வெற்றி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெற்றி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 பிப்ரவரி, 2016

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - மிதுன லக்கினம்


சாய கிரகங்கள் என்று போற்றப்படும் " ராகு கேது" பெயர்ச்சி, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 3ம் ராசியான மிதுன ராசியை, லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு, லக்கினத்திற்கு 3ல் ராகு பகவானும், 9ல் கேதுபகவானும் சஞ்சாரம் செய்து, இனி வரும் 18 மாதங்களுக்கு வழங்கும் பலாபலன்களை பற்றி ஆய்வு செய்வோம் அன்பர்களே!

மிதுன இலக்கின சிறப்பு இயல்புகள் :

மிதுன  ராசியை  லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு லக்கினம் வலிமை பெரும் பொழுது, ஜாதகரின் அறிவு திறன் மேம்படும், சிந்தனையும் செயல்திறனும் ஜாதகரின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும், தனது அறிவுக்கு உகந்த செயல்களில் மட்டும் ஆர்வத்தை காட்டும் அன்பர்களாக திகழ்வார்கள், எந்த ஒரு சூழ்நிலையிலும் தனது லட்சியம் மற்றும் முடிவில் இருந்து மாறாமல் செயல்பட்டு முன்னேற்றம் காண்பவர்கள், "எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு" என்ற குறளுக்கு பொருத்தமான அன்பர்கள் எனலாம், மிதமிஞ்சிய அறிவுத்திறனும், புத்திசாலித்தனமும் இருந்த போதிலும், பொருளாதார ரீதியான இன்னல்களை சந்தித்த வண்ணமே இருப்பார்கள், சாஷ்திரத்தில் நல்ல ஞானமும் பண்டித்தியமும் உண்டாகும், நல்ல உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் இயற்கையாகவே அமையும், சரியான வாய்ப்புகள் அமைந்தால் சிறந்த சாதனைகளை படைக்கும் யோகம் பெற்றவர்கள், தன்னம்பிக்கை குறையாது வாழ்க்கையில் தொடர் வெற்றிகளை சரியான திட்டமிடுதல்களுடன் பெரும் யோகதாரிகள், சிறந்த நிர்வாக திறமைகளை தமக்கு அமையும் வாய்ப்புகளில் பிரகாசிக்க செய்யும் வல்லமை பெற்றவர்கள், தமக்கு வரும் சவால்களை சிறப்பாக எதிர்கொண்டு வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனைகளை செய்யும் யோகத்தை தரும், எதிர்பாராத அதிர்ஷ்டம் மிதுன இலக்கின அன்பர்களுக்கு கிடைத்த போதிலும், அதை பொது நலனுக்காக பயன்படுத்தும் தன்மை கொண்டவர்கள், இயற்கையாகவே மிதுன இலக்கின அன்பர்களுக்கு புலனுக்கு அப்பாற்ப்பட்ட அறிவு திறன் சிறப்பாக செயல்படும் என்பதால், ஜாதகர் யூகிக்கும் விஷயங்கள் மிகவும் சரியாக நடைபெறும், இதனால் எதிர்காலத்தில் நடைபெறுவதை துல்லியமாக உணரும் சக்தியை சிறப்பாக பெற்று இருப்பார்கள், மிதுன இலக்கின அன்பர்களின் முன்னேற்றம் என்பது சீரிய இடைவெளியில் ஏறுமுகமாக ஜாதகரின் எண்ணத்தின் படி மிகவும் துல்லியமாக அமையும், தாம் திட்டமிட்டபடி வாழ்க்கையில் சகல யோகங்களையும் அனுபவிக்கும் தன்மையை தரும்.

கடந்த ராகு கேது பெயர்ச்சி மிதுன  இலக்கின அன்பர்களுக்கு 10ல் கேதுவின் சஞ்சாரமும், 4ல் ராகுவின் சஞ்சாரமும், 10ம் பாவக வழியில் இருந்து சிறு சிறு நன்மையையும், 4ம் பாவக வழியில் இருந்து அதிக இன்னல்களையும் வாரி வழங்கியது, தற்பொழுது பெயர்ச்சி பெற்றுள்ள  சாய கிரகங்கள், ராகு பகவானின் 3ம் பாவக சஞ்சார அமைப்பில் இருந்து மிதுன இலக்கின அன்பர்களுக்கு சகல காரியங்களிலும் வெற்றியை தரும், எடுக்கும் முயற்ச்சிகள் யாவிலும் வெற்றி மேல் வெற்றி கிட்டும், தன்னிறைவான வளர்ச்சி என்பது மிகவும் அபரிவிதமானதாக அமையும், பயணங்களில் நல்ல லாபமும் அதிர்ஷ்டமும் உண்டாகும், எதிர்பாராத வாய்ப்புகள் தங்களின் வாழ்க்கையில் வியக்கத்தகு மாற்றங்களை வாரி வழங்கும், கல்வியில் சிறப்பான வெற்றிகளும், அதிர்ஷ்டங்களும் உண்டாகும், ஆராய்ச்சி கல்வி சார்ந்த முயற்சிகளில் உள்ள அன்பர்களுக்கு எதிர்பாராத வெற்றியும், சமூக கௌரவமும் கிடைக்கும், செல்லும் காரியங்கள் பலிதமாகும், பெரிய மனிதர்களின் உதவியும், மக்கள் செல்வாக்கும் தங்களின் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பத்தையும், பொருளாதார ரீதியான தன்னிறைவையும் வாரி வழங்கும், இதுவரை தடைகளை சந்தித்து கொண்டு இருந்த அன்பர்கள் அனைவரும்  சிறந்த வெற்றிவாய்ப்புகளை பெரும் யோகத்தை தரும், குறிப்பாக விளையாட்டு துறையில் உள்ள அன்பர்களுக்கும், மருத்துவ துறையில் உள்ள அன்பர்களுக்கும், பொதுவாழ்க்கையில் உள்ள அரசியல் நபர்களுக்கும் வெற்றி மேல் வெற்றி வந்து குவியும், கமிஷன் தொழில் அல்லது  தரகு சார்ந்த வியாபாரங்களை செய்து வரும் அன்பர்களின் வாழ்க்கையில் இனிவரும் காலம், வருமான வாய்ப்புகளை வாரி குவிக்கும், செய்யும் தொழில் அபரிவிதமான லாபங்களை வாரி வழங்கும், ஜீவன ரீதியான வளர்ச்சி என்பது மிதுன இலக்கின அன்பர்களுக்கு மிகவும் அபரிவிதமானதாக அமையும், அரசு துறை வேலை வாய்ப்புகளும், அரசு சார்ந்த கடன் உதவிகளும் மிதுன இலக்கின அன்பர்களை தேடி வரும், தனது வாழ்க்கைக்கான  அடிப்படை முன்னேற்றங்களை பெரும் யோககாலமாக  இந்த ராகுவின் சஞ்சாரம் மிதுன இலக்கின அன்பர்களுக்கு அமையும்.

மிதுன இலக்கின அன்பர்களுக்கு 9ல் கேதுவின் சஞ்சாரம், பெரிய அளவில் நன்மையை தர வாய்ப்பில்லை, குறிப்பாக தனது அறிவு திறனுக்கும், திறமைக்கும் உகந்த வரவேற்ப்பு என்பது மிகவும் அரிதாகவே அமையும், தனது திறமையை நிருபிக்க ஜாதகர் பல தோல்விகளை எதிர்கொள்ள வேண்டி வரும், மற்றவர் விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் தான் உண்டு தன வேலை உண்டு என்று இருப்பது, மன நிம்மதியையும் வீண் விரையத்தையும் தவிர்க்கும், தமக்கு வரும் நல்ல வாய்ப்புகளை ஜாதகர் வீணடிக்கும் சந்தர்ப்பம் உண்டு என்பதால் , மிகுந்த விழிப்புணர்வுடன் நடந்துகொள்வதும் சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்தி கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவதும் ஜாதகரின் கடமையாகும், எதிர்பால் இன அமைப்பினருடன் அதிக கவனமாக பழகுவது மிகுந்த நன்மையை தரும், சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் தங்களுக்கு மிகப்பெரிய சவால்களை முன்னிறுத்தும் என்பதால், அனைத்தையும் கவனமாக கையாள்வது மிகுந்த நன்மையை தரும், மற்றவர்களுக்கு  உதவும் முன்  அதிக கவனம் தேவை, பொருளாதார ரீதியான சிக்கல்கள் அதிக அளவில்  வரும் என்பதால் திட்டமிட்ட பொருளாதார நடவடிக்கைகள் தங்களின் ஜீவன வாழ்க்கையை காப்பற்றும், கை பொருள் இழப்பை தவிர்க்கலாம்.

 மொத்தத்தில் எதிர்வரும் ராகுகேது பெயர்ச்சி மிதுன இலக்கின அன்பர்களுக்கு 3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் முயற்ச்சிகளில் வெற்றியையும், 9ம் பாவக வழியில் இருந்து நற்ப்பெயருக்கு களங்கத்தையும், இல்லற வாழ்க்கையில் இன்னல்களையும்  வழங்கும், மிதுன இலக்கின அன்பர்கள் அனைவரும் ராகுகேது பெயர்ச்சியால்3ம் பாவக வழியில் இருந்து வெற்றிகளையும் , 9ம் பாவக வழியில் இருந்து இன்னல்களையும் பெறுகின்றனர்.

குறிப்பு :

மேற்கண்ட பலாபலன்கள் மிதுன இலக்கின அன்பர்களுக்கு, தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 03 மற்றும் 09 ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே யோக அவயோக  பலன்கள் 100% சதவிகிதம் நடைபெறும், எனவே மிதுன இலக்கின அன்பர்கள் சுய ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 03,09ம் பாவக பலனை ஏற்று நடத்துகிறதா? என்பதில் தெளிவு பெறுவது அவசியமானதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது.


வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

திருமண தடைகளையும், திருமணத்திற்கு பிறகு இன்னல்களையும் அனுபவிக்கும் ஜாதக நிலை !


 திருமணம் ஒருவருக்கு சரியான வயதில், சிறப்பாக அமைவது என்பது அவரின் வாழ்க்கையில் வரும் முன்னேற்றங்களுக்கு சரியான அடித்தளத்தை அமைத்து தரும், ஜாதகத்தில் உள்ள யோக பலன்களை பரிபூரணமாக அனுபவிக்கும் சந்தர்ப்பங்களையும் சூழ்நிலைகளையும் தங்கு தடையின்றி வாரி வழங்கும், ஆண்  என்றாலும் சரி பெண் என்றாலும் சரி, திருமண வயது வந்தவுடன் எந்த காரணத்தை கொண்டு திருமணத்தை தள்ளிபோடாமல், இல்லற வாழ்க்கையில் இணைந்து நன்மைகளையும் யோகங்களையும் அனுபவிப்பதே சிறந்த வாழ்க்கையை தரும்.

தன் ஜாதகம் சற்று பாவக வலிமை அற்று இருப்பினும், தனது வாழ்க்கை துணையின் ஜாதகம் சிறப்பாக அமைந்தால் இல்லற வாழ்க்கையில் இனிமையும் மகிழ்ச்சியும் பொங்கும், இதற்க்கு தனது சுய ஜாதகத்தின் பாவக வலிமை நாம் உணர்ந்து இருப்பது நல்ல ஏனெனில், நமது ஜாதக நிலையை பற்றிய தெளிவு இருந்தால் மட்டுமே, வாழ்க்கை துணையுடன் நமது இல்லற வாழ்க்கை எப்படி அமையும் என்ற விழிப்புணர்வுடன் நடந்துகொள்ள இயலும், மாறாக நமது ஜாதக வலிமையை உணராத பொழுது, விதியின் மீது காரணம் சொல்லிக்கொண்டு முரண்பட்ட இல்லற வாழ்க்கையை, போராட்டத்துடன் சந்திக்கும் சூழ்நிலையை தரும்.

சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 பாவகங்களின் வலிமைக்கு ஏற்ப்பவே நமக்கு நடைபெறும் பலாபலன்கள் நடைமுறைக்கு வருகிறது, சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து யோக பலன்களும், வலிமை அற்ற பாவக வழியில் இருந்து அவயோக பலன்களும் நடைபெறுகிறது, இதை திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் நடைமுறைக்கு கொண்டுவருகிறது, ஒரு சில வினாடிகள் வித்தியாசத்தில் பிறந்த இரட்டையர்களுக்கு கூட ஒரே பலாபலன்கள் நடைமுறைக்கு வருவதில்லை, காரணம் பாவக வலிமை என்பது ஒரு வினாடியில் மாற்றம் பெறக்கூடும், சுய ஜாதக வலிமையை பற்றி தெளிவு பெரும் பொழுது தமது வாழ்க்கை பாதையை மிகவும் சிறப்பாக அமைத்துக்கொண்டு, வாழ்க்கையில் பல வெற்றிகளை மிக எளிதாக பெற இயலும் அன்பர்களே!

கிழ்கண்ட ஜாதகத்தில் பாவகங்களின் வலிமையை பற்றியும், நடைபெறும் திசை, எதிர்வரும் திசை தரும் பலாபலன்கள் பற்றியும், தனது ஜாதக வலிமைக்கு ஏற்ப தனது வாழ்க்கையை எவ்வாறு சிறப்பாக 
அமைத்துக்கொண்டு வெற்றி பெறுவது என்பதை பற்றியும் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே!

இயற்கையாக நமது சுய ஜாதகம் வலிமை பெரும் பொழுதும், நடைமுறையில் அல்லது எதிர்வரும் திசைகள் வலிமை பெற்ற பாவகத்தின் பலனை ஏற்று நடத்தும் பொழுதும் சம்பந்தபட்ட பாவக வழியில் இருந்து யோக பலன்களை நாம் தங்குதடையின்றி அனுபவிக்க இயலும், மாறாக சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை குறைந்து, நடைபெறும் அல்லது எதிர்வரும் திசைகள் வலிமை அற்ற பாவகத்தின் பலனை ஏற்று நடத்தினால், எப்படிபட்ட தீர்வுகளை  விழிப்புணர்வுடன் நாம் கையாண்டு, நன்மைகளை பெறுவது என்பதை பற்றி இனி பார்ப்போம்.

கிழ்கண்ட ஜாதகிக்கு 

லக்கினம் : மேஷம் 
ராசி : ரிஷபம் 
நட்சத்திரம் : ரோகிணி 4ம் பாதம் 


ஜாதகத்தில் பாவகங்களின் வலிமை நிலை 

1,4,5,7,9,11,12ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம்,
2,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம்,
3ம், வீடு சகோதர ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம்,
6ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம்,
10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம்,

எனவே ஜாதகி 1,4,5,7,9,11,12ம் பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களையும், 2,6,8ம் பாவக வழியில் இருந்து 60% விகித இன்னல்களையும், 3ம் பாவக வழியில் இருந்து 30% விகித நன்மைகளையும், 10ம் பாவக வழியில் இருந்து 100% விகித நன்மைகளையும் அனுபவிக்கும் தன்மையை தரும்.

தற்பொழுது நடைமுறையில் உள்ள ராகு திசை ஜீவன ஸ்தான பலனையும், பாதக ஸ்தான பலனையும் கலந்து நடைமுறை படுத்துகிறது, எனவே ஜாதகி ஜீவன வழியில் இருந்து யோக பலன்களையும், பாதக ஸ்தான வழியில் இருந்து அவயோக பலன்களையும் அனுபவிக்கும் தன்மையை தரும், எதிர்வரும் குரு திசை ஜாதகிக்கு பாதக ஸ்தான பலனை மட்டுமே நடைமுறைபடுத்துவது, மிகுந்த இன்னல்களுக்கும் சிரமங்களுக்கும் ஆளாக்கும் என்பதால், இனி வரும் காலங்களில் ஜாதகி அதிக விழிப்புணர்வுடன் வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும்.

பெரும்பாலான பாவகங்கள் (3,10 பாவகங்களை தவிர ) ஜாதகிக்கு மிகுந்த பாதிப்பை தருவதால் ஜாதகி பாதிக்க பட்ட பாவகங்களில் இருந்து வரும் இன்னல்களை எதிர்கொள்ளும் மன நிலைக்கு வந்துவிடுவது, ஜாதகியை பாதிக்கபட்ட பாவக வழி இன்னல்களை மிக எளிதாக கையாளும் வாய்ப்பை தரும், ( உதாரணமாக 7ம் பாவக வழியில் இருந்து இன்னல்கள் வரும் எனும் பொழுது ஜாதகி அடிப்படையில் தனது நண்பர்களை தேர்வு செய்யும் பொழுது எச்சரிக்கையுடன் இருக்கலாம், கூட்டு முயற்ச்சியை தவிர்க்கலாம், வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் பொழுது அவரது ஜாதகம் மிகவும் வலிமை உடையதாக தேர்வு செய்யலாம், பொது காரியங்களில் ஈடுபடாமல், தனது வேளையில் மட்டும் கவனம் செலுத்தலாம் ) தனது ஜாதகம் வலிமை அற்று இருப்பதை உணர்ந்தால் மட்டுமே மற்ற விஷயங்களில் ஜாதகி கவனமுடன் இருந்து நன்மைகளை பெற இயலும், தனது ஜாதக வலிமையை பற்றி தெரியாத பொழுது ஜாதகி பாவகங்களின் தன்மைக்கு ஏற்ப விதி பயனை அனுபவிக்கும் சூழ்நிலையை தந்துவிடும்.

ஜாதகிக்கு வயது 25, இதுவரை தனக்கு வந்த நல்ல வரன்கள் அனைத்தையும் ஏதாவது காரணங்களை சொல்லி தவிர்த்து வருகிறார், தனது ஜாதக வலிமையை பற்றி தெரியாமல், ஜாதகி விதி பயனை அனுபவித்துக்கொண்டு இருப்பது எதார்த்தமான உண்மை, மேற்கண்ட ஜாதக வலிமையை பற்றிய விஷயத்தை ஜாதகிக்கு எடுத்து கூறி, சரியான இல்லற வாழ்க்கையை அமையை " ஜோதிடதீபம் " அறிவுறுத்தியது, ஜாதகியின் பாவக வலிமைக்கு ஏற்றப்ப, மிகவும் வலிமையான பாவகங்களை பெற்ற, வரனின் ஜாதகத்தை தேர்வு செய்து ஜாதகிக்கு பரிந்துரை செய்தது, ஜாதகியும் ஜாதகியின் பெற்றோரும் இதை ஏற்றுக்கொண்டு சரியான இல்லற வாழ்க்கையை தமது மகளுக்கு அமைத்து தர இசைந்தது இறை அருளின் கருணையே.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696   

வியாழன், 27 ஆகஸ்ட், 2015

சுய தொழில் முன்னேற்றமும், அதிர்ஷ்டகரமான மித மிஞ்சிய யோக பலன்களும் !



 சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம் வலிமை பெறுவதும், வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனை நடைமுறையில் உள்ள திசை ஏற்று நடத்துவதும், ஜாதகருக்கு ஜீவன ரீதியான நன்மைகளை வாரி வழங்கும், பொதுவாக ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளை தரும், குறிப்பாக ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ( சர லக்கினத்தை தவிர்த்து ) ஜாதகரை தொழில் ரீதியான அதிர்ஷ்டங்களையும் மிதமிஞ்சிய லாபங்களையும் வாரி வழங்கி சிறந்த தொழில் அதிபர் என்ற நிலைக்கு விரைவில் உயர்த்தும், ஒரு சிறந்த தொழில் அதிபரின் ஜாதகம் எப்படி இருக்கும் என்பதற்கு உதாரணமாக, கிழ்கண்ட ஜாதகம் விளங்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை அன்பர்களே !



லக்கினம் : மீனம் 
ராசி : தனுசு 
நட்சத்திரம் : பூராடம் 4ம் பாதம் 

ஜாதகத்தில் பாவகங்களின் வலிமை :

1,6,7,12ம் வீடுகள் குடும்பம் ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம்,
2ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம்,
3,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம்,
4,10,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம்,
5ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம்,
8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம்,

1,6,7,12ம் வீடுகள் குடும்பம் ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது இலக்கின வழியில் இருந்து ஜாதகர் மிகுந்த வருமான வாய்ப்புகளையும், இனிமையான பேச்சு திறனையும், வாத திறமையாலும் சரளமான பேச்சினாலும், செய்யும் தொழிலில் மிகுந்த லாபத்தையும் வெற்றிகளையும் குவிக்க வைக்கும், சிறந்த உடல் நலத்தையும், மன நலத்தையும் ஜாதகர் இயற்கையாகவே பெற்று இருப்பார், வங்கி பரிவர்த்தனைகள் மூலம் மிகுந்த லாபத்தையும், நிலையான கையிருப்பையும், வரவு செலவுகளில் தன்னிறைவையும், தொடர்ந்து தன சேர்க்கையையும் ஜாதகர் பெறுவார்.

6ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் வாங்கும் கடன்களும் ஜாதகருக்கு நல்ல வருமானத்தையே தரும், பொருளாதார தன்னிறைவையும், வங்களின் உதவிகளையும், கேட்ட உடன் வங்கி கடன் உதவி பெரும் யோகத்தையும் வாரி வழங்கும், சிறப்பான வெற்றிகரமான நிதி நிலையை ஜாதகருக்கு தொடர்ந்து கொடுத்தவண்ணம் இருக்கும், ஜாதகருக்கு அமையும் தொழிலாளர்கள் அனைவரும் நல்ல விசுவாசியாகவும், கடமை உணர்ச்சி கொண்டவர்களாகவும் திகழ்வார்கள்.

7ம் பாவக வழியில் இருந்து திருமணம் மூலம் அபரிவிதமான அதிர்ஷ்டத்தையும் வருமான வாய்ப்புகளையும், நிறைவான லாபத்தையும் ஜாதகருக்கு வாரி வழங்கும், வாழ்க்கை துணை,கூட்டாளிகள் மற்றும் நண்பர்கள் வழியில் இருந்து 100% விகித யோக வாழ்க்கையை அனுபவிக்க நிலையை தரும், கூட்டாளிகள், கூட்டு தொழில் மூலமும் அளவில்லா வருமானங்களை ஜாதகருக்கு வாரி வழங்கும்.

12ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் சிறந்த தான சேர்க்கையை தரும், செய்த முதலீடுகளில் இருந்து 100% விகித வருமானத்தை தரும், செல்வத்தை கையாளுவதில் சிறந்த நுட்பங்களை ஜாதகர் கடைபிடிப்பார், பணம் ஒன்றே குறிகோளாக செயல்பட வைக்கும், சரியான திட்டமிடுதல்களையும் அதன் வழியில் இருந்து நல்ல லாபங்களையும் தரும், புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையை தரும் அமைப்பாக இதை கருதலாம்.

2ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, கலைத்துறையில் ஈடுபாட்டையும், வாக்கு பலிதத்தையும், இயல்,இசை, நாடக துறையில் சிறந்த ஆளுமையை தரும், பொழுதுபோக்கு அமசங்களில் இருந்து ஜாதகருக்கு எதிர்பாராத வருமானமும் லாபமும் உண்டாகும், தனது அறிவு திறனால் மிகப்பெரிய வெற்றிகளையும், தொழில் வாய்ப்புகளையும் ஜாதகர் உருவாக்கும் தன்மையை தரும், பூர்வீகத்தில் நல்ல வருமானமும், பெயரும் புகழும் உண்டாகும், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும், குடும்பத்தில் குதூகுலமும் சந்தோஷமும் நிறைந்து நிற்கும், ஜாதகரின் வார்த்தைக்கு அனைத்து இடத்திலும் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்.

3,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு 3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் முயற்ச்சிகளில் அனைத்திலும் வெற்றியே உண்டாகும், ஏஜென்சி துறையில் கொடிகட்டி பறக்கும் வாய்ப்புகளை வாரி வழங்கும், வெளிநாடு மற்றும் வெளிநாட்டில் உள்ள மக்களின் ஆதரவும் ஜாதகருக்கு பரிபூரணமாக கிடைக்கும், புதியவர்கள் வெளிநாட்டினர்கள் மூலம் வியாபர விருத்தி உண்டாகும், ஆராய்ச்சி மூலம் புதிய யுக்திகளை கையாளும் தன்மையை தரும், அனைத்திலும் வெற்றி நினைக்கும் எண்ணங்களை நடைமுறைக்கு கொண்டு வந்து நன்மைகளை பெரும் யோகம், சாஸ்திர ஞானமும், தேர்ச்சியும் உண்டாகும், அனைவரின் மன நிலையையும் உணர்ந்துகொள்ளும் மனோசக்தி உண்டாகும்,  ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் எதிர்பாராத லாபம் உண்டாகும், இசை துறையிலும் ஜோதிடத்திலும் மிதமிஞ்சிய புலமை உண்டாகும், தியானம் யோகங்களில் ஆர்வமும், விளையாட்டில் வெற்றியும், மண்ணிற்கு கிழ் கிடைக்கும் கனிம பொருட்கள், உலோகம் அலோகம் சார்ந்த பொருட்களில் மிகுந்த லாபம் உண்டாக்கும், அனைத்தும் ஜாதகருக்கு சாதகமாக அமையும்.

9ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் சிறந்த அறிவு திறனையும், தன்னிகரில்லாத சிந்தனை ஆற்றலையும் வாரி வழங்கும், பயணங்களில் விருப்பத்தையும், இடம் மற்றும் சூழ்நிலை மாற்றத்தில் ஆர்வத்தை அதிகரிக்கும், சமுதாயத்தில் அனைத்து தரப்பு மக்களிடமும் ஜாதகருக்கு நற்ப்பெயரும் ஆதரவும் தொடர்ந்து கிடைத்த வண்ணம் இருக்கும், தான் செய்யும் தொழிலில் கைராசியையும், நிலைத்து நிற்கும் வித்தையையும் ஜாதகர் தெளிவாக அறிந்து வைத்திருப்பார்.

4,10,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதே ஜாதகத்தில் உள்ள மித மிஞ்சிய யோக பலன்களை வாரி வழங்கும் அமைப்பாக கருதலாம், 4,10,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் 11ம் பாவகம் ஜாதகருக்கு காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு தொழில் ஸ்தானமாகவும், சர மண் தத்துவமாக அமைவது கவனிக்க தக்க அம்சமாகும், சர ராசிகளின் தன்மை பொதுவாக தான் தரவேண்டிய பலன்களை தங்குதடை இன்றி 100% விகிதம் மிக குறுகிய காலத்தில் வாரி வழங்கும், ஜாதகருக்கு நடைபெறும் அல்லது  எதிர்வரும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் 11ம் பாவக பலனை ஏற்று நடத்தினால், ஜாதகருக்கு எதிர்பாராத லாபங்களும் அதிர்ஷ்டங்களும் தொழில் ரீதியாகவும், வியாபர ரீதியாகவும் வாரி வழங்கிவிடும்.

4ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் நண்பர்கள் ஆதரவு நிரந்தரமாக கிடைக்கும் யோகத்தை தரும், போதும் என்ற மன நிறைவையும், சுக போக வாழ்க்கையில் தன்னிறைவையும் தரும், தனது பெயரில் உள்ள அசையும் அசையா சொத்துகள் வழியில் இருந்து நிறைவான லாபங்கள் வந்துகொண்டே இருக்கும், வண்டி வாகனம், புதிய சொத்துகள் வாங்கும் யோகம், கால்நடைகள் வழியில் மிதமிஞ்சிய லாபம், புதிய அனைத்து வசதிமிக்க வீடு கட்டும் அல்லது வாங்கும் யோகத்தை தரும், ஜாதகரின் நல்ல குணம் உலக புகழை பெற்று தரும், சமுதாயத்தில் உள்ள பெரிய மனிதர்களின் ஆதரவும் உதவியும் தேடிவரும், எடுக்கும் காரியங்களில் சுலப வெற்றியை பெற்று தரும்.

10ம் பாவக வழியில் சிறந்த கௌரவமான யோக வாழ்க்கை, அரசியலில் பெரிய பதவிகளை அலங்கரிக்கும் யோகம், அனைவருடன் அனுசரித்து செல்லும் யோகம், தொழில் ரீதியான வெற்றிகளையும் லாபங்களையும், ஜாதகர் முன்கூட்டியே திட்டமிட்டு பெரும் யோகத்தை தரும், ஜாதகரின் கணிப்பு தவறாமல் ஜாதகருக்கு நன்மைகளையும், யோகத்தையும் வாரி வழங்கும், வெற்றி மயமான எதிர்கால வாழ்க்கை, எந்த செயலையும் நம்பிக்கையுடன் செய்து 100% விகித வெற்றியை பெரும் யோகத்தை தரும்.

11ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் தன்னம்பிக்கையும், மன உறுதியும் மிதமிஞ்சிய அளவில் செயல்படும், சிறந்த குணம் ஜாதகரின் வாழ்க்கையில் பல திருப்பு முனைகளை தரும், மிகுந்த அதிர்ஷ்டத்தின் பலனை ஜாதகர் தங்குதடையின்றி பெறுவார், பொருளாதரத்தில் தன்னிறைவான யோக வாழ்க்கையை ஜாதகர் மிக இளம் வயதிலேயே பெற்றுவிடுவார், ஜாதகரின் எண்ணங்களும் செயல்களும் மிகவும் நேர்மையானதாகவும், சத்தியத்திற்கும் சட்டத்திற்கும் கட்டுப்பட்டதாக அமைந்திருக்கும்.

5ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகரின் சுய முயற்ச்சியில் வெற்றிபெற்ற ஒரு சிறந்த வெற்றியாளனாக சமுதாயத்தில் அறிமுகம் செய்துவைக்கும், தனது சிந்தனை மற்றும் அறிவு புத்திசாலித்தனம் அனைத்தையும் தான் செய்யும் தொழிலில் பயன்படுத்தும் வல்லமையை தரும் என்ற போதிலும், தனது தந்தையுடன் மிகுந்த கருத்துவேறுபாடுகளை தொடர்ந்து கொடுத்தவண்ணம் இருக்கும், கலை துறையில் ஜாதகருக்கு தனிப்பட்ட அடையாளத்தையும், மிகப்பெரிய வெற்றிகளையும் வாரி வழங்கும், ஆய கலைகள் 64ல் ஜாதகர் தேர்ந்து எடுக்கும் கலையில் மிகுந்த தேர்ச்சியை தரும், ஜோதிடம் கணிதம் இசை சார்ந்த விஷயங்களில் தனிப்பட திறைமைகளை ஜாதகர் பயன்படுத்தும் யோகத்தை தரும், இறைஅருளின் கருணை  ஜாதகருக்கு பரிபூர்ணமாக அமைந்திருக்கும், முப்பெரும் தேவியரின் ஆசிகளுக்கும் அருளுக்கும் பாத்தியமாகும் யோகத்தை வழங்கும்.

தற்பொழுது நடைமுறையில் உள்ள செவ்வாய் திசை ஜாதகருக்கு 11ம் பாவக பலனை ஏற்று நடத்துவதும், அடுத்து வரும் ராகு திசையும் ஜாதகருக்கு 2ம் பாவக பலனை ஏற்று நடத்துவதும், ஜாதகரை தொழில் மற்றும் ஜீவன ரீதியான வெற்றிபடிகளில் தொடர்ந்து உயர்ந்து சென்றுகொண்டு இருக்கும் வாய்ப்பை தங்கு தடையின்றி வழங்கும், தொழில் ரீதியான மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை, ஜாதகர் உருவாக்குவதற்கு நல்ல வாய்ப்புகளை நிச்சயம் ஏற்ப்படுத்தும்.

குறிப்பு :

தற்பொழுது நடைபெறும் சனி புத்தி மட்டும் 8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 
8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, சற்று அதிக சிரமங்களை தரக்கூடும், மனோ ரீதியான போராட்டங்களை அதிக அளவில் தர கூடும், திடீர் இழப்புகள் சில நேரங்களில் தவிர்க்க இயலாது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 1 ஆகஸ்ட், 2015

ராகு சுய ஜாதகத்தில் அமர்ந்த பாவகத்தின் வலிமையும், தனது திசையில் வழங்கும் பலன்களும் !




  சுய ஜாதகத்தை இயக்குவதில் மிக முக்கிய பங்காற்றுவது லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையே என்றால் அது மிகையில், இந்த நிலையில் பாவகங்களின் வலிமையை, நவ கிரகங்கள் தான் அமர்ந்த நிலையில் இருந்தும், பார்வை தரும் நிலையில் இருந்தும் நிர்ணயம் செய்கின்றது, நவகிரகங்கள் தனது திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம நிலைகளில் சுய ஜாதகத்தில் வலிமை அல்லது வலிமை அற்ற பாவகங்களின் தன்மையை ஏற்று நடத்தும் பொழுது, தான் ஏற்று நடத்தும் பாவகங்களின் வலிமைக்கு ஏற்ப, யோக அவயோக பலன்களை நடைமுறைக்கு கொண்டு வருகிறது.

உதாரணமாக ஒருவரது சுய ஜாதாக்தில் சனி திசை நடைபெறுகிறது என்று வைத்துகொண்டால், அவரது ஜாதகத்தில் சனி எங்கு அமர்ந்து உள்ளார், அந்த வீடுகளை பார்வை செய்கிறார், அமர்ந்த இடத்தில் என்ன பலனை பெறுகிறார் ( ஆட்சி,உச்சம்,நட்பு,சமம்,பகை,நீசம் அல்லது லக்கினத்திற்கு எந்த வீடுகளில் அமர்ந்துள்ளார், எந்த கிரகத்துடன் சேர்ந்துள்ளார் ? ) என்பதை அடிப்படையாக கொண்டு தனது திசையில் பலனை வழங்குவார் என்று கணிதம் செய்வது முற்றிலும் தவறான அணுகுமுறையாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது, ஏனெனில் எந்த ஒரு கிரகமும் தான் அமர்ந்த அல்லது பார்த்த பாவகத்தின் பலனையே தனது திசையில் தரும் என்று கணிதம் செய்வது சரியானது அல்ல, சுய ஜாதகத்தில் நவ கிரகங்கள் எந்த பாவகத்தில் அமர்ந்து இருந்தாலும் சரி, தனது திசையில் எந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்துகிறது என்ற கணிதம் தெரியாத பொழுது, சுய ஜாதக பலனை நிர்ணயம் செய்வதில் மிக பெரிய பிழை ஏற்ப்பட்டு விடும், ஜோதிடர் தாம் சொல்லும் பலன்களுக்கும், ஜாதகருக்கு நடைமுறையில் நடைபெறும் பலன்களுக்கும் சம்பந்தமே இல்லாமல் போய்விடும் வாய்ப்பு உண்டு இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு விளக்கம் பெறுவோம் அன்பர்களே !



லக்கினம் : சிம்மம் 
ராசி : துலாம் 
நட்சத்திரம் : சித்திரை 4ம் பாதம் 

மேற்கண்ட சிம்ம இலக்கின ஜாதகருக்கு ராகு பகவான் சிம்மராசியில் உள்ள  12ம் பாவகத்தில் அமர்ந்து 100% விகித வலிமையுடன் இருப்பது ஜாதகருக்கு அருங்கலைகளில் ஆர்வமும், யோக,தியானம் மற்றும் தவம் மூலம் ஆன்மீக வெற்றிகளையும், அதிக அளவில் முதலீடு செய்வதால் வரும் பெரிய வருமானங்களும், மருத்துவத்தில் தேர்ச்சியும், மருந்துகள் மூலம் அபரிவிதமான முன்னேற்றமும், ரகசிய செயல்களில் வெற்றியும், மறைமுக விஷயங்களில்  தெளிவும் தேர்ச்சியும், புலன் இன்பங்களில் இருந்து விடுபடும் யோகமும், வெளிநாடுகளில் இருந்து வரும் செல்வாக்குகள், தனிபட்ட முன்னேற்றங்கள், இல்லற வாழ்க்கையில் திருப்தியும், போதும் என்ற மனமும், ஆன்மீகத்தில் புதிய தேடுதல் விளக்கங்களும், ஆன்மீக அன்பர்களின் ஆசியின் மூலம் வாழ்க்கையில் பிறப்பின் பலன்களை முழுமையாக பெரும் யோகமும், மன நிம்மதியான வாழ்க்கை மற்றும் சிறப்பான உறக்கமும், குழப்பம் அற்ற மன நிலையையும், தெளிவான சிந்தனைகள் மூலம் வாழ்க்கையை சிறப்பாக எதிர்கொள்ளும் தன்மையையும் தரும்.

இந்த ஜாதகருக்கு தான் அமர்ந்த பாவக வழியில் மேற்கண்ட நன்மைகளையும், சுய கட்டுபாடு, போதும் என்ற மனம், நிறைவான மன நிலை, உடல் நிலையில் குறைவில்லா ஆரக்கியம், எந்த சூழ்நிலையிலும் மனம் தளராமல் அனைத்தையும் ஏற்றுகொள்ளும் யோகமும், வாழ்க்கை துணை வழியில் இருந்து ஒருமித்த கருத்துகளுடன் இணைபிரியா தாம்பத்திய வாழ்க்கையும், எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான தேடுதல் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்யும் திட்டமிடுதல்களும், ஜாதகருக்கு இயற்கையாக அமைந்திருக்கும், குறிப்பாக ஜாதகரின் மன நிலை, மன உறுதி, மன மகிழ்ச்சி எனும் விஷயங்களை எவராலும் உடைக்க இயலாது, ஜாதகரை விழ்த்த நினைக்கும் அன்பர்களுக்கு, மிகப்பெரிய விழ்ச்சியை உருவாக்கும் வல்லமை கொண்டவர், தனது பிறவி பயனை பரிபூர்ணமாக அனுபவித்து முக்தியை பெரும் யோகத்தை ராகு பகவான் ஸ்திரமாக நெருப்பு தத்துவ அமைப்பில் இருந்து தருவார், ஆக ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 12ம் பாவகம் மிகவும் வலிமையாக உள்ளது தெளிவாகிறது, சுய ஜாதகத்தில் ராகு 12ம் பாவகத்தில் ( சிம்ம ராசியில் ) அமர்ந்து வலிமை பெற்றது 12ம் பாவக வழியில் மிகுந்த யோக பலனை தரும்.  


ஜாதகருக்கு ராகு திசை பால்ய வயதில் இருந்து பருவ வயது வரை உள்ள காலகட்டங்களில் நடைபெற்றுள்ளது ( 12/12/1980 முதல் 13/12/1998 வரை ) ராகு தனது திசையில் தான் அமர்ந்த பாவக பலனை ஏற்று நடத்தாமல் 1,3,5,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவக பலனை ஏற்று நடத்தியது ஜாதகரின் பருவ வயது வாழ்க்கையை மிகப்பெரிய இன்னல்களுக்கு ஆளாக்கியது, 1ம் பாவக  வழியில் இருந்து ஜாதகரின் அறிவும் உடல் நலமும் வெகுவாக பாதித்தது, பாதிப்பிற்கு ஜாதகரின் நடவடிக்கைகள் காரணமாக அமைந்தது, 3ம் பாவக வழியில் இருந்து சகோதர வழியில் இருந்து இன்னல்களும், முயற்ச்சிகளில் தோல்வியும், கல்விகாலங்களில் பல இடர்பாடுகளையும்  சந்திக்கும் சூழ்நிலையை தந்தது, ஆரம்ப கல்வி பயிலுவதர்க்கே ஜாதகர் கடும் பிரயத்தனம் செய்யவேண்டி வந்தது, 5ம் பாவக வழியில் இருந்து கல்வியிலும் சுய அறிவு திறன் மற்றும் புத்திசாலிதனத்திலும் பெரிய அளவில் சோபிக்க இயலாமல், தனது பூர்வீகத்தை விட்டு பரதேச ஜீவனத்தை மேற்கொள்ள வைத்தது, 9ம் பாவக வழியில் இருந்து தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு அனைவரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகும் சூழ்நிலையை தந்து, ஜாதகரின் முன்னேற்றத்திற்கு தடையாக நிறைய எதிர்பாளர்கள் அமைந்தார்கள், பொது காரியங்களில் அவமானமும் அவபெயருமே கிடைத்தது, ஜாதகரின் அறிவு திறன் வெகுவாக குறைந்தது, இதனால் ஜாதகர் நடுநிலை கல்வி தோல்வியுடன் முடிவுக்கு வந்தது, வீண் அலைச்சலும், முரண்பட்ட சிந்தனைகளும் ஜாதகரின் எதிர்கால வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியது.

இந்த ஜாதகத்தில் ராகு பகவான் 12ம் பாவகத்தில் அமர்ந்து 12ம் பாவகத்தை 100% விகித வலிமை பெற செய்த போதிலும், தனது திசையில் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தியதால் ராகு திசை முழுவதும் ஜாதகர் எண்ணிலடங்க துன்பங்களையும்  துயரங்களையும் 1,3,5,9ம் பாவக வழியில் இருந்து அனுபவிக்கும் தன்மையை தந்தது.

பொதுவாக ஒருவரது சுய ஜாதகத்தில் நவகிரகங்கள் தான் அமர்ந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்தும் என்று கற்பனை செய்துகொள்வது முற்றிலும் ஜோதிட கணிதத்திற்கு முரண்பட்ட விஷயமாகவே அமையும், எந்த ஒரு கிரகமும் தனது திசையில் எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது  என்ற ரகசியத்தை, உயர்கணித சார ஜோதிட முறைப்படி கண்டுணர்ந்து தெளிவு பெறுவது அவசியமாகிறது, இதன் அடிப்படையில் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் தான் ஏற்று நடத்தும் பாவக பலன்களை கருத்தில் கொண்டு, குறிப்பிட்ட ஜாதகருக்கு பலன் காண்பதுவே சம்பந்த பட்ட ஜாதகரின் வாழ்க்கைக்கு சரியான பாதையை வகுத்து தரும், மாறாக நவகிரகம் அமர்ந்த பாவகத்தின் பலனையும், பார்த்த பாவகத்தின் பலனையும் நடத்தும் என்று கணிப்பது முற்றிலும் கற்பனையாகவே அமைந்துவிட வாய்ப்பு உண்டு, சில ஜாதகங்களில் ஆட்சி,உச்சம் பெற்ற கிரகத்தின் திசை எவ்வித யோக பலன்களையும் தராததிற்க்கும், பகை நீச்சம் பெற்ற கிரகத்தின் திசை ராஜ யோக பலன்களை வாரி வழங்குதிற்க்கும், உண்மையான காரணம் மேற்கண்ட உதாரண அமைப்பே, ஆக சுய ஜாதகத்தில் கிரகங்கள் பெற்ற வலிமையை கருத்தில் கொள்ளாமல், பாவகங்களின் வலிமை, நவகிரகங்கள் தனது  திசையில் ஏற்று நடத்தும் பாவகங்களின் தன்மையை  உணர்ந்து, சுய ஜாதக பலன் காணுவதே சிறந்த ஜோதிடரின் அணுகுமுறை, மற்றவை அனைத்து ஜோதிடரின் கற்பனையாகவே அமைந்துவிடக்கூடும், நமது கிராமங்களில் சொல்லும் செலவேந்திரம் ஆனா " குருட்டு பூனை விட்டத்தில் பாய்ந்த கதையாக " மாறிவிடும் என்பதே, முற்றிலும் உண்மை அன்பர்களே !

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


சனி, 13 டிசம்பர், 2014

விரைய ஸ்தானம் எனும் பனிரெண்டாம் பாவகம் வழங்கும் யோக வாழ்க்கை !




விரைய ஸ்தானம் எனும் பனிரெண்டாம் பாவகம் வழங்கும் யோக வாழ்க்கை ! எனும் தலைப்பை காணும் வாசக அன்பர்களுக்கு வியப்பு மேலோங்க வாய்ப்பு உண்டாகலாம், விரைய ஸ்தான அமைப்பில் இருந்து ஒரு ஜாதகர் என்ன யோக பலன்களை அனுபவிக்க இயலும், இந்த பாவக ஜாதகருக்கு அப்படியென்ன யோக வாழ்க்கையை தந்துவிடும் என்ற எண்ணம் வருவது இயற்கையே, பொதுவாக பாரம்பரிய ஜோதிடமுறையில் 6,8,12ம்  வீடுகள் தீய ஸ்தனமாகவே பாவிக்க பட்டு இருக்கிறது, குறிப்பாக 6,8,12ம் பாவக வழியில் இருந்து ஒரு ஜாதகர் நிச்சயம் தீய பலன்களே அனுபவிக்க நேரும் என்பதாகவே இருக்கின்றது, ஜாதகர் மேற்கண்ட 6,8,12ம் பாவக வழியில் இருந்து எவ்வித யோக பலன்களையும் அனுபவிக்க இயலாதா ? என்ற கேள்விக்கு உண்டான சிந்தனையே இந்த பதிவு அன்பர்களே ! இனி 12ம் பாவகத்தை பற்றி சிந்தனைக்கு எடுத்துகொள்வோம்.

வாழ்க்கையில் மனிதனின் செயல்கள் எல்லாம் மனதிருப்தி என்ற இலக்கை நோக்கியே செல்கிறது, இந்த மன திருப்தியை தருவது 12ம் பாவக வலிமையே, மன திருப்திக்காக ஒரு மனிதனை இந்த பனிரெண்டாம் பாவகம் எவ்விதம் ஆட்டி படைக்கிறது என்பதை சற்றே சிந்திப்போம் அன்பர்களே ! பொதுவாக ஒருவரது சுய ஜாதகத்தில் 12ம் பாவகம் வலிமை இழக்கும் பொழுது, ஜாதகர் தனது மனதிற்கு திருப்தியை தருவது எதுவென்று அறியாமல் கடுமையான குழப்பத்திற்கு ஆளாகும் சூழ்நிலையை தருகிறது, உதாரணமாக ஜாதகர் மது பழக்கத்திற்கு அடிமையாகும் முன்பு, தனக்கு மன திருப்தியை தருவதாக மற்றவர்கள் சொல்ல கேட்டு, மது பழக்கத்திற்கு அறிமுகமாகிறார், இறுதியில் ஜாதகரின் மனம் திருப்தியை பெறுகிறதா ? என்றால் நிச்சயம் இல்லை, மது பழக்கத்தால் ஜாதகரின் மனம் திருப்தியை பெற்று இருந்தால் உண்மையில் ஜாதகர் அந்த பழக்கத்தில் இருந்து 100% சதவிகிதம் விடுபட்டு அல்லவா இருக்க வேண்டும், ஆனால் நடப்பது என்ன ? ஜாதகர் மீண்டும் மீண்டும் தொடர்ந்து செய்து மன திருப்தியை தேடுகிறார்.

இதை போன்றே அனைத்து தீய பழக்கத்திற்கும் காரணமாக ஜாதகரின், வலிமை அற்ற 12ம் பாவக நிலை அடிகோலுகிறது, இந்த 12ம் பாவகம் வலிமை அற்று போகும் அன்பர்களின் மனதை, மற்றவர்கள் மிக எளிதில் தங்கள் வசப்படுத்தி கொண்டு தங்களுக்கு சாதகமான விஷயங்களை நிறைவேற்றி கொள்கின்றனர், ஒரு அரசியல்வாதி தனது தொண்டனை அடிமையாக வைத்திருக்கவும், ஒரு திரைப்பட நடிகர் தனது ரசிகர்களை தனது கைக்குள் வைத்திருக்கவும், ஒரு தீவிரவாத தலைவன் தனக்கு கிழ் சிலரை மூளை சலவை செய்து அடிமைகளாக வைத்திருக்கவும், போலி ஆன்மீகவாதி தனது சீடர்களை தனக்கு கிழ்படிந்து நடக்கும் சீடனாக சில நபர்களை பேச்சில் மயக்கி வைத்திருக்கவும், அவர்களின் 12ம் பாவக வலிமையற்ற தன்மையே காரணமாக அமைகிறது, மனிதர்களை மன ரீதியாகவும் உணர்ச்சிகள் ரீதியாகவும் மிக எளிதில் அணுகி அவர்களுக்கு ஒரு மாய தோற்றத்தை ஏற்ப்படுத்தி அவர்களை தன்வசபடுத்த அவர்களின் ஜாதகத்தில் 12ம் பாவக நிலை வலிமை அற்ற தன்மையில் இருப்பதே காரணம் என்றால் அது மிகையில்லை அன்பர்களே !

12ம் பாவகம் வலிமையற்று போகும் பொழுது அந்த ஜாதகர் தனது மனதிற்கு திருப்தி தருவது எதுவென்று அறியாமல் குழப்பத்தின் நடுவிலேயே வாழ்க்கையை நகர்த்தும் சூழ்நிலையை தருகிறது , குழப்பம் என்பது ஒருவருக்கு வந்துவிட்டால் அவர் சரியான முடிவு எடுப்பது என்பது குதிரை  கொம்பாகிவிடும், இவருக்கு சரியான முடிவை தருவது போல் ஒரு மாய தோற்றத்தை ஏற்ப்படுத்தி, அவர்களது தேவைகளை பூர்த்தி சொய்துகொள்ளும் ஆட்களும் உண்டு, ஒருவர் தான் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் விளைவு அறிந்து செயல்பட அவரது சுய ஜாதகத்தில் 12ம் பாவகம் மிக மிக வலிமையுடன் இருப்பது அவசியம் ஆகிறது, மேலும் தனது மனதில் ஏற்ப்படும் குழப்பங்களுக்கு தானே தீர்வை தேடும் வல்லமை பெற 12ம் பாவக வலிமை 100% விகிதம் உதவி புரியும் என்பதில் மற்று கருத்து இல்லை அன்பர்களே, வாழ்க்கையில் சிலர் திடீர் என முடிவெடுத்து தற்கொலை செய்துகொள்ளும் சூழ்நிலைக்கு ஆளாக்குவது இந்த  12ம்  பாவக வலிமை அற்ற தன்மையே என்றால் அது மிகையில்லை, அற்ப காரணங்களுக்காக வாழ்க்கையை முடித்துகொள்ளும் எண்ணத்தை ஜாதகருக்கு தருவது இந்த 12ம்  பாவகத்தின் வலிமை அற்ற தன்மையே  காரணமாக அமைகிறது அன்பர்களே !

வாழ்க்கையில் ஒரு ஜாதகர் தான் எடுக்கும் முடிவுகள் சரியானதா ? அல்லது தவறானதா என்பதை தனது அறிவுக்கு உற்படுத்தி மன ரீதியான தெளிவை பெற சுய ஜாதகத்தில் 12ம் பாவகம் மிக வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, ஒருவரது மனதில் குழப்பம் வரும் பொழுது உயிர் சக்தி விரையபடுத்த  படுகிறது, தேவையற்ற சந்தேகம், பயம் மற்றும் மன தைரியம் யாவும், ஜாதகரை ஒரே இடத்தில் முடக்கி வைக்கிறது, அயன சயன சுகம் எனும் நிம்மதியான தூக்கம் வராமல் ஜாதார் மனோ ரீதியாக கடுமையான பாதிப்பை சந்திக்கும் சூழ்நிலை உருவாகிறது, நல்ல தூக்கமே ஒருவரை மன ரீதியாகவும் , உடல் ரீதியாகவும் எப்பொழுதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும், சுய ஜாதகத்தில் 12ம் பாவகம் பாதிக்கப்படும் பொழுது இது கேள்விக்குறியாக மாறிவிடுகிறது.

பொதுவாக சுய ஜாதகத்தில் 12ம் பாவகத்தை தீய ஸ்தானமாகவே பாவித்து பலன் காண்பது 
முற்றிலும் தவறான அணுகுமுறையாகவே ஜோதிடதீபம் கருதுகிறது, ஏனெனில் 12ம் பாவகம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் தனது இயல்பு மாறாத தன்மையுடன் விளங்க செய்கிறது, எவ்வித சூழ்நிலையையும் தாங்கும் மன வலிமையை தருகிறது, தனது எண்ணங்களின் வலிமையின் மூலம் அனைத்தையும் சாதிக்கும் யோக வாழ்க்கையை ஜாதகர் பெற முடிகிறது, ஆன்மீகத்தில் சிறந்து விளங்க ஒருவரின் ஜாதகத்தில் 12ம் பாவகம் வலிமை பெறுவது அவ்ச்சியமாகிறது மேலும் 12ம் பாவகம் நீர் தத்துவ ராசியில் அமைவது மோட்ச வாழ்க்கையை 100 சதவிகிதம் வழங்கும் என்பதும், சர நீர் தத்துவத்தில் 12ம் பாவகம் அமைவதும் வலிமை பெறுவதும் ஜாதகர் ஆன்மீகத்தின் மூலம்  முக்தி பெரும் யோகத்தை தரும், திருப்தி அடைவது என்பது 12ம் பாவகத்தின் தன்மை எனும் பொழுது, ஆன்மா முக்தி பெற்று திருப்தியான பூர்ணத்துவத்தை பெறுவது மேற்கண்ட பாவகத்திலே என்றால் அது மிகையில்லை அன்பர்களே.

பொதுவாக காதலில் 100% விகிதம் வெற்றி பெற்று காதல் திருமணத்தின் மூலம் பரிபூரணத்தை அடைவதற்கு 12ம் பாவக வலிமை மிக மிக அவசியம் தேவை, காதலில் தோல்வி அடைவதும், காதல் தோல்வியின் மூலம் வாழ்க்கையில் விரக்தியின் உச்சிக்கே கொண்டு செல்வது 12ம் பாவகத்தி தன்மையே, இதன் விளைவுகளாக தற்கொலைக்கு முயற்ச்சி செய்வதும், ஸ்திர தன்மையில்லாத காதல் வாழ்க்கையை மேற்கொள்ள வைப்பதும் 12ம் பாவகமே, போதும் என்ற மன நிலையை தாராமல், தொடர்ந்து அடுத்து அடுத்து என்று அலைபாயும் மன நிலையை தருவதும் 12ம் பாவகமே, எதுவும் இல்லை என்றாலும் இருப்பதை வைத்து சிறப்பாக வாழும் வல்லமையை தருவது 12ம் பாவக வலிமையே, ஒருவரின் தேடுதலுக்கு எல்லாம் ஒரு முற்று புள்ளியை வைப்பது 12ம் பாவக வலிமையே, அது பொருள் சார்ந்தது என்றாலும் சரி அறிவு,மனம் மற்றும் இயக்கம் சார்ந்தது என்றாலும் சரி நிச்சயம் இறுதியில் திருப்தி என்ற மன நிலைக்கு ஜாதகரை அழைத்து செல்லும் வல்லமையை தருவது மேற்கண்ட அயன சயன ஸ்தானமே.

இதை தெளிவாக வேதாத்திரி மகரிஷி அய்யா அவர்கள் " தேடுவதை விட்டுவிட்டால் அனைத்தும் அங்கேயே இருப்பது புலனாகும் " எனும் வேதவாக்கின் மூலம் நமக்கு தெளிவு பட நம் அனைவருக்கு சிந்தனையில் உரைக்கும் வண்ணம் அருளியிருக்கிறார், புலனுக்கு எட்டாத அறிவு ஆற்றலை நமக்கு தருவது 12ம் பாவக வலிமையே என்றால் அது மிகையில்லை, 12ம் பாவகம் வலிமை பெறவில்லை எனில் ஒரு ஜாதகரால் தனது அலைபாயும் மன ஆற்றலை ஒருமுகமாக கட்டுபடுத்த இயலாது, ஒன்று படுத்தபட்ட சக்தியை எவ்விதத்திலும் பிரயோகிக்கவும் இயலாது, அருங்குண நலன்களை சீரமைக்கவும்  இயலாது, ஐம்புலன்களையும் கட்டுக்குள் கொண்டு வரவும் இயலாது, மிக துல்லியமாக சொல்ல வேண்டும் எனில் ஜாதகர் தன்னை சுய கட்டுப்பாட்டின் கிழ் கொண்டு வரவும், ஒரு இலக்கை நோக்கி பயணம் செய்ய வைக்கவும் 12ம் பாவக உதவி நிச்சயம் தேவை அன்பர்களே.

 ஒருவருக்கு லக்கினம் எனும் முதல் பாவகம் சிறப்பாக இயங்க வேண்டும் எனில் லக்கினத்திற்கு மேல் இருக்கும் 12ம் பாவகம் வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, ஜாதகரின் இயக்கத்தை ஆளுமை செய்யும் தன்மையும் 12ம் பாவகத்திற்கு 100% சதவிகிதம் உண்டு, லக்கினம் சிறப்பு பெறுவது ஒரு வகையில் நன்மை என்ற போதிலும் 12ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகரை 100% விகிதம் சிறப்பாக செயல்பட வைக்கும், ஒருவரின் மன திருப்தியே பூரணத்துவத்தை தருகிறது என்றால், அவரது ஜாதகத்தில் அயன சயன ஸ்தானம் வலிமையுடன் இருப்பது முக்கியம் என்பதை கருத்தில் கொள்வது நலம் அன்பர்களே, அயன சயன ஸ்தானம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் தன்னிலை உணர்வதும், சுய திருப்தி பெறுவதும் இயற்கையாக நடைபெறும், ஒரு ஆன்மீக வாதியையோ, ஒரு நடிகரையோ, ஒரு அரசியல் தலைவரையோ நாடி செல்லும் சூழ்நிலையை தராது, மேற்க்கண்டவர்கள் உண்மையானவர்களாக இருந்து விடில் ஜாதகருக்கு பிரச்சனை இல்லை, அதற்க்கு நேர் மாறாக இருப்பின் ஜாதகர் நிச்சயம் மூளை சலவை செய்து நம்ப வைக்கபடுவார், இதற்க்கு காரணமாக விரைய ஸ்தானம் வலிமை அற்ற நிலை காரணமாக அமைந்துவிடும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696