கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 6 அக்டோபர், 2018

ஜோதிட ஆலோசனை : வெளிநாட்டில் கல்வி பயில வாய்ப்பு உண்டா ? சிறப்பான வேலை அமையுமா ?


கேள்வி :

பிறந்த தேதி : 04.05.1995. 
பிறந்த நேரம் : இரவு 10.10. 
இடம் : கும்பகோணம். 

1) வெளி நாட்டில் படிக்க ஆசைப்படுகிறார். அதற்கு நேரம் காலம் நன்றாக உள்ளதா என்று ஆய்வு செய்து சொல்ல வேண்டுகிறேன். 

2) லக்னாதிபதி 12ல் இருப்பதும், 4ம்இடம், 6ம்இடம், 8ம் இடங்களைப் பார்ப்பதும், 6ஆம் அதிபதி உச்ச மாகி குரு பார்வை பெறுவதால் உள்ள பலன். 

3) செவ்வாய் 8இல் நீசபங்கமாகி குரு பார்ப்பதால் உள்ள பலன். 

4) சந்திரன் ஸப்தம கேந்திரத்தில் இருக்கும் பலன்கள். 

5) சனியின் 3ம் இட பலன்கள், பார்வை பலன்களை பார்த்து சொல்ல வேண்டுகிறேன். 

6) ராகு 11லும்,கேது 5ல்இருக்கும்(சூரியனின் சேர்ந்து) 
பலன்கள். 

7) சனியின் 2,3 இட ஆதிபத்யம் சனி திசை யில் எப்படி இருக்கும். செவ்வாய், குரு, சுக்கிரன், பாதகாதிபதியின் சாரத்தில் இருக்கும் பலன்கள். 


பதில் :

1) நடைபெறும் குரு திசை ஜாதகருக்கு 6,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சற்று கடுமையான இன்னல்களை தருவது கவலை தரும் விஷயம் என்ற போதிலும், குரு திசையில் தற்போழுது நடைமுறையில் உள்ள ராகு புத்தி ஜாதகருக்கு 2,5ம் வீடுகள் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் யோக பலன்களை தருவது வரவேற்கத்தக்கது, எனவே ஜாதகர் ராகு புத்தியில் கல்வி சார்ந்த விஷயங்களில் நல்லதொரு முன்னேற்றங்களையும், வெற்றியையும் பெறுவார் என்பதில் சந்தேகமில்லை, இருப்பினும் சுய ஜாதகத்தில் வெளியூர் அல்லது வெளிநாடு சார்ந்த முன்னேற்றங்களை குறிக்கும் 7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, வெளிநாடு சார்ந்த கல்வி அமைப்பில் வெகுவான தடைகளை தரக்கூடும் என்பதை கருத்தில் கொள்வது அவசியமாகிறது, இருப்பினும் ஜாதகருக்கு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியான துலாம் மிகவும் வலிமை பெற்று இருப்பது ( லாப ஸ்தானம் ) வரவேற்கத்தக்கது வெளிநாட்டில் கல்வி சார்ந்த வெற்றிகளை தரும் என்பதில் மாற்று கருத்து இல்லை சுய ஜாதகத்தில் 7ம் வீடு பாதிப்பது வெளிநாடு செல்வதில் அதீத தடைகளை தரக்கூடும், நடைபெறும் ராகு புத்தி மிகவும் வலிமை பெற்ற 2,5,11ம் வீடுகளின் பலாபலன்களை ஏற்று நடத்துவது வரவேற்கத்தக்கது, இது ஜாதகருக்கு கல்வி சார்ந்த விஷயங்களில் அபரிவிதமான நன்மைகளை வாரி வழங்கும், ஜாதகர் பூர்வீகத்தில் ( தமிழகத்தில் ) கல்விக்கான முயற்சிகளை மேற்கொள்வது சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், மேலும் ஜாதகர் தனது உடல் நலம், நிதி மேலாண்மை, நண்பர்கள் கூட்டாளிகள்  அமைப்பில் இருந்து வரும் இன்னல்களை மிக நுணுக்கமாக கையாண்டு நலம் பெறுவது அவசியமாகிறது.

2) லக்கினாதிபதி 12ல் இருப்பது ஜாதகருக்கு சற்று இன்னல்களை தரும் என்ற போதிலும், லக்கினம் எனும் முதல் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது வரவேற்கத்தக்கது, ஜாதகருக்கு சுய ஒழுக்கம், பெரியோர் ஆதரவு, பித்ருக்கள் ஆசி என்ற விதத்தில் யோகத்தை தரும், கல்வியில் வெற்றியும், அறிவு திறன் மூலம் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் பெறுவதற்கான சந்தர்ப்பங்களை அதிகரிக்கும், ஆன்மீகத்தில் நல்ல முன்னேற்றத்தை தருவதுடன் பட்டய படிப்பில் மிகப்பெரிய வெற்றியும், முதல் நிலையையும் தரும். குருவின் பார்வைகள் சுய ஜாதகத்திற்கு வலிமை சேர்க்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது இருப்பினும் 4ம் வீடு சற்று வலிமை பெற்று இருப்பது வரவேற்கத்தக்கது, 6,8ம் வீடுகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, சுக்கிரன் குரு பார்வை பெறுவதும் சிறப்பானததல்ல.

3) செவ்வாய் குரு பார்வை பெறுவது ஜாதகருக்கு நீண்ட ஆயுளை தரும் என்பதுடன், உடல் வலிமையை அதிகரிக்கும், இருப்பினும் சுய ஜாதகத்தில் 8ம் வீடு பாதிக்கப்படுவது ஜாதகருக்கு ரண சிகிச்சையை தரக்கூடும், வாழ்க்கை துணை வழியில், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியில் எதிர்பாராத இழப்புகளையும் துன்பங்களையும் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும்.

4) சந்திரன் இங்கு நிற்பது கடுமையான இன்னல்களை தரக்கூடும் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து, மேலும் நண்பர்கள் கூட்டாளிகள் மூலம் தாங்க இயலாத  மனத்துயரத்தை தருவதை தவிர்க்க இயலாது, லக்கினத்தை பார்வை செய்வது ஜாதகருக்கு சற்று நன்மையை தரும் என்பதுடன், வரும் இன்னல்களில் இருந்து விடுபட சரியான முன்யோசனைகளை வழங்கும்.

5) சனி தான் அமர்ந்த நிலையில் நன்மையையும், 6ம் பார்வை அமைப்பில் யோகத்தையும், 7ம் பார்வை அமைப்பில் இன்னல்களையும், 10ம் பார்வை அமைப்பில் துன்பத்தையும் தரக்கூடும் என்ற போதிலும், பொதுவாக சனி பகவான் ஜாதகருக்கு எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளை வழங்குகின்றார் என்பது கவனிக்கத்தக்கது, நல்லோர் சேர்க்கை ஜாதகரின் வாழ்க்கையில் சிறப்பு மிக்க முன்னேற்றத்தை வாரி வழங்கும்.

6) உண்மையி ஜாதகருக்கு 4ல் ( பாவக கணித முறைப்படி ) மேஷத்தில் அமர்ந்து சிறப்பான நன்மைகளை தருவது கவனிக்கத்தக்கது, சுய கட்டுப்பாடு, ஒழுக்கம், நல்ல குணம், வண்டி வாகன யோகம், வடக்கு திசை வாயிற்படி உள்ள வீடுகளில் குடியிருப்பதால் வரும் யோக வாழ்க்கை என்ற வகையில் நன்மைகளையே தருகின்றது, 10ல் அமர்ந்த ராகு ஜாதகருக்கு ஜீவனம் சார்ந்த இன்னல்களையும் மற்றவர்களால் வரும் வீண் அவப்பெயரையும் தவிர்க்க இயலாமல் வழங்குவது வருத்தத்த்திற்கு உரியது, ஜாதகர் எந்த காரணத்தை கொண்டும் சுய மரியாதை இழக்கும் விதத்திலான செயல்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது, நல்ல தொழில் விருத்தி ராகு பகவானால் உண்டாகும்.

7) சனி திசை ஜாதகருக்கு 2,5ம் வீடுகள் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவக தொடர்பை பெற்று சுபயோகங்களையும், 4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவக தொடர்பை பெற்று வீடு வண்டி வாகன யோகம் என்ற வகையில் நன்மைகளையும் ஒருசேர வழங்குவது வரவேற்க தக்கது, தற்போழுது நடைபெறும் குரு திசை பாதக ஸ்தான பலனை தருவது மட்டுமே ஜாதகருக்கான நெருக்கடிகளை அதிர்க்காரிக்கும், எதிர்வரும் சனி திசை ஜாதகருக்கு 2,4,5ம் வீடுகள் வழியில் இருந்து சுபயோக சுக வாழ்க்கையை தருவது வரவேற்க தக்கது, வாழ்த்துக்கள்.

செவ்வாய், குரு பகவானின் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள்  ஜாதகருக்கு கடுமையான இன்னல்களையும், சுக்கிரனின் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் நன்மையையும் தரும். எதிர்வரும் சனி திசை ஜாதகருக்கு 2,4,5ம் வீடுகள் வழியில் இருந்து சுபயோக சுக வாழ்க்கையை வாரி வழங்க காத்து இருப்பது வரவேற்க தக்கது, ஜாதகருக்கு நல்லதொரு வாழ்க்கை துணை, நல்ல நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் சேர்க்கை இல்லை எனில் வாழ்க்கை மிகவும் துன்ப நிலைக்கு எடுத்துச்செல்லும் என்பதை கவனத்தில் கொள்க, நல்ல நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் சேர்க்கை அவசியம் என்பதை வலியுறுத்தவும், வாழ்த்துக்கள்.

பரிகாரம் :

1) தினமும் சூரிய நமஸ்காரம் மேற்கொள்வது சிறப்பான எதிர்காலத்தை தரும்.
2) திருவக்கரை வக்கிர காளி அம்மன் கோவிலுக்கு சென்று முறையாக குரு பகவானுக்கு வக்கிரகநிவர்தி செய்து நலம் பெறுவது அவசியமாகிறது.
3) சனி பிரீதி வழிபாடு ஜாதகருக்கான இன்னல்களில் இருந்து நலம் தரும், பாதக ஸ்தான இன்னல்களை வெகுவாக குறைக்கும்.
4) வருடம் ஒரு முறை பழனி சென்று வழிபடுவது சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும்.
5) குல தெய்வ வழிபாடு எதிர்வரும் புரட்டாசி அமாவாசை அன்று செய்து நலம் பெறவும், அண்ணதானம் செய்து வழிபடுவது சகல நன்மைகளையும் தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வியாழன், 19 ஜூலை, 2018

சுய ஜாதக ஆலோசணை : ராகு திசை மற்றும் ராகு புத்தியால் என்ன நடக்கும் ?



கேள்வி :

 பிறந்த தேதி : ( 12/07/2017 )  நேரம் இரவு : (11.10) இடம் : சென்னை

எனது மகனின் பெயர்  கோகுல், ராகு  திசை ராகு புத்தி பிறந்துள்ளான், தற்போழுது உடல் வலிமை இல்லாமல் இருக்கின்றான், இதற்கான காரணம் என்ன ? ராகு திசை மற்றும் ராகு புத்தியால்  என்ன நடக்கும் ? எனது மனம் மிகுந்த  குழப்பத்தில் உள்ளது, சரியான பதில் மற்றும் தீர்வை தர இயலுமா ?

பணிவுடன்
வேல்முருகன்
சென்னை



பதில் :

 பொதுவாக நாம் நமது சுய ஜாதக வலிமையை பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பது நமது ஜாதகத்தில் உள்ள சுபயோகங்களை சுவீகரிக்கவும், அவயோகங்களை தவிர்க்கவும் நமக்கு நல்லதோர் வழிகாட்டுதல்களை வாரி வழங்கும், தாங்கள் வினவியிருக்கும் தங்களது மகனின் ஜாதகத்திற்க்கான பதில்களை இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பரே! சுய ஜாதகத்தில் லக்கினம் எனும் முதல் பாவகம் வலிமை பெற்று இருப்பது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு வளரும் சூழ்நிலையில் சிறப்பு, உடல் ஆரோக்கியம், மனநலம், தெய்வீக அனுக்கிரகம், தன்னம்பிக்கை மிக்க மனநிலை, நோய் எதிர்ப்பு சக்தி, புகழ், வெற்றி, எதிர்ப்புகள் அனைத்தையும் சமாளிக்கு வல்லமை, தெளிவான சிந்தனை, நீண்ட ஆயுள், சுய ஜாதகத்தில் உள்ள யோகங்களை சுவீகரிக்கும் வல்லமை என்ற வகையில் நன்மைகளை தரும் என்பது கவனிக்கத்தக்கது.

 ஆனால் தங்களது மகனின் ஜாதகத்தில் 1,2,7,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது லக்கினம் சற்று வலிமை இழந்து காணப்படுகிறது, மேலும் குடும்ப ஸ்தானமான 2ம் வீடு, களத்திர ஸ்தானமான 7ம் வீடு, அயன சயன ஸ்தானமான 12ம் வீடுகள் அனைத்தும் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கான நெருக்கடிகளை அதிக அளவில் தரும் என்பது கவனிக்கத்தக்கது, தங்களுக்கு உண்டான நல்ல செய்தி என்னவென்றால் ஜாதகருக்கு விரைய ஸ்தானமான 12ம் பாவகம் கும்ப ராசியில் 22பாகைகளையும்,  மீன ராசியில் 13பாகைகளையும் கொண்டிருப்பது ஆறுதல் அளிக்கும் விஷயமாகும், காற்று தத்துவம் மற்றும் நீர் தத்துவ ராசிகள் விரைய ஸ்தான அமைப்பில் வியாபித்து நிற்பது உடல் தொந்தரவை தந்த போதிலும் அதில் இருந்து ஜாதகருக்கு நிவாரணத்தையும் தரும் என்பதுடன், பாதிப்பு கடுமையாக இருக்காது, எனேவ ஜாதகருக்கு ஏற்படும் உடல் நல குறைவிற்க்கான காரணத்தை அறிந்து மருத்துவம் மூலம் குணம் அடைய செய்யுங்கள்.

ராகு திசை, ராகு புத்தி

ஜாதகன் ராகு திசை ராகு புத்தியில் ஜெனனித்து இருந்தாலும், ராகு தனது திசையிலும் , புத்தியிலும் 2ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவக பலனை மட்டும் ஏற்று நடத்துவது  வீண் விரையத்தை பொருளாதர ரீதியாக வாரி வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை, தங்களது வருமானம் மருத்துவ செலவுகள் என்ற வகையில் விரையமாகலாம், எதிர்பாராத வீண் செலவுகளை தரலாம் எனவே ராகுதிசை, ராகு புத்தி தங்களது பொருளாதர முன்னேற்றத்தை சற்று கடுமையாக பாதிக்கும் என்பதுடன் , வீண் மனக்கவலை, மனப்போராட்டம் என்ற வகையில் இன்னல்களை  தரக்கூடும்.

மேலும் தங்களது மகனின் சுய ஜாதகரீதியாக பலாபலன்களை மின் அஞ்சல் அல்லது அலைபேசி மூலம் அறிந்து நலம் பெறுங்கள் " வாழ்த்துகள் "

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696


திங்கள், 2 ஜூலை, 2018

தொழிலில் இடமாற்றம் உண்டா ? திருமணம் தாமதமாக காரணம் என்ன ? உயர்கல்வி பயில முயற்சி மேற்கொள்ளலாமா ?



அய்யா,

 தற்பொழுது செய்துவரும் பணியில் இடமாற்றம் உண்டா ? ஊதிய உயர்வு கிடைக்குமா? ஆய்வு கல்விக்கான முயற்சிகளை மேற்கொள்ளலாமா, அதற்க்கு உகந்த நேரமாக நிகழ்காலத்தை கருதலாமா? திருமண வாழ்க்கை எப்படி அமையும் ? மனதிற்க்கு இசைந்த இல்லற வாழ்க்கை துணை அமையுமா ? திருமணம் தாமதமாக காரணம் என்ன ? தெளிவான விளக்கம் தர வேண்டுகின்றேன்.


பதில் :

லக்கினம் : மேஷம் 
ராசி : மகரம் 
நட்ஷத்திரம் : திருவோணம் 1ம் பாதம் 

 நடைபெறும் குரு திசை தங்களுக்கு 3ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவது வரவேற்கத்தக்கது, குறிப்பாக திடீர் அதிர்ஷ்டம், தொழில் மற்றும் பணியில் ஊதிய உயர்வுடன் கூடிய பணி இடமாற்றம் உண்டாகும், தீர்க்க ஆயுள் உண்டு, திருமணத்திற்கு பிறகான அதிர்ஷ்டத்தை தரும் என்பதால், திருமண முயற்சிகள் கைகூடும், தொட்டது அனைத்தும் துலங்கும், அதிர்ஷ்டத்தின் தாக்கம் திடீரென அதிகரிக்கும், எதிர்கால வாழ்க்கைக்கான நம்பிக்கை உண்டாகும்.

தற்போழுது நடைபெறும் குரு திசையில் சனி புத்தி தங்களுக்கு 1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம்  பெற்று யோக பலனை தருவது வரவேற்கத்தக்கது, இது தங்களுக்கு லக்கினம் மற்றும் களத்திர ஸ்தான வழியில் இருந்து சிறப்புகளை வாரி வழங்கும், கல்விக்கான முயற்சிகள் நல்ல வெற்றியை தரும், உடல் நலம் மனஆரோக்கியம் அதிகரிக்கும், தெளிவான சிந்தனை மற்றும் செயல்பாடுகள் தங்களின் வாழ்க்கையில் புதியதொரு உத்வேகத்தை தரும், சனி புத்தி 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவக தொடர்பை பெற்று யோக பலனை தருவது சகல சுக போகங்களையும் அனுபவிக்கும் தன்மையை தரும், வண்டி வாகன யோகம், புதிய தொழில் வாய்ப்புகள், திடீர் முன்னேற்றம், எதிர்பாராத கவுரவ பதவிகள், சிறந்த நிர்வாக திறனை போற்றும் விதமாக வரும் ஊதிய உயர்வு, புதிய தொழில் வாய்ப்புகள், புதிய மனிதர்கள் வழியில் இருந்து வரும் நம்பிக்கைகள் என்ற வகையில் சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும்.

குரு திசை ஜாதகத்தில் தங்களுக்கு வீரிய ஸ்தான பலனை பரிபூர்ணமாக வழங்குவதுடன், குரு திசை சனி புத்தி தங்களுக்கு 1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடனும், 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடனும் சம்பந்தம் பெற்றும் யோக பலனை தருவது தங்களது வாழ்க்கையில் ஸ்திரத்தன்மையிலான  முன்னேற்றங்கள் வெகுவாக வந்துசேரும், தெய்வீக அனுக்கிரகத்தால் எதிர்ப்புகள் அனைத்தும் விலகி வெற்றிநடை போடும் சுபயோக நேரமிது, வாழ்த்துகள்.

திருமண வாழ்க்கை  சுய ஜாதகத்தில் சனி புத்தியில்  1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதால், மேற்கு திசையில் இருந்து வரும் வாழ்க்கை துணை தங்களுக்கு சிறந்த கணவராக அமைவார், மேலும் தங்களுடனான பாசம் அன்பு மாறாத இனிமையான இல்லற வாழ்க்கையை தருவார், குறைந்தது தங்களின் வாழ்க்கை துணை 100 கிமி தூரத்திற்கு அப்பால் இருந்து வருவதுடன், அவரது வீடு மேற்கு திசை வாயிற்படி கொண்டதாக அமைந்திருக்கும், களத்திர ஸ்தான அதிபதி சனி என்பதால் அடிமை தொழில் புரிபவராகவும், நிலையான வருமானத்தை கொண்டவராகவும் திகழ்வார், தனது அறிவுத்திறன் கொண்டு ஜீவன மேன்மையை பெரும் யோகத்தை ஜாதகர் பெற்று இருப்பார்.

திருமணம் தாமதமாக சுய ஜாதகத்தில் 2,5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் பாதக ஸ்தான பலனை தங்களுக்கு 2ம் வீடு வழியில் இருந்து தருவாதாலேயே திருமண வாழ்க்கை வெகு தாமதமாகிறது, கடந்த ராகு திசையும் தங்களுக்கு 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடனும் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் ஜீவன மேன்மையை மட்டுமே வாரி வழங்கிவிட்டது என்பது கவனிக்கத்தக்கது, தற்போழுது நடைபெறும் குரு திசையில் சனி புத்தி 1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 7ம் பாவக நன்மைகளை தருவதால் தங்களுக்கு திருமண வாழ்க்கை கைகூடி வரும் வாழ்த்துக்கள்.

தற்போழுது நடைபெறும் குரு திசையும், எதிர்வரும் சனி திசையும் தங்களுக்கு சிறப்பான நன்மைகளை தருவது வரவேற்கத்தக்கது, குறிப்பாக குரு திசை தங்களுக்கு 3ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவதும், எதிர்வரும் சனி திசை 1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடனும் சம்பந்தம் பெற்றும் சுபயோக பலாபலன்களை தருவது வரவேற்கத்தக்கது, எனவே தங்களது வாழ்க்கையில் சிறப்பான எதிர்கால நன்மைகள் நடைபெற உள்ளதால், அது சார்ந்த முன்னேற்ப்பாடுகளை செய்து சகல சௌபாக்கியங்களையும் பெறுக.

தொழில்,திருமணம்,கல்வி,குழந்தை பாக்கியம், அதீத பொருளாதர வளர்ச்சி என்ற வகையில் எதிர்வரும் காலங்களில் தங்களின் வாழ்க்கை புது பாதையில் பயணிக்க இருப்பது கவனிக்கத்தக்கது, எனவே சரியான வாழ்க்கை துணையை மட்டும் உடனடியாக தேர்வு செய்து நலம் பெறுங்கள்.

குறிப்பு :

சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்பை ஏற்று நடத்தும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் யாவும் சிறப்பான சுபயோக  பலாபலன்களையே தரும் என்பதால், நடைபெறும் திசாபுத்தி, எதிர்வரும் திசாபுத்தி தங்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி  மிக துல்லியமாக அறிந்துவைத்திருப்பது மிக மிக அவசியமாகிறது என்பதை கருத்தில் கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

ஜாதகருக்கு சுப யோகங்களையும், சிறந்த வாழ்க்கை பாதையினையும் அமைத்து தரும் கோண பாவகங்கள் !


" தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் 
தோன்றலின் தோன்றாமை நன்று "

என்ற வள்ளுவரின் வாக்கிற்க்கு இணங்க புகழ் மிக்க வாழ்க்கையை வாரி வழங்கும் வல்லமை கொண்டவை கோண பாவகங்கள் எனும் 1,5,9ம் பாவகங்கள் என்றால் அது மிகையில்லை, ஓர் ஜாதகருக்கு வாழ்க்கை இறைவன் விதித்த தர்மத்தின் படி நடைபெறுகிறது என்றால், சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் கோண பாவகங்கள் மிகவும் வலிமை பெற்று இருக்கின்றது என்பதே சத்தியம், இதை எவராலும் மறுக்க இயலாது, இது ஜாதகர் முற்பிறவியில் செய்த புண்ணியத்தின் தாக்கத்தையும், ஜாதகரின் பெற்றோர் மற்றும் முன்னோர் செய்த பாக்கியத்தின் தாக்கத்தையும் ஒன்றிணைத்து தரும் சுபயோக பலாபலனாகும், ஜாதகரும் ஜாதகரின் முன்னோர்களும் தர்மத்தின் வழியில் நடந்து பெற்ற "தவபலன்" என்றே சொல்லலாம் அனபர்களே.

 கோண பாவகங்கள் வலிமை பெற்ற ஜாதகரின் வாழ்க்கையில் வரும் துன்பங்கள் யாவும் தொலைந்து ஓடும், தர்ம தேவதைகளின் அருட்காப்பில் ஜாதகருக்கு சுப யோகங்கள் நடைமுறைக்கு வரும் குறிப்பாக ஜாதகருக்கு நல்ல உடல் மற்றும் மன நலம் சிறப்பாக அமையும், தெய்வீக ஆசிர்வாதம் மூலம் நல்ல கல்வி ஞானம் உண்டாகும், நல்லோர் சேர்க்கையின் மூலம் வாழ்க்கையில் வெற்றி பாதையை சிறப்பாக அமைத்துகொள்ளும் யோகம் உண்டாகும், தீயவைகள் யாவும் விலகி நன்மைகள் யாவும் நடைமுறைக்கு வரும், ஆத்ம ஞானமும், நல்லறிவும் ஜாதகரின் வாழ்க்கையை சிறப்பிக்கும், ஜாதகரின் நல்ல எண்ணங்கள் யாவும் வாழ்க்கையாக விரிவடையும், லட்சியங்கள் கைகூடி வரும், தனக்கு வரும் சவால்களை ஜாதகரே தனது சுய அறிவு திறன் கொண்டு வெற்றி வாகை சூடுவார், எவர் உதவியும் இன்றி வாழ்க்கையை சிறப்பாக எதிர்கொள்வார் என்பதுடன் தர்மத்தை போற்றி காக்கும் ஒழுக்கசீலராகவும் திகழ்வார் மேலும் தர்ம தேவதை ஜாதகரை எந்த சூழ்நிலையிலும் கைவிடாது என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே!


லக்கினம் : கடகம் 
ராசி : ரிஷபம் 
நட்சத்திரம் : கிருத்திகை 2ம் பாதம் 

மேற்கண்ட ஜாதகருக்கு லக்கினம் எனும்  முதல் ( கோணம், கேந்திரம் எனும் சம வீடு ) வீடு  கடக ராசியில் 118.55.30  பாகையில் ஆரம்பித்து சிம்ம ராசியில் 148.16.46 பாகையில் முடிவடைகிறது எனவே ஜாதகருக்கு லக்கினம் கடகம் என்ற போதிலும் கடக ராசியில் 01.05.30 பாகை மட்டும் கொண்டுள்ளது சிம்மத்தில் 28.16.46 பாகையை பெற்றுள்ளது என்பதால் ஜாதகரின் குணாதிசயம்  கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் ராசியான ( பூர்வ புண்ணிய ஸ்தானம் )  சிம்மத்தின் தத்துவ ஆளுமையின் கீழ் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை, ஜாதகர் சர லக்கினத்தை பெற்ற போதிலும், ஸ்திர நெருப்பு ராசியின் தன்மையையே முழு அளவில் பெற்று இருப்பர் என்பதை முதலில் பதிவு செய்ய விரும்புகிறோம், மேலும் ஜாதகரின் முதல் வீடான லக்கினம் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை பெற்று இருப்பதும், ஜாதகரின் 9ம் வீடு மீன ராசியில் 359.41.25 பாகையில் ஆரம்பித்து ரிஷப ராசியில் 30.54.50 பாகையில் முடிவடைகிறது, எனவே ஜாதகரின் பாக்கிய ஸ்தானம் என்பது மீன ராசியில் இறுதி பாகையில் ஆரம்பித்து, ரிஷப ராசி முதல் பாகையில் முடிவடைகிறது, பெரும்பாலும் ஜாதகரின் பாக்கிய ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் வீடான மேஷ ராசியின் தன்மையை முழு அளவில் பெற்று இருப்பது கண்கூடான உண்மை, எனவே லாக்கினம் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் 9ம் பாவகம் சர நெருப்பு தத்துவ ராசியான மேஷமாகவும், மேலும் மேஷ ராசியின்  குணமான, சத்தியத்தை மதித்தல், நேர்மை, உண்மை மாறாத குணம், சுய கட்டுப்பாடு, தெளிவான முடிவுகளை மேற்கொள்ளும் வல்லமை, சிறந்த ஆளுமை திறன், செய்யும் பணியில் நேர்த்தி, சிறந்த அறிவு திறன், மிதம்மிஞ்சிய தொழில்நுட்ப அறிவு, லட்ச்சியத்தை பூர்ணமாக அடையும் யோகம், என்ற வழியிலும் ஜாதகர் பாக்கிய ஸ்தான பலனை லக்கின வழியில் இருந்து அனுபவிப்பார் என்பது மிக துல்லியமான ஜாதக பலாபலன்கள், எனவே ஜாதகரின் முதல் கோண வீடான லக்கினம் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு லக்கின பாவக வழியிலான சுபயோகங்களை நல்கும்.

இரண்டாம் கோண வீடான 5ம் வீடு ஜாதகருக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் இரண்டாம் கோண பாவகமான 5ம் பாவகத்தை மிக வலிமை பெற செய்துவிடுகிறது, மேலும் ஜாதகரின் 5ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 9ம் வீடான தனுசு ராசியில் ( 240.39.12 பாகையில் ஆரம்பித்து 269.35.31 பாகையில் முடிவடைகிறது ) 29 பாகையை கொண்டு  வியாபித்து நிற்பது ஜாதகரின் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வலிமை சேர்க்கும் அமைப்பாகும், இதனால் ஜாதகரின் கல்வி அறிவு மிதம்மிஞ்சி நிற்கும், அனுபவ அறிவு ஜாதகரின் இன்னல்களுக்கு நல்ல தீர்வுகளை தரும், அதிபுத்திசாலித்தனமும், சமயோசித அறிவாற்றலும் ஜாதகருக்கு வரும் இன்னல்களை தடுத்து நிறுத்தும் கேடயமாக விளங்கும், எந்த சூழ்நிலையிலும் தன்னிலை மறவாத மன நிலையை ஜாதகர் பெற்று இருப்பர், மேலும் ஜாதகரின் அறிவு எவர் போற்றுதலுக்கும் மயங்காது, பதவி வரும் பொழுது பணிவும் வரவேண்டும், நல்ல துணிவும் வரவேண்டும் என்ற கவிஞரின் வாக்கிற்க்கு பொருத்தமான செயல்பாடுகளை ஜாதகருக்கு பூர்வபுண்ணிய ஸ்தானம் வழங்கும், மேலும் ஜாதகரின் நுண்ணறிவு என்பது..

" எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருண்
மெய்ப்பொருள் காண் பதறிவு "

என்பதற்கு இணங்க மெய்பொருள் காணும் அறிவை ஜாதகர் பெற்று இருப்பார் என்பது  கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

மேலும் ஜாதகருக்கு பிறக்கும் குழந்தைகள் நல்ல யோகமுடன் திகழும் என்பதுடன் "கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு " என புகழ் பெற்று கீர்த்தியுடன் வாழும் யோகத்தை தரும், தெய்வீக நம்பிக்கை ஜாதகருக்கு அதிக அளவில் அமைந்திருக்கும் என்பதுடன், குல தேவதையின் ஆசிர்வாதத்துடன் ஜாதகர் சுப யோகங்களையும் பெறுவார் என்பது ஜாதகரின் சிறப்பு அமசமாகும்.

மூன்றாம் கோண வீடான 9ம் வீடு ஜாதகருக்கு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் மூன்றம் கோண பாவகமான 9ம் பாவகத்தை மிக வலிமை பெற செய்துவிடுகிறது, 9ம் பாவகத்தை பற்றி விரிவாக லக்கினத்துடன் தொடர்பு பெரும் பாக்கிய ஸ்தானம் என்ற பத்திகளில் விரிவாக பார்த்து விட்டதால், இனி பாக்கிய ஸ்தான வழியில் இருந்து ஜாதகர் பெரும் நன்மைகளை பற்றி மட்டும் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம், ஜாதகருக்கு பாக்கிய ஸ்தானம் வலிமை பெறுவது ஆராய்ச்சி கல்வியில் நல்ல வெற்றிகளை தரும், ஆன்மீக பெரியோரின் சந்திப்பின் மூலம் தனது வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை பெறுவார், எதிர்ப்புகளை கடந்து சிகரம் தொடும் யோகம் உண்டாகும், ஜாதகரின் அறிவு திறனின் வீச்சு பிரபஞ்ச ரகசியங்களை அறிந்துகொள்ளும் வல்லமை கொண்டதாக திகழும், நல்ல ஆன்மிகம் மற்றும் யோக மார்க்கம் ஜாதகருக்கு பிறவி பயனை அடைய செய்யும், அனைத்திற்க்கும் சரியான தீர்வு சொல்லும் ( தர்மத்தின் படி ) வல்லமை கொண்டவராக திகவார்கள், மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் கோண வீடுகளான 1,5,9ம் வீடுகள் மிக மிக வலிமையாக காணபடுவது, ஜாதகரின் சிறப்புகளை கால ஓட்டத்தில் இந்த பூஉலகம் புரிந்து செயலாற்றும், இறைஅருள் அதற்க்கான வாய்ப்புகளை நிச்சயம் வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 10 ஜனவரி, 2017

கேது திசை தரும் கெடுதல்களும், சுய ஜாதகத்தில் கேது பகவான் பெரும் வலிமையும் !


 சாயா கிரகங்களான ராகு கேது ஒருவரது சுய ஜாதகத்தில் வலிமை பெற்று அமர்வது மிதமிஞ்சிய யோக பலன்களை வாரி வழங்கும், என்பதில் மாற்று கருத்து இல்லை, மேலும் தாம் அமரும் பாவகத்தை முழுவதும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வல்லமை சாயா கிரகங்களுக்கு உண்டு, கீழ்க்கண்ட ஜாதகருக்கு எதிர்வரும் கேது திசை தரும் பலன்கள் என்ன? கேது திசையில் ஜாதகர் அனுபவிக்கும் யோக அவயோகங்கள் பற்றி இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே ! 

பொதுவாக சுய ஜாதக வலிமை என்பது சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் சகல நலன்களையும் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து தரும், சுய ஜாதகம் வலிமை அற்ற நிலையில் பாதிக்கப்பட்ட பாவக வழியில் இருந்து சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிகுந்த இன்னல்களை தரும், சுய ஜாதகத்தில் எந்த ஒரு பாவகமும், பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது சிறப்பானது அல்ல, ஏனெனில் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெரும் பாவக வழியில் இருந்து ஜாதகர் 200% விகித இன்னல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், இதனை தவிர்க்கவும் இயலாது என்பது வருந்தத்தக்க விஷயமாகும், இதை கீழ்கண்ட உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம்.


லக்கினம் : மகரம் 
ராசி : மீனம்
நட்ஷத்திரம் : உத்திரட்டாதி 3ம் பாதம் 

ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

1ம் வீடு களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சிறப்பான யோக வாழ்க்கையை ஜாதகருக்கு லக்கின பாவக வழியில் இருந்து நல்கும்.

2,6,7ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு 2ம் பாவக வழியில் இருந்து நல்ல வருமானம், சிறந்த குடும்பம், வாக்கு வன்மை, பொருளாதர ரீதியான தன்னிறைவு என்ற வகையிலும், சத்ரு ஸ்தான வழியில் இருந்து பதவியில் வெற்றி, அதிகாரிகள் அன்பு, உத்தியோக ஆர்வம், சொந்த முயற்ச்சியில் முன்னேற்றம் ஜீவன ரீதியான முன்னேற்றங்கள் என்ற வகையிலும், களத்திர ஸ்தான வழியில் இருந்து தாமத திருமணம், நல்ல வாழ்க்கை துணை, அரசியல் வெற்றிகள், வியாபாரத்தில் வெற்றி, சமூக அந்தஸ்த்து என்ற வகையில் நன்மைகளை வாரி வழங்கும்.

ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

4,8,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 12ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு கடுமையான இன்னல்களையும், 4ம் பாவக வழியில் இருந்து சுக போகங்களில் தடைகளையும், 8ம் பாவக வழியில் இருந்து திடீர் இழப்புகளையும், 10ம் பாவக வழியில் இருந்து நிலையான ஜீவனம் அற்ற தன்மையையும் வாரி வழங்கும்.

ஜாதகத்தில் கடுமையான பாதிப்பை தரும் பாவக தொடர்புகள் :

3,5,9,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 3ம் பாவக வழியில் எடுக்கும் முயற்சிகளில் தோல்விகளையும், 5ம் பாவக வழியில் இருந்து பூர்வீக ஜீவனம் அற்ற நிலையையும், சமயோசித அறிவுத்திறன் அற்ற நிலையையும், 9ம் பாவக வழியில் இருந்து யாருடைய உதவியையும் பெற இயலாத நிலை, 11ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டமற்ற தன்மையையும் தரும், ஜாதகத்திலே மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட பாவகங்கள் மேற்கண்ட 3,5,9,11 என்றால் அது மிகையில்லை, எனவே ஜாதகருக்கு 4 பாவகங்களை தவிர மற்ற அனைத்து பாவகங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது, மேலும் பாதக ஸ்தான தொடர்பை பெறுவது ஜாதகரை வெகுவாக பாதிக்கும்.

தற்போழுது நடைபெறும் புதன் திசை ( 28/02/2000 முதல் 28/02/2017 வரை ) ஜாதகருக்கு 8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று கடுமையான இன்னல்களை தந்துகொண்டு இருக்கின்றது, திடீர் இழப்புகள், மனஅழுத்தம், மன நிம்மதியின்மை, கடும் குழப்பம், மனப்போராட்டம் என புதன் திசை ஜாதகருக்கு யோகம் அற்ற நிலையினையே தருகின்றது.

எதிர் வரும் கேது திசை ( 28/02/2017 முதல் 28/02/2024 வரை ) தரும் பலன்களை ஜாதகர் எதிர்கொள்வதுதான், அவருக்கு இருக்கும் சவால், ஏனெனில் 3,5,9,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் பாதக ஸ்தான பலனை மட்டும் ஏற்று நடத்துகிறது, இதனால் ஜாதகர் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகும் சூழ்நிலையை தரும், 3ம் பாவக வழியில் இருந்து ஜாதகர்  எடுக்கும் முயற்சிகள் அனைத்த்தும் வெற்றியை தாராது, 5ம் பாவக வழியில் கற்ற கல்வியில் சுய அறிவு திறனும் பலன் தாராது, பூர்வீக ஜீவனம் அற்ற நிலையை தரும், 9ம் பாவக வழியில் இருந்து பெரியவர்களின் ஆலோசனைகளை ஏற்காமல் துன்பப்படும் நிலையை தரும், 11ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் பிற்போக்கு தனமான செயகைகளினால் தனது வாழ்விற்கு தானே துன்பத்தை தேடிக்கொள்வார், அதிர்ஷ்டம் ஜாதகருக்கு வெகு தொலைவிலேயே நின்றுகொள்ளும், கேது திசை முழுவதும் நடைபெறும் பாதக ஸ்தான பலனை ஜாதகர் எதிர்கொள்வது என்பது சற்று சிரமமான காரியமாகவே அமையும், மேலும் இந்த கேது திசை ஜாதகருக்கு இளமை  பருவத்தில் நடைபெற்று, பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது, ஜாதகரின் எதிர்கால வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும், ஆனால் சுய ஜாதகத்தில் கேது பகவான் 5ல் அமர்வதும் வலிமை பெற்று இருப்பதும் கவனிக்கத்தக்க அம்சமாகும்.

குறிப்பு :

ஜாதகரை முறையான ப்ரீதி பரிகாரங்களை மேற்கொண்டு நலம் பெற முயற்சிக்கலாம், மேலும் 3,5,9,11ம் பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை அனுபவித்து கழித்துக்கொள்வதே சாலச்சிறந்தது, சுக்கிர வழிபாடு செய்வது ஜாதகருக்கு மென்மையான யோக பலன்களை வாரி வழங்கும்.


ஞாயிறு, 20 மார்ச், 2016

பித்ரு தோஷமும், குலதெய்வ சாபமும் நடைபெறும் அனைத்து அவயோக பலன்களுக்கு காரணமாக அமையுமா ?


"எண் சாண்  உடம்புக்கு சிரசே பிரதானம்" 
என்ற பழமொழிக்கு ஏற்ப சுய ஜாதகத்தில் லக்கினமே பிரதானமாக அமைகிறது, லக்கினத்தை அடிப்படையாக கொண்டே மற்ற 11 பாவகங்களும் இயங்குகிறது என்றால், அது மிகையில்லை, ஒருவருக்கு நடைபெறும் யோக அவயோக பலன்களை வழங்குவதில் நிச்சயம் 12 பாவகங்களுக்கும் பங்குண்டு, இதில் ஜாதகருக்கு நடைபெறும் அவயோக பலன்கள் அனைத்திற்கும் பித்ரு தோஷம் மற்றும் குல தெய்வ சாபம் காரணமாக அமையும் என்பது சுய ஜாதக கணித அமைப்பிற்கு புறம்பானதாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது.

பெரும்பாலும், வேலை தொழில் முன்னேற்றம் இன்மை, திருமண தடை, குழந்தை பாக்கியம் இன்மை,  ஆரோக்கியம் இன்மை, கல்வியில் தடை, பொருளாதார முன்னேற்றம் இன்மை போன்றவற்றிற்கு, குல தெய்வ சாபத்தையும், பித்ரு சாபத்தையும் காரணம் காட்டுவதுண்டு, இதுவும் தவறான அணுகுமுறையே, ஏனெனில் சுய ஜாதகத்தில் 5,9ம் பாவகங்கள் கடுமையாக பாதிக்க பட்டு, நடைபெறும் திசா புத்தியும் பாதிக்க பட்ட 5,9ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே இன்னல்களை தரும், தமது பாவக வழியில் இருந்து, 5ம் பாவகம் பாதிக்கப்படும் பொழுது ஜாதகர் தனது பூர்வீகத்தில் ஜீவனம் செய்ய இயலாத சூழ்நிலையை உருவாக்கும், ஜாதகரின் சமயோசித புத்திசாலித்தனம் ஜாதகருக்கு பயன்படாது, ஜாதகருக்கு உதவும் அன்பர்கள் யாரும் இருக்க மாட்டார்கள், குல தெய்வ ஆசி கிடைக்காது, தமது குழந்தைகள் வழியில் இருந்து இன்னல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தாராது.

9ம் பாவகம் பாதிக்கப்படும் பொழுது, ஜாதகருக்கு சுய அறிவுத்திறன் ஜாதகருக்கு பலன் தாராது, சொல்புத்தியும் இல்லை சுய புத்தியும் இல்ல என்ற நிலையை உருவாக்கும், கற்ற கல்வி ஜாதகருக்கு பலன் தாராது, ஆன்மீக பெரியோர் மற்றும் ஜாதகரின் முன்னோர்கள் ஆசியை பெறுவது என்பது இயலாமல் போகும், ஆன்மீகத்தில் ஈடுபாடு இல்லாமல், நாத்திகத்தில் ஆர்வத்தை தரும், நல்ல ஞானம் என்பது கிட்டாமல் சூன்யமான வாழ்க்கை அமைந்துவிடும், ஜாதகருக்கு போதிக்கும் அறிவுரை அனைத்தும் வீணாக போகும், பெரியோர்களையும் முன்னோர்களையும் நிந்தனை செய்யும் போக்கு ஜாதகருக்கு அதிகரிக்கும், நல்லோர் மற்றும் பெரியோர்களின் ஆதரவை பெறுவது என்பது ஜாதகருக்கு குதிரை கொம்பாக மாறிவிடும்.

1) ஆரோக்கியம் 

ஆரோக்கிய பாதிப்பிற்கு சுய ஜாதகத்தில் 1,6,8,12ம் பாவகங்களின் வலிமை அற்ற நிலை காரணமாக அமையும், மேற்கண்ட பாவகங்கள் பாதிக்க படும்பொழுது ஜாதகரின் உடல் நலம் பாதிக்கும், அது சார்ந்த இன்னல்கள் அதிகரிக்கும், மேலும் நடைபெறும் திசா புத்திகள் பாதிக்கப்பட்ட மேற்கண்ட பாவகங்களின் பலனை ஏற்று நடத்தினால், ஜாதகருக்கு உடல் நல பாதிப்பு நிச்சயம் ஏற்ப்படும்.

2) கல்வி 

கல்வியில் தடை எற்ப்பட சுய ஜாதகத்தில் 2,5,9ம் பாவகங்களின் வலிமை அற்ற நிலை காரணமாக அமையும், மேற்கண்ட பாவகங்கள் பாதிக்க படும்பொழுது, ஜாதகருக்கு கல்வியில் தடையும், முன்னேற்றம் இன்மையும்  உண்டாகும், மேலும் நடைபெறும் திசா புத்திகள் பாதிக்கப்பட்ட மேற்கண்ட பாவகங்களின் பலனை ஏற்று நடத்தினால், ஜாதகரின் கல்வி,உயர் கல்வி முயற்ச்சிகள் தோல்வியை தரும்.

3) திருமணம் 

திருமண வாழ்க்கையில் தடைகளுக்கும் தாமதத்திற்கும் சுய ஜாதகத்தில் 2,7ம் பாவகங்களின் வலிமை அற்ற  நிலையே காரணமாக அமையும், மேற்கண்ட பாவகங்கள் பாதிக்க படும்பொழுது  ஜாதகருக்கு திருமண தடை மற்றும்  கால தாமத திருமணம் என்ற நிலையை தரும், மேலும் நடைபெறும் திசா புத்திகள் பாதிக்கப்பட்ட மேற்கண்ட பாவகங்களின் பலனை ஏற்று நடத்தினால், ஜாதகருக்கு நிச்சயம் திருமணம் சார்த்த தடைகளை தங்கு தடையின்றி வழங்கும்.

4) தொழில் 

தொழில் மற்றும் பணியில் விருத்தி இன்மைக்கு காரணமாக சுய ஜாதகத்தில் 7,10ம் பாவகங்களின் வலிமை அற்ற  நிலையே காரணமாக அமையும், மேற்கண்ட பாவகங்கள் பாதிக்க படும்பொழுது  ஜாதகருக்கு நல்ல தொழில் அல்லது வேலை அமைவது என்பது குதிரை கொம்பாக மாறிவிடும், மேலும் நடைபெறும் திசா புத்திகள் பாதிக்கப்பட்ட மேற்கண்ட பாவகங்களின் பலனை ஏற்று நடத்தினால், ஜாதகருக்கு ஜீவனம் அமையாமல் போராட்ட வாழ்க்கையை வழங்கி விடும், தனித்தோ கூட்டு முயற்சியாகவே ஜாதகர்  எவ்வித ஜீவனத்தையும் மேற்கொள்ள இயலாது.

5) குழந்தை பாக்கியம் 

நல்ல வாரிசு அல்லது குழந்தை அமையாதது என்பது தம்பதியர் இருவரின் சுய ஜாதகத்தில் 1,5,9ம் பாவக வலிமை அற்ற நிலையே காரணமாக அமையும்,  மேற்கண்ட பாவகங்கள் பாதிக்க படும்பொழுது தம்பதியருக்கு நல்ல வாரிசோ அல்லது குழந்தை பாக்கியமோ அமைவதில் தடைகளை ஏற்ப்படுத்தும், மேலும் நடைபெறும் திசா புத்திகள் பாதிக்கப்பட்ட மேற்கண்ட பாவகங்களின் பலனை தம்பதியருக்கு ஏற்று நடத்தினால், புத்திர பாக்கியம் அமைவது என்பது அரிதாகிவிடும்.

6) பொருளாதாரம் 

பொருளாதரத்தில் தடைகளும் இன்னல்களும் ஏற்ப்பட சுய ஜாதகத்தில் 1,2,4,7,10,11ம் பாவகங்களின் வலிமை அற்ற  நிலையே காரணமாக அமையும், மேற்கண்ட பாவகங்கள் பாதிக்க படும்பொழுது  ஜாதகருக்கு  இலக்கின வழியில் இருந்து பலன்களை உதறும் தன்மையும், 2ம் பாவக வழியில் இருந்து வருமானத்தை முறையாக பயன்படுத்த இயலாத  சூழ்நிலையும், 4ம் பாவக வழியில் இருந்து சுக போகம் மற்றும் வண்டி வாகனம் மற்றும் சொத்து சுகங்களை  சுவீகாரம் செய்ய இயலாத சூழ்நிலையையும், 7ம் பாவக வழியில் இருந்து வாழ்க்கை துணை,  நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் பொதுமக்கள் வழியில் இருந்து அதரவின்மையையும், எதிர்ப்புகளையும் சந்திக்கும் தன்மையை தரும், 10ம் பாவக வழியில் இருந்து நல்ல ஜீவனம் இன்மையையும், கௌரவ குறைவையும், சுய தொழில் செய்வதில் தோல்விகளையும் தரும், மேலும் நடைபெறும் திசா புத்திகள் பாதிக்கப்பட்ட மேற்கண்ட பாவகங்களின் பலனை ஏற்று நடத்தினால், ஜாதகரின் பொருளாதார தன்னிறைவு என்பது கானல் நீராக மாறிவிட வாய்ப்புண்டு.

எனவே ஆரோக்கியம்,கல்வி,திருமணம்,தொழில்,குழந்தைபாக்கியம் மற்றும் பொருளாதார தடைகளுக்கும், ஜாதகத்தில் நடைபெறும் அனைத்து அவயோக பலன்களுக்கு காரணமாக பித்ரு தோஷமும், குல தெய்வ சாபமுமே காரணம் என்று குற்றம் சாட்டுவது ஏற்புடையது அல்ல, சுய ஜாதகத்தில் 12 பாவகங்களின் வலிமைக்கு ஏற்ப்பவே பலாபலன்கள் நடைமுறைக்கு வருகின்றது என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது அன்பர்களே! மேலும் சுய ஜாதகத்தில் பாதிக்க பட்ட பாவகங்கள் எவை எவை என்பதை உணர்ந்து சம்பந்த பட்ட பாவகங்கள் வலிமை பெறுவதற்கு உண்டான தேடுதல்களை செய்வதே சகல நன்மைகளையும் தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

பூர்வ புண்ணிய ஸ்தான வலிமையும், ஜாதகரின் மதிநுட்பமும் !




வாழ்க்கையில் அறிவு சார்ந்த விஷயங்களில் புதுமையான அணுகுமுறையும், புதிய திட்டங்களை நடைமுறைபடுத்தி பல வியக்கத்தக்க வெற்றிகளை குவிக்க வைக்கும் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவக வலிமையை பற்றி இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே! "கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு" என்ற வாக்கிற்கு இணங்க சுய ஜாதகத்தில் அதி புத்திசாலிதனமான நுண் அறிவுக்கும், 64 கலைகளில் தேர்ச்சிக்கும் வழிகோலுவது பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகமே என்றால் அது மிகையில்லை, 5ம் பாவகம் வலிமை பெற்ற ஜாதகருக்கு, நடைமுறையில் உள்ள திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் வலிமை பெற்ற 5ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் ஜாதகரின் அறிவு திறனுக்கும், புதிய அணுகுமுறைக்கும் பஞ்சமே இருக்காது, மேலும் ஜாதகரின் சமயோசித புத்திசாலிதனத்தால் ஆதாயம் என்பது பன்மடங்கு கூடும் என்பது கவனிக்க தக்கது, பலவிதமான புதிய விதிகளை உலகிற்கு அறிமுகம் செய்யும் வல்லமையை தந்துவிடும்.

ஜாதகரின் புதிய கண்டுபிடிப்புகள் பூமியில் உள்ள மனிதர்களின் வாழ்க்கையில் பங்கெடுக்கும், மனித குலத்திற்கு பெருமைசேர்க்கும், அனைவருக்கும் பயன்படும் விதத்தில் இவர்களின் கண்டுபிடிப்புகள் பயனுள்ளதாக அமையும், புதிய சிந்தனை மற்றும் புதிய மாற்றங்களுக்கு உரிமை கொண்டாடும் தனித்திறமைகளை தன்னகத்தே கொண்டுள்ள அன்பர்களின் ஜாதகங்களில், 5ம் பாவக வலிமையை நாம் உணர இயலும், இயற்கையாகவே இவர்களின் சிந்தனை மற்றும் கேள்விகளுக்கு சரியான பதில்களை இந்த பிரபஞ்சம் வாரி வழங்கும், எவ்வித பிரச்சனைகள் மற்றும் இன்னல்களுக்கும் சரியான தீர்வுகளை, சரியான நேரத்தில் வழங்கும் வல்லமை கொண்டவர்கள், சிறு வயதுமுதலே அறிவுத்திறனில் சிறந்து விளங்கும் யோகம் பெற்றவர்கள், பன்முக திறமை சாஸ்திர அறிவு, சாஸ்திரத்தில் தேர்ச்சி, கற்ற கல்வியை தனது முன்னேற்றத்திற்கும் தன்னை சார்ந்தவர்களின் முன்னேற்றத்திற்கும் பயன்படுத்தும் யோகம் பெற்றவர்கள், குறிப்பாக 5ம் பாவகம் வலிமை பெற்றுள்ள அன்பர்கள் பெரும் யோகத்தை  விட, இவரை சார்ந்தவர்கள் பெரும் யோகம் மிகவும் அளப்பரியதாக அமையும் என்பது கவனிக்க தக்கது.

குல தெய்வத்தின் பரிபூர்ண ஆசிகளின் மூலம் வாழ்க்கையில் சகல நலன்களையும் பெரும் யோகத்தை தரும், வருமுன் உணரும் சில சிறப்பு சக்திகள் இயற்கையாகவே அமையபெற்று இருப்பார்கள், வாக்கு பலிதமும், உள்மனதின் எண்ண ஓட்டங்களை தெளிவாக உணரும் யோகம் பெற்றவர்கள், யோகம்,தியானம்,தவம் மூன்றிலும் தேர்ச்சி பெறுவார்கள், சிந்தனை திறனும் செயல்திறனும் ஒருங்கே அமையபெற்றவர்கள், ஆராய்ச்சிகளில் வெற்றியும் புகழும் உண்டாகும், கலைத்துறையில் சிறந்து விளங்கும் யோகம் உண்டு, இயல், இசை, நாடக துறைகளில் அபரிவிதமான தேர்ச்சியை தரும், உலக புகழ் பெரும் யோகமும், சுய முயற்ச்சியிலேயே தன்னிறைவான வாழ்க்கை வசதிகளையும் அனுபவிக்கும் தன்மையும், மிகப்பெரிய நிறுவனங்களையும், சாம்ராஜ்ஜியத்தையும் உருவாகும் சிற்ப்பிகளாக திகழ்வார்கள்.

பொதுவாக பூர்வபுண்ணிய ஸ்தானம் வலிமை பெறுவது குறிப்பிட்ட ஜாதகருக்கு சிறந்த புத்திர பாக்கியத்தை நல்குகிறது, தனக்கு பிறகு தனது எண்ணங்களையும் லட்சியங்களையும் நிறைவேற்றும் விதமான வாரிசு அமைப்பை ஜாதகர் பெறுகிறார், ஜாதகருக்கு பிறக்கும் குழந்தையும் நல்ல அறிவு திறனும், புத்திசாலித்தனமும் நிரம்பபெற்ற குழந்தையாகவே அமைவது சுய ஜாதகத்தில் உள்ள புத்திர ஸ்தான வலிமையே, " தோன்றின் புகழோடு தோன்றுக" என்ற வள்ளுவரின் வாக்கிற்கு இணங்க ஜாதகரும், ஜாதகரின் வாரிசும் நல்லறிவும் நல்ல குணமும், பரந்த மனப்பக்குவமும் பெற்று இருப்பார்கள், இவர்களின் வாழ்க்கையில் 5ம் பாவக பலன்கள் நடைமுறையில் வரும் பொழுது கலைகளில் தேர்ச்சி, கல்வியில் வெற்றி, போட்டி பந்தையங்களில் சிறப்பான வெற்றிகள், சமுதாயத்தில் தனது அறிவுக்கும் ஆற்றலுக்கும் அங்கீகாரம், அரசு ஆதாயம் என மிகுந்த நன்மைகளை பெறுவார்கள்.

5ம் பாவக வலிமை என்பது தனது சந்ததிகளையும், தம்மை சார்ந்தவர்களையும் வாழ்க்கையில் தன்னிறைவான சுகபோகங்களை அனுபவிக்க வைக்கும் அறிவும், புத்திசாலித்தனமும் கொண்டவர்களாக இருப்பார்கள், குறிப்பாக பல கோடிரூபாய் செலவு செய்யுங்கள், ஆனால் ஒரு ரூபாய்கூட விரையம் செய்தீர்கள் என்ற வார்த்தைக்கு உதாரணமாக திகழ்வார்கள், இதை போன்றே  இவர்களுக்கு சம்பாத்தியம் என்பது மிக கடினமான விஷயமாகவே இருக்க வாய்ப்பில்லை, அதேசமயம் சத்தியம் வாய்மையை காப்பாற்றும் குணம் கொண்டவர்கள், இவர்களின் செயல்களினால் எந்த ஒரு சிறு இன்னல்களும் மற்றவர்களுக்கு ஏற்ப்படாவண்ணம் பார்த்துகொல்வதில் கைதேர்ந்தவர்கள், வியாபாரத்தில் பல நுணுக்கமான விஷயங்களை கையாளும் திறமை பெற்றவர்கள்.

முற்போக்கு சிந்தனையும், வருமுன் காக்கும் திட்டமிடுதல்களுடன் செயல்படும் அன்பர்கள், மன உறுதி, மனோதிடம் நிறைவாக பெற்றவர்கள் என்பதால் எந்த ஒரு காரியத்தையும் உறுதியாக தன்னம்பிக்கையுடன் செய்து வெற்றி பெரும் யோகம் கொண்டவர்கள், வாழ்க்கையில் ஏற்ப்படும் எதிர்ப்பு மற்றும் போராட்டங்களை தகர்த்தெறிந்து, தெளிவான சிந்தனையுடனும் உறுதியான மன நிலையுடன் வாழ்க்கையை சிறப்பாக எதிர்கொள்ளுவார்கள், இவர்களின் ஆலோசனையின் பெயரில் நடைபோடும் அனைவருக்கும், பல வெற்றிகள் வாழ்க்கையில் வந்து குவியும் என்பது மறுக்க இயலாத உண்மை, மேலும் சிறந்த குடும்ப நல ஆலோசகர், ஆசிரியர், மருத்துவர், வழக்கறிஞர், ஜோதிடர் போன்றோர் ஒருவருக்கு சரியாக அமைவதும் 5ம் பாவக வலிமையே, சரியான கால நேரம் அறிந்து செயலாற்றுவதும், தனக்கு அமைந்த நேரத்தை சிறந்த நேரமாக மாற்றும் வல்லமை பெற்றவர்கள்.

எந்த ஒரு ஜாதகத்திலும் பூர்வபுண்ணிய ஸ்தானம் எனும் 5ம் பாவகம் வலிமை பெற்று அமைவது, குறிப்பிட்ட ஜாதகத்தில் மற்ற பாவகங்களில் இருந்து வரும் இன்னல்களை களைந்து வாழ்க்கையில் வெற்றி நடை போடவைக்கும், ஜாதகருக்கு அறிவு திறனும், புத்திசாலித்தனமும் மிதமிஞ்சி நிற்கும், மேலும் சுய ஜாதகத்தில் எந்த லக்கினம் என்றாலும், காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் வீடான சிம்ம ராசி ( சிம்ம ராசி எந்த பாவகமாக அமைந்தாலும் அந்த பாவகம் வலிமை பெறுவது ) வலிமை பெற்று அமைவது ஜாதகருக்கு ஒரு வரபிரசாதமே, தனக்கு வரும் அனைத்து பிரச்சனைகளுக்கும் இன்னல்களுக்கும் சுயமாகவே தீர்வு கண்டு வாழ்க்கையில் வெற்றி காண்பார்கள், பல்துறை அறிவும், ஒரே நேரத்தில் பலவிஷயங்களில் கவனம் செலுத்தும் வல்லமையை தரும், 5ம் பாவக வலிமை தனக்கு நிகராக வேறொருவரும் இல்லை என்ற நிலையை தரும், உலகில் தனித்து வெற்றிகரமாக இயங்கும் சக்தியை இறைஅருள் மற்றும் இயற்க்கை இவர்களுக்கு அளித்த கொடையாகவே கருதலாம். 

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

ஞாயிறு, 21 ஜூன், 2015

திசை மற்றும் புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினாலும் ஜாதகர் தீமையான பலன்களையே அனுபவிப்பது ஏன் ?

 
 ஒருவரது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் வலிமை பெற்று, நடைபெறும் திசை,புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை நடத்திய போதும் ஜாதகரால் யோக பலன்களை அனுபவிக்க இயலாத நிலை ஏன் ஏற்ப்படுகிறது? என்பதை இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே! மேலும் கிழ்கண்ட உதாரண ஜாதகம் மூலம் மேற்கண்ட கேள்விகளுக்கு தெளிவான பதிலை பெற இயலும்.


லக்கினம் : மகரம் 
ராசி : மேஷம் 
நட்சத்திரம் : அஸ்வினி 1ம் பாதம் 

ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவகங்கள் :

1,2,3,6,7,12ம் வீடுகள் களத்திர பாவகமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம்.
4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம்.
9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம்.
10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம்.

ஜாதகத்தில் வலிமை அற்ற பாவகங்கள் :

5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம்.
8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம்.

ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் செவ்வாய் திசை ( 02/12/2014 முதல் 02/12/2021 வரை )ஏற்றுநடத்தும் பாவக பலன்கள் 
10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் ஜீவன ரீதியான யோக பலனை தந்துகொண்டு இருப்பது மிகவும் சிறப்பான நிலையாக கருதலாம், மேலும் ஜாதகருக்கு ஜீவன ஸ்தனமானது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 8ம் ராசியாகவும், ஸ்திர நீர் தத்துவ அமைப்பிலும் அமைவதாலும், ஜாதகருக்கு நிலையான தனது மனதில் நினைத்த எண்ணங்களுக்கு ஏற்ப, புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையையும், எண்ணத்தின் வலிமைக்கு ஏற்ற வகையில் பொருளாதார முன்னேற்றத்தையும், தங்கு தடையின்றி வாரி வழங்கும், ஆனால் ஜாதகருக்கு நடப்பது முற்றிலும் முரண்பட்ட  வாழ்க்கையாக இருப்பது கவனிக்க தக்கது, நிறைய கடன் சுமை, வாழ்க்கை துணை வழியில்  இருந்து இன்னல்கள் மற்றும் பிறிவு என நடைபெறும் திசைக்கு ஏற்ற யோக பலன்கள் நடைபெறாமல், மிகுந்த இன்னல்களுக்கும் துன்பத்திற்கும் ஆளாகும் சூழ்நிலை தந்துள்ளது, சுய ஜாதகத்திற்கு ஒத்து வாராத முரண்பட்ட பலன்களாக இருப்பது கவனிக்கத்தக்கது.

பொதுவாக இதை போன்ற ஜாதக அமைப்பில் ஜாதகத்தில் பலன்கான முற்படும் பொழுது, ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் என்று அழைக்க பெரும் 5ம் பாவக நிலையை கருத்தில் கொண்டு பலன் காணுவதே  ஜாதகருக்கு  தெளிவான பலன்களை 100% சொல்ல இயலும், இவரது ஜாதகத்தில் பெரும்பாலான பாவகங்கள் வலிமை பெற்று அமர்ந்த போதிலும், பூர்வ புண்ணியம் எனும் 5ம் பாவகம் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 200% இன்னல்களை தரும், மேலும் ஜாதகருக்கு தற்ப்பொழுது நடைபெறும் திசை மிகவும் வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்திய போதும் , ஜாதகரால் ஜீவன ஸ்தான அமைப்பில் இருந்து எவ்வித யோக பலனை அனுபவிக்க இயலாத சூழ்நிலைக்கு காரணமாக அமைவது, பூர்வ புண்ணியம் பாதக ஸ்தனத்துடன் சம்பந்தம் பெறுவதும், ஜாதகர்  தனது பூவீகத்தில் குடியிருந்து கொண்டு தனது ஜீவன வாழ்க்கையை மேற்கொள்வதுமே என்றால் அது மிகையில்லை.

ஒரு ஜாதகர் தனது ஜாதகத்தில் உள்ள வலிமைக்கு ஏற்ப யோக பலன்களை அனுபவிப்பது எப்படி ? என்பதை ஜாதகரின் லக்கினமும், பூர்வ புண்ணியமான 5ம் பாவகம் நிர்ணயம் செய்கிறது என்றால் அது மிகையில்லை அன்பர்களே! சுய ஜாதகத்தில் லக்கினம் மற்றும் 5ம் பாவகம் வலிமை இழக்கும் பொழுது ஜாதகர் தனது பூர்வீகத்தில் குடியிருப்பது, ஜாதகத்தில் உள்ள யோக நிலைகளை பரிபூரணமாக அனுபவிக்க இயலாத சூழ்நிலையை தரும், மேலும் லக்கினமும், பூர்வ புண்ணியமும் ஜாதகரின் புத்திசாலிதனத்தையும், சமயோசித அறிவுத்திறனையும் வெளிபடுத்தும் பாவகம் என்பதால், இந்த பாவக நலன்களை அனுபவிக்க இயலாத சூழ்நிலையை தரும்,  ஜாதகர் தனக்கு வரும் நல்ல நல்ல வாய்ப்புகளையும், அதிர்ஷ்டத்தையும் வேண்டாம் என உதறும் சூழ்நிலையை தரும் , எனவே சுய ஜாதகத்தில் யோக பலன்கள் தரும் திசா புத்திகள் நடைபெற்றாலும், அதானால் ஜாதகருக்கு யாதொரு நன்மையும் விளையாது, துன்பமே மிச்சும்.

மேற்கண்ட ஜாதகர் தனது பூர்வீகத்தில் இருந்து வெளியேறி வேறு இடத்தில் தனது ஜீவனத்தை மேற்கொண்டால் ஜாதகர் தனது ஜீவன ஸ்தான பாவக வழியில் இருந்து 100% யோக பலன்களை வாரி வழங்கும், ஜாதகரின் சிந்தனை திறனும், அறிவு ஆற்றலும் பன்மடங்கு விருத்தியை வாரி வழங்கி, ஜாதகத்தில் உள்ள யோக பலன்களை பரிபூரணமாக அனுபவிக்கும் தன்மையை தரும், பெரும்பாலும் 5ம் பாவகம் வலிமை குன்றிய ஜாதகர்கள், சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து எவ்வித யோக பலன்களையும் அனுபவிக்க இயலாமல் போவதற்கு இதுவே காரணம் என்பது ஜோதிடதீபத்தின் ஆணித்தரமான கருத்து.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

செவ்வாய், 7 ஏப்ரல், 2015

சுய ஜாதகத்தில் புத்திர பாவகமும், பாக்கிய ஸ்தானமும் வழங்கும் யோக நிலைகள் !




கிராமங்களில் செலவடையாக பெரியோர்கள் ஒரு பழமொழியை சொல்வதுண்டு அதாவது " சக்தியுள்ள சாமியை கும்பிடனும், புத்தியுள்ள புள்ளைய பெற்று எடுக்கணும் " என்று, மேற்கண்ட ஒரு பழமொழியின் வழியாகவே ஒருவரது ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகத்தின் வலிமையை பற்றியும், பாக்கிய ஸ்தானம் எனும் 9ம் பாவகத்தின் வலிமையை பற்றியும் நாம் தெளிவாக தெரிந்து கொள்ள இயலும், பொதுவாக கோண ஸ்தானங்கள் என்று அலைக்கபெரும், 5,9ம் பாவகங்கள் ஒருவரின் வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றால் அது மிகையில்லை, இன்றைய சூழ்நிலையில் மிக முக்கிய கடமைகளான குல தெய்வ வழிபாடு, பித்ரு வழிபாட்டின் அருமையை நாம் உணராத காரணத்தினால், வாழ்க்கையில் வரும் இன்னல்களின் தன்மையை தவிர்க்க இயலாமல் அதிக அளவில் துன்பங்களுக்கும், தொல்லைகளுக்கும் ஆளாகும் சூழ்நிலையில் நெருப்பில் இட்டால் புழு போல் தவிக்கும் நிலை ஏற்ப்படுகிறது, அப்படி பட்ட இன்னல்களை அனுபவித்த போதிலும், நமது அறிவுக்கு 5,9ம் பாவக வழியில் இருந்து குல தெய்வ வழிபாடு, பித்ரு கடமையின் அருமை நமக்கு உறைப்பதில்லை.

ஒரு ஜாதகருக்கு தனது பாரம்பரிய நிலையில் இருந்து கிடைக்க வேண்டிய கீர்த்தி,புகழ்,செல்வம்,கௌரவம்,அந்தஸ்து,பொருளாதார ரீதியான முன்னேற்றம், சிறந்த யோகமுள்ள வாரிசு அமைப்பு, தான் கற்ற கல்வியின் வழியில் இருந்து ஜாதகர் தனக்கும், தன்னை சார்ந்த சமூகத்திற்கும் சிறப்பான நன்மைகளை பெரும் தன்மை, செல்லும் இடங்களில் இருந்து வரும் வரவேற்ப்பு, தமக்கு வரும் இனல்களை கண்டு  திகைக்காமல் மிக  எளிதாக கையாளும் புத்திசாலித்தனம், கலைஞயம் மிக்க செயல்திறன்கள், புத்திகூர்மை மூலம் சகல  வாய்ப்புகளையும் முறையாக பயன்படுத்தி கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் அமைப்பு, எடுக்கும் செயல்களில் தனது சுய அறிவாற்றலை பயன்படுத்தி வாழ்க்கையில் சிறப்பான வெற்றிகளை பெரும் யோகம், கலை துறையில் பெரும் வெற்றிகள், புதிய சிந்தனைகள் மூலம் ஜாதகர் மற்றவர்களில் இருந்து தனித்து தோன்றும் சிறப்பு இயல்புகள், ஜாதகருக்கு சிறு பிரச்சனை என்றாலும் ஓடி வந்து உதவி செய்யும் உறவுகள்,நண்பர்கள்,பொதுமக்கள், தான் ஏற்று கொண்ட லட்சியத்தை செவ்வனே முடிக்கும் சரியான திட்டமிடுதல் என ஜாதகரின் சுய புத்திசாலிதனத்தை பிரகாசிக்க செய்வது பூர்வ புண்ணியம் எனும் 5ம் பாவகமே என்றால் அது மிகையில்லை.

மேலும் ஒரு ஜாதகர் தனது அறிவு திறன் மூலம் பல சாதனைகளை படைப்பதற்கும், ஆன்மீக வழியில் இருந்து மிகப்பெரிய வெற்றிகளை பெறுவதற்கும், பொதுமக்கள் போற்றும் புகழ் மிக்க பொறுப்புகளை நேர்மையாக அலங்கரிப்பதற்க்கும், ஆக்க பூர்வமான செயல்பாடுகள் மூலம் தனது  சந்ததிகளும், சமுதாயமும் மிகப்பெரிய நன்மைகளை தொடர்ந்து  பெற்ற வண்ணமே திகழ்வதற்கும் பாக்கிய ஸ்தானம் எனும் 9ம் பாவகத்தின் வலிமை  சிறப்பாக அமைவது நல்லது, தனது பெயருக்கும் புகழுக்கும் சிறிய களங்கமும் வாராமல் வாழ்க்கையில், சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றம்  பெறுவதற்கு பாக்கிய ஸ்தானம் வழிவகுக்கும், எந்த ஒரு விபத்தோ, இழப்புகளோ ஜாதகரை பாதிக்கா வண்ணம் காப்பாற்றும் வல்லமை பெற்றது ஜாதகரின் பாக்கிய ஸ்தானமே, குறிப்பாக ஜாதகரை தவறான தீய பழக்க வழக்கங்களில் இருந்து காப்பதும், தற்கொலை எண்ணங்களை மனதில் இருந்து நீக்கி, புது தெம்புடனும், புத்துணர்ச்சியுடனும் சகல பிரச்சனைகளையும் எதிர்கொள்ள வைக்கும் வல்லமை பாக்கிய ஸ்தானத்திற்கு நிச்சயம் உண்டு, ஜாதகரே தன்னிலை மறந்து செயல்பட்டாலும், ஜாதகரை சார்ந்தவர்களும் அவர்களது நண்பர்கள்,உறவினர்கள் என அனைவரும் நல்லவர்களாக வந்து நின்று ஜாதகரை நல்வழிபடுத்தும் யோகம் உண்டாகும், எந்த ஒரு சூழ்நிலையையும் மிக  எளிதாக கையாளும் மிதமிஞ்சிய அறிவாற்றல் ஜாதகருக்கு இயற்கையாக அமைந்திருக்கும், 5ம் பாவகம் ஜாதகரை கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் தன்மையை தரும், 9ம் பாவகம் அறிவு திறனில் சிறந்து விளங்கும் வல்லமையை தந்து, செயற்கரிய பல சாதனைகளை படைக்க வைக்கும்.

கால புருஷ தத்துவ அமைப்பில் 5ம் வீடாக வரும் சிம்மம் ஸ்திர நெருப்பு தத்துவமாக நின்று சுய ஞான யோகத்தை தரும், 9ம் வீடாக வரும் தனசு உபய நெருப்பாக நின்று அனைவருக்கும் வெளிச்சத்தை தரும் ( அக இருள் நீக்கி ஞான ஒளியை வழங்கும் ) எனவே சுய ஜாதகத்தில் 5,9ம் பாவகம் வலிமை பெறுவது  சிறப்பு, வலிமை அற்ற நிலையில் இருப்பின் ஜாதகர் தனது குல தெய்வ வழிபாட்டின் மூலமும், பித்ரு கடமை மூலமும் பூர்வபுண்ணியம் மற்றும் பாக்கிய ஸ்தான வலிமையை அதிகரித்து கொள்வது சகல நிலைகளில் இருந்தும் யோகம் தரும், சக்தியுள்ள சாமியை வணங்கும் பொழுது சிறந்த புத்திரபேறு ( வாரிசு ) கிட்டும், நாம் பிறப்பில் யோகம் அற்ற ஜாதக நிலையை பெற்று இருந்தாலும் கூட, நமது வாரிசு அமைப்பை நாம் யோமுள்ள ஜாதகமாக மாற்றும் வல்லமை, குல தெய்வ வழிபாட்டிலும், பித்ரு கடமையை செய்வதின் மூலம் நிச்சயம் உண்டாகும் என்பது கவனிக்க தக்கது.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

ஞாயிறு, 5 ஏப்ரல், 2015

சாயா ( ராகு கேது ) கிரகங்களுடன் சேர்ந்த கிரகங்கள் வழங்கும் யோகபலன்கள் !


 சாயா கிரகங்களுடன் சேர்க்கை பெரும் கிரகங்கள் பெரும்பாலும் தீமையான பலன்களையே தரும் என்பது பல ஜோதிடர்களின் கருத்தாக உள்ளது, மேலும் ராகு கேது கிரகங்களுடன் தொடர்பு பெரும் கிரகங்கள் ஜாதகருக்கு அவயோக பலன்களை தருவதில் எவ்வித விதிவிலக்கும் கிடையாது என்பது ஒரு சாராரின் கருத்து, ராகு கேதுவுடன் சேர்ந்த கிரகங்கள் வழங்கும் பலன்களை நிர்ணயம் செய்யும் முன், சாயா கிரகங்கள் அமர்ந்த பாவக நிலையை கருத்தில் கொள்வது மிக துல்லியமான பலன்களை சரியாக சொல்ல உதவும், ஏனெனில் சாயா கிரகங்கள் தான் அமர்ந்த பாவகத்தின் தன்மைக்கு ஏற்ப்பவே, யோக அவயோக பலன்களை வழங்குவார்கள் என்பது கவனிக்க தக்கது, இதை ஒரு உதாரண ஜாதகம் கொண்டு காண்போம்.



லக்கினம் : சிம்மம் 
ராசி : சிம்மம் 
நட்சத்திரம் : மகம் 3ம் பாதம் 

ஜாதகி சிம்ம லக்கினம் லக்கினத்திற்கு 3,9ம் பாவகங்கள் முறையே சாயா கிரகங்களான ராகு கேது அமர்ந்திருப்பது சிறப்பான யோக நிலையை தரும் அமைப்பு, ஜாதகிக்கு விருச்சிகத்தில் 3ம் பாவகத்தில் அமர்ந்த ராகு பகவான் திடீர் அதிர்ஷ்டங்களையும், சிறந்த வாய்ப்புகளையும் வாரி வழங்குகிறார், தான் நினைக்கும் காரியங்களை நினைத்த வண்ணம் நிறைவேறும் யோகத்தை தருகிறார், விருச்சிகம் ஸ்திர  நீர் ராசியாக அமைவதால், ஜாதகியின் நிலையான மன உறுதியையும், சரியான முடிவுகளை எடுக்கும் தன்மையை வாரி வழங்குவது வரவேற்க தக்கது, மேலும் ஜாதகி விளையாட்டு துறையிலும், வியாபர துறையிலும் சிறந்து விளங்கும் வல்லமையை  தருவது ராகு பகவானே, 3ம் பாவகத்தில் அமர்ந்த ராகு பகவான் ஜாதகிக்கு 100% யோக பலன்களை தான் அமர்ந்த பாவக வழியில் இருந்து சிறப்பாக தருகிறார் என்பது இந்த ஜாதகிக்கு கிடைத்த வரபிரசாதம் என்றே சொல்லாம், மேலும் ஜாதகிக்கு சகோதர வழியில் இருந்து 100% நன்மைகள் நடைபெறும் என்பது கூடுதல் யோகமாக கருதலாம்.

9ம் பாவகத்தில் ரிஷப ராசியில் அமர்ந்த கேது பகவானுடன் சேர்ந்த கிரகங்கள் சூரியன் மற்றும் புதன் எனும் இரண்டு கிரகங்களின் தன்மையை தானே ஏற்று கேது பகவானே பலன்களை வாரி வழங்குவது கண்கூடான விஷயம், ( சுக்கிரன் ரிஷபத்தில் உள்ள 10ம் பாவகத்தில் அமர்ந்திர்ருக்கிறார் ) மேலும் கேது அமர்ந்திருக்கும் 9ம் பாவகத்தை 100% வலிமை பெற செய்து சூரியன் மற்றும் புதன் கிரகங்களின் தன்மையை தானே ஏற்று நடத்துவது ஜாதகியை கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் தன்மையை தரும், படிப்பில் முதல் இடத்தை ஜாதகி மிக எளிதாக கை பற்றுவார், குறிப்பாக ஜாதகியின் அறிவு திறன் மற்றவர்கள் அனைரையும் பிரமிக்க வைக்கும், தான் கற்ற கல்வியின் மூலம் அபரிவிதமான வருமான வாய்ப்பை ஜாதகி தங்குதடையின்றி  பெறுவார், சமுதாயத்தில் பெரியவர்கள் போற்றும் குணவதியாக  திகழும் தன்மையை கேது பகவான் வழங்குவது கவனிக்க தக்கது.

9ம் பாவகத்தில் அமர்ந்த சூரியன்,புதன் இரு கிரகங்களின் தன்மையை கேது பகவானே ஏற்று நடத்துவதால், சூரியன் அமைப்பில் இருந்து ஜாதகி அதிகார பதவிகளையும், நிர்வாகத்திலும் சிறந்து விளங்கும் யோகம் உண்டு, புதன் அமைப்பில் இருந்து புத்தி கூர்மையான செயல்பாடுகள் மூலம் தான் எடுத்த காரியங்களை செவ்வனே செய்து முடிக்கும் தன்மையை தரும், ஜாதகியுடன் சேரும் அன்பர்கள் அனைவரும் மிகசிறந்த பெரிய மனிதர்களும், கல்வியாளர்களும், ஆன்மீக பெரியவர்களாகவும் திகழ்வார்கள், இவர்களது ஆசியுடன் ஜாதகியின் வாழ்க்கை மிக மிக உயர்ந்த நிலைக்கு எடுத்து செல்லும் என்பது கேது பகவானால் நிகழும் யோக அமைப்பே என்றால் அது மிகையில்லை, லக்கினாதிபதி 2,11க்கு  உடையவர்களின் ( பாரம்பரிய முறைப்படி) சேர்க்கையை பெற்ற கேது பகவான் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்தில் வலிமை பெற்று அமர்ந்ததால் மேற்கண்ட யோக பலன்கள் ஜாதகிக்கு தங்குதடையின்றி நடைபெறும் என்பது மட்டும் உறுதி.

குறிப்பு :

எந்த ஒரு ஜாதகத்திலும் சாயா கிரகங்களான ராகு கேதுவுடன் சேர்ந்த கிரகங்கள் வழங்கும் பலனை நிர்ணயம் செய்யும் பொழுது, ராகுகேது ஜாதகருக்கு லக்கினத்தில் இருந்து எந்த பாவகத்தில் அமர்ந்து இருக்கின்றனர், அமர்ந்த பாவகத்திர்க்கு யோக பலனை தருகின்றனரா ? அவயோக பலனை தருகின்றனரா ? என்பதை தெளிவாக தெரிந்து கொண்டு பலன் காண்பதே,  குறிப்பிட்ட ஜாதகருக்கு சாயா கிரகங்களுடன் சேர்ந்த கிரகங்கள் தரும் பலனை மிக துல்லியமாக கணிதம் செய்ய இயலும், பொதுவாக ராகுகேதுவுடன் சேர்ந்த கிரகங்கள் தீமையை செய்யும் என்பது முற்றிலும் ஜோதிட கணித உண்மைக்கு புறம்பான விஷயமாகவே " ஜோதிடதீபம் " கருதுகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

சனி, 25 அக்டோபர், 2014

சுய ஜாதக ரீதியாக ஒருவர் செய்யும் பரிகாரம் பலன் தருமா ? பரிகாரம் செய்வதால் ஒருவர் யோக பலன்களை அனுபவிக்க முடியுமா ?

  


பரிகாரம் தேடுதல் என்பது, ஒருவரின் சுய ஜாதக அமைப்பை வைத்தும் கிரகங்களின் வலிமை மற்றும் வலிமை அற்ற நிலையை வைத்தும் ஜோதிடர்களால் பரிந்துரை செய்வதை ஜாதகர் முறையாக செய்து அதன்வழியில் இருந்து நன்மை பெறட்டும் என்பதாகவே இருக்கிறது, இதில் பலதரப்பட்ட வித்தியாசங்களும், முரண்பட்ட கருத்துகளும் வருவது உண்டு, இந்த கருத்து வேறுபாடுகள் ஏன் வருகிறது, உண்மையில் ஜாதகர் தேடும் பரிகாரங்கள் ஜாதகருக்கு பலன் தருகின்றதா? கேவில் வழிபாடுகள் மூலம் ஜாதகர் மேற்கொள்ளும் வழிபாடுகள் பலன் தருகின்றதா? பரிகாரம் ஒருவரின் வாழ்க்கையில் தரும் மாற்றங்கள் என்ன? என்பதை பற்றி இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே !

சுய ஜாதக பாதிப்பு நிலை :

 ஒருவரின் சுய ஜாதகம் என்பது அந்த ஜாதகர் செய்த வினை பதிவிற்கு ஏற்ப இறை அருளால் நிர்ணயம் செய்யபடுகிறது, உதாரணமாக ஒருவரின் சுய ஜாதக வலிமை நிர்ணயம் செய்வது 12 பாவகங்களே என்றால் அது மிகையாகாது அன்பர்களே ! குறிப்பாக ஒருவரின் சுய ஜாதகத்தில் லக்கினம் எனும் முதல் பாவகம் வலிமை அற்று காணப்படுகிறது என்று வைத்துகொள்ளுங்கள், அந்த ஜாதகர் எந்த வகையில் இருந்து பரிகாரங்கள் தேடுவது ? அல்லது 12 பாவகங்களில் ஏதாவது ஒரு பாவகமோ அல்லது சில பாவகங்களோ பாதிக்க படும் பொழுது, ஜாதகர் எவ்வித பரிகாரங்களை செய்து நலம் பெறுவது என்பதை ஜோதிடர்களே நிர்ணயம் செய்கின்றனர், ஒரு தலை சிறந்த மருத்துவர் ஒருவரின் உடல் நிலை பாதிப்பை பார்த்த கணத்திலேயே முடிவு செய்ய இயலும், மேலும் பரிசோதனைகள் மூலம் சம்பந்தபட்டவருக்கு வந்திருக்கும் உடல் நல குறைபாட்டினை உறுதி படுத்தி அதற்க்கு தகுந்த சிகிச்சையை பரிந்துரைக்க முடியும், சம்பந்த பட்ட நபரை உடல் நல பாதிப்பில் இருந்து மீட்டு எடுக்க முடியும்.

இதை போன்றதே ஜோதிட பரிகாரங்களும், ஒருவரின் சுய ஜாதகத்தில் பாதிக்க பட்ட பாவகங்கள் எது என்பதை தெளிவாக தெரிந்துகொண்டு, அந்த பாவகத்திர்க்கு அதிபதியான கிரகங்களுக்கு முறையான பிரீதி பரிகாரங்களை மேற்கொள்ளும் பொழுது, ஜாதகர் குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து சுய ஜாதகத்திற்கு உற்ப்பட்டு யோக பலன்களை அனுபவிக்க இயலும், மேலும் பாதிக்க பட்ட பாவக அமைப்பு எவ்வித தத்துவ  நிலையை கொண்டு உள்ளதோ அது சார்ந்த பரிகாரங்களை மேற்கொள்வது ஜாதகருக்கு உடனடியான நன்மைகளை வாரி வழங்கும்.

குறிப்பாக பஞ்ச பூத தத்துவ அமைப்பை அடிப்படையாக கொண்டு பல திருத்தலங்கள் நமது தமிழகத்தில் இறை அருளின் கருணையினால் பல சித்தர்களாலும், ஆன்மீக பெரியோர்களாலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, கோவில் வழிபாட்டில் மனிதனின் செயலற்ற கருமையம் உற்பட 7 ஆதாரங்களும் செயல்நிலை தூண்டப்பட்டு இயக்க நிலையை பெறுகிறது, மேலும் கிரகங்களின் ஜீவ காந்த அலைகளை உடலும் மனமும் கிரகிக்க ஆரம்பிக்கிறது, இந்த மாற்றங்கள் ஜாதகரின் வாழ்க்கையில் பல அபரிவிதமான முன்னேற்றத்தையும், இறை அருளுடன் ஒன்று கலக்கும் வாய்ப்பை வாரி வழங்குகிறது, மேலும் இந்த சூட்சம விஷயங்கள் யாவும் சரியான சில நொடிகளில் நடைபெறும் என்பதால் எவராலும் விளக்கம் தர முடியாது, அப்படியே தந்தாலும் அது கற்பனையாகவே இருக்கும், ஒவ்வொரு ஜீவன்களின் கிரகிக்கும் சக்தியை பொறுத்து கிரகங்களின் ஜீவ சக்தி கலப்பு என்பது நிகழும், உதாரணம் சொல்ல வேண்டும் எனில் நாம்  ஒரு இனிப்பு பதார்த்தை உண்கிறோம் என்று வைத்து கொள்ளுங்கள், இதை மற்றவருக்கு வார்த்தையால் விவரிக்க இயலாது, சம்பந்த பட்டவரே அந்த இனிப்பு பாதார்த்தை உண்டால் மட்டுமே அவருக்கு அது புரியவரும், இனிப்பின் தன்மை தெரிய வரும்.

கோவில் வழிபாட்டில் ஒரு ஜாதகர் நவகிரகங்களின் கிரக சக்தியுடன் உயிர் கலப்பு பெறுவது மேற்கண்ட அமைப்பிலேயே, சில நபர்களுக்கு பரிகாரங்கள் செய்தும் பலன் தராதது ஏன் ? என்ற கேள்வி வர வாய்ப்புள்ளது, இதை இந்த இடத்தில் ஜோதிடதீபம் விளக்க கடமை பட்டுள்ளேன், அதாவது மேற்கண்ட இனிப்பு பதார்த்தை வைத்தே தெளிவு படுத்துவோம்,  அன்பர்களே ! ஒரு நோய்வாய்பட்ட ஒரு நபருக்கு ( அளவுக்கு அதிகமான காய்ச்சல் ) நாம் இதே இனிப்பு பதார்த்தை கொடுக்கும் பொழுது அந்த நபரின் நாக்கு சுவை அறியும் தன்மையை பெற்று இருக்காது, அப்பொழுது அந்த நபருக்கு இனிப்பு பதார்த்தை கொடுப்பதால் எவ்வித பயனும் இல்லை, இதை போன்றதே சில நபர்களின் பரிகாரங்கள்  நிவர்த்தி பெறாத அமைப்பிற்கும், யோக பலன்கள் நடைமுறையில் பலன் தராத அமைப்பிற்கும் காரணமாகும்.

 உதாரணமாக ஒருவரின் சுய ஜாதகத்தில் பாவகங்கள் கடுமையான பாதிப்பிற்கு ( எந்த ஒரு பாவகமும் பாதக ஸ்தான அமைப்புடன் தொடர்பு பெறுவது மிகுந்த பாதிப்பை தரும் ) உள்ளாகி இருக்குமெனில் ஜாதகர் தொடர்ந்து பரிகாரங்களை  சில காலம் செய்வதால் அந்த பாதிப்பின் கடுமை குறைந்து நன்மைகளை பெறலாம், சில ஜாதகர்களை கோவில் வழிபாடு செய்ய பரிந்துரை சொல்வோம் அவர்கள், அந்த வழிபாட்டை ஒருமுறை செய்த உடனேயே யோக பலன்கள் நடைபெற வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாமாக படவில்லை, தொடர்ந்த இறை வழிபாட்டில் ஈடுபடும் பொழுது ஜாதகர் பாதிக்க பட்ட பாவக வழியில் இருந்து விரைவில் மீண்டு அதே பாவக வழியில் இருந்து யோக பலன்களை அனுபவிக்க ஆரம்பிப்பார், இதுவே பரிகாரத்தின் உண்மை நிலை, பொதுவாக பரிகாரம் என்பது சம்பந்தபட்ட ஜாதகர் யாரோ அவரே ஜோதிடர்களின் வழிகாட்டுதலின் படி தேடிகொள்வது நல்லது இதை தவிர்த்து ஜோதிடர் பரிகாரம் செய்கிறார் என்பது ஏற்புடையாதாக இல்லை.

ஒருவர் சுய ஜாதகத்தில் பாதிக்க பட்ட பாவக வழியில் இருந்து பரிகாரம் தேடிக்கொண்டு நன்மை பெற வேண்டும் என்றாலும் கூட, அவரது ஜாதகத்தில் அந்த விதி இருக்க வேண்டும், அப்படி இருந்தால் மட்டுமே அந்த ஜாதகருக்கு சரியான ஜோதிடரை நாடி சரியான பரிகாரங்களை தேடிக்கொள்ள முடியும், ஆக ஒருவரின் சுய ஜாதகத்தில் பரிகார வழியில் ஜாதகர் யோக வாழ்க்கையை பெற வேண்டும் என்றாலும் கூட  அவரது சுய ஜாதகத்தில்,  பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகமும், பாக்கியம் எனும் ஒன்பதாம் பாவகமும் சிறிதாவது நல்ல நிலையில் இருப்பது அவசியம். ஒருவர் தான் செய்யும் பரிகாரத்தில் கோவில் வழிபாடுகளுக்கு இணையான நன்மைகளையும் யோகங்களையும் பெற மாற்று வழிகளும் உண்டு, உதாரணமாக ஒருவருக்கு நான்காம் பாவகம் கடுமையாக பாதிக்க பட்டு இருக்கிறது என்று வைத்துகொள்ளுங்கள், அந்த ஜாதகருக்கு நல்ல வீடு அமையாது, சிறப்பான வாகனம் அமையாது சொத்து சுகங்கள் கிடைக்காது, நல்ல குணநலன்களுடன் ஜாதகர் இருக்க மாட்டார், முரண்பட்ட பழக்க வழக்கங்களையும், குணநலன்களையும் பெற்று இருப்பார், ஜாதகரின் பெயரில் இருக்கும் சொத்து சுகங்கள் யாவும் விரையம் அடையும்.

இந்த நிலையில் ஜாதகர் கோவில் வழிபாடுகளுக்கு நிகரான பரிகார நிவர்த்தியும், நன்மை மிகுந்த யோக பலன்களையும் பெறுவது எப்படி? ஆண்கள் ஜாதகத்தில் நான்காம் பாவகம் அன்னையை குறிக்கும் ( பெண்கள் ஜாதகத்தில் நான்காம் பாவகம் தகப்பனாரை குறிக்கும் ) ஜாதகர் தனது அன்னைக்கு தேவையான பணிவிடைகளை தவறாது செய்வதும், அவரின் பேச்சை கேட்டு தட்டாமல் நடந்து கொள்வதும் ஜாதகருக்கு நான்காம் பாவக வழியில் இருந்து வரும் அவயோக பலன்களை தடுத்து நிறுத்தி, யோக பலன்களை வாரி வழங்கும், ஜாதகர் தனது அன்னையின் உடல் நலத்தில் அக்கறை கொள்வதும், அவர்களது தேவைகளை பூர்த்தி செய்வதும், அவரின் மனம் நோகாவண்ணம் நடந்து கொள்வதும் ஜாதகரின் வாழ்க்கையில், நல்ல வீடு, வண்டி வாகனம், சொத்து சுக சேர்க்கையை வாரி வழங்கி விடும், நான்காம் பாவகம் பதிக்க பட்டு இருக்கும் ஜாதகர் அனைவருக்கும் தனது தாயின் அமைப்பில் இருந்து அதிக இன்னல்களை தரும், இருப்பினும் ஜாதகர் அப்படி வரும் இன்னல்களை மனமுவந்து ஏற்றுக்கொண்டு, தனது அன்னைக்கு நன்மையை செய்யும் பொழுது சில காலம் சிரமபட்ட போதும், அதன் பிறகு வரும் காலங்கள் ஜாதகருக்கு நான்காம் பாவக வழியில் இருந்து யோகங்களை 100 சதவிகிதம் வாரி வழங்கும்.

எனவே ஒருவரது சுய ஜாதகத்தில் பாதிக்க பட்ட பாவகம் எதுவோ அந்த பாவக வழியில் உள்ள உறவுகளிடம், நாம் நமது பாவக வலிமையை வலுபடுத்திகொள்ள இயலும், 3ம் பாதிக்க படும் பொழுது சகோதர வழியில் இருந்தும், 5ம் பாவகம் பாதிக்க படும் பொழுது தனது குழந்தைகள் வழியில் இருந்தும், 7ம் பாவகம் பாதிக்க படும் பொழுது தனது வாழ்க்கை துணை வழியில் இருந்தும், 9ம் பாவகம் பாதிக்க படும் பொழுது தனது பித்ருக்கள் வழியில் இருந்தும், 10ம்  பாவகம் பாதிக்க படும் பொழுது தனது தந்தை வழியில் இருந்தும் வரும் இன்னல்களை ஏற்றுகொள்ளும் தன்மையை ஜாதகர் பெரும் பொழுது மேற்கண்ட பாவக வழியில் இருந்து நன்மைகளை 100 சதவிகிதம் பெறலாம், இது தான் செய்த கர்ம வினை பதிவை கழித்து கொண்டு, அதன் வழியில் இருந்து யோக பலன்களை அனுபவிக்கும் சரியான மாற்று வழி எனலாம்.

முதலில் சுய ஜாதக ரீதியாக பாதிக்க பட்ட பாவகம் எதுவென்று தெளிவாக தெரிந்து கொள்வதும், அந்த பாவகத்திர்க்கு அதிபதியான கிரகம் எதுவென்று உணர்வதும் சம்பந்த பட்ட பாவக வழியில் இருந்து ஜாதகரை மீட்டு எடுக்க சரியான வழியை கடைபிடிக்க உதவும்.




 உதாரணமாக மேற்கண்ட ஜாதகத்தில் பாதிக்க பட்ட பாவகங்கள் 6,9,12 இந்த பாவகங்களுக்கு அதிபதியாக முறையே 6க்கு செவ்வாயும், 9க்கு புதனும், 12க்கு சந்திரனும் வருகின்றனர், எனவே ஜாதகர் 6ம் பாவகம் சர ராசியாக இருப்பதால் 6ம் பாவக வழியில் இருந்து 100% இன்னல்களும், 12ம் பாவகம் சர ராசியாக இருப்பதால் 12ம் பாவக வழியில் இருந்து 100% இன்னல்களும், 9ம் பாவகம் பாதக ஸ்தானமாக வருவதால் 9ம் பாவக வழியில் இருந்து 200% இன்னல்களும் அனுபவிக்கும் தன்மையை தரும் எனவே மேற்கண்ட பாவகங்கள் என்ன தத்துவ அமைப்பை பெறுகிறது, இதற்க்கு உண்டான பரிகாரம் என்ன ? என்பதை முறையாக சிறந்த ஜோதிடரிடம் ஆலோசனை பெற்று பரிகாரங்களை மேற்கொள்ளும் பொழுது ஜாதகர் மேற்கண்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்த்து, அதன் வழியில் இருந்து வரும் யோகங்களை அனுபவிக்க இயலும் அன்பர்களே! எனவே ஒருவரின் சுய ஜாதகத்தில் பாதிக்கபட்ட பாவகம் எது? அதன் அதிபதி யார்? பாதிக்க பட்ட பாவகத்தின் தத்துவம் என்ன ? என்ற விஷயங்கள் தெளிவாக தெரிந்தால் மட்டுமே ஜாதகர் மேற்கண்ட இன்னல்களில் இருந்து விடுபட்டு, யோக பலன்களை அனுபவிக்க முடியும், இல்லை எனில் ஒருவருக்கு பிரச்சனை ஒன்று, அவர் செய்த பரிகாரம் வேறொன்று என்ற நிலையை தந்துவிடும், பரிகாரம் பலன் தராமல் போகக்கூடிய வாய்ப்பு அதிகம் உண்டு.

இதையே திருவள்ளுவர் :

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

குறள் விளக்கம் :

நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்.

எனும் குறள் வடிவில் தெளிவாக தந்திருக்கிறார்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

வெள்ளி, 10 அக்டோபர், 2014

அதிர்ஷ்டம் மற்றும் யோக வாழ்க்கையின் முழுமையை உணர்த்தும் யோக ஜாதக அமைப்பு!

 

அதிர்ஷ்டம் என்ற வார்த்தைக்கும் யோக ஜாதகம் என்ற அமைப்பிற்கும் உதாரணமாக விளங்கும் ஜாதகத்தை பற்றி நாம் இந்த பதிவில் ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே! கிழ்கண்ட ஜாதகியை அதிர்ஷ்ட தேவதையின் மறு உருவமாகவே நாம் கருதலாம், ஏனெனில் அவரது சுய ஜாதகத்தில், பாவகங்களின் வலிமை அவ்வளவு சிறப்பாக அமைந்திருக்கிறது, மேலும் வலிமை பெற்ற பாவகங்களின் பலன்களையே, ஜாதகிக்கு நடைபெறும் பெரும்பாலான திசை, புத்தி, அந்தரம், சூட்சமங்கள் நடைமுறைக்கு கொண்டுவருகிறது, அதன் அபரிவிதமான ராஜயோக பலன்களையே ஜாதகி பரிபூரணமாக் இனிவரும் காலங்களில் அனுபவிக்கிறார் என்பது கவனிக்கத்தக்க 
ஒரு சிறப்பு யோக பலன்களாக ஜோதிடதீபம் கருதுகிறது.

மேலும் ஜாதகி செய்த புண்ணியத்தின் பலனையும், பெற்றோர் செய்த பாக்கியத்தின் பலனையும் ஒன்று சேர்ந்து தரும் யோக ஜாதக பலனாகவே கருதலாம், ஜாதகியின் சிறு வயதுமுதல் மிகுந்த யோக பலன்களை அனுபவிக்கும் தன்மையை தரும் குறிப்பாக ஜாதகியின் பெற்றோர், ஜாதகியின் உடன் பிறப்பு, ஜாதகியின் நண்பர்கள், ஜாதகியின் வாழ்க்கை துணை, ஜாதகியின் உறவினர்கள் என்ற அமைப்பில் சகல நபர்களுக்கும் தனது வழியில் இருந்து யோகத்தை தருபவராக காணப்படுகிறார், ஜாதகி அடிப்படையில் இருந்தே நல்லகுணம், சிறந்த உடல் ஆரோக்கியம், பொருளாதார தன்னிறைவு மற்றும் சகல வளங்களையும் பெற்று சிறப்பாக வாழும் யோகத்தை தரும்.



ஜாதகியின் ஜெனன லக்கினம் : கன்னி 
ஜாதகியின் ஜெனன ராசி : மகரம் 
ஜாதகியின் ஜெனன நட்சத்திரம் : திருவோணம் 

இந்த ஜாதகத்தில் யோக பலன்களை வாரி வழங்கும் பாவகங்களை மட்டும் நாம் சிந்தனைக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே ! இதை அடிப்படையாக கொண்டு காணும் பொழுது 1,3,5,9,11ம் வீடுகள் அதிர்ஷ்டம் மட்டும் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதே ஜாதக அமைப்பில் சிறந்த யோக பலன்களை வாரி வழங்கும் வலிமையை பெறுகிறது இதன் வழியில் ஜாதகி பெரும் யோக பலன்களை பற்றி இனி ஆய்வுக்கு எடுத்துகொள்வோம், ஜாதகியின் 1,3,5,9,11ம் வீடுகள் லாப ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதும், லாப ஸ்தானம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 4ம் பாவகமாக வருவதும், லாப ஸ்தானம் சர நீர் தத்துவ ராசியான கடகமாக அமைவதும் ஜாதகிக்கு தர வேண்டிய யோக பலன்களை 100% தங்கு தடையின்றி பூரணமாக வாரி வழங்கும். மேலும் லாப ஸ்தானம் சர ராசியாக இருப்பதால் தான் தரும் பலன்களை விரைந்து தரும், யோக பலன்களின் அளவு என்பது 100% என்ற விகிதத்தில் இருக்கும் என்பது கவனிகதக்கது.

1ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது :

ஜாதகிக்கு பரந்த மனப்பான்மையையும், சிறந்த நற்குண நலன்களையும் வாரி வழங்கும், ஜாதகியின் எண்ணங்கள் யாவும் பலிதம் பெரும், முற்போக்கு சிந்தனையும் பகுத்தறியும் சிறந்த அறிவாற்றலும் இயற்கையாக அமைந்திருக்கும், சிறப்பாக வளரும் சூழ்நிலையை தரும், அதிக லாபத்தையும், நீடித்த அதிர்ஷ்டத்தையும் இலக்கின வழியில் இருந்து ஜாதகி பரிபூரணமாக பெறுவார், செல்வசெழிப்பு, பரஸ்பர உதவிகளை பெரும் யோகம், நீடித்த உடல் ஆரோக்கியம், வருமுன் உணரும் மனோசக்தி, வருமுன் காக்கும் சமயோசித அறிவாற்றல், மனதிற்கு உகந்த மணவாழ்க்கை பெரும் யோகம், சிறந்த புத்திர சந்தான பாக்கியம், தனது குழந்தைகள் வழியில் இருந்து யோக வாழ்க்கை என ஜாதகி இலக்கின அமைப்பில் இருந்து சகலயோக பலன்களை அனுபவிக்கும் தன்மையை தரும்.

3ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது :

தனது பெயரில் செய்யும் வியாபாரம் அல்லது தொழில் விரைவான முன்னேற்றத்தை வாரி வழங்கும், நிறைய வண்டி வாகனங்களுக்கு உரிமியாளர் ஆகும் யோகம் உண்டாகும், விவசாய பண்ணை விவிவசாய தொழில்களில் அபரிவிதமான வளர்ச்சியை பெரும் யோகம் உண்டாகும், நிறைய சொத்து சுக சேர்க்கை ஜாதகி வளரும் காலத்தில் அதிர்ஷ்ட வசமாக கிடைக்கும், புதையல் அல்லது அதற்க்கு இணையான பொருள் வரவை தரும், தர்ம சிந்தனையையும் நேர்மையான குணத்தையும், அதி தைரியமான மனவலிமையையும் வாரி வழங்கும், நிர்வாகம் மற்றும் தகவல் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கும் யோகத்தை தரும், திருமண வாழ்க்கைக்கு பிறகு அளவில்லா சொத்து சேர்க்கையை வாரி வழங்கும், விளையாட்டு வீரராக உலக புகழ் பெரும் யோகம் உண்டாகும்.

5ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது :

லாட்டரியில் யோகம் , குதிரை பந்தயம் மற்றும் அனைத்து போட்டி பந்தையங்களில் மிகப்பெரிய வெற்றிகளை வாரி குவிக்கும், தனது புத்திசாலிதனத்தல் எப்பொழுதும் ஆதாயம் கிடைக்கும், எப்பொழுதும் மகிழ்ச்சியான வாழ்க்கையே தரும், குடும்பத்தில் நீடித்த மகிழ்ச்சியும் அதிர்ஷ்டமும் தொடர்ந்து வந்தவண்ணமே இருக்கும், இறை அருளின் பரிபூரண நல்லாசிகள் ஜாதகிக்கு வாழ்நாள் முழுவதும் நிறைந்து அருள் புரியும், தொழில் ரீதியான வெற்றிகள் ஜாதகிக்கு வெகு எளிதாக் கிடைக்கும், மக்கள் ஆதரவும், சமுக அந்தஸ்தும் நீடித்து நிலைத்து நிற்கும், கல்வி கேள்விகளிலும், கலைத்துறையிலும் பிரகாசிக்கும் யோகத்தை சிறு வயது முதற்கொண்டே ஜாதகி இயற்கையாக பெற்று இருப்பார்.

9ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது :

ஆன்மீக வெற்றி, ஆன்மீக பெரியவர்களின் அருளாசி சிறு வயதிலேயே கிடைக்கும் பாக்கியம் உண்டாகும், பல புண்ணிய திருத்தலங்களுக்கு சென்றுவரும் யோகம் உண்டாகும், ஜாதகி சொல்லும் வார்த்தைகள் யாவும் பலிதம் பெரும், பல நாடுகளுக்கு சுற்று பயணம் சென்றுவரும் யோகம் உண்டாகும், இதனால் மிகுந்த லாபம் கிடைக்கும், வெளிநாட்டில் படிக்கும் யோகம் உண்டாகும், ஆராய்ச்சி கல்வியில் சிறந்து விளங்கும் யோகம் உண்டு, ஜாதகி நினைக்கும் விஷயங்கள்  மற்றும் பொருட்கள் யாவும், எளிதில் கிடைக்கும்.

11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது :

ஜாதக அமைப்பிலேயே சிறந்த விஷயமாகவும், அதிர்ஷ்டங்களை அள்ளித்தரும் அமைப்பாகவும் இதை கருதலாம், ஜாதகியின் சிந்தனையும் செயல்பாடுகளும் அனைவரும் பாராட்டும் வண்ணம் அமையும், படிப்படியான அதிரடி வளர்ச்சியை வாரி வழங்கும், அனைத்திலும் லாபம் கிடைக்கும், ஜாதகிக்கு சிறந்த  நல்ல குணங்களை வழங்குவதில், இந்த 11ம் பாவகத்திர்க்கு அதிக  பங்கு உண்டு, வியாபர விருத்தி, நீடித்த அதிர்ஷ்டம், சுப விரைய செலவுகளை தரும், ஒருவரின் ஜாதகத்தில் 11ம் வீடு ஜாதகர் எதற்காக பிறந்தார் என்பதை உணர்த்தும் பாவகமாக இருப்பதால், இங்கே ஜாதகி அதிர்ஷ்டமும் சகல யோகத்தையும் அனுபவிக்க பிறந்தவர் என்பது தெளிவாகிறது, மேலும் இந்த லாப ஸ்தானம் ஜாதகிக்கு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சுக ஸ்தானமான கடக ராசியாக அமைவது 100% யோக பலன்களை வாரி வழங்குகிறது.

குறிப்பு :

ஜாதகிக்கு தற்பொழுது நடைபெறும் திசையும், எதிர்வரும் திசைகளும் மேற்கண்ட லாப ஸ்தான பலன்களையே நடைமுறைக்கு கொண்டுவருவது ராஜயோக பலன்களை பரிபூரணமாக அனுபவிக்கும் தன்மையை தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

திங்கள், 18 ஆகஸ்ட், 2014

ராகு கேது பெயர்ச்சி சுய ஜாதகத்தில் இலக்கின ரீதியாக வழங்கும் நன்மைகள் ! - பகுதி 6


 சாய கிரகமான ராகு கேது தற்பொழுது கால புருஷ தத்துவத்திற்கு 6ம் ராசியான கன்னியிலும் 12ம் ராசியான மீனத்திலும் பெயர்ச்சி பெறுகின்றனர், பெயர்ச்சி பெற்ற நாளில் இருந்து 18 மாதங்கள் மேற்க்கண்ட ராசிகளில் கேட்சர ரீதியான நன்மை தீமை பலன்களை ஒவ்வொரு அன்பர்களுக்கும் வாரி வழங்க காத்து இருக்கின்றனர், மேலும் சந்திரன் அமர்ந்த ராசியை அடிப்படையாக வைத்து ராகு கேது பெயர்ச்சி பலன்களை கணிதம் செய்வதை விட லக்கினத்தை அடிப்படையாக கொண்டு, பலன்களை நிர்ணயம் செய்வதே சால சிறந்தது, இதன் அடிப்படையில் ஒவ்வொரு லக்கினத்திற்கு ராகு கேது கிரகங்கள் எவ்வித யோக, அவயோக பலன்களை வழங்குகிறார்கள், என்பதை இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே!

கும்ப லக்கினம் :

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் ராசியான கும்ப ராசியை லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு, இந்த  ராகு கேது பெயர்ச்சி தரும் நன்மை தீமைகளை பற்றி பார்ப்போம் அன்பர்களே! ஜோதிடதீபம் ராகு கேது கிரகங்கள் பற்றி இதற்க்கு முன் பதிவு செய்த பதிவுகளில் ராகு கேது தான் அமரும் இடத்திற்கு உண்டான பலன்களை தானே ஏற்று நடத்தும் என்பதிற்கு இணங்க தற்பொழுது கும்ப லக்கினத்திற்கு ராகு 8ம் பாவகத்திலும், கேது 2ம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்கின்றனர்.

 கும்ப லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு 8ல் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான், விபரீத ராஜயோகத்தை தருகிறார், இதுவரை ஜாதகருக்கு வராமல் இருந்த பொருள் உதவிகள், ஆதரவுகள் ஜாதகரை தேடி  வரும், எதிர்பாராத வகையில் பொருளாதார ரீதியான வெற்றிகள் ஜாதகருக்கு தேடி வந்து சேரும், தன்னம்பிக்கை அதிகரிக்கும், செய்யும் விஷயங்கள் யாவும் திடீர் வெற்றியை தரும், பெரிய மனிதர்களின் ஆதரவு ஜாதகருக்கு பல விதங்களில் உதவிகரமாக அமையும், முன்னேற்றம் என்பது யாரும் எதிர்பாரா வண்ணம் ஜாதகருக்கு அமையும், உடல் நிலை மிகவும் சிறப்பாக அமையும், இதுவரை உடல் ரீதியாக இருந்து வந்த தொந்தரவுகள் விரைவாக குணம் பெரும் அமைப்பை தரும்.

கும்ப லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு 2ல் சஞ்சாரம் செய்யும் கேது பகவான், வருவாய் கடன் மற்றும் பணம் சம்பந்தம் பட்ட விஷயங்கள் தங்களுக்கு எதிர்பாராத லாபத்தை வாரி வழங்கும், வண்டி வாகனம் மற்றும் சுப விரைய செலவுகள் செய்யும் அமைப்பை தரும், உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சிறு அறுவை சிகிச்சையை ஜாதகர் மேற்கொள்ளும் அமைப்பை தரக்கூடும், முன்பின் தெரியாத நபர்களாலும், வேற்று மதத்தினராலும் நன்மையையும் லாபமும் உண்டாகும், அவர்களால் ஜாதகருக்கு வாழ்க்கையில் நல்ல திருப்புமுனை ஏற்ப்படும், புதையல்கள் அல்லது அதற்க்கு நிகரான பொருள் வரவுகள் ஜாதகருக்கு ஏற்ப்பட வாய்ப்பு உண்டு, விவசாயம் சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு இனி வரும் 18 மாதங்கள் மிகுந்த யோகத்தை வாரி வழங்கும்.

குறிப்பு :

 கும்ப லக்கினத்தை சார்ந்த அன்பர்கள் தேவையில்லாத செலவினங்களை குறைத்து சேமிக்கும் பழக்கத்தை வைத்துகொள்வது இனிவரும் காலங்களில், சரியான நன்மைகளை பெறலாம், அவசிய தேவைகளுக்கு மட்டும் செலவு செய்வது நலம் தரும், பல முறை சிந்தித்து செலவுகளை செய்வது கும்ப லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு மிகுந்த நன்மையை தரும்.

மீன லக்கினம் :

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 12ம் ராசியான கும்ப ராசியை லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு, இந்த  ராகு கேது பெயர்ச்சி தரும் நன்மை தீமைகளை பற்றி பார்ப்போம் அன்பர்களே! ஜோதிடதீபம் ராகு கேது கிரகங்கள் பற்றி இதற்க்கு முன் பதிவு செய்த பதிவுகளில் ராகு கேது தான் அமரும் இடத்திற்கு உண்டான பலன்களை தானே ஏற்று நடத்தும் என்பதிற்கு இணங்க தற்பொழுது மீன லக்கினத்திற்கு ராகு 7ம் பாவகத்திலும், கேது 1ம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்கின்றனர்.

மீன லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு 7ல் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான், இது வரை திருமணம் ஆகாத அன்பர்களுக்கு, திருமண வாய்ப்பை திடீர் என அமைத்து தருகிறார், இனி வரும் 18 மாத காலத்திற்குள் மீன லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு திருமணம் இனிதே நடைபெறும், வரும் வாழ்க்கை துணை அமைப்பில் இருந்து ஜாதகர் மிகுந்த நன்மைகளை பெரும் யோகத்தை தரும், புதியதாக கூட்டு தொழில் செய்யும் யோகத்தை வழங்கும் ராகு பகவான் அதன் மூலம் மிகப்பெரிய லாபத்தை தருகிறார், இதன் வழியே ஜாதகர் பொருளாதார ரீதியான தன்னிறைவை பெரும் யோகம் உண்டாகும், அரசியலிலும் கூட்டு தொழில் அமைப்பிலும் நல்ல முன்னேற்றம் உண்டாகும், மக்கள் ஆதரவும் அதன் வழி நன்மையும், இனி வரும் காலங்களில் மிகவும் சிறப்பாக அமையும்.

மீன லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு 1ல் சஞ்சாரம் செய்யும் கேது  பகவான், நல்ல உடல் ஆரோக்கியத்தையும், சிறந்த மன நலனையும் வாரி வழங்குகிறார், சுயமாக வாழ்க்கையில் முன்னேறும் அமைப்பையும், தன்னம்பிக்கையுடன் அனைத்தையும் எதிர்கொண்டு வெற்றி பெரும் யோகத்தையும் தருகிறார், சிறந்த ஆன்மீக அன்பர்களின் அறிமுகமும், பெரியோர்களின் நல்லாசியும், பல புண்ணிய திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகத்தை தரும், வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும், புதிய சிந்தனைகள் மீன லக்கினதரின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டுவரும்.

மீன லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி மிகுந்த லாபத்தையும், முன்னேற்றத்தையும் வாரி வழங்கும் என்றால் அது மிகையில்லை.

குறிப்பு :

 அன்பர்களே மேற்கண்ட யோக அவயோக பலன்கள் யாவும், சுய ஜாதகத்தில் கும்ப லக்கினத்திற்கு தற்பொழுது நடைபெறும் திசை, புத்தி, அந்தரம், 2,8ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும் இதை போன்றே, யோக அவயோக பலன்கள் யாவும், சுய ஜாதகத்தில் மீன லக்கினத்திற்கு தற்பொழுது நடைபெறும் திசை, புத்தி, அந்தரம், 1,7ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும், ஒரு வேலை தற்பொழுது நடைபெறும் திசை, புத்தி, அந்தரம் மேற்கண்ட பாவாக பலன்களை நடத்த வில்லை எனில் மேற்கண்ட யோக அவயோக பலன்கள் யாவும் நடைபெறாது என்பதை நினைவில் நிறுத்தவும்.

 மேலும் சுய ஜாதகரீதியாக லக்கினம் ஆரம்பிக்கும் பாகையை அடிப்படையாக கொண்டு ராகு கேது பெயர்ச்சி பலன்களை நிர்ணயம் செய்வது, ஜாதக பலன்களை மிகவும் துல்லியமாக கணிதம் செய்ய உதவி புரியும்.



வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696