ஆயில்யம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆயில்யம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 15 ஜனவரி, 2024

கடகராசி ஆயில்யம் நட்சத்திரம் - ராஜயோக வாழ்வை தரும் ரகசிய இறைவழிபாடு!

 


கடகராசி "ஆயில்யம்" நட்சத்திரம் பொதுநல வாழ்வில் புகழ் பெரும் யோக நட்சத்திரம், தனித்திறமை கொண்டு எவராலும் சாதிக்க இயலாத சாதனைகளை மிக எளிதாக சாதிக்கும் வல்லமை பெற்ற நட்சத்திரம், பொதுமக்கள் ஆதரவு என்பது மிக குறுகிய காலத்தில் கிடைக்கப்பெற்று வாழ்வில் மிகப்பெரிய அதிகார பதவிகளை சுவீகரிக்கும் நட்சத்திரம், தெய்வீகத்தில் ஆன்மீகத்தில் அதீத ஈடுபாடு கொண்டுள்ள நட்சத்திரம்,  சுயநலம் இன்றி செயல்படும் பொழுது இறையருளின் கருணையினை பரிபூர்ணமாக பெரும் நட்சத்திரம், அன்பு கருணை மற்றும் அனைத்து உயிர்களையும் தனது உயிர்போல் பாவிக்கும் மனப்பான்மை, எதிர்ப்புகளை கண்டு அஞ்சாத மனநிலை, அறிவில் விழிப்புணர்வு பகுத்தறிதல் உணர்வுக்கு முக்கியத்துவம் தராமல் அறிவுக்கு முக்கியத்துவம் தருதல், பொறுப்பான செயல்பாடுகள், கவனம் கனிவாக நடந்துகொள்ளுதல், அனைவரையும் சரியான வழிப்பாதையில் நடத்திச்செல்லும் அறிவாற்றல், இன்னலுறும் அனைவரையும் தனது அரவணைப்பின் மூலம் மீட்டு எடுக்கும் வலிமை, எதையும் சிறப்பாக செய்யும் வல்லமை என்ற வகையில் மேன்மையை தரும்,  இவர்களது  தமது வாழ்வில் சகலவிதமான சௌபாக்கியமும், உடல் நலம் மனோவலிமை, கல்வியில் மேன்மை, தொழில் விருத்தி, புத்திரபாக்கியம், பொருளாதார வளர்ச்சி என்றவகையில் பரிபூரணமான சுகபோகங்களையும், தன்னிறைவாக சுவீகரிக்க, மிக எளிமையான ரகசிய இறைவழிபாடு என்பது கீழ்கண்டவாறு அமையும். 

 ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள "திருக்காளத்தி " கோவிலில் அருள்பாலிக்கும்  "காளத்தியப்பர்" பெருமானை ராகு கால வேளையில் அபிஷேகம் வெந்நிற பட்டு சாற்றி வழிபாடு செய்யும் ஆயில்ய நட்சத்திர அன்பர்களுக்கு ஒரு மண்டல காலத்தில் சகல ஐஸ்வர்யங்களும் வந்து சேரும், பிறவியின் அருமை உணர்ந்து அறிவுக்கு முக்கியத்துவம் தந்து செயற்கரிய காரியங்களை மிக சிறப்பாக செயலாற்ற வைக்கும், தனது ஆன்ம ஒளி பிரகாசிக்கும், அறிவில் தெளிவு, விழிப்புணர்வு, விளைவறிந்து செயல்படுதல், வருமுன்காக்கும் வல்லமை, தெய்வீக அனுகிரகம், அனைவரையும் வசீகரிக்கும் யோகம், மனிதசக்தியை பயனுள்ளதாக மாற்றும் வல்லமை, பொதுமக்களின் வாழ்வை மேம்படுத்தும் தன்மை, மருத்துவத்தில் தேர்ச்சி, கலைகளில் புகழ்மிக்க பொறுப்புகளை பெறுதல், அரசியல் வழி ஆதாயம், சமூக செயல்பாடுகள், பொதுவாழ்வில் வெற்றி, தனது தனித்திறமையை முழுவதுமாக பிரயோகம் செய்வதால் வரும் வெற்றி வாய்ப்புகள், பல்வகைத்தொழில் புரிதல், மிதமிஞ்சிய வருமான வாய்ப்புகள், பொதுநலம் சார்ந்த காரியங்களில் புகழ்மிக்க பொறுப்புகள் தேடி வருதல், எந்த தொழில் செய்தாலும் அதில் முதன்மை பெறுதல், அதிகாரமும் ஆளுமை திறனும் ஒருங்கே அமையப்பெற்று மக்களுக்கு வழிகாட்டியாக திகழும் யோகம் உண்டாகும்.

ஆயில்யம் நட்சத்திர அன்பர்கள் வருடம் ஒருமுறை "காளத்தியப்பர்" பெருமானை ராகு கால வேளையில் தரிசனம் செய்யும் பொழுது வாழ்வில் முன்னேற்றம் என்பது படிப்படியாக உயர்ந்து உச்சநிலையை அடைவார்கள், மனித வாழ்விற்கு தேவையான அனைத்தும் பரிபூரணமாக கிடைக்கும், உடல்நலம் மனவலிமை, கல்வியில் தேர்ச்சி தொழில்யோகம், திருமணத்தடை அகன்று தனக்கான பொருத்தமான வாழ்க்கை துணையை பெறுதல், சந்ததி தழைக்க நல்லதொரு வாரிசுகள், வசதிவாய்ப்புகள், வண்டி வாகன யோகம், சொத்தது சுக சேர்க்கை, குடியிருக்க நல்ல வசதியான சொந்த வீடு, உறவுகள் ஆதரவு பொதுமக்கள் பேராதரவு, உயர்கல்வி பட்டைய படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பு, சுய தொழில் புரிவதற்கான சந்தர்ப்பங்கள், துறைசார்ந்த ஞானம், எதையும் முற்போக்கு சிந்தனை மற்றும் நேர்மறை எண்ணம் கொண்டு வெற்றி பெறுதல், மக்கள் சக்தியை ஒருங்கிணைக்கும் வல்லமை, சாதனை புரிவதன் மூலம் பொதுவாழ்வில் வெற்றிபெறுதல் என்றவகையில் மிகுந்த சிறப்புகளை வாரி வழங்கும்.

 குறிப்பு :

கடகராசியில் "ஆயில்யம்" நட்சத்திரத்தை தனது ஜென்ம நட்ஷத்திரம் அல்லது லக்கினமாக பெற்ற அன்பர்கள், ஆன்மிகம் மற்றும் பொதுவாழ்வில் மிகப்பெரிய உச்சத்தை தொடும் யோகம் உண்டு, சுய தொழில் மற்றும் அரசியலில் சார்ந்த அமைப்புகளில் நிச்சய வெற்றிபெறுவார்கள், திடீர் தனயோகம் அதிர்ஷ்ட வாய்ப்புகள், பல்வகை தொழில் வழியிலான லாபங்கள், தனது நிர்வாக திறமை கொண்டு தொழில் வளர்ச்சி  பெரும் வல்லமை, எதிர்பாராத செல்வாக்கு, பொது சேவையை செய்வதின் வழியில் வரும் புகழ்மிக்க பொறுப்புகள், உடல் ஆரோக்கியம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தெய்வீகஅனுகூலம், தன்னிறைவான பொருளாதார முன்னேற்றம் என்ற வகையில் மிகுந்த சுபயோக பலாபலன்களை சுவீகரிக்க, மேற்சொன்ன இறை வழிபாடு இவர்களது வாழ்வில் ராஜயோகத்தை தன்னிறைவாக வாரி வழங்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை அன்பர்களே ! 

ஜோதிடன்வர்ஷன் 

9443355696

செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

சுயஜாதக ஆலோசனை - பாதக ஸ்தான தொடர்பும்,ஜாதகரின் துரதிர்ஷ்ட வாழ்க்கையும் !



கேள்வி :

மதிப்பிற்குரிய ஐயா,

வணக்கம்.நான் 13/11/1987 வருடத்தில் வெள்ளிக்கிழமை இரவு 7.58PM மணிக்கு தருமபுரி மாவட்டம் பென்னாகரம் என்ற ஊரில் பிறந்தேன்.
இதுவரை எனக்கு திருமணம் நடைபெறவில்லை.நல்ல தொழிலும் அமையவில்லை.சுய தொழிலில் பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டு பெரும் கடனாளி ஆகிவிட்டேன்.எனது பூர்விக வீட்டின் மேல் கூட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.சம்மந்தமே இல்லாத நபர் என் வீட்டிற்கு உரிமை கொண்டாடுகிறார்.என் தந்தை கூட என்னையும் என் தாயையும் விட்டுவிட்டு சென்றுவிட்டார்.ஒன்றுமே புரியவில்லை, என் ஜாதகத்தை கொடுத்து பல ஜோதிடர்களிடம் பலன் கேட்டுப்பார்த்தேன்.ஆனால் ஒருவர் கூட எனது பிரச்னைகளுக்கு தீர்வு சொல்லவில்லை, மதிப்பிற்குரிய ஐயா நான் கடவுளை முழுமையாக நம்புபவன்.ஆனால் இதுவரை எனது வாழ்வில் பெருத்த ஏமாற்றங்களையும், தோல்விகளையுமே சந்தித்துள்ளேன்.

நான் எப்போது எனது வாழ்வில் முன்னேற்றம் காண்பேன்?
அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?
எந்த துறையை தேர்ந்தெடுக்க வேண்டும்?
எனது பிரச்னைகள் எப்போது தீரும்?

மதிப்பிற்குரிய ஐயா தயவு செய்து அருள்கூர்ந்து எனது பிரச்னைகளுக்கு தீர்வு சொல்லுங்கள்.

இப்படிக்கு
சே.மதிவாணன்.

பதில் :

தங்களின் கேள்விகளுக்கு நிச்சயம் சரியான பதில்களை " ஜோதிடதீபம் " வழங்கும் அன்பரே ! ஆனால் தாங்கள் முறையான ஜாதக ஆலோசனை பெற்றுக்கொள்வது சாலசிறந்தது, ஏனெனில் நல்ல ஜோதிட ஆலோசனை தங்களின் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு சகல விதங்களிலில் இருந்தும் பயனுள்ளதாக அமையும், இருப்பினும் தங்களது ஜாதகத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட பாவகங்கள் பற்றி இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் !

ஒருவரது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களில் எந்த ஒரு பாவகமும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு நல்லதல்ல, ஏனெனில் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பாவக வழியில் இருந்து ஜாதகர் கடுமையான இன்னல்களை 200% விகிதம் அனுபவிக்கும் சூழ்நிலையை தரும், குறிப்பாக லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது என்பது சம்பந்தப்பட்ட ஜாதகரின் சுய  ஜாதகத்தில் உள்ள சுபயோகங்களை உதறித்தள்ளும் நிலையை தரும் குறிப்பாக, ஜாதகர் முரண்பட்ட குணாதிசயத்தை பெற்று இருப்பார், தங்களின் ஜாதகத்தில்  அவ்வித  பாதிப்புகள் ஏதும் இல்லை என்பதனால், தங்களது வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவதற்கு உண்டான வாய்ப்புகள் அதிகம் உண்டு என்பதை உறுதியாக சொல்லலாம்.

ஆனால் தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசையில், புதன் புத்தி தங்களுக்கு பாதக ஸ்தான பலனையும், திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவக பலனை  ஏற்று நடத்திக்கொண்டு இருக்கிறது என்பது, சற்று கவலை தரும் விஷயமே என்றாலும், இதற்க்கு உண்டான தீர்வுகளையும், பிரீதி பரிகாரங்களையும் மேற்கொள்வது தங்களுக்கு பாதிக்கப்பட்ட பாதக ஸ்தானம் மற்றும் ஆயுள் பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க உதவும், மேலும் எதிர் வர இருக்கும் சுக்கிரன் திசை கேது புத்தி, அதற்க்கு அடுத்து வரும் சூரியன் திசை ஏற்று நடத்தும் பாவக பலன்கள் பற்றிய புரிதலுடன், தாங்கள் எதிர்கால வாழ்க்கையை சிறப்பாக எதிர்கொள்ள முடியும்.

திருமண தாமதத்திற்கு களத்திர ஸ்தான வலிமை இன்மையே அடிப்படை காரணமாக விளங்குகிறது என்பதை கருத்தில் கொள்க, தங்களது ஜாதகத்தில் பாதக ஸ்தான தொடர்பு தரும் இன்னல்களில் இருந்து விடுபடவும், சுய ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவக வழியில் இருந்து வரும் துன்பங்களில் இருந்து விடுபடவும், முறையான ஜாதக ஆலோசனை பெறுவதே சிறந்தது, தங்களின் எதிர்கால வாழ்க்கையை சிறப்பாக எதிர்கொள்ள " ஜோதிடதீபம் " தங்களுக்கு சிறந்த ஜாதக ஆலோசனைகளை வாரி வழங்கும். நேரில் வந்து ஆலோசனை பெற்று கொள்ளுங்கள் " வாழ்த்துகள் "


வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வெள்ளி, 9 டிசம்பர், 2016

காலம் நேரம் ஜாதகருக்கு சாதகமாக ( திசா,புத்தி ) இல்லை எனில், சுய ஜாதகத்தில் யோகங்கள் இருந்தாலும் பலன் ஏதுமில்லை !


 சுய ஜாதகத்தில் பல வித சுப யோகங்கள் இருந்த போதிலும் நடைபெறும் திசை அல்லது புத்தி யோகங்களை தரும் பாவக பலனை ஏற்று நடத்தாமல், வலிமை இழந்த அவயோக பலன்களை தரும் பாவகங்களின் பலன்களை ஏற்று நடத்தினால் ஜாதகரின் வாழ்க்கை மிகுந்த இன்னல்களுக்கும், துன்பத்திற்கும் ஆளாகும் ( நடைபெறும் திசை புத்தி முழு சுப கிரகங்களான குரு,சுக்கிரன்,சந்திரன்,புதன் என்றாலும் இதற்க்கு விதிவிலக்கு அல்ல) , குறிப்பாக திசை மற்றும் புத்தி ஏற்று நடத்தும் பாதிக்கப்பட்ட பாவக வழியில் இருந்து ஜாதகர் இன்னல்களை எதிகொள்ளும் நிலைக்கு தள்ளபடுவார், சுய ஜாதகத்தில் யோகங்கள் இருப்பினும் அதனால் ஜாதகருக்கு யாதொரு நன்மையையும் நடைபெறாது, குறிப்பிட்ட பாவக பலனை ( பாதிக்கப்பட்ட ) ஏற்று நடத்தும் திசா புத்திகள் காலம் முடிந்து, வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் திசா புத்தி காலம் நடைமுறைக்கு வரும் பொழுதே ஜாதகர் யோக பலன்களை அனுபவிக்க இயலும், வலிமை பெற்ற பாவக ஏற்று நடத்தும் திசா புத்திகள் எவை எவை என்று உணர்ந்து காற்று உள்ளபொழுதே துற்றி கொள்ளவேண்டும், இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வோம்.


லக்கினம் : கன்னி
ராசி : கடகம்
நட்ஷத்திரம் : ஆயில்யம் 1ம் பாதம்

ஜாதகருக்கு தற்போழுது நடைபெறுவது சுக்கிரன் திசை ( 28/12/2000 முதல் 28/12/2020 வரை ) சுக்கிரன் தனது திசையில் 6,10ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தருவது வரவேற்க தக்க அம்சமாகும், குறிப்பாக வலிமை பெற்ற லாப ஸ்தான பலனை ஏற்று நடத்தும் சுக்கிரன் திசை ஜாதகருக்கு அளவில்லா யோகங்களை நல்கியது, பொருளாதார ரீதியான நன்மைகள் ஜாதகருக்கு பன்மடங்கு கிடைத்தது, முன்னோர்கள் சொத்தை விற்று ரொக்கமாக பெரும் தொகை கைக்கு வந்து சேர்ந்தது, சுக்கிரன் திசை சூரியன் புத்தியில் ஒரு பெரும் தொகையும், சுக்கிரன் திசை செவ்வாய் புத்தியில் ஒரு பெரும் தொகையும் ஜாதகருக்கு கையில் கிடைக்கப்பெற்றார், சூரியன் புத்திக்கு அடுத்து வந்த சந்திரன் புத்தியில் ஜாதகருக்கு நண்பர்கள் கூட்டாளிகள் மற்றும் எதிர்ப்பால் இன சேர்க்கைகள் அதிகரித்தது ( 3,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சந்திரன் புத்தி பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தியது இதற்க்கு காரணமாக அமைந்தது ) அவர்களின் ஆலோசனைப்படி செவ்வாய் புத்திக்கு பிறகு வந்த ராகு புத்தியில் ஜாதகர் நடைபோட ஆரம்பித்தார், இது ஜாதகரின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

சுக்கிரன் திசையில் நடைபெற்ற ராகு புத்தி ஜாதகருக்கு 2ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, வந்த வருமானம் கொஞ்சம் கொஞ்சமாக வீண் விரையமாக துவங்கியது, சுக்கிரன் திசையில் ராகு புத்திக்கு அடுத்து வந்த குருபுத்தியும், சனி புத்தியும் ( 27/02/2011 முதல் 28/12/2016 வரை) முழு வீச்சில் 4,8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்திக்கொண்டு இருப்பது ஜாதகரின் வாழ்க்கையில் 4ம் பாவக வழியில் இருந்து இருந்த சொத்து,இடம், வண்டி வாகனம், பொருள் அனைத்தையும் இழக்கும் சூழ்நிலையை தந்தது, 8ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு வந்த  திடீர் இழப்புகள் அளவில்லா வண்ணம் அமைந்தது, நண்பர்கள் எதிர்ப்பால் இன அமைப்பினர் மூலம் ஜாதகரின் வாழ்க்கையில் திடீர் இழப்புகள் அதிகரித்தது, 12ம் பாவாக வழியில் இருந்து ஜாதகருக்கு பெரும் தொகை, முதலீடு செய்த இடத்தில் இருந்து வீண் விரையமானது, தொடர் பேரிழப்புகளால் ஜாதகரின் வாழ்க்கை முற்றிலும் முடங்கியது, ஜாதகர் செய்ய நினைத்த தொழில்களில் எல்லாம் தோல்வி மேல் தோல்வி அடைந்தது, வழிகாட்டும் நல்ல அன்பர்கள் இல்லாத சூழ்நிலையில் ஜாதகரின் வாழ்க்கை முழுவதும் நசிந்தது.

ஜாதகருக்கு நடைபெற்று கொண்டு இருக்கும் திசை மிதமிஞ்சிய நன்மைகளை தந்த போதிலும், நடைபெறும் புத்திகள் ஜாதகருக்கு சாதகமற்று இருப்பது, திசை தரும் யோக பலன்களை முழுமையாக அனுபவிக்கும் வல்லமையை இழந்து, வீண் விரையம் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு கொண்டு இருப்பது வருத்தத்திற்கு உரியது, சுய ஜாதகத்தில் நடைபெறும் திசா புத்திகள் யோக பலன்களை தரும் நேரம் பார்த்து, தொழில் துவங்குவது, புதிய முயற்சிகளில் இறங்குவதே ஜாதகருக்கு உகந்த நன்மைகளை தரும், தனது எண்ணங்கள் மற்றும் லட்ச்சியங்களை முழுவதுமாக அடைவதற்கு உண்டான வாய்ப்புகளை வழங்கும் என்பதை கவனத்தில் கொண்டு, ஜாதகர் நடந்து இருந்தால் வாழ்க்கையில் யாதொரு துன்பமும் நடைபெற்று இருக்க வாய்ப்பில்லை, குறிப்பாக சுய ஜாதகத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட பாவகம் எது என்று தெளிவாக தெரிந்து, சம்பந்தப்பட்ட பாவக வழியிலான உபதேசங்களை தவிர்த்து, வலிமை பெற்ற பாவக வழியிலான அறிவுரைகளை ஏற்று ஓர் ஜாதகர் செயல்பட்டால், நிச்சயம் வெற்றி மேல் வெற்றிதான், மேற்கண்ட ஜாதகருக்கு 3,7ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதே 200% விகித இன்னல்களை தரும் அமைப்பாகும், எனவே ஜாதகர் தனது நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் எதிர்ப்பால் இன அமைப்பினரிடம் மற்றும் சற்று எச்சரிக்கையாக நடந்துகொண்டு இருந்தால், இவ்வளவு பேரிழப்புகளை ஜாதகர் சந்தித்து இருக்க வேண்டிய சூழ்நிலை நிச்சயம் வந்திருக்க வாய்ப்பு இல்லை, மேலும் ஜாதகரின் சொத்தும் அழிந்து இருக்க வாய்ப்பில்லை, சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் ஜாதகருக்கு கடுமையாக பாதிக்கப்படுவது, தனக்கு வரும் வாழ்க்கை துணையை ஜாதகர் தேர்வு செய்யும் பொழுது மிகுந்த கவனத்துடன் இருப்பது நல்லது, இல்லையெனில் ஜாதகரின் வாழ்க்கை நரகம் ஆவதை எவராலும் தடுக்க இயலாது.

இனி வர இருக்கும் சுக்கிரன் திசையில், புதன் புத்தி ( 28/12/2016 முதல் 28/10/2019 வரை ) ஜாதகருக்கு நல்லதொரு யோக வாழ்க்கையை தர இருக்கின்றது இதை ஜாதகர் புரிந்துகொண்டு, வாழ்க்கையில் சகல நன்மைகளையும் பெற ஆயத்தமாக்கலாம், மீண்டும் ஜாதகர் சகவாச தோஷத்தை கையில் எடுப்பராயின், வாழ்க்கையே சூனியம் ஆக வாய்ப்பு உண்டு என்பதை கவனத்தில் கொள்வது நலம், மேலும் தன்னிடம் உள்ள தீய பழக்க வழக்கங்களில்  இருந்து மீண்டு வருவது அவசியமாகிறது, ஏனெனில் ஜாதகரின் யோக நிலை அப்பொழுதுதான் முழு அளவில் பலன்தர ஆரம்பிக்கும், புதன் புத்தி ஜாதகருக்கு 6,10ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சிறப்பான நன்மைகளை தர தயார் நிலையில் உள்ளது கவனிக்க தக்க சிறப்பு அம்சமாகும்.

ஜாதகரின் குல தேவதையும், முன்னோர்கள் செய்த பாக்கியமும் ஜாதகரை காத்து  அருள் புரியட்டும், " வாழ்த்துக்கள் அன்பரே "

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

புதன், 29 ஏப்ரல், 2015

ஸ்திர ராசிகளுக்கு பாக்கியஸ்தானமே பாதகஸ்தானமாகிறது.பாக்கியாதிபதியின் தசையில் பலன் எப்படி இருக்கும்?




சர ராசிகளை லக்கினமாக கொண்டவர்களுக்கு லாபஸ்தானம் பாதக ஸ்தானமகவும், ஸ்திர ராசிகளை லக்கினமாக கொண்டவர்களுக்கு பாக்கிய ஸ்தானம் பாதக ஸ்தானமாகவும், உபய ராசிகளை லக்கினமாக கொண்டவர்களுக்கு களத்திர ஸ்தானம் பாதக ஸ்தானமாகவும், இறை நிலையால் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது, மேலும் ஒருவரது ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 பாவகங்களும் பெரும் வலிமைக்கு ஏற்ப திசா புத்திகள் யோக பலன்களோ, அவயோக பலன்களே ஜாதகருக்கு ஏற்று நடத்துகிறது.

மேற்கண்ட கேள்வி பொதுவாக ஜாதக கணிதம் பற்றிய தெளிவு இல்லாத சூழ்நிலையில் வினவ படுவதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது, அதாவது பாதக ஸ்தான அதிபதியாக வரும் கிரகத்தின் திசை பாதக ஸ்தான பலனையே செய்யும் என்று கணிப்பது முற்றிலும் தவறான கணிப்பாகும், மேலும் ஒருவரது ஜாதகத்தில் எந்த ஒரு கிரகமும் தனது திசையில் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்த வாய்ப்புள்ளது, எந்த ஒரு கிரகமும் யோகம் தரும் பாவகங்களின் பலனை ஏற்று நடத்த வாய்ப்புள்ளது, இது அவரவர் சுய ஜாதக அமைப்பில் பாவகங்களின் தொடர்பு மற்றும் வலிமை சார்ந்த விஷயம்.

இதற்க்கு உதாரண ஜாதகம் கொண்டு விளக்கம் காண்போம் :




ஜாதகர் லக்கினம் : கடகம் 
ராசி : கடகம் 
நட்சத்திரம் : ஆயில்யம் 4ம் பாதம் 

மேற்கண்ட கடக இலக்கின ஜாதகருக்கு பாதக ஸ்தானமான அமைவது லக்கினத்திற்கு 11ம் வீடான லாப ஸ்தானம் , இது ஜாதகருக்கு அதிர்ஷ்டம் மற்றும் ஜாதகர் அடையும் லாபத்தை குறிக்கும், சர லக்கினம் என்பதால் இது ஜாதகருக்கு பாதக ஸ்தானமாக செயல்படுகிறது, இதன் அதிபதி சுக்கிரன் ( இது பொதுவாக பாரம்பரிய ஜாதக கணிதம் கொண்டு பார்க்கும் பொழுது ) இந்த ஜாதகருக்கு பாதக ஸ்தான அதிபதியான சுக்கிரன் தனது திசையில் எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறார் என்பதை ஆய்வு செய்யும் பொழுது சுக்கிரன் 1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று யோக பலன்களை வாரி வழங்குகிறார், அதாவது பாதக ஸ்தான அதிபதி பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தாமல் யோகத்தை தரும் களத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்துவது மிகுந்த நன்மையை தரும் அமைப்பாக கருதலாம், ஆக இந்த ஜாதகருக்கு பாதக ஸ்தான அதிபதி பாதக ஸ்தான பலனை செய்யவில்லை, வேறு எந்த கிரகம் ஜாதகருக்கு பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துகிறது என்பதை ஆய்வு செய்வோம் அன்பர்களே !

இவரது சுய ஜாதக அமைப்பின் படி, புதன்,சனி,ராகு ஆகிய கிரகங்கள் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துகிறது, புதன் என்ற கிரகம் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்தில் அமர்ந்து இருப்பதால் பாதக ஸ்தான பலனை நடத்துகிறது என்றால், சனி பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது எப்படி? ராகு பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது எப்படி? என்ற கேள்விகளுக்கு ஜாதக கணிதம் தெரிந்தோர் மிக எளிதாக பதில் காண இயலும், எனவே இந்த ஜாதகருக்கு பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது பாதக ஸ்தான அதிபதியான சுக்கிரன் அல்ல, 3,12க்கு உடைய புதனும், 7,8க்கு உடைய சனியும், லக்கினத்தில் அமர்ந்த ராகு பகவானுமே பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துகின்றனர்.

 எனவே ஒருவரது ஜாதகத்தில் பாதக ஸ்தான அதிபதியின் திசாபுத்தி, பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தும் என்று ஜாதக கணிதம் செய்வது முற்றிலும் தவறான கணிப்பே அன்றி, துல்லியமான ஜாதக கணிதம் அல்ல அன்பர்களே! மேலும் ஒருவரது ஜாதகத்தில் பாதக ஸ்தானம் எனும் பாவகம் எந்த வீடுகளுடன் தொடர்பு பெறுகிறதோ அந்த வீடுகளின் பலனை ஏற்று நடத்தும் கிரகம் எதுவென்றாலும் பாதக ஸ்தான பலனை வழங்க  கூடும், அதே போன்று பாதக ஸ்தான அதிபதியான கிரகம் சுய ஜாதகத்தில் யோகம் தரும் பாவக பலனை ஏற்று நடத்தினால், பாதக ஸ்தான அதிபதியின் திசாபுத்திகள் யோக பலன்களை தர தவறுவதில்லை, எனவே ஒருவரது சுய ஜாதக வலிமையை முதலில் கருத்தில் கொண்டு, நடைபெறும் திசை மற்றும் புத்திகள் ஏற்று நடத்தும் பாவகங்களின் தன்மையை கருத்தில் கொண்டு சுய ஜாதக பலன் காண முற்படுவதே துல்லியமான ஜாதக பலன்களை எடுத்து கூற இயலும், மாறாக பாதக ஸ்தான அதிபதி, மற்றும் துர் ஸ்தான அதிபதிகள் திசை மற்றும் புத்திகள் இன்னல்களையே தரும் என்று கணிப்பது முற்றிலும் தவறான ஜாதக கணிதமே அன்றி வேறில்லை என்பது "ஜோதிடதீபத்தின் " ஆணித்தரமான கருத்தாக இங்கே பதிவு செய்கிறது.

குறிப்பு : 

எந்த ஒரு ஜாதகருக்கும் தற்பொழுது அல்லது எதிர்காலத்தில் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தும் திசாபுத்திகள் வருமாயின், அந்த ஜாதகருக்கு பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்ற பாவக அமைப்பில் இருந்து 200% விகித இன்னல்கள் உண்டாகும் என்பதை கவனத்தில் கொள்க.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 21 ஆகஸ்ட், 2014

திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய, ரஜ்ஜு பொருத்தம் அவசியம் தேவையா ?



கேள்வி :

திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய, ரஜ்ஜு பொருத்தம் அவசியம் தேவையா ? ரஜ்ஜு பொருத்தம் இல்லை எனில் திருமண வாழ்க்கை கடுமையாக பாதிக்க படுமா? 

பதில் :

 பொதுவாக திருமண வாழ்க்கை சிறப்பாக அமைவதற்கு, பாரம்பரிய முறை படி நட்சத்திர பொருத்தம் காணும் பொழுது 10 பொருத்தங்களில் குறைந்த பட்சம் 6 பொருத்தம் வேண்டும் என்பதும், அதில் குறிப்பாக கயிற்று பொருத்தம் எனும் ரஜ்ஜு பொருத்தம் இருந்தால் மட்டுமே திருமணம் செய்யலாம், இல்லை எனில் திருமணம் செய்வது, தம்பதியர் ஒற்றுமைக்கும், திருமண வாழ்க்கைக்கும் பங்கம் வரும் என்றும், அதிக  பட்சமாக தம்பதியர் இருவரில் ஒருவருக்கு உயிர் சேதம் கூட ஏற்ப்படலாம் என்று பாரம்பரிய ஜோதிடத்தில் குறிப்பிடுவது உண்டு, இதை பற்றிய உண்மை விளக்கம் என்ன? என்பதை இந்த பதிவில் காண்போம் அன்பர்களே!

திருமண வாழ்க்கை சீரும் சிறப்புமாக அமைய, மணமகன் மற்றும் மணமகளின் சுய ஜாதகத்தில் நட்சத்திர பொருத்தம் எனும் 10 பொருத்தங்கள் சிறப்பாக அமைவதை விட ( ரஜ்ஜு பொருத்தம் உட்பட ) ஜாதக பொருத்தம் எனும் 12 பாவக அமைப்புகள் மிக வலிமையுடன் அமைவதே சிறந்தது, காரணம் ஒருவரின் திருமண வாழ்க்கையின் வெற்றியை நிர்ணயம் செய்வது, நட்சத்திர பொருத்தம் எனும் 10 பொருத்தங்கள் அல்ல, சுய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகமும், களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகமுமே என்றால் அது மிகையில்ல, ஒருவரின் திருமண வாழ்க்கையில் நட்சத்திர பொருத்தத்தின் பங்கு என்பது வெறும் 5% சதவிகிதமே, மீதி 95% சதவிகிதம் ஜாதகத்தின் பாவக அமைப்பே திருமண வாழ்க்கையின் வெற்றியை நிர்ணயம் செய்யும்.

கடந்த 25 வருட காலங்களுக்கு முன்பு, திருமண பொருத்தம் நிர்ணயம் செய்வதற்கு, பெயர் பொருத்தம் மற்றும் பெயரின் முதல் எழுத்தின் அடிப்படையில் வரும், நட்சத்திரத்தை கொண்டு  நட்சத்திர பொருத்தம் பார்த்து  திருமணம் செய்தனர், இதற்க்கு காரணம் அந்த காலகட்டங்களில் அனைவருக்கும் ஜாதக இருந்ததா? என்றால் ? நிச்சயம் இல்லை என்பதே அதன் பதில், மேலும் பிறந்த நேரம் என்பது சரியாக குறித்து வைத்து ஜாதகம் எழுதினார்களா என்றால் அதுவுமே ஒரு கேள்வி குறியே! ஆக திருமணம் செய்ய அவர்களுக்கு இருந்த ஒரே வழி நட்சத்திர பொருத்தம், மற்றும் நாம நட்சத்திர பொருத்தம், இதன் வழியில் பாரம்பரியமாக நட்சத்திர பொருத்தம் கண்டு திருமணம் செய்து வந்த வழக்கம் இன்றும் தொடர்கிறது, இந்த நவீன உலகத்தில் பிறந்த நேரத்தை மருத்துவரகள் தெளிவாக குறித்து கொடுத்து விடுகின்றனர், மேலும் முறையாக ஜோதிடம் பயின்றவர்கள் இறை அருளின் கருணையினால், ஜோதிட கணிதம் கொண்டு பிறந்த நேரத்தை சரியாக கணிதம் செய்துவிட முடியும்.

இங்கே ஜோதிடதீபம் குறிப்பிட விரும்புவது, சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமையுடன் அமரும்பொழுது, ரஜ்ஜு பொருத்தம் எனும் ஒரு விஷயம் எதுவும் செய்வதில்லை, இதற்க்கு உதாரணம் நிறைய உண்டு, திருமணம் செய்வதற்கு ரஜ்ஜு பொருத்தம் ஒன்றையே காரணம் காட்டி திருமணத்தை தடை செய்வது, உண்மையில் ஜோதிடம் கணிதம் பற்றி ஒன்றும் தெரியாத கத்து குட்டிகள் செய்யும் ஒரு வேலை என்பதே ஆகும், ஏனெனில் நட்சத்திர பொருத்தம் 10 க்கு 10 அமைந்தும் சிலரின் திருமண வாழ்க்கை கேள்விக்குறியாக மாறி விடுவதற்கு காரணம் சுய ஜாதகத்தில், குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகமும், களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகமும் பாதிக்கபட்டு இருப்பதே என்றால் அது மிகையில்லை.

அடிப்படையில் நட்சத்திர பொருத்தம் மட்டும் நன்றாக அமைந்த இருவரின் ஜாதகத்தில், குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகமும், களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகமும், பாதக ஸ்தானத்துடனோ அல்லது 6,8,12ம் பாவகங்களுடனோ தொடர்பு பெற்று இருக்குமாயின், இருவரின் திருமண வாழ்க்கை என்பது நெடுநாள் நீடிக்காது, குறுகிய காலத்தில் மணமுறிவுக்கு அழைத்து சென்று விடும், தற்பொழுது விவாகரத்து கேட்டு குடும்ப நீதிமன்றம் முன்பு நிற்கும் தம்பதியர் அனைவரின் ஜாதகத்திலும், இந்த நிலையை இருப்பதை, அவர்களின் சுய ஜாதகத்தை பார்க்கும் பொழுது நாம் தெள்ள தெளிவாக காணலாம்.

 மேலும் தாமத திருமணம் என்ற ஒரு விஷயம் தற்பொழுது அதிகரித்து வருவதற்கு காரணம் சுய ஜாதகத்தில் மேற்கண்ட இரண்டு பாவகங்கள் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கும் என்பதே முற்றிலும் உண்மை, ஆக திருமணம் சிறப்பாக அமைய மணமகன் மற்றும் மணமகள் இருவரின் ஜாதகத்திலும் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்களை பின்வரும் வரிகளில் ஜோதிடதீபம் தங்களுக்கு விளக்கமாக தெரிவிக்கிறது, இதை பின்பற்றி திருமண வாழ்க்கையை அமைத்துகொள்ளும் பொழுது, தம்பதியர் இருவரும் இல்லற வாழ்கையை மகிழ்ச்சியுடன், வாழையடி வாழையாக 16 வகை செல்வமும் பெற்று, சீரும் சிறப்புமாக வாழ்வார்கள் என்பதில் பெருமை கொள்கிறது ஜோதிடதீபம்.

திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் :

1) அடிப்படையில் இருவரின் ஜாதகத்திலும் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகம் மிகவும் சிறப்பாக இருப்பது, தம்பதியரின் வாழ்க்கையில் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை அமைத்து தரும், குடும்பத்தில் இனிமை நிலவ இருவரின் சம்பாசனை எனும் பேச்சே அடிப்படையாக அமைகிறது, ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ளும் தன்மையும், அதனை சரியாகவும் உண்மையாகவும் புரிந்துகொள்ளும் தன்மையை தரும், தேவையின்றிய வீண் பேச்சுகளை தவிர்த்து, வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு உண்டான விஷயங்களை மட்டுமே பேசி, குடும்பத்தை சிறப்பாக நடத்த இந்த பாவகம் வலிமையுடன் அமைவது நல்லது.

மேலும் குடும்பம் நடத்துவதற்கு அவசிய தேவையான தன்னிறைவான, வருமானத்தை தருவது குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகமே! சிலரின் வாழ்க்கையில் திருமணதிற்கு பிறகு மிகப்பெரிய பொருளாதார ரீதியான வெற்றியை பெறுவதற்கு காரணமாக அமைவது இதுவே என்றால், அது மிகையில்லை, மேலும் தனது குடும்பத்திற்காக சேமிக்கும் அமைப்பை தருவதும் இந்த இரண்டாம் பாவகமே, இந்த பாவகம் நல்ல நிலையில் அமையவில்லை எனில், நட்சத்திர பொருத்தம் எனும் ஒருவிஷயம் இதில் எந்த  ஒரு மாற்றத்தையும் தந்து விடாது.

2) அடுத்து இருவரின் ஜாதகத்திலும் களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் மிகவும் சிறப்பாக இருப்பது, தம்பதியர் இருவரின் எண்ணம் மற்றும் உடல் மொழிகள் , செயல்பாடுகளை சிறப்பாக புரிந்து கொள்ள முடியும், இருவரின் கருத்துகளும் ஒன்றாக இருக்கும் அமைப்பை தரும், களத்திர பாவகம் வலிமை பெறுவது தம்பதியரின் ஒற்றுமையையும், ஒருமித்த இல்லற வாழ்க்கையின் வெற்றியையும் உறுதிபடுத்தும். தம்பதியரின் உடல் அமைப்பையும், மன அமைப்பையும் ஒருங்கிணைப்பது களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகமே, மேலும் ஒருவரை ஒருவர் சிறப்பாக புரிந்து கொண்டு, ஒருவருக்காக ஒருவர் விட்டுகொடுத்து வாழும் இனிமை நிறைந்த வாழ்க்கையை தருவது இந்த களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் வலிமை பெற்று அமைந்தால் மட்டுமே சாத்திய படும்.

தம்பதியர் இருவரின் உடல் அமைப்பில் நல்ல தேஷஸ் மற்றும் நல்ல உடல் ஆரோக்கியத்தை தருவதும், இந்த அமைப்பே இருவரின் வாழ்க்கையிலும் உடல் ரீதியான எந்த ஒரு பிரச்சனையும் தராமல், சிறந்த உடல் நலம், அறிவு திறன், சிறந்த சிந்தனை ஆற்றல், சரியான முடிவெடுக்கும் அறிவாற்றல் என்ற அமைப்பில் நன்மையான பலன்களை வாரி வழங்குவது, இந்த களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகமே, மேலும் சமுதாயத்தில் நல்ல மதிப்பு அந்தஸ்து கௌரவம் போன்ற விஷயங்களை அதிகரிக்க செய்வதும், கூட்டு முயற்ச்சி, பொதுமக்கள் ஆதரவு அரசியல், வியாபாரம் போன்ற விஷயங்களில் சிறந்த நன்மைகளை வாரி வழங்குவது களத்திர பாவகத்தின் தன்மையும், தனக்கு அமையும் வாழ்க்கை துணையின் களத்திர பாவகத்தின் வலிமையுமே, இந்த களத்திர பாவகம் நல்ல நிலையில் அமையாத பொழுது, ரஜ்ஜு பொருத்தம் சிறப்பாக அமைந்தாலும் எந்த ஒரு நன்மையையும் வழங்காது, ரஜ்ஜு பொறுத்ததினால் எந்த ஒரு பயனும் இல்லை.

3) மேலும் தம்பதியர் இருவரின் சுய ஜாதகத்தில் 5ம் பாவகம் வலிமை பெறுவது, தனது சந்ததிக்கு ஒரு சிறந்த ஆண் வாரிசை பெற்று தரும், தனது  சந்ததிகள் வழியில் வந்த அறிவாற்றலையும், புத்திசாலிதனத்தையும் மேம்படுத்தி வாழ்க்கையில் சிறந்த வெற்றி வாய்ப்பினை பெற்று தரும்.

4) தம்பதியர் இருவரின் சுய ஜாதகத்தில் 6ம் பாவகம் வலிமை பெறுவது, இருவரின் உடல் ரீதியான ஆரோக்கியத்தையும், உடல் ரீதியான தொடர்புகளால் பெரும் மகிழ்ச்சி மற்றும் இணக்கமான அன்பையும் உறுதிபடுத்தும், மேலும் ஆண்கள் ஜாதகத்தில் 6ம் பாவகம் வலிமை பெறுவது தனக்கு வரும் வாழ்க்கை துணையை சிறப்பாக வைத்திருக்கும் தன்மையை தரும் மேலும் இறுதி வரை தம்பதியர் ஒற்றுமையாக வாழும் யோகத்தை தங்கு தடையின்றி தரும்.

5) தம்பதியர் இருவரின் சுய ஜாதகத்தில் 8ம் பாவகம் வலிமை பெறுவது, பூரண  ஆயுளையும், கணவன் வழியில் இருந்து மனைவி பெரும் அதிர்ஷ்டம் மற்றும் வருமான யோகத்தையும், மனைவி வழியில் இருந்து கணவன் பெரும் அதிர்ஷ்டம் மற்றும் வருமான யோகத்தையும் அறிந்துகொள்ள இயலும், இருவரின் ஜீவன வருமான வாய்ப்புகள் பற்றியும், பொருளாதார முன்னேற்றம் மற்றும் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் பற்றியும் தெளிவாக தெறிந்து கொள்ள இயலும்.

6) தம்பதியர் இருவரின் சுய ஜாதகத்தில் 12ம் பாவகம் வலிமை பெறுவது, இருவரின் அந்தரங்க வாழ்க்கையில் பெரும் மகிழ்ச்சியையும், மன நிம்மதியான வாழ்க்கையையும், போராட்டம் இல்லாத திருப்தியான
அமைதியான வாழ்க்கையை அமைத்து தரும், இருவருக்கும் உறவுகளில் கிடைக்கும் அந்தஸ்து கௌரவம் மற்றும் சிறப்பு மரியாதை போன்ற விஷயங்களை 12ம் பாவக வழியில் இருந்து தெளிவாக தெரிந்துகொள்ள இயலும்.

மேற்கண்ட விஷயங்களே திருமண வாழ்க்கைக்கு அவசியமாக சுய ஜாதக ரீதியாக நாம் கவனிக்க வேண்டும்.

திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய ஜாதக ரீதியாக தவிர்க்க  வேண்டிய விஷயங்கள் :

1) சுய ஜாதக ரீதியாக நட்சத்திர பொருத்தத்திற்கு முக்கியத்துவம் தந்து, ஜாதக பொருத்தத்தை உதாசீனம் செய்வது திருமண வாழ்க்கையை சிறப்பாக அமைத்து தர வாய்ப்பில்லை. ஏனெனில் குறிப்பிட்ட நட்சத்திரத்தில் நிறைய பேர் பிறந்திருக்க வாய்ப்புண்டு, பிறந்த நேரப்படி ஜாதக பாவக அமைப்புகள் ஒருவருக்கு இருப்பதை போன்று மற்றவருக்கு இருக்க வாய்ப்பு இல்லை.

2) செவ்வாய் தோஷம், ராகுகேது தோஷம், தார தோஷம், மாங்கல்ய தோஷம், சர்ப்ப தோஷம், களத்திர தோஷம் என்று வகைக்கு 5 அல்லது 6 தோஷங்களை பிரித்து வைத்து கொண்டு மக்களை குழப்புவது, சம்பந்தபட்ட ஜோதிடருக்கே பெரிய பிரச்சனைகளை கொண்டு வந்து விடும்.

3) குறிப்பாக விரும்பி திருமணம் செய்துகொள்ளும் அன்பர்கள் மேற்கண்ட விஷயங்களை கருத்தில் கொள்ளாமல் திருமணம் செய்துகொள்வது நல்லது, திருமணம் செய்துகொண்ட பிறகு தங்களது வாழ்க்கையை சிறப்பாக அமைத்து கொண்டு, வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவது தங்களது திருமண வாழ்க்கைக்கு தாங்கள் கொடுக்கும் மதிப்பு.

4) ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்றாலும், சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமையாக இருப்பின் திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும்.

5) ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது, மூலம் மாமனாருக்கு ஆகாது என்று  நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு வந்த வாய்வழி செய்திகளை நம்பி திருமண வாழ்க்கையை தள்ளி போடுவதும், தவிர்ப்பதும் சுத்தமான மூட நம்பிக்கையே அன்றி வேறு எதுவும் அல்ல.

உண்மையான ஜாதக பலனை, சுய ஜாதக ரீதியாக தெரிந்துகொண்டு வாழ்கையில் சகல நலன்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ ஜோதிடதீபம் அறிவுறுத்துகிறது , வாழ்த்துகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696