தாய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தாய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

ஒருவரது சுய ஜாதகத்தில் 4,10 ம் வீடுகள் பாதக ஸ்தான அமைப்புடன் தொடர்பு பெரும் பொழுது ஜாதகர் அனுபவிக்கும் இன்னல்கள் என்ன ?



 பொதுவாக சுய ஜாதகத்தில் எந்த ஒரு பாவகமும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல, அதிலும் குறிப்பாக 1,4,7,10 வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது மிகுந்த இன்னல்களை ஜாதகருக்கும், ஜாதகரை சார்ந்தவர்களுக்கும் வாரி வழங்கும், ஒரு வேலை மேற்கண்ட 1,4,7,10ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றாலும், நடைமுறையில் உள்ள திசை,புத்தி,அந்தரம்,சூட்சமம் ஆகியவை  பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தாமல் இருப்பது சால சிறந்தது.

 கேள்வியில் ஜாதகர் 4 மற்றும் 10 ம் வீடுகள் பாதக ஸ்தான அமைப்புடன் சம்பந்தம் பெற்றால் ஜாதகர் எவ்வித பலனை அனுபவிப்பர் என்பதனை இனி ஆய்வுக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே! 

 4ம் வீடு பாதக ஸ்தான அமைப்புடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் ஆண் எனில் தனது தாயர் அமைப்பில் இருந்து பெரும் யோக பலன்களை அனுபவிக்க இயலாத சூழ்நிலையை தரும்,  பெண் எனில் தகப்பனார் அமைப்பில் இருந்து பெரும் யோக பலன்களை அனுபவிக்க இயலாத சூழ்நிலையை தரும் , உதாரணமாக தாயாரின் அரவணைப்பில் வளரும் சூழ்நிலை தராது, தாயின் அன்பினை பரிபூரணமான அனுபவிக்க இயலாத சூழ்நிலையை தரும், வளரும் காலத்தில் பெரிய அளவில் சுகமான வாழ்க்கையை அனுபவிக்க இயலாத தன்மையை தரும்.

  நல்ல வீடு, வண்டி வாகனம், சொத்து சுக அமைப்பை பரிபூரணமாக பெற இயலாத தன்மையை தரும், வளரும் காலத்தில் ஜாதகர் அதிக இன்னல்களையும், கல்வியில் தடை மற்றும் முன்னேற்றம் அற்ற தன்மையையும் தரும், ஜாதகர் தனது பெயரில் வைத்திருக்கும் சொத்து சுகங்களை திடீர் என இழக்கும் அமைப்பை தரும், திருமண வாழ்க்கையில் நிம்மதி அற்ற நிலையும், இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சி அற்ற தன்மையையும் கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்ப்பட அதிக சந்தர்ப்பங்களை உருவாக்கும்.

 சுருக்கமாக ஜாதகரின் சுக வாழ்க்கை கேள்விக்கு உரியதாக மாறிவிட வாய்ப்பு உண்டு, மேற்கண்ட ஜாதக அமைப்பை பெற்றவர்கள் தனது தாயாரை
 ( பெண்கள் எனில் தகப்பனாரை )  மிகவும் சிறப்பு கவனம் எடுத்து பார்த்துகொள்வது மேற்கண்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை வெகுவாக குறைக்கும் .

 10 ம் வீடு பாதக ஸ்தான அமைப்புடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் ஆண் எனில் தகப்பனார் வழியில் இருந்தும், பெண் எனில் தாயர் வழியில் இருந்தும் அதிக இன்னல்களை அனுபவிக்கும் சூழ்நிலையை தரும், மேலும் ஜாதகரின் அடிப்படை விஷயமாக கருதும் தொழில் அல்லது வேலை சரியாக அமையாமல், ஜாதகரை ஜீவன வாழ்க்கைக்காக போராடும் சூழ்நிலையை தொடர்ந்து தந்துகொண்டே இருக்கும், ஜாதகர் ஒரு இடத்தில் ஜீவன வாழ்க்கை மேற்கொள்ளுவது என்பது குதிரை கொம்பாகவே இருக்கும், பரதேச ஜீவனம் அமைவதற்கு வழிவகுத்துவிடும்.

சிறு வயதிலேயே தனது தகப்பனாரை விட்டு பிரிந்து வாழும் அல்லது இழந்து வளரும் சூழ்நிலையை தரும் ஜாதக அமைப்பில் இந்த 10ம் வீடு பாதக ஸ்தான அமைப்புடன் தொடர்பு பெற்று இருக்கும் என்பது கவனிக்க தக்கது, மேலும் ஜாதகரின் கௌரவமான வாழ்க்கை கடுமையாக பாதிக்க படுவதிர்க்கு மேற்கண்ட அமைப்பே காரணம், தேவையில்லா விஷயங்களில் தலையிடுவதாலும், மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையீடு செய்வதாலும், ஜாதகரின் கௌரவம் ஆதால பாதாளத்திற்கு செல்லும் என்பது மட்டும் 100%ம்  உறுதி, எனவே ஜாதகர் மற்றவர் விசயத்தில் தலையீடு செய்யாமல் இருப்பது, சகல நிலைகளில் இருந்தும் நன்மை தரும்.

மேற்கண்ட அமைப்பை பெற்ற எந்த ஒரு ஜாதகரும் சுயமாக முதலீடு செய்து தொழில் துவங்குவதை கனவில் கூட நினைத்து பார்க்காமல் இருப்பது மிக்க நல்லது ஏனெனில் ஜாதகர் துவங்கும் தொழில் எதுவென்றாலும், அந்த தொழில் பாதியிலே முடங்கும் அல்லது பெருத்த நஷ்டம் ஏற்ப்பட வாய்ப்பளிக்கும், அல்லது பணியாற்றும் வேலையாட்களால் அதிக இன்னல்களுக்கும், துன்பத்திற்கும் ஆளாகும் சூழ்நிலையை தந்துவிடும்.

மேற்கண்ட அமைப்பை பெற்ற ஜாதகர் தனது தகப்பனாரை சிறப்பு கவனம் எடுத்து கவனித்துகொள்வது  ஜீவன அமைப்பில் இருந்து ஜாதகருக்கு மிகுந்த யோகத்தை வாரி வழங்கும், கௌரவமான வாழ்க்கையையும், அந்தஸ்து மிகுந்த மக்கள் செல்வாக்கினையும் வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 

9443355696
9842421435







வியாழன், 21 ஜூன், 2012

சொந்த வீடு, சுய தொழில் அமைய என்ன செய்ய வேண்டும் ?



 கேள்வி :

அய்யா எனக்கு தற்பொழுது குடியிருக்க சொந்த வீடு இல்லை , மேலும் சுயமாக தொழில் பல  செய்தேன் ஆனாலும் அனைத்திலும் நஷ்டம் , நான் தற்பொழுது எனது மனைவியுடன் மாமனார் வீட்டில் வசித்து வருகிறேன்,  இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள் , எதிர்காலம் எப்படி இருக்கும் முன்னேற்றம் உண்ட என்ன பரிகாரம் செய்ய வேண்டும் ? தயவு செய்து வழிகாட்டுங்கள் .

 அன்புள்ள நண்பருக்கு ..

தங்களுடை ஜாதக அமைப்பில், சொத்து, சுகம், சொந்த வீடு , வண்டி வாகன அமைப்பு மற்றும் தாயாரின் நிலை ஆகியவற்றை குறிக்கும் 4 ம் வீடு  மற்றும் தொழில் , வசதி , தொழில் மூலம் வரும் வருமானம் தங்களது தகப்பனார் ஆகிய அமைப்பை குறிக்கும் 10 ம் வீடுகளின் பலன்களை  தற்பொழுது நடக்கு திசை ராகு திசை தங்களுக்கு நடத்தி கொண்டு இருக்கிறது , மேலும் இந்த பாவகங்கள் கோட்சார ரீதியாக மிகவும் பாதிக்க பட்டுள்ளது .

ஒருவருடைய ஜாதக அமைப்பில் இந்த இரு வீடுகள் கோட்சார ரீதியாக பாதிக்க படும்பொழுது , ஜாதகர் அவசரபட்டு எடுக்கும் சில முடிவுகளால் அதிகம் பாதிக்க பட வேண்டி வரும் என்பது கவனிக்க பட வேண்டிய முக்கிய அம்சம் , ஒருவருக்கு குடியிருக்க அனைத்து வசதியுடன் கூடிய ஒரு நல்ல வீடு , வண்டி , வாகனம் , சொத்து சுகம் , ஆகிய அமைப்புகள் பெற வேண்டுமெனில் அவரது ஜாதக அமைப்பில் இந்த நான்காம் வீடு மிகவும் நன்றாக இருப்பது அவசியம் . மேலும் சுய தொழில் நல்ல முன்னேற்றம் பெறவும் , நல்ல வேலை வாய்ப்பினை பெறவும் , செய்யும் தொழில்களில் நல்ல முன்னேற்றம் பெறவும் சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் வீடு , மிகவும் நல்ல நிலையில் இருப்பது அவசியம் .

இந்த இரண்டு வீடுகள் ஒரு ஜாதகத்தில் பிறப்பிலே பாதிக்க பட்டாலும் , கோட்சார ரீதியாக பாதிக்க பட்டாலும் ஜாதகர் இந்த வகையில் நன்மையான பலன்களை பெற முடியாது , தங்களது சுய ஜாதகத்தில் இந்த இரண்டு வீடுகள் மிகவும் நல்ல நிலையில் இருக்கின்றது , கோட்சார ரீதியாக மட்டும் பாதிக்க பட்டுள்ளது கடந்த 7 வருடமாக மட்டுமே  , இந்த காலங்களில் தாங்கள் தங்களின் பெற்றோரை விட்டு விட்டு மனைவி பேச்சை கேட்டுக்கொண்டு மாமனார் வீட்டில் வந்து அமர்ந்து விட்டால் , செய்யும் தொழிலும் , மற்ற விஷயங்களிலும் தோல்வி தான் கிடைக்கும் .

பொதுவாக அம்மாவை குறிக்கும் 4 ம் பாவகம்  குடியிருக்க நல்ல வீடு, வண்டி , வாகனம் , சொத்து சுகம் , ஆகிய அமைப்புகள் இந்த பாவக வழியில் இருந்தே நடக்கும் , செய்யும் சுய தொழில் அதன் வழி முன்னேற்றம், நல்ல மதிப்பு மரியாதை , செல்வாக்கு  ஆகியன தந்தையை குறிக்கும் 10 ம் பாவக வழியில் இருந்து நடக்கும் , அப்படியெனில் நமது பெற்றோரை நாம் எவ்வளவு நன்றாக கவனித்து கொள்கிறோமோ அந்த அளவிற்கு , நமது வாழ்க்கையில் நல்ல வீடு, வண்டி , வாகனம் , சொத்து சுகம் , சுய தொழில் நல்ல முன்னேற்றம் , வேலை வாய்ப்பில்  நல்ல முன்னேற்றம் என நமக்கு ஜாதக ரீதியாக நன்மையை கொடுக்க ஆரம்பித்து விடும் .

தங்களது சுய ஜாதக அமைப்பில் கோட்சார ரீதியாக 4 ம் பாவகம் மற்றும் 10 ம் பாவகம் ஆகியன பாதிக்கும் பொழுது பெற்றோரை அம்போ என்று விட்டு விட்டு வந்தது மிக பெரிய தப்பு , இதை தாங்கள் நன்கு உணர்ந்து கொண்டு மீண்டும் அவர்களுடன் போய் சேர்ந்து வாழ்வது தங்களின் ஜாதக அமைப்பில் பாதிக்க பட்ட 4 ம் பாவகம் மற்றும் 10 ம் பாவகம் பலனை நன்கு விருத்தி செய்து கொடுக்கும் , மேலும் அவர்களால் தங்களுக்கு சில சிரமங்கள் நேரலாம் ஆனால் அவற்றை எல்லாம் தங்கள் மனம் உவந்து ஏற்றுக்கொண்டு வாழ்க்கை நடத்துங்கள் , சில மாதங்களிலேயே தங்களுக்கு தொழில் ரீதியாகவும் , பொருளாதார ரீதியாகவும் நல்ல முன்னேற்றம் பெறுவீர்கள் , புதிதாக அனைத்து வசதிகளுடன் கூடிய வீடு கட்டும் யோகம் நிச்சயம் கிடைக்கும் , நல்ல வண்டி வாகனம் , சொத்து சுக சேர்க்கை நிச்சயம் ஏற்ப்படும் . இதை மறுத்து தாங்கள் எந்த கோவிலுக்கு சென்று என்ன பரிகாரம் செய்தாலும் தங்களுக்கு ஒன்றும் நல்ல பலன் நடந்து விட போவதில்லை .

பரிகாரம் :

தங்களின் பெற்றோருக்கு தேவையான வற்றை செய்து கொடுங்கள் , அவர்களது ஆசைகளை நிறைவேற்றி வையுங்கள் ( இந்த வயதில் அவர்கள் என்ன கேட்டு விட போகிறார்கள் தங்களது பேரபிள்ளைகள் உடன் கொஞ்சி மகிழ்வதை விட ?   உலகம் அன்பு மயமானது நீங்கள் அதை மற்றவருக்கு கொடுங்கள் அது நிச்சயம் தங்களுக்கு திரும்ப கிடைக்கும் ) அவர்களை இறுதி வரை உங்களது கண்காணிப்பிலேயே வைத்திருங்கள் , இதுவே உடனடி பலன் தரும் பரிகாரம் .

தாயின் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை .

நாம் செய்யும் நன்மை தீமை பொறுத்தே , நமக்கு நல்ல கெட்ட பலன்கள் நடக்கிறது , ஒரு பாவக வழியில் இருந்து நமக்கு அதிக தீமையான பலன்கள் நடை பெற்றால் அந்த பாவக சம்பந்த பட்ட நபரை மனமார  நாம் ஏற்று கொண்டு அவருக்கு  நன்மையை மட்டும் செய்தோம் என்றால் , அந்த பாவக வழி கர்ம வினை பதிவை தீர்த்துக்கொள்ள முடியும் , இதன் மூலம் அந்த பாவகம் விருத்தி பெரும் நமக்கு நன்மையான பலன் நடக்க ஆரம்பிக்கும் , உதாரணமாக ஒருவரது ஜாதக அமைப்பில் மூன்றாம் வீடு பாதிக்க பட்டு இருந்தால் , அவர் தனது மூத்த அண்ணன் அல்லது அக்கா ஆகியோரால் ஏற்ப்பாடு துன்பங்களை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு நன்மையை மட்டும் செய்தால் , சிறிது காலத்திற்கு பிறகு அந்த பாவக வழியில் கர்ம வினை பதிவு கழிந்து , நன்மையான பலன்கள் விருத்தி பெரும் .

இதுவே இறை நிலை நமக்கு வழங்கி இருக்கும் வாய்ப்பு, இதை நாம் உணர்ந்தால் நமது வாழ்க்கையில் வரும் செழிப்பு.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
jothidadeepam@gmail.com