குழந்தைபாக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குழந்தைபாக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 17 ஜனவரி, 2024
ஞாயிறு, 20 மார்ச், 2016
பித்ரு தோஷமும், குலதெய்வ சாபமும் நடைபெறும் அனைத்து அவயோக பலன்களுக்கு காரணமாக அமையுமா ?
"எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்"
என்ற பழமொழிக்கு ஏற்ப சுய ஜாதகத்தில் லக்கினமே பிரதானமாக அமைகிறது, லக்கினத்தை அடிப்படையாக கொண்டே மற்ற 11 பாவகங்களும் இயங்குகிறது என்றால், அது மிகையில்லை, ஒருவருக்கு நடைபெறும் யோக அவயோக பலன்களை வழங்குவதில் நிச்சயம் 12 பாவகங்களுக்கும் பங்குண்டு, இதில் ஜாதகருக்கு நடைபெறும் அவயோக பலன்கள் அனைத்திற்கும் பித்ரு தோஷம் மற்றும் குல தெய்வ சாபம் காரணமாக அமையும் என்பது சுய ஜாதக கணித அமைப்பிற்கு புறம்பானதாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது.
பெரும்பாலும், வேலை தொழில் முன்னேற்றம் இன்மை, திருமண தடை, குழந்தை பாக்கியம் இன்மை, ஆரோக்கியம் இன்மை, கல்வியில் தடை, பொருளாதார முன்னேற்றம் இன்மை போன்றவற்றிற்கு, குல தெய்வ சாபத்தையும், பித்ரு சாபத்தையும் காரணம் காட்டுவதுண்டு, இதுவும் தவறான அணுகுமுறையே, ஏனெனில் சுய ஜாதகத்தில் 5,9ம் பாவகங்கள் கடுமையாக பாதிக்க பட்டு, நடைபெறும் திசா புத்தியும் பாதிக்க பட்ட 5,9ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே இன்னல்களை தரும், தமது பாவக வழியில் இருந்து, 5ம் பாவகம் பாதிக்கப்படும் பொழுது ஜாதகர் தனது பூர்வீகத்தில் ஜீவனம் செய்ய இயலாத சூழ்நிலையை உருவாக்கும், ஜாதகரின் சமயோசித புத்திசாலித்தனம் ஜாதகருக்கு பயன்படாது, ஜாதகருக்கு உதவும் அன்பர்கள் யாரும் இருக்க மாட்டார்கள், குல தெய்வ ஆசி கிடைக்காது, தமது குழந்தைகள் வழியில் இருந்து இன்னல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தாராது.
9ம் பாவகம் பாதிக்கப்படும் பொழுது, ஜாதகருக்கு சுய அறிவுத்திறன் ஜாதகருக்கு பலன் தாராது, சொல்புத்தியும் இல்லை சுய புத்தியும் இல்ல என்ற நிலையை உருவாக்கும், கற்ற கல்வி ஜாதகருக்கு பலன் தாராது, ஆன்மீக பெரியோர் மற்றும் ஜாதகரின் முன்னோர்கள் ஆசியை பெறுவது என்பது இயலாமல் போகும், ஆன்மீகத்தில் ஈடுபாடு இல்லாமல், நாத்திகத்தில் ஆர்வத்தை தரும், நல்ல ஞானம் என்பது கிட்டாமல் சூன்யமான வாழ்க்கை அமைந்துவிடும், ஜாதகருக்கு போதிக்கும் அறிவுரை அனைத்தும் வீணாக போகும், பெரியோர்களையும் முன்னோர்களையும் நிந்தனை செய்யும் போக்கு ஜாதகருக்கு அதிகரிக்கும், நல்லோர் மற்றும் பெரியோர்களின் ஆதரவை பெறுவது என்பது ஜாதகருக்கு குதிரை கொம்பாக மாறிவிடும்.
1) ஆரோக்கியம்
ஆரோக்கிய பாதிப்பிற்கு சுய ஜாதகத்தில் 1,6,8,12ம் பாவகங்களின் வலிமை அற்ற நிலை காரணமாக அமையும், மேற்கண்ட பாவகங்கள் பாதிக்க படும்பொழுது ஜாதகரின் உடல் நலம் பாதிக்கும், அது சார்ந்த இன்னல்கள் அதிகரிக்கும், மேலும் நடைபெறும் திசா புத்திகள் பாதிக்கப்பட்ட மேற்கண்ட பாவகங்களின் பலனை ஏற்று நடத்தினால், ஜாதகருக்கு உடல் நல பாதிப்பு நிச்சயம் ஏற்ப்படும்.
2) கல்வி
கல்வியில் தடை எற்ப்பட சுய ஜாதகத்தில் 2,5,9ம் பாவகங்களின் வலிமை அற்ற நிலை காரணமாக அமையும், மேற்கண்ட பாவகங்கள் பாதிக்க படும்பொழுது, ஜாதகருக்கு கல்வியில் தடையும், முன்னேற்றம் இன்மையும் உண்டாகும், மேலும் நடைபெறும் திசா புத்திகள் பாதிக்கப்பட்ட மேற்கண்ட பாவகங்களின் பலனை ஏற்று நடத்தினால், ஜாதகரின் கல்வி,உயர் கல்வி முயற்ச்சிகள் தோல்வியை தரும்.
3) திருமணம்
திருமண வாழ்க்கையில் தடைகளுக்கும் தாமதத்திற்கும் சுய ஜாதகத்தில் 2,7ம் பாவகங்களின் வலிமை அற்ற நிலையே காரணமாக அமையும், மேற்கண்ட பாவகங்கள் பாதிக்க படும்பொழுது ஜாதகருக்கு திருமண தடை மற்றும் கால தாமத திருமணம் என்ற நிலையை தரும், மேலும் நடைபெறும் திசா புத்திகள் பாதிக்கப்பட்ட மேற்கண்ட பாவகங்களின் பலனை ஏற்று நடத்தினால், ஜாதகருக்கு நிச்சயம் திருமணம் சார்த்த தடைகளை தங்கு தடையின்றி வழங்கும்.
4) தொழில்
தொழில் மற்றும் பணியில் விருத்தி இன்மைக்கு காரணமாக சுய ஜாதகத்தில் 7,10ம் பாவகங்களின் வலிமை அற்ற நிலையே காரணமாக அமையும், மேற்கண்ட பாவகங்கள் பாதிக்க படும்பொழுது ஜாதகருக்கு நல்ல தொழில் அல்லது வேலை அமைவது என்பது குதிரை கொம்பாக மாறிவிடும், மேலும் நடைபெறும் திசா புத்திகள் பாதிக்கப்பட்ட மேற்கண்ட பாவகங்களின் பலனை ஏற்று நடத்தினால், ஜாதகருக்கு ஜீவனம் அமையாமல் போராட்ட வாழ்க்கையை வழங்கி விடும், தனித்தோ கூட்டு முயற்சியாகவே ஜாதகர் எவ்வித ஜீவனத்தையும் மேற்கொள்ள இயலாது.
5) குழந்தை பாக்கியம்
நல்ல வாரிசு அல்லது குழந்தை அமையாதது என்பது தம்பதியர் இருவரின் சுய ஜாதகத்தில் 1,5,9ம் பாவக வலிமை அற்ற நிலையே காரணமாக அமையும், மேற்கண்ட பாவகங்கள் பாதிக்க படும்பொழுது தம்பதியருக்கு நல்ல வாரிசோ அல்லது குழந்தை பாக்கியமோ அமைவதில் தடைகளை ஏற்ப்படுத்தும், மேலும் நடைபெறும் திசா புத்திகள் பாதிக்கப்பட்ட மேற்கண்ட பாவகங்களின் பலனை தம்பதியருக்கு ஏற்று நடத்தினால், புத்திர பாக்கியம் அமைவது என்பது அரிதாகிவிடும்.
6) பொருளாதாரம்
பொருளாதரத்தில் தடைகளும் இன்னல்களும் ஏற்ப்பட சுய ஜாதகத்தில் 1,2,4,7,10,11ம் பாவகங்களின் வலிமை அற்ற நிலையே காரணமாக அமையும், மேற்கண்ட பாவகங்கள் பாதிக்க படும்பொழுது ஜாதகருக்கு இலக்கின வழியில் இருந்து பலன்களை உதறும் தன்மையும், 2ம் பாவக வழியில் இருந்து வருமானத்தை முறையாக பயன்படுத்த இயலாத சூழ்நிலையும், 4ம் பாவக வழியில் இருந்து சுக போகம் மற்றும் வண்டி வாகனம் மற்றும் சொத்து சுகங்களை சுவீகாரம் செய்ய இயலாத சூழ்நிலையையும், 7ம் பாவக வழியில் இருந்து வாழ்க்கை துணை, நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் பொதுமக்கள் வழியில் இருந்து அதரவின்மையையும், எதிர்ப்புகளையும் சந்திக்கும் தன்மையை தரும், 10ம் பாவக வழியில் இருந்து நல்ல ஜீவனம் இன்மையையும், கௌரவ குறைவையும், சுய தொழில் செய்வதில் தோல்விகளையும் தரும், மேலும் நடைபெறும் திசா புத்திகள் பாதிக்கப்பட்ட மேற்கண்ட பாவகங்களின் பலனை ஏற்று நடத்தினால், ஜாதகரின் பொருளாதார தன்னிறைவு என்பது கானல் நீராக மாறிவிட வாய்ப்புண்டு.
எனவே ஆரோக்கியம்,கல்வி,திருமணம்,தொழில்,குழந்தைபாக்கியம் மற்றும் பொருளாதார தடைகளுக்கும், ஜாதகத்தில் நடைபெறும் அனைத்து அவயோக பலன்களுக்கு காரணமாக பித்ரு தோஷமும், குல தெய்வ சாபமுமே காரணம் என்று குற்றம் சாட்டுவது ஏற்புடையது அல்ல, சுய ஜாதகத்தில் 12 பாவகங்களின் வலிமைக்கு ஏற்ப்பவே பலாபலன்கள் நடைமுறைக்கு வருகின்றது என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது அன்பர்களே! மேலும் சுய ஜாதகத்தில் பாதிக்க பட்ட பாவகங்கள் எவை எவை என்பதை உணர்ந்து சம்பந்த பட்ட பாவகங்கள் வலிமை பெறுவதற்கு உண்டான தேடுதல்களை செய்வதே சகல நன்மைகளையும் தரும்.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015
பூர்வ புண்ணிய ஸ்தான வலிமையும், ஜாதகரின் மதிநுட்பமும் !
வாழ்க்கையில் அறிவு சார்ந்த விஷயங்களில் புதுமையான அணுகுமுறையும், புதிய திட்டங்களை நடைமுறைபடுத்தி பல வியக்கத்தக்க வெற்றிகளை குவிக்க வைக்கும் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவக வலிமையை பற்றி இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே! "கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு" என்ற வாக்கிற்கு இணங்க சுய ஜாதகத்தில் அதி புத்திசாலிதனமான நுண் அறிவுக்கும், 64 கலைகளில் தேர்ச்சிக்கும் வழிகோலுவது பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகமே என்றால் அது மிகையில்லை, 5ம் பாவகம் வலிமை பெற்ற ஜாதகருக்கு, நடைமுறையில் உள்ள திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் வலிமை பெற்ற 5ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் ஜாதகரின் அறிவு திறனுக்கும், புதிய அணுகுமுறைக்கும் பஞ்சமே இருக்காது, மேலும் ஜாதகரின் சமயோசித புத்திசாலிதனத்தால் ஆதாயம் என்பது பன்மடங்கு கூடும் என்பது கவனிக்க தக்கது, பலவிதமான புதிய விதிகளை உலகிற்கு அறிமுகம் செய்யும் வல்லமையை தந்துவிடும்.
ஜாதகரின் புதிய கண்டுபிடிப்புகள் பூமியில் உள்ள மனிதர்களின் வாழ்க்கையில் பங்கெடுக்கும், மனித குலத்திற்கு பெருமைசேர்க்கும், அனைவருக்கும் பயன்படும் விதத்தில் இவர்களின் கண்டுபிடிப்புகள் பயனுள்ளதாக அமையும், புதிய சிந்தனை மற்றும் புதிய மாற்றங்களுக்கு உரிமை கொண்டாடும் தனித்திறமைகளை தன்னகத்தே கொண்டுள்ள அன்பர்களின் ஜாதகங்களில், 5ம் பாவக வலிமையை நாம் உணர இயலும், இயற்கையாகவே இவர்களின் சிந்தனை மற்றும் கேள்விகளுக்கு சரியான பதில்களை இந்த பிரபஞ்சம் வாரி வழங்கும், எவ்வித பிரச்சனைகள் மற்றும் இன்னல்களுக்கும் சரியான தீர்வுகளை, சரியான நேரத்தில் வழங்கும் வல்லமை கொண்டவர்கள், சிறு வயதுமுதலே அறிவுத்திறனில் சிறந்து விளங்கும் யோகம் பெற்றவர்கள், பன்முக திறமை சாஸ்திர அறிவு, சாஸ்திரத்தில் தேர்ச்சி, கற்ற கல்வியை தனது முன்னேற்றத்திற்கும் தன்னை சார்ந்தவர்களின் முன்னேற்றத்திற்கும் பயன்படுத்தும் யோகம் பெற்றவர்கள், குறிப்பாக 5ம் பாவகம் வலிமை பெற்றுள்ள அன்பர்கள் பெரும் யோகத்தை விட, இவரை சார்ந்தவர்கள் பெரும் யோகம் மிகவும் அளப்பரியதாக அமையும் என்பது கவனிக்க தக்கது.
குல தெய்வத்தின் பரிபூர்ண ஆசிகளின் மூலம் வாழ்க்கையில் சகல நலன்களையும் பெரும் யோகத்தை தரும், வருமுன் உணரும் சில சிறப்பு சக்திகள் இயற்கையாகவே அமையபெற்று இருப்பார்கள், வாக்கு பலிதமும், உள்மனதின் எண்ண ஓட்டங்களை தெளிவாக உணரும் யோகம் பெற்றவர்கள், யோகம்,தியானம்,தவம் மூன்றிலும் தேர்ச்சி பெறுவார்கள், சிந்தனை திறனும் செயல்திறனும் ஒருங்கே அமையபெற்றவர்கள், ஆராய்ச்சிகளில் வெற்றியும் புகழும் உண்டாகும், கலைத்துறையில் சிறந்து விளங்கும் யோகம் உண்டு, இயல், இசை, நாடக துறைகளில் அபரிவிதமான தேர்ச்சியை தரும், உலக புகழ் பெரும் யோகமும், சுய முயற்ச்சியிலேயே தன்னிறைவான வாழ்க்கை வசதிகளையும் அனுபவிக்கும் தன்மையும், மிகப்பெரிய நிறுவனங்களையும், சாம்ராஜ்ஜியத்தையும் உருவாகும் சிற்ப்பிகளாக திகழ்வார்கள்.
பொதுவாக பூர்வபுண்ணிய ஸ்தானம் வலிமை பெறுவது குறிப்பிட்ட ஜாதகருக்கு சிறந்த புத்திர பாக்கியத்தை நல்குகிறது, தனக்கு பிறகு தனது எண்ணங்களையும் லட்சியங்களையும் நிறைவேற்றும் விதமான வாரிசு அமைப்பை ஜாதகர் பெறுகிறார், ஜாதகருக்கு பிறக்கும் குழந்தையும் நல்ல அறிவு திறனும், புத்திசாலித்தனமும் நிரம்பபெற்ற குழந்தையாகவே அமைவது சுய ஜாதகத்தில் உள்ள புத்திர ஸ்தான வலிமையே, " தோன்றின் புகழோடு தோன்றுக" என்ற வள்ளுவரின் வாக்கிற்கு இணங்க ஜாதகரும், ஜாதகரின் வாரிசும் நல்லறிவும் நல்ல குணமும், பரந்த மனப்பக்குவமும் பெற்று இருப்பார்கள், இவர்களின் வாழ்க்கையில் 5ம் பாவக பலன்கள் நடைமுறையில் வரும் பொழுது கலைகளில் தேர்ச்சி, கல்வியில் வெற்றி, போட்டி பந்தையங்களில் சிறப்பான வெற்றிகள், சமுதாயத்தில் தனது அறிவுக்கும் ஆற்றலுக்கும் அங்கீகாரம், அரசு ஆதாயம் என மிகுந்த நன்மைகளை பெறுவார்கள்.
5ம் பாவக வலிமை என்பது தனது சந்ததிகளையும், தம்மை சார்ந்தவர்களையும் வாழ்க்கையில் தன்னிறைவான சுகபோகங்களை அனுபவிக்க வைக்கும் அறிவும், புத்திசாலித்தனமும் கொண்டவர்களாக இருப்பார்கள், குறிப்பாக பல கோடிரூபாய் செலவு செய்யுங்கள், ஆனால் ஒரு ரூபாய்கூட விரையம் செய்தீர்கள் என்ற வார்த்தைக்கு உதாரணமாக திகழ்வார்கள், இதை போன்றே இவர்களுக்கு சம்பாத்தியம் என்பது மிக கடினமான விஷயமாகவே இருக்க வாய்ப்பில்லை, அதேசமயம் சத்தியம் வாய்மையை காப்பாற்றும் குணம் கொண்டவர்கள், இவர்களின் செயல்களினால் எந்த ஒரு சிறு இன்னல்களும் மற்றவர்களுக்கு ஏற்ப்படாவண்ணம் பார்த்துகொல்வதில் கைதேர்ந்தவர்கள், வியாபாரத்தில் பல நுணுக்கமான விஷயங்களை கையாளும் திறமை பெற்றவர்கள்.
முற்போக்கு சிந்தனையும், வருமுன் காக்கும் திட்டமிடுதல்களுடன் செயல்படும் அன்பர்கள், மன உறுதி, மனோதிடம் நிறைவாக பெற்றவர்கள் என்பதால் எந்த ஒரு காரியத்தையும் உறுதியாக தன்னம்பிக்கையுடன் செய்து வெற்றி பெரும் யோகம் கொண்டவர்கள், வாழ்க்கையில் ஏற்ப்படும் எதிர்ப்பு மற்றும் போராட்டங்களை தகர்த்தெறிந்து, தெளிவான சிந்தனையுடனும் உறுதியான மன நிலையுடன் வாழ்க்கையை சிறப்பாக எதிர்கொள்ளுவார்கள், இவர்களின் ஆலோசனையின் பெயரில் நடைபோடும் அனைவருக்கும், பல வெற்றிகள் வாழ்க்கையில் வந்து குவியும் என்பது மறுக்க இயலாத உண்மை, மேலும் சிறந்த குடும்ப நல ஆலோசகர், ஆசிரியர், மருத்துவர், வழக்கறிஞர், ஜோதிடர் போன்றோர் ஒருவருக்கு சரியாக அமைவதும் 5ம் பாவக வலிமையே, சரியான கால நேரம் அறிந்து செயலாற்றுவதும், தனக்கு அமைந்த நேரத்தை சிறந்த நேரமாக மாற்றும் வல்லமை பெற்றவர்கள்.
எந்த ஒரு ஜாதகத்திலும் பூர்வபுண்ணிய ஸ்தானம் எனும் 5ம் பாவகம் வலிமை பெற்று அமைவது, குறிப்பிட்ட ஜாதகத்தில் மற்ற பாவகங்களில் இருந்து வரும் இன்னல்களை களைந்து வாழ்க்கையில் வெற்றி நடை போடவைக்கும், ஜாதகருக்கு அறிவு திறனும், புத்திசாலித்தனமும் மிதமிஞ்சி நிற்கும், மேலும் சுய ஜாதகத்தில் எந்த லக்கினம் என்றாலும், காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் வீடான சிம்ம ராசி ( சிம்ம ராசி எந்த பாவகமாக அமைந்தாலும் அந்த பாவகம் வலிமை பெறுவது ) வலிமை பெற்று அமைவது ஜாதகருக்கு ஒரு வரபிரசாதமே, தனக்கு வரும் அனைத்து பிரச்சனைகளுக்கும் இன்னல்களுக்கும் சுயமாகவே தீர்வு கண்டு வாழ்க்கையில் வெற்றி காண்பார்கள், பல்துறை அறிவும், ஒரே நேரத்தில் பலவிஷயங்களில் கவனம் செலுத்தும் வல்லமையை தரும், 5ம் பாவக வலிமை தனக்கு நிகராக வேறொருவரும் இல்லை என்ற நிலையை தரும், உலகில் தனித்து வெற்றிகரமாக இயங்கும் சக்தியை இறைஅருள் மற்றும் இயற்க்கை இவர்களுக்கு அளித்த கொடையாகவே கருதலாம்.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
ஞாயிறு, 14 டிசம்பர், 2014
குழந்தை பாக்கியமும், பூர்வபுண்ணிய ஸ்தானமான ஐந்தாம் பாவக வலிமையையும் !
தனது குலம் செழிக்கவும், தனக்கு பின் தனது பெயர் சொல்லவும் ஒரு நல்ல வாரிசு வேண்டும் என்று தேடுதல் இல்லாத தம்பதியரை இப்புவியில் காண்பது அரிது, எவ்வளவோ மருத்துவ முன்னேற்றம் வந்த போதிலும் திருமணம் நடைபெற்று பல வருடங்கள் ஆகியும், ஒரு வாரிசுக்காக ஏங்கும் தம்பதியர் நிறைய உண்டு, பல மருத்துவர்களை பார்த்தும் புத்திர பாக்கியம் அமையாத தம்பதியரும், பல திருத்தலங்களுக்கு சென்றும் குழந்தை பாக்கியம் கிட்டாமல் வாடும் தம்பதியரும் உள்ளனர், இந்த பதிவில் புத்திர பாக்கியம் அமையாமல் தனது குலம் தழைக்க ஒரு நல்ல வாரிசு அமையாத நிலைக்கு காரணம் என்னவென்பதை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே.
குழந்தை பாக்கியம் இல்லை என்று ஜாதகம் காண வரும் அன்பர்களுக்கு, ஜோதிடர்கள் சொல்லும் முதல் பரிகாரம் அவர்களது குல தெய்வம் எதுவோ அதற்க்கு முறையான வழிபாட்டையும், தான தர்மங்களையும் செய்யுமாறு அறிவுரை கூறுவது உண்டு, பொதுவாக குழந்தை பாக்கியம் அமையாத நிலைக்கு அடிப்படை காரணமாக குல தெய்வ சாபம் மற்றும் முறையான குல தெய்வ வழிபாடு செய்யாதது என்று அறிவுறுத்த படுகிறது.
குல தெய்வ சாபம் என்றால் என்ன ?
1 சம்பந்தபட்ட தம்பதியரோ அல்லது அவர்களது முன்னோர்களோ வெகு காலமாகவோ, தலை முறை தலை முறையாக தனது குல தேவதைக்கு ஆற்ற வேண்டிய கடமைகளில் இருந்து தவறி நடப்பதால் வரும் சாபம் என்று வைத்து கொள்ளலாம்.
2 சம்பந்தபட்ட தம்பதியரின் முன்னோர்கள் தனக்கு பிறந்த குழந்தை பெண் என்பதால், அதன் உயிருக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவது ( அதாவது சிசு கொலை )
3 சம்பந்தபட்ட தம்பதியரின் முன்னோர்கள் தனக்கு இறை அருளால் அமைந்த கருவை, தனது சௌகர்யத்திற்காக கருசிதைவு செய்து கொள்ளுதல். ( இது தம்பதியருக்கும் பொருந்தும்.)
4 கருவுற்ற பெண் வந்து யாசிக்கும் பொழுது அவர்களுக்கு இல்லை என்று சொல்வதும், அவர்களை உதாசீனபடுத்துவதும் குல தெய்வ சாபத்திற்கு வழிவகுக்கும்.
5 பசு அதன் கன்று குட்டியை பிறந்தவுடன் பிரிப்பதும், பசுவிற்கு துன்பம் இளைப்பதும், பசு தந்த பாலில் நீர் கலந்து விற்பதும், பச்சிளம் குழந்தைக்கு கொடுப்பதும் குல தெய்வ சாபத்திற்கு அடிகோலும்.
6 கற்று கொடுத்த குருவுக்கு இன்னல் தருவதும், துரோகம் செய்வதும், சாஸ்திரம் அறிந்த பெரியோர்களை அவமதிப்பதும், இறைபணியில் அர்ப்பணித்து கொண்டவர்களின் வாழ்க்கையில் இன்னல்களை ஏற்ப்படுத்துவதும், குல தெய்வ சாபத்திற்கு வழிவகுக்கும்.
7 பெற்றோர்களை நிந்தனை செய்வதும், இயலாமல் இருக்கும் பெரியோரின் சொத்துகளை அபகரிப்பதும் குல தெய்வ சாபத்திற்கு வழிவகுக்கும்.
8 தன்னை நாடிவரும் பெண்களுக்கு தீங்கு விளைவிப்பதாலும், கட்டிய மனைவியை நிந்தனை செய்வதாலும் குல தெய்வ சாபத்திற்கு ஆளாகும் சூழ்நிலையை தரும்.
9 சிறு வயதிற்கு உற்பட்ட குழந்தைகள் அனைவரும் குல தேவதையின் அம்சம் என்பதால், அவர்களுக்கு உணவு தர மறுப்பதாலும் குல தெய்வ சாபம் ஏற்ப்பட வாய்ப்பு உண்டு.
10 ஆன்மீக பெரியவர்களை நிந்தனை செய்வதும், அவர்களுக்கு எண்ணத்தாலும் செயலாலும் துன்பம் விளைவிப்பதும் குல தெய்வ சாபத்திற்கு ஆளாக்கும்.
11 சர்ப்பங்களை கொள்வதும் ஒருவகையில் குல தெய்வ சாபத்திற்கு ஆளாக்கும், புத்திர பாக்கியத்தில் தடை செய்யும்.
12 சேர்ந்து வாழும் தம்பதியரை பிரிப்பதும் குல தெய்வ சாபத்தை பெற வழிவகுக்கும்.
மேற்கண்ட காரணங்கள் குல தெய்வ சாபத்திற்கும், புத்திர பாக்கியத்தில் தடை உண்டாகவும் வாய்ப்புகளை ஏற்ப்படுத்தும், மேலும் சுய ஜாதகத்தில் புத்திர ஸ்தானமான 5ம் பாவகம் பாதிக்கப்படும் பொழுது ஜாதகருக்கு உதவி செய்ய எவரும் முன்வரமாட்டார்கள் என்பது கவனிக்க தக்கது அன்பர்களே.
மேற்கண்ட விஷயங்கள் குல தெய்வ சாபத்திற்கு காரணமாக அமைந்த போதிலும், இதில் அதிக இன்னல்களை தருவது உடனடியாக குல தெய்வ சாபத்திற்கு ஆளாக்குவது " சிசு கொலை, கருகலைப்பு " ஆகிய இரண்டு மட்டுமே மிகுந்த துன்பத்திற்கு ஆளாக்கும், பிறக்கும் பெண் சிசு யாவும் அவர்களது குல தேவதையை குறிக்கும், கருவில் உள்ள குழந்தைகள் யாவும் அவர்களது குலதெய்வமாகவே விளங்கும் என்பதால், இவற்றிற்கு விளைவிக்கும் துன்பங்கள் யாவும் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வரும், இதற்க்கு தீர்வு காண்பது என்பதும் அவ்வளவு எளிதல்ல என்பதை நாம் அனைவரும் உணர்வது அவசியம், ஏனெனில் நமக்கு பின் வரும் சந்ததிக்கு புண்ணி பதிவை சேர்த்து வைக்காவிட்டாலும் சரி பாவ பதிவை சேர்த்து வைக்காமல் போவது நல்லது, நாம் செய்யும் தவறு நமக்கு பின் வருபவர்களுக்கு இன்னல்களை தர கூடாது அல்லவா ?
இனி தனது சுய ஜாதக அடிப்படையில் புத்திர பாக்கியம் உண்டா ? அதற்க்கு தடைகள் உள்ளனவா ? என்பதை சுய ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவது அவசியமாகிறது, பொதுவாக சுய ஜாதகத்தில் புத்திர பாக்கியத்தை குறிக்கும் ஐந்தாம் பாவகம் எக்காரணத்தை கொண்டும் பாதிப்பை பெறாமல் இருப்பது நல்லது, இது தம்பதியர் இருவருக்கும் பொருந்தும், குறிப்பாக ஐந்தாம் பாவகம் அவர்களது லக்கினத்திற்கு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ( சர லக்கினத்திற்கு பாதக ஸ்தானம் 11ம் வீடு, ஸ்திர லக்கினத்திற்கு பாதக ஸ்தானம் 9ம் வீடு, உபய லக்கினத்திற்கு பாதக ஸ்தானம் 7ம் வீடு ) புத்திர பாக்கியத்தை கேள்விக்குறியாக்கும், ஐந்தாம் பாவகம் 6,8,12ம் பாவகங்களுடன் சம்பந்தம் பெறுவதும் மிகுந்த இன்னல்களையே தரும், இதை போன்றே கால புருஷ தத்துவ அமைப்பிற்கும் 5ம் பாவகமான சிம்மம் பாதிப்பை பெறுவதும் குழந்தை பாக்கியத்தை கடுமையாக பாதிக்கும், மேற்கண்ட விஷயங்கள் யாவும் தம்பதியர் இருவரின் சுய ஜாதக அமைப்பிற்கும் பொருந்தும்.
ஒருவரது சுய ஜாதகத்தில் புத்திர ஸ்தானமான 5ம் பாவகம் பாதிக்கப்படும் பொழுது ஜாதகர் தனது பூர்வீகத்தில் வசிப்பதற்கு தடைகளை தொடர்ந்து தந்த வண்ணமே இருக்கும், ஜாதகரின் அறிவு சார்ந்த முயற்ச்சிகள் யாவும் வெறும் திட்டத்துடனே முடியும், நடைமுறைக்கு வருவதற்கு உண்டான வாய்ப்பை தாராது, ஜாதகரின் எண்ணங்கள் யாவும் வெறும் கற்பனையாகவோ கனவாகவோ மாறிவிட வாய்ப்பு உண்டு, இதை தவிர குழந்தை பாக்கியத்திற்கு எடுக்கும் அனைத்து முயற்ச்சிகளும் பலன் தாராமால் ஜாதகர் மற்றும் ஜாதகரை சார்ந்தவர்கள் வெகுவாக மனபோரட்டத்திர்க்கு ஆளாகும் சூழ்நிலையை தர கூடும், இவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்யும் அன்பர்களும் இருக்கமாட்டார்கள் என்பது கவனிக்க தக்கது, தனிமையில் போராட்ட வாழ்க்கையை வாழும் சூழ்நிலைக்கு ஆளாக்கும், மேற்க்கண்ட விஷயங்கள் 5ம் பாவகத்தின் வலிமை அற்ற தன்மையால் நடைபெறும் என்பதை இவர்களது சுய ஜாதகத்தை ஆய்வு செய்தால் நமக்கு நிச்சயம் புலப்படும்.
இன்றைய நவநாகரீக உலகத்தில் இளம் தம்பதியர் தனது விருப்பத்திற்கு ஏற்றவாறு குழந்தை பெற்றுகொள்ள, கருக்கலைப்பு என்ற ஒரு விஷயத்தை சர்வ சாதரணமாக செய்கின்றனர், இதன் விளைவு அவர்களுக்கு தெரிவதில்லை இதனால் ஏற்ப்படும் விளைவுகளின் தன்மை மிகவும் கடுமையானதாக இருக்கும், உதாரணமாக வீட்டில் செல்வ வளம் குறைந்து தரித்திர நிலை உருவாகும், குல தெய்வ சாபத்தால் ஜாதகருக்கு மிக எளிதில் கிடைக்கும் விஷயங்களுக்கு கூட போராடி பெரும் சூழ்நிலையை தரும், சுய முன்னேறம் வெகுவாக பாதிக்கும், தனது சந்ததிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கும், உடல் நல குறைபாட்டை தரும், மருத்துவ செலவினங்களை அதிகரிக்கும், ஒற்றுமையாக இருந்த தம்பதியர் திடீரென பிரியும் சூழ்நிலையை தரும், எதிர்பாராத விபத்துகள் மூலம் உடல் நல குறைவு, பொருள் இழப்பு போன்றவை ஏற்ப்பட வாய்ப்பு உண்டாகும், இது போன்ற நிகழ்வுகள் நடைபெறும் பொழுது சம்பந்த பட்ட ஜாதகருக்கு யாரும் உதவி செய்ய முன்வரமாட்டார்கள் என்பதே வருத்தத்திற்கு உரியது அன்பர்களே, எனவே இதுபோன்ற சந்தர்ப்பங்களை நீங்களே உருவாக்கி கொண்டு பின்னலில் வருத்தம் கொள்வதனால் எவ்வித பயனும் இல்லை என்பதே ஜோதிடதீபத்தின் கருத்து.
அடுத்த பதிவில் 5ம் பாவக வலிமையை சுய ஜாதக ரீதியாக நிர்ணயம் செய்வது பற்றி சிந்திப்போம் அன்பர்களே ........
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
வியாழன், 11 ஏப்ரல், 2013
பூர்வபுண்ணிய பாதிப்பும், புத்திர பாக்கியம் எனும் ஆண் வாரிசு யோகமும் !
சுய ஜாதக ரீதியாக ஒருவருடைய ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் 100 சதவிகித வலிமை பெறுவது ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும் அமைப்பாக கருதலாம் , எடுத்துகாட்டாக ஒருவர் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் எனில் பூர்வ புண்ணியம் வலிமை பெற்று இருக்க வேண்டும் , நல்ல நினைவாற்றல் , தன்னம்பிக்கை , உறவுகள் அல்லாத மற்றவர்களின் ஆதரவு , தெளிவான சிந்தனை திறன் மற்றும் செயல்பாடுகள் , வருமுன் கணிக்கும் புத்திசாலித்தனம் , தனது முன்னோர்களின் சொத்து சுகங்களை பெரும் யோகம் , முன்னோர்களின் நல்ல குணங்களை தான் அப்படியே பெற்று இருக்கும் அமைப்பு என்ற அமைப்பில் மிகுந்த நன்மைகளை வாரி வழங்குவது பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகமே என்றால் அது மிகையாகாது .
இவ்வளவு மேன்மைகள் பெற்ற பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் ஒருவருடைய ஜாதகத்தில் புத்திர சந்தானம் எனும் குழந்தை பாக்கியத்தை நிர்ணயம் செய்கிறது என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் , சுய ஜாதகத்தில் ஒருவருக்கு பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் நல்ல நிலையில் இருப்பது தனது வம்சம் விருத்தி பெற எவ்வித தடையும் இல்லாமல் ( ஆண் ) குழந்தை பாக்கியத்தை வழங்கும் , இதில் சில விதி முறைகள் உண்டு , தம்பதியர் இருவரது ஜாதக அமைப்பிலும் புத்திர ஸ்தானம் வலிமை பெறுவது நன் மக்கட்பேரை தரும் , மேலும் ஜாதகர் தனது பூர்வீகத்தை விட்டு வெளியில் சென்று ஜீவனம் செய்யாமல் இருப்பது மிகுந்த நன்மையை தரும் .
பூர்வ புண்ணியம் நல்ல நிலையில் இருந்து அந்த ஜாதகர் தனது பூர்வீகத்தை விட்டு வெகு தொலைவு சென்று ஜீவனம் செய்துகொண்டு இருக்கிறார் என்ற ஒரு நிலை வரும் பொழுது , ஜாதகருக்கு (ஆண் வாரிசு ) புத்திர சந்தானத்தில் குறை வர வாய்ப்பு உண்டு ஏனெனில் ஜாதகரின் ( நல்ல நிலையில் இருக்கும் ) தனது பூர்வீகத்தை விட்டு வெளியிடங்களில் சென்று ஜீவனம் செய்வது , பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு உண்டான பலன்கள் ஜாதகருக்கு வாழ்நாள் முழுவதுமே நடை பெறாமலே நின்று விடக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு, மேலும் ஜாதகர் தனது பூர்வீகத்தை விட்டு வெளியில் இருக்கிறார் என்றால் நிச்சயம் ஜாதகருக்கு கிடைக்க வேண்டிய நன்மையான பலன்கள் அதிக அளவில் தடை படும் என்பதே உண்மை .
மேலும் பூர்வ புண்ணியம் வலிமை பெற்று நல்ல நிலையில் அமர்ந்து பூர்வ புண்ணிய ஸ்தானம் சர ராசியாக இருப்பின் விரைவான குழந்தை பாக்கியத்தையும் , ஸ்திர ராசியாக இருப்பின் சில மாதங்களிலும் , உபய ராசியாக இருப்பின் சில வருடங்களிலும் நிச்சயம் குலம் விருத்தி பெற ஆண்வாரிசை தந்துவிடும் , எனவே சுய ஜாதக ரீதியாக புத்திர ஸ்தானம் வலிமை பெற்ற அன்பர்கள் எதற்காகவும் கவலை கொள்ள தேவையில்லை .
ஆனால் பூர்வ புண்ணியம் பாதிப்படைந்த அன்பர்கள் ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் ஸ்தானம் சர ராசியாக இருப்பின் தம்பதியர் இருவரின் உடல் ரீதியான மருத்துவ காரணங்களாலும் , குலதேவதை நிந்தனையின் காரணங்களாலும் , முன்னோர்கள் ,சாதுக்கள் , ஐந்தறிவு ஜீவன்களின் சாபத்தாலும், மற்றும் பெண்களின் சாபத்தாலும் தம்பதியருக்கு குழந்தை பாக்கிய தடையை தரக்கூடும் .
பூர்வ புண்ணியம் பாதிப்படைந்த அன்பர்கள் ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் ஸ்தானம் ஸ்திர ராசியாக இருப்பின் ஜாதகரின் ஜீவிக்கும் இடமும் அல்லது தனது பூர்வீகத்தில் குடியிருப்பதாலும் , தம்பதியரின் விருப்பத்தின் பேரில் குழந்தை பிறப்பை தாமதபடுத்துவத்தின் காரணத்தாலும், தம்பதியர் இருவரும் எடுக்கும் தவறான முடிவுகளின் காரணத்தாலும் , தனது குடும்பத்தில் உள்ளவர்களின் தவறான போதனை மற்றும் வழிகாட்டுதலின் காரணத்தாலும் தம்பதியருக்கு குழந்தை பாக்கிய தடையை தரக்கூடும் .
பூர்வ புண்ணியம் பாதிப்படைந்த அன்பர்கள் ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் ஸ்தானம் உபய ராசியாக இருப்பின் ஜாதகர் மற்றவர்களுக்கு இழைக்கும் அநீதிகளாலும் , மற்றவர் பொருளுக்கு விருப்பபட்டு அவர்களை ஏமாற்றுவதினாலும் , தனது பெற்றோரை , சகோதரர்களை , ரத்த உறவுகளை ஏமாற்றுவதினாலும் , தனது குல தேவதையை முறையாக வழிபாடு செய்யாமல் விடுவதினாலும் , பித்ரு கடமைகளை முறையாக கடைபிடிக்காமல் விடுவதினாலும், தம்பதியருக்கு குழந்தை பாக்கிய தடையை தரக்கூடும்.
எனவே அவரவர் சுய ஜாதகத்தின் தன்மையை உணர்ந்து , முறையான செயல்பாடுகளையும் , வழிபாடுகளையும் சரியாக செய்தால் அவர்களுக்கு உறுதியாக இறை அருளின் கருணையினால் தனது குலம் விளங்க புத்திர சந்தானம் உண்டாகும் என்பதில் சந்தேகம் இல்லை என்பது ஜோதிடதீபத்தின் கருத்து , ஒருவரது சுய ஜாதகத்தில் இந்த புத்திர ஸ்தானம் எந்த நிலையில் உள்ளது என்பது பற்றி நாம் அடுத்த பதிவில் சற்றே சிந்திப்போம் அன்பர்களே !
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443306969
சனி, 20 அக்டோபர், 2012
புத்திர தோஷம் எனும் குழந்தை பாக்கியம் அற்ற நிலையை எப்படி நிர்ணயம் செய்வது ?
ஐயா வணக்கம்,
கேள்வி :
கேள்வி :
1.ஒரு ஜாதகரின் குழந்தைகளை நிர்ணயிப்பதற்கு ஒருவர் ஜாதகம் மட்டுமே போதுமா?அல்லது கணவன்,மனைவி இருவர் ஜாதகமும் சேர்த்து பார்த்தால்தான் முடிவுசெய்யமுடியுமா?
பதில் :
நிச்சயமாக தம்பதியர் இருவரின் ஜாதகமும் தேவை , இவருடைய ஜாதக அமைப்பை வைத்து மட்டுமே குழந்தை பாக்கியம் என்ற பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் தன்மையை நிர்ணயம் செய்ய முடியும் , அதன் அடிப்படையிலேயே குழந்தை பாக்கியம் உண்டா ? இல்லையா என்று தெளிவாக தெரிந்து கொள்ள இயலும் . ஒருவரின் ஜாதக அமைப்பை மட்டும் வைத்து குழந்தை பாக்கியத்தை நிர்ணயம் செய்வது என்பது ஒரு கை ஓசைக்கு சமமானது அன்பரே ! மேலும் தம்பதியரின் சுய ஜாதக அமைப்பில் ஒருவருக்கு புத்திர ஸ்தானம் கடுமையாக பாதிக்க பட்டு இருந்தாலும் , ஒருவருக்கு வலிமையுடன் இருந்தால் நிச்சயம் பெண் குழந்தைக்கு கிடைப்பதற்கு உண்டான வாய்ப்பு நிச்சயம் உண்டு . இதிலிருந்து ஒருவருக்காவது புத்திர ஸ்தானம் நல்ல நிலையில் இருப்பது அவசியம் . இருவருக்கும் புத்திர ஸ்தானம் நல்ல நிலையில் இருந்து ஆண் குழந்தை இல்லத்திற்கு காரணம் தம்பதியர் தங்களுக்கு உகந்த திசை வாயிற்படி கொண்ட வீடுகளில் குடியிருக்காமல் , பாதகத்தை தரும் வாயிர்ப்படி கொண்ட வீடுகளில் குடியிருப்பது மட்டுமே காரணமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை .
கேள்வி :
சில தம்பதிகளுக்கு ஆண்குழந்தைகளே பிறக்கின்றன.
பதில் :
தம்பதியரின் ஜாதக அமைப்பில் புத்திர ஸ்தானம் 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருக்கும் , அதாவது புத்திர ஸ்தானம் சர ராசியுடன் சம்பந்தம் பெற்று 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருக்கும் அல்லது , புத்திர ஸ்தானம் சர ராசியாக இருந்து புத்திர ஷ்தானதுடன் சம்பந்தம் பெற்று 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருந்து , ஜாதகர் தனது பூர்வீகத்திலேயே குடியிருந்தால் , நிச்சயம் ஆண் குழந்தைகளாக பிறக்கும் . மேற்கண்ட அமைப்பில் இருந்து அதாவது ஜாதகர் பூர்வ புண்ணியம் வலிமை பெற்று இருந்து, தனது பூர்விகத்தை விட்டு வெளியே சென்று குடியிருந்தால் , ஜாதகருக்கு பெண் குழந்தைகளாகவே பிறக்க கூடும் , தனது பூர்வீகத்திற்கு திரும்ப வந்தவுடன் ஆண் வாரிசு நிச்சயம் அமையும் , இதையெல்லாம் சுய ஜாதகம் கொண்டே பலன் நிர்ணயம் செய்ய முடியும் .
தம்பதியரின் ஜாதக அமைப்பில் புத்திர ஸ்தானம் 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருக்கும் , அதாவது புத்திர ஸ்தானம் சர ராசியுடன் சம்பந்தம் பெற்று 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருக்கும் அல்லது , புத்திர ஸ்தானம் சர ராசியாக இருந்து புத்திர ஷ்தானதுடன் சம்பந்தம் பெற்று 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருந்து , ஜாதகர் தனது பூர்வீகத்திலேயே குடியிருந்தால் , நிச்சயம் ஆண் குழந்தைகளாக பிறக்கும் . மேற்கண்ட அமைப்பில் இருந்து அதாவது ஜாதகர் பூர்வ புண்ணியம் வலிமை பெற்று இருந்து, தனது பூர்விகத்தை விட்டு வெளியே சென்று குடியிருந்தால் , ஜாதகருக்கு பெண் குழந்தைகளாகவே பிறக்க கூடும் , தனது பூர்வீகத்திற்கு திரும்ப வந்தவுடன் ஆண் வாரிசு நிச்சயம் அமையும் , இதையெல்லாம் சுய ஜாதகம் கொண்டே பலன் நிர்ணயம் செய்ய முடியும் .
கேள்வி :
சில தம்பதிகளுக்கு பெண் குழந்தைகளே பிறக்கின்றன.
பதில் :
தம்பதியரின் ஜாதக அமைப்பில் புத்திர ஸ்தானம் 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருக்கும் , அதாவது புத்திர ஸ்தானம் உபய ராசியுடன் சம்பந்தம் பெற்று 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருக்கும் அல்லது , புத்திர ஸ்தானம் உபய ராசியாக இருந்து புத்திர ஷ்தானதுடன் சம்பந்தம் பெற்று 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருந்து , ஜாதகர் தனது பூர்வீகத்திலேயே குடியிருந்தால் , நிச்சயம் பெண் குழந்தைகளாக பிறக்கும் .
கேள்வி :
சில தம்பதிகளுக்கு இரண்டுமே பிறக்கின்றன.
சில தம்பதிகளுக்கு இரண்டுமே பிறக்கின்றன.
பதில் :
தம்பதியரின் ஜாதக அமைப்பில் புத்திர ஸ்தானம் 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருக்கும் , அதாவது புத்திர ஸ்தானம் ஸ்திர ராசியுடன் சம்பந்தம் பெற்று 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருக்கும் அல்லது , புத்திர ஸ்தானம் ஸ்திர ராசியாக இருந்து புத்திர ஷ்தானதுடன் சம்பந்தம் பெற்று 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருந்து , ஜாதகர் தனது பூர்வீகத்திலேயே குடியிருந்தால் , ஆண் பெண் என்று இரண்டு விதமான குழந்தைகளையும் பெரும் யோகம் உண்டாகும் .
கேள்வி :
சில தம்பதிகளுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கின்றன.
சில தம்பதிகளுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கின்றன.
பதில் :
இது மேற்கண்ட அமைப்பில் புத்திர ஸ்தானம் நல்ல நிலையில் இருந்து , கருத்தரித்த நேரமும் , இடமும் இரட்டை குழந்தைகளுக்கு உண்டான அமைப்பை நிர்ணயம் செய்யும் .
கேள்வி :
சிலபேருக்கு குழந்தைகளே இல்லை.
பதில் :
இதற்க்கு ஒரே காரணம்தான் இருக்க முடியும் , தம்பதியரின் ஜாதக அமைப்பில் இவருடைய பூர்வ புண்ணியம் எனும் புத்திர ஸ்தானம் பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்று இருக்கும் , பூர்வ புண்ணியம் எனும் பாவகம் பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்றால் ஜாதகனுக்கு இப்பிறவியில் தத்து புத்திர யோகம் மட்டுமே உண்டு அதுவும் ஜாதகர் செய்யும் குல தேவதை வழிபாட்டை பொறுத்து அமையும் .
பதில் :
இதற்க்கு ஒரே காரணம்தான் இருக்க முடியும் , தம்பதியரின் ஜாதக அமைப்பில் இவருடைய பூர்வ புண்ணியம் எனும் புத்திர ஸ்தானம் பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்று இருக்கும் , பூர்வ புண்ணியம் எனும் பாவகம் பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்றால் ஜாதகனுக்கு இப்பிறவியில் தத்து புத்திர யோகம் மட்டுமே உண்டு அதுவும் ஜாதகர் செய்யும் குல தேவதை வழிபாட்டை பொறுத்து அமையும் .
கேள்வி :
இதை ஒரு ஜாதகரின் அல்லது தம்பதியின் ஜாதகங்களை வைக்து சரியாக அதாவது மிகச்சரியாக தெரிந்துகொள்ளமுடியுமா?உங்கள் அனுபவத்தை வைத்து பதிலை ஜோதிடதீபத்தில் அளிக்கவும்.
பதில் :
நிச்சயம் தம்பதியர் இருவரின் ஜாதகத்தை வைத்து மட்டுமே தெரிந்து கொள்ள முடியும் , ஒருவரின் ஜாதக அமைப்பை வைத்து நிர்ணயம் செய்வது என்பது மிகவும் கடினம். மேலும் இதை எல்லாம் அனுபவத்தை வைத்து சொல்ல இயலாது ஜோதிட கணிதத்தை வைத்து சரியாக சொல்லிவிட முடியும் அன்பரே ! ஜோதிடத்தில் கணிதம் மட்டுமே உண்டு அனுபவம் என்பது ஏது ?
கேள்வி :
கிராமவாசிகள் ஜோதிடரிடம் இந்த ஜாதகருக்கு எத்தன வாரிசு பிறக்கும்?அதுல ஆண் எத்தன பெண் எத்தன?மூத்தது ஆணா?பெண்ணா? இப்படியெல்லாம் கேட்கிறார்களே. இதற்கெல்லாம் உண்மையிலேயே மிகச்சரியான பதிலை ஜோதிடத்தின் மூலம் கூறமுடியுமா? முடியும் எனில் உங்கள் அனுபவத்தில் பார்த்த ஒரு உதாரண ஜாதகம் மூலம் விளக்கமுடியுமா?
பதில் :
கிராம வாசிகள் என்ன ? நகர வாசிகள் என்ன ? எல்லோருக்கும் ஒன்றேதான் , பாரம்பரிய ஜோதிட முறையில் பல ஜோதிடர்கள் பச்சிலை என்ற ( அதாவது மனோ தத்துவம் அல்லது மனோ ரீதியான அணுகு முறை பிறந்த ஜாதகத்தில் சில எழுத்துகள் மூலம் உடன் பிறப்பு பற்றி சொல்லும் தன்மை ) ஒரு முறையை கடை பிடிக்கிறார்கள் , இதை வைத்து கொண்டுதான் பல அரை குறை ஜோதிடர்களின் பிழைப்பே ஓடுகிறது , நமது அமைப்பில் ஆருடம் மூலம் பிறப்பது ஆண் குழந்தைய அல்லது பெண் குழந்தையா என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள இயலும் , மேலும் இதை பற்றி நான் அதிகம் சொல்ல விரும்ப வில்லை .
கேள்வி :
புத்திர தோஷம் என ஜோதிடம் ஆண் வாரிசை மட்டுமே குறிக்கிறது.புத்திரி தோஷம் என் பெண் பாலை குறிக்கவில்லை.எனவே ஒருவருக்கு ஏற்ப்படும் பெண் வாரிசை பற்றி அவர் ஜாதகம் மூலம் அறியமுடியாதா?முடியும் எனில் எப்படி?
பதில்:
புத்திர தோஷம் என்பதே பொதுவான ஒரு வார்த்தைதான் , இதில் ஆண் பெண் வேறுபாடுகள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை , மேலும் புத்திரன் தோஷம் என்று இருந்திருந்தால் மட்டுமே உங்களின் கேள்வி சரியானதாக இருந்திருக்கும் என்பது எமது கருத்து , மேலும் ஜாதகருக்கு பெண் குழந்தை உண்டா என்பதை நிர்ணயம் செய்ய நிச்சயம் முடியும் , எப்படி எனில் இதற்க்கு தாங்கள் ஜோதிடத்தை நல்ல குரு மூலம் தெளிவாக இருந்து கற்றுகொள்ள வேண்டும் .
கேள்வி :
புத்திர தோஷம் என்றால் என்ன? குழந்தைகளே இல்லாத நிலையா? ஆண் குழந்தைகளே இல்லாத நிலையா?
பதில் :
குழந்தைகளே இல்லாத நிலையையே புத்திர தோஷம் என்று சொல்ல இயலும் ,
கேள்வி :
ஆண்,பெண் குழந்தைகள் பிறந்தும் அந்த குழந்தை சில வருடங்கலில் அதாவது திருமணம்,வேலை போன்றவற்றிற்கு முன்பே அந்த வாரிசு அகால மரணம் அடைவது அல்லது மரணத்திற்கு ஒப்பான நிலை,அல்லது பெற்றோருக்கு உபயொகமில்லாமல் போவது. அந்த வாரிசால் பெற்றோர் அவமானம் அடைதல் புத்திர தோஷம் இதில் எது அடங்கும்? இதற்கான விரிவான பதிலை ஜோதிட தீபத்தில் எதிர்பார்க்கிறேன்
நன்றிகளுடன்,
ஜோதிட பித்தன்.
பதில் :
ஒருவரின் ஜாதக அமைப்பில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் , எதிரி ஸ்தானம் எனும் ஆறாம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, ஆறாம் பாவகம் சர ராசியாக இருந்தால் , ஜாதகனுக்கு பிறக்கும் குழந்தையால் ஜாதகன் அதிக இன்னல்களை அனுபவிக்க வேண்டி வரும் .
ஒருவரின் ஜாதக அமைப்பில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் , ஆயுள் ஸ்தானம் மற்றும் திடீர் இழப்பு எனும் எட்டாம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று எட்டாம் பாவகம் சர ராசியாக இருந்தால் , ஜாதகன் தனது குழந்தையை இழக்கும் தன்மையையோ அல்லது நிரந்தரமாக பிரியும் தன்மையையோ பெற கூடும் .
ஒருவரின் ஜாதக அமைப்பில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் ,விரைய ஸ்தானம் எனும் 12 ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று எட்டாம் பாவகம் சர ராசியாக இருந்தால் , ஜாதகன் தனது குழந்தையின் அமைப்பில் இருந்து அதிக வீண் விரயங்களையும் , மன நிம்மதி இழப்பினையும் சந்திக்க வேண்டி வரும் .
மேற்கண்ட பலன்கள் எல்லாம் சுய ஜாதக அமைப்பை வைத்தே நிர்ணயம் செய்ய வேண்டும் , புத்திர ஸ்தானம் எனும் ஒருபாவகத்தை வைத்து மட்டுமே நிர்ணயம் செய்து விட முடியாது .
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
ஜோதிடன் வர்ஷன்
9443355696
jothidadeepam@gmail.com
திங்கள், 16 ஜூலை, 2012
பூர்வ புண்ணியம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தமும், சிறப்பு குழந்தை ( Special kid ) பிறப்பும் !
எனது நெருங்கிய நண்பரின் உறவினரின் ஜாதகம் இது , இந்த ஜாதகருக்கு தீர்மானம் ஆவதற்கு முன் எங்களிடம் ஆலோசனை பெற வந்தனர் , ஜாதகரின் வாழ்க்கையை அடிப்படியில் இருந்து பார்க்கும் பொழுது நல்ல வளரும் சூழ்நிலை ஜாதகருக்கு அமைந்து இருக்க வில்லை , கல்வியும் சரி தடை பட்டது , நண்பர்கள் சேர்க்கையும் சரியானதாக அமைய வில்லை , இதற்க்கு காரணம் குடும்பம் ,மற்றும் இலக்கின பாவங்கள் பாதக ஸ்தனாத்துடன் சம்பந்தம் பெற்றது, பரம்பரை தொழில் மட்டும் ஜாதகருக்கு சிறப்பாக வாய்த்து இருந்தது , தனது தகப்பானாருடன் சேர்ந்து அந்த தொழிலை சிறப்பாக செய்யும் யோகம் ஜாதகருக்கு ஏற்ப்பட்டது , இதற்க்கு காரணம் சுகம் மற்றும் ஜீவன ஸ்தானங்கள் சிறப்பாக அமைந்ததுமே . மேலும் இவரது ஜாதக அமைப்பு படி பூர்வ புண்ணியம் ஸ்தானம் லக்கினத்திற்கு பாதக ஸ்தான அமைப்புடன் சம்பந்தம் பெற்று இருந்தது , இது ஜாதகரின் முன்னேற்றத்தை வெகுவாக பாதித்துக்கொண்டு இருந்தது .
எம்மிடம் ஜாதகர் வந்த பொழுது திருமண பொறுத்த அமைப்பை பார்த்து திருமணம் செய்ய ஆலோசனை கேட்டனர் , குழந்தை பாக்கிய அமைப்பை பற்றி கேட்ட பொழுது , ஜாதகருக்கு பூர்வ புண்ணியம் பாதிக்க பட்டு இருப்பதால் ஜாதகர் தனது பூர்விகத்தை விட்டு வெகு தொலைவில் ( 100 km அப்பால் அல்லது எல்லை அமைப்பை தாண்டி ) குடியிருக்க வேண்டும் , திருமண வாழ்வில் எவ்வித சிக்கலும் இல்லை ஆனால் ஜாதகர் தனது பூர்விகத்தில் குடியிருக்கும் பொழுது ஆண் குழந்தை பிறந்தால் , அந்த குழந்தைக்கு பாதிப்பு ஏற்ப்படலாம் என்று அறிவுறுத்தி இருந்தோம்.
ஆனால் ஜாதகர் குடும்பம் இதை பெரிதாக எடுத்து கொள்ளாமல் திருமணத்திற்கு பிறகு தனது பூர்விகத்திலேயே குடி அமர்த்தினர் ஒரு வருடத்திற்கு பிறகு ஜாதகருக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது , குடும்பமே மிகவும் சந்தோஷ பட்டது , ஏனெனில் நாம் சொல்லியது போல் அந்த குழந்தைக்கு எவ்வித குறைபாடும் இருக்கவில்லை, இந்த சந்தோசம் அவர்களுக்கு வெகு நாள் நீடிக்கவில்லை இரண்டு வருடங்களுக்கு பிறகு அந்த குழந்தை வளர வளர தான் அதன் பெற்றோருக்கு , அந்த குழந்தை ஒரு சிறப்பு குழந்தை ( special kid ) என தெரிய வந்தது அதாவது கேட்க்கும் திறன் , பேசும் திறன் , தானாக நடக்கும் வலிமை அற்றது என தெரிய வந்தது, இதற்குள் அவர்கள் அவசர பட்டு ஒரு குழந்தை போதும் என்று குடும்ப கட்டுபாடு வேறு செய்து விட்டனர், இதனால் அவர்களது குடும்பம் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தனர் .
மீண்டும் அவர்கள் எம்மிடம் ஆலோசனை பெற வந்தனர் , அய்யா தாங்கள் சொல்லியது போல் நடந்து விட்டது , இதற்க்கு நாங்கள் செய்த பாவம் தான் காரணமா அல்லது வேறு எதாவது பாதிப்பா , நாங்கள் மிகவும் மன துயரத்துடன் இருக்கிறோம் எங்களுக்கு ஒரு நல்ல வழி சொல்லுங்கள் என்றனர் , கவலை பட வேண்டாம் இதற்க்கு காரணம் நீங்கள் செய்த பாவமும் அல்ல புண்ணியமும் அல்ல தங்களது மகனின் ஜாதக அமைப்பில் பூர்வ புண்ணியம் கடுமையாக பாதிக்க பட்டதே , எனவே இனியாவது அவர்களை பூர்விகத்தை விட்டு வெகு தொலைவிற்கு சென்று குடியிருக்க சொல்லுங்கள் , நிச்சயம் இறைவன் அருளால் நன்மை பெறுவீர்கள் என்று ஆலோசனை வழங்கினோம் , இங்கு இருக்கும் தொழில் எப்படி செய்வது என்றனர் , நல்ல நிர்வாகியை வேலைக்கு அமர்ந்துங்கள் மாதத்தில் இரண்டு முறை வந்து தொழில் நன்றாக நடை பெறுகிறத என்று கவனித்து கொள்ளுங்கள் என்று அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தோம் .
சில மாதங்களுக்கு பிறகு அவர்கள் மறுபடியும் வந்து நன்றி சொன்னார்கள் , காரணம் இவர்கள் தனது பூர்விகத்தை விட்டு சென்ற சில மாதங்களிலேயே நல்ல மருத்துவர் அமைந்து அந்த குழந்தை படி படியாக குணம் அடைந்து வருவதாகவும் , குழந்தையின் தாய் செயற்கை முறையில் மீண்டும் கருவுற்று இருப்பதாகவும் , தான் செய்து வந்த தொழிலை சென்ற இடத்தில் மிகவும் பெரிய அளவில் செய்து வருவதாகவும் மகிழ்வுடன் தெரிவித்தனர் , எல்லாம் இறை நிலையின் கருணை என்றோம் .
இவர்கள் நாங்கள் முன்பே சொன்னது போல் திருமணம் ஆனா உடன் வேறு இடத்திற்கு சென்று இருந்தால் , இந்த துன்பங்களை அனுபவித்து இருக்க தேவையில்லை, அந்த குழந்தையும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் நன்றாக பிறந்து இருக்கும் , இதற்க்கு முக்கிய காரணம் ஜாதகருக்கு பூர்வ புண்ணியம் பாதிக்க பட்டு தனது பூர்விகத்தை விட்டு வேறு இடத்திற்கு செல்லாமல் இருந்தது மட்டுமே காரணம் , மேலும் தொழில் அமைப்புகளில் பெரிய வெற்றிகளை பெற முடியாததிர்க்கும் இதுவே காரணம் . பூர்விகத்தை விட்டு சென்றவுடன் இவ்வித பாதிப்புகளில் இருந்து, அவர்களது குடும்பம் விரைவாக மீண்டு வர தொடங்கி விட்டது ஜாதக ரீதியான பலன்களை ஒருவருக்கு ஜாதகம் சரியாக தருகிறது என்பது இங்கே 100 சதவிகிதம் நிருபிக்க படுகிறது .
எனவே ஒருவருடைய ஜாதக அமைப்பில் இந்த பூர்வ புண்ணியம் பாதிக்க பட்டாலோ? பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்றாலோ ? தனது பூர்விகம் எதுவோ அந்த இடத்தை விட்டு எங்களது ஆலோசனை படி வெகு தொலைவில் ( 100 km அப்பால் அல்லது எல்லை அமைப்பை தாண்டி ) குடியிருக்க வேண்டும் , அப்படி இருப்பவர்களுக்கு இந்த பாவக வழியில் இருந்து எவ்வித துன்பமும் நிச்சயம் ஏற்ப்படுவதில்லை என்பது கண்கூடாக கண்ட உண்மை .
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன் 9443306969
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



.jpg)
