ரஜ்ஜுபொருத்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரஜ்ஜுபொருத்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, 26 ஜனவரி, 2024
வெள்ளி, 5 அக்டோபர், 2018
ரஜ்ஜு பொருத்தம் மற்றும் திசா சந்திப்பும் - திருமண பொருத்தம் காண்பதில் பாவக வலிமை அடிப்படையிலான அணுகுமுறை !
இன்றைய தலைமுறையினர் திருமண வாழ்க்கை குறுகிய காலத்தில் முடிவுக்கு வருவதற்கும், இல்லற வாழ்க்கை கேள்விக்குறியாக மாறி நிற்பதற்கும், கணவன் மனைவி ஒற்றுமை இன்மைக்கும், கருத்து வேறுபாடுகளுடன் பிரிந்து நிற்பதற்கும் அடிப்படை காரணம் சுய ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை குறிக்கும் பாவகங்களின் வலிமை அற்ற தன்மையே காரணமாக அமைகின்றது, திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது சுய ஜாதக வலிமைக்கு முக்கியத்துவம் தாராமல், நட்ச்சத்திர பொருத்தம் மற்றும் தோஷ நிர்ணயம் எனும் விஷயங்களுக்கு முக்கியத்துவம் தருவதும், அதன் அடிப்படையில் திருமண பந்தத்தில் இணைவதே மேற்கண்ட இன்னல்களுக்கு அதி முக்கிய காரணமாக அமைகிறது, திருமண பொருத்தம் சுய ஜாதக வலிமையின் அடிப்படையில் எப்படி பார்ப்பது, இதனால் வரன் வது இருவருக்கும் கிடைக்கும் நன்மைகள் என்ன ? என்பதை இன்றை பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !
வரன் ஜாதகம் :
வது ஜாதகம் :
இல்லற வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் முக்கிய பங்கு வகிப்பது சுய ஜாதகத்தில் 2,5,7,812ம் வீடுகள் என்றால் அது மிகையில்லை, குறிப்பாக வது, வரன் ஜாதகத்தில் 2,5,7ம் வீடுகள் வலிமை பெறுவது திருமண வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றங்களை வழங்கும், தம்பதியரின் வாழ்க்கையில் சுபயோகங்களையும், மனக்கசப்பற்ற தாம்பத்யத்தையும் தரும், மேற்கண்ட வரன், வது ஜாதகத்தில் 2,5,7,8,12ம் வீடுகளின் வலிமையை பற்றியும், அவை பெரும் தொடர்புகள் பற்றியும் இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொண்டு இவர்கள் இல்லற வாழ்க்கையில் இணைந்தால் ஏற்படும் நன்மை தீமை யோக அவயோக நிகழ்வுகள் பற்றி ஆய்வு செய்வோம் அன்பர்களே !
வரனின் ஜாதகத்தில் 2,5,7,8,12ம் வீடுகளின் வலிமை நிலை :
ஜாதகருக்கு 2ம் வீடு குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது வரவேற்கத்தக்கது, இது ஜாதகருக்கு அளவற்ற செல்வ வளம், இனிமையான வாக்கு வன்மை, யோகம் மிக்க குடும்ப வாழ்க்கை, குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்து செல்லும் தன்மை, ஒற்றுமையுடன் சேர்ந்து வாழும் தன்மை, நிறைவான வருமான வாய்ப்புகள், நல்ல உணவு, பேச்சு திறன் மூலம் வாழ்க்கையில் வெற்றி பெரும் யோகம், குழந்தைகளுடன் அன்பு பாசம், இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சி என்ற வகையில் சிறப்பான நன்மைகளை தரும்.
5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு நிறைவான கல்வி அறிவு, கலைகளில் தேர்ச்சி, சமயோசித அறிவு திறன், எதையும் எதிர்கொள்ளும் துணிவு, வாத திறமை, புத்திசாலித்தனம் மூலம் இன்னல்களை வெற்றிகொள்ளும் தன்மை, தன்னிறைவான செல்வ வளம், நல்ல குழந்தைகள், குடும்பத்தில் மகிழ்ச்சி, விளையாட்டில் ஆர்வம், காதலில் வெற்றி, காதல் திருமணம் மூலம் யோக வாழ்க்கை, தர்ம சிந்தனை, கற்ற கல்வி வழியில் இருந்து வரும் தனசேர்க்கை, குல தெய்வ ஆசிர்வாதம், மனதில் உள்ள எண்ணங்கள் யாவும் பலிதம் பெரும் தன்மை, குழந்தைகள் மூலம் யோகம், நல்ல ஆண் வாரிசு என்ற வகையில் சிறப்புகளை தரும்.
7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு சிறந்த வாழ்க்கை துணையை பெற்று தரும், சக்தி வாய்ந்த கூட்டாளி, நல்ல நண்பர்கள், வெளிநாடு யோகம், கூட்டு முயற்சி மூலம் வாழ்க்கையில் நலம் பெரும் தன்மை, திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி, திருமணதிற்கு பிறகான யோக வாழ்க்கை, தன்னிறைவான பொருளாதர முன்னேற்றம், வியாபர துறையில் மிக பெரிய முன்னேற்றம் என்ற வகையில் சிறப்புகளை வாரி வழங்கும், இல்லற வாழ்க்கை இனிதே அமையும், தெய்வீக அனுகிரகம் மூலம் சகல சௌபாக்கியங்களும் உண்டாகும்.
8,12ம் வீடுகள் உயிர் உடலாகிய லக்கின பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு ஆயுள் பாவக வழியில் இருந்து தீர்க்காயுள், தொல்லையில்லா யோக வாழ்க்கை, வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் அன்பு மற்றும் ஆதரவு, குறிக்கோள்கள் மிக எளிதாக நிறைவேறும் தன்மை, மருத்துவ உபகரணம் அல்லது ஆயுள் காப்பீடு போனஸ் இன்சூரன்ஸ் மூலம் மிகுந்த லாபத்தை தரும், 12ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு ஏற்படும் நஷ்டமே மிகுந்த லாபத்தை தரும், மற்றவர்களின் பணம் தன்னிடம் கையிருப்பாக இருக்கும், சிக்கனநடவடிக்கை மூலம் செல்வசேர்க்கை உண்டாகும், சிறு முதலீடுகள் கூட மிகுந்த லாபத்தை தரும், விரோதிகள் மறைவர், நல்ல சொத்து சுக சேர்க்கை உண்டு என்பதுடன், தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.
ஜாதகருக்கு நடைபெறும் சுக்கிரன் திசை தரும் பலன்கள் : ( 21/06/2018 முதல் 21/06/2038 வரை )
நடைபெறும் சுக்கிரன் திசை ஜாதகருக்கு 2ம் வீடு குடும்ப ஸ்தானமான 2ம் பாவக தொடர்பை பெற்று தனது திசையில் யோகமிக்க குடும்ப வாழ்க்கையை வழங்குவது வரவேற்கத்தக்கது, இதனால் ஜாதகர் நல்ல இல்லறவாழ்கை, மகிழ்ச்சியான குடும்பம், தன்னிறைவான வருமானம், செல்வச்செழிப்பு, பொருளாதார முன்னேற்றம், எதிர்ப்புகளை வெற்றிகொண்டு யோக வாழ்கையை பெரும் தன்மை, நம்பிக்கை மிக்க எதிர்காலம் என்ற வகையில் ஜாதகருக்கு சுக்கிரன் திசை அளவற்ற செல்வத்துடன் சுகபோக யோக வாழ்க்கையை வாரி வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை வாழ்த்துகள்.
வதுவின் ஜாதகத்தில் 2,5,7,8,12ம் வீடுகளின் வலிமை நிலை :
2,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவக தொடர்பை பெறுவது ஜாதகிக்கு வருமானம் சார்ந்த இன்னல்களை தரக்கூடும், இருப்பினும் இல்லற வாழ்க்கையை சிறப்பாக அமையும், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும், வாக்கு சார்ந்த விஷயங்களில் அதீத கவனம் ஜாதகிக்கு தேவை, 12ம் பாவக வழியில் இருந்து ஜாதகி எடுக்கும் முடிவுகளை மிகவும் ஆழ்ந்து யோசித்து எடுப்பது வீண் பண விரயத்தை தவிர்க்க உதவும், மேலும் பொறுமை காப்பதும், பெரியோர் ஆலோசனையை பெறுவதும் ஜாதகிக்கு சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும், குறிப்பாக பணத்தை முதலீடு செய்யுமுன் ஆழ்ந்து யோசித்து செய்வதே சகல நன்மைகளையும் தரும்.
5,7ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு அதிர்ஷ்ட லட்சுமியின் அருள் பார்வை எப்பொழுதும் பரிபூர்ணமாக அமைந்து இருக்கும், குறிப்பாக ஜாதகிக்கு பிறக்கும் குழந்தைகள் வழியில் இருந்து பரிபூர்ண அதிர்ஷ்டம் உண்டாகும், நிறைந்த நல்லறிவும், சமயோசித புத்திசாலித்தனமும் ஜாதகியின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், எதிர்ப்புகளை தனது அறிவு திறன் கொண்டு வெல்லும் வல்லமையை தரும், குல தெய்வத்தின் ஆசியின் மூலம் ஜாதகிக்கு சகல நன்மைகளும் நடைமுறைக்கு வரும் என்பது கவனிக்கத்தக்கது, 7ம் பாவக வழியில் இருந்து ஜாதகிக்கு கணவர் வழியில் இருந்தும், நண்பர்கள், கூட்டாளிகள், வெளியூர் அல்லது வெளிநாடுகள் வழியில் இருந்து சகல யோகமும் உண்டாகும் நன்மைகள் மேலோங்கும், கூட்டு முயற்சி பலிதம் பெரும் வாழ்க்கை துணை வழியிலான நன்மைகளை ஜாதகியும், ஜாதகியால் வழக்கை துணையும் பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும், இல்லற வாழ்க்கை ஜாதகிக்கு விரும்பியது போல் அமையும் என்பது கவனிக்கத்தக்கது.
8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு நீண்ட ஆயுளை தரும், இருப்பினும் சிறு சிறு மருத்துவ செலவினங்களை தரக்கூடும், உடல் நலனில் அதீத அக்கறை கொள்வது ஜாதகிக்கு மிகுந்த நன்மைகளை தரும், முதலீடுகளில் அதீத கவனமும் தேவை, மற்றவர்கள் விஷயங்களில் தலையீடு செய்வது வெகுவான இன்னல்களை தரக்கூடும்.
ஜாதகிக்கு நடைபெறும் சுக்கிரன் திசை தரும் பலன்கள் : ( 01/07/2014 முதல் 01/07/2034 வரை )
ஜாதகிக்கு நடைபெறும் சுக்கிரன் திசை 3,7ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 3,7ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டத்தை வாரி வழங்குவது வரவேற்கத்தக்கது, சுக்கிரன் திசையில் ஜாதகி எடுக்கும் காரியங்கள் யாவும் வெற்றி பெரும், நினைக்கும் எண்ணங்கள் யாவும் நிறைவேறும், விளையாட்டில் ஆர்வம் பரிசுகள், தெய்வீக அனுபவம், கமிஷன் வியாபாரம், தகவல் தொழில் நுட்பம் சார்ந்த துறையில் வெற்றி என்ற வகையில் சிறப்பான யோக வாழ்க்கையை தரும், 7ம் பாவக வழியில் இருந்து நல்ல யோகமிக்க வாழ்க்கை துணை, வெளிநாடுகளில் யோக வாழ்க்கை, கூட்டு முயற்சியில் வெற்றி, அரசு கவுரவம், வாழ்க்கை துணைக்கு அதிர்ஷ்டம், பிரபல யோகம், இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சி, வியாபர விருத்தி மற்றும் அதன் வழியிலான யோக வாழ்க்கை என்ற அமைப்பில் சுபயோகங்களை வாரி வழங்கும்.
திசா சந்திப்பு :
வரனுக்கும் வதுவுக்கும் ஏக காலத்தில் சுக்கிரன் திசை நடைமுறையில் இருப்பதால் திசா சந்திப்பு அல்லது ஏக திசை நடப்பு தோஷம் என்று கூறக்கூடும், வரன் வது இருவருக்கும் நடைபெறும் சுக்கிரன் திசை 2ம் பாவக வழியில் இருந்தும் 3,7ம் பாவக வழியில் இருந்தும் சுபயோகங்களை வாரி வழங்குவதால் இல்லற வாழ்க்கை மிகவும் யோகமிக்கதாகவே அமையும் என்பதை உறுதியாக கூறலாம், மேலும் ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்று அறிவுறுத்த கூடும், வரன் வது ஜாதகத்தில் பாவக வலிமை மிதமிஞ்சி நிற்பதால் ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்பதால் யாதொரு இன்னல்களும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொண்டு திருமணம் சிறப்பாக செய்யலாம் என்பது " ஜோதிடதீபம் " வழங்கும் அறிவுரை, வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
திங்கள், 29 மே, 2017
சுய ஜாதகம் வலிமை அற்ற வாழ்க்கை துணையை தேர்வு செய்வதால் வரும் இன்னல்கள் !
" திருமணம் ஆயிரம்காலத்து பயிர் " என்பது முதுமொழி, தனது சந்ததிகள் வாழையடி வாழையாக தழைத்து ஓங்கி வாழ சுய ஜாதகம் வலிமை பெற்ற ஓர் ஜாதகத்தை தனது வாழ்க்கை துணையாக தேர்வு செய்வது அவசியமாகிறது, இதை கருத்தில் கொண்டே முன்னோர்களும் பெரியவர்களும் சுய ஜாதக வலிமை அறிந்து திருமணம் செய்வது அவசியம் என்பதனை வலியுறுத்துகின்றனர், இதை ஏற்றுக்கொண்டு தமது இல்லற வாழ்க்கையில் சரியான பொருத்தம் நிறைந்த வலிமை பெற்ற ஜாதகத்தை தேர்வு செய்யும் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் பல சிறப்புகளை பெறுகின்றது, குறிப்பாக ஜாதகரின் வாரிசுகள் யோகம் நிறைந்ததாகவும், வாழ்க்கையில் குன்றாத வளம் நிறைந்தததாகவும் அமைகிறது, சுய ஜாதக வலிமை மற்றும் பொருத்தம் ஆகியவற்றில் சிறிது தவறு செய்தாலும் தம்பதியரின் வாழ்க்கை முற்றிலும் பெரும் இன்னல்களுக்கு ஆளாகும் சூழ்நிலையை தருகிறது, கருத்துவேறுபாடு ஏற்பட்டு இல்லற வாழ்க்கை பிரிவை நோக்கி செல்கிறது.
இந்த இடர்பாடுகளை தவிர்க்க தம்பதியரின் சுய ஜாதக வலிமையை தெளிவாக உணர்ந்து வலிமை பெற்ற ஜாதகத்தை இல்லற வாழ்க்கையில் சங்கமிக்கும் பொழுது திருமணம் என்னும் உயர்ந்த பந்தம், இல்லற வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும், சுகபோகங்களையும் தர தவறுவதில்லை, தனது வாழ்க்கை துணையாக கீழ்கண்ட ஜாதகத்தை தேர்வு செய்யலாமா ? என்ற ஓர் அன்பரின் கேள்விக்கு சம்பந்தப்பட்ட ஜாதகத்தை இன்றைய ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !
லக்கினம் : துலாம்
ராசி : சிம்மம்
நட்ஷத்திரம் : மகம் 2ம் பாதம்
மேற்கண்ட ஜாதகியை திருமணம் செய்துகொள்ளலாம ? நட்ச்சத்திர பொருத்தங்கள் 9 உண்டு என்பதால் பொருத்தம் சிறப்பாக இருக்கின்றது இல்லற வாழ்க்கை யோகத்தை தரும் என்கின்றனர் தங்களின் ஆலோசனை என்ன ? என்பது ஜாதகரின் கேள்வி, பெரும்பாலும் திருமணம் பொருத்தம் காண்பதில் சுய ஜாதக வலிமை கருத்தில் கொள்ளாமல், தசவித பொருத்தம், தோஷ நிர்ணயம், ஏக திசை பொருத்தம், ரஜ்ஜு பொருத்தம் போன்றவற்றிற்கு மட்டும் முக்கியத்துவம் தந்து திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்வது கல்லை கட்டிக்கொண்டு கடலில் இறங்குவதற்கு சமம் என்பதை கருத்தில் கொள்வது நலம், சுய ஜாதகம் வலிமை பெறாமல் எந்த பொருத்தங்கள் இருந்தாலும் தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக அமையாது என்பதே உண்மை, மேற்கண்ட ஜாதகத்திற்கு நட்ச்சத்திர பொருத்தம் ஒன்றை மட்டும் அடிப்படையாக கொண்டு திருமணம் செய்ய பரிந்துரை செய்து இருக்கின்றனர், இது எவ்வளவு பெரிய இன்னல்களை மணமகனுக்கு தரும் என்ற விஷயம் அறியாமலே, இனி ஜாதகியின் சுய ஜாதக வலிமையை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் .
திருமண வாழ்க்கையில் பெண்ணின் ஜாதகத்தில் அடிப்படையில் மிகவும் வலிமை பெற்று இருக்க வேண்டிய பாவகம் லக்கினமாக, லக்கினம் வலிமை பெறுவது ஜாதகியின் உயர்ந்த குணத்தையும், வளரும் சூழ்நிலை, மனவலிமை, உடல் ஆரோக்கியம் மற்றும் ஜாதகியின் கீர்த்தி புகழ் போன்றவற்றை எடுத்துரைக்கும், இந்த ஜாதகிக்கு லக்கினம் எனும் முதல் பாவகம் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, அடிப்படையில் லக்கினம் எனும் முதல் பாவகமே வலிமை அற்று காணப்படுகிறது என்பதும், ஜாதகி லக்கின பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களை அனுபவிக்க பிறந்தவர் என்பதும் தெளிவாகிறது, குறிப்பாக ஜாதகி பிற்போக்கு தனமான எண்ணமும், சுய ஆளுமை திறன் அற்றவர் என்பதும் உறுதியாகிறது.
அடுத்து குடும்ப ஸ்தானமான 2ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகியின் இல்லற வாழ்க்கை, தனம் சார்ந்த முன்னேற்றம், இனிமையான வாக்கு வன்மை ஆகியவற்றை பறைசாற்றும், ஜாதகியின் 2ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, குடும்ப வாழ்க்கையில் பலவித இன்னல்களை சந்திக்கும் நிலைக்கு ஜாதகி ஆளாகும் சூழ்நிலையை தரும் என்பதும், இனிமையான பேச்சு திறன் அற்றவர் என்பதும், பொருளாதார ரீதியான நெருக்கடி மற்றும் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அற்ற தன்மையை தரும் என்பதும் உறுதியாகிறது, எனவே ஜாதகிக்கு குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
அடுத்து தனது குலம் தழைக்க நல்ல வாரிசை நல்கும் அமைப்பான 5ம் வீடு ஜாதகிக்கு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல, மேலும் ஜாதகிக்கு சுய சிந்தனை, சமயோசித புத்திசாலித்தனம், நுண்ணறிவு ஆகியவை திறம்பட செயலாற்ற வாய்ப்பில்லை, மேலும் ஜாதகிக்கு புத்திர பாக்கியம் சார்ந்த இன்னல்களும் ஏற்படும், தெய்வத்தின் அனுக்கிரகமும், இறையருளின் கருணையையும் ஜாதகி பெறுவது என்பது குதிரை கொம்பாகவே இருக்கும், மேலும் புதிய சிந்தனை, அறிவு சார்ந்த முயற்சிகள் என்பது ஜாதகிக்கு சற்று குறைவு என்பது கவலை அளிக்கும் விஷயமாகும், இதனால் ஜாதகியின் வாழ்க்கை துணை பெரும் சிரமத்திற்கு ஆளாகும் சூழ்நிலையை தரும், தன்னம்பிக்கை குறையும், வீண் வாதமும், பிற்போக்குத்தனமான எண்ணங்களால் சூழப்பட்ட மனநிலையை பெற்றவர் என்பதும் உறுதியாகிறது.
அடுத்து கணவன் எனும் 7ம் வீடு ஜாதகிக்கு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகியின் கணவர் ஜாதகம் வலிமை பெற்று இருக்கவில்லை எனில் அவரின் கதி அதோகதிதான், அடிப்படையில் கணவன் மனைவி என்ற பிணைப்பே இருக்காது, தனது வாழ்க்கை துணையை ஓர் எதிரியாக பாவிக்கும் மனநிலையை ஜாதகிக்கு தந்துவிடும், திருமணத்திற்கு பிறகு கணவரின் அனைத்து செயல்பாடுகளும் முழுவதுமாக முடங்கும், ஜாதகரின் சுய வலிமை அனைத்தும் செயலற்று சூனியமாக மாறிவிடும், தம்பதியர் இருவருக்கும் மிகுந்த கருத்துவேறுபாடு உருவாகும், தம்பதியர் இருவரும் ஒருவர் வழியில் இருந்து ஒருவர் கடுமையான இன்னல்களை சந்திக்கும் நிலையை தரும், இல்லற வாழ்க்கையில் நிம்மதி என்பதே சிறிதும் இருக்காது, 7ம் வீடு பெண்களின் ஜாதகத்தில் பாதிக்கப்படுவது கணவருக்கு மிகப்பெரிய நெருக்கடிகளை கொடுக்கும் என்பதும், இல்லற வாழ்க்கையில் பிரிவு ஏற்படும் என்பதும் கவலை தரும் விஷயமாகும்.
அடுத்து ஆயுள் ஸ்தானம் எனும் 8ம் வீடு ஜாதகிக்கு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகிக்கும் ஜாதகியின் கணவருக்கும் பேரிழப்புகளையும், திடீர் இழப்புகளையும் தரும், விபத்து, உடல்நல குறைபாடு, தனம் சார்ந்த நஷ்டங்கள், என தம்பதியர் இருவரும் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்ளும் நிலையை தரும், மேலும் ஆயுள் பாவகம் என்பது ஜாதகி தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து பெரும் வருமானம் மற்றும் பொருளாதார வசதி வாய்ப்புகளை குறிக்கும், இந்த பாவகமும் ஜாதகிக்கு பாதிக்கப்படுவது ஜாதகி தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து கடுமையான இழப்புகளை சந்திக்கும் நிலைக்கு ஆளாவர் என்பதை உறுதிப்படுத்துகிறது.
அடுத்து அயன சயன ஸ்தானம் எனும் 12ம் வீடு ஜாதகிக்கு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகிக்கு சில நன்மைகளை தந்த போதிலும், இல்லற இன்பம் எனும் விஷயங்களில் முரண்பட்ட வாழ்க்கையை தந்துவிடும் என்பதால் இதுவும் உகந்ததல்ல, எனவே மேற்கண்ட ஜாதகியின் சுய ஜாதக வலிமை என்பது மிகவும் வலிமை அற்று காணப்படுவது, ஜாதகியை மணந்துகொள்ள நினைக்கும் அன்பருக்கு நல்லதல்ல, ஒருவேளை மணந்துகொள்ள நினைக்கும் அன்பரது சுய ஜாதகம் மிகவும் வலிமை பெற்று இருந்தால் ஓரளவிற்கு ஜாதகர் சமாளிக்க கூடும் என்பது மட்டுமே ஆறுதலான, விஷயம்.
தனது வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் அன்பர்கள்! அவரது சுய ஜாதக வலிமை நிலையை உணர்ந்து தேர்வு செய்வது நல்லது, இல்லை எனில் தனது சுய ஜாதகத்தில் உள்ள யோக நிலையும், யோக பங்கமாக மாறிவிட வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதை கவனத்தில் கொள்க, மேலும் நட்ச்சத்திர பொருத்தம், ரஜ்ஜு பொருத்தம், செவ்வாய் தோஷ பொருத்தம், ராகுகேது தோஷம், ஏக திசை பொருத்தம் போன்றவை எல்லாம் ஓர் ஜாதகத்தை ஆளுமை செய்யாது, அதனால் யாதொரு பாதிப்பும் வாராது, சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் மட்டும் வலிமை பெற்று இருப்பதை உறுதி செய்து தனது வாழ்க்கை துணையை தேர்வு செய்வதே புத்திசாலித்தனம், சுய ஜாதகம் வலிமை பெற்று இருந்து நடைபெறும் எதிர்வரும் திசா புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் நட்ச்சத்திர பொருத்தம், ரஜ்ஜு பொருத்தம், செவ்வாய் தோஷ பொருத்தம், ராகுகேது தோஷம், ஏக திசை பொருத்தம் ஆகியவை இல்லை என்றாலும், திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும், லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் பாதிக்கப்பட்டு, நடைபெறும் எதிர்வரும் திசாபுத்திகள், வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால், நட்ச்சத்திர பொருத்தம், ரஜ்ஜு பொருத்தம், செவ்வாய் தோஷ பொருத்தம், ராகுகேது தோஷம், ஏக திசை பொருத்தம் ஆகியவை இருந்தாலும் அதனால் யாதொரு பலனும் இருக்காது, இல்லற வாழ்க்கையும் சிறப்பிக்காது, என்பதை உணர்ந்து செயல்படுவதே புத்திசாலித்தனம்.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

