கும்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கும்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 12 மார்ச், 2019

ராகு கேது பெயர்ச்சி தரும் யோக வாழ்க்கை : மகர லக்கினம் ( 2019-2020 )




 மகர லக்கின அன்பர்களுக்கு சத்ரு மற்றும் அயன சயன பாவக வழியில் இருந்து யோக அவயோக நிகழ்வுகள் நடைமுறைக்கு வரும் நேரமிது, நவகிரகங்களில் மிகவும் வலிமை பெற்றதும், சாயாகிரகங்கள் என்று போற்றப்படுவதுமான ராகு கேது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமான மிதுன ராசியிலும், பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியிலும் இனி வரும் 18 மாதங்களில் சஞ்சாரம் செய்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு தனது சஞ்சார நிலையில்  இருந்து வழங்கும் யோக அவயோக பலாபலன்கள் பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!

லக்கினம் : மகரம் 

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமாகவும், சர மண் தத்துவ ராசியாகவும் விளங்கும் மகர ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்திலும், விரைய ஸ்தானமான  12ம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகங்கள் இனிவரும் 18 மாதங்கள் வழங்கும் பலாபலன்கள் பற்றி இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே, ராகுவின் சஞ்சாரம் சத்ரு ஸ்தானத்தில் அமைவது மகர லக்கின அன்பர்களுக்கு தேர்வு, போட்டி பந்தயம், வழக்குகளில் வெற்றியை தரும், உடல் நலனில் நல்ல ஆரோக்கியத்தையும், ஜாதகர் மேற்கொள்ளும் சுய முயற்சியில் வெற்றியையும் தரும், இது புதன் கேந்திராபதியாக சூரியனுடன் 14 பாகைக்குள் சேர்ந்து சஞ்சாரம் செய்யும் நிலையில் மட்டுமே சுபயோக பலாபலன்கள் மகர லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும், குறிப்பாக ஜாதகரின் அறிவு திறன் மேலோங்கும், சத்ரு வழியில் இருந்து நன்மை உண்டாகும், கடன் பெறுவதால் முன்னேற்றம் ஏற்படும், கேட்ட இடத்தில் இருந்து தன உதவிகள் கிடைக்க பெறுவீர்கள், சரியான  தகவல் தங்களுக்கு  கிடைக்க பெற்று ஆதாயம் அதிக அளவில் கிடைக்கும், வியாபர துறையில் உள்ள அன்பர்களுக்கும், மருத்துவ துறையில் உள்ள அன்பர்களுக்கும் வெற்றி மேல் வெற்றி உண்டாகும், சகல காரியங்களிலும் வெற்றி உண்டாகும், திடீர் வருமானம் குறுகிய காலங்களில் நல்ல மாற்றங்களை வாரி வழங்கும், பொது வாழ்க்கையில் உள்ளோருக்கு இனிவரும் காலம் நல்ல எதிர்காலத்தை தரும் என்பதுடன் பதவி உயர்வு நல்ல வெற்றி வாய்ப்புகள் உண்டாகும், துணிந்து செய்யும் காரியங்களில் வெற்றி மேல் வெற்றி உண்டாகும், மருத்துவம் சார்ந்த தொழில் வழியில் உள்ள அன்பர்களுக்கு இனிவரும் காலம் நல்ல மாற்றங்களை வாரி வழங்குவதுடன் கைநிறைவான வருமானமும் சிறப்பாக கிடைக்க பெறுவீர்கள், சத்ரு ஸ்தான வழியில் எதிர்ப்புகளை வென்று நலம் பெரும் நேரமிது.

அதே சமயம் ராகுவின் சஞ்சாரம் களத்திர ஸ்தானத்தில் புதன் கோணாதிபதியாக சூரியனுடன் 14 பாகைக்கு மேல் சேராமல் சஞ்சாரம் செய்யும் நிலையில் அவயோக பலாபலன்கள் மகர லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும், எதிர் பாரத செலவுகள், வீண் விரையம், பொருளாதார சிக்கல்கள், எதிரிகள் தொந்தரவு, கடன் தொந்தரவு, மறைமுக எதிர்ப்புகள் வழியில் இருந்து வரும் இன்னல்கள், நோய் பாதிப்பு, திடீர் மருத்துவ செலவினம், தாங்க இயலாத உடல் தொந்தரவுகள், வயிறு சார்ந்த இன்னல்கள், நரம்பு பாதிப்பு, தவறான புரிதல்கள் மூலம் வாழ்க்கையில் அடையும் நஷ்டங்கள், முன்னேற்ற தடை, தெளிவில்லாத நடவடிக்கைகள், சிந்தனை திறன் பாதிப்பு, உறவுகள் வழியில் இணக்கமற்ற சூழ்நிலை, அதீத உடல் பாதிப்பு, அறுவை சிகிக்சை, போராட்ட வாழ்க்கை முறை, எதிர்பாராத பொருள்இழப்பு , ஜாமீன் தருவதால் வரும் பாதிப்பு என சற்று சிரமங்களை அதிக அளவிலேயே தரக்கூடும்.

விரைய ஸ்தானமான 12ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் கேது பகவான் மகர லக்கின அன்பர்களின் வாழ்க்கையில் அதீத மனப்போராட்டத்தையும், மனஅழுத்தத்தையும் வாரி வழங்கும், பெரியவர்கள், ஆன்மீக பெரியோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்து சரியான விஷ்யங்களை மட்டுமே கிரகித்து நலம் பெற வேண்டிய நேரமிது, பொது வாழ்க்கையில் உள்ள அன்பர்களுக்கு வீண் அவப்பெயர் உருவாக அதிக வாய்ப்பு உண்டு என்பதால் அதிக விழிப்புணர்வுடன் இருப்பது நலம் தரும், தெய்வீகத்தில் அதிக ஈடுபாடு மற்றும் பித்ரு வழிபாடு இரண்டும் தங்களுக்கான இன்னல்களை வெகுவாக குறைக்கும், மனதில் ஏற்படும் வீண் கற்பனைகளும், பயமும் தங்களின் வாழ்க்கையில் கடுமையான நெருக்கடிகளை தரும், போதிய தெளிவில்லாமல் தாங்களே பிரச்சனைகளில் மாட்டிக்கொள்ளும் சூழ்நிலையை உருவாக்கும், மனதில் உள்ள ஆசைகள் யாவும் நிறைவேறாமல் வெறும் கற்பனையாகவே மாறிவிட அதிக வாய்ப்பு உண்டு, எதிர்பாலின சேர்க்கை வழியில் இருந்து வீண் அவமானங்களும் துன்பங்களும் உருவாக வாய்ப்பு உள்ளதால் மிகுந்த எச்சரிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொண்டு நலம் பெறுங்கள்.

வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வு காண முயற்சி செய்வது அவசியமானதாக  படுகிறது, சரியான புரிதலுடன் மனம்விட்டு பேசுவதே தங்களுக்கு நல்லது, நேர்மையில் சிறந்து விளங்கும் மகர லக்கின அன்பர்களுக்கு இனிவரும் காலம் நேர்மைக்கு பல சவால்களை தரும் என்ற போதும், ஸ்திரமாக நின்று வெற்றி பெறுங்கள், வீட்டில் உள்ள பெரியோர்களை மதித்து நடந்து, அவர்கள் ஆசியுடன் வரும் இன்னல்களில் இருந்து விடுபடுங்கள் அன்பர்களே, மிகுந்த பொறுப்புடன் செயல்பட்டு கடமையில் இருந்து தவறாமல் கவுரவத்தை காப்பாற்ற வேண்டிய நேரமிது, கல்வித்துறையில் உள்ள அன்பர்களுக்கு சற்று சோதனைகளை அதிக அளவிலேயே தரக்கூடும், வீண் அவப்பெயரை தவிர்க்க கூட்டாளிகள் நண்பர்கள் போன்றோரை சரியாக தேர்வு செய்யவும், மற்றவர்கள் விஷயங்களில் தலையிடுவதை தவிர்ப்பதே தங்களுக்கான கவுரவத்தை காப்பாற்றும் அன்பர்களே.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 7,1ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக, அவயோக பலாபலன்கள் தனுசு லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும், நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 7,1ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் மேற்கண்ட சாயா கிரகங்களின் சஞ்சார நிலையின் வழியில் இருந்து தனுசு லக்கின அன்பர்களுக்கு யாதொரு நன்மை தீமையையும் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்க...

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

சனி, 27 அக்டோபர், 2018

குரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - கும்பம் )



 சுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினாலும், அமர்ந்த இடத்தில் இருந்தும் எதிர்வரும் ஒருவருட காலத்திற்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி விருச்சிகம் முதல் துலாம் வரை, ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !

 ''எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்'' என்பதற்கு இணங்க ஒருவரது வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தில் அதிமுக்கிய பங்கு வகிப்பது உடல் உயிராகிய " ஜென்ம லக்கினமாகும் " ஒருவரது வாழ்க்கையில் நிகழும் யோக அவயோகம், நன்மை தீமை போன்றவற்றை ஜென்ம லக்கினமே நிர்ணயம் செய்கிறது, இதில் ஏதும் மாற்று கருத்து இல்லை, எனவே நவகிரகங்களின் பெயர்ச்சியை ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் காண முற்படுவதே மிக துல்லியமானதாக அமையும், இதுவே அவரவர் சுய தேடுதலுக்கும், முன்னேற்றமிகு யோக வாழ்க்கைக்கும் அடிப்படையாக அமையும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

மேலும் இயல்பாக கடந்த இரண்டு வருடங்களாக எதிர் வர்க்க ( கன்னி-புதன், துலாம்-சுக்கிரன் ) கிரகங்களின் வீடுகளில் சஞ்சாரம் செய்த குரு பகவான் தனது இயற்க்கை குணத்திற்கு மாறாக செயல் இழந்த நிலையில் சுபயோகங்களை வாரி வழங்கும் வல்லமை அற்று காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது, தனது வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டில் ( விருச்சிகம் ) சஞ்சாரம் செய்யும் குருபகவான் தரும் பலாபலன்களை இனி லக்கின வாரியாக சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

லக்கினம் : கும்பம்

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் ராசியாகவும், ஸ்திர வாயு தத்துவ தன்மையை பெற்றதுமான கும்ப ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, சுய வர்க்க கிரகத்தின் வீட்டில் ( விருச்சிகம் )  பெயர்ச்சியாகும் குரு பகவான் கும்ப லக்கினத்திற்க்கு குடும்பம் மற்றும் லாப ஸ்தான அதிபதியாகிறார், கும்ப லக்கினத்திற்கு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்திற்க்கு பெயர்ச்சி ஆகும் குரு பகவான் கேந்திர ஆதிபத்திய தோஷம் என்ற நிலையை பெறுவது கும்ப லக்கின அன்பர்களுக்கு உகந்தது அல்ல, ஒரு வகையில் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் ( சுய வர்க்கம் ) என்பதால் தொழில் வழியில் இருந்து நன்மைகளை வழங்கிய போதிலும், கும்ப லக்கின  அன்பர்கள் தனது மனம் சொன்னபடி நடந்தால் இன்னல்கள் ஏற்படும், கவுரவ குறைவு உண்டாக வாய்ப்பு உண்டு, பொது காரியங்களில் மிகுந்த கவனம் தேவை, தொழில் வழியிலான புதிய முயற்சிகள் அல்லது முன்னேற்றம் சார்ந்த விஷயங்களில் சுய ஜாதகம் வலிமை பெற்று இருந்தால் மட்டுமே ஈடுபடவும், இல்லையெனில் அமைதி காப்பதே சாலச்சிறந்தது, ஏமாற்றத்தை தவிர்க்க அதுவே சிறந்த வழி, தனது வாழ்க்கை துணை வழியிலான ஆதரவும், பொருளாதர உதவிகளும் கும்ப லக்கின அன்பர்களுக்கு அபரிவிதமாக வந்து சேரும், குறிப்பாக தனது வாழ்க்கை துணையின் பெயரில் செய்யும் தொழில் வழியிலான விருத்தி மிகவும் சிறப்பாக அமையும், தனது பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிக மிக அவசியமானதாகிறது, சுய தொழில் புரிவோர் அனைவரும் மிகுந்த கவனமுடன் இயங்குவது பேரிழப்பை தவிர்க்க உதவும், குறிப்பாக சுய ஒழுக்கமும், மனக்கட்டுப்பாடும் அதிக அளவில் தேவைப்படும்.

குரு பகவான் தனது 5ம் பார்வையால் கும்ப லக்கின அன்பர்களுக்கு குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகத்தை வசீகரிப்பது, வருமானம் சார்ந்த விஷயங்களில் இன்னல்களையும் துன்பங்களையும் அதிக அளவில் தரக்கூடும், குடும்ப வாழ்க்கையில் துன்பங்களும், இல்லற வாழ்க்கையில் சிறு சிறு இன்னல்களும் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு, முறையான நிதி மேலாண்மை செய்யவில்லை எனில் கடுமையான நிதி நெருக்கடிகளை சந்திக்கும் சூழ்நிலை ஏற்படலாம், தனது பேச்சு திறமையை சிறப்பாக கையாண்டு நன்மைகளை பெரும் நேரமிது, உதவி செய்ய யாரும் அற்ற சூழ்நிலை உருவாகும் என்பதால் நிதி கையிருப்பை உறுதிசெய்துகொள்வது நல்லது, வாழ்க்கை துணை மற்றும் நண்பர்கள் வழியில் வீண் வாக்குவாதங்களை வளர்த்துக்கொள்வதும், உறவுகள் வழியில் பகைமை பாராட்டுவதும் மிகுந்த துன்பங்களை தரக்கூடும், சேமிப்பின் மூலம் நலம்  பெற வேண்டிய நேரமிது, வாழ்த்துக்கள்.

குரு பகவான் தனது 7ம் பார்வையால் கும்ப லக்கின அன்பர்களுக்கு மாத்ரு ஸ்தானம் எனும் நான்காம் பாவகத்தை வசீகரிப்பது ஆண்கள் எனில் பெற்ற தாய்க்கும், பெண்கள் எனில் பெற்ற தகப்பாவுக்கும் இன்னல்களை தரக்கூடும், உடல் நலம் மற்றும் மருத்துவ செலவினங்களை தவிர்க்க இயலாது, வண்டி வாகனங்களில் செல்வோர் மிகுந்த பாதுகாப்புடன் பயணம் மேற்கொள்வது சகல நலன்களையும் தரும், போக்குவரத்து மற்றும் சரக்கு உந்து சார்ந்த தொழில் செய்வோர் வருமானம் சார்ந்த இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலை உருவாகக்கூடும், சுகபோக வாழ்க்கைக்கு யாதொரு குந்தகமும் வாராமல் பார்த்துக்கொள்வது நல்லது, தன்னிறைவான பொருளாதார மேம்பாடு, நிதி மேலாண்மை, சரியான திட்டமிடுதல்கள், எதிர்ப்புகளை சிறப்பாக கையாளும் தன்மை என சில நன்மைகள் நடைமுறைக்கு வந்த போதிலும், பாதிப்புகளை தவிர்க்க இயலாது, கேளிக்கை, பொழுது போக்கு அம்சங்களில் அதீத கவனம் செலுத்தினால் வாழ்க்கையே சூனியமாகிவிட வாய்ப்பு உண்டு என்பதை கருத்தில் கொள்க.

 குரு பகவான் தனது 9ம் பார்வையால் கும்ப லக்கின அன்பர்களுக்கு சத்ரு ஸ்தானம் எனும் ஆறாம் பாவகத்தை வசீகரிப்பதும், கடகம் சுய வர்க்க கிரகத்தின் ( சந்திரன் ) வீடாக இருப்பதும் வளர்பிறை காலங்களில் நன்மையை தரும், இருப்பினும் தேய் பிறை காலங்கள் வெகுவான இன்னல்களை தரும், உடல் நலம், கடன் தொந்தரவு, எதிரி தொந்தரவு, எதிர்ப்புகளை சமாளிக்க இயலாத சூழ்நிலை, போதிய வருமானம் இன்மை, வீண் செலவினங்கள், வட்டி வரவு செலவு சார்ந்த பிரச்சனைகள் என்ற வகையில் துன்பங்களை தரும், புதிய முயற்சிகள் வழியிலான வெற்றிகள் பாதிக்கப்படும் அல்லது தடை ஏற்படும், உறவுகள் வழியில் மனக்கசப்பு, பொருளாதார சிக்கல்கள், சரியான வாழ்க்கை பாதையை நிர்ணயம் செய்ய இயலாத நிலை, வயிறு சார்ந்த இன்னல்கள் என்ற வகையில் அதிக அளவிலான துன்பங்களை வாரி வழங்கும் என்பது கவனிக்க தக்கது, எந்த காரணத்தை கொண்டு மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுப்பது உகந்தது அல்ல, அவர்களால் வரும் இன்னல்கள் தங்களின் வாழ்க்கையில் வெகுவான பாதிப்பை தரும், வாழ்க்கை முன்னேற்றத்தை கடுமையாக பாதிக்கும்.

குறிப்பு :

கும்ப லக்கின அன்பர்களுக்கு, தற்போழுது நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் சுய ஜாதகத்தில் 10,2,4,6ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக அவயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 10,2,4,6ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017

சனி பெயர்ச்சி பலன்கள் ( 2017 - 2020 ) லக்கினம் கும்பம்!



 சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் என்று வர்ணிக்கப்படும், இலக்கின பாவகாத்திற்க்கே முதல் உரிமை உண்டு, மேலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதகத்திற்கு பலன் காணும் பொழுது துல்லியமான பலாபலன்களை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக தெளிவாக கூற இயலும், எனவே நவ கிரகங்களின் பெயர்ச்சியை சுய ஜாதக  பாவக வலிமையின் அடிப்படையில் கணிதம் செய்து பார்க்கும் பொழுது சம்பந்தம் பட்ட ஜாதகருக்கு நவ கிரகங்களின் பெயர்ச்சியினால் வரும் நன்மை தீமை பலாபலன்களை பற்றி துல்லியமாக கணிதம் செய்ய இயலும், ( 2017 முதல் 2020 வரை )  கால புருஷ தத்துவத்திற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான்,  தனது சஞ்சார நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு தரும் யோக அவயோக நிகழ்வுகளை பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்  அன்பர்களே!

கும்பம் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் ராசியான கும்ப ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, இனிவரும் இரண்டரை வருடம் லாப ஸ்தானமான 11ம் பாவகத்தில் சனி பகவான் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார், சஞ்சாரம் செய்யும் இரண்டறை வருட காலத்திற்கு சஞ்சார நிலையில் இருந்தும், 6,7,10 என்ற திருஷ்டி நிலையில் இருந்தும், கும்ப லக்கின அன்பர்களுக்கு கோட்சார ரீதியாக வழங்கும் பலாபலன்களை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், " நிறைகுடம் நீர்தளும்பாது " என்ற பழமொழிக்கு இணங்க தனது செயல்திறன் மூலம் எடுத்துரைக்கும் கும்ப இலக்கின அன்பர்களுக்கு, இதுவரை ஜீவன ஸ்தானத்தில் நின்று இன்னல்களை தந்துகொண்டு இருந்த சனி பகவான், லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யது முழுஅளவில் சுபயோக பலன்களை வாரி வழங்க இருக்கின்றார், ஜாதகரின் லாப ஸ்தானம் என்பது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமாக வருவது ஜாதகர் தான் செய்த பாக்கியத்தின் வலிமையை அதிர்ஷ்ட ஸ்தான வழியில் இருந்து அனுபவிக்கும் யோகத்தை தரும், குறிப்பாக ஜாதகரின் அறிவுத்திறன் மூலம் நல்ல லாபமும், நிறைந்த தன சேர்க்கையையும் வாரி வழங்கும், ஆன்மீக பெரியோர்களின் ஆசிர்வாதம் ஜாதகரின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், தெளிவான சிந்தனை மற்றும் செயல்பாடுகள் மகர இலக்கின அன்பர்களுக்கு நீண்ட நெடுங்கால வளர்ச்சியை தொழில் வழியில் வாரி வழங்கும், எதிர்ப்புகள் யாவும் குறைந்து ஆதரவும் மக்கள் செல்வாக்கும் பெருகும், இதனால் ஜாதகருக்கு புது நம்பிக்கையும், புதிய எதிர்காலமும் சிறப்பாக அமைய வாய்ப்புகள் அதிகம் உள்ளது, உயர்கல்வி ஆராய்ச்சி கல்வி ஆகியவற்றில் தேர்ச்சி உண்டாகும், தெய்வீக தரிசனம் செய்ய பயணங்கள் மேற்கொள்ளும் யோகம் உண்டாகும், அறிய பல திருத்தலங்களுக்கு சென்றுவரும் யோகம் உண்டாகும், எதிர்பாராத விதத்தில் அந்நிய மொழி பேசும் நபர்கள் வழியில் இருந்து அதிர்ஷ்டம் தேடிவரும், தங்களது தூரத்து உறவுகள் வழியில் இருந்து ஆதரவும் அவர்கள் வழியிலான நன்மைகளும் தேடிவரும், தங்களின் வாழ்க்கையில் சனி பகவானின் லாப ஸ்தான சஞ்சாரம் நீடித்த அதிர்ஷ்டங்களை வாரி வழங்க தயார் நிலையில் உள்ளது என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

4ம் பாவகத்தை தனது 6ம் பார்வையினால் வசீகரிக்கும் சனி பகவான் தங்களுக்கு வண்டிவாகன யோகம் மற்றும் வீடு நிலம் சார்ந்த வருமான வாய்ப்புகளை பரிபூர்ணமாக வாரி வழங்குவார், வாக்கை தொழிலாக கொண்டுள்ள அன்பர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி அபரிவிதமான லாபங்களை வாரி வழங்கும், குடும்பத்தில் சுப நிகழ்வுகளுக்கு உண்டான செலவினங்கள் அதிகரிக்கும், தாய் வழியிலான சொத்து கும்ப லக்கின அன்பர்களுக்கு தேடிவரும், எதிர்பாராத உதவிகள் குடும்ப நபர்கள் மூலம் கிடைக்க பெறுவீர்கள், நெடுநாள் ஆசைகளான புதிய வீடு மற்றும் புதிய சொகுசு வாகனம் போன்றவை இனிவரும் காலங்களில் தங்களுக்கு அமையும், வங்கிகள் வழியில் இருந்து கடன் தேடிவரும், இதனால் தங்களின் தொழில் வழியிலான வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும், கடன் உதவிகள் கேட்ட இடத்தில் இருந்து தங்களுக்கு கிடைக்கும், தங்களின் சொத்துக்கள் வழியிலான வருமானம் அதிகரிக்கும், வாக்கு வன்மை அதிகரிக்கும், எதிர்பார்த்த நல்ல செய்திகள் தங்களை தேடிவரும், நிதி துறை மற்றும் நிதி நிறுவனம் நடத்தி வரும் அன்பர்களுக்கு இனிவரும் காலம் நல்லாதோர் முன்னேற்றங்களையும்  தொடர் வருமான வாய்ப்புகளையும் வாரி வழங்கும், தனது தாயார் உடல் நிலை சார்ந்த அக்கறை தங்களுக்கு வீண் செலவினங்களை தவிர்க்க உதவும், எதிர்பாராத நேரத்தில் தங்களுக்கு வரும் பொருளாதர உதவிகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு தங்களின் பொருளாதார சிக்கல்களில் இருந்து வெளியேற நல்ல வாய்ப்புகள் உண்டாகும், உடல் ஆரயோக்கியம் மேம்படும், சுய முயற்சிகள் நன்கு பலிதம் பெரும் நேரமிது என்பதனை மட்டும் கருத்தில் கொண்டு செயலாற்றும் நேரமிது, சுபயோகங்கள் சுக ஸ்தான வழியில் இருந்து பரிபூர்ணமாக நடைமுறைக்கு வரும்.

5ம் பாவகத்தை தனது 7ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் தங்களுக்கு பூர்வீகம் சார்ந்த வழியில் இன்னல்களையும், தங்களின் குழந்தைகள் வழியிலான பிரச்சனைகளையும் அதிகரிப்பார், தங்களின் சமயோசித புத்திசாலித்தனம் யாவும் வீண் விரையம் ஆகும், தங்களின் திட்டமிடுதல்கள் யாவும் தடைகளையும் தாமதங்களையும் சந்திக்கும் நேரமிது, குலதெய்வ நிந்தனை தங்களின் வாழ்க்கையில் ஓர் வெற்றிடத்தை ஏற்படுத்தும், சிந்தனை திறன்  பாதிக்கப்படும், தங்களது பூர்வீகத்தை விட்டு வெளியில் சென்று ஜீவனத்தை தேடும் நிலை ஏற்படும், தங்களது சுய முயற்சிகள் யாவும் எதிர்பாராத பின்னடைவை சந்திக்க நேரும், உதவி செய்ய யாரும் அற்ற சூழ்நிலையை உருவாக்கும், நன்மை செய்ய சென்று வீண் அவபெயரை சம்பாதிக்கும் நிலை உருவாகும் என்பதானால் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது தங்களுக்கு நன்மையை தரும், 5ம் பாவக வழியில் இருந்து தாங்கள் அதிக அளவில் இன்னல்களை சந்திக்க வேண்டிவரும் என்பதனால் தங்களின் குல தேவதை வழிபாட்டினை முறையாக செய்து சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து வரும் இன்ன்னல்களில் இருந்து விடுபடுங்கள்.

8ம் பாவகத்தை தனது 10ம் பார்வையால் வசீகரிக்கும் சனிபகவான் கும்ப இலக்கின அன்பர்களுக்கு திடீர் என பெரும் செல்வாக்கையும், தன சேர்க்கையும் வாரி வழங்குவார், குறிப்பாக மருத்துவம் மற்றும் நிதி துறையில் உள்ள அன்பர்களுக்கு இது ஒரு பொற்க்காலம் என்றால் அது மிகையாகாது, உடல் நலம் சார்ந்த இன்னல்களில் இதுவரை போராடிக்கொண்டு இருந்த கும்ப இலக்கின அன்பர்களுக்கு உடனடி நிவர்த்தியும், சுகமும் கிடைக்க பெறுவார்கள், மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் மேம்படும், இன்சூரன்ஸ் மற்றும் போனஸ் மூலம் பெரும் தன வரவை பெற வாய்ப்பு அதிகம் உண்டு, கும்ப இலக்கின அன்பர்களுக்கு எதிர்பாராத பணவரவு என்பது தொடர்ந்து கிடைத்த வண்ணம் இருக்கும், புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையை பெறுவதற்கு சனிபகவானின் 10ம் பார்வை வழிவகுக்கும், சில அன்பர்களுக்கு தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து பெரும் செல்வ சேர்க்கை உண்டாகும், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியில் வருமானம் உண்டாகும், வெளிநாடுகளில் இருந்து வரும் புதிய பொருட்கள் மூலம் அதித லாபம் உண்டாகும், வெளிநாடு மற்றும் வெளியூர் வழியில் இருந்து பெரும் தன சேர்க்கையை கும்ப இலக்கின அன்பர்கள் இனிவரும் காலங்களில் தொடர்ச்சியாக பெறுவார்கள் என்பது வரவேற்க தக்க சிறப்பு அம்சமாகும்.

குறிப்பு :

கும்ப லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 11,4,5,8ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள்  11,4,5,8ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் கும்ப லக்கின அன்பர்களுக்கு மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

சனி பகவான் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் காலங்கள் :

( 26/01/2017 முதல் 21/06/2017 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும்.

( 21/06/2017 முதல் 26.10.2017 ) வரை
சனி பகவான் மீண்டும் வக்கிரக கதியில் விருச்சிக ராசியிலும்.

( 26/10.2017 முதல் 24/01/2020 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும் சஞ்சாரம் செய்கின்றார்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்

9443355696

செவ்வாய், 11 ஜூலை, 2017

தொழில் ஸ்தானம் வலிமை பெறவில்லை எனில், ஜாதகருக்கு நல்ல தொழில் முன்னேற்றம் இல்லையா ?


 ஒருவரது சுய ஜாதகத்தில் தொழில் முன்னேற்றத்தை நிர்ணயம் செய்வதில் ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் பாவக வலிமை மிக முக்கிய பங்கு வகிக்கிறது, குறிப்பாக ஒருவரது சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகரின் வாழ்க்கையில் ஜீவனத்திற்கு யாதொரு சிக்கல்களும் இல்லமால் சரியான தொழில் அமைப்பை தந்துவிடும், ஜாதகருக்கு உகந்த தொழில் எதுவோ? அதில் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் ஏற்ப்படுத்தி ஜாதகருக்கு தொழில் ரீதியான நன்மைகளை சிறப்பாக வாரி வழங்கிவிடும், இதில் மாற்று கருத்து இல்லை, சிலரது ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் பாவகம் மிகவும் வலிமை அற்றோ? பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றோ இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகர் தமக்கு உகந்த தொழிலிலை தேர்வு செய்வதென்பதே மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து நிற்கும், ஜாதகரின் எண்ணமும் செயல்பாடும் தவறான தொழில் தேர்வுகளை செய்து அதன் வழியிலான இன்னல்களையும் நஷ்டங்களையும் சந்திக்கும் நிலைக்கு ஆளாகும், குறிப்பாக ஜாதகர் தேர்வு செய்து செய்யும் தொழில்கள் யாவும் ஜாதகருக்கு சிறிதும் பொருத்தமற்று காணப்படும், இதனால் ஜாதகரின் ஜீவன முன்னேற்றம் என்பது கிணற்றில் இட்ட கல் போன்று யாதொரு அசைவும் இன்றி கிடக்கும்.

மேலும் சிலரது வாழ்க்கையில் தொழில் ரீதியான நன்மைகளை பெறுவதற்கு பல வருடங்கள் காத்திருக்கும் சூழ்நிலையை தரும், அல்லது ஜாதகரின் உழைப்பின் பயனை மற்றவர்களுக்கு தாரைவார்த்து கொடுத்துவிட்டு, நிர்கதியாக நிற்கும் சூழ்நிலையை தரும், வேறு சிலருக்கு எதிர்ப்புகளின் மூலம் ஜாதகரின் உழைப்பும் வருமானமும் வெகுவாக பாதிக்கப்படும், செய்யும் தொழிலை சூழ்நிலை காரணமாக கைவிடும் சூழ்நிலைக்கு ஜாதகர் தள்ளபடுவார், மேலும் ஜீவன ரீதியான போராட்டங்கள் ஜாதகரை மிகுந்த சோர்வுக்கு ஆளாக்கும், சுய கௌரவம் மற்றும் அந்தஸ்து குறையும், உகந்த தொழிலை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்ப்படும், தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகள் கடுமையான பின் விளைவை தரும், ஆழம் தெரியாமல் தொழிலில் இறங்கி கடுமையான இன்னல்களை சந்திக்கும் நிலையை தரும், உதவி செய்ய யாரும் அற்ற சூழ்நிலையை தரும், எனவே சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தான வலிமை நிலையை தெளிவாக உணர்ந்து, செயல்படுவது ஜாதகரின் தொழில் வெற்றிகளை சிறப்பாக அமைத்து தரும்.

பொதுவாக சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று இருந்தால் போதும் ஜாதகருக்கு நல்லதொரு ஜீவனமும் சிறப்பான தொழில் முன்னேற்றமும் அமைந்துவிடும் என்று கருதுவது சரியான கருத்து அல்ல, நடைமுறையில் அல்லது எதிர்வரும் திசா புத்திகள் வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே ஜாதகர் வலிமை பெற்ற  ஜீவன ஸ்தான வழியில் இருந்து முழு அளவிலான நன்மைகளை பெறுவார், ஒருவேளை நடைமுறையில் அல்லது எதிர்வரும் திசாபுத்திகள் வலிமை பெற்ற ஜீவன ஸ்தான  பலனை ஏற்று நடத்தவில்லை எனில், சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று இருந்தாலும் அதனால் ஜாதகருக்கு யாதொரு நன்மையையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்வது நலம் தரும், குறிப்பாக ஜாதகரின் உழைப்பு அனைத்தும் வீணாகும், என்பதனை நினைவில் நிறுத்துவது அவசியமாகிறது.

உதாரணமாக கிழ்கண்ட ஜாதகத்தை சிந்தனைக்கு எடுத்துகொள்வோம்


லக்கினம் : கும்பம் '
ராசி : கடகம்
நடசத்திரம் : ஆயில்யம் 2ம் பாதம்

மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு ஜீவன ரீதியாக கடுமையான இன்னல்களை தரும் அமைப்பாகும், ஜாதகர் சுயமாக தொழில் செய்து வெற்றி பெறுவது என்பது இயலாத காரியமாக அமையும், குறிப்பாக ஜாதகர் மண் தத்துவம் சார்ந்த தொழில் செய்யும் பொழுது ஜாதகருக்கு கடுமையான நஷ்டங்களையும் இன்னல்களையும் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், ஜாதகர் கடந்த 12 வருடங்களாக மண் தத்துவம் சார்ந்த தொழில் மட்டுமே செய்து வருகிறார், இதானால் ஜாதகரின் வாழ்க்கையில் யாதொரு நன்மையையும் முன்னேற்றம் இன்றியே காணப்படுகிறது, இதற்க்கு அடிப்படை காரணமாக தற்போழுது ஜாதகருக்கு நடைமுறையில் உள்ள சுக்கிரன் திசை ( 09/09/2002 முதல் 09/09/2022 வரை ) ஜாதகருக்கு  4,10ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு  அளவில் விரைய ஸ்தான பலனையே ஏற்று நடத்திடுவது ஜாதகரின் ஜீவன வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றுகிறது, சுய ஜாதகத்திலும் ஜீவன ஸ்தானம் பாதிக்கப்பட்டு, நடைபெறும் திசா புத்தியும் ஜாதகருக்கு  பாதிக்கப்பட்ட ஜீவன ஸ்தான பலனை தருவது ஜாதகருக்கு தொழில் ரீதியான வெற்றியை  சிறிதும் தாராமல், ஜாதகருக்கு தொழில் ரீதியான மனநிம்மதி இழப்பை மட்டுமே வாரி வழங்கி கொண்டு இருக்கிறது என்பது வருத்தத்திற்க்கு உரிய விஷயமாகும்.

மேலும் ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் வருமானத்தை குறிக்கும் 2ம் வீடு திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகர்  சம்பாதிக்கும் அனைத்தையும் வீண் விரையம் அல்லது திடீர் என இழக்கும்  சூழ்நிலையை ஏற்படுத்தும், குறிப்பாக மருத்துவ செலவினங்கள், தேவையற்ற செலவுகள் என ஜாதகருக்கு மிகுந்த இன்னல்களை வாரி வழங்கும்,  மேலும் இதனால் ஜாதகர் தான் செய்யும் தொழில் வழியில் இருந்து கடுமையான மனஉளைச்சல்களையும், எதிர்ப்புகளையும் சந்திக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார், மேலேயும் உழைப்பிற்க்கு உண்டான வருமானம் இன்றி தவிக்கும் நிலையும், ஏமாற்றும் மனிதர்களால் வஞ்சிக்கும் நிலைக்கு ஆளாகி, சுய கவுரவம் மற்றும் மரியாதையை இழக்கும் நிலை உருவாகிறது, எனவே  சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தான வலிமை இழப்பு  ஜாதகரின் சுய கவுரவத்தையும் கடுமையாக  பாதிக்கும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு விஷயமாகும்.

பொதுவாக சுக்கிரன் திசை நடைபெற்றால் ஜாதகருக்கு சகல யோகத்தையும் தரும் என்பது முற்றிலும் தவறான கருத்தாகும், சுய ஜாதகத்தில் எந்த பாவக பலனை சுக்கிரன் திசை ஏற்று நடத்துகிறது என்ற உண்மை அறியாமல் கூறப்படும் வாய் வார்த்தையே அன்றி சிறிதும் உண்மையில்லை, மேற்கண்ட ஜாதகத்தில்  சுக்கிரன் தனது திசையில் 4,10ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தனது திசை முழுவதும் விரைய ஸ்தான பலனையே 4 மற்றும் 10ம் பாவக வழியில் இருந்து தருவது ஜாதகருக்கு சுக்கிரன்  திசை  அவயோக பலனையே தருகின்றது என்பது  உறுதிபட தெளிவாக தெரிகிறது.

நடைபெறும் திசை  எதிர் வரும் திசை, சுப கிரகத்தின் திசை அசுப கிரகத்தின் என்பதை வைத்து ஜாதக பலாபலன் நிர்ணயம் செய்வது என்பது முற்றிலும் தவறான ஜாதக கணித முறை, சுய ஜாதகத்தில ஏற்று நடத்தும் பாவக வலிமை பற்றி தெளிவாக உணர்ந்து பலன் காண்பதே மிக துல்லியமாக அமையும்.

குறிப்பு :

மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகம் பாதிக்கப்பட்டு இருப்பினும் மாற்று வழி ஜீவனத்தை குறிக்கும் 3,7,11ம் பாவகங்கள் மிக மிக வலிமையுடன் இருப்பது ஜாதகருக்கு  கிடைத்திருக்கும் உள்ளங்கை நெல்லிக்கனி ஆகும், மேற்கண்ட பாவக வழியிலான ஜீவனத்தை ஜாதகர் தேடினால் அதில் 100% விகித வெற்றியை ஜாதகர் பெறாலாம் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

சனி, 18 மார்ச், 2017

சனி திசை தரும் பலாபலன்கள், சனி தனது திசையில் ஏற்று நடத்தும் பாவக வழியில் இருந்து தரும் நன்மை தீமை.



 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவனம் மற்றும் லாப ஸ்தான அதிபதியான சனி, தனது திசையில் இன்னல்களை மட்டுமே தரும் என்று கருதுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது, சுய ஜாதகத்தில் நடைபெறும் சனி திசை தரும் பலன் ( சனி தனது திசையில் ஏற்று நடத்தும் பாவக தொடர்பு ) பற்றி ஓர் தெளிவில்லாமல் கூறப்படும் கருத்தாகவே இருக்கும், ஒருவருக்கு சனி திசை நடைபெறும் பொழுது சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் சம்பந்தப்பட்ட ஜாதகர் ஏற்று நடத்தும் பாவக வழியிலான நன்மைகளையும், வலிமை அற்ற பாவாக பலனை ஏற்று நடத்தினால் சம்பந்தப்பட்ட பாவக வழியிலான இன்னல்களையும், பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தினால், பாதக ஸ்தான வழியிலான கடுமையான நெருக்கடிகளையும் ஜாதகர் அனுபவிக்கும் நிலையை தரும், மேற்கண்டவற்றை கருத்தில் கொள்ளாமல் சனி திசை என்றாலே இன்னல்களை மட்டுமே தரும் என்று கருதுவது, சுய ஜாதக கணித உண்மைக்கு புறம்பானது என்பத உறுதியாக கூற இயலும், சனி திசை தரும் யோக அவயோகம் பற்றி ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : சிம்மம்
ராசி : கும்பம்
நட்ஷத்திரம் : சதயம் 4ம் பாதம்

மேற்கண்ட ஜாதகம் உண்மையிலேயே வியப்புக்கு உரிய ஒன்றாகவே கருதலாம், ஏனெனில் சுய ஜாதகத்தில் லக்கினம் உற்பட ஒன்பது பாவகங்கள் பாதிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக 2,4,8,10ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடனும், 1,5,7,9,11ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடனும் சம்பந்தம் பெற்று மிகுந்த பாதிப்பிற்கு ஆளாகி இருந்த போதிலும், கடந்த குரு திசை, தற்போழுது நடைபெறும் சனி திசை, எதிர்வரும் புதன் திசை, கேதுதிசை, சுக்கிரன் திசை வரை ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக பலனை மட்டுமே ஏற்று நடத்துகிறது என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், சுய ஜாதகத்தில் பெரும்பான்மையான பாவகங்கள் பாதிக்கப்பட்டு இருந்த போதிலும், சூரியன்,சந்திரன் மற்றும் ராகு திசாபுத்தியை தவிர மற்ற அனைத்து திசா புத்திகளும் ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக பலனையே ஏற்று நடத்துகிறது என்பது அதிசயமான விஷயம் என்பது ஜோதிடம் உணர்ந்தவர்களுக்கு நிச்சயம் புரியும் என்பதுடன் வியப்பை தரக்கூடும்.

இன்றைய சிந்தனைக்கு வருவோம் தற்போழுது நடைமுறையில் உள்ள சனி திசை ஜாதகருக்கு வழங்கும் பலாபலன்கள் என்ன ? ஜாதகர் சிம்ம லக்கினம் சனி சத்ரு மற்றும் களத்திர ஸ்தான அதிபதி என்ற நிலையை பெற்ற போதிலும், தனது திசையில் வலிமை பெற்ற 3ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக வாழ்க்கையை தந்துகொண்டு இருக்கின்றது, மேலும் ஜாதகரின் லாப ஸ்தானம் கால புருஷ தத்துவ 3ம் ராசியான மிதுனத்தில் ஆரம்பித்த போதிலும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சுக ஸ்தானம் என்று அழைக்கப்படும் கடக ராசியில் முழுமையாக வியாபித்து, ஜாதகரின் அதிர்ஷ்ட வாழ்க்கையை பன்மடங்கு அதிகரித்து தருகின்றது, ஜாதகரின் லாப ஸ்தானம் பெரும்பான்மையான பாகைகள் ( 26 பாகைகள் ) கடக ராசியிலே வியாபித்து நிற்பது, ஜாதகருக்கு லாப ஸ்தான வழியிலான யோகங்களை முழு வீச்சில் செய்யும், அதுவும் தற்போழுது நடைபெறும் சனி திசை வலிமை பெற்ற லாப ஸ்தான பலனை ஏற்று நடத்துவது, ஜாதகரின் வாழ்க்கையில் மிக சிறப்பான நன்மைகளையும், யோகங்களையும் வாரி வழங்குவது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

பொதுவாக சிம்ம லக்கினத்திற்கு சனி திசை நடைபெற்றால், ஜாதகரின் நிலை மிகவும் மோசமாகும் என்று பொது கருத்தாக கூறுவது உண்டு, மேற்க்கண்ட ஜாதகருக்கு சனி திசையே வலிமை பெற்ற லாப ஸ்தான பலனை ஏற்று நடத்துவது  பொது பலன் காணும் அன்பர்களுக்கு மிகப்பெரிய  அதிர்ச்சியை தர கூடும், ஆகவே சுய ஜாதகத்தில் நடைபெறும் திசாபுத்தி எதுவென்றாலும் சரி சம்பந்தப்பட்ட திசாபுத்தி ஏற்று நடத்தும் பாவக வலிமையை கருத்தில் கொண்டு பலாபலன்கள் காண்பதே துல்லியமான சுய ஜாதக பலாபலன்கள் காண உதவும்.

மேற்கண்ட ஜாதகருக்கு மேலும் சில சிறப்புகள் உண்டு அது சனி திசைக்கு அடுத்து வரும் புதன்,கேது ,சுக்கிரன் திசைகளும் ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக பலனையே ஏற்று நடத்துகிறது என்பது ஜாதகரின் வாழ்க்கையில் சிறப்பான யோக வாழ்க்கையை தரும், சுய ஜாதகத்தில் ஒன்பது பாவகங்கள் பாதிக்கப்பட்ட போதிலும், நடைபெறும் திசையும், எதிர்வரும் திசைகளும் ஜாதகருக்கு ஜாதகமாக இருப்பது வரவேற்கத்தக்க அம்சமாகும்.

ஜாதகர் எந்த தொழிலை தேர்வு செய்வது என்ற கேள்வியை முன் வைக்கிறார், அவருக்கு " ஜோதிடதீபம் "  வழங்கும் ஆலோசணையாவது சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவகம் குறிக்கும் தொழில்களை தேர்வு செய்து செய்யும் பொழுது ஜாதகரின் ஜீவன வாழ்க்கை மிகப்பெரிய முன்னேற்றங்களை சந்திக்கும், அதன் அடிப்படையில் ஜாதகர் அழிவை சந்திக்கும் நீர்த்துவ பொருட்களான பால்,காய்கறி, மளிகை, உணவு தொழில், தேநீர் நிலையம், பால் பொருட்கள் சார்ந்த தொழில்கள், விவசாய பொருட்கள், அரிசி வியாபாரம் போன்ற தொழில்களை, தனக்கு உகந்ததை தேர்வு செய்து சிறு வியாபாரமாக ஆரம்பித்து வாழ்க்கையில் வெற்றி காணலாம், மேலும் அதன் வழியிலான அதிர்ஷ்டங்களையும் ஜாதகர் தன்னிறைவாக பெறலாம் என்பதே " ஜோதிடதீபம் " ஜீவன ரீதியாக ஜாதகர் வெற்றி பெற வழங்கும் சிறப்பு ஆலோசனை.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

சனி, 11 மார்ச், 2017

லக்கினம் மற்றும் ஏழாம் பாவகத்தை வலிமை பெற செய்யும் ராகுகேது !



சுய ஜாதகத்தில் தான் அமரும் பாவகத்தை முழுவதும் தமது ஆளுமையின் கீழ் கொண்டுவரும் வல்லமை பெற்ற சாயா கிரகங்கள், ஒருவருக்கு தாம் அமர்ந்த பாவக வழியிலான நன்மைகளை தரும் அமைப்பில் இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகர் கொடுத்து வைத்தவர் எனலாம், ஏனெனில் சுய ஜாதகத்தில் அதி வலிமை வாய்ந்த கிரகங்களான ராகுகேது தாம் அமர்ந்த பாவகத்தை வலிமை பெற செய்யும் பொழுது சம்பந்தப்பட்ட பாவக வழியிலான யோகங்களை முழு அளவில் பரிபூர்ணமாக பெறுவார், ( உதாரணமாக அதிகாரமும்,அறிவு திறனும், வலிமையும் , ஒருங்கே அமையப்பெற்ற ஒரு நாட்டின் மன்னன் , நல்லவராக இருப்பின் அவர் சார்ந்த சமூகம் மற்றும் மக்கள் சிறப்பான முன்னேற்றங்களையும், நன்மைகளையும் எப்படி பெறுவார்களோ, அதற்க்கு இணையான நன்மைகளை )  சாயா கிரகங்கள் ஜாதகருக்கு வாரி வழங்கும், மேலும் தனிப்பட்ட சிறப்பு திறமைகளை இயற்கையாக பிறவியிலேயே பெற்று இருப்பார்கள் .

குறிப்பாக சுய ஜாதகத்தில் சாயா கிரகமெனும் ராகு கேது, லக்கினம் மற்றும் களத்திர பாவகத்தை வலிமை பெற செய்யும் பொழுது ஜாதகர் லக்கினம் மாற்று களத்திர ஸ்தான வழியில் இருந்து பெரும் யோக வாழ்க்கைக்கு சிறு குறையும் இருக்காது, மேற்கண்ட அமைப்பு சிம்மம் மற்றும் கும்ப லக்கினத்தை பெற்றவர்களுக்கு இருப்பின், அவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று சந்தேகம் இன்றி கூறலாம், ஜாதகரின் உடல் நலம் மனநலம், செயல்திறன் ஆகியவை ஸ்திரமான இயக்கத்தை பெற்று இருக்கும், சுய கட்டுப்பாடு, ஒழுக்கம், ஸ்திரமான அறிவு திறன், தெய்வ அனுக்கிரகம், மிதம் மிஞ்சிய புத்திசாலித்தனம் மூலம் அனைத்திலும் வெற்றி வாய்ப்பினை பெறுவார்கள்.


லக்கினம் : கும்பம்
ராசி : மேஷம்
நட்ஷத்திரம் : அஸ்வினி 3ம் பாதம்.

மேற்கண்ட ஜாதகருக்கு ஜெனன ஜாதகத்தில் லக்கினத்தில் ராகுவும், களத்திர ஸ்தானத்தில் கேதுவும் அமர்ந்து இருப்பதை சர்ப்ப தோஷ ஜாதகம் என்று நிர்ணயம் செய்வது  பொதுவான அணுகு முறை மேலும் அது உண்மைக்கு புறம்பானது, மேற்கண்ட அமைப்பில் சுய ஜாதகத்தை லக்கினம் மற்றும் களத்திர ஸ்தானத்தில் அமரும் சாயா கிரகங்களான ராகுகேது தான் அமர்ந்த பாவகத்தை 100% விகித வலிமை பெற செய்கின்றனர், எனவே லக்கினத்தில் அமர்ந்த  ராகு பகவானால் ஜாதகர் லக்கினம் முழு வலிமை பெற்றும், களத்திர ஸ்தானத்தில் அமர்ந்த கேது பகவானால் 7ம் பாவகம் முழு வலிமை பெற்றும் ஜாதகர் சம்பந்தப்பட்ட பாவக வழியிலான யோக பலன்களை 100% விகிதம் பெரும் வல்லமையை பெறுகின்றார், எனவே சுய ஜாதகத்தில் சாயா கிரகங்கள் அமர்ந்த பாவக வழியில் இருந்து வலிமை பெற்று நன்மையை தருகின்றாரா ? வலிமை அற்று தீமையை தருகின்றாரா ? என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது.

மேற்கண்ட ஜாதகருக்கு ஜெனன ஜாதகத்தில் ராகு பகவான் லக்கினத்தில் வலிமை பெற்று அமர்ந்து இருப்பது, ஜாதகருக்கு லக்கின பாவக வழியில் இருந்து சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், குறிப்பாக ஜாதகரின் லக்கினம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு, அதிர்ஷ்டத்தை குறிக்கும் 11ம் ராசியாக அமைவது, ஜாதகருக்கு லக்கின பாவக வழியிலான அதிர்ஷ்டங்களை ராகு பகவானால் கிடைக்க பெறுவார், வளரும் சூழ்நிலையில்  அதிர்ஷ்ட யோகங்களை பெறுவதும், மிதமிஞ்சிய தன்னம்பிக்கை எப்பொழுதும் தனது மனதில் கொண்டவராக திகழ்வார், சிறந்த மதி நுட்பமும் கூரியஅறிவுத்திறனும் ஜாதகருக்கு இயற்கையிலேயே அமைந்து இருக்கும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் தன்மையையும், தான் செய்யும் காரியங்கள் அனைத்திலும் ஓர் நேர்த்தியை கடைபிடிக்கும் வல்லமை பெற்றவராக திகழ்வார், சூழ்நிலைகளை கையாள்வதில் இவருக்கு நிகராக வெறும் எவரும் இல்லை எனலாம், முற்போக்கு சிந்தனை, மெய்பொருள் கண்டுணர்ந்து செயல்படும் யோகம், அதிர்ஷ்டத்தின் மூலம் வாழ்க்கையை சிறப்பிக்கும் வல்லமை என ஜாதகருக்கு சுபயோகங்கள் வலிமையாக வேலை செய்யும், குறிப்பாக ராகு காலத்தில் ஜாதகர் செய்யும் விஷயங்கள் 100% விகித வெற்றிகளை வாரி வழங்கும், நீண்ட ஆயுள், தெளிந்த நல்லறிவு, விழிப்பு மிக்க மனநிலை, ஜாதகரின் வாழ்க்கையில் முழு அளவிலான யோகங்களை தங்கு தடையின்றி தரும்.

கேது பகவான் களத்திர ஸ்தானத்தில் வலிமை பெற்று அமர்ந்து இருப்பது, ஜாதகருக்கு களத்திர பாவக வழியில் இருந்து சுப யோகங்களை வழங்கும், லக்கினம் ஜாதகர் சார்ந்த விஷயங்களையும், களத்திர பாவகம் ஜாதகருடன் தொடர்பு பெரும் நபர்களான , வாழ்க்கை துணை, நண்பர்கள், கூட்டாளிகள், வெளிவட்டார பழக்க வழக்கங்கள், பொதுமக்களால் சார்ந்த விஷயங்களையும் தெளிவு படுத்தும், மேற்கண்ட ஜாதகருக்கு களத்திர பாவகம் கேது பகவானால் 100% விகித வலிமை பெறுவது ஜாதகருக்கு மேற்கண்ட அன்பர்களின் தொடர்புகள் மூலம் மிகுந்த நன்மைகளையும் முன்னேற்றங்களையும்  ஜாதகர் தனது வாழ்நாள் முழுவதும் பெறுவதற்கு உண்டான  வாய்ப்புகளை வழங்கு, மேலும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜாதகரின் காலத்திர ஸ்தானம் 5ம் ராசியான சிம்மத்தில் அமைவது, சிறந்த வாழ்க்கை துணையையும், அவர்கள் வழியிலான மதி நுட்ப ஆலோசனை மூலம் வாழ்க்கையில் பெரும் வெற்றிகளையும் குறிக்கின்றது, ஜாதகருக்கு  அமையும் வாழ்க்கை துணை, நண்பர்கள், மற்றும் கூட்டாளிகள் வழியில் இருந்து  மிகுந்த அதிர்ஷ்டங்களை பெறுவார், உலக அறிவு ஜாதகருக்கு மிதம்மிஞ்சிய அளவில் கிரகிக்கும் வல்லமையை தரும், வெளியூர் வெளிநாடுகளில் இருந்து வரும் முன்னேற்றம் என்பது ஜாதகருக்கு அபரிவிதமானதா அமையும்.

சுய ஜாதகத்தில் ஜாதகருக்கு எப்பொழுதெல்லாம் 1,7ம் பாவக பலன்களை, நவகிரக திசாபுத்திகள் ஏற்று நடத்துகிறதோ அப்பொழுதெல்லாம், ஜாதகர் மேற்கண்ட பாவக வழியிலான சுபயோகங்களை தன்னிறைவாக பெறுவார் என்பது கவனிக்கத்தக்க முக்கிய அம்சமாகும்.

குறிப்பு :

சுய ஜாதகத்தில் சாயா கிரகங்கள் வலிமை பெறுவது, சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு தான் அமர்ந்த பாவக வழியில் இருந்து 100% விகித நன்மைகளை மட்டுமே செய்யும் என்பதே உண்மை நிலை, எனவே சுய ஜாதகத்தில் ராகுகேது வலிமை பெற்று அமர்ந்து இருக்கின்றதா? வலிமை அற்று அமர்ந்து இருக்கின்றதா ? என்பதில் மட்டும் தெளிவு பெறுவது அவசியமாகிறது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வியாழன், 9 மார்ச், 2017

தொழில் யோகங்களை வழங்கும் பத்தாம் பாவக வலிமையும், ஜாதகருக்கு அமையும் தொழில் வாய்ப்புகளும் !


" செய்யும் தொழிலே தெய்வம், அதில் திறமை நமது செல்வம் " என்ற வாசகத்தை மெய்ப்பிக்க சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம் வலிமை பெறுவது மிக மிக அவசியமாகிறது, ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவதுடன் சுய ஜாதகத்தில் மற்ற பாவகங்கள் வலிமை பெறுவது, ஜாதகரின் வாழ்க்கையில் தொழில் ரீதியான விருத்திகள் பன்மடங்கு அதிகரிக்கும், தமக்கு உகந்தது சுய தொழிலா? அல்லது அடிமை தொழிலா? என்பதை தேர்வு செய்ய சுய ஜாதகத்தில் ஜீவனஸ்தானம் எனும் 10ம் வீடு தொடர்பு பெரும் பாவக வழியில் இருந்து மிக தெளிவாக உணர இயலும், மேலும் தான் தேர்வு செய்ய வேண்டிய துறை எதுவென்று நிர்ணயம் செய்யவும் ஜீவன ஸ்தானம் தொடர்பு பெரும் பாவகம் நமக்கு நன்கு உணர்த்தும்.

தொழில் துறையில் மூன்று பிரிவுகள் உண்டு 1) உற்பத்தி துறை 2) விற்பனை துறை 3) சேவை துறை மேற்கண்ட மூன்று பிரிவுகளில் ஜாதகருக்கு உகந்ததை தேர்வு செய்யவோ அல்லது இயற்கையாக அமையவோ சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் மிகவும் வலிமையுடன் இருப்பது அவசியாமாகிறது, சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் வீடு தொடர்பு பெரும் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு எந்த ராசியாக அமைகிறது என்பது மிக முக்கியம், ஏனெனில் ஜாதகரின் ஜீவனத்தை நிர்ணயம் செய்வதில் சம்பந்தப்பட்ட ராசி மிக முக்கிய பங்கு வகிக்கிறது, மேலும் சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் வீடு எக்காரணத்தை கொண்டும் 6,8,12ம் பாவகங்களுடன் சம்பந்தம் பெறாமல் இருப்பது ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளை தரும், மேலும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறாமல் இருப்பது, ஜாதகருக்கு தொழில் ரீதியான வெற்றிகளை சரளமாக வாரி வழங்கும், மாறாக மேற்கண்ட பாவகங்களுடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் வாழ்க்கையை ஜீவன ரீதியாக கடும் நெருக்கடிகளையும், சுய மரியாதை குறைவான தொழில்களை தேர்வு செய்து ஜீவனம் செய்யு சூழ்நிலைக்கு ஆளாக்கும், குறிப்பாக பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் ஜீவன வாழ்க்கையையே கேள்விக்குறியாக மாற்றிவிடும் என்பது கவனிக்கத்தக்க விஷயம், சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் பெரும் யோக வாழ்க்கையை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வோம் அன்பர்களே !


லக்கினம் : கும்பம்
ராசி : மேஷம்
நட்ஷத்திரம் : அஸ்வினி 3ம் பாதம்

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு லாபம் மற்றும் அதிர்ஷ்டத்தை குறிக்கும் வீடான கும்பராசியை லக்கினமாக பெற்ற மேற்கண்ட ஜாதகருக்கு, சுய ஜாதகத்தில் 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளை தரும் அமைப்பாகும், ஜாதகரின் ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 8ம் வீடாக அமைந்து வலிமை பெற்று இருப்பது ஜாதகர் தான் செய்யும் தொழில் வழியிலான யோகங்களை புதையலுக்கு நிகராக பெறுவார் என்பதை தெளிவு படுத்துகிறது, மேலும்  ஜீவன ஸ்தானம் ஜாதகருக்கு ஸ்திர நீர் தத்துவ அமைப்பை பெறுவது ஜாதகரின் மன எண்ணத்தில் எண்ணியபடி ஜீவன வாழ்க்கை சிறப்பாக அமையும், மனதில் என்ன நினைக்கின்றாரோ அதன்படியே ஜீவன முன்னேற்றமும், தொழில் வழியிலான விருத்தியையும் பெறுவார், மேலும்  ஜாதகர் தனது மன உறுதியான செயல்பாடுகள் மூலம் உலகையே தன்பக்கம் திரும்பி பார்க்க வைக்கும் வல்லமை பெற்றவராக திகழ்வார்.

  கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் வீடான கும்ப ராசியை லக்கினமாக பெறுவதும், லக்கினமும் 100% விகித வலிமையை பெறுவதும் ஜாதகர் மிகுந்த அதிர்ஷ்டசாலி என்பதை தெளிவு படுத்துகிறது, பிறப்பில் இருந்தே ஜாதகர் அதிர்ஷ்டகரமான யோக வாழ்க்கையை பெறுபவர் என்பதை வலிமை பெரும் லக்கின வழியில் இருந்து நாம் தெளிவாக உணர்ந்துகொள்ள முடியும், மேற்கண்ட ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகருக்கு யோக வாழ்க்கையை வழங்குகிறது என்பது ஓர் சிறப்பு அம்சம் என்ற போதிலும், ஜீவன ஸ்தானத்துடன் மற்ற வீடுகள் எந்த வகையிலாவது தொடர்பை பெருகின்றதா ? என்பதில் தெளிவு பெறுவது ஜாதகரின் ஜீவன ரீதியான முன்னேற்றம் பற்றியும், ஜீவனம் சார்ந்து ஜாதகர் பெரும் முழு வலிமையை பற்றியும் தெளிவாக அறிந்துகொள்ள உதவும்.

மேற்கண்ட ஜாதகருக்கு 10ம் வீடு ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதுடன் மட்டும் அல்லாமல் 1,4,7,8ம் வீடுகளும் ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு லக்கின வழியில் இருந்து அந்தஸ்து, சுய மரியாதை, பெயரும் புகழும் கிடைத்தால், செல்வாக்கு, அரசு மரியாதை ஆகியவை தேடி வரும், 4ம் பாவக வழியில் இருந்து சுயமாக சொத்து சுக சேர்க்கை, வீடு நிலம், வண்டி வாகன யோகம், தொழில் நிறுவனங்களை திறம்பட நடத்தும் வல்லமை, தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகளை வாரி வழங்கும், 7ம் பாவக வழியில் இருந்து கூட்டாளிகள் வழியில் யோகம், நண்பர்கள் உதவி, வாழ்க்கை துணையின் ஆதரவு, பொதுமக்கள் ஆதரவு, நிறுவன தொழிலாளர்கள் ஆதரவு என அனைத்து வழிகளிலும் சிறப்பான ஆதரவை தரும், 8ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் செய்யும் தொழில் வழியில் புதையலுக்கு நிகரான அதிர்ஷ்டங்களையும், தன சேர்க்கையையும் தரும், மேற்கண்ட ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 8ம் ராசியாக அமைவதும், சுய ஜாதகத்தில் 8ம் வீடு அதே ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதும் ஜாதகத்திலே சிறப்பான அம்சமாக கருதலாம், ஏனெனில் ஜாதகரின் ஜீவனம் புதையலுக்கு நிகரான தன சேர்க்கையை தருவதற்கு மேற்கண்ட அமைப்பே மூல காரணமாக அமையும், மேலும்  இது சார்ந்த நன்மைகளை ஜாதகர் தனது வாழ்க்கை துணை வழியில் ( திருமணத்திற்கு பிறகு ) முழு அளவில் அனுபவிப்பார்.

மேற்கண்ட ஜாதகருக்கு ஜீவன ரீதியான பாவக தொடர்புகள் வலிமை பெற்று  இருப்பினும், தற்போழுது நடைபெறும் சூரியன் திசையிலும், அடுத்து வரும் சந்திரன் திசையிலும் நடைமுறைக்கு வாராது, அதற்க்கு பிறகு வரும் ராகு திசையில்தான் மேற்கண்ட பலாபலன்களை ஜாதகர் அனுபவிக்க இயலும் என்பதே ஜாதகத்தில் உள்ள "சூட்சமம்" என்றால் அது மிகையில்லை.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

திருமண பொருத்தம் : வாழ்க்கை துணையாக ( மனைவியாக ) இந்த ஜாதகியை தேர்வு செய்யலாமா ?

திருமண பொருத்தம் 


இல்லறவாழ்க்கை இனிதே அமைய ஒருவர் திருமணத்திற்கு முன்பே, தனது ஜாதக வலிமை நிலையை பற்றியும், தனக்கு வர இருக்கும் வாழ்க்கை துணையின் ஜாதக வலிமை நிலையை பற்றியும் ஒரு தெளிவான முடிவுக்கு வந்த பிறகு திருமண வாழ்க்கையில் இணைவது, மணவாழ்க்கையில் வெற்றியையும், சிறப்பையும் தரும், குறிப்பாக தனது வாழ்க்கை துணையாக வரும் பெண்ணின் ஜாதகத்தை பற்றி தெளிவு பெறுவது சம்பந்தப்பட்ட ஆணுக்கு சகல யோகங்களையும், தாம்பத்திய வாழ்க்கையில் சந்தோஷங்களையும் வாரி வழங்கும், பொருத்தமான வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் ஆண் பெண் இருவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி மற்றும் சந்தோஷத்திற்கு குறைவிருக்காது, மேலும் சகல சௌபாக்கியங்களையும் பெரும் சுபயோக வாழ்க்கையை தம்பதியர் இருவரும் பெறமுடியும்.

தங்களின் கேள்விக்கு உண்டான பதில்களை இன்றை பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் !

வாழ்க்கை துணையாக வர இருக்கும் வதுவின் ஜாதகத்தில் 2,5,7,8,12ம் பாவகங்கள் வலிமை பெற்று இருப்பதும், தற்போழுது நடைமுறையில் உள்ள திசாபுத்தி, எதிர்வரும் திசாபுத்திகள் ஜாதகிக்கு வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவதும் தாம்பத்திய வாழ்க்கையில் நன்மைகளையும் யோகங்களையும் தரும், தனது கணவருக்கு சிறப்பான யோக வாழ்க்கையை வாரி வழங்கும், கீழ்கண்ட ஜாதகிக்கு 2,5,7,8,12ம் பாவகங்களின் வலிமையை பற்றியும், நடைபெறும், எதிர்வரும் திசாபுத்திகள் தரும் நன்மை தீமைகள் பற்றியும், தனது இல்லறவாழ்க்கையில் ஜாதகி பெரும் யோக அவயோகங்கள் பற்றியும் ஆய்வு செய்வோம் அன்பர்களே !


லக்கினம் : கும்பம் 
ராசி : துலாம் 
நட்சத்திரம் : சித்திரை 3ம் பாதம் 

ஜாதகிக்கு 2,5,7,8ம் வீடுகள் லாபஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 2ம் பாவக வழியில் இருந்து ஜாதகி இனிமையான குடும்ப வாழ்க்கை , கை நிறைவான வருமான வாய்ப்பு, இனிமையான பேசிச்சு திறன், குடும்பத்தில் அனைவருடன் அனுசரித்து செல்லும் அமைப்பு, சிறப்பாக குடும்பத்தை நடத்திச்செல்லும் வல்லமை, அதிர்ஷ்டம் மற்றும் நட்புகள் வழியில் யோகம் என்றவையில் சுபயோகங்களை தரும்.

5ம் பாவக வழியில் இருந்து அறிவு புத்திசாலித்தனத்தால் ஆதாயம், எப்பொழுதும் மனமகிழ்ச்சி, குல தெய்வ அனுக்கிரகம், குழந்தைகள் வழியில் யோகம், நல்ல குழந்தை பாக்கியம், அனைவரிடமும் பாசமாக நடந்துகொள்ளும் தன்மை, பெருந்தன்மையான குணம், எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் அதிபுத்திசாலித்தனம், கடவுள் அனுக்கிரகத்தை பரிபூர்ணமாக பெரும் யோகம் என்றவகையில் சுபயோகங்களை தரும்.

7ம் பாவக வழியில் இருந்து கணவருடன் இணக்கம், நல்ல நண்பர்கள் உதவி, தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சி, தம்பதியர் ஒருவருக்கு ஒருவர் புரிந்துகொண்டு, மணவாழ்க்கையை சிறப்பிக்கும் யோகம், எந்த சூழ்நிலையிலும் கணவனை விட்டு பிரியாமல் வாழும் யோகம், வியாபர விருத்தி, கணவருடன் செய்யும் சுயதொழில் வளர்ச்சி, எதிர்பாராத அதிர்ஷ்டங்களை தம்பதியர் பெரும் யோகம் என்றவகையில் சுபயோகங்களை தரும்.

8ம் பாவக வழியில் இருந்து பூர்ண சுமங்கலி, தன்கணவனுக்கு மிதம்மிஞ்சிய சொத்து சுக சேர்க்கையை நல்கும் யோகம் திடீர் அதிர்ஷ்டம்  மூலம் தம்பதியரின் வாழ்க்கை எதிர்பாராத அதிர்ஷ்டங்களை பெறுதல், போதும் என்ற மனநிறைவு, திருப்தியான யோகம் வாழ்க்கை, நீண்ட ஆயுள், தம்பதியர் இருவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து செல்லும் தன்மை, வாழ்நாள் முழுவதும் கணவருக்கு சேவை செய்யும் யோகம் பெற்றவர்.

ஜாதகிக்கு 12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மட்டும் சற்று பாதிப்பு, தங்களின் ஜாதகத்தில் 12ம் பாவகம் மிகவும்  வலிமையுடன் இருப்பதால் யாதொரு இன்னல்களும் இல்லை, திருமண வாழ்க்கையில் சந்தோசம் மற்றும் வெற்றி உண்டாகும்.

நடைபெறும் குரு திசை 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவக தொடர்பை பெற்று  ஸ்திரமான ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துவது சிறப்பான யோகமே, மேலும் அடுத்து வரும் சனி திசை ஜாதகிக்கு 1,2,5,7,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவக தொடர்பை பெற்று முழுவீச்சில் லாபஸ்தான பலனை ஏற்று நடத்துவது வரவேற்கதக்க சிறப்புஅம்சம் ஆகும், மேலும் ஜாதகிக்கு 9 பது பாவகங்கள் மிக மிக வலிமையுடன் இருப்பதால் தங்களுக்கு யோக வாழ்க்கையையே தரும், குறிப்பாக 2,5,7ம் பாவகங்கள் வலிமை பெற்று இருப்பது தாம்பத்திய வாழ்க்கையில் 100% விகித வெற்றியை  வாரி வழங்கும், இருவரது ஜாதகமும் 100% விகிதம் பொருந்துவதால் தங்கள் தேர்வு செய்த ஜாதகியையே திருமணம் செய்துகொள்வது  தங்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை அமைத்து தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 5 ஜனவரி, 2017

எனது ஜாதகம் யோக ஜாதகமா? அவயோக ஜாதகமா? தெளிவுபடுத்துங்கள் !

 

சுய ஜாதக வலிமையை நிர்ணயம் செய்வதில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களுக்கும் உரிமை உள்ளது எனலாம், குறிப்பாக சுய ஜாதகத்தில் கோண வீடுகள் வலிமை பெறுவது ஜாதகரின் அறிவு திறனையும், கேந்திர வீடுகள் வலிமை பெறுவது வசதி வாய்ப்பு மற்றும் பொருளாதார யோகங்களையும், சமவீடுகள் வலிமை பெறுவது செயலாற்றும் காரியங்களில் வெற்றிவாய்ப்பையும், புகழையும் வாரி வழங்கும், இதன் அடிப்படையில் சுய ஜாதகத்தில் பனிரெண்டு பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டு ஆய்வு செய்தால், ஒருவரது ஜாதகம் யோக ஜாதகமா? அவயோக ஜாதகமா? என்பதில் தெளிவு பெறலாம், மேலும் சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு வீடுகள் மறைவு ஸ்தானமான 6,8,12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதும் ஜாதகரின் வாழ்க்கையில் அவயோகங்களை வாரி வழங்கும், குறிப்பாக பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ( சர லக்கினத்திற்கு 11ம் வீடு பாதக ஸ்தானம், ஸ்திர லக்கினத்திற்கு 9ம் வீடு பாதக ஸ்தானம், உபய லக்கினத்திற்கு 7ம் வீடு பாதக ஸ்தானம் ) கடுமையான அவயோகங்களை வாரி வழங்கும், ஜாதகரால் தவிர்க்க இயலாத இன்னல்களுக்கு ஆளாக்கும், இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம்.


லக்கினம் : கன்னி 
ராசி : கும்பம் 
நட்ஷத்திரம் : அவிட்டம் 4ம் பாதம் 

மேற்கண்ட ஜாதகரின் கேள்வி எனது ஜாதகம் யோக ஜாதகமா? அவயோக ஜாதகமா? 

ஒருவரின் ஜாதகத்தில் யோக அவயோகங்களை நிர்ணயம் செய்வதில் பனிரெண்டு பாவகங்களின் வலிமையே அடிப்படையாக அமைகிறது, இவரது ஜாதகத்தில்  லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் தொடர்புகளை பற்றி ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம்.

ஜாதகத்தில் வலிமையுள்ள பாவக தொடர்புகள் :

3,5,7ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 3,5,7ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு யோக பலன்களை வழங்கும்.

11ம் வீடு அதிர்ஷ்டம் மற்றும் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு மீதம் மிஞ்சிய யோக பலன்களை 11ம் பாவக வழியில் இருந்து முழு வீச்சில் தரும்.

ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

2,4,6,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 2,4,6,10,12ம் பாவக வழியில் இருந்து ஸ்திரமான இன்னல்களையும் ( பொருளாதாரம்) வாரி வழங்கும்.

8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 8ம் பாவக வழியில் இருந்து பூர்ண ஆயுளை தந்தபோதிலும், திடீர் இழப்புகளையும், மருத்துவ செலவுகளையும் வாரி வழங்கும்.

1,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 1,9ம் பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை எவ்வித தாட்சண்ணியம் இன்றி வாரி வழங்கும், மேலும் சுய ஜாதகத்திலே கடுமையாக பாதிக்கப்பட்ட பாவக தொடர்பு இதுவே என்றால், அது மிகையல்ல.

எனவே மேற்கண்ட ஜாதகத்தில் 9,11ம் பாவாக வழியில் இருந்து ஜாதகருக்கு யோக  நிகழ்வுகள் நடைமுறைக்கு வந்த போதிலும், சுய ஜாதகத்தில் பாதக ஸ்தானம், ஆயுள் ஸ்தானம் மற்றும் விரைய ஸ்தான தொடர்புகள் பெரும் பாவக வழியில் இருந்து ஜாதகர் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகும் சூழ்நிலையை தரும், எனவே இவரது ஜாதகத்தில் பெரும்பாலான பாவக தொடர்புகள் பாதிக்கப்பட்டு இருப்பதால், சுய ஜாதகத்தில் யோகங்களை தரும் பாவக வழியிலான நன்மைகளையும் ஜாதகரால் பெற இயலாது என்பதே உண்மையான ஜாதக நிலை.

மேற்கண்ட ஜாதகத்தில் யோகங்களை தரும் பாவாக தொடர்பும் உண்டு, அவயோகங்களை தரும் பாவக தொடர்பு உண்டு என்பதால், மிதயோக ஜாதகம் என்று உறுதி செய்யலாம், மேலும் தற்போழுது நடைபெறும் குரு திசையும், எதிர்வரும் சனி திசையும் முறையே விரைய ஸ்தானம் மற்றும் பாதக ஸ்தான பலனையே ஏற்று நடத்துவதால், ஜாதகருக்கு வெகுவான அவயோக பலாபலன்களே நடைமுறைக்கு வரும், நடைபெறும் குரு திசை தரும் இன்னல்களை விட, எதிர்வரும் சனி திசையே ஜாதகருக்கு மிதமிஞ்சிய அவயோக பலன்களை வாரி வழங்கும், ஏனெனில் எதிர்வரும் சனி திசை ஜாதகருக்கு 1,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம்   பெற்று கடுமையான அவயோக பலன்களை பாதக ஸ்தான வழியில் இருந்து  நடத்த ஆரம்பிக்கும் என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும்.

வாழ்க வளமுடன் 
 ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வெள்ளி, 16 டிசம்பர், 2016

வாழ்க்கையின் முன்னேற்றங்களை நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தின் பங்கு !


"ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
  கருதி இடத்தான் செயின்"

(செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.

அந்த கால நேரத்தை துல்லியமாக அறிந்துணர்ந்து செயல்பட உதவுவதே, ஜோதிட சாஸ்த்திரம் என்றால் அது மிகையில், சுய ஜாதகத்தை கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கொண்டு ஒருவரின் வாழ்க்கையில் நடைபெற்ற, நடைபெறுகின்ற, நடைபெறக்கூடிய நன்மை தீமை, யோக அவயோகங்களின் தன்மையை பற்றி ஜோதிடகணிதம் கொண்டு தெளிவுற கூற இயலும், குறிப்பாக ஒரு ஜாதகரின், உடல் நலம், மனநலம், கல்வி, தொழில், திருமணம், பொருளாதர முன்னேற்றம், புத்திரபாக்கியம், சொத்துசுகம், வண்டி வாகன  யோகம், புகழ் அந்தஸ்து, மனநிம்மதி மற்றும் ஆன்மீக வெற்றி என ஜாதகர் ஜாதகர் வினவும் ஒவ்வொரு கேள்விக்கும் துல்லியமான பதில்களை நல்குவதே, ஜோதிடசாஸ்த்திரம், சுய ஜாதக ஆலோசனையின் அடிப்படையில் மேற்கொள்ளும் காரியங்கள் நிச்சயம் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு தன்னிறைவான யோக வாழ்க்கையை வாரி வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை, கீழ்கண்ட ஜாதகருக்கு, சுய ஜாதக வலிமையின் அடிப்படையில், வழங்கும் ஆலோசனை பற்றியும், அவரது கேள்விகளுக்கு உண்டான பதில் பற்றியும் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


ஜாதகரின் கேள்வி :

தனது ஜாதகத்தில் உள்ள பாவகங்களின் வலிமை ?

1,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது லக்கினம் மற்றும் பாக்கிய ஸ்தான வழியில் இருந்து 200% விகித இன்னல்களையும்.

2,4,6,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, குடும்பம்,சுகம்,சத்ரு,ஜீவனம் மற்றும் விரைய ஸ்தான அமைப்பில் இருந்து ஸ்திரமான இன்னல்களையும்.

3,5,7ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, வீரியம், பூர்வபுண்ணியம், களத்திர ஸ்தான வழியில் இருந்து மிகுந்த யோக பலன்களையும்.

8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஆயுள் பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களையும் ( ஆயுள் பாவகம் சர நெருப்பு தத்துவ ராசி என்பதால் ஜாதகருக்கு பூர்ண ஆயுள் என்றபோதிலும் பித்தம் சார்ந்த உடல் தொந்தரவுகளை ஜாதகர் வாழ்நாள் முழுவதும் சந்திப்பார் )

11ம் வீடு அதிர்ஷ்டம் மற்றும் லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிதம் மிஞ்சிய யோக பலன்களை அளவில்லாமல் வாரி வழங்கும்.

எனவே ஜாதகர் 3,5,7,11ம் வீடுகள் வழியில் இருந்து பரிபூர்ண நன்மைகளையும்,

2,4,6,8,10,12ம் வீடுகள் வழியில் இருந்து இன்னல்களையும், 1,9ம் பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களையும் அனுபவிக்கும் சூழ்நிலையை தரும்.


தற்பொழுது நடைபெறும் திசா புத்தி வழங்கும் பலன்கள் ?

தற்போழுது நடைபெறும் குரு திசை ( 14/11/2003 முதல் 14/11/2019 வரை ) ஜாதகருக்கு 2,4,6,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகரின் வாழ்க்கையில் குடும்பம்,சுகம்,சத்ரு,ஜீவனம் மற்றும் விரைய ஸ்தான அமைப்பில் இருந்து ஸ்திரமான இன்னல்களை தொடர்ந்து வழங்கி கொண்டு இருக்கின்றது இதனால் ஜாதகரின் கல்வி பாதிக்கப்படும், வண்டி வாகனங்கள் மூலம் விரைய செலவு, உடல் உபாதை, விபத்து, தொழில் வேலை வாய்ப்பு இன்மை, மனஅழுத்தம் மற்றும் அதிக மன போராட்டங்களை வழங்கும்.

தற்போழுது நடைபெறும் செவ்வாய் புத்தி( 14/07/2016 முதல் 20/06/2017 வரை ) 3,5,7ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, வீரியம், பூர்வபுண்ணியம், களத்திர ஸ்தான வழியில் இருந்து எடுக்கும் முயற்ச்சி மற்றும் காரியங்களில் வெற்றி, குல தேவதை மற்றும் புத்திசாலித்தனம் மூலம் யோகம், நண்பர்கள் மற்றும் எதிர்ப்பால் இன அமைப்பினர் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் யோகம் உண்டாகும், எதிர் வரும் சனி திசை ஜாதகருக்கு பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவதால் மிகுந்த எச்சரிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்வது நல்லது.

ஜாதகருக்கு உகந்த  தொழில்  

சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவகங்களான பாக்கியம் மற்றும் லாப ஸ்தானம் தொடர்பான ஜீவன வாழ்க்கையை ஜாதகர் கூட்டாகவோ, அல்லது அடிமை தொழிலாகவோ ஏற்று ஜீவனம் முன்னேற்றம் பெறுவதே உகந்தது, குறிப்பாக ஜாதகர் ஆசிரிய பணி அல்லது வாக்கு வன்மையை தொழிலாக ஏற்று ஜீவனம் செய்யலாம், உணவு பொருட்கள் சார்ந்த தொழிலை தேர்வு செய்து கூட்டு முயற்சியில் நலம் பெறலாம், நீர் தத்துவம் சார்ந்த தொழில்கள் ஜாதகருக்கு பன்மடங்கு லாபம் தரும் இருப்பினும் தனிப்பட்ட முறையில் தொழில் செய்வது உகந்தது அல்ல கூட்டு முயற்ச்சியே நல்ல பலன் தரும், தானிய வியாபாரம் ஜாதகரின் வாழ்க்கையில் சகல நலன்களையும், மிதமிஞ்சிய முன்னேற்றங்களை வாரி வழங்கும்.

குறிப்பு :

எதிர்வரும் சனி திசை ஜாதகருக்கு பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்த்துவது உகந்தது அல்ல என்பதை ஜாதகர் உணர்வது அவசியமாகிறது, மேலும் தனது குடும்பத்தில் உள்ள பெரியோர் சொல்லும் வார்த்தைகளை மதித்து நடந்து வாழ்க்கையில் நலம் பெறுவது அவசியமாகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வெள்ளி, 11 நவம்பர், 2016

சனி திசை தரும் தொழில் முன்னேற்றமும், தொழில் வெற்றிகளையும் வழங்கும் ஜீவன ஸ்தான வலிமையும் !


" உத்தியோகம் புருஷ லட்சணம் " என்ற பழமொழிக்கு உதாரணமாக வாழ வேண்டும் எனில் ஒருவரின் சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் மற்றும் அதற்க்கு வலிமை சேர்க்கும் பாவகங்கள் நல்ல நிலையில் இருப்பது அவசியமாகிறது, குறிப்பாக ஜீவன ஸ்தானம் மட்டும் வலிமை பெறுவதை விட சுய ஜாதகத்தில் ஜீவன வாழ்க்கையுடன் தொடர்பு பெரும் பாவகங்களும் வலிமைபெறுவது சிறப்பான நன்மைகளையும் யோகங்களையும் வாரி வழங்கும், சுயமாக தொழில் செய்து அதில் வெற்றிகரமாக திகழ சுய ஜாதகத்தில் 1,3,4,5,7,9,10,11 வீடுகள் வலிமை பெற்று காணப்படுவது அவசியமாகிறது, லக்கினம் வலிமை பெறுவது ஜாதகரின் தொழில் நிர்வாக வல்லமையை வழங்கும், வீரிய ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகர் தொழில் வகையில் மற்றவர்களுடனான தொடர்பையும், இணக்கமான சூழ்நிலையை சிறப்பாக அமைத்து தரும், சுக ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகர் இடம்,பொருள் மற்றும் சொத்துக்களை நிர்வகிக்கும் வல்லமையையும், சுய பொருள் சேர்க்கையும் வழங்கும், பூர்வபுண்ணிய ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதர் தமது தொழில் மேல் கொண்டுள்ள ஆராவத்தையும், நுண் அறிவு திறனையும், தெளிவான சிந்தனையுடன் கூடிய திட்டமிடுதல்களையும் வழங்கும், தொழில் வழியில் ஜாதகர் பெரும் படி படியான முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும்.
களத்திர ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகர் தனது தொழில் வழியில் செய்யும் வியாபார யுக்திகளையும், பொதுமக்கள், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளுடன் ஜாதகர் கொண்டுள்ள உறவை வலுவாக்கும், மேலும் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் ஜாதகரின் தனி திறனை வெளிப்படுத்தும், பாக்கிய ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகர் தனது தொழில் வழியில் நல்ல பெயரையும், நம்பிக்கையையும், பொது மக்கள் மத்தியில்  பிரபல்யம் பெரும் யோகத்தை தரும், ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகருக்கு உகந்த தொழில் எது என்பதை தெளிவு படுத்தும், ஜாதகர் செய்யும் தொழில் வகைகளை நிர்ணயம் செய்யும், ஜாதகருக்குள்ள  உள்ள பன்முக தொழில் வல்லமையை  தெளிவு படுத்தும், தான் செய்யும் தொழில் வழியில் ஜாதகர் பெரும் யோக வாழ்க்கையை நிர்ணயம் செய்யும், ஜாதகர் சுய தொழில் செய்ய உகந்தவரா? கூட்டு தொழில் செய்ய உகந்தவரா? அடிமை தொழில் செய்ய உகந்தவரா? அரசு அல்லது தனியார் துறையில் பணிபுரியும் யோகம் பெற்றவரா? சிறுகுறு தொழில், நடுத்தர தொழில் மற்றும் பெரும் முதலீடுகள் கொண்ட தொழில்களை எதை செய்ய அருகதை கொண்டவர் என்பதை தெளிவுபடுத்தும்.

லாப ஸ்தானம் ஜாதகர் தனது தொழில் மற்றும் சுய ஜாதக வலிமையின் அடிப்படியில் பெரும் லாபங்கள், அதிர்ஷ்டங்கள், சுயமுன்னேற்றம், முயற்ச்சியில் பெரும் வெற்றி, நீடித்த அதிர்ஷ்டம், தனக்கு வரும் நல்ல வாய்ப்புகளை பயன்படுத்தி வெற்றிகொள்ளும் யோகம், தேடிவரும் பதவி, புகழ், தொழில் முன்னேற்றம், சூழ்நிலைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் யோகம், சரியான திட்டமிடுதல்கள், மற்றவர்கள் ஆதரவை பரிபூர்ணமாக பெரும் யோகம், தன்னம்பிக்கை மிக்க மனநிலை, முற்போக்கு சிந்தனை, லட்ச்சியம் மற்றும் கனவுகளை நடைமுறைக்கு கொண்டு வரும் வல்லமை, எதிர்ப்புகள் அற்ற யோக வாழ்க்கை, அனைத்து சூழ்நிலைகளையும் சிறப்பாக கையாண்டு வாழ்க்கையில் முன்னேற்றங்களை தங்கு தடையின்றி பெரும் வல்லமை, சுய முன்னேற்றம், அதிபுத்திசாலித்தனம், சரியான திட்டமிடுதல்கள், தொலைநோக்கு பார்வை மூலம் தனது தொழில் முன்னேற்றத்தை சிறப்பாக எடுத்து செல்லும் வல்லமை, ஆராய்ச்சி மனப்பக்குவம், எதையும் சுய அறிவு கொண்டு நிர்ணயம் செய்தல், என ஜாதகர் தொழில் ரீதியாக பெரும் நன்மைகள் அனைத்தையும் ஜாதகர் பரிபூர்ணமாக பெறுவதை லாபஸ்தானமே நிர்ணயம் செய்கிறது, ஓர் ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் வலிமை பெற்று, நடைபெறும் திசை எதிர்வரும் திசை வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்திக்கொண்டு இருப்பது, சம்பந்தப்பட்ட ஜாதகரை நிச்ச்யம் சிறந்த தொழில் அதிபராக இந்த உலகத்திற்கு வழங்கும்.

இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வோம்.


லக்கினம் : தனுசு
ராசி : கும்பம் 
நட்ஷத்திரம் : சதயம் 2ம் பாதம்.

ஜாதகருக்கு மேற்கண்ட கட்டுரையில் கூறியது போன்று அனைத்து பாவகங்களும் மிகவும் வலிமை பெற்று இருக்கின்றது, குறிப்பாக 1,3ம் வீடுகள் வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர் வியாபர விருத்தி பெரும் யோகம் பெற்றவர் என்பதனையும், 2,5ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகர் செய்யும் தொழில் நல்ல வருமானமும், நம்பிக்கை மற்றும் நார்ப்பெயர் எடுப்பவர் என்பதனையும், சுய அறிவு திறனும் புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டு வாழ்க்கையில் சுய முன்னேற்றம் பெறுபவர் என்பதனையும், 4,7,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சொத்து சுக சேர்க்கை, வீடு, நிலம் மற்றும் வண்டி வாகன யோகம் மூலம் ஜீவன வாழ்க்கை பெறுபவர் என்பதனையும், கூட்டு முயற்ச்சி மற்றும் கூட்டு தொழிலில் வெற்றி பெறுபவர் என்பதனையும், செய்யும் தொழில் வழியில் நல்ல முன்னேற்றமும் விருத்தியும் பெரும் யோகம் கொண்டவர் என்பதனையும் தெளிவுபடுத்துகிறது, 9ம் வீடு சத்ரு ஸ்தானத்துடன்  சம்பந்தம் பெறுவது குறுகிய கால ஜீவன வெற்றிகளையும், சமூக தொழில் முறை அந்தஸ்த்தையும் பெறுபவர் என்பதனையும் உறுதி செய்கிறது.

11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகரின் 100% சதவிகித தொழில் வெற்றியையும், அளவில்லா லாபம் மற்றும்  அதிர்ஷ்டத்தையும் வாரி வழங்குவது, ஜாதகத்திற்க்கே சிகரம் வைத்தார் போல் சிறப்பான யோக வாழ்க்கையை தரும் அமைப்பாகும், மேலும் ஜாதகரின் எண்ணங்கள் மற்றும் கனவுகள் யாவும் நடைமுறைக்கு வரும், தொழில் ரீதியான பெரும் வெற்றிகளை ஜாதகர் பெறுவார், ஜாதகரின் லாப ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியாகவும், சர காற்று ராசியாகவும் அமைவது ஜாதகரின் வாழ்க்கையில் வாழ்க்கை துணை,பொதுமக்கள்,நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியில் இருந்து சிறப்பான முன்னேற்றங்களையும் அதிர்ஷ்ட வாழ்க்கையையும் பெறுவார் என்பதை  உறுதி செய்கிறது.

தற்போழுது நடைபெறும் சனி திசை ( 06/11/2010 முதல் 06/11/2029 வரை ) வலிமை பெற்ற குடும்பம்,பூர்வபுண்ணியம் மற்றும் லாப ஸ்தான பலன்களையே ஏற்று நடத்துவது ஜாதகரின் தொழில் விருத்தியை பன்மடங்கு வாரி வழங்கும், சகல விஷயங்களில் இருந்து ஜாதகர் அதிர்ஷ்ட வாயுப்புக்களையும், கை நிறைவான வருமான வாய்ப்புகளையும் தங்கு தடையின்றி வழங்கும், சனி திசை ஜாதகருக்கு தொழில் ரீதியாக 100% விகித வெற்றிகளை வழங்குவது வரவேற்க தக்கது, வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 29 செப்டம்பர், 2016

குரு பெயர்ச்சி வழங்கும் யோக வாழ்க்கை - கும்ப லக்கினம் !


திருக்கணித பஞ்சாங்க முறைபடி வரும் 11.08.2016 வியாழன் அன்று இரவு 9.35 மணிக்கு சிம்ம இராசியில் இருக்கும் குரு பகவான், கன்னி இராசிக்கு செல்கிறார், இனிவரும் ஒரு வருடம் கன்னி ராசியில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி இனிவரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே! லக்கினம் என்பதே ஒருவரின் ஜாதகத்தை இயக்குவதில் 100% விகித பங்கை வகிக்கிறது என்பதால் ஒருவரின் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும், தற்போழுது நடைபெறும் திசாபுத்தி ஏற்று நடத்ததும் பாவகங்களுக்கு, குரு பகவான் தரும் கோள் சாரா பலன்களை அடிப்படையாக கொண்டும், ஜாதக பலன்களை நிர்ணயம் செய்யும் பொழுது சம்பந்த பட்ட ஜாதகருக்கு நடைபெறும் யோக அவயோக பலன்களை பற்றி தெளிவாக உணர இயலும், அதன் அடிப்படையில் தற்போழுது பெயர்ச்சி பெற்றுள்ள குரு பகவான் "கும்ப" லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!                     

கும்ப லக்கினம் :

8ல் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் கும்ப லக்கின அன்பர்களுக்கு இனிவரும் ஒருவருட காலம் வழங்கு பலாபலன்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே, ஆயுள் பாவகமான 8ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் கும்ப இலக்கின அன்பர்களுக்கு உடல் ரீதியான சிறு சிறு தொந்தரவுகளை தரகூடும், பொருளாதார சிக்கல்களை வழங்கவும் வாய்ப்பு உள்ளது, அவசரகதியில் செய்யும் காரியங்கள் யாவும் மிகுந்த இன்னல்களை தங்களுக்கு வழங்கும் நிலை இருப்பதால், பொறுமையை கடைபிடிப்பது சகல நலன்களையும் தரும், மேலும் மருத்துவ செலவினங்களை தவிர்க்க வாய்ப்பு இல்லை எனலாம், வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் வீண் செலவினங்களை தவிர்க்க இயலாது, எதிர்பார்ப்புகள் சற்று ஏமாற்றத்தை தரும், தன்னம்பிக்கை வெகுவாக குறையும், போராட்டம் அதிகரிக்கும், முரட்டு சுபாவும், பிடிவாத குணமும் தங்களின் வாழ்க்கையில் எதிர்பாராத இன்னல்களை வாரி வழங்கும், சுய கௌரவம் வெகுவாக பாதிக்கப்படும், குடும்பம் சார்ந்த பிரச்சனைகளை கவனமாக எதிர்கொண்டு நலம் பெறுவது அவசியமாகிறது, இல்லை எனில் தங்களின் வாழ்க்கை பாதையே மாறிவிட வாய்ப்பு அதிகம் மேலும் தேவையில்லாத எதிர்பாலின தொடர்புகள் தங்களின் அந்தஸ்து மற்றும்  கௌரவத்தை வெகுவாக பாதிக்கும் என்பதை கவனத்தில் கொள்வது தங்களுக்கு நல்லது, எதிர்பாராத விபத்துகளை தவிர்க்க பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வதும், பாதுகாப்பை உறுதி செய்தபின் வாகனத்தை இயக்குவதும் தங்களுக்கு மிகுந்த நன்மைகளை வழங்கும்.

குரு பகவான் தனது 5ம் பார்வையை விறைய ஸ்தானம் எனும் 12ம் பாவகத்தை வசீகரிப்பது, கும்ப லக்கின அன்பர்களுக்கு, ஜீவன வழியிலான மன நிம்மதி இழப்பை தரும், இதனால் வெகுவாக உடல் மற்றும் மன நலம் பாதிக்க வாய்ப்பு உண்டு, செய்யும் தொழிலில் மிகுந்த கவனமாக இருப்பது தங்களுக்கு வரும் வீண் விரையத்தை தவிர்க்க உதவும், பணிபுரியும் அன்பர்கள் தங்களின் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது சகல நன்மைகளையும் தரும், உயர் அதிகாரிகளிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்துகொள்வது சகல நன்மைகளையும் தரும், எதிர்பார்ப்புகள் நிறைவேற காலதாமதம் ஆக வாய்ப்பு உண்டு, பொறுமையை கடைபிடித்து நலம் பெருக, தங்களுக்கு வரும் உடல் உபாதைகளை உடனடியாக சிகிச்சை பெற்று நலம் பெறுவது அவசியமாகிறது, இல்லை எனில் மிகப்பெரிய பாதிப்பிற்கு தங்களை அழைத்து சென்று விடும், தாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பெரியோர் ஆலோசனையை பெற்று செய்வது சகல நலன்களையும் தரும், இல்லற வாழ்க்கையில் எதிர்ப்புகள் வர அதிக வாய்ப்பு உண்டு என்பதால், வாழ்க்கை துணையுடன் சுமுக போக்கையும், அன்பார்ந்த செயல்பாடுகளையும் தாங்கள் மேற்கொள்வது இல்லற வாழ்க்கையில் இனிமை சேர்க்கும், வெளிநாடுகளில் உள்ள அன்பர்கள் தங்களது பணியில் மிக கவனமுடன் இருப்பதும், வெளிநாடு சார்ந்த ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்யும் அன்பர்கள், பெரிய முதலீடுகளை செய்யாமல் இருப்பதும் தங்களுக்கு சகல நன்மைகளையும் மன நிம்மதியையும் வாரி வழங்கும், வீண் கற்பனை தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய இன்னல்களை வாரி வழங்கிவிடும் என்பதால், மிகுந்த விழிப்புணர்வுடன் தங்களுக்கு வரும் பிரச்சனைகளை எதிர்கொள்ள " ஜோதிடதீபம் " அறிவுறுத்துகிறது.

குரு பகவான் தனது 7ம் பார்வையை குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்தை வசீகரிப்பது, கும்ப லக்கின அன்பர்களுக்கு, வருமான வாய்ப்புகளை பாதிக்கும், இதனால் மன பயமும், மன அழுத்தமும் உருவாக வாய்ப்பு உண்டு என்பதை கவனத்தில் கொள்க, மற்றவர்களிடம் பேசும் பொழுது வாக்குவாதம் செய்வது தங்களின் மன நிம்மதியை வெகுவாக பாதிக்கும், தங்களுடன் பழகும் அன்பர்களிடம் பகைமை பாராட்டாமல் இருப்பதே தங்களுக்கு நலம் தரும், குடும்ப வாழ்க்கையில் வரும் இன்னல்களையும், பணம் சார்ந்த பிரச்சனைகளை தாங்களே தீர்வு காண்பது சிறப்பான நன்மைகளை தரும், மேலும் ஜாமீன் கையெழுத்து, பொருளாதார உதவி மற்றவர்களுக்கு செய்வது தங்களின் எதிர்கால வாழ்க்கையை வெகுவாக பாதிக்கும், எந்த ஒரு காரியத்திலும் வாக்கு சாதூர்யத்தை கடைபிடிப்பது தங்களின் முன்னேற்றத்தை உறுதி செய்யும், சுப விரயம் செய்ய வாய்ப்பு உண்டு என்பதால், வண்டி வாகனம், வீடு நிலம் வாங்க தங்களுக்கு இந்த குரு பெயர்ச்சி வழிவகுக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை, மேலும் புதிய ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும், வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி சேர்க்கும் யோகம் உண்டாகும்.

குரு பகவான் தனது 9ம் பார்வையை சுக ஸ்தானமான 4ம் பாவகத்தை வசீகரிப்பது, கும்ப லக்கின அன்பர்களுக்கு, சொகுசு வண்டி வாகன சேர்க்கையையும், புதிய சொத்து சுக சேர்க்கையையும் வாரி வழங்கும், இருப்பினும் அது சார்ந்த இன்னல்களும் வர வாய்ப்பு உண்டு, பெற்றோருடன் தாங்கள் அதிக அன்பு பாராட்டுவது தங்களின் ஜீவன மேன்மையையும், சுக போக யோகங்களையும் நல்கும், பயணங்கள் மூலம் எதிர்பாராத வருமானம் வர வாய்ப்பு உண்டாகும், வெளிநாடு வெளியூர் பயணம் மேற்கொள்ளும் யோகம் உண்டாகும், வியாபாரிகளுக்கு சிறப்பான வருமானங்கள் வந்து சேரும், வாக்கை தொழிலாக கொண்ட அன்பர்களுக்கு எதிர்பாராத லாபங்களும் முன்னேற்றமும் நிச்சயம் உண்டு என்பதால், தன சேர்க்கை மிகவும் அபரிவிதமாக அமையும், வண்டி வாகன தொழில் செய்யும் அன்பர்களுக்கு மிகுந்த முன்னேற்றத்தை வாரி வழங்கும், சரளமான பண வசதி வாய்ப்புகள் உண்டாகும், செல்லும் இடங்களில் எல்லாம் நல்ல வரவேற்ப்பையும், சிறப்பான அறிமுகத்தையும் வாரி வழங்கும், உறவுகள் சார்ந்த உதவிகள் தங்களை தேடி வரும், பொருளாதாரம் சார்ந்த முன்னேற்றத்திற்கு தங்களின் சரியான திட்டமிடுதல்கள் சிறப்பான வளர்ச்சியினை தரும், சேமிக்கும் வல்லமையை தாங்கள் இனிவரும் காலங்களில் மேற்கொள்வது நல்லது, இல்லை எனில் எதிர்பார்ப்புகள் அனைத்தும் வீண் கனவாக மாறிவிட வாய்ப்பு உள்ளது.

குறிப்பு :

கும்ப லக்கின அன்பர்களுக்கு  தற்போழுது நடைபெறும் திசாபுத்திகள் 8,12,2,4ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், தற்போழுது நடைபெறும் திசா புத்திகள் மேற்கண்ட பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில், குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மையையும் தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க, மேலும் குரு பெயர்ச்சி பலனை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ள, சுய ஜாதகத்துடன் நேரில் ஆலோசனை பெற்று கொள்வதே சாலச்சிறந்தது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 29 மார்ச், 2016

ஸ்திர லக்கினங்களுக்கு பாதக ஸ்தானம் எவ்வித இன்னல்களை தரும்!




ஸ்திர ராசிகள் என்று அழைக்கப்படும், ரிஷபம்,சிம்மம்,விருச்சிகம் மற்றும் கும்பம் ராசியினை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, லக்கினம் முதல் 12 வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றால் ஜாதகருக்கு வழங்கும் அவயோக பலன்களை பற்றி இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே! சுய ஜாதகத்தில் எந்த லக்கினம் என்றாலும் லக்கினம் முதல் 12 வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது, சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு நன்மையை தாராது என்பதுடன், 200% விகித இன்னல்களை தரும், மேலும் ஜாதகர் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெரும் பாவக வழியில் இருந்து அதிக அளவில் இன்னல்களுக்கும் துன்பத்திற்கும் ஆளாகும் சூழ்நிலையை தரும், ஸ்திர ராசிகளான ரிஷபம்,சிம்மம்,விருச்சிகம் மற்றும் கும்பம் ராசிகளை ஜென்ம லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு, பாக்கிய ஸ்தானம் என்று அழைக்கப்படும் 9ம் பாவகமே பாதக ஸ்தானமாக அமையும், மேலும் லக்கினம் முதல் 12 வீடுகள் ஸ்திர இலக்கின அன்பர்களுக்கு, பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது சம்பந்த பட்ட பாவக வழியில் இருந்து நிச்சயம் அவயோக பலன்களை தட்டமால் தரும்.

 பொதுவாக நமது கிராமங்களில் ஒரு செலவேந்திரம் உண்டு " பட்ட காலிலேயே படும், கெட்ட குடியே கெடும்" என்ற பழமொழி ஸ்திர லக்கினம் அன்பர்களுக்கு மிக சரியாக பொருந்தும், சுய ஜாதகத்தில் பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெரும் வீடுகள் வழியில் இருந்து, ஜாதகர் மேற்கண்ட பழமொழிக்கு உண்டான பலாபலன்களை அனுபவிக்கும் தன்மையை தரும், உதாரணமாக ஒரு ஸ்திர இலக்கின அன்பருக்கு, லக்கினம் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்றால், ஜாதகர் தமது வாழ்க்கையை தாமே சிதைத்துகொள்ளும் தன்மையை தரும், சுய ஒழுக்கம் பாதிக்க படும், வீண் அவபெயரை ஜாதகரே தேடி சென்று பெற்றுகொள்வார், அறிவார்ந்த செயல் என்று நினைத்துகொண்டு ஜாதகர் செய்யும் செயல்கள் எல்லாம், அதி முட்டாள் தனமான செய்கையாக அமையும், ஜாதகரின் செயல்பாடுகள் அனைத்தும் அவரை சார்ந்தவர்களுக்கு மிகப்பெரிய இன்னல்களையும், மன வருத்தங்களையும் ஏற்ப்படுத்தும், சாதாரணமான நன்மைகளை பெறுவதற்கே ஜாதகர் கடும் போராட்டங்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும், உடல்,மனம்,உயிர் ஆகியவற்றின் சக்த்திகளை ஜாதகர் வீண் விரையம் செய்யும் தன்மையை தரும், ஜாதகரின் விளைவறியா செயல்கள் வாழ்நாள் முழுவதும்  ஜாதகருக்கு மிகுந்த துன்பத்தையும் துயரங்களையும் வழங்கும், சமூகத்தில் ஜாதகர் நர்ப்பெயர் எடுப்பது என்பது குதிரை கொம்பாகவே அமைந்து விடும்.

ஸ்திர இலக்கின அன்பர்களுக்கு பாதக ஸ்தானம் பெரும்பாலும் சர ராசிகளிலேயே அமையும் என்பதால், ஜாதகருக்கு கொடுக்க வேண்டிய இன்னல்களை தங்கு தடையின்றி மிக வேகமாக வாரி வழங்கும், பாதக ஸ்தான வழியில் இருந்து வரும் பாதிப்பை ஜாதகர் எதிர்கொள்வது என்பது  மறுஜென்மம் எடுத்ததிற்கு இணையானதாக அமையும், பாதக ஸ்தானம் நெருப்பு தத்துவ ராசி என்றால் ஜாதகர் வீண் விவகாரங்களில் தலையீடு செய்து தேவையில்லாத வம்பு வழக்குகளை சந்திக்கும் சூழ்நிலையை தரும், தேவையில்லாத வீண் அலைச்சல் ஜாதகரின் வாழ்க்கை முன்னேற்றத்தை  வெகுவாக பாதிக்கும், ஜாதகரின் அறிவு திறன் பலன் தாராமல், உணர்ச்சி வேகமே மிகுந்து நிற்கும், பாதக ஸ்தானம் நீர் ராசி என்றால் ஜாதகரின் வீண் கற்பனையும், கனவு உலக வாழ்க்கையும் நிதர்சனமான உண்மையை  மறைக்கும், பெரும்பாலும் போதை வஷ்துகளுக்கு அடிமையாகும் தன்மையை தரும், வீண் கற்பனையில் தனது வாழ்க்கையை தானே சிதைத்துகொள்ளும் அமைப்பை தரும், ஜாதகரின் வாழ்க்கையில் அடையும் மன துயரங்கள் என்பது ஓர் அளவில்லாமல் வரும் என்பதை கருத்தில்  கொள்வது நலம், பெரும்பாலும் துஷ்ட சக்திகள் ஜாதகரை வெகுவாக  பயன்படுத்திகொள்ளும், தீய பழக்க வழக்கங்களுக்கு ஜாதகர் அடிமையானால் அதில் இருந்து விடுபடுவது என்பது சாதாரன காரியமல்ல என்பதை கவனத்தில் கொள்வது நலம்.

பாதக ஸ்தானம் காற்று ராசி என்றால், ஜாதகரின் அறிவார்ந்த செயல்கள் அற்ற தன்மையும், விளைவு அறியா நிலையும் ஜாதகர் படும் துன்பத்திற்கு காரணமாக அமைந்து விடும், புத்திசாலித்தனம் என்று  நினைத்துகொண்டு ஜாதகர் செய்யும் செயல்கள் யாவும் ஜாதகரின் வாழ்க்கையில் வெகுவான  பாதிப்புகளை வாரி வழங்கும், செய்யும் காரியங்களில் ஜாதகருக்கு பெரும்பாலும் மிகப்பெரிய தோல்வியே கிட்டும், அடிப்படையில் உதவி செய்வார் எவருமில்லை என்ற சூழ்நிலையை உருவாக்கும், ஜாதகரின் வீண்  பிடிவாதமும், முரட்டு சுபாவமும் ஜாதகரின் தோல்விகளுக்கு காரணமாக அமையும், அறிவார்ந்த பெரியோர்களின் சாபமும், விமர்சனமும் ஜாதகரின் வாழ்க்கையை  வெகுவாக பாதிக்கும், பாதக ஸ்தானம் மண் தத்துவ ராசி என்றால் ஜாதகர் செய்யும் செயல்கள் யாவும், ஜாதகரின் உடல் நிலையை வெகுவாக பாதிக்கும், ஜாதகரின் பொருளாதார முன்னேற்றம் கேள்விக்குறியாகும், ஜாதகரின் சொத்து,வீடு,வண்டி,வாகனம் ஆகியவை அனைத்தும் மற்றவர்களால் அபகரிக்கும் சூழ்நிலையை தரும், அதற்க்கு ஜாதகரின் செயல்பாடுகள் காரணமாக அமையும், தமது பெயரில் உள்ள சொத்து, வண்டி, வாகனம் மற்றும் பணம் ஆகியவற்றை வீண் விரையம் செய்யும் தன்மையை தரும், ஜாதகர் மற்றவர்களால் ஏமாற்றப்படும் சூழ்நிலையை அடிக்கடி சந்திக்கும் நிலையை தரும்.

பாதக ஸ்தான தொடர்பு பெரும் ஓர் உதாரண ஜாதகம் :


லக்கினம் : சிம்மம் 
ராசி : மகரம் 
நட்சத்திரம் : உத்திராடம் 3ம் பாதம் 

ஜாதகிக்கு 3,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 3ம் பாவாக வழியில் இருந்து ஜாதகி எடுக்கும் முயற்ச்சிகள் யாவிலும் மிகப்பெரிய தோல்விகளை சந்திக்கும் நிலையை தந்து கொண்டு இருக்கிறது, சகோதர வழியில் இருந்து ஆதரவற்ற நிலையையும், ஜாதகியின் அறிவற்ற செயல்களால் ஜாதகி வாழ்க்கையில் அதிக பாதிப்புகளையும், தனது பெயருக்கும்  புகழுக்கும் பெரிய களங்கத்தையும், தான் செய்வதே சரியானது என்ற அறிவீனத்தையும் ஜாதகிக்கு தொடர்ந்து வழங்கி கொண்டு இருக்கிறது, சம்பந்தம் இல்லாத மற்றவர் காரியங்களில் தலையீடு செய்து வாழ்க்கையில் மிகப்பெரிய இன்னல்களுக்கும் துன்பத்திற்கும் ஆளாகும் சூழ்நிலையையும், தம்மை விட வயதில் அதிகம் உள்ள பெரியவர்களின் பேச்சை கேளாமல் தமது வாழ்க்கையை தாமே கெடுத்துகொள்ளும் செயல்களில் ஜாதகி அசட்டு தனமாக இறங்குவது, ஜாதகியின் உடல் நிலையையும், மன நிலையையும் வெகுவாக பாதித்து கொண்டு இருக்கிறது, ஜாதகியின் நடவடிக்கைகள் ஜாதகியின் குடும்பத்தாருக்கு வெகுவான பாதிப்புகளை தொடர்ந்து வழங்குவது அவர்களின் நிம்மதியை வெகுவாக பாதித்துக்கொண்டு இருக்கிறது, முரண்பட்ட செயல்பாடுகள் ஜாதகியையும் ஜாதகியை சார்ந்தவர்களுக்கும் அதிக இன்னல்களை தருவதற்கு, பாதக ஸ்தான தொடர்புகளே காரணமாக அமைகிறது என்பது கவனிக்க தக்கது.

மேலும் தற்பொழுது நடைபெறும் ராகு திசை ஜாதகிக்கு பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தாமல் இருப்பது ஒன்றுமட்டும் ஆறுதல் தரும் விஷயம், ஆனால் ராகு திசைக்கு அடுத்து வரும் குரு திசை ஜாதகிக்கு 3,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இன்னல்களை தருவது, குரு திசையில் ஜாதகி அனுபவிக்க இருக்கும், இன்னல்கள் பற்றி தெளிவு பெறுவதும், பாதக ஸ்தான வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க ஜாதகி செய்ய வேண்டிய வழிமுறைகள் பற்றி அறிந்துகொள்வதும், ஜாதகியின் வாழ்க்கையில் நன்மைகளை தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வெள்ளி, 4 மார்ச், 2016

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - கடக லக்கினம்


சாய கிரகங்கள் என்று போற்றப்படும் " ராகு கேது" பெயர்ச்சி, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 4ம் ராசியான கடக ராசியை, லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு, லக்கினத்திற்கு 2ல் ராகு பகவானும், 8ல் கேதுபகவானும் சஞ்சாரம் செய்து, இனி வரும் 18 மாதங்களுக்கு வழங்கும் பலாபலன்களை பற்றி ஆய்வு செய்வோம் அன்பர்களே!

கடக இலக்கின சிறப்பு இயல்புகள் :

கடக ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு லக்கினம் வலிமை பெரும் பொழுது, ஜாதகரின் அதிர்ஷ்டம் மற்றும் யோக வாழ்க்கை சிறப்பாக அமையும், பொதுமக்களின் ஆதரவில் மிகப்பெரிய வெற்றிகளை மிக எளிதாக பெரும் யோகம் பெற்றவர்கள், தனிப்பட்ட வாழ்க்கையில் மன வருத்தங்கள் இருந்த போதிலும் பொதுவாழ்க்கையில் பிரகாசிக்க செய்யும், ஜாதகரின் மனோபலம் என்பது மிதமிஞ்சிய அளவில் இருக்கும் என்பது மட்டும் குறிப்பிட தக்க அம்சமாகும், தனது எண்ணங்களின் சக்தியை மிகவும் சிறப்பாக பிரயோகிக்கும் வல்லமையை தரும், புலன்களுக்கு எட்டாத விஷயங்களில் தேர்சியையும், புதுவித உணர்வு பூர்வமான சக்திகளையும் ஜாதகர் இயற்கையாகவே பெற்று இருப்பார், சொத்து சுக போகம், வண்டி வாகன யோகம், தோட்டம் பண்ணை, நான்கு கால் ஜீவன்கள் வழியில் இருந்து லாபம், விவசாயம் விவசாயம் சார்ந்த தொழில்களில் இருந்து அபரிவிதமான லாபம், எதிர்பார்த்த உதவிகளை ஜாதகர் தங்கு தடையின்றி பெரும் யோகம், பொதுமக்கள் வழியில் இருந்து லாபம், அரசியல் பொது வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம், சிறப்பு மிக்க பதவிகள் ஜாதகரை தேடிவரும் தன்மை, பரிசுத்தமான மன நிலை, கலை துறையில் பெயரும் புகழும் கிடைக்கும் தன்மை, தனது கற்பனைகள் மூலம் உலகின் பார்வையை தனது பக்கம் திருப்பும் வல்லமை, இயல் இசை நாடகம் போன்ற துறைகளில் குறுகிய கால வெற்றியை பெரும் யோகம், பரந்த மனபக்குவம், எல்லைக்கு அப்பாற்ப்பட்ட கற்பனை திறன் என ஜாதகரின் வாழ்க்கை மிகுந்த சுவாரஸ்யமும், பல திருப்பங்களையும் கொண்டதாக அமையும்.

கடந்த ராகு கேது பெயர்ச்சி கடக இலக்கின அன்பர்களுக்கு 9ல் கேதுவின் சஞ்சாரமும், 3ல் ராகுவின் சஞ்சாரமும், 9ம் பாவக வழியில் இருந்து சிறப்பான நன்மையையும், 3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றிகளையும் வாரி வழங்கியது, தற்பொழுது பெயர்ச்சி அடைந்துள்ள சாய கிரகத்தின் சஞ்சாரமும் கடக இலக்கின அன்பர்களுக்கு யோகத்தை வாரி வழங்குவது, மிகுந்த நன்மைகளை தரும் விதத்தில் இருப்பது வரவேற்க தக்க அம்சமாகும், 2ல் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான் கை நிறைவான வருமான வாய்ப்புகளை வாரி வழங்குவார், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும், ஜாதகரின் பேச்சு செயல்கள்  யாவும்  தன்னிகரில்லா லாபங்களை பெற்று தரும், வாக்கின் வழியில் ஜீவனம் மேற்கொள்ளும் அன்பர்களுக்கு தன்னிகரில்லா வருமானங்கள் வந்து சேரும், இறை அருளின் கருணையும், ஜாதகரின் வாக்கு வன்மையும் தொடர் வெற்றிகளை  பெற்று தரும், இறை வழிபாட்டில் அறிய திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம் உண்டாகும், ஜாதகரின் மதிப்பு மரியாதை சமூகத்தில் அதிகரிக்கும், எவ்வித சூழ்நிலையையும் சிறப்பாக எதிர்கொள்ளும் வல்லமை உண்டாகும், பொது வாழ்க்கையில் உள்ள அன்பர்களுக்கு தன்ப்பட்ட பேச்சு திறன் மூலம் அரசியலில் பிரகாசிக்கும் யோகம் உண்டாகும், ஆன்மீகத்தில் வெற்றியும், ஆன்மீக பெரியோர்களின் ஆசியும் பரிபூர்ணமாக ஜாதகருக்கு கிடைக்கும் யோகம் உண்டு, சுய தொழில் புரியும் அன்பர்களுக்கு  ஸ்திரமான வருமான வாய்ப்புகளை தொடர்ந்து பெரும் யோகம் உண்டு, ராகு சஞ்சாரம் கை நிறைவான வருமானத்தையும், எதிர்பாராத யோகங்களையும் வாரி வழங்கும்.

8ல் சஞ்சாரம் செய்யும் கேது பகவான் கடக இலக்கின அன்பர்களுக்கு, திடீர் அதிர்ஷ்டங்களை வாரி வழங்குவார், ஜாதகரின் புத்திசாலித்தனமும், அறிவு திறனும் மிகப்பெரிய லாபங்களை பெற்று தரும், தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து மிகுந்த யோகத்தையும், தன்னிறைவான வருமான  வாய்ப்புகளையும் ஜாதகர் பெறுவார், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியில் இருந்து ஜாதகர் அபரிவிதமான அதிர்ஷ்டங்களை பெரும் யோகம் உண்டு, பொதுமக்கள் ஆதரவு ஜாதகருக்கு திடீர் பதவிகளை வாரி வழங்கும், எதிர்பார்த்த முன்னேற்றம் தங்கு தடையின்றி அமையும், பல வெளிநாடு வெளியூர் சென்று வரும் யோகம் உண்டாகும், ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்து வரும் அன்பர்களுக்கு திடீர் அதிர்ஷ்டத்தின் மூலம் அபரிவிதமான செல்வாக்கு அமையும், திடீர் அதிர்ஷ்டத்தின் பலாபலன்களை கேதுவின் சஞ்சாரம் தங்களுக்கு ஸ்திரமாக வாரி வழங்குவது தங்களின் வாழ்க்கையில் சகல நிலைகளில் இருந்தும் அந்தஸ்த்தையும், கௌரவத்தையும் அதிகரிக்கும், புதிய கூட்டு தொழில் செய்யும் யோகம் உண்டாகும், தொழில் விஷயமாக செய்யும் பயணங்கள் யாவும் தங்களுக்கு மிகுந்த  லாபத்தையும் தொழில் விருத்தியையும் அதிகரிக்கும், திருமண தடைகள் நீங்கும், குடும்பத்தில் மகிழ்ச்சியும் புதிய வரவுகளால் சுபிட்சமும் அதிகரிக்கும், தங்களுக்கு இந்த சாய கிரகங்களின் பெயர்ச்சி மிகுந்த யோகத்தை தரும்.

மொத்தத்தில் எதிர்வரும் ராகுகேது பெயர்ச்சி கடக இலக்கின அன்பர்களுக்கு 2ம் பாவக வழியில் இருந்து கை நிறைவான வருமானமும், 8ம் பாவக வழியில் இருந்து திடீர் அதிர்ஷ்டத்தையும் வாரி வழங்கும், கடக  இலக்கின அன்பர்கள் அனைவரும் ராகுகேது பெயர்ச்சியால் 2ம் பாவக வழியில் இருந்து வருமானத்தையும், 8ம் பாவக வழியில் இருந்து புதையல் யோகத்தையும் பெறுகின்றனர்.

குறிப்பு :

மேற்கண்ட பலாபலன்கள் கடக இலக்கின அன்பர்களுக்கு, தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 02 மற்றும் 08 ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே யோக அவயோக  பலன்கள் 100% சதவிகிதம் நடைபெறும், எனவே கடக  இலக்கின அன்பர்கள் சுய ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 02,08ம் பாவக பலனை ஏற்று நடத்துகிறதா? என்பதில் தெளிவு பெறுவது அவசியமானதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696