மஹா லட்சுமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மஹா லட்சுமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 7 ஜூன், 2012

சுய ஜாதகத்தில் அதிர்ஷ்ட யோக அமைப்பு !



சுய ஜாதக அமைப்பில் லக்கினத்திற்கு நீடித்த அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் , லாப ஸ்தானம் எனும் பதினொன்றாம் வீடு சர ராசியாக, அமைந்து பதினொன்றாம் வீடு பதினொன்றாம் வீட்டுடன் தொடர்பு பெறவேண்டும் , அப்படி தொடர்பு பெற்ற வீட்டின் பலனை தற்பொழுது நடக்கும் திசை நடத்தவேண்டும் ( அது எந்த திசை ஆனாலும் சரி ) இந்த அமைப்பை பெற்ற ஜாதகருக்கு, சரியான வயதில் 18 முதல் 60 வயது வரை உள்ள காலகட்டங்களில் பதினொன்றாம் வீட்டின் பலன் நடந்தால் ஜாதகருக்கு வாழ்க்கையில் வெற்றிமேல் வெற்றி குவியும் , பொருளாதார வாழ்க்கையில் நல்ல முன்னேற்றமும் அதிர்ஷ்டகரமான பலனை அனுபவிப்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை .

கால புருஷ தத்துவத்திற்கு சர ராசியாக வருபவைகள் பின் வருமாறு :

மேஷம் :

காலபுருஷ தத்துவத்திற்கு மேஷம் முதல் வீடாகவும் , சர நெருப்பு தத்துவமாகவும் அமையும் , ஒரு ஜாதகருக்கு மேஷம் பதினொன்றாம் வீடாக இருந்து பதினொன்றாம் வீட்டுடன் தொடர்பு பெற்று நடப்பு திசை இந்த வீட்டின் பலனை தருமாயின் , ஜாதகர் தனது செயல் பாடுகளினால் அதிர்ஷ்ட வாழ்க்கையை பெறுவார் , தனது சுய உழைப்பால் வாழ்க்கையில் படிப்படியான முன்னேற்றம் பெறுவார் .


 இவரது முன்னேற்றத்திற்கு முழுகாரணம் ஜாதகரே , நல்ல சுறு சுறுப்பாக உழைப்பின் மூலம் சகல வசதி வாய்ப்பினையும் பெறுவார் , சுயமாக வாழ்க்கையில் விரைவில் முன்னேற்றம் பெற்றவர்களின் ஜாதக அமைப்பில் இந்த நிலை காணப்படும் , இவர்கள் அதிகம் மின் உற்பத்தி பொருட்கள் , வாகன எரிபொருள்கள் , உணவு  பொருட்கள் , இரும்புக்கம்பி உற்பத்தி தொழில்கள் , கட்டுமான தொழில்கள் , நெருப்பு சார்ந்த தொழில்களில் 100 சதவிகித வெற்றியை  பெறுகின்றனர். அதிர்ஷ்ட வாழ்க்கையினை தனது உழைப்பின் மூலம் பெறுபவர்கள் .

கடகம் :

காலபுருஷ தத்துவத்திற்கு நான்காம் வீடாகவும் , சர நீர் தத்துவமாகவும் அமையும், ஒரு ஜாதகருக்கு கடகம் பதினொன்றாம் வீடாக இருந்து பதினொன்றாம் வீட்டுடன் தொடர்பு பெற்று நடப்பு திசை இந்த வீட்டின் பலனை தருமாயின் , ஜாதகர் தனது மனதில் நினைக்கும் கற்பனைகளை நிஜ வாழ்க்கையில் நடக்கும் அதிசயத்தை காண்பார் , கனவிலும் காண கிடைக்காத செல்வ வளங்களை பெரும் ஆற்றல் கொண்டவர் , மற்றவர்களின் மனதில் உள்ளவற்றை தனக்கு சாதகமாக மாற்றி அதில் அதிக லாபத்தை அடையும் தன்மை கொண்டவர்கள் , இவர்களுக்கு  பின்னால் ஒரு கூட்டமே அலையும் , அந்த அளவிற்கு மனதை வசியம் செய்யும் அமைப்பை தரும் .

 ஜாதகர் தனக்கு பின்னால் உள்ள மக்கள் செல்வாக்கை காந்தி மகான் மாதிரி நன்மையான அமைப்பில் பயன்படுத்துபவர்களும் உண்டு , சில போலிசாமியார் மாதிரி தீமையான விஷயங்களுக்கு பயன்படுத்துபவர்களும் உண்டு , இதில் சுயலாபம் பார்பவர்களும் உண்டு , பொது நல வாதிகளும் உண்டு . அது அவர்களுக்கு அமையும்  இலக்கின நிலையை  பொறுத்து . லக்கினம் நல்ல நிலையில் இருப்பின் நன்மை , இல்லை எனில் தீமை , இவர்கள் அதிகம் ஆடை ஆபரணம் , உணவு பொருட்கள் , தண்ணீர் , திரவ பொருட்கள் , மனோதத்துவ ஆசிரியர் ,மருத்துவர் , வெளிநாடுகளில் ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் அதிக முன்னேற்றமும் வண்டி வாகனம் , போக்குவரத்து சார்ந்த தொழில்களிலும் வெற்றிவாய்ப்பினை பெறுகின்றனர் , எதிர்பாராத மக்கள் செல்வாக்கும் , முன்னேற்றமும் ஜாதகரை விரைவில் அதிர்ஷ்ட வாழ்க்கையினை தரும் .


துலாம் :

 காலபுருஷ தத்துவத்திற்கு ஏழாம்  வீடாகவும் , சர காற்று  தத்துவமாகவும் அமையும், ஒரு ஜாதகருக்கு துலாம் பதினொன்றாம் வீடாக இருந்து பதினொன்றாம் வீட்டுடன் தொடர்பு பெற்று நடப்பு திசை இந்த வீட்டின் பலனை தருமாயின் ,ஜாதகரின் அறிவாற்றல் மிகசிறந்து விளங்கும் , தனது அறிவின் வழியில் அனைத்து யோகங்களையும் பெறுவார் , புத்தி கூர்மைக்கு  பெயர் பெற்றவர்கள் , எந்த ஒரு பிரச்சனைகளுக்கும் சரியான தீர்வினை சொல்பவர்கள் இவர்களே , மஹா பாரதத்தில் வரும் கிருஷ்ணா பரமாத்மா போன்றவர்கள் , வெற்றி தேவதை இவர்களை தேடி வருவாள் , மற்றவர்களுக்காக தனது அறிவின் வழியில் உதவி செய்யும் பேராண்மை கொண்டவர்கள் .

 பிரதி பலனாக எதையும் எதிர்பார்க்காதவர்கள், இவர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயமும் மற்றவர்களுக்கு நீண்ட நெடுநாள் பலன்களை கொடுத்துக்கொண்டு இருக்கும் , ஜாதகருக்கு செல்வவளம் அதிகம் இருந்த போதிலும் எளிமையாக வாழும் குணம் கொண்டவர்கள் , பொதுமக்களுக்கு நன்மையை மட்டுமே செய்யும் நல்ல மனம் கொண்டவர்கள் எனவே இவர்களுக்கு இறைவன் தொடர்ந்து செல்வ வளத்தை அள்ளி தந்துகொண்டே இருப்பார் , இறந்த பின்னும் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடிப்பவர்கள் , மக்கள் ஆதரவையும் , நண்பர்கள் உதவியையும் தனது சுய நலத்திற்க்காக பயன்படுத்ததவர்கள் .


மகரம் :

காலபுருஷ தத்துவத்திற்கு பத்தாம்  வீடாகவும் , சர நில தத்துவமாகவும் அமையும், ஒரு ஜாதகருக்கு மகரம் பதினொன்றாம் வீடாக இருந்து பதினொன்றாம் வீட்டுடன் தொடர்பு பெற்று நடப்பு திசை இந்த வீட்டின் பலனை தருமாயின் , ஜாதகர் இயற்கையிலே பிறக்கும் பொழுதே நல்ல வசதி வாய்ப்பினை கொண்டவராக திகழும் யோகம் பெற்றவர் , பன்முக திறமையாளர் , நிறைய சொத்து சுகங்களை கொண்டவர் , தொழில் துறையில் அதிர்ஷ்ட யோகங்களை தொடர்ந்து பெரும் அமைப்பை பெற்றவர் , தனது தகப்பனார் வழியில் நல்ல சொத்து சுகங்களை பெரும் யோகம் பெற்றவர்.

 செய்யும் தொழில்களில் சிறந்து விளங்கும் தன்மையை ஜாதகருக்கு இயற்க்கை தானாகவே அளிக்கும் , இவர்களால் பல குடும்பங்கள் நல்வாழ்வினை பெறுவார்கள் , தொழிலார்களையும் தன்னுள் ஒருவராக நடத்தும் பண்பாளராக ஜாதகர் காணப்படுவார் , முன்னேற்றமும் அதிர்ஷ்டமும் ஜாதகருக்கு தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும், இந்த அமைப்பை பெற்றவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் கூட்டு தொழில் செய்யும் பொழுது சரியான ஆளை தேர்ந்தெடுத்து தொழில் செய்வது மட்டுமே , இல்லை எனில் அனைத்து யோகமும் மற்றவருக்கு பயன்பட ஆரம்பித்துவிடும் .


வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வெள்ளி, 11 மே, 2012

தாயார் மஹா லட்சுமி வழிபாடு !



பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்  இதய கமலத்தில் நிரந்தரமாக குடிகொண்டிருக்கும் தாயார் மஹா லட்சுமி தேவியை போற்றி இந்த பதிவை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன் :

  தாயார் மஹா லட்சுமி குடிகொண்டு இருக்கும் இடங்களில் அணைத்து ஐஸ்வர்யமும் , சகல செல்வங்களும் நிச்சயம் குறைவின்றி நிறைந்திருக்கும் இதில் எவ்வித சந்தேகமும் இல்லை , அப்படியெனில் தாயார் மஹா லட்சுமி எங்கு நிரந்தரமாக குடிகொண்டு அருள் புரிந்து நலம் தருகிறாள் , எம்பெருமானின் இதய கமலத்தில் , அந்த இதய கமலம் எதை போன்றது , பரிசுத்தமான கருணையும் அன்பும் கொண்டது . அதுமட்டுமா  தம்மை மார்பில் எட்டிஉதைத்த பக்தனுக்கும் கருணை தந்த இதயம் அல்லவா அது ?

  தாயார்
மஹா லட்சுமி நிரந்தரமாக குடிகொண்டு இருக்கும் எம்பெருமானின் இதயம் குளிர்மை நிறைந்த இடமாகும், என்பே அங்கு தாய்  மஹா லட்சுமி விரும்பி நிரந்தரமாக ஜீவிதம் பெறுகிறாள், தாய்  மஹா லட்சுமி குணம் சிறு குழந்தையின் தன்மையை போன்றது , எங்கு அன்பும் பாசமும் அதிகம் உள்ளதோ அந்த இடத்தில்  தாய்  மஹா லட்சுமி நிறைந்து இருப்பாள், அப்படி பட்ட நிரந்தரமான ஓர் இடம் எம்பெருமானின் இதய கமலமே .

நமது முன்னோர்கள் இந்த சூட்சம விஷயங்களை கடவுள் வழிபாடுகள் மூலம் நமக்கு தெளிவாக உணர்த்தினார்கள் , நாம்தான் இதை இன்னும் புரிந்து கொள்ள வில்லை, ஒரு குடும்பத்தில் புதிதாக திருமணம் ஆனா தம்பதியருக்கு , முதலில் பிறக்கும் குழந்தை பெண்ணாக அமைந்தால் அந்த குழந்தையை தாயார்
  மஹா லட்சுமி , ஆகவே பாவித்து அதிக பாசத்தையும் , அன்பையும் கொடுத்து செல்லாமாக வளர்த்தனர் , இதானால் குழந்தையின் வடிவில் தெய்வம் வந்து நின்று அந்த குடும்பத்தை காத்து அருள் புரிந்தது என்பது அசைக்க முடியாத முன்னோர்களின் நம்பிக்கை , ஒருவகையில் முதன் முதலாக பெண் குழந்தையை பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்களே .

எப்படி தாயார்
  மஹா லட்சுமி அன்பு , கருணை , பாசம் , குளிர்மை நிறைந்த பகவானின் இதய கமலத்தில் நிரந்தரமாக உள்ளாரோ , அது போல் நமது இல்லங்களிலும் , உள்ளங்களிலும் குடியிருக்க வேண்டுமெனில் நமது இல்லமும் , உள்ளமும் பரிசுத்தமானதாகவும் ,  அன்பு , கருணை , பாசம் , குளிர்மை நிறைந்த இடமாகவும் இருப்பது அவசியம் .

 எவருடைய இல்லங்களிலும் , உள்ளங்களிலும் வெஞ்சினம் , கோபம் , வஞ்சகம் , பொய், கபடம், அமைதியின்மை ,போன்ற நிலைகளில் இதயம் தீ போல் எரிந்து கொண்டு இருக்கிறதோ,
அங்கு தாயார்
  மஹா லட்சுமி தனது பாத கமலங்களை கூட வைப்பதில்லை, ஒவ்வொரு ஆணும், பெண்ணும்  இதை உணர்வது மிக அவசியம் .

ஆதிலட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, வித்யா லட்சுமி, தன லட்சுமி ஆகிய எட்டு தேவியரே அஷ்ட லட்சுமிகள் என போற்றப்படுகின்றனர். இவர்களது ஒட்டுமொத்த அம்சமான மகாலட்சுமியை மன சுத்தத்துடனும் பய பக்தியுடனும் விரதமிருந்து வழிபடுவோம். செல்வ செழிப்பு, நில புலன்கள் வாங்கும் யோகம், கல்விச் செல்வம், அடுத்தவர்கள் மீது கருணையும் இரக்கமும் காட்டுகின்றன மன வளம், புகழ், அமைதியான வாழ்வு, மகிழ்ச்சி, தைரியம் ஆகிய அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெற்று வாழ்வோமாக.
 
நாம் அனைவரும் எம்பெருமானின் இதய கமலம் போல் அன்பு , கருணை , பாசம் , குளிர்மை , மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன்  இனி வரும் காலங்களில்  இருப்போம், தாயார் மஹா லட்சுமி அணைத்து 
ஐஸ்வர்யமும் , 16 வகை  செல்வ வளங்களையும் நம்  அனைவருக்கும் தந்து அருள் புரிவார் .

மஹா லட்சுமி  / தன ஆகர்ஷன வழிபாட்டினை பிராப்தம் உள்ளவர்கள் நேரில் வந்து பெற்று,  வழிபடும் முறையினை தெரிந்து கொண்டு சகல நலமும் பெறுங்கள் .


வாழ்க வளமுடன் 


ஜோதிடன் வர்ஷன் 
9443355696