ஏழரைசனி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஏழரைசனி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞாயிறு, 14 ஜனவரி, 2024
திங்கள், 20 ஆகஸ்ட், 2018
அதிர்ஷ்டகரமான யோக வாழ்க்கையை அள்ளித்தரும் சுய ஜாதக பாவக வலிமை!
பிறந்த தேதி,நேரம் மற்றும் இடம் ஆகிய குறிப்புகளின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படும் நமது சுய ஜாதகம் வலிமை பெற்று அமைவது நமது வாழ்க்கையில் சிறப்பான நன்மைகளையும், தன்னிறைவான பொருளாதார வசதியுடன் கூடிய முன்னேற்றங்களை தங்குதடையின்றி வாரி வழங்கும் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை, சுய ஜாதக வழியில் இருந்து வரும் யோக வாழ்க்கையை சுவீகரிக்க அடிப்படையில் நமது ஜாதகத்தில் லக்கினம் வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, மேலும் நமது ஜாதகத்தில் சுபயோகங்களை எந்த எந்த பாவக வழியில் இருந்து சுவீகரிக்க இயலும் என்பதில் தெளிவு பெற்று இருப்பது மிக மிக அவசியமாகும், இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !
லக்கினம் : விருச்சிகம்
ராசி : சிம்மம்
நட்ஷத்திரம் : பூரம் 2ம் பாதம்
மேற்கண்ட விருச்சிக லக்கின ஜாதகருக்கு லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் நல்ல வலிமையுடனே காணப்படுகிறது, பனிரெண்டு வீடுகளும் தாம் தொடர்பு பெரும் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளையே தரும் அமைப்பில் இருப்பது கவனிக்கத்தக்கது, சுய ஜாதகத்தில் பாவக தொடர்புகள் வழியில் இருந்து ஜாதகர் பெரும் நன்மைகளை பாவக வலிமையின் அடிப்படையில் ஆய்வு செய்வோம் அன்பர்களே !
1,4,7,9ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு உயிர் உடலாகிய லக்கின பாவக வழியில் இருந்து பரிபூர்ண அதிர்ஷ்டம் நிறைந்தவர் என்பதை உறுதி செய்கிறது மேலும் ஜாதகர் முற்போக்கு சிந்தனையுடன் எதையும் எதிர்கொண்டு வெற்றிபெறும் யோகம் பெற்றவர் என்பதையும் தெளிவாக்குகிறது, தான் வளரும் சூழ்நிலையில் நல்ல ஆரோக்கியம், சிறந்த மனவலிமை கொண்டுள்ளவராகவும், திறன்மிக்க செயல்களை சிறப்பாக செய்யும் ஆற்றல் பெற்றவராகவும் திகழ்வார், தெளிவான சிந்தனை, தெய்வீக அனுக்கிரகம் போன்றவற்றின் மூலம் வாழ்க்கையில் வியக்கத்தக்க நன்மைகளை அனுபவிக்கும் தன்மை பெற்றவர், நோய் எதிர்ப்புத்திறனுடன் வலிமை மிக்க உடல் அமைப்பை பெற்றவர் என்பதை உறுதி செய்வதுடன், ஜாதகருக்கு அறிவார்ந்த முயற்சிகள் வழியில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்கது, ஜாதகரின் லக்கினம் லாப ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கான அதிர்ஷ்ட வாய்ப்புகளை வாழ்நாள் முழுவதும் வாரி வழங்கும் என்பதுடன் நீடித்த அதிர்ஷ்டம் பெற்றவர் என்பது உறுதியாகிறது.
4ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நிறைவான மனம், நல்ல குணம், நண்பர்கள் ஆதரவில் சுகபோக யோக வாழ்க்கையை சுவீகரிக்கும் தன்மையை தரும், ஜாதகரின் தாய் வழியில் இருந்து வரும் சுபயோகங்களை பரிபூர்ணமாக பெரும் தன்மையை தரும், தாய் வழி சொத்துக்கள் கிடைக்கும், அனைத்திலும் வெற்றியை தரும், மண் மனை வண்டி வாகன யோகம் உண்டாகும், தனது சுய உழைப்பில் மேற்கண்டவற்றை சுவீகரிக்கும் யோகத்தை தரும், அரசியல் அல்லது அரசு சார்ந்த உதவிகள் உண்டு, பெரியமனிதர்களின் ஆதரவின் வழியில் குறுகியகால வெற்றிகளை பெறுவார், அந்நியர், வேற்று மதத்தினர் வழியில் இருந்து வரும் யோக வாழ்க்கை ஜாதகருக்கு தன்னிறைவான பொருளாதர முன்னேற்றத்தை வாரி வழங்கும், எளிதான வெற்றிகள், உடல்நலம் சார்ந்த இன்னல்களில் இருந்து விரைவில் குணம் பெரும் தன்மையை தரும், பொருத்தன்மையான நடவடிக்கை ஜாதகருக்கு மிகப்பெரிய அந்தஸ்த்தை வாரி வழங்கும்.
7ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு, யோகம் மற்றும் அதிர்ஷ்டமிக்க வாழ்க்கை துணையை பெறுவார் என்பதுடன், திருமணத்திற்கு பிறகான வளர்ச்சி ஜாதகருக்கு மிகவும் அபரிவிதமானதாக அமையும், ஜாதகரின் லாப ஸ்தானம் பெரும் பகுதி கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் வீடான துலாம் ராசியில் 21 பாகைகளை கொண்டு இருப்பது ஜாதகருக்கான வாழ்க்கை துணை வெளியூர் அல்லது வெளிநாட்டில் இருந்து வருவார் என்பதை குறிப்பதுடன் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றங்களை வெளியூர் அல்லது வெளிநாடுகளில் இருந்து தனது சுய அறிவு திறன் கொண்டு சுவீகரிக்கும் வல்லமையை தரும் என்பதை ஜாதகர் தனது கருத்தில் நிறுத்துவது அவசியமாகிறது, மேலும் ஜாதகர் திருமணம் செய்வதை தாமதம் செய்வது ஜாதகருக்கான வெற்றி வாய்ப்புகளை வெகுவாக குறைக்கும், சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகருக்கான யோக வாழ்க்கையை தனது வாழ்க்கை துணை, நண்பர்கள், கூட்டாளிகள், கூட்டு தொழில் மற்றும் வெளியூர் வெளிநாடுகளில் இருந்து வாரி வழங்கும்.
9ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் தெய்வீக அனுக்கிரகமும், ஆன்மீக பெரியோர்களின் சந்திப்பின் வழியில் இருந்து யோக வாழ்க்கையையும் பெறுவார், பல அறிய புனித திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகத்தை தரும், எதிர்பாராத ஆன்மீக பெரியோர்களின் தரிசனம் ஜாதகரின் வாழ்க்கையில் சிற்பபு மிக்க வெற்றிகளை வாரி வழங்கும், தனது அறிவு திறன் மூலம் சகல இன்னல்களில் இருந்தும் மீண்டு வரும் யோகத்தை தரும், பயணங்களில் வெற்றியும், வெளிநாட்டில் கல்வி அதன் வழியில் இருந்து வரும் ராஜயோக வாழ்க்கை என்ற விதத்தில் சுபயோகங்களை வாரி வழங்கும், ஜாதகரின் ஆன்ம பலமும், தெய்வீக தன்மையும் ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும், எளிதில் அனைத்தையும் பெரும் தன்மை உண்டு.
2ம் வீடு குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 2ம் பாவக வழியில் இருந்து அளவற்ற செல்வசேர்க்கை, இனிமையான பேச்சு திறன், வாக்கு வன்மை, இனிமையான இல்லற வாழ்க்கை, சிறந்த உணவு மற்றும் விருந்து அனுபவிக்கும் யோகம், சேமிப்பு திறன், செல்லும் இடங்களில் இருந்துவரும் சிறப்பான வரவேற்பு, குடும்பத்தில் ஒற்றுமை , அனைவரையும் அனுசரித்து செல்லும் வல்லமை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை என்ற வகையில் சுபயோகங்களை வாரி வழங்கும்.
3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் காரியங்களில் வெற்றி, லட்சியம் நிறைவேறும் தன்மை, செல்வசெழிப்பு, எதிரிகள் எதிர்ப்புகளை வெற்றிகொள்ளும் தன்மை, நல்ல மனநிலை, எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வல்லமை, உண்மை பேசுதல், சத்தியத்தை மதித்தல், சாகச ஆர்வம், அதீத பயனவிருப்பம், கல்வியில் ஆர்வம், விளையாட்டில் ஆர்வம் கலைத்துறையில் வெற்றி, ஆய்வு செய்வதில் வெற்றி, தன்னம்பிக்கை மனோதிடம், புதிய சூழ்நிலைகளில் விருப்பம், எஜென்சி துறையில் அபரிவித வளர்ச்சி மற்றும் தன சேர்க்கை என்ற வகையில் சிறப்புகளை தரும்.
5ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு கலைகளில் தேர்ச்சியை தரும், தெய்வீக அனுகிரகமும் உண்டாகும், மிகசிறந்த புத்திசாலித்தனமும், சமயோசித அறிவுத்திறனையும் தரும் , குல தெய்வ ஆசியின் மூலம் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் பெற்று வாழும் யோகத்தை தரும், சிறந்த தீர்வுகளை காணும் அறிவு திறனும், சரியான வழியை பரிந்துரைக்கும் வல்லமையை தரும், கல்வியில் ஆராய்ச்சியில் வெற்றியை தரும், அனைவராலும் நன்மைகளை பெறுவதுடன் நற்ப்பெயரும் உண்டாகும், தெளிவான சிந்தனை, சான்றோர் ஆதரவு ஜாதகரின் வாழ்க்கையில் சுபயோகங்களை வாரி வழங்கும், சிறந்த வாதத்திறமை உண்டாகும், குழந்தைகளுடன் இணக்கம், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி, தன்னிறைவான பொருளாதார முன்னேற்றங்களை பெரும் அமைப்பை தரும்.
8,11ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 8ம் பாவக வழியில் இருந்து திடீர் விபத்து, பொருள் இழப்பு, உடல் நல பாதிப்பு, மருத்துவ செலவினங்கள், எதிர்பாராத முன்னேற்ற தடைகள், காதல் தோல்வி, எதிர்பாலின அமைப்பினரால் வரும் பாதிப்பு என்ற வகையில் இன்னல்களை தரும், மனம் ஒருநிலை படுவது ஜாதகரின் வாழ்க்கையில் சகல நன்மைகளுக்கும் நல்ல ஆரம்பத்தை தரும்.
11ம் பாவக வழியில் இருந்து மண் மனை வண்டி வாகன யோகத்துடன் நவீன கருவிகளை பயன்படுத்தும் யோகம், அதீத வசதி வாய்ப்புகளை அனுபவிக்கும் தன்மை, புதிய வண்டி வாகனங்கள், அதிநவீன வசதி வாய்ப்புகள், சொகுசு வாழ்க்கை என்ற வகையில் சுபயோகங்களை வாரி வழங்கும், ஜாதகரின் நல்ல குணம் அனைவராலும் பாராட்டப்படும்.
10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது உத்யோகம், வியாபாரம் தொழில் முதலியவற்றில் அபரிவித வளர்ச்சியை வாரி வழங்கும், கவுரவம் குறையாத யோக வாழ்க்கையை தரும், கம்பீரமான தொழில் வாய்ப்புகள், தீர்க்கமான முடிவுகளை மேற்கொள்ளும் தைரியம், சிறந்த நிர்வாக வல்லமை, திட்டமிட்டு செயலாற்றி வெற்றிபெறும் யோகம், குறுகிய காலத்தில் அபரிவித வளர்ச்சி என்ற வகையில் சிறப்புக்களை வாரி வழங்கும், கூட்டு தொழில் வழியிலான நன்மைகளை ஜாதகர் பரிபூர்ணமாக பெறுவதுடன், எதிர்பாராத நன்மைகளையும் பெறுவார்.
6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 6ம் பாவக வழியில் இருந்து கடன் சார்ந்த இன்னல்கள் வெகுவான பாதிப்புகளை வாரி வழங்கும், கடன் மற்றும் வேலை ஆட்கள் மூலம் அதீத தொல்லைகளை வாரி வழங்கும், உடல் நலம் கடுமையாக பாதிக்க கூடும், எதிரி தொல்லை ஜாதகருக்கு சற்று அதிக அளவிலேயே இருக்கும், உடல் நலம் மனநலம் சார்ந்த பாதிப்புகளை ஜாதகர் அனுபவிக்கும் தன்மையை தரும்.
12ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நிறைய செலவினங்களை தரும், பங்கு சந்தை லாட்டரியில் நஷ்டத்தை தரும், அதிக அளவிலான முதலீடுகள் ஜாதகரின் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை தந்து தொழில் முடக்கத்தை வழங்க கூடும், உறவுகள் வழியில் இருந்து ஜாதகர் சில நேரங்களில் அதீத மனஉளைசலுக்கும், போராட்டத்திற்கும் ஆளாகும் சூழ்நிலையை தரும்.
நடைபெறும் செவ்வாய் திசை தரும் பலன்கள் : ( 28/04/2016 முதல் 29/04/2023 வரை )
நடைபெறும் செவ்வாய் திசை ஜாதகருக்கு 8,11ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களை தருவது, ஜாதகருக்கு ஆயுள் ஸ்தான வழியில் இருந்து திடீர் இழப்பு, மருத்துவ செலவினங்கள், பொருளாதார தடைகள், எடுக்கும் காரியங்கள் பின்னடைவை சந்தித்தல் எதிலும் திருப்தி இன்மை என்ற வகையில் இன்னல்களை தந்த போதிலும், லாப ஸ்தான வழியில் இருந்து சுபயோகங்களை வாரி வழங்கும், குறிப்பாக ஜாதகருக்கு எதிர்பாராத நல்ல வாய்ப்புகள் வந்து சேரும், தனது வாழ்க்கை முன்னேற்றத்திற்கான சரியான முடிவுகளை மேற்கொள்ளும் யோகம் உண்டாகும், புதிய சிந்தனை, புதிய யுக்திகளை கையாண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் யோகம் உண்டு, வெளியூர் வெளிநாடுகளை சார்ந்த அன்பர்களின் ஆதரவில் சுகபோக யோக வாழ்க்கையை பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் தேடி வரும், எதிர்வரும் சனி புத்தி ஜாதகருக்கு எடுக்கும் காரியங்களில் நல்லதொரு வெற்றிகளை வாரி வழங்கும், திருமண முயற்சி, வேலைவாய்ப்பிற்க்கான முயற்சி, தொழில் வழியிலான செயல்பாடுகளில் பரிபூர்ண நன்மைகளையும் யோகங்களையும் வாரி வழங்கும் என்பது ஜாதகருக்கான சிறப்பு நினைவூட்டல் ஆகும்.
எதிர்வரும் ராகு திசை தரும் பலன்கள் ( 29/04/2023 முதல் 29/04/2041 வரை )
எதிர்வரும் ராகு திசை ஜாதகருக்கு 1,7,9ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவக தொடர்பை பெற்றும், 11ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும் வாரி வழங்குகிறது என்பது கவனிக்கத்தக்கது, இருப்பின் இதே ராகு திசையில் ஜாதகருக்கு 6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவக தொடர்பை பெற்று அவயோக பலனையும், 8ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவக தொடர்பை பெற்று அவயோக பலனையும் தருவது 6,8,12ம் பாவக வழியிலான இன்னல்களை தவிர்க்க இயலாத சூழ்நிலையை தரும், ஜாதகர் வெளியூர் அல்லது வெளிநாட்டில் ஜீவனம் மேற்கொள்வது மேற்கண்ட பாதிப்பில் இருந்து விடுபட நல்லதோர் வாய்ப்பை நல்கும் என்பது கவனிக்கத்தக்கது, ஜாதகர் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து நன்மைகளையும், வலிமை அற்ற பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்கவும் தயார் நிலையில் இருப்பது நல்லது, ராகு திசை ஜாதகருக்கு பெரிய அளவிலான நன்மைகளையே தரும் என்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.
பரிகாரம் :
1) ஜாதகர் திருவக்கரை சென்று முறையாக குரு பகவானுக்கு வக்கிரக நிவர்த்தி செய்து நலம் பெறுவது அவசியமாகிறது, வக்கிரக நிவர்த்தி செய்வதன் மூலம் ஜாதகர் சுய ஜாதகத்தில் உள்ள யோகங்களை சுவீகரிக்கும் வல்லமையை பரிபூர்ணமாக தரும்.
2) தினமும் சூரிய நமஸ்காரம் செய்து வருவது ஜாதகரின் வாழ்க்கையில் சிறப்பு மிக்க முன்னேற்றங்களை வாரி வழங்கும், தொழில் வழியிலான நன்மைகள் அதிகரிக்கும்.
3) திருவெண்காடு சென்று முக்குணநீராடி சகல சௌபாக்கியங்களையும் பெறுக , சிவபெருமான் தரிசனம் சகல யோகங்களையும் சுவீகரிக்கும் வல்லமையை தரும்.
4) 48 நாட்கள் ஜாதகர் வீட்டில் விளக்கேற்றுவது சகல நன்மைகளையும் தரும்.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
சனி, 14 ஜூலை, 2018
ஜாதகஆலோசணை : அரசு வேலை அமையுமா ? தனியார் துறையில் பணியாற்றும் வாய்ப்பு உள்ளதா?
கேள்வி :
வணக்கம் எனக்கு இரு மகன்கள் உள்ளனர் ( இரட்டை குழந்தைகள் ) , இதில் இளையவர் சிறப்பு மிகுந்த இந்திய ஆட்சி பணியில் தேர்ச்சி பெற்று அரசு பணியில் உள்ளார், மூத்தவருக்கு இதுவரை யாதொரு வேலையும் அமையவில்லை, இருவருக்கும் பிறந்த நேரம் வெறும் 5நிமிடம் மட்டுமே வித்தியாசம், இருவரது ஜாதகமும் ஒன்றை போலவே உள்ளது, ஒரே லக்கினம், ஒரே நட்ஷத்திரம், ஒரே ராசி, நடைபெறும் திசாபுத்திகளும் ஏறக்குறைய ஒரே அமைப்பில் உள்ளது இருப்பினும் இருவருக்கும் முரண்பட்ட பலாபலன்கள் நடைபெற காரணம் என்ன ? மூத்தவருக்கு அரசு வேலை அமையுமா ? தனியார் துறையில் பணியாற்றும் வாய்ப்பு உள்ளதா? சற்று தெளிவுபடுத்த வேண்டுகின்றேன் .
பதில் :
இரட்டை குழந்தைகள் ஜாதகத்தில் பிறந்த நேரம் என்பது சில நிமிடங்கள் வித்தியாசம் இருப்பினும், ஜாதகத்தில் லக்கினம்,ராசி,நட்ஷத்திரம் மற்றும் திசாபுத்திகள் ஒரேமாதிரியாக இருப்பது வியப்பில்லை, ஆனால் சுய ஜாதக வலிமை என்பது ( லக்கினம் முதல் பனிரெண்டு வீடுகள் தொடர்பு பெரும் பாவக நிலை ) வெகுவான வித்தியாசங்களை கொண்டு இருக்கும், சில நிமிட இடைவெளியில் பிறந்த இரட்டையர் ஜாதகம் மேலோட்டமாக பார்க்கும் பொழுது ஒன்றைப்போலவே ஒன்று இருப்பினும், பாவக வலிமை என்பது ஒன்றைப்போல் ஒன்று இருக்காது என்பதை கருத்தில் கொள்வது நல்லது, தங்களது மகன்கள் இருவரும் இரட்டை பிறவிகள் என்பதாலும், 5 நிமிட வித்தயாசத்தில் பிறந்து இருப்பதாலும் இருவருக்கும் ஒரே மாதிரியான பலாபலன்கள் நடைமுறைக்கு வரும் என்று கருதுவது முற்றிலும் தவறான அணுகுமுறை அன்பரே ! இதை பற்றி இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.
அண்ணன் ஜாதகம் :
லக்கினம் : சிம்மம்
ராசி : மகரம்
நட்ஷத்திரம் : அவிட்டம் 1ம் பாதம்
ஜாதகருக்கு பாவக தொடர்புகள் :
1,5,7,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 1,5,7,11ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் என்பதால் ஜாதகத்தில் மேற்கண்ட பாவக தொடர்பு வலிமை மிக்கதாக எடுத்துக்கொள்ளலாம்.
4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 4ம் பாவக வழியில் இருந்து சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், வீடு நிலம், இடம், வண்டி வாகனம் போன்ற அமைப்பில் இருந்து சுகபோகங்களை வாரி வழங்கும் என்பதால் ஜாதகத்தில் மேற்கண்ட பாவக தொடர்பையும் வலிமை மிக்கதாக எடுத்துக்கொள்ளலாம்.
2,6,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 2,6,10,12ம் பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களை தரும் மேலும் ஜாதகரின் 12ம் பாவகம் கடக ராசியில் 9 பாகைகளையும், அரசு துறையை குறிக்கும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் ராசியான சிம்மத்தில் 21 பாகைகளையும் கொண்டு வலுவிழந்து நிற்பது ஜாதகருக்கான அரசுத்துறை பணி என்ற விஷயத்தை "கானல்நீராக" மாற்றிவிடும் என்பதால் ஜாதகருக்கு மேற்கண்ட பாவக தொடர்புகள் ஜாதகத்தில் வலிமை அற்று இருப்பதாக எடுத்துக்கொள்ளலாம்.
3,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர் 3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் முயற்சிகளில் படுதோல்வியையும், வீரியமிக்க செயல்திறன் அற்றவர் என்பதையும் தெளிவுபடுத்துகிறது, 9ம் பாவக வழியில் இருந்து உயர் கல்வி மற்றும் ஆய்வு படிப்பு போன்றவற்றில் தேர்ச்சி பெற வலிமையற்றவர் என்பதை உறுதி செய்கிறது, ஜாதகர் வீண் கற்பனையில் உலகில் சஞ்சரிக்கும் தன்மை பெற்றவர் என்பதையும் அறுதியிட்டு சொல்கிறது, மேலும் சுய ஜாதகத்தில் 3,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 200% விகித இன்னல்களை தரும் என்பதை கருத்தில் கொள்வது நல்லது, எனவே ஜாதகர் இந்தியாவின் உயரிய படிப்பான இந்திய ஆட்ச்சிப்பணிக்கு படிப்பது என்பது " எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போகிறார் " என்பதற்கான நிலையை தந்துவிடும் என்பதே சுய ஜாதகத்தில் உள்ள உண்மை நிலை.
8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு பூர்ண ஆயுளை தந்த போதிலும், திடீர் இழப்புகளையும், ஏமாற்றங்களையும் தவிர்க்க இயலாது, தொடர் தோல்விகளை தரக்கூடும், நிம்மதியின்மை என்பது ஜாதகரின் வாழ்க்கையை வெகுவாக பாதிக்கும்.
மேற்கண்ட ஜாதகத்தில் 1,4,5,7,11ம் வீடுகளை தவிர மற்ற 7வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது, குறிப்பாக 3,9ம் வீடுகள் பாதக ஸ்தான தொடர்பை பெறுவது ஜாதகருக்கு மிகுந்த இன்னல்களை சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து வாரி வழங்கும்.
நடைபெறும் குரு திசையில் சனி புத்தி 5ம் பாவக வழியில் இருந்து நன்மையை தந்த போதிலும், தேர்வுக்கான முயற்சி செய்த நேரத்தில் ஜாதகருக்கு பாதக ஸ்தான பலனை நடைமுறைக்கு கொண்டு வந்தது யாதொரு நன்மையையும் பெற இயலாத நிலையை தந்து விட்டது, மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் பாவக வழியிலான வலிமை இன்மை சரியான ஜீவனத்தை வழங்கவில்லை என்பதே உண்மை நிலை.
தம்பி ஜாதகம் :
லக்கினம் : சிம்மம்
ராசி : மகரம்
நட்ஷத்திரம் : அவிட்டம் 2 ம் பாதம்
1,3,5,7,9,11ம் வீடுகள் அனைத்தும் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 1,3,5,7,9,11ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும், குறிப்பாக 1ம் பாவக வழியில் இருந்து வளரும் சூழ்நிலையில் சிறப்பு, சுய கட்டுப்பாடு, நல்ல உடல் மன ஆரோக்கியம் என்ற வகையிலும், 3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, லட்சியங்களை அடைதல், சிறந்த தகவல் தொழில்நுட்ப அறிவு, வீரியமிக்க செயல்பாடுகள், வெற்றியை பெறுதல், தன்னம்பிக்கை என்ற வகையிலும், 5ம் பாவக வழியில் இருந்து சமயோசித அறிவு திறன், அதிபுத்திசாலித்தனம், வாய்ப்புக்களை பரிபூர்ணமாக பெற்று நலம் பெறுதல், இறை அருள் கருணையினால் அனைத்தும் எளிதாக கிடைத்தல், கற்ற கல்வி வழியிலான அபரிவித முன்னேற்றம் என்ற வகையிலும், 7ம் பாவக வழியில் இருந்து நல்ல நண்பர்கள், சிறந்த கூட்டாளிகள், அவர்கள் வழியிலான ஆதரவு, பொதுமக்கள் ஆதரவு, செல்லும் இடங்களில் கிடைக்கும் மதிப்பு மரியாதை, பரிபூர்ண நன்மைகளை சுவீகரிக்கும் வல்லமை என்ற வகையிலும், 9ம் பாவக வழியில் இருந்து மிகசிறந்த அறிவு திறன், உயர்கல்வி, ஆய்வுக்கல்வி, நிர்வாக படிப்பு போன்றவற்றில் அதீத தேர்ச்சி, கற்ற கல்வி வழியிலான நன்மைகளை ஜாதகர் சுவீகரிக்கும் வல்லமை, அரசு துறை ஆதரவு என்ற வகையிலும், 11ம் பாவக வழியில் இருந்து நீடித்த அதிர்ஷ்டம், முற்போக்கு சிந்தனை, மிக எளிதாக அனைத்தும் கிடைத்தல், தெய்வீக அனுக்கிரகம், அறிவார்ந்த முயற்சிகள் வழியிலான ராஜயோக பலன்கள் என்ற வகையிலும் சிறப்பான நன்மைகளை தரும் என்பது கவனிக்கத்தக்கது.
2ம் வீடு குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர் சிறந்த வாக்கு வன்மையும், பேச்சு திறனும் கொண்டவர் என்பதை தெளிவு படுத்துகிறது, தனம் சார்ந்த விஷயங்களில் தன்னிறைவு கொண்டவர் என்பதுடன் ஒழுக்கம் மற்றும் நேர்மையை கடைபிடிக்கும் வல்லமை பெற்றவர் என்பதுடன், நிறைவான பொருளாதர முன்னேற்றம் மற்றும் இனிமையான குடும்ப வாழ்க்கையை பெற்று மகிழ்ச்சியுடன் இல்வாழ்க்கையை நடத்த தகுதி கொண்டவர் என்பதை உறுதிப்படுத்துகிறது.
4,8,10,12ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 4ம் பாவக வழியில் இருந்து சொத்து சுக சேர்க்கை, வண்டி வாகன யோகம், நல்ல குணம், சுய உழைப்பில் வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுபவர் என்பதையும், 8ம் பாவக வழியில் இருந்து திடீர் அதிர்ஷ்டம், அந்தஸ்த்து கவுரவம் போன்றவற்றை விரைவாக பெறுதல், சகல வசதிமிக்க உத்தியோகம், பதவியில் திடீர் உயர்வு என்ற வகையிலும், 10ம் பாவக வழியில் இருந்து சிறந்த உத்தியோகம், வியாபார முன்னேற்றம், செய்யும் தொழில் வேலை முதலியவற்றில் அபரிவித வளர்ச்சி, வெற்றிகரமான யோக வாழ்க்கை, கம்பீரமான பேச்சு, தீர்க்கமான வாத திறன் என்ற வகையிலும், 12ம் பாவக வழியில் இருந்து எதிரிகளின் சூழ்ச்சியே ஜாதகருக்கு சாதகமாக மாறும், அரசு பதவியில் திடீர் உயர்வு, தொழில் மற்றும் பணியில் திடீர் அதிர்ஷ்டம், ரகசிய ஏஜென்ட் என்ற வகையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும்.
6ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது பங்கு கொள்ளும் அனைத்து தேர்விலும் தேர்ச்சியை தரும், வழக்குகளில் வெற்றி என்றவகையில் நன்மையை தந்த போதிலும், உடல் நலம் சார்ந்த பாதிப்புகள் சில நேரங்களில் தொந்ததரவை தரக்கூடும் என்பது மட்டும் சற்று கவனிக்க வேண்டிய விஷயமாகும்.
இந்த ஜாதகருக்கு லக்கினம் முதல் பனிரெண்டு வீடுகளும் தாம் தொடர்பு பெரும் பாவக வழியில் இருந்து சகல யோகங்களையும் தருவது கவனிக்கத்தக்கது, மேலும் நடைபெறும் குரு திசை ஜாதகருக்கு 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவக தொடர்பை பெற்று ஜாதகருக்கான அரசு வேலையை உறுதி செய்தது, குரு திசையில் சனி புத்தி 5ம் பாவக வழியில் இருந்து கற்ற கல்வி வழியிலான அதிர்ஷ்டத்தை பரிபூர்ணமாக தந்தது, ஜாதகருக்கான ஜீவன மேன்மையை மேலும் அதிர்ஷ்டகரமானதாக மாற்றியது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.
இருவரது ஜாதகத்திலும் 5நிமிட வித்தியாசம் என்ற போதிலும் பாவக வழியிலான தொடர்புகள் வெகுவாக மாறியிருப்பது கவனிக்கத்தக்கது, இது நிமிடத்திற்கு நிமிடம் மாற்றம் பெரும் என்பதுடன், இருவரும் சுவீகரிக்கும் பலாபலன்கள் என்பது முற்றிலும் வேறுபடும் என்பதே உண்மை நிலை, இரட்டை பிறவிதானே இருவருக்கும் ஒரே பலாபலன்கள் நடைபெறும் என்று கருதுவது சுய ஜாதக கணிதம் பற்றிய நுணுக்கம் அறியாமல் வைக்கப்படும் வாதமாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது.
தங்களின் கேள்விக்கான பதில்
தங்களின் மூத்த மகனுக்கு அரசு பணி கிடைக்க வாய்ப்பு என்பது சற்று குறைவு, ஜாதகர் சிறு வியாபாரம் அல்லது ஓர் அடிமை தொழிலை தேர்வு செய்து அதில் வெற்றி பெறலாம், மற்றவர்கள் விஷயத்தில் தலையீடு செய்வது ஜாதகருக்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்தும், தனது முயற்சியை கைவிடாமல் போராடி நலம் பெறுவது அவசியமாகிறது.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
பதில் :
இரட்டை குழந்தைகள் ஜாதகத்தில் பிறந்த நேரம் என்பது சில நிமிடங்கள் வித்தியாசம் இருப்பினும், ஜாதகத்தில் லக்கினம்,ராசி,நட்ஷத்திரம் மற்றும் திசாபுத்திகள் ஒரேமாதிரியாக இருப்பது வியப்பில்லை, ஆனால் சுய ஜாதக வலிமை என்பது ( லக்கினம் முதல் பனிரெண்டு வீடுகள் தொடர்பு பெரும் பாவக நிலை ) வெகுவான வித்தியாசங்களை கொண்டு இருக்கும், சில நிமிட இடைவெளியில் பிறந்த இரட்டையர் ஜாதகம் மேலோட்டமாக பார்க்கும் பொழுது ஒன்றைப்போலவே ஒன்று இருப்பினும், பாவக வலிமை என்பது ஒன்றைப்போல் ஒன்று இருக்காது என்பதை கருத்தில் கொள்வது நல்லது, தங்களது மகன்கள் இருவரும் இரட்டை பிறவிகள் என்பதாலும், 5 நிமிட வித்தயாசத்தில் பிறந்து இருப்பதாலும் இருவருக்கும் ஒரே மாதிரியான பலாபலன்கள் நடைமுறைக்கு வரும் என்று கருதுவது முற்றிலும் தவறான அணுகுமுறை அன்பரே ! இதை பற்றி இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.
அண்ணன் ஜாதகம் :
லக்கினம் : சிம்மம்
ராசி : மகரம்
நட்ஷத்திரம் : அவிட்டம் 1ம் பாதம்
ஜாதகருக்கு பாவக தொடர்புகள் :
1,5,7,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 1,5,7,11ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் என்பதால் ஜாதகத்தில் மேற்கண்ட பாவக தொடர்பு வலிமை மிக்கதாக எடுத்துக்கொள்ளலாம்.
4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 4ம் பாவக வழியில் இருந்து சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், வீடு நிலம், இடம், வண்டி வாகனம் போன்ற அமைப்பில் இருந்து சுகபோகங்களை வாரி வழங்கும் என்பதால் ஜாதகத்தில் மேற்கண்ட பாவக தொடர்பையும் வலிமை மிக்கதாக எடுத்துக்கொள்ளலாம்.
2,6,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 2,6,10,12ம் பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களை தரும் மேலும் ஜாதகரின் 12ம் பாவகம் கடக ராசியில் 9 பாகைகளையும், அரசு துறையை குறிக்கும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் ராசியான சிம்மத்தில் 21 பாகைகளையும் கொண்டு வலுவிழந்து நிற்பது ஜாதகருக்கான அரசுத்துறை பணி என்ற விஷயத்தை "கானல்நீராக" மாற்றிவிடும் என்பதால் ஜாதகருக்கு மேற்கண்ட பாவக தொடர்புகள் ஜாதகத்தில் வலிமை அற்று இருப்பதாக எடுத்துக்கொள்ளலாம்.
3,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர் 3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் முயற்சிகளில் படுதோல்வியையும், வீரியமிக்க செயல்திறன் அற்றவர் என்பதையும் தெளிவுபடுத்துகிறது, 9ம் பாவக வழியில் இருந்து உயர் கல்வி மற்றும் ஆய்வு படிப்பு போன்றவற்றில் தேர்ச்சி பெற வலிமையற்றவர் என்பதை உறுதி செய்கிறது, ஜாதகர் வீண் கற்பனையில் உலகில் சஞ்சரிக்கும் தன்மை பெற்றவர் என்பதையும் அறுதியிட்டு சொல்கிறது, மேலும் சுய ஜாதகத்தில் 3,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 200% விகித இன்னல்களை தரும் என்பதை கருத்தில் கொள்வது நல்லது, எனவே ஜாதகர் இந்தியாவின் உயரிய படிப்பான இந்திய ஆட்ச்சிப்பணிக்கு படிப்பது என்பது " எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போகிறார் " என்பதற்கான நிலையை தந்துவிடும் என்பதே சுய ஜாதகத்தில் உள்ள உண்மை நிலை.
8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு பூர்ண ஆயுளை தந்த போதிலும், திடீர் இழப்புகளையும், ஏமாற்றங்களையும் தவிர்க்க இயலாது, தொடர் தோல்விகளை தரக்கூடும், நிம்மதியின்மை என்பது ஜாதகரின் வாழ்க்கையை வெகுவாக பாதிக்கும்.
மேற்கண்ட ஜாதகத்தில் 1,4,5,7,11ம் வீடுகளை தவிர மற்ற 7வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது, குறிப்பாக 3,9ம் வீடுகள் பாதக ஸ்தான தொடர்பை பெறுவது ஜாதகருக்கு மிகுந்த இன்னல்களை சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து வாரி வழங்கும்.
நடைபெறும் குரு திசையில் சனி புத்தி 5ம் பாவக வழியில் இருந்து நன்மையை தந்த போதிலும், தேர்வுக்கான முயற்சி செய்த நேரத்தில் ஜாதகருக்கு பாதக ஸ்தான பலனை நடைமுறைக்கு கொண்டு வந்தது யாதொரு நன்மையையும் பெற இயலாத நிலையை தந்து விட்டது, மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் பாவக வழியிலான வலிமை இன்மை சரியான ஜீவனத்தை வழங்கவில்லை என்பதே உண்மை நிலை.
தம்பி ஜாதகம் :
லக்கினம் : சிம்மம்
ராசி : மகரம்
நட்ஷத்திரம் : அவிட்டம் 2 ம் பாதம்
1,3,5,7,9,11ம் வீடுகள் அனைத்தும் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 1,3,5,7,9,11ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும், குறிப்பாக 1ம் பாவக வழியில் இருந்து வளரும் சூழ்நிலையில் சிறப்பு, சுய கட்டுப்பாடு, நல்ல உடல் மன ஆரோக்கியம் என்ற வகையிலும், 3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, லட்சியங்களை அடைதல், சிறந்த தகவல் தொழில்நுட்ப அறிவு, வீரியமிக்க செயல்பாடுகள், வெற்றியை பெறுதல், தன்னம்பிக்கை என்ற வகையிலும், 5ம் பாவக வழியில் இருந்து சமயோசித அறிவு திறன், அதிபுத்திசாலித்தனம், வாய்ப்புக்களை பரிபூர்ணமாக பெற்று நலம் பெறுதல், இறை அருள் கருணையினால் அனைத்தும் எளிதாக கிடைத்தல், கற்ற கல்வி வழியிலான அபரிவித முன்னேற்றம் என்ற வகையிலும், 7ம் பாவக வழியில் இருந்து நல்ல நண்பர்கள், சிறந்த கூட்டாளிகள், அவர்கள் வழியிலான ஆதரவு, பொதுமக்கள் ஆதரவு, செல்லும் இடங்களில் கிடைக்கும் மதிப்பு மரியாதை, பரிபூர்ண நன்மைகளை சுவீகரிக்கும் வல்லமை என்ற வகையிலும், 9ம் பாவக வழியில் இருந்து மிகசிறந்த அறிவு திறன், உயர்கல்வி, ஆய்வுக்கல்வி, நிர்வாக படிப்பு போன்றவற்றில் அதீத தேர்ச்சி, கற்ற கல்வி வழியிலான நன்மைகளை ஜாதகர் சுவீகரிக்கும் வல்லமை, அரசு துறை ஆதரவு என்ற வகையிலும், 11ம் பாவக வழியில் இருந்து நீடித்த அதிர்ஷ்டம், முற்போக்கு சிந்தனை, மிக எளிதாக அனைத்தும் கிடைத்தல், தெய்வீக அனுக்கிரகம், அறிவார்ந்த முயற்சிகள் வழியிலான ராஜயோக பலன்கள் என்ற வகையிலும் சிறப்பான நன்மைகளை தரும் என்பது கவனிக்கத்தக்கது.
2ம் வீடு குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர் சிறந்த வாக்கு வன்மையும், பேச்சு திறனும் கொண்டவர் என்பதை தெளிவு படுத்துகிறது, தனம் சார்ந்த விஷயங்களில் தன்னிறைவு கொண்டவர் என்பதுடன் ஒழுக்கம் மற்றும் நேர்மையை கடைபிடிக்கும் வல்லமை பெற்றவர் என்பதுடன், நிறைவான பொருளாதர முன்னேற்றம் மற்றும் இனிமையான குடும்ப வாழ்க்கையை பெற்று மகிழ்ச்சியுடன் இல்வாழ்க்கையை நடத்த தகுதி கொண்டவர் என்பதை உறுதிப்படுத்துகிறது.
4,8,10,12ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 4ம் பாவக வழியில் இருந்து சொத்து சுக சேர்க்கை, வண்டி வாகன யோகம், நல்ல குணம், சுய உழைப்பில் வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுபவர் என்பதையும், 8ம் பாவக வழியில் இருந்து திடீர் அதிர்ஷ்டம், அந்தஸ்த்து கவுரவம் போன்றவற்றை விரைவாக பெறுதல், சகல வசதிமிக்க உத்தியோகம், பதவியில் திடீர் உயர்வு என்ற வகையிலும், 10ம் பாவக வழியில் இருந்து சிறந்த உத்தியோகம், வியாபார முன்னேற்றம், செய்யும் தொழில் வேலை முதலியவற்றில் அபரிவித வளர்ச்சி, வெற்றிகரமான யோக வாழ்க்கை, கம்பீரமான பேச்சு, தீர்க்கமான வாத திறன் என்ற வகையிலும், 12ம் பாவக வழியில் இருந்து எதிரிகளின் சூழ்ச்சியே ஜாதகருக்கு சாதகமாக மாறும், அரசு பதவியில் திடீர் உயர்வு, தொழில் மற்றும் பணியில் திடீர் அதிர்ஷ்டம், ரகசிய ஏஜென்ட் என்ற வகையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும்.
6ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது பங்கு கொள்ளும் அனைத்து தேர்விலும் தேர்ச்சியை தரும், வழக்குகளில் வெற்றி என்றவகையில் நன்மையை தந்த போதிலும், உடல் நலம் சார்ந்த பாதிப்புகள் சில நேரங்களில் தொந்ததரவை தரக்கூடும் என்பது மட்டும் சற்று கவனிக்க வேண்டிய விஷயமாகும்.
இந்த ஜாதகருக்கு லக்கினம் முதல் பனிரெண்டு வீடுகளும் தாம் தொடர்பு பெரும் பாவக வழியில் இருந்து சகல யோகங்களையும் தருவது கவனிக்கத்தக்கது, மேலும் நடைபெறும் குரு திசை ஜாதகருக்கு 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவக தொடர்பை பெற்று ஜாதகருக்கான அரசு வேலையை உறுதி செய்தது, குரு திசையில் சனி புத்தி 5ம் பாவக வழியில் இருந்து கற்ற கல்வி வழியிலான அதிர்ஷ்டத்தை பரிபூர்ணமாக தந்தது, ஜாதகருக்கான ஜீவன மேன்மையை மேலும் அதிர்ஷ்டகரமானதாக மாற்றியது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.
இருவரது ஜாதகத்திலும் 5நிமிட வித்தியாசம் என்ற போதிலும் பாவக வழியிலான தொடர்புகள் வெகுவாக மாறியிருப்பது கவனிக்கத்தக்கது, இது நிமிடத்திற்கு நிமிடம் மாற்றம் பெரும் என்பதுடன், இருவரும் சுவீகரிக்கும் பலாபலன்கள் என்பது முற்றிலும் வேறுபடும் என்பதே உண்மை நிலை, இரட்டை பிறவிதானே இருவருக்கும் ஒரே பலாபலன்கள் நடைபெறும் என்று கருதுவது சுய ஜாதக கணிதம் பற்றிய நுணுக்கம் அறியாமல் வைக்கப்படும் வாதமாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது.
தங்களின் கேள்விக்கான பதில்
தங்களின் மூத்த மகனுக்கு அரசு பணி கிடைக்க வாய்ப்பு என்பது சற்று குறைவு, ஜாதகர் சிறு வியாபாரம் அல்லது ஓர் அடிமை தொழிலை தேர்வு செய்து அதில் வெற்றி பெறலாம், மற்றவர்கள் விஷயத்தில் தலையீடு செய்வது ஜாதகருக்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்தும், தனது முயற்சியை கைவிடாமல் போராடி நலம் பெறுவது அவசியமாகிறது.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
சனி, 23 டிசம்பர், 2017
சனி பெயர்ச்சி பலன்கள் ( 2017 - 2020 ) லக்கினம் மீனம்!
சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் என்று வர்ணிக்கப்படும், இலக்கின பாவகாத்திற்க்கே முதல் உரிமை உண்டு, மேலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதகத்திற்கு பலன் காணும் பொழுது துல்லியமான பலாபலன்களை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக தெளிவாக கூற இயலும், எனவே நவ கிரகங்களின் பெயர்ச்சியை சுய ஜாதக பாவக வலிமையின் அடிப்படையில் கணிதம் செய்து பார்க்கும் பொழுது சம்பந்தம் பட்ட ஜாதகருக்கு நவ கிரகங்களின் பெயர்ச்சியினால் வரும் நன்மை தீமை பலாபலன்களை பற்றி துல்லியமாக கணிதம் செய்ய இயலும், ( 2017 முதல் 2020 வரை ) கால புருஷ தத்துவத்திற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான், தனது சஞ்சார நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு தரும் யோக அவயோக நிகழ்வுகளை பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!
மீனம் :
கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 12ம் ராசியான மீன ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, இனிவரும் இரண்டரை வருடம் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்தில் சனி பகவான் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார், சஞ்சாரம் செய்யும் இரண்டறை வருட காலத்திற்கு சஞ்சார நிலையில் இருந்தும், 6,7,10 என்ற திருஷ்டி நிலையில் இருந்தும், மீன லக்கின அன்பர்களுக்கு கோட்சார ரீதியாக வழங்கும் பலாபலன்களை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், செயல்படும் காரியங்களில் பரிபூர்ணத்துவத்தை அடைய விரும்பும் மீன லக்கின அன்பர்களுக்கு இதுவரை பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்து வந்த சனி பகவான் தங்களுக்கு ஆன்மிகம் சார்ந்த தடைகளையும், சமூகமதிப்பில் ஓர் சுணக்கத்தையும், தெளிவில்லாத மன நிலையையும் அதன் வழியிலான திருப்தியற்ற வாழ்க்கையையும் தந்து இருக்க கூடும், ஆனால் தற்போழுது ஜீவன ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் சனிபகவான் இனிவரும் இரண்டரை வருடம் தங்களுக்கு தான் அமர்ந்த பாவக வழியில் இருந்து ( ஜீவனம் ) சிறு சிறு அவப்பெயர் மற்றும் தடைகளை தந்த போதிலும் தனது வர்க்க கிரகங்களின் வீடுகளான ரிஷபம்,மிதுனம் மற்றும் கன்னியை வசீகரித்து மிகுந்த லாபத்தை தரும் அமைப்பாகும், ஜீவன ஸ்தானத்தில் அமர்ந்த சனி தங்களின் வேலைப்பளுவை அதிகரிக்கும், மேல் அதிகாரிகள் வழியில் இருந்து மனஉளைச்சலை தரும், செய்யும் தொழில் வழியில் தர்மத்தை கடைபிடிக்கவில்லை எனில் யாதொரு பாரபட்சமும் இன்றி கடுமையான இன்னல்களை தங்களுக்கு தரக்கூடும், தெய்வீக அனுக்கிரகம் குறையும், பெற்ற தந்தை வழியிலான இன்னல்கள் தங்களுக்கு சற்று சிரமத்தை தரக்கூடும், பணிபுரியும் இடத்தில் அனைவரிடமும் நட்பு பாராட்டுவது தங்களுக்கு சகல நலன்களையும் வாரி வழங்கும், திட்டமிடாமல் செய்யப்படும் காரியங்கள் தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய தோல்விகளை வாரி வழங்கிவிடும் என்பதை கருத்தில் கொள்க, மீன லக்கினத்தை சார்ந்த பெண்கள் தனது தாயின் வார்த்தைகளை மதித்து நடப்பது நல்லது இல்லை எனில் வீண் அவப்பெயரை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும் , எக்காரணத்தை கொண்டும் தனிமையில் பயணம் மேற்கொள்வது உகந்தது அல்ல மேலும், பாதுகாப்பான பயணம் தங்களுக்கு வரும் வீண் மருத்துவ செலவினங்களை குறைக்கும், பொது வாழ்க்கையில் உள்ள அன்பர்களுக்கு இது ஒரு சோதனைகாலமாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை, மற்றவர்களுக்கு உதவி செய்ய விரும்பினாலும் அவர்களது உண்மை தன்மையை பரிசோதித்து உதவுவது தங்களுக்கு மிகுந்த நன்மைகளை தரும், சனிபகவானின் தாக்கம் குறைய இறையருளின் ஆசியை பெறுவது ஒன்றே தீர்வாக அமையும்.
3ம் பாவகத்தை தனது 6ம் பார்வையினால் வசீகரிக்கும் சனி பகவான் தங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவார், தங்களின் புதிய முயற்சிகளுக்கு நல்ல வெற்றி வாய்ப்பு கிட்டும், சகோதரவழியிலானா உதவிகள் தேடிவரும், தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும், கமிஷன் தொழில்களில் உள்ள அன்பர்களுக்கு அபரிவிதமான வருமான கிடைக்கும், அறிவு சார்ந்த முயற்சிகளுக்கு எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும், தங்களின் வாக்கு வன்மை அதிகரிக்கும், பேச்சு திறன் மூலம் சகலவித நன்மைகளையும் பெறுவதற்கு யோகம் உண்டு, தனிப்பட்ட திறமைகளை பரிசோதித்து வெற்றிகாணும் நேரமிது என்பதனை மீன லக்கின அன்பர்கள் உணர்வது அவசியமாகிறது, மனபலம் அதிகரிக்கும் செயற்கரிய காரியங்களை சிறப்பாக செய்து வெற்றிகொள்ளும் நேரமாக இனிவரும் இரண்டரை வருடம் தங்களுக்கு அமையும், விளையாட்டு வீரர்களுக்கு அரசு கவுரவம் மற்றும் நன்மதிப்பு உண்டாகும், கலைத்துறையில் பிரகாசிக்கும் யோகம் உண்டு, செய்தி துறை மற்றும் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் உள்ள அன்பர்களுக்கு அபரிவிதமான வளர்ச்சியை பெற்று தரும், புதிய எதிர்காலம் தங்களின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் தர தயார் நிலையில் உள்ளது என்பதை கருத்தில் கொள்ளவும், வீர்ய ஸ்தானத்தின் மீதான சனிபகவானின் பார்வை தங்களுக்கு கைநிறைவான வருமான வாய்ப்பையும், தடைகளை உடைத்தெறிந்து தன்னிறைவான முன்னேற்றத்தை பெறுவதற்க்கான சந்தர்ப்பங்களையும் வாரி வழங்கும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது மீன இலக்கின அன்பர்களே!
" வாழ்த்துகள் "
4ம் பாவகத்தை தனது 7ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் தங்களுக்கு மிதம் மிஞ்சிய சொத்து சுக சேர்க்கையை வாரி வழங்குவார், தங்களின் அறிவுத்திறனும், நல்ல குணமும் எதிர்பாராத பொருளாதார அதிர்ஷ்டங்களை பெறுவதற்கான வாய்ப்புகளை நல்கும், தனது தாய் வழியிலான சொத்துக்கள் தேடிவரும் தெய்வீக அனுக்கிரகம் கூடும், அறிய திருத்தலங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் சந்தர்ப்பம் உண்டாகும், எதிர்ப்புகள் அனைத்தும் தங்களுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கும், சுகபோக வாழ்க்கைக்கு குறைவு இருக்காது , தங்களின் மனவிருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும், வெளியூர் வெளிநாடுகளில் இருந்துவரும் ஆதாயம் தங்களின் அடிப்படை முன்னேற்றத்திற்கு சரியான முதலீடாக அமையும், புதிய முயற்சிகளை மேற்கொண்டு நலம் பெறுங்கள், புதிய வீடு வண்டி வாகனம் வாங்க இதுவே சரியான தருணம், தடைபெற்ற காரியங்கள் யாவும் தன்னிறைவாக வெற்றி வாய்ப்புகளை வழங்கும் என்பதனால், அறிவில் விழிப்புணர்வுடன் இருந்து நன்மைகளை பெறுவது தங்களின் கடமையாகிறது, சனிபகவானின் சமசப்த பார்வை தங்களின் எதிர்காலத்தை மிகவும் சிறப்பு மிக்கதாக மாற்றும் வல்லமையுடன் திகழ்கிறது.
7ம் பாவகத்தை தனது 10ம் பார்வையால் வசீகரிக்கும் சனிபகவான் மீன லக்கின அன்பர்களுக்கு இல்லற வாழ்க்கையில் சுகபோகத்தை வாரி வழங்குவார், திருமண தடைகளை சந்தித்துக்கொண்டு இருந்த அன்பர்களுக்கு நல்லதோர் வாழ்க்கை துணை அமையும், வாழ்க்கை துணை வழியிலான நன்மைகளையும், ஆதரவையும் பரிபூர்ணமாக பெரும் யோகம் உண்டு, நல்ல நண்பர்கள் மற்றும் வெளிவட்டார பழக்க வழக்கங்கள் மூலம் தங்களின் வாழ்க்கை மிகவும் சுவாரஷ்யம் மிக்கதாக மாற்றப்படும், இதுவரை இருந்த சந்தேகங்கள் நீங்கி தங்களின் மனம் தெளிவடையும், எதிர்ப்புகள் யாவும் நட்பு பாராட்டும், விலகி சென்றவர்கள் தேடி வருவார்கள், தங்களின் ஆலோசனையின் பெயரில் பல காரியங்கள் வெற்றிகரமாக நடைபெறும், சமூக அந்தஸ்து உயரும், உடல் நலம் சார்ந்த முன்னேற்றமும் ஆரோக்கியமும் அதிகரிக்கும், பிணி அகலும், பொருளாதார வசதி வாய்ப்பை பெறுவதற்கான ஆயத்த பணிகளை இனிவரும் காலங்களில் தாங்கள் நடைமுறைப்படுத்தலாம், கூட்டு தொழில் வழியிலான நன்மைகள் தங்களை தேடி வரும், வண்டி வாகன துறையில் உள்ள அன்பர்களுக்கு ஏற்றமிகு லாபங்களை வாரி வழங்கும், வெளிநாடு வெளியூர் செல்லும் யோகமும், அதன் வழியிலான ஜீவன முன்னேற்றமும் சிறப்பாக தங்களை தேடிவரும், புதிய நபர்கள் மற்றும் வேற்று மதத்தினர் மூலம் சகல சௌபாக்கியமும் தங்களுக்கு உண்டாகும், எதிர்பாலின ஆதரவு தங்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக அமையும்.
குறிப்பு :
மீன லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 10,3,4,7ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 10,3,4,7ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் மீன லக்கின அன்பர்களுக்கு மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
சனி பகவான் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் காலங்கள் :
( 26/01/2017 முதல் 21/06/2017 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும்.
( 21/06/2017 முதல் 26.10.2017 ) வரை
சனி பகவான் மீண்டும் வக்கிரக கதியில் விருச்சிக ராசியிலும்.
( 26/10.2017 முதல் 24/01/2020 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும் சஞ்சாரம் செய்கின்றார்.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
சனி, 18 நவம்பர், 2017
தொழில் ரீதியாக தன்னிறைவான பொருளாதார முன்னேற்றம் தரும் திசாபுத்தி எது ?
கேள்வி :
தற்போழுது நடைபெறும் ராகு திசை தரும் பலாபலன்கள் என்ன ? அடுத்து வரும் குரு திசை தரும் பலன்கள் என்ன ? எனது ஜாதகத்திற்கு தொழில் ரீதியாக தன்னிறைவான பொருளாதார முன்னேற்றம் தரும் கிரகங்களின் திசாபுத்தி எவை என்பதை தெளிவுபடுத்த இயலுமா ?
லக்கினம் : மிதுனம்
ராசி : தனுசு
நட்ஷத்திரம் : பூராடம் 3ம் பாதம்
பதில் :
தங்களது சுய ஜாதக வலிமை என்பது மிகவும் அபரிவிதமானது என்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், ஏனெனில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களில் ஒரு பாவகம் கூட வலிமை இழந்து காணப்படவில்லை என்பது தங்களுக்கு இறைஅருள் வழங்கி உள்ள ஆசிர்வாதம் என்பதை தெளிவுபடுத்த " ஜோதிடதீபம் " கடமைப்பட்டுள்ளது, மேலும் தங்களின் ஜாதகத்தில் உள்ள பாவக தொடர்புகள் மிகவும் நேர்த்தியாகவும், சுபயோகங்கள் நிறைந்தததாகவும் உள்ளது, இனி தங்களின் கேள்விகளுக்கான பதில்களை தங்களின் சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு தெளிவுபடுத்துகிறோம்.
தற்போழுது நடைபெறும் ராகு திசை தரும் பலாபலன்கள் என்ன ?
நடைமுறையில் உள்ள திசா தரும் பலாபலன்கள் பற்றி நமக்கு தெளிவாக தெரிய வருவது நமது வாழ்க்கைக்கான திட்டமிடுதல்களையும், அதன் வழியிலான நன்மைகளையும் பெறுவதற்கு பேருதவியாக அமையும், எதிர்வரும் திசை தரும் பலாபலன்கள் பற்றிய தெளிவு நமது எதிர்கால வாழ்க்கைக்கான திட்டமிடுதல்களை மிக சிறப்பாக எடுத்துச்செல்ல உதவி புரியும், நமது ஜாதகத்தில் நடைமுறையில் உள்ள திசை சுய ஜாதகத்தில் எந்த பாவக பலன்களை ஏற்று நடத்துகிறது அந்த பாவக வழியில் இருந்து நன்மை தீமை பலன்களை சிறிதும் மாற்றம் இன்றி தரும், இதை அடிப்படையாக கொண்டு பார்க்கும் பொழுது தங்களின் ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் ராகு திசை ( 05/04/2002 முதல் 05/04/2020 வரை ) தங்களுக்கு 5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை பெற்ற பூர்வபுண்ணிய ஸ்தான பலனை முழு அளவில் வாரி வழங்கிக்கொண்டு இருக்கின்றது, இது தங்களுக்கு சமயோசித அறிவு திறன், கற்ற கல்வி வழியிலான முன்னேற்றம், குலதெய்வத்தின் அருளாசி மூலம் சகல வித சம்பத்துக்களையும் பெரும் யோகம், தெய்வீக அனுக்கிரகம், நல்ல குழந்தை பாக்கியம் மற்றும் சிறந்த வாரிசு யோகம், குழந்தைகள் வழியிலான சுபயோகங்கள், முன் பின் அறிமுகம் இல்லாத அன்பர்கள் வழியிலான உதவிகள், தொழில் துறையில் நல்ல ஞானம், அதன் வழியில் இருந்து பெரும் பொருளாதார வளர்ச்சி, புதிய சிந்தனை மற்றும் புதிய திட்டமிடுதல்கள், மனதில் நினைத்த விஷயங்களை சுவீகரிக்கும் யோகம் என்றவகையில் சிறப்பான யோக வாழ்க்கையை வாரி வழங்கும், மேலும் தங்களின் ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் எனும் 5ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியாகவும் சர காற்று தத்துவ அமைப்பிலும் வலிமை பெற்று இருப்பது, தங்களின் வெளிவட்டார பழக்க வழக்கத்தை சிறப்பாக அமைத்து தரும், நல்ல மக்கள் செல்வாக்கு, நல்ல நண்பர்கள் சேர்க்கை, பிரபல்ய யோகம், வெளிநாடுகளில் தங்களின் அறிவு திறன் கொண்டு ஜீவனம் பெரும் அமைப்பு, வாழ்க்கை துணை வழியிலான அறிவார்ந்த உதவிகள், அரசியல் செல்வாக்கு , கற்ற கல்வி வழியிலான முன்னேற்றம் என்ற வகையில் சிறப்புகளை வாரி வழங்கிக்கொண்டு இருக்கின்றது என்பது தங்களுக்கு மிகவும் சாதகமான அம்சமாகும்.
ராகு திசை வலிமை பெற்ற 5ம் பாவக பலனை ஏற்று நடத்துவதும், 5ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு துலாம் ராசியில் அமைவதும் தங்களின் வாழ்க்கையில் சகல விதமான செல்வாக்கினையும் தங்களின் அறிவு சார்ந்த அமைப்பிலும், வாழ்க்கை துணை, நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் வெளியூர் வெளிநாட்டில் இருந்து அபரிவிதமாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை, ராகு திசை தங்களுக்கு சிறப்பான யோக பலன்களை வழங்கி கொண்டு இருப்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், ராகு திசையில் தற்போழுது நடைபெறும் சந்திரன் புத்தி 8ம் பாவக வழியில் இருந்து மிகுந்த அதிர்ஷ்டங்களை வாரி வழங்கிக்கொண்டு இருப்பது தங்களுக்கு மேலும் நன்மைகளை தரும் அமைப்பாகும், 11ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 1ம் ராசியாக அமைவது தங்களின் அதிர்ஷ்டகரமான யோக வாழ்க்கையை உறுதி செய்யும், திடீர் அதிர்ஷ்டம் தங்களின் வாழ்க்கையில் மிக பெரிய மாற்றங்களை வாரி வழங்கும்.
அடுத்து வரும் குரு திசை தரும் பலன்கள் என்ன ?
எதிர்வரும் குரு திசை தங்களுக்கு 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகவும் வலிமை மிக்க சுபயோக பலாபலன்களை ஜீவன ஸ்தான வழியில் இருந்து வாரி வழங்குவது தங்களுக்கு சிறப்பான அம்சமாகும், குறிப்பாக தங்களின் ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் ராசியான கும்பத்தில் 1பாகையில் ஆரம்பித்து மேஷ ராசியில் 2பாகை வரை வியாபித்து நிற்பது, முதலீடுகளில் வரும் அதிக லாபத்தை குறிக்கின்றது, தங்களின் தொழில் ரீதியான முதலீடுகள் மிகுந்த லாபத்தை தரும், தொழில் ரீதியாக மனநிம்மதியும், திருப்திகரமான யோக வாழ்க்கையையும் ஜீவன வழியில் இருந்து பரிபூர்ணமாக வாரி வழங்கும் என்பதால் தாங்கள் தொழில் ரீதியான சிறப்புக்களை எதிர்வரும் குரு திசையில் பரிபூர்ணமாக பெறுவீர்கள் என்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், வாழ்த்துக்கள்.
தங்களின் ஜாதகத்திற்கு தொழில் ரீதியாக தன்னிறைவான பொருளாதார முன்னேற்றம் தரும் கிரகங்களின் திசாபுத்திகள்.
சுய ஜாதகத்தில் மிகவும் வலிமை பெற்ற ஸ்தானம் 5,11ம் பாவகம் ஆகும், 5,11ம் பாவகத்துடன் தொடர்பு பெரும் வீடுகள் வழியில் இருந்து தாங்கள் 100% விகித நன்மைகளை பரிபூர்ணமாக அனுபவிக்கலாம் என்பதால் 5,11ம் பாவக தொடர்பை ஏற்று நடத்தும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் தங்களுக்கு தொழில் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சுபயோகங்களை வாரி வழங்கும் இதை கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது தங்களுக்கு, சுக்கிரன்,சந்திரன்,ராகு,சனி,புதன் மற்றும் கேது திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் தங்களுக்கு பரிபூர்ண சுபயோக பலாபலன்களை வாரி வழங்கும், மேற்கண்ட கிரகங்களின் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் நடைபெறும் பொழுது தங்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு வெற்றிகளை 100% விகிதம் பெற இயலும் என்பதை " ஜோதிடதீபம் " தெளிவாக பதிவு செய்கிறது.
குறிப்பு :
பெரும்பாலும் மேற்கண்ட ஜாதகம் போன்று ஓர் வலிமையான ஜாதகம் அமைவது அரிதிலும் அரிதானது, ஜாதகர் சுய ஜாதக வலிமையின் அடிப்படையில் சிறப்பான சுபயோகங்களை பரிபூர்ணமாக அனுபவிக்கும் வல்லமை பெற்றவர் என்பதை உறுதிபட சொல்ல முடியும், வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து ஜாதகர் பலாபலன்களை அனுபவிக்க முடியவில்லை எனில் ஜாதகர் தனது பழக்க வழக்கங்களிலும், எதிர்பால் இணைசேர்க்கை வழிகளிலும் சுய பரிசோதனை செய்துகொள்வது, யோக பலன்களில் ஏற்பட்ட தடைகளுக்கான மூல காரணத்தை தெரிந்துகொள்ள இயலும்.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
புதன், 15 நவம்பர், 2017
ஏழரை சனி என்ன செய்யும் ? ஜென்ம சனியாக ஜென்ம ராசியில் சஞ்சாரம் கடுமையான பாதிப்பை தருமா ?
ஏழரை சனிக்கு பயப்படாதவர்களே இல்லை என்று சொல்லிவிடலாம், குறிப்பாக சந்திரன் நின்ற ராசிக்கு முன்பின் ராசிகளிலும் சந்திரன் நின்ற ராசியிலும் சனிபகவான் சஞ்சரிக்கும் காலங்களை ஏழரை சனி என்று வர்ணிக்கின்றனர், இந்த ஏழரை சனி காலத்தில் சம்பந்தப்பட்ட ஜாதகர் படும் இன்னல்களுக்கு ஓர் அளவு இருக்காது என்றும், துன்பத்தை மட்டுமே சனிபகவான் பலனாக வாரி வழங்குவார் என்றும் கூறுவது உண்டு, குறிப்பாக ஓர் ஜாதகத்தில் ஏழரை சனி நடைபெறும் ( ஏழரை வருட ) காலங்களில் ஏற்படும் இன்னல்கள் அனைத்திற்கும் காரணகர்த்தாவாக சனிபகவானை காணும் அன்பர்கள், அவர் இன்னல்களை மட்டுமே தருவார் என்ற கற்பனை எண்ணத்தை அனைவரிடமும் விதைத்து இருக்கின்றனர் என்பதே உண்மை, அடிப்படையில் நவகிரகங்கள் தனிப்பட்ட ஆளுமையின் கீழ் ஓர் ஜாதகருக்கு நன்மை தீமை பலாபலன்களை வழங்க வல்லமை அற்றவர்கள் என்பதை உணர்ந்தவர்களுக்கு " ஏழரை சனி " என்பதே ஓர் பொய்யான கூற்று என்பதை தெளிவாக விளக்கம் தரமுடியும், ஏனெனில் சுய ஜாதகம் என்பது லக்கினம் முதல் 12பாவகங்களின் வலிமையின் அடிப்படையில் இயங்குவது, அதாவது பிறந்த தேதி, நேரம் மற்றும் இடம் ஆகிய குறிப்புகளை கொண்டு சுய ஜாதகம் நிர்ணயம் செய்யப்படுகிறது , ஓரிரு நிமிடங்களில் சுய ஜாதகம் என்பது பல மாற்றங்களை சந்திக்கும் நிலையில் சந்திரனை அடிப்படையாக கொண்ட ஏழரை சனி தரும் பலன் என்பது கற்பனையானது என்று விளக்கம் தரவேண்டிய அவசியமில்லை என்று " ஜோதிடதீபம் " கருதுகிறது, கீழ்கண்ட ஜாதகத்தை உதாரணமாக கொண்டு கோட்சார சனிபகவான் தரும் பலாபலன்களை இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !
லக்கினம் : மிதுனம்
ராசி : தனுசு
நட்ஷத்திரம் : பூராடம் 3ம் பாதம்
ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் ராகு திசை ( 05/04/2002 முதல் 05/04/2020 வரை ) 5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த வலிமையான யோக பலாபலன்களை பூர்வபுண்ணிய ஸ்தான வழியில் இருந்து வாரி வழங்கிக்கொண்டு இருக்கின்றது என்பது ஜாதகருக்கு சுபயோகங்களை தரும் அமைப்பாகும், குறிப்பாக ஜாதகர் 5ம் பாவக வழியில் இருந்து கலைத்துறையில் வெற்றி, கற்ற கல்வி வழியிலான யோக பலன்கள், சமயோசித புத்திசாலித்தனம், குலதெய்வ அனுக்கிரகம், தெய்வீக அனுபவம், வாதத்திறன் கொண்டு அனைத்தையும் தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளும் யோகம், நிறைவான செல்வசேர்க்கை, நல்ல யோகம் மிக்க குழந்தைகளை பெரும் யோகம், அவர்கள் வழியிலான சுயோக வாழ்க்கை, குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி சந்தோசம், காதல் வெற்றி, சாஸ்திர ஞானம், கணித தேர்ச்சி , திட்டமிட்டு செயல்படும் தன்மை, சீரான முன்னேற்றம், தர்மசிந்தனை, அனைவருக்கும் உதவும் குணம் என்ற வகையில் சிறப்புகளை ராகு திசை முழு வீச்சில் சுபயோக பலாபலன்களை பூர்வபுண்ணிய ஸ்தான வழியில் இருந்து வாரி வழங்கிக்கொண்டு இருக்கின்றது.
ராகு திசையில் தற்போழுது நடைமுறையில் உள்ள சந்திரன் புத்தி ஜாதகருக்கு 4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவது ஜாதகர் மாத்ரு ஸ்தான வழியில் இருந்து சுபயோகங்களை அனுபவிக்கும் தன்மையை தருகின்றது, புதிய மண் மனை வண்டி வாகன யோகம் உண்டாகும், ஜாதகரின் சுகபோக வாழ்க்கையின் தன்மை அதிகரிக்கும், தெய்வ அனுக்கிரகம் மூலம் சகல சௌபாக்கியங்களும் உண்டாகும், கல்வியில் வெற்றி, உறவுகள் வழியிலான ஒத்துழைப்பு என்றவகையில் சிறப்புக்களை தரும், ஜாதகரின் சுக ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சிம்மராசியில் 1 பாகையில் ஆரம்பித்தது கன்னி ராசியில் முழுவதும் வியாபித்து நிற்பது ஜாதகருக்கு தனது அறிவு சார்ந்த விஷயங்களிலும், தனம் சார்ந்த விஷயங்களிலும் சிறப்பான முன்னேற்றங்களை வாரி வழங்கும், மேலும் குறுகிய கால லாபங்களை ஜாதகர் பெறுவதற்கு உண்டான வாய்ப்புக்களை தரும் என்பது கவனிக்கத்தக்கது .
ஆக ஜாதகருக்கு நடைபெறும் ராகு திசை 5ம் பாவக வழியில் இருந்து சுபயோகங்களையும், ராகு திசையில் தற்போழுது நடைமுறையில் உள்ள சந்திரன் புத்தி 4ம் பாவக வழியில் இருந்து சுபயோகங்களையும் வாரி வழங்குவது சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் நன்மையான பலாபலன்கள் ஆகும், இதில் தற்போழுது தனுசு ராசிக்கு ஏழரை சனி என்றும் அதனால் ஜாதகர் இன்னல்களை சந்திப்பார் என்பது முற்றிலும் கற்பனை என்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை, தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான் ஜாதகரின் நான்காம் பாவகத்தை தனது 10ம் பார்வையாக வசீகரிப்பதும், 4ம் பாவகம் தனது வர்க்க கிரகமான புதபகவானின் வீடான கன்னியில் அமைவதும் ஜாதகருக்கு சுபயோக பலன்களையே தரும், சனி பகவான் சஞ்சாரம் செய்யும் 7ம் பாவக பலனை ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் ராகு திசையும், சந்திரன் புத்தியும் ஏற்று நடத்தவில்லை என்பதால் சந்திரன் நின்ற ராசிக்குள் சஞ்சாரம் செய்யும் ( ஏழரை சனி ) சனி பகவான் யாதொரு நன்மை தீமையை தரவில்லை என்பதே முற்றிலும் உண்மை, கிரகங்களின் சஞ்சாரம் என்பது தற்போழுது நடைமுறையில் உள்ள திசா புத்திகள் ஏற்று நடத்தும் பாவக தொடர்புடன் எந்த விதத்திலாவது சம்பந்தம் பெற்றால் மட்டுமே நன்மை தீமை பலன்களை நடைமுறைப்படுத்திடும், தற்போழுது நடைமுறையில் உள்ள திசா புத்திகள் ஏற்று நடத்தும் பாவக தொடர்புடன் எந்த விதத்திலும் சம்பந்தம் பெறவில்லை எனில் கோட்சர கிரகத்தால் யாதொரு பலாபலனும் நடைமுறைக்கு வாராது, சந்திரன் நின்ற ராசிக்கு கோட்சார பலன் காண்பதெல்லாம் கற்பனை கட்டுக்கதையாகவே அமையும் என்பதை கருத்தில் கொள்வது நலம், அடிப்படையில் சந்திரன் நின்ற ராசிக்கு பலாபலன்கள் காண்பதென்பது சுய ஜாதக வலிமை மற்றும் அது தரும் பலாபலனுக்கு சற்றும் பொருந்தாதது என்பதை நினைவில் கொள்வது அவசியமாகிறது.
மேற்கண்ட ஜாதகருக்கு ஏழரை சனி என்னும் விஷயமே தவறான பலாபலன்களை கூறுவதற்கு வழிவகுத்துவிடும், ஏனெனில் சுய ஜாதகத்தில் ஜாதகருக்கு லக்கினம் முதல் 12 பாவகங்களும் மிகவும் வலிமையுடன் இருப்பதுடன், நடைபெறும் நவக்கிரத்தின் திசாபுத்திகள் அனைத்தும் வலிமை பெற்ற பாவக பலனையே ஏற்று நடத்துவதால், ஜாதாருக்கு ஏழரை சனி, அஷ்டம சனி, அர்தாஷ்டம சனி என அனைத்து சனிகளும் சகல நிலைகளில் இருந்தும் நன்மையான பலன்களையே தரும் என்பது கவனிக்கத்தக்கது.
எனவே சுய ஜாதக பலாபலன்களை நிர்ணயம் செய்வது சுய ஜாதக வலிமையே அன்றி, சந்திரன் நின்ற ராசிக்கு கோட்சார கிரகங்கள் தரும் ராசி பலன்கள் அல்ல என்பதை கருத்தில் கொள்வது நல்லது, குறிப்பாக ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, குரு பலம், ராசிக்கு குரு சஞ்சாரம் செய்யும் நிலை இவையெல்லாம், சுய ஜாதக வலிமை தெரியாமல் அது தரும் பலாபலன் பற்றிய அறியாமல் உளறும் உளறல்களே என்பதை அனைவரும் சிந்தனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டி " ஜோதிடதீபம் " வைக்கும் வேண்டுகோள் ஆகும்.
குறிப்பு :
சுய ஜாதக வலிமை நிலையை தெளிவாக உணர்ந்து, பாவக வலிமையின் தன்மையை கருத்தில் கொண்டு எதிர்கால வாழ்க்கையை சிறப்பாக திட்டமிட்டு முன்னேற்றம் காண்பதே புத்திசாலித்தனம், ஜோதிடரீதியாக உள்ள மூடநம்பிக்கைகளை பலாபலன்கள் என்று கருதி வாழ்க்கையில் நமக்கு வரும் நல்ல வாய்ப்புகளை உதறித்தள்ளுவது என்பது முற்றிலும் தவறான வழிமுறையாகும், நல்ல ஜோதிடம் தங்களின் வாழ்க்கையில் சிறந்த முன்னேற்றங்களை நிச்சயம் வாரி வழங்கும், இதில் மாற்று கருத்து என்பதே இல்லை "வாழ்த்துக்கள்"
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017
சனி பெயர்ச்சி பலன்கள் ( 2017 - 2020 ) லக்கினம் கும்பம்!
சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் என்று வர்ணிக்கப்படும், இலக்கின பாவகாத்திற்க்கே முதல் உரிமை உண்டு, மேலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதகத்திற்கு பலன் காணும் பொழுது துல்லியமான பலாபலன்களை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக தெளிவாக கூற இயலும், எனவே நவ கிரகங்களின் பெயர்ச்சியை சுய ஜாதக பாவக வலிமையின் அடிப்படையில் கணிதம் செய்து பார்க்கும் பொழுது சம்பந்தம் பட்ட ஜாதகருக்கு நவ கிரகங்களின் பெயர்ச்சியினால் வரும் நன்மை தீமை பலாபலன்களை பற்றி துல்லியமாக கணிதம் செய்ய இயலும், ( 2017 முதல் 2020 வரை ) கால புருஷ தத்துவத்திற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான், தனது சஞ்சார நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு தரும் யோக அவயோக நிகழ்வுகளை பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!
கும்பம் :
கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் ராசியான கும்ப ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, இனிவரும் இரண்டரை வருடம் லாப ஸ்தானமான 11ம் பாவகத்தில் சனி பகவான் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார், சஞ்சாரம் செய்யும் இரண்டறை வருட காலத்திற்கு சஞ்சார நிலையில் இருந்தும், 6,7,10 என்ற திருஷ்டி நிலையில் இருந்தும், கும்ப லக்கின அன்பர்களுக்கு கோட்சார ரீதியாக வழங்கும் பலாபலன்களை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், " நிறைகுடம் நீர்தளும்பாது " என்ற பழமொழிக்கு இணங்க தனது செயல்திறன் மூலம் எடுத்துரைக்கும் கும்ப இலக்கின அன்பர்களுக்கு, இதுவரை ஜீவன ஸ்தானத்தில் நின்று இன்னல்களை தந்துகொண்டு இருந்த சனி பகவான், லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யது முழுஅளவில் சுபயோக பலன்களை வாரி வழங்க இருக்கின்றார், ஜாதகரின் லாப ஸ்தானம் என்பது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமாக வருவது ஜாதகர் தான் செய்த பாக்கியத்தின் வலிமையை அதிர்ஷ்ட ஸ்தான வழியில் இருந்து அனுபவிக்கும் யோகத்தை தரும், குறிப்பாக ஜாதகரின் அறிவுத்திறன் மூலம் நல்ல லாபமும், நிறைந்த தன சேர்க்கையையும் வாரி வழங்கும், ஆன்மீக பெரியோர்களின் ஆசிர்வாதம் ஜாதகரின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், தெளிவான சிந்தனை மற்றும் செயல்பாடுகள் மகர இலக்கின அன்பர்களுக்கு நீண்ட நெடுங்கால வளர்ச்சியை தொழில் வழியில் வாரி வழங்கும், எதிர்ப்புகள் யாவும் குறைந்து ஆதரவும் மக்கள் செல்வாக்கும் பெருகும், இதனால் ஜாதகருக்கு புது நம்பிக்கையும், புதிய எதிர்காலமும் சிறப்பாக அமைய வாய்ப்புகள் அதிகம் உள்ளது, உயர்கல்வி ஆராய்ச்சி கல்வி ஆகியவற்றில் தேர்ச்சி உண்டாகும், தெய்வீக தரிசனம் செய்ய பயணங்கள் மேற்கொள்ளும் யோகம் உண்டாகும், அறிய பல திருத்தலங்களுக்கு சென்றுவரும் யோகம் உண்டாகும், எதிர்பாராத விதத்தில் அந்நிய மொழி பேசும் நபர்கள் வழியில் இருந்து அதிர்ஷ்டம் தேடிவரும், தங்களது தூரத்து உறவுகள் வழியில் இருந்து ஆதரவும் அவர்கள் வழியிலான நன்மைகளும் தேடிவரும், தங்களின் வாழ்க்கையில் சனி பகவானின் லாப ஸ்தான சஞ்சாரம் நீடித்த அதிர்ஷ்டங்களை வாரி வழங்க தயார் நிலையில் உள்ளது என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.
4ம் பாவகத்தை தனது 6ம் பார்வையினால் வசீகரிக்கும் சனி பகவான் தங்களுக்கு வண்டிவாகன யோகம் மற்றும் வீடு நிலம் சார்ந்த வருமான வாய்ப்புகளை பரிபூர்ணமாக வாரி வழங்குவார், வாக்கை தொழிலாக கொண்டுள்ள அன்பர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி அபரிவிதமான லாபங்களை வாரி வழங்கும், குடும்பத்தில் சுப நிகழ்வுகளுக்கு உண்டான செலவினங்கள் அதிகரிக்கும், தாய் வழியிலான சொத்து கும்ப லக்கின அன்பர்களுக்கு தேடிவரும், எதிர்பாராத உதவிகள் குடும்ப நபர்கள் மூலம் கிடைக்க பெறுவீர்கள், நெடுநாள் ஆசைகளான புதிய வீடு மற்றும் புதிய சொகுசு வாகனம் போன்றவை இனிவரும் காலங்களில் தங்களுக்கு அமையும், வங்கிகள் வழியில் இருந்து கடன் தேடிவரும், இதனால் தங்களின் தொழில் வழியிலான வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும், கடன் உதவிகள் கேட்ட இடத்தில் இருந்து தங்களுக்கு கிடைக்கும், தங்களின் சொத்துக்கள் வழியிலான வருமானம் அதிகரிக்கும், வாக்கு வன்மை அதிகரிக்கும், எதிர்பார்த்த நல்ல செய்திகள் தங்களை தேடிவரும், நிதி துறை மற்றும் நிதி நிறுவனம் நடத்தி வரும் அன்பர்களுக்கு இனிவரும் காலம் நல்லாதோர் முன்னேற்றங்களையும் தொடர் வருமான வாய்ப்புகளையும் வாரி வழங்கும், தனது தாயார் உடல் நிலை சார்ந்த அக்கறை தங்களுக்கு வீண் செலவினங்களை தவிர்க்க உதவும், எதிர்பாராத நேரத்தில் தங்களுக்கு வரும் பொருளாதர உதவிகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு தங்களின் பொருளாதார சிக்கல்களில் இருந்து வெளியேற நல்ல வாய்ப்புகள் உண்டாகும், உடல் ஆரயோக்கியம் மேம்படும், சுய முயற்சிகள் நன்கு பலிதம் பெரும் நேரமிது என்பதனை மட்டும் கருத்தில் கொண்டு செயலாற்றும் நேரமிது, சுபயோகங்கள் சுக ஸ்தான வழியில் இருந்து பரிபூர்ணமாக நடைமுறைக்கு வரும்.
5ம் பாவகத்தை தனது 7ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் தங்களுக்கு பூர்வீகம் சார்ந்த வழியில் இன்னல்களையும், தங்களின் குழந்தைகள் வழியிலான பிரச்சனைகளையும் அதிகரிப்பார், தங்களின் சமயோசித புத்திசாலித்தனம் யாவும் வீண் விரையம் ஆகும், தங்களின் திட்டமிடுதல்கள் யாவும் தடைகளையும் தாமதங்களையும் சந்திக்கும் நேரமிது, குலதெய்வ நிந்தனை தங்களின் வாழ்க்கையில் ஓர் வெற்றிடத்தை ஏற்படுத்தும், சிந்தனை திறன் பாதிக்கப்படும், தங்களது பூர்வீகத்தை விட்டு வெளியில் சென்று ஜீவனத்தை தேடும் நிலை ஏற்படும், தங்களது சுய முயற்சிகள் யாவும் எதிர்பாராத பின்னடைவை சந்திக்க நேரும், உதவி செய்ய யாரும் அற்ற சூழ்நிலையை உருவாக்கும், நன்மை செய்ய சென்று வீண் அவபெயரை சம்பாதிக்கும் நிலை உருவாகும் என்பதானால் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது தங்களுக்கு நன்மையை தரும், 5ம் பாவக வழியில் இருந்து தாங்கள் அதிக அளவில் இன்னல்களை சந்திக்க வேண்டிவரும் என்பதனால் தங்களின் குல தேவதை வழிபாட்டினை முறையாக செய்து சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து வரும் இன்ன்னல்களில் இருந்து விடுபடுங்கள்.
8ம் பாவகத்தை தனது 10ம் பார்வையால் வசீகரிக்கும் சனிபகவான் கும்ப இலக்கின அன்பர்களுக்கு திடீர் என பெரும் செல்வாக்கையும், தன சேர்க்கையும் வாரி வழங்குவார், குறிப்பாக மருத்துவம் மற்றும் நிதி துறையில் உள்ள அன்பர்களுக்கு இது ஒரு பொற்க்காலம் என்றால் அது மிகையாகாது, உடல் நலம் சார்ந்த இன்னல்களில் இதுவரை போராடிக்கொண்டு இருந்த கும்ப இலக்கின அன்பர்களுக்கு உடனடி நிவர்த்தியும், சுகமும் கிடைக்க பெறுவார்கள், மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் மேம்படும், இன்சூரன்ஸ் மற்றும் போனஸ் மூலம் பெரும் தன வரவை பெற வாய்ப்பு அதிகம் உண்டு, கும்ப இலக்கின அன்பர்களுக்கு எதிர்பாராத பணவரவு என்பது தொடர்ந்து கிடைத்த வண்ணம் இருக்கும், புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையை பெறுவதற்கு சனிபகவானின் 10ம் பார்வை வழிவகுக்கும், சில அன்பர்களுக்கு தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து பெரும் செல்வ சேர்க்கை உண்டாகும், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியில் வருமானம் உண்டாகும், வெளிநாடுகளில் இருந்து வரும் புதிய பொருட்கள் மூலம் அதித லாபம் உண்டாகும், வெளிநாடு மற்றும் வெளியூர் வழியில் இருந்து பெரும் தன சேர்க்கையை கும்ப இலக்கின அன்பர்கள் இனிவரும் காலங்களில் தொடர்ச்சியாக பெறுவார்கள் என்பது வரவேற்க தக்க சிறப்பு அம்சமாகும்.
குறிப்பு :
கும்ப லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 11,4,5,8ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 11,4,5,8ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் கும்ப லக்கின அன்பர்களுக்கு மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
சனி பகவான் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் காலங்கள் :
( 26/01/2017 முதல் 21/06/2017 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும்.
( 21/06/2017 முதல் 26.10.2017 ) வரை
சனி பகவான் மீண்டும் வக்கிரக கதியில் விருச்சிக ராசியிலும்.
( 26/10.2017 முதல் 24/01/2020 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும் சஞ்சாரம் செய்கின்றார்.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
செவ்வாய், 18 ஜூலை, 2017
சனி மகா திசை தரும் பலாபலன் என்ன ? எதிர்வரும் புதன் திசை தரும் பலாபலன்கள் என்ன ?
சுய ஜாதகத்தில் சனி திசை நடைபெறும் பொழுது பெரும்பாலும் நாம் அனைவரும் நமக்கு இன்னல்களே நடைபெறும் என்று கருதுவது உண்டு, மேலும் சனி திசை என்பது வாழ்க்கையில் இன்னல்களையும், துன்பங்களையும் வாரி வழங்கும் அமைப்பை பெற்றது என்ற கருத்தும் பரவலாக உண்டு, மனித வாழ்க்கையில் வரும் இன்னல்களுக்கும் துன்பங்களுக்கும் காரணகர்த்தாவாக சனிபகவானை உருவகபடுத்துபவர்களும் உண்டு, இன்னும் சிலர், ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி என்று, ஜாதகத்தில் சந்திரன் நின்ற ராசிக்கு சனிபகவானின் சஞ்சார நிலையை கருத்தில் கொண்டு பெரும் இன்னல்களை தருபவர் என்று சனிபகவானை துவேசிப்பவர்களும் உண்டு, மேற்கண்ட விஷயங்கள் யாவும் சுய ஜாதகத்தில் பாவக வலிமை நிலையை பற்றிய தெளிவு இல்லாமலும், நடைபெறும் திசா புத்திகள் ஏற்று நடத்தும் பாவக வலிமையின் தன்மையை பற்றிய புரிதல் இல்லாமலும், சொல்லப்படும் கட்டுக்கதையாகவே " ஜோதிடதீபம் " கருதுகிறது, அடிப்படையில் சுய ஜாதகம் இருக்கும் பொழுது ராசியை வைத்து பலாபலன் காண முற்படுவதே தவறான ஓர் அணுகுமுறை என்பதை பதிவு செய்ய விரும்புகிறோம், லக்கினத்தையும் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலையையும் கருத்தில் கொண்டு பலாபலன் காண முற்படுவதே சரியான மற்றும் துல்லியமான ஜாதக பலன்கள் காண வழிவகுக்கும், ஜாதகரின் கேள்விக்கு உண்டான பதிலை அவரது சுய ஜாதக அமைப்பை வைத்து பலாபலன் எப்படி காண்பது என்பதனை இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !
லக்கினம் : விருச்சிகம்
ராசி : துலாம்
நட்ஷத்திரம் : சித்திரை 4ம் பாதம்
ஜாதகருக்கு தற்போழுது சனி திசை ( 13/03/2013 முதல் 12/03/2022 வரை ) நடைமுறையில் உள்ளது நடைபெறும் சனி திசை ஜாதகருக்கு வழங்கும் பலன்கள் என்ன என்பதனை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், ஜாதகருக்கு தற்போழுது நடைமுறையில் உள்ள சனி திசை வலிமை பெற்ற 7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு அளவில் ஸ்திரமாக 7ம் பாவக பலனை மட்டும் ஏற்று நடத்துகிறது, ஜாதர் விருச்சிக லக்கினம் என்பதால் 7ம் பாவகம் ஜாதகருக்கு ஸ்திர மண் தத்துவ ராசியான ரிஷபத்தில் அமைகிறது, மேலும் 7ம் பாவகம் ஜாதகருக்கு ரிஷபத்தில் 32:32:05 பாகையில் ஆரம்பித்து மிதுனத்தில் 61:17:18 பாகையில் முடிவடைகிறது, பெரும்பாலும் 7ம் பாவகம் ஜாதகருக்கு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வாக்கு ஸ்தானமான ரிஷப ராசியில் வியாபித்து இருப்பது, வரவேற்க தக்க அம்சமாகும், மேலும் சனி திசை முழுவதும் ஜாதகத்துக்கு 7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக பலனை தருவது வரவேக்க தக்க அம்சமாகும்.
இதனால் ஜாதகர் சனி திசையில் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து சகல சௌபாக்கியங்களையும் அனுபவிக்கும் யோகத்தை தரும், மேலும் தனது நண்பர்கள் உதவி, கூட்டாளிகள் உதவி, வெளிநாடுகளில் இருந்து வருமான வாய்ப்பு, அயல் தேசத்தில் ஜீவன வாழ்க்கையை மேற்கொள்ளும் யோகம், ஸ்திரமான வருமானங்கள், இனிமையான பேச்சு திறன் மூலம் அனைவரின் ஆதரவையும் பெரும் யோகம், பொதுமக்கள் ஆதரவு, சமூக அந்தஸ்து, தெய்வீக அனுக்கிரகம் மூலம் வாழ்க்கையில் சகல முன்னேற்றங்களையும் பெரும் யோகம் உண்டாகும், குறிப்பாக ஜாதகரின் குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமையும், கைநிறைவான வருமானம் வந்து சேரும், குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும், எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும், ஜாதகரின் வாக்கு வன்மை அதிகரிக்கும், பேச்சு திறமையால் தனது வாழ்க்கையை மிக சிறப்பானதாக மாற்றி கொள்ளும் யோகம் பெற்றவராகிறார், மேலும் தனது வாழ்க்கை துணையின் முழு ஆதரவையும், அவர்கள் வழியிலான நன்மைகளையும் ஜாதகர் பரிபூர்ணமாக அனுபவிக்கும் யோகம் உண்டு, சனி திசை ஜாதகருக்கு வெளியூர், வெளிநாடு, வியாபாரம், பொதுமக்கள், அயல் தேச லாபங்கள் என்ற வகையில் சுபயோகங்களை ஸ்திரமாக வாரி வழங்கும் என்பது கவனிக்க தக்க அம்சமாகும், ஜாதகருக்கு சனி திசை நடைபெற்றாலும், சனி தனது திசையில் வலிமை பெற்ற களத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து சகல யோகங்களையும் தரும்.
எனவே சுய ஜாதகத்தில் பாவ கிரகத்தின் திசை, புத்தி ( சூரியன், செவ்வாய், சனி, தேய்பிறைசந்திரன், ராகு,கேது ) நடைபெற்றால் தீய பலன்கள் நடைபெறும் என்று நினைப்பது முற்றிலும் தவறு, எந்த ஓர் கிரகத்தின் திசாபுத்தி நடைபெற்றாலும், நடைபெறும் திசாபுத்தி அவரவர் சுய ஜாதகத்தில் உள்ள எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்பதை தெளிவாக தெரிந்துகொண்டு, அதற்க்கான உண்மையான பலாபலனை அறிந்து வாழ்க்கையில் நலம் பெறுவது அவசியமாகிறது.
ஜாதகருக்கு அடுத்து வரும் புதன் திசை தரும் பலாபலன்களை சற்று சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !
புதன் திசை ( 12/03/2022 முதல் 13/03/2039 ) ஜாதகருக்கு 1,3ம் வீடுகள் வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று ராஜ யோக பலனை தருவது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், மேலும் ஜாதகரின் வீர்ய ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமாகவும், சர மண் தத்துவ ராசியான மகரத்தில் வியாபித்து இருப்பது, ஜாதகரின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியமும் வந்து சேரும் யோகத்தை தரும், சனி திசையை விட புதன் திசை ஜாதகருக்கு 1,3ம் பாவக வழியில் இருந்து 100% விகித யோக வாழ்க்கையை நல்கும், எதிர்பாராத முன்னேற்றம் மற்றும் ஜீவன வழியிலான லாபங்களை ஜாதகர் தங்கு தடையின்றி பெறுவார், அதிர்ஷ்டத்தின் தாக்கத்தை முழு அளவில் ஜாதகர் ஜீவன வழியில் இருந்து பெறுவார், அபரிவிதமான தொழில் வளர்ச்சி, எடுக்கும் காரியங்கள் யாவும் வெற்றி, சுலப பொருள் வரவு, மக்களின் பேராதரவு, பொது வாழ்க்கையில் வெற்றி, அரசியல் லாபங்கள், தெய்வீக அனுபவங்கள், மண், மணை, வண்டி வாகன சேர்க்கை, எதிர்பாராத அதிர்ஷ்டம் என ஜாதகரின் வாழ்கையில் புதன் திசை மிகுந்த நன்மைகளை பரிபூர்ணமாக வாரி வழங்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
மேற்கண்ட ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் சனி திசை களத்திர பாவக வழியில் இருந்து சுப யோகங்களையும், புதன் திசை வீர்ய ஸ்தான வழியில் இருந்து யோக பலன்களையும் வாரி வழங்குவது, அவரது சுய ஜாதகத்தில் பாவகங்கள் பெற்றுள்ள சுபதுவத்தை எடுத்துரைக்கிறது, எனவே நமது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பணிரெண்டு பாவகங்களும் வலிமை பெற்று இருப்பின், நமக்கு எந்த கிரகத்தின் திசாபுத்தி நடைபெற்றாலும் யோக பலனே நடைமுறைக்கு வரும், நமது ஜாதகத்தில் பாவகங்கள் பாதிக்கப்பட்டு இருப்பின் நமக்கு நடைபெறுவது குரு,சுக்கிரன் போன்ற சுப கிரகத்தின் திசை என்றாலும் அவயோக பலன்களே நடைமுறைக்கு வரும் என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது, கிரகங்களின் திசாபுத்திகள் நமக்கு நன்மையையும் தீமையையும் தருவதில்லை, நமது சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையே நமக்கு நன்மையையும் தீமையையும் தருகின்றது என்பதே உண்மை அன்பர்களே, எனவே அவரவர் சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு ஜாதக பலாபலன்கள் காண்பதே மிக துல்லியமான பலாபலன்களை காண இயலும் என்பதை கருத்தில் கொள்க.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
வியாழன், 27 ஏப்ரல், 2017
சனி பெயர்ச்சி பலன்கள் ( 2017 - 2020 ) லக்கினம் மகரம் !
சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் என்று வர்ணிக்கப்படும், இலக்கின பாவகாத்திற்க்கே முதல் உரிமை உண்டு, மேலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதகத்திற்கு பலன் காணும் பொழுது துல்லியமான பலாபலன்களை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக தெளிவாக கூற இயலும், எனவே நவ கிரகங்களின் பெயர்ச்சியை சுய ஜாதக பாவக வலிமையின் அடிப்படையில் கணிதம் செய்து பார்க்கும் பொழுது சம்பந்தம் பட்ட ஜாதகருக்கு நவ கிரகங்களின் பெயர்ச்சியினால் வரும் நன்மை தீமை பலாபலன்களை பற்றி துல்லியமாக கணிதம் செய்ய இயலும், ( 2017 முதல் 2020 வரை ) கால புருஷ தத்துவத்திற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான், தனது சஞ்சார நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு தரும் யோக அவயோக நிகழ்வுகளை பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!
தனுசு :
கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பத்தாம் ராசியான மகர ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, இனிவரும் இரண்டரை வருடம் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்தில் சனி பகவான் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார், சஞ்சாரம் செய்யும் இரண்டறை வருட காலத்திற்கு சஞ்சார நிலையில் இருந்தும், 6,7,10 என்ற திருஷ்டி நிலையில் இருந்தும், மகர லக்கின அன்பர்களுக்கு கோட்சார ரீதியாக வழங்கும் பலாபலன்களை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், தர்மம் ஒற்றை காலில் நின்று, கால்பங்கு பரிபாலனம் செய்யும் கலியுகத்தில், தான் மட்டும் முழு அளவிலான தர்மத்தை உறுதியுடன் போற்றி நடக்கும் மகர லக்கின அன்பர்களுக்கு, இதுவரை லாப ஸ்தானத்தில் நின்று சுபயோகங்களை வாரி வழங்கிய சனி பகவான், விரைய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் காலம் சற்று இன்னல்களை மகர லக்கின அன்பர்களுக்கு தர கூடும், குறிப்பாக மனநிம்மதி இழப்பு, குழப்பம், தெளிவற்ற சிந்தனை, கல்வியில் தடை, முதலீடுகளில் திடீர் இழப்பு, நல்ல உறக்கமின்மை, பெரியோர் ஆதரவு இன்மை, தெய்வீக அனுக்கிரகம் இன்மை, செய்யும் காரியங்களில் தடையை, அவசர கதியில் செய்யும் காரியங்கள் பெரும் தோல்வியையும், நஷ்டத்தையும் தர கூடும், இருப்பினும் தங்களின் நம்பிக்கையும், கடின உழைப்பும் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்து தரும், முடிந்த அளவு தங்களின் குடும்பத்தில் உள்ள பெரிய மனிதர்களின் ஆதரவை பெற்று அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறுங்கள், வரும் எதிர்ப்புகள் யாவும் ஆதவனை கண்ட பனிபோல் விலகிவிடும், மேலும் எதிர்ப்பால் அமைப்பினரிடம் சற்று எச்சரிக்கையாக இருப்பது நலம் தரும், தங்களின் நேர்மையான நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிப்பார்கள், மேலும் தேவையற்ற அவப்பெயரை தங்களுக்கு ஏற்படுத்த கூடும் என்பதால் அதிக கவனம் தேவை, தொழில் ரீதியாக அதிக முதலீடுகளை தவிர்ப்பது நலம் தரும் மேலும் முதலீடுகளை மிக சிறப்பாக கையாள வேண்டும் இல்லை எனில் மிகுந்த பேரிழப்பை தாங்கள் சந்திக்கும் சூழ்நிலையை உருவாக்கி விடும், மற்றவர் விஷயங்களில் தாங்கள் தலையீடு செய்வது தங்களின் எதிர்கால வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும், புலன் இன்பங்களில் நாட்டத்தை தவிர்த்து, சுய கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டிய நேரமிது, சனிபகவானின் விரைய ஸ்தான சஞ்சாரம் தங்களின் மன நிம்மதியை சற்று அசைத்து பார்க்கும்.
5ம் பாவகத்தை தனது 6ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் மகர லக்கின அன்பர்களுக்கு புத்திரர் சார்ந்த சில சிரமங்களை தரக்கூடும், தனது பூர்வீகத்தில் இருந்து வேறு இடம் பெயர்ந்து, ஜீவனம் செய்யும் சூழ்நிலையை தரும், குலதெய்வ ஆசியை பெற ஜாதகர் கடின முயற்சியை மேற்கொள்ளவேண்டிய சூழ்நிலை தரும், உதவி செய்ய யாரும் அற்ற நிலையையும், தனியாக போராட வேண்டிய நிலையை தரக்கூடும், எதிர்ப்புகளை சமாளிக்க தாங்கள் சற்று கடுமையாக போராட வேண்டிவரும், சுபகாரிய செலவினங்கள் அதிகரிக்கும், அறிவு திறனும், செயல்படும் வேகமும் வெகுவாக குறையும், சட்ட சிக்கல்கள் மூலம் பணவிரயம், செய்யும் காரியங்களில் போராட்டம் என்ற நிலையில் இன்னல்களை தரக்கூடும், சுய சிந்தனை மற்றும் அறிவு திறன் சரியான நேரத்தில் தங்களுக்கு பலன் தாராது, மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டு நலம் பெற வேண்டிய நேரமிது, சனியின் சத்ரு ஸ்தான பார்வை, தங்களின் பூர்வ புண்ணிய ஸ்தானத்தை கடுமையாக பாதிக்கும், வருமானம் மற்றும் புத்திசாலித்தனம் மட்டுப்படும்.
6ம் பாவகத்தை தனது 7ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் மகர லக்கின அன்பர்களுக்கு குறுகியகால வெற்றிகளை தங்கு தடையினின்றி தருவார், கடன் பெறுவது கொடுப்பது தங்களின் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றங்களை நல்கும், எதிரிகள் தரும் இன்னல்கள் தங்களுக்கு சாதகமான வெற்றிகளை வாரி வழங்கும், பயணங்கள் மூலம் நல்ல லாபமும் அதிர்ஷ்டமும் உண்டாகும், வேலையாட்கள், தொழிலாளர்கள் மூலம் தங்களின் முன்னேற்றம் சிறப்பாக அமையும், சுய தொழில் புரிவோருக்கு ஏற்றமிகு பொருளாதார வசதிவாய்ப்புகளை வாரி வழங்கும், உடல் நலம் மனநலம் சிறப்பாக அமையும், கூட்டு வியாபாரத்தில் லாபமும் அதிர்ஷ்டமும் உண்டாகும், எதிரிகள் தங்களின் வாழ்க்கையில் இருந்து ஒதுங்கிவிடும் சூழ்நிலையை தரும், பொது வாழக்கையில் உள்ளோருக்கு மிக சிறப்பான நேரமிது, திடீர் மக்கள் செல்வாக்கு, அரசு பதவி, தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகள் வந்து சேரும், எதிர்காலத்திற்கான பொருளாதார உதவிகள் தங்களை தேடி வரும், மற்றவர்கள் தனம் தங்களின் முன்னேற்றத்திற்கு பெரும் உதவிகளை வாரி வழங்கும், சனிபகவானின் 7ம் பார்வை தங்களுக்கு சத்ரு ஸ்தான வழியில் இருந்து சகல சௌபாக்கியங்களையும் தரும்.
9ம் பாவகத்தை தனது 10ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் மகர லக்கின அன்பர்களுக்கு சற்று சிரமங்களை அதிக அளவில் தரக்கூடும், குறிப்பாக மற்றவர்கள் விஷயங்களில் ஆர்வம் செலுத்தினால் தங்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிடும், சந்தேகங்கள் மற்றும் நம்பிக்கை இன்மை தங்களின் வாழ்க்கையை பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்த கூடும், பெரியோர் வார்த்தைகளை மதிக்காமல் செய்யும் காரியங்கள் எதிர்பாராத சிரமங்களை தங்களுக்கு தரக்கூடும், நிலையான மனம், திட சிந்தனை தங்களுக்கு இல்லை எனில் தங்களின் வாழ்க்கை பாதை மாறிவிடும், எதிர்பாராத இன்னல்களை தாங்கள் பெரிய அளவில் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், குறிப்பாக தங்களின் பெயர் பாதிக்கப்படாமல் பார்த்து கொள்வது தங்களின் எதிர்கால வாழ்க்கையை சிறப்பிக்கும், வரும் இன்னல்களை கருத்தில் கொள்ளாமல், முழு வீச்சில் காரியமாற்றுவது தற்போதுள்ள சூழ்நிலையை மாற்றி தங்களின் வாழ்க்கையில், சுபயோகங்களை நல்கும், எதிர்காலம் தங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை வாரி வழங்கும், சனி பகவானின் 10ம் பார்வை தங்களுக்கு பாக்கிய ஸ்தான வழியில் இருந்து அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதால், அதிக கவனம் தேவை, சரியான திட்டமிடுதல்கள் தங்களின் வாழ்க்கையை மிக நேர்த்தியாக சுபயோகங்களை வாரி வழங்கும்.
குறிப்பு :
மகர லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 12,5,6,9ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 12,5,6,9ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் மகர லக்கின அன்பர்களுக்கு மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
சனி பகவான் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் காலங்கள் :
( 26/01/2017 முதல் 21/06/2017 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும்.
( 21/06/2017 முதல் 26.10.2017 ) வரை
சனி பகவான் மீண்டும் வக்கிரக கதியில் விருச்சிக ராசியிலும்.
( 26/10.2017 முதல் 24/01/2020 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும் சஞ்சாரம் செய்கின்றார்.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
வெள்ளி, 21 ஏப்ரல், 2017
சனி பெயர்ச்சி பலன்கள் ( 2017 - 2020 ) லக்கினம் தனுசு !
சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் என்று வர்ணிக்கப்படும், இலக்கின பாவகாத்திற்க்கே முதல் உரிமை உண்டு, மேலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதகத்திற்கு பலன் காணும் பொழுது துல்லியமான பலாபலன்களை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக தெளிவாக கூற இயலும், எனவே நவ கிரகங்களின் பெயர்ச்சியை சுய ஜாதக பாவக வலிமையின் அடிப்படையில் கணிதம் செய்து பார்க்கும் பொழுது சம்பந்தம் பட்ட ஜாதகருக்கு நவ கிரகங்களின் பெயர்ச்சியினால் வரும் நன்மை தீமை பலாபலன்களை பற்றி துல்லியமாக கணிதம் செய்ய இயலும், ( 2017 முதல் 2020 வரை ) கால புருஷ தத்துவத்திற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான், தனது சஞ்சார நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு தரும் யோக அவயோக நிகழ்வுகளை பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!
தனுசு :
கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஒன்பதாம் ராசியான தனுசு ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, இந்த சனி பெயர்ச்சி, ஜென்ம ஸ்தானமான 1ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார், சஞ்சாரம் செய்யும் இரண்டறை வருட காலத்திற்கு சஞ்சார நிலையில் இருந்தும், 6,7,10 என்ற திருஷ்டி நிலையில் இருந்தும், தனுசு லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலன்களை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், இயற்கையிலேயே மிதம்மிஞ்சிய அறிவு திறனையும், இறையருளின் பரிபூர்ண கருணையையும் பெற்ற தனுசு லக்கின அன்பர்களுக்கு இதுவரை விரைய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்த சனி பகவான் தங்களுக்கு வீண் மனக்கவலைகளையும், வீண் விரைய செலவுகளையும் சற்று கடுமையாக வழங்கி இருக்கிறார், ஆனால் தற்பொழுது ஜென்ம லக்கினத்தில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான் தங்களுக்கு, உடல் வலிமையையும், மனவலிமையையும் சிறப்பாக வாரி வழங்குவார், புது தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும், செய்யும் செயல்களில் பொறுப்பும் கவனமும் அதிகரிக்கும் இதனால் தாங்கள் செய்யும் காரியங்களில் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும், நேர்மை உண்மை சத்தியம் தவறாத தங்களின் நடவடிக்கைகள் மூலம் மற்றவர்கள் அதிகம் ஈர்க்கப்படுவார்கள், தொன்மையான புராதன திருக்கோவில்களுக்கு சென்றுவரும் யோகம் உண்டாகும், ஆன்மீகத்தில் உயர்நிலையை தரும், சமூகத்தில் மக்கள் செல்வாக்கு மூலம் அரசுபதவி தங்களுக்கு தேடிவரும், இதுவரை இருந்த உடல் நலக்குறைவு மாற்று மனப்போராட்டங்களுக்கு நல்லதோர் தீர்வும், அதனால் மனநிம்மதியும் கிட்டும், லக்கின பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான் தங்களுக்கு நல்ல படிப்பினையும், சத்தியத்தின் வலிமையையும் உணரவைப்பார்.
6ம் பாவகத்தை தனது 6ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் தனுசு லக்கின அன்பர்களுக்கு குறுகியகால லாபங்களை தொடர்ந்து வழங்குவார், வழக்கில் சாதகமான தீர்ப்பு கிட்டும், தேர்வில் நல்ல தேர்ச்சியும், போட்டி பந்தயங்களில் வெற்றி வாய்ப்பும் உண்டாகும், ரத்த உறவுகள் வழியிலான லாபங்கள் மற்றும் வருமானம் வந்து சேரும், உடல் நிலையில் நல்ல முன்னேற்றமும், வயிறு சார்ந்த இன்னல்கள் இருப்பின் அதற்க்கான மருத்துவம் மூலம் ஆரோக்கியமும் உண்டாகும், கடன் சார்ந்த விஷயங்களில் தங்களுக்கு நல்ல யோகம் உண்டாகும், திடீர் பண உதவி தங்களை தேடிவரும், குடும்பத்தில் சுப செலவுகள் அதிகரிக்கும், வாக்குவன்மை மூலம் நிலையான வருமானம் பெரும் யோகமும், பேச்சு திறன் மூலம் வாழ்க்கையில் சிறப்பான பொருளாதார முன்னேற்றமும் உண்டாகும், எதிரிகளால் தங்களுக்கு நேர இருந்த இன்னல்கள் களைந்து, நன்மைகள் நடைபெற ஆரம்பிக்கும், சத்ரு ஸ்தானத்தை பார்வை செய்யும் சனிபகவான் தங்களின் எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ செய்வார்.
7ம் பாவகத்தை தனது 7ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் தனுசு லக்கின அன்பர்களுக்கு வெளிநாடுகளில் இருந்தும் வெளியூரில் இருந்தும் சுபயோக வாழ்க்கையை வாரி வழங்குவார், அந்நிய நபர்கள் அல்லது அந்நிய தேசத்தினர் மூலம் வாழ்க்கையில் சிறப்பான நன்மைகளை பெறுவதற்கு உண்டான வாய்ப்புகளை நல்குவார், திருமணம் சார்ந்த தடைகளை சந்தித்துக்கொண்டு இருக்கும் ஆண் பெண் அன்பர்களுக்கு விரைவாக திருமண வாழ்க்கை அமையும், சனி பார்வை மிதுனத்திற்கு 7ம் பார்வையாக விழுவதும், புதன் சனி வர்க்க கிரகமாக அமைவதும் திருமண தடைகளை தகர்த்து சிறப்பான திருமண வாழ்க்கையை அமைத்து தரும், பொருத்தமான வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் யோகம் உண்டாகும், நல்ல மனிதர்களின் அறிமுகமும் ஆதரவும் தங்களின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், குறிப்பாக வியாபாரம், கூட்டு தொழில் அல்லது வெளிநாடுகளில் ஜீவனம் செய்யும் அன்பர்களுக்கு சனியின் 7ம் பார்வை சிறப்பு மிக்க யோகங்களை வாரி வழங்கும்.
10ம் பாவகத்தை தனது 10ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் தனுசு லக்கின அன்பர்களுக்கு அளவில்லா ஜீவன முன்னேற்றத்தை குறுகிய காலத்தில் வாரி வழங்குவார், சுய தொழில் புரியும் அன்பர்களுக்கு இனிவரும் காலம் சிறப்பான முன்னேற்றத்தை வாரி வழங்கும், பொருளாதார முன்னேற்றம் அபரிவிதமாக அமையும், குறிப்பாக கடன் பெற்று தொழில் செய்யும் அன்பர்களுக்கு 100% விகித யோக வாழ்க்கையை நல்கும், தேடிவரும் தொழில் மற்றும் பண உதவிகள் தங்களின் வாழ்க்கையில் சுப யோகங்களை வாரி வழங்கும், பொதுமக்களை சார்ந்து தொழில் புரியும் அன்பர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி அளவில்லா வருமானங்களை வாரி வழங்கும், சுய கெளரவம் மற்றும் அந்தஸ்து அதிகரிக்கும், உறுதிமிக்க செயல்பாடுகள் தீர்க்கமான வாத திறமை தங்களின் ஜீவன முன்னேற்றத்தை பலமடங்கு முன்னேற்ற பாதையில் அழைத்து செல்லும், சீரிய முயற்சிகள் மூலம் பல வெற்றிகளை பெற சரியான நேரம் இதுவே, சனி பகவானின் ஜீவன ஸ்தான வசீகரம் தனுசு லக்கின அன்பர்களுக்கு தொழில் ரீதியான நிச்சய வெற்றிகளை வாரி வழங்கும் என்றால் அது மிகையில்லை.
குறிப்பு :
தனுசு லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 1,6,7,10ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 1,6,7,10ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் தனுசு லக்கின அன்பர்களுக்கு மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
சனி பகவான் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் காலங்கள் :
( 26/01/2017 முதல் 21/06/2017 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும்.
( 21/06/2017 முதல் 26.10.2017 ) வரை
சனி பகவான் மீண்டும் வக்கிரக கதியில் விருச்சிக ராசியிலும்.
( 26/10.2017 முதல் 24/01/2020 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும் சஞ்சாரம் செய்கின்றார்.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
புதன், 19 ஏப்ரல், 2017
சனி பெயர்ச்சி பலன்கள் ( 2017 - 2020 ) லக்கினம் விருச்சகம் !
சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் என்று வர்ணிக்கப்படும், இலக்கின பாவகாத்திற்க்கே முதல் உரிமை உண்டு, மேலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதகத்திற்கு பலன் காணும் பொழுது துல்லியமான பலாபலன்களை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக தெளிவாக கூற இயலும், எனவே நவ கிரகங்களின் பெயர்ச்சியை சுய ஜாதக பாவக வலிமையின் அடிப்படையில் கணிதம் செய்து பார்க்கும் பொழுது சம்பந்தம் பட்ட ஜாதகருக்கு நவ கிரகங்களின் பெயர்ச்சியினால் வரும் நன்மை தீமை பலாபலன்களை பற்றி துல்லியமாக கணிதம் செய்ய இயலும், ( 2017 முதல் 2020 வரை ) கால புருஷ தத்துவத்திற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான், தனது சஞ்சார நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு தரும் யோக அவயோக நிகழ்வுகளை பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!
விருச்சகம் :
கால புருஷ தத்துவ அமைப்பிற்கு எட்டாம் ராசியான விருச்சக ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, இந்த சனி பெயர்ச்சி, குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார், சஞ்சாரம் செய்யும் இரண்டறை வருட காலத்திற்கு சஞ்சார நிலையில் இருந்தும், 6,7,10 என்ற திருஷ்டி நிலையில் இருந்தும், விருச்சக லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலன்களை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், மறைபொருள் உண்மைகளை உலகிற்க்கு ஒளிமறைவின்றி அனைவருக்கும் பிரதிபலன் எதிர்பாரமால் விளக்கம் தரும் வல்லமை பெற்ற விருச்சிக இலக்கின அன்பர்களுக்கு இதுவரை ஜென்ம லக்கினத்தில் சஞ்சாரம் செய்து மனம் மற்றும் உடல் ரீதியாக கடுமையான இன்னல்களையும், திடீர் இழப்புகளையும் தந்துகொண்டு இருந்தார், குறிப்பாக மன ரீதியான கடுமையான இன்னல்களை விருச்சக இலக்கின அன்பர்கள் மிக பெரிய அளவில் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தந்தது, லக்கினத்தில் சனியின் சஞ்சாரம் தங்களுக்கு மிகுந்த துன்பத்தை தந்தது, ஆனால் இனி வரும் காலங்களில் குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான் தங்களுக்கு வருமான வாய்ப்புகளை பெரிய அளவில் தரக்கூடும், மேலும் வாக்கின் வழியில் நின்று தங்களது வெற்றிகரமான வாழ்க்கைக்கு உறுதுணை புரிவார், இருப்பினும் குடும்ப வாழ்க்கையில் சிறு சிறு இன்னல்கள் ஏற்ப்பட வாய்ப்புகள் அதிகம், ஆன்மீக வாழ்க்கையில் நல்ல வெற்றியும் ஆசிர்வாதமும் உண்டாகும், தெய்வீக திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம் உண்டாகும், இனிமையான வார்த்தைகளை கையாண்டு வாழ்க்கையில் சுபயோகங்களை பெறுவதற்கு உண்டான நேரம் இது என்பதனை கருத்தில் கொண்டு செயல்படுங்கள், சனி பகவானின் 2 ம் பாவக சஞ்சார நிலை விருச்சக இலக்கின அன்பர்களுக்கு தனம் சார்ந்த முன்னேற்றங்களையும், வாக்கு சார்ந்த இன்னல்களையும் நல்கும்.
7ம் பாவகத்தை தனது 6ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் விருச்சிக லக்கின அன்பர்களுக்கு இதுவரை இருந்த திருமண தடைகளை தகர்த்து விரைவாக திருமண வாழ்க்கையை அமைத்து தருவார், கூட்டு தொழில் செய்து வரும் அன்பர்களுக்கு யோகம் மிகுந்த வாழ்க்கையையும், தொழில் வழியிலான லாபங்களை வாரி வழங்குவார், எதிர்ப்புகள் அனைத்தும் களைந்து முன்னேற்றம் என்பது அபரிவிதமாக வந்து சேரும், தொழில் வழியிலான வருமானம் என்பது நிரந்தரமாக அமையும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதனால் சற்று விழிப்புணர்வுடன் செயல்பட்டு வாய்ப்புகளை பயன்படுத்திகொள்வது நல்லது, மேலும் வாழ்க்கை துணை, நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியிலான ஆதரவும், உதவிகளும் பெரிய அளவில் கிடைக்க பெறலாம், எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும், வெளிநாடு வெளியூர் வழியில் இருந்து லாபம் மற்றும் அதிர்ஷ்டம் உண்டாகும், குடும்பத்தில் உள்ள நபர்கள் தங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள், கைநிறைவான வருமானம், பொருளாதார முன்னேற்றம், கேட்கும் இடங்களில் இருந்து வரும் கடன் உதவி என சனி பகவானின் 6ம் பார்வை, களத்திர ஸ்தானத்திற்கு முழு அளவில் நன்மைகளை வாரி வழங்கும், பிரபல்ய யோகம் வியாபார அபிவிருத்தி உண்டாகும்.
8ம் பாவகத்தை தனது 7ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் விருச்சிக லக்கின அன்பர்களுக்கு திடீர் அதிர்ஷ்டத்தை வாரி வழங்குவது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், மேலும் உடல் நலபாதிப்பில் உள்ள அன்பர்களுக்கு அதில் இருந்து விரைவான குணமும், சரியான மருத்துவ சிகிசிச்சையும், வீண் செலவுகளையும் வெகுவாக குறைக்கும், தெய்வீக அனுக்கிரகம் மூலம் சகல விஷயங்களில் இருந்தும் லாபமும் அதிர்ஷ்டமும் உண்டாகும், தனது வாழ்க்கை துணை வழியிலான பொருளாதர உதவிகள் தங்களுக்கு தேடிவரும், அவர்களின் உதவி தங்களின் வாழ்க்கையில் வியக்கத்தக்க மாற்றங்களை நல்கும், சுப காரியங்கள் தடையின்றி நடைபெறும், தொலைதூர பயணங்கள் மூலம் லாபம் கிட்டும், திடீர் தனவரவுகள் தங்களின் வாழ்க்கையில் பலமாற்றங்களை தரும், எதிர்ப்பால் அமைப்பினர் மூலம் வாழ்க்கையில் மிகுந்த லாபம் மற்றும் பொருளாதார முன்னேற்றம் உண்டாகும், பொதுமக்களை ஆதாரமாக கொண்டு தொழில் புரியும் அன்பர்களுக்கு அபரிவிதமான லாபம் உண்டாகும், சனி பகவானின் 7ம் பார்வை ஆயுள் ஸ்தான வழியில் 100% விகித நன்மைகளை வாரி வழங்கும்.
11ம் பாவகத்தை தனது 10ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் விருச்சிக லக்கின அன்பர்களுக்கு அதிர்ஷ்டங்களை வாரி வழங்குவார், சத்ரு வழியில் இருந்தும் லாபத்தை பெரும் யோகம் உண்டாகும், தெய்வீக அனுக்கிரகம் மூலம் பல வழியில் இருந்து தன லாபங்கள் வந்துசேரும், எதிர்பாராத சொத்து சுக சேர்க்கை உண்டாகும், தன்னம்பிக்கையும் முற்போக்கு சிந்தனையும் தங்களின் வாழ்க்கையில் பலமடங்கு முன்னேற்றங்களை வாரி வழங்கும், இதுவரை போராட்டத்தை சந்தித்து கொண்டிருந்தவர்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தின் தாக்கம் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், தனது உறவுகள் வழியிலான உதவிகளும் பொதுமக்கள் ஆதரவும் புதியநம்பிக்கையை தரும், இதனால் தங்களின் உழைப்பின் வேகம் அதிகரிக்கும் முன்னேற்றம் என்பது மிகவும் அபரிவிதமாக அமையும், சனி பகவானின் 10ம் பார்வை லாப ஸ்தான வழியில் 100% விகித நன்மைகளை வாரி வழங்கும்.
குறிப்பு :
விருச்சிக லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 2,7,8,11ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 2,7,8,11ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் விருச்சிக லக்கின அன்பர்களுக்கு மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
சனி பகவான் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் காலங்கள் :
( 26/01/2017 முதல் 21/06/2017 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும்.
( 21/06/2017 முதல் 26.10.2017 ) வரை
சனி பகவான் மீண்டும் வக்கிரக கதியில் விருச்சிக ராசியிலும்.
( 26/10.2017 முதல் 24/01/2020 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும் சஞ்சாரம் செய்கின்றார்.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)











