உடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 2 ஜூலை, 2025

ஜென்ம லக்கினம் எனும் முதல் பாவகம் !

 


 ஜாதகரின் தலை மற்றும் மூளையை குறிக்கும், மேலும் அரசியல் ரீதியான ஜாதகரின் செயல்பாடுகள், சிறப்பு அந்தஸ்து மற்றும் அடையாளம், நேர்த்தியான அழகு, அமைதியான குணம், அரசியல் சார்ந்த அறிவாற்றல், நீண்ட ஆயுள், உடல் ஆரோக்கியம், தான் கொண்ட லட்சியம், இயல்பு வாழ்க்கை, இந்த பிறவியின் தன்மை மற்றும் நோக்கம், இளமை காலங்களில் ஜாதகர் பெரும் யோக வாழ்க்கை, உயிர்சக்தி மற்றும் அதன் செயல்திறன், உழைப்பின் தன்மை அதனால் பெரும் நன்மைகள், உடல் ரீதியான பாதிப்பில் இருந்து மீண்டுவரும் யோகம்,  உயிரின் வீரியம், உடல் வலிமை, நேர்த்தியான உருவ அமைப்பு, ஐம்புலன்கள் செயல்படும் தன்மை.

 ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கை, கனவு நனவாக ஜாதகரின் உழைப்பு, கல்வியில் பெரும் வெற்றி, புகழ், கீர்த்தி குலபெருமை, குணநலன்கள், கவுரவம், சிந்தனை திறன், சூழ்நிலை, ஒரு செயலின் ஆரம்பம் மற்றும் துவக்கம், ஜாதகர் பெற்ற ஞானம், தலைமை பண்பு, தனி திறமை, திருப்தியான மனம், தீர்மானமான செயல்பாடுகள், தோற்ற பொலிவு, நன்னடத்தை, நிறம், பதவி சார்ந்த வெற்றிகள், தனித்துவமான படைப்பாற்றல், புகழ் மிக்க பொறுப்புகள் அதை சிறப்பாக கையாளும் வல்லமை, புகழ் பெரும் யோகம், மச்சம் மற்றும் அடையாளம், மகிழ்ச்சியான மனநிலை, மரியாதை நிறைந்த வாழ்க்கை, உடல் மின்னோட்டம்.

 முகபாவனை மற்றும் தேஜஸ், ஜாதகரின் முயற்சிக்கும் தன்மை, மூளையின் செயல்திறன், யோகவாழ்க்கையை சிறப்பாக சுவீகரித்தல், அதன் வழியிலான லாபங்களை முழுமையாக பெறுதல், வடிவமான உடல்கட்டு, வலிமையான தேகம், வாழ்க்கையை சிறப்பாக வாழும் முறை உணர்ந்து வெற்றி பெறுதல், ஆரம்ப கால வாழ்க்கையை சிறப்பாக துவங்குதல், உயர்வான வாழ்வை சுவீகரிக்க ஜாதகரின் உழைப்பின் தன்மையே காரணமாக அமைத்தல், தனது விருப்பங்களை மிக எளிதாக அடைதல், விவேகம் நிறைந்த செயல்பாடுகள் மூலம் அனைத்தையும் அடைதல், வீரியம் குறையாத யோக வாழ்க்கை என அனைத்தையும் ஒரு ஜாதகருக்கு "ஜென்ம லக்கினம்" எனும் முதல் பாவகமே வாரி வழங்கும்.

குறிப்பு : 

இவ்வளவு சிறப்பு வாய்ந்த ஜென்ம லக்கினம் நமது ஜாதகத்தில் வலிமை பெற்று இருக்கிறதா ? என்பதை பொறுத்தே நமது வாழ்க்கை யோகம் நிறைந்ததாக அமையும்.

ஜோதிடன் வர்ஷன் 

9443355696


புதன், 16 ஏப்ரல், 2014

ஆயுள் பாவக நிர்ணயம், பூர்ண ஆயுள் அற்ப ஆயுள் விளக்கம் !



கேள்வி :

 அய்யா வணக்கம் எனது ஜாதகத்தை பார்த்த ஜோதிடர்கள், எனது பெற்றோரிடம் இந்த ஜாதகருக்கு ஆயுள் பாவகம் வலிமையில்லாமல் இருப்பதால், ஆயுளுக்கு பங்கம் ஏற்ப்படலாம் என்று கூறியுள்ளனர், இதனால் எனது பெற்றோர்கள் அதிக மன உளைச்சலுடன் இருக்கின்றனர், என்னையும் மனதளவில் கவலையுற செய்கின்றனர், எனது ஜாதகத்தை சரியாக கணிதம் செய்து ஆயுள் பாவக பலனை நிர்ணயம் செய்து ஜாதக பலன் கூறுமாறு பணிவுடன் வேண்டுகிறேன் .

பதில் :

 அன்பு தம்பிக்கு தங்களது ஜாதகத்தை நன்றாக ஆய்வு செய்த வகையில் ஒன்றை மட்டும் தெளிவாக சொல்கிறேன் தங்களுக்கு பூரண ஆயுள், இதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை ஏனெனில், தங்களின் சுய ஜாதகத்தில் ஆயுள் வலிமையை குறிக்கும் 8ம் வீடும், உயிர் உடல் அமைப்பை குறிக்கும் லக்கினமும் 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருப்பதே அதற்க்கு காரணம், குறிப்பாக 8ம் வீடு ஆயுள் பாவகத்துடன் தொடர்பு பெரும் பொழுது ஜாதகருக்கு பூரண ஆயுளை தந்துவிடும், இலக்கின பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு உடல் ஆரோக்கியத்திற்கும், மன ஆரோக்கியத்திற்கு எவ்வித சிரமும் வர வாய்ப்பில்லை என்பதால், தாங்கள் எவ்வித கவலையும் அடைய தேவையில்லை.

தங்களது பெற்றோருக்கும் தெளிவாக சொல்லிவிடுங்கள் தங்கள் உயிருக்கும், உடலுக்கும் எவ்வித பாதிப்பும் வர வாய்ப்பில்லை என்று, எனவே தாங்கள் எவ்வித மன கவலையும் கொள்ளாமல் தைரியமாக இருக்கலாம், இதற்க்கு மேலும் உங்களுக்கு ஆயுள் பாவகம் பற்றிய கவலை வருமெனில், நேராக வளர்பிறை திங்கள் அன்று திருமலை திருப்பதி சென்று ஏழு மலையானுக்கு முடி காணிக்கை செய்துவிட்டு, ஸ்ரீ வாரி தீர்த்தத்தில் குளித்து ஸ்ரீ வாரி பெருமாளை தரிசனம் செய்து வரவும், தங்களுக்கு 100 சதவித நன்மையை ஆயுள் என்ற அமைப்பில் இருந்து தருவார், மேலும்  தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனது என்ற அமைப்பில் இருக்கட்டும்.

 மேலும் எக்காரணத்தை கொண்டும் எந்த ஒரு ஜோதிடராலும் ஒருவரின் ஆயுள் பாவகத்தின் தன்மையை நிர்ணயம் செய்து விட முடியாது, இறை அருளின் தன்மைக்கு மட்டுமே இந்த விஷயம் புலப்படும், எனவே தங்களின் ஜாதக அமைப்பில் ஆயுள் என்ற அமைப்பு நல்ல நிலையில் இருப்பது மட்டும் உறுதி  என்பதால் பெரிய அளவில் தாங்கள் மன கவலை கொள்ளாமல் வாழ்க்கையை இனிமையாக வழ கற்று கொள்ளுங்கள், தங்களின் பெற்றோருக்கும் தைரியம் சொல்லுங்கள். வாழ்த்துகள் 

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

வியாழன், 26 டிசம்பர், 2013

பூர்வபுண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் தரும் யோக அவயோக பலன்கள் !



ஒருவருடைய சுய ஜாதக அமைப்பில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் ஜாதகரின் நல்லறிவு, சிந்தனை திறன், தனக்கு அமையும் வாரிசுகளின் நிலை, கலை துறையில் பெரும் வெற்றி, இயல் இசை நாடக துறையில் ஏற்ப்படும் தனிப்பட்ட திறமை மற்றும் புலமை, தனது குழந்தைகளால் ஏற்ப்படும் யோக வாழ்க்கை, தனது எண்ணத்தின் வலிமை அதனால் கிடைக்கும் வெற்றி என்ற அமைப்பில் இருந்தும்.

 ஆய கலைகள் 64ல் தேர்ச்சி, தர்ம சிந்தனை , இறைசிந்தனை, இறை அருளின் கருணையை பெரும் யோகம், ஜாதகரின் தனிப்பட்ட புத்திசாலித்தனம் என்ற நிலைகளில் தரும் பலன்களை பற்றியும், ஜாதகரின் வாத திறமையினையும், சரியான நேர்மையான தீர்பளிக்கும் தன்மையினையும், தனது சுய அறிவாற்றல் கொண்டு வாழ்க்கையில் தேடும் செல்வ நிலையினை பற்றியும், தனது காதல் வெற்றியினை பற்றியும், தனிப்பட்ட விளையாட்டு திறமைகளை பற்றியும் தெளிவாக தெரிந்துகொள்ள பூர்வபுண்ணியம் எனும் ஐந்தாம் பாவக நிலையினை வைத்து தெளிவாக தெரிந்துகொள்ள இயலும்.

ஒருவருடைய சுய ஜாதகத்தில் ஐந்தாம் பாவகம் நல்ல நிலையில் இருப்பின் மேற்கண்ட அமைப்பில் இருந்து ஜாதகர் யோக பலன்களை அனுபவிக்கும் தன்மையை தரும், இதற்க்கு மாறாக ஐந்தாம் பாவகம் 4,8,12ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றாலோ ? ஐந்தாம் பாவகம் பாதக ஸ்தானத்துடன்  (சர லக்கினத்திற்கு 11வீடு , ஸ்திர லக்கினத்திற்கு 9 வீடு , உபய லக்கினத்திற்கு 7வீடு ) சம்பந்தம் பெற்றாலோ? ஜாதகருக்கு மேற்கண்ட அமைப்பில் இருந்து எதிர்பதமாக தீய பலன்களே நடைபெறும் .

ஒருவருடைய சுய ஜாதகத்தில் ஐந்தாம் பாவகம் நெருப்பு ராசியாக அமைந்து நல்ல நிலையில் இருந்தால் :

 ஜாதகர் தனது பூர்விக அமைப்பில் இருப்பதால் வாழ்க்கையில் நிலையான வெற்றியை தரும், குறிப்பாக ஜாதகரின் செயல்பாடுகள் அனைத்தும் மிக சுறுசுறுப்பாக அமையும், விரைவான செயல்பாடுகளாலும் விரைந்து முடிவெடுக்கும் தன்மையினாலும் ஜாதகரின் வாழ்க்கை முன்னேற்றம் பெரும், ஜாதகருக்கு பிறக்கும் குழந்தைகளால் ஜாதகரின் வாழ்க்கை முன்னேற்றம் மற்றும் செல்வ சேர்க்கை குறுகிய காலத்தில் அபரிவிதமான நிலைக்கு எடுத்து செல்லும், ஜாதகரின் சிந்தனை ஆற்றல் அபரிவிதமாக வேலை செய்யும், மற்றும் அதி புத்திசாலித்தனம் ஜாதகரை வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு எடுத்து செல்லும்.

ஒருவருடைய சுய ஜாதகத்தில் ஐந்தாம் பாவகம் நெருப்பு ராசியாக அமைந்து பாதிக்க பட்ட  நிலையில் இருந்தால் :

ஜாதகரை தனது பூர்வீகத்தில் இருந்து சிறு வயதிலேயே வெளியே துரத்தி ஜீவிக்க வைத்து விடும், அல்லது  கல்விக்காவோ, ஜீவனம் தேடியோ வெளி ஊருக்கு அனுப்பி விடும், ஒருவேளை ஜாதகர் தனது பூர்விகத்தில் இருப்பின் ஜாதகரின் குணம் மிக மோசமான அமைப்பை பெற்று இருக்கும், தெளிவான செயல்பாடுகள் அற்றவராகவும், முரட்டு பிடிவாதம் கொண்டவராகவும், குரூர எண்ணம் கொண்டவராகவும், தனது சுய லாபத்திற்காக எதை பற்றியும் சிந்திக்காமல் படு பாதக செயல்களை கூச்சம் இன்றி செய்பவராக இருப்பார், மனித நேயம் என்பது ஜாதகரிடம் மருந்துக்கு கூட இருக்காது, மேற்கண்ட அமைப்பே ஜாதகரின் அழிவுக்கு காரணமாக அமைந்துவிடும், மேலும் ஜாதகருக்கு வாரிசு கிடைப்பது அரிதிலும் அரிது.

ஒருவருடைய சுய ஜாதகத்தில் ஐந்தாம் பாவகம் நில ராசியாக அமைந்து நல்ல நிலையில் இருந்தால் :

ஜாதகர் பூர்வீகத்தில் குடியிருப்பதால் நல்ல உடல் நிலையினையும் தெளிவான சிந்தனை ஆற்றலையும் தரும், ஜாதகருக்கு பூர்வீக சொத்து சுகங்கள் இயற்கையா நல்ல நிலையில் அமையும், ஜாதகரின் செயல்பாடுகள் அனைத்தும் மற்றவர்கள் பாராட்டும் விதத்தில் அமையும், எதையும் பலமுறை யோசனை செய்து சரியாக செய்யும் தன்மையை தரும், ஜாதகரின் பொறுமை வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை வாரி வழங்கும், ஜாதகருக்கு நல்ல வாரிசுகள் அமையும், அவர்களாலும் சொத்து சுக சேர்க்கை ஏற்ப்படும், மேலும் ஜாதகர் தனது சுய  உழைப்பால் பல தலமுறைக்கு சொத்து சுகங்களை தேடி வைக்கும் தன்மையை தரும் .

ஒருவருடைய சுய ஜாதகத்தில் ஐந்தாம் பாவகம் நில ராசியாக அமைந்து பாதிக்க பட்ட நிலையில் இருந்தால் :

ஜாதகர் பிறந்த சில வருடங்களிலேயே தனது பூர்வீகத்தில் தனக்கு அமைந்த சொத்து சுகங்களை இழந்து பரதேச ஜீவனத்தை தந்துவிடும், தனது மூதாதையர்கள் பெயரில் உள்ள சொத்துகள் அனைத்தினையும் இழக்கும் தன்மையை தரும், மேலும் ஜாதகரின் உடல் நிலை கடினமாக பதிக்க படும், இதன் காரணமாக தனது சொத்து சுகங்களை இழக்கும் சூழ்நிலையை கூட தரக்கூடும், மேலும் ஜாதகரின் சிந்தனை ஆற்றலும் பாதிக்க படும், ஜாதகருக்கு உதவி செய்ய யாரும் முன் வர யோசனை செய்வார்கள், இறை அருளின் கருணை ஜாதகருக்கு துணை நிற்க வாய்ப்பு மிக மிக குறைவு, குழந்தை பாக்கியம் அமைவது சற்று பாதிக்கப்பட கூடும்.

ஒருவருடைய சுய ஜாதகத்தில் ஐந்தாம் பாவகம் காற்று  ராசியாக அமைந்து நல்ல நிலையில் இருந்தால் :

ஜாதகர் பூர்வீகத்தில் குடியிருப்பதால் நன்மை உண்டாகும், குறிப்பாக ஜாதகரின் அறிவாற்றலின் வீச்சு மிக பெரிய அளவில் இருக்கும், ஜாதகரின் அறிவார்ந்த செயல்கள் யாவும் பொதுமக்களிடையே பெரிய அளவில் பேசப்படும், ஜாதகரால் இயலாத காரியம் ஒன்றும் இல்லை என்ற நிலையை தரும், தம்மை நாடி வரும் அன்பர்கள் அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் உதவிகரமாக இருப்பார், ஜாதகரின் ஆலோசனை படி நடக்கும் அன்பர்கள் யாவரும் குபேர சம்பத்தை பெறுவார்கள், ஜாதகரின் வாக்கு வன்மை மிக சிறப்பாக அமையும், வாக்கு பலிதம் உண்டாகும், ஜாதகரின் முன்னோர்கள் போன்றே ஜாதகரும் சமுதாயத்தில் மக்களுக்கு பிரதி பலன் பாராமல், தொண்டு செய்யும் மனப்பான்மையை தரும், ஜாதகருக்கு நல்ல வாரிசுகள் அமையும், அவர்களின் வாழ்க்கையும் செழுமை பெரும்.

ஒருவருடைய சுய ஜாதகத்தில் ஐந்தாம் பாவகம் காற்று  ராசியாக அமைந்து பாதிக்க பட்ட நிலையில் இருந்தால் :

ஜாதகர் பூர்வீகத்தில் குடியிருக்கும் வரை ஜாதகரின் அறிவாற்றல் சிறிதும் வேலை செய்யாது , மற்றவர்களை சார்ந்து ஒட்டுண்ணி போல் வாழும் சூழ்நிலையை தரும், ஒரு சிறு தேவைகளை நிறைவு செய்வதற்கும் மற்றவர்கள் கையை பார்த்து வாழும் சூழ்நிலையை தரும், அப்படி இருந்தாலும் கூட ஜாதகருக்கு உதவி செய்ய யாரும் முன்வர மாட்டார்கள், மேலும் ஜாதகர் சொல்லும் யோசனைகள் யாவும் பெரும் தோல்வியை தரும், நாளடைவில் ஜாதகரின் சிந்தனை மாறும் அறிவு திறன் வெகுவாக மழுங்க ஆரம்பிக்கும், ஜாதகர் செயல்பாடுகள் யாவும் ஜாதகருக்கே எதிராக திரும்பும், தனது அறிவற்ற செயல்களால் அனைத்தையும் இழந்து நடு தெருவுக்கு வரும் சூழ்நிலையை தந்துவிடும்.

ஒருவருடைய சுய ஜாதகத்தில் ஐந்தாம் பாவகம் நீர்  ராசியாக அமைந்து நல்ல நிலையில் இருந்தால் :

ஜாதகர் பூர்வீகத்தில் குடியிருப்பதால் வாழ்க்கையில் பல அதிர்ஷ்டங்களை அடைவார், குறிப்பாக கலைத்துறையில் ( இயல், இசை, நாடகம் ) மிகப்பெரிய வெற்றியை பெரும் தன்மையை தரும், குறுகிய காலத்தில் மக்கள் மனதில் இடம்பிடிக்கும் யோகம் கொண்டவர்கள், அனைவரிடமும் இனிமையாக பழகும் தன்மை பெற்றவர்கள், ஜாதகரின் முன்னேற்றம் என்பது அதிர்ஷ்ட வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வெற்றி காணும் தன்மையை பொறுத்து அமையும், எந்த ஒரு விஷயத்திலும் நேர்மறை எண்ணங்களை கொண்டு மிகப்பெரிய சாதனைகளை படைக்கும் யோகத்தை தரும், நல்ல அதிர்ஷ்டம் நிறைந்த குழந்தைகளை பெறுவார், மனதில் நினைக்கும் எந்த ஒரு காரியத்தையும் சாதிக்கும் தன்மை கொண்டவர்கள்.

ஒருவருடைய சுய ஜாதகத்தில் ஐந்தாம் பாவகம் நீர்  ராசியாக அமைந்து பாதிக்க பட்ட நிலையில் இருந்தால் :

ஜாதகர் பூர்வீகத்தில் குடியிருந்தால் ஜாதகர் அதிக மன உளைச்சலுக்கும், மன அழுத்தத்திற்கும்  ஆளாகும் சூழ்நிலையை தரும், இதனால் ஜாதகரை சார்ந்தவர்களுக்கும் அதிக மன கவலைகளை ஏற்ப்படுத்துவார், குறிப்பாக போதை வஸ்துகளை பயன்படுத்தி தனது ஆரோக்கியத்தை தானே  கெடுத்து கொள்ளும்  நிலையை தரும், ஜாதகரின் முன்னேற்றம் என்பது சிறிதும் இருக்காது, சற்றே கவனிக்காமல் இருந்தால் ஜாதகர் வெகு விரைவில் மன நோய்க்கு ஆளாகும் சூழ்நிலையை தரும், ஜாதகர் செய்யும் செயல்கள் யாவும் மிகப்பெரிய இன்னல்களையே உருவாக்கும், குழந்தை பாக்கியம் கிடைப்பது அரிது, இவர்களை சிறு வயது முதற்கொண்டு சரியாக நேர்வழி பாதையில் நடத்தி செல்வது அவரது பெற்றோரின் கடமை, ஜாதகருக்கு மன நிலை பாதிக்க பட்டால் ஜாதகரை அதில் இருந்து மீட்டு எடுப்பது மிக சிரமமே.

மேற்கண்ட அமைப்பில் ஐந்தாம் பாவகம் நன்மை தீமை பலன்களை தரும், மேலும்  ஐந்தாம் பாவக நிலையை தெளிவாக உணர சர,ஸ்திர,உபய ராசிகளின் அமைப்பை வைத்து நிர்ணயம் செய்வது அவசியம், ஒரு ஜாதகருக்கு நல்ல அறிவு , பூர்வ புண்ணிய சொத்துகள், சிறந்த புத்திசாலித்தனம், சமயோசித புத்திசாலித்தனம், இறை நிலையின் பரிபூரண கருணை, குல தேவதையின் அருள் மற்றும் நல்ல புத்திர சந்தானம் அமைவது ஜாதகரின் பூர்வபுண்ணிய நிலையின் அடிப்படியிலேயே என்றால் அது மிகையாகாது . 

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969
9842421435

வெள்ளி, 29 ஜூன், 2012

விபத்து அல்லது திடீர் இழப்பை தவிர்க்க !


 


சுய ஜாதக அமைப்பில் லக்கினத்திற்கு 8 ம் வீடு சர ராசியாக அமைந்து 8 ம் வீட்டுடன் தொடர்பு பெற்றாலும் , அல்லது 8 ம் வீடு 2 ,6 ,8 ,12 விட்டுடன் தொடர்பு பெற்று தொடர்பு பெரும் வீடுகள் சர ராசியாக அமைந்து நடக்கும் திசை ,புத்தி , அந்தரம் , சூட்சமம் ஆகியன இந்த வீடுகளின் பலனை நடத்தினால் ஜாதகருக்கு எதிர்பாராத இழப்புகள் நிச்சயம் ஏற்ப்படும் . மேலும் 8 ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று நடக்கும் திசை ,புத்தி , அந்தரம் , சூட்சமம் ஆகியன பாதக ஸ்தான பலனை நடத்தினால் நிச்சயம் ஜாதகர் எதிர்பாராத இழப்புகளை சந்திக்க வேண்டி வரும்.

ஜாதகர் இந்த காலங்களில் வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது மிகவும் அதிக கவனமாக இருப்பது நல்லது , மேலும் வண்டி வாகனத்தை சுயமாக இயக்குவதை தவிர்க்கலாம் அல்லது நல்ல ஓட்டுனரை வைத்து கொள்வது சால சிறந்தது . மேலும் இந்த அமைப்பை பெற்ற ஜாதகர்கள் வாகனத்தில் செல்லும் முன் அருட்காப்பு சங்கல்பம் செய்து கொள்வது 100 சதவிகித நன்மையை நிச்சயம் தரும் , இந்த காலங்களில் ஜாதகர் ஆஞ்ச நேயர் வழிபாடு செய்வது எவ்வித இழப்புகளில் இருந்தும் ஜாதகரை 100 சதவிகதம் காப்பாற்றி , இழப்புகளில் இருந்து நிச்சயம் மீட்டெடுக்கும் . அல்லது அருகில் உள்ள காவல் தெய்வங்களை வழிபாடு செய்து நன்மை பெறலாம் .

ஒருவர்  விபத்து அல்லது திடீர் இழப்பை தவிர்க்க , ஜாதகர் தமது குலதெய்வத்தை முறையாக வழிபாடு செய்து வருவாரே ஆயின் நிச்சயம் இந்த பாதிப்புகளில் இருந்து நிச்சயம் காப்பாற்றும் அல்லது நமக்கு முன்னதாகவே உள்ளுணர்வு மூலம் உணர்த்தும் , இதன் காரணமாக நாம் நிச்சயம் விழிப்புணர்வுடன் இருந்து நன்மை பெற முடியும் , இதை மீறி  நமக்கு ஏதாவது விபத்து ஏற்ப்பட்டாலும் நம்மை காப்பாற்ற அல்லது உதவ உடனடி மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வாய்ப்புகளை , நமது குல தெய்வத்தின் அருள் வழிவகை செய்து தரும் .

இந்த அமைப்பை பெற்ற ஜாதகர்களுக்கு விபத்து மட்டும் அல்ல திடீர் என பொருள் இழப்பு , சொத்து சுகங்களில் இழப்பு போன்ற நிலைகளும் ஏற்ப்படாலாம் , அல்லது கணவன் மனைவி பிரிவு , தனது சொந்த பூர்வீகத்தை விட்டு  உறவுகளை விட்டு வெகு தொலைவுக்கு சென்று ஜீவனம் நடத்த வேண்டிய சூழ்நிலையும் ஏற்ப்பட வாய்ப்பு அதிகம் , மேலும் நண்பர்களால் ஏமாற்ற படும் நிலை, தொழில் கூட்டாளிகாளால் ஏமாற்ற படும் நிலை, தான் நம்பியவர்களால் கைவிட படும் சொல்நிலை உருவாகும், எனவே ஜாதகர்கள் இந்த அமைப்பு இருப்பின் நிச்சயம் அதிக கவனத்துடன் வாழ்க்கை நடத்துவது அவசியம், இல்லை எனில் அதிக பாதிப்புகளை சந்திக்க வேண்டி வரும் .

எனவே இந்த காலகட்டங்களில் அதிக பண முதலீடுகளை செய்வது தவிர்க்க வேண்டும் இல்லை எனில் அதன் வழி துன்பங்களை ஜாதகர் அனுபவிக்க வேண்டும் , மேலும் புதிய தொழில் முயற்ச்சிகளை தவிர்ப்பது ஜாதகருக்கும் அவரது சொத்து சுகம் மற்றும் உடமைகளுக்கு பாதுகாப்பு இல்லையெனில் இவற்றை இழக்கும் சூழ்நிலையை ஜாதகரே உருவாக்கி கொள்வார் , இந்த காலங்களில் ஜாதகருக்கு புதிதாக அறிமுகமாகும் நபர்களிடம் மிகவும் எச்சரிக்கையுடன் பழகுவது அவசியம், அவர் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் சரி அவரால் நமக்கு 100 சதவிகிதம் தீமையான பலன்களே நடைபெறும் இதில் எவ்வித மாற்றமும் இல்லை என்பது கசப்பான உண்மை . 

இந்த அமைப்பு ஒரு ஜாதகருக்கு இருப்பின் இந்த வீடுகளின் பலன்கள் திசை ,புத்தி , அந்தரம் , சூட்சமம் ஆகியவற்றில் நடைமுறைக்கு வந்தால் மட்டுமே ஜாதகர் கவலை படவேண்டும், இல்லை எனில் ஜாதகருக்கு எவ்வித பலனையும்  தர வாய்ப்பு சிறிதும் இல்லை எனவே பயம் இல்லாமல் அனைத்து செயல்களையும் மேற்கொள்ளலாம் , இதனால் ஜாதகர் மற்றும் ஜாதகரை சார்ந்தவருக்கும் எவ்வித பாதிப்பும் நிச்சயம் ஏற்ப்படாது .

பெருகிவரும் வாகன விபத்துகளில் இருந்து நாம்மை நாம் நிச்சயம் காப்பாற்றி கொள்ள சாலை விதிகளை மதிப்பதும் , பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வது மட்டுமே நமது உயிருக்கு உத்தரவாதம் , நாம் எவ்வளவு வழிப்புணர்வுடன் இருந்தாலும் எதிரில் வரும் நபர் எப்படி இருக்கிறர் என்பதை நம்மால் கணிக்க முடியாது , ஆகவே தலை கவசம் அணியாமல்  இரு சக்கர வாகனத்தை இயக்குவது நமக்கு நிச்சயம் ஆபத்தை உருவாக்கும் , நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் பொழுது சாலை விதிகளை கடை பிடிப்பதையும் , இருக்கை கச்சையை அணிந்து பாதுகாப்பாக பயணத்தை மேற்கொள்வது நமக்கும் மற்றவருக்கும் நன்மையை தரும், எந்த காரணத்தை கொண்டு நாம் சாலை விதிகளை கடைபிடிப்பதில் இருந்து  தவற கூடாது , இதை உணர்ந்தாலே விபத்துகள் அற்ற நல்ல பயணத்தை அனைவரும் மேற்கொள்ள முடியும் .

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

 

புதன், 4 ஏப்ரல், 2012

ரசமணி அணிவதால் ஏற்ப்படும் நன்மைகள் !






ரசமணி உருவாகும் விதம் :

பல வருடங்களுக்கு முன் மலை உச்சியில் காணப்படும் கடும் பாறைகளுக்கு இடையே விழும் மழை துளியாகப்பட்டது , பருவநிலை மாற்றத்திற்கு ஏற்றார்ப்போல், வெப்பத்தில் சூடாகியும் , குளிரில் உறைந்தும் பாறை இடுக்குகளில் படர்ந்து இருக்கும் , இதனை முறைப்படி வைத்தியர்கள் அல்லது ரசம் சேகரிப்பவர்கள் சேகரித்து , முறையாக ஸ்புடம் இட்டு, மூலிகையால் பதப்படுத்தி சுத்தி செய்து மணியாக தயாரித்து, மனிதர்களுக்கு பயன்படும் விதமாக வழங்குகின்றனர் .

 இதில் ஸ்புடம் இடும் வகையில் 108 , 1008 , 10008 , 100008 , முறையில் வகை படுத்துகின்றனர் , அதற்க்கு ஏற்றார் போல் மணிகளின் தன்மை சக்தி வேறுபடும் , இதில் அவரவர் ஜாதக அமைப்பு , நாடி அமைப்பை பொறுத்து ரசமணிகளை முறைப்படி சுத்தி செய்து அணிந்து கொள்பவர்களுக்கு , கிழ்கண்ட  நன்மையான பலன்கள் நடைபெறும் .

ரசமணியை அணிந்துகொண்டால் சம்பந்தப்பட்டவரின் தேசஸ் அதிகப்படுகிறது  , மேலும் உடல்நிலையை சரிசமமாக பாதுக்ககிறது . உடல் வெப்பத்தை குறைத்து , உடலை சரியான நிலையில் சீராக வைத்து
  இருக்கிறது .

உடலில் ஓடும் ரத்த ஓட்டத்தை ஒரே சீராகவும், ரத்தத்தை சுத்தி செய்தும் உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பாகவும் வைத்திருக்கிறது , முக்கியமாக ரத்த அழுத்த சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கபட்டவர்கள் இதை அணிவதால் இயற்கையான வாழ்க்கைக்கு திரும்ப முடியும் .

உடல் உறுப்புகள் சரியாக இயங்குவதற்கு ரசமணிகள் மிகவும் பயனுள்ளவையாக  இருக்கின்றன , உணவு உட்கொள்ளும் சக்தியும் நல்ல பசியெடுக்கும் தன்மையும் இதை அணிவதால் ஏற்ப்படும் .

  குண்டிலினியின் அடி நாதமான கருமையத்தை சுத்திசெய்யும் தன்மை இந்த ரசமணிக்கு உண்டு . இதானால் சம்பந்தப்பட்டவர் நினைக்கும் அனைத்து நன்மைகளும் நடக்கும் , மேலும் விந்து சக்தியை கெட்டி படுத்தும்  தன்மை ரசமணிக்கு உண்டு , இதானால் சிந்தனை , புத்திசாலித்தனம் மிளிரும் .

எந்த நோயும் உடலை அவ்வளவு சீக்கிரம் பாதிக்காது , உடல்நிலை கெட்டு போக வாய்ப்பே இல்லை , தனது உடல் நோய்க்காக மருத்துவ செலவுகள் அதிகம் செய்பவர்கள் அனைவருக்கும் இந்த ரசமணி ஒரு வர பிரசாதம் .

வயதானாலும் இளைமையுடன் வைத்திருக்கும் சக்தி  இந்த ரசமணிக்கு எப்பொழுதும் உண்டு , மேலும் தோற்ற பொலிவுடன் அணிந்துகொல்பவரை வைத்திருக்கும் .

பேய் பிசாசு , காத்து , கருப்பு மற்றும் துர்சக்திகளிடம் இருந்து நம்மை கத்து நிற்கும் சக்தி இதற்க்கு உண்டு , மேலும் செய்வினை கருப்பு , பில்லி , சூன்யம் போன்ற கெட்ட சக்திகளின்   பாதிப்பிலிருந்து பாதுகாக்கவும், மீட்டு எடுக்கவும் ரசமணியை பயன்படுத்தினால், நல்ல பலன் உண்டு.
   
மேலும் வண்டி வாகனங்களில் செல்லும்பொழுது விபத்துகளை தடுக்கும் தன்மை ரசமணிக்கு நிச்சயம் உண்டு . மேலும் வருமுன் காட்கும் விழிப்புணர்வு மேலோங்கி நிற்கும் .

ஞாபக  சக்தியை மேலோங்கி நிற்கும் , தமபத்திய வாழ்க்கை மகிழ்ச்சியை தரும் , கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும் .
சிறு குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பு தருவதில் ரசமணி மிகவும் பயன்படும் , இவர்களுக்கு அடிக்கடி  ஏற்ப்படும் நோய் நொடிகளில் இருந்து காப்பாற்றும் .

இதில் நிறைய போலிகள் வந்து விட்டது , உண்மையான ரசமணியை அணித்து  நலம் பெறுங்கள் . தாம்பத்யம் 

ஜோதிடன் வர்ஷன் 
9842421345 
9443355696