தோஷம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தோஷம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 27 ஆகஸ்ட், 2018

சுய ஜாதக ஆலோசணை மூலம் வாழ்க்கையில் நலம் பெறுவது எப்படி ? சுக்கிரன் திசை சுபயோக வாழ்க்கையை தருமா ?


ஒவ்வொருவரும் சுய ஜாதக ஆலோசணை மூலம்  வாழ்க்கையில் நலம் பெறுவது அவசியமாகிறது, நமது பிறப்பின் ரகசியம்  அறியவும், படைப்பின் சாராம்சம் பற்றி தெளிவாக தெரிந்துகொள்ளவும் நமது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவக வலிமை பற்றியும், நடைபெறும், எதிர்வரும் திசா புத்திகள் ஏற்று நடத்தும் பாவக தொடர்பு பற்றியும் துல்லியமாக அறிந்துகொண்டு, அதன் வழியில் சரியான திட்டமிடுதல்களை மேற்கொண்டு வெற்றி பெறுவது மிக மிக அவசியமாகிறது, கீழ்கண்ட ஜாதகருக்கு லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் சுய ஜாதக ரீதியாக பெற்றுள்ள வலிமை பற்றியும், நடைபெறும் திசா புத்திகள் தரும் யோக அவயோக பலாபலன்கள் பற்றியும் இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : மீனம்
ராசி : கடகம்
நட்ஷத்திரம் : ஆயில்யம் 2ம் பாதம்

ஜாதகத்தில் பாவக தொடர்புகள் :

1,3,5,7,11,12ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவக தொடர்பை பெறுவது ஜாதகருக்கு 1ம் பாவக வழியில் இருந்து சிறப்பான வளரும் சூழ்நிலை, நிறைவான கல்வி, அதீத லாபங்கள் மற்றும் அதிர்ஷ்டம், செல்வச்செழிப்பு, அனைவர் வழியில் இருந்து வரும் உதவிகள், நோய் பாதிப்பில் இருந்து விரைவில் விடுபடும் தன்மை, வருமுன் காக்கும் வல்லமை, நினைத்த எண்ணங்கள் யாவும் பலிதம் பெறுதல், திருமண வாழ்க்கையில் சந்தோசம் மற்றும் அதிர்ஷ்டம், அதிக குழந்தைகள் அவர்கள் வழியில் இருந்து வரும் யோக வாழ்க்கை, தன்னம்பிக்கை மிக்க மனநிலை, எதிர்ப்புகளை கண்டு அஞ்சாமல் போராடும் வலிமை, புதிய சிந்தனை, முற்போக்கு சிந்தனை மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் தன்மை, நீடித்த அதிர்ஷ்டம் மற்றும் நீண்ட ஆயுள் உண்டாகும்.

3ம் பாவக வழியில் இருந்து எண்ணத்தின் வலிமை அதிகரிக்கும், நல்ல வியாபர முன்னேற்றம், மிகத்தைரியமான மனநிலை, எதையும் சாதிக்கும் வல்லமை, எடுக்கும் முயற்சிகளில் இருந்து வரும் வெற்றிகள், அதிக வாகன வசதி சொகுசு வாகன யோகம், விவசாய வழியில் இருந்து வரும் முன்னேற்றம், நிறைய சொத்து சுக சேர்க்கை, தர்மத்தை மதித்து நடத்தல், சாஸ்திர அறிவு, அதன் வழியில் இருந்து பெரும் யோக வாழ்க்கை, கணிதத்தில் தேர்ச்சி, விளையாட்டில் ஆர்வம், திருமணத்திற்கு பிறகான  அதிர்ஷ்ட வாழ்க்கை, வீரியமிக்க செயல்திறன், எதையும் வெற்றிகொள்ளும் மனப்பான்மை, துல்லியமான கணிப்பு திறன் என்ற வகையில் சுபயோகங்களை தருவதுடன், தகவல் தொழில் நுட்ப அறிவையும் அதிகரிக்கும், நிறைவான நல்லறிவு ஜாதகருக்கு சிறப்பான எதிர்காலத்தை வாரி வழங்கும்.

5ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் லாட்டரி யோகம், தனது புத்திசாலித்தனத்தால் ஆதாயம், குலதெய்வ அனுக்கிரகம் மூலம் வாழ்க்கையில்  சுபகாரியங்களை சிறப்பாக செய்யும் தன்மை, கற்ற கல்வி வழியில் இருந்து வரும் யோகம், தெளிவான சிந்தனை, சமயோசித புத்திசாலித்தனம் மற்றும் நுண்ணறிவு கொண்டு வாழ்க்கையில் அனைத்தையும் வெற்றிகொள்ளும் தன்மை, தெய்வீக திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம், எதிர்பார்த்த நன்மைகள் நடைமுறைக்கு வரும் தன்மை, பெற்ற குழந்தைகள் வழியில் இருந்து வரும் யோக வாழ்க்கை, நல்ல  ஆண்வாரிசு, பூர்வீகத்தில் இருந்து அபரிவித முன்னேற்றங்களை சுவீகரிக்கும் யோகம் என மிகுந்த நன்மைகளை தரும்.

7ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நல்ல யோகமிக்க வாழ்க்கை துணை அமையும், சிறந்த நண்பர்கள் வழியில் ஆதரவும், உதவி செய்யும் நல்ல கூட்டாளிகளும் ஜாதகருக்கு அமைவார்கள், வெளியூர் அல்லது வெளிநாடுகளில் இருந்து சிறப்பான வருமான வாய்ப்புகள் உண்டாகும், வியாபாரம் ஜாதகருக்கு மிகச்சிறப்பாக அமையும், தம்பதிய வாழ்க்கையில் வெற்றியும், பொதுமக்கள் வழியில் இருந்துவரும் ஆதரவும் ஜாதகருக்கு மிகவும் அபரிவிதமானதாக அமையும், வெளியூர் வெளிநாடு பயணங்கள் மூலம் ஜாதகர் தன்னிறைவான முன்னேற்றங்களை பெறுவார், ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் கைகொடுக்கும், ஏஜென்சி தரகு தொழில் ஜாதகருக்கு அபரிவித வளர்ச்சியினை வாரி வழங்கும்.

11ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு ஜாதகர் மிகுந்த அதிர்ஷ்டசாலி , ஜாதகர் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயல்களிலும் வெற்றியும், லாபமும் உண்டாகும், ஜாதகரின் முற்போக்கு சிந்தனை எதிர்பாராத வெற்றிகளுடன் கூடிய அதிர்ஷ்ட வாய்ப்புகளை வாரி வழங்கும், நேர்மறை எண்ணங்களால் ஜாதகரின் வாழ்க்கை மிகுந்த சுவாரஷ்யம் மிக்கதாக அமைந்திருக்கும், மற்றவர்களையும் தன்னையும் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்கும் வலிமை உண்டாகும், ஜாதகரின் நேர்மையான குணம் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்கது.

12ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நிறைவான லாபங்கள் உண்டாகும், வியாபாரத்தில் அபரிவித வளர்ச்சி உண்டு, சுபவிரையங்கள் அதிகரிக்கும், ஆன்மீகத்தில் நல்ல நாட்டமும், தெய்வீக திருத்தலங்களுக்கு சென்றுவரும் யோகமும் உண்டாகும், நல்ல ஆன்மீக குருவின் மூலம் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் பெறுவதற்கான வாய்ப்பு உண்டாகும், தாம்பத்திய வாழ்க்கையில் திருப்தியும், மனநிறைவான யோக வாழ்க்கை அமையும், முதலீடுகள் வழியில் பெருத்த லாபங்கள் உண்டாகும், தெய்வீக குணம் அதிகரிக்கும், மனதில் உள்ள லட்சியங்கள் யாவும் நிறைவேறும்.

2,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு, 2ம் பாவக வழியில் இருந்து தந்தையின் ஆசியின் மூலம் வருமான அதிகரிக்கும் என்ற போதிலும் நிதி மேலாண்மை சார்ந்த விஷயங்களில் ஓர் நேர்த்தி இருக்காது, இன்சூரன்ஸ், உயில், போனஸ், கிராஜுவிட்டி போன்றவற்றின் மூலம் லாபம் கிட்டும், திருமணம் தாமதமாக வாய்ப்பு உள்ளது, ஆயுள் பாவக தொடர்பை பெரும் 2ம் வீடு ஜாதகருக்கு நிதானமான நிதி மேலாண்மை திறன் இல்லை எனில் வெகு வேகமாக தனம் கரையும் என்பதை கருத்தில் கொள்க.

8ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நீண்ட ஆயுள் உண்டு என்ற போதிலும், திடீர் இழப்புகளை தவிர்க்க இயலாது, குறிப்பாக மருத்துவ செலவுகள், வீண் விரையம், தொழில் வழியிலான பாதிப்புகள், வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் வீண் செலவினங்கள், வாகனம் சார்ந்த விரைய செலவுகள் போன்றவை கடுமையான பாதிப்பை தரும் என்பதால் ஆயுள் காப்பீடு போன்றவற்றில் முதலீடு செய்து வரும் பாதிப்பில் இருந்து விடுபடலாம், குறிப்பாக அனைத்து பொருட்கள் இடம், வேண்டி வாகனம் போன்றவற்றை காப்பீடு செய்துகொள்வது சகல நிலைகளில் இருந்தும் நன்மைகளை தரும்.

4,6,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 4ம் பாவக வழியில் இருந்து நல்ல ஞானத்தையும், சிறந்த நற்குணத்தையும் தரும், உயர்கல்வி ஆய்வு கல்வியில் தேர்ச்சியை தரும், வருமுன் உணரும் தன்மையையும், இரசாயனம், கனிம பொருட்கள் சுரங்க பொருட்கள் வழியில் அபரிவித லாபத்தையும் வாரி வழங்கும், பல  அறிய திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம் உண்டு, தர்மத்தையும் சத்தியத்தையும் மதித்து போற்றும் குணத்தை தரும், மதம் சார்ந்த நன்மைகள் உண்டாகும், ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் சிறந்து விளங்கும் தன்மையை தரும், தகவல் தொழில் நுட்பம் சார்ந்த விஷயங்களில் அபரிவித யோகம் உண்டு, வண்டி வாகன தொழில் வழியில் லாபம் உண்டு, சுய   உழைப்பின் மூலம் வெற்றி பெற்ற மனிதராக திகழ்வார் என்பது கவனிக்கத்தக்கது.

6ம்  பாவக வழியில் இருந்து பயணம் மூலம் லாபம் உண்டாகும், சமாதான  முறையால் சகல சௌபாக்கியங்களையும் பெறுவார், மதம் சார்ந்த விஷயங்களில் நன்மைகளும் ஆதரவும் தேடி வரும், உடல் நல பாதிப்பில் இருந்து விரைவாக குணம் பெரும் தன்மையை தரும், கடன் சார்ந்த தொல்லைகள் ஜாதகரின் நடவடிக்கைகள் மூலம் நிறைவடையும், நீண்ட நாள் ஆசை லட்சியம் யாவும் நிறைவேறும், அதீத எதிர்ப்புகள் உண்டான போதிலும் இறுதியில் வெற்றியே ஜாதகர் பெறுவார், பொறுமையை கடைபிடிப்பது ஜாதகருக்கான வெற்றிகளை அதிகரிக்கும்.

9ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு வரும் துன்பங்களை ஜாதகரே தனது அறிவுத்திறன் கொண்டு வெற்றி பெறுவார், ஜாதகரின் முன்னோர்கள் செய்த பாக்கியத்தின் பலாபலன்களை முழுவதும் சுவீகரிக்கும் வல்லமை உண்டாகும், தெளிந்த நல்லறிவு, அதீத செயல்திறனும் ஜாதகருக்கு உலக புகழை பெற்று தரும், அனைவரிடமும் நற்ப்பெயரை பெறுவதற்கான சந்தர்ப்பம் உண்டாகும், தனது நிறுவனத்தின் பெயரை மக்கள் மத்தியில் பிரபல்யம் அடையச்செய்யும் யோகம் பெற்றவர் என்பதுடன், தொழில் வழியில் அழியா புகழை பெறுவார், இடமாற்றம் மற்றும் சூழ்நிலை மாற்றத்தில் அதீத ஆர்வம் உண்டாகும்.

10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு , உத்தியோகம் வியாபாரம் மற்றும் சுய தொழில் வழியிலான தன்னிறைவான வெற்றிகளை வாரி வழங்கும், கம்பீரமான நிர்வாக திறனை தரும், தீர்க்கமான வாத திறமையையும், விரைவான செயல்பாடுகளையும் தரும், பொது வாழ்க்கையில் வெற்றி உண்டாகும், தான் செய்யும் தொழில் வழியில் இருந்து 100% விகித வெற்றிகளையும் லாபங்களை பெறுவதுடன், கவுரவம் அந்தஸ்து குறையாத யோக வாழ்க்கையை தரும், ஜாதகரின் ஜீவன ஸ்தானம் மிகவும் வலிமையுடன் இருப்பதால் எதிர்கால வாழ்க்கை பரிபூர்ண வெற்றிகள் நிறைந்ததாக விளங்கும்.

நடைபெறும் திசாபுத்திகள் தரும் பலாபலன்கள் :

சுக்கிரன் திசை தரும் பலாபலன்கள் ( 20/03/2009 முதல் 20/03/2029 வரை )

நடைபெறும் சுக்கிரன் திசை ஜாதகருக்கு 2,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவக பலனை ஏற்று நடத்துவது, மேற்கண்ட பாவக வழியில் இருந்து சற்று இன்னல்களை தரக்கூடும், வருமானம், இழப்பு என்ற  வகையில் இன்னல்கள் உண்டாக வாய்ப்பு உண்டு என்பதால் ஜாதகரின் நிதி சார்ந்த மேலாண்மை மிகவும் சிறப்பாக அமைவது அவசியமாகிறது, முடிந்த அளவு கடன் சார்ந்த இன்னல்களில் இருந்து விடுபட முயற்சிப்பது அவசியமாகிறது, அதீத தன்னம்பிக்கை ஜாதகருக்கான பொருளாதார முன்னேற்றங்களை அபரிவிதமானதாக மாற்றி அமைக்கும், தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசையில் ராகு புத்தி 5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவக தொடர்பை பெறுவது வரவேற்கத்தக்கது, தன்னிறைவான பொருளாதர முன்னேற்றங்களையும், எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் நல்கும், குலதெய்வத்தின் ஆசியின் மூலம் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும்.
எதிர்வரும் குரு புத்தியும் தங்களுக்கு 1,3,7,12ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவக பலனை  ஏற்று  நடத்துவது தங்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளில் இருந்து விடுதலையும், பொருளாதார மேன்மையையும் வாரி வழங்கும், புதிய சிந்தனை புதிய செயல்பாடுகள் தங்களின் வாழ்க்கையில் எதிர்பாராத நன்மைகளை வாரி வழங்குவதுடன் இல்லற வாழ்க்கையில் சந்தோசம், குழந்தை பாக்கியத்தை தடையின்றி வழங்கும், சுக்கிரன் திசை 2,8ம் பாவக வழியில்  இருந்து இன்னல்களை தந்த போதிலும், நடைபெறும், எதிர்வரும் புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை தருவது வரவேற்க்கத்தக்கது " வாழ்த்துக்கள் "

வாழ்க வளமுடன் 
 ஜோதிடன் வர்ஷன் 
9443355696

திங்கள், 14 மே, 2018

ராகு மஹா திசை வழங்கும் ராஜயோக பலன்களும் ! பாத ஸ்தான பாதிப்புகளும் !


சுய ஜாதக பலாபலன்கள்

லக்கினம் : மீனம் 
ராசி : மேஷம் 
நட்ஷத்திரம் : பரணி 3ம் பாதம்


ஜாதகத்தில் பாவக தொடர்புகள் :

1,7,10ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு லக்கின பாவகத்தில் இருந்து பெரும் புகழ் மிக்க பொறுப்புகளை வாரி வழங்கும், மிதம் மிஞ்சிய ஜீவன மேன்மையையும், தொழில் ரீதியான சிறந்த ஞானத்தையும் வாரி வழங்கும், தெய்வீக அனுக்கிரகம் மூலம் நல்ல வேலை வாய்ப்பில் சிறப்பான பொருளாதார முன்னேற்றங்களை நல்கும், நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், சிறந்த மனவலிமை ஆகியவை ஜாதகருக்கு வாழ்நாள் முழுவதும் சிறப்பாக அமைந்து இருக்கும், ஜாதகருக்கு வரும் எதிர்ப்புகள் அனைத்தையும் களைந்து வெற்றிநடை போடும் யோகம் உண்டாகும், வளரும் சூழ்நிலையில் சிறப்புகளையும், கவுரவம் குறையாத யோக வாழ்க்கையையும் ஜாதகருக்கு லக்கின பாவகம் வாரி வழங்கும், வருமுன் உணர்ந்து செயலாற்றும் யோகம் ஜாதகருக்கு உண்டு.

7ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நல்ல வாழ்க்கை துணை அமையும், மனைவி வழியிலான யோகங்களை பரிபூர்ணமாக அனுபவிக்கும் வல்லமை கொண்டவர் என்பதில் மாற்று கருத்து இல்லை, நல்ல நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியிலான யோகங்களை ஜாதகர் பரிபூர்ணமாக பெறுவார் என்பதில் மாற்று கருத்து இல்லை, குறிப்பாக ஜாதகருக்கு வெளியூர் அல்லது வெளிநாடுகளில் இருந்துவரும் வருமான வாய்ப்புகள் மிகவும் அபரிவிதமானதா அமைந்து இருக்கும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், ஜாதகரின் உழைப்பிற்கு மேலான வருமானம் தேடிவரும், வேற்று மதத்தினர், வேற்று இனத்தினர் மூலம் ஜாதகர் பெரும் நன்மைகளை அளவிட இயலாது என்பது வரவேற்கத்தக்க சிறப்பு அமசமாகும், ஜாதகர் செய்யும் கூட்டு முயற்சிகள் அல்லது வியாபாரம் பெரும் லாபங்களை வாரி வழங்கும், மனதிற்கு இனிய வாழ்க்கை துணையுடன், எதிர்காலத்தை ஜாதகர் நம்பிக்கையுடன்  எதிர்கொண்டு வெற்றிகரமாக வாழாலாம், திருமணத்திற்கு  பிறகான முன்னேற்றம் என்பது ஜாதகருக்கு பரிபூர்ணமாக அமையும், சிறந்த தொழில் மற்றும் பொருளாதார முன்னேற்றம் பரிபூர்ணமாக அமையும்.

10ம் பாவக வழியில் சிறந்த தொழில் வாய்ப்புகளையும், சிறந்த வேலை வாய்ப்புகளையும் ஜாதகர் தன்னிறைவாக பெறுவார், எதிர்பாராத வருமான உயர்வையும், கவுரவம் மிக்க பதவிகளையும் ஜாதகர் குறுக்கியகாலத்தில்  பெறுவார், வெளிநாடுகளில் பணியாற்றும் யோகமும் அதன் வழியிலான பொருளாதர தன்னிறைவு ஜாதகருக்கு பரிபூர்ணமாக அமையும், ஏற்றுமதி இறக்குமதி  தொழில்களில் சிறந்து விளங்கும் தன்மையை தரும், தனது சுய உழைப்பின் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் நபராக ஜாதகர் விளங்குவார், தடைகளை தகர்த்து வெற்றிநடை போடும் யோகம் உண்டு என்பதுடன், ஜாதகர் முயற்சிக்கும் எந்த ஒரு காரியங்களும் நல்ல  வெற்றிகளை தரும், ஜீவன ஸ்தானம் உபய நெருப்பு ராசி என்பதால், தொழில் நுட்பம் மற்றும் நுண்ணறிவு சார்ந்த விஷயங்களில் அபரிவித முன்னேற்றங்களை நல்கும், பரிபூர்ண தொழில் வெற்றிகளை ஜாதகருக்கு தொடர்ந்து வாரி வழங்கும்  என்பதால் ஜாதகர் ஜீவன ஸ்தான வழியில் இருந்து 100% விகித நன்மைகளை பெறுவார்.


2,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து 100% விகித நன்மைகளை வாரி வழங்கும், சுய ஜாதகத்திலே மிகவும் வலிமையுள்ள பாவக தொடர்பாக இதனை கருதலாம், 2ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் அளவுக்கு அதிகமான வருமானம் வந்து சேரும், குறைந்த முதலீடுகளில் அதிக லாபத்தை தரும், இனிமையான  பேச்சு திறன் ஜாதகருக்கு மீதம் மிஞ்சிய நன்மைகளை வாரிவழங்கும், கை நிறைவான வருமானம் ஜாதகருக்கு திடீரென தேடிவரும் வாய்ப்பு அதிகம் உள்ளது, ஜாதகர் முறையான நிதி மேலாண்மை கொண்டவராக திகழ்வது, ஜாதகரின் பொருளாதர தன்னிறைவை பெற குறுகிய காலத்தில்  வழிவகை செய்யும், தனக்கு வரும் எதிர்ப்புகள் அனைத்தையும் தனது பேச்சு திறனால் தனக்கு சாதகமாக மாற்றும் வல்லமையை தரும், வாழ்நாள் முழுவதுமான வருமானம் ஜாதகர் தொடர்ந்து வரும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும் மேலும் ஜாதகருக்கு திருமணத்திற்கு பிறகான வளர்ச்சி மிகவும் அபரிவிதமானதாக அமையும்.

11ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நல்ல குணமும், ஒழுக்கம் நிறைந்த நடவடிக்கையும் பெரும் அதிர்ஷ்டங்களை வாரி வழங்கும், நல்ல நண்பர்கள் அவர்கள் வழியிலான முன்னேற்றம், தன்னம்பிக்கை மற்றும் மனதைரியம், தெளிவான சிந்தனை, எடுக்கும் முயற்சிகளில் இருந்து வரும் வெற்றி வாய்ப்பு, உண்மையை மதித்தல், தேடிய விஷயங்கள் ஜாதகருக்கு பரிபூர்ணமாக அமையும் தன்மை, லட்சியங்களை அடையும் யோகம், முற்போக்கு சிந்தனை, அதிர்ஷ்டம் நிறைந்த யோக வாழ்க்கை என ஜாதகருக்கு லாப ஸ்தானம் தொடந்து நன்மைகளை வாரி வழங்கி கொண்டே இருக்கும், திட்டமிட்டு செயல்படும் வல்லமை ஜாதகருக்கு அதிகம் உண்டு, எதையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையை ஜாதகருக்கு அடிப்படையிலேயே 11ம் பாவகம் வாரி வழங்கி இருக்கும் என்பது  கவனிக்கத்தக்கது, எதிர்பார்த்த எதிர்பாராத யோகங்களை ஜாதகர் பெறுவார் என்பது கவனிக்கத்தக்கது, தனது வாழ்க்கையை மிக சிறப்பாக திட்டமிட்டு நடத்தி செல்லும் வல்லமை ஜாதகருக்கு நிச்சயம் உண்டு.

3,4ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 3ம் பாவக வழியில் இருந்து மிகுந்த பயத்தையும், முயற்சியின்மையையும் அதிகரிக்கும், ஜாதகரின் உறுதியில்லாத தன்மை வரும் யோக பலன்கள் யாவையும் தடுத்து நிறுத்தும், வீண் மன பயம் ஜாதகரை வெகுவான காரிய வெற்றிகளுக்கு பெரும் தடையாக விளங்கும், மெய் பொருள் காணாது வாழ்க்கையில் மற்றவர்கள் கூறும் கருத்தை கேட்டு பெரும் தோல்விகளை ஜாதகர் சந்திக்க கூடும், தன்னுள்  உள்ள சுய  வலிமையை உணராமல் பல காலம் ஜீவிக்கும் தன்மையை தரும், ஜாதகரை மற்றவர்கள் வெகுவாக பயன்படுத்திக்கொள்ள கூடும் என்பதால், மிகுந்த விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது, விடாமுயற்சியுடன் போராடுவதே ஜாதகருக்கு பரிபூர்ண நன்மைகளை வாரி வழங்கும், கவன சிதறல்களும், ஞாபகம் இன்மையும் ஜாதகரின் தோல்விகளுக்கு காரணமாக அமையும், எனினும் முறையான பயிற்சியும், பரிகாரமும் ஜாதகருக்கு தெளிவான யோக வாழ்க்கையை வாரி வழக்கும், சகோதர வழி ஆதரவு ஜாதகருக்கு அமைவது மிக மிக அரிதானதாக அமையும், சீரிய நல்ல நோக்கங்கள் ஜாதகரின் மனஉறுதி இன்மையால் வெகுவாக பாதிக்கப்படும், வீரியமிக்க செயல்திறன் ஜாதகருக்கு மிக அரிதாகவே அமையும் என்பதால், சரியான தீர்வுகளை ஜாதகர் தேடுவது சகல சௌபாக்கியத்தையும் நல்கும்.

4ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு வரும் நல்ல சுகபோகங்கள் யாவும் மற்றவர்களால் தட்டிப்பறிக்கப்படும், குறிப்பாக ஜாதகர் தனது பெயரில் உள்ள சொத்து சுகம், வண்டி வாகனம் மற்றும் இடம் பொருள்கள் யாவற்றையும் காப்பாற்றிக்கொள்ள வெகுபாடு படவேண்டி இருக்கும் என்பதால், தனது பெயரில் எந்த சொத்துக்களையும் வைத்துக்கொள்ளாமல் இருப்பதே மிகுந்த நன்மைகளை தரும், மற்றவர்களுக்கு கொடுக்கும் பொருட்கள் யாவும் திரும்பி வருவது மிக அரிதானதாக அமையும், வண்டி வாகனங்களில் ஜாதகர் மிகவும் கவனமாகவும், பாதுகாப்பாகவும் பயணம் மேற்கொள்வது சகல நன்மைகளையும் தரும், மற்றவர்கள் விஷயங்களில் ஜாதகர் தலையீடு செய்யாமல் இருப்பதே மிகுந்த நன்மைகளை தரும், குடியிருக்க நல்ல இருப்பிடம் அமையாது என்பதால், சுய ஜாதகத்தில் வலிமை மிக்க பாவக தொடர்பிலான திசை குறிக்கும் வாயிற்படி கொண்ட வீடுகளில் ஜாதகர் ஜீவனம் செய்வது சகல சௌபாக்கியங்களையும் நல்கும்.

5,8ம் வீடுகள் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு  5ம் பாவக வழியில் இருந்து நல்ல அறிவு திறனை வாரி வழங்கும், சமயோசித புத்திசாலித்தனமும், சிறந்த அறிவு திறனும்ஜாதகரின்  வாழ்க்கையில் கணிக்க இயலாத சுகபோகங்களை வாரி வழங்கும், தனது தொழில் வழியிலான முன்னேற்றங்களை ஜாதகர் பரிபூர்ணமாக பெறுவார் என்பதுடன், தனது புத்திகூர்மை கொண்டு செய்யும் தொழிலில் குறுகிய காலத்தில் பெரும் முன்னேற்றத்தை அடைவார், குலா தெய்வத்தின் ஆசியும், இறை அருளின் கருணையும் ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும், ஜாதகருக்கு நல்ல வாரிசுகள் அமையும், என்பதுடன் அவர்கள் வழியிலான முன்னேற்றம் மிகவும் அபரிவிதமானதா அமையும், ஜாதகர் கற்ற கல்வி எப்பொழுதும் ஜாதகருக்கு மிகுந்த உறுதுணையாக அமைவதுடன் ஆராய்ச்சி புதிய கண்டு பிடிப்புகள் மூலம் பெரும் செல்வந்தன் ஆவதற்கான வாய்ப்புகளை வாரி வழங்கும், எந்த சூழ்நிலையையும் ஜாதகர் சமாளித்து முன்னுக்கு  வருவார், சுய ஜாதகத்தில் பூர்வபுண்ணியம் வலிமை பெற்று இருப்பது ஜாதகருக்கு சிறந்த யோக வாழ்க்கையை வாரி வழங்கும்.

8ம் பாவக வழியில் இருந்து குழந்தைகளால் லாபமும் அதிர்ஷ்டமும் உண்டாகும், திடீர் அதிர்ஷ்டம் மூலம் ஜாதகர் பெரும் சொத்து சுக சேர்க்கையை பெறுவார், நீண்ட ஆயுள் உண்டாகும், ஜாதகர் ஆயுள் காப்பீடு, இன்சூரன்ஜ் போனஸ், கிராஜுவிட்டி மூலம் அபரிவிதமான பொருளாதார முன்னேற்றங்கள் உண்டாகும், மருத்துவ உபகரணம் மற்றும் மருந்து பொருட்கள் மூலம் ஜாதகர் நிறைவான வருமான வாய்ப்புகளை பெறுவார், ஏமாற்றங்கள் அனைத்தும் ஜாதகருக்கு பரிபூர்ண நன்மைகளையும் யோகத்தையும் வாரி வழங்கும், தனது வாழ்க்கை துணையின் அறிவும் பொருளாதர உதவிகளும் ஜாதகரின் வாழ்க்கையில் வியக்கத்தக்க மாற்றங்களை வாரி வழங்கும்.

6,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 6ம் பாவக வழியில் இருந்து எதிர்ப்புகள் வழியில் இருந்து நன்மைகளை பெரும் யோகத்தை தரும், எதிரிகளும் நண்பர்கள் ஆவார்கள் தெளிவான செயல்பாடுகள் மூலம் வாழ்க்கையில் அனைவரிடமும் நற்பெயர் எடுக்கும் வல்லமையை தரும் மற்றவர்கள் தனம் ஜாதகருக்கு பயனுள்ளதாக விளங்கும் வருமானம் ஜாதகருக்கு தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும் என்பதுடன் குறுகியகால அதிர்ஷ்டங்கள் ஜாதகருக்கு நிதி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும், அனைவரிடமும் பகைமை பாராட்டாமல் இருப்பது ஜாதகருக்கு பெருத்த நன்மைகளை வாரி வழங்கும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதால் உடல் துன்பங்கள் வெகுவாக குறையும், பெரியோர் ஆசி ஜாதகருக்கு வரும் இன்னல்களை தவிர்க்க உதவும்.

9ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு சமூகத்தில் பெரிய மனிதர்கள் உதவிகளை பெற்று தரும், ஆன்மீக பெரியோர்களின் ஆசி ஜாதகரின்  வளர்ச்சியை வெகுவாக அதிகரிக்கும், நற்பெயரும் பாராட்டுகளும் ஜாதகருக்கு தேடி வரும், பழமை மிக்க புராதான பொருட்கள் அதிக அளவில் தேடிவரும்  வாய்ப்பு உள்ளது, சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் ஜாதகரனுக்கு பேருதவிகளை வாரி வழங்கும், சிறந்த அறிவாளிகவும், ஒழுக்கம் நிறைந்த பண்பாளராகவும் ஜாதகர் வாழ்நாள் முழுவது இயங்குவார், பித்ருக்கள் ஆசி  ஜாதகருக்கு எதிர்பாராத நன்மைகளை வாரி வழங்கும், தெய்வீக அனுகூலம் உண்டாகும், இடமாற்றம் மற்றும் சூழ்நிலை மாற்றத்தில் அதீத ஆர்வம் உண்டாகும், சிறந்த அறிவாளியாக திகழ்வார்.

12ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு எதிரிகளின் சூழ்ச்சியே சாதகமாக மாறும், சூழ்ச்சிகள் அனைத்தும் ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளையும், சுபயோகங்களையும் வாரி வழங்கும், திடீர் பதவி உயர்வு ஜாதகரின் வாழ்க்கையில் வியக்கத்தக்க நல்ல மாற்றங்களை வாரி வழங்கும், தொழில் துறையில் எதிர்பாராத அதிர்ஷ்டம், செய்த முதலீடுகள் வழியிலான அதீத லாபம், எதிர்ப்புகளை களைந்து மிகப்பெரிய அதிர்ஷ்ட வாய்ப்புகளை ஜாதகர் தன்வசம் சுவீகரிக்க செய்யும், இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும், போதும் என்ற மனம் ஜாதகருக்கு பரிபூர்ணமாக சுபயோகங்களை நல்கும், தெய்வீக அனுபவமும், ஆன்மீக வெற்றியும் ஜாதகருக்கு பரிபூரண நன்மைகளை வாரி வழங்கும், சிறப்பு மிக்க எதிர்காலத்தை ஜாதகர் நிர்ணயம் செய்யும் வல்லமை உண்டாகும்.

நடைபெறும் செவ்வாய் திசை தரும் பலாபலன்கள் : ( 21/06/2012 முதல் 22/06/2019 வரை )

 5,8ம் வீடுகள் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 5,8ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு பரிபூர்ண நன்மைகளை வழங்குவது வரவேற்கத்தக்க விஷயமாகும், குறிப்பாக ஜாதகரின் கல்வி ஞானம், இறை வழிபாட்டின் மூலம் சுபயோகம் பெரும் அமைப்பு, கற்ற கல்வி வழியிலான தொழில் வாய்ப்புகளை பெறுதல், தெய்வீக அனுக்கிரகம், தன்னம்பிக்கை மற்றும் மனோதைரியம் அதிகரிக்கும் தன்மை, மனதில் உள்ள எண்ணங்கள் யாவும் நிறைவேறும் தன்மை புதிய சிந்தனை, புதிய மாற்றங்களை நோக்கி ஜாதகர் பயணிக்கும் வல்லமை என சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும், 8ம் பாவக வழியில் இருந்து எதிர்பார்த்த வாய்ப்புகள் ஜாதகருக்கு பரிபூர்ணமாக கிடைக்கும், வெளியூர் அல்லது வெளிநாடுகளில் இருந்து வரும் செல்வாக்கு அதிகரிக்கும், நிறைவான தானசேர்க்கை ஜாதகருக்கு தேடிவரும், தன்னம்பிக்கையும் மனோ தைரியமும் அதிகரிக்க நிறைய வாய்ப்புகள் உண்டு, நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம் ஜாதகருக்கு சீரிய முன்னேற்றங்களை வாரி வழங்கும், கல்வி, வேலை, திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் யாவும்  ஜாதகருக்கு படிப்படியாக அமையவரும் என்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், தற்போழுது செவ்வாய் திசையில் சூரியன் புத்தி ஜாதகருக்கு களத்திர பாவக வழியில் இருந்து வெளிநாடுகளில் யோக வாழ்க்கையும், நண்பர்கள், கூட்டாளிகள் மூலம் அபரிவித வளர்ச்சியும், வாழ்க்கை துணை வழியிலான சுபயோகங்களையும் பெறுவார், எதிர்வரும் சந்திரன் புத்தி ஜாதகருக்கு தொழில் வழியிலான திடீர் அதிர்ஷ்டங்களையும், பெரும் பதவிகளையும் தரக்கூடும், செய்தொழில் வழியிலான முன்னேற்றம் ஜாதகருக்கு அபரிவித யோகங்களை வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்கது.

எதிர் வரும் ராகு திசை தரும் பலாபலன்கள் : ( 22/06/2019 முதல் 22/06/2037 வரை )

 2,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக பலாபலன்களை, முழுவீச்சில் வாரி வழங்கும் யோக காலமாக ராகு மஹா திசையை கருதலாம், ராகு தனது திசையில் மிதம்மிஞ்சிய அதிர்ஷ்டத்தையும், அளவில்லா பொருளாதர வளர்ச்சியையும் தரும் என்பதனை " ஜோதிடதீபம் " கட்டியம் கூறுவதுடன், எதிர்கால வாழ்க்கையை சிறப்பாக எதிர்கொள்ள ஆலோசனையும் வழங்குகிறது, ஜாதகரின் லாப ஸ்தானம் என்பது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் வீடாகவும், சர மண் தத்துவ அமைப்பிலும் இயங்குவதால் ஜாதகருக்கு 100% விகித யோகங்களை வாரி வழங்கும், நிறைவான வருமானம், செல்வ செழிப்பு, இனிமையான குடும்ப வாழ்க்கை, தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகள், பொது வாழ்க்கையில் வெற்றி என மிகுந்த நன்மைகளையும், லாப ஸ்தான வழியில் இருந்து நீடித்த அதிர்ஷ்டங்களையும், நல்ல குணம் மூலம் மக்கள் செல்வாக்கினையும், தெளிவான சிந்தனை மூலம் புதிய வாய்ப்புகள் மற்றும் புதுவித கண்டுபிடிப்புகள் மூலம் பெரும் செல்வ சேர்க்கையையும் தொடர்ந்து பெரும் யோகத்தை நல்கும், தோல்விகள் அற்ற வெற்றிகரமான யோக வாழ்க்கையை "ராகு மகா திசை" ஜாதகருக்கு வாரி வழங்க காத்துகொண்டு இருப்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

எனவே ஜாதகர் தனது வாழ்க்கையில் ராகு திசை காலத்தில் சுபயோகங்களை அனுபவிக்க தடையேதும் இல்லை என்பதனை ஜோதிடதீபம் வாழ்த்துக்களுடன் உறுதிகூறுகிறது.

பரிகாரம் :

1) சனி மற்றும் சுக்கிர பகவானுக்கு பீரிதி பரிகாரங்களை மேற்கொண்டு நலம் பெறுவது அவசியமாகிறது.
2) தாய் மற்றும் சகோதர வழியிலான பாதிப்புகளை ஜாதகர் சுவீகரித்து, தனது வாழ்க்கையில் தைரியம்,வண்டி வாகன யோகங்களை பெறுவது சிறப்புகளை நல்கும்.
3) திருவெண்காடு சென்று முக்குண நீராடி நலம் பெறுக.
4) பழனி வருடம் ஒருமுறை சென்று " ராஜஅலங்கார " தரிசனம் செய்வது சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும்.
5) சூரிய நமஸ்காரம் மற்றும் தீட்சை பெறுவது ஜாதகரின் வாழ்க்கையில் சகல சுகபோகங்களையும் நல்கும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

புதன், 21 பிப்ரவரி, 2018

திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் 7ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றால் என்னவாகும் ?


கேள்வி :

 திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் 7ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றால் என்னவாகும் ?

பதில் : 

  சுய ஜாதகத்தில் எந்த ஒரு வீடும் ( லக்கினம் முதல் விரைய ஸ்தானம் வரை ) பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது நல்லதல்ல, ஏனெனில் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பாவக வழியில் இருந்து ஜாதகர் கடுமையான இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும், அதாவது தாங்க இயலாத துன்பத்தையும் துயரத்தையும் தரும், இல்லற வாழ்க்கையை சிறப்பிக்கும் 7ம் வீடு எக்காரணத்தை கொண்டும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது நல்லதல்ல, ஜாதகருக்கு திருமணம் சார்ந்த தடைகளும் தாமதங்களும் நிச்சயம் ஏற்படுவதுடன், தாம்பத்திய வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படும், இந்த அமைப்பை பெற்றவர்கள் தனது வாழ்க்கை துணையின் சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தான வலிமையை தெளிவாக தெரிந்துகொண்ட பிறகே திருமண வாழ்க்கையில் இணைவது சகல நலன்களையும் தரும், தனக்கு வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் எனும் 7ம் வீடு நல்ல வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம்.



லக்கினம் : தனுசு 
ராசி : ரிஷபம் 
நட்ஷத்திரம் : ரோஹிணி 3ம் பாதம் 

மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகத்திலே மிகவும் பாதிக்கப்பட்ட அமைப்பாக கருதலாம், ஜாதகருக்கு தற்போழுது 30 வயது நடைமுறையில் உள்ளது, திருமணம் என்பது இன்னும் எட்டா கனியாகவே இருப்பது ஏன் ? என்ற கேள்விக்கு பதிலாக அவரது செயல்பாட்டையே காரணமாக சொல்லலாம், தனக்கு வந்த நல்ல திருமண வாய்ப்புகளை தட்டிக்கழிக்கும் போக்கு நெடுங்கால தாமதத்தை தந்துகொண்டு இருப்பது கவனிக்கத்தக்கது, இதற்க்கு காரணமாக ஜாதகரின் லக்கினம் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதே என்றால் அது மிகையாகாது, லக்கினம் சுய ஜாதகத்தில் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு அவ்வளவு சிறப்புகளை தருவதில்லை, உதாரணமாக ஜாதகருக்கு வளரும் சூழ்நிலை சிறப்பாக அமையாது, முரண்பட்ட கருத்துக்களை கொண்ட மனநிலையை பெற்று இருப்பார், உடல் மனம் இரண்டும் ஓர் நேர்கோட்டில் இயங்காது, இயற்க்கைக்கு புறம்பான செயல்பாடுகளில் ஆர்வத்தை தரும், அதீத கற்பனையில் ஜீவனம் செய்யும் அமைப்பை பெற்று இருப்பதுடன், மற்றவர்களுடனான புரிதல் மிக மிக குறைவாக அமைந்திருக்கும், மேற்கண்ட காரணங்களால் பாதிக்கப்பட்ட ஜாதகர் தனது திருமண வாழ்க்கையினை இவ்வளவு காலமும் தள்ளிபோட்டுக்கொண்டே வருவது ஏன் என்பது ஜாதகருக்கே வெளிச்சம், நமது ஜாதக கணித முறையின் படி ஜாதகரின் பாதக ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 3ம் வீடான மிதுனத்தில் அமைவதால், ஜாதகரின் அசட்டு தனமும், அலட்சியமும், முயற்சி இன்மையும் திருமண தாமதத்திற்கு அடிப்படை காரணமாக சொல்லலாம்.

7ம் வீடு பாதக ஸ்தானமான  7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகரின் இல்லற வாழ்க்கையில் சிறப்பின்மையை மிக தெளிவாக காட்டுகிறது, திருமண வாழ்க்கை மூலம் நலம் பெறுவதற்கான சிறு அறிகுறியும் தெரியவில்லை, முரண்பட்ட நட்பு, அதீத கற்பனை, ஆர்வமின்மை போன்ற பாதிப்புகளால் ஜாதகர் பாதிக்கப்படுவது கவனிக்கத்தக்கது, 7ம் வீடு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமான மிதுனத்தில் அமைவது, ஜாதகரின் உடல் ரீதியான பாதிப்புகள் தாம்பத்திய ரீதியான வீரியத்தை வெகுவாக இழக்க செய்வதுடன், வீண் மனபயத்தையும் வாரி வழங்குகிறது, சுப காரியங்களை வெகு விரைவில் நிறைவேற்றி வைக்கும் தன்மை பெற்ற பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் வீடும் ஜாதகருக்கு திடீர் இழப்பை தரும் 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதால், ஜாதகருக்கு வரும் நல்ல நல்ல திருமண வாய்ப்புகளை தட்டிப்பறிப்பதுடன், சுப நிகழ்வுகளை நிறைவேற்றும் வல்லமையை தடுக்கிறது, ஜாதகரின் சிந்தனையும் செயல்பாடுகளும் விலாசமான பார்வையில் இல்லாதது 5ம் பாவக வலிமை இன்மையை தெளிவு படுத்துகிறது, சுய புத்தி அல்லது சொல்புத்தி இரண்டில் சுய புத்தி ஜாதகருக்கு சிறப்பாக செயல்பட மறுப்பதால், அனைத்தையும் உதறித்தள்ளும் நிலையில்  ஜாதகர் இருக்கின்றார்.

கடந்த ராகு திசை ( 09/11/1999 முதல் 09/11/2017 வரை ) ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட 1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழுவீச்சில் 200% விகித இன்னல்களை பாதக ஸ்தான வழியில் இருந்து லக்கினம் மற்றும் களத்திர ஸ்தானத்திற்கு வாரி வழங்கி இருப்பது திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற நிலையை தந்து இருக்கிறது , மேலும் ராகு திசையில் சூரியன்,சந்திரன் மற்றும் செவ்வாய் புத்திகள் வலிமையற்ற பாவக பலனையே ஏற்று நடத்தியது ஜாதகருக்கு கடுமையான தடைகளை வாரி வழங்கி உள்ளது கவனிக்கத்தக்கது.

தற்போழுது நடைபெறும் குரு திசை ( 09/11/2017 முதல் 09/11/2033 ) வரை ஜாதகருக்கு  சுய ஜாதகத்தில் 5,8ம் வீடுகள் வழியில் இருந்து இன்னல்களையும், 4,10ம் வீடுகள்  வழியில் இருந்து சுபயோகங்களையும் வாரி வழங்குவது வரவேற்கத்தக்கது, எனவே பெற்றோர் மற்றும் உறவுகள் சொல்லும் அறிவுரைகளை ஏற்று, 2,5,7,8,12ம் வீடுகள் வலிமை பெற்ற ஓர் வாழ்க்கை துணையை தாமதமாகாமல் தேர்வு செய்து, இல்லற வாழ்க்கையில் இணைவதே சகல நன்மைகளையும் தரும் என்பது  " ஜோதிடதீபம் " வழங்கு அறிவுரையாகும்.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் 7ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது தான வாழ்க்கையில் வாழ்க்கை துணையாக வரும் எதிர்பாலின அன்பரிடம் இருந்து அதீத இன்னல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், எனவே சுய ஜாதகத்தில் 7ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பின், தனக்கு வரும் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 2,5,7,8,12ம் வீடுகள் மிகவும் வலிமையுடன் உள்ளதா ? என்பதை கருத்தில் கொண்டும், தனக்கும் வாழ்க்கை துணைக்கும் நடைபெறும், எதிர்வரும் திசா புத்திகள் வலிமையான பாவக பலனை ஏற்று நடத்துகிறதா ? என்பதை கருத்தில் கொண்டு இல்லற வாழ்க்கையில் இணைவதே சகல நன்மைகளையும் தரும், இதற்க்கு மாறாக செயல்படுவது திருமண வாழ்க்கையையே கேள்விக்குறியாக மாற்றிவிடும் என்பது கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயமாகும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வியாழன், 16 நவம்பர், 2017

ஜாதக ஆலோசணை : சுய ஜாதகத்தில் உள்ள சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கங்கள் !



 எதிர்காலத்தை பற்றியும், நிகழ்கால நடைமுறைகளை பற்றியும், தனது சுய முன்னேற்றம் பற்றியும் ஜாதகரின் கேள்விகள் நமது சிந்தனையை தூண்டும்விதமாக அமைவதை பாராட்ட வார்த்தைகள் இல்லை, சுய ஜாதக வலிமையின் அடிப்படையில் ஜாதகரின் எதிர்கால திட்டமிடுதல்கள் மற்றும் செயல்பாட்டிற்கான ஆயத்த நிலையில் ஜாதகர் இருப்பதை இது தெளிவுபடுத்துகிறது, " வாழ்த்துக்கள் " அன்பரே !


லக்கினம் : துலாம்
ராசி : கன்னி
நட்ஷத்திரம் : சித்திரை 1ம் பாதம்

ஜாதகரின் கேள்விகள் என்ன? அதற்க்கான விளக்கம் மற்றும் பதில்கள் என்ன? என்பதனை இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

கேள்வி :

எனது ஜாதகத்தில் சொந்த தொழில் செய்யும் அமைப்பு உள்ளதா? தற்போது செய்யலாமா? நிலைத்து நீடிக்குமா?

பதில் :

தங்களின் ஜாதகத்தில் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமான மகரமும், தங்களது சுய ஜாதகத்திற்கு ஜீவன ஸ்தானமான கடகமும் மிகவும் வலிமையுடன் இருப்பதால் தாங்கள் சுய தொழில் செய்வதற்கான முழு தகுதியை பெற்று இருக்கின்ரீர்கள் என்பதை உறுதிபட சொல்ல இயலும், மேலும் சுய ஜாதகத்தில் 1,4,7,10ம் வீடுகள் வலிமை பெற்று இருப்பது தங்களின் சுய  தொழில் வாய்ப்புகளை அதிகரிக்கும், குறிப்பக தங்களின் ஜீவன ஸ்தானம் மற்றும் களத்திர ஸ்தானம் சார்ந்த தொழில் வழியில் இருந்து பரிபூர்ண வெற்றிகளை தடையின்றி பெறுவீர்கள் என்பதை கவனத்தில் கொள்க, மேலும் சுய ஜாதகத்தில் லக்கினம்,சுகம்,களத்திரம் மற்றும் ஜீவனம் எனும் நான்கு கேந்திர பாவகங்களும் வலிமையுடன் இருப்பது தங்களை ஓர் தொழில் அதிபராக முன்னெடுத்து செல்லும் என்பதால் தங்கள் சொந்த தொழில் செய்யும் அமைப்பு உள்ளது என்பதை "ஜோதிடதீபம்" உறுதியாக பதிவு செய்கிறது.

தற்போழுது நடைபெறும் சனி திசை, சனி புத்தி சொந்த தொழில் செய்ய சாதகம் இன்றி இருக்கின்றது, எதிர்வரும் சனி திசையில் புதன் புத்தி சுய தொழில் செய்ய முழு வலிமையை தருகின்றது என்பதால், புதன் புத்தியில் தாங்கள்  சுய தொழில் முயற்சியை மேற்கொள்ளலாம்.

தாங்கள் செய்யும் தொழில் நீடித்து நின்று விருத்தி பெரும் என்பதை தங்களின்  ஜீவன ஸ்தான வலிமையையும், காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமான மகர ராசியின் வலிமையையும் தெளிவாக உறுதி செய்கிறது.

கேள்வி :

எப்படிப்பட்ட தொழில்கள் எனக்கு சரியாக வரும்? உதாரணமாக டிராவல் ஏஜென்ட்டு, கமிஷன் தொழில், விளம்பரம், டிசைனிங்,
என் கையில் காசு தங்குமா? சேமிப்பு வருமா?

பதில் :

தங்களது சுய ஜாதகத்தில் மிகவும் வலிமை பெற்ற பாவகங்கள் 7,10ம் வீடுகள் ஆகும், எனவே தாங்கள் FMCG சார்ந்த அணைத்தது தொழில்களும் சரியாக வரும், உணவகம், துணி கடை, வண்டி வாகன தொழில், பால் பொருட்கள், தொழில் நுட்பம் சார்ந்த தொழில்கள் நல்ல முன்னேற்றத்தை தரும் மேலும் தாங்கள் கூறியபடி டிராவல் ஏஜென்ட்டு, கமிஷன் தொழில், விளம்பரம், டிசைனிங் தொழில்களும் நல்ல விருத்தியை தரும், மக்கள் தொடர்புள்ள அணைத்து தொழில்களும் தங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை தரும்.

கையில் காசு தங்குவது சற்று சிரமம்தான் எனவே செலவுகளை குறைத்துக்கொண்டு சேமிப்பை அதிகரிப்பதே நல்லது, சுய ஜாதகத்தில் 2ம் வீடு வலிமை அற்று இருப்பது நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடுதல் அற்றவர் என்பதை தெளிவாக கூறுகிறது, கையில் இருக்கும் பணம் தங்களுக்கு வீண் விரையம்  ஆகும் என்பதால், வங்கியில் பணத்தை வைத்து கையாள்வதே தங்களின் தனம் சார்ந்த இன்னல்களுக்கு தீர்வாக அமையும், தங்கள் மன உறுதியுடன் சேமித்தால் நிச்சயம் சேமிப்பு தங்களை தேடி வரும்.

கேள்வி :

எனது ஜாதகத்தில் 10ம் பாவகத்தை பற்றி சொல்லுங்கள்
பங்கு  மார்கெட் தொழில் நமக்கு சரி வருமா?

பதில் :

தங்களுக்கு 4,10ம் வீடுகள்  ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிக சிறப்பான யோகத்தை தரும் நிலையாகும், குறிப்பாக 4ம் பாவக வழியில் இருந்து மண் மனை வண்டி வாகன யோகம், சொந்த வீடு மற்றும்  நிலபுலன்கள் வாங்கும் யோகம், வண்டி வாகன தொழில் வழியில் இருந்து வருமானம், நல்ல குணம், தாயார் வழியில் இருந்து வரும் யோக வாழ்க்கை, சுய சம்பாத்தியம், நல்ல தொழில் முன்னேற்றம், பெயரும் புகழும் உண்டாகுதல், சிறந்த நிர்வாக திறமை மூலம் பல தொழில் நிர்வகிக்கும் வல்லமை, பெரிய சொத்துக்கள், அரசு கவுரவம், சமூகம் மற்றும் அரசியலில் வெற்றி என்றவகையில் சிறப்புகளை தரும்.

10ம் பாவக வழியில் இருந்து  நல்ல உத்தியோகம், வியாபர விருத்தி, செய்யும்  தொழில் வழியில் இருந்து முன்னேற்றம், கம்பீரமான நிர்வாக திறமை, சுய தொழில் செய்வதன் மூலம் வாழ்க்கையில் சகல சம்பத்துக்களையும் பெரும் அமைப்பு, சிறந்த வாத திறமை மூலம் சாதகமான பலாபலன்களை சுவீகரிக்கும் வல்லமை என்ற வகையில் சிறப்புக்களை தரும், கவுரவம் குறையாத யோக  வாழ்க்கையை தரும், தங்களின் பரந்த மனப்பக்குவம் அனைவராலும் கவரப்பட்டு தொழில் ரீதியான நன்மைகளை தரும்,  ஜீவன ஸ்தானம்  என்பது சர நீர் தத்துவ ராசியில் அமைவதால், தங்கள் மனதில் என்ன நினைக்கிண்றீர்களோ அதுவே நடைமுறைக்கு வரும், எனவே தங்களின் எண்ணத்தின் வலிமையை அதிகரித்துக்கொள்வது  சகல சௌபாக்கியங்களையும்  தரும், நீர்த்துவம் சார்ந்த தொழில் வழியில் இருந்து தங்களுக்கு  அபரிவிதமான வருமான வாய்ப்புகள் வந்து சேரும் என்பதால், நீர்த்தத்துவம் சார்ந்த தொழில்களை சுவீகரித்து 100% விகித நன்மைகளை பெறுங்கள், வாழ்த்துக்கள்.

பங்கு வர்த்தக தொழில் தங்களை படுகுழியில் தள்ளிவிட்டுவிடும் என்பதால் அதன் சுவாசம் கூட படாமல் தாங்கள் நடந்துகொள்வது நல்லது, பங்கு வர்த்தக துறையில் வெற்றி பெறுவதற்கான பாவக வலிமை தங்களது ஜாதகத்தில் சிறிதும் இல்லை என்பதை கருத்தில் கொள்க என்று "ஜோதிடதீபம்" தங்களை எச்சரிக்கை செய்கிறது.

கேள்வி :

வீட்டு மனை வாங்கியாச்சு. சொந்த வீடு எப்போது கட்டுவேன்?

பதில் :

சொந்தவீடு கட்ட எதிர்வரும் சனி திசையில் புதன் புத்தி வழிவகை செய்யும், வடக்கு, தெற்கு சார்ந்த வாயிற்படி கொண்ட வீட்டை நிர்ணயித்து சகல நலன்களையும் பெறுங்கள், வாழ்த்துக்கள்.

கேள்வி :

நான் செய்ய வேண்டிய கர்மவினை கழிப்பு பற்றி சொல்லுங்கள் ?

பதில் :

சுய ஜாதகத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட 3,5,9,11ம் பாவக வழியில் இருந்து வரும்  இன்னல்களை ஏற்று அது சார்ந்த உறவுகளுக்கு நன்மை செய்து நலம் பெறுங்கள் உதாரணமாக, உடன் பிறப்பு, குழந்தைகள், பித்ருக்கள், இளைய சகோதரம் என்ற வகையில் கர்மா வினை பாதிப்பை கழித்துக்கொள்வது நல்லது.

கேள்வி :

தற்பொழுது ராகு கேது பெயர்ச்சி மற்றும் வரப்போகும் சனிப் பெயர்ச்சி யோக பலன்களை தருமா?

பதில் :

ராகு கேது முழு வீச்சில் சுபயோக பலன்களை 4,10ம் பாவக வழியில் இருந்து வாரி வழங்குகிறது , சனி பெயர்ச்சி யாதொரு பலாபலன்களை தங்களுக்கு தற்போழுது  தரவில்லை என்பதே உண்மை நிலை.

கேள்வி :

தொழில் ஸ்தான வலிமையும், நான் பெரும் தொழில் ரீதியான முன்னேற்றமும் ! வெளிநாட்டில் தொழில் முன்னேற்றம் பெரும் யோகம் உண்டா ?

பதில் :

தொழில் ஸ்தானம் மிகவும் வலிமையுடன் இருப்பது தங்களுக்கு சிறப்புகளை வாரி வழங்கும், தொழில் ரீதியான முன்னேற்றம் என்பதும் சிறப்பாக சீரிய முறையில் படிப்படியாக  அமையும், தங்களுக்கு சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் வலிமையுடன் இருப்பது வெளிநாட்டில் தொழில் ரீதியான முன்னேற்றம் என்பது  மிகவும் அபரிவிதமானதாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை குறிப்பாக தொழில் நுட்பம் சார்ந்த தொழில்களை தாங்கள் தேர்வு செய்து வெளிநாடுகளில் சிறப்பான முன்னேற்றங்களை பெறலாம்.

கேள்வி :

கூட்டு தொழில் செய்வது சரியானதா ? சுய தொழில் செய்வது சரியானதா?

பதில் :

கூட்டு தொழில் வெளிநாடுகளில் செய்வது சிறப்பான வளர்ச்சியை தரும், சுய தொழில் செய்வதும் தங்களுக்கு எதிர்பாராத முன்னேற்றத்தையே வாரி வழங்கும்  என்பதால், சுய தொழில் செய்யவும், கூட்டு தொழில்  செய்யவும் தங்களுக்கு முழு அதிகாரம் உள்ளது தங்களின் விருப்பம் எதுவோ ? அதை தேர்வு செய்து வெற்றி காணலாம்.

கேள்வி :

களத்திர ஸ்தானமும், குடும்ப ஸ்தானமும் பாதிக்கப்பட்டுல்லதா?

பதில் :

குடும்ப ஸ்தானம் மட்டும் சிறிது பாதிக்கப்பட்டு இருக்கின்றது, களத்திர ஸ்தானம் மிகவும் வலிமையுடன் இருப்பது தங்களுக்கு 7ம் பாவக வழியில் இருந்து  100% விகித சுபயோக பலாபலன்களை வாரி வழங்கும்.

கேள்வி :

சர லக்கினத்திற்கு 11ம் பாவகம் பாதக ஸ்தானமாக அமைவதால், லாப ஸ்தான வழியில் இருந்து யோகங்களை பெற முடியுமா?

பதில் :

3,5,9,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதால், நிச்சயம் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெரும் 3,5,9,11ம் பாவாக வழியில் இருந்து தங்களால் சுபயோக பலன்களை பெற இயலாது, எனவே மேற்கண்ட பாவக  பலனை ஏற்று நடத்தும் ராகு,சனி திசா புத்திகளில் எச்சரிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்வது தங்களுக்கு நன்மையை தரும்.

கேள்வி :

சனி திசை  தொழில் முன்னேற்றமும் எப்படி அமையும் ?

பதில் :

சனி திசையில் சனி புத்தி மற்றும் ராகு புத்தியை தவிர மற்ற புத்திகள் வலிமை பெற்ற  பாவக பலனை ஏற்று நடத்துவதால், தங்களின் தொழில் முன்னேற்றம் மிகவும் சிறப்பாகவே அமையும், மேலும் தாங்கள் சனி திசையில் சனி புத்தி, ராகு  புத்தியில் மட்டும் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது சகல விதங்களில் நன்மையை  தரும் .

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

சனி, 22 ஜூலை, 2017

அற்புத வாழ்வை வாரி வழங்கும் ஆடி அமாவாசை வழிபாடு !

 

இயற்கையாகவே அமாவாசை தினங்களில் மனிதனுக்கு பிரபஞ்சத்துடனான தொடர்பு மிக நெருக்கமாக அமையும், மனதில் எழும் எண்ணத்தின் வலிமைதனை அதிகரிக்கும் அதன்காரணமாக இறை அருளின் கருணையையும், பித்ரு தேவதைகளின் ஆசியையும் மிக எளிதாக பெரும் வண்ணம் ஜீவதொடர்பை ஓவ்வொருவரும் பெறுவது இயற்கையாக நடைபெறும், குறிப்பாக ஆடி,புரட்டாசி,தை அமாவாசை தினங்களில் இதன் தாக்கம் சற்று அதிக அளவில் அமையும் என்பதனால் குலதெய்வத்தை வழிபடுவதன் மூலம் சுய ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தானம் எனும் 5ம் பாவகம் மிகவும் வலிமை பெரும் அதன் நேரெதிர் பாவகமான லாப ஸ்தானமான 11ம் பாவகமும் வலிமை பெரும் இதன் மூலம் ஜாதகருக்கு பூர்வ புண்ணிய ஸ்தான வழியில் இருந்து பரிபூர்ண அறிவு திறனும், சமயோசித புத்திசாலித்தனமும் அதிகரிக்கும், லாப ஸ்தான வழியில் இருந்து தன்னம்பிக்கையும், அதிர்ஷ்டத்துடன் கூடிய வெற்றிகளை வாரி வழங்கும்.

 பித்ரு வழிபாடு செய்வதன் மூலம் சுய ஜாதகத்தில் பாக்கிய ஸ்தானம் எனும் 9ம் பாவகம் மிகவும் வலிமை பெரும் அதன் நேரெதிர் பாவகமான வீர்ய ஸ்தானம் எனும் 3ம் பாவகமும் வலிமை பெரும் இதன் மூலம் ஜாதகருக்கு பாக்கிய ஸ்தான வழியில் இருந்து நல்ல ஞானத்துடன் கூடிய நல்லோர் சேர்க்கை உண்டாகும், பித்ருக்கள் ஆசிர்வாதம் ஜாதகரின் வாழ்க்கையில் வியக்க தக்க மாற்றங்களை வாரி வழங்கும், மேலும் வீர்ய ஸ்தான வழியில் இருந்து ஜாதகருக்கு தைரியமும் தன்னம்பிக்கையுடன் கூடிய வெற்றிகளும் உண்டாகும், இதனால் சகல சௌபாக்கியமும் ஜாதகரின் வாழ்க்கையில் வந்து சேரும், மேற்கண்ட விஷயங்கள் அவரவர் சுய ஜாதக வலிமைக்கு ஏற்றார் போல் பலாபலன்களை தரக்கூடும் என்ற போதிலும் சுப பலன்கள் நிச்சயம் நடைமுறைக்கு வரும்.

மேலும் ஆடி அமாவாசை வழிபாடு என்பது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பணிரெண்டு பாவகங்களுக்கும் வலிமை சேர்க்கும் வல்லமை பெற்றது, என்பதனால் அனைவரும் முறையாக அவரவர் குல வழக்கபடி குல தெய்வ வழிபாடு, பித்ரு வழிபாடு செய்து சகல நலன்களையும் பெருக.

குறிப்பு :

 ஆடி அமாவாசை வழிபாடு செய்வதின் மூலம் நமது வாழ்க்கையில், குலம் விருத்தி அடையும், அண்டிய பிணி அகலும், நீண்ட ஆயுள் அமையும், பேரிழப்புகள் தவிர்க்கப்படும், தொழில் விருத்தி உண்டாகும், முன் ஜென்ம விணை, சாபங்கள் தீரும், பிரம்மஹஷ்தி தோஷம் நீங்கும், தீயோர் சேர்க்கை விலகும், தீய பழக்க வழக்கங்களில் இருந்து விடுதலை கிடைக்கும், தெய்வீக அனுபவமும், வருமுன் உணரும் பேராற்றலும் அதிகரிக்கும், சுய ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் ( பாவக வலிமை இன்மை ) விலகி, சுப யோகங்கள் நடைமுறைக்கு வரும், கடன் சார்ந்த  இன்னல்கள் நீங்கி பொருளாதார தன்னிறைவு உண்டாகும், புதுவித ஜீவன முன்னேற்றமும், ஏற்றமிகு எதிர்காலமும் நம் அனைவருக்கும் உண்டாகும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

புதன், 29 மார்ச், 2017

கணவன் மனைவி பிரிவுக்கு குழந்தைகள் ஜாதகம் காரணமாக அமையுமா ?



 ஒருவருக்கு நன்மையான பலன்கள் நடைபெறுவதற்கும், தீமையான பலன்கள் நடைபெறுவதற்கும் அவரவர் சுய ஜாதக வலிமையே காரணமாக அமையும், மேலும் ஒருவரின் ஜாதகம் மற்ற ஒருவருக்கு நன்மை தீமை பலாபலன்களையும் தாக்கத்தையும் தருகிறது என்றால்? அது கணவன் மனைவி ஜாதகங்களுக்கு மட்டும் சாத்தியம், ஆனால் பெற்ற குழந்தைகளின் ஜாதகம் வழியிலான இன்னல்களை பெற்றோர் அனுபவிக்கின்றனர் என்பது சற்று உண்மைக்கு புறம்பானதே, ஒருவேளை குழந்தைகள் ஜாதகத்தில் பெற்றோர் இன்னலுற நேரும் என்றால், பெற்றோரின் ஜாதகம் மிகவும் வலிமை குறைவாக இருக்கும் என்பதே உண்மை நிலை, பொதுவாக குழந்தைகளின் ஜாதகம் பெற்றோரின் வாழ்க்கையை பெரிய அளவில் பாதிக்க வாய்ப்பு இல்லை ( குழந்தைகளின் ஜாதகத்தில் பெற்றோரை குறிக்கும் பாவகங்களான 4,10ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்று இருந்தால் மட்டுமே சிரமம் தர கூடும், அதுவும் பெற்றோரின் சுய ஜாதகம் வலிமை குறைவாக இருப்பதினால் மட்டுமே இது நடைபெறும் ) எனவே குழந்தைகள் ஜாதகத்தை வைத்து பெற்றோரின் வாழ்க்கையை நிர்ணயம் செய்யாமல் பெற்றோரின் சுய ஜாதகத்தையும் கருத்தில் கொண்டு ஜாதக பலாபலன் காண்பதே சாலச்சிறந்தது, இதை ஓர் தம்பதியர் உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வோம் அன்பர்களே !

கணவர் ஜாதகம் :


லக்கினம் : கன்னி
ராசி : கன்னி
நட்ஷத்திரம் : சித்திரை 2ம் பாதம்

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை குறிக்கும் பாவகங்களான 2,5,7,8,12ம் வீடுகளில் 5ம் வீட்டை தவிர மற்ற அனைத்து வீடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது, குறிப்பாக களத்திர ஸ்தானம் எனும் 7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பது ஜாதகரின் களத்திர வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றும் வல்லமை பெற்றது, ஜாதகருக்கு அமையும் வாழ்க்கை துணையின் வழியில் அதிகமான மனஉளைச்சல் மற்றும் நிம்மதி இழப்பை ஜாதகர் வெகுவாக சந்திப்பார், ஜாதகருக்கு இரண்டு வாழ்க்கை துணை அமைந்தும் இருவரிடமும் பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றார், தனது 2வது மனைவி வழியில் புத்திர பாக்கியத்தை பெற்றது ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் உள்ள 5ம் பாவாக வலிமையை காட்டுகிறது.

2ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகரின் வாய் வார்த்தை, பேச்சு, குடும்ப வாழ்க்கை ஆகியவற்றை கடுமையாக பாதிக்கும்.

5ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தமது குழந்தைகள் வழியிலான யோக வாழ்க்கையை ஜாதகர் பெறுவார் ( உண்மையில் குழந்தைகள் இந்த ஜாதகருக்கு சுபயோகங்களை தருகின்றனர் )

8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகர் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து திடீர் இழப்புகளையும், பொருளாதார சரிவையும், தாங்க இயலாத மனப்போராட்டத்தையும் சந்திப்பர், பெரும் கவலைகள் ஜாதகரை வாட்டி எடுக்கும், போதை வஸ்துக்களுக்கு அடிமையாகும் சூழ்நிலையை தரும், மேற்கண்ட ஜாதகருக்கு இல்லற வாழ்க்கையை  குறிக்கும் பாவகங்கள் கடுமையான பாதிப்பிற்கு ஆளாகி இருப்பது ஜாதகரின் குடும்ப வாழ்க்கையை வெகுவாக சிதைக்கும்.

தற்போழுது நடைபெறும் குரு திசை பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது, ஜாதகரின் வாழ்க்கையில் கடுமையான இன்னல்களை தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து வாரி வழங்கும், குரு திசை ராகு புத்தி வலிமை அற்ற குடும்ப ஸ்தானம் மற்றும் சத்ரு ஸ்தான பலனை ஏற்று நடத்துவது, ஜாதகரின் இல்லற வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றும், தம்பதியர் தற்போழுது பிரிந்து இருக்கும் சூழ்நிலையையே தரும்.


மனைவி ஜாதகம் :


லக்கினம் : விருச்சகம்
ராசி : ரிஷபம்
நட்ஷத்திரம் : ரோகிணி 4ம் பாதம்

 ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை குறிக்கும் பாவகங்களான 2,5,7,8,12ம் வீடுகளில் 12ம் வீட்டை தவிர மற்ற வீடுகள் அனைத்தும் வலிமையாக இருப்பது வரவேற்க தக்க அம்சமாகும், தனது கணவரின் ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவகங்கள் பெரும்பாண்மையானவை ஜாதகிக்கு மிகவும்  வலிமையுடன் இருப்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், மேலும்  ஜாதகிக்கு தற்போழுது நடைபெறும் திசை மட்டுமே பாதிக்கப்பட்ட 10,12ம் பாவக  பலனை ஏற்று நடத்துகிறது, மேற்கண்ட தனது கணவரின் ஜாதகத்தில் நடைபெறும் திசையும், ஜாதகிக்கு நடைபெறும் திசையும் ஏக காலத்தில் ஜாதகருக்கு  பாதிக்கப்பட்ட களத்திர ஸ்தான பலனையும், ஜாதகிக்கு பாதிக்கப்பட்ட விரைய ஸ்தான பலனையும் ஏற்று நடத்துவதே தம்பதியரின் பிரிவுக்கு முழு முதற் காரணமாக அமைகிறது, அடுத்து வரும் சனி புத்தி ஜாதகிக்கு கடுமையாக பாதிக்கப்பட்ட பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகியின் வாழ்க்கையில் கடுமையான நெருக்கடிகளை தர கூடும் என்பது " ஜோதிடதீபத்தின் " எச்சரிக்கை.

மேலும் சனி புத்தி காலத்தில் ஜாதகி தன்னை விட வயதில் அதிகம் உள்ள  பெரியோர்கள் வார்த்தைகளை மதித்து நடப்பது சகல நலன்களையும் தரும், சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெற்ற போதிலும், நடைபெறும் திசைபுத்தி  வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் சம்பந்தப்பட்ட ஜாதகர்  பெரும் இன்னல்களுக்கு ஓர் அளவு இருக்காது என்பது மேற்கண்ட தம்பதியரின் ஜாதகம் கொண்டு தெளிவடையலாம்.

குறிப்பு :

திருமணத்திற்கு முன்பு பொருத்தம் காணும் பொழுது சுய ஜாதகத்தில் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று பாதிப்படைந்த ஓர் ஜாதகத்தை, அதை போன்றே பாதக ஸ்தானத்தால் பாதிப்படைந்த ஓர் ஜாதகத்துடன் இணைப்பது மாபெரும் தவறாகும், குறிப்பாக குடும்பம் களத்திரம் எனும் இரண்டு பாவகங்கள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பின், அதற்க்கு இணைசேர்க்கும் ஜாதகம் மிகுந்த வலிமையுடன் இருந்தால் மட்டுமே தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக அமையும் , இல்லை எனில் இல்லற வாழ்க்கை வெகுவாக கசப்பை தந்து, குறுகிய காலத்தில் பிரிவை தரும், மேலும் தம்பதியரின் சுய ஜாதகத்தில் நடைபெறும், எதிர்வரும் திசாபுத்திகள் வழங்கும் பலாபலன்களை கருத்தில் கொண்டு இல்லற வாழ்க்கையில் இணைப்பது மிக முக்கியமான விஷயமாக அமைகிறது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

செவ்வாய், 7 ஜூன், 2016

திருமண வாழ்க்கையில் தடைகளும் தாமதமும் ஏற்ப்பட காரணம் என்ன ?

 

சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் வலிமை பெரும்பொழுது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு, தமது பாவக நிலைகளில் இருந்து தமது வலிமைக்கேற்ப நன்மைகளை வாரி வழங்கும், மாறாக சில பாவகங்கள் பாதிக்கப்படும் பொழுதோ, லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் வலிமை இழக்கும் பொழுதோ ஜாதகர் பாதிக்கப்பட்ட பாவக வழியில் இருந்து இன்னல்களையும் துன்பங்களையும் அனுபவிக்கும் நிலைக்கு ஆளாக்கபடுகிறார், ஜாதகர் பாதிக்க பட்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களில் இருந்து விடுபட பரிகாரங்களையும், வழிமுறைகளையும் நாடவேண்டி உள்ளது, 40 வருடங்கள் கடந்தும் திருமண வாழ்க்கை அமையாமல், பல போராட்டங்களை சந்தித்து கொண்டு இருக்கும் ஓர் ஜாதகத்தை இந்த பதிவில் ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே! சம்பந்தப்பட்ட ஜாதகத்தின் பாவக வலிமை, ஜெனனம் முதல் நவகிரக திசா புத்திகள் ஜாதகருக்கு ஏற்று நடத்திய பலாபலன்கள் பற்றியும் சிந்திப்போம்.


லக்கினம் : ரிஷபம் 
ராசி : மேஷம் 
நட்சத்திரம் : அஷ்வினி 4ம் பாதம் 

இது ஒரு பெண்ணின் ஜாதகம், ஜாதகிக்கு தற்பொழுது அகவை 41, இதுவரை  திருமணம் செய்வதற்காக எடுத்த முயற்ச்சிகள் அனைத்தும் தோல்வியையே சந்தித்தது, இதற்க்கு முன் ஜாதகிக்கு தேடிவந்த நல்ல வரன் வாய்ப்புகளை ஜாதகியும், ஜாதகியின் பெற்றோரும் குறைகூறி தவிர்த்தனர், இவ்வளவு நெடுங்காலம் திருமண தாமதத்திற்கு காரணம் என்ன? என்பதை ஜாதக  ரீதியாக ஆய்வு செய்வோம், இந்த ஜாதகத்தில் பாவக வலிமை பற்றி சிந்திப்போம் .

வலிமை மிக்க பாவக தொடர்புகள் :

1ம் வீடு ஜாதகிக்கு தனது பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது மிக சிறப்பான அமைப்பு லக்கினம் மிகவும் வலிமை பெறுகின்றது.

10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகிக்கு ஒரு நல்ல ஸ்திரமான வேலை வாய்ப்பை வழங்கி உள்ளது.

வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

2,4,7,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு 2ம் பாவக வழியில் இருந்து குடும்ப அமைப்பில் இருந்தும், வருமானம்  மற்றும் வாக்கு அமைப்பில் இருந்தும் இன்னல்களை வழங்கும், 4ம் பாவக வழியில் இருந்து வீடு சொத்து சுகம் மற்றும் தனது தந்தை வழியில் இருந்து யோகம் அற்ற தன்மையை தரும், 7ம் பாவக வழியில் இருந்து எதிர்பால் அமைப்பினர், களத்திர வாழ்க்கையில் இன்னல்கள், கூட்டாளிகள் மூலம் துன்பங்கள், வெளிவட்டார பழக்க  வழக்கங்களில் திருப்தியற்ற சூழ்நிலையை உருவாக்கும், 8ம் பாவக வழியில் இருந்து திடீர் இழப்பு, வீண் மருத்துவ செலவுகள், பொருளாதார நெருக்கடிகள், மற்றவர்களால் இன்னல்களுக்கு ஆளாகும் தன்மை என மிகுந்த சிரமங்களை தந்த போதிலும், பூர்ண ஆயுளை தரும்.

3,6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகிக்கு 3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் முயற்சிகளில் தோல்வியையும், வீரியமற்ற தன்மையையும், சகோதர வழியில் இருந்து ஆதரவற்ற தன்மையையும், லட்சியமற்ற பொறுப்பற்ற வாழ்க்கையையும் தரும், 6ம் பாவக வழியில் இருந்து கடுமையான உடல் நல குறைவையும், வீண் செலவினங்களையும் தரும், 9ம் பாவக வழியில் இருந்து சுய அறிவுத்திறன் அற்ற நிலையையும், அறிவார்ந்த செயல்திறன் இல்லாத நிலையையும், முன்னோர்கள் ஆசியும், கடவுள் அனுகிரகம் அற்ற நிலையையும்  தரும், 12ம் பாவக வழியில் இருந்து அனைவராலும் தொல்லை, மனநிம்மதி அற்ற சூழ்நிலைகள், இல்லறவாழ்க்கை சுகமற்ற தன்மை, நல்ல உறக்கம் இன்மை, அதிக மனபோராட்டங்கள், வீண் மன பயம், பிற்போக்குத்தனமான செய்கைகள் மூலம் தமது சுய வாழ்க்கையை தாமே பாதிக்க செய்துகொள்ளும் தன்மை என மிகுந்த இன்னல்களுக்கு ஆளாக்கும்.

5,11ம் வீடுகள் சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 5ம் பாவக வழியில் இருந்து குல தெய்வ ஆசி அற்ற தன்மையும், சமயோசித புத்திசாலித்தனம் இல்லாத நிலையையும், மற்றவர்களின் உதவியை பெற இயலாத தன்மையையும் தரும், எடுக்கும் செயல்கள் யாவும் ஜாதகிக்கு முழு பலன்களை தாராமல் தடைகளையும், இன்னல்களையும் வாரி வழங்கும், யாருடைய உதவியும் இல்லாமல் ஜாதகி மட்டும் தனிமையில் போராடும் சூழ்நிலையை உருவாக்கும், பூர்வீகத்தில் குடியிருப்பது என்பது ஜாதகிக்கு அனைத்து வித தடைகளையும் வாரி வழங்கும், 11ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டமற்ற தன்மையையும், ஒவ்வொரு விஷயத்திற்கும் அதிக போராட்டங்களை சந்திக்கும் தன்மையை தரும், எதிர்பார்ப்புகள் அனைத்தும் பொய்த்து போகும், மூடநம்பிக்கையும் பிற்போக்கு தனமான எண்ணங்களும் ஜாதகியை வெகுவாக பாதித்து, செயல்பட முடியாமல் முடக்கி வைக்கும், நன்மைகள் இருந்த போதிலும் அதை நாடாமல், தீமையை நோக்கியே ஜாதகியை பயணிக்க வைக்கும் என்பது கவனிக்க தக்க அம்சமாகும்.

மேற்கண்ட ஜாதகத்தில் லக்கினம் மற்றும் ஜீவன ஸ்தானத்தை தவிர மற்ற அனைத்து பாவகங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது, குறிப்பாக 6,12ம் பாவகங்களுடன் தொடர்பு பெரும் வீடுகள் வழியில் இருந்து ஜாதகி 100% விகித இன்னல்களையும், 8ம் பாவகத்துடன் தொடர்பு பெரும் வீடுகள் வழியில் இருந்து ஜாதகி 50% விகித இன்னல்களையும், சந்திக்கவேண்டியுள்ளது, மேலும் 6,8,12ம் பாவக பலனை ஏற்று நடத்தும் திசாபுத்திகள் அனைத்தும், தொடர்பு பெரும் பாவக வழியில் இருந்து அதிக அளவில் இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை ஜாதகிக்கு தங்கு தடையின்றி தருகின்றது.

திருமண தாமதத்திற்கு காரணம் என்ன ?

சுய ஜாதகங்களில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகமும், களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகமும், வலிமை பெறுவது ஒரு ஜாதகருக்கு தடையில்லாத, திருமண வாழ்க்கையை அமைத்து தரும், மேற்கண்ட ஜாதகிக்கு, குடும்ப ஸ்தானம் எனும் 2ம் வீடும், களத்திர ஸ்தானம் எனும் 7ம் வீடும் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பாதிக்க பெற்று இருப்பதும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு களத்திர ஸ்தானமான துலாம் ராசி கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதும், ஜாதகியின் திருமண வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது, மேலும் திருமண பருவ வயதில் சுக்கிரன் திசை ஜாதகிக்கு விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்தியதும், அதன் பிறகு வந்த சூரியன் திசை ஜாதகிக்கு திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவக பலனை ஏற்று நடத்தியதும், ஜாதகியின் திருமண வாழ்க்கை எனும் எண்ணத்திற்கு தடைகளை வாரி வழங்கியது, அதற்க்கு பிறகு நடைபெற்ற சந்திரன் திசை ஜாதகிக்கு இலக்கின பாவக தொடர்பை பெற்று ஜாதகிக்கு நல்ல வேலையை மட்டுமே வழங்கியது, திருமண வாழ்க்கைக்கு தடையாக ஜாதகியின் பெற்றோர்கள் காரணமாக அமைந்தனர், குறிப்பாக ஜாதகியின் தாந்தையார் ( தந்தையை  குறிக்கும் 4ம் வீடு ஜாதகிக்கு திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் ) தலையீட்டின் காரணமாக ஜாதகிக்கு சந்திரன் திசையில் அமையவிருந்த நல்ல திருமண வாழ்க்கை நடைபெறாமல் பாதியில் நின்றுபோனது.

தற்பொழுது நடைபெறும் செவ்வாய் திசையும் ஜாதகிக்கு கடுமையாக பாதிக்கப்பட்ட விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்துவது வருத்தத்திற்கு உரியதாகவே கருத வேண்டியுள்ளது, மேலும் தற்பொழுது நடைபெறும் செவ்வாய் திசையில் மற்ற புத்திகளும் ஜாதகிக்கு சாதகமாக இல்லை என்பதால், திருமண வாழ்க்கையில் தொடர்ந்து தடைகளை வழங்கும் என்பதுமட்டும் தெளிவாகிறது, எனவே ஜாதகியும், ஜாதகியின் பெற்றோரும் தனது கருத்துகளை சுய பரிசீலனைகள் செய்துகொள்வது, ஜாதகிக்கு மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும்.

ஜாதகிக்கு உள்ள சிரமங்கள் மாற, ஜாதகிக்கு அமையவிருக்கும் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 2,5,7,12ம் வீடுகள் வலிமை பெற்று இருக்கும் வரன் அமைந்தால் மட்டுமே ஜாதகியின் இல்லற வாழ்க்கை இனிக்கும், இதற்க்கு  வாய்ப்பு மிகவும் குறைவு, ஜாதகியின் சுய ஜாதக வலிமை இதற்க்கு வழிகாட்ட வாய்ப்பில்லை, இறையருள் கருணை செய்யட்டும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

வியாழன், 11 பிப்ரவரி, 2016

திருமணம் நடைபெறும் கால நேரம் எப்பொழுது? திருமணம் தாமதமாக காரணம் என்ன ?


சுய ஜாதக அமைப்பின்படி ஒருவருக்கு திருமணம் நடைபெறும் கால நேரத்தை துல்லியமாக அறிவது எப்படி என்பதை இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே! பொதுவாக திருமணம் வாழ்க்கை ஒருவருக்கு அமைவதை பற்றி சுய ஜாதகத்தில் 2,7ம் பாவக வலிமை வைத்து மிக எளிதாக உணர்ந்துகொள்ள முடியும், சுய ஜாதகங்களில் குடும்பம் மற்றும் களத்திரம் எனும் இரண்டு பாவகங்களும் வலிமையாக இருப்பின், சம்பந்தபட்ட ஜாதகருக்கு இளம் வயதில்  சரியான நேரத்தில் திருமண வாழ்க்கை அமைந்துவிடும், குடும்பம் மற்றும் களத்திரம் எனும் இரண்டு பாவகங்களில் ஏதாவது ஒன்று பாதிக்க படும் பொழுது , ஜாதகருக்கு திருமண வாழ்க்கை என்பது சற்று கால தாமதமாக தேடுதல்களுக்கு பிறகு  அமையும், குடும்பம் மற்றும் களத்திரம் எனும் இரண்டு பாதிக்க படும் பொழுது ஜாதகரின் திருமணம் தடை பெற்ற திருமணமாக அமையும் அல்லது வெகுகால தாமதத்திற்கு  பிறகு அமையும்.

திருமண வாழ்க்கை அமைவதை நிர்ணயம் செய்வது சம்பந்த பட்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் உள்ள குடும்பம் மற்றும் களத்திரம் எனும் இரண்டு பாவகங்களின் வலிமையே, பொதுவாக திருமண வாழ்க்கை அமைவது ( குரு பலம் ) எனப்படும் சந்திர ராசிக்கு கோட்சார ரீதியாக குரு சிறப்பன இடங்களில் சஞ்சாரம் செய்யும் காலங்களில் என்பதில் "ஜோதிடதீபம்" மாற்று கருத்தை முன்வைக்கிறது, அதாவது குரு பலம் அற்ற நேரங்களிலும், சுய ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திரம் எனும் இரண்டு பாவகங்கள் வலிமை பெற்று, வலிமை பெற்ற குடும்பம் மற்றும் களத்திர ஸ்தான பலனை நடைபெறும் பெரும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஏற்று நடத்தினால், அந்த திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் ஜாதகருக்கு திருமண வாழ்க்கையை சிறப்பாக அமைத்து தரும் என்பதை உறுதியாக பதிவு செய்கிறது.

உதரணமாக :


ஜாதகருக்கு லக்கினம் : மகரம் 
ராசி : தனுசு 
நட்சத்திரம் : மூலம் 2ம் பாதம் 

சுய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் வீடு விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று கடுமையாக பாதிக்க பட்டு இருக்கிறது, ஆனால் 7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடனே சம்பந்தம் பெற்று மிகவும் வலிமையாக இருக்கிறது, எனவே ஜாதகருக்கு 2ம் பாவக வலிமை அற்ற தன்மையினால் திருமணம் தாமதமாகும் ( ஜாதகருக்கு வயது 32 ) 7ம்  பாவக வலிமை ஜாதகருக்கு திருமணம் தாமதமாக நடைபெற்றாலும் யோகம் மிகுந்த வாழ்க்கை துணையை பெற்று தரும்.

இனி ஜாதகருக்கு திருமணம் நடைபெறும் கால நேரம் எப்பொழுது என்பதை ஆய்வு செய்வோம் அன்பர்களே, ஜாதகருக்கு திருமணம் நடை பெரும் கால நேரத்தை துல்லியமாக உணர, சுய ஜாதகத்தில் எந்த திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் 7ம் பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்பதை ஆய்வு செய்வது  அவசியமாகிறது, ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறுவது சந்திரன் திசை எனவே சந்திரன் எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறார் என்பதை காண்போம், ஜாதகருக்கு சந்திரன் தனது திசையில் 8ம் வீடு ஆயுள் பாவக பலனை ஏற்று நடத்துவது உகந்ததல்ல, சந்திரன் திசையில் தற்பொழுது நடைபெறும் ராகு புத்தி 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு  பெற்று யோக பலனை தருவது வரவேற்க தக்கது, சந்திரன் திசை, ராகு புத்தியில் எதிர் வரும் கேது அந்தரமே ( 21/10/2016 முதல் 26/11/2016 வரை ) ஜாதகருக்கு களத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்துகிறது என்பதால், சந்திரன் திசை, எதிர்வரும் ராகு புத்தியில், கேது அந்தரத்தில் ஜாதகருக்கு திருமணம் நிச்சயம் அமையும், அந்த காலத்தில் அமையும் வாழ்க்கை துணை வழியில் இருந்து ஜாதகர் சகல யோகங்களையும் அனுபவிக்கும் நல்ல வாய்ப்பு உண்டாகும் என்பதை கவனத்தில் வைத்து ஜாதகர் சரியான முடிவுகளை எடுப்பது மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும்.

எனவே திருமண வாழ்க்கையை சிறப்பாக அமைத்து தருவது சுய ஜாதகத்தில் உள்ள  2,7ம் பாவக வலிமையும் சரியான வயதில் வலிமை பெற்ற 2,7ம் பாவக பலனை ஏற்று நடத்தும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் அன்றி வேறு எதுவும் இல்லை அன்பர்களே! அதே போன்று திருமணம் தாமதம் அல்லது தடை ஏற்ப்படுவதர்க்கும் சுய ஜாதகத்தில் 2,7ம் பாவக வலிமை அற்ற நிலையே காரணமாக அமையும், உதாரணமாக திருமணமே நடைபெறாமல் இருக்கும் அன்பர்களின் சுய ஜாதகத்தில் 2,7ம் வீடுகள் 6,8,12ம் பாவகங்களுடன் தொடர்பு பெற்றோ அல்லது பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றோ இருக்கும் என்பதை அவர்களது சுய ஜாதக ஆய்வில் அறியலாம், 

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 19 டிசம்பர், 2015

திருமணத்திற்கு பிறகு அவயோக பலன்களையும், அளவில்லா இன்னல்களை சந்திக்கும் ஜாதக நிலை !


கேள்வி :

தசவித பொருத்தங்கள் கண்டு, உறவுகள் பேசி  முடிவு செய்து, நல்ல நேரம் பார்த்து  திருமணம் செய்தும், இல்லறவாழ்க்கையில் இன்னல்களை அனுபவிக்கும் சூழ்நிலை வர காரணம் என்ன? ஆணோ பெண்ணோ தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து அளவில்லா இன்னல்களையும் துன்பங்களையும் அனுபவிக்கும் நிலை ஏன் வருகிறது?  "திருமணம் ஆயிரம் காலத்து பயிர்" என்று சொல்லும் வார்த்தையை பொய்யாக்கும் தாம்பத்திய நிலை வர காரணம் யாது? திருமணத்திற்கு பிறகு பிரிவு வரும் என்பதை  ஜோதிட கணிதம் ஜோதிடர்களுக்கு உணர்த்தவில்லை, உணர்த்தியதை ஜோதிடர்கள் சொல்லவில்லையா ? எமது ஜாதகம் மற்றும் எமது இல்லத்தரசி ஜாதகத்தில் உள்ள உண்மையான நிலை, இல்லற இன்னல்களுக்கு காரணம் அறிய விளைகிறேன் ?

பதில் :

 அன்பரே தம்பதியரான தங்களது இருவரின் ஜாதகங்களை கொண்டு, தங்களின் கேள்விக்கு விளக்கம் தர ஜோதிடதீபம் கடமை பெற்றுள்ளது, பொதுவாக திருமண பொருத்தங்களில் சுய ஜாதகத்தில் உள்ள பாவகங்களின் வலிமைக்கு முக்கியதுவம் தாராமல், 1) நட்சத்திர பொருத்தம் பத்து  2) ராகு  கேது 3) செவ்வாய் தோஷம் 4) 7ல் பாவக கிரகம் 5) 2ல் பாவக கிரகம் 6) 5ல் ராகு 7) கால சர்ப்ப தோஷம் 8) களத்திர தோஷம் 9) ஏக திசை பொருத்தம் 10) திசாசந்திப்பு 11) புத்திர தோஷம் என வகைக்கு 10 தோஷங்களை வாயில்  வந்ததை  சொல்லி, பொருத்தம் உள்ள ஜாதகங்களை பொருத்தமில்லை  எனவும், பொருத்தமற்ற ஜாதகங்களை சிறப்பான பொருத்தம் உண்டு என்று அறிவித்தும், திருமண வாழ்க்கையில் ஆண்மகனையும் பெண்  மகளையும் இணைப்பதாலே, இல்லற வாழ்க்கையில் இன்னல்களும்  துன்பங்களும் ஏற்ப்படுகிறது .

திருமண பொருத்தம் காணும் பொழுது சுய ஜாதகத்தில் உள்ள பாவகங்களின்  வலிமையை நன்கு உணர்ந்து வதுவையும், வரனையும் இணைத்தால்  அவர்களின்  வாழ்க்கை வாழையடி வாழையாக செழித்து ஓங்கும், மாறாக  மேற்கூறிய காரணங்களை முன்வைத்து இல்லற வாழ்க்கையில் வதுவையும்  வரனையும் இணைத்தால், தங்களின் கேள்வியில் உள்ள சூழ்நிலையே "தம்பதியரை"  வெகுவாக பாதித்து, திருமண வாழ்க்கையில் துன்பம் எனும்  சூழ்நிலைக்கும், பிரிவு எனும் மிகப்பெரிய இன்னலுக்கு ஆட்படுத்தும்,
தங்களின் ஜாதகங்களை இனி  ஆய்வு செய்வோம் அன்பரே!

தங்களின் ஜாதக நிலை 


லக்கினம் : துலாம் 
ராசி : ரிஷபம் 
நட்சத்திரம் : மிருகசீரீடம் 1ம் பாதம் 

தங்களது ஜாதகத்தில் பாவகங்களின் வலிமை நிலை :

1,7,11ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிகுந்த நன்மையையும் யோகத்தையும் களத்திர வழியில் இருந்து தரும்  அமைப்பாக கருதலாம்.

2,4,8,10ம் வீடுகள் உடல் உயிராகிய லக்கினத்துடன் சம்பந்தம் பெறுவது இலக்கின வழியில் இருந்து தாங்கள் அனுபவிக்கும் யோக பலன்களை உறுதி செய்யும்.

3,6,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது பாக்கியங்கள் மூலம் பெரும் யோக வாழ்க்கையை உறுதி செய்யும்.

5ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது பூர்வபுண்ணிய வழியில் இருந்தும் தங்களின் வாரிசுகள் வழியில் இருந்தும், சுய அறிவு மற்றும் சமயோசித புத்திசாலிதனத்தாலும் தாங்கள் பெரும் யோக வாழ்க்கையை உறுதி செய்யும்.

எனவே தங்களது ஜாதகத்தில் 11பாவகங்கள் மிகவும் வலிமை உடையதாக அமைகிறது.

12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மட்டும் தங்களுக்கு வீண் விரையங்களையும், அதிக மனக்கவலை மற்றும் மனபோராட்டத்திர்க்கு ஆளாக்கும்.


தங்களின் வாழ்க்கை துணையின் ( மனைவியின் ) ஜாதக நிலை 


லக்கினம் : கடகம் 
ராசி : மீனம் 
நட்சத்திரம் : உத்திரட்டாதி 4ம் பாதம் 

தங்களது மனைவியின் ஜாதகத்தில் பாவகங்களின் வலிமை நிலை :

1,3,7ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெருவது மேற்கண்ட பாவகங்கள் வழியில் இருந்து ஜாதகிக்கு வீண் மன கவலைகளையும், அதிக அளவு துன்பங்களையும் தரும், மேற்கண்ட பாவகத்தை சார்ந்த உறவுகளும் ஜாதகியால் சொல்ல இயலாத துன்பத்திற்கு ஆளாகும் சூழ்நிலையை தரும்.

2,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது,   ஜாதகியை குடும்ப வாழ்க்கையிலும், வாழ்க்கை துணை வழியில் இருந்து தாமும், தமது கணவரும் இன்னலுறும் அமைப்பை காட்டுகிறது, தனது வாழ்க்கை துணைக்கு நித்தியகண்டம் பூரண ஆயுசு என்ற சூழ்நிலை உருவாக்க கூடும்.

5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 5ம் பாவக வழியில் இருந்து குழந்தை  பாக்கியத்தில் குறைகளையும் , போதிய அறிவு  நுணுக்கமும் புத்திசாலித்தனமும் அற்றவர் என்பதை உறுதி செய்கிறது. 11ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டமற்றவர் என்பதும் தமக்கு வரும் நன்மைகளை உதறி எறிபவர் என்பதும், மூட நம்பிக்கைக்கு முக்கிய துவமும்,  பிற்போக்குத்தனமான செய்கையினால் அனைவராலும் வெறுக்கப்படும் நபராக இருப்பார் என்பதும் உறுதியாகிறது. ( பெண்களின் ஜாதகத்தில் எந்த ஒரு  பாவகமும் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவது நல்லதல்ல) தன்னைபற்றிய வீண் கற்பனைகளுடன், மிதமிஞ்சிய அசட்டு தைரியத்துடன் மற்றவர்கள் அனைவரையும் பகைத்துகொள்ளும் சூழ்நிலையை ஜாதகியே உருவாக்கிகொள்வார் என்பது கவனிக்க தக்கது.


4,9,12ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது,  கல்வியில் ஓரளவு தேர்ச்சியும், சிறிதளவு நல்ல குணத்தையும் தரும், ஜாதகி செய்யும் செயல்களால் ஜாதகியின் நற்பெயருக்கு களங்கம் விளையலாம், நல்ல மனிதர்களையும் தன்னைவிட வயதில் அதிகமுள்ள பெரியோர்களிடம் மிகவும் மரியாதையுடன் நடந்துகொள்வது நல்லது, பெரியோர்களின் அறிவுரைப்படி நடப்பதால் வாழ்க்கையில் நலம் உண்டாகும்.

6,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, தமக்கு அமையும் வாழ்க்கையை தக்கவைத்துகொள்வது நல்லது, வாழ்க்கை  துணையுடன் அனுசரித்து செல்வதே சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றம் தரும், வீண் பிடிவாதம் முரண்பட்ட செயல்கள், அறிமுகம் அற்ற நபர்களின் சகவாசம் படுகுழியில் ஜாதகியை தள்ளிவிடும், ஜீவானத்தை அதிகரித்துக்கொள்ள நல்ல வேலை அமையும் என்றபோதிலும் ஜாதகியின்  செயல்பாடுகள் அனைத்தும் மற்றவர்களால் விமர்சிக்கப்படும்.

தங்களுக்கு தற்பொழுது நடைபெறும் திசை தரும் பலன்கள் :

தங்களுக்கு தற்பொழுது நடைபெறும் குரு திசை ( 22/11/2007 முதல் 22/11/2023 வரை )  12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று  பலனை  தருகிறது, தங்களின் 12ம்  பாவகம் கால புருஷ தத்துவ  அமைப்பிற்கு களத்திர ஸ்தானமாக அமைவது, வாழ்க்கை துணை வழியில் இருந்து 100% விகித இன்னல்களை அனுபவிக்கும் சூழ்நிலையை தருகிறது,  மேலும் 12ம் வீடு சர காற்று தத்துவத்தில் அமைவதால், வாழ்க்கை துணையின் செயல்களால் தங்களின் அறிவு திறனும் வெகுவாக பாதிக்க படும், தற்பொழுது  நடைபெறும்  திசையும், சுய ஜாதகத்தில் பாதிக்க பட்ட 12ம் பாவகமும் தங்களுக்கு சிறப்பான வாழ்க்கை துணையை அமைத்து தர இயலாத சூழ்நிலைக்கு காரணமாக  அமைந்துவிட்டது.

தங்களின் வாழ்க்கை துணைக்கு நடைபெறும் திசை தரும் பலன்கள் :

தங்களின் வாழ்க்கை துணைக்கு தற்பொழுது நடைபெறும் சுக்கிரன் திசை ( 08/11/2013 முதல் 08/11/2033 வரை ) 1,3,7ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றும், 2,ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று 1,2,3,7 பாவக வழியில் இருந்து அவயோக பலன்களையும், 4,12ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும் நடத்துகிறது, மேலும் தங்களின் ஜாதக வலிமையின் காரணமாகவே தங்களது இல்லத்துஅரசி ஜீவிக்கும் சூழ்நிலையில் இருப்பது கண்கூடான உண்மை, இதை தங்களின் இல்லத்துஅரசி  உணர்ந்துகொண்டு, வாழ்வதற்கு உண்டான வாய்ப்பு  சிறிதும் இல்லை  என்பதே வருத்தத்திற்கு உரியது.

சிலரது யோக ஜாதகங்கள் கூட இதுபோன்ற பொருத்தமில்லா சேர்க்கையின் காரணமாக "குடத்தில் இட்ட விளக்குபோல" எவ்வித யோக பலன்களையும் அனுபவிக்க இயலாமல் தவிப்பது கண்கூடான உண்மை, இந்த உண்மையை தங்களின் மனைவிக்கு யார் சொல்லி புரிய வைப்பது, 
"இறை அருளுக்கே வெளிச்சம்"

ஓவொரு ஆணும்  பெண்ணும் திருமணத்திற்கு பிறகு , தனது ஜாதக வலிமை உணர்ந்து தனது வாழ்க்கையை சிறப்பாக வாழ்வதற்கு உண்டான வழிமுறைகளை தேர்ந்தேடுக்கவிட்டால், கால நேரம் காத்திருக்காமல் தனது கடமைகளை சரியாக செய்துவிட்டு சென்று விடும் என்பதை, தம்பதியர் அனைவரும் உணர்வது அவசியமாகிறது. 

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 8 அக்டோபர், 2015

திருமண பொருத்தம் : சுய ஜாதக வலிமையும், வாழ்க்கை துணையின் ஜாதக வலிமையும் !


திருமண வாழ்க்கையின் வெற்றியை நிர்ணயம் செய்வதில் முக்கிய பங்கு வகிப்பது சுய ஜாதக வலிமை நிலையே, பொதுவாக திருமண பொருத்தம் காண்பதில் நடைமுறையில் உள்ள பொருத்தம் காணும் விஷயங்களுடன் ( நட்சத்திர பொருத்தம், தோஷ நிர்ணயம், ஏக திசை பொருத்தம்) , சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு பொருத்தம் அமைத்து தருவது சம்பந்தபட்ட ஜாதகரின் திருமண வாழ்க்கையை மிகவும் சிறப்பாக அமைத்து தரும், உதாரணமாக கிழ்கண்ட ஜாதகங்களை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே!

ஜாதகிக்கு வயது 32 நடைமுறையில் உள்ளது, இதுவரை நல்ல வரன் அமையவில்லை, திருமணத்திற்காக எடுக்கும் முயற்ச்சிகள் யாவும் தோல்வியில் முடிந்தது, மேலும் ஜாதகி தான் ஒரு வரனை தேர்ந்தெடுத்ததாகவும், தேர்ந்தெடுத்த ஜாதகரை தான் திருமணம் செய்துகொண்டால் இல்லறவாழ்க்கை சிறப்பாக இருக்குமா? என்ற கேள்வியை முன் வைக்கிறார், ஜாதகின் சுய ஜாதகத்தையும், ஜாதகி தேர்ந்தெடுத்த வரனின் ஜாதகத்தையும் திருமண வாழ்க்கைக்கு உகந்ததா? இல்லறவாழ்க்கை சிறப்பாக அமையுமா? என்பதை சம்பந்தபட்ட ஜாதகங்களின் பாவக வலிமையை இனி ஆய்வு செய்வோம்.

அடிப்படையில் திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய வது வரனின் ஜாதகத்தில் ஆய்வுக்கு எடுத்துகொள்ள வேண்டிய விஷயங்கள், 1) குடும்ப ஸ்தானமனான 2ம் பாவகம், 2) புத்திர ஸ்தானமான 5ம் பாவகம், 3) களத்திர ஸ்தானமான 7ம் பாவகம், 4) ஆயுள் பாவகமான 8ம் பாவகம், 5) தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை,புத்தி வழங்கும் பலாபலன்களும், எதிர்வரும் திசை,புத்தி வழங்கும் பலாபலன்கள் ஆகியவற்றை கருத்தில் கொள்வது மிக மிக அவசியம் ( நட்சத்திர பொருத்தமோ, மற்ற தோஷங்களோ தம்பதியரை வெகுவாக பாதிப்பதில்லை, சுய ஜாதகத்தில் 12 பாவகங்கள் நல்ல வலிமையுடன்  இருப்பின் ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்றாலும் திருமணம் செய்யலாம், செவ்வாய் மற்றும் ராகுகேது, சனி தோஷங்களும் எவ்வித பாதிப்பையும் தருவதில்லை).

 ஜாதகிக்கு

லக்கினம் : கன்னி
ராசி : விருச்சிகம்
நட்சத்திரம் : அனுஷம் 4ம் பாதம்



ஜாதகருக்கு

லக்கினம் : விருச்சிகம்
ராசி : மிதுனம்
நட்சத்திரம் : திருவாதிரை 1ம் பாதம்



இருவரது சுய ஜாதக அமைப்பின் படி திருமண பொருத்தத்திற்கு அதி முக்கியமான பாவகங்கள் குடும்ப ஸ்தானமான 2ம் பாவக வலிமையையும், களத்திர ஸ்தானமான 7ம் பாவக வலிமையையும், ஆய்வு செய்வோம். 

பெண்ணின் ஜாதகத்தில் குடும்ப ஸ்தானமான 2ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம்.
ஆணின் ஜாதகத்தில் குடும்ப ஸ்தானமான 2ம் வீடு திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் 

பெண்ணின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான 7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம்.
ஆணின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான 7ம் வீடு பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம்.

தம்பதியருக்கு புத்திரசந்தான யோகத்தை வழங்கும் 5ம் பாவகம், பெண்ணின் ஜாதகத்தில் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம். ஆணின் ஜாதகத்தில் திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம்.

தம்பதியர் ஒருவர் வழியில் இருந்து ஒருவர் பெரும் யோக நிலையையும், ஆயுள் அமைப்பையும் குறிக்கும் 8ம் பாவகம், பெண்ணின் ஜாதகத்தில் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம். ஆணின் ஜாதகத்தில் திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடனே சம்பந்தம்.

பெண்ணிற்கு தற்பொழுது நடைபெறும் சுக்கிரன் திசை 2,4,8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலன்களையும், ஆணின் ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் குரு திசை 6ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடனே சம்பந்தம் பெற்று அவயோக பலனை தருவதும் இருவருக்கும் மிகுந்த இன்னல்களையே தரும்.

மேலும் ஜாதகருக்கு எதிர்வரும் சனி திசை 1,3,7,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சனி திசை முழுவதும் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது மிகுந்த இன்னல்களுக்கு ஆளாக்கும், குறிப்பாக ஜாதகர், ஜாதகர் மேற்கொள்ளும் முயற்ச்சிகளில் வரும் தோல்வி, வாழ்க்கை துணை மற்றும் நண்பர்கள் வழியில் இருந்து வரும் தாங்க இயலாத இன்னல்கள், சமுதாயத்தில் ஜாதகருக்கு ஏற்ப்படும் வீண் அவபெயர்கள் என ஜாதகருக்கு எதிர்வரும் சனி திசை மிகுந்த சோதனை காலமாகவே அமையும் என்பது கவனிக்க தக்கது.

எனவே மேற்கண்ட வது வரன் ஜாதகத்தை திருமண வாழ்க்கையில் இணைப்பது என்பது "யானை தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுகொள்வதற்கு" ஒப்பானதாக அமைந்து விடும் என்பது 100% விகித உண்மை, எனவே இருவரது ஜாதகங்களுக்கு, ஜாதக மற்றும் பாவக பொருத்தம் இல்லை என்பதை அறிவுறுத்துவதே சிறந்தது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

திங்கள், 14 செப்டம்பர், 2015

ஜாதக ஆலோசனை : சுய ஜாதக வலிமையும், நடைபெறும் திசை தரும் பலன்களும் !




ஒருவரின் சுய ஜாதகத்தில் பாவக வலிமைக்கு ஏற்ப்பவே யோக அவயோக பலன்கள் சம்பந்தபட்ட ஜாதகருக்கு வழங்குகிறது, சுய ஜாதகத்தில் ஒருவருக்கு உள்ள யோக அவயோக பலன்கள் நடைபெறும் காலம் எதுவென்று துல்லியமாக அறிந்துகொள்வதும், அதன் அடிப்படையில் தமது வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்ள திட்டமிடுவதும், குறிப்பிட்ட ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளை தரும், இதற்க்கு சுய ஜாதகத்தில் யோக அவயோக பலன்கள் நடைபெறும் காலநேரம் எதுவென்று அறிந்துகொள்வது மிக மிக அவசியமானது, நமது நண்பரின் ஜாதகத்தை இதற்காக ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : கடகம் 
ராசி : கன்னி 
நட்சத்திரம் : சித்திரை 2ம் பாதம் 

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் மிகவும் வலிமை பெற்ற பாவகங்கள் :

1,3,7,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும்,
4,10ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும்,
ஜாதகத்தில் உள்ள வலிமை பெற்ற பாவகங்கள்.

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் வலிமை அற்ற பாவகங்கள் :

2,8ம் வீடுகள் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும்,
6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும்,
ஜாதகத்தில் உள்ள வலிமை அற்ற பாவகங்கள்.

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் மிகவும் வலிமை அற்ற பாவகங்கள் :

5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது ஜாதகத்தில் மிகவும் வலிமை அற்ற கடுமையான இன்னல்களை தரும் பாவகங்கள் ஆகும்.

ஜாதக பொது பலன்கள் :

1,3,7,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது 1ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் நல்ல குணமும், சிறந்த அறிவு திறனையும் ஒருங்கே அமைய பெற்றவர், ஜாதகரின் மனம் மிகவும் பெருந்தன்மையானது, இயற்கையாக ஜாதகருக்கு நல்ல ஆரோக்கியமும், நிறைவான கல்வி அறிவும் கிடைக்க பெற்றவர், சிறந்த நிர்வாக திறமைகளை தன்னகத்தே கொண்டவர், தனது உறவுகள் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றமும், நன்மையையும் பெரும் யோகம் கொண்டவர், 3ம் பாவக வழியில் இருந்து தான் மனதில் நினைத்த லட்சியங்களை அடைய விடா முயற்சியுடன் போராடும் குணமும், இடைவிடாத உழைப்பையும் வெளிபடுத்தும் ஆற்றல் பெற்றவர், புதிய மனிதர்கள், வெளிநாட்டவர், நண்பர்கள் வழியில் இருந்து ஆதரவையும் வாய்ப்புகளையும் பெரும் யோகம் கொண்டவர், ஆராய்ச்சி மனபாண்மையும், சிறந்த புத்திசாலித்தனமும் கொண்டவர், சிறந்த திட்டமிடுதல்களுடன் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றங்களை பெரும் யோகம் பெற்றவர், சிறந்த வாதத்திறமை ஜாதகரின் வாழ்க்கையை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லும், தரகு அல்லது ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் மிகுந்த லாபத்தை பெரும் யோகம் உண்டாகும்.

7ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் வாழ்க்கை துணையுடன் சிறப்பான இல்லற வாழ்க்கையை பெரும் யோகத்தை தரும், தனது நண்பர்களுக்கு யோகத்தையும் லாபத்தையும் தரும் வல்லமை பெற்றவர், புனித திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகமும், மிகசிறந்த ஆன்மீகவாதிகளின் அருளாசியும் பெரும் யோகம் பெற்றவர், தான் செய்யும் தொழிலில் நல்ல நுண்ணறிவும், சிறந்த நிர்வாகத்தை கையாளும் வல்லமை பெற்றவர், பொதுமக்கள் மற்றும் பெரியமனிதர்களின் ஆதரவை ஒருங்கே பெரும் யோகம் கொண்டவர், சமூகத்தில் நல்ல மனிதர் என்ற அங்கீகாரத்தை மிக விரைவில் பெற்று வாழ்க்கையில் சிறந்த முன்னேற்றங்களை அடையும் யோகம் உண்டாகும், 9ம் பாவக வழியில் இருந்து சிறந்த அறிவு திறனும், நிர்வாக திறனும் ஜாதகருக்கு வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை வாரி வழங்கும், செய்த புண்ணியத்தின் பலன்களை ஜாதகர் பரிபூர்ணமாக அனுபவிக்கும் யோகம்  உண்டாகும், அனைவரிடத்திலும் நல்ல பெயர் கிடைக்கும், இடமாற்றம் மற்றும் சூழ்நிலை மாற்றத்தில் விருப்பம் கொண்டவர், சந்தர்பங்களையும் சூழ்நிலைகளையும் தனக்கு சாதகமாக மாற்றி கொள்ளும் அதிபுத்திசாலித்தனம் ஜாதகருக்கு இயற்கையாகவே அமைந்திருக்கும்.

4,10ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது, ஜாதகருக்கு 4ம் பாவக வழியில் இருந்து மிதமிஞ்சிய சுகபோக வாழ்க்கையை வாழும் யோகம் உண்டாகும், கற்பனையிலும் நினைத்திராத யோகங்களும் சுக போகங்களும் ஜாதகரை தேடி வரும், மிகப்பெரிய சொத்து சுக சேர்க்கைகள் மிக எளிதில் ஜாதகருக்கு கிடக்க பெரும், ஜாதகரின் நல்ல குணம் எங்கு சென்றாலும் வரவேற்ப்பும் சிறப்பான ஆதரவையும் பெற்று தரும், சுய உழைப்பின் மூலம் வாழ்க்கையில் சகல வசதிகளையும் அனுபவிக்கும் தன்மையையும், மிகப்பெரிய சொத்துகளை வாங்கும் யோகத்தையும் தரும், கல்வியில் வெற்றி, சொந்த ஊரில் ஜீவிக்க விருப்பமும் கொண்டவர், மண் மனை வண்டி வாகன யோகம் இயற்கையாகவே அமைய பெற்றவர், கல்வி துறையில் மிகப்பெரிய வெற்றிகளை ஜாதகருக்கு வாரி வழங்கும், 10ம் பாவக வழியில் இருந்து தனது சொத்துகளை மிக எளிதாக விருத்தி செய்தல், வண்டி வாகன தொழில்களில் எதிர்பாராத லாபம், ஆயுள் காப்பீடு மற்றும் வண்டி வாகனத்திற்கு காப்பீடு செய்யும் தொழில் மூலம் அபரிவிதமான முன்னேற்றம், நிரந்தரமான தொழில் மூலம் கை நிறைவான வருமானம் பெரும் யோகம், தனது சொத்துகள் வழியில் இருந்து மிகுந்த லாபத்தையும் அதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கும் தன்மையை தரும், மேற்கண்ட யோக பலன்கள் யாவும் ஜாதகருக்கு நடைபெற ஜாதகர் வடக்கு திசை வாயிற்படி கொண்ட வீட்டில் குடியிருந்தால் மட்டுமே சாத்தியப்படும், குடியிருக்கும் வீடு வேறு திசையில் வாயிற்படி அமைந்து இருப்பின் ஜாதகரின் வாழ்க்கை மிகுந்த போராட்டங்களையே சந்திக்கும் சூழ்நிலையை தரும்.

2,8ம் வீடுகள் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது 2ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் வருமானம் அனைத்தும் திடீர் இழப்பை சந்திக்க கூடும், குடும்பத்தில் அதிக இன்னல்களும், வாக்குவாதமும் ஜாதகரின் வருமானத்தை வெகுவாக பாதிக்கும், உயில் மூலம் லாபமும், இன்சுரன்ஸ் மூலம் திடீர் லாபமும் அதிர்ஷ்டமும் உண்டாகும், வணிக துறையில் ஜாதகருக்கு நல்ல வருமானம் கிடைக்கும், சில நேரங்களில் ஜாதகரின் பேச்சு மிகப்பெரிய இன்னல்களை வாரி வழங்கிவிடும், பண விஷயத்தில் மிகவும் கவனமாக  இருப்பது ஜாதகருக்கு மிகுந்த நன்மையை தரும், 8ம் பாவக வழியில் இருந்து நீண்ட ஆயுளையும், வாழ்க்கையில் சில எதிர்பாராத ஏமாற்றங்களையும் சந்திக்கும் சூழ்நிலையை தரும், எதிர்பாராத விபத்து, மருத்துவ செலவினங்களை தவிர்க்க இயலாது, மற்றவருக்கு பண உதவி செய்வது ஜாமீன் போடுவது போன்ற விஷயங்களை தவிர்த்துவிடுவது நல்லது, ஜாதகருக்கு செல்வத்தை முறையாக கையாளும் தன்மையை கற்று வைத்துகொள்வது மிகுந்த நன்மையை தரும்.

6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது, 6ம் பாவக வழியில் இருந்து கடன் வாங்குவது கொடுப்பது இரண்டும் ஜாதகரை வெகுவாக பாதிக்கும், தனக்கு கிழ் பணியாற்றும் வேலை ஆட்களுடன் சமாதன போக்கை கடைபிடிப்பது நல்லது, தேவையற்ற வீண் செலவுகளை தவிர்ப்பதும், மருத்துவ செலவினங்களை தவிர்ப்பதும் ஜாதகருக்கு நல்லது, 12ம் பாவக வழியில் இருந்து அதிக மன உளைச்சல்களையும், மனபோரட்டங்களையும் சந்திக்கும் சூழ்நிலையை தரும், வீண் மன கவலை ஜாதகரை தீய பழக்க வழக்கங்களுக்கு ஆர்படுத்தும் எனவே ஜாதகர் மிக எச்சரிக்கையாக இருப்பது நல்லது, எந்த ஒரு தீய பழக்கமும் இல்லாமல் இருப்பது ஜாதகரின் உடல் மற்றும் மனம் இரண்டையும் காப்பற்றும், நல்ல ஆன்மீகவாதிகளின் ஆசிர்வாதம் ஜாதகரின் வாழ்க்கையில் சுபிட்சத்தை வழங்கும்.

5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது ஜாதகத்தில் மிகவும் இன்னல்களை தரும் அமைப்பாக கருதலாம், 5ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் தனது பூர்வீகத்தை விட்டு வெளியில் சென்று ஜீவனம் தேடும் சூழ்நிலையை உருவாக்கும், குல தெய்வத்தின் நிந்தனை ஜாதகரை வெகுவாக பாதிக்கும், புத்திர பாக்கியத்தில் ( ஆண்வாரிசு ) இன்னல்களை தரும், ஜாதகரின் கல்வி மற்றும் அறிவு திறன் சரியான நேரத்தில் பலன் தாராது, சிறு முன்னேற்றத்திற்கு ஜாதகர் மிகப்பெரிய உழைப்பை தரும் சூழ்நிலையை வரக்கூடும், மன அமைதி கெடும், திட்டமிட்ட செயல்கள் சில நேரங்களில் பெரிய தோல்விகளை தரக்கூடும், சுதந்திரமாக செயலாற்ற இயலாமல் மற்றவர்களுக்கு கட்டுபட்டு இயங்கும் சூழ்நிலையை தரும், பூர்வீகத்தில் ஜீவனதிர்க்கு மிகுந்த இன்னல்களை அனுபவிக்கும் நிலை உருவாகும், தெளிவில்லாத மன நிலையுடன் ஜாதகர் பல போராட்டங்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும்.

11ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டம் ஜாதகருக்கு பயன்படாமல், ஜாதகரை சார்ந்தவர்களுக்கு பலன் தரும், ஜாதகரின் திட்டமிடுதல்களை மிக எளிதாக முடக்கி வைக்கும், எதை எடுத்தாலும் தடை, தொந்தரவு, போராட்டம் என ஜாதகரை முழு வீச்சில் எதிர்ப்புகளை வழங்கும், தன்னம்பிக்கையை இழக்கும் சூழ்நிலையும், மன நிம்மதி இழப்பையும் வெகுவாக தரும், அதிர்ஷ்டமில்லா போராட்ட வாழ்க்கையை ஜாதகருக்கு தரக்கூடும், திறமை இருந்தும் வெற்றி வாய்ப்புகள் ஜாதகருக்கு எட்டாக்கனியாகவே அமைந்துவிடும்.

மேற்கண்ட யோக அவயோக பலன்கள் ஜாதகருக்கு நடைமுறையில் வரும் கால நேரங்கள் :

ஜெனனத்தில் செவ்வாய் திசை ஜாதகருக்கு 4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று யோக பலன்களையும்,

செவ்வாய் திசைக்கு அடுத்து வந்த ராகு திசை ஜாதகருக்கு 10ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று யோக பலன்களையும்,

ராகு திசைக்கு அடுத்து தற்பொழுது நடைமுறையில் உள்ள குரு திசை ஜாதகருக்கு 3ம் வீடு பாக்கய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று யோக பலன்களையும்,

குரு திசைக்கு அடுத்து வரும் சனி திசை ஜாதகருக்கு 5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றும், 6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றும் அவயோக பலன்களையும்,

சனி திசைக்கு அடுத்து வரும் புதன் திசை ஜாதகருக்கு 5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று அவயோக பலன்களையும்,

புதன் திசைக்கு அடுத்து வரும் கேது திசை ஜாதகருக்கு 2,8ம் வீடுகள் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று அவயோக பலன்களையும்,

கேது  திசைக்கு அடுத்து வரும் சுக்கிரன்  திசை ஜாதகருக்கு 10ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று யோக பலன்களையும்,

சுக்கிரன் திசைக்கு அடுத்து வரும் சூரியன் திசை ஜாதகருக்கு 4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று யோக பலன்களையும்,

சூரியன் திசைக்கு அடுத்து வரும் சந்திரன் திசை ஜாதகருக்கு 3ம் வீடு பாக்கய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று யோக பலன்களையும், வாரி வழங்குகின்றது.

ஜாதகருக்கு சூரியன்,சந்திரன்,செவ்வாய்,ராகு,குரு,சுக்கிரன் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம் யோக பலன்களையும்,

சனி,புதன்,கேது திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம் அவயோக பலன்களையும், வாரி வழங்குவது தெளிவாகிறது.

எனவே ஜாதகர் யோக பலன்கள் நடைமுறையில் உள்ள திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில் சிறப்பான முன்னேற்றம் மற்றும் நன்மைகளையும், அவயோக பலன்கள் நடைமுறையில் உள்ள திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில் அதிக அளவில் இன்னல்களையும்,போராட்டங்களையும் சந்திக்க வேண்டி வரும் என்பதால், தனது வாழ்க்கை முன்னேற்றங்களை சிறப்பான கால நேரத்தில் திட்டமிட்டும், சிறப்பற்ற கால நேரத்தில் தவிர்த்தும் நன்மை அடையலாம்.

குறிப்பு :

மேற்கண்ட பாவக தொடர்புகள் தரும் பலன்களுடன் கோட்சார கிரக பலன்களையும் கருத்தில் கொள்வது இன்னும் சிறப்பை தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன்
9443355696