பாவகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாவகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

சுய ஜாதகம் கடுமையாக பாதிக்கபட்டு இருந்த போதிலும் ஜாதகர், நன்மையான பலன்களை அனுபவிப்பது எப்படி ?



 இது ஒரு சிறந்த கேள்வியாக ஜோதிடதீபம் கருதுகிறது, பொதுவாக எந்த ஒரு விஷயமும் சரி, யோக அவயோக பலன்களும் சரி சுய ஜாதக விதிகளுக்கு உட்பட்டே நடைபெறும், சுய ஜாதகத்தில் இல்லாத ஒன்றை நாம் எந்த விதத்திலும் அனுபவிக்க இயலாது, உதாரணமாக ஒரு அவயோக ஜாதகம் எக்காரணத்தை கொண்டும் ராஜ யோக பலன்களை அனுபவிக்க இயலாது, அதேபோல் ராஜயோக ஜாதகம் பெற்ற ஒருவரை, அவயோக பலன்களை அனுபவிக்க வைக்க இயலாது, தாங்கள் கூறியது போல் சுய ஜாதகம் கடுமையாக பாதிக்கபட்டு இருக்கும் ஒருவர் எந்த காலத்திலும் யோக பலன்களை அனுபவிக்க இயலாது.

 சம்பந்தபட்ட ஜாதகத்தில் ஏதாவது ஒரு பாவகம் மிக வலிமையுடன் இருக்கும், அந்த வலிமை பெற்ற பாவகத்தின் பலனை தற்பொழுது நடைபெறும் திசை ஏற்று நடத்திக்கொண்டு இருக்கும், ஒருவரின் சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெற்று இருப்பது முக்கியம் அல்ல, நடைபெறும் திசை வலிமை பெற்ற பாவகத்தின் பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே ஜாதகர் மிகுந்த யோக பலன்களை, நடைமுறையில் அனுபவிக்க இயலும், இதை கிழ்கண்ட உதாரண ஜாதகம் கொண்டு விளக்கமாக காணலாம் அன்பர்களே !

உதாரண ஜாதகம் 1



 மேற்கண்ட மீன இலக்கின ஜாதகருக்கு

1) 1,3,5,7,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருக்கின்றது, எனவே மேற்கண்ட பாவக அமைப்பில் இருந்து ஜாதகர் 200 சதவிகித இன்னல்களை அனுபவிக்கும் தன்மையை தரும்,.

2) 4,8,12ம் விடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பது மேற்கண்ட பாவக அமைப்பில் இருந்து 60 சதவிகித இன்னல்களை அனுபவிக்கும் தன்மையை தரும்.

3) 2,6ம் வீடுகள் ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதும், 10ம் வீடு பாக்கிய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதும், மேற்கண்ட பாவக அமைப்பில் இருந்து முறையே ஜாதகர் 30 சதவிகிதம் மற்றும் 60 சதவிகித யோக பலன்களை அனுபவிக்க இயலும், 

4) 11ம் வீடு அதிர்ஷ்டம் மற்றும் லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 100 சதவிகித யோக பலன்களை அனுபவிக்க வைக்கும்.

இது மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையின் நிலை, தற்பொழுது நடைபெறும் திசை ஜாதகருக்கு எந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்துகிறது என்பதை தெளிவாக தெரிந்து கொண்டால் மட்டுமே, நடைபெறும் திசை ஜாதகருக்கு யோக பலன்களை வழங்குமா ? அவயோக பலன்களை வழங்குமா ? என்பது தெளிவாக தெரியும், தற்பொழுது ஜாதகருக்கு சுக்கிர திசை ( 28/05/2012 முதல் 28/05/2032 வரை ) நடைபெறுகிறது.

 இந்த சுக்கிர திசை ஜாதகருக்கு எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்பதை கவனிக்கும் பொழுது சுக்கிரன், தசா என்ற அமைப்பில் இருந்து 1,5,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று பலனை தருகிறார், எனவே ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் சுக்கிரன் திசை பாதக ஸ்தான பலனை தருகிறது என்பது உறுதியாகிறது, மேலும் பாதக ஸ்தான பலனை எந்த எந்த வீடுகள் வழியில் இருந்து அனுபவிக்கிறார் என்பதை கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது.

1ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது ஜாதகரின், வளரும் சூழ்நிலை அமைப்பிலும், உடல் ரீதியான அமைப்பிலும் பல எதிர்ப்புகளையும், தொந்தரவுகளை எதிர்கொள்ள வைக்கும், ஜாதகரின் பழக்க வழக்கங்கள் ஆரோக்கியமானதாக இருக்க வாய்ப்பில்லை, நல்ல நண்பர்கள் சேர்க்கையும் ஜாதகருக்கு அமையாது, ஜாதகரே தனது வாழ்க்கையை கெடுத்து கொண்டு தன்னை சார்ந்தவருக்கும் துன்பத்தை தருவார்.7ம் பாவகம் உபய மண் தத்துவம் என்பதால் உடல் நிலை பாதிப்பும், பொருள் இழப்பும் தவிர்க்க இயலாது.

5ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது ஜாதகரின் பூர்வீகம் எதுவோ? அங்கு ஜீவனம் செய்ய இயலாத சூழ்நிலையை தரும், குறிப்பாக எல்லை கடந்து பரதேச ஜீவனத்தை மேற்கொள்ள வைக்கும், மேலும் ஜாதகருக்கு சுய அறிவும் வேலை செய்யாது, நல்லவர்  சொல் பேச்சும் கேட்க மாட்டார், 5ம் பாவகம் பாதிக்க படுவது ஜாதகருக்கு சிந்தனை ஆற்றல் மற்றும் அறிவு திறன் போன்ற விஷயங்களை வெகுவாக பாதிக்க வைக்கும், இறை அருளின் கருணையை பெற இயலாது, ஜாதகருக்கு உதவ எவரும் முன்வரமாட்டார்கள்.

9ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது, ஜாதகரின் செயல்கள் அனைத்தும், மற்றவர்களின் விமர்சனத்துக்கு உள்ளாகும், தேவையில்லாமல் மற்றவரிடம் அவ பெயரை சம்பாதித்து கொடுக்கும், மற்றவர் விஷயங்களில் தலையீடு செய்து தனது பெயரை கெடுத்து கொள்ளும் சம்பவங்களும் உருவாகலாம், தனிப்பட்ட  வாழ்க்கையிலும், நண்பர்கள் அமைப்பில் இருந்தும், பொது வாழ்க்கை சமுக அமைப்பில் இருந்தும், ஜாதகருக்கு கடுமையான எதிர்ப்புகளும், விமர்சனங்களுமே தொடர்ந்து வரும்.

ஆக ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் சுக்கிரன் திசை நிறைய எதிர்ப்புகளை எதிர்கொண்டு எதிர்நீச்சல் போடும் வாய்ப்பை தருகிறார், சுய ஜாதகத்தில் 11ம் பாவகம் நல்ல நிலையில் இருப்பதால் வரும் எதிர்ப்புகள் அனைத்தையும் சமாளித்து, வாழ்க்கையில் வெற்றி பெறுவார் என்பது உறுதியாகிறது.

உதாரண ஜாதகம் 2


மேற்கண்ட துலா இலக்கின ஜாதகிக்கு 

1) 1,5,7,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மேற்கண்ட பாவக அமைப்பில் இருந்து, ஜாதகிக்கு 200 சதவிகித இன்னல்களை அனுபவிக்கும் தன்மையை தரும்.

2) 2ம் வீடு ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மேற்கண்ட பாவக அமைப்பில் இருந்து, ஜாதகிக்கு 60 சதவிகித இன்னல்களை அனுபவிக்கும் தன்மையை தரும்.

3) 6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மேற்கண்ட பாவக அமைப்பில் இருந்து ஜாதகிக்கு 30 சதவிகித இன்னல்களை அனுபவிக்கும் தன்மையை தரும்.

4) 3,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, மேற்கண்ட பாவக அமைப்பில் இருந்து ஜாதகிக்கு 30 சதவிகித யோக பலன்களை அனுபவிக்கும் தன்மையை தரும்.

5) 4,8ம் வீடுகள் குடும்ப  ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, மேற்கண்ட பாவக அமைப்பில் இருந்து ஜாதகிக்கு 60 சதவிகித யோக பலன்களை அனுபவிக்கும் தன்மையை தரும்.

6) 10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, மேற்கண்ட பாவக அமைப்பில் இருந்து ஜாதகிக்கு 30 சதவிகித யோக பலன்களை அனுபவிக்கும் தன்மையை தரும்.

 இது மேற்கண்ட ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையின் நிலை, தற்பொழுது நடைபெறும் திசை ஜாதகிக்கு எந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்துகிறது என்பதை தெளிவாக தெரிந்து கொண்டால் மட்டுமே, நடைபெறும் திசை ஜாதகிக்கு யோக பலன்களை வழங்குமா ? அவயோக பலன்களை வழங்குமா ? என்பது தெளிவாக தெரியும், தற்பொழுதுஜாதகிக்கு ராகு திசை ( 29/01/2010 முதல் 29/01/2028 வரை ) நடைபெறுகிறது, இந்த ராகு திசை ஜாதகிக்கு எந்த பாவக  பலனை ஏற்று நடத்துகிறது என்று கவனிக்கும் பொழுது ராகு, புத்தி என்ற அமைப்பில் நின்று 3,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தனது திசையை ராகு சிறப்பான நன்மைகளை வாரி வழங்கி கொண்டு இருக்கிறது எனவே ஜாதகி 3,9ம் பாவக வழியில் இருந்து யோக பலன்களை பெறுகிறார்.

3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் முயற்ச்சிகளில் இருந்து வெற்றி, போட்டி பந்தயங்களில் வெற்றி, தேர்வில் வெற்றி, மக்கள் செல்வாக்கு, நினைத்ததை அடையும் யோகம், நல்ல ஆரோக்கியமான உடல் நிலை அமைப்பு, தன்னம்பிக்கையுடன் அனைத்தையும் எதிர்கொள்ளும் மனபக்குவம், பலமுறை சிந்தித்து செயல்படும் யோகம் என்றவகையில் மிகுந்த யோக பலன்களை 3ம் பாவக வழியில் இருந்து தருகிறது.

9ம் பாவக வழியில் இருந்து சமுதாயத்தில் நல்ல பெயர், அந்தஸ்து, சுய கெளரவம், சுய மரியாதையுடன் வாழும் யோகத்தை தருகிறது, உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வியில் மிகப்பெரிய வெற்றி, தான் கற்ற கல்வியினால் யோக வாழ்க்கை, பெயரரும் புகழும் கிடைக்கும் யோகம், தன்னிறைவான பொருளாதார வளர்ச்சி என்றவகையில் நன்மைகளை வாரி வழங்கிக்கொண்டு  இருக்கிறது, மேலும் ராகு திசைக்கு அடுத்து வரும் குரு திசையும் 3,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று பலனை தருவது குரு திசையிலும் மேற்கண்ட யோக பலன்களையே ஜாதகிக்கு தரும் என்பது உறுதியாகிறது.

இந்த இரண்டு ஜாதகத்திலும் 1ம் உற்பட சில பாவகங்கள் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்று சுய ஜாதகம் கடுமையாக பாதிக்கபட்டு இருந்த போதிலும், தற்பொழுது நடைபெறும் திசை வழங்கும் பலன்கள் மாறுபட்டு ஒருவருக்கு தீமையான பலன்களையும், ஒருவருக்கு நன்மையான பலன்களையும் தருகிறது, இதில் முதல் உதாரண ஜாதகத்தில் நடைபெறும் திசை தீமையான பலன்களையும், இரண்டாம் உதாரண ஜாதகத்தில் நடைபெறும் திசை மிகுந்த நன்மையான பலன்களையும் தருகிறது, எனவே சுய ஜாதகத்தில் பாவகங்கள் பாதிக்கபட்டு இருந்த போதிலும், நடைபெறும் திசை நல்ல நிலையில் இருக்கும் பாவகங்களின் பலனை ஏற்று நடத்தினால் ஜாதகருக்கு நன்மையான பலன்களே நடைபெறும்.

ஒருவேளை சுய ஜாதகத்தில் சில பாவகங்கள் வலிமை பெற்று இருந்த போதிலும், நடைபெறும் திசை பாதிக்கபட்ட பாவகங்களின் பலனை ஏற்று நடத்தினால் ஜாதகர் எவ்வித நன்மையையும் பெற இயலாது, சம்பந்தபட்ட பாவக வழியில் இருந்து அதிக இன்னல்களையே அனுபவிக்க வேண்டிவரும், மேற்கண்ட உதாரண ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் திசை சுக்கிரன் திசை என்றாலும், அவர் ஏற்று நடத்துவது பாதக ஸ்தான பலனை  என்பதால் ஜாதகர் குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து படும் இன்னல்களுக்கும், துன்பத்திற்கும் ஒரு அளவு இருக்காது என்பதே உண்மை.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


திங்கள், 11 ஆகஸ்ட், 2014

இரட்டையர்கள் ஜாதகத்தில் மாறுபடும் பாவக பலன்கள் !




 சுய ஜாதக ரீதியாக பாவக பலன்களை நிர்ணயம் செய்யும் பொழுது ஜாதகத்தில் பாவகங்களின் வலிமையின் அடிப்படையில், தற்பொழுது நடைபெறும் திசை புத்தி ஏற்று நடத்தும் பாவகங்களின் தன்மைக்கு ஏற்ப நன்மை தீமை பலன்களை நிர்ணயம் செய்யலாம், ஒட்டி பிறக்கும் இரட்டையர்களின் ஜாதகத்தில் ஜாதகமும் கிரக அமைப்புகளும் பொதுவாக அமைந்த போதிலும், இருவரின் குண நலன்கள், செயல்பாடுகள் நடைபெறும் பலாபலன்கள் வேறுபடுவதில் நிறைய வித்தியாசங்கள் உண்டு, இதை தெளிவாக தெரிந்து கொள்ள பாரம்பரிய ஜோதிட முறையில் வாய்ப்பு குறைவு, ஜாதக கணித முறையில் பெரிய வித்தியாசத்தை நாம் காணுவதற்கு சிரமமே உண்டாகும் என்பதை மறுப்பதற்கு இல்லை.

 கிழ்கண்ட இரட்டையர்களின் ஜாதக அமைப்பை பாரம்பரிய ஜோதிட கணிதத்தில் காணும்பொழுது பெரிய வித்தியாசங்களை காண இயலாத பொழுதும், நமது ஜோதிட கணித முறையில் பாவக வலிமைகள், பலன்கள் துல்லியமான வித்தியாசங்களை தெளிவாக தெரிந்துகொள்ள இயலும், இருவரின் ஜாதக அமைப்பில் பாவகங்களின் தொடர்புகளையும் வழங்கும் பலன்களையும் இனி காண்போம்!

உதாரண ஜாதகம் 1


பிறந்த தேதி : 14/12/1992
பிறந்த நேரம் : மாலை 04:16

பாவக தொடர்பு 

1) 1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம்.
2) 2,6ம் வீடுகள் களத்திற பாவகமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம்.
3) 3,8,11,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம்.
4) 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம்.
5) 5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம்.
6) 9ம் வீடு எதிரி ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம்.

 தற்பொழுது நடைபெறும் சுக்கிரன் திசை (15/10/2002 முதல் 15/10/2022 வரை) ஜாதகருக்கு 2,6ம் வீடுகள் களத்திற பாவகமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 2மற்றும் 6ம் பாவக வழியில் இருந்து நன்மையான பலன்களையும்,1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 1மற்றும் 7ம் பாவக வழியில் இருந்து 200% தீமையான பலன்களை வழங்கி கொண்டு இருக்கிறது.

 மேற்கண்ட ஜாதகத்தில் ஜாதகர்  2,4,5,6,10ம் பாவக வழியில் இருந்து நன்மைகளையும், 1,3,7,8,9,11,12ம் பாவக வழியில் இருந்து இன்னல்களையும் அனுபவிக்கும் தன்மை உண்டாகிறது, இதில் ஜாதகர்  2,4,5,6,10ம் பாவக பலன்களை தரும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சாம நேரங்களில் செய்யும் காரியங்கள் செயல்கள் யாவும் வெற்றியையும், 1,3,7,8,9,11,12ம் பாவக பலன்களை தரும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சாம நேரங்களில் செய்யும் காரியங்கள் செயல்கள் யாவும் தடையும் தொந்தரவுகளையும் எதிர்பாராத தோல்விகளையும் வாரி வழங்கும்.

 எனவே நன்மை தரும் பாவக பலன் நடைபெறும் பொழுது ஜாதகர் தனது வாழ்க்கையை சிறப்பாக அமைத்துகொண்டும், தீமை தரும் பாவக பலன்கள் நடைபெறும் பொழுது எச்சரிக்கையாகவும் இருப்பது ஜாதகரின் வாழ்க்கையில் மிகுந்த யோகத்தை பெறுவதற்கு அடித்தளமான அமையும்.

உதாரண ஜாதகம் 2


பிறந்த தேதி : 14/12/1992
பிறந்த நேரம் : மாலை 04:17

பாவக தொடர்பு 

1) 1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம்.
2) 2ம் வீடு குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம்.
3) 3,8,11,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம்.
4) 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம்.
5) 5,9ம் வீடுகள் பூர்வ எதிரி ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம்.
6) 6ம் வீடு களத்திற பாவகமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம்.

 தற்பொழுது நடைபெறும் சுக்கிரன் திசை (10/10/2002 முதல் 10/10/2022 வரை) ஜாதகருக்கு 6ம் வீடு களத்திற பாவகமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 6ம் பாவக வழியில் இருந்து தீமையான பலன்களையும், 1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 1மற்றும் 7ம் பாவக வழியில் இருந்து 200% தீமையான பலன்களை வழங்கி கொண்டு இருக்கிறது.

 மேற்கண்ட ஜாதகத்தில் ஜாதகர்  2,4,10ம் பாவக வழியில் இருந்து நன்மைகளையும், 1,3,5,6,7,8,9,11,12ம் பாவக வழியில் இருந்து இன்னல்களையும் அனுபவிக்கும் தன்மை உண்டாகிறது, இதில் ஜாதகர்  2,4,10ம் பாவக பலன்களை தரும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சாம நேரங்களில் செய்யும் காரியங்கள் செயல்கள் யாவும் வெற்றியையும், 1,3,5,6,7,8,9,11,12ம் பாவக பலன்களை தரும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சாம நேரங்களில் செய்யும் காரியங்கள் செயல்கள் யாவும் தடையும் தொந்தரவுகளையும் எதிர்பாராத தோல்விகளையும் வாரி வழங்கும்.

 எனவே நன்மை தரும் பாவக பலன் நடைபெறும் பொழுது ஜாதகர் தனது வாழ்க்கையை சிறப்பாக அமைத்துகொண்டும், தீமை தரும் பாவக பலன்கள் நடைபெறும் பொழுது எச்சரிக்கையாகவும் இருப்பது ஜாதகரின் வாழ்க்கையில் மிகுந்த யோகத்தை பெறுவதற்கு அடித்தளமான அமையும்.

 ஆக ஒரு நிமிட வித்தியாசத்தில் பிறந்த இந்த இரட்டையர்களுக்கு ஜாதக பாவக பலன்கள் தொடர்பு பெரும் அமைப்பில் வித்தியாசப்படுகின்றது, மேலும் தற்பொழுது நடைபெறும் சுக்கிரன் திசை ஒருவருக்கு குறிப்பிட்ட பாவக வழியில் நன்மை தீமை பலன்களை கலந்தும், ஒருவருக்கு தீமையான பலன்களை மட்டுமே நடத்துகிறது, எனவே ஜாதகத்தில் பிறந்த நேரம் என்பது நிமிடம் மட்டுமல்ல சில நொடிகள் வித்தியாசம் பெரும் பொழுது ஜாதக பலன்கள் பாவக பலன்கள் மாறுபடும் என்பது ஜோதிடதீபத்தின் கருத்து.

 இதனால் ஒட்டி பிறந்த இரட்டையர்கள் ஆனாலும் அவர்களின் குணம், செயல்பாடுகள், அறிவாற்றல், சுய விருப்பங்கள், ஆர்வம், உடலின் தன்மைகள், நடைபெறும் நன்னமை தீமைகள், கல்வி, வேலை, தொழில் போன்றவற்றில் வித்தியாசம் நிச்சயம் ஏற்ப்படும், ஒருவரின் ஜாதகத்தை போன்றே மற்ற ஒருவரது ஜாதகம் இருப்பதற்கு வாய்ப்பு இல்லவே இல்லை என்பதே உண்மை.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 21 மே, 2013

சுய ஜாதகத்தில் 12 வீடுகளும், அவற்றின் பலனை ஏற்று நடத்தும் திசா புத்திகளும் !



ஒருவருடைய சுய ஜாதக அமைப்பில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் நிலையின் அடிப்படையிலேயே , நடந்த நடக்கின்ற நடைபெற இருக்கின்ற திசை,புத்தி,அந்தரம்,சூட்சமம் ஆகியன பலனை வழங்குகிறது என்றால் அது மிகை ஆகாது , இதை அடிப்படையாக கொண்டு காணும் பொழுது , ஒவ்வொருவரின் சுய ஜாதகத்திலும் 12 பாவகங்களும் நல்ல நிலையில் இருப்பது அவசியம் என்பது உறுதியாகிறது .

எனவே ஒருவருடைய சுய ஜாதக பலனை நிர்ணயம் செய்யும் பொழுது பனிரெண்டு பாவகங்களுக்கு முன்னுரிமை கொடுப்பது அவசியம், மேலும் அவருடைய சுய ஜாதகத்தில் தற்பொழுது நடை பெரும் திசை,புத்தி,அந்தரம்,சூட்சமம் ஆகியவை எந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்துகிறது என்பதை தெளிவாக தெரிந்து கொள்வது , ஜாதக பலனை மிக துல்லியமாக எடுத்துரைக்க உதவி புரியும் .

ஒருவரின் சுய ஜாதக அமைப்பின் படி நவ கிரகங்கள் ராசி கட்டத்தில் எந்த பாவகத்தில் அமர்ந்திருக்கிறது, என்பதனை லக்கினம் ஆரம்பிக்கும் பாகையின் அடிப்படையில் கண்டுணர்ந்து பலன் நிர்ணயம் செய்வது, சம்பந்த பட்ட ஜாதகருக்கு ஜாதக ரீதியான துல்லியமான பலனை சொல்ல உதவும் , ராசியை அடிப்படையாக வைத்தோ , லக்கினத்தை அடிப்படையாக வைத்தோ (லக்கினம் ஆரம்பிக்கும் பாகையை கருத்தில் கொள்ளாமல்) பலன் காணுவது அமாவசை அன்று நிலவை தேடுவதற்கு நிகரான ஒன்றாக கருத வேண்டி வரும் , லக்கினம் ஆரம்பிக்கும் பாகையின் அடிப்படையில் ஜாதக ஆய்வு செய்தால் மட்டுமே ஒவ்வொரு கிரகமும் எந்த பாவகத்தில் அமர்ந்திருக்கிறது என்ற உண்மை நிலை புரியும் , மேலும் ஒவ்வொரு பாவகத்தின் வலிமையை பற்றி தெளிவாக உணர்ந்துகொள்ள இயலும் .

மேற்கண்ட அமைப்பில் ஜாதக கணிதம் நிர்ணயம் செய்த பின்பு திசா புத்திகளின் பலாபலன்களை துல்லியமாக நிர்ணயம் செய்ய இயலும், உதாரணமாக கீழ்க்கண்ட ஜாதக அமைப்பை எடுத்துகொண்டு லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் நிலையை பற்றியும் , திசா புத்திகள் எந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்துகிறது என்பதனை பற்றியும் சற்றே சிந்திப்போம் .

ஜாதகர் பிறந்த தேதி : 27/06/2012
ஜாதகர் பிறந்த நேரம்: 07 : 52 pm 
ஜாதகர் பிறந்த இடம் : சேலம் 


இந்த ஜாதக அமைப்பின் படி 1,7,10 ம் வீடுகள் முறையே ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நல்ல நிலையிலும் ( ஜீவன ஸ்தானம் உபய ராசி என்பதால் 33சதவிகித யோக பலன்களையே தரும் ).

2,3,5,9,11ம் வீடுகள் முறையே அதிர்ஷ்டம் எனும் லாப ஸ்தானமாகிய 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகவும் சிறப்பான நிலையிலும் ( லாப ஸ்தானம் சர ராசி என்பதால் 100 சதவிகித யோக பலன்களை வாரி வழங்கும்).

4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகவும் சிறப்பான நிலையிலும் ( சுக ஸ்தானம் சர ராசி என்பதால் 100 சதவிகித யோக பலன்களை வாரி வழங்கும்).

6ம் வீடு சத்துரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பாதிப்படைந்த நிலையிலும் ( சத்துரு ஸ்தானம் உபய ராசி என்பதால் 33 சதவிகித தீமையான பலன்களே தரும் என்பதால் அதிக கவலை தேவையில்லை )

8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பாதிப்படைந்த நிலையிலும் ( விரைய ஸ்தானம் உபய ராசி என்பதால் 33 சதவிகித தீமையான பலன்களே தரும் என்பதால் அதிக கவலை தேவையில்லை ) சுய ஜாதக நிலை பலன்களை வழங்கிக்கொண்டு இருக்கிறது .

ஜாதகருக்கு பிறப்பு முதல்  11/05/2016 தேதி முடிய சந்திரன் திசையே நடை பெற்று கொண்டு இருக்கிறது , இந்த சந்திரன் திசை ஜாதகருக்கு எந்த பாவகத்தின் பலனை செய்கிறது என்பதை கவனிக்க வேண்டும் மேலும் ஜாதகர் சிறு குழந்தை பருவம் என்பதால் இதை அனுசரித்து பலனை நிர்ணயம் செய்வது அவசியம் தற்பொழுது நடை பெரும் சந்திரன் திசை ஜாதகருக்கு 8,12ம் வீடுகள் விரைய பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலன்களை தந்து கொண்டு இருப்பது அவ்வளவு நன்மையை தர வாய்ப்பில்லை,மேலும் பனிரெண்டாம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஒன்பதாம் பாவகமாக வருவது ஜாதகருக்கு தான் செய்த பாக்கியத்தின் பலன்களை அனுபவிக்க இயலாது சூழ்நிலையையும் , உடல் ரீதியான சில தொந்தரவுகளையும் தர கூடும் , மேலும் தனது தகப்பனாருக்கு தேவையற்ற அவ பெயரை ஏற்ப்படுத்தகூடும் , இருப்பினும் இவற்றின் தாக்கம் என்பது மிக குறைந்த அளவிலேயே இருக்கும் என்பதை நினைத்து மகிழ்ச்சி அடையலாம் .

11/05/2016 தேதிக்கு மேல் நடை பெரும் செவ்வாய் திசை பற்றி சிறிது ஆய்வு செய்வோம், 2,3,5,9,11ம் வீடுகள் முறையே அதிர்ஷ்டம் எனும் லாப ஸ்தானமாகிய 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று செவ்வாய் திசை பலன்களை வழங்குகிறது இது மிகவும் சிறந்த விஷயம் குறிப்பிட்ட பாவக அமைப்பில் இருந்து ஜாதகர் 100 சதவிகித பலன்களை தங்கு தடையின்றி அனுபவிக்கும் தன்மை உண்டாகும் , இதனால் ஜாதகருக்கு நல்ல கல்வி அமையும் , எடுக்கும் முயற்ச்சிகள் வெற்றி பெரும் , குல தேவதையின் அருளும் நல்லோர் ஆசியும் கிடைக்கும் , எங்கு சென்றாலும் ஜாதகர் நற்பெயர் எடுக்கும் யோகம் உண்டாகும் , அடிப்படையில் ஜாதகருக்கு இந்த செவ்வாய் திசை நீண்ட அதிர்ஷ்ட வாழ்க்கையை அமைத்து தரும் என்பது உறுதியாகிறது.

எனவே மேற்கண்ட முறையில் ஜாதக பலன்களை துல்லியமாக கணிதம் செய்து சொல்லும் பொழுது ஜாதகர் தனது வாழ்க்கையை செம்மையாக அமைத்து கொள்ள உதவும் என்பது ஜோதிட கலையின் சிறப்பு அம்சம் . மேலும் சந்திரன் திசையில் ஜாதகர் உடல் நிலை அமைப்பில் அதிக கவனமாக இருந்து அவர்களது பெற்றோர்கள் ஜாதகரை கவனமுடன் பார்த்துக்கொள்ள ஜோதிட கலை இந்த இடத்தில் கை கொடுக்கும் , ஜாதகரின் தகப்பனார் தேவையில்லாமல் மாற்றவர்கள் விஷயந்தில் தலையீடு செய்து அவ பெயரை சம்பாதித்து கொள்ளாமல் எச்சரிக்கையாக இருந்து கொள்ள ஜோதிட கலை அறிவுறுத்தும் , வீண் விரையன்களை தவிர்க்க உதவி புரியும் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969




 

செவ்வாய், 11 டிசம்பர், 2012

பாதகஸ்தானம் தரும் பாதிப்பிலிருந்து தப்பிக்க என்ன செய்யலாம்?.




கேள்வி : 

அண்ணா,
          1.பாதக ஸ்தானத்துடன் பூர்வபுண்ணியம் எனும் 5ம் பாவம் தொடர்பு பெறுகிறது என்பது எவ்வளவு பெரிய கொடுமை. நாம் எப்படி வருந்தினாலும் அது மாறப்போவது இல்லை, இந்தப்பிறவியில் நமக்கு பரதேஷ ஜீவனம் தான் என்பது ஏற்கனவே இறை நிலையால் தீர்மானிக்கப்பட்டுவிட்டது.இது நமது முன் ஜென்மக்கர்மாவினால் இந்தப் பிறவியில் நமக்குக் கிடைத்திருக்கிறது.அதை மாற்றும் வித்தை,படைத்தவன் ஒருவனைத் தவிர யாருக்குமே தெரியாது.ஆனாலும் பாதகஸ்தானம் தரும் பாதிப்பிலிருந்து தப்பிக்க என்ன செய்யலாம்?.

பதில் : 

அன்பு தம்பிக்கு பாதக ஸ்தானம் தரும் பலனில் இருந்து தப்பிக்க நாம் என்ன செய்யலாம்?  நல்ல கேள்வி , தம்பி ஒருவர் பிறக்கும் பொழுது சுய ஜாதகத்தில் 12 பாவகங்களில் எந்த ஒரு பாவகமும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து அதிக இன்னல்களை தரும் , குறிப்பாக லக்கினம் என்றால் ஜாதகரின் எண்ணம் செயல் ஆகிய அமைப்பிலும் , இரண்டாம் பாவகம் எனில் வருமானம் ,குடும்பம்,வாக்கு என்ற அமைப்பிலும், மூன்றாம் பாவகம் எனில் சகோதரம்,எடுக்கும் முயற்ச்சி,தைரியம் என்ற அமைப்பிலும் , நான்காம் பாவகம் எனில் தனது தாய் ,சொத்து வீடு ,வண்டி வாகனம்,சுக வாழ்க்கை என்ற அமைப்பிலும் , ஐந்தாம் பாவகம் எனில் குல தேவதை,குழந்தைகள்,பூர்வ புண்ணிய அமைப்பிலும்.

 ஆறாம் பாவகம் எனில் எதிரிகள்,உடல் தொந்தரவு,கடன் என்ற அமைப்பிலும்,ஏழாம் பாவகம் எனில் வாழ்க்கை துணை , கூட்டாளி , வெளிநாடு , நண்பர்கள் வழியிலும், எட்டாம் பாவகம் எனில் திடீர் இழப்பு , விபத்து , அறுவை சிகிச்சை வாழ்க்கை துணை செய்யும் வீண் செலவுகள் என்ற அமைப்பிலும், ஒன்பதாம் பாவக அமைப்பில் தனது நர்ப்பெயருக்கு களங்கம் , செய்த நல்வினை பதிவுகளின் பலனை அனுபவிக்க முடியாத நிலையும், பத்தாம் பாவக அமைப்பில் இருந்து கௌரவம் திடீர் என இழக்கும் சூழ்நிலை , தனது தகப்பன் வழியிலும் , செய்யும் தொழில் அமைப்பில் இருந்தும் , பதினொன்றாம் பாவக அமைப்பில் இருந்து நீண்ட அதிர்ஷ்ட வாழ்க்கைக்கு தடைகளையும் , மூத்த சகோதர அமைப்பில் இருந்து அதிக இன்னல்களையும் , தன்னம்பிக்கை குறைவு,சூழ்நிலைக்கு ஏற்றார் போல் மனதை மாற்றி கொள்ளும் மன நிலை என்ற அமைப்பில் இருந்தும், பனிரெண்டாம் பாவக அமைப்பில் மன நிம்மதி இழப்பு, வீண் விரையம் , ஜாதகர் தனது கட்டுபாட்டை இழப்பது, தனக்கு வரும் இன்னல்களுக்கு மற்றவர்களே காரணம் என்று நினைத்து தன்னையும் கெடுத்து கொண்டு , மற்றவரையும் கெடுத்து கொள்ளும் அமைப்பு என்று பாதக ஸ்தான அமைப்பில் இருந்து 200 சதவிகித இன்னல்களை சந்திக்க வேண்டி வரும் .

மேற்கண்ட பலன்கள் ஒரு ஜாதகருக்கு 12 பாவகங்கள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதாலேயே நடந்து விடாது , தற்பொழுது நடக்கும் திசை மற்றும் புத்தி பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று, பாவகத்தின் தொடர்பு மற்றும் அந்த பாவகத்தின் பலனை நடத்தினால் மட்டுமே பலன் நடை முறைக்கு வரும் . இல்லை எனில் ஜாதகத்தில் எந்த ஒரு பாவகமும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று இருந்தாலும் தீமையை தராது , ஜாதகர் இன்னல்களை அனுபவிக்க வேண்டி வர வாய்ப்பு என்பது சிறிது ஏற்ப்படாது .

கேள்வி :

வாழ்நாள் முழுவதும் தனது உறவுகள் மூலமாகவும்(சரம்),தனது அறிவும்,செயலும்(ஸ்திரம்),தனது மனைவி மற்றும் தனது கூட்டாளிகளுமே(உபயம்) நமக்கு ஆப்பு அடிப்பார்கள் எனில் கற்பனை செய்து பார்க்கவே கடினமாக இருக்கிறது(பாட வேண்டியது தான் யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம் என்று).உதவியில்லையென்றாலும் உபத்திரவம் இருக்கக்கூடாது இல்லையா?. இதற்கு ஜோதீட தீபம் தரும் ஆலோசனை என்ன?.
           
பதில் : 

மிக சுலபமான வழி ஒன்று இருக்கிறது அதாவது அந்த பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை மனம் உவந்து ஏற்றுக்கொண்டு கர்ம வினை பதிவினை கழித்து கொள்ளும் மன பக்குவத்தை வளர்த்து கொள்வதால் , சம்பந்த பட்ட பாவக அமைப்பில் இருந்து சில காலங்கள் இன்னல்கள் வரும் அதன் பிறகு அந்த பாவக அமைப்பில் இருந்தே மிகுந்த யோகம் ஏற்ப்படும் என்பது இறை நிலை தரும் ஒரு சிறப்பான வழி தம்பி .

கேள்வி :

2.பாத‌க‌ஸ்தான‌த் தொட‌ர்பு பெற்ற‌ 5ம் வீட்டில் ந‌ன்மை செய்யும் வ‌கையில் ராகு,கேது அமைந்துவிட்டால் ப‌ல‌ன் எப்ப‌டியிருக்கும்?.எந்த பாவகமாயினும் ராகு,கேது நன்மை மட்டும்தான் செய்யுமா?. 
            
பதில் :

தம்பி 5 ம் பாவகத்தில் ராகு அல்லது கேது அமர்ந்து நன்மையை செய்யும் என்றால் , அந்த ஐந்தாம்  பாவகம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற வாய்ப்பே இல்லை , ஒரு வேலை இங்கு அமரும் ராகு கேது ஐந்தாம் பாவகத்தை , கடுமையாக பாதிக்கும் எனில் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற வாய்ப்பு உண்டு என்பதே ஜாதக சூட்சமம் .

கேள்வி :

3.லக்கின‌த்தின் ஆர‌ம்ப‌ப்பாகையை ஜோதிட‌தீப‌ம் எவ்வாறு க‌ணிக்கிற‌து.சூரிய‌ உத‌ய‌த்திலிருந்தா?.இல்லை ஜ‌ன‌ன‌ நேர‌த்தின் நட்ச‌த்திர‌ பாத‌த்தை அனுச‌ரித்தா?.

பதில் : 

ஜனன நேரத்தில் நட்சத்திர பாதத்தில் உதிக்கும் பாகையின் அமைப்பை வைத்தே லக்கினம் , மற்றும் மற்ற  பாவகங்களின் ஆரம்ப பாகையை நிர்ணயம் செய்கிறோம், இதுவே ஒரு ஜாதகத்தில் ஜாதக ரீதியான பலன்களை நிர்ணயம் செய்ய உதவும் , பொதுவாக லக்கினம் எந்த ராசி என்று கணிதம்  செய்யும் பொழுதும் , சந்திர ராசியை வைத்து நிர்ணயம் செய்யும் பொழுதும் , பொது பலனை குத்து மதிப்பாக சொல்லவே உதவும் , நம்மை நம்பி வருபவரின் வாழ்க்கையில்  சரியான வழியை காட்ட உதவாது தம்பி .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969


வியாழன், 20 செப்டம்பர், 2012

ஒருவருடைய சுய ஜாதக அமைப்பில் பூர்வ புண்ணியம் பாதிக்கபட காரணங்கள் !



1 ) ஜாதகரும் ஜாதகரின் முன்னோர்களும் தனது குல தேவதையை முறையாக வழிபடாமல் , இருந்ததால் இருப்பதாலும் , தனது குல தெய்வத்தை நிந்தனை செய்ததாலும் , குலதெய்வத்திற்கு அடிமை செய்யும் நபர்களை கை விட்டாலும் , அவர்களுக்கு ஜீவனம் செய்ய உதவி செய்யாததினாலும் , குல தேவதையின் கோவில் பரமாரிப்புக்கு உதவி செய்யாததினாலும் , தனது முன்னோர்கள் குல தேவதைக்கு செய்து வந்த வழிபாட்டு முறைகளை மாற்றி அமைப்பதாலும் , குல தேவதை கோவிலில் உள்ள பசுவிற்கு ஆகாரம் தர மறுத்தாலும் , தன்னிடம் யாசகம் செய்வோரை மதியாமல் நிந்தனை செய்வதினாலும் , ஒருவருடைய சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் பலமாக பாதிக்க படும் , இதன் வழியில் இருந்து ஜாதகருக்கு அதிக துன்பங்களே ஏற்ப்படும் .


தனது வாரிசாக அமைந்த பெண்குழந்தையை மற்றவருக்கு தானம் செய்வதாலும் அல்லது சிசு கொலை செய்வதாலும் , தனது வாரிசாக அமைந்த பெண்குழந்தைக்கு தேவையானவற்றை நிறைவேற்றி தராமால் விட்டு விட்டாலும் , குடும்பத்தில் உள்ள பெண்களை மனம் நோக செய்தாலும் , துன்புறுத்தினாலும் , ஆகாரம் தராமல் பட்டினி போட்டாலும்சரியான வயதில் திருமணம் செய்து வைக்காமல் விட்டு விட்டாலும் , தனது குடும்ப பெண்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தராமல் தவிக்க விட்டு விட்டாலும் , அபலை பெண்களின் வாழ்க்கையில் துன்பத்தை தந்தாலும் , மற்றவர் வாழ்க்கை துணையை தவறான கண்ணோட்டத்தில் பார்த்தாலும் , தவறான எண்ணத்துடன் அணுகினாலும் , தவறான செய்கைக்கு துண்டினாலும் ,  சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் பலமாக பாதிக்க படும் , இதன் வழியில் இருந்து ஜாதகருக்கு அதிக துன்பங்களே ஏற்ப்படும் .


3 ) மற்றவர் குடும்ப விஷயங்களில் ஒருவர் எக்காரணத்தை கொண்டும் மூக்கை நுழைப்பது , தனது புண்ணிய பதிவுகளை இழக்கும் சூழ்நிலையை தந்து விடும் , குறிப்பாக சில இடங்களில் நாட்டாமை செய்யும் பல குடும்பங்கள் இருந்த இடம் தெரியாமல் போவதற்கு காரணம் குறிப்பிட்ட நபர்களுக்கு வரும் பிரச்சனைகளை அவர்களின் கர்ம வினை பதிவின் படி அனுபவிக்க விடாமல், தான் அந்த கர்ம வினை பதிவை தீர்வு சொல்வதின்  மூலம்  ஏற்றுக்கொள்ளும்  பொழுது தீர்ப்பு சொல்லும் நபரின் குடும்பம் கடுமையாக பாதிக்க படுகிறது என்பதே உண்மை , ஒரு காலத்தில் ஜமீன் பரம்பரையாக வாழ்ந்த நபர்கள் குடிசை  வாசியாக வாழும் சூழ்நிலைக்கு ஏற்ப்பட காரணம் மற்றவர்களின் வினை பதிவில் தலையீடு செய்வதே முக்கிய காரணம் , எனவே இதனால்   ஒருவருடைய சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் பலமாக பாதிக்க படும் , இதன் வழியில் இருந்து ஜாதகருக்கு அதிக துன்பங்களே ஏற்ப்படும் .


4 ) தனது ரத்த சம்பந்த பட்ட உறவினர்கள் , உடன்பிறப்புகளின் சொத்து சுகங்களை அகபரித்தாலும் , அவர்களின் வாழ்க்கையை கெடுத்தாலும் , தனது பெற்றோரை சரியாக கவனிக்காமல் சிரமப்பட வைத்தாலும் , நிந்தனை செய்தாலும் , மனம் நோக செய்தாலும் , பூர்வ புண்ணியம் பாதிக்கும் வாய்ப்பை தந்துவிடும் , குறிப்பாக தனது தாய் வழி பெற்றோர் , தகப்பன் வழி பெற்றோர்களை சிரம பட வைத்தாலும் , சதுர்வேதிகளையும் , பிராமணர்களையும் , சிவனடியார்களையும் ஏளனம் செய்வதாலும், நிந்தனை செய்வதாலும் , சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் பலமாக பாதிக்க படும் , இதன் வழியில் இருந்து ஜாதகருக்கு அதிக துன்பங்களே ஏற்ப்படும் .


5 ) விதவை மற்றும்  வாரிசு அற்றவர்களின்  சொத்துகளை ஜாதகர் ஏமாற்றி பெறுவதாலும், மாற்று திறனாளிகள் சொத்துகளை அகபரித்தலும் , மன நிலை பாதிக்க பட்ட நபர்களின் சொத்துகளை அகபரித்து கொண்டாலும் , வயதானவர்களின் உடைமைகளை வலுகட்டாயமாக அகபரித்து கொண்டாலும் , பூர்வ புண்ணியம் பதிக்க அதிக வாய்ப்பு உண்டாகும் , மேலும் கோவில் சொத்துகளை அகபரிப்பதால் 7 தலைமுறைக்கு பூர்வ புண்ணியம் பாதிப்படையும் , கோவில் பசுவினையும் , கற்றுகொடுத்த குருவின் குழந்தை , மற்றும் அவர் குடும்ப பெண்களை தவறன கண்ணோட்டத்துடன் பார்ப்பதும் , குருவிற்கு துரோகம்  செய்வதாலும் சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் பலமாக பாதிக்க படும் , இதன் வழியில் இருந்து ஜாதகருக்கு அதிக துன்பங்களே ஏற்ப்படும் .


6 ) முக்கியமாக பஞ்சமாக பாதகங்களை செய்வதால் விரைவில் பூர்வ புண்ணியம் பாதிப்படையும் , எனவே மேற்கண்ட பாவ வினை பதிவுகளை செய்யாமல் , புண்ணிய பதிவுகளை செய்து நலம் பெற வேண்டும் , புண்ணியம் செய்யாவிட்டாலும் பாவங்களை செய்யாமல் தனது வாரிசுகளுக்கு நன்மையை  செய்துவிட்டு போவது நல்லது , என்ன காரணத்தால் நாம் பாதிக்க படுகிறோம் என்று கூட தெரியாமல் அவர்கள் சிரமப்பட வேண்டிவரும் , இதற்க்கு காரணம் நமது செய்கை என்பதை அனைவரும் கவனத்தில் கொள்வது அவசியம் .


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


சனி, 4 ஆகஸ்ட், 2012

ஒருவருடைய சுய ஜாதகத்தில் பலன் நிர்ணயம் செய்யும் வழி முறைகள் !



ஒருவருடைய ஜாதகத்தில் நடைபெறும் நன்மை தீமை பலன்களை நிர்ணயம் செய்வது லக்கினம் முதற்கொண்டு 12 வீடுகளே ( பாவகங்கள் ) , எனவே ஒருவருடைய ஜாதக அமைப்பில் அனைத்து  திசை, புத்தி, அந்தரம், சூட்சமம் ஆகியவைகள், மேற்கண்ட 12   வீடுகளின்   பலன்களையே நிச்சயம் தரும் , மேலும் ஒருவருடைய ஜாதக அமைப்பில் மேற்கண்ட 12 வீடுகளும் ( பாவகங்கள் ) எவ்வித பலனை ( நன்மையா ? தீமையா ? ) தருகிறது என்று துல்லியமாக கண்டறிவது ஜாதக பலனை தெளிவாக துல்லியமாக சொல்ல வழிவகுக்கும்.

 

1) இதற்க்கு முன் நடந்த  திசை, புத்தி, அந்தரம், சூட்சமம் ஆகியவை ஜாதகனுக்கு எந்த வீடுகளின் பலனை தந்தது ,
2 ) தற்பொழுது நடக்கும்
திசை, புத்தி, அந்தரம், சூட்சமம்  ஆகியவை ஜாதகனுக்கு எந்த வீடுகளின் பலனை தந்து கொண்டு இருக்கிறது ,
3 ) எதிர் வரும்
திசை, புத்தி, அந்தரம், சூட்சமம்  ஆகியவை ஜாதகனுக்கு எந்த வீடுகளின் பலனை தரும் என்று துல்லியமாக கண்டறிவதும்,

 

ஒருவருடை ஜாதக பலனை துல்லியமாக கணிதம் செய்ய சரியான வழி முறையாகும் , இந்த முறையில்  ஜாதக பலனை நிர்ணயம் செய்த பிறகு,  தற்பொழுது நடக்கும் திசை, புத்தி, அந்தரம், சூட்சமம் ஆகியவை எந்த வீடுகளின் பலனை தருகிறது , அந்த வீடுகள் ஜாதகருக்கு நன்மையான  பலனை தருகிறதா  , தீமையான பலனை தருகிறத என்று நிர்ணயம் செய்வதும் , மேற்கண்ட வீடுகளுடன் கோட்சார கிரகங்கள் சம்பந்தம் பெறுகிறதா , அவ்வாறு சம்பந்தம் பெரும்பொழுது கோட்சார கிரகங்கள் ஜாதகருக்கு நன்மையை தருகிறதா ? தீமையை தருகிறதா ? என்று கணிதம் செய்வது ஜாதக பலனை துல்லியமாக சொல்ல ஏதுவாக அமையும் .

 

ஆக ஒருவருடைய ஜாதக அமைப்பில் துல்லியமான பலனை நாம் கணிதம் செய்து விட்டோம் எனில் நிச்சயம் ஜாதகருக்கு சிறப்பான வாழ்க்கை அமைத்து தர ஜோதிட சாஸ்திரம் 100 சதவிகிதம் உதவி புரியும் என்பதில் சந்தேகம் இல்லை , ஒருவருக்கு ஜாதக ரீதியாக நடப்பு திசை அமைப்பு நன்மை செய்து கொண்டு இருக்கும் பொழுது செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றிமேல் வெற்றி தரும் , எனவே நாம் ஜாதகரை துணிந்து அனைத்து காரியங்களையும்  செய்ய சொல்லி ஆலோசனை வழங்கலாம் , இதனால் ஜாதகர் 100 சதவிகிதம் நன்மையே பெறுவார் என்பது உறுதி .

 

இதுவே மாறி ஒருவருக்கு ஜாதக ரீதியாக நடப்பு திசை அமைப்பு  தீமையான பலனை வழங்கி கொண்டு இருக்கும் பொழுது , எடுக்கும் முயற்ச்சிகள் யாவும் தோல்வி பெரும் , இழப்புகள் பலவற்றை  சந்திக்க வேண்டி வரும் , மன நிம்மதி இழப்பு , உறவுகள் , நண்பர்கள் வழியில் இருந்து ஏமாற்றம் போன்ற சூழ்நிலை வரக்கூடும் , எனவே ஜாதகரை  குறிப்பிட்ட காலகட்டங்கள் வரை எச்சரிக்கை செய்து விழிப்புடன் இருக்க சொல்லி  ஆலோசனை வழங்கலாம் , இதனால் ஜாதகர் மற்றும் ஜாதகரை சார்ந்தவர்கள் பாதிப்புகளில் இருந்து விடுபட்டு 100 சதவிகிதம்  நன்மை பெறுவார்கள் என்பது உறுதி .

 

ஒருவருடைய ஜாதக ரீதியான பலன்களை தெளிவாக தெரிந்து கொள்ளும் பொழுது , அந்த ஜாதகனுக்கு சரியான சிறப்பான  வாழ்க்கையை  ஜோதிட சாஸ்திரம் நன்கு அறிந்தவர்களால் நிச்சயம் அமைத்து தந்து விட முடியும் , இதனால் ஜோதிட கலையின் மீதும் , ஜோதிடர்கள் மீதும் மக்களுக்கு நல்ல நம்பிக்கை வரும் என்பதில் ஐயமில்லை , இதற்க்கு ஜோதிட கலையை சிறந்த குரு மூலம் முறையாக பயின்று தேர்ச்சி பெறுவது அவசியம் , ஜோதிட கலையை  முறையாக பயின்று அதன் மூலம் மக்களுக்கு வாழ்க்கையில் நல் வழி காட்டும் அன்பர்களுக்கு , இந்த ஜோதிடக்கலை மென்மேலும் சகல செல்வ வளத்தை வாரி வழங்குகிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை மேலும் இறை நிலையின் அருளாற்றல் சம்பந்தபட்டவருக்கு எப்பொழுதும் துணை நிற்கிறது , இதை எனது ஜோதிட குரு அவர்களின் ஆசியாலும் , எனது வாழ்க்கை அனுபவத்திலும் கண்ட 100 சதவிகித உண்மையாகும் .


வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696