பூர்வபுண்ணியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பூர்வபுண்ணியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 29 அக்டோபர், 2018

குரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - மீனம் )


( குரு பெயர்ச்சியின் மூலம் அபரிவித ராஜ யோக பலன்களை அனுபவிக்கும் வல்லமை பெற்றவர்களில் இரண்டாம் இடம் பெறுபவர்கள் மீன லக்கினத்தினரே என்றால் அது மிகையாகாது ) சுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினாலும், அமர்ந்த இடத்தில் இருந்தும் எதிர்வரும் ஒருவருட காலத்திற்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி விருச்சிகம் முதல் துலாம் வரை, ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !

 ''எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்'' என்பதற்கு இணங்க ஒருவரது வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தில் அதிமுக்கிய பங்கு வகிப்பது உடல் உயிராகிய " ஜென்ம லக்கினமாகும் " ஒருவரது வாழ்க்கையில் நிகழும் யோக அவயோகம், நன்மை தீமை போன்றவற்றை ஜென்ம லக்கினமே நிர்ணயம் செய்கிறது, இதில் ஏதும் மாற்று கருத்து இல்லை, எனவே நவகிரகங்களின் பெயர்ச்சியை ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் காண முற்படுவதே மிக துல்லியமானதாக அமையும், இதுவே அவரவர் சுய தேடுதலுக்கும், முன்னேற்றமிகு யோக வாழ்க்கைக்கும் அடிப்படையாக அமையும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

மேலும் இயல்பாக கடந்த இரண்டு வருடங்களாக எதிர் வர்க்க ( கன்னி-புதன், துலாம்-சுக்கிரன் ) கிரகங்களின் வீடுகளில் சஞ்சாரம் செய்த குரு பகவான் தனது இயற்க்கை குணத்திற்கு மாறாக செயல் இழந்த நிலையில் சுபயோகங்களை வாரி வழங்கும் வல்லமை அற்று காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது, தனது வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டில் ( விருச்சிகம் ) சஞ்சாரம் செய்யும் குருபகவான் தரும் பலாபலன்களை இனி லக்கின வாரியாக சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

லக்கினம் : மீனம்

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 12ம் ராசியாகவும், உபய நீர் தத்துவ தன்மையை பெற்றதுமான மீன ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, சுய வர்க்க கிரகத்தின் வீட்டில் ( விருச்சிகம் )  பெயர்ச்சியாகும் குரு பகவான் மீன லக்கினத்திற்க்கு, லக்கினாதிபதி, ஜீவன ஸ்தான அதிபதி என்ற வலிமையை பெறுகின்றார், இவர் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்வது மீன லக்கின அன்பர்களுக்கு கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் தன்மையை தரும், பெரிய மனிதர்கள் ஆதரவு , சாஸ்திர ஞானம், தெய்வீக  அனுக்கிரகம், கோவில் திருப்பணிகளை சிறப்பாக செய்யும் ஆற்றல், சமூக அந்தஸ்து, பல புனித திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம், அரசியல்வாதிகள் மூலம் பிரபல்ய யோகம், உயர்கல்வி, பட்டய படிப்பில் தேர்ச்சி, பதவி உயர்வு, முன்னோர்களின் சொத்துக்களை பெரும் யோகம், பித்ரு ஆசியின் மூலம் நினைத்த காரியங்கள் மற்றும் லட்சியங்களை அடையும் தன்மை, கலைத்துறை, ஜோதிடம், ஆன்மிகம் போன்றவற்றில் அபரிவிதமான வளர்ச்சி, நல்லோர் அனைவரும் தர்ம்மத்தை காக்கும் யோகம், வெளிநாடு வெளியூர்களில் இருந்து வரும் அபரிவித வளர்ச்சி, வியாபாரத்தில் நார்ப்பெயர், எதிர்பாலின சேர்க்கை வழியில் இருந்து வரும் முன்னேற்றம், தன்னம்பிக்கையும், தைரியமும் அதீத அளவில் ஜாதகருக்கான வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் "வாழ்த்துக்கள்"

குரு பகவான் தனது 5ம் பார்வையால் மீனா லக்கின அன்பர்களுக்கு உடல் உயிர் ஸ்தானமான லக்கின பாவகத்தை வசீகரிப்பது, சிறப்பிலும் சிறப்பை தரும் அமைப்பாகும், குரு தனது பார்வையின் மூலம் நன்மையை தருகிறார் என்பதற்கு இதுவே நல்ல உதாரணம், குரு பகவான் எந்த ஒரு லக்கினம் என்றாலும் சரி 1,5,9ம் பாவகங்களில் சஞ்சாரம் செய்யும் பொழுதும் சரி, தனது 5,9ம் பாவக சுவீகரிப்பின் மூலமும் சரி, சுபயோகங்களை தன்னிறைவாக வாரி வழங்குவார், குறிப்பாக மீன லக்கின அன்பர்களுக்கு லக்கினாதிபதி என்ற முறையில் கோண பாவகத்தில் சஞ்சாரம் செய்து, தனது வீட்டை தானே பார்ப்பது 100% யோக வாழ்க்கையை தரும் அமைப்பாகும், ( சுய ஜாதகத்தில் இந்த அமைப்பு இருப்பின் ஜாதகர் மிகுந்த யோகசாலியாக திகழ்வார் ) உடல் நலம் மன நலம் சிறப்பாக அமையும், தெய்வீக ஆற்றல் ஓங்கும், புதிய சிந்தனை புதிய திட்டமிடுதல்கள் தங்களின் வாழ்க்கையில் சிறப்பு மிக்க யோக வாழ்க்கையை நல்கும், இதுவரை சமுதாயத்தில் போராடிக்கொண்டு இருந்தவர்கள் சுயமாக முன்னேற்ற பாதையில் வெற்றிநடை போடுவார்கள், மனநிம்மதியான யோக வாழ்க்கை, முதலீடுகளில் இருந்துவரும் வருமானம், தெய்வீக அனுக்கிரகம், பல தொழில் செய்யும் யோகம், அந்நிய நபர்கள் மூலம் வாழ்க்கையில் அபரிவித யோக வாழ்க்கையை பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும், லக்கின வழியில் இருந்து 100% விகித நன்மைகளை பெறுவது உறுதி  வாழ்த்துக்கள் .

குரு பகவான் தனது 7ம் பார்வையால் மீன லக்கின அன்பர்களுக்கு வீரிய ஸ்தானம் எனும் மூன்றாம் பாவகத்தை வசீகரிப்பது, வரவேற்கத்தக்கது என்ற போதிலும், சகோதரம் மற்றும் எடுக்கும் முயற்சிகள் வழியில் இருந்து சிறு சிறு இன்னல்கள் உருவாகும், குல தெய்வ ஆசி ஜாதகருக்கு சுபகாரிங்கள் அனைத்திலும் வெற்றியை தரும், கற்ற கல்வி வழியில் இருந்து யோக  வாழ்க்கையும், அபரிவிதமான வருமானமும் தங்களின் வாழ்க்கையில் மேலும் சிறப்பை சேர்க்கும், கலைத்துறையில் உள்ளவர்களுக்கு பெயரும் புகழும் உண்டாகும், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும், தெய்வீக அனுக்கிரகம் கொண்டு வாழ்க்கையில் அறிய பல சாதனைகளை குவிக்கும் நேரமிது, தனது சமயோசித புத்திசாலித்தனம் வாழ்க்கையில் ஏற்றமிகு நல்ல முன்னேற்றங்களை நல்கும், ஆசிரிய பணியில் கல்வி துறையில் உள்ளோருக்கு இந்த குரு பெயர்ச்சி அபரிவித நன்மைகளை வாரி வழங்கும், ஆராய்ச்சியில் உள்ளார்கள் வெற்றி பெறுவார், வியாபாரம் மற்றும் கமிஷன் ஏஜென்ட்  போன்ற தொழில் செய்வோர் வாழ்க்கையில் அபரிவித  முன்னேற்றங்களை  பெறுவார்கள், எதிர்பார்ப்புகள் யாவும் நிறைவேறும் நல்ல நேரமிது, வீரிய ஸ்தான வழியில் இருந்து மீன லக்கின அன்பர்கள் பரிபூர்ண நன்மைகளையும் யோகங்களையும் பெறுவார்கள்.

 குரு பகவான் தனது 9ம் பார்வையால் மீன லக்கின அன்பர்களுக்கு பூர்வபுண்ணிய ஸ்தானம் எனும் 5ம் பாவகத்தை வசீகரிப்பதும், கடகம் சுய வர்க்க கிரகத்தின் ( சந்திரன் ) வீடாக இருப்பதும் வளர்பிறை காலங்களில் நன்மையை தரும், ஜாதகருக்கு திருமண தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிட்டும், கல்வியில் முன்னேற்றம் உண்டு, உயர் கல்வியில் தேர்ச்சி அடைவர், புது முயற்சிகள் யாவும் தன்னிறைவான வெற்றியை தரும், உறவுகள் வழியிலான நன்மைகள் தேடிவரும், கல்வி துறையில் வெற்றி உண்டாகும், குல தெய்வ ஆசி வாழ்க்கையில் அபரிவிதமான முன்னேற்றங்களை நல்கும், ஆய்வு கல்வியில் தேர்ச்சியும் முன்னேற்றமும் உண்டாகும், பல தொழில் செய்யும் யோகம் உண்டு, உணவு பொருட்கள் சாந்த வியாபாரம் செய்வோர் வாழ்க்கையில் அபரிவித வளர்ச்சியை பெறுவார்கள், நல்ல ஆண் வாரிசு அமையும், அறிவில் சிறந்து விளங்கும் தன்மையும், புதிய கண்டுபிடிப்பின் மூலம் உலக புகழும் ஏற்படும், இந்த குரு பெயர்ச்சியின் மூலம் தன்னிறைவான வாழ்க்கையை பெறுவார்கள் மீன லக்கின அன்பர்கள்.

குறிப்பு :

மீன  லக்கின அன்பர்களுக்கு, தற்போழுது நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் சுய ஜாதகத்தில் 9,1,3,5ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக அவயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 9,1,3,5ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்

9443355696

சனி, 25 மார்ச், 2017

சுய ஜாதகத்தில் உள்ள யோகம் அவயோகம், வலிமை மற்றும் வலிமை அற்ற தன்மை பற்றி தெளிவு பெற.....


இறை அருள் அனைவருக்கும் எப்பொழுதும் தனது அருள் கரங்களை கொண்டு, வேண்டும் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்க தயாராக இருப்பதை இறை அருள் நிரம்ப பெற்ற திருகோவில்களில், சிலை வடிவில் உள்ள இறைவனை காணும் பொழுது நாம் அனைவரும் உணர்வு பூர்வமாக உணர இயலும், "அவனின்றி ஓர் அணுவும் அசையாது" என்பதனை அனைவரும் உணர்வது அவசியமாகிறது, சுய ஜாதகத்தில் இறை அருளின் பரிபூர்ண கருணையை பெற அடித்தளமாக அமையும் பாவகங்கள், லக்கினம் எனும் முதல் பாவகம், பூர்வபுண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம், மற்றும் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் பாவகம் என்றால் அது மிகையில்லை.

சுய ஜாதகத்தில் லக்கினம், பூர்வபுண்ணியம் மற்றும் பாக்கிய ஸ்தானம் வலிமை பெற்று இருக்கும் ஜாதகர்களின் வாழ்க்கையில் இறை அருளின் கருணை சற்று அதிகம் என்றே சொல்லலாம், இவர்களுக்கு தடைகள் என்பது எதுவும் இல்லை என்ற நிலை வாழ்நாள் முழுவதும் நீடிக்கும், செய்யும் காரியங்கள் யாவிலும் சத்தியத்தை கடைபிடிக்கும் உத்தம நிலையை தருகிறது, சரியானதை லக்கினம் தேர்வு செய்கிறது, சிறப்பான நன்மைகளை பூர்வபுண்ணியம் வழங்குகிறது, நன்மைகள் வழியிலான பூர்ணகதியை பாக்கிய ஸ்தானம் நல்குகிறது, எனவே ஜாதகர் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் தேடி செல்லாமல், தம்மை தேடிவரும் வழியிலான செயல்களை செய்து சிறப்படைகிறார், எனவே சுய ஜாதகத்தில் மேற்கண்ட 1,5,9ம் பாவகங்கள் வலிமை பெறுவது, எந்த ஓர் சூழ்நிலையிலும் இறையருளின் கருணையினால் ஜாதகர் நிலையான சுபயோக வாழ்க்கையை பெறுகிறார்.

சுய ஜாதகத்தில் உள்ள வலிமை வலிமை அற்ற நிலையை, யோகம் அவயோகம், தனது சுய ஜாதக வலிமையின் அடிப்படையில் ஜாதகர் பெரும் நன்மை தீமை ஆகியவற்றை சம்பந்தப்பட்ட ஜாதகர் துல்லியமாக அறிந்துகொள்ளவே சுய ஜாதகத்தில் மேற்கண்ட 1,5,9ம் பாவகங்கள் வலிமை பெற்று இருப்பது அவசியமாகிறது, சுய ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் வலிமை பெரும் பொழுது சம்பந்தப்பட்ட ஜாதகர் தன்னிலை முழுவதும் உணர்ந்தவராக திகழ்வார், வீண் கற்பனையில் காலத்தை எதிர்கொள்ளாமல், தனது சுய வலிமையையும், தனது திறமை மற்றும் தகுதியும் உணர்ந்து செயல்படும் யோகம் பெற்றவராக இருப்பார், குறிப்பாக தனது பிறவியின் நோக்கம் அறிந்து செயல்படும் வல்லமை பெற்றவராக திகழ்வார், மேற்கண்ட பாவகம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் சிறு வயது முதலே மிகுந்த விழிப்புணர்வுடன் திகழ்வார், மனதிற்கு அப்பாற்ப்பட்ட, புலனறிவுக்கு அப்பாற்ப்பட்ட சக்தி ஜாதகருக்கு இயற்கையாகவே அமைந்து இருக்கும், எதிலும் தெளிவு, அறிவார்ந்த செயத்திறன், தன்னம்பிக்கை மற்றும் மனஉறுதி இவர்களின் வாழ்க்கையில் சிறப்பு மிக்க சுபயோகங்களை வாரி வழங்கும்.

நல்ல மனிதர்கள் சேர்க்கை, சமூகத்தில் பெரிய மனிதர்கள் அறிமுகம், ஆன்மீக பெரியோர்களின் ஆசி, குலதெய்வ அனுக்கிரகம், பித்ருக்கள் நல்லாசி ஆகியவற்றை பெற சுய ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் மிகவும் வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, மேலும் தனக்கு உகந்த விஷயங்களையும், தனக்கு உகந்த காரியங்களையும் தேர்வு செய்வதற்கு மேற்கண்ட பாவகங்களின் வலிமை மிக மிக அவசியமாகிறது, வருமுன் உணரும் சக்தியும், விளைவு அறிந்து செயல்படும் வல்லமையும் மேற்கண்ட பாவக வலிமையின் அடிப்படையிலேயே ஒருவருக்கு அமைகிறது, மேலும் தனக்கு வரும் இன்னல்கள் மற்றும் துன்பங்களை இறைவழியில் நின்று வாழ்க்கையில் வெற்றி பெறவும், தன்னால் சாதிக்க இயலும் செயல்களை தேர்வு செய்து முன்னேற்றங்களை பெறவும் லக்கினம்,பூர்வபுண்ணியம் மற்றும் பாக்கிய ஸ்தான வலிமையே ஓர் ஜாதகருக்கு அடிப்படை உந்துதலாக இருக்கின்றது.

கால நேரம் அறிந்து செயல்படும் தன்மையும், சுய ஜாதக வலிமை நிலையை பற்றிய தெளிவாக அறிந்து உணர்ந்து செயல்படும் வல்லமையையும், வாழ்க்கையில் வரும் சுப யோகங்களை தெளிவாக உணர்ந்து அதன் வழியிலான நன்மைகளை பெரும் ஆற்றலும் ஓர் ஜாதகருக்கு மேற்கண்ட பாவகங்களின் வலிமையின் அடிப்படையிலேயே அமைகிறது, சுய ஜாதகத்தில் மேற்கண்ட 1,5,9ம் பாவகங்கள் மட்டும் வலிமை பெற்று இருந்தால் சம்பந்தப்பட்ட ஜாதகர் தனது வாழ்க்கையை மிக சிறப்பாகவும், முன்னேற்றம் மிகுந்ததாகவும் அமைத்துக்கொண்டு 100% விகித சுபயோகங்களை பெறுவார் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

புதன், 16 மார்ச், 2016

பூர்வ புண்ணிய ஸ்தானம் எனும் 5ம் பாவகம் பாதிக்க பட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்காத ?


 பூர்வ புண்ணிய ஸ்தானம் எனும் 5ம் பாவகம் பாதிக்க பட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்காத ?

தம்பதியர் இருவரின் ஜாதகத்திலும் பூர்வ புண்ணிய ஸ்தானம் எனும் 5ம் பாவகம் பாதிக்க பட்டால், குழந்தை பாக்கியத்தில் தடை செய்யும், தம்பதியர் இருவரின் ஜாதகத்திலும் பூர்வ புண்ணிய ஸ்தானம் எனும் 5ம் பாவகம் கடுமையாக பாதிக்க பட்டால், தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பது அரிது, பொதுவாக சுய ஜாதகத்தில் தம்பதியர் இருவரின் ஜாதகத்திலும் 5ம் பாவகம் பாதிக்க பட்டு இருந்தால் மட்டுமே புத்திர பாக்கியத்தில் குறைகளை தரும், மாறாக ஒருவரது ஜாதகத்தில் புத்திர பாக்கியம் நல்ல நிலையில் வலிமை பெற்று இருந்து, ஒருவரது ஜாதகத்தில் பாதிக்க பட்டு இருப்பின் புத்திர பாக்கியம் அமையும், மேலும் சாய கிரகங்களான ராகுகேது  5ம் பாவகத்தில் அமர்வது புத்திர பாக்கியத்தை தாராது என்று முடிவு செய்வது உண்மைக்கு புறம்பானதே, 5ல் அமர்ந்த சாயா கிரகங்கள் ஜாதகருக்கு தொடர்ந்து ஆண் வாரிசாகவே வழங்குவதும் உண்டு, 5ல் அமர்ந்த சாய கிரகங்கள் 5ம் பாவகத்தை வலிமை பெற செய்யுமாயின், மேற்கண்ட பலன்கள் ஜாதகருக்கு நடைமுறைக்கு வரும்.

5ம் பாவகம் கடுமையாக பாதிக்க படும் நிலை :

சுய ஜாதகத்தில் 5ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது 200% விகித பாதிப்பை, புத்திர பாக்கிய அமைப்பில் இருந்து தரும், சர லக்கினத்திற்கு 11ம் பாவகத்துடனும், ஸ்திர லக்கினத்திற்கு 9ம் பாவகத்துடனும், உபய லக்கினத்திற்கு 7ம் பாவகத்துடனும் சம்பந்தம் பெரும் 5ம் வீடு ஜாதகருக்கு நிச்சயம் புத்திர பாக்கிய தடைகளை தரும், குழந்தையே அற்ற நிலை, கருசிதைவு, புத்திரசோகம், சிறப்பு குழந்தைகள் என ஜாதகருக்கு புத்திர பாவக வழியில் இருந்து  வெகுவான பாதிப்புகளை வழங்கும்.

5ம் பாவகம் பாதிக்க படும் நிலை :

ஜாதகருக்கு 5ம் வீடு 4,8,12ம் பாவகங்களுடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு புத்திர பாக்கியத்தில் 60% விகத தடைகளை தரும், தாமத புத்திர பாக்கியம், பெண் குழந்தை மட்டும் வாரிசாக அமையும் தன்மை, மருத்துவ உதவியுடன்  செயற்கை முறையில் குழந்தை பாக்கியம் பெரும் தன்மை, தனது குழந்தைகள் வழியில் இருந்து மன கவலைகளையும், மன உளைச்சல்களையும் எதிர்கொள்ளும் தன்மை என ஜாதகருக்கு புத்திர பாக்கிய அமைப்பில் இருந்து அதிக இன்னல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், 

மேற்கண்ட 5ம் பாவக பாதிப்புகள் தம்பதியர் இருவரின்  ஜாதகத்திலும் அமைந்தால் மட்டுமே நடைமுறைக்கு வரும், ஒருவருக்கு மட்டும் இருப்பின் மேற்கண்ட பாதிப்புகளில் 10% விகிதம் மட்டுமே நடைமுறைக்கு வரும்.

5ம் பாவகம் கடுமையாக பாதிக்கபட்ட ஓர் உதாரண ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே, மேலும் அந்த ஜாதகர் 5ம் பாவக பாதிப்பில் இருந்து வெளிவரும் வழிமுறையையும் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம்!


லக்கினம் : மிதுனம் 
ராசி : விருச்சிகம் 
நட்சத்திரம் : கேட்டை 1ம் பாதம் 

ஜாதகருக்கு மிதுன லக்கினம், குழந்தை பாக்கியத்தை வழங்கும் 5ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம், ஜாதகருக்கு இதுவரை புத்திர பாக்கியம் கிட்டவில்லை, ஜாதகரின் வாழ்க்கை துணைக்கு சில முறை கரு சிதைவும் ஏற்ப்பட்டுள்ளது, மேலும் ஜாதகரின் 5ம் வீடு தொடர்பு பெரும் பாதக ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமாக வருவது, ஜாதகரின் முன்னோர்கள் செய்த வினை பதிவின் தாக்கத்தை காட்டுகிறது, மேலும் ஜாதகரின் 9ம் வீடும் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, பித்ரு சாபத்தின் தன்மையை தெளிவாக்குகிறது, எனவே ஜாதகருக்கு குல தெய்வம் பிதுர்க்கள் ஆசியும் அற்று, சாபம் என்ற நிலையை அதிகரிக்கின்றது, எனவே ஜாதகருக்கு புத்திர பாக்கிய குறைகளையும், புத்திர சோகத்தையும் வாரி வழங்குகிறது.

ஜாதகரின் வாழ்க்கை துணையின் ஜாதகத்திலும் 5ம் பாவகம் பாதிக்க படுவது, ஜாதகருக்கு நல்ல வாரிசு அமைவதை கேள்விகுரியாக்குகின்றது, ஜாதகர் 5ம் பாவக வழியில் இருந்து இன்னல்கள் அனுபவிப்பதை தவிர்க்க  இயலவில்லை, தற்பொழுது நடைபெறும் சுக்கிரன் திசை ஜீவன ஸ்தான வழியில் இருந்து யோகங்களை தந்த போதிலும், நடைபெற்ற செவ்வாய் புத்தி 8ம் பாவக பலனை வழங்கி திடீர் இழப்புகளை வழங்கியது, தற்பொழுது நடைபெறும் ராகு புத்தி ஜாதகருக்கு 2ம் பாவக பலனை தருவது நன்மைகளை தரும் என்று ஜாதகர் மகிழ்ச்சி அடையலாம்.

ஜாதகர் உடனடியாக செய்ய வேண்டிய பரிகாரங்கள் :

1) ஜாதகர் தான் குடியிருக்கும் பூர்வீக இடத்தை விட்டு வேறு இடத்தில் குடி பெயர்வது 5ம் பாவக இன்னல்களை தவிர்க்க வழிவகுக்கும், நல்ல புத்திர பாக்கியம் அமைய வாய்ப்பை அதிகரிக்கும், குறைவில்லா புத்திர பாக்கியத்தை வழங்கும்.

2) ஜாதகர் தனது குல தெய்வ வழிபாட்டினையும், பித்ரு வழிபாட்டினையும், எதிர் வரும் அமாவசை திதியில் அண்ணதானம் செய்து  வழிபடுவது சகல நலன்களையும் தரும்.

3) தமக்கு உகந்த திசை வாயிற்படி கொண்ட வீட்டில் குடியிருப்பது, புத்திர பாக்கியம், குடும்பம், ஜீவனம் என சகல அமைப்பில் இருந்தும் நன்மைகளை வாரி வழங்கும்.

ஜாதகருக்கு 5ம் பாவகம் கடுமையாக பாதிக்க படும்பொழுது, தனது பூர்வீகத்தில் இருந்து வெளியே சென்று ஜீவனம் மேற்கொள்வதே சால சிறந்தது, ஏனெனில் பூர்வீகத்தில் ஜாதகர் இருக்கும் வரை எவ்வித முன்னேற்றமும் ஏற்படாது, சுய ஜாதகத்தில் உள்ள யோக பலன்களும் நடைமுறைக்கு வர வாய்ப்பில்லை என்பது கவனிக்க தக்க அமசமாகும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696   

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

புத்திரபாக்கியமும் ( ஆண் வாரிசு ) சுய ஜாதகத்தில் 5ம் பாவக வலிமையையும்!


 தனது குலம் தழைக்கவும், சந்ததி விருத்திக்காகவும் திருமணம் ஆனா சில வருடங்களிலேயே ஒரு நல்ல ஆண் மகவை பெற்று தரும் பெண்களுக்கு மிகப்பெரிய மதிப்பும் மரியாதையையும், இந்த சமூகம் கொடுக்க தவறியது இல்லை எனலாம், பொதுவாக ஆண் வாரிசு அமைவது மருத்துவ ரீதியாக தம்பதியரில் ஆணுக்கே அதிக பங்கு உண்டு என்று சொன்னாலும், ஜாதக ரீதியாக தம்பதியர் இருவருக்கும் பங்கு உண்டு என்பதே உண்மை, சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் என்று வர்ணிக்கப்படும் 5ம் பாவகம் திருமணமான தம்பதியர் இருவரின் ஜாதகத்திலும் வலிமை பெற்று இருப்பதே சிறந்த புத்திர ( ஆண் ) பாக்கியத்தை தரும், மேலும் பிறந்த குழந்தையின் வழியில் இருந்து யோக வாழ்க்கையை அனுபவிக்கவும் வழிவகுக்கும்.

தம்பதியரின் சுய ஜாதகங்களில் 5ம் பாவகம் ஒருவருக்கு நல்ல வலிமை பெற்று இருப்பதும், ஒருவருக்கு வலிமை அற்ற நிலையில் இருப்பதும் அல்லது இருவருக்கும் 5ம் பாவகம் வலிமை அற்று இருப்பதும் பெண்குழந்தை பிறப்பில் தடை எதையும் செய்வதில்லை, ஆனால் ஆண்வாரிசு அமைவதற்கு பல தடைகளை தருகிறது, சுய ஜாதகத்தில் 5ம் பாவகம் 4,6,8,12ம் வீடுகளுடன் தொடர்பு பெறுவதும் அல்லது பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவதும் புத்திரபாக்கியத்தில் குறையை தருகிறது, தம்பதியர் இருவரது ஜாதகத்திலும் 5ம் பாவகம் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவது புத்திர பாக்கியத்தை ( பெண் குழந்தைக்கு அமைவதற்கு கூட ) கேள்விக்குறியாக்கும், இந்த அமைப்பை பெற்ற தம்பதியர் 5ம் பாவக வழியில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து புத்திர பாக்கியங்களை பெறுவதற்கு, சுய ஜாதகமும், இறை அருளும் வழிகாட்ட வேண்டும், இதற்க்கு எதிர்பதமாக அமையும் பொழுதே தம்பதியருக்கு புத்திர பாக்கியம் அற்ற நிலையை தருகிறது.

இதை ஓர் உதாரண ஜாதகங்களை கொண்டு ஆய்வு செய்வோம் அன்பர்களே !

தம்பதியருக்கு திருமணம் நடந்து 7 வருடங்கள் முடிந்து விட்டது, இதுவரை தம்பதியருக்கு 3 பெண் குழந்தைகள், ஆண் வாரிசு இல்லை, இவர்களது சுய ஜாதகத்தை ஆய்வு செய்வோம்.

ஆண் ஜாதகம் :


லக்கினம் : தனுசு 
ராசி : மகரம் 
நட்சத்திரம் : உத்திராடம் 4ம் பாதம் 

பெண் ஜாதகம் :


லக்கினம் : மகரம் 
ராசி : மகரம் 
நட்சத்திரம் : உத்திராடம் 4ம் பாதம் 


தம்பதியர் இருவரது ஜாதகத்திலும் 5ம் பாவகத்தை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே! 

ஆணின் ஜாதகத்தில் குழந்தை பாக்கியத்தை குறிக்கும் 5ம் பாவகம் சத்ரு ஸ்தானமான 6ம் வீட்டுடன் தொடர்பு, மேலும் தற்பொழுது  நடைபெறும் ராகு திசையும் ஜாதகருக்கு 7,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று பலனைதருவது சிறப்பானது அல்ல, மேலும் 12ம் பாவகம் பாதிக்க பட்டு ஜாதகருக்கு தனுசு ராசியிலேயே அமைவதும், தனுசு ராசி கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமாக வருவதும் ஜாதகரின் முன்னோர்கள் செய்த வினை பதிவை அனுபவிக்கும் தன்மையை தருகிறது.

பெண்ணின் ஜாதகத்தில்  குழந்தை பாக்கியத்தை குறிக்கும் 5ம் பாவகம் பாதக ஸ்தானமான 11ம் வீட்டுடன் தொடர்பு, எனவே ஜாதகிக்கு ஆண்வாரிசு இல்லை என்பதை தெள்ள தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது, ஜாதகிக்கு நடைபெறும் ராகு திசை 3,9ம் பாவக பலனை ஏற்று நடத்துவது குழந்தை இல்லை என்ற குறையை ( பெண் குழந்தை ) போக்கியது, மேலும் ஜாதகியின் 11ம் பாவகமும் தனுசு ராசியில்  அமைவதும், தனுசு ராசி கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமாக வருவதும் ஜாதகியும் தனது முன்னோர்கள் செய்த வினை பதிவை அனுபவிக்கும் தன்மையை தருகிறது.

தம்பதியர் இருவரது ஜாதகத்திலும் 5ம் பாவகங்கள் முறையே ரிஷபத்திலும், மிதுனத்திலும் அமைவது, ஜாதகருக்கு ஸ்திர மண் தத்துவ ( உடல் ) அமைப்பில் இருந்து பிரச்சனைகளையும், ஜாதகிக்கு உபய காற்று தத்துவ  ( மன ) அமைப்பில் இருந்து பிரச்சனைகளையும் தொடர்ந்து தருவது புத்திர பாக்கியத்தை கேள்விகுறி ஆக்கும் அமைப்பாக கருதலாம்.

ஒருவரின் சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகமோ, அல்லது பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகமோ பாதிக்கபட்டு இருப்பின் ( பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்று இருந்தாலும் சரி ) மிக எளிதாக நிவர்த்தியை பெற்று 5,9ம் பாவக வழியில் இருந்து வரும் நன்மைகளை பெற இயலும் என்பது  கவனிக்கத்தது, சுய ஜாதக அமைப்பின்படி சரியான தீர்வுகளை தேடி நலம் பெருக.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

பூர்வ புண்ணிய ஸ்தான வலிமையும், ஜாதகரின் மதிநுட்பமும் !




வாழ்க்கையில் அறிவு சார்ந்த விஷயங்களில் புதுமையான அணுகுமுறையும், புதிய திட்டங்களை நடைமுறைபடுத்தி பல வியக்கத்தக்க வெற்றிகளை குவிக்க வைக்கும் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவக வலிமையை பற்றி இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே! "கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு" என்ற வாக்கிற்கு இணங்க சுய ஜாதகத்தில் அதி புத்திசாலிதனமான நுண் அறிவுக்கும், 64 கலைகளில் தேர்ச்சிக்கும் வழிகோலுவது பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகமே என்றால் அது மிகையில்லை, 5ம் பாவகம் வலிமை பெற்ற ஜாதகருக்கு, நடைமுறையில் உள்ள திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் வலிமை பெற்ற 5ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் ஜாதகரின் அறிவு திறனுக்கும், புதிய அணுகுமுறைக்கும் பஞ்சமே இருக்காது, மேலும் ஜாதகரின் சமயோசித புத்திசாலிதனத்தால் ஆதாயம் என்பது பன்மடங்கு கூடும் என்பது கவனிக்க தக்கது, பலவிதமான புதிய விதிகளை உலகிற்கு அறிமுகம் செய்யும் வல்லமையை தந்துவிடும்.

ஜாதகரின் புதிய கண்டுபிடிப்புகள் பூமியில் உள்ள மனிதர்களின் வாழ்க்கையில் பங்கெடுக்கும், மனித குலத்திற்கு பெருமைசேர்க்கும், அனைவருக்கும் பயன்படும் விதத்தில் இவர்களின் கண்டுபிடிப்புகள் பயனுள்ளதாக அமையும், புதிய சிந்தனை மற்றும் புதிய மாற்றங்களுக்கு உரிமை கொண்டாடும் தனித்திறமைகளை தன்னகத்தே கொண்டுள்ள அன்பர்களின் ஜாதகங்களில், 5ம் பாவக வலிமையை நாம் உணர இயலும், இயற்கையாகவே இவர்களின் சிந்தனை மற்றும் கேள்விகளுக்கு சரியான பதில்களை இந்த பிரபஞ்சம் வாரி வழங்கும், எவ்வித பிரச்சனைகள் மற்றும் இன்னல்களுக்கும் சரியான தீர்வுகளை, சரியான நேரத்தில் வழங்கும் வல்லமை கொண்டவர்கள், சிறு வயதுமுதலே அறிவுத்திறனில் சிறந்து விளங்கும் யோகம் பெற்றவர்கள், பன்முக திறமை சாஸ்திர அறிவு, சாஸ்திரத்தில் தேர்ச்சி, கற்ற கல்வியை தனது முன்னேற்றத்திற்கும் தன்னை சார்ந்தவர்களின் முன்னேற்றத்திற்கும் பயன்படுத்தும் யோகம் பெற்றவர்கள், குறிப்பாக 5ம் பாவகம் வலிமை பெற்றுள்ள அன்பர்கள் பெரும் யோகத்தை  விட, இவரை சார்ந்தவர்கள் பெரும் யோகம் மிகவும் அளப்பரியதாக அமையும் என்பது கவனிக்க தக்கது.

குல தெய்வத்தின் பரிபூர்ண ஆசிகளின் மூலம் வாழ்க்கையில் சகல நலன்களையும் பெரும் யோகத்தை தரும், வருமுன் உணரும் சில சிறப்பு சக்திகள் இயற்கையாகவே அமையபெற்று இருப்பார்கள், வாக்கு பலிதமும், உள்மனதின் எண்ண ஓட்டங்களை தெளிவாக உணரும் யோகம் பெற்றவர்கள், யோகம்,தியானம்,தவம் மூன்றிலும் தேர்ச்சி பெறுவார்கள், சிந்தனை திறனும் செயல்திறனும் ஒருங்கே அமையபெற்றவர்கள், ஆராய்ச்சிகளில் வெற்றியும் புகழும் உண்டாகும், கலைத்துறையில் சிறந்து விளங்கும் யோகம் உண்டு, இயல், இசை, நாடக துறைகளில் அபரிவிதமான தேர்ச்சியை தரும், உலக புகழ் பெரும் யோகமும், சுய முயற்ச்சியிலேயே தன்னிறைவான வாழ்க்கை வசதிகளையும் அனுபவிக்கும் தன்மையும், மிகப்பெரிய நிறுவனங்களையும், சாம்ராஜ்ஜியத்தையும் உருவாகும் சிற்ப்பிகளாக திகழ்வார்கள்.

பொதுவாக பூர்வபுண்ணிய ஸ்தானம் வலிமை பெறுவது குறிப்பிட்ட ஜாதகருக்கு சிறந்த புத்திர பாக்கியத்தை நல்குகிறது, தனக்கு பிறகு தனது எண்ணங்களையும் லட்சியங்களையும் நிறைவேற்றும் விதமான வாரிசு அமைப்பை ஜாதகர் பெறுகிறார், ஜாதகருக்கு பிறக்கும் குழந்தையும் நல்ல அறிவு திறனும், புத்திசாலித்தனமும் நிரம்பபெற்ற குழந்தையாகவே அமைவது சுய ஜாதகத்தில் உள்ள புத்திர ஸ்தான வலிமையே, " தோன்றின் புகழோடு தோன்றுக" என்ற வள்ளுவரின் வாக்கிற்கு இணங்க ஜாதகரும், ஜாதகரின் வாரிசும் நல்லறிவும் நல்ல குணமும், பரந்த மனப்பக்குவமும் பெற்று இருப்பார்கள், இவர்களின் வாழ்க்கையில் 5ம் பாவக பலன்கள் நடைமுறையில் வரும் பொழுது கலைகளில் தேர்ச்சி, கல்வியில் வெற்றி, போட்டி பந்தையங்களில் சிறப்பான வெற்றிகள், சமுதாயத்தில் தனது அறிவுக்கும் ஆற்றலுக்கும் அங்கீகாரம், அரசு ஆதாயம் என மிகுந்த நன்மைகளை பெறுவார்கள்.

5ம் பாவக வலிமை என்பது தனது சந்ததிகளையும், தம்மை சார்ந்தவர்களையும் வாழ்க்கையில் தன்னிறைவான சுகபோகங்களை அனுபவிக்க வைக்கும் அறிவும், புத்திசாலித்தனமும் கொண்டவர்களாக இருப்பார்கள், குறிப்பாக பல கோடிரூபாய் செலவு செய்யுங்கள், ஆனால் ஒரு ரூபாய்கூட விரையம் செய்தீர்கள் என்ற வார்த்தைக்கு உதாரணமாக திகழ்வார்கள், இதை போன்றே  இவர்களுக்கு சம்பாத்தியம் என்பது மிக கடினமான விஷயமாகவே இருக்க வாய்ப்பில்லை, அதேசமயம் சத்தியம் வாய்மையை காப்பாற்றும் குணம் கொண்டவர்கள், இவர்களின் செயல்களினால் எந்த ஒரு சிறு இன்னல்களும் மற்றவர்களுக்கு ஏற்ப்படாவண்ணம் பார்த்துகொல்வதில் கைதேர்ந்தவர்கள், வியாபாரத்தில் பல நுணுக்கமான விஷயங்களை கையாளும் திறமை பெற்றவர்கள்.

முற்போக்கு சிந்தனையும், வருமுன் காக்கும் திட்டமிடுதல்களுடன் செயல்படும் அன்பர்கள், மன உறுதி, மனோதிடம் நிறைவாக பெற்றவர்கள் என்பதால் எந்த ஒரு காரியத்தையும் உறுதியாக தன்னம்பிக்கையுடன் செய்து வெற்றி பெரும் யோகம் கொண்டவர்கள், வாழ்க்கையில் ஏற்ப்படும் எதிர்ப்பு மற்றும் போராட்டங்களை தகர்த்தெறிந்து, தெளிவான சிந்தனையுடனும் உறுதியான மன நிலையுடன் வாழ்க்கையை சிறப்பாக எதிர்கொள்ளுவார்கள், இவர்களின் ஆலோசனையின் பெயரில் நடைபோடும் அனைவருக்கும், பல வெற்றிகள் வாழ்க்கையில் வந்து குவியும் என்பது மறுக்க இயலாத உண்மை, மேலும் சிறந்த குடும்ப நல ஆலோசகர், ஆசிரியர், மருத்துவர், வழக்கறிஞர், ஜோதிடர் போன்றோர் ஒருவருக்கு சரியாக அமைவதும் 5ம் பாவக வலிமையே, சரியான கால நேரம் அறிந்து செயலாற்றுவதும், தனக்கு அமைந்த நேரத்தை சிறந்த நேரமாக மாற்றும் வல்லமை பெற்றவர்கள்.

எந்த ஒரு ஜாதகத்திலும் பூர்வபுண்ணிய ஸ்தானம் எனும் 5ம் பாவகம் வலிமை பெற்று அமைவது, குறிப்பிட்ட ஜாதகத்தில் மற்ற பாவகங்களில் இருந்து வரும் இன்னல்களை களைந்து வாழ்க்கையில் வெற்றி நடை போடவைக்கும், ஜாதகருக்கு அறிவு திறனும், புத்திசாலித்தனமும் மிதமிஞ்சி நிற்கும், மேலும் சுய ஜாதகத்தில் எந்த லக்கினம் என்றாலும், காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் வீடான சிம்ம ராசி ( சிம்ம ராசி எந்த பாவகமாக அமைந்தாலும் அந்த பாவகம் வலிமை பெறுவது ) வலிமை பெற்று அமைவது ஜாதகருக்கு ஒரு வரபிரசாதமே, தனக்கு வரும் அனைத்து பிரச்சனைகளுக்கும் இன்னல்களுக்கும் சுயமாகவே தீர்வு கண்டு வாழ்க்கையில் வெற்றி காண்பார்கள், பல்துறை அறிவும், ஒரே நேரத்தில் பலவிஷயங்களில் கவனம் செலுத்தும் வல்லமையை தரும், 5ம் பாவக வலிமை தனக்கு நிகராக வேறொருவரும் இல்லை என்ற நிலையை தரும், உலகில் தனித்து வெற்றிகரமாக இயங்கும் சக்தியை இறைஅருள் மற்றும் இயற்க்கை இவர்களுக்கு அளித்த கொடையாகவே கருதலாம். 

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 25 ஏப்ரல், 2015

வரனின் ஜாதகத்தில் 5ல் ராகு என்றால் புத்திர பாக்கியம் (ஆண் வாரிசு) கிடைக்காதா ?


5ல் ராகு அமர பெற்ற ஆண்களின் ஜாதகங்களை பார்க்கும் பெண்ணை பெற்றவர்கள், மறு பேச்சுக்கே இடமில்லாமல் தங்களது பெண்ணை திருமணம் செய்து தர மறுக்கின்றனர், இதை 5ல் ராகு அமைய பெற்ற திருமணம் ஆகாத இளைஞர்களிடமும் அவர்களை பெற்றவர்களையும் கேட்டல் கதை கதையாக சொல்வார்கள், உண்மையில் இவர்களது ஜாதகத்தை ஆய்வு செய்யும் ஜோதிடர்கள் ராகு பகவான் உண்மையில் 5ம் பாவகத்தில்தான் அமர்ந்து இருக்கின்றாரா? 5ல் அமர்ந்த ராகு பகவான் ஜாதகருக்கு எவ்விதம் தீமையை செய்கிறார்? லக்கினத்திற்கும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கும் எந்த ராசியுடன் சம்பந்தம் பெறுகிறார், ராகு பாகவானால் பாதிக்க பட்ட 5ம் பாவகத்தின் பலனை தற்பொழுது நடைபெறும் திசை புத்தி ஏற்று நடத்துகிறதா? எதிர்வரும் திசை புத்தி ஏற்று நடத்துகிறதா ? என்ற கேள்விகளும் துணை கேள்விகளும் நிறைய உண்டு, ஆனால் நமது ஜோதிட அன்பர்கள் 5ல் ராகு அமர்ந்தாலே ஜாதகருக்கு "புத்திர பாக்கியம்" கிடையாது என்ற முடிவுக்கு வருவது எப்படி? என்று தெரியவில்லை.  

இவர்கள் சொல்லும் வார்த்தையை வேதவாக்காக எடுத்து கொள்ளும் பெண்ணை பெற்றவர்களின் மன நிலையும் விளங்க வில்லை, சுய ஜாதகத்தில் ஒருவருக்கு லக்கினத்தில் இருந்து 5ம் பாவகம் பூர்வ புண்ணியம் என்று வர்ணிக்கப்படும், புத்திர ஸ்தானம் இந்த பாவகத்தில் அமரும் ராகு பகவான் ஜாதகருக்கு புத்திர பாக்கியத்தை தர மாட்டார் என்று முடிவு செய்வது முற்றிலும் ஜோதிட கணித அமைப்பிற்கு முரண்பட்ட கருத்தாகவே " ஜோதிடதீபம் " கருதுகிறது, 5ல் ராகு அமைய பெற்ற ஜாதகருக்கு ஆண் வாரி உள்ள ஜாதகங்கள் நிறைய நம்மிடம் உதாரணம் உண்டு அன்பர்களே ! 

இருப்பினும் 5ல் ராகு அமர்ந்த ஜாதகத்தை குத்து மதிப்பாக "புத்திரபாக்கியம் " கிடையாது என்று ஒதுக்குவது முற்றிலும் தவறு என்றே தோன்றுகிறது, 5ல் ராகுகேதுவை பற்றி இதற்க்கு முந்தைய பதிவுகளில் ஜோதிடதீபம் மிகவும் விரிவாக ஆய்வு செய்து கட்டுரை எழுதியிருக்கிறது, குத்து மதிப்பாக 5ல் ராகு புத்திர பாக்கியம் கிடையாது என்று ஒதுக்கும் ஜோதிடர்கள் அனைவரும், முறையாக ஜோதிடகணிதம் கற்றவர்கள்தான ? என்ற கேள்வி எழுகிறது, இந்த குழப்பங்களுக்கு கிழ்கண்ட விளக்கங்களை தர " ஜோதிடதீபம் " கடமை பட்டுள்ளது.

ராகு 5ல் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் :

1) ஜாதகரின் லக்கினத்தில் இருந்து 5ம் ராசியில் ராகு அமர்ந்து இருப்பதை வைத்து 5ல் ராகு என்று முடிவு செய்வது முற்றிலும் தவறு, ஜாதகரின் 5ம் பாவகம் ஆரம்பிக்கும் பாகை முதல், பாவகம் முடிவு பெரும் பாகைக்கு உட்ப்பட்ட 5ம் பாவகத்தில் ராகு அமர்ந்து இருக்கின்றாரா? என்பதை ஜாதகரின் பாவக ஆரம்பம், மதியம், முடிவு நிலையை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்யவேண்டும்.

2) 5ல் அமர்ந்த ராகு ரிஷபம், மிதுனம் ( சூரியனுடன் 16 பாகைக்குள் சேராத புதன்), கடகம் ( வளர்பிறை சந்திரன் ), கன்னி ( சூரியனுடன் 16 பாகைக்குள் சேராத புதன்) துலாம், தனுசு,மீனமாக இருந்தால் ஜாதகரின் 5ம் பாவகத்தை 100% விகிதம் வலிமை பெற செய்யும் தன்மையை ராகு இயற்கையாக பெற்று விடுவார், எனவே இந்த அமைப்பில் 5ல் ராகு உள்ள ஜாதகங்கள் அனைத்தும் புத்திர பாக்கிய யோகம் உள்ளதாகவே கருதலாம், ( பெரும்பாலும் இவர்களுக்கு ஆண் குழந்தைகளாகவே எவ்வித தடையும் இன்றி பிறக்கின்றது)

3) 5ல் அமர்ந்த ராகு மேஷம்,மிதுனம்  ( சூரியனுடன் 16 பாகைக்குள் சேர்ந்த புதன்),கடகம் ( தேய் பிறை சந்திரன் ), சிம்மம்,கன்னி  ( சூரியனுடன் 16 பாகைக்குள் சேர்ந்த புதன்), விருச்சிகம்,மகரம்,கும்பமாக இருந்தால் ஜாதகரின் 5ம் பாவகத்தை 100% விகிதம் வலிமை அற்று போக செய்யும் தன்மை ராகு பகவானுக்கு உண்டு, எனவே இந்த அமைப்பில் 5ல் ராகு உள்ள ஜாதகங்கள் அனைத்தும் புத்திர பாக்கியத்தில் தடை உள்ள ஜாதகமாக எடுத்துகொள்ளலாம், ஆனால் இது ஆண் வாரிசு என்ற அமைப்பில் மட்டுமே குறையை தரும், பெண் குழந்தை கிடைப்பதில் எவ்வித தடையும் இல்லை, ஒருவேளை ஜாதகர் தனது பூர்வீகத்தில் இருந்து வெகு தொலைவில் இருப்பின் ( 100கிமீ அப்பால் ) ஆண்வாரிசே நிச்சயம் கிடைக்கும்.

4) பெரும்பாலும் 5ல் ராகு அமர்ந்து பாதிப்பை பெற்று இருக்கும் ஜாதகர்கள், தனது பூர்வீகத்தை விட்டு வெளியில் சென்று ஜீவனம் மேற்கொள்ளும் தன்மையை பெறுகின்றனர், தனது பாரம்பரிய முறையில் இருந்து வித்தியாசமான அணுகு முறையில் ஜீவனம் மேற்கொள்ளும் தன்மையையும், தனது பாரம்பரியத்திற்கு மாறுபட்ட சிந்தனைகளையும் கொண்டவர்களாக கானபடுகின்றனர், இவர்கள் அனைவரும் தனது பூர்வீகத்தில் மிகப்பெரிய வெற்றிகளை பெற இயலவில்லை, வெளியூர் அல்லது வெளிநாடுகளிலேயே மிகப்பெரிய அந்தஸ்தையும், வெற்றிகளையும் வாரி குவிக்கின்றனர், பூர்விகத்தில் இவர்களது அறிவும் புத்திசாலித்தனமும் செயல்படுவதில் சிக்கல்கள் ஏற்ப்படுகின்றது, வெளியூரில் அல்லது வெளிநாடுகளில் இவர்களது அறிவும், புத்திசாலித்தனமும் அபரிவிதமாக வேலை செய்வது கவனிக்க தக்கது, மேலும் வெளியூர் வெளிநாடுகளில் ஜாதகர்  வசிக்கும் பொழுது 5ம் பாவக பாதிப்பு வெகுவாக குறைந்து, சிறந்த ஆண்வாரிசும் உண்டாகிறது என்பது மறுக்க இயலாத உண்மை.

5) பெரும்பாலும் குழந்தைகளே அற்ற சூழ்நிலை எப்பொழுது ஒரு ஜாதகருக்கு ஏற்ப்படுகிறது என்று காணும் பொழுது தம்பதியர் இருவரது ஜாதகத்திலும், பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகம் பாதக ஸ்தனாங்களுடன் தொடர்பு பெற்றால் மட்டுமே புத்திர பாக்கியமே இல்லாமல் போகிறது என்பது 100% விகித உண்மை, மேலும் இந்த அமைப்பை பெற்ற ஜாதகர்களும் முறையான தீர்வுகளை தேடும் பொழுது 5ம் பாவக வழியில் இருந்து யோகத்தை பெற இயலும் என்பதே ஜோதிடதீபத்தின் ஆணித்தரமான கருத்து.

குறிப்பு :

 அன்பர்களே ! 5ல் ராகு அமர்ந்தாலே குழந்தை பாக்கியம் கிடையாது என்ற குத்து மதிப்பான வாதத்தை விடுத்து சுய ஜாதகத்தில் 5ம் பாவக வலிமையை உணர்ந்து தங்களது மகளுக்கோ, அல்லது மகனுக்கோ வரன்,வது தேடுவதே சரியான தீர்வாக இருக்கும், 5ல் அமரும் ராகு நல்ல செய்தால் எவ்வித குழப்பமும் இல்லாமல் தங்களது மகளுக்கோ, மகனுக்கோ திருமணம் செய்து கொடுங்கள் அவர்களது வாழ்க்கை மென்மேலும் செழித்து ஓங்குவதையும், அவர்களுக்கு நல்ல வாரிசு அமைவதையும்,திருமணம் நடந்த சில காலங்களிலேயே கண்குளிர காணலாம், என்று ஜோதிடதீபம் அறிவுறுத்துகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696  

செவ்வாய், 7 ஏப்ரல், 2015

சுய ஜாதகத்தில் புத்திர பாவகமும், பாக்கிய ஸ்தானமும் வழங்கும் யோக நிலைகள் !




கிராமங்களில் செலவடையாக பெரியோர்கள் ஒரு பழமொழியை சொல்வதுண்டு அதாவது " சக்தியுள்ள சாமியை கும்பிடனும், புத்தியுள்ள புள்ளைய பெற்று எடுக்கணும் " என்று, மேற்கண்ட ஒரு பழமொழியின் வழியாகவே ஒருவரது ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகத்தின் வலிமையை பற்றியும், பாக்கிய ஸ்தானம் எனும் 9ம் பாவகத்தின் வலிமையை பற்றியும் நாம் தெளிவாக தெரிந்து கொள்ள இயலும், பொதுவாக கோண ஸ்தானங்கள் என்று அலைக்கபெரும், 5,9ம் பாவகங்கள் ஒருவரின் வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றால் அது மிகையில்லை, இன்றைய சூழ்நிலையில் மிக முக்கிய கடமைகளான குல தெய்வ வழிபாடு, பித்ரு வழிபாட்டின் அருமையை நாம் உணராத காரணத்தினால், வாழ்க்கையில் வரும் இன்னல்களின் தன்மையை தவிர்க்க இயலாமல் அதிக அளவில் துன்பங்களுக்கும், தொல்லைகளுக்கும் ஆளாகும் சூழ்நிலையில் நெருப்பில் இட்டால் புழு போல் தவிக்கும் நிலை ஏற்ப்படுகிறது, அப்படி பட்ட இன்னல்களை அனுபவித்த போதிலும், நமது அறிவுக்கு 5,9ம் பாவக வழியில் இருந்து குல தெய்வ வழிபாடு, பித்ரு கடமையின் அருமை நமக்கு உறைப்பதில்லை.

ஒரு ஜாதகருக்கு தனது பாரம்பரிய நிலையில் இருந்து கிடைக்க வேண்டிய கீர்த்தி,புகழ்,செல்வம்,கௌரவம்,அந்தஸ்து,பொருளாதார ரீதியான முன்னேற்றம், சிறந்த யோகமுள்ள வாரிசு அமைப்பு, தான் கற்ற கல்வியின் வழியில் இருந்து ஜாதகர் தனக்கும், தன்னை சார்ந்த சமூகத்திற்கும் சிறப்பான நன்மைகளை பெரும் தன்மை, செல்லும் இடங்களில் இருந்து வரும் வரவேற்ப்பு, தமக்கு வரும் இனல்களை கண்டு  திகைக்காமல் மிக  எளிதாக கையாளும் புத்திசாலித்தனம், கலைஞயம் மிக்க செயல்திறன்கள், புத்திகூர்மை மூலம் சகல  வாய்ப்புகளையும் முறையாக பயன்படுத்தி கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் அமைப்பு, எடுக்கும் செயல்களில் தனது சுய அறிவாற்றலை பயன்படுத்தி வாழ்க்கையில் சிறப்பான வெற்றிகளை பெரும் யோகம், கலை துறையில் பெரும் வெற்றிகள், புதிய சிந்தனைகள் மூலம் ஜாதகர் மற்றவர்களில் இருந்து தனித்து தோன்றும் சிறப்பு இயல்புகள், ஜாதகருக்கு சிறு பிரச்சனை என்றாலும் ஓடி வந்து உதவி செய்யும் உறவுகள்,நண்பர்கள்,பொதுமக்கள், தான் ஏற்று கொண்ட லட்சியத்தை செவ்வனே முடிக்கும் சரியான திட்டமிடுதல் என ஜாதகரின் சுய புத்திசாலிதனத்தை பிரகாசிக்க செய்வது பூர்வ புண்ணியம் எனும் 5ம் பாவகமே என்றால் அது மிகையில்லை.

மேலும் ஒரு ஜாதகர் தனது அறிவு திறன் மூலம் பல சாதனைகளை படைப்பதற்கும், ஆன்மீக வழியில் இருந்து மிகப்பெரிய வெற்றிகளை பெறுவதற்கும், பொதுமக்கள் போற்றும் புகழ் மிக்க பொறுப்புகளை நேர்மையாக அலங்கரிப்பதற்க்கும், ஆக்க பூர்வமான செயல்பாடுகள் மூலம் தனது  சந்ததிகளும், சமுதாயமும் மிகப்பெரிய நன்மைகளை தொடர்ந்து  பெற்ற வண்ணமே திகழ்வதற்கும் பாக்கிய ஸ்தானம் எனும் 9ம் பாவகத்தின் வலிமை  சிறப்பாக அமைவது நல்லது, தனது பெயருக்கும் புகழுக்கும் சிறிய களங்கமும் வாராமல் வாழ்க்கையில், சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றம்  பெறுவதற்கு பாக்கிய ஸ்தானம் வழிவகுக்கும், எந்த ஒரு விபத்தோ, இழப்புகளோ ஜாதகரை பாதிக்கா வண்ணம் காப்பாற்றும் வல்லமை பெற்றது ஜாதகரின் பாக்கிய ஸ்தானமே, குறிப்பாக ஜாதகரை தவறான தீய பழக்க வழக்கங்களில் இருந்து காப்பதும், தற்கொலை எண்ணங்களை மனதில் இருந்து நீக்கி, புது தெம்புடனும், புத்துணர்ச்சியுடனும் சகல பிரச்சனைகளையும் எதிர்கொள்ள வைக்கும் வல்லமை பாக்கிய ஸ்தானத்திற்கு நிச்சயம் உண்டு, ஜாதகரே தன்னிலை மறந்து செயல்பட்டாலும், ஜாதகரை சார்ந்தவர்களும் அவர்களது நண்பர்கள்,உறவினர்கள் என அனைவரும் நல்லவர்களாக வந்து நின்று ஜாதகரை நல்வழிபடுத்தும் யோகம் உண்டாகும், எந்த ஒரு சூழ்நிலையையும் மிக  எளிதாக கையாளும் மிதமிஞ்சிய அறிவாற்றல் ஜாதகருக்கு இயற்கையாக அமைந்திருக்கும், 5ம் பாவகம் ஜாதகரை கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் தன்மையை தரும், 9ம் பாவகம் அறிவு திறனில் சிறந்து விளங்கும் வல்லமையை தந்து, செயற்கரிய பல சாதனைகளை படைக்க வைக்கும்.

கால புருஷ தத்துவ அமைப்பில் 5ம் வீடாக வரும் சிம்மம் ஸ்திர நெருப்பு தத்துவமாக நின்று சுய ஞான யோகத்தை தரும், 9ம் வீடாக வரும் தனசு உபய நெருப்பாக நின்று அனைவருக்கும் வெளிச்சத்தை தரும் ( அக இருள் நீக்கி ஞான ஒளியை வழங்கும் ) எனவே சுய ஜாதகத்தில் 5,9ம் பாவகம் வலிமை பெறுவது  சிறப்பு, வலிமை அற்ற நிலையில் இருப்பின் ஜாதகர் தனது குல தெய்வ வழிபாட்டின் மூலமும், பித்ரு கடமை மூலமும் பூர்வபுண்ணியம் மற்றும் பாக்கிய ஸ்தான வலிமையை அதிகரித்து கொள்வது சகல நிலைகளில் இருந்தும் யோகம் தரும், சக்தியுள்ள சாமியை வணங்கும் பொழுது சிறந்த புத்திரபேறு ( வாரிசு ) கிட்டும், நாம் பிறப்பில் யோகம் அற்ற ஜாதக நிலையை பெற்று இருந்தாலும் கூட, நமது வாரிசு அமைப்பை நாம் யோமுள்ள ஜாதகமாக மாற்றும் வல்லமை, குல தெய்வ வழிபாட்டிலும், பித்ரு கடமையை செய்வதின் மூலம் நிச்சயம் உண்டாகும் என்பது கவனிக்க தக்கது.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

ஞாயிறு, 14 டிசம்பர், 2014

குழந்தை பாக்கியமும், பூர்வபுண்ணிய ஸ்தானமான ஐந்தாம் பாவக வலிமையையும் !


தனது குலம் செழிக்கவும், தனக்கு பின் தனது பெயர் சொல்லவும் ஒரு நல்ல வாரிசு வேண்டும் என்று தேடுதல் இல்லாத தம்பதியரை இப்புவியில் காண்பது அரிது, எவ்வளவோ மருத்துவ முன்னேற்றம் வந்த போதிலும் திருமணம் நடைபெற்று பல வருடங்கள் ஆகியும்,  ஒரு வாரிசுக்காக ஏங்கும் தம்பதியர் நிறைய உண்டு, பல மருத்துவர்களை பார்த்தும் புத்திர பாக்கியம் அமையாத தம்பதியரும், பல திருத்தலங்களுக்கு சென்றும் குழந்தை பாக்கியம் கிட்டாமல் வாடும் தம்பதியரும் உள்ளனர், இந்த பதிவில் புத்திர பாக்கியம் அமையாமல் தனது குலம் தழைக்க ஒரு நல்ல வாரிசு அமையாத நிலைக்கு காரணம் என்னவென்பதை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே.

குழந்தை பாக்கியம் இல்லை என்று ஜாதகம் காண வரும் அன்பர்களுக்கு, ஜோதிடர்கள் சொல்லும் முதல் பரிகாரம் அவர்களது குல தெய்வம் எதுவோ அதற்க்கு முறையான வழிபாட்டையும், தான தர்மங்களையும் செய்யுமாறு அறிவுரை கூறுவது உண்டு, பொதுவாக குழந்தை பாக்கியம் அமையாத நிலைக்கு அடிப்படை காரணமாக குல தெய்வ சாபம் மற்றும் முறையான குல தெய்வ வழிபாடு செய்யாதது என்று அறிவுறுத்த படுகிறது.

 குல தெய்வ சாபம் என்றால் என்ன ?

1 சம்பந்தபட்ட தம்பதியரோ அல்லது அவர்களது முன்னோர்களோ வெகு காலமாகவோ, தலை முறை தலை முறையாக தனது குல தேவதைக்கு ஆற்ற வேண்டிய கடமைகளில் இருந்து தவறி நடப்பதால் வரும் சாபம் என்று வைத்து கொள்ளலாம்.
2 சம்பந்தபட்ட தம்பதியரின் முன்னோர்கள் தனக்கு பிறந்த குழந்தை பெண் என்பதால், அதன் உயிருக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவது ( அதாவது சிசு கொலை )
3 சம்பந்தபட்ட தம்பதியரின் முன்னோர்கள் தனக்கு இறை அருளால் அமைந்த கருவை, தனது சௌகர்யத்திற்காக கருசிதைவு செய்து கொள்ளுதல். ( இது தம்பதியருக்கும் பொருந்தும்.)
4 கருவுற்ற பெண் வந்து யாசிக்கும் பொழுது அவர்களுக்கு இல்லை என்று சொல்வதும், அவர்களை உதாசீனபடுத்துவதும் குல தெய்வ சாபத்திற்கு வழிவகுக்கும்.
5 பசு அதன் கன்று குட்டியை பிறந்தவுடன் பிரிப்பதும், பசுவிற்கு துன்பம் இளைப்பதும், பசு தந்த பாலில் நீர் கலந்து விற்பதும், பச்சிளம் குழந்தைக்கு கொடுப்பதும் குல தெய்வ சாபத்திற்கு அடிகோலும்.
6 கற்று கொடுத்த குருவுக்கு இன்னல் தருவதும், துரோகம் செய்வதும், சாஸ்திரம் அறிந்த பெரியோர்களை அவமதிப்பதும், இறைபணியில் அர்ப்பணித்து கொண்டவர்களின் வாழ்க்கையில் இன்னல்களை ஏற்ப்படுத்துவதும், குல தெய்வ சாபத்திற்கு வழிவகுக்கும்.
7 பெற்றோர்களை நிந்தனை செய்வதும், இயலாமல் இருக்கும் பெரியோரின் சொத்துகளை  அபகரிப்பதும் குல தெய்வ சாபத்திற்கு வழிவகுக்கும்.
8 தன்னை நாடிவரும் பெண்களுக்கு தீங்கு  விளைவிப்பதாலும், கட்டிய மனைவியை நிந்தனை செய்வதாலும் குல தெய்வ சாபத்திற்கு ஆளாகும் சூழ்நிலையை தரும்.
9 சிறு வயதிற்கு உற்பட்ட குழந்தைகள் அனைவரும் குல தேவதையின் அம்சம் என்பதால், அவர்களுக்கு உணவு தர மறுப்பதாலும் குல தெய்வ சாபம் ஏற்ப்பட வாய்ப்பு உண்டு.
10 ஆன்மீக பெரியவர்களை நிந்தனை செய்வதும், அவர்களுக்கு எண்ணத்தாலும் செயலாலும் துன்பம் விளைவிப்பதும் குல தெய்வ சாபத்திற்கு ஆளாக்கும்.
11 சர்ப்பங்களை கொள்வதும் ஒருவகையில் குல தெய்வ சாபத்திற்கு ஆளாக்கும், புத்திர பாக்கியத்தில் தடை செய்யும்.
12 சேர்ந்து வாழும் தம்பதியரை பிரிப்பதும் குல தெய்வ சாபத்தை பெற வழிவகுக்கும்.

மேற்கண்ட காரணங்கள் குல தெய்வ சாபத்திற்கும், புத்திர பாக்கியத்தில் தடை உண்டாகவும் வாய்ப்புகளை ஏற்ப்படுத்தும், மேலும் சுய ஜாதகத்தில் புத்திர ஸ்தானமான 5ம் பாவகம் பாதிக்கப்படும் பொழுது ஜாதகருக்கு உதவி செய்ய எவரும் முன்வரமாட்டார்கள் என்பது கவனிக்க தக்கது அன்பர்களே.

மேற்கண்ட விஷயங்கள் குல தெய்வ சாபத்திற்கு காரணமாக அமைந்த போதிலும், இதில் அதிக இன்னல்களை தருவது உடனடியாக குல தெய்வ சாபத்திற்கு ஆளாக்குவது " சிசு கொலை, கருகலைப்பு "  ஆகிய இரண்டு மட்டுமே மிகுந்த துன்பத்திற்கு ஆளாக்கும், பிறக்கும் பெண் சிசு யாவும் அவர்களது குல  தேவதையை குறிக்கும், கருவில் உள்ள குழந்தைகள் யாவும் அவர்களது குலதெய்வமாகவே விளங்கும் என்பதால், இவற்றிற்கு விளைவிக்கும் துன்பங்கள் யாவும் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வரும், இதற்க்கு தீர்வு காண்பது என்பதும் அவ்வளவு எளிதல்ல என்பதை நாம் அனைவரும் உணர்வது அவசியம், ஏனெனில் நமக்கு பின் வரும் சந்ததிக்கு புண்ணி பதிவை சேர்த்து வைக்காவிட்டாலும் சரி பாவ பதிவை சேர்த்து வைக்காமல் போவது நல்லது, நாம் செய்யும் தவறு நமக்கு பின் வருபவர்களுக்கு இன்னல்களை தர கூடாது அல்லவா ?

இனி தனது சுய ஜாதக அடிப்படையில் புத்திர பாக்கியம் உண்டா ? அதற்க்கு தடைகள் உள்ளனவா ? என்பதை சுய ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவது அவசியமாகிறது, பொதுவாக சுய ஜாதகத்தில் புத்திர பாக்கியத்தை குறிக்கும் ஐந்தாம் பாவகம் எக்காரணத்தை கொண்டும் பாதிப்பை பெறாமல் இருப்பது நல்லது, இது தம்பதியர் இருவருக்கும் பொருந்தும், குறிப்பாக ஐந்தாம் பாவகம் அவர்களது  லக்கினத்திற்கு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ( சர லக்கினத்திற்கு பாதக ஸ்தானம் 11ம் வீடு, ஸ்திர லக்கினத்திற்கு பாதக ஸ்தானம் 9ம் வீடு, உபய லக்கினத்திற்கு பாதக ஸ்தானம் 7ம் வீடு ) புத்திர பாக்கியத்தை கேள்விக்குறியாக்கும், ஐந்தாம் பாவகம் 6,8,12ம் பாவகங்களுடன் சம்பந்தம் பெறுவதும் மிகுந்த இன்னல்களையே தரும், இதை போன்றே கால புருஷ தத்துவ அமைப்பிற்கும் 5ம் பாவகமான சிம்மம் பாதிப்பை பெறுவதும் குழந்தை பாக்கியத்தை கடுமையாக பாதிக்கும், மேற்கண்ட விஷயங்கள் யாவும் தம்பதியர் இருவரின் சுய ஜாதக அமைப்பிற்கும் பொருந்தும்.

ஒருவரது சுய ஜாதகத்தில் புத்திர ஸ்தானமான 5ம் பாவகம் பாதிக்கப்படும் பொழுது ஜாதகர் தனது பூர்வீகத்தில் வசிப்பதற்கு தடைகளை தொடர்ந்து தந்த வண்ணமே இருக்கும், ஜாதகரின் அறிவு சார்ந்த முயற்ச்சிகள் யாவும் வெறும் திட்டத்துடனே முடியும், நடைமுறைக்கு வருவதற்கு உண்டான வாய்ப்பை தாராது, ஜாதகரின் எண்ணங்கள் யாவும் வெறும் கற்பனையாகவோ கனவாகவோ மாறிவிட வாய்ப்பு உண்டு, இதை தவிர குழந்தை பாக்கியத்திற்கு எடுக்கும் அனைத்து முயற்ச்சிகளும் பலன் தாராமால் ஜாதகர்  மற்றும் ஜாதகரை சார்ந்தவர்கள் வெகுவாக மனபோரட்டத்திர்க்கு ஆளாகும் சூழ்நிலையை தர  கூடும், இவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்யும் அன்பர்களும் இருக்கமாட்டார்கள் என்பது கவனிக்க தக்கது, தனிமையில் போராட்ட வாழ்க்கையை வாழும் சூழ்நிலைக்கு ஆளாக்கும், மேற்க்கண்ட விஷயங்கள்  5ம் பாவகத்தின்  வலிமை அற்ற தன்மையால் நடைபெறும் என்பதை இவர்களது சுய ஜாதகத்தை ஆய்வு செய்தால் நமக்கு நிச்சயம் புலப்படும்.

இன்றைய நவநாகரீக உலகத்தில் இளம் தம்பதியர் தனது விருப்பத்திற்கு ஏற்றவாறு குழந்தை பெற்றுகொள்ள, கருக்கலைப்பு என்ற ஒரு விஷயத்தை சர்வ சாதரணமாக செய்கின்றனர், இதன் விளைவு அவர்களுக்கு தெரிவதில்லை இதனால் ஏற்ப்படும் விளைவுகளின் தன்மை மிகவும் கடுமையானதாக இருக்கும், உதாரணமாக வீட்டில் செல்வ வளம் குறைந்து தரித்திர நிலை உருவாகும், குல தெய்வ சாபத்தால் ஜாதகருக்கு மிக எளிதில் கிடைக்கும் விஷயங்களுக்கு கூட போராடி பெரும் சூழ்நிலையை தரும், சுய முன்னேறம் வெகுவாக பாதிக்கும், தனது சந்ததிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கும், உடல் நல குறைபாட்டை தரும், மருத்துவ செலவினங்களை அதிகரிக்கும், ஒற்றுமையாக இருந்த தம்பதியர் திடீரென பிரியும் சூழ்நிலையை தரும், எதிர்பாராத விபத்துகள் மூலம் உடல் நல குறைவு, பொருள் இழப்பு போன்றவை ஏற்ப்பட வாய்ப்பு உண்டாகும், இது போன்ற நிகழ்வுகள் நடைபெறும் பொழுது சம்பந்த பட்ட ஜாதகருக்கு யாரும் உதவி செய்ய முன்வரமாட்டார்கள் என்பதே  வருத்தத்திற்கு உரியது அன்பர்களே, எனவே இதுபோன்ற சந்தர்ப்பங்களை நீங்களே உருவாக்கி கொண்டு பின்னலில் வருத்தம் கொள்வதனால் எவ்வித பயனும் இல்லை என்பதே ஜோதிடதீபத்தின் கருத்து.

அடுத்த பதிவில் 5ம் பாவக வலிமையை சுய ஜாதக ரீதியாக நிர்ணயம் செய்வது பற்றி சிந்திப்போம் அன்பர்களே ........

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

வியாழன், 6 நவம்பர், 2014

"குரு பார்க்க கோடி நன்மை" திரிகோண வீடுகளுக்கு குரு பகவான் வழங்கும் யோக பலன்கள் !



பிரகஸ்பதி என்று தேவர்களால் அலைக்கபெரும் ராஜ கிரகமான குரு பகவான், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு ராசிக்கும், மோட்சத்தை தரும் 12ம் பாவகமான மீன ராசிக்கும் அதிபதியாக விளங்குகிறார், பொதுவாக ஜோதிடர்கள் குரு பகவானை பற்றி சிலாகித்து பேசுவது அவரின் பார்வை பலன்களை பற்றியதாகவே இருக்கும், குறிப்பாக " குரு பார்க்க கோடி நன்மை " என்ற வாசகம் அறியாத ஜோதிட ஆர்வலர்கள் இல்லை எனலாம், இந்த ஒரு வார்த்தையிலேயே குரு பகவான் பார்வை தன்மையின் வலிமையை உணரலாம் அன்பர்களே!

பொதுவாக குரு பகவான் தான் அமர்ந்த இடத்தில் இருந்து 5,7,9ம் வீடுகளை பார்வை செய்து பலன்களை வழங்குவார், இந்த அமைப்பு சுய ஜாதகத்தில் குரு பகவான் எந்த நிலையில் ( அதாவது பாவகத்தில் ) அமர்கிறார் என்பதை வைத்தே குரு பார்வையின் தன்மையை நிர்ணயம் செய்ய வேண்டும், குரு பார்க்கும் பார்வையால் ஜாதகருக்கு நன்மை நடைபெறுமா ? அல்லது தீமை நடைபெறுமா ? என்று நிர்ணயம் செய்வது அவசியம், பொதுவாக பல ஜோதிடர்கள் குரு பார்வை நன்மை மட்டுமே வழங்கும் என்று சொல்வதுண்டு, இது எந்த அளவிற்கு உண்மை என்பதை இன்று ஆய்வுக்கு எடுத்துகொள்வோம்.

பொதுவாக ஒருவரது சுய ஜாதகத்தில் குரு பகவான் 1,3,5,9,11ம் பாவகங்களில் அமரும் பொழுது அந்த ஜாதகர் மேற்கண்ட அமைப்பில் அமர்ந்த பாவக  வழியில் இருந்தும், குரு பகவானின் பார்வை பெரும் பாவக வழியில் இருந்து 100% சதவிகித யோக பலன்களையே பெறுவார்கள், இதில் எந்த ஒரு கருத்து வேறுபாடும் இல்லை, ஆனால் இதை தவிர்த்து வேறு பாவகங்களில் ( 2,4,6,7,8,10,12ம் பாவகங்களில்) அமரும் பொழுது ஜாதகருக்கு அமர்ந்த நிலையிலும் சரி, கோட்சார நிலையிலும் சரி ஜாதகருக்கு இலக்கின அமைப்பில் பாவக அடிப்படையில் நன்மையை மட்டுமே செய்வார் என்ற கருத்து நிச்சயம் தவறும் வாய்ப்பு உள்ளது.

 குரு பார்வை என்பது சுய ஜாதகத்தில் 1,3,5,9,11ம் வீடுகளில் அமர்ந்து, 1,3,5,9,11ம் வீடுகளை பார்வை செய்யும் பொழுது மட்டுமே கோடி நன்மையை தரும், மாறாக வேறு பாவகங்களில் அமரும் பொழுது முரண்பட்ட பலன்களையே தருகிறது என்பது, 2,4,6,7,8,10,12ம் பாவகங்களில் அமர்ந்த ஜாதகரை பார்த்தல் தெளிவாக தெரிந்து கொள்ள இயலும் மேலும் 2,4,6,7,8,10,12ம் பாவகங்களை பார்க்கும் குருபகவான் நிச்சயம் 2,4,6,7,8,10,12ம் பாவகங்களுக்கு நன்மையை செய்ய வாய்ப்பில்லை என்பது மட்டும் உறுதி அன்பர்களே !

குரு வட்டமான மேஷம்,சிம்மம்,தனுசு ராசிகள் ஒருவரின் லக்கினத்திற்கு கோண வீடுகளாக ( 1,5.9 ) அமைந்து அந்த வீட்டில் குரு பகவான் அமர்ந்தால் அந்த ஜாதகருக்கு தான் அமர்ந்த நிலையில் இருந்தும், குரு பார்வை என்ற அமைப்பில் இருந்தும் ஜாதகருக்கு 100% நன்மைகளை வாரி வழங்குவார், மேலும் " குரு பார்க்க கோடி நன்மை " எனும் வாசகம் மேற்கண்ட அமைப்பை பெற்ற ஜாதகருக்கு நிச்சயம் 100% பொருத்தமாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை அன்பர்களே !

மேஷத்தில் குரு பகவான் அமர்ந்து  மேஷம் சுய ஜாதகத்தில் 1,5,9ம் பாவக நிலையை  பெற்றால் :

ஜாதகரின் உடல் வலிமை மனோ வலிமை அதிகரிக்கும், மற்றவர்களுக்கு ஜாதகர் நல்ல முன்  உதாரணமாக இருப்பார், சர நெரப்பு தத்துவ அமைப்பை இந்த ராசி பெறுவதால் ஜாதகரின் செயல்பாடுகள் அனைத்தும் பலர் மெச்சும் வண்ணம் அமைந்திருக்கும் குறிப்பாக, ஜாதகர் நல்ல மேலாண்மை திறனை பெற்று இருப்பார், அனைவரிடமும் அனுசரித்து செல்லும் தன்மையையும், சுய கட்டுபாடுடன்  கூடிய ஒழுக்க சீலராக காணப்படுவார், ஜாதகர் தான் நினைக்கும்  செயல்களை யாவும் முடிக்கும் வல்லமையை பெற்று இருப்பார், குறிப்பாக ஜாதகரின் பாதுகாப்பில் அனைவரும் நலமாக இருக்கும் யோகத்தை தரும், ராணுவம், காவல் துறை, நீதி துறை போன்றவற்றில் சிறந்து விளங்கும் தன்மைய தரும், மேஷத்தில் குருபகவானின் செயல்திறன் என்பது மிகவும் அபரிவிதமான வல்லமையை பெற்று இருக்கும், அதிகார தோரணையும் அடக்கியாளும் யோகமும் பெற்றவர்கள், தனது செயல்களில் நேர்மையையும், தர்மத்தையும் நிலைநாட்டும் மதிப்பு மிக்க மனிதர்களாக ஜொலிப்பார்கள்.

சிம்மத்தில்  குரு பகவான் அமர்ந்து  சிம்மம்  சுய ஜாதகத்தில் 1,5,9ம் பாவக நிலையை  பெற்றால் :

ஜாதகரின் அறிவு திறன் பிரகாசிக்கும், பல ஆன்மீக நெறிகளை மக்களுக்கு போதிக்கும் வல்லமையும், மனிதாபிமானம் அற்ற சமுதாயத்தை மற்றும் தன்மையையும், உலகுக்கு சமாதானத்தை எற்ப்படுத்து யோகமும் பெற்றவர்கள், மருத்துவ துறை, ஆன்மீகம், மன நலம், ஜீவ காருண்யா யோகம் போன்றவற்றில் வெற்றி பெரும் அன்பர்கள், இவர்களின் அறிவு திறனும் நல்லெண்ண செயல்பாடுகளும் பூஉலகில் சாமாதான தூதுவர் என்ற நற்ப்பெயரை பெற்று தரும், இந்த ராசி ஸ்திர ராசி அமைப்பில் வருவதால் ஜாதகர் இருள் அடைந்த உலகில்  அருள் விளக்கேற்றும் சிறந்த ஆன்மீக வாதியாகவும், இருப்பதை அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கும் பொதுநல புரட்சியாளனாகவும், உலகத்தை அன்பின் வழியில் நடத்தி செல்லும் நல்ல மக்கள் நல  விரும்பியாவும் தனது அறிவின் வழியில் ஜாதகரை பிரகாசிக்க செய்யும்.

தனுசுவில்  குரு பகவான் அமர்ந்து  தனுசு  சுய ஜாதகத்தில் 1,5,9ம் பாவக நிலையை  பெற்றால் :

ஜாதகரின் எண்ணங்களின் தன்மை உலகில் பல மாற்றங்களை ஏற்ப்படுத்தும், ஜாதகர்  ஒரு புதுமை விரும்பியாகவும், சமூகத்திலும் மக்களின் மனதில் புதிய சிந்தனைகளை புகுத்தும் வல்லமையும், மக்கள் அறிவின் வழியில் செயல்படும் தன்மையை பெற தேவையான கல்வியில் அனைத்து நிலைகளிலும் சிந்தித்து செயலாற்றும் யோகத்தை பெற்றவர்கள், இவர்களின் சிந்தனை  எண்ணம் யாவும் இவர்கள் மறைந்த போதிலும் உலகில் நடைமுறையில் இருக்கும், மக்கள் அனைவருக்கும் வற்றாத செல்வத்தை தரும் காமதேனுவை போல் நீடித்து நன்மைகளை வாரி வழங்கி கொண்டு இருக்கும், ஒருவருக்கு ஏற்ப்படும் சந்தேகம் எதுவென்றாலும் இவர்களிடம் நிச்சயம்  சரியான  பதில் இருக்கும் என்பதால், மற்றவர்களின் அறிவு தாகத்தை தணிக்கும் அமுத சுரபி என்று இவர்களை வர்ணிக்கலாம், மேலும் இந்த ராசி உபய நெருப்பு தத்துவ அமைப்பில் யோகங்களை ஜாதகருக்கும், ஜாதகரை சார்ந்தவர்களுக்கு வாரி வழங்கும்.

இதை போன்றே ஒருவரின் சுய ஜாதகத்தில் கோட்சார அமைப்பில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் சில எதிர்பாராத யோக அமைப்புகளை பெற வைப்பது 1,5,9ம் பாவக வலிமை பெற்ற அமைப்பின் தன்மையே என்றால், அது மிகையாகாது. குருபகவான் குரு வட்டமான மேஷம்,சிம்மம்,தனுசு ராசிகள் உயிர்களை உய்விக்கும் தன்மை கொண்ட நெருப்பு தத்துவ அமைப்பில் சரம்,ஸ்திரம்,உபயம் என்ற வழியில் ஜீவன்களுக்கு நன்மைகளையும், யோகங்களையும் ராஜ கிரகமான குரு பகவானின் அமர்ந்த, பார்த்த அமைப்பில் இருந்து வாரி வழங்குகிறது, மேலும் மற்ற பாவகங்களில் குரு பகவான் வழங்கும் நன்மையை கருத்தில் எடுத்து கொள்ளும் பொழுது, மேற்கண்ட  1,5,9ம் பாவகங்களுக்கும், மேஷம்,சிம்மம்,தனுசு ராசிகளில் 100 மடங்கு அதிகமாக செயல்படுவதை இந்த அமைப்பை பெற்ற ஜாதகர்களின் யோக வாழ்க்கையை  வைத்து மிக எளிதாக நிர்ணயம் செய்யலாம்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 9 செப்டம்பர், 2014

ராகு ஐந்தாம் பாவகத்தில் அமரும் பொழுது புத்திர பாக்கியத்தை தடை செய்யுமா ? ஆண் வாரிசு அமையாத ?



  ராகு ஐந்தில் அமர்ந்தால் சம்பந்த பட்ட ஜாதகருக்கு புத்திர சந்தானம் அமையாது என்பதும், குலம் தழைக்க ஆண் வாரிசு அமையாது என்று சொல்வதும் பொதுவான கருத்து, இதில் ராகு 5ம் பாவகத்தில் அமர்ந்தாலே இந்த பலனை தரும் என்று சொல்வது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது, ஜோதிட கணிதம் பற்றிய தெளிவில்லாமல், பாவகங்களின் தன்மை அறியாமலும், சுய ஜாதக ரீதியாக 5ம் பாவகத்தின் வலிமையை பற்றிய கணிதம் செய்ய தெரியாமலும் சொல்லும் ஒரு வார்த்தையாக மட்டுமே எடுத்துகொள்ள இயலும், பாரம்பரிய ஜோதிடத்தில் ராகு ஐந்தில் அமர்ந்தால் புத்திர பாக்கியத்தை தராது என்று பொதுவாக சொல்வது உண்டு.

 உண்மையில் ராகு 5ம் பாவகத்திர்க்கு உற்பட்ட பாகைக்குள் தான் அமர்ந்து இருக்கின்றாரா, என்ற தெளிவு வேண்டும், ஒரு வேலை 5ம் பாவகம் ஆரம்பிக்கும் பாகைக்கு முன்பே அமர்ந்து இருக்கின்றாரா, 5ல் அமர்ந்த ராகு பாவகத்தை வலிமை படுத்துகிறார, அல்லது தீமையான பலனை தருகிறார என்பதை துல்லியமாக, சுய ஜாதகத்தை கொண்டு அறிந்த பிறகே, புத்திர பாக்கியத்தை பற்றி சொல்வது சரியாக இருக்கும், இதை உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வது தங்களுக்கு மிக எளிதாக புரிந்துகொள்ள இயலும்.


மேற்கண்ட ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே !

லக்கினம் : கன்னி 
ராசி : கடகம் 
நட்சத்திரம் : பூசம் 2ம் பாதம்

இந்த கன்னி இலக்கின ஜாதகிக்கு திருமணம் நடைபெற்று 4 வருடங்கள் ஆயிற்று, இருமுறை கருத்தரித்து, கருச்சிதைவு ஏற்ப்பட்டு இருக்கிறது, இதனால் உடல் நலம் வெகுவாக பாதிக்க பட்டு இருக்கிறது, இது வரை ஜாதகிக்கு புத்திர பாக்கியம் என்பது கிடைக்கவில்லை, ஜாதகியின் வாழ்க்கை துணைவரின் ஜாதகத்திலும் புத்திர பாக்கியத்தை தரும் ஐந்தாம் பாவகம் கடுமையாக பாதிக்க பட்டு இருக்கின்றது, மேற்கண்ட ஜாதகிக்கு புத்திர சந்தானம் கிடைக்க பெறாத அமைப்பிற்கு 5ல் ராகு அமர்ந்து இருப்பதே என்று சொல்வது சரியாக இருக்கும் என்றபோதிலும், சுய ஜாதக அமைப்பில் 5ம் பாவகம் எனும் புத்திர ஸ்தானம் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதே இதற்க்கு காரணம், மேலும் 5ம் பாவக வழியில் இருந்து ஜாதகி 200% இன்னல்களை அனுபவிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

மேற்கண்ட ஜாதகத்தில் மகரத்தில் அமரும் ராகு பகவான் 5ம் பாவகத்தை 100% பாதிப்பிற்கு உள்ளாக்குகிறார், இதன் காரணமாகவே ஜாதகிக்கு குழந்தை பாக்கியம் அமையாமல் தடை செய்கிறது, பொதுவாக தம்பதியரின் ஜாதகத்தில் புத்திர ஸ்தானத்தை குறிக்கும் 5ம் பாவகம் பாதிக்க படாமல் இருப்பது உடனடி குழந்தை பாக்கியத்தை வாரி வழங்கும், திருமணதிற்கு பிறகு குறுகிய காலத்தில் குழந்தை பாக்கியத்தை எவ்வித தங்கு தடையின்றி தரும் குறிப்பாக ஆண் வாரிசாக அது அமையும் என்பது மகிழ்ச்சிக்கு உரிய விஷயம், பிறக்கும் குழந்தையும் பூரண ஆயுளுடன், நல்ல ஆரோக்கியத்துடன் சீரும் சிறப்புமாக இருக்கும், தனது பெற்றோருக்கு மிகுந்த கீர்த்தியை பெற்று தரும், இதற்க்கு அடிப்படையாக அமைவது தம்பதியரின் பூர்வ புண்ணியம் எனும் 5ம் பாவகமே என்றால் அது மிகையில்லை.

இதற்க்கு மாறாக மேற்கண்ட உதாரண ஜாதகத்தில் 5ம் பாவகம் ராகு பகவானால் கடுமையாக பாதிக்கபட்டு இருக்கின்றது, மேலும் சுய ஜாதகத்தில் 5ம் பாவகம் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பதம் பெற்று 200% இன்னல்களை வாரி வழங்கி கொண்டு இருப்பது மிகவும் வருந்தத்தக்க ஒன்றாக இருக்கின்றது.

 சர மண் தத்துவமான மகர ராசியில் அமரும் ராகு ஜாதகியின் உடல் நிலையையும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் வீடாக வருவதால் ஜாதகியின் முன்வினை கர்ம பலன்களையும் அனுபவிக்கும் தன்மையாக 5ம் பாவக வழியில் இருந்து தீமையான பலன்களை வழங்குகிறார், கிரகங்களில் அதிக வலிமை பெற்றதும், தன்னிகரில்லா தனி தன்மை வாய்ந்ததும் ராகு பகவானே என்றால் அது மிகையில்லை, குறிப்பாக ஒருவரின் ஜாதகத்தில் ராகு பகவான் வலிமையாக நல்ல நிலையில் அமர்ந்து இருப்பின் ஜாதகரின் வெற்றிகரமான வாழ்க்கையை எவராலும் தடுத்து நிறுத்த இயலாது, இதற்க்கு மாறாக தீமை தரும் அமைப்பில் ராகு அமரும் பட்சத்தில், தான் அமரும் பாவக அமைப்பில் இருந்து தரும் இன்னல்களில் இருந்து ஜாதகரை எவராலும் காப்பாற்ற இயலாது, தனது கடமையை மிகவும் சிறப்பாக ராகு பகவான் தங்கு தடை இன்றி தருவார் என்பதில் மாற்று கருத்து இல்லை.


மேற்கண்ட ஜாதகம் ராகு பகவான் 5ல் அமர்ந்தால் தரும் தீமையான பலன்கள் பற்றிய உதாரணம், ஆனால் ராகு பகவான் 5ல் அமர்ந்தாலும் 5ம் பாவகத்தை வலிமை செய்யும் அமைப்பும் உண்டு, பொதுவாக 5ல் அமரும் ராகு பகவான் தீமையை மட்டுமே செய்யும் என்பது பாரம்பரிய ஜோதிடத்தின் கருத்து, இங்கே 5ல் அமரும் ராகு பகவான் 5ம் பாவகத்தை தனது கட்டுப்பாட்டில் எடுத்து கொண்டு மிகுந்த நன்மையையும், அளவில்லா புத்திர சந்தான பாக்கியத்தையும் அருள்கிறார் என்பதை ஒரு உதாரண ஜாதகம் கொண்டு பார்ப்போம் அன்பர்களே !




லக்கினம் : மகரம் 
ராசி : கும்பம் 
நட்சத்திரம் : சதயம் 3ம் பாதம்

இந்த மகர இலக்கின ஜாதகிக்கு திருமணம் ஆன ஓரிரு மாதங்களிலேயே புத்திர சந்தான பாக்கியத்தை வாரி வழங்கியது ராகு பகவானே, ராகு பகவான் ஸ்திர மண் தத்துவ ராசியான ரிஷபத்தில் அமர்ந்து 5ம் பாவகத்திர்க்கு 100% வலிமை தருவது ஒரு சிறப்பான விஷயம் ஸ்திர மண் தத்துவம் என்பதால், ஜாதகிக்கு சிறந்த உடல் வலிமை தந்தது, பூரண சுக பிரசவத்தில் நல்ல யோகமுள்ள ஆண் வாரிசை ஜாதகிக்கு வழங்கியது, ஜாதகியின் வாழ்க்கை துணையின் ஜாதகத்திலும் 5ம் பாவகம் பூரண வலிமை பெற்று இருந்தது ஜாதகிக்கு நல்ல ஆண் வாரிசை உறுதி செய்தது.

மேற்கண்ட ஜாதகிக்கு ராகு 5ல் அமர்ந்தது ஆண் வாரிசை மற்றும் இன்றி நல்ல புத்திசாலிதனத்தையும், மிகசிறந்த அறிவாற்றலையும் வாரி வழங்கியது, கல்வியில் சிறந்து விளங்கும் தன்மையை தந்தது, மேலும் இறை அருளின் கருணையை பரிபூரணமான பெற்று தந்து, ஜாதகிக்கு ரிஷபம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் வீடாக வந்தது, ஜாதகிக்கு நிலையான குடும்ப வாழ்க்கையையும், கை நிறைவான பொருளாதார வசதி வாய்ப்பையும், நிலையான வருமான வாய்ப்பையும் பெற்று தந்தது, மேற்கண்ட ஜாதகத்தை பொதுவான கண்ணோட்டத்துடன் 5ல் ராகு இருப்பதால் புத்திர பாக்கியம் கிடைக்காது என்று நிர்ணயம் செய்வது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது, இந்த ஜாதகிக்கு ராகு பகவானே சிறந்த புத்திர சந்தானத்தை தான் அமர்ந்த இடத்தில் இருந்து வழங்குகிறார் அன்பர்களே!

எந்த ஒரு ஜாதகத்திலும் ராகு பகவான் 5ல் அமர்ந்து இருந்தாலும், 5ம் பாவகத்தை வலிமை செய்தால், ஜாதகர் 5ம் பாவாக வழியில் இருந்து 100% நன்மைகளை பெறுவார், இதற்க்கு மாறாக தீமை செய்யும் அமைப்பில் அமர்ந்தால் எவ்வித பாகுபாடும் இன்றி 100% தீமையே செய்வார் இதில் மாற்றம் இல்லை, எனவே சுய ஜாதக அமைப்பின் படி 5ல் அமரும் ராகு பகவான் எந்த நிலையில் இருக்கிறார் என்று துல்லியமாக கணிதம் செய்து, பலன்  காண்பதே சிறந்த உண்மையான ஜோதிட பலன் சொல்ல உதவி புரியும், 5ல் அமரும் ராகு பகவான் கெடுதல் மட்டுமே செய்யும் என்று நிர்ணயம் செய்வது முற்றிலும் தவறன ஒரு அணுகுமுறையே.

குறிப்பு :

ராகு பாவக அமைப்பின் படி 5ல் தான் அமர்ந்திருக்கிறார் என்பதை முதலில் நிர்ணயம் செய்வது நலம், இதற்க்கு லக்கினம் ஆரம்பிக்கும் பாகையும், 5ம் பாவகம் ஆரம்பிக்கும் பாகையும், ராகு பகவான் அமர்ந்திருக்கும் பாகையும் மிக மிக முக்கியம் என்பதை கருத்தில் கொள்வது அவசியம்.

ஒருவேளை ஒரே ராசியில் ராகு பகவான்  5ம் பாவகம் ஆரம்பிக்கும் பாகைக்கு முன்பே அமர்ந்திருந்தால், ராகு பகவான் 5ல் என்ற கருத்துக்கே இடமில்லாமல் போகும் வாய்ப்பு உண்டு அன்பர்களே !

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


புதன், 18 ஜூன், 2014

சுய ஜாதகத்தில் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெரும் பாவகங்கள் வழியில் இருந்து ஜாதகர் அடையும் இன்னல்கள் !





 சுய ஜாதகத்தில் 12 பாவகங்களில் எந்த ஒரு பாவகமும், பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகரின் வாழ்க்கையில் சம்பந்தம் பெரும் பாவக வழியில் இருந்து 200% இன்னல்களை அனுபவிக்க வைத்துவிடும், சர லக்கினத்திற்கு 11ம் பாவகம் பாதக ஸ்தானமாகவும், ஸ்திர லக்கினத்திற்கு 9ம் பாவகம் பாதக ஸ்தானமாகவும், உபய லக்கினத்திற்கு 7ம் பாவகம் பாதக ஸ்தானமாகவும், இறை அருளின் கருணையினால் காலபுருஷ தத்துவத்தின் படி வகுக்கபட்டு இருக்கின்றது.

உதாரணமாக : 

 துலாம் ராசியை ( சரம் ) லக்கினமாக கொண்ட ஜாதகருக்கு, பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெரும் வீடுகள் வழியில் இருந்து ஜாதகர் அனுபவிக்கும் இன்னல்கள் பற்றி இந்த பதிவில் ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !




 மேற்கண்ட துலாம் இலக்கின ஜாதகருக்கு 1,5,7,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது 1,5,7,11ம் பாவக வழியில் இருந்து 200% இன்னல்களை அனுபவிக்க வைக்கும், இதில் வருந்த தக்க விஷயம் என்னவென்றால் தற்பொழுது நடைபெறும் சூரியன் திசை ( 06/07/2011 முதல் 05/07/2017 வரை ) 1,5,7,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று பலனை தருவது, ஜாதகரை 1,5,7,11ம் பாவக வழியில் அதிக துன்பத்திற்கும் இன்னல்களுக்கும் ஆட்படுத்தும்.

 1ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது : 

  ஜாதகர் சிறு வயதில் இருந்து  நல்ல வளரும் சூழ்நிலையை அமையாது, உடல் நிலை மன நிலை இரண்டும் வெகுவாக பாதிக்கபடும், குறிப்பாக ஜாதகர் பித்தம் சம்பந்த பட்ட பிணிகளால் அடிக்கடி பாதிப்பிற்கு உள்ளாகும் தன்மையை தரும், ஜாதகரின் எண்ணங்கள் யாவும் எதிர்மறையாக அமையும், தன்னம்பிக்கை வெகுவாக குறையும் மனோ ரீதியான பிரச்சனைகளுக்கு  தீர்வு காண முடியாமல் தனது மனம் சொன்ன படி செயல்பட்டு, தனது உடலையும் அறிவையும் தானே கெடுத்து கொண்டு, தன்னை சார்ந்தவர்களுக்கும் துன்பத்தை தருவார், மேலும் ஜாதகர் சுயமாக முடிவு எடுக்க இயலாமல் மற்றவரின் கட்டு பாட்டிலேயே இயங்கும் சூழ்நிலையை தரும், எதிர்பார்ப்புகள் யாவும் நிறைவேற வாய்ப்பு மிக மிக குறைவு.

5ம் வீடு  பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது : 

 முதலில் ஜாதகரை தனது பூர்வீகத்தில் இருந்து வெளியேற்றிவிடும், பரதேச ஜீவன வாழ்க்கையை மேற்கொள்ளும் நிலையை தரும், தனது பரம்பரை வழி அறிவாற்றலையும் சிந்தனை திறனையும்  இழந்து சிரமமான வாழ்க்கையை மேற்கொள்ளும் தன்மையை தரும், முரண்பட்ட கருத்துக்களால் குடும்பத்தில் குழப்பமும் சச்சரவும் அதிகரிக்கும், குல தேவதையின் சாபத்திற்கு ஆளாகி பல  இன்னல்களை ஜாதகர் அனுபவிக்கும் நிலையை தரும், ஜாதகருக்கு உதவி செய்ய எவரும் அற்ற சூழ்நிலையை தரும், அடிப்படையில் தனது அறிவாற்றலை எவ்விதத்திலும் பயன்படுத்த இயலாத சூழ்நிலையை தரும், உறவுகள் மற்றும் நண்பர்களிடம் பகைத்துகொள்ளும் சூழ்நிலையை ஏற்ப்படுத்தும்.

7ம் வீடு  பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது : 

 ஜாதகரின் திருமண வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிடும், ஆண்களாக இருப்பின் தாமத திருமணம் அல்லது இருதார யோகம் என்ற நிலைக்கு தள்ளிவிடும், பெண்களாக இருப்பின் கணவனை இழந்து தவிக்கும் சூழ்நிலையை தரும் அல்லது கணவனுடன் சேர்ந்து வாழும் வாய்ப்பை தட்டி பறிக்கும், ஜாதகரின் நண்பர்கள் அனைவரும் ஜாதகரை ஏதாவது ஒரு வகையில் ஏமாற்றி கொண்டே இருப்பார்கள்.

 ஜாதகருக்கு கூட்டு தொழில் மற்றும் கூட்டு முயற்ச்சி என்பது எந்த ஒரு சூழ்நிலையிலும் நன்மையை தராது, ஜாதகரின் வெளி வட்டார பழக்க வழக்கங்கள் யாவும் ஜாதகருக்கு துன்பத்தையே தரும், அரசியலில் ஈடுபட்டால் ஜாதகர் அனைத்தையும் இழந்து  நடுத்தெருவில் நிற்கும் சூழ்நிலையை தரும், வெளிநாடு சென்று ஜாதகர் ஜீவனம் செய்வது மிகப்பெரிய இழப்பினையே தரும், தன்னம்பிக்கை வெகுவாக குறையும்.

 11ம் வீடு  பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது : 

 ஜாதகர்  தனக்கு வரும் வாய்ப்புகளையும், அதிர்ஷ்டங்களையும் உதறி தள்ளும் சூழ்நிலையை தரும், எடுக்கும் முயற்சிகள் யாவும் தோல்வி மேல் தோல்வியே தரும், ஜாதகர் பிற்போக்கு சிந்தனை மற்றும் முயற்ச்சி இன்மையால் வாழ்க்கையை சிறப்பாக வாழும் வாய்ப்பை தவரவிடுவார், லாட்டரி, சூது, பங்கு சந்தை, யூக வணிகம் போன்றவற்றில் இறங்கினால் ஜாதகர் அனைத்தையும் இழந்து வாடும் சூழ்நிலையை தரும், ஜாதகர் அதிர்ஷ்டத்தை நம்பாமல் உழைப்பை நம்புவது சால சிறந்தது, தன்னை விட வயதில் மூத்தவர்களின் அறிவுரையை ஏற்று வாழ்க்கையில் நலம் பெறுவது அவசியம்.

நடை பெரும் திசை பாதக ஸ்தான பலனை தரும் பொழுது ஜாதகர் செய்ய வேண்டியவைகள் :

தற்பொழுது நடை பெரும் சூரியன் திசை ஜாதகருக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து இன்னல்களை தரும் என்பதால், 1) ஜாதகர் இலக்கின பாவக வழியில் சுய கட்டுப்பாட்டையும், ஒழுக்கத்தையும் கடைபிடிப்பதும், உடல்நலனில் அக்கறை எடுத்து கொள்வதும் அதிக நன்மையை தரும், 2) 5ம் பாவக வழியில் இருந்து குல தெய்வ வழிபாட்டினை முறையாக செய்வது சகல  நலன்களையும் தரும், ஆன்மீக குருவிடம் முறையாக தீட்சை பெறுவது சிறந்த நன்மைகளை வாரி வழங்கும்.

 3) 7ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் கூட்டு முயற்ச்சியில் ஈடுபடாமல் தனித்து இயங்குவதும், பொது காரியங்களில் ஈடுபடாமல் இருப்பதும், வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் இன்னல்களை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு நன்மையை செய்து 7ம் பாவக வழியில் இருந்து ஜாதகரை மீட்டு எடுக்கும், 4) 11ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் அதிர்ஷ்ட வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்வதும், சூது, பங்கு வர்த்தகம், யூக வணிகத்தில் ஈடுபடாமல் இருப்பது சகல நிலைகளில் இருந்தும் நன்மையை வாரி வழங்கும்.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


வியாழன், 30 ஜனவரி, 2014

சகல ஐஸ்வர்யங்களும் வாரி வழங்கும் தை அமாவாசை வழிபாடு!


ஒருவரின் சுய ஜாதகத்தில் பாதிக்க பட கூடாத பாவகங்களில் முதன்மை வகிப்பது உடல் உயிராகிய  லக்கினம், பூர்வ புண்ணியம் என்று சொல்லப்படும் 5ம் பாவகம், பாக்கிய ஸ்தானம் என்று வர்ணிக்கப்படும் 9ம் பாவகம், மேற்கண்ட மூன்று பாவகங்கள் சுய ஜாதகத்தில் பாதிக்கப்படும் பொழுது, ஜாதகரின் கருமையம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி, ஜாதகரின் உடல் நலம், கல்வி அறிவு, தொழில் மற்றும் வேலை வாய்ப்பு, திருமண தடை மற்றும் திருமண வாழ்க்கையில் வரும் இன்னல்கள், குழந்தை பாக்கியம் இன்மை, பொருளாதார பாதிப்புகள், ஜாதகருக்கு உதவி செய்ய யாரும் இல்லாத நிலை, தீய பழக்க வழக்கங்களுக்கு உட்ப்பட்டு தனது வாழ்க்கையை தானே சீரழித்து கொள்ளும் தன்மை, என்ற அமைப்பில் கடுமையான தீய பலன்களை வழங்க ஆரம்பித்து விடும்.

மேலும் மேற்கண்ட பாவகங்களின் பலனை நடப்பு திசை தர ஆரம்பித்து விட்டால் ஜாதகரின் நிலை மிகவும் பரிதாபத்திற்கு உரியதாக மாறிவிடும், மேலும் தனது நல வாழ்விற்கு உண்டான வழிகாட்டுதலும் ஜாதகருக்கு கிடைக்காது, தனித்து போராட வேண்டிய சூழ்நிலைக்கு ஜாதகர் தள்ளப்படுவார், மேற்கண்ட பாதிப்பில் இருந்து ஜாதகர் விடுபடவும், பாதிக்கபட்ட பாவகங்களில் இருந்து ஜாதகர் யோகம் பெறவும் இந்த தை அமாவாசை வழிபாடு உறுதுணை புரியும் என்றால் அது மிகையில்லை.

இலக்கின பாதிப்பு :

 ஜாதகர் இந்த தை அமாவசை தினத்தில் தனது பெற்றோரிடம் அட்சதை பெற்று ஆசி பெறுவதும், அவர்களுக்கு விருப்பமானதை வாங்கி தருவதும், சிறந்த நற்பலனை ஜாதகருக்கு இலக்கின வழியில் இருந்து பெற்று தரும், நல்ல ஆன்மீக குருவிடம் முறையான தீட்சை பெறுவது ஜாதகருக்கு இலக்கின வழியில் இருந்து வரும் துன்பங்களும், அக இருளும் நீங்கி அறிவில் தெளிவு பெற்று தனது பிறவி துன்பம் நீங்கி யோக வாழ்க்கையை பெற, ஜாதகருக்கு உறுதுணை புரியும், இந்த தை அமாவாசை தினத்தில் மேற்கண்ட வழிமுறைய கடை பிடித்து நலம் பெருக.

பூர்வ புண்ணிய பாதிப்பு :

 மாயை எனும் உலக வாழ்க்கையில் இருந்தும், இறை நிலையுடன் உயிர் கலப்பு பெறவும் முன்னோர்கள் காலம் காலமாக, முறையாக குல தேவதை வழிபாடு  என்ற முறையினை நமக்காக விட்டு சென்றுள்ளனர், குல தேவதை வழிபாடு என்பது ஜாதகரின் அறிவில் தெளிவையும், சிறப்பான சிந்தனை ஆற்றலையும், தனது துன்பங்களில் இருந்து விடுபட்டு யோக வாழ்க்கையை சிறப்பாக வாழ்வதற்கும், வழிவகுக்கம் என்றால் அது மிகையில்லை, நமது குல தெய்வ வழிபாடே நமது முன்னோர்களின் வாழ்க்கை முறைகளையும், வாழ்க்கையை சிறப்பாக  வாழும் வாழ்க்கை நெறியினையும் நமக்கு உணர்த்தும் என்றால் அது மிகையில்லை, எந்த ஒரு சூழ்நிலையில் இருந்தும் நம்மை காப்பது குல தெய்வ வழிபாடே, சரியான நேரத்தில் நமக்கும் தனது அருள் கரங்களால் காத்து அருளும் தன்மை மற்றும் சக்தி, நமது குல தேவதைக்கே உண்டு.

எனவே இந்த தை அமாவசை தினத்தில் தனது குல தேவதையை நாடி சென்று தன்னால் இயன்ற அளவு அண்ணதானம் பிறருக்கு செய்து குல தெய்வத்தை முறையாக, அவரவர் முறை படி குடும்பத்துடன் சென்று சிறப்பாக வழிபாடு செய்து வருவது ஐந்தாம் பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை நீக்கி, பூர்வீகத்தில் யோக வாழ்வு, குழந்தை பாக்கியம், எடுக்கும் காரியங்களில் வெற்றி, செய் தொழில் முன்னேற்றம், கல்வியில் வெற்றி, மன நிம்மதி, சிறந்த அறிவாற்றல், கலை ஆர்வம், கற்பனை திறன் ஆகியவற்றை தங்கு தடையின்றி பெற்று தரும் என்றால் அது மிகையில்லை.

பாக்கிய ஸ்தான பாதிப்பு :

 ஜாதகர் மேற்கொள்ளும் காரியங்களில் எல்லாம் தொடர் தோல்வியும், காரிய தடையும், முன்னேற்றம் அற்ற நிலையும், கௌரவம் நற்பெயருக்கு ஏற்ப்படும் கலங்கத்திர்க்கும் , அடிப்படை காரணமாக அமைவது பாக்கிய ஸ்தான பாதிப்பே, மேலும் ஜாதகர் சமுதாயத்தில் நல்ல மனிதராக மதிப்பு மரியாதையுடன் சிறப்பாக வாழும் யோகத்தை தருவது இந்த பாக்கிய ஸ்தானமே என்றால் அது மிகையில்லை, மேலும் ஆன்மீக வாழ்க்கையில் ஜாதகருக்கு நல்ல முன்னேற்றம் தருவதும், கற்ற கல்வியை சரியான முறையில் பயன்படுத்தும் நுண் அறிவாற்றலை தருவதும் பாக்கிய ஸ்தானமே என்றால் அது மிகையில்லை.

மேற்கண்ட பாக்கிய ஸ்தான அமைப்பில் இருந்து ஜாதகர் 100 சதவிகித நன்மையை பெற, இந்த தை அமாவாசை தினத்தில் தனது பித்துருக்களுக்கு முறையான வழிபாட்டினையும், தர்ப்பணத்தையும் தருவது முக்கியமாகும், மேலும் இந்துவாக பிறந்த ஒவ்வொரு மனிதனும் செய்யவேண்டிய கடமைகள் மூன்று 1 குல தெய்வ வழிபாடு 2 பித்ரு வழிபாடு 3 பிராமண தர்மம் ஆகியவற்றை இந்த தை அமாவசை அன்று கடை பிடித்து, 16 வகை செல்வமும், சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று வழைஅடிவாழையாக செழித்து ஓங்கி சிறப்பாக வாழ இறை அருள் துணை நிற்கட்டும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
9842421435

புதன், 22 ஜனவரி, 2014

பூர்வபுண்ணியம் பாதிக்கபடும் பொழுது ஜாதகர் அனுபவிக்கும் இன்னல்கள் !


ஒருவருடைய சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் பாதிக்கப்படும் பொழுது ஜாதகர் அனுபவிக்கும் இன்னல்கள் என்பது கொஞ்சம் அதிகமே, குறிப்பாக ஜாதகரின் அறிவு திறன் கடுமையாக பாதிக்கப்படும், சிந்தனை ஆற்றல் மட்டுப்படும், ஜாதகரின் திட்டங்கள் யாவும் கனவாகவே இருக்கும், நடைமுறை படுத்துவதற்கு உண்டான வாய்ப்பை வெகுவாக குறைக்கும், ஆக ஜாதகரின் வெற்றி என்பாது குதிரை கொம்பாகவே இருக்கும்.

 சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்க வேண்டிய பாவகங்களில் முதன்மை வகிப்பது பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் என்றால் அது மிகையில்லை, ஒருவர் எவ்வளவு கல்வி அறிவு பெற்று இருந்தாலும் சரி, உலக அனுபவம் பெற்று இருந்தாலும் சரி, பெரிய திறமைசாலியாக இருந்தாலும் சரி, சுய ஜாதகத்தில் ஐந்தாம் பாவகம் வலிமையற்று இருந்தால், ஜாதகரின் திறமைகள் யாவும் பயனற்று போகும், ஜாதகரால் வீணடிக்க படும், அல்லது எதிர்மறையான விளைவுகளை ஏற்ப்படுத்தும்.

பூர்வ புண்ணியம் பாதிக்கபடுவதை மூன்று வகையாக பிரிக்கலாம், 1 ஐந்தாம் பாவகம் உபய,ஸ்திர ராசிகளால் பாதிக்க படுவது, 2 ஐந்தாம் பாவகம் சர ராசியினால் பாதிக்க படுவது, 3 ஐந்தாம் பாவகம் பாதக ஸ்தான அமைப்பின்னால் பாதிக்கபடுவது, என்ற வகையில் பாதிப்பான பலன்களை ஐந்தாம்  பாவகம் வழங்கும், இதில் முதல் வகை பாதிப்பு என்பதின் வீரியம் 33% ஆகவும், இரண்டாம் வகை பாதிப்பு என்பதின் வீரியம் 80% ஆகவும், மூன்றாம் வகை பாதிப்பின் வீரியம் 200% மாகவும் அமையும், எனவே எந்த ஒரு  ஜாதகருக்கும் ஐந்தாம் பாவகம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தாம் பெற  கூடவே கூடாது.

எடுத்துகாட்டாக பின் வரும் ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே!



  இந்த சிம்ம இலக்கின ஜாதகருக்கு பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் பாதக ஸ்தானமான 9ம் வீட்டுடன் தொடர்பு பெற்று 9ம் வீடு காலபுருஷ  தத்துவ அமைப்பிற்கு முதல் வீடாக அமைவதும், ஐந்தாம் பாவகம் என்பது காலபுருஷ தத்துவத்திற்கு 9ம் வீடாக வருவதும் ஜாதகருக்கு தீமைகளை செய்யும் அமைப்பாக கருதலாம், இதனால் ஜாதகர் அடையும் இன்னல்கள் என்ன ? அனுபவித்த துன்பங்கள் என்ன ? என்பத்தை பற்றி சற்றே ஆய்வு செய்வோம் அன்பர்களே !

1 ஜாதகர் பிறந்த ஐந்து வருடங்களுக்குள்ளேயே, ஜாதகரின் தகப்பனார் தனது பெயரில் தனது முன்னோர்களின் பெயர்களில் உள்ள சொத்து நிலம் வீடு ஆகியவற்றை விற்றுவிட்டு வேறு இடத்தில் குடி பெயரும் சூழ்நிலையை தந்தது, ஜாதகருக்கு அடிப்படையில் வளரும் சூழ்நிலையை மாற்றி அமைத்தது, ஜாதகர் தனது உறவுகளை விட்டு விட்டு மற்று மனிதர்கள் வாழும் ஒரு  புதிய இடத்தில் வளரும் சூழ்நிலையை தந்தது, இதனால் ஜாதகரின் குழந்தை  பருவம் பாதிப்படைந்தது, நல்ல ஆரோக்கியமான வளரும் சூழ்நிலையை  தரவில்லை.

2 ஜாதகரின் கல்வி காலம் பல போராட்டங்கள் நிறைந்ததாக அமைந்தது, பல தடைகளை  தாண்டி ஜாதகர் தனது பள்ளி கல்வியை நிறைவு செய்யும் தன்மையை தந்தது, மேலும் பள்ளியில் படிக்கும் காலங்களில் ஜாதகர் பல அவ பெயரையும் சந்திக்கும் தன்மை தந்தது, உயர் கல்விக்காக ஜாதகர் முயற்ச்சி செய்த பொழுது பல தடைகளை சந்த்தித்து ஒரு வழியாக கல்லூரியில் சேர்ந்தார் ஆனால் முழுமையாக முடிக்க இயலாமல் பாதியில்  கல்லுரி படிப்பு முடிந்தது.

3 பல போராட்டங்களை சந்தித்து கல்லுரி படிப்பு பாதியில் நின்ற பிறகு, வேலைக்காக ஜாதகர் குறைந்த ஊதியத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார், பணியாற்றும் காலத்தில் ஜாதகர் தனது விருப்பத்தின் பெயரில்  காதல் திருமணம் செய்துகொண்டார் ( ஜாதகருக்கு 2 மற்றும் 7ம் பாவகம் நல்ல நிலையில் இருப்பதால் இளமையில் திருமணம்   நடைபெற்றது திருமணம் செய்து கொண்ட பெண்ணின் ஜாதகத்தில் 10 வீடுகள் பாதிப்பில் இருந்தது குறிப்பிட தக்கதது ) திருமணம் செய்து ஒரு வருடத்தில் ஜாதகருக்கு பெண் குழந்தை பிறந்தது, ஜாதகரின்  வருமான பற்றா குறையின் காரணமாக திருமண வாழ்க்கை கசந்தது, ஜாதகரின் தீய நண்பர்களின் சேர்க்கையினால் குடி பழக்கத்திற்கு  ஆளாகும் தன்மையை தந்தது, இதில் இருந்து மீள முடியாத நிலையில் ஜாதகர்  இன்னும் இருக்கின்றார்.

4 இவை மட்டுமல்ல இன்னும் பல சொல்ல இயலாத தீமைகளை ஜாதகருக்கு தந்துகொண்டே இருக்கின்றது, குறிப்பாக பாதக ஸ்தான பலனை எந்த எந்த திசை புத்திகள் தருகின்றதோ அப்பொழுதெல்லாம் ஜாதகர் தாங்க இயலாத துன்பங்களை அனுபவிக்க நேருகிறது, ஆக பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பூர்வ புண்ணியம்  ஜாதகருக்கு  கடுமையான பாதிப்பை தருகிறது என்பது  உறுதியாகிறது .

மேற்கண்ட தீய பலன்கள் நடைபெற முழுமுதற் காரணம் ஜாதகருக்கு பூர்வ புண்ணியம்  பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றதும், ஜாதகர் தனது பூர்வீகத்திற்கு உற்பட்ட 100 கிலோமீட்டரில் ஜீவனம் செய்ததுமே என்றால் அது மிகையாகாது, ஏனெனில் ஜாதகரின் மற்ற பாவகங்கள் மிக வலிமையாக அமைந்து  இருப்பது ஜாதகரின் யோக வாழ்க்கைக்கு கட்டியம்  கூறுகிறது,  இவரின் ஜாதகத்தில் 4,6,10 ம் வீடுகளின் வலிமை 80% யோகத்தையும், 1,2,3,7,11ம் வீடுகளின் வலிமை 50% யோகத்தையும் வாரி வழங்கி கொண்டு இருப்பது  சிறப்பான அமைப்பாக கருதலாம்.

ஆக ஜாதகரின் துன்பத்திற்கு முக்கிய காரணம் பூர்வீகம் பாதிக்க பட்டு தனது பூர்வீகத்திற்கு உற்பட்ட பகுதியில் ஜீவனம் செய்வதே, மேலும் ஜாதகரின் சிந்ந்தனை மட்டுப்படவும், திட்டங்கள் யாவும் நடைமுறைக்கு வராமல்,  காரியதடை ஏற்ப்படுவதிர்க்கும் மேற்கண்ட விஷயமே காரணமாக  அமைகிறது  என்றால் அது மிகையில்லை.

குறிப்பு : ஜாதகருக்கு ஜோதிட தீபம் பரிந்துரை செய்த ஆலோசனை ஜாதகரை  எல்லை தாண்டி ஜீவனம் செய்ய சொன்னதே, இதற்க்கு ஜாதகர் சொன்ன  பதில் ஜோதிட தீபத்தினை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது, " அய்யா நான் வெளியில் சென்று ஜீவனம் செய்தால் எனக்கு வரும் வருவாய் போதியதாக அமையாது " இதை நினைத்து நாம் அழுவாத சிரிப்பதா ? என்றே தெரியவில்லை, ஜாதகர் தனது பூர்வீகத்தை விட்டு வெளியில் சென்றாலே ஜாதகரின் ஜீவன ஸ்தான வலிமையின் காரணமாக கை நிறைவான வருமானத்தை பெரும் யோகம் உண்டாகும் , இந்த விஷயத்தை ஜாதகருக்கு புரிய வைக்க நமக்கு போதும் போதும் என்றாகிவிட்டது .

ஆக ஒருவரின் ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகரின் அறிவாற்றலின் தன்மை வெகுவாக பாதிக்க படுகிறது, சிந்தனை திறனும் குறைகிறது , ஒட்டுண்ணி போல் மற்றவரை   சார்ந்து வாழும் தன்மையை தருகிறது, தன்னம்பிக்கை குறைகிறது, தன்முனைப்பு என்பது இல்லாமல் உயிரற்ற மீன் போல் ஆற்றில் அடித்து செல்லும் நிலையை தருகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696