செவ்வாய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 10 ஜனவரி, 2024

மேஷம் - அதிபதி செவ்வாய் ஜென்ம ராசியில் நின்று தரும் யோக பலன்கள் !

 


 மேஷ லக்கினம் அல்லது ராசி அதிபதி செவ்வாய் ஜென்ம ராசியில் அமர்வது என்பது ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளை தரும் அமைப்பாகும், ஜாதகரின் உடல்நலம், மனவலிமை, வளரும் சூழ்நிலை, பெயரும் புகழும் தனதாக்கி கொள்ளும் யோகம், சுறுசுறுப்பும்  வேகமும் ஜாதகருக்கு சிறுவயது முதலே வெற்றிகளை வாரி வழங்கும், அனைத்தையும் அறிந்துகொள்ளும் ஆர்வமும், சுய முன்னேற்றத்தில் அதிக ஈடுபாடும் உண்டாகும், சரியான விஷயங்களையும் சிறப்பான செய்கைகளையும் முன்னெடுக்கும் யோகம் பெற்றவர்கள், சிறந்த ஒழுக்கம், சுயகட்டுப்பாடு, நேர்மை நிறைந்த செயல்பாடுகள், அபரிவிதமான நிர்வாக திறமை, புதிய சிந்தனை, எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் உடல் மற்றும் மனோவலிமையை பெற்று சாதனை புரியும் வல்லவர்கள்.

அசுவினி ( கேது ) நட்சத்திரத்தில் செவ்வாய் அமர்வது : 

 ஜாதகரின் ஞானம் போற்றுதலுக்கு உரியதாக அமையும், விரைவாக முடிவெடுக்கும் தன்மை, அனைவரையும் அனுசரித்து செல்லுதல், சார்ந்து இருப்பவரை காப்பாற்றும் வலிமை, நினைத்ததை நடத்தி முடிக்கும் பேராற்றல், செய்தொழில் நேர்த்தி, சிறந்த திட்டமிடுதல்கள், ஆன்மீகத்தில் வெற்றி, ஆன்மீக பெரியோர்களின் அருளாசியை பெறுதல், சிறந்த தொழில்நுட்ப அறிவாற்றல், சிக்கலான பிரச்சனைகளுக்கு எளிமையான தீர்வுகளை முன்னெடுப்பது, பாரம்பரியம் மிக்க விஷயங்களை மிக சிறப்பாக கையாண்டு தனது புகழை உலகிற்க்கு உணர்த்துவது, அடுத்தது என்ன என்பதை அறிவு மேற்றும் செயல்பாடுகள் கொண்டு தீர்மானிப்பது, சில நொடிகளில் மிகப்பெரிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது, எந்த சூழ்நிலையிலும் மனதைரியத்தை இழக்காமல்  செயல்படுவது, சுய திறமை மூலம் அனைத்தையும் வெற்றி கொள்வது, புலனுக்கு அப்பாற்பட்ட அறிவாற்றலும், சமயோசித புத்திசாலித்தனமும் இவர்களுக்கு இறை அருள் வழங்கிய அற்புதமான கொடையாகும்.

பரணி ( சுக்கிரன் ) நட்சத்திரத்தில் செவ்வாய் அமர்வது : 

  ஜாதகரின் வாழ்க்கை சிறுவயது முதலே நேர்த்தியான தன்மையிலான முன்னேற்றங்களை வாரி வழங்கும், உடலும் மனமும் ஜாதகருக்கு விரும்பியபடி ஒத்துழைப்பை நல்கும், எதிர்பாலினர் ஜாதகரின் வெற்றிகளுக்கு அடிப்படை காரணமாக அமைவர், எளிதில் அனைத்தையும் சுவீகரிக்கும் யோகத்தை தரும், கல்வியில் தனது விருப்பம், தொழிலில் தனது விருப்பம் முழுமையாக நிறைவேறும், கற்பனையும் கலைத்திறனும் ஜாதகருக்கு சிறப்பான வெற்றிகளை வாரி வழங்கும், கலாரசனையும் கல்வியில் மிகப்பெரிய வெற்றிகளையும் குவிக்கும், சிறந்த மருத்துவ அறிவாற்றல் ஜாதகரின் வாழ்வில் புகழ்மிக்க மருத்துவராக திகழச்செய்யும், இயல் இசை நாடகம் போன்ற கலை துறைகளில் குறுகிய காலங்களில் அபரிவிதமான வெற்றிகளை வாரி வழங்கும், தன்னம்பிக்கை விடாமுயற்சி, கடின உழைப்பில் அதீத ஆர்வம், லட்சியங்களை வெற்றி கொள்ளும் யோகம், பொதுமக்கள் மீதான அக்கறை, சமுதாய ரீதியான செயல்பாடுகள், ஜாதகரின் இனிமையான வார்த்தைகள் மிகப்பெரிய மாற்றங்களை மக்களுக்கு நல்கும், தோல்வியில் இருந்து விரைவில் விடுபட்டு வெற்றியை சுவீகரிக்கும் யோகம் பெற்றவர்கள், தன்முனைப்பும் சுய முன்னேற்றமும் இவர்களுக்கு சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும்.

கிருத்திகை ( சூரியன் ) நட்சத்திரத்தில் செவ்வாய் அமர்வது : 

 ஜாதகருக்கு அதிகாரமும் ஆளுமைத்திறனும் வாழ்நாள் முழுவதும் மிகப்பெரிய  முன்னேற்றங்களை வழங்கிக்கொண்டே இருக்கும், தனது வலிமையை உணர்ந்து செயற்கரிய காரியங்களை சாதிப்பார்கள், பிறப்பின் அருமையை உணர்ந்து செயல்படும் யோகம் உண்டு, உடல் ஆரோக்கியம் மற்றும் மனவலிமை சார்ந்த விஷயங்களில் அதீத அக்கறையுடன் செயல்படுவார்கள், தனிமைவிரும்பி என்பதுடன், தனித்து வெற்றிபெறும் யோகம் பெற்றவர்கள், எதிர்ப்பது யாரென்றாலும் அஞ்சாமல் துணிந்து செயலாற்றி வெற்றி பெறுவார்கள், ஆட்சி அதிகாரத்தில் இவர்களது பங்கு அதிகம் இருப்பதுடன், அரசியல் ரீதியான ஆளுமை என்பது இவர்களுக்கு மிகப்பெரிய பொறுப்புகளை பெற்றுத்தரும், மிகசிறந்த அறுவைசிகிச்சை நிபுணராகவும், பொறியியல் துறையில் சாதனை செய்யும் வல்லவர்களாகவும், சுய தொழில் செய்வதன் மூலம் குறுகிய காலத்தில் மிகப்பெரிய முன்னேற்றங்களை பெரும் யோகம் பெற்றவர்கள், லட்சியமும் கனவுகளும் இவர்களுக்கு மிக எளிதாக கைகூடும், வாழ்வில் நினைத்ததை சாதிக்கும் வல்லமை என்பது இவர்களுக்கு இறைஅருள் வழங்கிய அற்புதமான கொடையாகும்.

ஜோதிடன் வர்ஷன் 

9443355696

வியாழன், 21 மார்ச், 2019

சுய ஜாதகத்தில் பாவக வலிமை வழியில் இருந்து ஜாதகர் பெரும் யோக வாழ்க்கை !


சுய ஜாதக பலன்கள்

ஒருவரது பிறந்த தேதி நேரம் மற்றும் இடம் ஆகிய குறிப்புகளை வைத்து முறையாக உயர் கணித சார ஜோதிட முறைப்படி கணிதம் செய்து, சுய ஜாதகத்தில் உள்ள லக்கினம் முதல் 12 பாவகங்களின் வலிமை உணர்ந்து, நவகிரகங்களின் திசா புத்தி அந்தரம் மற்றும் சூட்சமம் லக்கினம் முதல் 12 பாவகங்களின் எந்த தொடர்பை பெற்று பலன்களை வழங்குகிறது என்பதில் தெளிவு பெற்று சுய ஜாதக பலன் கூறும் பொழுது, சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக துல்லியமான பலாபலன்கள் கிடைக்க பெறுவதுடன், சிறப்பான நன்மைகளையும் எதிர்காலத்தில் யோகமிக்க வாழ்க்கையையும் தன்னிறைவாக பெறுவார் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை அன்பர்களே! இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம்.
 

லக்கினம் : துலாம்
ராசி : ரிஷபம்
நட்ஷத்திரம் : கிருத்திகை 3ம் பாதம்

1,5,9,ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவக தொடர்பை பெறுவது ஜாதகிக்கு லக்கின பாவக வழியில் இருந்து மதிப்பு மிக்க செயல்பாடுகள், அதிகாரம் மிக்க பொறுப்புகள், புகழ் மிக்க பதவிகள், வெகுமதி, கவுரவம், சமூகம் மற்றும் தொழில் துறையில் அபரிவித வளர்ச்சி அரசியலில் வெற்றி, வியாபாரத்தில் அதீத லாபங்கள் என்ற வகையிலும், நல்ல உடல் ஆரோக்கியம், மனதில் தெளிவு, மதி நுட்பம் கொண்டு அனைத்திலும் வெற்றி காணும் யோகம், என்ற வகையில் நன்மைகளை வாரி வழங்கும், சுய தொழில் வெற்றி, ஜீவன வழியில் முன்னேற்றம் என வாழ்க்கையில்  சகல சௌபாக்கியமும் உண்டாகும்.

5ம் பாவக வழியில் இருந்து கலைத்துறையில் வெற்றி, ஆராய்ச்சியில் வெற்றி , இயல் இசை நாடகம் சார்ந்த விஷயங்களில் நல்ல ஞானம், குழந்தைகள் வழியில் இருந்து பெரும் யோக வாழ்க்கை, சமயோசித புத்திசாலி தானம் கொண்டு  வாழ்க்கையில் வரும் இன்னல்களுக்கு தீர்வு காணும் தன்மை என சகல சௌபாக்கியங்களையும் தரும், விளையாட்டில் ஆர்வம் குலதெய்வ அனுக்கிரகம், மேன்மை மிக்க பொறுப்புகள், புத்திசாலித்தனமான செயல்பாடுகள் மூலம் வாழ்க்கையில் புதிய மாற்றங்களை பெரும் யோகம் என்ற வகையில் சிறப்பான எதிர்காலத்தை தரும்.

9ம் பாவக வழியில் நுண்ணறிவு திறன், ஆராய்ச்சி கல்வியில் வெற்றி, அனைவரிடமும் நற்பெயர், ஆன்மீக பெரியோர்களின் ஆசிர்வாதம், உயர்ந்த பாரம்பரியத்தை கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர், ஆன்மீகத்தில் வெற்றி,கடவுள் அனுக்கிரகம், செய்யும் காரியங்களில் பரிபூர்ண நன்மைகளை பெரும் யோகம், பித்ருக்களின் ஆசிர்வாதம், மிதம்மிஞ்சிய ஞானம் என்ற வகையில் சிறப்பை தரும்.

2,6,8,12ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவக தொடர்பை பெறுவது  ஜாதகிக்கு 2ம் பாவக வழியில் இருந்து கல்வியில் தேர்ச்சி, நல்ல ஜீவனம் அமையும் தன்மை, கை நிறைவான வருமான வாய்ப்புகள், வியாபார ஞானம், நிர்வாக திறன், இனிமையான பேச்சு திறன், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி, நல்ல நண்பர்கள், புகழ் பரிசு அனைத்திலும் வெற்றி என்ற வகையிலும், பொது மக்கள் ஆதரவு, வெளியூர் வெளிநாடு சென்று வரும் யோகம், ஏற்றுமதி இறக்குமதி தொழில் மூலம் பெரும் அதீத வருமான வாய்ப்புகள் என சகல சௌபாக்கியமும் உண்டாகும்.

6ம் பாவக வழியில் இருந்து பதவியில் வெற்றி, உத்தியோக ஆர்வம், பதவியில் திடீர் உயர்வு, அதிகாரிகளிடம் இருந்து வரும் ஆதரவு, சொந்த முயற்சியில் முன்னேற்றம் பெரும் தன்மை, உடல் நலனில் அக்கறை, கடன் சார்ந்த வகையில் முன்னேற்றம், எதிர்பார்ப்புகள் அணைத்த்தும் நிறைவேறும் தன்மை, நோய் எதிர்ப்பு சக்தி என்ற வகையில் நன்மையை தரும்.

8ம் பாவக வழியில் இருந்து விபத்து அறுவை சிகிக்சை மூலம் உடல் ஆரோக்கியம் பெரும் தன்மை, மருத்துவ செலவினங்கள், வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் ஆதரவு மற்றும் அன்பு, மனமகிழ்ச்சி, திருமணம் மூலம் யோக வாழ்க்கை, சரியான முடிவுகளை சரியான நேரங்களில் மேற்கொண்டு சகல வழிகளில் இருந்தும் நலம் பெரும் தன்மை, எதிர்ப்புகள் வழியில் இருந்து வரும் அபரிவித முன்னேற்றம் என்ற வகையில் சுக போகங்களை வாரி வழங்கும்.

12ம் பாவக வழியில் இருந்து முதலீடுகள் வழியில் இருந்து வரும் அதீத வருமானம், தெய்வீக அனுக்கிரகம், ஆன்மீகத்தில் ஈடுபாடு, பொருளாதார தன்னிறைவு, அதிகப்படியான பொருளாதார வரவுகள், தெய்வீக ஆற்றல் வழியில் இருந்து வரும் முன்னேற்றம், புதிய வாய்ப்புகளை முறையாக பயன்படுத்திக்கொண்டு வாழ்க்கையில் நலம் பெரும் தன்மை, உறவுகள் வழியிலான ஆதரவு, அனைவரின் ஆதரவு மூலம் பெரும் பொருளாதர முன்னேற்றம், மனநிம்மதி, தெளிவான சிந்தனை, நல்ல அயன சயன சுக போக வாழ்க்கை எதிர்ப்புகளை கண்டு அஞ்சாத மனவலிமை என்ற வகையில் சுக போகங்களை வாரி வழங்கும்.

3,11ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவக தொடர்பை பெறுவது ஜாதகிக்கு 3ம் பாவக வழியில் இருந்து நிலையான முன்னேற்றம், சுலப பொருள் வரவு, வீரியமிக்க செயல்பாடு, சகல சௌபாக்கியம், முயற்சிக்கும் காரியங்களில் வெற்றி, இசை ஆர்வம், தொழில் முன்னேற்றம், வியாபார விருத்தி, அரசியலில் உயர் பதவி, தீர்க்காயுள், பெரியோர் ஆதரவு மற்றும் ஆசிகள், புத்தி கூர்மை, நியாயமான முறையில் வியாபார வெற்றி,  விவசாயத்தில் அதீத ஆர்வம், தெய்வீக சிந்தனை, லட்சியங்களை அடைதல், தன்னம்பிக்கை, நூல் ஆசிரியர், பத்திரிக்கை நிருபர், தகவல் தொழில் நுட்பத்தில் தேர்ச்சி, துணிந்து செயலாற்றும் திறன், அதிர்ஷ்டத்தின் தன்மையை முழுவதும் சுவீகரிக்கும் தன்மை சுய ஜாதகத்தில் உள்ள  யோக பலன்களை முழுவதும் அனுபவிக்கும் வல்லமை என சிறப்பான யோக வாழ்க்கையை நல்கும்.

11ம் பாவக வழியில் இருந்து நீடித்த அதிர்ஷ்டம், தொழில் வழியிலான அதிர்ஷ்ட வாய்ப்புகளை சுவீகரிக்கும் வல்லமை, முற்போக்கு சிந்தனை மற்றும் செயல்பாடுகள், புதுமை விரும்பி, அனைத்தையும் யூகிக்கும் வல்லமை, எதிர்ப்புகளை கண்டு அஞ்சாமல் போராடி வெற்றி பெரும் மனவலிமை, போதுமென்ற மனம், பல தொழில் செய்யும் யோகம், உறவுகள் பெற்றோர்  வழியில் இருந்து பெரும் அதிர்ஷ்டங்கள் என வெகு சிறப்பான நன்மைகளை ஜாதகி பரிபூர்ணமாக பெறுவார்.

4ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவக தொடர்பை பெறுவது ஜாதகிக்கு 4ம் பாவக வழியில் இருந்து தந்தையாருக்கு மிகுந்த பாதிப்பு, ஜாதகியின் குணாதிசயம் வெகு சிறப்பாக அமையும், நல்ல தொழில் முன்னேற்றம், நல்ல குணம், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, மண் மனை வண்டி வாகன யோக வழியில் பாதிப்பு, வீடு நிலம் இடம் போன்றவற்றில் இருந்து வரும் இழப்புகள், வாகனத்தில் வரும் வீண் செலவினங்கள், வசதிகள் இருந்தும் அதை அனுபவிக்க இயலாத சூழ்நிலை, கருத்து வேறுபாடுகள், பிடிவாத குணம் அல்லது மனப்போராட்டம் வழியில் இருந்து வரும் இழப்புகள், திருமணத்திற்கு பிறகான யோக வாழ்க்கை என்ற வகையில் நன்மையை தரும்.

7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவக தொடர்பை பெறுவது ஜாதகிக்கு 7ம் பாவக வழியில் இருந்து தாமத திருமணம், நல்ல அந்தஸ்துள்ள வாழ்க்கை துணை , அரசியலில் வெற்றி, வியாபாரத்தில் வெகு சிறப்பு, சமூக அந்தஸ்த்து, வாழ்க்கை துணையின் ஆதரவு பரிபூர்ணமாக கிடைக்கும் தன்மை, வெளிநாடுகள் சென்று வரும் யோகம், பிறந்த இடத்தை விட்டு வெகு  தொலைவு சென்ற பிறகு கிடைக்கும் ஜீவன மேன்மை, கூட்டு தொழில் வழியில் பெரும் சிறப்புகள், நல்ல நண்பர்கள், சிறந்த கூட்டாளிகள், கூட்டு முயற்சியின்  வழியில் இருந்து பெரும் யோக வாழ்க்கை என்ற வகையில் மிகுந்த சிறப்பை தரும்.

10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவக தொடர்பை பெறுவது ஜாதகிக்கு 10ம் பாவக வழியில் இருந்து சிறந்த உத்தியோகம், அரசு துறையில் பணியாற்றும் வல்லமை, ஜீவன வழியில் இருந்து வரும் படிப்படியான முன்னேற்றம், கவுரவம் குறையாத யோக வாழ்க்கை, எதிர்பார்த்த விஷயங்கள் ஜாதகிக்கு தேடி வரும் தன்மை, கம்பீரமான வாழ்க்கை முறை, தீர்க்கமான வாத திறமை, சுய தொழில் செய்வதால் வரும் அபரிவித முன்னேற்றம், தெளிவான தொழில் ஞானம், திட்டமிட்டு செயலாற்றும் தன்மை, அனைவரையும் அனுசரித்து செல்லும் யோகம், புதிய மாற்றங்களை  ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் என்ற வகையில் சிறப்பான நன்மைகளை தரும்.

குறிப்பு :

பெரும்பாலான பாவக தொடர்புகள் மிகவும் வலிமையுடன் இருப்பது ஜாதகிக்கான யோக வாழ்க்கையை உறுதி செய்கிறது, சுய ஜாதகத்தில் ராகு பகவான் லக்கினத்தில் ( துலாம் ) அமர்ந்து இருப்பது ஜாதகிக்கு ஜென்ம லக்கினம் 100% விகித வலிமையை பெற்று சிறப்பான யோக வாழ்க்கையை வாரி வழங்கும், மேலும் ஜாதகியின் அறிவுத்திறன் வெகுவாக பிரகாசிக்கும், வியாபாரத்தில் மிகப்பெரிய வெற்றி கிட்டும், மேலும் கேது பகவான் களத்திர ஸ்தானத்தில் ( மேஷம் ) அமர்ந்து இருப்பது ஜாதகிக்கு நல்ல யோகமிக்க வாழ்க்கை துணையை அமைத்து தரும் என்பதுடன், பிரபல்ய யோகமும் வியாபாரத்தில் விருத்தி, அரசியலில் வெற்றி என்ற நிலையை வாரி வழங்கும், கணவருக்கு மிகப்பெரிய வெற்றிகளை வாரி வழங்கும், தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக அமையும், களத்திர ஸ்தான வழியில் இருந்து ஜாதகி பரிபூர்ண நன்மைகளை சிறப்பாக பெறுவார், வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

சனி, 23 பிப்ரவரி, 2019

தொழில், திருமண யோகம் சுய ஜாதக ரீதியான ஆய்வு !


சுய ஜாதக பலாபலன்கள்

" அவனின்றி ஓர் அணுவும் அசையாது " என்பதற்கிணங்க சுய ஜாதக வலிமை இன்றி யாதொரு நிகழ்வுகளும் நிகழ வாய்ப்பில்லை என்பதே உண்மை நிலை, பொதுவாக சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையை அடிப்படையாக கொண்டே யாவருக்கும் நன்மை தீமைகளோ, யோக அவயோகங்களோ நடைமுறைக்கு வருகின்றது, கீழ்கண்ட உதாரண ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலை என்ன ? அது தரும் யோக அவயோகம் என்ன ? நவ கிரகங்கள் தனது திசாபுத்திகளில் தரும் பலாபலன்கள் என்ன என்பதனை இன்றை பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : மகரம்
ராசி : மீனம்
நட்ஷத்திரம் : ரேவதி 4ம் பாதம்

ஜாதகத்தில் வலிமை பெற்றுள்ள பாவக தொடர்புகள் :

1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சுய ஜாதகத்தில் மிகவும் சிறப்பான அம்சமாகும், 1ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் வெற்றி புகழ், கீர்த்தி, சுய முன்னேற்றம், தெளிந்த நல்லறிவு, எதிர்ப்புக்களை களைந்து நலம் பெரும் தன்மை, முற்போக்கு சிந்தனை, நல்ல நண்பர்கள், பொதுமக்கள் ஆதரவு, சிறந்த கூட்டாளிகள், எதிர்பாராத முன்னேற்றம், வெளியூர் அல்லது வெளிநாடுகளில் இருந்து வரும் யோக வாழ்க்கை, எதிர்பாலின சேர்க்கை வழியில் ஜாதகர் பெரும் முன்னேற்றம், தெய்வீக சிந்தனை, சமயோசித அறிவு திறன், உடல்நல குறைவில் இருந்து விரைவாக குணம் பெரும் யோகம், யோக உடற்பயிற்சியில் ஆர்வம், புதிய சிந்தனை, பொது வாழ்க்கையில் வெற்றி, அரசியல் ஆதாயம், நட்பு வழியில் இருந்து ஜாதகர் பெரும் நன்மைகள் மற்றும் முன்னேற்றம் வெகு சிறப்பாக அமையும், பொதுமக்கள் சார்ந்த தொழில், வியாபாரம் அல்லது சேவைகள் மூலம் ஜாதகருக்கு அபரிவிதமான நன்மைகள் வந்து சேரும், வியாபார விருத்தி சிறப்பாக அமையும், ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் நல்ல ஞானம் உண்டாகும் என்பது கவனிக்க தக்க சிறப்பு அம்சமாகும்.

7ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நல்ல நண்பர்கள் சேர்க்கை, சிறந்த கூட்டாளிகள், சிறப்பான வெளிவட்டார பழக்க வழக்கங்கள், வியாபார முன்னேற்றம், சிறந்த தொழில் ஞானம், பல தொழில் புரியும் யோகம், எதிர்ப்புகள் அனைத்தும் ஜாதகருக்கு சாதகமாக மாறும் தன்மை, எண்ணத்தின் வழியில் சிறப்பான யோக வாழ்க்கையை பெரும் நிலை, தெய்வீக சிந்தனை, ஆன்மீகத்தில் ஈடுபாடு, வண்டி வாகன யோகம், கூட்டு தொழில் வழியிலான முன்னேற்றம், வெளிநாடு யோகம், பொதுமக்கள் வழியில் இருந்து வரும் ஆதரவு, அந்நியர் மூலம் ஆதாயம், வலிமை மிக்க கூட்டாளி, யோகமிக்க வாழ்க்கை துணை, வியாபார ரீதியான அபரிவித வளர்ச்சி, பொது வாழ்க்கையில் வெற்றி, அரசியல் ஆதாயம், எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் தன்மை, கூட்டு முயற்சியின் மூலம் அபரிவித லாபம் என வாழ்க்கையில் சகல சௌபாக்கியமும் வந்து சேரும்.

2,6,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவக தொடர்பை பெறுவது ஜாதகருக்கு 2ம் பாவக வழியில் இருந்து ஏற்றுமதி இறக்குமதி தொழில் வழியிலான முன்னேற்றம், எழுத்து வழியில் லாபம், பத்திரிகை துறையில் முன்னேற்றம், இனிமையான பேச்சு திறன், பயணங்கள் வழியிலான லாபம், வெளிநாட்டார் மூலம் முன்னேற்றம், ஆராய்ச்சி மனப்பான்மை, ஆன்மீகத்தில் தெளிவு, அரசியல் ஆளுமை, சாஸ்த்திரம், மருத்துவம் மற்றும் ஜோதிடத்தில் தேர்ச்சி, செயற்கரிய காரியங்களை சரியான திட்டமிடுதல்களுடன் செய்யும் வல்லமை, புதிய வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றிகொள்ளும் தன்மை, வாக்கு வன்மை, எதிலும் தெளிவு என்ற வகையில் நன்மைகளை தரும்.

6ம் பாவக வழியில் இருந்து மருத்துவ துறையில் நல்ல ஞானம், பயணம் மூலம் லாபம் மற்றும் அதிர்ஷ்டம், வருமுன் உணரும் சக்தி, முன்னோர் செய்த புண்ணியத்தின் பலனை சுவீகரிக்கும் தன்மை, எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம், கடன் சார்ந்த இன்னல்களில் இருந்து விரைவாக வெளியேறும் தன்மை, மற்றவர் பணம் கையிருப்பு, போட்டி பந்தயங்களில் வெற்றி, வழக்குகளில் வெற்றி, எதிர்ப்புகளை சமாளிக்கும் வல்லமை என சிறப்பான நன்மைகளை சத்ரு ஸ்தான வழியில் இருந்து வாரி வழங்கும்.

9ம் பாவக வழியில் இருந்து நல்ல கல்வி ஞானம், சிறந்த அறிவாளி, ஆய்வு கல்வியில் தேர்ச்சி, பயணங்கள் மூலம் நல்ல லாபம், சாஸ்திரத்தில் தேர்ச்சி, எதிர்பாராத முன்னேற்றம், பெரிய மனிதர்கள் ஆதரவு, பல தொழில் வழியிலான வருமான வாய்ப்பு, மண் தத்துவம் சார்ந்த விஷயங்களில் நல்ல ஞானம், தெய்வீக ஞானம், சூழ்ந்தநிலை மற்றும் இடமாற்றத்தில் விருப்பம், அனைவரிடமும் நற்ப்பெயர் பெரும் தன்மை, அனைவரையும் அனுசரித்து செல்லும் மனப்பக்குவம், எந்த சூழ்நிலையிலும் சிறப்பாக வாழும் தன்மையை தரும், பாதிப்புகள் தானாக விலகும்.

சுய ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவக தொடர்புகள் :

3,5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவக தொடர்பை பெறுவது ஜாதகருக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை தரும், குறிப்பாக 3ம் பாவக வழியில் இருந்து முயற்சிக்கும் காரியங்களில் தொய்வு, சகோதர வழி ஆதரவு இன்மை, செயல்பாடுகளில் வீரியமின்மை, தோல்வியால் துவண்டு போகும் தன்மை, சரியான விஷயங்களை கிரகிக்க இயலாத நிலை, தன்னம்பிக்கை பாதிக்கும், சுய முன்னேற்றம் தடை படும், உறவுகள் வழியிலான இன்னல்கள், எதையும் விரைவாக பெற இயலாமல் தடுமாறும் நிலையை உருவாக்கும்.

5ம் பாவக வழியில் இருந்து பூர்வீகத்தில் ஜீவனம் மேற்கொள்வதால் வரும் தொந்தரவுகள், சமயோசித அறிவு திறனில் பாதிப்பு, நுண்ணறிவு தன்மையில் குறைபாடு, ஆழ்ந்து சிந்திக்கும் வல்லமை அற்ற நிலை, குல தெய்வ சாபம், முன்னேற்ற தடைகள், எதிர்ப்புகளை கண்டு அஞ்சும் நிலை, சரியான முடிவுகளை எடுக்க இயலாமல் தடுமாறும் தன்மை, சரியான வழிகாட்டுதல் இல்லாமல் இன்னலுறும் நிலை, சரியான முடிவுகளை மேற்கொள்ள இயலாமல் போராட்ட வாழ்க்கையை சுவீகரிக்கும் தன்மை என ஜாதகருக்கு அதீத துன்பங்களை தருவதுடன், முதலில் பெண் வாரிசை தரும்.

11ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டத்தின் தன்மை வெகுவாக குறையும், சுய உழைப்பு மட்டுமே ஜாதகருக்கான வாழ்க்கையினை உறுதி செய்யும், முற்போக்கு சிந்தனை குறைந்து பழமை வாதங்களில் ஆர்வம் அதிகரிக்கும், மனம் வெகுவாக பாதிக்கும், குழப்பமும் சந்தேக எண்ணங்களும் ஜாதகரின் வாழ்க்கையில் அதீத இன்னல்களை தரும், சில நேரங்களில் ஜாதகர் மேற்கொள்ளும் முடிவுகள் யாவும் பேரிழப்பை தரக்கூடும் என்பதை கருத்தில் நலம் பெறுவது அவசியமாகிறது.

8,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவக தொடர்பை பெறுவது, 8ம் பாவக வழியில் இருந்து விபத்து, மருத்துவ செலவினங்கள்,  எதிர்பாராத மருத்துவ செலவுகள், அனைத்திலும் ஏமாற்றம், மனக்குழப்பம்,தலைவலி சார்ந்த இன்னல்கள், உடல் நல குறைபாடுகள், அதீத மனப்போராட்டம், அனைவராலும் ஏமாற்றம், அறுவை சிகிச்சை, வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் பொருளாதார இழப்புகள், முன்னேற்ற தடை என்ற வகையில்  இன்னல்களை தரும்.

10ம் பாவக வழியில் இருந்து வெளியூர் அல்லது வெளிநாட்டில் வேலை அல்லது தொழில் அமையும் தன்மை, போதிய வருமானம் இன்மை, அடிக்கடி இடமாற்றம் அல்லது தொழில் மாற்றம், வரவைவிட செலவு அதிகம், முரண்பட்ட கருத்துக்கள் மூலம் தொழில் அமைப்பில் சிக்கல்கள், கவுரவ குறை ஏற்படும் நிலை, நிலையற்ற தொழில், செய்யும் தொழிலில் அதிக போராட்டங்களை சந்திக்கும் நிலை, தனித்து செயல்படும் காரியங்களில் தொடர்ந்து இன்னல்களை சந்திக்கும் நிலை என்ற வகையில் துன்பங்களை தரக்கூடும்.

12ம் பாவக வழியில் இருந்து நிறைய செலவினங்கள், பங்கு சந்தை லாட்டரி தொழில் வழியில் இழப்புகள், சூது மூலம் பெரும்நஷ்டம், திருப்தி இல்லா வாழ்க்கை, அனைவராலும் நஷ்டம், விபத்து அதீத துன்பங்களை சந்திக்கும் நிலை, போதிய விழிப்புணர்வு அற்ற தன்மை, எதிர்ப்புகள் வழியில் இருந்து வரும் தொல்லைகள் என்ற வகையில் இன்னல்களை தரும்.

நடைபெறும் சூரியன் திசை தரும் பலன்கள் : ( 05/12/2018 முதல் 04/12/2024 வரை)

ஜாதகருக்கு நடைபெறும் சூரியன் திசை 2,6,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவக தொடர்பை பெற்று வலிமையான யோக பலனை தருவது வரவேற்கத்தக்கது, இது ஜாதகருக்கு குடும்ப வாழ்க்கையில் சிறப்பு, கைநிறைவான வருமானம், இனிமையான இல்லற வாழ்க்கை, வாக்கு வன்மை மூலம் சகல சௌபாக்கியம் என்ற வகையில் யோக வாழ்க்கையை தரும், மேலும் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம், சத்ரு வழியில் ஆதாயம், மருத்துவ துறையில் சீரிய முன்னேற்றம், தெய்வீக அனுக்கிரகம், ஆன்மீக பெரியோர்கள் வழியில் வாழ்க்கையில் வெகு சிறப்பு, தனது சுய அறிவு திறன் கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெரும் தன்மை என்ற வகையில் சுபயோகங்களை  வாரி வழங்கும்.

அடுத்து வரும் சந்திரன் திசையும் ஜாதகருக்கு மேற்கண்ட 2,6,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவக தொடர்பை பெற்று வலிமையான யோக பலனை தருவது வரவேற்கத்தக்கது, எனவே எதிர் வரும் சந்திரன் திசையும் ஜாதகருக்கு மிகுந்த சுபயோக பலாபலன்களை வாரி வழங்கும் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை வாழ்த்துக்கள்.

குறிப்பு :

சுய ஜாதக பலன் காண மூன்று விதி முறைகளை கையாள்வது அவசியமாகிறது, 1) சுய ஜாதகத்தில் 12 பாவகங்களின் வலிமை நிலையை பற்றி தெளிவாக உணர்வது, 2) நடைபெறும் திசைபுத்திகள் 12 பாவகங்களில் எந்த பாவக தொடர்பை பெற்று பலனை தருகிறது என்பதை பற்றி தெளிவாக உணர்வது, 3) திசை புத்திகள் ஏற்று நடத்தும் பாவகங்களுக்கு கோட்சார கிரகங்கள் தரும் வலிமை வலிமை இன்மையை பற்றிய தெளிவு பெறுவது ஆகியவை சுய ஜாதக பலாபலன் துல்லியமாக கண்டுணர வாய்ப்பை வழங்கும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

சனி, 6 அக்டோபர், 2018

ஜோதிட ஆலோசனை : வெளிநாட்டில் கல்வி பயில வாய்ப்பு உண்டா ? சிறப்பான வேலை அமையுமா ?


கேள்வி :

பிறந்த தேதி : 04.05.1995. 
பிறந்த நேரம் : இரவு 10.10. 
இடம் : கும்பகோணம். 

1) வெளி நாட்டில் படிக்க ஆசைப்படுகிறார். அதற்கு நேரம் காலம் நன்றாக உள்ளதா என்று ஆய்வு செய்து சொல்ல வேண்டுகிறேன். 

2) லக்னாதிபதி 12ல் இருப்பதும், 4ம்இடம், 6ம்இடம், 8ம் இடங்களைப் பார்ப்பதும், 6ஆம் அதிபதி உச்ச மாகி குரு பார்வை பெறுவதால் உள்ள பலன். 

3) செவ்வாய் 8இல் நீசபங்கமாகி குரு பார்ப்பதால் உள்ள பலன். 

4) சந்திரன் ஸப்தம கேந்திரத்தில் இருக்கும் பலன்கள். 

5) சனியின் 3ம் இட பலன்கள், பார்வை பலன்களை பார்த்து சொல்ல வேண்டுகிறேன். 

6) ராகு 11லும்,கேது 5ல்இருக்கும்(சூரியனின் சேர்ந்து) 
பலன்கள். 

7) சனியின் 2,3 இட ஆதிபத்யம் சனி திசை யில் எப்படி இருக்கும். செவ்வாய், குரு, சுக்கிரன், பாதகாதிபதியின் சாரத்தில் இருக்கும் பலன்கள். 


பதில் :

1) நடைபெறும் குரு திசை ஜாதகருக்கு 6,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சற்று கடுமையான இன்னல்களை தருவது கவலை தரும் விஷயம் என்ற போதிலும், குரு திசையில் தற்போழுது நடைமுறையில் உள்ள ராகு புத்தி ஜாதகருக்கு 2,5ம் வீடுகள் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் யோக பலன்களை தருவது வரவேற்கத்தக்கது, எனவே ஜாதகர் ராகு புத்தியில் கல்வி சார்ந்த விஷயங்களில் நல்லதொரு முன்னேற்றங்களையும், வெற்றியையும் பெறுவார் என்பதில் சந்தேகமில்லை, இருப்பினும் சுய ஜாதகத்தில் வெளியூர் அல்லது வெளிநாடு சார்ந்த முன்னேற்றங்களை குறிக்கும் 7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, வெளிநாடு சார்ந்த கல்வி அமைப்பில் வெகுவான தடைகளை தரக்கூடும் என்பதை கருத்தில் கொள்வது அவசியமாகிறது, இருப்பினும் ஜாதகருக்கு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியான துலாம் மிகவும் வலிமை பெற்று இருப்பது ( லாப ஸ்தானம் ) வரவேற்கத்தக்கது வெளிநாட்டில் கல்வி சார்ந்த வெற்றிகளை தரும் என்பதில் மாற்று கருத்து இல்லை சுய ஜாதகத்தில் 7ம் வீடு பாதிப்பது வெளிநாடு செல்வதில் அதீத தடைகளை தரக்கூடும், நடைபெறும் ராகு புத்தி மிகவும் வலிமை பெற்ற 2,5,11ம் வீடுகளின் பலாபலன்களை ஏற்று நடத்துவது வரவேற்கத்தக்கது, இது ஜாதகருக்கு கல்வி சார்ந்த விஷயங்களில் அபரிவிதமான நன்மைகளை வாரி வழங்கும், ஜாதகர் பூர்வீகத்தில் ( தமிழகத்தில் ) கல்விக்கான முயற்சிகளை மேற்கொள்வது சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், மேலும் ஜாதகர் தனது உடல் நலம், நிதி மேலாண்மை, நண்பர்கள் கூட்டாளிகள்  அமைப்பில் இருந்து வரும் இன்னல்களை மிக நுணுக்கமாக கையாண்டு நலம் பெறுவது அவசியமாகிறது.

2) லக்கினாதிபதி 12ல் இருப்பது ஜாதகருக்கு சற்று இன்னல்களை தரும் என்ற போதிலும், லக்கினம் எனும் முதல் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது வரவேற்கத்தக்கது, ஜாதகருக்கு சுய ஒழுக்கம், பெரியோர் ஆதரவு, பித்ருக்கள் ஆசி என்ற விதத்தில் யோகத்தை தரும், கல்வியில் வெற்றியும், அறிவு திறன் மூலம் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் பெறுவதற்கான சந்தர்ப்பங்களை அதிகரிக்கும், ஆன்மீகத்தில் நல்ல முன்னேற்றத்தை தருவதுடன் பட்டய படிப்பில் மிகப்பெரிய வெற்றியும், முதல் நிலையையும் தரும். குருவின் பார்வைகள் சுய ஜாதகத்திற்கு வலிமை சேர்க்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது இருப்பினும் 4ம் வீடு சற்று வலிமை பெற்று இருப்பது வரவேற்கத்தக்கது, 6,8ம் வீடுகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, சுக்கிரன் குரு பார்வை பெறுவதும் சிறப்பானததல்ல.

3) செவ்வாய் குரு பார்வை பெறுவது ஜாதகருக்கு நீண்ட ஆயுளை தரும் என்பதுடன், உடல் வலிமையை அதிகரிக்கும், இருப்பினும் சுய ஜாதகத்தில் 8ம் வீடு பாதிக்கப்படுவது ஜாதகருக்கு ரண சிகிச்சையை தரக்கூடும், வாழ்க்கை துணை வழியில், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியில் எதிர்பாராத இழப்புகளையும் துன்பங்களையும் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும்.

4) சந்திரன் இங்கு நிற்பது கடுமையான இன்னல்களை தரக்கூடும் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து, மேலும் நண்பர்கள் கூட்டாளிகள் மூலம் தாங்க இயலாத  மனத்துயரத்தை தருவதை தவிர்க்க இயலாது, லக்கினத்தை பார்வை செய்வது ஜாதகருக்கு சற்று நன்மையை தரும் என்பதுடன், வரும் இன்னல்களில் இருந்து விடுபட சரியான முன்யோசனைகளை வழங்கும்.

5) சனி தான் அமர்ந்த நிலையில் நன்மையையும், 6ம் பார்வை அமைப்பில் யோகத்தையும், 7ம் பார்வை அமைப்பில் இன்னல்களையும், 10ம் பார்வை அமைப்பில் துன்பத்தையும் தரக்கூடும் என்ற போதிலும், பொதுவாக சனி பகவான் ஜாதகருக்கு எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளை வழங்குகின்றார் என்பது கவனிக்கத்தக்கது, நல்லோர் சேர்க்கை ஜாதகரின் வாழ்க்கையில் சிறப்பு மிக்க முன்னேற்றத்தை வாரி வழங்கும்.

6) உண்மையி ஜாதகருக்கு 4ல் ( பாவக கணித முறைப்படி ) மேஷத்தில் அமர்ந்து சிறப்பான நன்மைகளை தருவது கவனிக்கத்தக்கது, சுய கட்டுப்பாடு, ஒழுக்கம், நல்ல குணம், வண்டி வாகன யோகம், வடக்கு திசை வாயிற்படி உள்ள வீடுகளில் குடியிருப்பதால் வரும் யோக வாழ்க்கை என்ற வகையில் நன்மைகளையே தருகின்றது, 10ல் அமர்ந்த ராகு ஜாதகருக்கு ஜீவனம் சார்ந்த இன்னல்களையும் மற்றவர்களால் வரும் வீண் அவப்பெயரையும் தவிர்க்க இயலாமல் வழங்குவது வருத்தத்த்திற்கு உரியது, ஜாதகர் எந்த காரணத்தை கொண்டும் சுய மரியாதை இழக்கும் விதத்திலான செயல்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது, நல்ல தொழில் விருத்தி ராகு பகவானால் உண்டாகும்.

7) சனி திசை ஜாதகருக்கு 2,5ம் வீடுகள் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவக தொடர்பை பெற்று சுபயோகங்களையும், 4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவக தொடர்பை பெற்று வீடு வண்டி வாகன யோகம் என்ற வகையில் நன்மைகளையும் ஒருசேர வழங்குவது வரவேற்க தக்கது, தற்போழுது நடைபெறும் குரு திசை பாதக ஸ்தான பலனை தருவது மட்டுமே ஜாதகருக்கான நெருக்கடிகளை அதிர்க்காரிக்கும், எதிர்வரும் சனி திசை ஜாதகருக்கு 2,4,5ம் வீடுகள் வழியில் இருந்து சுபயோக சுக வாழ்க்கையை தருவது வரவேற்க தக்கது, வாழ்த்துக்கள்.

செவ்வாய், குரு பகவானின் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள்  ஜாதகருக்கு கடுமையான இன்னல்களையும், சுக்கிரனின் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் நன்மையையும் தரும். எதிர்வரும் சனி திசை ஜாதகருக்கு 2,4,5ம் வீடுகள் வழியில் இருந்து சுபயோக சுக வாழ்க்கையை வாரி வழங்க காத்து இருப்பது வரவேற்க தக்கது, ஜாதகருக்கு நல்லதொரு வாழ்க்கை துணை, நல்ல நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் சேர்க்கை இல்லை எனில் வாழ்க்கை மிகவும் துன்ப நிலைக்கு எடுத்துச்செல்லும் என்பதை கவனத்தில் கொள்க, நல்ல நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் சேர்க்கை அவசியம் என்பதை வலியுறுத்தவும், வாழ்த்துக்கள்.

பரிகாரம் :

1) தினமும் சூரிய நமஸ்காரம் மேற்கொள்வது சிறப்பான எதிர்காலத்தை தரும்.
2) திருவக்கரை வக்கிர காளி அம்மன் கோவிலுக்கு சென்று முறையாக குரு பகவானுக்கு வக்கிரகநிவர்தி செய்து நலம் பெறுவது அவசியமாகிறது.
3) சனி பிரீதி வழிபாடு ஜாதகருக்கான இன்னல்களில் இருந்து நலம் தரும், பாதக ஸ்தான இன்னல்களை வெகுவாக குறைக்கும்.
4) வருடம் ஒரு முறை பழனி சென்று வழிபடுவது சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும்.
5) குல தெய்வ வழிபாடு எதிர்வரும் புரட்டாசி அமாவாசை அன்று செய்து நலம் பெறவும், அண்ணதானம் செய்து வழிபடுவது சகல நன்மைகளையும் தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன்
9443355696

திங்கள், 27 ஆகஸ்ட், 2018

சுய ஜாதக ஆலோசணை மூலம் வாழ்க்கையில் நலம் பெறுவது எப்படி ? சுக்கிரன் திசை சுபயோக வாழ்க்கையை தருமா ?


ஒவ்வொருவரும் சுய ஜாதக ஆலோசணை மூலம்  வாழ்க்கையில் நலம் பெறுவது அவசியமாகிறது, நமது பிறப்பின் ரகசியம்  அறியவும், படைப்பின் சாராம்சம் பற்றி தெளிவாக தெரிந்துகொள்ளவும் நமது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவக வலிமை பற்றியும், நடைபெறும், எதிர்வரும் திசா புத்திகள் ஏற்று நடத்தும் பாவக தொடர்பு பற்றியும் துல்லியமாக அறிந்துகொண்டு, அதன் வழியில் சரியான திட்டமிடுதல்களை மேற்கொண்டு வெற்றி பெறுவது மிக மிக அவசியமாகிறது, கீழ்கண்ட ஜாதகருக்கு லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் சுய ஜாதக ரீதியாக பெற்றுள்ள வலிமை பற்றியும், நடைபெறும் திசா புத்திகள் தரும் யோக அவயோக பலாபலன்கள் பற்றியும் இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : மீனம்
ராசி : கடகம்
நட்ஷத்திரம் : ஆயில்யம் 2ம் பாதம்

ஜாதகத்தில் பாவக தொடர்புகள் :

1,3,5,7,11,12ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவக தொடர்பை பெறுவது ஜாதகருக்கு 1ம் பாவக வழியில் இருந்து சிறப்பான வளரும் சூழ்நிலை, நிறைவான கல்வி, அதீத லாபங்கள் மற்றும் அதிர்ஷ்டம், செல்வச்செழிப்பு, அனைவர் வழியில் இருந்து வரும் உதவிகள், நோய் பாதிப்பில் இருந்து விரைவில் விடுபடும் தன்மை, வருமுன் காக்கும் வல்லமை, நினைத்த எண்ணங்கள் யாவும் பலிதம் பெறுதல், திருமண வாழ்க்கையில் சந்தோசம் மற்றும் அதிர்ஷ்டம், அதிக குழந்தைகள் அவர்கள் வழியில் இருந்து வரும் யோக வாழ்க்கை, தன்னம்பிக்கை மிக்க மனநிலை, எதிர்ப்புகளை கண்டு அஞ்சாமல் போராடும் வலிமை, புதிய சிந்தனை, முற்போக்கு சிந்தனை மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் தன்மை, நீடித்த அதிர்ஷ்டம் மற்றும் நீண்ட ஆயுள் உண்டாகும்.

3ம் பாவக வழியில் இருந்து எண்ணத்தின் வலிமை அதிகரிக்கும், நல்ல வியாபர முன்னேற்றம், மிகத்தைரியமான மனநிலை, எதையும் சாதிக்கும் வல்லமை, எடுக்கும் முயற்சிகளில் இருந்து வரும் வெற்றிகள், அதிக வாகன வசதி சொகுசு வாகன யோகம், விவசாய வழியில் இருந்து வரும் முன்னேற்றம், நிறைய சொத்து சுக சேர்க்கை, தர்மத்தை மதித்து நடத்தல், சாஸ்திர அறிவு, அதன் வழியில் இருந்து பெரும் யோக வாழ்க்கை, கணிதத்தில் தேர்ச்சி, விளையாட்டில் ஆர்வம், திருமணத்திற்கு பிறகான  அதிர்ஷ்ட வாழ்க்கை, வீரியமிக்க செயல்திறன், எதையும் வெற்றிகொள்ளும் மனப்பான்மை, துல்லியமான கணிப்பு திறன் என்ற வகையில் சுபயோகங்களை தருவதுடன், தகவல் தொழில் நுட்ப அறிவையும் அதிகரிக்கும், நிறைவான நல்லறிவு ஜாதகருக்கு சிறப்பான எதிர்காலத்தை வாரி வழங்கும்.

5ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் லாட்டரி யோகம், தனது புத்திசாலித்தனத்தால் ஆதாயம், குலதெய்வ அனுக்கிரகம் மூலம் வாழ்க்கையில்  சுபகாரியங்களை சிறப்பாக செய்யும் தன்மை, கற்ற கல்வி வழியில் இருந்து வரும் யோகம், தெளிவான சிந்தனை, சமயோசித புத்திசாலித்தனம் மற்றும் நுண்ணறிவு கொண்டு வாழ்க்கையில் அனைத்தையும் வெற்றிகொள்ளும் தன்மை, தெய்வீக திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம், எதிர்பார்த்த நன்மைகள் நடைமுறைக்கு வரும் தன்மை, பெற்ற குழந்தைகள் வழியில் இருந்து வரும் யோக வாழ்க்கை, நல்ல  ஆண்வாரிசு, பூர்வீகத்தில் இருந்து அபரிவித முன்னேற்றங்களை சுவீகரிக்கும் யோகம் என மிகுந்த நன்மைகளை தரும்.

7ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நல்ல யோகமிக்க வாழ்க்கை துணை அமையும், சிறந்த நண்பர்கள் வழியில் ஆதரவும், உதவி செய்யும் நல்ல கூட்டாளிகளும் ஜாதகருக்கு அமைவார்கள், வெளியூர் அல்லது வெளிநாடுகளில் இருந்து சிறப்பான வருமான வாய்ப்புகள் உண்டாகும், வியாபாரம் ஜாதகருக்கு மிகச்சிறப்பாக அமையும், தம்பதிய வாழ்க்கையில் வெற்றியும், பொதுமக்கள் வழியில் இருந்துவரும் ஆதரவும் ஜாதகருக்கு மிகவும் அபரிவிதமானதாக அமையும், வெளியூர் வெளிநாடு பயணங்கள் மூலம் ஜாதகர் தன்னிறைவான முன்னேற்றங்களை பெறுவார், ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் கைகொடுக்கும், ஏஜென்சி தரகு தொழில் ஜாதகருக்கு அபரிவித வளர்ச்சியினை வாரி வழங்கும்.

11ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு ஜாதகர் மிகுந்த அதிர்ஷ்டசாலி , ஜாதகர் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயல்களிலும் வெற்றியும், லாபமும் உண்டாகும், ஜாதகரின் முற்போக்கு சிந்தனை எதிர்பாராத வெற்றிகளுடன் கூடிய அதிர்ஷ்ட வாய்ப்புகளை வாரி வழங்கும், நேர்மறை எண்ணங்களால் ஜாதகரின் வாழ்க்கை மிகுந்த சுவாரஷ்யம் மிக்கதாக அமைந்திருக்கும், மற்றவர்களையும் தன்னையும் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்கும் வலிமை உண்டாகும், ஜாதகரின் நேர்மையான குணம் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்கது.

12ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நிறைவான லாபங்கள் உண்டாகும், வியாபாரத்தில் அபரிவித வளர்ச்சி உண்டு, சுபவிரையங்கள் அதிகரிக்கும், ஆன்மீகத்தில் நல்ல நாட்டமும், தெய்வீக திருத்தலங்களுக்கு சென்றுவரும் யோகமும் உண்டாகும், நல்ல ஆன்மீக குருவின் மூலம் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் பெறுவதற்கான வாய்ப்பு உண்டாகும், தாம்பத்திய வாழ்க்கையில் திருப்தியும், மனநிறைவான யோக வாழ்க்கை அமையும், முதலீடுகள் வழியில் பெருத்த லாபங்கள் உண்டாகும், தெய்வீக குணம் அதிகரிக்கும், மனதில் உள்ள லட்சியங்கள் யாவும் நிறைவேறும்.

2,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு, 2ம் பாவக வழியில் இருந்து தந்தையின் ஆசியின் மூலம் வருமான அதிகரிக்கும் என்ற போதிலும் நிதி மேலாண்மை சார்ந்த விஷயங்களில் ஓர் நேர்த்தி இருக்காது, இன்சூரன்ஸ், உயில், போனஸ், கிராஜுவிட்டி போன்றவற்றின் மூலம் லாபம் கிட்டும், திருமணம் தாமதமாக வாய்ப்பு உள்ளது, ஆயுள் பாவக தொடர்பை பெரும் 2ம் வீடு ஜாதகருக்கு நிதானமான நிதி மேலாண்மை திறன் இல்லை எனில் வெகு வேகமாக தனம் கரையும் என்பதை கருத்தில் கொள்க.

8ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நீண்ட ஆயுள் உண்டு என்ற போதிலும், திடீர் இழப்புகளை தவிர்க்க இயலாது, குறிப்பாக மருத்துவ செலவுகள், வீண் விரையம், தொழில் வழியிலான பாதிப்புகள், வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் வீண் செலவினங்கள், வாகனம் சார்ந்த விரைய செலவுகள் போன்றவை கடுமையான பாதிப்பை தரும் என்பதால் ஆயுள் காப்பீடு போன்றவற்றில் முதலீடு செய்து வரும் பாதிப்பில் இருந்து விடுபடலாம், குறிப்பாக அனைத்து பொருட்கள் இடம், வேண்டி வாகனம் போன்றவற்றை காப்பீடு செய்துகொள்வது சகல நிலைகளில் இருந்தும் நன்மைகளை தரும்.

4,6,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 4ம் பாவக வழியில் இருந்து நல்ல ஞானத்தையும், சிறந்த நற்குணத்தையும் தரும், உயர்கல்வி ஆய்வு கல்வியில் தேர்ச்சியை தரும், வருமுன் உணரும் தன்மையையும், இரசாயனம், கனிம பொருட்கள் சுரங்க பொருட்கள் வழியில் அபரிவித லாபத்தையும் வாரி வழங்கும், பல  அறிய திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம் உண்டு, தர்மத்தையும் சத்தியத்தையும் மதித்து போற்றும் குணத்தை தரும், மதம் சார்ந்த நன்மைகள் உண்டாகும், ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் சிறந்து விளங்கும் தன்மையை தரும், தகவல் தொழில் நுட்பம் சார்ந்த விஷயங்களில் அபரிவித யோகம் உண்டு, வண்டி வாகன தொழில் வழியில் லாபம் உண்டு, சுய   உழைப்பின் மூலம் வெற்றி பெற்ற மனிதராக திகழ்வார் என்பது கவனிக்கத்தக்கது.

6ம்  பாவக வழியில் இருந்து பயணம் மூலம் லாபம் உண்டாகும், சமாதான  முறையால் சகல சௌபாக்கியங்களையும் பெறுவார், மதம் சார்ந்த விஷயங்களில் நன்மைகளும் ஆதரவும் தேடி வரும், உடல் நல பாதிப்பில் இருந்து விரைவாக குணம் பெரும் தன்மையை தரும், கடன் சார்ந்த தொல்லைகள் ஜாதகரின் நடவடிக்கைகள் மூலம் நிறைவடையும், நீண்ட நாள் ஆசை லட்சியம் யாவும் நிறைவேறும், அதீத எதிர்ப்புகள் உண்டான போதிலும் இறுதியில் வெற்றியே ஜாதகர் பெறுவார், பொறுமையை கடைபிடிப்பது ஜாதகருக்கான வெற்றிகளை அதிகரிக்கும்.

9ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு வரும் துன்பங்களை ஜாதகரே தனது அறிவுத்திறன் கொண்டு வெற்றி பெறுவார், ஜாதகரின் முன்னோர்கள் செய்த பாக்கியத்தின் பலாபலன்களை முழுவதும் சுவீகரிக்கும் வல்லமை உண்டாகும், தெளிந்த நல்லறிவு, அதீத செயல்திறனும் ஜாதகருக்கு உலக புகழை பெற்று தரும், அனைவரிடமும் நற்ப்பெயரை பெறுவதற்கான சந்தர்ப்பம் உண்டாகும், தனது நிறுவனத்தின் பெயரை மக்கள் மத்தியில் பிரபல்யம் அடையச்செய்யும் யோகம் பெற்றவர் என்பதுடன், தொழில் வழியில் அழியா புகழை பெறுவார், இடமாற்றம் மற்றும் சூழ்நிலை மாற்றத்தில் அதீத ஆர்வம் உண்டாகும்.

10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு , உத்தியோகம் வியாபாரம் மற்றும் சுய தொழில் வழியிலான தன்னிறைவான வெற்றிகளை வாரி வழங்கும், கம்பீரமான நிர்வாக திறனை தரும், தீர்க்கமான வாத திறமையையும், விரைவான செயல்பாடுகளையும் தரும், பொது வாழ்க்கையில் வெற்றி உண்டாகும், தான் செய்யும் தொழில் வழியில் இருந்து 100% விகித வெற்றிகளையும் லாபங்களை பெறுவதுடன், கவுரவம் அந்தஸ்து குறையாத யோக வாழ்க்கையை தரும், ஜாதகரின் ஜீவன ஸ்தானம் மிகவும் வலிமையுடன் இருப்பதால் எதிர்கால வாழ்க்கை பரிபூர்ண வெற்றிகள் நிறைந்ததாக விளங்கும்.

நடைபெறும் திசாபுத்திகள் தரும் பலாபலன்கள் :

சுக்கிரன் திசை தரும் பலாபலன்கள் ( 20/03/2009 முதல் 20/03/2029 வரை )

நடைபெறும் சுக்கிரன் திசை ஜாதகருக்கு 2,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவக பலனை ஏற்று நடத்துவது, மேற்கண்ட பாவக வழியில் இருந்து சற்று இன்னல்களை தரக்கூடும், வருமானம், இழப்பு என்ற  வகையில் இன்னல்கள் உண்டாக வாய்ப்பு உண்டு என்பதால் ஜாதகரின் நிதி சார்ந்த மேலாண்மை மிகவும் சிறப்பாக அமைவது அவசியமாகிறது, முடிந்த அளவு கடன் சார்ந்த இன்னல்களில் இருந்து விடுபட முயற்சிப்பது அவசியமாகிறது, அதீத தன்னம்பிக்கை ஜாதகருக்கான பொருளாதார முன்னேற்றங்களை அபரிவிதமானதாக மாற்றி அமைக்கும், தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசையில் ராகு புத்தி 5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவக தொடர்பை பெறுவது வரவேற்கத்தக்கது, தன்னிறைவான பொருளாதர முன்னேற்றங்களையும், எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் நல்கும், குலதெய்வத்தின் ஆசியின் மூலம் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும்.
எதிர்வரும் குரு புத்தியும் தங்களுக்கு 1,3,7,12ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவக பலனை  ஏற்று  நடத்துவது தங்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளில் இருந்து விடுதலையும், பொருளாதார மேன்மையையும் வாரி வழங்கும், புதிய சிந்தனை புதிய செயல்பாடுகள் தங்களின் வாழ்க்கையில் எதிர்பாராத நன்மைகளை வாரி வழங்குவதுடன் இல்லற வாழ்க்கையில் சந்தோசம், குழந்தை பாக்கியத்தை தடையின்றி வழங்கும், சுக்கிரன் திசை 2,8ம் பாவக வழியில்  இருந்து இன்னல்களை தந்த போதிலும், நடைபெறும், எதிர்வரும் புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை தருவது வரவேற்க்கத்தக்கது " வாழ்த்துக்கள் "

வாழ்க வளமுடன் 
 ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வெள்ளி, 20 ஜூலை, 2018

12ல் செவ்வாய் தோஷம் தனது திசையில் நன்மை செய்யுமா? எதிர்வரும் ராகு திசை தரும் பலன் என்ன ?


கேள்வி :
12ல் செவ்வாய் தோஷம் உள்ளது, தற்போழுது செவ்வாய் திசையே நடைமுறையில் உள்ளது செவ்வாய் தோஷம் என்பதால் தனது திசையில் இன்னல்களை தருமா ? லாப ஸ்தானமான 11ல் நின்ற ராகு திசை எனக்கு யோக வாழ்க்கையை வழங்குமா? எதிர்காலம் எப்படி இருக்கும் ?

பதில் :

 " ஜோதிடம் ஒரு கடல் " இதில் நீச்சல் தெரிந்தவர்கள் மூழ்கி முத்துஎடுக்கலாம், தெரியாதோர் கரையில் நின்று வேடிக்கை மட்டும் பார்க்க இயலும் என்பது உண்மை நிலை, தங்களது கேள்வியிலேயே, செவ்வாய் தோஷம் உள்ளதால் செவ்வாய் திசை இன்னல்களை தரும் என்ற எண்ணமும், 11ல் அமர்ந்த ராகு தனது திசையில் யோக வாழ்க்கையை தரும் என்ற எதிர்பார்ப்பும் இழையோடி நிற்பது தெளிவாகிறது அன்பரே, தங்களின் மனஓட்டம் நிறைவேறுகின்றதா ? என்பதை தங்களது சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு தெளிவு பெறுவோம்.


லக்கினம் : கடகம் 
ராசி : தனுசு 
நட்ஷத்திரம் : பூராடம் 1ம் பாதம் 

தங்களது ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் செவ்வாய் திசை ( 15/01/2017 முதல் 16/01/2024 வரை ) லக்கினத்திற்கு விரைய ஸ்தானமான 12ல் அமர்ந்து நடைபெற்ற போதிலும் தனது திசையில் தங்களது ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது வரவேற்கத்தக்கது, அதாவது செவ்வாய் தனது திசையில் 3,7ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவக தொடர்பை பெற்று சகோதரம் மற்றும் வீரிய ஸ்தானமான 3ம் பாவக வழியில் இருந்தும், களத்திரம் மற்றும் வியாபர விருத்தியை தரும் 7ம் பாவக வழியில் இருந்து தங்களுக்கு மிகுந்த சுபயோகங்களை நல்குவது வரவேற்கத்தக்கது, 3,7ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவக தொடர்பை பெறுவது தங்களுக்கு 3ம் பாவக வழியில் இருந்து நிலையான சுய முன்னேற்றம், எளிதான பொருள் வரவு, செய்யும் தொழில் வழியில் அபரிவித முன்னேற்றம், வீரியமிக்க செயல்பாடுகள், சகல சௌபாக்கியம், கலையில் தேர்ச்சி, சமூக அந்தஸ்து, அரசியலில் வெற்றி, தீர்க்காயுள், பெரியோர் வழியிலான ஆசி, அறிவு திறன் புத்திகூர்மை மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுதல், நியாமான வியாபார விருத்தி, விவசாயம் பத்திரிக்கை துறையில் முன்னேற்றம், சாஸ்திர ஆராய்ச்சி மூலம் லாபம், விளையாட்டு, இசை துறையில் ஆர்வம், லாட்டரி யோகம், வழக்கு போட்டி பந்தயங்களில் வெற்றி, வெளியூர் வெளிநாடு பயணம், ஆன்மீக திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம், என்ற வகையில் சிறப்புகளை தரும், எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றி மேல் வெற்றியை தரும், முன்னேற்றம் என்பது தன்னிறைவாக அமையும், மனோதைரியமும், தன்னம்பிக்கையும் வெகுவாக யோக பலன்களை வாரி வழங்கும்.

7ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் வாழ்க்கை துணை வழியிலான ஆதரவு பன்மடங்கு பெருகும், அவர் வழியிலான உதவிகள் ஜாதகருக்கு மிதமிஞ்சிய லாபங்களை வாரி வழங்கும், அரசியல், கூட்டு தொழில், நண்பர்கள் மூலம் வியாபாரம் விருத்தி அடையும், பிரபல்ய யோகம் உண்டு என்பதால் ஜாதகரின் முன்னேற்றம் வெகு விரைவில் அமையும் என்பது கவனிக்கத்தக்கது, நல்ல நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் ஜாதகருக்கு சிறப்பாக அமைவார்கள், தனசேர்க்கை ஜாதகருக்கு பெரிய திட்டமிடுதல்களை மிக எளிதாக வெற்றிகொள்ளும் வாய்ப்பை நல்கும், சமூகத்தில் ஜாதகருக்கு மதிப்பு  மரியாதையும், கவுரவ பதவிகளும் தேடி வரும், எதிர்பாரத தொழில் வெற்றிகளை சுவீகரிக்கும் வல்லமையை தற்போழுது நடைபெறும் 12ல் அமர்ந்த செவ்வாய் திசையையே ( 12ல் செவ்வாய் தோஷம் ) தங்களுக்கு வாரி வழங்குகிறது என்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

எதிர்வரும் ராகு திசை தரும் பலன்கள் : ( 16/01/2024 முதல் 16/01/2042 வரை )

ராகு தனது திசையில் தங்களுக்கு 1,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தர இருப்பதும், 5,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தர இருப்பதும் தங்களுக்கு திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவக வழியில் இருந்தும், 200% விகித இன்னல்களை தரும் பாதக ஸ்தான வழியில் இருந்து ஏக காலத்தில் வெகுவான இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும், ராகு திசையில் தாங்கள் எடுக்கும் முடிவுகள் யாவும் கடும் சேதாரத்தையே வாரி வழங்கும், லக்கின  பாவக வழியில் இருந்து உடல் நலம் மற்றும் மனநலம் பாதிக்கும், சூழ்நிலை சந்தர்ப்பங்களை அடிபணியும் நிலையை தரும், நினைத்த காரியங்கள் நடைபெற கடும் போராட்டத்தை மேற்கொள்ளும் சூழ்நிலையை தரும், சரியான முடிவுகளை மேற்கொள்ள பகிர்தனா முயற்சிகள் எடுக்கும் சூழ்நிலையை தரும், உதவி செய்ய யாருமற்ற நிலையை தரும், எதிர்பார்ப்புகள் யாவும் பொய்த்துப்போகும், நிம்மதியை வெகுவாக பாதிக்கும், 11ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டமின்மையால் மிகுந்த சிரமங்களை எதிகொள்ளும் சூழ்நிலையை தரும், பிற்போக்குத்தனம், கற்பனையில் சஞ்சரிக்கும் நிலை, மூடநம்பிக்கையில் ஆர்வம், மற்றவருடன் குற்றம் கண்டுபிடிக்கும் மனநிலை என்ற வகையில் தங்களின் முன்னேற்றத்தை வெகுவாக பாதிக்கும்.

5ம் பாவக வழியில் இருந்து தங்களின் பூர்வீக இடத்தில் இருந்து வெகு தொலைவு  சென்று பரதேஷ ஜீவனம் மேற்கொள்ளும் நிலையை தரும், குழந்தைகள் வழியிலான இன்னல்கள் அதிகரிக்கும், தெளிவில்லாத சிந்தனை, தவறான முடிவுகள் மூலம் மிகப்பெரிய இழப்புகளை சந்திக்கும் சூழ்நிலையை தரும், உறவுகள் வழியிலான மனக்கசப்பு அதிகரிக்கும் என்பது கவனிக்கத்தக்கது, 8ம் பாவக வழியில் இருந்து திடீர் இழப்பு, உடல் நல பாதிப்பு, வீண் விரையம், மருத்துவ செலவினங்கள், விபத்தின் மூலம் பாதிப்பு, வண்டி வாகனம் மூலம் வரும் பெரும்செலவுகள், உடலில் காயங்கள் ஏற்படுதல் அதனால் வரும் மருத்துவ செலவினங்கள், நம்பிக்கை இன்மை, அனைவராலும் தொல்லை, பொது வாழ்க்கையில் அவப்பெயர் என்ற வகையில் தங்களுக்கு 11ல் வலிமை பெற்று அமர்ந்து இருக்கும் ராகு திசை மிகுந்த இன்னல்களையே வாரி வழங்க உள்ளது என்பதை கருத்தில் கொண்டு விழிப்புணர்வுடன் செயல்பட்டு அவயோக பலாபலன்களை தவிர்க்க முற்படுங்கள்.

குறிப்பு :

12ல் தோஷம் தரும் செவ்வாய், தனது திசையில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தி யோக பலன்களையும், 5ல் வலிமை பெற்று அமர்ந்து இருக்கும் ராகு தனது திசையில் கடுமையாக பாதிக்கப்பட்ட பாதகம் மற்றும் ஆயுள் ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கான விதி அமைப்பு இதை ஜாதகர் தனது மதிகொண்டு வெல்ல இறையருள் கருணைபுரியட்டும் வாழ்த்துகள்......

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

திங்கள், 2 ஜூலை, 2018

தொழிலில் இடமாற்றம் உண்டா ? திருமணம் தாமதமாக காரணம் என்ன ? உயர்கல்வி பயில முயற்சி மேற்கொள்ளலாமா ?



அய்யா,

 தற்பொழுது செய்துவரும் பணியில் இடமாற்றம் உண்டா ? ஊதிய உயர்வு கிடைக்குமா? ஆய்வு கல்விக்கான முயற்சிகளை மேற்கொள்ளலாமா, அதற்க்கு உகந்த நேரமாக நிகழ்காலத்தை கருதலாமா? திருமண வாழ்க்கை எப்படி அமையும் ? மனதிற்க்கு இசைந்த இல்லற வாழ்க்கை துணை அமையுமா ? திருமணம் தாமதமாக காரணம் என்ன ? தெளிவான விளக்கம் தர வேண்டுகின்றேன்.


பதில் :

லக்கினம் : மேஷம் 
ராசி : மகரம் 
நட்ஷத்திரம் : திருவோணம் 1ம் பாதம் 

 நடைபெறும் குரு திசை தங்களுக்கு 3ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவது வரவேற்கத்தக்கது, குறிப்பாக திடீர் அதிர்ஷ்டம், தொழில் மற்றும் பணியில் ஊதிய உயர்வுடன் கூடிய பணி இடமாற்றம் உண்டாகும், தீர்க்க ஆயுள் உண்டு, திருமணத்திற்கு பிறகான அதிர்ஷ்டத்தை தரும் என்பதால், திருமண முயற்சிகள் கைகூடும், தொட்டது அனைத்தும் துலங்கும், அதிர்ஷ்டத்தின் தாக்கம் திடீரென அதிகரிக்கும், எதிர்கால வாழ்க்கைக்கான நம்பிக்கை உண்டாகும்.

தற்போழுது நடைபெறும் குரு திசையில் சனி புத்தி தங்களுக்கு 1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம்  பெற்று யோக பலனை தருவது வரவேற்கத்தக்கது, இது தங்களுக்கு லக்கினம் மற்றும் களத்திர ஸ்தான வழியில் இருந்து சிறப்புகளை வாரி வழங்கும், கல்விக்கான முயற்சிகள் நல்ல வெற்றியை தரும், உடல் நலம் மனஆரோக்கியம் அதிகரிக்கும், தெளிவான சிந்தனை மற்றும் செயல்பாடுகள் தங்களின் வாழ்க்கையில் புதியதொரு உத்வேகத்தை தரும், சனி புத்தி 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவக தொடர்பை பெற்று யோக பலனை தருவது சகல சுக போகங்களையும் அனுபவிக்கும் தன்மையை தரும், வண்டி வாகன யோகம், புதிய தொழில் வாய்ப்புகள், திடீர் முன்னேற்றம், எதிர்பாராத கவுரவ பதவிகள், சிறந்த நிர்வாக திறனை போற்றும் விதமாக வரும் ஊதிய உயர்வு, புதிய தொழில் வாய்ப்புகள், புதிய மனிதர்கள் வழியில் இருந்து வரும் நம்பிக்கைகள் என்ற வகையில் சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும்.

குரு திசை ஜாதகத்தில் தங்களுக்கு வீரிய ஸ்தான பலனை பரிபூர்ணமாக வழங்குவதுடன், குரு திசை சனி புத்தி தங்களுக்கு 1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடனும், 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடனும் சம்பந்தம் பெற்றும் யோக பலனை தருவது தங்களது வாழ்க்கையில் ஸ்திரத்தன்மையிலான  முன்னேற்றங்கள் வெகுவாக வந்துசேரும், தெய்வீக அனுக்கிரகத்தால் எதிர்ப்புகள் அனைத்தும் விலகி வெற்றிநடை போடும் சுபயோக நேரமிது, வாழ்த்துகள்.

திருமண வாழ்க்கை  சுய ஜாதகத்தில் சனி புத்தியில்  1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதால், மேற்கு திசையில் இருந்து வரும் வாழ்க்கை துணை தங்களுக்கு சிறந்த கணவராக அமைவார், மேலும் தங்களுடனான பாசம் அன்பு மாறாத இனிமையான இல்லற வாழ்க்கையை தருவார், குறைந்தது தங்களின் வாழ்க்கை துணை 100 கிமி தூரத்திற்கு அப்பால் இருந்து வருவதுடன், அவரது வீடு மேற்கு திசை வாயிற்படி கொண்டதாக அமைந்திருக்கும், களத்திர ஸ்தான அதிபதி சனி என்பதால் அடிமை தொழில் புரிபவராகவும், நிலையான வருமானத்தை கொண்டவராகவும் திகழ்வார், தனது அறிவுத்திறன் கொண்டு ஜீவன மேன்மையை பெரும் யோகத்தை ஜாதகர் பெற்று இருப்பார்.

திருமணம் தாமதமாக சுய ஜாதகத்தில் 2,5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் பாதக ஸ்தான பலனை தங்களுக்கு 2ம் வீடு வழியில் இருந்து தருவாதாலேயே திருமண வாழ்க்கை வெகு தாமதமாகிறது, கடந்த ராகு திசையும் தங்களுக்கு 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடனும் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் ஜீவன மேன்மையை மட்டுமே வாரி வழங்கிவிட்டது என்பது கவனிக்கத்தக்கது, தற்போழுது நடைபெறும் குரு திசையில் சனி புத்தி 1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 7ம் பாவக நன்மைகளை தருவதால் தங்களுக்கு திருமண வாழ்க்கை கைகூடி வரும் வாழ்த்துக்கள்.

தற்போழுது நடைபெறும் குரு திசையும், எதிர்வரும் சனி திசையும் தங்களுக்கு சிறப்பான நன்மைகளை தருவது வரவேற்கத்தக்கது, குறிப்பாக குரு திசை தங்களுக்கு 3ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவதும், எதிர்வரும் சனி திசை 1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடனும் சம்பந்தம் பெற்றும் சுபயோக பலாபலன்களை தருவது வரவேற்கத்தக்கது, எனவே தங்களது வாழ்க்கையில் சிறப்பான எதிர்கால நன்மைகள் நடைபெற உள்ளதால், அது சார்ந்த முன்னேற்ப்பாடுகளை செய்து சகல சௌபாக்கியங்களையும் பெறுக.

தொழில்,திருமணம்,கல்வி,குழந்தை பாக்கியம், அதீத பொருளாதர வளர்ச்சி என்ற வகையில் எதிர்வரும் காலங்களில் தங்களின் வாழ்க்கை புது பாதையில் பயணிக்க இருப்பது கவனிக்கத்தக்கது, எனவே சரியான வாழ்க்கை துணையை மட்டும் உடனடியாக தேர்வு செய்து நலம் பெறுங்கள்.

குறிப்பு :

சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்பை ஏற்று நடத்தும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் யாவும் சிறப்பான சுபயோக  பலாபலன்களையே தரும் என்பதால், நடைபெறும் திசாபுத்தி, எதிர்வரும் திசாபுத்தி தங்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி  மிக துல்லியமாக அறிந்துவைத்திருப்பது மிக மிக அவசியமாகிறது என்பதை கருத்தில் கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

ஞாயிறு, 1 ஜூலை, 2018

5ல் ராகு ஆண் வாரிசு அமைந்தது எப்படி ? எதிர்வரும் ராகு திசை தரும் பலாபலன்கள் என்ன ?


கேள்வி :

தங்களிடம் ஜாதக ஆலோசணை பெறும்முன், எனது ஜாதகத்தை பார்த்த அனைவரும் 5ல் ராகு இருப்பதால், கடுமையான புத்திர தோஷம் உள்ளதாகவும், குழந்தை பாக்கியம் கிடைப்பது அரிது என்றனர், மேலும் ஆண் வாரிசு கிடையாது என்றனர், தங்களிடம் ஆலோசனை பெற்று தாங்கள் பரிந்துரை செய்த ஜாதகத்தை வாழ்க்கை துணையாக அமைத்துக்கொண்டேன், தற்போழுது ஆண் குழந்தை பிறந்து உள்ளது, 5ல் ராகு அமர்ந்தாள் புத்திர பாக்கியம் இல்லை என்பது பொய்யானதா? பிறந்த ஆண் குழந்தை வழியில் இருந்து ஏதாவது இன்னல்கள் வருமா ? ராகு திசை அடுத்து வர இருக்கின்றது, எனக்கும் எனது குழந்தைக்கும் எதிர்வரும் ராகு திசையில் ஏதாவது பாதிப்பை தருமா ? எதிர்காலம் எப்படி இருக்கும் ? தெளிவான விளக்கம் தர வேண்டுகின்றேன் .


லக்கினம் : கன்னி
ராசி : சிம்மம்
நட்ஷத்திரம் : பூரம் 3ம் பாதம்

அடிப்படையில் ஒருவரது சுய ஜாதகத்தில் 5ல் ராகு அமர்ந்து இருப்பதினால் மட்டுமே புத்திர பாக்கியத்தை தடை செய்யும் என்று கருதுவதும், அவருக்கு குழந்தை பிறக்காது என்று முடிவு செய்வதும் முற்றிலும் ஜாதக கணிதத்திற்கு புறம்பானது, மேற்கண்ட ஜாதகருக்கு 5ம் பாவகத்தில் ராகு அமர்ந்து சம்பந்தப்பட்ட பாவாகத்தை கடுமையாக பாதிப்பிற்கு ஆளாக்குவதும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் வீடான சிம்ம ராசி 12ம் வீடாக அமைந்து கடுமையாக பாதிக்கப்படுவதும் தங்களது ஜாதகத்தில் 5ம் பாவகம் பாதிப்பின் தன்மை கடுமையாக உள்ளது என்பதே உண்மையானது, இருப்பினும் தங்களது சுய ஜாதகத்தில் பிறந்த நேரத்தின் அடிப்படையில் 5ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சம்பந்தப்பட்ட பாவக  வழியில் இருந்து வரும் இன்னல்களை யாவற்றையும் தவிர்த்து, 11ம் பாவக வழியிலான நன்மைகளை வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், தங்களது சுய ஜாதகத்தில் 5ம் வீடு சர மண் தத்துவ ராசியில் 1 பாகையும் ஸ்திர காற்று ராசியில் 29 பாகைகளையும் கொண்டிருப்பது 5ம் பாவக வழியிலான அதிர்ஷ்ட பலன்களை மட்டும் தடை செய்யும், குல தெய்வ நிந்தனை மூலம் தங்களுக்கு சுப நிகழ்வுகளில் தடை தாமதங்களை தரும், இதுவே தங்களது திருமண தாமதத்திற்கும் காரணமாக அமைந்தது என்பது கவனிக்கத்தக்கது.

ராகு பகவானால் பாதிக்கப்பட்ட 5ம் பாவக பலனை தற்போழுது நடைமுறையில் உள்ள செவ்வாய் திசை ஏற்று நடத்தவில்லை என்பதனால் 5ம் பாவக  வழியில் இருந்து வரும் இன்னல்கள் யாவும் தங்களுக்கு நடைமுறைக்கு வரவில்லை, மேலும் தங்களுக்கு 5ம் பாவகம் ராகு பகவானால்  கடுமையாக பாதிக்கப்படுவது, தங்களது பூர்வீக ஜீவனத்தை வெகுவாக பாதித்து கல்வி காலம் முதல் தற்போழுது வரை பரதேச ஜீவனம் என்ற அமைப்பில் வெளியூர், வெளிநாடுகளிலேயே ஜீவனத்தை மேற்கொள்ள வைத்திருப்பதால், புத்திர பாக்கியத்தை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை, தாங்கள்  வெளிநாட்டில் இருப்பது தங்களது 5ம் பாவக ராகு தரும் இன்னல்களில் இருந்து காத்துஅருள்கிறது, தங்களது ஜீவனம் பூர்வீகத்தில் இருந்து இருப்பின் ( வாய்ப்பு வெகு குறைவு காரணம் 5ம் பாவகம் ராகு பகவானால் பாதிக்கப்படுவது பூர்வீகத்தை விட்டு வெளியேற்றிவிடும் ) ஆண் வாரிசு அமைவது என்பது குதிரைக்கொம்பாகவே அமைந்து இருக்கும்.

சுய ஜாதகத்தில் ராகு கேது 5ல் அமர்ந்து வலுவாக பாதிப்பை பெறுவது சம்பந்த பட்ட ஜாதகருக்கு பரதேச ஜீவனத்தை தந்துவிடும் என்பதற்கு தங்களது ஜாதகமே நல்ல உதாரணம், ஒருவேளை தாங்கள் பூர்வீகத்தில் வலுக்கட்டாயமாக ஜீவித்து இருப்பின், தங்களுக்கு நல்ல கல்வி, தொழில், திருமணம் , வருமானம், குழந்தை பாக்கியம், பொருளாதார முன்னேற்றம் என யாதொரு நன்மைகளையும் அனுபவித்து இருக்க முடியாது என்பதே உண்மை, மேலும் ஒரு சிறு விஷயத்தை பெறுவதற்கு கூட பகிர்தன முயற்சிகளை எடுக்கவேண்டிய சூழ்நிலையை தந்து இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது.

இவை அனைத்திற்கும் சிகரம் வைத்தார் போல் தங்களுக்கு அமைந்த வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் ஜென்ம லக்கினத்திற்கு 5ம் பாவகமும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் ராசியான சிம்மமும் மிகுந்த வலிமையுடன் அமைந்தது, தங்களுக்கு வெகு சாதகமாக அமைந்தது, திருமணம் ஆனா உடனேயே புத்திர பாக்கியம் கிட்டியதுடன், நல்ல ஆண் வாரிசும் பிறந்தது வரவேற்கத்தக்கது, தங்களது ஜாதகத்தில் 5ம் வீடு ராகு பகவானால் பாதிக்கப்பட்ட போதிலும், தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 5ம் வீடு வலிமை பெற்று இருந்தது ஓர் சிறப்பு அம்சமாகும், மேலும் தாக்களுக்கு நடைபெற்ற செவ்வாய் திசை 5ம் பாவக பலனை ஏற்று நடத்தாமல் இருந்ததும், தாங்கள் வெளிநாட்டில் ஜீவனம் செய்து வருவதும் தங்களுக்கு நல்லொதொரு ஆண் வாரிசை நல்கியிருக்கிறது.

எதிர்வரும் ராகு திசை தங்களுக்கு 9ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் அதிர்ஷ்டகரமான யோக பலன்களை வாரி வழங்குவது மிகுந்த நன்மைகளை தரும் அமைப்பாகும், ராகு திசையும் தங்களுக்கு யாதொரு பாதிப்பையும் தரவில்லை என்பதால் 9ம் பாவக வழியில் இருந்து வரும் நன்மைகளை பெற தயார் நிலையில் இருப்பதே உசிதமானது.

குறிப்பு :

சுய ஜாதகத்தில் 5ம் வீடு சாயா கிரகங்களான ராகுகேதுவால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது அல்லது சுய ஜாதகத்தில் 5ம் வீடு 4,8,12ம் பாவக தொடர்பை பெறுவது, பாதக ஸ்தான தொடர்பை பெறுவது ஜாதகருக்கு பூர்வீக வழியில் இருந்து வரும் நன்மைகளை வெகுவாக தடுக்கும், மேலும் ஜாதகரின் சமயோசித அறிவு திறன், பூர்வீக சொத்து, குழந்தை பாக்கியம் போன்ற விஷயங்களை வெகுவாக பாதிக்கும், மேற்கண்ட அமைப்பை பெற்ற அன்பர்களுக்கு சரியான தீர்வு வெளியூர் அல்லது வெளிநாடு சென்று ஜீவனம் தேடிக்கொள்வது நல்லது இல்லை எனில், நமது பெரியவர்கள் சொல்லி வைத்த " பாடும் பட்டமாதிரி, வீடும் கெட்ட மாதிரி " என்ற முதுமொழிக்கு நிகரான வாழ்க்கையை தந்துவிடும் என்பதுடன், புத்திர பாக்கியத்தையும் வெகுவாக பாதிக்கும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

சனி, 23 ஜூன், 2018

2ல் அமர்ந்த ராகு மஹா திசை தரும் பலாபலன்கள் என்ன ? எதிர்காலம் எப்படி இருக்கும் ?

 

 சுய ஜாதகத்தில் சாயா கிரகங்களான ராகு கேது தான் அமர்ந்த பாவகத்தை வலிமை பெற செய்வது என்பது ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளை தரும், அதே சமையம் தான் அமர்ந்த பாவகத்தை வலிமை இழக்க செய்வது, மிகுந்த துன்பத்தையும் இன்னல்களையும் தரும், இது சாயா கிரகங்கள் தனது திசா புத்தி அந்தரம் மற்றும் சூட்ஷம காலங்களில் நடைமுறைக்கு கொண்டு வரும் என்று கருதுவது முற்றிலும் தவறான கருத்தாகும், சுய ஜாதகத்தில் ராகுகேது தான் அமர்ந்த பாவகத்திற்கு வலிமை சேர்க்கும் அமைப்பில் இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி, தனது திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில் சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களில் எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது. இது பற்றி இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : தனுசு
ராசி : சிம்மம்
நட்ஷத்திரம் : பூரம் 4ம் பாதம்

ஜாதகரின் கேள்வியே தவறானதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது, 2ல் அமர்ந்த ராகு என்பது முற்றிலும் ஜாதக கணிதத்திற்கு புறம்பானது, ஏனெனில் ஜாதகருக்கு லக்கினம் எனும் முதல் பாவகம் தனுசு ராசியில் 265:42:51 பாகையில் ஆரம்பித்து, மகர ராசியில் 297:15:08 பாகை வரை வியாபித்து நிற்கிறது, ராகு பகவான் இந்த லக்கினத்திற்கு உற்ப்பட்ட 295:26:18 பாகையிலும், கேது களத்திர ஸ்தானத்திற்கு உற்ப்பட்ட 115:26:18 பாக்கையிலும் அமர்ந்து இருப்பதால் தங்களது சுய ஜாதகத்தில் ராகு கேது முறையே லக்கினம் மற்றும் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்து இருப்பதே உண்மை நிலை, எனவே ராகு கேது அமர்வு என்பது 1,7ம் வீடுகளில் என்பதால் 1ல் அமர்ந்த ராகு மஹா திசை தரும் பலாபலன்கள் என்ன ? எதிர்காலம் எப்படி இருக்கும் ? என்று வினவுவதே மிகச்சரியானதாக அமையும்.

 தங்களது ஜாதகத்தில் ராகு பகவான் உயிர் உடலாகி லக்கினம் எனும் முதல் பாவகத்தில் 100% விகித வலிமை பெற்று அமர்ந்து இருப்பதால் , தங்கள் லக்கின பாவக வழியில் இருந்து நல்ல ஆரோக்கியம், மனவலிமை, பொறுமை, சகிப்புத்தன்மை, சிறந்த செயல்திறன், நீண்ட ஆயுள், புகழ் வெற்றி கீர்த்தி போன்ற நன்மைகளை பரிபூர்ணமாக  சுவீகரிக்கும் வல்லமை உடையவராக திகழ்வீர்கள், மேலும் லக்கினத்தில் அமர்ந்த ராகு சம்பந்தப்பட்ட பாவகத்தை 100% விகித வலிமையை தருவதால், ஆராய்ச்சி மனப்பக்குவம், நினைத்ததை சாதிக்கும் யோகம், வருமுன் காக்கும் வல்லமை, விரைவான செயல்பாடுகள் மூலம் வெற்றியை பறிக்கும் யோகம், மனதிற்கும் புலனிற்கும் எட்டாத விஷயங்களை ஆய்வு செய்து, அதன் வழியிலான நன்மைகளை பெரும் யோகம் என்றவகையில் சிறப்புகளை தரும், தங்களின் திட்டமிடுதல்கள் யாவும் நல்ல வெற்றியையும் லாபத்தையும் தரும். ஆக சுய ஜாதகத்தில் லக்கின பாவகத்தில் அமர்ந்த ராகு பகவான் தங்களுக்கு தான் அமர்ந்த அமைப்பில் இருந்து சிறப்பான நன்மைகளையே வாரி வழங்குகின்றார், இனி ராகு தனது திசையில் தரும் பலன்கள் என்ன ? என்பதை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பரே !

ராகு திசை தரும் பலன்கள் (  22/08/2017 முதல் 23/08/2035 வரை )

தங்களது ஜாதகத்தில் ராகு லக்கின பாவகத்தில் அமர்ந்து 100% விகித வலிமையுடன் இருந்த போதிலும், தனது திசையில் 2,5,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று ராகு தசை 2,5,8 பாவக பலாபலன்களை  ஏற்று நடத்துவது தங்களுக்கு உகந்ததல்ல, 2ம் பாவக வழியில் இருந்து தங்களுக்கு தனவரவு அதிகரித்த போதிலும், வீண் விரையம், அதிக செலவினங்கள், வாக்கு குடும்பம் சார்ந்த அமைப்பில் இருந்து இன்னல்களையும் துன்பங்களையும் தரும், குறிப்பாக குடும்ப வாழ்க்கையில் நிறைய மாற்றங்களை தரும், 5ம் பாவக வழியில் இருந்து துயரம், தடங்கல், எதிர்த்து போராடும் வல்லமை குறைவு, குலதெய்வ சாபம், எதிர்பாரத அவமானம் மற்றும் புகழுக்கு களங்கம், சோர்வு, மனஉளைச்சல், வீண்கவலை, விபத்து, மனம் ஒரு நிலையில் இல்லாமல், முடிவுகளை தவறாக மேற்கொள்ளும் தன்மை, உதவி செய்ய யாரும் அற்ற சூழ்நிலை, நம்பிக்கை குறைவு, தனது முயற்சி வீணாகும் தன்மை என்றவையில் இன்னல்களை தரும்.

8ம் பாவக வழியில் இருந்து நீண்ட ஆயுளை தந்த போதிலும், பாதுகாப்பான பயணம் மேற்கொள்வது தங்களுக்கு உகந்த நன்மைகளை தரும், தேவையற்ற மருத்துவ செலவுகள், அவசியமற்ற வாக்குவாதம், உறுதியற்ற மனநிலை, எதிர்பாலின சேர்க்கை மூலம் வரும் இன்னல்கள், முரண்பாடான கருத்துக்களால் ஏற்படும் பேரிழப்பு, உடல் மற்றும் மனநலம் கடுமையாக பாதித்தல் என்ற வகையில் இன்னல்களை தரும், வண்டி வாகனங்களில் மிகுந்த பொறுமையுடன், அதிக பாதுகாப்புடன் இயக்குவது சகல நலன்களையும் தரும், பெரிய அளவிலான முதலீடுகள் கடும் பாதிப்பை தரக்கூடும், சுய ஜாதகம் வலிமை பெற்ற ஜாதகியை வாழ்க்கை துணையாக தேர்வு செய்வது அவசியமாகிறது.

எதிர்காலம் தங்களுக்கு ராகு திசை ராகு புத்திக்கு பிறகு மிகவும் சிறப்பாகவே இருக்கும், ராகு திசையில் ராகு புத்தி மற்றும் சனி புத்தி காலங்கள் மட்டும் சுய ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட ஆயுள் மற்றும் விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்துகிறது என்பதால், இந்த காலகட்டங்கள் மட்டுமே தங்களுக்கு மிகுந்த நெருக்கடிகளை தரக்கூடும், வலிமையற்ற 2,3,5,8ம் பாவக வழியிலான இன்னல்களை தாங்கள் சுவீகரிக்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வது மிகுந்த சிறப்பை தருவதுடன், முன்னேற்றகரமான நன்மைகளை தரும்.

குறிப்பு :

 ஜாதகத்தில் நவகிரகங்கள் காலபுருஷ தத்துவ அமைப்பிற்க்கு பெரும் வலிமை  ( ஆட்சி,உச்சம்,நட்பு,சமம்,பகை,நீசம் ) போன்றவை சுய ஜாதகத்திற்கு யாதொரு நன்மை தீமையும் நல்காது, லக்கினத்திற்கு நவகிரகங்கள் தனது பாவக வழியில் இருந்து பெரும் வலிமை, லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள்  பெரும் தொடர்பு நிலையே சுய ஜாதகத்தை ஆளுமை செய்யும் என்பதை கருத்தில் கொள்வது நல்லது, மேலும் தங்களது ஜாதகத்தில் லக்கினத்தில் வலிமை பெற்று அமர்ந்த ராகு, தனது திசையில் வலிமையற்ற பாவக தொடர்பை ஏற்று பலாபலன்களாக வாரி வழங்குவது நன்மை தரும் அமைப்பல்ல, என்பதை கருத்தில் கொண்டு நலம் பெறுங்கள்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

ஞாயிறு, 17 ஜூன், 2018

ராகு மஹா திசை தரும் இன்னல்களும், திருமணம் தொழில் சார்ந்த தடைகளும் !


சுய ஜாதகத்தில் சாயா கிரகங்களான ராகு கேது வலிமை பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சுபயோகங்களை நல்கும் அமைப்பாகும், மேலும் சாயா கிரகங்கள் தனது திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷம காலங்களில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது மிகுந்த சுபயோகங்களை வாரி வழங்கும், மாறாக சுய ஜாதகத்தில் சாயா கிரகங்கள் வலிமையற்று அமர்வதும், வலிமையற்ற பாவக பலனை ஏற்று நடத்துவதும் கடுமையான இன்னல்களை ஜாதகருக்கு பாரபட்சம் பார்க்காமல் வாரி வழங்கிவிடும், இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : மேஷம் 
ராசி : ரிஷபம் 
நட்ஷத்திரம் : கிருத்திகை 2ம் பாதம் 

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 4ல் அமர்ந்த ராகு வளர்பிறை சந்திரன் என்பதால் தான் அமர்ந்த பாவகத்தை கடுமையான பாதிப்பிற்கு ஆளாக்குகிறார், பாவக தொடர்பு வழியில் பாக்கிய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்ற போதிலும், தனது வீட்டிற்கு சத்ரு ஸ்தான தொடர்பை பெறுவது ஜாதகருக்கு கடுமையான இன்னல்களை தரும் அமைப்பாகும், சுக ஸ்தான வழியில் இருந்து ஜாதகர் யாதொரு நன்மையையும் பெற இயலாத சூழ்நிலையை தற்போழுது வரை பலாபலனாக வழங்கிக்கொண்டு இருக்கின்றது, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு நான்காம் ராசியான கடகத்திலேயே, ஜாதகருக்கு சுக ஸ்தானம் முழுவதும் வியாபித்து நிற்பது சிறப்பானது என்ற போதிலும், ராகு பகவானால் 100% விகித பாதிப்பிற்கு உள்ளாவது ஜாதகருக்கான சுபயோகங்களை 4ம் பாவக வழியில் இருந்து வெகுவாக தட்டிப்பறிக்கும்.

ஜாதகர் மேற்கொண்ட வண்டிவாகனம் சார்ந்த தொழில்கள் யாவும் கடும் நஷ்டத்தை ஏற்படுத்தியது சுக ஸ்தானமான 4ம் பாவக பாதிப்பே அன்றி வேறுஎதுவும் இல்லை, பொதுவாக சுய ஜாதகத்தில் 4ம் பாவகம் அல்லது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 4ம் ராசியான கடகம்  கடுமையாக பாதிக்கப்படும் பொழுது ஜாதகர் தனது பெயரில் சொத்து சுகம், வண்டிவாகனம் மற்றும் வீடு நிலம் போன்றவற்றை வைத்திருப்பது நல்லதல்ல, மீறி வைத்திற்குக்கும் பொழுது ஜாதகருக்கு அது சார்ந்த நஷ்டங்களை தவிர்க்க இயலாது என்பது கவனிக்கத்தக்கது, இதை உணராமலும், நடைபெறும் ராகு திசை ஏற்று நடத்தும் பாவக வலிமையை பற்றி அறியாமலும், ஜாதகர் செய்த முதலீடுகள், ஆரம்பித்த தொழில், புதிதாக துவங்கிய காரியங்கள் யாவும் மிகுந்த நஷ்டத்தையே வழங்கியது, மேலும் ஜாதகருக்கு 37 வயது நிறைவடைந்ததும் திருமணம்  கைகூடி வரவில்லை என்பது வருந்தத்தக்கது.

ஜாதகருக்கு ராகு அமர்ந்த நிலையிலும் வலிமை பெறவில்லை, தனது திசையிலும் 2,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, சம்பாதிக்கும் வருமானம், வரும் பொருள் வரவுகள் அனைத்தும் திடீர் இழப்பை தந்தது, ஜாதகரின் நிதி நிலைமை மிகவும் மோசமான சூழ்நிலையை ஏற்படுத்தியது, ஜாதகருக்கு திடீர் மருத்துவ செலவினங்கள், எதிர்பாராத விபத்து , பொருளாதார சிக்கல்கள் யாவும் வாட்டி வதைத்தது, நிதி நிலையை சீர் செய்ய ஜாதகர் எடுத்த முடிவுகள், ஜாதகரின் பெற்றோர் சொத்துக்களுக்கும் இறையாயின , வீடு நிலம், தோட்டம் போன்றவை ஜாதகரின் கடன் பிரசனைகளுக்கு  ஈடாக அடமானம் வைக்கப்பட்டது, இவையெல்லாம் ராகு மகா திசை ஜாதகருக்கு 2,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் ஆயுள் பாவக பலனை ஏற்று நடத்தியதே காரணமாக அமைந்தது என்றால் அது மிகையாகாது.

ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் ராகு திசை சந்திரன் புத்தி 5,11ம் வீடுகள் பாக்கிய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று நன்மைகளை செய்வது, மேற்கண்ட பிரச்சனைகளில் இருந்து ஓர் பெரிய மனிதரின் ஆதரவில் மீண்டு வருவதற்கான வாய்ப்பை வழங்கிக்கொண்டு இருப்பது வரவேற்கத்தக்கது, சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் மற்றும் பாக்கிய ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகருக்கு ஏற்பட்ட பாதிப்பில் இருந்து குல தெய்வ அருளாலும், பித்ருக்கள்  ஆசியாலும் மீண்டு வருவதற்கான சந்தர்ப்பங்களை நல்கிக்கொண்டு இருப்பது ஜாதகருக்கு கிடைத்த வரப்பிரசாதம், சுய ஜாதகத்தில் 5,9ம் பாவகங்கள் வலிமை பெறுவது ஜாதகரை ஏதாவது ஒரு வகையில் கஷ்டங்களில் இருந்து மீட்டுஎடுக்கும் என்பதற்கு மேற்கண்ட ஜாதகமே நல்ல உதாரணம், எதிர் வரும் செவ்வாய் புத்தி ஜாதகருக்கு 1,6,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு மகர ராசியில் வியாபித்து நிற்பது ஜாதகருக்கான ஜீவன யோகத்தை பரிபூர்ணமாக தர தயார் நிலையில் இருப்பது கவனிக்கத்தக்கது, ஜாதகர் சர மண் தத்துவம் சார்ந்த தொழில்களை தேர்வு செய்து சிறப்பான நன்மைகளை பெற "ஜோதிடதீபம்" வாழ்த்துகிறது.

குறிப்பு :

 மேற்கண்ட ஜாதகருக்கு சாயா கிரகங்களில் ராகு மட்டும் பாதிப்பை அமர்ந்த நிலையிலும், தனது தசையிலும் கடுமையாக தரும் அமைப்பில் உள்ளது ஆனால் கேது அமர்ந்த நிலையில் மிகுந்த வலிமையுடனும், தனது திசையில்  6ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று  சர இயக்கத்தில் மகர ராசியில் இருந்து 100% விகித யோக பலன்களை வாரி வழங்குவது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், எனவே ஜாதகருக்கு ராகு பாதிப்பை தந்த போதிலும், கேது அதற்க்கு நிகரான சுபயோகங்களை நல்குவது வரவேற்கத்தக்க விஷயமாகும், ஜாதகரின் முன்னேற்றம் கேது வின் மூலம் மிக  அபரிவிதமானதாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன்  
9443355696

செவ்வாய், 29 மே, 2018

செவ்வாய் தோஷம் என்ன செய்யும் ( 8ல் செவ்வாய் ), செவ்வாய் திசை தரும் பலாபலன்கள் என்ன ?

 

  சுய ஜாதகத்தில் லக்கினத்தில் இருந்து 2,4,7,8,12ல் செவ்வாய் அமர்வது "செவ்வாய் தோஷம்" என்றும், இங்கு அமரும் செவ்வாய் பகவான் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு கடுமையான தோஷத்தை தரும் என்றும், சம்பந்தப்பட்ட ஜாதகர் இதனால் செவ்வாய் அமர்ந்த பாவக வழியில் இருந்து பெரிய அளவிலான பாதிப்புகளை எதிர்கொள்ளவேண்டி வரும் என்பது பொது கருத்தாக உள்ளது, இது முற்றிலும் தவறான கருத்தாக ஜோதிடதீபம் கருதுகிறது, சுய ஜாதகத்தில் 2,4,7,8,12ம் பாவகங்களின் செவ்வாய் பகவான் அமர்ந்த போதிலும், மேற்கண்ட பாவகங்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் மட்டுமே ஜாதகர் இன்னலுற நேரும், மேற்கண்ட பாவகங்கள் மிகவும் வலிமையுடன் இருப்பின் சம்பந்த பட்ட பாவக வழியில் இருந்து மிகுந்த சுபயோகங்களை ஜாதகர் அனுபவிக்கும் நிலையை தரும், மேற்கண்ட பாவகங்களில் செவ்வாய் அமர்ந்து சுபயோகங்களையும், அவயோகங்களையும் தரும் அமைப்பை பற்றி, ஒரு சில உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : மகரம்
ராசி : மேஷம்
நட்ஷத்திரம் : கிருத்திகை 1ம் பாதம்

மேற்கண்ட ஜாதகருக்கு மேலோட்டமாக பார்க்கும் பொழுது செவ்வாய் பகவான் லக்கினத்தில் இருந்து 8ல் அமர்ந்து இருப்பதை போன்ற தோற்றத்தை  தரும், ஆனால் ஜாதகருக்கு ஆயுள் ஸ்தானம் எனும் 8ம் பாவகம் சிம்ம ராசியில் 143:29:52 பாகையில் ஆரம்பித்து கன்னி ராசியில் 177:38:14 பாகையில் நிறைவு பெறுகிறது, செவ்வாய் பகவான் சிம்ம ராசியில் உள்ள 139:22:02 பாகையில்  களத்திர ஸ்தானத்திற்க்கு உற்ப்பட்ட 7ம் பாவகத்தில் அமைந்திருப்பது ஜாதகருக்கு செவ்வாய் 8ல் அமர்ந்தத்திற்க்கான பலனை நல்காது, செவ்வாய் 7ல் அமர்ந்ததிற்க்கான பலாபலன்களையே  வழங்கும், எனவே ஜாதகருக்கு செவ்வாய் பகவான் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்து இருப்பதே மிகவும் சரியான ஜோதிடகணிதமாகும்.

சுய ஜாதகத்தில் செவ்வாய் பகவான் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்தில் அமர்ந்து இருப்பதும், 7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 100% விகித வலிமையுடன் காணப்படுவதும் ஜாதகருக்கு பரிபூர்ண நன்மைகளை களத்திர ஸ்தான வழியில் இருந்து சுவீகரிக்கும் வல்லமையை தரும், ஜாதகருக்கு 7ம் பாவக வழியில் இருந்து நல்ல வாழ்க்கை துணை, நல்ல நண்பர்கள் சேர்க்கை, சிறந்த கூட்டாளிகள், வெளிநாடுகளில் இருந்து வரும் யோக வாழ்க்கை மற்றும் பொருளாதர முன்னேற்றங்கள், கூட்டு முயற்சியில் மூலம் கிடைக்கும் அபரிவித வெற்றி வாய்ப்புகள், பொதுமக்கள் மூலம் கிடைக்க பெரும் ஆதரவு மற்றும் அதீத லாபங்கள், மிகவும் சக்தி வாய்ந்த கூட்டாளிகள் அமையும் யோகம் என்ற வகையில் ஜாதகருக்கு களத்திர ஸ்தான வழியில் இருந்து பரிபூர்ண நன்மைகளை வாரி வழங்கும்.

மேலும் ஜாதகருக்கு திருமணத்திற்கு பிறகான வளர்ச்சி என்பது மிகவும் அபரிவிதமானதாக அமையும், எதிர்பாலின அமைப்பினரால் ஜாதகர் தொடர்ந்து சுபயோகங்களை பெற்றுக்கொண்டே இருப்பர் என்பது கவனிக்கத்தக்கது, கூட்டு தொழில் மிகப்பெரிய வளர்ச்சியையும், தன்னிறைவான பொருளாதார முன்னேற்றங்களையும் வாரி வழங்கும், தெய்வீக அனுக்கிரகத்தால் ஜாதகர் மிகுந்த சுபயோகங்களை பெறுவார், ஜாதகரின் களத்திர ஸ்தானம் கடகத்தில் 12 பாகைகளையும், சிம்மத்தில் 23 பாகைகளையும் கொண்டு மிகவும் வலிமை பெற்று இருப்பது ஜாதகருக்கான யோக பலன்களை மிகவும் அபரிவிதமாக வாரி வழங்கும், மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் லக்கினத்தில் இருந்து 7ம் பாவகத்தில் " மங்களன் " எனும் செவ்வாய் பகவான் அமர்ந்து இருந்த போதிலும் ஜாதகருக்கு தான் அமர்ந்த பாவகம் வலிமை பெற்றுள்ளதால், களத்திர ஸ்தான வழியில் இருந்து சுபயோகங்களையே பரிபூர்ணமாக அனுபவிப்பார் என்பதை மிக உறுதியாக சொல்லலாம்.

நடைபெறும் செவ்வாய் திசை ஜாதகருக்கு வழங்கும் பலாபலன்கள் : ( 11/09/2012 முதல் 12/09/2019 வரை )

 செவ்வாய் பகவான் ஜாதகருக்கு தனது திசையில் 5,11ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு அளவிலான சுபயோகங்களை நல்குவது ஜாதகருக்கு மிகுந்த சிறப்புகளை வாரி வழங்கிக்கொண்டு இருக்கிறது, குறிப்பாக 5ம் பாவக வழியில் இருந்து கல்வியில் வெற்றியும், சமயோசித புத்திசாலித்தனமா செய்கையின் மூலம் அபரிவித லாபங்களை, குலதெய்வ ஆசியின் மூலம் அபரிவித நன்மைகளையும் பரிபூர்ணமாக பெரும் யோகத்தை தரும், ஜாதகருக்கு 11ம் பாவக வழியிலான அதிர்ஷ்டம் சொத்து சுக சேர்க்கை, வண்டி வாகன யோகம், எதிர்பாராத பொருள் வரவும், நல்ல குணம், தெய்வீக அனுக்கிரகம் என்ற வகையில் மிகுந்த சுபயோகங்களை வாரி வழங்கும், எனவே மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 7ல் செவ்வாய் அமர்ந்த போதிலும், களத்திர ஸ்தானம் வலிமை பெற்று இருப்பது ஜாதகருக்கு சிறப்புகளையும், நடைமுறையில் உள்ள செவ்வாய் திசை ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவதால் சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து சுபயோகங்களையும் பரிபூரணமாக பெற்று கொண்டு இருக்கின்றார்.

குறிப்பு :

 ஜாதகருக்கு செவ்வாய் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்து இருப்பினும், செவ்வாய் தோஷம் இல்லை என்பதும், செவ்வாய் தனது திசையில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தி சுபயோகங்களை வாரி வழங்குகிறது என்பதும் கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், ஆனால் எதிர்வரும் ராகு திசை ஜாதகருக்கு மிகுந்த இன்னல்களை தரும் என்பதை " ஜோதிடதீபம் " இந்த பதிவின் மூலம் எச்சரிக்கை செய்கிறது, எதிர்வரும் ராகு திசை ஜாதகருக்கு 10ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று கடுமையான இன்னல்களை ஜீவன ஸ்தான வழியில் இருந்து வாரி வழங்க தயார் நிலையில் உள்ளது என்பதால், ஜாதகருக்கு மிகுந்த எச்சரிக்கையை உடன் வாழ்க்கையை எதிர்கொள்வது சகல நலன்களையும் தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 19 மே, 2018

7ல் ராகு அமர்ந்து இருப்பது திருமண தடைகளை தருமா ? இல்லற வாழ்க்கை அமையாதா ?


கேள்வி :

  7ல் ராகு இருப்பதனால் திருமணம் செய்வது வெகு சிரமம் என்றும், நீங்க திருமணம் செய்துகொள்ளாமல்  இருப்பது நல்லது என்று என்னை பயமுறுத்திவிட்டார், திருமணம் எனக்கு நடக்குமா ? தங்களிடம் இருந்து ஒரு நல்ல பதிலை எதிர் பார்க்கிறேன். எனது எதிர் காலம்,  குடும்ப வாழ்க்கை பற்றி பயம் கொள்ளும் விதமாக  ஏதும் சொல்லாமல், நல்ல வழிகாட்டுதல்களை கூறவும், இலங்கையில் எனது ஜாதகத்தை பார்த்த அனைவரும் என்னுடைய நட்சத்திரம் விசாகம் 4ம் பாதம் என்று கூறுகின்றனர் இது சரியானதா ? நடைபெறும் திசை எதிர்வரும் திசை தரும் பலன்கள் என்ன ?


பதில் :

 திருமண தடைகள் ஏற்படுவதற்கு ராகு பகவான் களத்திர ஸ்தானமான 7ம் வீட்டில் அமர்வது மட்டுமே காரணமாக அமைந்து விடாது, சுய ஜாதகத்தில் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் ராசியான ரிஷபம், 7ம் ராசியான துலாம், இரண்டும் கடுமையாக பாதிக்கப்பட்டோ அல்லது சுய ஜாதகத்தில் லக்கினத்திற்கு  குடும்ப ஸ்தானமான 2ம் பாவகம் மற்றும் களத்திர ஸ்தானமான 7ம் பாவகம் கடுமையாக பாதிக்கப்பட்டோ இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகர் திருமண தடைகளை சந்திக்கும் சூழ்நிலை உருவாகலாம், மேலும் நடைமுறையில் உள்ள திசாபுத்திகள் வலிமை அற்ற பாவகங்களின் பலனை நடைமுறைப்படுத்தினால் ஜாதகர் திருமணம் சார்ந்த முயற்சிகளில் தடைகளையும், தாமதங்களையும் சந்திக்கும் சூழ்நிலை ஏற்படலாம், தங்களுக்கு திருமணம் தாமதமாக என்ன காரணம் ? என்பதனை இன்றை பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பரே !


லக்கினம் : விருச்சிகம்
ராசி : விருச்சகம்
நட்ஷத்திரம் : அனுஷம் 1ம் பாதம்

தங்களது சுய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகவும் வலிமையுடன் இருப்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சம் என்ற போதிலும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் வீடான ரிஷபம் பாதக ஸ்தான தொடர்பை பெற்று 200% விகிதம் வலிமையற்று காணப்படுகிறது, மேலும் களத்திர ஸ்தானம் எனும் 7ம் வீடு பாதக ஸ்தான தொடர்பை பெற்று 200% விகிதம் வலிமையற்று காணப்படுகிறது, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் வீடான துலாம் பாதக ஸ்தான தொடர்பை பெற்று 200% விகிதம் வலிமையற்று காணப்படுகிறது, தங்களது சுய ஜாதக அமைப்பின்படி, லக்கினத்திற்கு 2ம் வீடான குடும்ப ஸ்தானம் மட்டும் மிகுந்த வலிமையுடன் இருக்கிறது, இல்லற வாழ்க்கையை குறிக்கும் மற்ற வீடுகளான 5,7,8,12ம் வீடுகள் மிகவும் வலிமை அற்று காணப்படுகிறது, குறிப்பாக 1,5,7,11,12ம் வீடுகள் அனைத்தும் பாதக ஸ்தான தொடர்பை பெறுவது தங்களுக்கு 1,5,7,11,12ம் பாவக வழியில் இருந்து 200% விகித இன்னலைகளை தரும் அமைப்பாகும், தங்களின் திருமண முயற்சிகளில் வரும் தோல்விகளுக்கு, திருமண தடைகளுக்கும் அடிப்படை காரணமாக விளங்குவதும் இதுவேயாகும்.

தங்களது சுய ஜாதகத்தில் 2,3,10ம் பாவகங்களை தவிர மற்ற அனைத்து பாவக்கங்களும் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பதை கருத்தில் கொள்ளுங்கள், திருமண தடைகளுக்கு ராகு ஓர் காரணமாக இருந்தாலும், அது மட்டுமே முழு காரணமாக அமைந்துவிடாது, சுய ஜாதகத்தில் வெகுவான பாவகங்கள் கடுமையான பாதிப்பை பெற்று இருப்பது கவனிக்கத்தக்கது, சுய ஜாதகத்தில் லக்கினத்திற்கு 2ம் வீடான குடும்ப ஸ்தானம் மிகவும் வலிமையுடன் இருப்பதால், தங்களுக்கு நல்ல இல்லறமும் , சிறப்பான குடும்பமும் அமையும் இதில் மாற்றம் இல்லை தாங்கள் தேர்வு செய்யும் மணப்பெண்ணின் சுய ஜாதகத்தில் 2,5,7,8,12ம் பாவகங்கள் மிகவும் வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, தங்களின் சீரிய முயற்சி நல்லொதொரு வாழ்க்கை துணையை அமைத்து தரும்.

சுய ஜாதகத்தில் பெரும்பாலான பாவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது  தங்களின் திருமண வாழ்க்கைக்கு பல தடைகளை தந்தபோதிலும், குடும்ப ஸ்தான வலிமை தங்களுக்கு நல்ல இல்லற வாழ்க்கையை சிறப்பாக அமைத்துத்தரும் என்பதில் சந்தேகம் இல்லை, மற்றவர்கள் சொல்லும் கருத்துக்களுக்கு செவி சாய்க்காமல் சுய ஜாதகம் வலிமை பெற்ற ஓர் வாழ்க்கை துணையை தேர்வு செய்து, இனிமையான இல்லறம் காணுங்கள் வாழ்த்துக்கள் அன்பரே !

 நடைமுறையில் உள்ள புதன் திசை தங்களுக்கு 3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவக தொடர்பை பெற்று முழு வீச்சில் சுபயோக பலன்களையும், எடுக்கும் முயற்சிகளில் வெற்றி வாய்ப்பையும், சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும் அதே வேளையில் 4,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த இன்னல்களை தருவது தங்களுக்கு வெகு சிரமங்களை தரும் அமைப்பாகும், வீடு, வண்டி வாகனம், சொத்து  சுக சேர்க்கை போன்ற அமைப்பில் சிரமங்களையும், வீண் செலிவினங்கள், எதிர்பாராத திடீர் இழப்பு, மருத்துவ செலவுகள், என்ற வகையில் துன்பங்களை  தரக்கூடும், தன்னம்பிக்கையும், சுய கட்டுப்பாடும் தங்களின் வாழ்க்கையில் அளவில்லா சுபயோகங்களை வாரி வழங்கும், நல்ல வாழ்க்கை துணையை தேடி அமைத்துக்கொள்வது, தங்களின் வாழ்க்கையில் பரிபூர்ண நன்மைகளை  வாரி வழங்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

 எதிர்வரும் கேது திசை தங்களுக்கு பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தாது தங்களுக்கு சிறப்பான நன்மைகளை தரும் என்ற போதிலும், அதற்க்கு பிறகு வரும் சுக்கிரன் தசை 20 வருடம் தங்களின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும் பாவக தொடர்பை பெறுவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும் ( சுக்கிரன் திசை 20 வருடமும் 3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவக தொடர்பை பெற்று முழு வீச்சில் சுபயோக பலன்களை  நல்குகிறது ) எனவே எதிர்காலம் தங்களுக்கு மிகவும் பிரகாசமாக உள்ளதால் எஜென்ஜி, தரகு, கமிஷன் மற்றும் வியாபாரம் சார்ந்த முன்னேற்றங்களை பெற தயார் நிலையில் இருப்பது அவசியமாகிறது.

குறிப்பு :

  ஜாதகர் முறையான பிரீதி பரிகாரங்களை மேற்கொண்டு சகல நலன்களையும் பெறுக, ஜாதகருக்கு தற்போழுது நடைமுறையில் உள்ள சந்திரனின் அந்தரம் சிறப்பான மாற்றங்களை வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்கது, திருமணம் சார்ந்த முயற்சிகளை முறையாக மேற்கொண்டு வாழ்க்கையில் நலம் பெறுக .

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வெள்ளி, 6 ஏப்ரல், 2018

ராகு திசை சுய புத்தி சுபயோக பலனை வழங்கினால், பிறகு வரும் புத்திகள் மிகப்பெரிய கெடுதலை தருமா ?


 கேள்வி : 

   ராகு திசை சுயபுத்தியில் நல்ல பலனை தந்தது. ஒரு தசா சுயபுத்தியில் அதிகமான நன்மையை வழங்குகிறது என்றால் பிறகு வரும் புத்திகள் மிகப்பெரிய கெடுதலை தரும் என்பதில் எவ்வித சந்தேகமும் வேண்டியதில்லை, இது உண்மையா? இந்த ஜாதகத்தை உங்களது பாணியில் விளக்கி தெளிவை கொடுக்க முடியுமா? ஆள் ஆளுக்கு ஒன்னா சொன்னா மனுசன் எதை நம்புறது ?

பதில் :

 ஒரு தசா சுயபுத்தியில் அதிகமான நன்மையை வழங்குகிறது என்றால் பிறகு வரும் புத்திகள் மிகப்பெரிய கெடுதலை தரும் என்பதில் எவ்வித சந்தேகமும் வேண்டியதில்லை. என்ற கருத்து சுய ஜாதக கணிதம் என்றால் என்னவென்றே தெரியாமல், பிதற்றும் வாய் ஜாலம் என்றே சொல்ல தோன்றுகிறது, அடிப்படையில் எந்த ஓர் கிரகத்தின் திசையும் சரி, புத்தியும் சரி தன்னிசையாக பலாபலன்களை வழங்கும் வல்லமை அற்றவை, சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் பெரும் வலிமையை மட்டுமே தனது திசை, புத்தி, அந்தரம் மற்றும் சூட்ஷம காலங்களில் நடைமுறைக்கு கொண்டுவரும், இதை சுய ஜாதக கணிதம் பற்றி தெளிவு பெற்றவர்கள் மிக எளிதாக உணர இயலும், கீழ்கண்ட ஜாதகருக்கு ராகு தனது சுய புத்தியில் யோக பலனை வழங்கியதால், அடுத்து வரும் மற்ற புத்திகள் அவயோகங்களை வாரி வழங்கும் என்பது முற்றிலும் தவறான கருத்து, ராகு தனது திசையில் தரும் பலனும், ராகு சுய புத்தியிலும் மற்ற புத்திகளில் நடைமுறைக்கு வரும் பலாபலன்கள் பற்றியும் இன்றை பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : மகரம்
ராசி : மேஷம்
நட்சத்திரம் : பரணி 3ம் பாதம்

ராகு திசையில் சுய புத்தி ஜாதகருக்கு யோக பலனை வழங்கியது எப்படி ?

ஜாதகருக்கு ( 17/01/2008 முதல் 16/01/2026 வரை ) நடைமுறையில் உள்ள ராகு திசை சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்புகளான 5,11ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பூர்வ புண்ணிய ஸ்தானம் மற்றும் லாப ஸ்தான வழியில் இருந்து முழு வீச்சில் யோக பலன்களை வாரி வழங்கி உள்ளது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், சுய ஜாதகத்தில் நடைபெறும் நவக்கிரக திசை அல்லது புத்தி எதுவென்றாலும், வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு ஏற்று நடத்தும் பாவக வழியில் இருந்து சுபயோக பலாபலன்களே நடைமுறைக்கு வரும், மாறாக சுய ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்தும் நவகிரகங்களின் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் ஜாதகருக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து அவயோக பலன்களையே வாரி வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

மேற்கண்ட் ஜாதகருக்கு ராகு திசை 5,11ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பூர்வ புண்ணிய ஸ்தானம் மற்றும் லாப ஸ்தான வழியில் இருந்து நன்மைகளையும், ராகு திசை ராகு புத்தி மேற்கண்ட பாவக வழியிலான தொடர்புகளை பெற்று சுய திசையில் சுய புத்தி ஜாதகருக்கு சுபயோக பலாபலன்களையே வழங்கியது தெளிவாகிறது, அடுத்து வந்த ராகு திசை குரு புத்தி ஜாதகருக்கு 3,4 ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றதும், ஜாதகருக்கு ராகு திசை குரு புத்தியும் ஜாதகருக்கு நன்மைகளை வழங்கியிருக்கிறது, குரு புத்திக்கு அடுத்து வந்த சனி புத்தி 1,7,10ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் ( சர லக்கினத்திற்கு பாதக ஸ்தானம் 11ம் வீடாகும் ) பெற்று 200% மடங்கு இன்னல்களை வாரி வழங்கியுள்ளது, ராகு திசையில் சனி புத்திக்கு அடுத்து வந்த புதன் புத்தியும் 1,7,10ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இன்னல்களையும், 8ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சில நன்மைகளையும் வழங்கி கொண்டு இருப்பது கவனிக்கத்தக்கது.

 ஜாதகர் 29/12/2015 முதல் 18/07/2018 வரை 1,7,10ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, பாதக ஸ்தான வழியில் இருந்து கடுமையான கடுமையான இன்னல்களை தொடர்து வழங்கிக்கொண்டு இருப்பதால் ஜாதகர் மிகுந்த துன்பத்திற்கும் இன்னல்களுக்கும் ஆளாகி கொண்டு இருக்கின்றார், மேலும் ஜாதகரின் லக்கினம், களத்திரம் மற்றும் ஜீவன ஸ்தானங்களே பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதால் ஜாதகருக்கு வரும் பாதிப்புகள் அதிக அளவில் உள்ளது என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும், லக்கினம் பாதிக்கப்படுவது ஜாதகரே தன்னை தானே பாதிப்பிற்க்கு ஆளாக்கி கொள்வார், களத்திர ஸ்தானம் பாதிக்கப்படுவது ஜாதகருக்கு ஏற்படும் எதிர்பாலின சேர்க்கையின் மூலம் இன்னல்களுக்கு ஆளாகும் சூழ்நிலையை தரும், ஜீவன ஸ்தானம் பாதிக்கப்படுவது ஜாதகரின் தொழில் ஸ்தான வழியிலான இன்னல்களுடன், சுய கவுரவம் பாதிக்கும் சூழ்நிலையை தரும்.

 ராகு திசையில் அடுத்து வரும் கேது மற்றும் சுக்கிரன் புத்திகள் 8ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவக பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு சில எதிர்பாராத நன்மைகளையும், சூரியன் மற்றும் செவ்வாய் புத்திகள் 2ம் வீடு குடும்ப ஸ்தானமான 2ம் பாவக பலனை ஏற்று நடத்தி நிறைவான வருமான வாய்ப்புகளையும், சுபயோகங்களையும், சந்திரன் புத்தி 6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இன்னல்களையும், 9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக பலாபலன்களை நடத்த தயார் நிலையில் இருப்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

 நவகிரகங்கள் தன்னிசையாக நன்மை தீமை பலாபலன்களை நடைமுறைக்கு கொண்டுவருவதற்கான வாய்ப்பு என்பது சிறிதும் இல்லை என்பதே மேற்கண்ட உதாரண ஜாதகம் மூலம் நாம் அறிந்துகொள்ள வேண்டிய விஷயமாகும், சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவக வலிமையையே ஏற்று நடத்தும் என்ற உண்மையையும் நாம் உணர்ந்துகொள்ளவேண்டிய நேரமிது, மேலும் கோட்சார கிரகங்களின் தாக்கம் என்பதனையும் மேற்கண்ட முறையிலேயே கையாண்டு துல்லியமான பலாபலன்களை உணர்ந்து, நமது வாழ்க்கையை மேலும் சிறப்பு மிக்கதாக மாற்றிக்கொள்வது சகல நன்மைகளையும் தரும்.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலையையும் , நடைபெறும் திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவகங்களின் தன்மையையும் நாம் தெளிவாக உணர்ந்து கொள்வது, நமது வாழ்க்கையை மிகவும் சிறப்பு மிக்கதாக மாற்றிக்கொள்ளும் வாய்ப்பை தரும், குறிப்பாக நமது எதிர்கால திட்டமிடுதல்களை மிக சிறப்பாக முன்னெடுத்துச்செல்லும் வாய்ப்பை வாரி வழங்கும் என்பது மறுக்க இயலாத உண்மை.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696 

செவ்வாய், 3 ஏப்ரல், 2018

சுய ஜாதக பலாபலன்கள் : சுப, அவயோக பலனை ஏற்று நடத்தும் திசா புத்திகள் !



சுய ஜாதகத்தில் சுபயோகங்கள் அல்லது அவயோகங்கள் இருப்பது முக்கியமல்ல, நடைபெறும் திசா புத்தி, எதிர்வரும் திசா புத்தி சுபயோக பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து நன்மைகளையும் அதிர்ஷ்டங்களை வாரி வழங்கும், அதுபோன்றே பாதிக்கப்பட்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களையும், துன்பங்களையும் நடைபெறும் திசா புத்தி அல்லது எதிர்வரும் திசா புத்திகள் ஏற்று நடத்தினால் மட்டுமே அவயோக பலாபலன்கள்  நடைமுறைக்கு வரும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

 கீழ்கண்ட ஜாதகருக்கு, 1,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பாபந்தம் பெறுவதும், 6ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் அவயோக அமைப்பாகும், 2,5,8,11ம் வீடுகள் வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 3ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 4ம் வீடு சுக ஸ்தானமான நான்காம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 10ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் சுபயோகங்களை நல்கும் அமைப்பாகும், தற்போழுது நடைபெறும் குரு திசை ஜாதகருக்கு 6ம் பாவக வழியில் இருந்து உடல் நல குறைவை தந்த போதிலும், 9 பாவக வழியில் இருந்து சுபயோகங்களை பரிபூரணமாக வாரி வழங்கிக்கொண்டு இருப்பது வரவேற்க தக்க சிறப்பு அம்சமாகும், எதிர் வரும் சனி திசை ஜாதகருக்கு 10ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் சுபயோகங்களை தருவது ஜாதகரின் வாழ்க்கையில் மிகுந்த அதிர்ஷ்டத்தை தரும் அமைப்பாகும்.


லக்கினம் : தனுசு
ராசி : கன்னி
நட்ஷத்திரம் : சித்திரை 2ம் பாதம்

ஜாதகத்தில் பாவக தொடர்புகள் :

1,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பாபந்தம் பெறுவது ஜாதகருக்கு 1ம் பாவக வழியில் இருந்து அருங்கலைகளில் ஆர்வத்தை தரும், யோகம் பக்தி போன்ற விஷயங்களில் தேர்ச்சியை தரும், தனிமை விருப்பம், தொலைதூர பயணங்களில் அதீத ஆர்வம், முதலீடுகளில் அதிக விருப்பம் என்றவகையில் நன்மைகளை தந்த போதிலும், அனைவராலும் தொல்லை மற்றும் துன்பத்தை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், மறைமுக எதிரிகள் தொந்தரவு, தடங்கல், அடிக்கடி வைத்திய செலவு, ஏமாற்றம், துன்பம், சதி வேலைகளால் இன்னலுறும் தன்மையை தரும், தன்னம்பிக்கை வெகுவாக குறையும், நல்லவர்களை காண்பது ஜாதகருக்கு அரிதிலும் அரிதாக அமையும், தேவையற்ற குழப்பமும் நிம்மதியின்மையும், ஜாதகரின் வாழ்க்கையில் பெரும் துன்பங்களை தரும், வீண் கற்பனை ஜாதகரின் எதிர்கால வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றும், சுய ஜாதகத்தில் மற்ற பாவக வழியில் இருந்து வரும் சுபயோகங்களை சுவீகரிக்க இயலாத நிலையை தரும், தன்னம்பிக்கையையும், சுய கட்டுப்பாட்டையும் ஜாதகர் அதிகம் வளர்த்துக்கொள்வது நல்லது, எந்த ஓர் காரியத்தையும் பலமுறை ஆலோசனை செய்து முடிவெடுப்பதே சகல நிலைகளில் இருந்தும் நன்மைகளை தரும், சுய ஜாதகத்தில் லக்கினம் வலிமை இழப்பது கடுமையான பின்னடைவுகளை ஜாதகருக்கு  தரும் என்பதால் முறையான பரிகாரங்களை மேற்கொண்டு சகல நலன்களையும் பெறுக.

12ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நிறைய விரைய செலவுகளை தரும், சேமிப்பு எதிர்பாராத விஷயங்களால் வீணடிக்கப்படும், தாம்பத்திய வாழ்க்கையில் எதிர்பாராத துன்பங்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், நல்ல உறக்கம் அமைவது கேள்விக்குறியே, மனநிம்மதி இழப்பு, மனஅழுத்தம், மனப்போராட்டம் என சகல நிலைகளில் இருந்தும் பெருத்த துன்பத்தை தரும், மனஒருமைப்பாடு ஜாதகரின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் தரக்கூடும், தெளிவில்லாத மனநிலை மற்றும் சிந்தனை ஆகியவை ஜாதகருக்கு பெருத்த சேதாரங்களை வழங்கக்கூடும், பங்கு சந்தை, சூது மூலம் நஷ்டத்தை தரும், அனைவராலும் தொல்லை மற்றும் எதிர்பாராத விபத்தை ஏற்படுத்தும், விடாமுயற்சியுடன் போராடி வாழ்க்கையில் வெற்றி பெரும் சூழ்நிலையை தரும்.

2,5,8,11ம் வீடுகள் வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 2ம் பாவக  வழியில் இருந்து எழுத்து பேச்சு, கலைத்துறை போன்ற அமைப்புகளில் சிறப்பான முன்னேற்றத்தை தரும், எண்ணத்தின் வலிமை அதிகமாகும், கைநிறைவான வருமான வாய்ப்புகள் வந்து சேரும், நிலையான வருமான வாய்ப்பு ஜாதகருக்கு தேடி வரும், தெய்வீக அனுக்கிரகம் மூலம் சகல சம்பத்தும் பெறுவதற்கான யோகம் உண்டு,  விளம்பர துறை, இலக்கியம், எஜென்ஜி, கமிஷன், தரகு தொழில், எதிர்பாராத லாபம், இனிமையான பேச்சு திறன் மூலம் பெரும் வியாபார விருத்தி என சகல சௌபாக்கியங்களையும் நல்கும்.

5ம் பாவக வழியில் இருந்து எஜென்ஜி விளையாட்டு உபகரணம், இசைக்கருவிகள்,  தைரிய செயல்பாடுகள், எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் வல்லமை, இறுதி நேரத்தில் பிரச்சனைகளில் இருந்து விடுபடுதல், மந்திர உபதேசம் பெறுதல், வாக்கு வன்மை குல தெய்வ ஆசிர்வாதம், தெய்வீக அனுக்கிரகம், நினைத்தைதை சாதிக்கும் யோகம், பெரும் செல்வாக்கு, தீர்வுகளை அறியும் யோகம், பொதுவாழ்க்கையில் பெயரும் புகழும் உண்டாகும் தன்மை என்ற வகையில் சிறப்புகளை தரும்.

8ம் பாவக வழியில் இருந்து லாட்டரியில் அதிர்ஷ்டம், சுலப வழி வருமானம், இன்சூரன்ஸ் போனஸ் போன்றவற்றில் நல்ல லாபம், திடீர் அதிர்ஷ்டம், வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் பொருளாதார தன்னிறைவு, திடீர் பதவி மற்றும் அந்தஸ்து தேடி வரும் யோகம் என்ற வகையில் சிறப்புகளை தரும்.

11ம் பாவக வழியில் இருந்து பயணங்களில் விருப்பம், எழுத்து மற்றும் புத்தம் எழுதும் ஆற்றல், மாற்றத்தை முன்னெடுக்கும் வல்லமை, வெளிநாடுகளில் இருந்து வரும் செல்வாக்கு, கமிஷன், எஜென்ஜி மூலம் அபரிவித லாபம், மனோதைரியம், தன்னம்பிக்கை ஓங்கும் குணாதிசயம், எதையும் அதிர்ஷ்டம் மூலம் பெரும் ஆற்றல், பொது வாழ்க்கையில் வெற்றி என்றவகையில் சிறப்புகளை தரும், வியாபாரத்தில் மிகுந்த லாபத்தை தரும்.

3ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மருந்துகள் மூலம் மிகுந்த லாபத்தை தரும், அரிய கலைகளில் ஜீவித மேன்மையையும், விட்டுக்கொடுக்கும் தன்மையால் மிகுந்த லாபத்தையும் ஜாதகர் பெறுவார், அயல் தேசம் மற்றும் அயலார் மூலம் சிறந்த நன்மைகள் தேடி வரும், புதிய கண்டுபிடிப்பு, சட்டம் மூலம் நன்மை, தர்ம சிந்தனை, நேர்மையான வழியில் முன்னேற்றங்களை பெரும் யோகம் என்ற வகையில் சிறப்புகளை தரும்.

4ம் வீடு சுக ஸ்தானமான நான்காம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு மண் மனை வண்டி வாகன யோகம், சொந்த ஊரில் ஜீவிக்கும் தன்மை, கல்வி மற்றும் நிர்வாக துறையில் சிறந்து விளங்கும் தன்மை, வடக்கு வாயிற்படி கொண்ட வீடுகளில் ஜீவனம் செய்யும் பொழுது சிறப்பான முன்னேற்றங்களை பெரும் யோகத்தை நல்கும்.

6ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு தேர்வு போட்டி பந்தயங்களில் வெற்றி, உடல் நல பாதிப்பு தொடர் சிகிச்சை மேற்கொள்ளும் சூழ்நிலை, வியாதியை எதிர்க்கும் தன்மை அற்ற நிலை, சிறந்த வேலை வாய்ப்பு மூலம் முன்னேற்றம் பெரும் யோகம், பிறரால் கடுமையான தொல்லைகளை எதிர்கொள்ளும் சூழ்நிலை, முன்னேற்றம் என்பது எதிரிகளால் வெகுவாக பாதிக்கப்படும் தன்மை, உடல் மனம் சார்ந்த சிக்கல்களில் சிரமப்படும் நிலை என பாதிப்புகளை தரும்.

7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு கடுமையான இன்னல்களை வாழ்க்கை துணை வழியில் இருந்து வாரி வழங்கும், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் மூலம் எதிர்பாராத இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும் வெளிவட்டார பழக்க வழக்கம் கடுமையாக பாதிக்கப்படும், வாழ்க்கை துணைக்கு கடுமையான இன்னல்களை உருவாக்கும், திருமண வாழ்க்கையில் கடுமையான பாதிப்பு மற்றும் இல்லற வாழ்க்கையில் துன்பங்களை வாரி வழங்கும், பொது வாழ்க்கையில் எதிர்பாலினத்தல் வீண் அவப்பெயரை சந்திக்கும் சூழ்நிலையை தரும், சுய ஜாதகத்தில் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட பாவகத்தில் களத்திர ஸ்தானமே முதலிடம் பெறுகிறது என்பதால், மேற்கண்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை ஜாதகர் மிக கவனமுடன் எதிர்கொள்வதே சால சிறந்தது மேலும் ஜாதகர் மேற்கண்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க முறையான பிரீத்தி பரிகாரங்களை மேற்கொள்வது நல்லது, இல்லை எனில் இல்லற வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிட வாய்ப்பு உள்ளது.

9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு மிகுந்த அறிவு திறனை வாரி வழக்கும், எதையும் தனது அறிவு திறன் கொண்டு வெற்றிகொள்ளும் வாய்ப்பை தரும், முன்னேர்களின் ஆசிர்வாதம் சிறந்த வாழ்க்கை பாதையை அமைத்து தரும், தெய்வீக தரிசனம், ஆன்மீக பெரியோர்களின் ஆசிர்வாதம் ஜாதகரின் வாழ்ககையில் பல மாற்றங்களை வாரி வழங்கும், யோகம் மற்றும் தெய்வீகம் ஜாதகருக்கு சிறந்த நன்மையை வாரி வழங்கும்.

10ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு செய்யும் தொழில் அல்லது வேளையில் மிகுந்த லாபத்தை தரும், குறுகிய காலத்தில் தொழில் வெற்றிகளை சுவீகரிக்கும் வல்லமை உண்டு, பல தொழில் செய்யும் யோகத்தை நல்கும், எதிர்பாராத அதிர்ஷ்டம் மூலம் கை நிறைவான வருமான வாய்ப்புகளை ஜாதகர் பெறுவார், பெற்றோர் வழியிலான நன்மைகளை ஜாதகருக்கு பரிபூர்ணமாக அமையும், சுய உழைப்பில் வாழ்க்கையில் பெருத்த நன்மைகளை அனுபவிக்கும் தன்மையை தரும், கவுரவம் குறையாத தொழில் வாய்ப்புகளை வாரி வழங்கும்.

நடைபெறும் குரு திசை ராகு புத்தி தரும் பலாபலன்கள் : ( 02/05/2017 முதல் 26/09/2019 வரை )

நடைபெறும் குரு திசை ராகு புத்தி ஜாதகருக்கு 2,5,11ம் வீடுகள் வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், சுபயோக பலன்களை தருவதால் ஜாதகர் மேற்கண்ட பாவக வழியில் இருந்து சுபயோக பலன்களை வெகுவாக அனுபவிக்கும் தன்மையை தரும், எடுக்கும் காரியங்கள் வெற்றி தரும், முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும், தெய்வீக அனுக்கிரகம் மூலம் சுபயோகங்கள் ஜாதகருக்கு தேடி வரும், வெகுநாள் பிரச்சனைகள் விரைவில் முடிவுக்கு வரும்.

எதிர்வரும் சனி திசை தரும் பலாபலன்கள் : ( 26/09/2019 முதல் 05/09/2038 வரை )

எதிர்வரும் சனி திசை ஜாதகருக்கு 10ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தருவது ஜாதகர் எதிர்பாராத தொழில் வெற்றிகளை அனுபவிக்கும் யோகத்தை தரும், சுய சிந்தனை மற்றும் சுய உழைப்பின் மூலம் வாழ்க்கையில் மிகப்பெரிய தொழில் வெற்றிகளை பெறுவார், ஜாதகரின் லாப ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் வீடான துலாம் ராசியில் அமைவது ஜாதகரின் வியாபார விருத்தி 100% விகிதம் மிகவும் சிறப்பான முன்னேற்றங்களை பெரும், தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும், வலிமை பெற்ற பாவகத்தின் பலனை ஏற்று நடத்தும் சனி திசை ஜாதகருக்கு பரிபூர்ண நன்மைகளை லாப ஸ்தான வழியில் இருந்து வாரி வழங்கும், ஜாதகர் தனது அறிவு திறன் மூலம் லாபங்களை அதிர்ஷ்டங்களை முழுவீச்சில் சனிதிசையில் பெறுவார் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், வாழ்த்துக்கள்.

குறிப்பு :

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட வீடுகள் இருப்பினும் நடைபெறும், எதிர்வரும் திசாபுத்திகள் வலிமையான பாவக பலனை ஏற்று நடத்துவதால், ஜாதகர் சுபயோக பலன்களையே அனுபவிப்பார் என்பது கவனிக்க தக்க சிறப்பு அம்சமாகும், எனவே சுய ஜாதகத்தில் திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவாக பலன்கள் என்ன என்பதில் தெளிவு பெறுவதே சகல நிலைகளில் இருந்து சிறப்புகளை தரும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696