவர்கள் வழியிலான முன்னேற்றங்களையும் தன்னிறைவாக வாரி வழங்கும், ஜாதகர் எந்த சூழ்நிலையையும் சிறப்பாக எதிர்கொண்டு வாழ்க்கையில் வெற்றிகரமானமனிதராக திகழ்வார் என்பதுடன் சுக போகமிக்க யோக  வாழ்க்கையை அனுபவிக்கும் வல்லமை பெற்றவர் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

3ம் பாவக வழியில் இருந்து வண்டி வாகன தொழில், வீடு நிலம் இடம் சார்ந்த தரகு வியாபாரத்தில்  பரிபூர்ண வெற்றிகளை தரும், சுய உழைப்பின் மூலம் வாழ்க்கையில் பெரிய சொத்துக்களை வாங்கும் யோகம் பெற்றவர், தைரியமும் தன்னம்பிக்கையும் ஜாதகரின் வாழ்க்கையில் பலவித சுபயோகங்களை வாரி வழங்கும், தைரியமிக்க முடிவுகளை வெகு விரைவாக மேற்கொண்டு அதன் வழியில் வரும் நன்மையை சுவீகரிக்கும் யோகம் உண்டாகும், கமிஷன், ஏஜென்சி, தரகு தொழில்கள் ஜாதகருக்கு அபரிவித வளர்ச்சியை தரும், குறிப்பாக ஏஜென்சி தொழிலில் ஜாதகருக்கு எதிர்பாராத லாபங்களும் அதிர்ஷ்டங்களும் தேடிவரும், எதையும் துணிந்து செய்து வெற்றியை பரிபூர்ணமாக சுவீகரிக்கும் யோகமிக்கவர், சாஸ்திர ஞானமும், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களும் ஜாதகருக்கு பரிபூர்ண நன்மைகளை வாரி வழங்கும், பொது வாழ்க்கையில் புகழ் மிக்க பொறுப்புகள் தேடிவரும், தனது வாழ்க்கையை சிறப்பான வெற்றிப்பாதையில் நடைபோட செய்யும் சூட்ஷமம் தெரிந்தவர் என்பது ஜாதகருக்கான சிறப்பு இயல்புகள்.

4ம் பாவக வழியில் இருந்து சொத்து, இடம், வீடு வண்டி வாகனம் போன்றவற்றில் இருந்து ஜாதகருக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும் , பெரிய சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டு, நல்ல குணமும், பரந்த மனப்பக்குவமும் ஜாதகருக்கு எதிர்பாராத நன்மைகளை வாரி வழங்கும், பெற்றோர் வழியிலான ஆசிர்வாதம் ஜாதகருக்கு  நல்ல முன்னேற்றத்தையும், சிறப்பு மிக்க பொறுப்புகளையும் தேடித்தரும், வலிமை மிக்க பதவிகள் ஜாதகரை தேடிவரும், எதிர்பார்ப்புகள் யாவும் ஜாதகருக்கு நிறைவேறும், மனதில் நினைத்த காரியங்கள் ஜாதகருக்கு நடைமுறைக்கு வரும், சுகபோகம் மிக்க யோக வாழ்க்கையை ஜாதகர் தன்னிறைவாக பெறுவதற்கான சந்தர்ப்பங்களும் வாய்ப்புகளும்  இளம் வயதிலேயே உண்டாகும், ஜாதகரின் மனவலிமை மற்றும் மனஉறுதி  சிறப்பான எதிர்காலத்தை அமைத்துத்தரும், தனது பெயரில் உள்ள சொத்துக்கள் மற்றும் வண்டிவாகனங்கள் ஜாதகருக்கு தொடர் வருமான வாய்ப்பை நல்குவதுடன், பொருளாதார தன்னிறைவை தரும், அனைவரிடமும் அனுசரித்து செல்லும் குணம் ஜாதகரின் வாழ்க்கையில் எதிர்பாராத நன்மைகளை வாரி வழங்கும், வடக்கு திசை வாயிற்படி கொண்ட வீடுகளில் ஜாதகர் ஜீவனம் செய்வது  ஜாதகத்தில் உள்ள சுபயோகங்களை முழுவதும் சுவீகரிக்கும் வல்லமையை தரும்.

2,5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகத்திலே மிகவும் வலிமை பெற்ற பாவக தொடர்பாக கருதலாம், 2ம் பாவக வழியில் இருந்து வாக்கு வன்மையினால் அதிர்ஷ்டம் உண்டாகும், நல்ல நண்பர்கள் மாற்று கூட்டாளிகள் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் யோகத்தை தரும், பேச்சு திறன் மூலம் வாழ்க்கையில் ஜீவன மேன்மை அடையும் தன்மையை தரும், பொருளாதர வசதி வாய்ப்புகள் பரிபூர்ணமாக  அமையும் செல்வச்செழிப்பு மூலம் வாழ்க்கையில் தன்னிறைவான யோக வாழ்க்கையை பெறுவார், ஏதாவது ஒருவழியில் இருந்து வருமானம் ஜாதகருக்கு வந்துகொண்டே இருக்கும், திருமணத்திற்கு பிறகான குடும்ப வாழ்க்கையில் ஜாதகருக்கு அதிர்ஷ்டம்  வெகுவாக அதிகரிக்கும், வாழ்க்கை துணை வழியிலான யோகங்களை இல்லற வாழ்க்கையில் ஜாதகர் பரிபூர்ணமாக பெறுவார், அபரிவித தனசேர்க்கையை பெறுவதற்கான வல்லமையை தரும்.

5ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு பூர்வீகத்திலான வளர்ச்சி என்பது 100% விகிதம் அமையும், சமயோசித புத்திசாலித்தனமும், தெளிவான சிந்தனையும் ஜாதகரின் முன்னேற்றத்திற்கு பேருதவியாக அமையும், எடுக்கும் காரியங்கள் யாவிலும் வெற்றி மேல் வெற்றியை ஜாதகர் பரிபூர்ணமாக பெறுவார், லட்டரியோகம், புதிசாலிதனத்தல் ஆதாயம், எப்பொழுதும் மகிழ்சியுடன் வாழ்வதற்கான வாய்ப்பு, குழந்தைகள் மனைவி குடும்பத்துடன் சகல சௌபாக்கியங்களையும் பெற்று இனிமையாக வாழும் தன்மையை தரும், ஜாதகரின் நுண்ணறிவு பிரகாசிக்கும், குல தெய்வ ஆசியின் மூலம் ஜாதகர் மேற்கொள்ளும் சுபகாரியங்கள் யாவும் தடையின்றி நடைபெறும், புதிய சிந்தனை, புதிய வாய்ப்புகள் ஜாதகருக்கு தேடி வரும், வெளியூர் வெளிநாடுகளில் இருந்துவரும் பொருட்கள் மூலம் நல்ல லாபம்உண்டாகும், ஜாதகரின் அறிவு திறன் பூர்வீகத்தில் ஜீவித்து இருக்கும் வரை முழுவீச்சில் செயல்படும், அனைத்தையும் வெற்றிகரமாக பெரும் யோகத்தை தரும்.

11ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் நீடித்த அதிர்ஷ்டம் உள்ளவர் என்பதுடன், நல்ல மனமும் சிறந்த குணமும் கொண்டவர், தனது முற்போக்கு சிந்தனையின் மூலம் வாழ்க்கையில் வியக்கத்தகு சாதனைகளை சாதிக்கும் யோகம் பெற்றவர், மிகுந்த அதிர்ஷ்டம், அனைத்திலும் லாபம், நல்ல குணம் போன்றவை ஜாதகருக்கு விரைவான மக்கள் ஆதரவை தரும், ஜாதகரின் முன்னேற்றம் என்பது பொதுமக்கள் மற்றும் எதிர்பாலின அமைப்பினரிடம் இருந்து வரும் என்பது கவனிக்கத்தக்கது, பொதுமக்கள் தொடர்பு சார்ந்த ஜீவனத்தை மேற்கொள்வது ஜாதகருக்கான முன்னேற்றத்தை பன்மடங்கு அதிகரிக்கும், ஜாதகரின் மனதில் உள்ள லட்சியங்கள், ஆசைகள்  யாவும் பரிபூர்ணமாக நடைமுறைக்கு வரும், வாழ்க்கை துணை வழியிலான ஆதரவு ஜாதகருக்கு மிகப்பெரிய அந்தஸ்த்தை வாரி வழங்கும்.

6,9,12ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 6ம் பாவக வழியில் இருந்து பயணங்கள் மூலம் லாபம் உண்டாகும், சமாதான பிரியர், தெய்வீக அனுக்கிரகம் பெற்றவர், எதிரிகளையும் கட்டியாலும் வல்லமையை தரும், எதிர்ப்புகள் அனைத்தும் ஜாதகரின் முன்னேற்றத்திற்கு அடிப்படையாக விளங்கும், மதம் சம்பந்தமான விஷயங்களில் வெற்றியை தரும், உடல் நலம் மனநலம் சிறந்து விளங்கும், விரைவாக இன்னல்களில் இருந்து விடுபடும் தன்மையை தரும், வாழ்க்கை துணையை, குடும்பத்தை கவனமாக காக்கும் தன்மையை தரும், எதிர்ப்புகளை சமாளித்து வெற்றிகொள்ளும் தன்மையை தரும் அடிக்கடி ஆன்மீக பயணம் மேற்கொள்ளும் யோகத்தை தரும்.

9ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் அறிவுத்திறன் வெகு பிரகாசமான எதிர்காலத்தை தரும், நல்ல ஆன்மீக பெரியோர்களின்  ஆசீர்வாதம் ஜாதகரின் யோக வாழ்க்கையை உறுதி செய்யும், சாஸ்திர ஞானம், கலைகளில் தேர்ச்சி, பெருந்தன்மையான குணம், பெரிய மனிதர்களின் ஆதரவு, உயரிய பதவிகள் என ஜாதகருக்கு பாக்கிய ஸ்தான வழியில் இருந்து சுபயோக பலன்களே நடைமுறைக்கு வரும், பொது வாழ்க்கையில் நற்பெயரும், சமூக அந்தஸ்தும் தேடி வரும், பயணங்களில் விருப்பம், அறிவாளி, தெய்வீக அனுபவம், இடமாற்றம் மற்றும் சூழ்நிலை மாற்றத்தில் ஆதித ஆர்வம், புதுவித முயற்சிகளில் வெற்றி, பல ஆன்மீக திருத்தலங்களுக்கு சென்றுவரும் யோகத்தை தரும், ஜாதகரின் அறிவு திறன் பல அன்பர்களுக்கு நல்லொதொரு வாழ்க்கையை அமைத்துத்தரும்.

12ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் வெளிநாடுகளில் இருந்து வரும் யோகத்தை முழுவதுமாக சுவீகரிக்கும் வல்லமையை தரும், பயணங்கள் மூலம் நல்ல லாபத்தையும், உல்லாசம் மிக்க யோக வாழ்க்கையையும் சுவீகரிக்கும் வலிமையை தரும், தொழில் மற்றும் இருப்பிடத்தை மாற்றுவதன் மூலம் அதீத நன்மைகளை ஜாதகர் பெறுவார், பிறவியற்ற நிலையை அடைவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டாகும், மனம் ஒருநிலைப்படும், ஆன்மீக பெரியோர்கள் ஆசிர்வாதம் ஜாதகருக்கு கிடைத்தற்கரிய பொக்கிஷங்களை பெறுவதற்கான வாய்ப்புகளை பெற்று தரும், இல்லற வாழ்க்கையில் திருப்தியும், போதுமென்ற மனமும் ஜாதகருக்கு பரிபூர்ண நன்மைகளை பெற்று தரும்.

7,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 7ம் பாவக வழியில் இருந்து தாமத திருமணத்தை தரும், இருப்பினும் நல்ல அந்தஸ்து உள்ள வாழ்க்கை துணையை தரும், நல்ல நண்பர்கள் கூட்டாளிகள் மூலம் வாழ்க்கையில் மிகப்பெரிய அந்தஸ்தை ஜாதகர் பரிபூர்ணமாக பெறுவார், அரசியலில் வெற்றியும் உயரிய பதவிகளை அலங்கரிக்கும் யோகமும் உண்டாகும், ஏற்றுமதி இறக்குமதி தொழில் வழியிலான முன்னேற்றங்களை தங்கு தடையின்றி பெறுவார், வியாபாரம் ஜாதகருக்கு பரிபூர்ண நன்மைகளை தரும், சமூகத்தில் மதிப்பு மிக்க மனிதராக ஜாதகர் விளங்குவார், பொது வாழ்க்கையில் வெற்றி உண்டாகும், திருமணத்திற்கு பிறகான அதிர்ஷ்ட வாழ்க்கை ஜாதகருக்கு மிகவும் அபரிவிதமாக அமையும், பொதுமக்கள் ஆதரவு ஜாதகருக்கு வாழ்நாள் முழுவதும் கிடைக்கும். மிகசிறந்த வியாபாரியாக ஜாதகர் திகழ்வார், எதிர்பார்ப்புகள் யாவும் ஜாதகருக்கு பரிபூரணமாக நிறைவேறும்.

10ம் பாவக வழியில் இருந்து சிறந்த உத்தியோகம், நல்ல தொழில் முன்னேற்றம், செய்யும் சுய தொழில் மூலம் அபரிவித லாபங்கள், புதிய வாய்ப்புகள் , தன்னிறைவான பொருளாதரா நன்மைகளை ஜாதகர் பரிபூரணமாக பெரும் யோகம், கவுரவம் மிக்க  பதவிகள், சுய அந்தஸ்து, பல தொழில் செய்யும் வாய்ப்பு என்ற வகையில் சிறப்புகளை தரும், ஜாதகரின் ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 6ம் ராசியான கன்னியில் 10 பாகைகளையும், 7ம் ராசியான துலாமில் 20 பாகைகளையும் கொண்டு இருப்பது வரவேற்கத்தக்கது, ஜாதகருக்கு ஜீவனம் என்பது உபய மண் தத்துவ அமைப்பிலும் சர காற்று தத்துவம் சார்ந்த அமைப்பிலும் சிறப்பாக அமையும், உதாரணமாக உணவு பொருட்கள் சார்ந்த தொழில்கள், விவசாய விளைபொருட்கள், தானிய வியாபாரம், வண்டி வாகன உபகரண பொருட்கள், தொழில் நுட்பம் சார்ந்த உபகரண பொருட்கள் வழியில் இருந்தும், சர காற்று ராசியை  குறிக்கும், தரகு மற்றும் கமிஷன் வியாபாரம், ஏற்றுமதி இறக்குமதி தொழில்கள், தனது அறிவு திறன் கொண்டு முதலீடு இல்லாமல் செய்யும் அனைத்து தொழில்களும் ஜாதகருக்கு மிகவும் பொருத்தமாக அமையும், அல்லது வெகுஜன மக்கள் விரும்பு பொருட்களை வியாபாரமாக செய்வதன் மூலம் ஜாதகருக்கு சிறந்த தொழில் முன்னேற்றம் உண்டாகும், ஏஜென்சி தொழில் மூலம் நல்ல லாபம் கிட்டும், பிரபல்ய யோகம் உண்டு என்பதால் ஜாதகர் ஏதாவது வியாபாரம் செய்வது சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும்.

ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவக தொடர்புகள் :

8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு நீண்ட ஆயுளை தரும் என்ற போதிலும், திடீர் இழப்புகளை தவிர்க்க இயலாது, குறிப்பாக ஜாதகர் பாதுகாப்பான பயன்களை மேற்கொள்வது நல்லது, ஜாதகருக்கு வரும் திடீர் இழப்புகள் யாவும் ஜாதகரின் மனம்போன போக்கில் செல்வாதாலேயே ஏற்படும், மற்றவர்களை நம்பி செய்யும் முதலீடுகள் யாவும் திடீர் இழப்பை தருவதுடன், ஜாதகரின் முன்னேற்றத்தையும் வெகுவாக தடுக்கும், ஜாதகரின் ஆயுள் ஸ்தானம் கடக ராசியில் 15 பாகைகளையும் சிம்ம ராசியில் 17 பாகைகளையும் கொண்டு இருப்பது ஜாதகருக்கு மனக்குழப்பத்தையும், உறுதியற்ற தன்மையால் ஏற்படும் இழப்பையும் அதிகரிக்கும், தெளிவில்லாமல் செய்யும் காரியங்கள் யாவும் ஜாதகருக்கு கடுமையான நெருக்கடிகளை தரும், குறிப்பாக ஜாதகரின் சுகபோக வாழ்ககையை வெகுவாக பாதிக்கும், அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள் யாவும் ஜாதகருக்கு பெரும் இன்னல்களையே ஏற்படுத்தும், சுய கட்டுப்பாடு இழப்பது, முரண் பட்ட வாழ்க்கையை தேர்வு செய்வது ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் உள்ள சுபயோகங்கள் யாவையும் " யோக பங்கம் " என்ற நிலைக்கு ஏற்படுத்தும் என்பதை கவனத்தில் கொள்க.

மேற்கண்ட ஜாதகருக்கு ஆயுள் ஸ்தானத்தை தவிர மற்ற அனைத்து பாவகங்களும் மிக மிக வலிமையுடன் இருப்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சம் என்பதுடன் சுய ஜாதகம் வலிமை பெற்றுள்ளது என்பதை மிக துல்லியமாக கூறலாம் ஆனால் விதியின் தன்மை வேறுவிதமாக உள்ளது ஜாதகருக்கு  சுய ஜாதகத்தில் உள்ள யோக பலாபலன்களை சுவீகரிக்கும் வல்லமையை வெகுவாக பாதிக்கிறது, ஜாதகரின் இளமை காலத்தில் அதாவது ( 12/07/1992 முதல் 12/07/2010 வரை ) நடைபெற்ற ராகு திசை ஜாதகருக்கு  8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் வலிமை இழந்த ஆயுள் ஸ்தான பலனை தந்ததும், ஜாதகர் தனது பூர்வீகத்தில் இருந்து வெகு தொலைவு சென்று ஜீவனத்தை தேடியதும், ஜாதகத்தில் யோகம் இருந்தும் அதை சுவீகரிக்க இயலாத சூழ்நிலையை உருவாக்கியது.

 தற்போழுது நடைமுறையில் குரு திசை ( 12/07/2010 முதல் 12/07/2026 வரை ) ஜாதகருக்கு 2,5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் லாப ஸ்தான பலனை வாரி வழங்குவது வரவேற்கத்தக்கது, மேலும் ஜாதகர் தனது பூர்வீகத்தில் ஜீவனம் மேற்கொண்டு வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் பெற " ஜோதிடதீபம் " தனது அறிவுரைகளை வழங்குகிறது, குறிப்பாக ஜாதகரின் தொழில் பூர்வீகத்தில் அமைவது ஜாதகருக்கான முன்னேற்றத்தை பன்மடங்கு அதிகரிக்கும், பொருளாதர ரீதியான முன்னேற்றம் என்பது ஜாதகருக்கு வெகு அற்புதமாக அமையும், ஜாதகர் 2,5,11ம் பாவக வழியில் இருந்து நன்மைகளை சுவீகரிக்க  ஏதுவான சந்தர்ப்பங்களை உருவாக்கிக்கொள்வது நல்லது, மேலும் தற்போழுது நடைபெறும் சுக்கிரன் புத்தி ( 25/05/2018 முதல் 23/01/2021 வரை ) ஜாதகருக்கு ஏக காலத்தில் 7,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவக தொடர்பை பெற்று யோக பலன்களை தருவது, ஜாதகருக்கு திருமணத்திற்க்கான முயற்சியில் நல்ல வெற்றியையும், மனதிற்கு இசைந்த வாழ்க்கை துணையையும் தேடித்தரும் என்பதுடன், கூட்டு முயற்சியில் நல்லதோர் தொழில் வாய்ப்பையும் நல்கும், குரு திசை சுக்கிரன் புத்தி ஜாதகருக்கு மிகவும் சாதகமாக இருப்பதை சுவீகரிக்க, ஜாதகர் தனது பூர்வீகத்தில் ஜீவிப்பதை உறுதிசெய்துகொள்வது நல்லது வாழ்த்துகள் அன்பரே!

எதிர்வரும் சனி திசை தரும் பலாபலன்கள் : ( 12/07/2026 முதல் 12/07/2045 )

எதிர்வரும் சனி திசை ஜாதகருக்கு 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் சுபயோக பலாபலன்களை ஜீவன ஸ்தான வழியில் இருந்து தருவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும் ஜாதகர் எதிர்வரும் சனி திசை காலத்தில் தொழில் ரீதியான விருத்தியை தன்னிறைவாக பெறுவார் என்பதுடன், ஜாதகருக்கான யோக வாழ்க்கையை தற்போழுது  நடைபெறும் குரு திசையும், எதிர்வரும் சனி திசையும் உறுதி செய்வது வரவேற்கத்தக்கது, வாழ்த்துக்கள் அன்பரே !

குறிப்பு :

சுய ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட ஆயுள் ஸ்தான வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க ஜாதகர் முறையான பிரீதி பரிகாரங்களை மேற்கொண்டு நலம் பெறுக.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

சனி, 14 ஜூலை, 2018

ஜாதகஆலோசணை : அரசு வேலை அமையுமா ? தனியார் துறையில் பணியாற்றும் வாய்ப்பு உள்ளதா?


கேள்வி :

வணக்கம் எனக்கு இரு மகன்கள் உள்ளனர் ( இரட்டை குழந்தைகள் ) , இதில் இளையவர் சிறப்பு மிகுந்த இந்திய ஆட்சி பணியில் தேர்ச்சி பெற்று அரசு பணியில் உள்ளார், மூத்தவருக்கு இதுவரை யாதொரு வேலையும் அமையவில்லை, இருவருக்கும் பிறந்த நேரம் வெறும் 5நிமிடம் மட்டுமே வித்தியாசம், இருவரது ஜாதகமும் ஒன்றை போலவே உள்ளது, ஒரே லக்கினம், ஒரே நட்ஷத்திரம், ஒரே ராசி, நடைபெறும் திசாபுத்திகளும் ஏறக்குறைய ஒரே அமைப்பில் உள்ளது இருப்பினும் இருவருக்கும் முரண்பட்ட பலாபலன்கள் நடைபெற காரணம் என்ன ? மூத்தவருக்கு அரசு வேலை அமையுமா ? தனியார் துறையில் பணியாற்றும் வாய்ப்பு உள்ளதா? சற்று தெளிவுபடுத்த வேண்டுகின்றேன் .

பதில் :

இரட்டை குழந்தைகள் ஜாதகத்தில் பிறந்த நேரம் என்பது சில நிமிடங்கள் வித்தியாசம் இருப்பினும், ஜாதகத்தில் லக்கினம்,ராசி,நட்ஷத்திரம் மற்றும் திசாபுத்திகள் ஒரேமாதிரியாக இருப்பது வியப்பில்லை, ஆனால் சுய ஜாதக வலிமை என்பது ( லக்கினம் முதல் பனிரெண்டு வீடுகள் தொடர்பு பெரும் பாவக நிலை ) வெகுவான வித்தியாசங்களை கொண்டு இருக்கும், சில நிமிட இடைவெளியில் பிறந்த இரட்டையர் ஜாதகம் மேலோட்டமாக பார்க்கும் பொழுது ஒன்றைப்போலவே ஒன்று இருப்பினும், பாவக வலிமை என்பது ஒன்றைப்போல் ஒன்று இருக்காது என்பதை கருத்தில் கொள்வது நல்லது, தங்களது மகன்கள் இருவரும் இரட்டை பிறவிகள் என்பதாலும், 5 நிமிட வித்தயாசத்தில் பிறந்து இருப்பதாலும் இருவருக்கும் ஒரே மாதிரியான பலாபலன்கள் நடைமுறைக்கு வரும் என்று கருதுவது முற்றிலும் தவறான அணுகுமுறை அன்பரே ! இதை பற்றி இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

அண்ணன் ஜாதகம் :


லக்கினம் : சிம்மம்
ராசி : மகரம்
நட்ஷத்திரம் : அவிட்டம் 1ம் பாதம்

ஜாதகருக்கு பாவக தொடர்புகள் :

1,5,7,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 1,5,7,11ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் என்பதால் ஜாதகத்தில் மேற்கண்ட பாவக தொடர்பு வலிமை மிக்கதாக எடுத்துக்கொள்ளலாம்.

4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 4ம் பாவக வழியில் இருந்து சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், வீடு நிலம், இடம், வண்டி வாகனம் போன்ற அமைப்பில் இருந்து சுகபோகங்களை வாரி வழங்கும் என்பதால் ஜாதகத்தில் மேற்கண்ட பாவக தொடர்பையும் வலிமை மிக்கதாக எடுத்துக்கொள்ளலாம்.

2,6,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 2,6,10,12ம் பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களை தரும் மேலும் ஜாதகரின் 12ம் பாவகம் கடக ராசியில் 9 பாகைகளையும், அரசு துறையை குறிக்கும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் ராசியான சிம்மத்தில் 21 பாகைகளையும் கொண்டு வலுவிழந்து நிற்பது ஜாதகருக்கான அரசுத்துறை பணி என்ற விஷயத்தை "கானல்நீராக" மாற்றிவிடும் என்பதால் ஜாதகருக்கு மேற்கண்ட பாவக தொடர்புகள் ஜாதகத்தில் வலிமை அற்று இருப்பதாக எடுத்துக்கொள்ளலாம்.

3,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர் 3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் முயற்சிகளில் படுதோல்வியையும், வீரியமிக்க செயல்திறன் அற்றவர் என்பதையும் தெளிவுபடுத்துகிறது, 9ம் பாவக வழியில் இருந்து உயர் கல்வி மற்றும் ஆய்வு படிப்பு போன்றவற்றில் தேர்ச்சி  பெற வலிமையற்றவர் என்பதை உறுதி செய்கிறது, ஜாதகர் வீண் கற்பனையில் உலகில் சஞ்சரிக்கும் தன்மை பெற்றவர் என்பதையும் அறுதியிட்டு சொல்கிறது, மேலும் சுய ஜாதகத்தில் 3,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 200% விகித இன்னல்களை தரும் என்பதை கருத்தில் கொள்வது நல்லது, எனவே ஜாதகர்  இந்தியாவின் உயரிய படிப்பான இந்திய ஆட்ச்சிப்பணிக்கு படிப்பது என்பது " எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போகிறார் " என்பதற்கான நிலையை தந்துவிடும் என்பதே சுய ஜாதகத்தில் உள்ள உண்மை நிலை.

8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு பூர்ண ஆயுளை தந்த போதிலும், திடீர் இழப்புகளையும், ஏமாற்றங்களையும் தவிர்க்க இயலாது, தொடர் தோல்விகளை தரக்கூடும், நிம்மதியின்மை என்பது ஜாதகரின் வாழ்க்கையை வெகுவாக பாதிக்கும்.

மேற்கண்ட ஜாதகத்தில் 1,4,5,7,11ம் வீடுகளை தவிர மற்ற 7வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது, குறிப்பாக 3,9ம் வீடுகள் பாதக ஸ்தான தொடர்பை பெறுவது ஜாதகருக்கு மிகுந்த இன்னல்களை சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து வாரி வழங்கும்.

நடைபெறும் குரு திசையில் சனி புத்தி 5ம் பாவக வழியில் இருந்து நன்மையை தந்த போதிலும், தேர்வுக்கான முயற்சி செய்த நேரத்தில் ஜாதகருக்கு பாதக ஸ்தான பலனை நடைமுறைக்கு கொண்டு வந்தது யாதொரு நன்மையையும் பெற இயலாத நிலையை தந்து விட்டது, மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் பாவக வழியிலான வலிமை இன்மை சரியான ஜீவனத்தை வழங்கவில்லை என்பதே உண்மை நிலை.

தம்பி ஜாதகம் :


லக்கினம் : சிம்மம்
ராசி : மகரம்
நட்ஷத்திரம் : அவிட்டம் 2 ம் பாதம்

1,3,5,7,9,11ம் வீடுகள் அனைத்தும் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 1,3,5,7,9,11ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும், குறிப்பாக 1ம் பாவக வழியில் இருந்து வளரும் சூழ்நிலையில் சிறப்பு, சுய கட்டுப்பாடு, நல்ல உடல் மன ஆரோக்கியம் என்ற வகையிலும், 3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, லட்சியங்களை அடைதல், சிறந்த தகவல் தொழில்நுட்ப அறிவு, வீரியமிக்க செயல்பாடுகள், வெற்றியை பெறுதல், தன்னம்பிக்கை என்ற வகையிலும், 5ம் பாவக வழியில் இருந்து சமயோசித அறிவு திறன், அதிபுத்திசாலித்தனம், வாய்ப்புக்களை பரிபூர்ணமாக பெற்று நலம் பெறுதல், இறை அருள் கருணையினால் அனைத்தும் எளிதாக கிடைத்தல், கற்ற கல்வி வழியிலான அபரிவித முன்னேற்றம் என்ற வகையிலும், 7ம் பாவக வழியில் இருந்து நல்ல நண்பர்கள், சிறந்த கூட்டாளிகள், அவர்கள் வழியிலான ஆதரவு, பொதுமக்கள் ஆதரவு, செல்லும் இடங்களில் கிடைக்கும் மதிப்பு மரியாதை, பரிபூர்ண நன்மைகளை சுவீகரிக்கும் வல்லமை என்ற வகையிலும், 9ம் பாவக வழியில் இருந்து மிகசிறந்த அறிவு திறன், உயர்கல்வி, ஆய்வுக்கல்வி, நிர்வாக படிப்பு போன்றவற்றில் அதீத தேர்ச்சி, கற்ற கல்வி வழியிலான நன்மைகளை ஜாதகர் சுவீகரிக்கும் வல்லமை, அரசு துறை ஆதரவு என்ற வகையிலும், 11ம் பாவக வழியில் இருந்து நீடித்த அதிர்ஷ்டம், முற்போக்கு சிந்தனை, மிக எளிதாக அனைத்தும் கிடைத்தல், தெய்வீக அனுக்கிரகம், அறிவார்ந்த முயற்சிகள் வழியிலான ராஜயோக பலன்கள் என்ற வகையிலும் சிறப்பான நன்மைகளை தரும் என்பது கவனிக்கத்தக்கது.

2ம் வீடு குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர் சிறந்த வாக்கு வன்மையும், பேச்சு திறனும் கொண்டவர் என்பதை தெளிவு படுத்துகிறது, தனம் சார்ந்த விஷயங்களில் தன்னிறைவு கொண்டவர் என்பதுடன் ஒழுக்கம் மற்றும் நேர்மையை கடைபிடிக்கும் வல்லமை பெற்றவர் என்பதுடன், நிறைவான பொருளாதர முன்னேற்றம் மற்றும் இனிமையான குடும்ப வாழ்க்கையை பெற்று மகிழ்ச்சியுடன் இல்வாழ்க்கையை நடத்த தகுதி கொண்டவர் என்பதை உறுதிப்படுத்துகிறது.

4,8,10,12ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 4ம் பாவக வழியில் இருந்து சொத்து சுக சேர்க்கை, வண்டி வாகன யோகம், நல்ல குணம், சுய உழைப்பில் வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுபவர் என்பதையும், 8ம் பாவக வழியில் இருந்து திடீர் அதிர்ஷ்டம்,  அந்தஸ்த்து கவுரவம் போன்றவற்றை விரைவாக பெறுதல், சகல வசதிமிக்க உத்தியோகம், பதவியில் திடீர் உயர்வு என்ற வகையிலும், 10ம் பாவக வழியில் இருந்து சிறந்த உத்தியோகம், வியாபார முன்னேற்றம், செய்யும் தொழில் வேலை முதலியவற்றில் அபரிவித வளர்ச்சி, வெற்றிகரமான யோக வாழ்க்கை, கம்பீரமான பேச்சு, தீர்க்கமான வாத திறன் என்ற வகையிலும், 12ம் பாவக வழியில் இருந்து எதிரிகளின் சூழ்ச்சியே ஜாதகருக்கு சாதகமாக மாறும், அரசு பதவியில் திடீர் உயர்வு, தொழில் மற்றும் பணியில் திடீர் அதிர்ஷ்டம், ரகசிய ஏஜென்ட் என்ற வகையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும்.

6ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது பங்கு கொள்ளும் அனைத்து தேர்விலும் தேர்ச்சியை தரும், வழக்குகளில் வெற்றி என்றவகையில் நன்மையை தந்த போதிலும், உடல் நலம் சார்ந்த பாதிப்புகள் சில நேரங்களில் தொந்ததரவை தரக்கூடும் என்பது மட்டும் சற்று கவனிக்க வேண்டிய விஷயமாகும்.

இந்த ஜாதகருக்கு லக்கினம் முதல் பனிரெண்டு வீடுகளும் தாம் தொடர்பு பெரும் பாவக வழியில் இருந்து சகல யோகங்களையும் தருவது கவனிக்கத்தக்கது, மேலும் நடைபெறும் குரு திசை ஜாதகருக்கு 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவக தொடர்பை பெற்று ஜாதகருக்கான அரசு வேலையை உறுதி  செய்தது, குரு திசையில் சனி புத்தி 5ம் பாவக வழியில் இருந்து கற்ற கல்வி வழியிலான அதிர்ஷ்டத்தை பரிபூர்ணமாக தந்தது, ஜாதகருக்கான ஜீவன மேன்மையை மேலும் அதிர்ஷ்டகரமானதாக மாற்றியது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

இருவரது ஜாதகத்திலும் 5நிமிட வித்தியாசம் என்ற போதிலும் பாவக வழியிலான தொடர்புகள் வெகுவாக மாறியிருப்பது கவனிக்கத்தக்கது, இது நிமிடத்திற்கு நிமிடம் மாற்றம் பெரும் என்பதுடன், இருவரும் சுவீகரிக்கும் பலாபலன்கள் என்பது முற்றிலும் வேறுபடும் என்பதே உண்மை நிலை, இரட்டை பிறவிதானே இருவருக்கும் ஒரே பலாபலன்கள் நடைபெறும் என்று கருதுவது சுய ஜாதக கணிதம் பற்றிய நுணுக்கம் அறியாமல் வைக்கப்படும் வாதமாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது.

தங்களின் கேள்விக்கான பதில்

தங்களின் மூத்த மகனுக்கு அரசு பணி கிடைக்க வாய்ப்பு என்பது சற்று குறைவு, ஜாதகர் சிறு வியாபாரம் அல்லது ஓர் அடிமை தொழிலை தேர்வு செய்து அதில் வெற்றி பெறலாம், மற்றவர்கள் விஷயத்தில் தலையீடு செய்வது ஜாதகருக்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்தும், தனது முயற்சியை  கைவிடாமல் போராடி நலம் பெறுவது அவசியமாகிறது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

திங்கள், 2 ஜூலை, 2018

தொழிலில் இடமாற்றம் உண்டா ? திருமணம் தாமதமாக காரணம் என்ன ? உயர்கல்வி பயில முயற்சி மேற்கொள்ளலாமா ?



அய்யா,

 தற்பொழுது செய்துவரும் பணியில் இடமாற்றம் உண்டா ? ஊதிய உயர்வு கிடைக்குமா? ஆய்வு கல்விக்கான முயற்சிகளை மேற்கொள்ளலாமா, அதற்க்கு உகந்த நேரமாக நிகழ்காலத்தை கருதலாமா? திருமண வாழ்க்கை எப்படி அமையும் ? மனதிற்க்கு இசைந்த இல்லற வாழ்க்கை துணை அமையுமா ? திருமணம் தாமதமாக காரணம் என்ன ? தெளிவான விளக்கம் தர வேண்டுகின்றேன்.


பதில் :

லக்கினம் : மேஷம் 
ராசி : மகரம் 
நட்ஷத்திரம் : திருவோணம் 1ம் பாதம் 

 நடைபெறும் குரு திசை தங்களுக்கு 3ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவது வரவேற்கத்தக்கது, குறிப்பாக திடீர் அதிர்ஷ்டம், தொழில் மற்றும் பணியில் ஊதிய உயர்வுடன் கூடிய பணி இடமாற்றம் உண்டாகும், தீர்க்க ஆயுள் உண்டு, திருமணத்திற்கு பிறகான அதிர்ஷ்டத்தை தரும் என்பதால், திருமண முயற்சிகள் கைகூடும், தொட்டது அனைத்தும் துலங்கும், அதிர்ஷ்டத்தின் தாக்கம் திடீரென அதிகரிக்கும், எதிர்கால வாழ்க்கைக்கான நம்பிக்கை உண்டாகும்.

தற்போழுது நடைபெறும் குரு திசையில் சனி புத்தி தங்களுக்கு 1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம்  பெற்று யோக பலனை தருவது வரவேற்கத்தக்கது, இது தங்களுக்கு லக்கினம் மற்றும் களத்திர ஸ்தான வழியில் இருந்து சிறப்புகளை வாரி வழங்கும், கல்விக்கான முயற்சிகள் நல்ல வெற்றியை தரும், உடல் நலம் மனஆரோக்கியம் அதிகரிக்கும், தெளிவான சிந்தனை மற்றும் செயல்பாடுகள் தங்களின் வாழ்க்கையில் புதியதொரு உத்வேகத்தை தரும், சனி புத்தி 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவக தொடர்பை பெற்று யோக பலனை தருவது சகல சுக போகங்களையும் அனுபவிக்கும் தன்மையை தரும், வண்டி வாகன யோகம், புதிய தொழில் வாய்ப்புகள், திடீர் முன்னேற்றம், எதிர்பாராத கவுரவ பதவிகள், சிறந்த நிர்வாக திறனை போற்றும் விதமாக வரும் ஊதிய உயர்வு, புதிய தொழில் வாய்ப்புகள், புதிய மனிதர்கள் வழியில் இருந்து வரும் நம்பிக்கைகள் என்ற வகையில் சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும்.

குரு திசை ஜாதகத்தில் தங்களுக்கு வீரிய ஸ்தான பலனை பரிபூர்ணமாக வழங்குவதுடன், குரு திசை சனி புத்தி தங்களுக்கு 1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடனும், 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடனும் சம்பந்தம் பெற்றும் யோக பலனை தருவது தங்களது வாழ்க்கையில் ஸ்திரத்தன்மையிலான  முன்னேற்றங்கள் வெகுவாக வந்துசேரும், தெய்வீக அனுக்கிரகத்தால் எதிர்ப்புகள் அனைத்தும் விலகி வெற்றிநடை போடும் சுபயோக நேரமிது, வாழ்த்துகள்.

திருமண வாழ்க்கை  சுய ஜாதகத்தில் சனி புத்தியில்  1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதால், மேற்கு திசையில் இருந்து வரும் வாழ்க்கை துணை தங்களுக்கு சிறந்த கணவராக அமைவார், மேலும் தங்களுடனான பாசம் அன்பு மாறாத இனிமையான இல்லற வாழ்க்கையை தருவார், குறைந்தது தங்களின் வாழ்க்கை துணை 100 கிமி தூரத்திற்கு அப்பால் இருந்து வருவதுடன், அவரது வீடு மேற்கு திசை வாயிற்படி கொண்டதாக அமைந்திருக்கும், களத்திர ஸ்தான அதிபதி சனி என்பதால் அடிமை தொழில் புரிபவராகவும், நிலையான வருமானத்தை கொண்டவராகவும் திகழ்வார், தனது அறிவுத்திறன் கொண்டு ஜீவன மேன்மையை பெரும் யோகத்தை ஜாதகர் பெற்று இருப்பார்.

திருமணம் தாமதமாக சுய ஜாதகத்தில் 2,5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் பாதக ஸ்தான பலனை தங்களுக்கு 2ம் வீடு வழியில் இருந்து தருவாதாலேயே திருமண வாழ்க்கை வெகு தாமதமாகிறது, கடந்த ராகு திசையும் தங்களுக்கு 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடனும் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் ஜீவன மேன்மையை மட்டுமே வாரி வழங்கிவிட்டது என்பது கவனிக்கத்தக்கது, தற்போழுது நடைபெறும் குரு திசையில் சனி புத்தி 1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 7ம் பாவக நன்மைகளை தருவதால் தங்களுக்கு திருமண வாழ்க்கை கைகூடி வரும் வாழ்த்துக்கள்.

தற்போழுது நடைபெறும் குரு திசையும், எதிர்வரும் சனி திசையும் தங்களுக்கு சிறப்பான நன்மைகளை தருவது வரவேற்கத்தக்கது, குறிப்பாக குரு திசை தங்களுக்கு 3ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவதும், எதிர்வரும் சனி திசை 1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடனும் சம்பந்தம் பெற்றும் சுபயோக பலாபலன்களை தருவது வரவேற்கத்தக்கது, எனவே தங்களது வாழ்க்கையில் சிறப்பான எதிர்கால நன்மைகள் நடைபெற உள்ளதால், அது சார்ந்த முன்னேற்ப்பாடுகளை செய்து சகல சௌபாக்கியங்களையும் பெறுக.

தொழில்,திருமணம்,கல்வி,குழந்தை பாக்கியம், அதீத பொருளாதர வளர்ச்சி என்ற வகையில் எதிர்வரும் காலங்களில் தங்களின் வாழ்க்கை புது பாதையில் பயணிக்க இருப்பது கவனிக்கத்தக்கது, எனவே சரியான வாழ்க்கை துணையை மட்டும் உடனடியாக தேர்வு செய்து நலம் பெறுங்கள்.

குறிப்பு :

சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்பை ஏற்று நடத்தும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் யாவும் சிறப்பான சுபயோக  பலாபலன்களையே தரும் என்பதால், நடைபெறும் திசாபுத்தி, எதிர்வரும் திசாபுத்தி தங்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி  மிக துல்லியமாக அறிந்துவைத்திருப்பது மிக மிக அவசியமாகிறது என்பதை கருத்தில் கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

திங்கள், 25 ஜூன், 2018

சனி மகாதிசை தரும் அவயோக பலன்களும் ! பூர்வபுண்ணியம் கெட்டதால் வரும் பாதிப்புகளும் ( 5ல் கேது ) !

   

  சனி திசை நடைபெறுவதால், கடுமையான இன்னல்களை கடந்த பல வருடங்களாக சந்தித்து வருகின்றேன், சனி திசை ஆரம்பத்தில் புதிதாக வண்டிவாகன தொழிலில் ஈடுபட்டு, பெருத்த நஷ்டமே உண்டானது  5ல் கேது நின்று பூர்வீகம் கெட்டதால் பூர்வீகத்தில் குடியிருக்க வேண்டாம், இதுவே தங்களது தொழில் நஷ்டத்திற்கு காரணம் என்ற ஜோதிடரின் அறிவுரையின் படி,  எனது பெற்றோரின் நிலபுலன்கள் யாவையும் விற்றுவிட்டு தொழில் வழியிலான கடனை நிவர்த்தி செய்துவிட்டு, வெளியூர் சென்று குடியேறினோம்,  பூர்வீக இடமும் இல்லமால், துவங்கிய தொழில் வழியிலும் நஷ்டம் அடைந்து, பெரும் கடனாளியானது மட்டுமே மிச்சம், இவையெல்லாம் பூர்வீகம் கெட்டதால் வந்த இன்னல்களா? அல்லது சனிதிசை தரும் கெடு பலன்களா? பூர்வீகத்தை விட்டு வெளியில் வந்தும் யாதொரு முன்னேற்றமும் இதுவரை இல்லை, எனது ஜாதகத்தில் உள்ள உண்மை நிலை என்ன ? தற்போழுது வயது 43 இதுவரை பொருளாதார வசதிகளை எதுவும் பெற இயலவில்லை, இறுதிவரை இப்படியே இருக்குமா ? புதன் திசையாவது நன்மைகளை தருமா ? 


 ஜோதிட  ஆலோசணை, நமது வாழ்க்கையில் வரும் இன்னல்களை களைந்து, சுபயோக சுக வாழ்க்கையை நல்கும் அட்ஷய பாத்திரமாகும், துல்லியமான ஜாதக கணிதம் நிச்சயம் நம் அனைவருக்கும் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை, நமது அறிவுரையை வேதவாக்காக எடுத்துக்கொண்டு, தமது வாழ்க்கையை சிறப்பாக துவங்க இருக்கும் அன்பர்களுக்கு முரண்பட்ட பலாபலன்களை கூறி அவர்களை இன்னலுற செய்வது என்பது முற்றிலும் தவறான அணுகுமுறையாகும், தங்களது வாழ்க்கையிலும் இதுபோன்ற நிகழ்வே நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கின்றது, அடிப்படையில் தங்களது ஜாதக வலிமையை பற்றி ஏதும் அறியாமல் கூறிய ஜாதக ஆலோசணையின் பெயரில் தாங்கள் அனைத்தையும் இழந்து நிற்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது என்பதை அறிவுறுத்த "ஜோதிடதீபம்" கடமைப்பட்டுள்ளது, மேலும் இதற்க்கு முன் தங்களுக்கு வழங்கிய ஜாதக ஆலோசணை முற்றிலும் தவறானது என்பதை சிறு விளக்கங்களுடன் இன்றைய பதிவில் நாம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பரே !

5ல் கேது  :


தங்களது ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எனும் 5ம் வீடு மேஷ ராசியில் 027:58:59 பாகையில் ஆரம்பித்து ரிஷப ராசியில் 054:33:30 பாகைவரை வியாபித்து நிற்கிறது, கேது பகவான் மேஷ ராசியில் உள்ள நான்காம் பாவகத்திற்க்கு உற்ப்பட்ட  020:37:30 பாகையில் 100% விகித வலிமையுடன் அமர்ந்திருக்கிறது, எனவே அடிப்படையில் 5ல் கேது என்பதே தவறான ஜாதக கணிதமாகும், சுக ஸ்தானமான நான்காம் பாவகத்தில் கேது அமர்ந்து இருப்பதே உண்மை நிலை, தங்களது சுய ஜாதகத்தில் 5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த வலிமையுடன் இருப்பது வரவேற்கத்தக்கது, குறிப்பாக தங்களின் 5ம் பாவகம் மேஷ ராசியில் 2 பாகைகளும், ரிஷப ராசியில் 24 பாகைகளையும் கொண்டு இருப்பது வரவேற்கத்தக்கது, பெரும்பாலும் 5ம் பாவகம் ரிஷப ராசியிலே வியாபித்து நிற்கிறது, ரிஷபம் கால புருஷ தத்துவ அமைப்பிற்க்கு 2ம் ராசியாகவும், குடும்பம் தனம் என்ற அமைப்பில் இயங்குவதாலும், தங்களின் அறிவும், அறிவார்ந்த செயற்பாடுகளும் தங்களின் பூர்வீகத்தில் ஜீவிக்கும் பொழுதே பரிபூர்ணமாக கிடைக்கும், பூர்வீகத்தை விடுத்து வெளியில் சென்று தொழில் மேன்மை பெறுவதுஎன்பது சிறிதும் இயலாத காரியமாகும்.

  ஏனெனில் தங்களது பூர்வீகத்தை விட்டு வெளியில் செல்வது தங்களின் அறிவு திறன் சமயோசித புத்திசாலித்தனம் இரண்டையும் கடுமையாக பாதிக்கும், ஒருவருக்கு சுய அறிவும், புத்திசாலித்தனமும் மங்கும் பொழுது பெரியளவிலான வெற்றிகளை பெற இயலாது, என்பது கவனிக்க தக்கது, தங்களது சுய ஜாதகத்திலே மிகவும் வலிமை பெற்ற பாவக தொடர்பாக இதை கருதலாம் என்பதால், பூர்வீகத்தில் தங்களது ஜீவன வாழ்க்கையை இனிவரும் காலங்களிலாவது துவங்குவது சிறப்பான வெற்றிகளை தரும், அதற்க்கான வாய்ப்புகளை நடைபெறும் சனி திசையில் ராகு புத்தி 5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் சுபயோக பலன்களை தருவது விழிப்புணர்வுடன் தாங்கள் கவனிக்கவேண்டிய சிறப்பு அம்சமாகும் அன்பரே ! தங்களது ஜாதகத்தில் பூர்வபுண்ணியம் 100% விகித வலிமையுடன் இருப்பது பூர்வீக ஜீவனத்தில் சிறப்பான நன்மைகளை தரும் அமைப்பாகும்.

சனி திசையால் பாதிப்பா ?

 தங்களது ஜாதகத்தில் சனி திசை ( 17/05/2003 முதல் 17/05/2022 வரை ) நடைமுறையில் உள்ளது , நடைபெறும் சனி மஹா திசை தங்களுக்கு 2,11ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் சுபயோக பலன்களை நல்குவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், மேலும் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம் கன்னி ராசியில் 2 பாகைகளையும், துலாம் ராசியில் 28 பாகைகளையும் கொண்டு இருப்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், இது தங்களுக்கு வியாபாரம், ஏற்றுமதி இறக்குமதி தொழில், கமிஷன் தொழில், தானிய வியாபாரம், உலோக வியாபாரம், கனிம பொருட்கள் சார்ந்த வியாபாரம் என வியாபாரம் மற்றும் பொதுமக்கள் சார்ந்த வழியிலான தொழில் விருத்தியை வாரி வழங்கும், எனவே தங்களது பிறப்பின் சாராம்சம் தாங்கள் ஓர் வியாபாரியாக பரிணமிக்க வைக்கும் என்பதால் அது சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு, மேன்மை அடைய ஜோதிடதீபம் அறிவுரை வழங்குகிறது, சனி திசை சனி புத்தி காலத்தில் தங்களது முன்னேற்றம் என்பது 2,11ம் வீடுகள் வழியில் இருந்து 10ம் பாவக பலனை விருத்தியுடன் வழங்க ஆரம்பித்து இருக்கின்றது, சனி புத்திக்கு அடுத்து வந்த புதன் புத்தி தங்களுக்கு 8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று திடீர் இழப்புகளை பெரிய அளவில் வாரி வழங்கியது தங்களது வாழ்க்கையில் மிகப்பெரிய இன்னல்களை தந்து விட்டது என்ற போதிலும், 3,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று கடன் கொடுத்தவருக்கு  பூர்வீக இடத்தை விற்று கடனை அடைத்தது தங்களது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது ஓர் நன்மை தரும் அமைப்பாகும்.

சனி திசை தங்களுக்கு 2,11ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக பலாபலன்களையே வாரி வழங்கி இருப்பது வரவேற்கத்தக்கது, இருப்பினும் தங்களது சுய ஜாதகத்தில் 1,4,6,7,10,12ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மேற்கண்ட பாவக வழியில் இருந்து ( 1,4,6,7,10,12 ) 200% விகித இன்னல்களை தந்தது தங்களுக்கு மீள இயலாத துன்பத்தை தந்திருக்கிறது, அதாவது லக்கினம் பாதிப்பது உடல் மனம் சார்ந்த இன்னல்களையும், சரியான திட்டமிடுதல்கள் இல்லாத தன்மையையும், வருமுன் காக்கும் வல்லமை அற்ற தன்மையையும் தருகின்றது, 4ம் பாவக வழியில் இருந்து வண்டி வாகன இழப்பு, சொத்து வீடு  நிலம் போன்றவை திடீர் இழப்பு அல்லது தாமாகவே இழந்து நிற்கும் தன்மை, யாதொரு சுகபோகமும் அனுபவிக்க இயலாத நிலை, குணம் சார்ந்த பாதிப்பு என்ற வகையிலும், 6ம் பாவக வழியில் இருந்து கடன், நோய் பாதிப்பு, தேவையற்ற விஷயங்களை செய்து கடனாளியாக மாறும் தன்மை, மற்றவர் சொல்வதை செய்து கடனாளியாக மாறும் நிலை, சுய அறிவு திறன்  பாதிப்பு, எதிரி தொல்லை, போராட்டமே வாழ்க்கை, மற்றவருக்கு ஜாமீன் கொடுப்பதால் வரும் இன்னல்கள் என்ற வகையிலும்.

 7ம் பாவக வழியில் இருந்து வாழ்க்கை துணை வழியிலான பாதிப்பு, முரண்பட்ட எதிர்பாலின சேர்க்கையின் மூலம் வரும் பொருளாதர இழப்புகள், கூட்டு முயற்சியினால் வரும் பெரும் நஷ்டம், கூட்டாளியால் பாதிப்பு, அவர்கள் வழியிலான தீய பழக்க வழக்கங்களை மேற்கொண்டு இன்னலுறும் தன்மை, போதிய தெளிவில்லாத செயல்பாடுகள் என்ற வகையிலும், 10ம் பாவக வழியில் இருந்து சுய தொழில் செய்வதற்கான அருகதையை இழத்தல், கவுரவம் அந்தஸ்து பாதிப்பு, முன்னேற்ற தடை, செய்யும் தொழில் வழியிலான கடுமையான பாதிப்பு, தொழில் முடக்கம், முதலீடு செய்த அனைத்தையும் இழந்து நிற்கும் சூழ்நிலை, சுய தொழில் வழியிலான முன்னேற்ற தடைகள் என்ற வகையிலும், 12ம் பாவக வழியில் இருந்து பெருத்த நஷ்டம், பேரிழப்பு, சொத்து சுகம் அனைத்தையும் இழந்து தவிக்கும் நிலை, போராட்ட வாழ்க்கை, தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகுதல், தெளிவில்லாத மனநிலை, மனஉளைச்சல், போராட்டம், எதிர்ப்புகளை சமாளிக்க வலிமை அற்ற தன்மை, தற்கொலை மனநிலை என்றவகையில் இன்னல்களை தரும்.

தங்களது ஜாதகத்தில் கிட்டத்தட்ட 6 பாவகங்கள் பாதக ஸ்தானத்துடனும், 1பாவகம் ஆயுள் ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது மிகுந்த இன்னல்களை தரும் அமைப்பாகும், சனி திசை தங்களுக்கு வலிமை பெற்ற பாவக பனை வழங்கிய போதிலும், புதன்,கேது,சுக்கிரன்,செவ்வாய் மற்றும் குரு புத்திகள் பாதக ஸ்தான பலனையும் பாதிக்கப்பட்ட 8ம் பாவக பலனையும் ஏற்று நடத்தியது தங்களது வாழ்க்கையில் மிகப்பெரிய இன்னல்களை வாரி வழங்கி விட்டது, எனவே பாதிக்கப்பட்ட பாவக பலன்கள் நடைமுறைக்கு வரும் பொழுது விழிப்புணர்வுடன் செயல்பட்டு இன்னல்களில் இருந்து தப்பிப்பதே தங்களுக்கான சிறந்த வழியாகும், மேலும் எதிர்வரும் புதன் திசை 8ம் பாவக வழியில் இருந்து இன்னல்களை தந்த போதிலும், 3,9ம் பாவக வழியில் இருந்து சிறப்பான நன்மைகளை தருவது வரவேற்கத்தக்கது, எனவே சிறு வியாபாரம் அல்லது வியாபாரம் போன்றவற்றை செய்து வாழ்க்கையில் முன்னேற்றம் பெற " ஜோதிடதீபம் " வாழ்த்துகிறது.

தற்போழுது நடைபெறும் ராகு புத்தி தங்களுக்கு 5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நன்மையை தருவது தங்களுக்கு மேன்மையான சிறப்புகளை தரும் என்பதால் தங்களது பூர்வீகத்திற்க்கு அருகில் வந்து சுபயோக சுக வாழ்க்கையை பெறுங்கள், மேலும் தங்களது ராகு புத்தி 5ம் பாவக வழியில் இருந்து ஓர் நிலையான வருமான வாய்ப்பை வாரி வழங்கும் என்பதால் அது சார்ந்த முயற்சிகளை மேற்கொண்டு பொருளாதர முன்னேற்றத்தை பெற " ஜோதிடதீபம் " அறிவுரை வழங்குகிறது, சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எனும் 5ம் பாவகம் வலிமை பெற்று இருப்பின் பூர்வீகத்தை விட்டு வெளியில் சென்றால் கடுமையான பாதிப்பை தந்து விடும், அதேபோன்று சுய ஜாதகத்தில் 5ம் பாவகம் பாதிக்கப்பட்டு இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகர் பூர்வீகத்தில் இருந்தால் கடுமையான பாதிப்பை சந்திப்பார், தங்களது ஜாதகத்தில் 5ம் பாவகம் வலிமையுடன் இருப்பதால் பூர்வீகத்தில் குடியேறி நலம் பெறுங்கள்.

குறிப்பு :

 மேற்க்கண்ட ஜாதகருக்கு கேது 5ல் அமர்ந்து இருப்பதால் பூர்வீகம் பாதிக்கப்பட்டு உள்ளது என்பது முற்றிலும் தவறானது, சுக ஸ்தானமான 4ம் பாவகத்தில் வலிமையுடன் அமர்ந்து இருப்பது கவனிக்கத்தக்கது, இருப்பினும் பாவக கணிதம் சார்ந்த அமைப்பில் 4ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 200% இன்னல்களை தரும், 4ல் அமர்ந்த கேது ஜாதகருக்கு பரிபூர்ண சொத்து சுக சேர்க்கையை வழங்கிய போதிலும், 4ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதால் அதில் ஒரு சிறு துரும்பை கூட ஜாதகரால் அனுபவிக்க இயலாத தன்மையை  தந்திருப்பது கண்கூடான உண்மையாகும், மேலும் ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 1,4,7,10ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர் ஸ்திர தன்மை அற்றவர் என்பதை கட்டியம் கூறுகிறது, ஜாதகர் விழிப்புணர்வுடன் செயல்படவில்லை எனில் உடுத்த உடைகூட இல்லமால் போய்விடும், அதற்க்கு ஜாதகரே காரணமாக இருப்பர் என்பது கூர்ந்து கவனிக்கவேண்டிய அம்சமாகும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

திங்கள், 18 ஜூன், 2018

வெளிநாடுகளில் யோக வாழ்க்கையை பெரும் ஜாதக நிலையும் ! புதன் திசை தரும் பொருளாதார தன்னிறைவும் !


  சுய ஜாதகத்தில் லக்கினத்தில் இருந்து 7ம் வீடாகிய களத்திர ஸ்தானமும், 10ம் வீடாகிய ஜீவன ஸ்தானமும், 11ம் வீடாகிய லாப ஸ்தானமும் வலிமை பெறுவது ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளை வெளியூர், வெளிநாடு மற்றும் வியாபாரம் சார்ந்த வெற்றிகளை வாரி வழங்கும், குறிப்பாக சுய ஜாதகத்தில் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியான துலாம் மிகவும் வலிமை பெற்று இருப்பது ஜாதகருக்கு வெளிநாடு யோகம், வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானம் என்ற வகையில் சிறப்புகளை தரும், தன்னிறைவான சுபயோகங்களை ஜாதகர் தங்கு தடையின்றி அனுபவிக்கும் வல்லமை உண்டாகும், மேலும் லக்கினம் வலிமை பெற்று இருப்பது ஜாதகர் வெளிநாடுகளில் இருந்து வரும் யோக வாழ்க்கையை சுயமாக சுவீகரிக்கும் தன்மையை தரும், பிரபல்ய யோகம், சமூக அந்தஸ்து, மதிப்பு மரியாதை, வெளிவட்டார பழக்க வழக்கங்கள் மூலம் ஜாதகருக்கு கிடைக்கும் சுபயோக வாழ்க்கை என்ற வகையில் பரிபூர்ண நன்மைகளை தரும்.

 மேலும் சுய ஜாதகத்தில்  5,12ம் வீடுகள் வலிமை பெறுவது , 5ம் பாவக வழியில் இருந்து தனது அறிவு திறன் சமயோசித புத்திசாலித்தனம் மூலம் வெளிநாடுகளில் சிறப்பான யோக வாழ்க்கை பெறுவதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கி தரும், ஜாதகரின் அறிவார்ந்த முயற்சிகள் மூலம் பொருளாதார ரீதியான வெற்றிகளை மிக எளிதாக பெறுவதற்கும், குடியுரிமை சார்ந்த நன்மைகளை பெறுவதற்கும் ஜாதகருக்கு ஓர் அங்கீகாரத்தை நல்கும், 12ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் வெளிநாடுகளில் பெரும் பொருளாதர தன்னிறைவை குறிப்பதுடன், திருப்தியுடன் கூடிய நிம்மதிகாரமான யோக வாழ்க்கையை நல்கும், தெளிவான சிந்தனை நல்ல உறக்கம், மற்ற நாடுகளில் உள்ள சீதோஷன நிலையை ஏற்றுக்கொள்ளும் திரேகம், வேற்று மதத்தினர், வேற்று இனத்தினருடன் இணக்கமான உறவை கையாளும் வல்லமையை தருவதும் அயன சயன ஸ்தானத்தின் வலிமையே என்றால் அது மிகையில்லை. 


லக்கினம் : விருச்சிகம்
ராசி : கும்பம்
நட்ஷத்திரம் : பூரட்டாதி 2 பாதம்

ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு லக்கின பாவக வழியில் இருந்து நீண்ட ஆயுள், சிறந்த உடல் மற்றும் மனநலம், வளரும் சூழ்நிலையில் சிறப்பு, கல்வியில் மேன்மை, பொதுமக்கள் தொடர்பில் யோகம், சிறந்த நிர்வாக திறமை, தனித்தன்மையான ஆளுமை திறன், எதிர்ப்புகளை சந்தித்து வெற்றிகொள்ளும் யோகம், அனைவரின் ஆதரவையும் பெரும் யோகம், வசீகரிக்கும் செயல்பாடுகள், எதிர்பாலின அமைப்பினரிடம் இருந்து பெரும் நன்மைகள் என்ற வகையில் ஜாதகருக்கு சிறப்பை தரும்.

7ம் பாவக வழியில் இருந்து வெளியூர் அல்லது வெளிநாடுகளில் இருந்து வரும் முன்னேற்றத்தை ஜாதகர் பரிபூர்ணமாக சுவீகரிக்கும் யோகம், பிரபல்ய யோகம், நல்ல நண்பர்கள், சிறந்த கூட்டாளிகள், வலிமை மிக்க கூட்டுத்தொழில், அதன் வழியிலான ஜீவன மேன்மை என்ற வகையில் சிறப்புகளை  தரும், ஜாதகருக்கு களத்திர ஸ்தானமான 7ம் பாவகம் ரிஷப ராசியில் 5 பாகைகளையும், மிதுன ராசியில் 23 பாகைகளையும் கொண்டு இருப்பது சிறப்பானது, ஜாதகரின் அறிவு திறன் வெளிநாடுகளில் சிறப்பான வரவேற்பை கொண்டுள்ளதாக அமைவதும், ஜாதகரின் சிறந்த மேலாண்மை திறன் வெளிநாடுகளிலேயே மிகவும் பிரகாசமாக அமைவதையும், ஜாதகர் தெளிவாக உணர்ந்துகொண்டு, அதன் வழியிலான வெற்றிநடை போடுவது வரவேற்கத்தக்கது,  ஜாதகரின் உழைப்பு மிக குறைவாக அமைந்த போதிலும் பெரும் நன்மைகள் அபரிவிதமானதாக இருப்பதற்கு காரணம் என்ன ? என்பதை அடுத்த வரிகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!

ஜாதகரின் 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த வலிமையுடன் இருப்பது வரவேற்கத்தக்கது மேலும் ஜாதகரின் ஜீவன ஸ்தானம் சிம்ம ராசியில் 3 பாகைகளையும், கன்னி ராசியில் 28 பாகைகளையும் கொண்டு இருப்பது சிறப்பான ஓர் விஷயமாக கருதலாம், இது ஜாதகருக்கு தொழில் நுட்பம் மற்றும் கைதேர்ந்த தொழில் மேலாண்மை திறனை வழங்கி இருப்பது கவனிக்கத்தக்கது, பெரும்பாலும் கைதேர்ந்த, திறமை வாய்ந்த, தொழில் நுட்பம் சார்ந்த அறிவுத்திறன் மிக்க அனைவரும் பெரிய அளவிலான வெற்றிகளை பெற்று விடுகின்றனரா ? என்றால் இல்லை என்பதே பதில், ஆனால் இவர் அபரிவிதமான வெற்றிகளை குவிக்க மேற்கண்ட விஷயங்கள் மட்டுமே கைகொடுக்கவில்லை, ஆம் அதிர்ஷ்டம் என்பதே ஜாதகருக்கு மிதந்தமிஞ்சிய யோக வாழ்க்கையை வாரி வழங்கிக்கொண்ட இருக்கின்றது என்பதே உண்மை, திறமை மட்டும் இருப்பது ஜாதகருக்கு வெற்றிகளை தருவதில்லை, அதிர்ஷ்டம் எனும் 11ம் பாவக வலிமையே திறமைக்கான அங்கீகாரத்தை உலகிற்கு எடுத்துரைத்து, திறைமைக்கான அதிர்ஷ்ட வாழ்க்கையை நிலைநிறுத்துகிறது என்பதை அடுத்த வரிகளில் தெளிவாக காண்போம்.

ஜாதகருக்கு மேற்கண்ட பாவகங்கள் வலிமை பெற்றது, 30 % விகித நன்மைகளை தந்த போதிலும் 2,4,5,8,11,12ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்டத்தை குறிக்கும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழுவீச்சில் 100% விகித நன்மைகளை தருவதே ஜாதகரின் வெற்றிக்கு அடிப்படை காரணமாக அமைகிறது, சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானத்துடன் 1,7ம் வீடுகள் சம்பந்தம் பெறுவதும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் வீடான துலாம் ராசி வலிமை பெறுவதும் ஜாதகரின் வெளிநாடு சார்ந்த அமைப்பில் இருந்து அதிர்ஷ்டத்துடன் கூடிய யோக வாழ்க்கையை வாரி வழங்குகிறது, 2,4,5,8,11,12ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்டத்தை குறிக்கும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் 11ம் பாவகம் ஜாதகருக்கு கன்னி ராசியில் 1 பாகையில் ஆரம்பித்து 28 பாகைகள் துலாம் ராசியில் வியாபித்து நிற்பது கவனிக்கத்தக்கது, மேலும் லாப ஸ்தானத்துடன் பொருளாதர மேன்மை மற்றும் சுகபோகத்தை குறிக்கும் வீடுகள் யாவும் ( 2,4,5,8,11,12ம் வீடுகள் ) சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கான யோக வாழ்க்கையை மிக பெரிய அளவில் வாரி வழங்குவது கவனிக்கத்தக்கது.

ஒரு ஜாதகருக்கு மிதம் மிஞ்சிய செல்வவளத்தை தாறுமாறாக வாரி  வழங்கும் வல்லமை பெற்றது மறைவு ஸ்தானம் என்று உணரப்பட்ட 6,8,12ம் வீடுகளே, ஜாதகருக்கு வரும் பொருளாதார வளர்ச்சி எப்படி வந்தது என்று மற்றவர்கள் கண்டுஅறிய இயலாவண்ணம், ஜாதகருக்கு தன்னிறைவான பொருளாதார முன்னேற்றத்தை வாரி வழங்கும் வல்லமை பெற்றது மேற்கண்ட 6,8,12ம் வீடுகள், அப்படிப்பட்ட வீடுகள் எல்லாம் ஜாதகருக்கு அதிர்ஷ்ட ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கான பொருளாதார வெற்றியை எதிர்பாரா அளவில் நிர்ணயம் செய்துள்ளது என்பதே உண்மை, இதற்குஎல்லாம் சிகரம் வைத்தார் போல் அமைவதுதான் அடுத்து வரும் பத்திகளில் நமக்கு ஆச்சரியங்களை வழங்க இருக்கின்றது.

ஆம் ஜாதகருக்கு கடந்த சனி திசை 19 வருடமும், 1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான  7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் , 4,12ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக சுப பலனை வாரி வழங்கியது இளமையில் சகல யோகத்தையும், திறமைக்கான வெற்றிகளையும் அங்கீகாரம் செய்தது, தற்போழுது நடைமுறையில் உள்ள புதன் திசை ஒருபடி மேலே சென்று 2,5,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அதிர்ஷ்டங்களை வாரி வழங்கிக்கொண்டு இருப்பது ஜாதகருக்கு நன்மையை தருகின்றது என்ற போதிலும், 3,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகித இன்னல்களை தருவது, செல்வம், சுகபோகம் உண்டு ஆனால் வாரிசு இல்லை என்ற நிலையை தந்துள்ளது, 9ம் பாவகம் ஜாதகருக்கு கடக ராசியில் ஆரம்பித்த போதிலும் அதில் 5 பாகைகளையே கொண்டுள்ளது, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பூர்வ புண்ணியமான சிம்மராசியில் 27 பாகைகளை கொண்டு 9ம் பாவகம் பாதக ஸ்தானமாக அமைவது ஜாதகருக்கு புத்திர பாக்கிய தடைக்கு அடிப்படை காரணமாக அமைகிறது என்பது இது தெளிவுபடுத்துகிறது.


குறிப்பு :

 சுய ஜாதகத்தில் அயல் தேச யோக வாழ்க்கையை குறிக்கும், 1,7,10,12ம் பாவகங்களுடன் அதிர்ஷ்டத்தை தரும் 11ம் பாவகமும் வலிமை பெற்று இருப்பது அவசியமாகிறது, மேலும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு துலாம் ராசி  மற்றும் மீன ராசி வலிமையையும் நாம் கருத்தில் கொண்டு " திரைகடல் ஓடி திரவியம் தேடுவது " சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வெள்ளி, 15 ஜூன், 2018

தொழிலில் ஏற்படும் பேரிழப்பை உணர்ந்து எச்சரிக்கையுடன் செயல்படுவது எப்படி? இதை ஜாதக ரீதியாக அறிந்துகொள்ள இயலுமா ?



  இன்னும் நமது கிராமங்களில் " வல்லவனையும் தட்டுமாம் வழுக்குப்பாறை " என்று சிலேடையாக சொல்வதுடன், மிகுந்த தொழில் நுணுக்கம் கொண்டுள்ள ஒருவரை கூட மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தி ஆரம்பித்த இடத்துக்கே கொண்டுவந்துவிடும் தன்மை பெற்றது "விதி" இதை மதியறிவு கொண்டு வெல்வது என்பது அவரவர் சுய ஜாதகத்தில் உள்ள 1,5,9ம் பாவகங்களின் வலிமை நிலையே என்றால் அது மிகையில்லை, ஒருவருக்கு வரும் யோக அவயோக நிலையை பற்றி வருமுன் தெளிவாக கட்டியம் கூற சுய ஜாதகத்தில் மேற்கண்ட 1,5,9ம் பாவகங்களின் வலிமை நிலை அவசியமாகிறது, மேற்கண்ட பாவகங்களின் வலிமை, ஜாதகருக்கு எதிர்வர இருக்கின்ற நன்மை தீமையை பற்றி சுய அறிவுபூர்வமாகவோ, குல தெய்வ ஆசியின் மூலமாகவோ, ஆன்மீக பெரியவர்களின் அறிவுறுத்தல் மூலமாகவோ தெள்ள தெளிவாக எடுத்துரைத்து காக்கும், ஜாதகருக்கு வரும் இழப்பில் இருந்து பாதுகாப்பும், யோக அமைப்பில் இருந்து விழிப்புணர்வும் தந்து அருள் புரியும், ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : துலாம் 
ராசி : கடகம் 
நட்ஷத்திரம் : ஆயில்யம் 

 மேற்கண்ட துலா லக்கின ஜாதகருக்கு லக்கினாதிபதி மற்றும் ஆயுள் ஸ்தான அதிபதியான சுக்கிரன் திசை 20/05/1998 முதல் 20/05/2018 தற்போழுது நடைமுறையில் உள்ளது, இந்த சுக்கிரன் திசை ஜாதகருக்கு 3,5,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சிறப்பான யோக பலனை பாக்கிய ஸ்தான வழியில் இருந்து தந்து கொண்டு இருப்பது வரவேற்கத்தக்க தக்க நன்மைகளை தருவதாகும், குறிப்பாக சுக்கிரன் திசையில் சனி புத்தி 20/03/2011 முதல் 20/05/2014 வரை ஜாதகருக்கு 2,4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் சிறப்பான ராஜ யோக பலனை 2,4,10 பாவக வழியில் இருந்து வாரி வழங்கி இருக்கிறது சுக்கிரன் திசை ஜாதகருக்கு 3ம் பாவக வழியில் இருந்து எதிலும் வெற்றி, புத்தி கூர்மை மூலம் ஆதாயம், சகல சௌபாக்கியம், போக்குவரத்து, ஏஜென்சி துறை லாபம், ஏற்றுமதி இறக்குமதி தொழில் வழியிலான நன்மைகள், வியாபார விருத்தி, நல்ல  சிந்தனைகள் தரும் வெற்றி, கனிம சுரங்க பொருட்கள் மூலம் லாபம், நுண்ணறிவு திறன்  மூலம் பெரும் அதிர்ஷ்டங்கள் என்ற வகையிலும், 5ம் பாவக வழியில் இருந்து மிகுந்த மனவலிமை, விரைவாக சிறந்த முடிவுகளை மேற்கொள்ளும் வல்லமை அதன் வழியிலான முன்னேற்றங்கள், சமயோசித புத்தி சாலித்தனம், ஆய்வு திறன், நல்ல பழக்கங்கள் மூலம் நன்மைகளை பெறுதல் என்ற வகையிலும், 9ம் பாவக வழியில் இருந்து நிறைவான அறிவு திறன், பயணங்கள் மூலம் லாபம், இடமாற்றம் சூழ்நிலை மாற்றத்தில் விருப்பம் மற்றும் சிறப்பான வளர்ச்சி பித்ருக்களின் ஆசி மூலம் வாழ்க்கையில் சுபயோகங்களை பெறுதல் என்ற வகையில் யோக பலனை வாரி வழங்கியது.

சுக்கிரன் திசையில் கடந்த சனி புத்தி சனி புத்தி 20/03/2011 முதல் 20/05/2014 வரை ஜாதகருக்கு 2,4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 2ம் பாவக வழியில் இருந்து தொழில் வழியிலான அபரிவித வருமானம், பேச்சு திறன் மூலம் வரும் வியாபர விருத்தி, லட்சியங்களை அடையும் வல்லமை, அதீத தனசேர்க்கையை சொந்த உழைப்பில் பெரும் வல்லமை, கவுரவம், அந்தஸ்து, புகழ், பரிசு அனைத்திலும் வெற்றி என்ற வகையிலும், 4ம் பாவக வழியில் இருந்து நல்ல தொழில் முன்னேற்றம், பெயரும் புகழும் உண்டாகும் தன்மை, மண் மணை வண்டி வாகன யோகம், ஆள் வசதி, பெரிய சொத்து சுக சேர்க்கை, அரசு மரியாதை மற்றும் கவுரவம், சமூக வாழ்க்கையில் வெற்றி, அரசியலில் ஆதாயம் என்ற வகையில் சிற்பபுகளை தரும், 10ம் பாவக வழியில் இருந்து தொழில் வழியிலான அபரிவித முன்னேற்றம், கம்பீரமான செயல்பாடுகள், தீர்க்கமான முடிவுகள் வழியில் பெரும் முன்னேற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சி, செய்தொழில் வழியிலான ராஜ யோகம் என்ற வகையில் சிறப்புகளை வாரி வழங்கி இருக்கிறது.

சுக்கிரன் திசையில் சனி புத்திக்கு அடுத்து வந்த புதன் புத்தி ( 20/05/2014 முதல் 20/03/2017 வரை ) ஜாதகருக்கு மிகுந்த சோதனை காலமாக மாறியது விதி செய்த கொடுமையாகவே கருதலாம், புதன் புத்தி ஜாதகருக்கு 6,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழுவீச்சில் ஜாதகரை படு குழியில் தள்ளியது, 6ம் பாவக வழியில் இருந்து வரம்பு மீறிய கடன், மிதமிஞ்சிய செலவுகள், வேலையாட்கள் வழியிலான இழப்புகள், பொருளாதர பின்னடைவு, எதிரிகள் தொந்தரவு, அனைத்து இடங்களில் இருந்து வரும் எதிர்ப்புகள், எதிர்பாராத கடன்கள், ஜாமீன் கொடுப்பதால் வரும் இன்னல்கள், வாங்கும் கடன் அனைத்தும் திடீர் இழப்பை சந்திக்கும் நிலை, நிலையற்ற பொருளாதரம், எதிர்பார்ப்புகள் யாவும் பொய்த்து போகும் தன்மை, எதிர்பாலின சேர்க்கையின் மூலம் திடீர் இன்னல்கள், நிம்மதி இன்மை, அனைத்திலும் தோல்வி, வழக்குகளில் சிக்கல்கள், சட்ட சிக்கல்கள், பொருள் இழப்பு என்ற வகையில் ஜாதகருக்கு கடுமையான இன்னல்களை தர ஆரம்பித்தது.

8ம் பாவக வழியில் இருந்து நீண்ட ஆயுளை நல்கிய போதிலும், பேரிழப்பு, விபத்து, துயரம், மற்றவர்களால் வரும் துன்பங்கள், தீயநண்பர்கள் சகவாச தோஷம், திட்டமிட்டு செயல்பட முடியாத நிலை, எதிர்த்து போராட வலிமையற்ற சூழல், உதவி செய்ய யாருமற்ற தன்மை, வாழ்க்கை துணை வழியிலான இழப்புகள் மற்றும் துன்பங்கள், தெய்வீக அனுகிரகம் இன்மை, முரண்பட்ட செயல்பாடுகள், தாங்க இயலாத துன்பம், சொத்துக்களை இழக்கும் சூழ்நிலை, சொத்துக்கள் அனைத்தும் வீண் விரயமாகும் தன்மை, திருப்தி இல்லாத மனநிலை, ஆயுள் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் வீடான ரிஷபத்தில் அமைவதால், ஜாதகருக்கு வரும் வருமானம் மற்றும் கடன் யாவும் திடீர் இழப்பை சந்திக்கும் சூழ்நிலை, எதிரியின் பிடியில் இழப்பை சந்திக்கும் சூழல், அனைத்தையும் இழந்து தவிக்கும் நிலைக்கு ஆளாகுதல் என்ற வகையில் ஜாதகருக்கு கடுமையான பாதிப்பை பாக்கியம் மற்றும் விரைய ஸ்தான அதிபதியான புதன் புத்தி தர ஆரம்பித்தது, மேலும் ஆயுள் பாவகம் ஸ்திர ராசி என்பதால் ஜாதகருக்கு வந்த இன்னல்கள் யாவும் வெகு காலம் ஆறாத ரணம், மறையாத சுவடை ஏற்படுத்தி ஜாதகருக்கு "நித்ய கண்டம் பூர்ண ஆயுசு" என்பதற்கு இணையான சூழலை உருவாக்கியது.

சுக்கிரன் திசை முடிவில் நடைபெற்ற கேது புத்தி ஜாதகருக்கு 3,5,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நன்மைகளை தந்தது, ஏற்பட்ட பாதிப்பில் இருந்து சிறிய அளவில் மீண்டு வரும் வாய்ப்பை நல்கியது, சுய ஜாதகத்தில் மேற்கண்ட பாதிப்பை ஜாதகர் 5,9ம் பாவக வழியில் இருந்து உணர்ந்த போதிலும் லக்கினம் எனும் முதல் வீடு ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது போதிய நிதி மேலாண்மை திறன் அற்றவர் என்பதனையும், திட்டமிட்டு செயல்படும் தன்மை அற்றவர் என்பதனையும் தெளிவுபடுத்துகிறது, மேலும் நண்பர்கள் கூட்டாளிகள், வாழ்க்கை துணை வழியிலான பேரிழப்புகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்க்கு ஆர்ப்பட்டவர் என்பதை தெளிவாக உணர்த்துகிறது.

தற்போழுது நடைமுறையில் உள்ள சூரியன் திசை ஜாதகருக்கு 3,5,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவது ஜாதகருக்கான புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைக்கும் வல்லமை கொண்டது, இருப்பினும் சூரியன் திசையில் எதிர் வரும் சந்திரன் புத்தி 1,7,11ம் பாவக வழியில் இருந்து கடும் நெருக்கடிகளை தரும், மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கே வந்துவிட்டதை போன்ற உணர்வை ஜாதகர் பெறுவார், சுக்கிரன் திசையில் நடைபெற்ற சுபயோக பலன்கள் சூரியன் திசையில் நடைமுறைக்கு வந்த போதிலும், யோக காலம் என்பது மிகவும் குறைவாகவே இருக்கும், ஜாதகர் சூரியன் திசையில் சந்திரன் புத்தியை எதிர்கொள்வது என்பது சற்று சவாலான விஷயமாகவே படுகிறது.

குறிப்பு :

சுய ஜாதகத்தில் யோக பலன்கள் பாவக வழியில் இருந்து வழங்கிய போதிலும், லக்கினம் வலிமையுடன் இருந்தால் மட்டுமே ஜாதகர் அதை முழுவதுமாக சுவீகரிக்க இயலும், லக்கினம் வலிமை இழப்பது அல்லது 6,8,12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது அல்லது பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது அனைத்தும் ஜாதகருக்கு மற்ற பாவக வழியில் இருந்து வரும் யோக பலன்களை, கிரகிக்கும் வல்லமையை தாராது என்பதுடன் ஜாதகராலே அது விரயமாகும், மேற்கண்ட ஜாதகருக்கு 2,4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிதமிஞ்சிய யோக பலனை தரும் என்ற போதிலும், 1,7,11ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர், அவரது வாழ்க்கை துணை, நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் ஜாதகரின் அதிர்ஷ்டமின்மை ஆகியவை ஜாதகருக்கு வரும் யோக பலனை கபளீகரம் செய்யும் என்பது கவனிக்கத்தக்கது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696