லக்கினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
லக்கினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 2 ஜூலை, 2025

ஜென்ம லக்கினம் எனும் முதல் பாவகம் !

 


 ஜாதகரின் தலை மற்றும் மூளையை குறிக்கும், மேலும் அரசியல் ரீதியான ஜாதகரின் செயல்பாடுகள், சிறப்பு அந்தஸ்து மற்றும் அடையாளம், நேர்த்தியான அழகு, அமைதியான குணம், அரசியல் சார்ந்த அறிவாற்றல், நீண்ட ஆயுள், உடல் ஆரோக்கியம், தான் கொண்ட லட்சியம், இயல்பு வாழ்க்கை, இந்த பிறவியின் தன்மை மற்றும் நோக்கம், இளமை காலங்களில் ஜாதகர் பெரும் யோக வாழ்க்கை, உயிர்சக்தி மற்றும் அதன் செயல்திறன், உழைப்பின் தன்மை அதனால் பெரும் நன்மைகள், உடல் ரீதியான பாதிப்பில் இருந்து மீண்டுவரும் யோகம்,  உயிரின் வீரியம், உடல் வலிமை, நேர்த்தியான உருவ அமைப்பு, ஐம்புலன்கள் செயல்படும் தன்மை.

 ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கை, கனவு நனவாக ஜாதகரின் உழைப்பு, கல்வியில் பெரும் வெற்றி, புகழ், கீர்த்தி குலபெருமை, குணநலன்கள், கவுரவம், சிந்தனை திறன், சூழ்நிலை, ஒரு செயலின் ஆரம்பம் மற்றும் துவக்கம், ஜாதகர் பெற்ற ஞானம், தலைமை பண்பு, தனி திறமை, திருப்தியான மனம், தீர்மானமான செயல்பாடுகள், தோற்ற பொலிவு, நன்னடத்தை, நிறம், பதவி சார்ந்த வெற்றிகள், தனித்துவமான படைப்பாற்றல், புகழ் மிக்க பொறுப்புகள் அதை சிறப்பாக கையாளும் வல்லமை, புகழ் பெரும் யோகம், மச்சம் மற்றும் அடையாளம், மகிழ்ச்சியான மனநிலை, மரியாதை நிறைந்த வாழ்க்கை, உடல் மின்னோட்டம்.

 முகபாவனை மற்றும் தேஜஸ், ஜாதகரின் முயற்சிக்கும் தன்மை, மூளையின் செயல்திறன், யோகவாழ்க்கையை சிறப்பாக சுவீகரித்தல், அதன் வழியிலான லாபங்களை முழுமையாக பெறுதல், வடிவமான உடல்கட்டு, வலிமையான தேகம், வாழ்க்கையை சிறப்பாக வாழும் முறை உணர்ந்து வெற்றி பெறுதல், ஆரம்ப கால வாழ்க்கையை சிறப்பாக துவங்குதல், உயர்வான வாழ்வை சுவீகரிக்க ஜாதகரின் உழைப்பின் தன்மையே காரணமாக அமைத்தல், தனது விருப்பங்களை மிக எளிதாக அடைதல், விவேகம் நிறைந்த செயல்பாடுகள் மூலம் அனைத்தையும் அடைதல், வீரியம் குறையாத யோக வாழ்க்கை என அனைத்தையும் ஒரு ஜாதகருக்கு "ஜென்ம லக்கினம்" எனும் முதல் பாவகமே வாரி வழங்கும்.

குறிப்பு : 

இவ்வளவு சிறப்பு வாய்ந்த ஜென்ம லக்கினம் நமது ஜாதகத்தில் வலிமை பெற்று இருக்கிறதா ? என்பதை பொறுத்தே நமது வாழ்க்கை யோகம் நிறைந்ததாக அமையும்.

ஜோதிடன் வர்ஷன் 

9443355696


வியாழன், 19 ஜூலை, 2018

சுய ஜாதக ஆலோசணை : ராகு திசை மற்றும் ராகு புத்தியால் என்ன நடக்கும் ?



கேள்வி :

 பிறந்த தேதி : ( 12/07/2017 )  நேரம் இரவு : (11.10) இடம் : சென்னை

எனது மகனின் பெயர்  கோகுல், ராகு  திசை ராகு புத்தி பிறந்துள்ளான், தற்போழுது உடல் வலிமை இல்லாமல் இருக்கின்றான், இதற்கான காரணம் என்ன ? ராகு திசை மற்றும் ராகு புத்தியால்  என்ன நடக்கும் ? எனது மனம் மிகுந்த  குழப்பத்தில் உள்ளது, சரியான பதில் மற்றும் தீர்வை தர இயலுமா ?

பணிவுடன்
வேல்முருகன்
சென்னை



பதில் :

 பொதுவாக நாம் நமது சுய ஜாதக வலிமையை பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பது நமது ஜாதகத்தில் உள்ள சுபயோகங்களை சுவீகரிக்கவும், அவயோகங்களை தவிர்க்கவும் நமக்கு நல்லதோர் வழிகாட்டுதல்களை வாரி வழங்கும், தாங்கள் வினவியிருக்கும் தங்களது மகனின் ஜாதகத்திற்க்கான பதில்களை இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பரே! சுய ஜாதகத்தில் லக்கினம் எனும் முதல் பாவகம் வலிமை பெற்று இருப்பது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு வளரும் சூழ்நிலையில் சிறப்பு, உடல் ஆரோக்கியம், மனநலம், தெய்வீக அனுக்கிரகம், தன்னம்பிக்கை மிக்க மனநிலை, நோய் எதிர்ப்பு சக்தி, புகழ், வெற்றி, எதிர்ப்புகள் அனைத்தையும் சமாளிக்கு வல்லமை, தெளிவான சிந்தனை, நீண்ட ஆயுள், சுய ஜாதகத்தில் உள்ள யோகங்களை சுவீகரிக்கும் வல்லமை என்ற வகையில் நன்மைகளை தரும் என்பது கவனிக்கத்தக்கது.

 ஆனால் தங்களது மகனின் ஜாதகத்தில் 1,2,7,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது லக்கினம் சற்று வலிமை இழந்து காணப்படுகிறது, மேலும் குடும்ப ஸ்தானமான 2ம் வீடு, களத்திர ஸ்தானமான 7ம் வீடு, அயன சயன ஸ்தானமான 12ம் வீடுகள் அனைத்தும் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கான நெருக்கடிகளை அதிக அளவில் தரும் என்பது கவனிக்கத்தக்கது, தங்களுக்கு உண்டான நல்ல செய்தி என்னவென்றால் ஜாதகருக்கு விரைய ஸ்தானமான 12ம் பாவகம் கும்ப ராசியில் 22பாகைகளையும்,  மீன ராசியில் 13பாகைகளையும் கொண்டிருப்பது ஆறுதல் அளிக்கும் விஷயமாகும், காற்று தத்துவம் மற்றும் நீர் தத்துவ ராசிகள் விரைய ஸ்தான அமைப்பில் வியாபித்து நிற்பது உடல் தொந்தரவை தந்த போதிலும் அதில் இருந்து ஜாதகருக்கு நிவாரணத்தையும் தரும் என்பதுடன், பாதிப்பு கடுமையாக இருக்காது, எனேவ ஜாதகருக்கு ஏற்படும் உடல் நல குறைவிற்க்கான காரணத்தை அறிந்து மருத்துவம் மூலம் குணம் அடைய செய்யுங்கள்.

ராகு திசை, ராகு புத்தி

ஜாதகன் ராகு திசை ராகு புத்தியில் ஜெனனித்து இருந்தாலும், ராகு தனது திசையிலும் , புத்தியிலும் 2ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவக பலனை மட்டும் ஏற்று நடத்துவது  வீண் விரையத்தை பொருளாதர ரீதியாக வாரி வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை, தங்களது வருமானம் மருத்துவ செலவுகள் என்ற வகையில் விரையமாகலாம், எதிர்பாராத வீண் செலவுகளை தரலாம் எனவே ராகுதிசை, ராகு புத்தி தங்களது பொருளாதர முன்னேற்றத்தை சற்று கடுமையாக பாதிக்கும் என்பதுடன் , வீண் மனக்கவலை, மனப்போராட்டம் என்ற வகையில் இன்னல்களை  தரக்கூடும்.

மேலும் தங்களது மகனின் சுய ஜாதகரீதியாக பலாபலன்களை மின் அஞ்சல் அல்லது அலைபேசி மூலம் அறிந்து நலம் பெறுங்கள் " வாழ்த்துகள் "

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696


வியாழன், 21 ஜூன், 2018

ஜாதக பலாபலன்களை துல்லியமாக அறிவது எப்படி ? சுக்கிரன் திசை என்ன செய்யும் ? எனது ஜாதகத்திற்கு பலன் கூற இயலுமா ?


 ஒருவரது சுய ஜாதகத்திற்கு துல்லியமான பலாபலன்கள் காண நமக்கு தேவையான அடிப்படை குறிப்புகள் 1) சரியான பிறந்த தேதி 2) சரியான பிறந்த நேரம் 3) சரியான பிறந்த இடம் ஆகிவை ஆகும், இதன் அடிப்படையில் கணிதம் செய்யும் ஜாதகத்தை கொண்டே நாம் துல்லியமான பலாபலன்கள் காண இயலும், மேலும் மேற்கண்ட குறிப்புகளை கொண்டு கணிதம் செய்யப்படும் ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலையை தெளிவாக அறிந்துகொள்ள முடியும், தற்போழுது நடைமுறையில் உள்ள திசா புத்திகள் சுய ஜாதகத்தில் ஏற்று நடத்தும் பாவக தொடர்புகள் பற்றி அறிந்துகொள்ள முடியும், கோட்சார கிரகங்கள் திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவகங்களுக்கு தரும் நன்மை தீமை பற்றி துல்லியமாக அறிந்துகொண்டு, சுய ஜாதகத்திற்க்கான சரியான பலாபலன்களை மிக துல்லியமாக எடுத்துரைக்க இயலும்.

சுய ஜாதக பலாபலன்கள் பற்றி  தெரிந்துகொள்ள நாம் சம்பந்தப்பட்ட ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை பற்றி தெளிவாக கணிதம் செய்து அறிந்துகொள்வது நல்லது, அதன் பிறகு நடைபெறும் திசா புத்திகள் அல்லது எதிர்வரும் திசாபுத்திகள் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களில் எந்த எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது, நடைபெறும், எதிர்வரும் திசா புத்திகள் ஏற்று நடத்தும் பாவக தொடர்புகளுக்கு கோட்சார கிரகங்கள் தரும் வலிமை வலிமை அற்ற தன்மையை பற்றி தெளிவாக உணர்ந்து, சம்பந்தப்பட்ட நபருக்கு ஜாதக பலன்களை கூறுவதே அவரது வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், உதாரணமாக தங்களது ஜாதகத்தையே இன்று சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பரே !


லக்கினம் : மீனம் 
ராசி : மீனம் 
நட்ஷத்திரம் : ரேவதி 2ம் பாதம்.

தங்களது ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களில் வலிமை பெற்றுள்ள பாவக தொடர்புகள் :

1,2,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகத்திலே மிகுந்த வலிமையுள்ள பாவக தொடர்புகள் ஆகும், அது தரும் யோக பலன்களை பிறகு ஆய்வு செய்வோம்.

3,9ம் வீடுகள் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது வரவேற்கத்தக்கது.

4ம் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சுகபோக வாழ்க்கையை 4ம் பாவக வழியில் இருந்து தரும் .

5,7ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சிறப்பான யோகங்களை தரும்.

10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜீவன ரீதியான மேன்மையை பரிபூர்ணமாக தரும்.

தங்களது ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது விரைய ஸ்தான வழியில் இருந்து கடுமையான இன்னல்களை தரும்.

தங்களது ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களில் 6,12ம் வீடுகளை தவிர மற்ற அனைத்து பாவகங்களும் வலிமையுடன் காணப்படுகிறது, குறிப்பாக 1,2,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிகுந்த நன்மைகளை தரும் அமைப்பாக எடுத்துக்கொள்ளலாம், மேலும் தங்களின் ஜாதகத்தில் 11ம்  பாவகம் மீன ராசியில் 259:51:54 பாகையில் ஆரம்பித்து மகர ராசியில் 298:57:55 பாகையில் நிறைவு பெறுவதும் லாப ஸ்தானம் பெரும் பகுதி சர ராசியான மகரத்திலே வியாபித்து நிற்பது தொடர்பு பெரும் வீடுகள் வழியில் இருந்து 100% விகித சுபயோகங்களை தன்னிறைவாக வாரி வழங்கும்.

மேற்கண்ட விஷயங்கள் தற்போழுது முக்கியமல்ல, தற்போழுது நடைபெறும் திசா புத்திகள், எதிர் வரும் திசா புத்திகள் தங்களுக்கு சுய ஜாதகத்தில் எந்த எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது, அந்த பாவகங்களுக்கு கோட்சார கிரகங்கள் தரும்  பலாபலன்கள் என்ன ? என்பதே தங்களின் நிகழ்கால வாழ்க்கை, எதிர்கால வாழ்க்கை பற்றி தெளிவாக உணர்ந்து, சரியான திட்டமிடுதல்களுடன் வாழ்க்கையை மிக இலகுவாக முன்னேற்ற பாதையில் எடுத்து செல்ல இயலும்.

தற்போழுது தங்களுக்கு சுக்கிரன் திசை( 13/02/2017 முதல் 13/02/2037 வரை )  நடைபெறுகிறது, நடைபெறும் சுக்கிரன் திசையில் சுய புத்தி ( 13/02/2017 முதல் 15/06/2020 வரை ) நடைமுறையில் உள்ளது இது தங்களுக்கு ஏக காலத்தில்  1,2,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 4ம் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் சுபயோக சுப வாழ்க்கையை சுக ஸ்தானம், ஜீவன ஸ்தானம் மற்றும் லாப ஸ்தான வழியில் இருந்து பரிபூர்ணமாக வாரி வழங்குவது மிகுந்த யோகத்தை நல்கும் அமைப்பாகும், எனவே சரியான பருவ வயதில் சுக்கிரன் திசை அமைப்பில் இருந்து முழு யோகங்களையும் சுவீகரிக்கும் வல்லமை கொண்டவராக திகழ்வது தங்களுக்கு சகல சௌபாக்கியங்களையும்  வாரி வழங்கும் அமைப்பாகும்.

சுய ஜாதகத்தில் யோகங்கள் இருப்பது முக்கியமல்ல ( பாவக வலிமை ) நடைமுறையில் எதிர்காலத்தில் உள்ள திசா புத்திகள் யோகம் பெற்ற பாவக தொடர்பை ஏற்று நடத்துவதே சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு யோகம் பெற்ற பாவக வழியிலான நன்மைகளை நடைமுறைக்கு கொண்டு வரும் என்பதற்கு இணங்க தங்களது ஜாதகத்தில் தற்போழுது நடைமுறையில் உள்ள சுக்கிரன் திசைசுக்கிரன் புத்தி வலிமை பெற்ற 4,10,11ம் பாவக பலனை ஏற்று நடத்துவது தங்களுக்கு அளவிலா நன்மைகளை வாரி வழங்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை, எனவே சுக்கிரன் திசை தரும் யோக பலாபலன்களை 4,10,11ம் பாவக வழியில் இருந்து சுவீகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வாழ்க்கையை சிறப்பாக வாழ " ஜோதிடதீபம் " வாழ்த்துகிறது.

குறிப்பு :

 தங்களது சுய ஜாதகத்தில் 6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் 12ம் வீடு சர ராசியான மகரத்தில் 1பாகையையும், மீனத்தில் 3பாகைகளையும் கொண்டிருப்பது, தங்களது வாழ்க்கையில் வரும் அதிர்ஷ்டங்களை வீணடிக்கும் தன்மை பெற்றவர் என்பதை அறிவுறுத்துகிறது, மேலும் தங்களது உடல் மனம் இரண்டையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவில்லை எனில் வரும் பேரிழப்புகளை தவிர்க்க இயலாது, குறிப்பாக தாங்கள் எதாவது தீய பழக்க வழக்கத்திற்கு ஆர்பட்டவராக இருப்பின் சுய ஜாதகத்தில் உள்ள சுபயோகங்கள் யாவும் யோக பங்கமாகி, வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து வரும் நன்மைகளை சுவீகரிக்க இயலாத சூழ்நிலையை உருவாக்கும் என்பதை கருத்தில் கொள்க என்று "ஜோதிடதீபம்" முன் எச்சரிக்கை செய்கிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

திங்கள், 21 மே, 2018

சனிமஹா திசை தரும் பலன்களும், சுய ஜாதகத்தில் பாவக வலிமையும் !


சுய ஜாதக பலன்கள்

நடைமுறையில் உள்ள சனி திசை ஏற்று நடத்தும் பாவக தொடர்பு எது ? சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலை எப்படி உள்ளது, எதிர்வரும் புதன் திசை தரும் பலாபலன்கள் மற்றும் எதிர்கால வாழ்க்கை எப்படி அமையும் ?

லக்கினம் : மேஷம்
ராசி : துலாம்
நட்ஷத்திரம் : ஸ்வாதி 3ம் பாதம்



சுய ஜாதகத்தில் பாவக தொடர்புகள்

1ம் வீடு உயிர் உடலாகி லக்கின பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு, சிறப்பான வளரும் சூழ்நிலையையும், நீண்ட ஆயுளையும், நல்ல மனம், சிறந்த குணம், ஆரோக்கியம், உடல் நலம், யோகம் நிறைந்த வாழ்க்கை வளம் என மிகுந்த நன்மைகளை தரும், ஜாதகி மேற்கொள்ளும் காரியங்களில் பரிபூர்ண வெற்றியையும், கீர்த்தியையும் தரும், லக்கினம் மேஷம் என்பதாலும் சர நெருப்பு ராசியின் இயக்கம் என்பதாலும், சுய கட்டுப்பாடு, தெய்வீக அனுக்கிரகம், லட்சியங்களை அடைதல், ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கை, நினைத்ததை அடையும் யோகம் என பரிபூர்ண நன்மைகளை வாரி வழங்கும், வாழ்நாள் முழுவது, சிறப்பான சுபயோகங்களை நல்கும் அமைப்பாக கருதலாம்.

2,4,5,7,8,11ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகிக்கு 2ம் பாவக வழியில் இருந்து நல்ல வாழ்க்கைத்துணை, நிறைவான வருமானம், கல்வியில் வெற்றி, நல்ல உத்தியோகம், வியாபார மூலம் நல்ல முன்னேற்றம், கவுரவம் அந்தஸ்து, இனிமையான வாக்குவன்மை, புகழ், அரசு கவுரவம், அனைத்திலும் வெற்றி, செய்தொழில் வழியிலான அபரிவித வருமானங்கள், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி, எதிர்காலத்திற்க்கான சேமிப்பு என சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும்.

4ம் பாவக வழியில் இருந்து நல்ல தொழில் முன்னேற்றம், கைநிறைவான வருமானம், பெயரும் புகழும் தேடிவரும் யோகம், மண் மனை, வண்டி வாகன யோகம், திடீர் சொத்து சுக சேர்க்கை, வேலையாட்கள் மூலம் லாபம், சிறந்த நிர்வாக திறமை, பெரிய சொத்து சுக சேர்க்கையை பெறுதல், விளையாட்டில் ஆர்வம், அரசு கவுரவம், அரசியல் சார்ந்த உதவிகள், எதிர்பாராத அதிர்ஷ்டம் என்ற வகையில் சிறப்புகளை தரும், நல்ல குணம் ஜாதகிக்கு சிறந்த யோக வாழ்க்கையை  வாரி வழங்கும்.

5ம் பாவக வழியில் இருந்து ஜாதகிக்கு நல்ல புத்திர  பாக்கியம், நிறைந்த அறிவு, கல்வியில் வெற்றி, செல்லும் இடங்களில் இருந்து வரும் ஆதரவு, அருங்கலைகளில் தேர்ச்சி மற்றும் புகழ், நாடகம், சினிமா துறையில் லாபம் , குழந்தைகளால் லாபம் மற்றும் அதிர்ஷ்டம், விளையாட்டில் அதீத ஆர்வம், வாழ்க்கையில் சிறப்பான மேன்மைகளை பெறுதல், புத்திசாலித்தனம் மிக்க செயல்பாடுகள், குல தெய்வத்தின் ஆசி மூலம் வாழ்க்கையில் சகல  சௌபாக்கியங்களையும் பெரும் அமைப்பு, புதிய சிந்தனை மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் மூலம், அபரிவித்த வளர்ச்சி என ஜாதகிக்கு பரிபூர்ண சுபயோகங்களை வாரி வழங்கும்.

7ம் பாவக வழியில் இருந்து ஜாதகிக்கு நல்ல வாழ்க்கை துணை, வெளிநாடுகளில் இருந்து வரும் செல்வாக்கு, வெளிநாடுகளில் தொழில் முன்னேற்றம், அரசியல் மற்றும் வியாபாரத்தில் வெற்றி, சமூக வாழ்க்கையில் எதிர்பார்த்த அந்தஸ்து கிடைத்தல், பொதுவாழ்க்கையில் முன்னேற்றம், திடீர் செல்வாக்கு, பல தொழில் செய்யும் யோகம், கூட்டு தொழில், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் மூலம் அபரிவித வளர்ச்சி, செய்யும் காரியங்கள் யாவிலும் தனித்தன்மையான செயல்பாடுகள், வெளியூர் அல்லது வெளிநாடு சென்ற பிறகு வரும் பொருளாதார தன்னிறைவு என ஜாதகிக்கு களத்திர ஸ்தான  வழியில் இருந்து சுபயோகங்களை அதிக அளவில் வந்து சேரும்.

8ம் பாவக வழியில் இருந்து ஜாதகிக்கு  நல்ல அந்தஸ்தை விரைவாக பெரும் யோகம், வசதிமிக்க வேலைவாய்ப்பு அல்லது தொழில் வாய்ப்பு, பதவியில்  திடீர் உயர்வு, நீண்ட ஆயுள், எதிர்ப்புகள் அனைத்தையும் எதிர்கொண்டு திடீரென அபரிவித வளர்ச்சியை பெரும் தன்மை, தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் ஆதரவு மற்றும் பொருளாதர உதவிகள், நல்ல நண்பர்கள் உதவி, பொது மக்கள் செல்வாக்கு மூலம் கவுரவ பதவிகளை பெரும் யோகம், மருத்துவ உபகரணம்,மற்றும் மருந்துகள் மூலம் நல்ல லாபம், இன்சூரன்ஸ் துறையில் பெரும் அபரிவித லாபம் மற்றும் தொழில் வாய்ப்புகள் என ஜாதகிக்கு ஆயுள் பாவக வழியில் இருந்து சுபயோகங்களை வாரி வழங்கும்.

11ம் பாவக வழியில் இருந்து ஜாதகி செய்யும் தொழில் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியை தரும், மிகப்பெரிய பதவிகளை வகிக்கும் யோகம் உண்டு, அரசு ஆதரவு, தனியார் துறையில் இருந்து வரும் சிறப்பான தொழில் வாய்ப்புகள், தன்னம்பிக்கை மாறா மனநிலை, தொழில் வழியிலான சொத்து சுக சேர்க்கை வண்டி வாகன யோகம், மனதில் எண்ணிய எண்ணங்கள் யாவும் பலிதம் பெரும் தன்மை, தெய்வீக அனுக்கிரகம், அதிர்ஷ்டத்தின் முழு வலிமையை ஜாதகி அனுபவிக்கு வல்லமை, தொழில் மூலம் மிகப்பெரிய வளர்ச்சியை பெரும் யோகம் உண்டாகும்.

3,6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு 3ம் பாவக வழியில் இருந்து மருந்துகள் மூலம் அபரிவித லாபம் உண்டாகும், அறிய கலைகள் மூலம் செல்வாக்கும் தனசேர்க்கையும் உண்டாகும், விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் ஜாதகியின் வளர்ச்சிக்கு பேருதவியாக அமையும், வேற்று மதத்தினர் அல்லது அயலார் மூலம் நன்மையையும் லாபத்தையும் பெற ஜாதகிக்கு வாய்ப்பு அதிகம், பயணங்கள் மூலம் நல்ல வாய்ப்புகளையும், புதிய கண்டுபிடிப்புகள் மூலம் அபரிவித லாபங்களை, தர்ம சிந்தனை மற்றும் சத்தியத்தை மதித்து நடக்கும் வல்லமையும் ஜாதகிக்கு உண்டாகும்.

6ம் பாவக வழியில் இருந்து ஜாதகிக்கு கடன் சார்ந்த பிரச்சனைகள் பெரும் சிரமங்களை தரக்கூடும், வேலையாட்கள் சிலநேரங்களில் இன்னல்களை ஏற்படுத்த கூடும், உடல் நல பாதிப்பு வயிறு சார்ந்து தருவதற்கு அதிக வாய்ப்பு உண்டு, தேவையற்ற செலவுகள், எதிரிகள் தொந்தரவு, மறைமுக எதிர்ப்பு, எதிர்பாராத திடீர் செலவு, மறுத்துவ செலவினங்கள் என்று ஜாதகிக்கு சற்று பாதிப்பை அதிக அளவில் தரக்கூடும், எவரிடமும் பகைமை பாராட்டாமல் தனது வெற்றியில் குறிக்கோளாக இருப்பது ஜாதகிக்கு சகல நலன்களையும் தரும்.

9 ம் பாவக வழியில் இருந்து ஜாதகிக்கு வெளிநாடுகளில் இருந்து பரிபூர்ண யோகத்தை வாரி வழங்கும், சொந்த இடத்தைவிட்டு வெகு தொலைவு சென்ற பிறகு பரிபூர்ண  சுபயோகங்களை வாரி வழங்கும், மற்றவர்கள் விஷயங்களில் தலையீடு செய்வது ஜாதகிக்கு மிகப்பெரிய இன்னல்களையும், வீண் அவப்பெயரையும் பெற்றுத்தரும் என்பதால் மிகுந்த கவனமுடன் இருப்பது சகல சௌபாக்கியங்களையும் தரும்.

12ம் பாவக வழியில் இருந்து ஜாதகிக்கு நிறைய வீண் செலவுகள், பங்கு சந்தை மற்றும் லாட்டரி மூலம் பெரும் நஷ்டத்தை தரும், திருப்தி இல்லாத வாழ்க்கை பெரும் சிரமங்களை தரக்கூடும், அனைவராலும் அதிக தொல்லைகளையும் துன்பங்களையும் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், மனநிம்மதி இழப்பும், மனஅழுத்தமும் ஜாதகியின் அதிர்ஷ்டத்தை வெகுவாக பாதிக்கும், முதலீடுகளில் கவனமில்லை எனில் ஜாதகி பெரும் துன்பத்தை எதிர்கொள்ளும் சூழ்நிலையை உருவாக்க கூடும்.

10ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது வியாபாரம் சார்ந்த முன்னேற்றங்கள் வெகு அற்புதமாக அமையும், ஆலோசனை மற்றும் நிர்வாகம் சார்ந்த விஷயங்களில் அபரிவித்த தனித்தன்மையை வாரி வழங்கும், நிதி ஆலோசனை, நிதி மேலாண்மை இரண்டிலும் சிறந்து விளங்கும் தன்மையை தரும், பொது வாழ்க்கையில் எதிர்பாரா வெற்றிகள் உண்டு, இடம் மற்றும் சூழ்நிலை மாற்றத்தில் அதீத விருப்பம் உண்டாகும், பொருளாதரா வளர்ச்சி எதிர்பார்த்த வாறே அமையும்.

தற்போழுது நடைமுறையில் உள்ள சனி திசை தரும் பலன்கள் : ( 26/11/2008 முதல்  27/11/2027 வரை )

சனி பகவான் தனது திசையில் 10ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவது மிகுந்த நன்மைகளை தரும் அமைப்பாகும், தொழில் ரீதியான வெற்றிகளையும், சமூக அந்தஸ்த்தையும் பரிபூர்ணமாக தரும், எதிர்பார்த்த நன்மைகள் ஜாதகிக்கு நடைமுறைக்கு வரும் உடல் ஆரோக்கிய பாதித்த போதிலும் ஜாதகியின் முயற்சிகள் நல்ல விருத்தியை தரும், பொருளாதர முன்னேற்றம் என்பது வியக்கத்தக்க வகையில் அமையும் என்பது கவனிக்கத்தக்கது.

சனி திசை சுக்கிரன் புத்தி ஜாதகிக்கு 4ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன்  சம்பந்தம் பெற்று யோக பலனை தருவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், ஜாதகி தொழில் ரீதியாக மேற்கொள்ளும் முயற்சிகள் நல்ல வெற்றிகளை நல்கும், வண்டி வாகனம், வீடு சொத்து சுக சேர்க்கை பெற நிறைய வாய்ப்புகள் வந்து சேரும், சூரியன் புத்தி 6,12ம் பாவக வழியில் இருந்து இன்னல்களையும், சந்திரன் புத்தி களத்திர பாவக வழியில் இருந்து சுபயோகங்களையும், செவ்வாய் புத்தி 4,7ம் பாவக வழியில் இருந்து சுபயோகங்களையும், ராகுபுத்தி லக்கின வழியில் இருந்து சுபயோகங்களையும், குரு புத்தி 7ம் பாவக வழியில் இருந்து சுபயோகங்களையும், வாரி வழங்க காத்துகொண்டு இருப்பது ஜாதகி மிகுந்த நன்மைகளை தரும் அமைப்பாகும்.

எதிர்வரும் புதன் திசை தரும் பலன்கள் : ( 27/11/2027 முதல் 26/11/2044 வரை )

புதன் தனது திசையில் 3ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று ஓரளவிற்கான சுபயோகங்களை நல்குவது ஜாதகிக்கு நன்மை என்ற போதிலும், சிறு சிறு விரயங்களை தவிர்க்க இயலாது, இருப்பினும் வியாபார முன்னேற்றம் என்பது மிகவும் சிறப்பாக அமையும், செய்யும்  தொழில் வழியிலான லாபம் நிச்சயம் உண்டு.

பரிகாரம் :

1) ஜாதகி திருவெண்காடு சென்று முக்குண நீராடி நலம் பெறுவது அவசியமாகிறது.
2) தினமும் சூர்ய நமஸ்காரம் செய்து வருவது சகல சௌபாக்கியங்களையும் வாரி  வழங்கும்.
3) குல தெய்வ வழிபாடு, பித்ரு வழிபாடு எதிர்வரும் ஆடி அமாவாசை தினத்தில் அண்ணதானம் செய்து வழிபடுவது அவசியமாகிறது.
4) வருடம் ஒருமுறை பழனி சென்று முருக பெருமானை ராஜ அலங்கார தரிசனம் செய்து வழிபடுவது அவசியமாகிறது.
5) சர்ப்ப சாந்தி பரிகாரம், ஜாதகிக்கு மென்மேலும் பரிபூர்ண ராஜயோகத்தை வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

புதன், 24 ஜனவரி, 2018

ஜாதக பலாபலன் அறிய லக்கினத்திற்க்கு முக்கியத்துவம் தருவதேன் ?



 ஒருவரின் பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இயங்குவது சுய ஜாதகம், சுய ஜாதகத்தை இயக்குவது ஜென்ம லக்கினம் எனும் முதல் பாவகம் என்றால் அது மிகையில்லை, ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டே மற்ற பாவகங்களின் வலிமை அல்லது வலிமை அற்ற நிலை நிர்ணயம் செய்யப்படுகிறது, உதாரணமாக சுய ஜாதகத்தில் ஒருவருக்கு லக்கினம் வலிமை பெற்று இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகர் லக்கின பாவக வழியில் இருந்து பரிபூர்ண நன்மைகளை மிக எளிதாக பெறுவார், லக்கினம் பாதிக்கப்பட்டு இருப்பின் ஜாதகரின் வாழ்க்கை சற்று கடுமையான போராட்டங்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், லக்கினம் பாதிப்படைவது என்பது 6,8,12ம் பாவகங்களுடன் சம்பந்தம் பெறுவதும், பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதும் ஜாதகருக்கு லக்கினம் வலிமையற்ற தன்மையை பெறுவதற்கு காரணமாக அமையும்.

 ஜென்ம லக்கினம் ஒருவரின் ஜாதகத்தில் 6,8,12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சிறப்பானதல்ல, ஏனெனில் ஜாதகருக்கு மற்ற பாவக வழியில் இருந்து வரும் நன்மைகளை சுவீகரிப்பதென்பது இயலாத நிலையை தரும், ஜாதகருக்கு மற்ற பாவக வழியில் இருந்து வரும் சுபயோகங்களை உதறித்தள்ளும் சூழ்நிலைக்கு ஆளாக்கும், ஜாதகருக்கு லக்கினம் சத்ரு ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு உடல் நலக்குறை, நோய் எதிர்ப்பு சக்தி இன்மை, கடன், எதிரி தொந்தரவு, எதிர்மறை எண்ணங்கள் மூலம் வாழ்க்கையில் தோல்வி, தனது உடலையும் மனதையும் தானே பாதிப்பிற்க்கு ஆளாக்கி கொள்ளும் மனநிலை என்ற அமைப்பில் இன்னல்களை தரும், ஆயுள் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு சில விஷயங்களில் திடீர் வெற்றிகளை தந்த போதிலும், விபத்து, திடீர் இழப்பு, எதிர்பாராத பொருளாதார சிக்கல் என்ற வகையில் இன்னல்களை தரும், மருத்துவ செலவினங்கள் தொடர் பொருளாதர சிக்கல்களை அதிகரிக்கும், விரைய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகரின் மனம் சார்ந்த போராட்டங்களை அதிகரிக்கும், ஜாதகருக்கு வரும் பேரிழப்புகள் மீள இயலாத துன்பத்தை தரும், நம்பிக்கை இன்மையும், மனோதைரியமும் பெரிய பாதிப்பை தர கூடும், பொருளாதார சிக்கல்கள் பெரும் நெருக்கடிகளை தரும் எனவே சுய ஜாதகத்தில் லக்கினம் மேற்கண்ட 6,8,12ம் பாவகங்களுடன் தொடர்பு  பெறுவது என்பது ஜாதகரின் வாழ்க்கையை மிகுந்த சிரமங்களுக்கு ஆளாக்கும்.

 லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதுதென்பது, ஜாதகருக்கு மேற்கண்ட பாவக வழியில் கடுமையான இன்னல்களை தருவதுடன், பேரிழப்புகளையும், பெரும் நஷ்டங்களையும் தரும், குறிப்பாக ஜாதகரின் திட்டமிடுதல்கள் யாவும் வெறும் கனவாகவே மாறிவிட வாய்ப்பு அதிகம் தெளிவற்ற சிந்தனைகள், வீண் கற்பனைகள், முரண்பட்ட வாழ்க்கை முறை, எதிர்ப்புகளை அதிக அளவில் சந்திக்கும் சூழ்நிலை, பொறுப்பற்ற அணுகுமுறை, உடல் மன வலிமையற்ற தன்மை, சுய நலம், பொறாமை, பிற்போக்கு தனமான சிந்தனை, குற்றம் குறை காணும் மனநிலை, சரியான கோணத்தில் புரிந்துகொள்ள இயலாத மனஇயல்பு, சமயோசித அறிவுத்திறன் இல்லாமை, போதை பொருட்கள், லாகிரி வஸ்துக்களுக்கு அடிமையாகும் தன்மை என ஜாதகரை மீள இயலாத துயரத்தில் ஆழ்த்தும் ஒருவரது சுய ஜாதகத்தில் லக்கினம் மட்டுமல்ல லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களில் எந்த பாவகமும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது சிறப்பானததல்ல, எனவே சுய ஜாதகத்தில் வீடுகள் தாம் தொடர்பு பெரும் பாவக வழியிலான பலாபலன்களையே நடைமுறைக்கு கொண்டுவரும் என்பதால் சுய ஜாதகத்தில் லக்கினம் அதிமுக்கியத்துவம் பெறுகின்றது, இதற்க்கு நல்ல உதாரணமான 2 ஜாதகங்களை இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் .

லக்கினம் வலிமை அற்ற ஜாதகம் :


லக்கினம் : கடகம்
ராசி : ரிஷபம்
நட்ஷத்திரம் : கிருத்திகை 4ம் பாதம்

ஜாதகருக்கு லக்கினம் எனும் முதல் வீடு ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பது விபத்து, ஏமாற்றம், திடீர் இழப்பு, திடீர் உடல்நல பாதிப்பு, திடீர் பொருளாதார இழப்பு என்ற வகையில் இன்னல்களை தந்துகொண்டு இருப்பதுடன், ஜாதகரின் செயல்பாடுகளும், நடவடிக்கைகளும் சமூக பாராட்டுதல்களை உரியதாக அமையாதது லக்கினம் வலிமையின்மையை தெளிவுபடுத்துகிறது, மேலும் ஜாதகரின் லக்கினம் தொடர்பு பெரும் ஆயுள் ஸ்தானம் என்பது ஜாதகருக்கு காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் ராசியான மகரத்தில் 2 பாகைகளையும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் ராசியான கும்பத்தில் 28 பாகைகளையும் கொண்டு இருப்பது ஜாதகரின்  அதிர்ஷ்டத்தை கேள்விக்குறியாக்குவதுடன், ஜாதகரின் அறிவார்ந்த செயல்பாடுகளில் தெளிவின்மையை உறுதி செய்கிறது, ஜாதகரின் அறிவு ஜாதகருக்கு பயன்படாமல் பிறர் ஒருவருக்கு பயன்தருவது ஜாதகரின் அதிர்ஷ்டமின்மையை மிக தெளிவாக காட்டுகிறது, மேலும் ஜாதகர் தனது உடல் நலம் மற்றும் மன நலம் இரண்டிலும் அக்கறை இன்றி இருப்பது லக்கினம் பாதிக்கப்படுவதின் தாக்கமே, இருப்பினும் ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் ராகு திசையும், எதிர்வரும் குரு திசையும் சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது பாதிக்கப்பட்ட லக்கினபாவகத்திற்க்கு சற்று ஆறுதலை தரும் என்பதை நினைத்து ஜாதக மகிழ்ச்சி அடையலாம் .

 லக்கினம் வலிமை பெற்ற ஜாதகம் :


லக்கினம் : கன்னி
ராசி : கடகம்
நட்ஷத்திரம் : ஆயில்யம் 2ம் பாதம்

 ஜாதகருக்கு லக்கினம் எனும் முதல் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகரின் லக்கினம் வலிமை பெற்று  இருப்பதை தெளிவுபடுத்துகிறது, மேலும் லாப ஸ்தானம் என்பது ஜாதகருக்கு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சுக ஸ்தானமான கடக ராசியில் 26 பாகைகளையும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் வீடான சிம்மத்தில் 4 பாகைகளையும் கொண்டிருப்பது ஜாதகரின் நல்ல குணத்தையும், விசாலமான மனநிலையையும் கொண்டிருப்பவர் என்பதை தெளிவுபடுத்துகிறது, கிராமங்களில் ஓர் செலவேந்திரம் ஒன்று உண்டு அது " எண்ணம் போல் வாழ்க்கை " என்பதாகும், மனம் என்பது செம்மையானால் மந்திரம் செபிக்க தேவையில்லை, அதற்க்கு நல்ல உதாரணம் மேற்கண்ட ஜாதகர், தனது வாழ்க்கையில் மிகுந்த தன்னம்பிக்கையும், இறை அருளின் மீதான  பற்றுதலும் ஜாதகருக்கு நல்லதோர் தொழில் வாய்ப்பையும், இனிமை நிறைந்த யோக வாழ்க்கையையும் வாரி வழங்கியதை, ஜாதகர் மிக எளிதாக சுவீகரிக்க லக்கினம் முழு வலிமையுடன் அமைந்ததே அடிப்படை காரணமாக அமைந்தது, ஜாதகரின் அறிவும் பரந்தமனபக்குவமும் ஜாதகருக்கு சுபயோக வாழ்க்கையை வழங்க தவறவில்லை.

சுய ஜாதகத்தில் லக்கினம் வலிமை பெறுவது, வலிமை பெற்ற மற்ற பாவக வழியில் இருந்து சுபயோக பலன்களை தன்னிறைவாக வாரி வழங்கும் என்பது மேற்கண்ட ஜாதகரின் வாழ்க்கை வளர்ச்சியில் இருந்து நாம் தெளிவாக  புரிந்துகொள்ளலாம் என்பது மேற்கண்ட ஜாதகத்தின் தனி சிறப்பு அம்சமாகும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வியாழன், 12 அக்டோபர், 2017

சுய ஜாதகத்தில் லக்கினம் வலிமை இழப்பதால், ஜாதகருக்கு ஏற்படும் இன்னல்கள் !



 " எண்சான் உடம்பிற்கு சிரசே பிரதானம் " என்பதற்கு இணங்க சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் உடல் என்று வர்ணிக்கப்படும் லக்கினமே பிரதானம் ஆகும், சுய ஜாதக பலன்கான சம்பந்தப்பட்ட நபரின் லக்கினமே அடிப்படையாக விளங்குகிறது,  இது சம்பந்தப்பட்ட நபரின் பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் என்ற குறிப்பை கொண்டு  கணிதம் செய்யப்படும், அதன் அடிப்படையில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை வலிமை அற்ற தன்மை நிர்ணயம் செய்யபடுகிறது, ஒருவரது சுய ஜாதக பலாபலன்கள் பற்றி தெளிவு பெற நிச்சயம் அவரது லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலையை கருத்தில் கொண்டும், நடைபெறும் திசை புத்தி மற்றும் எதிர்வரும் திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவக வலிமையை கருத்தில் கொண்டும், சுய ஜாதக பலன் காண்பது அவசியமாகிறது.

அதன் அடிப்படையில் சுய ஜாதகத்தில் முதல் பாவகமான லக்கினம் வலிமை பெறுவது மற்ற பாவக வழியில் இருந்து வரும் யோக அவயோக பலாபலன்களை சுவீகரிக்கும் வல்லமையை பரிபூர்ணமாக பெற்று இருக்கும், மாறாக சுய ஜாதகத்தில் லக்கினம் வலிமை அற்று காணப்படுவது ஜாதகர் மற்ற பாவக வழியில் இருந்து வரும் நன்மை தீமைகளை ஏற்றுக்கொள்ளும் வல்லமையை இழந்து காணப்படும், லக்கினம் பாதிப்படைவது என்பது சுய ஜாதகத்தில் முதல் வீடு மறைவு ஸ்தானமான 6,8,12ம் பாவகங்களுடன் தொடர்பு பெறுவது ( லக்கினாதிபதி 6,8,12ல் மறைவது என்பதல்ல ) ஜாதகர் சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து இன்னல்களை தரும், மேலும் லக்கினம் எனும் முதல் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது என்பது சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையை கணிக்க இயலாத கடுமையான பாதிப்பை தரும் ( சர லக்கினத்திற்கு 11ம் வீடும், ஸ்திர லக்கினத்திற்க்கு 9ம் வீடும், உபய லக்கினத்திற்க்கு 7ம் வீடும் பாதக ஸ்தானமாகும் ) ஒருவரது ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்களுடன் சம்பந்தம் பெரும் லக்கினம் மிகவும் பாதிப்பிற்க்கு ஆளாகி, ஜாதகரின் வாழ்க்கையை வெகுவாக பாதிக்கும்.

லக்கினம் சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது :

ஜாதகரின் உடல் நிலை மற்றும் மனநிலை வெகுவாக பாதிக்கும், நோய் எதிர்ப்பு தன்மை குறையும், ஜாதகரின் சிந்தனை மற்றும் செயல்பாடுகள் ஜாதகருக்கே எதிராக திரும்பும், வளரும் காலத்தில் பல எதிர்ப்புகளுக்கு இடையில் ஜாதகர் போராடி முன்னுக்குவரும் நிலையை தரும் அல்லது முன்னேற்றம் அற்ற நிலையில் தோல்வியை தரும், ஜாதகருக்கு அதிக அளவிலான எதிரிகளும், எதிர்ப்புகளும் தொடர்ந்து வரும் இதை சமாளிக்கும் வல்லமையும் ஜாதகருக்கு மிக குறைவாகவே அமைந்து இருக்கும், அடிக்கடி உடல் நலம் பாதிப்படையும், குறுகிய காலத்தில் மருத்துவ செலவினங்களை சந்திக்கும் நிலையை தரும், எதிரியின் பலமே உயர்ந்து நிற்கும், எதிர்மறையான எண்ணங்கள் ஜாதகரின் உடல் மனம் இரண்டையும் கடுமையாக பாதிக்கும், இதுவே ஜாதகரின் முன்னேற்றத்தை வெகுவாக பாதிக்கும், சில நேரங்களில் எதிரியின் மிரட்டலுக்கு பயந்து போகும் நிலையை  தரும், அதிக பொறுப்புகளை சுமக்கும் வல்லமையற்றவராக திகழ்வார்கள், சிறு உடல் தொந்தரவுக்கே அதிக மனபயம் கொண்டு தானும் பாதித்து தன்னை சார்ந்தவர்களையும் படுத்தி எடுக்கும் தன்மையை பெற்றவர்கள் என்பதால் இவர்களை மற்றவர்கள் கையாள அதிகம் சிரமப்படுவார்கள், மேற்கண்ட அமைப்பில் உள்ள வாழ்க்கை துணையை பெற்ற அன்பர்களின் பாடுதான் ரொம்ப சிரமம்.

லக்கினம் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது :

ஜாதகருக்கு வரும் எதிர்பாராத இழப்புகள் தாங்க இயலாவண்ணம் இருக்கும், தான் செய்யும் செய்கைகள் தனக்கு இன்னல்களை தரும் என்று நன்கு தெரிந்து இருந்தும் அசட்டு தைரியத்துடன் அதில் ஈடுபட்டு இழப்புகளை சந்திப்பார்கள், விபத்து, வீண் விரையம் போன்றவற்றை ஜாதகர் தவிர்க்க இயலாது, சில நேரங்களில்  இவர்கள் எடுக்கும் முடிவுகள் பலரது வாழ்க்கையையும் பாழ்படுத்திவிடும், குறிப்பாக வாழ்க்கை துணைக்கு தாங்க இயலாத இன்னல்களை தருவார்கள், நண்பர்கள் அனைவரும் இவர்களால் அதிகம் பாதிக்கப்படுவார்கள், சுய சிந்தனை என்பது ஜாதகருக்கு இழப்புகளையே  ஏற்படுத்தும், மனம் குறுக்கியவட்டத்தில் இருந்து வெளிவர மறுக்கும், தவறான திட்டமிடுதல்கள் மூலம் கடுமையான இழப்புகளை ஜாதகரும் சந்தித்து, ஜாதகரால் மற்றவர்களும் சந்திக்கும் சூழ்நிலையை உருவாக்கும், பெரும்பாலும் ஜாதகரின் சிந்தனை எதிர்மறையான எண்ணங்களால் சூழப்பட்ட மனநிலையில் அதிக போராட்டங்களை சந்திக்கும் நிலையை தரும், ஜாதகர் பலமுறை முயற்சித்தே சிறு வெற்றிகளை பெறவேண்டியிருக்கும், தீவிரமான எண்ணங்கள் ஜாதகரின் வாழ்க்கையை பல சிக்கல்களுக்கும் சிரமங்களுக்கு வித்திடும், கிணற்றுத்தவளையாய் வாழ்க்கையில் விழிப்புணர்வு அற்று தனது வாழ்க்கையை தானே பாதிப்பிற்கு ஆளாக்கும் தன்மையை தரும்.

லக்கினம் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது :

ஜாதகரின் மனநிம்மதி கெடும், நல்ல உறக்கம் இன்றி பரிதவிக்கும் நிலையை தரும், ஜாதகர் தீட்டும் பெரிய அளவிலான திட்டங்கள் இறுதியில் முழு தோல்வியை  தரும், ஆண் பெண் உறவுகள் வழியிலான பேரிழப்புக்களை அதிக அளவில்  சந்திக்கும் நிலையை தரும், தனக்கு உகந்த துணையை சரியாக தேர்வு செய்யாமல் அதன் வழியில் இருந்து வரும் இன்னல்களை சந்தித்து நிம்மதி இல்லாமல் வாழ்க்கையில் போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டி வரும், ஆன்மீகத்தில் நாட்டம் இன்றி நாத்திக செயல்பாட்டினை தரும், தெளிவில்லாத சிந்தனை ஜாதகரின் மனநிம்மதியை பறிக்கும், முதலீடு செய்வதால் பேரிழப்புகளை சந்திக்கும் நிலையை தரும், அதிக அளவில் மனநோய் சார்ந்த தொந்தரவுகளால் பாதிப்படையும் நிலையை தரும், மற்றவர்களால் தானும், தன்னால் மற்றவர்களும் நிம்மதியற்று மனோ ரீதியாக  போராட்டங்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும், கற்பனையே  வாழ்க்கை என்று எண்ணிக்கொண்டு தனது வாழ்க்கையை தானே கெடுத்துக்கொண்டு  இன்னலுறும் தன்மையை தரும், திரை துறை சார்ந்த விஷயங்களில் வீண் கற்பனை செய்துகொண்டு வாழ்க்கையை கெடுத்துக்கொள்பவர்கள் அதிக அளவில் மேற்கண்ட அமைப்பை பெற்றவர்களே, சுய அறிவு சொல்வதை கருத்தில் கொள்ளாமல் தனது மனம்போன போக்கில் தனது வாழ்க்கையை வாழ்ந்து, யாதொரு பிரயோசனம் இன்றி ஜீவிக்கும் தன்மையை தரும், சில நபர்கள் தாங்க இயலாத மனஅழுத்தத்தின் காரணமாக தற்கொலை முயற்சி செய்யும் நிலைக்கு தள்ளப்படுவதும் உண்டு, 12ம் பாவகம் நீர் தத்துவ ராசி எனில் ஜாதகரின் நிலை மிகவும்  பரிதாபத்திற்க்கு உரியதாக மாறிவிடும்.

லக்கினம் பாதக ஸ்தான தொடர்பை பெறுவது ( சரலக்கினம் )

அடிப்படையில் தன்னம்பிக்கையே ஜாதகருக்கு இருக்காது, செய்யும் காரியங்கள் யாவும் பிற்போக்கு தனமாகவும், மூட பழக்க வழக்கங்களை ஆதரிக்கும் தன்மை கொண்டதாகவும் இருக்கும், மிக மிக பழமைவாதிகளாக தனது வாழ்க்கையை சுருக்கிக்கொண்டு போராட்டத்தை மட்டுமே ஆயுதமாக கொண்டு வாழ்க்கையில் இன்னலுறுவார்கள், இவர்களால் மற்றவர்களுக்கு சிறிதும் நன்மை உண்டாகாது என்பதுடன், தனது வாழ்க்கையையும் தானே கெடுத்துக்கொள்வார்கள், அனைத்திற்கும் எதிர்ப்புவாதமே சரியானது என்று பிடிவாதம் செய்ப்பவர்கள், தேக ஆரோக்கியம் மற்றும் அறிவார்ந்த செயல்களில் ஈடுபாடு காட்டாமல், மற்றவர்கள் செய்வதை தானும் செய்து மிகப்பெரிய தோல்விகளை சந்திப்பார்கள், பொறுப்பற்ற தன்மை அதிகம் காணப்படும், அதிர்ஷ்டத்தின் தாக்கம் சிறிதும் இருக்காது, பகுத்தறிந்து செயல்படும் தன்மை இன்றி வேதனையை விலைகொடுத்து வாங்கிக்கொள்வார்கள், மற்றவர்களால் செய்யமுடியும் காரியத்தையும் தனது செய்கையின் மூலம் பாதிப்படைய செய்வார்கள், மற்றவர்களை முன்னிறுத்தி அதன் பின்னால் தனது ஜீவனத்தை மேற்கொள்வார்கள், எதிர்ப்புகள் எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கும், மற்றவர்களை சார்ந்து வாழும் சூழ்நிலையை தந்துவிடும், தெய்வீக அனுக்கிரகம் சிறிதும் இருக்காது, இவருடன்  சார்ந்தவர்கள் சுய ஜாதகம் வலிமை பெறவில்லை எனில், அவர்களின்  கதி அதோ கதிதான், சர லக்கினத்திற்க்கு அடிப்படையே வேகம்தான் ஆனால் இவர்களின் செயல்திறன் சிறிதும் அதற்க்கு பொருந்தவண்ணம் இருக்கும், சுய கட்டுப்பாடு, மனவலிமை, உடல் வலிமை, அறிவின் திறன் போன்றவை ஜாதகரின் வாழ்க்கையை விட்டே விலகி சென்றுவிடும்.

லக்கினம் பாதக ஸ்தான தொடர்பை பெறுவது ( ஸ்திர லக்கினம் )

 ஜாதகருக்கு சமூகத்தில் நற்பெயர் கிடைப்பது அரிது, பலரது கண்டிப்புக்கு ஆளாகும்  சூழ்நிலையை தரும், அறிவுத்திறன் என்பது ஜாதகருக்கு எதிர்மறையாக வேலை செய்யும், தொடர்ந்து பாதிப்புகளை தரும் விஷயங்களில் ஈடுபட்டு தனது வாழ்க்கையை தானே கெடுத்துக்கொள்வார்கள், குறிப்பாக தனது உடலுக்கும் மனதுக்கும் ஒவ்வாத காரியங்களில் ஈடுபட்டு இன்னலுறும் தன்மையை தரும், முதியவர்கள், ஆன்மீக பெரியோர்களின் நிந்தனைக்கு ஆளாகும் சூழ்நிலையை தரும், யாதொரு அறிவுரையும் ஜாதகருக்கு பலன்தராது, தானே அறிவாளி என்ற எண்ணத்தை மனதில் நிலை நிறுத்தி நல்லோர்களின் சாபத்திற்கு  ஆளாகும் சூழ்நிலையை தரும், கற்ற கல்வி பலன்தராது, மிக உயர்ந்த இடத்தில் இருந்த போதிலும் செயல்பாடுகள் அதற்க்கு ஈடானதாக இருக்காது, எந்த காரியத்திலும் வெற்றி பெற ஜாதகர் கடுமையாக போராடவேண்டிவரும், தீயபழக்க வழக்கங்கள் ஜாதகருக்கு மிக எளிதில் சுவீகரிக்கபடும், அதில் இருந்து விடுபட ஜாதகர் மரண போராட்டம் நடத்த வேண்டியிருக்கும், செய்யக்கூடாத காரியங்களை செய்துவிட்டு அதன் வழியில் இருந்து வரும் இன்னல்களை ஜாதகர் எதிர்கொள்ள இயலாமல் தவிப்பர், இறையருள் ஆசிர்வாதமும் பித்ரு ஆசிர்வாதமும் ஜாதகருக்கு சிறிதும் இன்றி வாழ்க்கையில் போராட்டத்தை எதிர்கொள்ளும் சூழ்நிலைய தரும், உண்மையான ஆன்மீகத்தை நாடாமல் போலி வேசதாரிகளை நம்பி தமது  வாழ்க்கையை தாமே கெடுத்துகொல்வர்கள், அறிவில் விழிப்பு நிலை ஏற்ப்படாது , அறிவார்ந்த பெரியோர்கள் சொல்லும் அறிவுரையும் ஜாதகருக்கு பலன் தாராது, சில நேரங்களில் இவர்களின் செய்கைகள் என்பது விட்டில் பூச்சிகளுக்கு நிகராக அமைந்திருக்கும், தான் செய்யும் செயல்கள் யாவும் சரியென்று வீண் வாதம் செய்து, தவறான சேர்க்கையின் மூலம் தனது  வாழ்க்கை தானே பாதிப்பிற்கு ஆளாக்கி இன்னலுருவார்கள்.

லக்கினம் பாதக ஸ்தான தொடர்பை பெறுவது ( உபய லக்கினம் )

ஜாதகரின் சேர்க்கையும், வெளிவட்டார பழக்க வழக்கமும், எதிர்ப்பால் இன சேர்க்கையும் ஜாதகரின் வாழ்க்கையை முழு அளவில் பாதிப்பிற்கு ஆளாக்கும் , மற்றவர்கள் சொல்வதை கேட்டுக்கொண்டு சுய சிந்தனை இன்றி செய்யும் ஒவ்வொரு  காரியங்களிலும்  மிகப்பெரிய தோல்விகளை சந்திப்பார்கள், சுய ஆளுமை இன்றி வாழ்க்கையில் தொடர்ந்து இன்னல்களை அனுபவிக்கும் நிலையை தரும், பெரும்பாலும் தனது வாழ்க்கை துணை, நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் மூலம் வாழ்க்கையை போராட்ட களமாக மாற்றி அவதியுறும் தன்மையை தரும், மேலும் மேற்கண்ட நபர்களால் சிறிதும் நன்மையை பெற இயலாத அன்பர்கள் என்றால் அது மிகையில்லை, தனிப்பட்ட முறையில் சுய முன்னேற்றம் பெரும் யோகம் அற்றவர்கள், தனது வாழ்க்கை துணை, நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளை சரியாக தேர்வு செய்யும் வல்லமை அற்றவர்கள் என்பதுடன், பிரபல்ய யோகம் பெற தகுதியற்றவர்கள், பாதக ஸ்தானம் நீர் ராசிஎனில் சம்பந்தப்பட்ட ஜாதகர் எதிர்ப்பால் இன அமைப்பினரால் ஏமாற்றப்பட்டு, மன நோயாளியாக அவதியுற நேரும், குறிப்பாக அதிக அளவிலான குடி நோயாளிகள் அனைவரும் சுய ஜாதகத்தில் நீர் தத்துவ ராசி பதிக்கப்பட்ட நிலையில்  இருப்பதை கவனிக்க முடிகிறது.


குறிப்பு :

சுய ஜாதகத்தில் லக்கினம் எனும் முதல் வீடு எக்காரணத்தை கொண்டும் பாதக ஸ்தான தொடர்பை பெற கூடாது, அப்படியே பெற்று இருந்தாலும் நடைபெறும் எதிவரும் திசாபுத்திகள் பாதக ஸ்தான தொடர்பை பெற்ற இலக்கின பாவக பலனை  ஏற்று நடத்தாமல் இருப்பதே ஜாதகருக்கு நன்மையை தரும், ஒருவேளை பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்ற இலக்கின பாவக பலனை தற்பொழுது எதிர்வரும் திசாபுத்திகள் ஏற்று நடத்தினால் ஜாதகரின் வாழ்க்கை அனலில் இட்ட மெழுகு போல் உருக வேண்டியிருக்கும், மேலும் சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் எந்த ஒரு பாவகமும் பாதக ஸ்தான தொடர்பை பெறுவது ஒருவரின் வாழ்க்கையில் சிறப்புகளை தருவதில்லை, சுய ஜாதகத்தில் லக்கினம் தொடர்பு பெரும் பாவக நிலையை கருத்தில் கொண்டு வாழ்க்கையில் நலம் பெறுவதே ஒவ்வொருவருக்கும் சுபயோகங்களை வாரி  வழங்கும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வியாழன், 27 ஏப்ரல், 2017

சனி பெயர்ச்சி பலன்கள் ( 2017 - 2020 ) லக்கினம் மகரம் !



சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் என்று வர்ணிக்கப்படும், இலக்கின பாவகாத்திற்க்கே முதல் உரிமை உண்டு, மேலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதகத்திற்கு பலன் காணும் பொழுது துல்லியமான பலாபலன்களை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக தெளிவாக கூற இயலும், எனவே நவ கிரகங்களின் பெயர்ச்சியை சுய ஜாதக  பாவக வலிமையின் அடிப்படையில் கணிதம் செய்து பார்க்கும் பொழுது சம்பந்தம் பட்ட ஜாதகருக்கு நவ கிரகங்களின் பெயர்ச்சியினால் வரும் நன்மை தீமை பலாபலன்களை பற்றி துல்லியமாக கணிதம் செய்ய இயலும், ( 2017 முதல் 2020 வரை )  கால புருஷ தத்துவத்திற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான்,  தனது சஞ்சார நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு தரும் யோக அவயோக நிகழ்வுகளை பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்  அன்பர்களே!

தனுசு :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பத்தாம் ராசியான மகர ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, இனிவரும் இரண்டரை வருடம் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்தில் சனி பகவான் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார், சஞ்சாரம் செய்யும் இரண்டறை வருட காலத்திற்கு சஞ்சார நிலையில் இருந்தும், 6,7,10 என்ற திருஷ்டி நிலையில் இருந்தும், மகர லக்கின அன்பர்களுக்கு கோட்சார ரீதியாக வழங்கும் பலாபலன்களை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், தர்மம் ஒற்றை காலில் நின்று, கால்பங்கு பரிபாலனம் செய்யும் கலியுகத்தில், தான் மட்டும் முழு அளவிலான தர்மத்தை உறுதியுடன் போற்றி நடக்கும் மகர லக்கின அன்பர்களுக்கு, இதுவரை லாப ஸ்தானத்தில் நின்று சுபயோகங்களை வாரி வழங்கிய சனி பகவான், விரைய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் காலம் சற்று  இன்னல்களை மகர லக்கின அன்பர்களுக்கு தர கூடும், குறிப்பாக மனநிம்மதி இழப்பு, குழப்பம், தெளிவற்ற சிந்தனை, கல்வியில் தடை, முதலீடுகளில் திடீர் இழப்பு, நல்ல உறக்கமின்மை, பெரியோர் ஆதரவு இன்மை, தெய்வீக அனுக்கிரகம் இன்மை, செய்யும் காரியங்களில் தடையை, அவசர கதியில் செய்யும் காரியங்கள் பெரும் தோல்வியையும், நஷ்டத்தையும் தர கூடும், இருப்பினும் தங்களின் நம்பிக்கையும், கடின உழைப்பும் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்து தரும், முடிந்த அளவு தங்களின் குடும்பத்தில் உள்ள  பெரிய மனிதர்களின் ஆதரவை பெற்று அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறுங்கள், வரும் எதிர்ப்புகள் யாவும் ஆதவனை கண்ட பனிபோல் விலகிவிடும், மேலும் எதிர்ப்பால் அமைப்பினரிடம் சற்று எச்சரிக்கையாக இருப்பது நலம் தரும், தங்களின் நேர்மையான நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிப்பார்கள், மேலும் தேவையற்ற அவப்பெயரை தங்களுக்கு ஏற்படுத்த கூடும் என்பதால் அதிக கவனம் தேவை, தொழில் ரீதியாக அதிக முதலீடுகளை  தவிர்ப்பது நலம் தரும் மேலும் முதலீடுகளை மிக சிறப்பாக கையாள வேண்டும் இல்லை எனில் மிகுந்த பேரிழப்பை தாங்கள் சந்திக்கும் சூழ்நிலையை உருவாக்கி விடும், மற்றவர் விஷயங்களில் தாங்கள் தலையீடு செய்வது தங்களின் எதிர்கால வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும், புலன் இன்பங்களில் நாட்டத்தை தவிர்த்து, சுய கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டிய நேரமிது, சனிபகவானின் விரைய ஸ்தான சஞ்சாரம் தங்களின் மன நிம்மதியை சற்று அசைத்து பார்க்கும்.

5ம் பாவகத்தை தனது 6ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் மகர லக்கின அன்பர்களுக்கு புத்திரர் சார்ந்த சில சிரமங்களை தரக்கூடும், தனது பூர்வீகத்தில் இருந்து வேறு இடம் பெயர்ந்து, ஜீவனம் செய்யும் சூழ்நிலையை தரும், குலதெய்வ ஆசியை பெற ஜாதகர் கடின முயற்சியை மேற்கொள்ளவேண்டிய சூழ்நிலை தரும், உதவி செய்ய யாரும் அற்ற  நிலையையும், தனியாக போராட வேண்டிய நிலையை தரக்கூடும், எதிர்ப்புகளை சமாளிக்க தாங்கள் சற்று கடுமையாக போராட வேண்டிவரும், சுபகாரிய செலவினங்கள் அதிகரிக்கும், அறிவு திறனும், செயல்படும் வேகமும் வெகுவாக குறையும், சட்ட சிக்கல்கள் மூலம் பணவிரயம், செய்யும் காரியங்களில் போராட்டம் என்ற நிலையில் இன்னல்களை தரக்கூடும், சுய சிந்தனை மற்றும் அறிவு திறன் சரியான நேரத்தில் தங்களுக்கு பலன் தாராது, மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டு நலம் பெற வேண்டிய நேரமிது, சனியின் சத்ரு ஸ்தான பார்வை, தங்களின் பூர்வ புண்ணிய ஸ்தானத்தை கடுமையாக பாதிக்கும், வருமானம் மற்றும் புத்திசாலித்தனம் மட்டுப்படும்.

6ம் பாவகத்தை தனது 7ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் மகர லக்கின அன்பர்களுக்கு குறுகியகால வெற்றிகளை தங்கு தடையினின்றி தருவார், கடன் பெறுவது கொடுப்பது தங்களின் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றங்களை நல்கும், எதிரிகள் தரும் இன்னல்கள் தங்களுக்கு சாதகமான வெற்றிகளை வாரி வழங்கும், பயணங்கள் மூலம் நல்ல லாபமும் அதிர்ஷ்டமும் உண்டாகும், வேலையாட்கள், தொழிலாளர்கள் மூலம் தங்களின் முன்னேற்றம் சிறப்பாக  அமையும், சுய தொழில் புரிவோருக்கு ஏற்றமிகு பொருளாதார வசதிவாய்ப்புகளை வாரி வழங்கும், உடல் நலம் மனநலம் சிறப்பாக அமையும், கூட்டு வியாபாரத்தில் லாபமும் அதிர்ஷ்டமும் உண்டாகும், எதிரிகள் தங்களின்  வாழ்க்கையில் இருந்து ஒதுங்கிவிடும் சூழ்நிலையை தரும், பொது வாழக்கையில் உள்ளோருக்கு மிக சிறப்பான நேரமிது, திடீர் மக்கள் செல்வாக்கு, அரசு பதவி, தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகள்  வந்து சேரும், எதிர்காலத்திற்கான பொருளாதார உதவிகள் தங்களை தேடி வரும், மற்றவர்கள் தனம் தங்களின் முன்னேற்றத்திற்கு பெரும் உதவிகளை வாரி வழங்கும், சனிபகவானின் 7ம் பார்வை தங்களுக்கு சத்ரு ஸ்தான  வழியில் இருந்து சகல சௌபாக்கியங்களையும் தரும். 

9ம் பாவகத்தை தனது 10ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் மகர லக்கின அன்பர்களுக்கு சற்று சிரமங்களை அதிக அளவில் தரக்கூடும், குறிப்பாக மற்றவர்கள் விஷயங்களில் ஆர்வம் செலுத்தினால் தங்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிடும், சந்தேகங்கள் மற்றும் நம்பிக்கை இன்மை தங்களின் வாழ்க்கையை பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்த கூடும், பெரியோர் வார்த்தைகளை மதிக்காமல் செய்யும் காரியங்கள் எதிர்பாராத சிரமங்களை தங்களுக்கு தரக்கூடும், நிலையான மனம், திட சிந்தனை தங்களுக்கு இல்லை எனில் தங்களின் வாழ்க்கை பாதை மாறிவிடும், எதிர்பாராத இன்னல்களை தாங்கள் பெரிய அளவில் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், குறிப்பாக தங்களின் பெயர் பாதிக்கப்படாமல் பார்த்து கொள்வது  தங்களின் எதிர்கால வாழ்க்கையை சிறப்பிக்கும், வரும் இன்னல்களை கருத்தில் கொள்ளாமல், முழு வீச்சில் காரியமாற்றுவது தற்போதுள்ள சூழ்நிலையை மாற்றி தங்களின்  வாழ்க்கையில், சுபயோகங்களை நல்கும், எதிர்காலம் தங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை வாரி வழங்கும், சனி பகவானின் 10ம் பார்வை தங்களுக்கு பாக்கிய ஸ்தான வழியில் இருந்து அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதால், அதிக கவனம் தேவை, சரியான திட்டமிடுதல்கள் தங்களின் வாழ்க்கையை மிக நேர்த்தியாக சுபயோகங்களை  வாரி வழங்கும்.

குறிப்பு :

மகர லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 12,5,6,9ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள்  12,5,6,9ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் மகர லக்கின அன்பர்களுக்கு மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

சனி பகவான் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் காலங்கள் :

( 26/01/2017 முதல் 21/06/2017 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும்.

( 21/06/2017 முதல் 26.10.2017 ) வரை
சனி பகவான் மீண்டும் வக்கிரக கதியில் விருச்சிக ராசியிலும்.

( 26/10.2017 முதல் 24/01/2020 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும் சஞ்சாரம் செய்கின்றார்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

செவ்வாய், 25 ஏப்ரல், 2017

சுய ஜாதகம் என்றால் என்ன ? சுய ஜாதகத்தால் நமக்கு என்ன பயன் ? ( பாவக வலிமை )


 சுய ஜாதகம் என்பது அவரவர் பிறந்த தேதி, நேரம் மற்றும் இடம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, துல்லியமாக கணிதம் செய்யப்படுவதாகும், இந்த குறிப்புகள் ஓர் ஜாதகரின் லக்கினம், ராசி, நட்ஷத்திரம் மற்றும் ஜாதகரின் ஜெனன கால திசா புத்திகள் பற்றிய விபரங்களை நாம் துல்லியமாக தெரிந்துகொள்ள உதவும், சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை ஓர் ஜாதகரின் வாழ்க்கையில் ஏற்படும் நன்மை தீமை மற்றும் யோக அவயோக நிகழ்வுகளை நிர்ணயம் செய்கிறது என்றால் அது மிகையில்லை, ஒரு ஜாதகரை பற்றிய முழு விபரம் அறிய அவரது சுய ஜாதகத்தில் உள்ள பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலையை கருத்தில் கொண்டும், நடைபெறும், எதிர்வரும் திசா புத்திகள் ஏற்று நடத்தும் பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் மிக எளிதாக நிர்ணயம் செய்து விடலாம், அவரின் வாழ்க்கையில் நடைபெற்ற, நடைபெறுகின்ற, நடைபெற இருக்கின்ற பலாபலன்களை மிக தெளிவாகவும், துல்லியமாகவும் நாம் உணர்ந்து தெளிவாக அவர்களுக்கு கூறிவிட முடியும்.

சுய ஜாதகத்தில் 1,3,11ம் வீடுகள் ஜாதகரின் ஆரயோக்கியம், மனநிலை, புகழ், கீர்த்தி, செயல்பாடுகள், தன்னம்பிக்கை, இயக்க நிலை என்ற வகையிலும், சுய முயற்சி, வீரியம், வேகம், செயல் திறன், வெற்றி, பொறுப்பு, முன்னேற்றம், சுய சிந்தனை திறன், ஜாதகரின் தைரியம், விளையாட்டில் ஆர்வம், வீரம் மிக்க கலைகளில் தேர்ச்சி, சாகச விரும்பி, அறிய சாதனைகளை படைக்கும் வல்லமை, எதிர்ப்புகளை வெற்றி கொள்ளும் யோகம்  என்ற வகையிலும், லாபம் அதிர்ஷ்டம், முற்போக்கு சிந்தனை, நேர்மை எண்ணங்கள், கருத்து ஒற்றுமை, யோகங்களை பரிபூர்ணமாக பெரும் அமைப்பு, மிதம்மிஞ்சிய நம்பிக்கை, உறுதி மிக்க செயல் பாடுகள், நீடித்த அதிர்ஷ்டம், சிறப்பு மிக்க குணாதிசயம், எதிர்ப்புகளை வெல்லும் வல்லமை என்ற வாகையிலும் சிறப்பு பலன்களை  தரும், சுய ஜாதகத்தில் 1,3,11ம் வீடுகள் வலிமை பெறுவது ஜாதகரின் சுய முன்னேற்றத்தை நிலை நிறுத்தும்.

சுய ஜாதகத்தில் 5,9ம் வீடுகள் ஜாதகரின் பாரம்பரியம் சார்ந்த அறிவு திறன், சமயோசித புத்திசாலித்தனம், நுண்ணறிவு, அதிபுத்திசாலித்தனம், தனது பாரம்பரியம் சார்ந்து ஜாதகர் அனுபவிக்கும் யோகம், கலைகளில் தேர்ச்சி மற்றும் ஆர்வம், கல்வியில் தேர்ச்சி மற்றும் முதன்மை நிலையை பெறுதல், ஜாதகருக்கு வரும் இன்னல்களை முன்கூட்டியே தெரிவிக்கும் குலதெய்வ ஆசி, அறிவு சார்ந்த வழியிலான உழைப்பு திறன், தெய்வீக அனுக்கிரகம், உதவிகள் தேடிவரும் வாய்ப்பு, சூழ்நிலையை மிக எளிதாக சமாளிக்கும் வல்லமை என்ற வகையிலும், அறிவார்ந்த பெரியோர்களின் ஆசி, பித்ருக்கள் ஆசி, தெய்வீக அனுக்கிரகம், நல்ல கல்வி, கற்ற கல்வி வழியிலான யோக வாழ்க்கை, ஆய்வு சார்ந்த வெற்றிகள், மற்றவர்கள் வாழ்க்கையில் சுப மாற்றங்களை தரும் அமைப்பு, தனது பாரம்பரிய ஜீவனத்தை காக்கும் வல்லமை, பழமையை மறவாத குணம், நல்ல குரு, நல்ல ஆசான் அமையும் யோகம், சூழ்நிலை மாறினாலும் தன்னிலை மாறாமல் திகழும் வல்லமை, சுய ஒழுக்கம், கட்டுப்பாடு, தெய்வீக அனுக்கிரகத்தால் தானும் பலன் பெற்று மற்றவருக்கும் பலன்பெறுமாறு வாழும் யோக வாழ்க்கை என்ற வகையில் சிறப்பு பலன்களை தரும், சுய ஜாதகத்தில் 5,9ம் வீடுகள் வலிமை பெறுவது  ஜாதகரின் அறிவார்ந்த செயல்களை நிலை நிறுத்தும்.

சுய ஜாதகத்தில் 2,4,7,10ம் வீடுகள் ஜாதகரின் வருமானம், குடும்ப வாழ்க்கை, வாக்கு வன்மை, பேச்சு திறன், சம்பாதிக்கும் ஆற்றல், நிதி நிலை, தன்னுடைய வருமானத்தை சேமிக்கும் வல்லமை, சரியான திட்டமிடுதல், மக்களை தன்வசப்படுத்தல், அனைத்திலும் லாபம் பார்க்கும் வல்லமை, குடும்ப வாழ்க்கையை திறம்பட நடத்தும் யோகம், திறமையான வாதம், அதன் வழியில் பெரும் வருமானம் என்றவகையிலும், சொத்து சுகம், வண்டி வாகனம், நிலம் இடம் வீடு சார்ந்த சேர்க்கைகள், ஜாதகரின் குணம், ஜாதகரின் பொருளாதார நிலவரம், கையிருப்பு, நகை, ஆபரணம், அணியும் ஆடைகள் தரம், தோற்ற பொலிவு, எண்ணத்தின் வலிமை, சுக போகங்களை சுவீகரிக்கும் வல்லமை, தேடும் பொருள் சேரும் யோகம் என்ற வகையிலும், திருமணம்,  திருமணத்தால் ஜாதகர் பெரும் யோக வாழ்க்கை, வாழ்க்கை துணையின் ஆதரவு, நண்பர்கள் ஆதரவு, கூட்டாளிகளின் ஆதரவு, சக்தி மிக்க கூட்டாளி, மேற்கொண்டவர்கள் வழியிலான உதவிகள் மற்றும் முன்னேற்றம், பொதுமக்கள் ஆதரவு மற்றும் வசீகரம், அவர்கள் வழியிலான முன்னேற்றம் மற்றும் பதவி யோகம், வெளிநாடுகள் மற்றும் வெளியூர் சார்ந்த முன்னேற்றம் மற்றும் பணவரவு, சிறந்த வியாபார யோகம் என்ற வகையிலும், சிறப்பு மிக்க ஜீவன முன்னேற்றம், நிர்வாக திறன், பதவி யோகம், செய்யும் தொழிலை விரும்பி செய்யும் அமைப்பு, அதன் வழியிலான முன்னேற்றம், பதவி உயர்வு, சிறந்த ஜீவன வாழ்க்கை முறை, கவுரவம் அந்தஸ்து குறையாத யோக வாழ்க்கை, தனது ஜீவன வழியிலான நிரந்தர முன்னேற்றம், அரசு பதவி, அரசு உதவி, தனிப்பட்ட வியாபர திறமைகள், ஜீவன வழியிலான முன்னேற்றங்கள் என்ற  வகையில் யோகங்களை தரும், சுய ஜாதகத்தில் 2,4,7,10 ம் வீடுகள் வலிமை பெறுவது ஜாதகரின் பொருளாதர முன்னேற்றத்தை நிலை நிறுத்தும்.

சுய ஜாதகத்தில் 6,8,12ம் வீடுகள் ஜாதகரின் உடல் ஆரோக்கியம், குறுகிய கால தனவரவு, கடன் அதனால் பெரும் வருமானம், எதிரிகள் வழியிலான நன்மைகள், எதிர்ப்பவர் வழியிலான நன்மைகள், கடன் பெறுவது, கொடுப்பது மூலம் ஜாதகர் பெரும் யோக வாழ்க்கை, கல்வி கேள்விகளில் தேர்ச்சி, போட்டி பந்தயங்களில் வெற்றி, வழக்குகளில் வெற்றி, நீதியை பெரும் யோகம், சிறு சிறு ஆதாயங்களை அடிக்கடி பெரும் யோகம், விரைவாக குணம் பெரும் அமைப்பு, நோய் எதிர்ப்பு திறன், சத்ரு வழியிலான பெரும் முன்னேற்றம் என்ற வகையிலும், திடீர் அதிர்ஷ்டம், வாழ்க்கை துணை, நண்பர்கள், கூட்டாளிகள் மாற்றும் பொதுமக்கள் வழியிலான தன சேர்க்கை, புதைபொருள் பொருள் யோகம் மண்ணிற்கு அடியில் உள்ள பொருட்கள் வழியிலான திடீர் தன சேர்க்கை, மனதிற்கும் அறிவுக்கும்  எட்டாத விஷயங்கள் வழியிலான தனசேர்க்கை மற்றவர்கள் செல்வத்தை ஆளுமை செய்யும் யோகம், நீண்ட ஆயுள், திடீர் என செல்வந்தன் ஆகும் யோகம்,  மருத்துவம் மற்றும் மருத்துவ துறை  சார்ந்த யோக வாழ்க்கை, ஆயுள் காப்பீடு மூலம் அதிர்ஷ்ட யோகம் என்ற வகையிலும், முதலீடுகள் அல்லது மூதாதையர் சொத்துக்கள் மூலம் பெரும் செல்வசேர்க்கையை அடையும் யோகம், மனநிம்மதியான வாழ்க்கை, வெளிநாடுகளில் இருந்து வரும் திடீர் ஆதாயம், தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சி, சுக போக வாழ்க்கையினை ராசிக்கும் யோகம், நல்ல உறக்கம், மனதில் எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றும் வல்லமை, கனவுகள் வழியிலான லாபங்கள், பெரிய சொத்துக்களை ஆளுமை செய்யும் யோகம், திடீரென வரும் பெரும் செல்வம் என்ற வகையில் நன்மைகளை தரும், 6,8,12ம் வீடுகள் வலிமை பெறுவது ஜாதகரின் அபரிவிதமான திடீர் செல்வசேர்க்கையை  நிலை நிறுத்தும்.

சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் வலிமை பெறுவதால் ஜாதகர் பெரும் யோகங்களை பற்றி இன்றைய சிந்தனைக்கு " ஜோதிடதீபம் " பதிவு செய்திருக்கிறது .

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

புதன், 5 ஏப்ரல், 2017

சனி பெயர்ச்சி பலன்கள் ( 2017 - 2020 ) லக்கினம் துலாம் !



சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் என்று வர்ணிக்கப்படும், இலக்கின பாவகாத்திற்க்கே முதல் உரிமை உண்டு, மேலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதகத்திற்கு பலன் காணும் பொழுது துல்லியமான பலாபலன்களை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக தெளிவாக கூற இயலும், எனவே நவ கிரகங்களின் பெயர்ச்சியை சுய ஜாதக  பாவக வலிமையின் அடிப்படையில் கணிதம் செய்து பார்க்கும் பொழுது சம்பந்தம் பட்ட ஜாதகருக்கு நவ கிரகங்களின் பெயர்ச்சியினால் வரும் நன்மை தீமை பலாபலன்களை பற்றி துல்லியமாக கணிதம் செய்ய இயலும், ( 2017 முதல் 2020 வரை )  கால புருஷ தத்துவத்திற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான்,  தனது சஞ்சார நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு தரும் யோக அவயோக நிகழ்வுகளை பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

துலாம் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஏழாம் ராசியான துலாம் ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, இந்த சனி பெயர்ச்சி, வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார், சஞ்சாரம் செய்யும் இரண்டறை வருட காலத்திற்கு சஞ்சார நிலையில் இருந்தும், 6,7,10 என்ற திருஷ்டி நிலையில் இருந்தும், துலாம் லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலன்களை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், பொதுமக்கள் செல்வாக்கு, சுய அறிவு திறன் கொண்டு தனது வாழ்க்கையில் அறிய பல சாதனைகளை செய்யும் அன்பர்களான துலாம் லக்கின அன்பர்களுக்கு இதுவரை லக்கினத்திற்கு 2ல் நின்று கடும் பொருளாதார நெருக்கடிகளை தந்து கொண்டு இருந்த சனி பகவான், தற்போழுது வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்வது துலா லக்கின அன்பர்களுக்கு, முன்னெடுக்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றிமேல் வெற்றியை வாரி வழங்குவார், சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்த்தில் உள்ள அன்பர்களின் ஆதரவும் உதவிகளும் தங்களை தேடிவரும், பொறுப்பு மிக்க பதவிகள் அரசு ஆதரவு, செல்வச்செழிப்பு, வசதி வாய்ப்புகள் என தங்களின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களும் வந்து சேரும் யோக நேரமாக இதை  கருதலாம், தங்களின் லட்சியங்கள் நிறைவேற சரியான சந்தர்ப்பங்களை இயற்க்கை தங்களுக்கு வாரி வழங்கும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் யோகம் உண்டாகும், இதுவரை இல்லாத பொருளாதார முன்னேற்றம் தங்களின் வாழ்க்கையில் சிறப்பு அந்தஸ்த்தை வாரி வழங்கும், ஜாதகரின் திட்டமிடுதல்களும், செயல்திறனும் மற்றவர்களை  மிரள செய்யக்கூடும், அதிரடியான சில நடவடிக்கைகள் தங்களை சார்ந்தவர்களை சிறிது பாதித்த பொழுதும் நெடுநாள் நன்மைகளை எதிர்காலத்தில் வாரி வழங்கும், தன்னம்பிக்கையும், தைரியமும் தங்களின் வாழ்க்கையில் அடுத்தகட்ட நகர்வுக்கு அழைத்து செல்லும், சுய தொழில் செய்வோர்க்கு பெரிய அளவிலான தொழில் விருத்தியும், பணியாற்றுவோருக்கு திடீர் உயர்பதவிகளும் தேடிவரும், சனிபகவானின் வீர்ய ஸ்தான  சஞ்சாரம்  வாழ்க்கையில் எதிர்பாராத வெற்றிகளை சரளமாக வாரி வழங்கும்.

   8ம் பாவகத்தை தனது 6ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் துலாம் லக்கின அன்பர்களுக்கு மிதமிஞ்சிய வருமான வாய்ப்புகளை வாரி வழங்குவார், கைநிறைவான வருமானம் தங்களுக்கு எப்பொழுதும் வந்துகொண்டே இருக்கும், புதையலுக்கு நிகரான வருமான வாய்ப்பை பெறுவதற்கு தங்களுக்கு திடீர் சந்தர்ப்பங்கள் ஏற்படும், குடும்ப வாழ்க்கையில் சந்தோசம், செய்யும் தொழில் வழியிலான வருமானம் அதிகரிப்பது, புதிய தொழில் ஆரம்பம் அதன் வழியிலான வருமானம், இனிமையான பேச்சு திறமை , திருமண தடைகள் நீங்குதல், நல்ல வாழ்க்கை துணை அவர் வழியிலான ஆதரவு, செல்வசேர்க்கை, மறைமுக வருமானம், சிறந்த உடல்  ஆரோக்கியம் , இதுவரை உடல் நலபாதிப்பு இருப்பின் சரியான மருத்துவம் மூலம் குணம் பெறுதல், இன்சூரன்ஜ் பங்கு வர்த்தகத்தில் லாபம், பொறுமையுடன் அனைத்தையும் கையாண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுதல், மருத்துவ துறையில் உள்ள அன்பர்களுக்கு எதிர்பாராத முன்னேற்றம், தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகளை  பெரும் யோகம், தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் சொத்து சுக  சேர்க்கை மற்றும் திடீர் அதிர்ஷ்டம், என சனிபகவானின் 6ம் பார்வை துலா லக்கின  அன்பர்களுக்கு பொருளாதார முன்னேற்றங்களை தடையின்றி தரும், சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் துலா லக்கின அன்பர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும்.

9ம் பாவகத்தை தனது  7ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் துலா லக்கின அன்பர்களுக்கு, எதிர்பாலின அன்பர்களால் சிறு சிறு அவப்பெயரை ஏற்படுத்த கூடும், மற்றவர்களுக்கு உதவ செல்வதுகூட தங்களுக்கு  பெரும் வினையாக மாறிவிடும், வீண் அவப்பெயர்களை சந்திக்கும் சூழ்நிலை வரும் என்பதால் அதிக கவனம் தேவை, தங்களது விஷயங்களில் யாரும் தலையீடு செய்வது  பெருவாரியான இன்னல்களை தரக்கூடும், தெய்வீக அனுக்கிரகம் கூட முறையான கோவில் வழிபாடுகளை மேற்கொள்வது  தங்களது இன்னல்களை வெகுவாக குறைக்கும், குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் வயதில் அதிகம் உள்ள அன்பர்களின் ஆலோசனை தங்களின் வாழ்க்கையில் சிறப்பான நன்மைகளை வாரிவழங்கும், கல்வியில் \நல்ல  முன்னேற்றம் உண்டாகும், மாணவ மாணவியருக்கு தேர்வில் வெற்றிகளை  வரி வழங்கும் , ஆன்மீக சுற்றுப்பயணம் சென்றுவரும் அதிர்ஷ்டம் உண்டு என்பதால், வாய்ப்புகளை முறையாக பயன்படுத்தி நலம் பெறுக, முறையான குலதெய்வ வழிபாடு மற்றும் அன்னதானம் தங்களின் வாழ்க்கையில் வரும் இன்னல்களை  வெகுவாக குறைக்கும்.

12ம் பாவகத்தை தனது  10ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் துலா லக்கின  அன்பர்களுக்கு முதலீடுகள் வழியிலான லாபங்களை பன்மடங்கு அதிகரிக்கும் பங்கு வர்த்தக லாபங்கள் எதிர்பார்த்த வகையில் அமையும், நல்ல அயன சயன சுகத்தையும், வெளிநாடுகள் பயணத்தையும் அதன் வழியிலான முன்னேற்றங்களை வாரி வழங்குவார், எதிர்ப்புகள் அனைத்தும் தங்களுக்கு வெகு சாதகமாக மாறும், மனநிம்மதி மற்றும்  திருப்திகரமான யோக வாழ்க்கையை தங்களுக்கு சனிபகவான் நிறைவாக வழங்குவார், இதுவரை  தடைபட்ட காரியங்கள் யாவும் நல்ல முறையில் நடைபெறு வெற்றிகளை தரும், தெய்வீக அனுபவம் மற்றும் ஆன்மீக தொடர்புகள் மூலம் சிறப்பான எதிர்காலம் அமையும், பெரும் முதலீடுகளை  செய்து தொழில் செய்யும் நல்லதொரு வாய்ப்புகள் தங்களுக்கு உண்டாகும், மனதில் அமைதியும்  சாந்தியும் கிட்டும், தெளிவான சிந்தனையும், நிம்மதியான வாழ்க்கையையும் சனிபகவான் தனது 10ம் பார்வையால் தங்களுக்கு இனிவரும் காலங்களில் வாரி வழங்குவர் .

குறிப்பு :

துலாம் லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 3,8,9,12ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள்  3,8,9,12  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் துலா லக்கின அன்பர்களுக்கு மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

சனி பகவான் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் காலங்கள் :

( 26/01/2017 முதல் 21/06/2017 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும்.

( 21/06/2017 முதல் 26.10.2017 ) வரை
சனி பகவான் மீண்டும் வக்கிரக கதியில் விருச்சிக ராசியிலும்.

( 26/10.2017 முதல் 24/01/2020 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும் சஞ்சாரம் செய்கின்றார்.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 25 மார்ச், 2017

சுய ஜாதகத்தில் உள்ள யோகம் அவயோகம், வலிமை மற்றும் வலிமை அற்ற தன்மை பற்றி தெளிவு பெற.....


இறை அருள் அனைவருக்கும் எப்பொழுதும் தனது அருள் கரங்களை கொண்டு, வேண்டும் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்க தயாராக இருப்பதை இறை அருள் நிரம்ப பெற்ற திருகோவில்களில், சிலை வடிவில் உள்ள இறைவனை காணும் பொழுது நாம் அனைவரும் உணர்வு பூர்வமாக உணர இயலும், "அவனின்றி ஓர் அணுவும் அசையாது" என்பதனை அனைவரும் உணர்வது அவசியமாகிறது, சுய ஜாதகத்தில் இறை அருளின் பரிபூர்ண கருணையை பெற அடித்தளமாக அமையும் பாவகங்கள், லக்கினம் எனும் முதல் பாவகம், பூர்வபுண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம், மற்றும் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் பாவகம் என்றால் அது மிகையில்லை.

சுய ஜாதகத்தில் லக்கினம், பூர்வபுண்ணியம் மற்றும் பாக்கிய ஸ்தானம் வலிமை பெற்று இருக்கும் ஜாதகர்களின் வாழ்க்கையில் இறை அருளின் கருணை சற்று அதிகம் என்றே சொல்லலாம், இவர்களுக்கு தடைகள் என்பது எதுவும் இல்லை என்ற நிலை வாழ்நாள் முழுவதும் நீடிக்கும், செய்யும் காரியங்கள் யாவிலும் சத்தியத்தை கடைபிடிக்கும் உத்தம நிலையை தருகிறது, சரியானதை லக்கினம் தேர்வு செய்கிறது, சிறப்பான நன்மைகளை பூர்வபுண்ணியம் வழங்குகிறது, நன்மைகள் வழியிலான பூர்ணகதியை பாக்கிய ஸ்தானம் நல்குகிறது, எனவே ஜாதகர் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் தேடி செல்லாமல், தம்மை தேடிவரும் வழியிலான செயல்களை செய்து சிறப்படைகிறார், எனவே சுய ஜாதகத்தில் மேற்கண்ட 1,5,9ம் பாவகங்கள் வலிமை பெறுவது, எந்த ஓர் சூழ்நிலையிலும் இறையருளின் கருணையினால் ஜாதகர் நிலையான சுபயோக வாழ்க்கையை பெறுகிறார்.

சுய ஜாதகத்தில் உள்ள வலிமை வலிமை அற்ற நிலையை, யோகம் அவயோகம், தனது சுய ஜாதக வலிமையின் அடிப்படையில் ஜாதகர் பெரும் நன்மை தீமை ஆகியவற்றை சம்பந்தப்பட்ட ஜாதகர் துல்லியமாக அறிந்துகொள்ளவே சுய ஜாதகத்தில் மேற்கண்ட 1,5,9ம் பாவகங்கள் வலிமை பெற்று இருப்பது அவசியமாகிறது, சுய ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் வலிமை பெரும் பொழுது சம்பந்தப்பட்ட ஜாதகர் தன்னிலை முழுவதும் உணர்ந்தவராக திகழ்வார், வீண் கற்பனையில் காலத்தை எதிர்கொள்ளாமல், தனது சுய வலிமையையும், தனது திறமை மற்றும் தகுதியும் உணர்ந்து செயல்படும் யோகம் பெற்றவராக இருப்பார், குறிப்பாக தனது பிறவியின் நோக்கம் அறிந்து செயல்படும் வல்லமை பெற்றவராக திகழ்வார், மேற்கண்ட பாவகம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் சிறு வயது முதலே மிகுந்த விழிப்புணர்வுடன் திகழ்வார், மனதிற்கு அப்பாற்ப்பட்ட, புலனறிவுக்கு அப்பாற்ப்பட்ட சக்தி ஜாதகருக்கு இயற்கையாகவே அமைந்து இருக்கும், எதிலும் தெளிவு, அறிவார்ந்த செயத்திறன், தன்னம்பிக்கை மற்றும் மனஉறுதி இவர்களின் வாழ்க்கையில் சிறப்பு மிக்க சுபயோகங்களை வாரி வழங்கும்.

நல்ல மனிதர்கள் சேர்க்கை, சமூகத்தில் பெரிய மனிதர்கள் அறிமுகம், ஆன்மீக பெரியோர்களின் ஆசி, குலதெய்வ அனுக்கிரகம், பித்ருக்கள் நல்லாசி ஆகியவற்றை பெற சுய ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் மிகவும் வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, மேலும் தனக்கு உகந்த விஷயங்களையும், தனக்கு உகந்த காரியங்களையும் தேர்வு செய்வதற்கு மேற்கண்ட பாவகங்களின் வலிமை மிக மிக அவசியமாகிறது, வருமுன் உணரும் சக்தியும், விளைவு அறிந்து செயல்படும் வல்லமையும் மேற்கண்ட பாவக வலிமையின் அடிப்படையிலேயே ஒருவருக்கு அமைகிறது, மேலும் தனக்கு வரும் இன்னல்கள் மற்றும் துன்பங்களை இறைவழியில் நின்று வாழ்க்கையில் வெற்றி பெறவும், தன்னால் சாதிக்க இயலும் செயல்களை தேர்வு செய்து முன்னேற்றங்களை பெறவும் லக்கினம்,பூர்வபுண்ணியம் மற்றும் பாக்கிய ஸ்தான வலிமையே ஓர் ஜாதகருக்கு அடிப்படை உந்துதலாக இருக்கின்றது.

கால நேரம் அறிந்து செயல்படும் தன்மையும், சுய ஜாதக வலிமை நிலையை பற்றிய தெளிவாக அறிந்து உணர்ந்து செயல்படும் வல்லமையையும், வாழ்க்கையில் வரும் சுப யோகங்களை தெளிவாக உணர்ந்து அதன் வழியிலான நன்மைகளை பெரும் ஆற்றலும் ஓர் ஜாதகருக்கு மேற்கண்ட பாவகங்களின் வலிமையின் அடிப்படையிலேயே அமைகிறது, சுய ஜாதகத்தில் மேற்கண்ட 1,5,9ம் பாவகங்கள் மட்டும் வலிமை பெற்று இருந்தால் சம்பந்தப்பட்ட ஜாதகர் தனது வாழ்க்கையை மிக சிறப்பாகவும், முன்னேற்றம் மிகுந்ததாகவும் அமைத்துக்கொண்டு 100% விகித சுபயோகங்களை பெறுவார் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

புதன், 22 மார்ச், 2017

ராகுகேது புத்திர ஸ்தானமான 5ம் பாவகத்தில் அமர்வது, புத்திரபாக்கியத்தை வழங்காதா ?



சுய ஜாதகத்தில் புத்திர ஸ்தானமான 5ம்  பாவகத்தில் சாயா கிரகமான, ராகு அல்லது கேது அமர்வது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு, ஜாதகிக்கு புத்திர பாக்கிய தடைகளை தரும் என்பதும், புத்திர பாக்கியம் ( ஆண் வாரிசு ) இல்லாத நிலையை தரும் என்பதும், சுய ஜாதகத்தில் புத்திர ஸ்தானத்தில் அமர்ந்த ராகுகேது தனது ஆளுமையின் மூலம் புத்திர பாவகத்திற்கு வழங்கும் வலிமை அல்லது வலிமை இன்மையை கருத்தில் கொள்ளாமல் கூறப்படும் பொது கருத்து என்பதை, ஓர் உதாரண ஜாதகம் கொண்டு "ஜோதிடதீபம் " தெளிவு படுத்த விரும்புகிறது, சுய ஜாதகத்தில் சாயா கிரகமான ராகு கேது புத்திர பாவகத்தில் அமர்ந்திருக்கும் பல ஜாதகங்களை புத்திர பாக்கியம் கிடையாது என்று திருமண பொருத்தத்தில் நிராகரிப்பதும், ஜோதிட உண்மைக்கு புறம்பானது.

 ஒருவருக்கு புத்திர ஸ்தானத்தில்தான் ராகுகேது அமர்ந்து இருக்கின்றதா? என்பதில் முதலில் தெளிவு பெறுவது அவசியம், அப்படி புத்திர ஸ்தானத்தில் அமர்ந்த ராகுகேது தான் அமர்ந்த பாவகத்தை வலிமை பெற செய்கின்றனரா? அல்லது வலிமை இழக்க செய்கின்றனரா ? என்பதில் தெளிவு பெறுவது மிக மிக முக்கியமான அம்சமாக கருதவேண்டியுள்ளது, ஏனெனில் சுய ஜாதகத்தில் புத்திர பாவகத்தில் அமர்ந்த ராகு அல்லது கேது சம்பந்தப்பட்ட பாவகத்திற்கு தரும் வலிமையை பற்றி யாதொரு தெளிவும் இன்றி, குத்துமதிப்பாக புத்திரபாவகத்தில் ராகுகேது அமர்வது புத்திரபாக்கியத்தை தாராது என்று முடிவு செய்வதே அன்றி உண்மை சிறிதும் இல்லை, மேலும் சுய ஜாதகத்தில் புத்திர பாவகத்தில் அமர்ந்த ராகுகேது சம்பந்தப்பட்ட பாவகத்தை வலிமை பெற செய்தால் ஜாதகருக்கு நிச்சயம் ஆண் வாரிசு உண்டு, ஒருவேளை புத்திர பாவகத்தில் அமர்ந்த ராகுகேது சம்பந்தப்பட்ட பாவகத்தை வலிமை இழக்க  செய்தால் ஆண் வாரிசு இல்லை என்று முடிவு செய்ய இயலாது, ஏனெனில் தனது  வாழ்க்கை துணையின் ஜாதக வலிமையையும் கருத்தில் கொள்ளவேண்டும், ஜாதகர் தனது பூர்வீகத்தில் ஜீவிக்கிறாரா ? என்பதையும் கருத்தில் கொண்டு புத்திரபாக்கியம் மற்றும் ஆண் வாரிசு அமைப்பை நிர்ணயம் செய்வதே துல்லியமானதாக அமையும்.   



லக்கினம் : விருச்சிகம்
ராசி : துலாம்
நட்ஷத்திரம் : சித்திரை 4ம் பாதம்

 ஜாதகருக்கு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்தில் ( 5ம் பாவகத்திற்க்கு உற்பட்ட பாகைக்குள் ) ராகு பகவான் மிகவும் வலிமை பெற்று அமர்ந்து இருப்பது ஜாதகருக்கு அழகான, யோகம் நிறைந்த நல்ல ஆண் வாரிசை வழங்கி உள்ளது, மேலும் ஜாதகரின் முன்னேற்றம் என்பது தனது ஆண் வாரிசு மூலம் அபரிவிதமான யோக வாழ்க்கையை வாரி வழங்கியது, வழங்கி கொண்டு இருக்கின்றது, ஜாதகரின் ஆண் வாரிசு வளர வளர ஜாதகருக்கு பரிபூர்ண சுபயோகங்களை தொடர்ந்து வழங்கும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

மேற்கண்ட ஜாதகத்தில் ராகு 5ல் அமர்ந்து இருந்த போதிலும் வலிமை பெற்று இருப்பது ஜாதகருக்கு ஆண் வாரிசை மட்டும் அல்ல சமயோசித புத்திசாலித்தனத்தையும் வழங்கி இருப்பது கவனிக்கத்தக்கது, மேலும் ஜாதகரின் வாழ்க்கையில் வரும் இன்னல்களை ஆதவனை கண்ட பனிபோல் நீக்கும் அறிவு திறனையும், இறை அருளின் கருணையையும் வாரி வழங்கி இருக்கின்றது, தான் கற்ற கல்வியை ஜாதகர் தனது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு சிறப்பாக பயன்படுத்தும் வல்லமையை பெற்று இருப்பது வியப்புக்கு உரியது, ஜாதகரின் தெளிவான சிந்தனை, அறிவில் விழிப்புணர்வு, விளைவறிந்து செயல்படும் தன்மை என 5ம் பாவக  வழியிலான சுப யோகங்களை ஜாதகர் தங்கு தடையின்றி பெறுவது வரவேற்கத்தக்க விஷயமாகும்.

சுய ஜாதகத்தில் ராகு 5ல் வலிமை பெற்று அமர்வது போல், கேதுவும் ஜாதகருக்கு 11ல் வலிமை பெற்று அமர்வது ஜாதகரின் அதிர்ஷ்டகரமான யோக வாழ்க்கையை உறுதி செய்கிறது, ஜாதகர் தனது லட்சியம் ஆசை என விருப்பம் கொள்ளும் அனைத்து விஷயங்களிலும் தன்னிறைவான யோகங்களை பெறுவதற்கு, சுய ஜாதகத்தில் வலிமை பெற்று 11ம் பாவகத்தில்  அமர்ந்து இருக்கும் கேது பகவானே முழுமுதற் காரணகர்த்தாவாக திகழ்கிறார், எனவே சுய ஜாதகத்தில் ராகு கேது அமரும் பாவகம் வலிமை பெற்று இருக்கின்றதா? வலிமை அற்று இருக்கின்றதா ? என்பதில் தெளிவு பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சாயா கிரகங்களால் ஏற்படும் யோகம் மற்றும்  அவயோகத்தை பற்றி மிக துல்லியமாக கூற வழிவகுக்கும்.

குறிப்பு :

சுய ஜாதகத்தில் 5ல் அமரும் ராகு அல்லது கேது சம்பந்தப்பட்ட பாவகத்தை வலிமை இழக்க செய்தால், மேற்கண்ட பலாபலன்களை எதிர்மறையான அவயோக பலாபலன்கள் ஜாதகருக்கு நடைமுறைக்கு வரும், என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வெள்ளி, 17 மார்ச், 2017

ராகுகேது ( சர்ப்ப தோஷம் ) திருமண தடைகளை தருகின்றதா ? குரு திசை தரும் பலாபலன்கள் என்ன ?

 

சுய ஜாதகத்தில் சாயா கிரகங்களான ராகுகேது (1,7) (2,8) (5,11) (6,12) வீடுகளில் அமர்வதும், அப்படி அமரும் சாயா கிரகங்களுக்குள் மற்ற கிரகங்கள் அனைத்தும் அடைபடுவதையு காலசர்ப்ப தோஷம் என்று வர்ணிக்கின்றனர், மேற்கண்ட வீடுகளில் அமரும் சாயா கிரகங்கள் ஜாதகருக்கு நாகதோஷம், சர்ப்ப தோஷம், ராகுகேது ஜாதகம் என்று கூறுவதும் உண்டு, மேற்கண்ட அமைப்பை பெற்ற ஜாதகர்களுக்கு, அதை போன்றே சர்ப்ப தோஷம், நாகதோஷம், ராகுகேது தோஷம் உள்ள ஜாதகத்தையே திருமண வாழ்க்கையில் இணைப்பது உகந்தது என்ற கருத்தையும் சொல்வது உண்டு, மேலும் திருமணம் தாமதம் ஆக மேற்கண்ட தோஷங்கள் காரணமாக அமையும் என்ற கருத்தையும் முன்வைப்பது உண்டு, திருமணத்திற்கு பிறகு புத்திர பாக்கிய குறைபாடுகளையும் மேற்கண்ட தோஷங்கள் தரும் என்றும் கூறுவது உண்டு, மேற்கண்ட கருத்துக்கள் யாவும் சுய ஜாதகத்தில் சாயா கிரகங்கள் தாம் அமர்ந்த பாவகத்திற்கு தரும் வலிமையை பற்றி கருத்தில் கொள்ளாமலும், சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் வலிமை நிலையை கருத்தில் கொள்ளாமலும், நடைபெறும் எதிர்வரும் திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவக வலிமையை கருத்தில் கொள்ளாமலும், கூறப்படும் பொதுப்பலன்கள் என்றால் அது மிகையில்லை.

சுய ஜாதகத்தில் சாயா கிரகங்களான ராகுகேது (1,7) (2,8) (5,11) (6,12) வீடுகளில் அமர்வது மட்டுமே சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு இன்னல்களை தந்து விடாது, தான் அமர்ந்த பாவகத்தை முழுமையாக தனது ஆளுமைக்கு கொண்டுவரும் சாயாகிரகங்கள், சம்பந்தப்பட்ட பாவகத்தை பாதிப்பை தரும் நிலையில் மட்டுமே சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு இன்னல்களையும், துன்பத்தையும் தரும், தான் அமர்ந்த பாவகத்திற்கு வலிமை சேர்க்கும் அமைப்பில் இருப்பின், யாதொரு இன்னல்களையும் தாராமால், ஜாதகருக்கு தான் அமர்ந்த பாவக வழியிலான நன்மைகளை 100% விகிதம் வாரி வழங்கும், சுய ஜாதகத்தில் லக்கினம் மற்றும் களத்திர பாவகத்தில் அமரும் சாயா கிரகம் தரும் யோக அமைப்பை பற்றி ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !

 
லக்கினம் : மகரம் 
ராசி : ரிஷபம் 
நட்ஷத்திரம் : மிருகசீரிடம் 2ம் பாதம் 

ஜாதகிக்கு லக்கினம் மற்றும் களத்திர பாவகங்கள் முறையே ராகுவும் கேதுவும் அமர்ந்து இருக்கின்றனர், லக்கினத்தில் அமர்ந்த ராகு ஜாதகிக்கு தான் அமர்ந்த நிலையில் முழு வலிமையை தருவதால் சுய ஜாதகத்தில் லக்கினம் களத்திர பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிக சிறப்பாக வலிமையுடன் காணப்படுகிறது, களத்திர பாவகத்தில் அமர்ந்த கேதுவும் தான் அமர்ந்த நிலையில் முழு வலிமையை தருவதால் சுய ஜாதகத்தில் 7ம் வீடு களத்திர பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிக சிறப்பாக வலிமையுடன் காணப்படுகிறது, இதனால்  ஜாதகி லக்கின பாவக வழியில் இருந்து நல்ல உடல் ஆரோக்கியம், மனவலிமை, புகழ் கீர்த்தி, புத்திசாலித்தனம், வளரும் சூழ்நிலையில் சிறப்பு, சுய முயற்சியில் வெற்றி பெரும் யோகம் என்ற வகையில் சிறப்பான  நன்மைகளை  100% விகிதம் பெறுகின்றார்.

களத்திர பாவகத்தில் வலிமை பெற்று அமரும் கேது பகவானால், ஜாதகிக்கு நல்ல நண்பர்கள், சிறந்த கூட்டாளிகள், மக்கள் செல்வாக்கு, பெயரும் புகழும் தேடிவரும் யோகம், கைராசி, செய்யும் தொழில் மூலம் பிரபல்ய யோகம், செல்லும் இடங்களில் ஜாதகிக்கு தேடிவரும் உதவிகள், அனைவரிடமும் நட்பு பாராட்டும் குணம், பரந்த மனப்பக்குவம், எண்ணத்தின் வலிமை மூலம் சகல யோகங்களையும் பெரும் தன்மை, வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் தனது வாழ்க்கை துணை, நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் வழியில் இருந்து பெரும் யோகம் என்ற வகையில் சுபயோகங்களை களத்திர ஸ்தானத்தில் வலிமை பெற்று அமர்ந்து இருக்கும் கேது பகவான் ஜாதகிக்கு வாரி வழங்குவார்.

ஜாதகியின் லக்கினம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமான 10ம் ராசியாகவும், களத்திர ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சுக ஸ்தானமான  4ம் ராசியாகவும் வலிமை பெற்று இருப்பது மேற்கண்ட லக்கினம் மற்றும் களத்திர பாவக வழியிலான நன்மைகளை முழு அளவில்  வாரி வழங்கும், கவுரவம் அந்தஸ்து குறையாத யோக வாழ்க்கை, செய்யும் தொழில்  வழியில் நேர்மை மற்றும் உண்மையை கடைபிடிக்கும் வல்லமை, மற்றும் தொழில் வழியில் ஜாதகி காட்டும் அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவை ஜாதகிக்கு மிதமிஞ்சிய யோக வாழ்க்கையை லக்கின வழியில் இருந்து ராகு பகவானால்  பெறுவார், களத்திர பாவக வழியில் இருந்து தனது வாழ்க்கை துணையின் முழு ஆதரவையும், அவர் வழியிலான அதிர்ஷ்ட வாழ்க்கையையும் ஜாதகி முழு அளவில் பெறுவார், வண்டி வாகன யோகம், சொத்து சுக சேர்க்கை , வசதி மிக்க நல்ல வீடு, சிறந்த குணநலன்கள், வெளியூர் வெளிநாடுகளில் சிறப்பு மிக்க எதிர்காலம் என்ற வகையில் ஜாதகிக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

மேற்கண்ட ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் லக்கினம் மற்றும் களத்திர பாவகங்கள் வலிமை பெறுவது சாயா கிரகங்களான ராகுகேதுவின் வலிமை மிக்க ஆளுமையினால்  என்றால் அது மிகையில்லை, மேலும் தான் அமர்ந்த பாவகத்திற்கு ராகு கேது  100% விகிதம் வலிமை சேர்க்கும் விதத்தில் இருப்பதால், மேற்கண்ட ஜாதகி சாயா கிரகங்களால் யோக பலாபலன்களையே அனுபவிக்கிறார் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், பலரது கருத்துப்படி மேற்கண்ட ஜாதகிக்கு லக்கினம் மற்றும் களத்திர பாவகத்தில் அமர்ந்த ராகு கேது திருமண வாழ்க்கையை தடை செய்வதாக  கூறியிருக்கின்றனர், உண்மையில் ஜாதகியின் திருமணம் தாமதம் ஆக காரணமாக இருப்பது தற்போழுது நடைபெறும் குரு திசையும், சனி புத்தியுமே என்றால் அது மிகையில்லை, ஏனெனில் தற்போழுது நடைபெறும் குரு திசையும் ஜாதகிக்கு 12ம் பாவக பலனை ஏற்று நடத்துகிறது, சனி புத்தியும் 12ம் பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்பதால் ஜாதகிக்கு திருமண வாழ்க்கை கைகூடி வரவில்லை, சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற  பாவக பலன் நடைமுறைக்கு வரும் பொழுது ஜாதகி எதிர்பாராத வகையில், முழு யோகம் நிறைந்த நல்லதொரு வாழ்க்கை துணையை நிச்ச்யம் பெறுவார், திருமணம் தாமதம் ஆவதும் ஜாதகிக்கு ஓர் வகையில் சுபயோகங்களை தரும், மேலும் திருமணம் தாமதம் ஆக காரணம் தற்பொழுது நடைமுறையில் உள்ள திசைபுத்தி வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தவில்லை என்பதே காரணமாக அமைகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 16 மார்ச், 2017

குரு திசை வழங்கும் யோக பலன்கள் ! லாப ஸ்தான வழியில் இருந்து பெரும் யோக வாழ்க்கை !


 சுய ஜாதகத்தில் குரு திசை நடைமுறைக்கு வரும் பொழுது, சம்பந்தப்பட்ட ஜாதகர் பெரும் யோக அமைப்பை பற்றி பலரும் சிலாகித்து பேசுவது உண்டு, குரு திசை ஒருவருக்கு நடைபெறும் பொழுது அவருக்கு நன்மையான பலாபலன்களே நடைமுறைக்கு வரும் என்பது பொது கருத்து, இது உண்மைக்கு புறம்பானது என்ற போதிலும், நடைபெறும் குரு திசை ஒருவருக்கு சுப யோகங்களை வழங்கினால் சம்பந்தப்பட்ட ஜாதகர் பெரும் நன்மைகள் மற்றும் யோகங்களை பற்றி ஓர் உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வோம் அன்பர்களே !

எந்த ஓர் ஜாதகத்தில் நவகிரகங்களின் திசைபுத்தி ( சுபர் அசுபர் ) தனிப்பட்ட நன்மை தீமைகளையும், யோக அவயோக பலாபலன்களை வழங்குவதற்கு அதிகாரம் பெற்றதல்ல என்ற அடிப்படை விஷயத்தை முன் வைத்து இந்த பதிவை தொடர்கிறது " ஜோதிடதீபம் " உண்மையில் நமது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையை ஏற்றே நவ கிரகங்களின் திசாபுத்திகள் யோக அவயோக பலாபலன்களை வழங்குகிறது என்பதால், சுய ஜாதகம் வலிமை பெற்று இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகர் யோக பலன்களையும், சுய ஜாதகம் வலிமை அற்று இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகர் அவயோக பலன்களையும் எதிர்கொள்ளும் நிலையை தருகிறது, இதை மறுத்து சுப கிரகங்களின் திசைபுத்தி ஜாதகருக்கு யோக பலன்களையும், அசுப கிரகங்களின் திசைபுத்தி ஜாதகருக்கு அவயோக பலன்களையும் தரும் என்ற வாதம் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது, நடைபெறும் திசாபுத்தி ஏற்று நடத்தும் பாவக வலிமை நிலை உணராமல் கூறும் பொது பலன்களாகவே கருத வேண்டி உள்ளது, கிழ் கண்ட ஜாதகருக்கு தற்பொழுது நடைமுறையில் உள்ள குரு திசை, அடுத்து வரும் சனி திசை தரும் பலாபலன்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்துகொள்வோம்.


லக்கினம் : கன்னி 
ராசி : மிதுனம் 
நட்சத்திரம் : மிருகசீரிடம் 3ம் பாதம்.

ஜாதகருக்கு குரு திசை ( 07/02/2007 முதல் 07/02/2023 வரை ) நடைமுறையில் உள்ளது, நடைபெறும் குரு திசை ஜாதகருக்கு 11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருகிறது, மேலும் ஜாதகரின் லாப ஸ்தானம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு சுக ஸ்தானமாக அமைவது ஜாதகருக்கு அதிர்ஷ்டத்துடன் கூடிய சுபயோகங்களை வாரி வழங்கும், மேலும் ஜாதகரின் எண்ணத்தின் வலிமை அதிகரிக்கும், ஜாதகர் நினைத்தபடி நிகழ்வுகள் யாவும் நடைமுறைக்கு வரும், தன்னம்பிக்கையும் தைரியமும் வெகுவான  லாபங்கள் மற்றும் அதிர்ஷ்டத்தை தரும், முற்போக்கு சிந்தனை, செய்யும்  காரியங்களின் புதுமையை விரும்பும் மனநிலை என ஜாதகர் தன்னிறைவான யோக வாழ்க்கையை பெறுவார்.

குரு திசை முழுவதும் ஜாதகருக்கு 11ம் பாவக பலனையே ஏற்று நடத்துவதும், 11ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சுக ஸ்தானமாக அமைவதும் ஜாதகருக்கு மிகுந்த நன்மையை தரும் அமைப்பாகும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு நான்காம் வீடான கடகம் ஜாதகருக்கு லாப ஸ்தானமாக அமைவது ஒரு வகையில் வண்டி வாகன யோகம், வீடு, நிலம், இடம், சொத்து சுக சேர்க்கை, நல்ல குணம், லட்சியங்கள் நிறைவேறும் தன்மை என்ற வகையிலும் சுபயோகங்களை தரும், தனது தாய் வழியிலான யோக வாழ்க்கை ஜாதகர் இந்த குரு திசை காலத்தில்  தடையின்றி பெறுவார், தனது எண்ணத்தின் வலிமையை வெற்றிகரமான சாதனைகளுக்கு மூலதனமாக பயன்படுத்தும் யோகம் பெற்றவராக மாற்றும் வல்லமையை தரும்  தற்போழுது நடைமுறையில் உள்ள குரு தசை என்பது மேற்கண்ட ஜாதகத்தில் கவனிக்கத்தக்க சிறப்பு அம்சம். ( தற்போழுது நடைபெறும் சுக்கிரன் புத்தி ஜாதகருக்கு பாதிக்கப்பட்ட 12ம் பாவக பலனை தருவது இன்னல்களை தரும் அமைப்பாகும் )

ஜாதகருக்கு எதிர் வரும் ( 07/02/2023 முதல் 07/02/2042 வரை ) சனி திசை ஏற்று நடத்தும் பாவக தொடர்பு என்பதும் மிகுந்த யோகத்தை தரும் அமைப்பிலேயே உள்ளது அதாவது 2,6,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனையும் , 8ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனையும் தருவது வரவேற்கத்தக்க அம்சமாகும், எனவே எதிர்வரும்  ( இயற்க்கை பாவியான ) சனி திசையும் ஜாதகருக்கு பாக்கியம் மற்றும் ஜீவன ஸ்தான வழியில் இருந்து சுப யோகங்களையே வாரி வழங்குகிறது என்பது சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற 9,10ம் பாவக பலனை ஏற்றுநடத்துவதில் இருந்து தெளிவாகிறது.

குறிப்பு :

நவகிரகங்கள் தனது திசையில் தரும் பலன்களை சுய ஜாதக வலிமையின் அடிப்படையில் அவர்கள் ஏற்று நடத்தும் பாவக தொடர்பை கருத்தில் கொண்டு  நிர்ணயம் செய்வதே மிக சரியான அணுகு முறை, இதை தவிர்த்து பொது பலன் கூறுவது என்பது, ஜோதிட கணிதத்தின் உண்மை நிலையை புரியாமல் சொல்லும் வாய்ஜாலம் என்பதே ஜோதிடதீபத்தின் கருத்து.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

புதன், 15 மார்ச், 2017

சந்திரன் திசை வழங்கும் யோக வாழ்க்கை, பூர்வபுண்ணியம் மற்றும் லாப ஸ்தான வழியில் ஜாதகர் பெரும் நன்மைகள் !



சுய ஜாதகத்தில் நடைபெறும் திசாபுத்தி ( நவகிரகங்களின் திசாபுத்தி எதுவென்றாலும் சரி ) வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது சம்பந்தப்பட்ட, ஜாதகருக்கு தான் ஏற்று நடத்தும் பாவக வழியிலான யோகங்களை தங்கு தடையின்றி வாரி வழங்கும், ஜாதகரின் வாழ்க்கையில் பலவித நன்மைகளும் சுப யோகங்களும் தொடர்ந்து நடைபெறும். கீழ்கண்ட ஜாதகருக்கு தற்போழுது நடைமுறையில் சந்திரன் திசை நடைபெறுகின்றது, தனது திசையில் ஜாதகருக்கு சந்திரன் வழங்கும் பலாபலன்களை பற்றி சற்று சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே ! மேலும் ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட வீடுகள் எவை ? வலிமை பெற்ற வீடுகள் எவை ? என்பதையும் சற்று தெளிவாக காண்போம்.


லக்கினம் : ரிஷபம்
ராசி : மேஷம்
நட்ஷத்திரம் : அஸ்வினி 3ம் பாதம்

ஜாதகருக்கு சுய ஜாதக வலிமையை சிந்தனைக்கு எடுத்துக்கொள்ளும் பொழுது, 1,4,7,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது  அடிப்படையிலே வலிமையான ஜாதகர் என்பதை தெளிவு படுத்துகிறது, மேலும் சுய ஜாதகத்தில் கேந்திரம் என்று அழைக்கப்படும் 1,4,7,10ம்  வீடுகள் வலிமை பெறுவது, ஓர் நாற்காலியில்  நான்கு கால்களும் வலிமை  மிக்கதான ஸ்திர தன்மையை பெற்று இருக்கும், மேற்கண்ட அமைப்பை பெரும் ஜாதகர் தனது வாழ்க்கையில் எந்த ஓர் சூழ்நிலையிலும் தோல்வியை தழுவாத யோக வாழ்க்கையை தரும், செய்யும் செயல்களில் வெற்றி, ஸ்திரமான அறிவு திறன், ஆரோக்கியமான உடல் நிலை,  நிலையான சொத்து, வண்டி வாகன யோகம், நல்ல குணம், நல்ல நண்பர்கள், சிறந்த வெளிவட்டார பழக்க வழக்கம், பொதுமக்கள் ஆதரவு, பிரபல்ய யோகம், ஸ்திரமான ஜீவன முன்னேற்றம், கவுரவம் குறையாத யோக வாழ்க்கை, சிறந்த  வாத திறமை, செய்யும் தொழில் அல்லது பணியில் வெற்றி, உயர் பதவி யோகம், என்றவகையில் சுப யோகங்களை வாரி வழங்கும்.

மேற்கண்ட ஜாதகருக்கு இந்த அமைப்பு ( கேந்திர ஸ்தான வலிமை ) இருப்பது, ஜாதகரின் ஸ்திரமான வெற்றிகளை குறிக்கிறது, அடுத்து 3ம் வீடு வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர், தைரியம் மனஉறுதி இரண்டையும் தனது  சொத்தாக பாவிப்பவர் என்பது தெளிவாகிறது, மேலும்  தான் செய்யும் எந்த ஓர் காரியத்திலும் நேர்த்தியை கடைபிடிப்பவர், ஒழுக்கம் நிறைந்தவர் என்பதை உறுதிப்படுத்துகிறது, சகல செல்வங்களையும் பெரும் யோகம், எதிரிகளை  வெல்லும் வல்லமை, சத்தியத்தை மதித்தல், சூழ்நிலை மாற்றத்தில் ஆர்வம் மற்றும் புதுமை விரும்பி என்பதை தெளிவு படுத்துகிறது.

5,11ம் வீடுகள் லாபஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகத்திலே மிகவும் உயர் ரக யோகங்களை வழங்கும் அமைப்பாக கருதலாம், ஏனெனில் ஜாதகரின் லாப ஸ்தானம் என்பது ( மீன ராசியில் 355:05:14 பாகையில் ஆரம்பித்து மேஷ ராசியில் 28:06:04 பாகையில் முடிவடைகிறது ) மேஷ ராசியிலே அதிகம் வியாபித்து இருக்கின்றது என்பது கவனிக்க தக்க சிறப்பு அம்சமாகும், இதனால் ஜாதகர் பெரும் அதிர்ஷ்டங்கள்  மற்றும் லாபங்கள் முழு அளவில் ஜாதகருக்கு வந்து சேரும், மேலும் லாப ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் ராசியாக வருவதும், சர நெருப்பு  தத்துவ ராசியில் அமைவதும் ஜாதகருக்கான யோக பலன்களை விரைவாகவும், தன்னிறைவாகவும் வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்க அம்சமாகும், அப்படி பட்ட யோகங்களை தரும் 5,11ம் பாவக பலனை தற்போழுது நடைபெறும் சந்திரன் திசை ஜாதகருக்கு ஏற்று நடத்துகிறது என்பது வரவேற்க தக்க விஷயமே, மேலும் ஜாதகர் சந்திரன் திசை முழுவதும் 5,11ம் பாவக வழியிலான சுப யோகங்களை பெறுகிறார் என்பது சிறப்பு அமசமாகும்.

மேற்கண்ட ஜாதகருக்கு நடைபெறும் சந்திரன் திசை சுப யோகங்களை வழங்குவது சிறப்பு என்ற போதிலும், சுய ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளின்  நிலையையும் கருத்தில் கொள்வது நல்லது, ஏனெனில் வலிமை அற்ற பாவக வழியிலான இன்னல்களை ஜாதகர் தவிர்த்தால் மட்டுமே, தற்போழுது நடைபெறும் சந்திரன் தசை வழங்கும் லாப ஸ்தான பலனை முழுமையாக ஜாதகர்  பெற இயலும், ஜாதகருக்கு 2,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் 12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் 2,8,12ம் பாவக வழியிலான இன்னல்களை தரும், 6,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 6,9ம் பாவக வழியிலான கடுமையான இன்னல்களை தரும், எனவே ஜாதகர் சுய ஜாதகத்தில் 2,6,8,9,12ம் பாவக வழியில் இருந்து இன்னல்களை அனுபவிப்பார்  என்பது உறுதியாகிறது.

ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் சந்திரன் தசை வலிமை பெற்ற 5,11ம் பாவக பலனை வழங்கிய போதிலும், சனி புத்தி பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்ற 6ம் பாவக பலனை ஏற்று நடத்துவது உகந்தது அல்ல, ஜாதகர் 5,11ம் பாவக வழியில் நன்மைகளையும், 6ம் பாவாக வழியில் கடுமையான இன்னல்களையும் சந்திக்கும் சூழ்நிலையை தரும்.


குறிப்பு :

சுய ஜாதகத்தில் ஒருவருக்கு பாக்கிய ஸ்தானம் வலிமை அற்று காணப்படுவது நன்மை தரும் அமைப்பு அல்ல, பாதகஸ்தானத்துடன் தொடர்பு பெறுவது கடுமையான இன்னல்களை தரும், ஜாதகரின் பாக்கிய ஸ்தானம் கடுமையாக பாதிக்கப்பட்டும், கலபுருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானம் பாதிக்கப்பட்டும் இருப்பது ஜாதகரின் வாழ்க்கையில் பித்ரு சார்ந்த சாபங்களை  தரும், மேலும் ஜாதகரின் பாக்கிய ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு  10ம் வீடாக அமைவது ஜாதகரின் வாழ்க்கையில் ஜீவன சார்ந்த இன்னல்களும் பெயருக்கு களங்கத்தையும்  தரக்கூடும், என்பதால் ஜாதகர்  முறையான  பித்ரு வழிபாட்டை மேற்கொண்டு வாழ்க்கையில் நலம் பெறுவது அவசியமாகிறது.


வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

ஞாயிறு, 12 மார்ச், 2017

கேது திசையில் பாதிப்புகள் மிக அதிகம், எதிர்வரும் சுக்கிரன் திசை சுபயோகங்களை தருமா ?



கேது திசை தரும் பலன்கள் 

ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் திசாபுத்தி ஜாதகருக்கு ஏற்று நடத்தும் பாவக வழியில் இருந்து யோக பலன்களையும், வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் திசாபுத்தி ஜாதாருக்கு ஏற்று நடத்தும் பாவக வழியில் இருந்து அவயோக பலன்களையும் தரும், தங்களுக்கு தற்போழுது நடைபெறும் கேது திசை தங்களுக்கு சுய ஜாதகத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட பாதக ஸ்தான பலாபலனை ஏற்று நடத்துவது கடுமையான இன்னல்களை தரும் அமைப்பாகும், அதாவது தற்போழுது நடைபெறும் கேது திசை தங்களுக்கு 5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது தங்களுக்கு 5,11ம் பாவக வழியில் இருந்து மிக கடுமையான இன்னல்களை தருகின்றது, மேலும் கேது திசை தங்களுக்கு 22/12/2017 வரை நடைபெறுவதால், அதுவரை தங்கள் கடுமையான இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையையே தரும், இருப்பினும் தற்போழுது கேது திசையில் புதன் புத்தி நடைபெறுவது வரவேற்க தக்க அம்சமாகும், ஏனெனில் புதன் புத்தி தங்களுக்கு 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையே தருவது தங்களுக்கு ஜீவன ரீதியான சுப யோகங்களை வாரி வழங்கும், புதன் புத்தி தங்களுக்கு சுபயோக பலன்களை தொழில் அமைப்பில் இருந்து சிறப்பாக வாரி வழங்கும்.


லக்கினம் : கடகம்
ராசி : மீனம் 
நட்ஷத்திரம் : பூரட்டாதி 4ம் பாதம்

எதிர்வரும் சுக்கிரன் திசை தரும் பலன்கள் 

தங்களது சுய ஜாதகத்தில் எதிர்வர இருக்கின்ற சுக்கிரன் திசை உண்மையில் மிகுந்த நன்மைகளை தார இருக்கின்றது, 1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடனே சம்பந்தம் பெற்று யோக பலன்களை தருவது வரவேற்க தக்க விஷயமாகும், மேலும் தங்களுக்கு களத்திர ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் ராசியாக வருவது தங்களுக்கு, கூட்டு தொழில் நண்பர்கள் உதவி, வாழ்க்கை துணை வழியிலான சுபயோகங்கள் என சுக்கிரன் திசை முழுவதும் லக்கினம் மற்றும் களத்திர ஸ்தான வழியில் இருந்து தன்னிறைவான யோக வாழ்க்கையை நல்கும்.

லக்கின வழியில் இருந்து உடல் நலம், மன நலம், தீர்க்க ஆயுள், செயல்களில் வெற்றி வாய்ப்பு, தன்னம்பிக்கை மிக்க செயல்களால் வாழ்க்கையில் எதிர்பாராத மிகுந்த நன்மைகளை தரும், களத்திர பாவக வழியில் இருந்து வாழ்க்கை துணை ஆதரவு தங்களுக்கு மிகுந்த தைரியத்தை வழங்கும், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் உதவி மூலம் வாழ்க்கையில் எதிர்பாராத முன்னேற்றங்களை சந்திப்பீர்கள், தொழில் வளர்ச்சி மிக அபரிவிதமாக அமையும், கடந்த காலங்களில் கேது திசையின் பாதிப்பில் இருந்து மிக விரைவாக மீண்டு வரும் யோகத்தை தரும், சுக்கிரன் திசை 20 வருடமும் தங்களுக்கு 1,7ம் பாவக வழியில் இருந்து எதிர்பாராத முன்னேற்றங்களை சரளமாக வாரி வழங்கும், சுக்கிரன் திசை தங்களுக்கு அதிர்ஷ்டத்தின் வழியில் இருந்து முன்னேற்றத்தை தராமல், உழைப்பின் மூலம் எதிர்பாராத சுபயோகங்களை தன்னிறைவாக வாரி வழங்குகின்றது என்பதால், கடினமான உழைப்பை முன்னிறுத்துங்கள், வாழ்க்கையில் சகல யோகங்களையும் அனுபவியுங்கள் " வாழ்த்துக்கள் "

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696