ஜாதகபலன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜாதகபலன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 15 மே, 2017

சுய ஜாதக வலிமையின் அடிப்படையில் ஜாதகர் பெரும் யோக அவயோகங்கள் !



சுய ஜாதகத்தை இயக்குவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையே என்றால் அது மிகையில்லை, மேலும் சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற அல்லது வலிமை அற்ற பாவக பலனையே நவகிரகங்களின் திசா புத்திகள் ஏற்று நடத்தும் என்பதை கருத்தில் கொள்வது நல்லது, நவகிரகங்களுக்கு தனது திசா புத்திகளில் தனிப்பட்ட நன்மை தீமை பலாபலன்களை ஏற்று நடத்த சிறப்பு தகுதி இல்லை என்பதையும் சுய ஜாதகத்தில் என்ன உள்ளதோ ( பாவக வலிமை அல்லது பாவக வலிமை அற்ற நிலை ) அதை மட்டுமே ஏற்று நடத்தும் என்பதை, இந்த இடத்தில் பதிவு செய்ய " ஜோதிடதீபம் " கடமைப்பட்டுள்ளது.

கீழ்கண்ட ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலையையும், நவகிரகங்கள் தனது திசா புத்திகளில் ஏற்று நடத்தும் பலாபலன்கள் பற்றியும் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே! சுய ஜாதகம் வலிமை பெரும் ஜாதகர் சம்பந்தப்பட்ட பாவக வழியிலான நன்மை மற்றும் சுபயோகங்களையும், சுய ஜாதகம் வலிமை இழக்கும் பொழுது சம்பந்தப்பட்ட பாவக வழியிலான அவயோகம் மற்றும் இன்னலைகளையும் ஜாதகர் எதிர்கொள்ளும் நிலையை தரும் என்பதை கருத்தில் கொள்வது நலம் தரும் .


லக்கினம் : துலாம்
ராசி : மிதுனம்
நட்ஷத்திரம் : திருவாதிரை 3ம் பாதம்

ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்பு :

1,3,8ம் வீடுகள் வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 1ம் பாவக வழியில் இருந்து சிறந்த மனநிலை, தைரியம், ஆர்வம், வீரியமிக்க செயல்திறன், உடல் வலிமை மனவலிமை, பயணம் மூலம் லாபம், சகோதர வழியிலான ஆதரவு, அனைவருடன் இணக்கமாக பழகும் தன்மை, அனைவரின் ஆதரவு மற்றும் உதவிகளை பெறுதல், முற்போக்கு சிந்தனை, நீண்ட ஆயுள், வலி தாங்கும் தன்மை, விரைவில் குணம் பெரும் உடல் அமைப்பு, செய்யும் காரியங்களில் வெற்றி, ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் சார்ந்த துறைகளில் பணியாற்றும் யோகம் என்ற வகையில் நன்மைகளை தரும்,மேலும் ஜாதகரின் வீர்ய ஸ்தானம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமாக அமைவது ஜாதகர் முயற்சிக்கும் காரியங்களில் வெற்றியும் முன்னேற்றம் உண்டாகும், பெரிய மனிதர்கள் ஆதரவும், ஆசிர்வாதமும் கிடைக்கப்பெறுவார், பல புண்ணிய திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகமும், தன்னிலை உணரும் வாய்ப்பும் உண்டாகும், குல தெய்வ அனுக்கிரகமும், இறையருளின் பரிபூர்ண கருணையும் ஜாதகருக்கு மிக எளிதாக அனுபவப்படும் வாய்ப்பு உண்டாகும்.

3ம் பாவக வழியில் இருந்து செல்வசெழிப்பு, எதிரிகளை வெல்லும் தன்மை, நல்ல மனநிலை, சிறப்பாக சிந்திக்கும் ஆற்றல், சத்தியத்தை மதித்தல், தைரியம், பயணங்களில் விருப்பம், கல்வியில் ஆர்வம், மாற்றம் மற்றும் புதிய சூழ்நிலைகளில் விருப்பம், ஏஜென்சி துறையில் நல்ல வெற்றி வாய்ப்புகள், அறிவுபூர்வமான செயல்பாடுகள், தகவல் தொழில் நுட்ப துறை மற்றும் ஆராய்ச்சி துறையில் வெற்றி வாய்ப்புகள், தன்னம்பிக்கை குறையாத மனநிலை, நினைத்ததை சாதிக்கும் வல்லமை, மக்கள் ஆதரவு, எதிர்ப்புகள் அற்ற யோக வாழ்க்கை, என்ற வகையில் சுப யோகத்தை தரும், கற்ற கல்வி வழியிலான யோக வாழ்க்கை பரிபூர்ணமாக அமையும், பெரிய மனிதர்களின் தொடர்புகள் மூலம் வாழ்க்கையில் மிகப்பெரிய அந்தஸ்த்தை பெரும் யோகம் உண்டாகும்.

8ம் பாவக வழியில் இருந்து லாட்டரி யோகம், புதையல் யோகம், மனதிற்கு எட்டாத விஷயங்களில் ஆர்வம், நீண்ட ஆயுள், வாழ்க்கை துணை மற்றும் நண்பர்கள் வழியிலான முன்னேற்றம், வெளிநாடுகள் அல்லது வெளியூரில் இருந்து வரும் வருமான வாய்ப்புகள், சுலப வழியிலான தனசேர்க்கை, எஜென்ஜி மற்றும் கான்ராக்ட் தொழில் வழியிலான லாபங்கள் என்ற வகையில் நன்மைகளை வாரி தரும், குறிப்பாக வாழ்க்கை துணை எதிர்ப்பால் இனஅமைப்பினர் மூலம் தனசேர்க்கை உண்டாகும்.

4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 4ம் பாவக வழியில் இருந்து நல்ல தொழில் முன்னேற்றம், பெயரும் புகழும் உண்டாகும், மண் மனை, வண்டி வாகனம், வீடு நிலம் மற்றும் சொத்து சுக சேர்க்கை அபரிவிதமாக அமையும், மிக பெரிய சொத்துக்கள், அரசு கெளரவம், சமூக வாழ்க்கையில் தனி அந்தஸ்து, அரசியலில் வெற்றி வாய்ப்பு, பொருளாதார வசதிகள், நல்ல வேலையாட்கள், கலைகளில் ஆர்வம், முக்கிய பொறுப்புகளை ஆளுமை செய்யும் வலிமை என்ற வகையில் சிறப்பான முன்னேற்றங்களை வாரி வழங்கும்.

10ம் பாவக வழியில் இருந்து சிறந்த உத்தியோகம், வியாபாரத்தில் வெற்றி, செய்யும் தொழில் வழியிலான முன்னேற்றங்கள், கம்பீரமான வாத திறமை, கவுரவம் குறையாத யோக வாழ்க்கை, செய்யும் தொழில் வழியில் அபரிவிதமான வளர்ச்சி, செல்லும் இடங்களில் இருந்து வரும் மதிப்பு மரியாதை, பெரிய பதவிகளை வகிக்கும் யோகம், இறைநிலையின் பரிபூர்ண கருணை என்ற வகையில் யோகத்தை தரும், மேலும் ஜாதகரின் ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு கடக ராசியில் அமைவது, அதிர்ஷ்டத்தின் தாக்கத்தை  ஜாதகருக்கு ஜீவன வழியில் இருந்து வாரி வழங்கும், மிகப்பெரிய கவுரவ பதவிகள் அந்தஸ்து தேடி வரும், ஜீவன வழியிலான பரிபூர்ண முன்னேற்றத்தை தங்கு தடையின்றி வாரி வழங்கும்.

5,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 5ம் பாவக வழியில் இருந்து நல்ல ஆரோக்கியம், விரைவாக முடிவெடுக்கும் தன்மை, அதிபுத்திசாலித்தனம், நுண்ணறிவு, பல்துறை ஆராய்ச்சி  மூலம் புதிய கண்டுபிடிப்புகளை காணுதல், அமைதியான மனம், மகிழ்ச்சியான வாழ்க்கை, சமாதானத்தில் விருப்பம், நல்ல பழக்க வழக்கங்கள், குல தெய்வத்தின் ஆசியை பரிபூர்ணமாக பெறுதல், கற்ற கல்வி வழியிலான யோக வாழ்க்கை, பெற்ற குழந்தைகள் வழியிலான முன்னேற்றம், சுயமாக வாழ்க்கையில் முன்னேனேற்றம் பெரும் யோகம், எந்த சூழ்நிலையிலும் இறை அருளின் கருணை மூலம் வாழ்க்கையில் நன்மையை அடையும் யோகம் என்றவகையில் சிறப்புகளை தரும்.

9ம் பாவக வழியில் இருந்து அறிவுத்திறன் மூலம் வாழ்க்கையில் வெற்றி பெரும் அமைப்பு, பயண விருப்பம், தெய்வீக ஞானம், ஆன்மீகத்தில் வெற்றி, இடமாற்றம் மற்றும் சூழ்நிலை மாற்றத்தில் விருப்பம், மிக சிறந்த ஆன்மீக பெரியோர்களின் ஆசியை பெரும் அமைப்பு, பித்ருக்கள் வழியிலான ஆசிகள் மூலம் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களை பெறுதல், அறிவில் விழிப்பு நிலை, குருவின் ஆசியுடன் சூட்ஷம அறிவை பெறுதல், தேடுதல் மூலம் மோட்ச நிலையை அடைதல் என்ற வகையில் சிறப்புகளை தரும், தெய்வீக சிந்தனை மேலோங்கும், கற்ற கல்வி ஜாதகருக்கு நல்லதொரு வாழ்க்கையை நிர்ணயம் செய்யும், தனிமை விருப்பம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும், எதிர்ப்புகள் அனைத்தும் ஜாதகருக்கு சாதகமாக மாறும், ஜாதகரின் சிந்தனை மற்றும் செயல்பாடுகள் மிக பெரிய அளவில் வெற்றிகளை தரும்.

7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சக்தி வாய்ந்த கூட்டாளி மற்றும் நண்பர்களை தரும், நல்ல யோகம் உள்ள வாழ்க்கை துணை அமையும், வியாபாரம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஜாதகருக்கு சரளமான வருமான வாய்ப்புகள் வந்து சேரும், கூட்டு முயற்சி வெற்றி தரும், தெய்வீக ஆளுமை மூலம் உலக புகழ் பெரும் யோகம் உண்டாகும், பிரபல்ய யோகமும், நினைத்ததை சாதிக்கும் வல்லமையை ஜாதகருக்கு இயற்கையாகவே அமைந்து இருக்கும், எதிர்ப்புகள் அற்ற யோக வாழ்க்கை ஜாதகருக்கு பரிபூர்ணமாக அமையும், பொது வாழ்க்கை மற்றும் ஆன்மீக வாழ்க்கையில் நற்பெயர் மற்றும் உயர் பதவிகள் கிட்டும், எதிர்பாராத உதவிகள் வாழ்க்கை துணை வழியில் இருந்து கிடைக்க பெறுவார், பொதுமக்கள் ஆதரவும் பெரிய அளவில் உண்டு, வியாபாரம் விருத்தி அடையும், வாழ்க்கை சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் அமையும்.

ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவக தொடர்புகள் :

11ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் வாழ்க்கையில் கடுமையான சவால்களை ஏற்படுத்தும், தெளிவற்ற சிந்தனைகள் மற்றும் குழப்பமான மனநிலையில் ஜாதகர் செய்யும் காரியங்கள் யாவும் கடும் தோல்வியை தரும், ஜாதகரின் மனதில் சில நேரங்களில் இனம் புரியா சந்தேகங்கள் அதிக அளவில் ஏற்படும், அதிர்ஷ்டத்தின் தாக்கம் ஜாதகருக்கு முழு அளவில் பயன் தாராது, பிற்போக்குத்தனமான எண்ணங்கள் மற்றும் மூட நம்பிக்கைகள் ஜாதகரின் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை தந்துவிடும், நல்ல குரு அமைவது ஜாதகருக்கு சற்று கடுமையான காரணமாக அமையும், பாதக ஸ்தான வழியில் இருந்து ஜாதகர்  கடுமையான இன்னல்களை வெகு அளவில் சந்திக்கும் நிலையை தரும், ஜாதகரின் 11ம் வீடு காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் ராசியாகவும், ஸ்திர நெருப்பு தத்துவ ராசியான சிம்மத்தில் அமைவது ஜாதகரின் ஆன்மீக தேடுத்தல்களை கடுமையான சிக்கல்களுக்கு ஆளாக்கும், அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள் ஜாதகருக்கு கடுமையான இன்னல்களை தரும், பாதக ஸ்தான வழியில் இருந்து ஜாதகர் 200% விகித இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும்.

2,6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 2ம் பாவக வழியில் இருந்து குடும்பம் மற்றும் வருமானம் சார்ந்த இன்னல்களை தரக்கூடும், வரும் வருமானம் ஜாதகருக்கு வீண் செலவுகளை ஏற்படுத்தும், வாக்கு வன்மை குறையும், குடும்ப வாழ்க்கையில் அதிக அளவிலான மன அழுத்தங்களை ஜாதகர் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், வாக்கு வழியிலான பிரச்சனைகள் அதிகரிக்கும், எதிர்பாராதஇழப்புகள் பொருளாதார ரீதியாக ஜாதகர் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், இருப்பினும் அருங்கலைகளில் ஆர்வம், ஆய்வுகளில் வெற்றி, பணியில் திருப்தி என்ற நிலையை தரும்.

6ம் பாவக வழியில் இருந்து கடன் வாங்குவது கொடுப்பது இரண்டும் ஜாதகருக்கு இன்னல்களை தரும், பணி சார்ந்த மனஅழுத்தம் அதிகரிக்கும், பணியாட்கள் மூலம் சிறு சிறு தொல்லைகள் உண்டாகும், தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும், எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஜாதகரை வெகுவாக பாதிக்கும், நிம்மதி இழப்பு உண்டாகும், தனம் சார்ந்த திட்டமிடுதல்கள் இல்லை எனில் வாழ்க்கை ஜாதகருக்கு சுமையாக மாறிவிட வாய்ப்பு உண்டு, எதிரிகள் வழியில் நன்மை உண்டானாலும், அவர்களால் மனநிம்மதி கெடும்.

12ம் பாவக வழியில் இருந்து நிறைய வீண் செலவினங்களை தரும், சூது மூலம் நஷ்டம் உண்டாகும், திருப்தி இல்லாத மனநிலை, அணியவராலும் இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலை, எதிர்பாராத விபத்து என்ற வகையில் கடுமையான பாதிப்பை தர கூடும், நல்ல உறக்கம் இன்மை அல்லது உடல் நல பாதிப்பை தரக்கூடும், சரியான திட்டமிடுதல்கள் இல்லாத காரணத்தால் சில இடர்பாடுகளை அதிக அளவில் சந்திக்கும் சூழ்நிலையை தரும், ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் கடுமையான பின்னடைவை ஏற்படுத்தும், தெய்வீக சிந்தனை இருந்த போதிலும் முழுமையான வெற்றியை தாராது, அதிக அளவிலான மன போராட்டம் மற்றும் எதிர்ப்புகளை தரும்.

தற்போழுது நடைபெறும் புதன் திசை தரும் பலன்கள் : ( 21/10/2014 முதல் 21/10/2031 வரை )

ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் புதன் திசை 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துவது வரவேற்கத்தக்க அம்சமாகும், மேலும் கடந்த சனி திசையும் ஜாதகருக்கு 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை பெற்ற சுகம் மற்றும் ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்தியது ஜாதகருக்கு 4,10ம் பாவக வழியில் இருந்து சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கியது, குறிப்பாக ஜாதகரின் ஜீவன வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமைந்தது, இந்த நிலை புதன் திசையிலும் தொடர்வது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் சில பாவகங்கள் பாதிக்கப்பட்ட போதிலும் நடந்த, நடைபெறுகின்ற சனி மற்றும் புதன் திசை 100% விகிதம் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது, ஜாதகருக்கு மேற்கண்ட பாவக வழியிலான சுகபோகம் மற்றும் ஜீவன முன்னேற்றங்களை தங்கு தடையின்றி வாரி வழங்கும் என்பது மேற்கண்ட ஜாதகத்தில் உள்ள சிறப்பு அம்சமாகும்.

மேலும் ஜாதகருக்கு ராகு திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் வலிமை அற்ற பாதக ஸ்தான பலனையும், விரைய ஸ்தான பலனையும் ஏற்று நடத்துவது 11,12ம் பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களையும், குரு திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் வலிமை அற்ற விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்துவது வீண் விரையம் என்ற நிலையிலும் இன்னல்களை கடுமையாக தரும், குறிப்பாக சுய ஜாதகத்தில் திசா,புத்திகளில் ராகு மற்றும் குரு மட்டுமே ஜாதகருக்கு மிகுந்த இன்னல்களை தரும், மற்ற கிரகங்களின் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் வலிமை பெற்ற பாவக தொடர்புகளையே ஏற்று நடத்துவதால் ஜாதகருக்கு யோக பலாபலன்களே நடைமுறைக்கு வரும் என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும்.

குறிப்பு :

சுய ஜாதகத்தில் பாவகங்கள் பாதிக்கப்பட்டு இருந்தாலும், நடைபெறும் திசை புத்திகள் பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில், ஜாதகருக்கு யாதொரு இன்னல்களும் நேராது, அவயோக பலாபலன்கள் எதுவும் நடைமுறைக்கு வாராது, சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெற்று இருந்தாலும் நடைபெறும் திசா புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில், சுய ஜாதகத்தில் யோகம் இருந்தும் அதனால் ஜாதகருக்கு யாதொரு பலனும் இல்லை என்பதே முற்றிலும் உண்மை, நடைபெறும் திசாபுத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே ஜாதகருக்கு சுபயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும் என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 25 ஏப்ரல், 2017

சுய ஜாதகம் என்றால் என்ன ? சுய ஜாதகத்தால் நமக்கு என்ன பயன் ? ( பாவக வலிமை )


 சுய ஜாதகம் என்பது அவரவர் பிறந்த தேதி, நேரம் மற்றும் இடம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, துல்லியமாக கணிதம் செய்யப்படுவதாகும், இந்த குறிப்புகள் ஓர் ஜாதகரின் லக்கினம், ராசி, நட்ஷத்திரம் மற்றும் ஜாதகரின் ஜெனன கால திசா புத்திகள் பற்றிய விபரங்களை நாம் துல்லியமாக தெரிந்துகொள்ள உதவும், சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை ஓர் ஜாதகரின் வாழ்க்கையில் ஏற்படும் நன்மை தீமை மற்றும் யோக அவயோக நிகழ்வுகளை நிர்ணயம் செய்கிறது என்றால் அது மிகையில்லை, ஒரு ஜாதகரை பற்றிய முழு விபரம் அறிய அவரது சுய ஜாதகத்தில் உள்ள பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலையை கருத்தில் கொண்டும், நடைபெறும், எதிர்வரும் திசா புத்திகள் ஏற்று நடத்தும் பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் மிக எளிதாக நிர்ணயம் செய்து விடலாம், அவரின் வாழ்க்கையில் நடைபெற்ற, நடைபெறுகின்ற, நடைபெற இருக்கின்ற பலாபலன்களை மிக தெளிவாகவும், துல்லியமாகவும் நாம் உணர்ந்து தெளிவாக அவர்களுக்கு கூறிவிட முடியும்.

சுய ஜாதகத்தில் 1,3,11ம் வீடுகள் ஜாதகரின் ஆரயோக்கியம், மனநிலை, புகழ், கீர்த்தி, செயல்பாடுகள், தன்னம்பிக்கை, இயக்க நிலை என்ற வகையிலும், சுய முயற்சி, வீரியம், வேகம், செயல் திறன், வெற்றி, பொறுப்பு, முன்னேற்றம், சுய சிந்தனை திறன், ஜாதகரின் தைரியம், விளையாட்டில் ஆர்வம், வீரம் மிக்க கலைகளில் தேர்ச்சி, சாகச விரும்பி, அறிய சாதனைகளை படைக்கும் வல்லமை, எதிர்ப்புகளை வெற்றி கொள்ளும் யோகம்  என்ற வகையிலும், லாபம் அதிர்ஷ்டம், முற்போக்கு சிந்தனை, நேர்மை எண்ணங்கள், கருத்து ஒற்றுமை, யோகங்களை பரிபூர்ணமாக பெரும் அமைப்பு, மிதம்மிஞ்சிய நம்பிக்கை, உறுதி மிக்க செயல் பாடுகள், நீடித்த அதிர்ஷ்டம், சிறப்பு மிக்க குணாதிசயம், எதிர்ப்புகளை வெல்லும் வல்லமை என்ற வாகையிலும் சிறப்பு பலன்களை  தரும், சுய ஜாதகத்தில் 1,3,11ம் வீடுகள் வலிமை பெறுவது ஜாதகரின் சுய முன்னேற்றத்தை நிலை நிறுத்தும்.

சுய ஜாதகத்தில் 5,9ம் வீடுகள் ஜாதகரின் பாரம்பரியம் சார்ந்த அறிவு திறன், சமயோசித புத்திசாலித்தனம், நுண்ணறிவு, அதிபுத்திசாலித்தனம், தனது பாரம்பரியம் சார்ந்து ஜாதகர் அனுபவிக்கும் யோகம், கலைகளில் தேர்ச்சி மற்றும் ஆர்வம், கல்வியில் தேர்ச்சி மற்றும் முதன்மை நிலையை பெறுதல், ஜாதகருக்கு வரும் இன்னல்களை முன்கூட்டியே தெரிவிக்கும் குலதெய்வ ஆசி, அறிவு சார்ந்த வழியிலான உழைப்பு திறன், தெய்வீக அனுக்கிரகம், உதவிகள் தேடிவரும் வாய்ப்பு, சூழ்நிலையை மிக எளிதாக சமாளிக்கும் வல்லமை என்ற வகையிலும், அறிவார்ந்த பெரியோர்களின் ஆசி, பித்ருக்கள் ஆசி, தெய்வீக அனுக்கிரகம், நல்ல கல்வி, கற்ற கல்வி வழியிலான யோக வாழ்க்கை, ஆய்வு சார்ந்த வெற்றிகள், மற்றவர்கள் வாழ்க்கையில் சுப மாற்றங்களை தரும் அமைப்பு, தனது பாரம்பரிய ஜீவனத்தை காக்கும் வல்லமை, பழமையை மறவாத குணம், நல்ல குரு, நல்ல ஆசான் அமையும் யோகம், சூழ்நிலை மாறினாலும் தன்னிலை மாறாமல் திகழும் வல்லமை, சுய ஒழுக்கம், கட்டுப்பாடு, தெய்வீக அனுக்கிரகத்தால் தானும் பலன் பெற்று மற்றவருக்கும் பலன்பெறுமாறு வாழும் யோக வாழ்க்கை என்ற வகையில் சிறப்பு பலன்களை தரும், சுய ஜாதகத்தில் 5,9ம் வீடுகள் வலிமை பெறுவது  ஜாதகரின் அறிவார்ந்த செயல்களை நிலை நிறுத்தும்.

சுய ஜாதகத்தில் 2,4,7,10ம் வீடுகள் ஜாதகரின் வருமானம், குடும்ப வாழ்க்கை, வாக்கு வன்மை, பேச்சு திறன், சம்பாதிக்கும் ஆற்றல், நிதி நிலை, தன்னுடைய வருமானத்தை சேமிக்கும் வல்லமை, சரியான திட்டமிடுதல், மக்களை தன்வசப்படுத்தல், அனைத்திலும் லாபம் பார்க்கும் வல்லமை, குடும்ப வாழ்க்கையை திறம்பட நடத்தும் யோகம், திறமையான வாதம், அதன் வழியில் பெரும் வருமானம் என்றவகையிலும், சொத்து சுகம், வண்டி வாகனம், நிலம் இடம் வீடு சார்ந்த சேர்க்கைகள், ஜாதகரின் குணம், ஜாதகரின் பொருளாதார நிலவரம், கையிருப்பு, நகை, ஆபரணம், அணியும் ஆடைகள் தரம், தோற்ற பொலிவு, எண்ணத்தின் வலிமை, சுக போகங்களை சுவீகரிக்கும் வல்லமை, தேடும் பொருள் சேரும் யோகம் என்ற வகையிலும், திருமணம்,  திருமணத்தால் ஜாதகர் பெரும் யோக வாழ்க்கை, வாழ்க்கை துணையின் ஆதரவு, நண்பர்கள் ஆதரவு, கூட்டாளிகளின் ஆதரவு, சக்தி மிக்க கூட்டாளி, மேற்கொண்டவர்கள் வழியிலான உதவிகள் மற்றும் முன்னேற்றம், பொதுமக்கள் ஆதரவு மற்றும் வசீகரம், அவர்கள் வழியிலான முன்னேற்றம் மற்றும் பதவி யோகம், வெளிநாடுகள் மற்றும் வெளியூர் சார்ந்த முன்னேற்றம் மற்றும் பணவரவு, சிறந்த வியாபார யோகம் என்ற வகையிலும், சிறப்பு மிக்க ஜீவன முன்னேற்றம், நிர்வாக திறன், பதவி யோகம், செய்யும் தொழிலை விரும்பி செய்யும் அமைப்பு, அதன் வழியிலான முன்னேற்றம், பதவி உயர்வு, சிறந்த ஜீவன வாழ்க்கை முறை, கவுரவம் அந்தஸ்து குறையாத யோக வாழ்க்கை, தனது ஜீவன வழியிலான நிரந்தர முன்னேற்றம், அரசு பதவி, அரசு உதவி, தனிப்பட்ட வியாபர திறமைகள், ஜீவன வழியிலான முன்னேற்றங்கள் என்ற  வகையில் யோகங்களை தரும், சுய ஜாதகத்தில் 2,4,7,10 ம் வீடுகள் வலிமை பெறுவது ஜாதகரின் பொருளாதர முன்னேற்றத்தை நிலை நிறுத்தும்.

சுய ஜாதகத்தில் 6,8,12ம் வீடுகள் ஜாதகரின் உடல் ஆரோக்கியம், குறுகிய கால தனவரவு, கடன் அதனால் பெரும் வருமானம், எதிரிகள் வழியிலான நன்மைகள், எதிர்ப்பவர் வழியிலான நன்மைகள், கடன் பெறுவது, கொடுப்பது மூலம் ஜாதகர் பெரும் யோக வாழ்க்கை, கல்வி கேள்விகளில் தேர்ச்சி, போட்டி பந்தயங்களில் வெற்றி, வழக்குகளில் வெற்றி, நீதியை பெரும் யோகம், சிறு சிறு ஆதாயங்களை அடிக்கடி பெரும் யோகம், விரைவாக குணம் பெரும் அமைப்பு, நோய் எதிர்ப்பு திறன், சத்ரு வழியிலான பெரும் முன்னேற்றம் என்ற வகையிலும், திடீர் அதிர்ஷ்டம், வாழ்க்கை துணை, நண்பர்கள், கூட்டாளிகள் மாற்றும் பொதுமக்கள் வழியிலான தன சேர்க்கை, புதைபொருள் பொருள் யோகம் மண்ணிற்கு அடியில் உள்ள பொருட்கள் வழியிலான திடீர் தன சேர்க்கை, மனதிற்கும் அறிவுக்கும்  எட்டாத விஷயங்கள் வழியிலான தனசேர்க்கை மற்றவர்கள் செல்வத்தை ஆளுமை செய்யும் யோகம், நீண்ட ஆயுள், திடீர் என செல்வந்தன் ஆகும் யோகம்,  மருத்துவம் மற்றும் மருத்துவ துறை  சார்ந்த யோக வாழ்க்கை, ஆயுள் காப்பீடு மூலம் அதிர்ஷ்ட யோகம் என்ற வகையிலும், முதலீடுகள் அல்லது மூதாதையர் சொத்துக்கள் மூலம் பெரும் செல்வசேர்க்கையை அடையும் யோகம், மனநிம்மதியான வாழ்க்கை, வெளிநாடுகளில் இருந்து வரும் திடீர் ஆதாயம், தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சி, சுக போக வாழ்க்கையினை ராசிக்கும் யோகம், நல்ல உறக்கம், மனதில் எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றும் வல்லமை, கனவுகள் வழியிலான லாபங்கள், பெரிய சொத்துக்களை ஆளுமை செய்யும் யோகம், திடீரென வரும் பெரும் செல்வம் என்ற வகையில் நன்மைகளை தரும், 6,8,12ம் வீடுகள் வலிமை பெறுவது ஜாதகரின் அபரிவிதமான திடீர் செல்வசேர்க்கையை  நிலை நிறுத்தும்.

சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் வலிமை பெறுவதால் ஜாதகர் பெரும் யோகங்களை பற்றி இன்றைய சிந்தனைக்கு " ஜோதிடதீபம் " பதிவு செய்திருக்கிறது .

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

சனி, 4 ஆகஸ்ட், 2012

ஒருவருடைய சுய ஜாதகத்தில் பலன் நிர்ணயம் செய்யும் வழி முறைகள் !



ஒருவருடைய ஜாதகத்தில் நடைபெறும் நன்மை தீமை பலன்களை நிர்ணயம் செய்வது லக்கினம் முதற்கொண்டு 12 வீடுகளே ( பாவகங்கள் ) , எனவே ஒருவருடைய ஜாதக அமைப்பில் அனைத்து  திசை, புத்தி, அந்தரம், சூட்சமம் ஆகியவைகள், மேற்கண்ட 12   வீடுகளின்   பலன்களையே நிச்சயம் தரும் , மேலும் ஒருவருடைய ஜாதக அமைப்பில் மேற்கண்ட 12 வீடுகளும் ( பாவகங்கள் ) எவ்வித பலனை ( நன்மையா ? தீமையா ? ) தருகிறது என்று துல்லியமாக கண்டறிவது ஜாதக பலனை தெளிவாக துல்லியமாக சொல்ல வழிவகுக்கும்.

 

1) இதற்க்கு முன் நடந்த  திசை, புத்தி, அந்தரம், சூட்சமம் ஆகியவை ஜாதகனுக்கு எந்த வீடுகளின் பலனை தந்தது ,
2 ) தற்பொழுது நடக்கும்
திசை, புத்தி, அந்தரம், சூட்சமம்  ஆகியவை ஜாதகனுக்கு எந்த வீடுகளின் பலனை தந்து கொண்டு இருக்கிறது ,
3 ) எதிர் வரும்
திசை, புத்தி, அந்தரம், சூட்சமம்  ஆகியவை ஜாதகனுக்கு எந்த வீடுகளின் பலனை தரும் என்று துல்லியமாக கண்டறிவதும்,

 

ஒருவருடை ஜாதக பலனை துல்லியமாக கணிதம் செய்ய சரியான வழி முறையாகும் , இந்த முறையில்  ஜாதக பலனை நிர்ணயம் செய்த பிறகு,  தற்பொழுது நடக்கும் திசை, புத்தி, அந்தரம், சூட்சமம் ஆகியவை எந்த வீடுகளின் பலனை தருகிறது , அந்த வீடுகள் ஜாதகருக்கு நன்மையான  பலனை தருகிறதா  , தீமையான பலனை தருகிறத என்று நிர்ணயம் செய்வதும் , மேற்கண்ட வீடுகளுடன் கோட்சார கிரகங்கள் சம்பந்தம் பெறுகிறதா , அவ்வாறு சம்பந்தம் பெரும்பொழுது கோட்சார கிரகங்கள் ஜாதகருக்கு நன்மையை தருகிறதா ? தீமையை தருகிறதா ? என்று கணிதம் செய்வது ஜாதக பலனை துல்லியமாக சொல்ல ஏதுவாக அமையும் .

 

ஆக ஒருவருடைய ஜாதக அமைப்பில் துல்லியமான பலனை நாம் கணிதம் செய்து விட்டோம் எனில் நிச்சயம் ஜாதகருக்கு சிறப்பான வாழ்க்கை அமைத்து தர ஜோதிட சாஸ்திரம் 100 சதவிகிதம் உதவி புரியும் என்பதில் சந்தேகம் இல்லை , ஒருவருக்கு ஜாதக ரீதியாக நடப்பு திசை அமைப்பு நன்மை செய்து கொண்டு இருக்கும் பொழுது செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றிமேல் வெற்றி தரும் , எனவே நாம் ஜாதகரை துணிந்து அனைத்து காரியங்களையும்  செய்ய சொல்லி ஆலோசனை வழங்கலாம் , இதனால் ஜாதகர் 100 சதவிகிதம் நன்மையே பெறுவார் என்பது உறுதி .

 

இதுவே மாறி ஒருவருக்கு ஜாதக ரீதியாக நடப்பு திசை அமைப்பு  தீமையான பலனை வழங்கி கொண்டு இருக்கும் பொழுது , எடுக்கும் முயற்ச்சிகள் யாவும் தோல்வி பெரும் , இழப்புகள் பலவற்றை  சந்திக்க வேண்டி வரும் , மன நிம்மதி இழப்பு , உறவுகள் , நண்பர்கள் வழியில் இருந்து ஏமாற்றம் போன்ற சூழ்நிலை வரக்கூடும் , எனவே ஜாதகரை  குறிப்பிட்ட காலகட்டங்கள் வரை எச்சரிக்கை செய்து விழிப்புடன் இருக்க சொல்லி  ஆலோசனை வழங்கலாம் , இதனால் ஜாதகர் மற்றும் ஜாதகரை சார்ந்தவர்கள் பாதிப்புகளில் இருந்து விடுபட்டு 100 சதவிகிதம்  நன்மை பெறுவார்கள் என்பது உறுதி .

 

ஒருவருடைய ஜாதக ரீதியான பலன்களை தெளிவாக தெரிந்து கொள்ளும் பொழுது , அந்த ஜாதகனுக்கு சரியான சிறப்பான  வாழ்க்கையை  ஜோதிட சாஸ்திரம் நன்கு அறிந்தவர்களால் நிச்சயம் அமைத்து தந்து விட முடியும் , இதனால் ஜோதிட கலையின் மீதும் , ஜோதிடர்கள் மீதும் மக்களுக்கு நல்ல நம்பிக்கை வரும் என்பதில் ஐயமில்லை , இதற்க்கு ஜோதிட கலையை சிறந்த குரு மூலம் முறையாக பயின்று தேர்ச்சி பெறுவது அவசியம் , ஜோதிட கலையை  முறையாக பயின்று அதன் மூலம் மக்களுக்கு வாழ்க்கையில் நல் வழி காட்டும் அன்பர்களுக்கு , இந்த ஜோதிடக்கலை மென்மேலும் சகல செல்வ வளத்தை வாரி வழங்குகிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை மேலும் இறை நிலையின் அருளாற்றல் சம்பந்தபட்டவருக்கு எப்பொழுதும் துணை நிற்கிறது , இதை எனது ஜோதிட குரு அவர்களின் ஆசியாலும் , எனது வாழ்க்கை அனுபவத்திலும் கண்ட 100 சதவிகித உண்மையாகும் .


வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696