சர்ப்பதோஷம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சர்ப்பதோஷம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 8 மார்ச், 2019

ராகு கேது பெயர்ச்சி தரும் யோக வாழ்க்கை : தனுசு லக்கினம் ( 2019-2020 )




தனுசு லக்கின அன்பர்களுக்கு இனிமை மிக்க யோக வாழ்க்கையை சுவீகரிக்கும் நேரமிது, நவகிரகங்களில் மிகவும் வலிமை பெற்றதும், சாயாகிரகங்கள் என்று போற்றப்படுவதுமான ராகு கேது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமான மிதுன ராசியிலும், பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியிலும் இனி வரும் 18 மாதங்களில் சஞ்சாரம் செய்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு தனது சஞ்சார நிலையில்  இருந்து வழங்கும் யோக அவயோக பலாபலன்கள் பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!

லக்கினம் : தனுசு 

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமாகவும், உபய நெருப்பு தத்துவ ராசியாகவும் விளங்கும் தனுசு ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்திலும், லக்கினமான  1ம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகங்கள் இனிவரும் 18 மாதங்கள் வழங்கும் பலாபலன்கள் பற்றி இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே, ராகுவின் சஞ்சாரம் களத்திர ஸ்தானத்தில் அமைவது மிகசிறந்த யோக பலன்களை தரும் என்ற போதிலும், புதன் கேந்திராபதியாக சூரியனுடன் 14 பாகைக்குள் சேர்ந்து சஞ்சாரம் செய்யும் நிலையில் மட்டுமே சுபயோக பலாபலன்கள் தனுசு லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும், மேலும் களத்திர ஸ்தான வழியில் இருந்து வாழ்க்கை துணையின் முழு ஆதரவு, நண்பர்கள் சேர்க்கை மூலம் கிடைக்கும் நல்ல வாய்ப்புகள், கூட்டாளிகள் வழியில் இருந்து வரும் திடீர் அதிர்ஷ்டம் என வெகு சிறப்பான நன்மைகளை தரும் என்பது கவனிக்க தக்கது, எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும், வெளியூர் அல்லது  வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டாகும், எதிர்பாலின சேர்க்கை வழியில் இருந்து மிக பெரிய நன்மைகள் நடைமுறைக்கு வரும், வியாபார விருத்தி அளவில்லா லாபங்களை வாரி வழங்கும் பொதுமக்கள் ஆதரவு, விளம்பரம் மூலம் சிறப்பான நன்மைகளை பெரும் நேரமிது, இதுவரை இருந்து வந்த தடைகள் யாவும் விலகி சுபயோக வாழ்க்கையை பரிபூர்ணமாக சுவீகரிக்கும் வாய்ப்பு உருவாகும்.

அதே சமயம் ராகுவின் சஞ்சாரம் களத்திர ஸ்தானத்தில் புதன் கோணாதிபதியாக சூரியனுடன் 14 பாகைக்கு மேல் சேராமல் சஞ்சாரம் செய்யும் நிலையில் அவயோக பலாபலன்கள் தனுசு லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும், வாழ்க்கை துணையுடன் இணக்கமற்ற சூழ்நிலை, கூட்டாளிகள் வழியில் இருந்து வரும் தொல்லைகள், திருப்தி இல்லாத மனநிலை, சரியான தகவல்களை பெற இயலாமல் முரண் பட்ட கருத்துக்களால் தடுமாறும் தன்மை, எதிர்ப்புகள் மூலம் ஏற்படும் நஷ்டங்கள், தெளிவில்லாத முடிவுகள், சிந்தனை திறனில் குறைபாடு, முன்னேற்றமின்மை, பதற்றம், செயல்திறன் பாதிக்கும், முயற்சிக்கும் காரியங்கள் யாவும் தோல்வியை தரும், உறவுகள் வழியில் இருந்து வரும் அதீத தொல்லைகள், பொருள் இழப்பு, மதிப்பு மரியாதை குறைவு, தொழில் முறை கூட்டாளிகளுடன் முரண்பட்ட கருத்து வேறுபாடு, வரும் இன்னல்களை சமாளிக்க இயலாமல் கடுமையாக பாதிக்கும் நிலை என வெகுவான துன்பங்களை தரக்கூடும்.

உயிர் உடலாகிய ஜென்ம லக்கினத்தில் சஞ்சாரம் செய்யும் கேது பகவான் தனுசு லக்கின அன்பர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத நன்மைகளை வாரி வழங்குவார் என்பது கவனிக்க  தக்கது, சுய கட்டுப்பாடு அதிகரிக்கும், உடல் நலம்  மேலோங்கும், எதிர்பார்க்கும் விஷயங்களில் வெற்றி கிட்டும், மனஉறுதி மூலம் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் கூடி வரும், சுய முன்னேற்றத்தில் அதீத ஆர்வமும், செயல்பாடுகளில் வீரியமும் அதிகரிக்கும், தெளிவான நடவடிக்கைகள் மூலம் சரியான முடிவுகளை மேற்கொண்டு வெற்றி பெறுவீர்கள், தங்களின் அறிவு வெகு பிரகாசமாக நன்மைகளை வாரி வழங்கும், புகழ் வெற்றி சமூக அந்தஸ்த்து தேடி வரும், தங்களின் அறிவு திறனை கண்டு அனைவரும் வியந்து நிற்பார்கள், கேதுவின் ஜென்ம லக்கின சஞ்சாரம் தங்களுக்கு அதீத ஞானத்தையும், தெளிவான சிந்தனையையும் வாரி வழங்கும், முழு அளவில் கேதுவின் ஆதிக்கத்தில் தங்களின் உடல்,மனம் கட்டுக்குள் அடங்கி சுபயோக வாழ்க்கையை சுவீகரிக்கும், எந்த ஓர் சூழ்நிலையையும் சிறப்பாக கையாண்டு வெற்றி பெறுவீர்கள், தொழில் வழியிலான திட்டமிடுதல்கள் தங்களுக்கான நெடுநாள் வளர்ச்சியை உறுதி செய்யும், நல்ல ஞானம் வாழ்க்கையில் வியக்கத்தக்க மாற்றங்களை நல்கும்.

ஆன்மீக பெரியோர்கள் சந்திப்பு, ஆன்மீக திருத்தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு தங்களுக்கு பரிபூர்ணமாக கிட்டும், இது தங்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை வாரி வழங்கும், கல்வியில் தேர்ச்சி, குறிப்பாக ஆராய்ச்சி கல்வியில் வெற்றி, வெளியூர் சென்று படிக்கும் யோகம், கற்ற கல்வி வழியிலான முன்னேற்றம், விழிப்புணர்வுடன் செயல்பட்டு சகல நன்மைகளையும் பெரும் தன்மை, எதிர்பாராத அதிர்ஷ்டங்களை சுவீகரிக்கும் யோகம், தனது குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் வழியில் இருந்து  வரும் யோக வாழ்க்கை என சிறப்பு மிக்க நன்மைகள் நடைமுறைக்கு வரும், சுய ஞானம், நல்லறிவு, தெளிவான சிந்தனை போன்றவை தங்களின் வாழ்க்கையில் புதுவித உத்வேகத்தை தருவதுடன், நிலையான முன்னேற்றத்தை வாரி வழங்கும், தங்களின் நம்பிக்கை பரிபூர்ண வெற்றியை தரும், எதிர்பார்ப்புகள் நிறைவேறும், லட்சியம் வெற்றி பெரும், தங்களின் செயல்பாடுகளில் வேகமும் விவேகமும் கலந்து நின்று வெற்றியை உறுதி செய்யும், சமூகத்தில் அனைவரிடமும் நற்பெயர் உண்டாகும் என்பதுடன், அரசியல் அல்லது நிர்வாகத்தில் தலைமை பொறுப்பேற்கும் வாய்ப்பு உண்டாகும், செல்லும் இடங்களிலெல்லாம் சிறப்பை சேர்த்து, கவுரவம் அந்தஸ்த்துடன் வாழ்க்கையில் சகல நன்மைகளையும் பெரும் நேரமிது.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 7,1ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக, அவயோக பலாபலன்கள் தனுசு லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும், நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 7,1ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் மேற்கண்ட சாயா கிரகங்களின் சஞ்சார நிலையின் வழியில் இருந்து தனுசு லக்கின அன்பர்களுக்கு யாதொரு நன்மை தீமையையும் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்க...

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

திங்கள், 4 மார்ச், 2019

ராகு கேது பெயர்ச்சி தரும் யோக வாழ்க்கை : விருச்சிக லக்கினம் ( 2019-2020 )




 விருச்சிக லக்கின அன்பர்கள் பொருளாதார திட்டமிடுதல்கள் மற்றும் சுய முன்னேற்றத்தில் கவனம் செலுத்தவேண்டிய நேரமிது, நவகிரகங்களில் மிகவும் வலிமை பெற்றதும், சாயாகிரகங்கள் என்று போற்றப்படுவதுமான ராகு கேது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமான மிதுன ராசியிலும், பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியிலும் இனி வரும் 18 மாதங்களில் சஞ்சாரம் செய்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு தனது சஞ்சார நிலையில்  இருந்து வழங்கும் யோக அவயோக பலாபலன்கள் பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!

 லக்கினம் : விருச்சிகம் 

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஆயுள் ஸ்தானமாகவும், ஸ்திர நீர் ராசியாகவும் விளங்கும் விருச்சிக ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்திலும், குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகங்கள் இனிவரும் 18 மாதங்கள் வழங்கும் பலாபலன்கள் பற்றி இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே, ராகுவின் சஞ்சாரம் ஆயுள் ஸ்தானத்தில் அமைவது மிகசிறந்த யோக பலன்களை தரும் என்ற போதிலும், புதன் கேந்திராபதியாக சூரியனுடன் 14 பாகைக்குள் சேர்ந்து சஞ்சாரம் செய்யும் நிலையில் மட்டுமே சுபயோக பலாபலன்கள் விருச்சிக லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும், இது ஜாதகருக்கான திடீர் அதிர்ஷ்டத்தை வழங்குவதுடன், முயற்சிக்கும் காரியங்களில் எதிர்பாராத லாபங்களை வாரி வழங்கும், முன்னேற்றம் என்பது திடீரென அமையும், வாழ்க்கை துணை வழியிலான ஆதரவு, நண்பர்கள் உதவி, கூட்டாளிகளின் ஒத்துழைப்பு ஆகியவை விருச்சிக லக்கின அன்பர்களுக்கு அதீத அளவில் நன்மைகளை வாரி வழங்கும், இதுவரை இருந்து வந்த ஆரோக்கிய பாதிப்பு வெகு விரைவாக தீரும், மனதளவில் இருந்து வந்த போராட்டங்கள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சி பொங்கும், உறவுகள் வழியிலான உதவிகள் தேடிவரும், சிகிச்சை மூலம் உடல் நலம் பெறுவதற்கான வாய்ப்பை வாரி வழங்கும், அந்நியர் ஆதரவு அல்லது வெளிநாட்டினர் மூலம் ஆதாயம் என்ற வகையில் சிறப்புக்களை தரும், வியாபார ரீதியாக நல்லதொரு வருமானம் கிடைக்க வாய்ப்பு உண்டாகும், தெளிவான சிந்தனை சரியான முடிவு மற்றும் தீர்க்கமான வாதம் தங்களின் வாழ்க்கையில் எதிர்பாராத யோக வாழ்க்கையை வாரி வழங்கும்.

அதே சமயம் ராகுவின் சஞ்சாரம் ஆயுள் ஸ்தானத்தில் புதன் கோணாதிபதியாக சூரியனுடன் 14 பாகைக்கு மேல் சேராமல் சஞ்சாரம் செய்யும் நிலையில் அவயோக பலாபலன்கள் விருச்சிக லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும், எதிர்பார்ப்புகள் நிறைவேறாது, தன்னம்பிக்கை குறையும், திட்டமிட்ட செயல்கள் யாவும் நடைமுறைக்கு வாராது, செயல்பாடுகளில் மந்தம் ஏற்படும், விழிப்புணர்வு இன்றி செய்யும் காரியங்களில் மிகப்பெரிய தோல்விகளை சந்திக்கும் நிலையை தரும், உறவுகளின் ஆதரவு இன்றி தனித்து நிற்கும் சூழ்நிலை உருவாகும், வாழ்க்கை துணை வழியிலான இழப்புகள் அதிக அளவில் ஏற்பட வாய்ப்பு உண்டு தெய்வ நம்பிக்கை குறையும், விபத்து மற்றும் மருத்துவ செலவினங்களை தவிர்க்க இயலாது, செய்து வந்த தொழில்களில் நஷ்டம் மற்றும் பொருள் இழப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு, சகோதர வழி இன்னல்கள் தங்களின் நிம்மதியை குறைக்கும், தைரியம் வெகுவாக குறையும், சரியான நிகழ்வுகள் உணராமல் வதந்திகளை நம்பி செய்யும் அனைத்தும் தங்களுக்கு பேரிழப்புகளை வாரி வழங்கும், எதிர்பாலின சேர்க்கை வழியில் இருந்து 200% சதவிகித  இன்னல்களையே தரும் என்பதை கவனத்தில் கொண்டு நலம் பெறுங்கள்.

குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் கேது பகவான் தங்களின் வாழ்க்கையில் அதீத பண நெருக்கடிகளை தர கூடும், நாவடக்கம் தேவை என்பதை உணர வேண்டிய நேரமிது, குறிப்பாக வயதில் பெரியவர்கள், ஆன்மீக பெரியோர்களிடம் பேசும் பொழுது வார்த்தைகளில் கவனம் தேவை, வீட்டில் உள்ள பெரியோர்களின் வார்த்தைகளை மதித்து நடப்பது தங்களின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், வருமானம் சார்ந்த விஷயங்களில் தெளிவான சிந்தனையுடன் செயல்படுவது அவசியமாகிறது, சேமிப்பு என்பது தங்களுக்கு அனைத்து வித தேவைகளையும் பூர்த்தி செய்யும் என்பதை கவனத்தில் கொண்டு செயல்படுங்கள், குடும்பத்தில் வரும் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வை நாடுவதும் குடும்ப உறுப்பினர்களுடன் மனம் விட்டு பேசுவதும் தங்களுக்கான நெருக்கடிகளை குறைக்க உதவும், கடன் சார்ந்த பிரச்சனைகளுக்கு உடனடி நிவர்திகளை மேற்கொண்டு விடுபடுவது அவசியமாகிறது.

 கற்ற கல்வி தங்களுக்கு சரியான ஜீவன மேன்மையை வழங்கும் என்பது கவனிக்க தக்கது, திருமண தடைகள் நீங்கும், நல்லதொரு வாழ்க்கை துணையை தேர்வு செய்து நலம் பெறுங்கள், அவசர கதியில் செய்யும் செயல்கள் யாவும் தங்களுக்கு நீண்ட நாள் நீங்காத இன்னல்களை தந்து விடும், திருமண முயற்சிகள் கூடி வரும் என்ற போதிலும் சரியான வாழ்க்கை துணையை தேர்வு செய்வது தங்களின் கடமை என்பதை கருத்தில் கொண்டு செயல்படுங்கள், மற்றவர்களின் வார்த்தைகளுக்கு கட்டுப்படும் தன்மையை தவிர்ப்பது தங்களுக்கு சகல நன்மைகளையும் தரும், எதிர்பாராத நிகழ்வுகள் மூலம் அதீத பொருள் இழப்புகளை தாங்கள் சந்திக்க வேண்டி வரும் என்பதை கவனத்தில் கொண்டு மிகவும் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியமாகிறது, நிதி சார்ந்த மேலாண்மை இனிவரும் 18 மாதங்களுக்கும் தங்களுக்கான நெருக்கடிகளை குறைத்து நலவாழ்க்கையை தரும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 8,2ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக, அவயோக பலாபலன்கள் விருச்சிக லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும், நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 8,2ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் மேற்கண்ட சாயா கிரகங்களின் சஞ்சார நிலையின் வழியில் இருந்து விருச்சிக லக்கின அன்பர்களுக்கு யாதொரு நன்மை தீமையையும் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்க...

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வெள்ளி, 1 மார்ச், 2019

ராகு கேது பெயர்ச்சி தரும் யோக வாழ்க்கை : துலாம் லக்கினம் ( 2019-2020 )


 துலா லக்கின அன்பர்கள் சகல சௌபாக்கியங்களையும் பரிபூர்ணமாக பெரும்  நேரமிது, நவகிரகங்களில் மிகவும் வலிமை பெற்றதும், சாயாகிரகங்கள் என்று போற்றப்படுவதுமான ராகு கேது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமான மிதுன ராசியிலும், பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியிலும் இனி வரும் 18 மாதங்களில் சஞ்சாரம் செய்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு தனது சஞ்சார நிலையில்  இருந்து வழங்கும் யோக அவயோக பலாபலன்கள் பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!

 லக்கினம் : துலாம் 

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு களத்திர ஸ்தானமாகவும், சர காற்று ராசியாகவும் விளங்கும் துலாம் ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்திலும், வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகங்கள் இனிவரும் 18 மாதங்கள் வழங்கும் பலாபலன்கள் பற்றி இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே, ராகுவின் சஞ்சாரம் பாக்கிய ஸ்தானத்தில் அமைவது மிகசிறந்த யோக பலன்களை தரும் என்ற போதிலும், புதன் கோணாதிபதியாக சூரியனுடன் 14 பாகைக்கு மேல் சேராமல் சஞ்சாரம் செய்யும் நிலையில் மட்டுமே சுபயோக பலாபலன்கள் துலா லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும். தனது அறிவு திறன் கொண்டு வாழ்க்கையில் வரும் இன்னல்களை வெகு எளிதாக கடந்து செல்லும் வாய்ப்பை தரும், தன்னம்பிக்கை அதிகரிக்கும், முயற்சிக்கும் காரியங்கள் இறை அருளின் கருணையினால் சிறப்பான வெற்றிகளை வாரி  வழங்கும், உயர் கல்வி சார்ந்த விஷயங்களில் எதிர் பாராத நன்மைகளையும் பாராட்டு மற்றும் பரிசுகளையும் பெறுவதற்கான வாய்ப்பை வாரி வழங்கும், முன்னோர்கள் ஆசிர்வாதம், பெரியமனிதர்கள் ஆதரவு, மக்கள் செல்வாக்கு, பிரபல்ய யோகம், பல ஆன்மீக திருத்தலங்களுக்கு சென்றுவரும் வாய்ப்பு, சரியான வழியில் வாழ்க்கையில் முன்னேற்றங்களை பெரும் தன்மை, அதீத போராட்டங்களை கடந்து சிறப்பான யோக வாழ்க்கையை பெரும் தன்மை, நல்ல மனிதர்களின் சேர்க்கை, ஆன்மீக பெரியோர்களின் சந்திப்பு, அவர்கள் வழியிலான வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள், புதுவித சிந்தனைகளின் வழியில் சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளும் தன்மை என முழு அளவில் நன்மையான பலன்கள் நடைமுறைக்கு வரும், பயணங்கள் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம், எதிர்பாராத சந்திப்புகள் மூலம் நலம் பெரும் தன்மை, அந்நியர் மற்றும் மேல்நாட்டினர் மூலம் வழியில் இருந்து பெரும் ஆதாயம் என ராகுவின் சஞ்சாரம் சுபயோகங்களை வாரி வழங்கும்.

 அதே சமயம் புதன் கேந்திர அதிபதியாக 14 பாகைக்குள் சஞ்சாரம் செய்யும் நிலையில்  துலா லக்கின அன்பர்களுக்கு சற்று இன்னல்களை வெகுவாக தரக்கூடும், குறிப்பாக பெயருக்கு களங்கம் ஏற்படும் விதத்தில் செயல்படுவதை தவிர்ப்பது நல்லது, பெரியோர்களை மதித்து நடப்பதும், அவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதும் சிறப்பான நன்மைகளை தங்களுக்கு வாரி வழங்கும், முறையான பித்ரு காரியங்களை மேற்கொண்டு அவர்களின் ஆசியின் மூலம் நன்மைகளை சுவீகரிப்பது அவசியமாகிறது, மிக சிறந்த ஆன்மீக திருத்தலங்களுக்கு சென்று முறையான நிவர்த்தி பரிகாரங்களை மேற்கொண்டு சகல சௌபாக்கியங்களையும் பெற "ஜோதிடதீபம்" அறிவுறுத்துகிறது.

 வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் கேது பகவான் துலாம் லக்கின அன்பர்களுக்கு இனிவரும் 18 மாதங்கள் தான் சஞ்சரிக்கும் 3ம் பாவக வழியில் இருந்து மிதமிஞ்சிய சுபயோகங்களை வாரி வழங்குவார் என்பதில்  சந்தேகம் இல்லை, எடுக்கும் காரியங்கள் யாவும் வெற்றி மேல் வெற்றி தரும், வியாபார துறையில் உள்ள அன்பர்களுக்கு இது ஒரு யோக காலமாக கருதலாம், தெய்வீக சிந்தனை மேலோங்கும், கமிஷன் அல்லது தரகு வழியில் ஜீவனம் மேற்கொள்ளும் அன்பர்களுக்கு திடீர் யோக வாழ்க்கை அமையும், எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும், லட்சியம் மற்றும் அபிலாசைகள் அனைத்தும் கைகூடி வரும் சுபயோக நேரமிது, புதிய சிந்தனைகள் அறிவார்ந்த செயல்பாடுகள் அனைத்தும் தங்களுக்கு வெகுவாக கைகொடுக்கும், சகோதர வழி ஆதரவு, உறவுகள் வழியில் இருந்து வரும் உதவிகள் என ஒவ்வொரு நாளும் தங்களுக்கு வெகு சிறப்பான நன்மைகளையும், முன்னேற்றங்களையும் பரிபூர்ணமாக வாரி வழங்கும், இதுவரை இல்லாத அதிர்ஷ்ட வாழ்க்கையை அனுபவிக்கும் யோகம் உண்டாகும், கல்வி துறையில் அரசு பணியில் உள்ள அன்பர்களுக்கு எதிர்பாராத நன்மைகளும் முன்னேற்றங்களும் கிடைக்க பெறுவார்கள், வியாபாரிகளுக்கு லாபம் பன்மடங்கு கூடி வரும், புதிய தொழில் செய்வோருக்கு இனிவரும் காலம் மிகுந்த சிறப்புக்களையும், அதிர்ஷ்டம் நிறைந்த நல்ல வாய்ப்புக்களையும் வாரி வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்பதனால் முயற்சித்து சகல சௌபாக்கியங்களையும் பரிபூர்ணமாக பெறுங்கள்.

தகவல் தொழில் நுட்பம், உயர் கல்வி, பட்டய படிப்பு என துலா லக்கின  அன்பர்களுக்கு கேது பகவானின் சஞ்சாரம் வெகுவான சிறப்புகளை வாரி வழங்கும், புதிய யுக்தியை கையாண்டு குறுகிய காலத்தில் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றங்களை பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும், சுய அறிவு வெகுவாக பிரகாசிக்கும், பல தொழில் செய்யும் யோகம் உண்டாகும், நல்லவர்கள் சேர்க்கை தங்களின் வாழ்க்கையில் வெகுவான நன்மைகளை வாரி வழங்கும், உயர் ரக தொழில் நுட்பம் சார்ந்த உபகரணங்கள் மூலம் அதீத லாபம் உண்டாகும், வெளிநாடுகளில் இருந்துவரும்  பொருட்கள் மூலம் நல்ல லாபம் உண்டாகும், ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்யும் அன்பர்களுக்கு மிதம் மிஞ்சிய லாபம் கிட்டும், சுய உழைப்பிற்க்கான பாராட்டுதல்கள் ஊக்குவிப்பு தங்களுக்கு பரிபூர்ணமாக கிடைக்கும், எழுத்து சார்ந்த துறை பத்திரிக்கை துறையில் உள்ள அன்பர்களுக்கு சீரிய முன்னேற்றம் உண்டாகும், கேது பகவானின் வீரிய ஸ்தான சஞ்சாரம் துலா லக்கின அன்பர்களுக்கு சாதிக்க இயலாதது எதுவும் இந்த உலகில் இல்லை என்பதை உறுதி செய்து வெற்றியாளனாக பரிணமிக்க செய்யும் அன்பர்களே, வாழ்த்துக்கள்.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 9,3ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக, அவயோக பலாபலன்கள் துலா லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும், நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 9,3ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் மேற்கண்ட சாயா கிரகங்களின் சஞ்சார நிலையின் வழியில் இருந்து துலா லக்கின அன்பர்களுக்கு யாதொரு நன்மை தீமையையும் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்க...

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

சனி, 23 பிப்ரவரி, 2019

தொழில், திருமண யோகம் சுய ஜாதக ரீதியான ஆய்வு !


சுய ஜாதக பலாபலன்கள்

" அவனின்றி ஓர் அணுவும் அசையாது " என்பதற்கிணங்க சுய ஜாதக வலிமை இன்றி யாதொரு நிகழ்வுகளும் நிகழ வாய்ப்பில்லை என்பதே உண்மை நிலை, பொதுவாக சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையை அடிப்படையாக கொண்டே யாவருக்கும் நன்மை தீமைகளோ, யோக அவயோகங்களோ நடைமுறைக்கு வருகின்றது, கீழ்கண்ட உதாரண ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலை என்ன ? அது தரும் யோக அவயோகம் என்ன ? நவ கிரகங்கள் தனது திசாபுத்திகளில் தரும் பலாபலன்கள் என்ன என்பதனை இன்றை பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : மகரம்
ராசி : மீனம்
நட்ஷத்திரம் : ரேவதி 4ம் பாதம்

ஜாதகத்தில் வலிமை பெற்றுள்ள பாவக தொடர்புகள் :

1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சுய ஜாதகத்தில் மிகவும் சிறப்பான அம்சமாகும், 1ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் வெற்றி புகழ், கீர்த்தி, சுய முன்னேற்றம், தெளிந்த நல்லறிவு, எதிர்ப்புக்களை களைந்து நலம் பெரும் தன்மை, முற்போக்கு சிந்தனை, நல்ல நண்பர்கள், பொதுமக்கள் ஆதரவு, சிறந்த கூட்டாளிகள், எதிர்பாராத முன்னேற்றம், வெளியூர் அல்லது வெளிநாடுகளில் இருந்து வரும் யோக வாழ்க்கை, எதிர்பாலின சேர்க்கை வழியில் ஜாதகர் பெரும் முன்னேற்றம், தெய்வீக சிந்தனை, சமயோசித அறிவு திறன், உடல்நல குறைவில் இருந்து விரைவாக குணம் பெரும் யோகம், யோக உடற்பயிற்சியில் ஆர்வம், புதிய சிந்தனை, பொது வாழ்க்கையில் வெற்றி, அரசியல் ஆதாயம், நட்பு வழியில் இருந்து ஜாதகர் பெரும் நன்மைகள் மற்றும் முன்னேற்றம் வெகு சிறப்பாக அமையும், பொதுமக்கள் சார்ந்த தொழில், வியாபாரம் அல்லது சேவைகள் மூலம் ஜாதகருக்கு அபரிவிதமான நன்மைகள் வந்து சேரும், வியாபார விருத்தி சிறப்பாக அமையும், ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் நல்ல ஞானம் உண்டாகும் என்பது கவனிக்க தக்க சிறப்பு அம்சமாகும்.

7ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நல்ல நண்பர்கள் சேர்க்கை, சிறந்த கூட்டாளிகள், சிறப்பான வெளிவட்டார பழக்க வழக்கங்கள், வியாபார முன்னேற்றம், சிறந்த தொழில் ஞானம், பல தொழில் புரியும் யோகம், எதிர்ப்புகள் அனைத்தும் ஜாதகருக்கு சாதகமாக மாறும் தன்மை, எண்ணத்தின் வழியில் சிறப்பான யோக வாழ்க்கையை பெரும் நிலை, தெய்வீக சிந்தனை, ஆன்மீகத்தில் ஈடுபாடு, வண்டி வாகன யோகம், கூட்டு தொழில் வழியிலான முன்னேற்றம், வெளிநாடு யோகம், பொதுமக்கள் வழியில் இருந்து வரும் ஆதரவு, அந்நியர் மூலம் ஆதாயம், வலிமை மிக்க கூட்டாளி, யோகமிக்க வாழ்க்கை துணை, வியாபார ரீதியான அபரிவித வளர்ச்சி, பொது வாழ்க்கையில் வெற்றி, அரசியல் ஆதாயம், எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் தன்மை, கூட்டு முயற்சியின் மூலம் அபரிவித லாபம் என வாழ்க்கையில் சகல சௌபாக்கியமும் வந்து சேரும்.

2,6,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவக தொடர்பை பெறுவது ஜாதகருக்கு 2ம் பாவக வழியில் இருந்து ஏற்றுமதி இறக்குமதி தொழில் வழியிலான முன்னேற்றம், எழுத்து வழியில் லாபம், பத்திரிகை துறையில் முன்னேற்றம், இனிமையான பேச்சு திறன், பயணங்கள் வழியிலான லாபம், வெளிநாட்டார் மூலம் முன்னேற்றம், ஆராய்ச்சி மனப்பான்மை, ஆன்மீகத்தில் தெளிவு, அரசியல் ஆளுமை, சாஸ்த்திரம், மருத்துவம் மற்றும் ஜோதிடத்தில் தேர்ச்சி, செயற்கரிய காரியங்களை சரியான திட்டமிடுதல்களுடன் செய்யும் வல்லமை, புதிய வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றிகொள்ளும் தன்மை, வாக்கு வன்மை, எதிலும் தெளிவு என்ற வகையில் நன்மைகளை தரும்.

6ம் பாவக வழியில் இருந்து மருத்துவ துறையில் நல்ல ஞானம், பயணம் மூலம் லாபம் மற்றும் அதிர்ஷ்டம், வருமுன் உணரும் சக்தி, முன்னோர் செய்த புண்ணியத்தின் பலனை சுவீகரிக்கும் தன்மை, எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம், கடன் சார்ந்த இன்னல்களில் இருந்து விரைவாக வெளியேறும் தன்மை, மற்றவர் பணம் கையிருப்பு, போட்டி பந்தயங்களில் வெற்றி, வழக்குகளில் வெற்றி, எதிர்ப்புகளை சமாளிக்கும் வல்லமை என சிறப்பான நன்மைகளை சத்ரு ஸ்தான வழியில் இருந்து வாரி வழங்கும்.

9ம் பாவக வழியில் இருந்து நல்ல கல்வி ஞானம், சிறந்த அறிவாளி, ஆய்வு கல்வியில் தேர்ச்சி, பயணங்கள் மூலம் நல்ல லாபம், சாஸ்திரத்தில் தேர்ச்சி, எதிர்பாராத முன்னேற்றம், பெரிய மனிதர்கள் ஆதரவு, பல தொழில் வழியிலான வருமான வாய்ப்பு, மண் தத்துவம் சார்ந்த விஷயங்களில் நல்ல ஞானம், தெய்வீக ஞானம், சூழ்ந்தநிலை மற்றும் இடமாற்றத்தில் விருப்பம், அனைவரிடமும் நற்ப்பெயர் பெரும் தன்மை, அனைவரையும் அனுசரித்து செல்லும் மனப்பக்குவம், எந்த சூழ்நிலையிலும் சிறப்பாக வாழும் தன்மையை தரும், பாதிப்புகள் தானாக விலகும்.

சுய ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவக தொடர்புகள் :

3,5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவக தொடர்பை பெறுவது ஜாதகருக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை தரும், குறிப்பாக 3ம் பாவக வழியில் இருந்து முயற்சிக்கும் காரியங்களில் தொய்வு, சகோதர வழி ஆதரவு இன்மை, செயல்பாடுகளில் வீரியமின்மை, தோல்வியால் துவண்டு போகும் தன்மை, சரியான விஷயங்களை கிரகிக்க இயலாத நிலை, தன்னம்பிக்கை பாதிக்கும், சுய முன்னேற்றம் தடை படும், உறவுகள் வழியிலான இன்னல்கள், எதையும் விரைவாக பெற இயலாமல் தடுமாறும் நிலையை உருவாக்கும்.

5ம் பாவக வழியில் இருந்து பூர்வீகத்தில் ஜீவனம் மேற்கொள்வதால் வரும் தொந்தரவுகள், சமயோசித அறிவு திறனில் பாதிப்பு, நுண்ணறிவு தன்மையில் குறைபாடு, ஆழ்ந்து சிந்திக்கும் வல்லமை அற்ற நிலை, குல தெய்வ சாபம், முன்னேற்ற தடைகள், எதிர்ப்புகளை கண்டு அஞ்சும் நிலை, சரியான முடிவுகளை எடுக்க இயலாமல் தடுமாறும் தன்மை, சரியான வழிகாட்டுதல் இல்லாமல் இன்னலுறும் நிலை, சரியான முடிவுகளை மேற்கொள்ள இயலாமல் போராட்ட வாழ்க்கையை சுவீகரிக்கும் தன்மை என ஜாதகருக்கு அதீத துன்பங்களை தருவதுடன், முதலில் பெண் வாரிசை தரும்.

11ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டத்தின் தன்மை வெகுவாக குறையும், சுய உழைப்பு மட்டுமே ஜாதகருக்கான வாழ்க்கையினை உறுதி செய்யும், முற்போக்கு சிந்தனை குறைந்து பழமை வாதங்களில் ஆர்வம் அதிகரிக்கும், மனம் வெகுவாக பாதிக்கும், குழப்பமும் சந்தேக எண்ணங்களும் ஜாதகரின் வாழ்க்கையில் அதீத இன்னல்களை தரும், சில நேரங்களில் ஜாதகர் மேற்கொள்ளும் முடிவுகள் யாவும் பேரிழப்பை தரக்கூடும் என்பதை கருத்தில் நலம் பெறுவது அவசியமாகிறது.

8,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவக தொடர்பை பெறுவது, 8ம் பாவக வழியில் இருந்து விபத்து, மருத்துவ செலவினங்கள்,  எதிர்பாராத மருத்துவ செலவுகள், அனைத்திலும் ஏமாற்றம், மனக்குழப்பம்,தலைவலி சார்ந்த இன்னல்கள், உடல் நல குறைபாடுகள், அதீத மனப்போராட்டம், அனைவராலும் ஏமாற்றம், அறுவை சிகிச்சை, வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் பொருளாதார இழப்புகள், முன்னேற்ற தடை என்ற வகையில்  இன்னல்களை தரும்.

10ம் பாவக வழியில் இருந்து வெளியூர் அல்லது வெளிநாட்டில் வேலை அல்லது தொழில் அமையும் தன்மை, போதிய வருமானம் இன்மை, அடிக்கடி இடமாற்றம் அல்லது தொழில் மாற்றம், வரவைவிட செலவு அதிகம், முரண்பட்ட கருத்துக்கள் மூலம் தொழில் அமைப்பில் சிக்கல்கள், கவுரவ குறை ஏற்படும் நிலை, நிலையற்ற தொழில், செய்யும் தொழிலில் அதிக போராட்டங்களை சந்திக்கும் நிலை, தனித்து செயல்படும் காரியங்களில் தொடர்ந்து இன்னல்களை சந்திக்கும் நிலை என்ற வகையில் துன்பங்களை தரக்கூடும்.

12ம் பாவக வழியில் இருந்து நிறைய செலவினங்கள், பங்கு சந்தை லாட்டரி தொழில் வழியில் இழப்புகள், சூது மூலம் பெரும்நஷ்டம், திருப்தி இல்லா வாழ்க்கை, அனைவராலும் நஷ்டம், விபத்து அதீத துன்பங்களை சந்திக்கும் நிலை, போதிய விழிப்புணர்வு அற்ற தன்மை, எதிர்ப்புகள் வழியில் இருந்து வரும் தொல்லைகள் என்ற வகையில் இன்னல்களை தரும்.

நடைபெறும் சூரியன் திசை தரும் பலன்கள் : ( 05/12/2018 முதல் 04/12/2024 வரை)

ஜாதகருக்கு நடைபெறும் சூரியன் திசை 2,6,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவக தொடர்பை பெற்று வலிமையான யோக பலனை தருவது வரவேற்கத்தக்கது, இது ஜாதகருக்கு குடும்ப வாழ்க்கையில் சிறப்பு, கைநிறைவான வருமானம், இனிமையான இல்லற வாழ்க்கை, வாக்கு வன்மை மூலம் சகல சௌபாக்கியம் என்ற வகையில் யோக வாழ்க்கையை தரும், மேலும் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம், சத்ரு வழியில் ஆதாயம், மருத்துவ துறையில் சீரிய முன்னேற்றம், தெய்வீக அனுக்கிரகம், ஆன்மீக பெரியோர்கள் வழியில் வாழ்க்கையில் வெகு சிறப்பு, தனது சுய அறிவு திறன் கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெரும் தன்மை என்ற வகையில் சுபயோகங்களை  வாரி வழங்கும்.

அடுத்து வரும் சந்திரன் திசையும் ஜாதகருக்கு மேற்கண்ட 2,6,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவக தொடர்பை பெற்று வலிமையான யோக பலனை தருவது வரவேற்கத்தக்கது, எனவே எதிர் வரும் சந்திரன் திசையும் ஜாதகருக்கு மிகுந்த சுபயோக பலாபலன்களை வாரி வழங்கும் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை வாழ்த்துக்கள்.

குறிப்பு :

சுய ஜாதக பலன் காண மூன்று விதி முறைகளை கையாள்வது அவசியமாகிறது, 1) சுய ஜாதகத்தில் 12 பாவகங்களின் வலிமை நிலையை பற்றி தெளிவாக உணர்வது, 2) நடைபெறும் திசைபுத்திகள் 12 பாவகங்களில் எந்த பாவக தொடர்பை பெற்று பலனை தருகிறது என்பதை பற்றி தெளிவாக உணர்வது, 3) திசை புத்திகள் ஏற்று நடத்தும் பாவகங்களுக்கு கோட்சார கிரகங்கள் தரும் வலிமை வலிமை இன்மையை பற்றிய தெளிவு பெறுவது ஆகியவை சுய ஜாதக பலாபலன் துல்லியமாக கண்டுணர வாய்ப்பை வழங்கும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வெள்ளி, 8 பிப்ரவரி, 2019

ராகு கேது பெயர்ச்சி தரும் யோக வாழ்க்கை : சிம்ம லக்கினம் ( 2019-2020 )


 "அடிச்சது ஜாக்பாட்" சிம்ம லக்கின அன்பர்களுக்கு என்று சொல்லலாம் -  நவகிரகங்களில் மிகவும் வலிமை பெற்றதும், சாயாகிரகங்கள் என்று போற்றப்படுவதுமான ராகு கேது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமான மிதுன ராசியிலும், பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியிலும் இனி வரும் 18 மாதங்களில் சஞ்சாரம் செய்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு தனது சஞ்சார நிலையில்  இருந்து வழங்கும் யோக அவயோக பலாபலன்கள் பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!

லக்கினம் : சிம்மம்

கலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் வீடு மற்றும் பூர்வபுண்ணிய ஸ்தானமாக விளங்கும் சிம்ம லக்கின அன்பர்களுக்கு லாப ஸ்தானமான 11ம் வீட்டில் ராகு பகவானும், பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் வீட்டில் கேது பகவானும் சஞ்சாரம் செய்கின்றனர்,  11ல் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான் சிம்ம லக்கின அன்பர்களுக்கு அதீத லாபங்களை அதிர்ஷ்டங்களையும் பரிபூர்ணமாக வாரி வழங்கும் நிலையில் தனது சஞ்சார நிலையை துவங்குவது வரவேற்கத்தக்கது, இதுவரை வாழ்க்கையில் போராடிக்கொண்டு இருந்த சிம்ம லக்கின அன்பர்களுக்கு அதிர்ஷ்டத்தின் தாக்கம் சற்று அதிக அளவில் யோக வாழ்க்கையை வாரி வழங்கும், எடுக்கும் முயற்சிகள் யாவும் நல்ல லாபங்களுடன் கூடிய வெற்றியை தரும், முற்போக்கு சிந்தனையும் தன்னம்பிக்கையும் சிம்ம லக்கின அன்பர்களுக்கு நல்லதோர் முன்னேற்றத்தை வழங்கும், தெய்வீக அனுகிரகம் எதிர்ப்புகளை களைந்து சிறப்பான எதிர்காலத்தை வாரி வழங்கும், வியாபாரம் சிறக்கும், தொழில் வழியிலான புதிய நடவடிக்கைகள் எதிர்பாராத நன்மைகளை தரும், புதிய பொறுப்புகள் வழியிலான அதிர்ஷ்டங்கள் சிம்ம லக்கின அன்பர்களுக்கு தெளிவான வாழ்க்கை பாதையை அமைத்து தரும், பொது வாழ்க்கையில் உள்ளோருக்கு நற்பெயரும் எதிர்ப்புகளற்ற வெற்றியும் கிட்டும், தனது வீரியமிக்க செயல்பாடுகள் மூலம் வாழ்க்கையில் தன்னிறைவான பொருளாதார நன்மைகளை சுவீகரிக்கும் யோகம் உடையவர்களாக சிம்ம லக்கின அன்பர்கள் இனிவரும் காலங்களில் பிரகாசிப்பார்கள், தகவல் தொழில் நுட்பம் சார்ந்த துறையில் உள்ள அன்பர்களுக்கு இனிவரும் காலங்களில் வியக்கத்தக்க நல்ல மாற்றங்களை சந்திப்பார்கள், வருமானம் அதிர்ஷ்டம் போன்றவை இவர்களது வாழ்க்கையில் புதுவித உத்வேகத்தை வாரி வழங்கும்.

கமிஷன் வியாபாரம், தரகு, காண்ட்ராக்ட் போன்ற துறையில் உள்ள அன்பர்களுக்கு இனிவரும் காலம் நல்ல மாற்றங்களை வாரி வழங்கும், நிலுவையில் உள்ள பணம் சார்ந்த விஷயங்களில் நல்ல தீர்வும், எதிர்ப்புகளற்ற வியாபர வெற்றியும் சிம்ம லக்கின அன்பர்களுக்கு அபரிவித முன்னேற்றங்களை வாரி வழங்கும், புதிய தொழில் முயற்சிகள் நல்ல வெற்றி வாய்ப்பை வாரி வழங்கும், குறிப்பாக மனதில் உள்ள திட்டங்கள் யாவும் நடைமுறைக்கு வரும் காலம் இதுவென்பதால் சிம்ம லக்கின அன்பர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு நலம் பெறுவது அவசியமாகிறது, முயற்சிக்கும் காரியங்களில் வெற்றியும் அதிர்ஷ்டமும் பரிபூர்ணமாக கிடைக்கும் என்பதால் தங்களின் முயற்சியில் யாதொரு தொய்வும் இன்றி செயல்படுவது அவசியமாகிறது, சரியான புரிதல், சிறந்த தகவல் தொடர்பு வழியில் இருந்து நல்ல வெற்றிகளை தாங்கள் நிச்சயம் உறுதியாக எதிர்பார்க்கலாம், வியாபாரம் மட்டுமே நோக்கமாக உள்ள சிம்ம லக்கின அன்பர்களுக்கு இனிவரும் 18 மாதங்கள் நல்லொதொரு வாய்ப்புகளை வாரி வழங்கும் என்பதை மனதில் கொண்டு நலம் பெறுங்கள், சாயா கிரகமான ராகு பகவான் சிம்ம லக்கின அன்பர்களுக்கு லாப ஸ்தான சஞ்சார நிலையில் நின்று 100% விகித நன்மைகளை மட்டுமே  தருவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், கலைத்துறையில் தேடுதல் உள்ள அன்பர்களுக்கு இனிவரும் காலங்களில் வெற்றிமீது வெற்றி வந்து சேரும் என்பதுடன் பிரபல்ய யோகம் உண்டாகும், அதிர்ஷ்டத்தின் வழியில் தன்னம்பிக்கையுடன் நிலைத்து நின்று யோக வாழ்க்கையை பெறுவதற்கு தயார் நிலையில் இருக்க "ஜோதிடதீபம்" சிம்ம லக்கின அன்பர்களுக்கு தனது அறிவுறுத்தல்களை வழங்க கடமை பட்டுள்ளது.

பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் கேது பகவான் சிம்ம லக்கின அன்பர்களுக்கு தனது சஞ்சார நிலையில் இருந்து இனிவரும் 18 மாதங்கள் 100% விகித நன்மைகளை மட்டுமே வழங்க இருப்பது வரவேற்கத்தக்கது, சிம்ம லக்கின அன்பர்களின் சமயோசித புத்திசாலித்தனம் இனி மேலோங்கி நிற்கும், தங்களுக்கு வரும் யாதொரு பிரச்சனைகளையும் மிக எளிதாக சமாளிக்கும் வல்லமை உண்டாகும், தேடிவந்து உதவி செய்வார்கள், பெரிய மனிதர்களின் ஆசிர்வாதம் தங்களின் வாழ்க்கையில் எதிர்பாராத செல்வாக்கை பெற்று தரும், நல்ல ஆன்மீக பெரியோர்களின் வழிகாட்டுதல் தங்களின் வாழ்க்கையில் சிறப்பானதொரு வெற்றி பாதையை அமைத்து தரும், பொறுப்பு மிக்க உயர்பதவிகளை அலங்கரிக்கும் யோகம் உண்டாகும், கற்ற கல்வி வழியிலான முன்னேற்றங்கள் மிகவும் அபரிவிதமானதாக அமையும், எதிர்ப்புகள் அற்ற வாழ்க்கையில் நன்மைகளையும் யோகங்களையும் தங்களுக்கு சொந்தமாக்கி கொள்ளும் வாய்ப்புகளை இறை அருள் வாரி வழங்கும், கலை துறையில் உள்ள அன்பர்களுக்கு இனிவரும் காலம் யோகம் மிக்கதாக அமையும் என்பது உறுதியான விஷயமாக படுகிறது, தெய்வீக காரியங்கள் ஆற்றி அதன் வழியில் சுபயோகங்களையும், வெற்றிகளையும் சுவீகரிக்கும் வாய்ப்பை தரும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவதுடன், சமூக அந்தஸ்த்து வெகுவாக உயரும், நல்ல நண்பர்கள் சேர்க்கை அல்லது வயதில் அதிகமுள்ளோர் வழிகாட்டுதல்கள் தங்களின் வாழ்க்கையில் சிறந்த திருப்பு முனையை ஏற்ற்படுத்தும், ஆன்மீக திருத்தல வழிபாடுகள், நீண்டநாள் கனவான ஆன்மீக சுற்றுலா சார்ந்த விஷயங்களில் தடை இருப்பின் அது நீங்கி எண்ணம் போல் ஆசைகள் நிறைவேறும், குலதெய்வத்தின் ஆசியின் மூலம் வாழ்க்கையில் நினைத்ததை சாதிக்கும் யோகம் உண்டாகும், இதுவரை புத்திர பாக்கியம் அற்ற அன்பர்களுக்கு யோகம் மிக்க வாரிசுகள் அமையும், குழந்தைகள் வழியிலான யோக வாழ்க்கைக்கு நல்லதோர் அடித்தளத்தை அமைத்து தரும் என்பது கவனிக்கத்தக்கது.

ஜோதிடம், சாஸ்திர ஞானம், மந்திர உபதேசம், இறைவழிபாடு மூலம் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் சுவீகரிக்கும் யோகம் சிம்ம லக்கின அன்பர்களுக்கு இனிவரும் காலங்களில் இயற்கையாக அமையும், தெய்வீக தரிசனமும், ஆன்மீக வெற்றியும் சிம்ம லக்கின அன்பர்களுக்கு எதிர்பாராத முன்னேற்றங்களை வாரி வழங்கும், சமூகத்தில் உள்ள பெரிய மனிதர்களின் ஆதரவு மூலம் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் சுவீகரிக்கும் யோகம் உண்டாகும், ஆராய்ச்சி கல்வியில் வெற்றியும் இதுவரை எதிர்பார்த்த பதவியும் தங்களை தேடிவரும், புதிய கண்டுபிடிப்புகள் தங்களின் எதிர்கால  வாழ்க்கைக்கு தேவையான வசதி வாய்ப்புகளை பரிபூர்ணமாக வாரி வழங்கும், நிம்மதி மிக்க வாழ்க்கையில் பெருமை மிகு காரியங்களை செய்து புகழ் பெரும் யோகம் உண்டு, தன்னிறைவான பொருளாதர வசதிகளை தனது அறிவுத்திறன் கொண்டு சுவீகரிக்கும் யோகம் உண்டாகும், பொது வாழ்க்கையில் பெயரும் புகழும் தேடிவரும், ஆய கலைகள் 64ல் ஆர்வம் உள்ள கலையில் தேர்ச்சியும் வெற்றியும் 100% விகிதம் உண்டாகும், முற்போக்கு சிந்தனை சமயோசித அறிவு திறன், மேம்பட்ட அறிவாற்றல் மூலம் வாழ்க்கையில் சிறப்பான நன்மைகளை சிம்ம லக்கின அன்பர்கள் பரிபூர்ணமாக பெறுவார்கள் என்பது கவனிக்கத்தக்கது, கேது பகவானின் தனுசு ராசி சஞ்சார நிலை சிம்ம லக்கின அன்பர்களுக்கு, புதுவித யோக வாழ்க்கையை வாரி வழங்கும் என்பது வரவேற்க தக்க சிறப்பு அம்சமாகும், குறிப்பாக கலை துறையில் உள்ள அன்பர்கள் அனைவருக்கும் இனிவரும் காலம் மிகப்பெரிய யோக காலமாக அமையும், சாஸ்திர சார்ந்த ஆய்வுகளில் வியக்கத்தக்க உண்மைகள் வெளிவரும், கல்வி கேள்விகளில் சிறப்பான முன்னேற்றமும், ஞானம் பெற்றவர்கள் போற்றுதலுக்கு உரியவர்களாக மக்களிடம் பிரகாசிப்பார்கள், சிம்ம லக்கின அன்பர்கள் அனைவரும் எதிர்பார்த்த விஷயங்களில் வெற்றியும், லாபமும் பெறுவார்கள், சிம்ம லக்கின அன்பர்களின் அறிவு திறன் மிக பெரிய அளவில் பிரகாசிக்கும், பொதுமக்களின் போற்றுதலுக்கு உரியவர்களாக நிலைத்து நிற்கும் வாய்ப்பை வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்கது, வாழ்த்துக்கள் சிம்ம லக்கின அன்பர்களே !

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 11,5ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக, அவயோக பலாபலன்கள் சிம்ம  லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும், நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 12,6ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் மேற்கண்ட சாயா கிரகங்களின் சஞ்சார நிலையின் வழியில் இருந்து சிம்ம லக்கின அன்பர்களுக்கு யாதொரு நன்மை தீமையையும் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்க...

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

திங்கள், 14 ஜனவரி, 2019

ராகு கேது பெயர்ச்சி தரும் யோக வாழ்க்கை : கடக லக்கினம் ( 2019-2020 )


  நவகிரகங்களில் மிகவும் வலிமை பெற்றதும், சாயாகிரகங்கள் என்று போற்றப்படுவதுமான ராகு கேது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமான மிதுன ராசியிலும், பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியிலும் இனி வரும் 18 மாதங்களில் சஞ்சாரம் செய்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு தனது சஞ்சார நிலையில்  இருந்து வழங்கும் யோக அவயோக பலாபலன்கள் பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!

லக்கினம் : கடகம்

 கலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 4ம் வீடு மற்றும் சுக ஸ்தானமாக விளங்கும் கடக லக்கின அன்பர்களுக்கு விரைய ஸ்தானமான 12ம் வீட்டில் ராகு பகவானும், சத்ரு ஸ்தானமான 6ம் வீட்டில் கேது பகவானும் சஞ்சாரம் செய்கின்றனர்,  12ல் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான் கடக லக்கின அன்பர்களுக்கு புதன் சூரியனுடன் ( கேந்திர அதிபதி ) சேர்ந்து சஞ்சாரம் செய்யும் நிலையில் சிறந்த நன்மைகளை வாரி வழங்குவார், நிம்மதியான வாழ்க்கை, முதலீடுகளில் இருந்து வரும் லாபம், வெளியூர் வெளிநாடு சார்ந்த அமைப்பில் இருந்து வரும் நன்மைகள், ஆன்மீக பெரியோர்களின் ஆசிர்வாதம், நல்ல அயன சயன சுகம், திருப்தியான மனநிலை, நினைக்கும் எண்ணங்கள் பலிதம் பெரும் யோகம், வியாபார விருத்தி, தரகு தொழில் வழியில் இருந்து வரும் மிகுந்த லாபம், மிதம் மிஞ்சிய அதிர்ஷ்டம், முதலீடு செய்து அதன் வழியில் பெரும் வருமானம், தெய்வீக அனுபவம், ஆன்மீகத்தில் பெரும் வெற்றி, நல்ல சிந்தனைகள், வாழ்க்கை துணையுடனான அன்பு மற்றும் ஆதரவு, தாம்பத்திய வாழ்க்கையில் சந்தோசம், எண்ணத்தின் வலிமை மூலம் வாழ்க்கையில் வெற்றி பெரும் தன்மை, பொருளாதரத்தில் எதிர்பாராத வளர்ச்சி, திடீர் அதிர்ஷ்டம் மூலம் யோக வாழ்க்கை மற்றும் தன்னிறைவான பண வசதி வாய்ப்புகள் என மிகசிறந்த நன்மைகளை தரும், அறிவில் தெளிவும் சிந்தனை திறனில் மாற்றமும் தங்களது வாழ்க்கையில் புதிய உத்வேகத்தை தரும், எதிர்ப்புகள் அனைத்தையும் தங்களது முயற்சியால் மிக எளிதாக கடந்து சென்று வெற்றி வாகை சூடும் வாய்ப்பை நல்கும்.

 அதே சமயம் 12ல் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான் கடக லக்கின அன்பர்களுக்கு புதன் சூரியனுடன் ( கோண அதிபதி ) சேராமல் சஞ்சாரம் செய்யும் நிலையில் மிகுந்த துன்பத்தை வாரி வழங்குவார், குறிப்பாக தீய பழக்க வழக்கங்களில் அதீத ஈடுபாடு, லாகிரி வஸ்துக்களை பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் தொந்தரவுகள், மனம் சார்ந்த நோயில் சிக்குண்டு இன்னலுறும் தன்மை, குடி நோயாளியாக மாறும் சூழ்நிலை, மற்றவர்களை நம்பி மோசம் போகும் தன்மை, செய்த முதலீடுகள் பேரிழப்பை சந்திக்கும் சூழ்நிலை, திருப்தி அற்ற வாழ்க்கை முறை, எதிர்ப்புகளை அதிக அளவில் சந்திக்கும் சூழ்நிலை, வாழ்க்கை துணையுடனான மனப்போராட்டம், எதையும் துணிந்து செய்யும் வல்லமை இன்றி தடுமாறும் தன்மை, மற்றவர்களால் தவறாக புரிந்துகொண்டு குழப்பத்தை ஏற்படுத்துதல், சந்தேகம் நிலைத்தன்மை இல்லாமல் போராடும் போக்கு, தவறான வார்த்தை பிரயோகம், எதிர்பாராமல் செய்யும் தவறுகளால் பாதிப்பை சந்தித்தல், முன் யோசனை இன்றி செய்யும் காரியங்களால் ஏற்படும் கடுமையான பாதிப்பு வம்பு வழக்குகள் வழியில் இருந்து வரும் துன்பங்கள், உறுதியான மனநிலை இல்லாமல் போராட்ட வாழ்க்கையை எதிர்கொள்ளும் தன்மை, சிந்தனை சக்தி குறையும் நிலை, உடல் நிலையில் கடுமையான பாதிப்பு, வீண் மனபயம், கட்டுக்கடங்காத கற்பனை மூலம் வாழ்க்கையை சிதைத்து கொள்ளும் நிலை, எதிர்ப்புகளை அதிக அளவில் எதிர்கொண்டு தோல்வியை சந்திக்கும் நிலை, வீரியமிக்க செயல்பாடுகளில் ஏற்படும் பாதிப்பு என்ற வகையில் மிகுந்த துன்பத்தை  தரும்.

 6ல் சஞ்சாரம் செய்யும் கேது பகவான் கடக லக்கின அன்பர்களுக்கு சற்று சிரமத்தை தரக்கூடும், கடன் சார்ந்த விஷயங்கள் கடுமையான நெருக்கடிகளை தரும், நண்பர்கள் எதிரியாக மாறக்கூடும், தனம் சார்ந்த விஷயங்களில் பற்றாக்குறை ஏற்பட்ட வாய்ப்பு உண்டு, முன்னேற்ற தடைகளும், தோல்விகளும் சற்று அதிக அளவில் தங்களுக்கு பாதிப்பை தரும் என்பதுடன் எதிரிகளின் தொல்லை அதிகமாக வாய்ப்பு உண்டு, மனநிம்மதி வெகுவாக பாதிக்கும், பெரியமனிதர்களின் கோபத்திற்கும், மேல் அதிகாரிகளின் தண்டனைக்கும் ஆளாகும் சூழ்நிலையை தரும், உடல்  ரீதியானபாதிப்பு தங்களின் வாழ்க்கையில் மிகுந்த தாமதத்தை தரக்கூடும், எதிர்காலம் சார்ந்த திட்டமிடுதல்கள் தங்களுக்கு நெருக்கடியை தரும், பொழுதுபோக்கு விஷயங்கள் வீண் செலவினங்களை ஏற்படுத்தும், தெய்வீக அனுக்கிரகம் பெற கடுமையான போராட்டத்தை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், உயர் கல்வி அல்லது பட்டைய படிப்புகளில் தடை உண்டாகும், உடல் நலனில் அக்கறை செலுத்த வில்லை எனில் வாழ்க்கையில் கடுமையான பின் விளைவுகளை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்படுவீர்கள், குறிப்பாக வயிறு சார்ந்த தொந்தரவுகள் இருப்பின் உடனடி கவனம் எடுத்து நலம் பெறுவது அவசியமாகிறது.

முடிந்த அளவு கடன் வாங்காமல் ஜீவனத்தை மேற்கொள்வது கவுரவத்தை தரும், புது முயற்சிகளை தவிர்ப்பதும், வீட்டில் உள்ள பெரியோர்கள் சொல்லும் வார்த்தைகளை மதித்து நடப்பதும் சகல சௌபாக்கியங்களையும் தரும், எதிர்பாராத உடல் தொந்தரவு ஏற்படும் என்பதால் உடல் நலனில் அக்கறை கொள்வது தங்களது செயல்திறனில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும், தொழில் வழியில் அதிக கடன் பெறாமல் சிறப்பாக நிர்வாகத்தை மேற்கொள்வது சகல நலன்களையும் தரும், உறவுகளுடன் பகைத்துக்கொண்டு இன்னல்களை தேடிக்கொள்ளவேண்டாம், அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் உள்ளோர் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டிய நேரமிது, ஆன்மீக திருத்தலங்களுக்கு அடிக்கடி சென்று வருவதும், சூரிய வழிபாடு மேற்கொள்வதும் தங்களுக்கு கேது பகவானின் சஞ்சார நிலையில் இருந்து வரும் இன்னல்களுக்கு நிவர்த்தியாக அமையும், புதிய தொழில் செய்ய விருப்பம் உள்ளோர் சுய ஜாதக வலிமை உணர்ந்து நலம் பெறுவது அவசியமாகிறது, இல்லையெனில் கடன் சார்ந்த நெருக்கடிகளில் மாட்டிக்கொள்ள நேரும், மேலும் எதிர்ப்புகள் பல வழிகளில் இருந்து வருவதால் தங்களின் செயல்திறன் வெகுவாக குறையும், வீட்டில் உள்ளோர் எவரும் தங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள் என்று சொல்வதற்கு இல்லை, சுய மரியாதையும், சுய கெரவம் பாதிக்கும் என்பதால் அனைவரிடமும் கவனமாக நடந்துகொள்வது அவசியமாகிறது. ராகு கேதுவின் சஞ்சாரம் தங்களுக்கு சாதகமாக இல்லை என்பதே உண்மை நிலை.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 12,6ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக, அவயோக பலாபலன்கள் கடக லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும், நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 12,6ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் மேற்கண்ட சாயா கிரகங்களின் சஞ்சார நிலையின் வழியில் இருந்து கடக லக்கின அன்பர்கள் யாதொரு நன்மை தீமையையும் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்க...

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

சனி, 12 ஜனவரி, 2019

ராகு கேது பெயர்ச்சி தரும் யோக வாழ்க்கை : மிதுன லக்கினம் ( 2019-2020 )



 நவகிரகங்களில் மிகவும் வலிமை பெற்றதும், சாயாகிரகங்கள் என்று போற்றப்படுவதுமான ராகு கேது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமான மிதுன ராசியிலும், பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியிலும் இனி வரும் 18 மாதங்களில் சஞ்சாரம் செய்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு தனது சஞ்சார நிலையில்  இருந்து வழங்கும் யோக அவயோக பலாபலன்கள் பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!

லக்கினம் : மிதுனம் 

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமான மிதுன லக்கின அன்பர்களுக்கு, முறையே ஜென்மலக்கினம் மற்றும் களத்திர ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகங்கள் வழியில், ஜென்மலக்கினத்தில் சஞ்சாரம் செய்யும் ராகு பகவானால் பரிபூர்ண சுபயோக பலாபலன்களை அனுபவிக்கும் யோகத்தை வாரி வழங்குவது கவனிக்கத்தக்கது, ராகுவின் சஞ்சாரம் மிதுன லக்கின அன்பர்களுக்கு முயற்சிக்கும் காரியங்களுக்கு மிகப்பெரிய வெற்றிகளை வாரி வழங்கும், கமிஷன் தரகு காண்ட்ராக்ட் தொழில்களில் உள்ளோர்களுக்கு மிகப்பெரிய வெற்றிகளை நல்குவதுடன், அதீத லாபங்களை வாரி வழங்கும், புதிதாக முயற்சிக்கும் காரியங்கள் யாவும் சிறப்பான வெற்றிகளை பெரும், தன்னம்பிக்கை, சுய மரியாதை அதிகரிக்கும், சகோதர ஸ்தான வழியில் இருந்து மிகுந்த நன்மைகளையும், சிறப்பான ஆதரவுகளை பெரும் நேரமிது, எதிர்ப்புகளை அனைத்தையும் கடந்து வெற்றிநடை போடும் காலமிது என்பதை உணர்ந்து மிதுன லக்கின அன்பர்கள் தனது வாழ்க்கை பாதையை மிக சிறப்பாக அமைத்துக்கொண்டு நலம் பெறுவது அவசியமாகிறது.

இதுவரை வாழ்க்கையில் அதீத போராட்டங்களை சந்தித்துக்கொண்டு இருந்த மிதுன லக்கின அன்பர்களுக்கு எதிர்பாராத வெற்றிகள் வந்து சேரும், தைரியமும் தன்னம்பிக்கையும் புதுவித உத்வேகத்தை வாரி வழங்கும், எதிர்பார்ப்புகளை பூரணமாக நிறைவேற்றும் வல்லமை உண்டாகும், உடல் நலம் மன நலம் மேலோங்கும், சிறந்த அறிவுத்திறன் ஜாதகரின் வாழ்க்கையில் வியக்கத்தக்க நல்மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் சிறப்பாக வாரி வழங்கும், புது வித தொழில் முயற்சிகள் நல்ல வெற்றியை தரும், குறிப்பாக தகவல் தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் உள்ளோருக்கு இனிவரும் 18 மாதங்கள் வெகு சிறப்பாக அமையும், ஊடகம் சார்ந்த துறைகளில் உள்ளோர் மிகப்பெரிய சாதனைகளை சாதிக்கும் வாய்ப்பை தரும், கமிஷன், தரகு, ஏஜென்சி சம்பந்தப்பட்ட தொழில் செய்வோருக்கு சிறப்பான வருமான வாய்ப்புகள் உருவாகும், முயற்சிக்கும் காரியங்கள் யாவும் வெற்றி தரும் என்பதால் ராகு பகவானின் சஞ்சாரம் மிதுன லக்கின அன்பர்களுக்கு சிறப்பான யோக பலன்களையே வாரி வழங்குகிறது என்பது கவனிக்கத்தக்கது, வாய்ப்புகளை தவற விடாமல் வெற்றி பெறுங்கள்.

 களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்தில் சஞ்சரிக்கு கேது பகவான் மிதுன லக்கின அன்பர்களுக்கு வாழ்க்கை துணை, நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் பொதுமக்கள் வழியில் இருந்து கடுமையான நெருக்கடிகளை வாரி வழங்குவார், இல்லற வாழ்க்கையில் உள்ள மிதுன லக்கின அன்பர்களுக்கு இனிவரும் 18 மாதங்கள் " நித்யகண்டம் பூர்ண ஆயுசு " என்ற அளவில் செயல்பாடுகளில் தடை தாமதங்களை வாரி வழங்கும், எதிர்பாலின சேர்க்கையின் மூலம் கடுமையான பாதிப்புகளை சந்திக்கும் சூழ்நிலை உருவாகும் என்பதால் தேவையற்ற சகவாசங்களை விட்டு விட்டு வாழ்க்கையில் நிம்மதியை தேடுவது உகந்த நன்மைகளை தரும், புது உறவுகள் தங்களின் வாழ்க்கையில் கடுமையான பாதிப்பை தரக்கூடும் என்பதால் சிந்தித்து செயல்படுவது நல்லது, சுய ஒழுக்கம் தங்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை தரும்,  நல்லோர் சேர்க்கை வரும் இன்னல்களில் இருந்து காப்பாற்றும், கூட்டு முயற்சி, கூட்டு தொழில் வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க இயலாது, வெளியூர் அல்லது வெளிநாடுகளில் உள்ள அன்பர்கள் தமது வாழ்க்கையில் மிகுந்த நேர்மையை கடைபிடித்து நலம் பெறுவது அவசியமாகிறது, மேலதிகாரிகளிடம் பகைமை பாராட்டாமல் நட்பு உறவை பேணுவது அவசியமாகிறது, வாழ்க்கை துணையின் ஆரோக்கியம் மற்றும் முன்னேற்றம் சார்ந்த விஷயங்களில் அதீத அக்கறை கொள்வது தங்களுக்கான மனஉளைச்சலை குறைக்கும்.

உறவுகளுடன் சுமுகபோக்கை கையாண்டு நலம் பெறுங்கள், பொது வாழ்க்கையில் உள்ளோர் மிகுந்த கவனமுடன் இருப்பது நல்லது இல்லையெனில் வீண் அவப்பெயரும் பாதிப்பும் உண்டாகும், வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும் பொழுது பாதுகாப்பான பயணத்தை மேற்கொண்டு நலம் பெறுங்கள், உடல் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கும் என்பதால் சற்று கவனமுடன் இருப்பது நல்லது, வெளிவட்டார பழக்க வழக்கங்கள் சற்று பாதிப்பை தரக்கூடும் என்பதால் கொடுக்கல் வாங்கலில், தனம் சார்ந்த விஷயங்களில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது, மற்றவருக்காக ஜாமீன் தருவதை தவிர்க்கலாம், பொது வாழ்க்கையில் நேர்மையை கடைபிடிப்பது நன்மையை தரும், கல்வி துறையில் உள்ளோருக்கு சற்று முன்னேற்ற தடையை தரக்கூடும், பதவி உயர்வு தாமதம் ஆகக்கூடும், பெரிய மனிதர்கள் உதவியை பெற மிகுந்த சிரமத்தை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், பித்ருக்களின் ஆசியை பெற அமாவாசை தினங்களில் முறையான தர்ப்பணம் செய்து நலம் பெறுக, எந்த காரணத்தை கொண்டும் தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படும் நிகழ்வுகளில் ஈடுபடாமல் இருப்பது சகல நிலைகளில் இருந்தும் நன்மையை தரும்.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 1,7ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக, அவயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 1,7ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் மேற்கண்ட சாயா கிரகங்களின் சஞ்சார நிலையின் வழியில் இருந்து மிதுன லக்கின அன்பர்கள் யாதொரு நன்மை தீமையையும் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்க...

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

புதன், 25 ஜூலை, 2018

சுய ஜாதகத்தில் சாயா கிரகங்களின் வலிமை, ராகுகேதுவினால் ஜாதகர் பெரும் நன்மை !

 

 சுய ஜாதகத்தில் ராகு கேது வலிமை பெறுவது ஜாதகரின் வாழ்க்கையில் முற்பகுதியில் சிறு சிறு இன்னல்களை தந்த போதிலும் ( வளரும் சூழ்நிலை பாதிப்பு, பெற்றோரை விட்டு பிரிந்து வாழும் சூழ்நிலை, கல்வியில் தடை, தொழில் வழியில் தடை, வாழ்க்கை துணையை தேடுதலில் இன்னல்கள், உடல் மனம் பாதிக்கும் தன்மை என்ற வகையில் ) பிற்பகுதியில் அபரிவிதமான யோக வாழ்க்கையை வழங்குவது வரவேற்கத்தக்க விஷயமாகும், மேலும் நடைபெறும் எதிர்வரும் திசா புத்திகள் ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் பொழுது, சாயா கிரகங்களான ராகு கேது தான் அமர்ந்த பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு மிகுந்த நன்மையான பலாபலன்களையே வழங்குகிறது என்பது கவனிக்கத்தக்கது, பொதுவாக சுய ஜாதகத்தில் சாயா கிரகங்களான ராகுகேது வலிமை பெற்று இருப்பது ஜாதகருக்கு புலனுக்கு அப்பாற்பட்ட அறிவுத்திறனை வாரி வழங்கிவிடுகிறது, ஜாதகர் சுய ஒழுக்கம் மட்டும் கட்டுப்பாட்டை பேணும் தன்மை கொண்டவராக இருப்பின், அவரது வாழ்க்கை மிகவும் சுவாரஷ்யம் மிக்கதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை அன்பர்களே! இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம்.


லக்கினம் : விருச்சிகம்
ராசி : சிம்மம்
நட்ஷத்திரம் : பூரம் 2ம் பாதம்

இந்த விருச்சிக லக்கின ஜாதகருக்கு 5ல் ராகுவும், 11ல் கேதுவும் அமர்ந்திருப்பது மேலோட்டமாக காணும் பொழுது 5ல் அமர்ந்த ராகு புத்திர தோஷத்தை தரும் என்று  கருதக்கூடும், பாவக வழியிலான ஆய்வில் ராகு அமர்ந்த 5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிகுந்த வலிமை பெற்ற அமைப்பாகும், மேலும் ஜாதகரின் 5ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 12ம் ராசியான மீனராசியில் 8பாகைகளையும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் ராசியான மேஷத்தில் 21 பாகைகளையும் கொண்டு இருப்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், ஜாதகரின் மனம் மிக வேகமாக சஞ்சரிக்கு வல்லமை கொண்டது என்பதுடன் ஜாதகரின் மனதில் எண்ணிய காரியங்களை மிக விரைவாக முடிக்கும் வல்லமையை தரும், தனது சுய அறிவு திறன் மற்றும் அதி புத்திசாலித்தனம் இரண்டு ஜாதகருக்கு சரியான நேரத்தில் நல்லொதொரு பலாபலன்களை வாரி வழங்கும், ஜாதகரின் குல தெய்வ ஆசி செயற்கரிய காரியங்களை மிக எளிதாக செய்துமுடிக்கும் வல்லமையை தரும், நல்லோர் சேர்க்கையும், ஆன்மீக பெரியோரின் ஆசியும் ஜாதகரின் வாழ்க்கையில் சிறப்பு மிக்க எதிர்காலத்தை வாரி வழங்கும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் தன்மையை தருவதுடன், குடும்பத்தில் மகிழ்ச்சியை வாரி வழங்கும்.

ராகு பகவானின் அமர்வு என்பது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு அயன சயன ஸ்தானமாகவும், ஜென்ம ஸ்தானமாகவும் அமைவது, ஜாதகரின் நல்லறிவும் ஆராய்ச்சி மனப்பக்குவமும் சிறப்பு மிக்க எதிர்காலத்தை அமைத்து தரும் மிதமிஞ்சிய நல்ல வாய்ப்புகளையே உருவாக்கி தரும், புதிய கண்டுபிடிப்புகள் அல்லது புதிய முயற்சிகளில் நல்லதோர் எதிர்காலத்தை தரும், ஜாதகரின் மனமும் உடலும் மிக சிறப்பாக இயங்கும் என்பது கவனிக்கத்தக்கது, சுய ஜாதகத்தில் சாயா கிரகங்கள் வலிமை அற்றவர்கள்  ஓர்  காரியத்தை செயல்வடிவமாக பார்க்க பகிர்தனா கஷ்டங்களை சந்திக்கும் பொழுது சுய ஜாதகத்தில் சாயா கிரகங்கள் வலிமை பெற்ற அன்பர்கள் மிக எளிதாக ஓர் செயலை செய்து செயல்வடிவம் காண்பார்கள், தன்னம்பிக்கையும், முற்போக்கு சிந்தனையும்  ஜாதகருக்கு வாழ்நாள் முழுவதும் துணை நிற்கும், எதையும் சாதிக்கும் வலிமையை  ஜாதகருக்கு  பரிபூர்ணமாக  நல்கும் என்பது கவனிக்கத்தக்கது.

மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் ராகு 5ல் அமர்ந்து வலிமை பெறுவதும், 5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் சுபயோக வாழ்க்கையை தருவதில் யாதொரு தடைகளையும் வழங்காது என்பது கவனிக்கத்தக்கது, தனது ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் ஜாதகர் 5ம் பாவக வழியில் செலுத்த ஆரம்பிக்கும் பொழுது 5ம் பாவகத்தில் அமர்ந்த ராகு பகவான்  வழங்கும் சுபயோக வாழ்க்கையை யாதொரு தடையும் இன்றி  சுவீகரிக்கலாம்.

சம வீடான 11ல் கேது அமர்வது ஜாதகருக்கான அதிர்ஷ்டத்தை பரிபூர்ணமாக பெரும் வாய்ப்புகளை  வாரி வழங்கும், ஜாதகருக்கான அதிர்ஷ்டம் என்பது ஜாதகருக்கு வரும் எதிர்ப்புகள் வழியில் இருந்தும், சத்ருக்கள் வழியில் இருந்தும் வரக்கூடும் என்பதுடன், உபய மண் தத்துவம் சார்ந்த அமைப்பில் இருந்தும் சர காற்று தத்துவ அமைப்பில் இருந்தும் வந்து சேரும், மேலும் எதிர்பாலினம் நண்பர்கள், கூட்டாளிகள் வெளியூர் அல்லது வெளிநாடு என்ற அமைப்பில் இருந்து ஜாதகருக்கு பரிபூர்ண சுபயோகங்களை நல்கும், கேது பகவானின் வலிமை ஜாதகருக்கு அபரிவித நன்மைகளை சிந்தனை ஆற்றல் வழியில் இருந்து  வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்கது, குறிப்பாக வியாபாரம் சார்ந்த அமைப்பில் ஜாதகரின் முன்னேற்றம் தன்னிறைவாக அமையும் அல்லது வெளிநாடுகளிலான ஜீவனம் ஜாதகருக்கு மிதமிஞ்சிய அதிர்ஷ்டங்களை வாரி வழங்கும்.

ஜாதகருக்கு 11ல் கேது வலிமை பெற்று அமர்வதுடன், சுய ஜாதகத்தில் பாவக  வழியிலான தொடர்பு என்பது 11ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பது நிறைவான சொத்து சுக சேர்க்கையை வாரி வழங்கும், நல்ல குணமும் ஜாதகரின் செயல்பாடுகளும் சமூக அந்தஸ்த்தை குறுகிய காலத்தில் பெற்றுத்தரும், ஜாதகரின் தன்னம்பிக்கை லட்சியம், மனோதிடம் போன்றவை 11ம் பாவக வழியில் இருந்து சில எதிர்பாராத நன்மைகளை தருவதுடன் சிறந்தவற்றை தேர்ந்துஎடுக்கும் வல்லமையை  தரும், வண்டிவாகன யோகம், வீடு நிலம் சார்ந்த தொழில்கள் வழியில் இருந்து ஜாதகருக்கு பரிபூர்ண நன்மைகளை வாரி வழங்கும் மிதமிஞ்சிய லாபங்கள் வந்து சேர்வதுடன் தொழில் விருத்தியும் அபரிவிதமாக அமையும், ஜாதகரின் லாப ஸ்தானத்தில் பெரும்பகுதி கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியான துலாம் ராசியிலேயே வியாபித்து நிற்பது ( 21 பாகைகள் ) ஜாதகர் வெளிநாடுகளில் மிதமிஞ்சிய  அதிர்ஷ்ட வாழ்க்கையை பெறுவார் என்பதை கட்டியம் கூறுகிறது.

குறிப்பு :

சுய ஜாதகத்தில் ஒருவருக்கு சாயா கிரகங்களான ராகு கேது தான் அமர்ந்த பாவகத்திற்க்கு வலிமை சேர்க்கும் விதத்தில் இருப்பின், ஜாதகருக்கு விவரிக்க இயலாத சில தனி திறமைகளை கொண்டவராக திகழ்வார், தன்னிடம் உள்ள தனித்திறனை கண்டுணர்ந்து அதில் ஆர்வம் காட்டுவது ஜாதகருக்கான வெற்றி வாய்ப்புகளை அதிகரிப்பதுடன், பிரபல்ய யோகமும், உலகப்புகழ் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு என்பதை இந்த கட்டுரையில் பதிவு செய்ய "ஜோதிடதீபம்" கடமைப்பட்டுள்ளது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

செவ்வாய், 3 ஜூலை, 2018

ராகுகேது தோஷம் புத்திர பாக்கியத்தை தடைசெய்கிறதா ? ஆண் வாரிசு கிடைக்குமா ?


 கேள்வி :

 திருமண வாழ்க்கையில் இணைந்து 11 வருடங்கள் கடந்துவிட்டது, இதுவரை குழந்தைக்காக எடுத்துக்கொண்ட முயற்சிகள் யாவும் தோல்வியை தந்துவிட்டது, மருத்துவ சிகிச்சையும் பலன் தரவில்லை, எங்களுக்கு நல்ல ஆண் வாரிசு அமைய வாய்ப்பு உள்ளதா? சர்ப்ப தோஷம் எங்களுக்கு புத்திர பாக்கியத்தில் தடை செய்கிறதா? இதற்க்கு சரியான தீர்வுதான் என்ன ?


லக்கினம் : கன்னி
ராசி : தனுசு
நட்ஷத்திரம் : மூலம் 1ம் பாதம்

பதில் :

தங்களது சுய ஜாதகத்தில் நல்ல வாரிசு மற்றும் குழந்தை பாக்கியத்தை தரும் 5ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதுடன், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் வீடான சிம்ம ராசியும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது, மேலும் தற்போழுது நடைபெறும் சூரியன் திசையும் தங்களுக்கு 4,8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று கடுமையாக பாதிக்கப்பட்ட அயன சயன ஸ்தான பலனை ஏற்று நடத்துவது எதிர்பாராத இன்னல்களையும், துன்பங்களையும் 4,8,12ம் பாவக வழியில் இருந்து வாரி வழங்கும், சூரியன் திசையில் கேது புத்தி தங்களுக்கு 3,8ம் வீடுகள் பாதகம் மற்றும் விரைய ஸ்தான தொடர்பை பெற்று கடுமையான இன்னல்களை தருவது தங்களுக்கு உகந்ததல்ல, எனவே தங்களது சுய ஜாதகத்தில் 5ம் பாவகமும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் ராசியான சிம்மமும் கடுமையாக பாதிக்கப்பட்டு, நடைபெறும் சூரியன் திசையும் தங்களுக்கு ஜாதகம் இன்றி இருப்பது புத்திர பாக்கியத்தில் தடை தாமதங்களை வழங்குகிறது.

சாயா கிரகங்களான ராகுகேது தங்களது ஜாதகத்திற்கு தான் அமர்ந்த உயிர் உடலாகிய லக்கின ( கேது ) பாவகத்தை 100% விகிதம் வலிமை பெற செய்வதும், களத்திர ஸ்தானமாகிய 7ம் பாவகத்தை ( ராகு ) 100% விகிதம் வலிமை இழக்க செய்வதும் முரண்பட்ட பலாபலன்களை வழங்கும், லக்கினத்தில் அமர்ந்த கேது தங்களுக்கு உடல் ஆரோக்கியம், மனநலம், தெளிந்த நல்லறிவு, யோக வாழ்க்கை, வளரும் சூழ்நிலையில் சிறப்பு, புகழ் வெற்றி அந்தஸ்து என்ற வகையில் நன்மைகளையும், களத்திர ஸ்தானத்தில் அமர்ந்த ராகு தங்களுக்கு வாழ்க்கை துணை, நண்பர்கள், கூட்டாளிகள் பொதுமக்கள் என்ற வகையில் இருந்து அதீத துன்பங்களை வாரி வழங்கும், எனவே சர்ப்ப தோஷம் தங்களது வாழ்க்கையில் புத்திர பாக்கியத்திற்கு தடையா அமையவில்லை, சுய ஜாதகத்தில் 5ம் வீடு பாதக ஸ்தான தொடர்பை பெற்றது, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் வீடான சிம்ம ராசி கடுமையாக பாதிக்கப்பட்டதும், தற்போழுது நடைமுறையில் உள்ள சூரியன் திசை வலிமையற்ற பாவக பலனை ஏற்று நடத்துவதும் காரணமாக அமைகிறது.

சந்திரன்,சனி மற்றும் புதன் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷம காலங்கள் மட்டுமே தங்களுக்கு வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துகிறது, இதில் புதன் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் அதே வேளையில் 3,5,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகித இன்னல்களை தருவது மிகுந்த பாதிப்பை தரும், தங்களது ஜாதகத்தில் பெரும்பாலான கிரகங்களின் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் பாதிக்கப்பட்ட பாவக பலனையே ஏற்று நடத்துவதால் தங்களுக்கு இதுவரை புத்திர பாக்கியம் கிட்டவில்லை, எனவே தங்களது ஜாதகத்துடன் தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தையும் தெளிவாக அறிந்துகொள்வதன் மூலம் தங்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டுமா ? என்பதை உறுதி செய்யலாம், தம்பதியர் இருவரின் ஜாதகம் கொண்டு பாவக வலிமையை பற்றி தெளிவாக அறிந்துகொண்ட பிறகே தங்களது வினாவுக்கான பதில் தர இயலும் சகோதரி.

சரியான தீர்வு :

தங்களது ஜாதகத்தில் 5ம் பாவகமும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் ராசியான சிம்மமும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது, இதுவே தங்களது இல்லற வாழ்க்கையில் புத்திர பாக்கியத்தை வழங்கவில்லை என்பதனால், தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 5ம் பாவகமும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் ராசியான சிம்மமும் எப்படிப்பட்ட வலிமையை பெற்று இருக்கின்றது என்பதை அறிந்துகொள்வதன் மூலம் தங்களுக்கு ஓர் சரியான தீர்வை தர இயலும், தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் மேற்கண்ட விஷயங்கள் வலிமை பெற்று இருப்பின் தங்களுக்கு நிச்சயம் புத்திர பாக்கியம் உண்டு, ஒருவேளை கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பின், தாங்களும் தங்களது வாழ்க்கை துணையும் மருத்துவ ஆலோசணையை நாடி, நல்லதொரு குழந்தையை பெறுவதே சரியான தீர்வாக இருக்கும், " வாழ்த்துக்கள் "

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

சனி, 23 ஜூன், 2018

2ல் அமர்ந்த ராகு மஹா திசை தரும் பலாபலன்கள் என்ன ? எதிர்காலம் எப்படி இருக்கும் ?

 

 சுய ஜாதகத்தில் சாயா கிரகங்களான ராகு கேது தான் அமர்ந்த பாவகத்தை வலிமை பெற செய்வது என்பது ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளை தரும், அதே சமையம் தான் அமர்ந்த பாவகத்தை வலிமை இழக்க செய்வது, மிகுந்த துன்பத்தையும் இன்னல்களையும் தரும், இது சாயா கிரகங்கள் தனது திசா புத்தி அந்தரம் மற்றும் சூட்ஷம காலங்களில் நடைமுறைக்கு கொண்டு வரும் என்று கருதுவது முற்றிலும் தவறான கருத்தாகும், சுய ஜாதகத்தில் ராகுகேது தான் அமர்ந்த பாவகத்திற்கு வலிமை சேர்க்கும் அமைப்பில் இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி, தனது திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில் சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களில் எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது. இது பற்றி இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : தனுசு
ராசி : சிம்மம்
நட்ஷத்திரம் : பூரம் 4ம் பாதம்

ஜாதகரின் கேள்வியே தவறானதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது, 2ல் அமர்ந்த ராகு என்பது முற்றிலும் ஜாதக கணிதத்திற்கு புறம்பானது, ஏனெனில் ஜாதகருக்கு லக்கினம் எனும் முதல் பாவகம் தனுசு ராசியில் 265:42:51 பாகையில் ஆரம்பித்து, மகர ராசியில் 297:15:08 பாகை வரை வியாபித்து நிற்கிறது, ராகு பகவான் இந்த லக்கினத்திற்கு உற்ப்பட்ட 295:26:18 பாகையிலும், கேது களத்திர ஸ்தானத்திற்கு உற்ப்பட்ட 115:26:18 பாக்கையிலும் அமர்ந்து இருப்பதால் தங்களது சுய ஜாதகத்தில் ராகு கேது முறையே லக்கினம் மற்றும் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்து இருப்பதே உண்மை நிலை, எனவே ராகு கேது அமர்வு என்பது 1,7ம் வீடுகளில் என்பதால் 1ல் அமர்ந்த ராகு மஹா திசை தரும் பலாபலன்கள் என்ன ? எதிர்காலம் எப்படி இருக்கும் ? என்று வினவுவதே மிகச்சரியானதாக அமையும்.

 தங்களது ஜாதகத்தில் ராகு பகவான் உயிர் உடலாகி லக்கினம் எனும் முதல் பாவகத்தில் 100% விகித வலிமை பெற்று அமர்ந்து இருப்பதால் , தங்கள் லக்கின பாவக வழியில் இருந்து நல்ல ஆரோக்கியம், மனவலிமை, பொறுமை, சகிப்புத்தன்மை, சிறந்த செயல்திறன், நீண்ட ஆயுள், புகழ் வெற்றி கீர்த்தி போன்ற நன்மைகளை பரிபூர்ணமாக  சுவீகரிக்கும் வல்லமை உடையவராக திகழ்வீர்கள், மேலும் லக்கினத்தில் அமர்ந்த ராகு சம்பந்தப்பட்ட பாவகத்தை 100% விகித வலிமையை தருவதால், ஆராய்ச்சி மனப்பக்குவம், நினைத்ததை சாதிக்கும் யோகம், வருமுன் காக்கும் வல்லமை, விரைவான செயல்பாடுகள் மூலம் வெற்றியை பறிக்கும் யோகம், மனதிற்கும் புலனிற்கும் எட்டாத விஷயங்களை ஆய்வு செய்து, அதன் வழியிலான நன்மைகளை பெரும் யோகம் என்றவகையில் சிறப்புகளை தரும், தங்களின் திட்டமிடுதல்கள் யாவும் நல்ல வெற்றியையும் லாபத்தையும் தரும். ஆக சுய ஜாதகத்தில் லக்கின பாவகத்தில் அமர்ந்த ராகு பகவான் தங்களுக்கு தான் அமர்ந்த அமைப்பில் இருந்து சிறப்பான நன்மைகளையே வாரி வழங்குகின்றார், இனி ராகு தனது திசையில் தரும் பலன்கள் என்ன ? என்பதை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பரே !

ராகு திசை தரும் பலன்கள் (  22/08/2017 முதல் 23/08/2035 வரை )

தங்களது ஜாதகத்தில் ராகு லக்கின பாவகத்தில் அமர்ந்து 100% விகித வலிமையுடன் இருந்த போதிலும், தனது திசையில் 2,5,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று ராகு தசை 2,5,8 பாவக பலாபலன்களை  ஏற்று நடத்துவது தங்களுக்கு உகந்ததல்ல, 2ம் பாவக வழியில் இருந்து தங்களுக்கு தனவரவு அதிகரித்த போதிலும், வீண் விரையம், அதிக செலவினங்கள், வாக்கு குடும்பம் சார்ந்த அமைப்பில் இருந்து இன்னல்களையும் துன்பங்களையும் தரும், குறிப்பாக குடும்ப வாழ்க்கையில் நிறைய மாற்றங்களை தரும், 5ம் பாவக வழியில் இருந்து துயரம், தடங்கல், எதிர்த்து போராடும் வல்லமை குறைவு, குலதெய்வ சாபம், எதிர்பாரத அவமானம் மற்றும் புகழுக்கு களங்கம், சோர்வு, மனஉளைச்சல், வீண்கவலை, விபத்து, மனம் ஒரு நிலையில் இல்லாமல், முடிவுகளை தவறாக மேற்கொள்ளும் தன்மை, உதவி செய்ய யாரும் அற்ற சூழ்நிலை, நம்பிக்கை குறைவு, தனது முயற்சி வீணாகும் தன்மை என்றவையில் இன்னல்களை தரும்.

8ம் பாவக வழியில் இருந்து நீண்ட ஆயுளை தந்த போதிலும், பாதுகாப்பான பயணம் மேற்கொள்வது தங்களுக்கு உகந்த நன்மைகளை தரும், தேவையற்ற மருத்துவ செலவுகள், அவசியமற்ற வாக்குவாதம், உறுதியற்ற மனநிலை, எதிர்பாலின சேர்க்கை மூலம் வரும் இன்னல்கள், முரண்பாடான கருத்துக்களால் ஏற்படும் பேரிழப்பு, உடல் மற்றும் மனநலம் கடுமையாக பாதித்தல் என்ற வகையில் இன்னல்களை தரும், வண்டி வாகனங்களில் மிகுந்த பொறுமையுடன், அதிக பாதுகாப்புடன் இயக்குவது சகல நலன்களையும் தரும், பெரிய அளவிலான முதலீடுகள் கடும் பாதிப்பை தரக்கூடும், சுய ஜாதகம் வலிமை பெற்ற ஜாதகியை வாழ்க்கை துணையாக தேர்வு செய்வது அவசியமாகிறது.

எதிர்காலம் தங்களுக்கு ராகு திசை ராகு புத்திக்கு பிறகு மிகவும் சிறப்பாகவே இருக்கும், ராகு திசையில் ராகு புத்தி மற்றும் சனி புத்தி காலங்கள் மட்டும் சுய ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட ஆயுள் மற்றும் விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்துகிறது என்பதால், இந்த காலகட்டங்கள் மட்டுமே தங்களுக்கு மிகுந்த நெருக்கடிகளை தரக்கூடும், வலிமையற்ற 2,3,5,8ம் பாவக வழியிலான இன்னல்களை தாங்கள் சுவீகரிக்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வது மிகுந்த சிறப்பை தருவதுடன், முன்னேற்றகரமான நன்மைகளை தரும்.

குறிப்பு :

 ஜாதகத்தில் நவகிரகங்கள் காலபுருஷ தத்துவ அமைப்பிற்க்கு பெரும் வலிமை  ( ஆட்சி,உச்சம்,நட்பு,சமம்,பகை,நீசம் ) போன்றவை சுய ஜாதகத்திற்கு யாதொரு நன்மை தீமையும் நல்காது, லக்கினத்திற்கு நவகிரகங்கள் தனது பாவக வழியில் இருந்து பெரும் வலிமை, லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள்  பெரும் தொடர்பு நிலையே சுய ஜாதகத்தை ஆளுமை செய்யும் என்பதை கருத்தில் கொள்வது நல்லது, மேலும் தங்களது ஜாதகத்தில் லக்கினத்தில் வலிமை பெற்று அமர்ந்த ராகு, தனது திசையில் வலிமையற்ற பாவக தொடர்பை ஏற்று பலாபலன்களாக வாரி வழங்குவது நன்மை தரும் அமைப்பல்ல, என்பதை கருத்தில் கொண்டு நலம் பெறுங்கள்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

சனி, 19 மே, 2018

7ல் ராகு அமர்ந்து இருப்பது திருமண தடைகளை தருமா ? இல்லற வாழ்க்கை அமையாதா ?


கேள்வி :

  7ல் ராகு இருப்பதனால் திருமணம் செய்வது வெகு சிரமம் என்றும், நீங்க திருமணம் செய்துகொள்ளாமல்  இருப்பது நல்லது என்று என்னை பயமுறுத்திவிட்டார், திருமணம் எனக்கு நடக்குமா ? தங்களிடம் இருந்து ஒரு நல்ல பதிலை எதிர் பார்க்கிறேன். எனது எதிர் காலம்,  குடும்ப வாழ்க்கை பற்றி பயம் கொள்ளும் விதமாக  ஏதும் சொல்லாமல், நல்ல வழிகாட்டுதல்களை கூறவும், இலங்கையில் எனது ஜாதகத்தை பார்த்த அனைவரும் என்னுடைய நட்சத்திரம் விசாகம் 4ம் பாதம் என்று கூறுகின்றனர் இது சரியானதா ? நடைபெறும் திசை எதிர்வரும் திசை தரும் பலன்கள் என்ன ?


பதில் :

 திருமண தடைகள் ஏற்படுவதற்கு ராகு பகவான் களத்திர ஸ்தானமான 7ம் வீட்டில் அமர்வது மட்டுமே காரணமாக அமைந்து விடாது, சுய ஜாதகத்தில் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் ராசியான ரிஷபம், 7ம் ராசியான துலாம், இரண்டும் கடுமையாக பாதிக்கப்பட்டோ அல்லது சுய ஜாதகத்தில் லக்கினத்திற்கு  குடும்ப ஸ்தானமான 2ம் பாவகம் மற்றும் களத்திர ஸ்தானமான 7ம் பாவகம் கடுமையாக பாதிக்கப்பட்டோ இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகர் திருமண தடைகளை சந்திக்கும் சூழ்நிலை உருவாகலாம், மேலும் நடைமுறையில் உள்ள திசாபுத்திகள் வலிமை அற்ற பாவகங்களின் பலனை நடைமுறைப்படுத்தினால் ஜாதகர் திருமணம் சார்ந்த முயற்சிகளில் தடைகளையும், தாமதங்களையும் சந்திக்கும் சூழ்நிலை ஏற்படலாம், தங்களுக்கு திருமணம் தாமதமாக என்ன காரணம் ? என்பதனை இன்றை பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பரே !


லக்கினம் : விருச்சிகம்
ராசி : விருச்சகம்
நட்ஷத்திரம் : அனுஷம் 1ம் பாதம்

தங்களது சுய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகவும் வலிமையுடன் இருப்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சம் என்ற போதிலும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் வீடான ரிஷபம் பாதக ஸ்தான தொடர்பை பெற்று 200% விகிதம் வலிமையற்று காணப்படுகிறது, மேலும் களத்திர ஸ்தானம் எனும் 7ம் வீடு பாதக ஸ்தான தொடர்பை பெற்று 200% விகிதம் வலிமையற்று காணப்படுகிறது, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் வீடான துலாம் பாதக ஸ்தான தொடர்பை பெற்று 200% விகிதம் வலிமையற்று காணப்படுகிறது, தங்களது சுய ஜாதக அமைப்பின்படி, லக்கினத்திற்கு 2ம் வீடான குடும்ப ஸ்தானம் மட்டும் மிகுந்த வலிமையுடன் இருக்கிறது, இல்லற வாழ்க்கையை குறிக்கும் மற்ற வீடுகளான 5,7,8,12ம் வீடுகள் மிகவும் வலிமை அற்று காணப்படுகிறது, குறிப்பாக 1,5,7,11,12ம் வீடுகள் அனைத்தும் பாதக ஸ்தான தொடர்பை பெறுவது தங்களுக்கு 1,5,7,11,12ம் பாவக வழியில் இருந்து 200% விகித இன்னலைகளை தரும் அமைப்பாகும், தங்களின் திருமண முயற்சிகளில் வரும் தோல்விகளுக்கு, திருமண தடைகளுக்கும் அடிப்படை காரணமாக விளங்குவதும் இதுவேயாகும்.

தங்களது சுய ஜாதகத்தில் 2,3,10ம் பாவகங்களை தவிர மற்ற அனைத்து பாவக்கங்களும் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பதை கருத்தில் கொள்ளுங்கள், திருமண தடைகளுக்கு ராகு ஓர் காரணமாக இருந்தாலும், அது மட்டுமே முழு காரணமாக அமைந்துவிடாது, சுய ஜாதகத்தில் வெகுவான பாவகங்கள் கடுமையான பாதிப்பை பெற்று இருப்பது கவனிக்கத்தக்கது, சுய ஜாதகத்தில் லக்கினத்திற்கு 2ம் வீடான குடும்ப ஸ்தானம் மிகவும் வலிமையுடன் இருப்பதால், தங்களுக்கு நல்ல இல்லறமும் , சிறப்பான குடும்பமும் அமையும் இதில் மாற்றம் இல்லை தாங்கள் தேர்வு செய்யும் மணப்பெண்ணின் சுய ஜாதகத்தில் 2,5,7,8,12ம் பாவகங்கள் மிகவும் வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, தங்களின் சீரிய முயற்சி நல்லொதொரு வாழ்க்கை துணையை அமைத்து தரும்.

சுய ஜாதகத்தில் பெரும்பாலான பாவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது  தங்களின் திருமண வாழ்க்கைக்கு பல தடைகளை தந்தபோதிலும், குடும்ப ஸ்தான வலிமை தங்களுக்கு நல்ல இல்லற வாழ்க்கையை சிறப்பாக அமைத்துத்தரும் என்பதில் சந்தேகம் இல்லை, மற்றவர்கள் சொல்லும் கருத்துக்களுக்கு செவி சாய்க்காமல் சுய ஜாதகம் வலிமை பெற்ற ஓர் வாழ்க்கை துணையை தேர்வு செய்து, இனிமையான இல்லறம் காணுங்கள் வாழ்த்துக்கள் அன்பரே !

 நடைமுறையில் உள்ள புதன் திசை தங்களுக்கு 3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவக தொடர்பை பெற்று முழு வீச்சில் சுபயோக பலன்களையும், எடுக்கும் முயற்சிகளில் வெற்றி வாய்ப்பையும், சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும் அதே வேளையில் 4,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த இன்னல்களை தருவது தங்களுக்கு வெகு சிரமங்களை தரும் அமைப்பாகும், வீடு, வண்டி வாகனம், சொத்து  சுக சேர்க்கை போன்ற அமைப்பில் சிரமங்களையும், வீண் செலிவினங்கள், எதிர்பாராத திடீர் இழப்பு, மருத்துவ செலவுகள், என்ற வகையில் துன்பங்களை  தரக்கூடும், தன்னம்பிக்கையும், சுய கட்டுப்பாடும் தங்களின் வாழ்க்கையில் அளவில்லா சுபயோகங்களை வாரி வழங்கும், நல்ல வாழ்க்கை துணையை தேடி அமைத்துக்கொள்வது, தங்களின் வாழ்க்கையில் பரிபூர்ண நன்மைகளை  வாரி வழங்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

 எதிர்வரும் கேது திசை தங்களுக்கு பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தாது தங்களுக்கு சிறப்பான நன்மைகளை தரும் என்ற போதிலும், அதற்க்கு பிறகு வரும் சுக்கிரன் தசை 20 வருடம் தங்களின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும் பாவக தொடர்பை பெறுவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும் ( சுக்கிரன் திசை 20 வருடமும் 3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவக தொடர்பை பெற்று முழு வீச்சில் சுபயோக பலன்களை  நல்குகிறது ) எனவே எதிர்காலம் தங்களுக்கு மிகவும் பிரகாசமாக உள்ளதால் எஜென்ஜி, தரகு, கமிஷன் மற்றும் வியாபாரம் சார்ந்த முன்னேற்றங்களை பெற தயார் நிலையில் இருப்பது அவசியமாகிறது.

குறிப்பு :

  ஜாதகர் முறையான பிரீதி பரிகாரங்களை மேற்கொண்டு சகல நலன்களையும் பெறுக, ஜாதகருக்கு தற்போழுது நடைமுறையில் உள்ள சந்திரனின் அந்தரம் சிறப்பான மாற்றங்களை வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்கது, திருமணம் சார்ந்த முயற்சிகளை முறையாக மேற்கொண்டு வாழ்க்கையில் நலம் பெறுக .

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

சனி, 12 மே, 2018

ஜாதக ஆலோசனை : சுய ஜாதக பலாபலன்கள் துல்லியமாக பெறுவதற்கான வழிமுறை !


சுய ஜாதக பலாபலன்கள்

லக்கினம் : கும்பம்
ராசி : மகரம்
நட்ஷத்திரம் : திருவோணம் 1ம் பாதம்


ஜாதகத்தில் பாவக தொடர்புகள் :

1,4,5,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 1ம் பாவக வழியில் இருந்து மதிப்புக்கு உரிய செயல்களில் ஆர்வம், புகழ் மிக்க பொறுப்புகள், செய்யும் தொழில் வழியிலான லாபங்கள், சுய தொழில் செய்வதன் மூலம் முன்னேற்றம், மிகுந்த மரியாதையுடனான செயல்பாடுகள், அரசு துறை மூலம் ஆதாயம், வெகுமதி கவுரவ பதவிகள், வளரும் சூழ்நிலையில் சிறப்புமிக்க வெற்றி வாய்ப்புகளை பெரும் யோகம், தொழில் துறையில் அபரிவித வளர்ச்சி, நிறைவான பொருளாதார முன்னேற்றம், வியாபாரம் செய்வதன் மூலம் அதீத லாபம், எதையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம், விசாலமான மனதினால் அனைத்தையும் கட்டியாலும் தன்மை என சுக போகங்களை வாரி வழங்கும், நீண்ட ஆயுள் உண்டு, நல்ல உடல் நலம் மற்றும் மன நலம் ஜாதகருக்கு வாழ்நாள் முழுவதும் சிறப்பாக அமையும்.

4ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் சிறப்பு மிக்க நல்ல குணங்களை பெற்று இருப்பார், நல்ல தொழில் முன்னேற்றம் உண்டாகும், மனதில் நினைத்ததை சாதிக்கும் யோகம் உண்டாகும், பெயரும் புகழும் தேடி வரும், மண் மனை வண்டி வாகன யோகம் உண்டு, நல்ல வேலையாட்கள் அமைவார்கள், பெரிய சொத்துக்களை நிர்வகிக்கும் யோகம் உண்டு, அரசு சார்ந்த கவுரவம் உண்டு, சமூகத்தில் மதிப்பு மிக்க கவுரவ பதவிகள் தேடி வரும், அரசியல் ரீதியான முன்னேற்றம் மிக சிறப்பாக அமையும், தனது சுய உழைப்பின் மூலம் வீடு வண்டி வாகனம், பொருளாதார முன்னேற்றங்களை தன்னிறைவாக ஜாதகர் பெறுவார் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

5ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் கலைகளில் அதீத ஆர்வத்ததையும், தேர்ச்சியையும் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டு, நல்ல அறிவு ஜாதகரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு பேருதவியாக அமையும், சிரமங்கள் தானாக மறையும், சினிமா துறையில் சிறந்து விளங்கும் யோகம் உண்டு, வாழ்க்கையில் யாரும் எதிர்பாராத மேன்மை நிலையை இறை அருளால் ஜாதகர் பெறுவார், புத்திசாலித்தனம் மிக்க  வியாபாரியாகவும், தொழில் வல்லுநராகவும் ஜாதகர் பிரகாசிக்க வாய்ப்பு உண்டு, சுய அறிவு கொண்டு வாழ்க்கையில் எதிர்பார்த்த அதிர்ஷ்டங்களை ஜாதகர் பரிபூர்ணமாக பெறுவார்.

10ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் தொழில் வல்லமை அதிகரிக்கும், சிறு தொழிலாக ஆரம்பித்து பெரிய நிறுவனமாக வளரும் யோகம் உண்டு, ஜீவன ஸ்தானம் பெரும் பகுதி உபய நெருப்பு ராசியில் இயங்குவதால், ஜாதகர் தொழில் நுட்பம் சார்ந்த விஷயங்களில் நல்ல ஞானம் உள்ளவராக திகழ்வார், தெய்வீக ஆசீர்வாதம் ஜாதகருக்கு மிக சிறந்த தொழில் வாய்ப்புகளை வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்கது, மிக சிறந்த கல்வியறிவும், ஆராய்ச்சி மனப்பக்குவமும், ஜாதகருக்கு மேன்மையான சுகபோகங்களை வாரி வழங்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

2,7,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 2ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டம், நண்பர்கள் மூலம் பேருதவிகளை பெரும் யோகம், இனிமையான பேச்சு திறன், கை நிறைவான வருமான வாய்ப்புகள், செல்வ செழிப்பு, பெரிய மனிதர்கள் மற்றும் ஆன்மீக பெரியோர்கள் ஆசிர்வாதம் மூலம் வாழ்க்கையில் இனிமையான குடும்பம் அமையும் யோகம், நல்ல வாழ்க்கை துணை, வாழ்க்கை துணை வழியிலான பொருளாதர உதவிகள் மற்றும் ஆதரவை பெரும் யோகம் என ஜாதகருக்கு குடும்ப ஸ்தான வழியில் இருந்து எதிர்பாராத நன்மைகள் உண்டாகும், திருமணத்திற்கு பிறகான வளர்ச்சி மிக அபரிவிதமானதாக அமையும்.

7ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் வாழ்க்கை துணை, மிகுந்த யோகம் மிக்கவராக திகழ்வார், மிகுந்த அதிர்ஷ்டசாலியாகவும், முற்போக்கு சிந்தனையுடன் கூடிய தைரியமிக்கவராக இருப்பார் என்பது கவனிக்க தக்க சிறப்பு அம்சமாகும், பொதுமக்களிடம் இருந்து வரும் ஆதரவு ஜாதகருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டங்களை வாரி வழங்கும், கூட்டு முயற்சி, நண்பர்கள், கூட்டாளிகள் என ஜாதகருக்கு சகல விதங்களில் இருந்தும் நன்மையான பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், தெய்வீக அனுக்கிரகம் ஜாதகருக்கு பரிபூர்ணமாக அமைந்து இருக்கும், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஜாதகருக்கு அபரிவிதமான வளர்ச்சி வந்து சேரும், பிரபல்ய யோகம் உண்டு என்பதுடன், ஜாதகர் அரசியலில் பிரகாசிக்கும் வாய்ப்பு உண்டு.

8ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் நினைக்கும் எண்ணங்கள் யாவும் நிறைவேறும், குறுகிய காலத்தில் பெரிய வெற்றிகளை பெரும் யோகம் உண்டு, வாழ்க்கை துணை மற்றும் நண்பர்கள் மூலம் அபரிவித செல்வாக்கு உண்டாகும், போனஸ், லாட்டரியில் யோகம், புதையல் யோகம், கடவுளின் கருணை மூலம் பெரும் செல்வத்திற்கு அதிபதியாகும் வாய்ப்பு உண்டு, நீண்ட ஆயுள்  மற்றும் உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும், தனிப்பட்ட ரகசியங்கள் ஜாதகருக்கு பரிபூர்ண நன்மைகளை வாரி வழங்கும், வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானம் ஜாதகருக்கு மிக பெரிய பொருளாதார நன்மைகளை தரும்.

11ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் மிகுந்த அதிர்ஷ்டசாலி எனலாம், தன்னம்பிக்கையும் முற்போக்கு சிந்தனையும் ஜாதகருக்கு பரிபூர்ணமாக அமைந்து இருக்கும், எடுக்கும் காரியங்கள் யாவிலும் வெற்றிமேல் வெற்றி உண்டாகும், தைரியமிக்க செயல்பாடுகள் ஜாதகருக்கு பரிபூர்ண யோகங்களை நல்கும் பொதுமக்களின் ஆதரவு மூலம் பெரும் நன்மைகளை ஜாதகர் பெறுவதுடன் அதீத முன்னேற்றங்களை பெறுவார் என்பது கவனிக்கத்தக்கது, நல்ல குணமும் சிறந்த எண்ணங்களும் ஜாதகரின் வாழ்க்கையை சிறப்பு மிக்கதாக மாற்றும் வல்லமை கொண்டது, வீண் மனபயத்தை தவிர்த்தல் ஜாதகருக்கு சிறப்புகளை சேர்க்கும், நம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்வது  ஜாதகருக்கு அபரிவித்த வளர்ச்சியை தரும்.

3,6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது  3ம் பாவக வழியில் இருந்து மருந்துகள் மூலம் நல்ல லாபத்தை தரும், அரிய கலைகளில் தேர்ச்சியையும், மருத்துவ உபகரணங்கள் மூலம் நல்ல லாபத்தையும் தரும், விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் மூலம் லாபத்தை பரிபூர்ணமாக ஜாதகர் பெறுவார் என்பது கவனிக்கத்தக்கது, நீண்ட பயணங்கள் மூலம் எதிர்பார்த்த நன்மைகளை பெறுவார், காதல் வெற்றி, சட்டம் மூலம் லாபம், புதிய கண்டுபிடிப்பு, தர்ம சிந்தனை, சத்தியத்தை மதித்தித்து நடக்கும் குணம் என்ற வகையில் நன்மைகளை தரும், ஜாதகரின் முயற்சிகள் சில நேரங்களில் தோல்வியை தந்த போதிலும், விடாமுயற்சியுடன் போராடுவது பெரிய வெற்றி வாய்ப்பை நல்கும்.

6ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் கடன் கொடுத்தவர்களால் அதீத தொல்லைகள்,  வேலையாட்கள் மூலம் நஷ்டம், வேலை நிறுத்தம் மூலம் கஷ்டம், தேவையற்ற செலவினங்கள், எதிர்பாராத மறுத்து செலவுகள், உடல் நல பாதிப்புகள் என இன்னல்களை தர கூடும், மேலும் கடன் கொடுப்பது வாங்குவது இரண்டும் ஜாதகருக்கு  பேரிழப்புகளை தரும், இருப்பதை  முறையாக கையாண்டு நலம் பெறுவது அவசியமாகிறது, சேமிக்கும் பழக்கம் ஜாதகருக்கு சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், எவரிடமும் பகைமை பாராட்டுவது நல்லதல்ல.

9ம் பாவக வழியில் இருந்து வெளிநாடுகளில் இருந்து நல்ல யோகங்களை பெறஇயலும், பிறந்த ஊரில் இருந்து வெகு தொலைவு சென்ற பிறகே அபரிவித வளர்ச்சி உண்டாகும், வயதில் பெரியவர்களின் ஆலோசனை ஜாதகருக்கு சுபயோகங்களை நல்கும், முறையான பித்ரு வழிபாடு கல்வி,வேலை,திருமணம்,குழந்தை மற்றும் பொருளாதர முன்னேற்றங்களை வாரி வழங்கும், பலமுறை யோசித்து செயல்படுவது ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளை தரும்.

12ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் நிம்மதியற்ற மனநிலையை பெற்றிருப்பர், மன உறுதி வெகுவாக குறையும், நிறைய செலிவினங்கள் ஜாதகரின் பொருளாதரா முன்னேற்றத்தை பாதிக்கும், பங்கு சந்தை, லாட்டரி, சூது மூலம் ஜாதகர் பேரிழப்புகளை சந்திக்க நேரும், திருப்தி இல்லாத  மன நிலை ஜாதகரை கடுமையாக பாதிக்கும், அனைவராலும் எதிர்பாராத தொல்லைகளை அனுபவிக்கும் சூழ்நிலைகளை தரும், விபத்தின் மூலம் மருத்துவ செலவினங்கள் கூடும் என்பதால் பாதுகாப்பான பயணம் ஜாதகருக்கு சிறப்புகளை வாரி வழங்கும் .


நடைபெறும் ராகு திசை ஜாதகருக்கு வழங்கும் பலன்கள் : ( 14/10/2003 முதல் 14/10/2021 வரை )

ராகு பகவான் ஜாதகருக்கு தனது திசையில் 4ம் வீடு ஜீவன ஸ்தானமான  10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களை வழங்குவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், ஏனெனில் ஜாதகரின் தொழில் சார்ந்த வளர்ச்சியை தற்போழுது நடைபெறும் ராகு திசை சிறப்பாக அமைந்து தரும், தனக்கான தொழில் வாய்ப்புகளையும், நுணுக்கங்களையும் அறிந்துகொள்ளும் நேரமிது, தான் செய்யும் தொழிலில் சிறந்த அறிவு திறனையும், அனுபவத்தையும் ஜாதகர் பரிபூரணமாக பெறுவார் என்பதுடன் எதிர்காலத்திற்க்கான சரியான தொழில் நிர்ணயத்தை பெரும் வல்லமையை தரும். ராகு திசையில் தற்போழுது நடைபெறும் சூரியன் மற்றும் சந்திரன்  புத்திகள்  3ம் பாவக வழியில்  இருந்து இன்னல்களை தந்த போதிலும், அடுத்து வரும் சந்திரன் புத்தி ஜாதகருக்கு 11ம் பாவக வழியில் இருந்து மிகுந்த அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும், அடுத்து வரும் செவ்வாய் புத்தி ஜாதகருக்கு 3,6,9,12ம் பாவக  வழியில் சற்று சிரமங்களை தரக்கூடும்.

எதிர்வரும் குரு திசை தரும் பலாபலன்கள் : ( 14/10/2021 முதல் 14/10/2037 வரை )

அடுத்து வரும் குரு திசை ஜாதகருக்கு பரிபூர்ண சுபயோகங்களை வாரி வழங்குகிறது என்றால் அது மிகையில்லை, குரு திசை ஜாதகருக்கு 1,4,5,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 2,7,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் ஏக காலத்தில் ஜீவனம் மற்றும் லாப ஸ்தான பலனை வாரி வழங்குவது, ஜாதகரை குரு திசையில் மிக சிறந்த யோகதாரியாக பிரகாசிக்க செய்யும், ஜாதகருக்கு மேலே குறிப்பிட்ட 1,2,4,5,7,8,10,11ம் பாவக வழியிலான சுபயோகங்கள் நடைமுறைக்கு வரும் காலம் குரு திசை என்பதால், ஜாதகரின் வளர்ச்சி மிக அபரிவிதமானதா அமையும் என்பதில் சந்தேகமில்லை வாழ்த்துக்கள் அன்பரே !

பரிகாரம் :

1) ஜாதகர் வளர்ப்பிறை சனிக்கிழமை அன்று திருவக்கரை சென்று  சனி மற்றும் சுக்கிர பகவானுக்கு வக்கிரக  நிவர்த்தி செய்து நலம் பெறுவது அவசியமாகிறது, இது ஜாதகருக்கு திருமண தடையினை நிவர்த்தி செய்து, தொழில் சார்ந்த நன்மைகளை வாரி வழங்கும்.

2) சுய ஜாதகத்தில் ராகு லக்கினத்தில் வலிமை பெற்று இருப்பதால், ராகு கால வழிபாடு அவசியம் செய்யவும், ராகு காலத்தில் செய்யும் காரியங்கள் மிகப்பெரிய  வெற்றிகளை வாரி வழங்கும் என்பதில் கவனம் கொள்க.

3) தினமும் அதிகாலையில் சூரிய நமஸ்காரம் மற்றும் ஆதித்ய ஹிருதயம் படிப்பது  சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும்.

4) " சர்ப்ப சாந்தி "  பரிகாரம் ஜாதகருக்கு லக்கினம் மற்றும் களத்திர பாவக வழியிலான சுபயோகங்களை வாரி வழங்கும்.

5) திருவெண்காடு வளர்பிறை புதன் கிழமை சென்று " முக்குண " நீராடி நலம் பெறுவது அவசியமாகிறது.

6) குல தெய்வ வழிபாடு, பித்ரு வழிபாடு எதிர்வரும் ஆடி அமாவாசை தினத்தில் செய்து நலம் பெறவும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வெள்ளி, 6 ஏப்ரல், 2018

ராகு திசை சுய புத்தி சுபயோக பலனை வழங்கினால், பிறகு வரும் புத்திகள் மிகப்பெரிய கெடுதலை தருமா ?


 கேள்வி : 

   ராகு திசை சுயபுத்தியில் நல்ல பலனை தந்தது. ஒரு தசா சுயபுத்தியில் அதிகமான நன்மையை வழங்குகிறது என்றால் பிறகு வரும் புத்திகள் மிகப்பெரிய கெடுதலை தரும் என்பதில் எவ்வித சந்தேகமும் வேண்டியதில்லை, இது உண்மையா? இந்த ஜாதகத்தை உங்களது பாணியில் விளக்கி தெளிவை கொடுக்க முடியுமா? ஆள் ஆளுக்கு ஒன்னா சொன்னா மனுசன் எதை நம்புறது ?

பதில் :

 ஒரு தசா சுயபுத்தியில் அதிகமான நன்மையை வழங்குகிறது என்றால் பிறகு வரும் புத்திகள் மிகப்பெரிய கெடுதலை தரும் என்பதில் எவ்வித சந்தேகமும் வேண்டியதில்லை. என்ற கருத்து சுய ஜாதக கணிதம் என்றால் என்னவென்றே தெரியாமல், பிதற்றும் வாய் ஜாலம் என்றே சொல்ல தோன்றுகிறது, அடிப்படையில் எந்த ஓர் கிரகத்தின் திசையும் சரி, புத்தியும் சரி தன்னிசையாக பலாபலன்களை வழங்கும் வல்லமை அற்றவை, சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் பெரும் வலிமையை மட்டுமே தனது திசை, புத்தி, அந்தரம் மற்றும் சூட்ஷம காலங்களில் நடைமுறைக்கு கொண்டுவரும், இதை சுய ஜாதக கணிதம் பற்றி தெளிவு பெற்றவர்கள் மிக எளிதாக உணர இயலும், கீழ்கண்ட ஜாதகருக்கு ராகு தனது சுய புத்தியில் யோக பலனை வழங்கியதால், அடுத்து வரும் மற்ற புத்திகள் அவயோகங்களை வாரி வழங்கும் என்பது முற்றிலும் தவறான கருத்து, ராகு தனது திசையில் தரும் பலனும், ராகு சுய புத்தியிலும் மற்ற புத்திகளில் நடைமுறைக்கு வரும் பலாபலன்கள் பற்றியும் இன்றை பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : மகரம்
ராசி : மேஷம்
நட்சத்திரம் : பரணி 3ம் பாதம்

ராகு திசையில் சுய புத்தி ஜாதகருக்கு யோக பலனை வழங்கியது எப்படி ?

ஜாதகருக்கு ( 17/01/2008 முதல் 16/01/2026 வரை ) நடைமுறையில் உள்ள ராகு திசை சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்புகளான 5,11ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பூர்வ புண்ணிய ஸ்தானம் மற்றும் லாப ஸ்தான வழியில் இருந்து முழு வீச்சில் யோக பலன்களை வாரி வழங்கி உள்ளது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், சுய ஜாதகத்தில் நடைபெறும் நவக்கிரக திசை அல்லது புத்தி எதுவென்றாலும், வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு ஏற்று நடத்தும் பாவக வழியில் இருந்து சுபயோக பலாபலன்களே நடைமுறைக்கு வரும், மாறாக சுய ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்தும் நவகிரகங்களின் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் ஜாதகருக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து அவயோக பலன்களையே வாரி வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

மேற்கண்ட் ஜாதகருக்கு ராகு திசை 5,11ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பூர்வ புண்ணிய ஸ்தானம் மற்றும் லாப ஸ்தான வழியில் இருந்து நன்மைகளையும், ராகு திசை ராகு புத்தி மேற்கண்ட பாவக வழியிலான தொடர்புகளை பெற்று சுய திசையில் சுய புத்தி ஜாதகருக்கு சுபயோக பலாபலன்களையே வழங்கியது தெளிவாகிறது, அடுத்து வந்த ராகு திசை குரு புத்தி ஜாதகருக்கு 3,4 ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றதும், ஜாதகருக்கு ராகு திசை குரு புத்தியும் ஜாதகருக்கு நன்மைகளை வழங்கியிருக்கிறது, குரு புத்திக்கு அடுத்து வந்த சனி புத்தி 1,7,10ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் ( சர லக்கினத்திற்கு பாதக ஸ்தானம் 11ம் வீடாகும் ) பெற்று 200% மடங்கு இன்னல்களை வாரி வழங்கியுள்ளது, ராகு திசையில் சனி புத்திக்கு அடுத்து வந்த புதன் புத்தியும் 1,7,10ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இன்னல்களையும், 8ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சில நன்மைகளையும் வழங்கி கொண்டு இருப்பது கவனிக்கத்தக்கது.

 ஜாதகர் 29/12/2015 முதல் 18/07/2018 வரை 1,7,10ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, பாதக ஸ்தான வழியில் இருந்து கடுமையான கடுமையான இன்னல்களை தொடர்து வழங்கிக்கொண்டு இருப்பதால் ஜாதகர் மிகுந்த துன்பத்திற்கும் இன்னல்களுக்கும் ஆளாகி கொண்டு இருக்கின்றார், மேலும் ஜாதகரின் லக்கினம், களத்திரம் மற்றும் ஜீவன ஸ்தானங்களே பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதால் ஜாதகருக்கு வரும் பாதிப்புகள் அதிக அளவில் உள்ளது என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும், லக்கினம் பாதிக்கப்படுவது ஜாதகரே தன்னை தானே பாதிப்பிற்க்கு ஆளாக்கி கொள்வார், களத்திர ஸ்தானம் பாதிக்கப்படுவது ஜாதகருக்கு ஏற்படும் எதிர்பாலின சேர்க்கையின் மூலம் இன்னல்களுக்கு ஆளாகும் சூழ்நிலையை தரும், ஜீவன ஸ்தானம் பாதிக்கப்படுவது ஜாதகரின் தொழில் ஸ்தான வழியிலான இன்னல்களுடன், சுய கவுரவம் பாதிக்கும் சூழ்நிலையை தரும்.

 ராகு திசையில் அடுத்து வரும் கேது மற்றும் சுக்கிரன் புத்திகள் 8ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவக பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு சில எதிர்பாராத நன்மைகளையும், சூரியன் மற்றும் செவ்வாய் புத்திகள் 2ம் வீடு குடும்ப ஸ்தானமான 2ம் பாவக பலனை ஏற்று நடத்தி நிறைவான வருமான வாய்ப்புகளையும், சுபயோகங்களையும், சந்திரன் புத்தி 6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இன்னல்களையும், 9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக பலாபலன்களை நடத்த தயார் நிலையில் இருப்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

 நவகிரகங்கள் தன்னிசையாக நன்மை தீமை பலாபலன்களை நடைமுறைக்கு கொண்டுவருவதற்கான வாய்ப்பு என்பது சிறிதும் இல்லை என்பதே மேற்கண்ட உதாரண ஜாதகம் மூலம் நாம் அறிந்துகொள்ள வேண்டிய விஷயமாகும், சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவக வலிமையையே ஏற்று நடத்தும் என்ற உண்மையையும் நாம் உணர்ந்துகொள்ளவேண்டிய நேரமிது, மேலும் கோட்சார கிரகங்களின் தாக்கம் என்பதனையும் மேற்கண்ட முறையிலேயே கையாண்டு துல்லியமான பலாபலன்களை உணர்ந்து, நமது வாழ்க்கையை மேலும் சிறப்பு மிக்கதாக மாற்றிக்கொள்வது சகல நன்மைகளையும் தரும்.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலையையும் , நடைபெறும் திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவகங்களின் தன்மையையும் நாம் தெளிவாக உணர்ந்து கொள்வது, நமது வாழ்க்கையை மிகவும் சிறப்பு மிக்கதாக மாற்றிக்கொள்ளும் வாய்ப்பை தரும், குறிப்பாக நமது எதிர்கால திட்டமிடுதல்களை மிக சிறப்பாக முன்னெடுத்துச்செல்லும் வாய்ப்பை வாரி வழங்கும் என்பது மறுக்க இயலாத உண்மை.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696