அஷ்டமசனி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அஷ்டமசனி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 23 டிசம்பர், 2017

சனி பெயர்ச்சி பலன்கள் ( 2017 - 2020 ) லக்கினம் மீனம்!



 சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் என்று வர்ணிக்கப்படும், இலக்கின பாவகாத்திற்க்கே முதல் உரிமை உண்டு, மேலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதகத்திற்கு பலன் காணும் பொழுது துல்லியமான பலாபலன்களை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக தெளிவாக கூற இயலும், எனவே நவ கிரகங்களின் பெயர்ச்சியை சுய ஜாதக  பாவக வலிமையின் அடிப்படையில் கணிதம் செய்து பார்க்கும் பொழுது சம்பந்தம் பட்ட ஜாதகருக்கு நவ கிரகங்களின் பெயர்ச்சியினால் வரும் நன்மை தீமை பலாபலன்களை பற்றி துல்லியமாக கணிதம் செய்ய இயலும், ( 2017 முதல் 2020 வரை )  கால புருஷ தத்துவத்திற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான்,  தனது சஞ்சார நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு தரும் யோக அவயோக நிகழ்வுகளை பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்  அன்பர்களே!

மீனம் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 12ம் ராசியான மீன ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, இனிவரும் இரண்டரை வருடம் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்தில் சனி பகவான் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார், சஞ்சாரம் செய்யும் இரண்டறை வருட காலத்திற்கு சஞ்சார நிலையில் இருந்தும், 6,7,10 என்ற திருஷ்டி நிலையில் இருந்தும், மீன லக்கின அன்பர்களுக்கு கோட்சார ரீதியாக வழங்கும் பலாபலன்களை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், செயல்படும் காரியங்களில் பரிபூர்ணத்துவத்தை அடைய விரும்பும் மீன லக்கின அன்பர்களுக்கு இதுவரை பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்து வந்த சனி பகவான் தங்களுக்கு ஆன்மிகம் சார்ந்த தடைகளையும், சமூகமதிப்பில் ஓர் சுணக்கத்தையும், தெளிவில்லாத மன நிலையையும் அதன் வழியிலான திருப்தியற்ற வாழ்க்கையையும் தந்து இருக்க  கூடும், ஆனால் தற்போழுது ஜீவன ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் சனிபகவான் இனிவரும் இரண்டரை வருடம் தங்களுக்கு தான் அமர்ந்த பாவக வழியில் இருந்து  ( ஜீவனம் ) சிறு சிறு அவப்பெயர் மற்றும் தடைகளை தந்த போதிலும் தனது  வர்க்க கிரகங்களின் வீடுகளான ரிஷபம்,மிதுனம் மற்றும் கன்னியை வசீகரித்து மிகுந்த லாபத்தை தரும் அமைப்பாகும், ஜீவன ஸ்தானத்தில் அமர்ந்த சனி தங்களின் வேலைப்பளுவை அதிகரிக்கும், மேல் அதிகாரிகள் வழியில் இருந்து மனஉளைச்சலை தரும், செய்யும் தொழில் வழியில் தர்மத்தை கடைபிடிக்கவில்லை எனில் யாதொரு பாரபட்சமும் இன்றி  கடுமையான இன்னல்களை தங்களுக்கு தரக்கூடும், தெய்வீக அனுக்கிரகம் குறையும், பெற்ற தந்தை வழியிலான இன்னல்கள் தங்களுக்கு சற்று சிரமத்தை தரக்கூடும், பணிபுரியும் இடத்தில் அனைவரிடமும் நட்பு பாராட்டுவது  தங்களுக்கு சகல நலன்களையும் வாரி வழங்கும், திட்டமிடாமல் செய்யப்படும் காரியங்கள் தங்களின் வாழ்க்கையில்  மிகப்பெரிய தோல்விகளை வாரி வழங்கிவிடும் என்பதை கருத்தில் கொள்க, மீன  லக்கினத்தை சார்ந்த பெண்கள் தனது தாயின் வார்த்தைகளை மதித்து நடப்பது  நல்லது இல்லை எனில் வீண் அவப்பெயரை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும் , எக்காரணத்தை கொண்டும் தனிமையில்  பயணம் மேற்கொள்வது உகந்தது அல்ல மேலும், பாதுகாப்பான பயணம் தங்களுக்கு வரும் வீண் மருத்துவ செலவினங்களை குறைக்கும், பொது வாழ்க்கையில் உள்ள அன்பர்களுக்கு இது ஒரு சோதனைகாலமாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை, மற்றவர்களுக்கு உதவி செய்ய விரும்பினாலும் அவர்களது  உண்மை தன்மையை பரிசோதித்து உதவுவது தங்களுக்கு மிகுந்த நன்மைகளை தரும், சனிபகவானின் தாக்கம் குறைய இறையருளின் ஆசியை பெறுவது ஒன்றே தீர்வாக அமையும்.

3ம் பாவகத்தை தனது 6ம் பார்வையினால் வசீகரிக்கும் சனி பகவான் தங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவார், தங்களின் புதிய முயற்சிகளுக்கு நல்ல  வெற்றி வாய்ப்பு கிட்டும், சகோதரவழியிலானா உதவிகள் தேடிவரும், தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும், கமிஷன் தொழில்களில் உள்ள அன்பர்களுக்கு அபரிவிதமான வருமான கிடைக்கும், அறிவு சார்ந்த முயற்சிகளுக்கு எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும், தங்களின் வாக்கு வன்மை அதிகரிக்கும், பேச்சு திறன் மூலம் சகலவித நன்மைகளையும் பெறுவதற்கு யோகம் உண்டு, தனிப்பட்ட திறமைகளை பரிசோதித்து வெற்றிகாணும் நேரமிது என்பதனை மீன லக்கின அன்பர்கள் உணர்வது அவசியமாகிறது, மனபலம் அதிகரிக்கும்  செயற்கரிய காரியங்களை சிறப்பாக செய்து வெற்றிகொள்ளும் நேரமாக இனிவரும் இரண்டரை வருடம் தங்களுக்கு அமையும், விளையாட்டு வீரர்களுக்கு அரசு கவுரவம் மற்றும் நன்மதிப்பு உண்டாகும், கலைத்துறையில் பிரகாசிக்கும் யோகம் உண்டு, செய்தி துறை மற்றும் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் உள்ள அன்பர்களுக்கு அபரிவிதமான வளர்ச்சியை பெற்று தரும், புதிய எதிர்காலம் தங்களின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் தர தயார் நிலையில் உள்ளது என்பதை கருத்தில் கொள்ளவும், வீர்ய ஸ்தானத்தின் மீதான சனிபகவானின் பார்வை தங்களுக்கு கைநிறைவான வருமான வாய்ப்பையும், தடைகளை உடைத்தெறிந்து தன்னிறைவான முன்னேற்றத்தை பெறுவதற்க்கான சந்தர்ப்பங்களையும் வாரி வழங்கும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது மீன இலக்கின அன்பர்களே!
 " வாழ்த்துகள் "

4ம் பாவகத்தை தனது 7ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் தங்களுக்கு மிதம் மிஞ்சிய சொத்து சுக சேர்க்கையை வாரி வழங்குவார், தங்களின் அறிவுத்திறனும், நல்ல குணமும் எதிர்பாராத பொருளாதார அதிர்ஷ்டங்களை பெறுவதற்கான வாய்ப்புகளை நல்கும், தனது தாய் வழியிலான சொத்துக்கள் தேடிவரும் தெய்வீக அனுக்கிரகம் கூடும், அறிய திருத்தலங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் சந்தர்ப்பம் உண்டாகும், எதிர்ப்புகள் அனைத்தும் தங்களுக்கு சாதகமான சூழ்நிலையை  உருவாக்கும், சுகபோக வாழ்க்கைக்கு குறைவு இருக்காது , தங்களின் மனவிருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும், வெளியூர் வெளிநாடுகளில் இருந்துவரும் ஆதாயம் தங்களின் அடிப்படை முன்னேற்றத்திற்கு சரியான முதலீடாக அமையும், புதிய முயற்சிகளை மேற்கொண்டு நலம் பெறுங்கள், புதிய வீடு வண்டி வாகனம் வாங்க இதுவே சரியான  தருணம், தடைபெற்ற காரியங்கள் யாவும் தன்னிறைவாக வெற்றி வாய்ப்புகளை வழங்கும் என்பதனால், அறிவில் விழிப்புணர்வுடன் இருந்து நன்மைகளை பெறுவது தங்களின் கடமையாகிறது, சனிபகவானின் சமசப்த பார்வை தங்களின் எதிர்காலத்தை மிகவும் சிறப்பு மிக்கதாக மாற்றும் வல்லமையுடன் திகழ்கிறது.

7ம் பாவகத்தை தனது 10ம் பார்வையால் வசீகரிக்கும் சனிபகவான் மீன லக்கின அன்பர்களுக்கு இல்லற வாழ்க்கையில் சுகபோகத்தை வாரி வழங்குவார், திருமண தடைகளை சந்தித்துக்கொண்டு இருந்த அன்பர்களுக்கு நல்லதோர் வாழ்க்கை துணை அமையும், வாழ்க்கை துணை வழியிலான நன்மைகளையும், ஆதரவையும் பரிபூர்ணமாக பெரும் யோகம் உண்டு, நல்ல நண்பர்கள் மற்றும் வெளிவட்டார பழக்க வழக்கங்கள் மூலம் தங்களின் வாழ்க்கை மிகவும் சுவாரஷ்யம் மிக்கதாக மாற்றப்படும், இதுவரை இருந்த சந்தேகங்கள் நீங்கி தங்களின் மனம் தெளிவடையும், எதிர்ப்புகள் யாவும் நட்பு பாராட்டும், விலகி சென்றவர்கள் தேடி வருவார்கள், தங்களின் ஆலோசனையின் பெயரில் பல காரியங்கள் வெற்றிகரமாக நடைபெறும், சமூக அந்தஸ்து உயரும், உடல் நலம் சார்ந்த  முன்னேற்றமும் ஆரோக்கியமும் அதிகரிக்கும், பிணி அகலும், பொருளாதார வசதி வாய்ப்பை பெறுவதற்கான ஆயத்த பணிகளை இனிவரும் காலங்களில் தாங்கள் நடைமுறைப்படுத்தலாம், கூட்டு தொழில் வழியிலான நன்மைகள் தங்களை தேடி வரும், வண்டி வாகன துறையில் உள்ள அன்பர்களுக்கு ஏற்றமிகு லாபங்களை வாரி வழங்கும், வெளிநாடு வெளியூர் செல்லும் யோகமும், அதன் வழியிலான ஜீவன முன்னேற்றமும் சிறப்பாக தங்களை தேடிவரும், புதிய நபர்கள் மற்றும் வேற்று மதத்தினர் மூலம் சகல சௌபாக்கியமும் தங்களுக்கு உண்டாகும், எதிர்பாலின ஆதரவு தங்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக அமையும்.

குறிப்பு :

மீன லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 10,3,4,7ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள்  10,3,4,7ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில்  மீன லக்கின அன்பர்களுக்கு மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

சனி பகவான் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் காலங்கள் :

( 26/01/2017 முதல் 21/06/2017 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும்.

( 21/06/2017 முதல் 26.10.2017 ) வரை
சனி பகவான் மீண்டும் வக்கிரக கதியில் விருச்சிக ராசியிலும்.

( 26/10.2017 முதல் 24/01/2020 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும் சஞ்சாரம் செய்கின்றார்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்

9443355696

புதன், 15 நவம்பர், 2017

ஏழரை சனி என்ன செய்யும் ? ஜென்ம சனியாக ஜென்ம ராசியில் சஞ்சாரம் கடுமையான பாதிப்பை தருமா ?

  
 
 ஏழரை சனிக்கு பயப்படாதவர்களே இல்லை என்று சொல்லிவிடலாம், குறிப்பாக சந்திரன் நின்ற ராசிக்கு முன்பின் ராசிகளிலும் சந்திரன் நின்ற ராசியிலும் சனிபகவான் சஞ்சரிக்கும் காலங்களை ஏழரை சனி என்று வர்ணிக்கின்றனர், இந்த ஏழரை சனி காலத்தில் சம்பந்தப்பட்ட ஜாதகர் படும் இன்னல்களுக்கு ஓர் அளவு இருக்காது என்றும், துன்பத்தை மட்டுமே சனிபகவான் பலனாக வாரி வழங்குவார் என்றும் கூறுவது உண்டு, குறிப்பாக ஓர் ஜாதகத்தில் ஏழரை சனி நடைபெறும் ( ஏழரை வருட ) காலங்களில் ஏற்படும் இன்னல்கள் அனைத்திற்கும் காரணகர்த்தாவாக சனிபகவானை காணும் அன்பர்கள், அவர் இன்னல்களை மட்டுமே தருவார் என்ற கற்பனை எண்ணத்தை அனைவரிடமும் விதைத்து இருக்கின்றனர் என்பதே உண்மை, அடிப்படையில் நவகிரகங்கள் தனிப்பட்ட ஆளுமையின் கீழ் ஓர் ஜாதகருக்கு நன்மை தீமை பலாபலன்களை வழங்க வல்லமை அற்றவர்கள் என்பதை உணர்ந்தவர்களுக்கு " ஏழரை சனி " என்பதே ஓர் பொய்யான கூற்று என்பதை தெளிவாக விளக்கம் தரமுடியும், ஏனெனில் சுய ஜாதகம் என்பது லக்கினம் முதல் 12பாவகங்களின் வலிமையின் அடிப்படையில் இயங்குவது, அதாவது பிறந்த தேதி, நேரம் மற்றும் இடம் ஆகிய குறிப்புகளை கொண்டு சுய ஜாதகம் நிர்ணயம் செய்யப்படுகிறது , ஓரிரு நிமிடங்களில் சுய ஜாதகம் என்பது பல மாற்றங்களை சந்திக்கும் நிலையில் சந்திரனை அடிப்படையாக கொண்ட ஏழரை சனி தரும் பலன் என்பது கற்பனையானது என்று விளக்கம் தரவேண்டிய அவசியமில்லை என்று " ஜோதிடதீபம் " கருதுகிறது, கீழ்கண்ட ஜாதகத்தை உதாரணமாக கொண்டு கோட்சார சனிபகவான் தரும் பலாபலன்களை இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : மிதுனம் 
ராசி : தனுசு 
நட்ஷத்திரம் : பூராடம் 3ம் பாதம் 

 ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் ராகு திசை ( 05/04/2002 முதல் 05/04/2020 வரை ) 5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த வலிமையான யோக பலாபலன்களை பூர்வபுண்ணிய ஸ்தான வழியில் இருந்து வாரி வழங்கிக்கொண்டு இருக்கின்றது என்பது ஜாதகருக்கு சுபயோகங்களை தரும்  அமைப்பாகும், குறிப்பாக ஜாதகர் 5ம் பாவக வழியில் இருந்து கலைத்துறையில் வெற்றி, கற்ற கல்வி வழியிலான யோக பலன்கள், சமயோசித புத்திசாலித்தனம், குலதெய்வ அனுக்கிரகம், தெய்வீக அனுபவம், வாதத்திறன் கொண்டு அனைத்தையும் தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளும் யோகம், நிறைவான செல்வசேர்க்கை, நல்ல யோகம் மிக்க குழந்தைகளை பெரும் யோகம், அவர்கள் வழியிலான சுயோக வாழ்க்கை, குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி சந்தோசம், காதல் வெற்றி, சாஸ்திர ஞானம், கணித தேர்ச்சி , திட்டமிட்டு செயல்படும் தன்மை, சீரான முன்னேற்றம், தர்மசிந்தனை, அனைவருக்கும் உதவும் குணம் என்ற வகையில் சிறப்புகளை ராகு திசை முழு வீச்சில் சுபயோக பலாபலன்களை பூர்வபுண்ணிய ஸ்தான வழியில் இருந்து வாரி வழங்கிக்கொண்டு இருக்கின்றது.

ராகு திசையில் தற்போழுது நடைமுறையில் உள்ள சந்திரன் புத்தி ஜாதகருக்கு 4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவது ஜாதகர் மாத்ரு ஸ்தான வழியில் இருந்து சுபயோகங்களை அனுபவிக்கும் தன்மையை தருகின்றது, புதிய மண் மனை வண்டி வாகன யோகம் உண்டாகும், ஜாதகரின் சுகபோக வாழ்க்கையின் தன்மை அதிகரிக்கும், தெய்வ அனுக்கிரகம் மூலம் சகல சௌபாக்கியங்களும் உண்டாகும், கல்வியில் வெற்றி, உறவுகள் வழியிலான ஒத்துழைப்பு என்றவகையில் சிறப்புக்களை தரும், ஜாதகரின் சுக ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சிம்மராசியில் 1 பாகையில் ஆரம்பித்தது கன்னி ராசியில்  முழுவதும் வியாபித்து நிற்பது ஜாதகருக்கு தனது அறிவு சார்ந்த விஷயங்களிலும், தனம் சார்ந்த விஷயங்களிலும் சிறப்பான முன்னேற்றங்களை வாரி வழங்கும், மேலும் குறுகிய கால லாபங்களை ஜாதகர் பெறுவதற்கு உண்டான வாய்ப்புக்களை தரும் என்பது கவனிக்கத்தக்கது .

ஆக ஜாதகருக்கு நடைபெறும் ராகு திசை 5ம் பாவக வழியில் இருந்து சுபயோகங்களையும், ராகு திசையில் தற்போழுது நடைமுறையில் உள்ள சந்திரன்  புத்தி 4ம் பாவக வழியில் இருந்து சுபயோகங்களையும் வாரி வழங்குவது சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் நன்மையான பலாபலன்கள் ஆகும், இதில் தற்போழுது தனுசு ராசிக்கு ஏழரை சனி என்றும் அதனால் ஜாதகர் இன்னல்களை சந்திப்பார் என்பது முற்றிலும் கற்பனை என்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை, தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான் ஜாதகரின் நான்காம் பாவகத்தை தனது 10ம் பார்வையாக வசீகரிப்பதும், 4ம் பாவகம் தனது வர்க்க கிரகமான புதபகவானின் வீடான கன்னியில் அமைவதும் ஜாதகருக்கு சுபயோக பலன்களையே தரும், சனி பகவான் சஞ்சாரம் செய்யும் 7ம் பாவக பலனை ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் ராகு திசையும், சந்திரன் புத்தியும் ஏற்று நடத்தவில்லை என்பதால் சந்திரன் நின்ற ராசிக்குள் சஞ்சாரம் செய்யும் ( ஏழரை சனி ) சனி பகவான் யாதொரு நன்மை தீமையை தரவில்லை என்பதே முற்றிலும் உண்மை, கிரகங்களின் சஞ்சாரம் என்பது தற்போழுது நடைமுறையில் உள்ள திசா புத்திகள் ஏற்று நடத்தும் பாவக தொடர்புடன் எந்த விதத்திலாவது சம்பந்தம் பெற்றால் மட்டுமே நன்மை தீமை பலன்களை நடைமுறைப்படுத்திடும், தற்போழுது நடைமுறையில் உள்ள திசா புத்திகள் ஏற்று நடத்தும் பாவக தொடர்புடன் எந்த விதத்திலும் சம்பந்தம் பெறவில்லை எனில் கோட்சர கிரகத்தால் யாதொரு பலாபலனும் நடைமுறைக்கு வாராது, சந்திரன் நின்ற ராசிக்கு கோட்சார பலன் காண்பதெல்லாம் கற்பனை கட்டுக்கதையாகவே அமையும் என்பதை கருத்தில் கொள்வது நலம், அடிப்படையில் சந்திரன் நின்ற ராசிக்கு பலாபலன்கள் காண்பதென்பது சுய ஜாதக  வலிமை மற்றும் அது தரும் பலாபலனுக்கு சற்றும் பொருந்தாதது என்பதை நினைவில் கொள்வது அவசியமாகிறது.

மேற்கண்ட ஜாதகருக்கு ஏழரை சனி என்னும் விஷயமே தவறான பலாபலன்களை கூறுவதற்கு வழிவகுத்துவிடும், ஏனெனில் சுய ஜாதகத்தில் ஜாதகருக்கு லக்கினம் முதல் 12 பாவகங்களும் மிகவும் வலிமையுடன் இருப்பதுடன், நடைபெறும் நவக்கிரத்தின் திசாபுத்திகள் அனைத்தும் வலிமை பெற்ற பாவக பலனையே ஏற்று நடத்துவதால், ஜாதாருக்கு ஏழரை சனி, அஷ்டம சனி, அர்தாஷ்டம சனி என அனைத்து சனிகளும் சகல நிலைகளில் இருந்தும் நன்மையான பலன்களையே தரும் என்பது கவனிக்கத்தக்கது.

எனவே சுய ஜாதக பலாபலன்களை நிர்ணயம் செய்வது சுய ஜாதக வலிமையே அன்றி, சந்திரன் நின்ற ராசிக்கு கோட்சார கிரகங்கள் தரும் ராசி பலன்கள் அல்ல என்பதை கருத்தில் கொள்வது நல்லது, குறிப்பாக ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, குரு பலம், ராசிக்கு குரு சஞ்சாரம் செய்யும் நிலை இவையெல்லாம், சுய ஜாதக வலிமை தெரியாமல் அது தரும் பலாபலன் பற்றிய அறியாமல் உளறும் உளறல்களே என்பதை அனைவரும் சிந்தனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டி " ஜோதிடதீபம் " வைக்கும் வேண்டுகோள் ஆகும்.

குறிப்பு :

சுய ஜாதக வலிமை நிலையை தெளிவாக உணர்ந்து, பாவக வலிமையின் தன்மையை கருத்தில் கொண்டு எதிர்கால வாழ்க்கையை சிறப்பாக திட்டமிட்டு முன்னேற்றம் காண்பதே புத்திசாலித்தனம், ஜோதிடரீதியாக உள்ள மூடநம்பிக்கைகளை பலாபலன்கள் என்று கருதி வாழ்க்கையில் நமக்கு வரும் நல்ல வாய்ப்புகளை உதறித்தள்ளுவது என்பது முற்றிலும் தவறான வழிமுறையாகும், நல்ல ஜோதிடம் தங்களின் வாழ்க்கையில் சிறந்த முன்னேற்றங்களை நிச்சயம் வாரி வழங்கும், இதில் மாற்று கருத்து என்பதே இல்லை "வாழ்த்துக்கள்"

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 18 ஜூலை, 2017

சனி மகா திசை தரும் பலாபலன் என்ன ? எதிர்வரும் புதன் திசை தரும் பலாபலன்கள் என்ன ?


 சுய ஜாதகத்தில் சனி திசை நடைபெறும் பொழுது பெரும்பாலும் நாம் அனைவரும் நமக்கு இன்னல்களே நடைபெறும் என்று கருதுவது உண்டு, மேலும் சனி திசை என்பது வாழ்க்கையில் இன்னல்களையும், துன்பங்களையும் வாரி வழங்கும் அமைப்பை பெற்றது என்ற கருத்தும் பரவலாக உண்டு, மனித வாழ்க்கையில் வரும் இன்னல்களுக்கும் துன்பங்களுக்கும் காரணகர்த்தாவாக சனிபகவானை உருவகபடுத்துபவர்களும் உண்டு, இன்னும் சிலர், ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி என்று, ஜாதகத்தில் சந்திரன் நின்ற ராசிக்கு சனிபகவானின் சஞ்சார நிலையை கருத்தில் கொண்டு பெரும் இன்னல்களை தருபவர் என்று சனிபகவானை துவேசிப்பவர்களும் உண்டு, மேற்கண்ட விஷயங்கள் யாவும் சுய ஜாதகத்தில் பாவக வலிமை நிலையை பற்றிய தெளிவு இல்லாமலும், நடைபெறும் திசா புத்திகள் ஏற்று நடத்தும் பாவக வலிமையின் தன்மையை பற்றிய புரிதல் இல்லாமலும், சொல்லப்படும் கட்டுக்கதையாகவே " ஜோதிடதீபம் " கருதுகிறது, அடிப்படையில் சுய ஜாதகம் இருக்கும் பொழுது ராசியை வைத்து பலாபலன் காண முற்படுவதே தவறான ஓர் அணுகுமுறை என்பதை பதிவு செய்ய விரும்புகிறோம், லக்கினத்தையும் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலையையும் கருத்தில் கொண்டு பலாபலன் காண முற்படுவதே சரியான மற்றும் துல்லியமான ஜாதக பலன்கள் காண வழிவகுக்கும், ஜாதகரின் கேள்விக்கு உண்டான பதிலை அவரது சுய ஜாதக அமைப்பை வைத்து பலாபலன் எப்படி காண்பது என்பதனை இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : விருச்சிகம்
ராசி : துலாம்
நட்ஷத்திரம் : சித்திரை 4ம் பாதம்

ஜாதகருக்கு தற்போழுது  சனி திசை ( 13/03/2013 முதல் 12/03/2022 வரை ) நடைமுறையில் உள்ளது நடைபெறும் சனி  திசை ஜாதகருக்கு வழங்கும் பலன்கள் என்ன என்பதனை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், ஜாதகருக்கு தற்போழுது நடைமுறையில் உள்ள சனி திசை வலிமை பெற்ற 7ம் வீடு களத்திர  ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு அளவில் ஸ்திரமாக 7ம் பாவக பலனை மட்டும் ஏற்று நடத்துகிறது, ஜாதர் விருச்சிக லக்கினம்  என்பதால் 7ம் பாவகம் ஜாதகருக்கு ஸ்திர மண் தத்துவ ராசியான ரிஷபத்தில் அமைகிறது, மேலும் 7ம் பாவகம் ஜாதகருக்கு ரிஷபத்தில் 32:32:05 பாகையில் ஆரம்பித்து மிதுனத்தில் 61:17:18 பாகையில் முடிவடைகிறது, பெரும்பாலும் 7ம் பாவகம் ஜாதகருக்கு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வாக்கு ஸ்தானமான ரிஷப ராசியில் வியாபித்து இருப்பது, வரவேற்க தக்க அம்சமாகும், மேலும் சனி திசை முழுவதும் ஜாதகத்துக்கு  7ம் வீடு களத்திர  ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக பலனை தருவது வரவேக்க தக்க அம்சமாகும்.

இதனால் ஜாதகர் சனி திசையில் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து சகல  சௌபாக்கியங்களையும் அனுபவிக்கும் யோகத்தை தரும், மேலும் தனது  நண்பர்கள் உதவி, கூட்டாளிகள் உதவி, வெளிநாடுகளில் இருந்து வருமான வாய்ப்பு, அயல் தேசத்தில் ஜீவன வாழ்க்கையை மேற்கொள்ளும் யோகம், ஸ்திரமான வருமானங்கள், இனிமையான பேச்சு திறன் மூலம் அனைவரின் ஆதரவையும் பெரும் யோகம், பொதுமக்கள் ஆதரவு, சமூக அந்தஸ்து, தெய்வீக அனுக்கிரகம் மூலம் வாழ்க்கையில் சகல முன்னேற்றங்களையும் பெரும் யோகம் உண்டாகும், குறிப்பாக ஜாதகரின் குடும்ப  வாழ்க்கை சிறப்பாக அமையும், கைநிறைவான வருமானம் வந்து சேரும், குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும், எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும், ஜாதகரின் வாக்கு வன்மை அதிகரிக்கும், பேச்சு திறமையால் தனது வாழ்க்கையை மிக சிறப்பானதாக மாற்றி கொள்ளும் யோகம் பெற்றவராகிறார், மேலும் தனது வாழ்க்கை துணையின் முழு ஆதரவையும், அவர்கள் வழியிலான நன்மைகளையும் ஜாதகர் பரிபூர்ணமாக அனுபவிக்கும் யோகம் உண்டு, சனி திசை ஜாதகருக்கு வெளியூர், வெளிநாடு, வியாபாரம், பொதுமக்கள், அயல் தேச லாபங்கள் என்ற வகையில் சுபயோகங்களை ஸ்திரமாக வாரி வழங்கும் என்பது கவனிக்க தக்க அம்சமாகும், ஜாதகருக்கு சனி திசை நடைபெற்றாலும், சனி தனது திசையில் வலிமை பெற்ற களத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து சகல யோகங்களையும் தரும்.

எனவே சுய ஜாதகத்தில் பாவ கிரகத்தின் திசை, புத்தி  ( சூரியன், செவ்வாய், சனி, தேய்பிறைசந்திரன், ராகு,கேது ) நடைபெற்றால் தீய பலன்கள் நடைபெறும் என்று நினைப்பது முற்றிலும் தவறு, எந்த ஓர் கிரகத்தின் திசாபுத்தி நடைபெற்றாலும், நடைபெறும் திசாபுத்தி அவரவர் சுய ஜாதகத்தில் உள்ள எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்பதை தெளிவாக தெரிந்துகொண்டு, அதற்க்கான உண்மையான பலாபலனை அறிந்து வாழ்க்கையில் நலம் பெறுவது அவசியமாகிறது.

ஜாதகருக்கு அடுத்து வரும் புதன் திசை தரும் பலாபலன்களை சற்று சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !

புதன் திசை ( 12/03/2022 முதல் 13/03/2039 ) ஜாதகருக்கு 1,3ம் வீடுகள் வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று ராஜ யோக பலனை தருவது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், மேலும் ஜாதகரின் வீர்ய ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமாகவும், சர மண் தத்துவ ராசியான மகரத்தில் வியாபித்து இருப்பது, ஜாதகரின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியமும் வந்து சேரும் யோகத்தை தரும், சனி திசையை விட புதன் திசை ஜாதகருக்கு 1,3ம் பாவக வழியில் இருந்து 100% விகித யோக வாழ்க்கையை நல்கும், எதிர்பாராத முன்னேற்றம் மற்றும் ஜீவன வழியிலான லாபங்களை ஜாதகர் தங்கு தடையின்றி பெறுவார், அதிர்ஷ்டத்தின் தாக்கத்தை முழு அளவில் ஜாதகர் ஜீவன வழியில் இருந்து பெறுவார், அபரிவிதமான தொழில் வளர்ச்சி, எடுக்கும் காரியங்கள் யாவும் வெற்றி, சுலப பொருள் வரவு, மக்களின் பேராதரவு, பொது வாழ்க்கையில் வெற்றி, அரசியல் லாபங்கள், தெய்வீக அனுபவங்கள், மண், மணை, வண்டி வாகன சேர்க்கை, எதிர்பாராத அதிர்ஷ்டம் என ஜாதகரின் வாழ்கையில் புதன் திசை மிகுந்த நன்மைகளை பரிபூர்ணமாக வாரி வழங்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

மேற்கண்ட ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் சனி திசை களத்திர பாவக வழியில் இருந்து சுப யோகங்களையும், புதன் திசை வீர்ய ஸ்தான வழியில் இருந்து யோக பலன்களையும் வாரி வழங்குவது, அவரது சுய ஜாதகத்தில் பாவகங்கள் பெற்றுள்ள சுபதுவத்தை எடுத்துரைக்கிறது, எனவே நமது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பணிரெண்டு பாவகங்களும் வலிமை பெற்று இருப்பின், நமக்கு எந்த கிரகத்தின் திசாபுத்தி நடைபெற்றாலும் யோக பலனே நடைமுறைக்கு வரும், நமது ஜாதகத்தில் பாவகங்கள் பாதிக்கப்பட்டு இருப்பின் நமக்கு நடைபெறுவது குரு,சுக்கிரன் போன்ற சுப கிரகத்தின் திசை என்றாலும் அவயோக பலன்களே நடைமுறைக்கு வரும் என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது, கிரகங்களின் திசாபுத்திகள் நமக்கு நன்மையையும் தீமையையும் தருவதில்லை, நமது சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையே நமக்கு நன்மையையும் தீமையையும் தருகின்றது என்பதே உண்மை அன்பர்களே, எனவே அவரவர் சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு ஜாதக பலாபலன்கள் காண்பதே மிக துல்லியமான பலாபலன்களை காண இயலும் என்பதை கருத்தில் கொள்க.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வியாழன், 27 ஏப்ரல், 2017

சனி பெயர்ச்சி பலன்கள் ( 2017 - 2020 ) லக்கினம் மகரம் !



சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் என்று வர்ணிக்கப்படும், இலக்கின பாவகாத்திற்க்கே முதல் உரிமை உண்டு, மேலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதகத்திற்கு பலன் காணும் பொழுது துல்லியமான பலாபலன்களை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக தெளிவாக கூற இயலும், எனவே நவ கிரகங்களின் பெயர்ச்சியை சுய ஜாதக  பாவக வலிமையின் அடிப்படையில் கணிதம் செய்து பார்க்கும் பொழுது சம்பந்தம் பட்ட ஜாதகருக்கு நவ கிரகங்களின் பெயர்ச்சியினால் வரும் நன்மை தீமை பலாபலன்களை பற்றி துல்லியமாக கணிதம் செய்ய இயலும், ( 2017 முதல் 2020 வரை )  கால புருஷ தத்துவத்திற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான்,  தனது சஞ்சார நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு தரும் யோக அவயோக நிகழ்வுகளை பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்  அன்பர்களே!

தனுசு :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பத்தாம் ராசியான மகர ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, இனிவரும் இரண்டரை வருடம் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்தில் சனி பகவான் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார், சஞ்சாரம் செய்யும் இரண்டறை வருட காலத்திற்கு சஞ்சார நிலையில் இருந்தும், 6,7,10 என்ற திருஷ்டி நிலையில் இருந்தும், மகர லக்கின அன்பர்களுக்கு கோட்சார ரீதியாக வழங்கும் பலாபலன்களை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், தர்மம் ஒற்றை காலில் நின்று, கால்பங்கு பரிபாலனம் செய்யும் கலியுகத்தில், தான் மட்டும் முழு அளவிலான தர்மத்தை உறுதியுடன் போற்றி நடக்கும் மகர லக்கின அன்பர்களுக்கு, இதுவரை லாப ஸ்தானத்தில் நின்று சுபயோகங்களை வாரி வழங்கிய சனி பகவான், விரைய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் காலம் சற்று  இன்னல்களை மகர லக்கின அன்பர்களுக்கு தர கூடும், குறிப்பாக மனநிம்மதி இழப்பு, குழப்பம், தெளிவற்ற சிந்தனை, கல்வியில் தடை, முதலீடுகளில் திடீர் இழப்பு, நல்ல உறக்கமின்மை, பெரியோர் ஆதரவு இன்மை, தெய்வீக அனுக்கிரகம் இன்மை, செய்யும் காரியங்களில் தடையை, அவசர கதியில் செய்யும் காரியங்கள் பெரும் தோல்வியையும், நஷ்டத்தையும் தர கூடும், இருப்பினும் தங்களின் நம்பிக்கையும், கடின உழைப்பும் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்து தரும், முடிந்த அளவு தங்களின் குடும்பத்தில் உள்ள  பெரிய மனிதர்களின் ஆதரவை பெற்று அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறுங்கள், வரும் எதிர்ப்புகள் யாவும் ஆதவனை கண்ட பனிபோல் விலகிவிடும், மேலும் எதிர்ப்பால் அமைப்பினரிடம் சற்று எச்சரிக்கையாக இருப்பது நலம் தரும், தங்களின் நேர்மையான நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிப்பார்கள், மேலும் தேவையற்ற அவப்பெயரை தங்களுக்கு ஏற்படுத்த கூடும் என்பதால் அதிக கவனம் தேவை, தொழில் ரீதியாக அதிக முதலீடுகளை  தவிர்ப்பது நலம் தரும் மேலும் முதலீடுகளை மிக சிறப்பாக கையாள வேண்டும் இல்லை எனில் மிகுந்த பேரிழப்பை தாங்கள் சந்திக்கும் சூழ்நிலையை உருவாக்கி விடும், மற்றவர் விஷயங்களில் தாங்கள் தலையீடு செய்வது தங்களின் எதிர்கால வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும், புலன் இன்பங்களில் நாட்டத்தை தவிர்த்து, சுய கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டிய நேரமிது, சனிபகவானின் விரைய ஸ்தான சஞ்சாரம் தங்களின் மன நிம்மதியை சற்று அசைத்து பார்க்கும்.

5ம் பாவகத்தை தனது 6ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் மகர லக்கின அன்பர்களுக்கு புத்திரர் சார்ந்த சில சிரமங்களை தரக்கூடும், தனது பூர்வீகத்தில் இருந்து வேறு இடம் பெயர்ந்து, ஜீவனம் செய்யும் சூழ்நிலையை தரும், குலதெய்வ ஆசியை பெற ஜாதகர் கடின முயற்சியை மேற்கொள்ளவேண்டிய சூழ்நிலை தரும், உதவி செய்ய யாரும் அற்ற  நிலையையும், தனியாக போராட வேண்டிய நிலையை தரக்கூடும், எதிர்ப்புகளை சமாளிக்க தாங்கள் சற்று கடுமையாக போராட வேண்டிவரும், சுபகாரிய செலவினங்கள் அதிகரிக்கும், அறிவு திறனும், செயல்படும் வேகமும் வெகுவாக குறையும், சட்ட சிக்கல்கள் மூலம் பணவிரயம், செய்யும் காரியங்களில் போராட்டம் என்ற நிலையில் இன்னல்களை தரக்கூடும், சுய சிந்தனை மற்றும் அறிவு திறன் சரியான நேரத்தில் தங்களுக்கு பலன் தாராது, மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டு நலம் பெற வேண்டிய நேரமிது, சனியின் சத்ரு ஸ்தான பார்வை, தங்களின் பூர்வ புண்ணிய ஸ்தானத்தை கடுமையாக பாதிக்கும், வருமானம் மற்றும் புத்திசாலித்தனம் மட்டுப்படும்.

6ம் பாவகத்தை தனது 7ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் மகர லக்கின அன்பர்களுக்கு குறுகியகால வெற்றிகளை தங்கு தடையினின்றி தருவார், கடன் பெறுவது கொடுப்பது தங்களின் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றங்களை நல்கும், எதிரிகள் தரும் இன்னல்கள் தங்களுக்கு சாதகமான வெற்றிகளை வாரி வழங்கும், பயணங்கள் மூலம் நல்ல லாபமும் அதிர்ஷ்டமும் உண்டாகும், வேலையாட்கள், தொழிலாளர்கள் மூலம் தங்களின் முன்னேற்றம் சிறப்பாக  அமையும், சுய தொழில் புரிவோருக்கு ஏற்றமிகு பொருளாதார வசதிவாய்ப்புகளை வாரி வழங்கும், உடல் நலம் மனநலம் சிறப்பாக அமையும், கூட்டு வியாபாரத்தில் லாபமும் அதிர்ஷ்டமும் உண்டாகும், எதிரிகள் தங்களின்  வாழ்க்கையில் இருந்து ஒதுங்கிவிடும் சூழ்நிலையை தரும், பொது வாழக்கையில் உள்ளோருக்கு மிக சிறப்பான நேரமிது, திடீர் மக்கள் செல்வாக்கு, அரசு பதவி, தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகள்  வந்து சேரும், எதிர்காலத்திற்கான பொருளாதார உதவிகள் தங்களை தேடி வரும், மற்றவர்கள் தனம் தங்களின் முன்னேற்றத்திற்கு பெரும் உதவிகளை வாரி வழங்கும், சனிபகவானின் 7ம் பார்வை தங்களுக்கு சத்ரு ஸ்தான  வழியில் இருந்து சகல சௌபாக்கியங்களையும் தரும். 

9ம் பாவகத்தை தனது 10ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் மகர லக்கின அன்பர்களுக்கு சற்று சிரமங்களை அதிக அளவில் தரக்கூடும், குறிப்பாக மற்றவர்கள் விஷயங்களில் ஆர்வம் செலுத்தினால் தங்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிடும், சந்தேகங்கள் மற்றும் நம்பிக்கை இன்மை தங்களின் வாழ்க்கையை பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்த கூடும், பெரியோர் வார்த்தைகளை மதிக்காமல் செய்யும் காரியங்கள் எதிர்பாராத சிரமங்களை தங்களுக்கு தரக்கூடும், நிலையான மனம், திட சிந்தனை தங்களுக்கு இல்லை எனில் தங்களின் வாழ்க்கை பாதை மாறிவிடும், எதிர்பாராத இன்னல்களை தாங்கள் பெரிய அளவில் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், குறிப்பாக தங்களின் பெயர் பாதிக்கப்படாமல் பார்த்து கொள்வது  தங்களின் எதிர்கால வாழ்க்கையை சிறப்பிக்கும், வரும் இன்னல்களை கருத்தில் கொள்ளாமல், முழு வீச்சில் காரியமாற்றுவது தற்போதுள்ள சூழ்நிலையை மாற்றி தங்களின்  வாழ்க்கையில், சுபயோகங்களை நல்கும், எதிர்காலம் தங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை வாரி வழங்கும், சனி பகவானின் 10ம் பார்வை தங்களுக்கு பாக்கிய ஸ்தான வழியில் இருந்து அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதால், அதிக கவனம் தேவை, சரியான திட்டமிடுதல்கள் தங்களின் வாழ்க்கையை மிக நேர்த்தியாக சுபயோகங்களை  வாரி வழங்கும்.

குறிப்பு :

மகர லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 12,5,6,9ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள்  12,5,6,9ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் மகர லக்கின அன்பர்களுக்கு மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

சனி பகவான் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் காலங்கள் :

( 26/01/2017 முதல் 21/06/2017 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும்.

( 21/06/2017 முதல் 26.10.2017 ) வரை
சனி பகவான் மீண்டும் வக்கிரக கதியில் விருச்சிக ராசியிலும்.

( 26/10.2017 முதல் 24/01/2020 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும் சஞ்சாரம் செய்கின்றார்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வெள்ளி, 6 ஜனவரி, 2017

சனி பெயர்ச்சி பலன்கள் ( 2017 - 2020 ) லக்கினம் கடகம்!


சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் என்று வர்ணிக்கப்படும் இலக்கின பாவகாத்திற்க்கே முதல் உரிமை உண்டு, மேலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதகத்திற்கு பலன் காணும் பொழுது துல்லியமான பலாபலன்களை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக தெளிவாக கூற இயலும், எனவே நவ கிரகங்களின் பெயர்ச்சியை சுய ஜாதக  பாவக வலிமையின் அடிப்படையில் கணிதம் செய்து பார்க்கும் பொழுது சம்பந்தம் பட்ட ஜாதகருக்கு நவ கிரகங்களின் பெயர்ச்சியினால் வரும் நன்மை தீமை பலாபலன்களை பற்றி துல்லியமாக கணிதம் செய்ய இயலும், ( 2017 முதல் 2020 வரை )  கால புருஷ தத்துவத்திற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான்,  தனது சஞ்சார நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு தரும் யோக அவயோக நிகழ்வுகளை பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

கடகம் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு நான்காம் ராசியான கடக ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, இந்த சனி பெயர்ச்சி, சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார், சஞ்சாரம் செய்யும் இரண்டறை வருட காலத்திற்கு சஞ்சார நிலையில் இருந்தும், 6,7,10 என்ற திருஷ்டி நிலையில் இருந்தும், கடக லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலன்களை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், கலியுக வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும் கடக ராசியினை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு இதுவரை பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்து வந்த சனி பகவானால், தங்களின் சிந்தனை மற்றும் அறிவு திறன் எதுவும் தங்களுக்கு பயன்படாமல், வாழ்க்கையிலும் முன்னேற்றம் இல்லாமல் வெகுவான சிரமங்களை அனுபவித்திருக்க கூடும், ஆனால் தற்போழுது  சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருக்கும் சனிபகவான் தங்களின் வாழ்க்கையில் அளவில்லா யோகங்களை வாரி வழங்க இருக்கின்றார் என்பது, சனி பெயர்ச்சி தரும் வரப்பிரசாதம் ஆகும்.

6ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான் தங்களுக்கு திடீர் அந்தஸ்து மற்றும் உயர்பதவியை வாரி வழங்குவார், குறுகிய கால முன்னேற்றங்களை சந்திப்பதற்கு உண்டான வாய்ப்புகள் தங்களுக்கு தேடி வரும், போட்டி பந்தயம், தேர்வு தேர்தலில் வெற்றி உண்டாகும், சட்ட ரீதியான உதவிகள் தங்களுக்கு சாதகமான பலன்களை வழங்கும், உடல் நலம் மிக சிறப்பாக அமையும், வெகுநாள் உடல் தொந்தரவுகள் தங்களுக்கு நீங்க அதிக வாய்ப்பு உண்டு, கேட்ட இடத்தில் இருந்து தனஉதவிகள் வந்து சேரும், எதிரிகளின் செயல்கள் தங்களுக்கு மிகுந்த யோகத்தை தரும், திடீர் தன பிரப்பர்த்தி, வங்கிகள் வழியிலான உதவிகள் தங்களுக்கு விரைவாக கிடைக்கும், சகல விதமான முயற்சிகளுக்கும் நல்ல வெற்றி கிட்டும், கல்வியில் நல்ல முன்னேற்றமும், உயர்கல்வி மற்றும் பட்டைய படிப்பு மூலம் சமூக அந்தஸ்து உயரும், அதன் வழியில் நல்ல வேலைவாய்ப்பும், புதிய தொழில் அமையவும் அதிக வாய்ப்பு உண்டு, புதிய வீடு வண்டி வாகனம் வாங்க யோகம் உண்டு, தங்களது முன்னோர்களின் சொத்துக்களை நிர்வகிக்கும் வாய்ப்பும் கிடைக்க பெறுவீர்கள், எதிர்ப்பவர்கள் அனைவரும் செயல் இழந்து நிற்ப்பார்கள், எதிர்ப்புகள் அனைத்தும் "சூரியனை கண்ட பனிபோல்" விலகும், சத்ரு ஸ்தான வழியில் இருந்து சிறப்பான நன்மைகளையும், பொருளாதார ரீதியான முன்னேற்றம் மற்றும் தன்னிறைவை சத்ரு ஸ்தான சஞ்சார நிலையில் இருந்து சனி பகவான் தங்களுக்கு வாரி வழங்குவார்.

11ம் பாவகத்தை தனது 6ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் கடக லக்கின அன்பர்களுக்கு, அளவில்லா அதிர்ஷ்ட வாய்ப்புகளை வாரி வழங்குவார், தன்னம்பிக்கையும் மனஉறுதியும் தங்களின் வாழ்க்கையில் வியக்கத்தகு மாற்றங்களை வாரி வழங்கும், குடும்பத்தில் மனமகிழ்சியும், இல்லற வாழ்க்கையில் சந்தோசம் மற்றும் ஆரோக்கியமான சூழ்நிலை நிலவுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு, இதுவரை திருமண தடைகளை சந்தித்துக்கொண்டு இருந்த வரன் வதுவிற்கு திருமண வாழ்க்கை சிறப்பாக அமைந்து மிக பொருத்தமான வாழ்க்கை துணையை அடைவீர்கள், கைநிறைவான வருமான வாய்ப்புகளும், எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் மற்றும் பணவரவும் தங்களின் வாழ்க்கையில் புதுவிதமான உத்வேகத்தை தரும், நினைத்ததை சாதிக்கும் வல்லமையும், லட்ச்சியங்கள் அனைத்தையும் முழுமையாக நிறைவேற்றும் வல்லமையும் உண்டாகும், அபரிவிதமான பேச்சு திறன் தங்களின் வாழ்க்கையில் எதிர்பாராத அதிர்ஷ்டம் மற்றும் யோகத்தை வாரி வழங்கும், கல்வி கேள்விகளில் தேர்ச்சி, கலைகளில் ஈடுபாடு, திடீர் பிரபல்ய யோகம் என மக்கள் செல்வாக்கையும் வாரி வழங்கும், கலைத்துறைகளான இயல்,இசை,நாடக துறையில் இருப்பவர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி எதிர்பாராத நன்மைகளையும் அளவில்லா   முன்னேற்றங்களையும் சிறப்பாக வாரி வழங்குவார், புதிய சொத்துக்கள் அல்லது வண்டி வாகனம் வாங்க யோகம் உண்டு, சமூகத்தில் மக்கள் ஆதரவின் மூலம் தங்களுக்கு பொறுப்பு மிக்க பதவிகள் தேடிவரும்.

12ம் பாவகத்தை தனது  7ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் கடக லக்கின அன்பர்களுக்கு, முதலீடுகள் வழியிலான பெரும் செல்வ சேர்க்கையை பெறுவதற்கு வழிவகை செய்வார், நெடுநாள் முதலீடுகள் வழியிலான அளவில்லா வருமானங்களை பெறுவதற்கு உண்டான யோக நேரம் இதுவாகும், தாங்கள் எடுக்கும் முயற்ச்சிகள் யாவும் வெற்றி மேல் வெற்றிகளை தரும், தகவல் தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு தொடர் வெற்றிகளை வாரி வழங்கும் யோக காலமிது, கமிஷன் தரகு மற்றும் ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் ஈடுபடுவோருக்கு அபரிவிதமான முன்னேற்றம், சரளமான பணவசதி வாய்ப்புகள் வந்து சேரும், எதிர்பார்த்த விஷயங்கள் யாவும் தங்களுக்கு வெற்றிவாய்ப்பை நல்கும், தனிப்பட்ட வாழ்க்கையில் சுகபோகங்களும், ஆன்மீகத்தில் வெற்றியும் உண்டாகும், புதிய நபர்கள் மற்றும் வேற்று மதத்தினர் மூலம் அபரிவிதமான தொழில் வளர்ச்சியை பெறுவீர்கள், சுக ஜீவனத்திற்கு யாதொரு குறைகளும் இல்லை எனலாம், தாங்கள் எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் யாவும் நடைமுறைக்கு வரும், ஆன்மீக பெரியோர் மற்றும் முன்னோர்களின் ஆசிர்வாதத்தை தடையின்றி பெரும் யோகம் உண்டாகும், முன்னோர்களின் சொத்துக்கள் மற்றும் சகோதரர்கள் சொத்துக்களை நிர்வகிக்கும் யோகம் உண்டாகும், தங்களின் மனதில் உள்ள அனைத்து ஆசைகளும் தடையின்றி நிறைவேறும், இந்த சனி பெயர்ச்சி தங்களுக்கு மிக பெரிய அளவிலான பொருளாதார முன்னேற்றத்தை வாரி வழங்கும்.

3ம் பாவகத்தை தனது  10ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் கடக லக்கின அன்பர்களுக்கு, சகோதர வழி ஆதரவும், சீரிய முயற்சியிலான வெற்றிகளையும் வாரி வழங்குவார், உடல் நிலையில் நல்ல முன்னேற்றமும், செய்யும் காரியங்கள் யாவிலும் வெற்றி வாய்ப்பையும் நல்குவார், வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தியும், வியாபார விருத்தியும் உண்டாகும், தன்னிறைவான பண வசதி தங்களை தேடி வரும், நிதி நிறுவனம் மற்றும் வட்டி தொழில் செய்யும் அன்பர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி எதிர்பார்த்த வருமான வாய்ப்புகளையும், சிறப்பான முன்னேற்றங்களையும் வாரி வழங்குவார், புதிய நண்பர்களின் அறிமுகம் தங்களின் வாழ்க்கையில் எதிர்பாராத முன்னேற்றங்களை தரும், செல்வந்தர்களின் ஆதரவும், உதவியும் தன்னிறைவாக தங்களுக்கு கிடைக்கும், புதிய முயற்ச்சிகளை மேற்கொண்டு வாழ்க்கையில் எதிர்பாராத அதிர்ஷ்டங்களை பெறுவதற்கு உண்டான யோக காலமாக சனி பகவானின் 10ம் பார்வை தங்களுக்கு அமையும், மண்ணில் கிடைக்கும் பொருட்கள் வழியிலான விருத்திகள் அதிகரிக்கும், குறிப்பாக சுரங்க பொருட்கள், உலோக பொருட்கள், உயர் மதிப்பு கொண்ட உலகம் மற்றும் ரத்தினங்கள் மூலம் எதிர்பாராத லாபங்களை கடக லக்கின அன்பர்கள் பெறுவதற்கு வாய்ப்பு உண்டு, விவசாயம் அல்லது உணவு பொருட்கள் சார்ந்த தொழில் துறையில் உள்ள அன்பர்களுக்கு ஏற்றமிகு யோக வாழ்க்கையை சனி பகவான் வாரி வழங்குவார், தங்களுக்கு இதுவரை இருந்த வந்த இன்னல்கள் யாவும் மறைந்து, மகிழ்ச்சியும் சந்தோஷமும் அதிகரிக்கும், கடக லக்கின அன்பர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி ராஜயோக பலாபலன்களை வாரி வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

குறிப்பு :

 கடக லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 6,11,12,3ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள்  6,11,12,3ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் கடக லக்கின அன்பர்களுக்கு மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

சனி பகவான் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் காலங்கள் :

( 26/01/2017 முதல் 21/06/2017 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும்.

( 21/06/2017 முதல் 26.10.2017 ) வரை
சனி பகவான் மீண்டும் வக்கிரக கதியில் விருச்சிக ராசியிலும்.

( 26/10.2017 முதல் 24/01/2020 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும் சஞ்சாரம் செய்கின்றார்.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

சனி பகவான் கொடுப்பின் எவர் தடுப்பார் ?


ஒருவரின் சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களில் அதிர்ஷ்டத்தையும், லாபத்தையும் வாரி வழங்கும் வல்லமை லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகத்திர்க்கு உண்டு, சுய ஜாதகத்தில் லாப ஸ்தானம் வலிமை பெறுவது ( சர இலக்கின அன்பர்களை தவிர ) சம்பந்த பட்ட ஜாதகருக்கு மிகுந்த அதிர்ஷ்டத்தையும், நிறைவான லாபத்தையும் நிச்சயம் தரும், மேலும் ஜாதகர் தனது பிறவி பலனை முழுவதும் பெரும் யோகமும் உண்டாகும், ஜாதகரின் எண்ணங்கள் யாவும் பலிதம், எதிர்பார்ப்புகள் யாவும் நிறைவேறும், காலபுருஷ தத்துவத்திற்கு 10,11க்கு அதிபதியான சனி பகவான், சுய ஜாதகத்தில் லாப ஸ்தானத்திற்கு அதிபதியாக அமர்ந்தால், ஜாதகரின் யோக வாழ்க்கைக்கும், அதிர்ஷ்டங்களுக்கும் குறைவேதும் இருக்காது, தன்னிறைவான பொருளாதார முன்னேற்றம், எண்ணிய காரியங்கள் வெற்றி, செய்யும் தொழிலில் எதிர்பாராத லாபங்கள் ஜாதகரை வந்து சேரும், சனி பகவான் இன்னல்களையே தருவார் என்ற கூற்றை இங்கே உடைத்தெறிந்து ஜாதகரின் யோக வாழ்க்கைக்கு தாமே காரணம் என்று நிருபித்து " சனி கொடுப்பின் எவர் தடுப்பார்" என்ற வாக்கினை 100% விகிதம் உறுதி செய்வார்.

சனிபகவான் தரும் யோகம் பற்றி இந்த பதிவில் உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வோம் அன்பர்களே!


ஜாதகருக்கு லக்கினம் : சிம்மம் 
ஜாதகருக்கு ராசி : துலாம் 
ஜாதகருக்கு நட்சத்திரம் : சித்திரை 4ம் பாதம் 

ஜாதகருக்கு லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலை :

1,3,7,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு  பெறுவது ஜாதகருக்கு  11ம் பாவக வழியில் இருந்து 100% விகித யோகத்தை தரும்.

4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது 10ம் பாவக வழியில் இருந்து 100% விகித யோகத்தை தரும்.

5,9ம் வீடுகள் ஜாதகருக்கு பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன்  சம்பந்தம் பெறுவது பாதக ஸ்தான வழியில் இருந்து 200% விகித இன்னல்களை தரும்.

2,6ம் வீடுகள் சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது , ஜாதகருக்கு 6ம் பாவக வழியில் இருந்து 100% விகித இன்னல்களை தரும்.

8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவக்த்துடன் சம்பந்தம் பெறுவது, 12ம் பாவக வழியில் இருந்து 100% விகித இன்னல்களை தரும்.

மேற்க்கண்டவையே ஜாதகரின் பாவக வலிமைக்கு உண்டான பொது பலன்கள், இதில் 1,3,7,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும், 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும் ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளை தரும் அமைப்பாக கருதலாம், கால புருஷ தத்துவத்திற்கு 10,11க்கு உடைய சனிபகவான் ஜாதகருக்கு எந்த எந்த பாவகத்திர்க்கு அதிபதியாக வருகிறார், என்பதை ஆய்வு செய்வோம் அன்பர்களே, இந்த ஜாதகருக்கு 1,3,7 மற்றும் 11ம் பாவகங்களுக்கு அதிபதியாக சனிபகவானே வருவது கவனிக்க தக்க  அம்சமாகும், மேலும் 1,3,7,11ம் பாவகங்கள் தொடர்பு பெறுவது லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடனே என்பதும், 11ம் பாவகத்திர்க்கு அதிபதியாக சனி பகவானே வருவதும், ஜாதகரின் வாழ்க்கையில் சனிபகவான் லாப ஸ்தான வழியில் இருந்து யோகங்களை வாரி கொடுக்கும் நிலையில்  இருப்பது தெளிவாகிறது.

எனவே ஜாதகர் இலக்கின வழியில் இருந்து சிறப்பாக வளரும் சூழ்நிலையையும், நல்ல உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும், சிறந்த கல்வி யோகத்தையும், தன்னம்பிக்கை மற்றும் முற்போக்கு சிந்தனை கொண்ட மனதினையும், எந்த சூழ்நிலையையும் சிறப்பாக எதிர்கொள்ளும் வல்லமையும்  பெற்று இருப்பதும் , 3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும்  முயற்ச்சியில் வெற்றியையும், சிறந்த அறிவு திறனையும், வீரியமிக்க செயல்களால்  வெற்றிகளையும், சாஸ்திர ஞானத்தையும், மிதமிஞ்சிய மனோ தைரியத்தையும், எதிலும் துணிவுடன் செயல்படும் வல்லமை கொண்டவராகவும், 7ம் பாவக வழியில் பொது வாழ்க்கையில்  அதிர்ஷ்டத்தையும், வாழ்க்கை துணை  வழியில் இருந்து ஒத்துழைப்பையும், நண்பர்கள்  மற்றும் கூட்டாளிகள் வழியில் இருந்து முன்னேற்றத்தையும், வெளியூர் வெளிநாடுகளில் இருந்து வரும் யோகத்தை பெறுபவராகவும், 11ம் பாவக  வழியில் இருந்து நீடித்த அதிர்ஷ்டத்தையும், நிலையான யோக வாழ்க்கையையும், எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும் யோகம் பெற்றவராகவும் , தன்னம்பிக்கையும் மனோ தைரியத்தையும் நிறைவாக பெற்றவராகவும் காணப்படுகிறார், மேற்கண்ட 1,3,7,11ம் பாவகங்களுக்கு அதிபதியாக சனி பகவான் அமர்வது ஜாதகரின் அதிர்ஷ்டம் மற்றும் யோக வாழ்க்கையை தங்கு தடையின்றி தாம் அதிபதியாக உள்ள பாவகங்கள் வழியில் இருந்து ஜாதகருக்கு யோகங்களை வாரி வழங்கி கொண்டு இருக்கிறார்.

ஜாதகருக்கு 1,3,7,11ம் பாவகங்களுக்கு அதிபதியாக சனிபகவான் அமர்ந்தது மட்டுமே ஜாதகருக்கு யோக பலன்களை வாரி வழங்கவில்லை,  இதற்க்கு முன் ( 14/12/1998 முதல் 14/12/2014 வரை) நடைபெற்ற குரு திசையும், தற்பொழுது ( 14/12/2014 முதல் 14/12/2033 வரை ) நடைபெறும் சனி திசையும் ஜாதகருக்கு  1,3,7,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்ற லாப ஸ்தான பலனை ஏற்று நடத்தியதே ஜாதகரின் யோக வாழ்க்கைக்கு காரணமாக அமைந்தது, எனவே சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெறுவது மட்டும் யோகத்தை தாராது, நடைபெறும் திசா புத்திகள் வலிமை பெற்ற பாவகத்தின் பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே ஜாதகருக்கு யோக பலன்கள் நடைமுறைக்கு வரும், மேலும் ஜாதகருக்கு லாப ஸ்தானத்திற்கு அதிபதியான சனி பகவான் தனது காரக துவத்தில் இருந்து யோகங்களை வாரி வழங்குவது கண்கூடான உண்மை.

ஜாதகரின் அதிர்ஷ்ட நிறம் சாம்பல், 
ஜாதகரின் அதிர்ஷ்ட எண்  எட்டு.
ஜாதகரின் அதிர்ஷ்ட நாள் சனி,

என தனது காரக துவத்தில் இருந்து சனி பகவான் ஜாதகருக்கு தொடர்ந்து யோகங்களை வழங்கி கொண்டு இருப்பது வரவேற்க தக்க அம்சமாகும், எனவே சனி பகவான் ஒரு ஜாதகருக்கு யோகங்களை வாரி வழங்க ஆரம்பித்துவிட்டால் அதை தடுக்க எவராலும் இயலாது என்ற கூற்று முற்றிலும் உண்மையே.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

சனி பெயர்ச்சி, விருச்சிக ராசிக்கு செல்லும் சனிபகவான் லக்கின வாரியாக தரும் பலன்கள் - மீனம்


சனி பகவான்  திருக்கணித பஞ்சாங்க முறைப்படி 02-11-2014 ஞாயிறு கிழமை அன்று இரவு 08-54 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். விருச்சிக ராசியில் சனி சுமார் இரண்டரை ஆண்டு காலம் சஞ்சரிப்பார், இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு லக்கினத்தை சார்ந்தவர்களுக்கும் சனி பகவான் வழங்கும் யோக அவயோக பலன்களை பற்றி நாம் இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே!   


ஜோதிடதீபம் ராசியை அடிப்படையாக வைத்து சனி பெயர்ச்சி பலன்களை வழங்காமல், ஏன் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் சொல்லுகிறது என்ற சந்தேகம் சிலருக்கு வரக்கூடும், லக்கினம் என்பதே ஜாதகத்திற்கு அடிப்படையானது, இந்த லக்கினம் எனும் முதல் பாவகத்தை வைத்தே ஒருவருக்கு சரியான ஜாதக பலன்களை சொல்ல இயலும், ராசியை வைத்து சொல்வது என்பது, பொது பலன்களாகவே இருக்குமே தவிர ஒரு ஜாதகருக்கு தெளிவான பதிலையும், பலன்களையும் தர வாய்ப்பில்லை என்பதால் ஒவ்வொரு லக்கினத்தருக்கும், இந்த சனி பெயர்ச்சி எவ்வித பலன்களை தருகிறது என்று தெளிவாக இனி வரும் பதிவுகளில் காண்போம்.

அடிப்படையில் ஒரு விஷயத்தில் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் அன்பர்களே! சனி பகவான் தற்பொழுது விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார், இனி வரும் 30 மாதங்கள் சனி பகவான் விருச்சிக ராசியில் சஞ்சாரம் செய்கிறார், விருச்சிகத்தில் அமர்ந்து  6ம் பார்வையாக மேஷ ராசியையும், 7ம் பார்வையாக ரிஷப ராசியையும், 10ம் பார்வையாக சிம்ம ராசியையும் பார்ப்பதால் இந்த ராசிகளுக்கு திருஷ்டி பலன் என்ற அமைப்பில் பலன் தருகிறார்.

இலக்கின ரீதியாக பலன்கான முனையும் அன்பர்கள் அனைவரது ஜாதகத்திலும் தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை ஏற்று நடத்தும் பாவகம் கிழ்கண்ட ராசிகளில் அமைந்தால் மட்டுமே ( அதாவது விருச்சிகம்,மேஷம்,ரிஷபம் மற்றும் சிம்மம் ஆகிய ராசிகள் எந்த எந்த பாவகமாக வருகிறதோ அந்த பாவக பலனை தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை தொடர்பு பெறுதல் ) ஜாதகருக்கு தற்பொழுது பெயர்ச்சி பெற்று இருக்கும் சனிபகவான் நன்மையையோ, தீமையையோ செய்வார் என்பதை கருத்தில் கொள்க, எனவே தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மேற்கண்ட ராசிகளுடன் தொடர்பு பெருகின்றத என்பதை கவனிப்பது மிக முக்கியமானதாக ஜோதிடதீபம் அறிவுறுத்துகிறது . 


மீன லக்கினம் :

மீன லக்கினத்தை சார்ந்த அன்பர்களே ! தங்களுக்கு 9ல் அமர்ந்த சனி பகவான் 9ம் பாவகத்திர்க்கு அவ்வளவு நன்மையை தருவதாக தெரியவில்லை, தாங்கள் 9ம் பாவக வழியில் இருந்து உயர்கல்வி  மற்றும் சீரிய முயற்ச்சிகள் சில நேரங்களில் தோல்வியை  தரக்கூடும், பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கமால் சில நேரங்களில் அவதியுற நேரலாம், ஆராய்ச்சி சார்ந்த விஷயங்கள் சில தடைகளை சந்திக்கும் தன்மையை தரும், தன்னை விட வயதில் அதிகமுள்ள பெரிய மனிதர்ர்களின் ஆலோசனை படி நடந்துகொள்வது சாலசிறந்தது, இல்லை எனில் தேவையில்லாத அவ பெயர் ஏற்ப்பட அதிக வாய்ப்பு உள்ளது, வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது அதிக கவனம் தேவை, எதிர்பாராத விபத்துகள் சந்திக்கும் வாய்ப்பு உள்ளதால், பாதுகாப்பான பயணம் மேற்கொள்வது சகல நிலைகளில் இருந்தும் நன்மை தரும், திடீர் மருத்துவ செலவுகளும், எதிர்பாராத இழப்புகளும் தவிர்க்க இயலாது என்பதை கவனிப்பது நலம், ஆரோக்கியத்தில் அதிக அக்கறை கொள்வது தங்களுக்கு சிறந்த உடல் நலனை பெற்று தரும், அதிக முதலீடு மற்றும் மற்றவரை நம்பி செய்யும் காரியங்கள் பெரிய பின்னடைவை சந்திக்கும், அதிக எச்சரிக்கை தேவை இனிவரும் காலங்களில்.

6ம் பார்வையாக மேஷத்தை பார்வை செய்யும் சனிபகவான் தங்களுக்கு, வாக்கு மற்றும் குடும்ப அமைப்பில் இருந்து அதிக இன்னல்களை தந்த போதிலும், அளவுக்கு அதிகமான முறையற்ற செல்வத்தை வாரி வழங்க கூடும், எதிர்பாராத பணவரவுகள் தங்களை ஒரு நிமிடம் செயல் இழக்க செய்யும், இந்த நேரங்களில் அதிக சிந்தனையும், சரியான செயல்பாடுகளும் தங்களது வாழ்க்கையில் நன்மைகளை ஏற்ப்படுத்தும், ஒருநாள் இடைவெளியில் பொருள் வரவு தாரளமாக வருவதற்கு உண்டான வாய்ப்புகள் உண்டு, அதே சமயம், இதற்க்கு நிகரான குடும்ப பிரச்சனைகளும் தலைதூக்கும், சமாளிப்பது தங்களின் திறமை, முன்னுக்கு புறநான வார்த்தைகள் தங்களை வெகுவாக பதம் பார்க்கும், இதனாலும் பொருள் வரவு உண்டாகும், எக்காரணத்தை கொண்டும் யாருக்கும் வாக்கு கொடுப்பது தங்களை நிலை குலைய செய்யும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள், தங்களின் பொருளாதார வெற்றி இனிவரும் காலங்களில் அபரிவிதமாக இருக்கும் என்பது மட்டும் உறுதி, குடும்பத்தில் அதிக அனுசரிப்பும் விட்டுகொடுத்து செல்லும் மனப்பக்குவமும் மிகப்பெரிய எதிர்காலத்தை உருவாக்கும்.

7ம் பார்வையாக வீர்ய ஸ்தானத்தை வசீகரிக்கும் சனிபகவான் தங்களுக்கு கை நிறைவான வருமான வாய்ப்பை வாரி வழங்குகிறார், இதுவரை நிலுவையில் நின்ற பணம் யாவும் வந்து சேரும், சமுதாய அந்தஸ்த்து அதிகரிக்கும், ஏஜென்சி துறையில் உள்ளவர்களுக்கு அபரிவிதமான லாபங்கள் வந்து குவியும் யோக காலமாக இதை கருதலாம், வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானம் அதிகரிக்க வாய்ப்பு உண்டாகும், மருத்துவ துறையில் உள்ள அன்பர்களுக்கு லாபம் கொழிக்கும் , ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் உள்ள அன்பர்களுக்கு மிக சிறப்பான வெற்றிகள் உண்டாகும், விளையாட்டு துறையில் பல சாதனைகளை செய்யும் வாய்ப்பு உண்டாகும், தொழில் துறையில் உள்ள அன்பர்களும், தொழிலாளர்களும் அபரிவிதமான லாபங்களை பெறுவார்கள், வட்டி தொழில் செய்பவர்களுக்கு எதிர்பாராத வருமானங்கள் வந்து குவியும், கட்டிடம் மற்றும் கட்டுமான துறைகள் சரிவை  சந்தித்து மிகப்பெரிய வளர்ச்சியை பெரும் என்பதால், இந்த துறையில் உள்ள அன்பர்கள் மிகுந்த லாபத்தை நிச்சயம் பெறுவார்கள், குழந்தைகளின் கல்வி மற்றும் விளையாட்டு திறன் அதிகரிக்கும், மீன இலக்கின அன்பர்களுக்கு இந்த சனியின் 7ம் பார்வை சகல நலன்களையும் தருகிறது.

10ம் பார்வையாக ரண ருண ஸ்தானத்தை பார்வை செய்யும் சனிபகவான் தங்களுக்கு, வயிறு சார்ந்த தொந்தரவுகளை கடுமையாக கொடுக்க கூடும் , கடன் வாங்குவது கொடுப்பது, பெரிய பின்னடைவை சந்திக்கும், வீண் மருத்துவ செலவுகளும் உடல் நல சீர்கேடுகளும் தங்களை வெகுவாக பாதிக்கும், தன்னபிக்கை வெகுவாக குறையும், வாழ்க்கை துணை வழியில் இருந்து அதிக சிரமங்களை  எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரக்கூடும், மனோ ரீதியான தொந்தரவுகளும், எதிரிகளின் தொல்லைகளும் அதிகரிக்கும், எந்த ஒரு விஷயத்தையும் நன்கு ஆய்வு செய்து செயல்படுவது நலம் தரும், நெடுந்தொலைவு பயணங்களில் அதிக பாதுகாப்பு தேவை, சிந்தனை திறன் குறையும் என்பதால் தாங்கள் அனைவரும் முறையாக சூரிய நமஸ்காரம் செய்து வருவது சால சிறந்த நன்மைகளை வாரி வழங்கும், எதிரிகளின் சூழ்ச்சியே தங்களுக்கு சாதகமாக மாற அதிக வாய்ப்பு உண்டு, பெண்கள் தங்களது உடல் நலனில் அதிக அக்கறை கொள்வது நல்லது குறிப்பாக வயிறு மற்றும் முதுகு எலும்பு சார்ந்த தொந்தரவுகள் வெகுவாக பாதிக்கும், யாரிடமும் பகைமை பாராட்டாமல் நன்மைகளை மட்டும் செய்வது தங்களின் பூர்வ புண்ணிய பலன்களை அதிகரிக்கும்.

மீன இலக்கின அன்பர்களே ! தங்களுக்கு தற்ப்பொழுது நடைபெறும் திசை மற்றும் புத்திகள் மேற்கண்ட 9,2,3,6ம் பாவக பலன்களை ஏற்று நடத்தினால் மட்டுமே, தங்களுக்கு கோட்சார சனிபகவானின் கோட்சார யோக அவயோக பலன்கள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை தற்பொழுது நடைபெறும் திசை மற்றும் புத்திகள் மேற்கண்ட 9,2,3,6ம் பாவக பலனை ஏற்று நடத்த வில்லை எனில், எவ்வித நன்மை தீமையும் தங்களுக்கு நடைமுறையில் வர வாய்ப்பில்லை என்பதை கருத்தில் கொள்வது நல்லது வாழ்த்துகள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696  

புதன், 28 ஜனவரி, 2015

சனி பெயர்ச்சி, விருச்சிக ராசிக்கு செல்லும் சனிபகவான் லக்கின வாரியாக தரும் பலன்கள் - கும்பம்



சனி பகவான்  திருக்கணித பஞ்சாங்க முறைப்படி 02-11-2014 ஞாயிறு கிழமை அன்று இரவு 08-54 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். விருச்சிக ராசியில் சனி சுமார் இரண்டரை ஆண்டு காலம் சஞ்சரிப்பார், இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு லக்கினத்தை சார்ந்தவர்களுக்கும் சனி பகவான் வழங்கும் யோக அவயோக பலன்களை பற்றி நாம் இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே!   

ஜோதிடதீபம் ராசியை அடிப்படையாக வைத்து சனி பெயர்ச்சி பலன்களை வழங்காமல், ஏன் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் சொல்லுகிறது என்ற சந்தேகம் சிலருக்கு வரக்கூடும், லக்கினம் என்பதே ஜாதகத்திற்கு அடிப்படையானது, இந்த லக்கினம் எனும் முதல் பாவகத்தை வைத்தே ஒருவருக்கு சரியான ஜாதக பலன்களை சொல்ல இயலும், ராசியை வைத்து சொல்வது என்பது, பொது பலன்களாகவே இருக்குமே தவிர ஒரு ஜாதகருக்கு தெளிவான பதிலையும், பலன்களையும் தர வாய்ப்பில்லை என்பதால் ஒவ்வொரு லக்கினத்தருக்கும், இந்த சனி பெயர்ச்சி எவ்வித பலன்களை தருகிறது என்று தெளிவாக இனி வரும் பதிவுகளில் காண்போம்.

அடிப்படையில் ஒரு விஷயத்தில் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் அன்பர்களே! சனி பகவான் தற்பொழுது விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார், இனி வரும் 30 மாதங்கள் சனி பகவான் விருச்சிக ராசியில் சஞ்சாரம் செய்கிறார், விருச்சிகத்தில் அமர்ந்து  6ம் பார்வையாக மேஷ ராசியையும், 7ம் பார்வையாக ரிஷப ராசியையும், 10ம் பார்வையாக சிம்ம ராசியையும் பார்ப்பதால் இந்த ராசிகளுக்கு திருஷ்டி பலன் என்ற அமைப்பில் பலன் தருகிறார்.

இலக்கின ரீதியாக பலன்கான முனையும் அன்பர்கள் அனைவரது ஜாதகத்திலும் தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை ஏற்று நடத்தும் பாவகம் கிழ்கண்ட ராசிகளில் அமைந்தால் மட்டுமே ( அதாவது விருச்சிகம்,மேஷம்,ரிஷபம் மற்றும் சிம்மம் ஆகிய ராசிகள் எந்த எந்த பாவகமாக வருகிறதோ அந்த பாவக பலனை தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை தொடர்பு பெறுதல் ) ஜாதகருக்கு தற்பொழுது பெயர்ச்சி பெற்று இருக்கும் சனிபகவான் நன்மையையோ, தீமையையோ செய்வார் என்பதை கருத்தில் கொள்க, எனவே தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மேற்கண்ட ராசிகளுடன் தொடர்பு பெருகின்றத என்பதை கவனிப்பது மிக முக்கியமானதாக ஜோதிடதீபம் அறிவுறுத்துகிறது . 

கும்ப லக்கினம் :
கும்ப லக்கினத்தை  சார்ந்த அன்பர்களுக்கு 10ல் அமர்ந்த சனி  அமர்ந்த சனி பகவான் ஜாதகருக்கு ஜீவன வழியில் இருந்து மேன்மையும், எதிர்பாராத தொழில் முன்னேற்றத்தையும், அபரிவிதமான மக்கள் செல்வாக்கினையும், சமுதாயத்தில் கௌரவம் அந்தஸ்த்து மற்றும் சிறப்பு  மிக்க அதிகார பதவி மற்றும் பொறுப்புகளை அலங்கரிக்கும்  யோகத்தை தருகிறார்,  ஜாதகரின் திடீர் முன்னேற்றம் என்பது தவிர்க்க இயலாத வண்ணமே  அமையும் என்பது குறிப்பிட தக்கது, ஜாதகர் தனது வாழ்கை துணை வழியில் இருந்து 100% விகித யோகத்தை பெரும் நல்ல நேரமாக இதை கருதலாம், மேலும் செய்யும் தொழில் அமைப்புகளில் இருந்து புதையலுக்கு ஈடான சொத்து வரவுகளை பெரும் யோக காலமாக இனிவரும் 5வருடங்கள் அமையும்  என்பதை கருத்தில் கொண்டு  ஜாதகர் தனது உழைப்பை தொழில் துறையில் பயன்படுத்தினால், தனது வாழ்நாள் முழுவதிற்கும் உண்டான பொருளாதார தன்னிறைவை ஜாதகர் பெற இயலும் என்பது சனிபகவான் கும்ப லக்கினத்தாருக்கு தரும் ஒரு சிறந்த வாய்ப்பாக கருதலாம் அன்பர்களே !
6ம் பார்வையாக 3ம் பாவகத்தை வசீகரிக்கும் சனிபகவானால் கும்பலக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு சிறந்த வெற்றிகள் உண்டாகும், தான் எடுக்கும் எந்த ஒரு காரியங்களும் வெற்றி மேல் வெற்றி தரும் போட்டி பந்தையங்களில் சிறந்த வெற்றிகள், அரசியலில் வெற்றி, தேர்வில் வெற்றி, தேர்தலில் வெற்றி என ஜாதகரின் வாழ்க்கை வெற்றி  படிகட்டுகளில் ஏறுவதற்கு உண்டான யோக காலமாக இதை கருதலாம், தன்னம்பிக்கை அதிகரிக்கும் , உலக பிரபல்யம் பெறுவதற்கு உண்டான வாய்ப்புகள் வந்து குவியும், ஜாதகரின் தனி  திறமையான செயல்பாடுகள் யாவரும் பாராட்டும் வண்ணம் அமையும், ஜாதகர் விளையாட்டு மற்றும் காவல் துறை, பாதுகாப்பு துறையில் இருப்பின் சம்பந்தபட்ட துறைகளில் திடீரென உயர்பதவி அல்லது அதற்க்கு நிகரான முன்னேற்றத்தை வாரி வழங்கும், ரியல் எஸ்டேட் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள அன்பர்களுக்கு எதிர்பாராத குறுகியகால வளர்ச்சியை வாரி வழங்கும், இரும்பு மற்றும் கட்டுமான துறையில்  ஏஜென்சி அமைப்பில் செயல்படும் தொழில்கள் அபரிவிதமான வளர்ச்சியை பெரும், எதிர்பாராத  முன்னேற்றம் சம்பந்தபட்ட தொழில்  துறையில் உள்ளவர்களுக்கு ஏற்ப்படும், குறிப்பாக ஏஜென்சி மற்றும் கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு அபரிவிதமான வெற்றிகளை வாரி வழங்கும் யோக காலமாக இது அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

7ம் பார்வையாக 4ம் பாவகத்தை வசீகரிக்கும் சனிபகவான் கும்ப லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு சொத்து சுகம், வண்டி வாகனம், வீடு நிலம் சார்ந்த அமைப்புகளில் இருந்து 100% விகித யோக வாழ்க்கையை வாரி வழங்குகிறார், இதுவரை சொந்தமாக வீடு,வண்டி,வாகனம்,நிலம் இல்லாத அன்பர்களுக்கு ஸ்திரமான சொத்துகள் அமையும், வண்டி வாகன யோகம் உண்டாகும், புதிய  வீடு  வாங்கும் யோகம்  அல்லது புதிதாய் கட்டி குடிபோகும் யோகத்தை தரும், குடும்ப வாழ்க்கையில் செல்வசெழிப்பு உண்டாகும், எதிர்பாராத வருமானம் கும்ப லக்கினத்தாருக்கு  வந்து சேரும், முற்ப்போக்கு சிந்தனை உடன் வாழ்க்கையில் சகல பொருளாதார வெற்றிகளையும்  இனிவரும் காலங்களில் பெறுவார்கள், தாய் வழியில் இருந்து அல்லது குடும்ப அமைப்பில் இருந்து தங்களுக்கு  வரவேண்டிய சொத்து பணம் அல்லது நகை  அனைத்தும் வந்து சேரும், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும் யாரும் எதிர்பாராத  வண்ணம் வருமான  வாய்ப்புகள் தங்களை தேடிவரும், பேச்சை தொழிலாக கொண்டு செயல்படும் அன்பர்களுக்கு அபரிவிதமான வளர்ச்சி மற்றும் வருமானம் கிடைக்க பெறுவார்கள்.

10ம் பார்வையாக 7ம் பாவகத்தை வசீகரிக்கும் சனிபகவான் கும்பலக்கின அன்பர்களுக்கு, இதுவரை  திருமண தடைகளை சந்தித்து கொண்டு இருந்த அன்பர்களுக்கு சிறப்பான இல்லற வாழ்க்கையை அமைத்து தருவார், திருமண வாழ்க்கையில் பிரிவை நோக்கி சென்று கொண்டு இருந்த அன்பர்களுக்கு திடீர் திருப்பு முனையாக சேர்ந்து வாழும் யோகத்தை தருவார், திருமண  வாழ்க்கையில் அதிக சிரமங்களை எதிர்கொண்டு இருந்த அன்பர்களுக்கு இனிவரும் காலங்கள்  வசந்த காலமாக மாறி மன மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தும்,   தம்பதியரின் ஒற்றுமை மேலோங்கும், செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பான வரவேற்ப்பு கிடைக்கும், பொதுமக்கள் ஆதரவு மூலம் குடும்ப வாழ்க்கையிலும் பொது வாழ்க்கையிலும் மகிழ்ச்சி பொங்கும், வேற்று மதத்தினர், வேற்று இனத்தினர் மூலம் நல்ல முன்னேற்றமும் பொருளாதார வளர்ச்சியும் உண்டாகும், இதுவரை திருமணம் ஆகாத கும்ப லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு திடீரென திருமண வாழ்க்கை சீரும் சிறப்புமாக நடைபெறும், குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் உறவுகளின் ஆதரவின் மூலம் பல நன்மைகளும், தொழில் அபிவிருத்தியும் உண்டாகும்,  கூட்டு தொழில் செய்யும் அன்பர்களுக்கு இனிவரும் காலங்கள் அபரிவிதமான லாபங்கள் 100% விகிதம் வந்து சேரும்  என்பது கவனிக்க தக்கது.

கும்ப இலக்கின அன்பர்களே ! தற்பொழுது தங்களுக்கு நடைபெறும், திசை மற்றும் புத்தி மேற்கண்ட 
10,3,4,7ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே, மேற்கண்ட சனிபகவானின் கோட்சார நன்மைகள் அல்லது தீமைகள் நடைமுறைக்கு வரும் ஒருவேளை நடைபெறும் திசை 10,3,4,7ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் எவ்வித நன்மையும், தீமையும் நடைபெறாது என்பதை கவனத்தில் கொள்க, வாழ்த்துகள் . 


வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

வியாழன், 22 ஜனவரி, 2015

சனி பெயர்ச்சி, விருச்சிக ராசிக்கு செல்லும் சனிபகவான் லக்கின வாரியாக தரும் பலன்கள் - மகரம்



சனி பகவான்  திருக்கணித பஞ்சாங்க முறைப்படி 02-11-2014 ஞாயிறு கிழமை அன்று இரவு 08-54 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். விருச்சிக ராசியில் சனி சுமார் இரண்டரை ஆண்டு காலம் சஞ்சரிப்பார், இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு லக்கினத்தை சார்ந்தவர்களுக்கும் சனி பகவான் வழங்கும் யோக அவயோக பலன்களை பற்றி நாம் இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே!   

ஜோதிடதீபம் ராசியை அடிப்படையாக வைத்து சனி பெயர்ச்சி பலன்களை வழங்காமல், ஏன் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் சொல்லுகிறது என்ற சந்தேகம் சிலருக்கு வரக்கூடும், லக்கினம் என்பதே ஜாதகத்திற்கு அடிப்படையானது, இந்த லக்கினம் எனும் முதல் பாவகத்தை வைத்தே ஒருவருக்கு சரியான ஜாதக பலன்களை சொல்ல இயலும், ராசியை வைத்து சொல்வது என்பது, பொது பலன்களாகவே இருக்குமே தவிர ஒரு ஜாதகருக்கு தெளிவான பதிலையும், பலன்களையும் தர வாய்ப்பில்லை என்பதால் ஒவ்வொரு லக்கினத்தருக்கும், இந்த சனி பெயர்ச்சி எவ்வித பலன்களை தருகிறது என்று தெளிவாக இனி வரும் பதிவுகளில் காண்போம்.

அடிப்படையில் ஒரு விஷயத்தில் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் அன்பர்களே! சனி பகவான் தற்பொழுது விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார், இனி வரும் 30 மாதங்கள் சனி பகவான் விருச்சிக ராசியில் சஞ்சாரம் செய்கிறார், விருச்சிகத்தில் அமர்ந்து  6ம் பார்வையாக மேஷ ராசியையும், 7ம் பார்வையாக ரிஷப ராசியையும், 10ம் பார்வையாக சிம்ம ராசியையும் பார்ப்பதால் இந்த ராசிகளுக்கு திருஷ்டி பலன் என்ற அமைப்பில் பலன் தருகிறார்.

இலக்கின ரீதியாக பலன்கான முனையும் அன்பர்கள் அனைவரது ஜாதகத்திலும் தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை ஏற்று நடத்தும் பாவகம் கிழ்கண்ட ராசிகளில் அமைந்தால் மட்டுமே( அதாவது விருச்சிகம்,மேஷம்,ரிஷபம் மற்றும் சிம்மம் ஆகிய ராசிகள் எந்த எந்த பாவகமாக வருகிறதோ அந்த பாவக பலனை தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை தொடர்பு பெறுதல் ) ஜாதகருக்கு தற்பொழுது பெயர்ச்சி பெற்று இருக்கும் சனிபகவான் நன்மையையோ, தீமையையோ செய்வார் என்பதை கருத்தில் கொள்க, எனவே தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மேற்கண்ட ராசிகளுடன் தொடர்பு பெருகின்றத என்பதை கவனிப்பது மிக முக்கியமானதாக ஜோதிடதீபம் அறிவுறுத்துகிறது . 

மகர லக்கினம் :

மகர லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு 11ல் அமரும் சனி பகவான் மகர லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளை வழங்குகிறார், எண்ணம் போல் வாழ்க்கை என்பதற்கு இணங்க ஜாதகர் நினைக்கும் நல்ல காரியங்கள் யாவும் தங்கு தடையின்றி நடைபெறும், இதுவரை இல்லாத செல்வாக்கு மக்கள் ஆதரவு ஜாதகருக்கு திடீரென தேடிவரும், மனதில் நினைத்த எண்ணங்கள் யாவும் நடைபெறும் லட்சியங்கள் கைகூடும், புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கை உண்டாகும், ஜாதகர் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து 100% விகித யோக வாழ்க்கையை பெரும் நல்ல நேரமாக இதை கருதலாம், ஜாதகர் தான் செய்யும் தொழில் வழியில் இருந்து மிகுந்த முன்னேற்றத்தை இனிவரும் காலங்களில் பெறுவார் குறிப்பாக உணவு சார்ந்த தொழில்கள் அல்லது விவாசாய உற்பத்தி பொருட்கள், நீர் தத்துவம் சார்ந்த தொழில்களில் இருப்பவர்களுக்கு மிகுந்த அதிர்ஷ்டமும் லாபமும் உண்டாகும்.

4ம் பாவகத்தை பார்வை செய்யும் சனி பகவான் ஜாதகருக்கு திடீர் சொத்து சுகத்தை வாரி வழங்குகிறார், தனது பெயரில் உள்ள சொத்து அல்லது வண்டி வாகன விருத்தி பெரும் யோகத்தை தருகிறார், இருப்பினும் இது சார்ந்த தொந்தரவுகளும் ஏற்ப்படும் வண்டி வாகனத்தில் பழுது, சொத்து அல்லது வீடு போன்றவற்றில் பழுது ஏற்ப்பட்டு சரி செய்யும் தன்மையை தருகிறார், விரையத்தின் பேரில் லாபம் உண்டாகும் , ஜாதகர் பயணங்களில் அதிக கவனமாக இருப்பது நலம் தரும், வண்டி வாகன அமைப்புகளில் பயணிக்கும் பொழுது பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்துகொள்வதும், எதிரில் வரும் வாகனங்களை கருத்தில் கொண்டு இயக்குவதும் அவசியம், கவனக் குறைவுடனும் தூக்க கலக்கத்துடன் வாகங்களை இயக்குவது பெரிய ஆபத்தில் சிக்க வைக்கும், இது தங்களுக்கும் தங்களை சார்ந்தவர்களுக்கும் பாதிப்பை தரக்கூடும், வண்டி வாகனங்களுக்கு சேதாரத்தை தர கூடும், தனது பெயரில் உள்ள சொத்துகளை கவனமாக பாதுக்கக்க வேண்டி வரும்.

5ம் பாவகத்தை பார்வை செய்யும் சனி பகவான் தங்களுக்கு அறிவு சார்ந்த விஷயங்களில் சிறு சிறு தொந்தரவுகளை தந்த போதிலும், நிறைவான வருமான வாய்ப்பை தங்கு தடையின்றி செய்வார், கல்வி காலங்களில் உள்ள அன்பர்கள் மிக கவனமுடன் தேர்வுகளை எதிர்கொள்வது நலம் தரும், சிந்தனை ஆற்றல் சில நேரங்களில் பாதிப்பை பெறுவதற்கு உண்டான சூழ்நிலைகள் உருவாகும் என்பதால் நன்கு ஆலோசனை செய்து எந்த ஒரு முடிவையும் எடுப்பது நலம் தரும், குடும்ப வாழ்க்கையில் உள்ள நபர்கள் தேவையற்ற விஷயங்களை விவாதிப்பதை தவிர்ப்பது நலம் தரும், சிறு சிறு பிரச்சனைகளை உடனடியாக பேசி தீர்வு காண்பது  நலம் தரும் அலட்சியமாக இருந்தால், பின்னாளில் பெரிய பாதிப்பை தரும், வருமானம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகளை சரியாக கையாள்வது சால சிறந்தது, சரியான திட்டமிடுதல் தங்களுக்கு மிகுந்த நன்மையை வாரி வழங்கும், குடும்ப உறவுகளுடன் ஒற்றுமை காண்பது அவசியம், விட்டுகொடுத்து செல்வது சகல நிலைகளில் இருந்தும் நன்மை தரும்.

8ம் பாவகத்தை வசீகரிக்கும் சனி பகவான் தங்களுக்கு எதிர்பாராத சோதனைகளை தரக்கூடும், முன் பின் யோசிக்காமல் எடுக்கும் அத்தனை முடிவுகளும் தங்களுக்கு எதிராக திரும்பும், மேலும் சிந்தித்து செயல்படும் தன்மையை வெகுவாக குறைக்கும், தங்களுது உழைப்பிற்கு உண்டான ஊதியம் கிடைப்பது சற்றே கடினம், தங்களது குல தெய்வத்தை முறையாக வழிபடுவது சகல நிலைகளில் இருந்தும் நன்மை தரும், எடுத்த காரியங்கள் செவ்வனே நடைபெற இறை அருளின் கருணையை நாடுவது நலம், கோவில் வழிபாடுகளில் அதிக கவனம் செலுத்துவதும், சிறந்த ஆன்மீக குருவை நாடி சரியான வழிகாட்டுதல்களை பெறுவதும் தங்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை பெற்று தரும், சிந்திக்கும் திறனை கடுமையாக பாதிப்பதால் தாங்கள் அதிகாலையில் எழுந்து சூர்ய நமஸ்காரம் தொடர்ந்து அனுதினமும் செய்துவருவது சகல நன்மைகளையும் தரும், மனதை ஒரு நிலை படுத்தி சுய கட்டுபாடுடன் நடந்து கொள்வது தங்களின் கடமை.

மகர இலக்கின  அன்பர்களே ! தற்பொழுது தங்களுக்கு நடைபெறும் திசை மற்றும் புத்தி மேற்கண்ட 11,4,5,8ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே, தங்களுக்கு மேற்கண்ட  சனிபகவானின், கோட்சார நன்மைகள் அல்லது தீமைகள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும் திசை 11,4,5,8ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் எவ்வித நன்மையும், தீமையும் நடைபெறாது என்பதை கவனத்தில் கொள்க, வாழ்த்துகள் . 

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

ஏழரை சனி படுத்தும் பாடு , சனிபகவான் தரும் நன்மை தீமை பலன்கள் !




பொதுவாக ஒருவருடைய ஜாதக அமைப்பில் சந்திரன்  இருக்கும் ராசிக்கும் , அதற்க்கு முன் பின் ராசிகளில் சனிபகவான்  கோட்சார ரீதியாக சஞ்சாரம் செய்யும் பொழுது ஏழரை சனி காலம் என்றும் , இதில் ராசிக்கு முன் சஞ்சாரம் செய்யும் பொழுது விறைய சனி என்றும் , ராசியில் சஞ்சாரம் செய்யும் பொழுது ஜென்ம சனி என்றும் , ராசிக்கு பின் சஞ்சாரம் செய்யும் பொழுது பாதசனி என்றும் குடும்ப சனி என்றும் , இந்த காலகட்டங்களில் ஜாதகர் மிகவும் வாழ்க்கையில் சிரம பட வேண்டும் என்றும் , குறிப்பிட்ட ஏழரை ஆண்டுகளில் ஜாதகரை சனி பகவான் படுத்தி எடுத்து விடுவார் என்றும் , உச்ச கட்டமாக மங்கு சனி , பொங்கு சனி , வாக்கு சனி , மரண சனி என்று சனிபகவானுக்கு நான்கு பிரிவுகளையும் தந்து ஜோதிடம் பார்க்க வந்தவரின் வயிற்றில் ஜோதிடர்கள் பலர் புளியை கரைப்பதுண்டு , நாம் இந்த பதிவில் இது உண்மையா ? இல்லை உண்மைக்கு மாறானத ? என்பதை சிந்தனைக்கு எடுத்து கொள்வோம் .



எடுத்து காட்டாக மேற்கண்ட மகர இலக்கின , கன்னி ராசியை சார்ந்த அன்பருக்கு மற்ற ஜோதிடரின் கருத்து படி பாத சனியின் காலகட்டம் நடை பெறுகிறது என்றும் , இந்த காலகட்டத்தில் ஜாதகர் வண்டி வாகனங்களில் செல்லக்கூடாது என்றும் , தேவையில்லாத மருத்துவ செலவுகளை தரும் என்றும் எச்சரித்து உள்ளனர் , மேலும் பெண் பிள்ளைகளுடன் பேசகூடாது என்றும் , நண்பர்களுடன் சேரக்கூடாது என்றும் , மீறி செய்தால் ஜாதகர் அதிக பாதிப்புகளை சந்திக்க வேண்டும் என்றும் பயமுறுத்தி உள்ளனர் , உச்சகட்டமாக நடக்கும் ராகு திசை ஜாதகருக்கு சொத்து வண்டி வாகனம் , தாய் வழியில் இருந்து இழப்புகளையே தரும் என்றும் , ஜாதகர் கலப்பு திருமணம் தனது விருப்ப படி செய்து கொள்வார் என்றும்  எச்சரிக்கையும் செய்துள்ளனர் .

கடந்த ஐந்து வருடமாக ஏழரை சனி காலகட்டத்தில் ஜாதகர் இருப்பதாலும் , மேலும் இது மங்கு சனியாக இருப்பதாலும் ஜாதகருக்கு அதிக துன்பமே வரும் என்று ஜாதக பலனாக கூறியுள்ளனர் , இதை கேட்ட ஜாதகரின் குடும்பம் மிரண்டு போய் ஜாதகரை , தற்ப்பொழுது எச்சரிக்கை என்ற பெயரில் தினமும் படுத்தி எடுத்து கொண்டு இருக்கின்றனர் , நமது நண்பரின் அறிவுறுத்தலின் பெயரில் எம்மிடம் ஜோதிட பலன் காண வந்திருந்தனர் , அவர்களுக்கு கிழ்கண்டவாறு சரியான ஜோதிட பலன்களை சொல்லி அனுப்பி வைத்தோம் .

ஜாதகரின் சுய ஜாதக அமைப்பின் படி தற்பொழுது நடந்து கொண்டு இருக்கும் , ராகு திசை முதலில் கெடுதலை செய்யவில்லை என்பதை தெளிவு படுத்தினோம் காரணம் நடக்கும் ராகு திசை களத்திரம்  எனும் ஏழாம் பாவகம் 7 ம வீட்டுடன் தொடர்பு பெற்று சர நீர் ராசியாக அமைந்து மிகசிறந்த நன்மைகளை தந்துகொண்டு இருக்கிறது என்பதை எடுத்து சொன்னோம் , மேலும் நடக்கும் சனி புத்தியும் மேற்கண்ட வீட்டின் பலனையே தருவதால் எவ்வித பயமும் தேவையில்லை என்று விளக்கினோம் , மேலும் தற்பொழுது கோட்சார சனி பகவான் லக்கினத்திற்கு மிகுந்த நன்மையை வழங்கி கொண்டு இருப்பதை தெளிவு படுத்தினோம் , ஒருவருடைய ஜாதக அமைப்பில் லக்கினத்தை அடிப்படையாக கொண்டே பலன் காண வேண்டும் என்றும் , ராசியை வைத்து பலன் காணக்கூடாது என்பதை சொல்லி , நடக்கும் ராகு திசை தரும் பலன்களை பற்றி எடுத்து சொல்லியும் , ஏழரை சனியின் காலத்தில் ஜாதகருக்கு எவ்வித துன்பமும் ஏற்ப்படாது என்றும் தெளிவு படுத்தி , இனி ஜாதகர் கடை பிடிக்க வேண்டியதை சொல்லி அனுப்பி வைத்தோம் .


உண்மையில் மேற்கண்ட ஜாதகருக்கு ராகு திசை தரும் பலன்களை பற்றி இனி பார்ப்போம் , ராகு திசை ஜாதகருக்கு ஆரம்பித்த காலம் முதற்கொண்டு நன்மையை மட்டுமே செய்து வருகிறது இதற்க்கு காரணம்  , ஜாதகர் சர லக்கினம் என்ற அமைப்பை பெற்று ராகு திசை களத்திர பாவக பலனை தருவதே , மேலும் இந்த ராசி சர நீர் ராசியாக அமைந்து 100 சதவிகித நன்மையே தருகிறது , இதனாலேயே ஜாதாகர் பள்ளி இறுதி ஆண்டில் சிறப்பான மதிப்பெண்களை பெற்று மருத்துவ படிப்பிற்கு தேர்ந்தெடுக்கபட்டார் , மேலும் அரசு உதவியின் மூலமாகவே மருத்துவ கல்வி கற்கும் யோகம் உண்டானது , மேலும் ஜாதகருக்கு களத்திர பாவகம் சிறப்பாக இருப்பதால் பெற்றோர் நிச்சயம் செய்த பெண்ணையே திருமணம் செய்துகொள்ளும் யோகமே  உண்டாகும் , மேலும் களத்திர பாவகம் பொது மக்களை மற்றும் நண்பர்களை குறிப்பதால் இவர்கள் வழியில் இருந்து ஜாதகர் யோக பலன்களையும் , முன்னேற்றத்தை மட்டுமே அனுபவிப்பார் என்பதில் சந்தேகம் இல்லை .

உண்மையில் இந்த ஜாதகருக்கு லக்கினாதிபதி என்ற முறையில் சனிபகவான் மிகுந்த நன்மைகளையே வாரி வழங்கி கொண்டு இருக்கிறார் , இதில் ஒருவேளை ஜாதகருக்கு நடக்கும் ராகு திசை மற்றும் புத்திகள் ஜீவன ஸ்தான வீட்டின் பலனை தந்து கொண்டு இருந்தால் மட்டுமே கேட்ச்சார சனியை பற்றி நாம் கவலை கொல்லாம் , ஏனெனில் ஜீவன ஸ்தானம் துலாம் ராசி அந்த ராசியுடன் தற்பொழுது சனி பகவான் கோட்சார ரீதியாக சம்பந்தம் பெறுகிறார் , அப்படியே இருந்தாலும் அந்த வீட்டிற்கு சனிபகவான் நன்மையை செய்கிறாரா? இல்லை தீமையை செய்கிறாரா ? என்று கண்டு உணர்ந்து சரியான ஜாதக பலனை சொல்ல வேண்டும் , குத்து மதிப்பாக ஏழரை சனி எனவே சனியால் தீமைதான் விளையும் என்று பலன் கூறுவது முற்றிலும் ஜோதிட சாஸ்திர அமைப்பிற்கு உண்மைக்கு புறம்பானது .

ஒருவேளை ஜோதிடர்களுக்கு நடக்கும் திசை புத்தி , எந்த வீடுகளின் பலன்களை தருகிறது என்று தெரியாத நிலையிலேயே இந்த அவலங்கள் நிகழும் , மேலும் பொதுவான ஜாதக பலன்களை சொல்லி ஜோதிடர்கள் தப்பித்து கொள்ளவே , இந்த ஏழரை சனி , அஷ்டம சனி , கோட்சார குரு , ராகு கேது சஞ்சாரங்கள் பயன்படுகிறது என்பதே முற்றிலும் உண்மை . முதலில் நடக்கும் திசை எந்த வீடுகளின் பலன்களை தருகிறது , அவை நன்மை செய்கிறதா ? தீமை செய்கிறதா ? அந்த வீடுகளுடன் ஏதாவது கோட்சார கிரகங்கள் சம்பந்த பெறுகிறதா ? அவை நன்மை செய்கிறதா ? தீமை செய்கிறதா ? என்பதை தெளிவாக கணிதம் செய்தால் மட்டுமே ஜாதக பலன் கேட்க வந்தவருக்கு சரியான பலனை சொல்ல முடியும் இல்லை எனில் , பொது பலனை சொல்லி குண்டு சட்டியில் குதிரை ஓட்ட வேண்டியதுதான் , இதனால் ஜோதிடரும் பாதிப்பை சந்திக்க வேண்டி வரும் , ஜோதிடம் கேட்க வந்தவரும் பாதிப்பை சந்திக்க வேண்டி வரும் என்பதே உண்மை , இதனால் ஜோதிடத்தின் மேல் மக்களுக்கு நிச்சயம் நம்பிக்கை குறைவே உண்டாகும் .


வாழ்க வளமுடன்  
ஜோதிடன் வர்ஷன்