பணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 18 ஜூன், 2018

வெளிநாடுகளில் யோக வாழ்க்கையை பெரும் ஜாதக நிலையும் ! புதன் திசை தரும் பொருளாதார தன்னிறைவும் !


  சுய ஜாதகத்தில் லக்கினத்தில் இருந்து 7ம் வீடாகிய களத்திர ஸ்தானமும், 10ம் வீடாகிய ஜீவன ஸ்தானமும், 11ம் வீடாகிய லாப ஸ்தானமும் வலிமை பெறுவது ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளை வெளியூர், வெளிநாடு மற்றும் வியாபாரம் சார்ந்த வெற்றிகளை வாரி வழங்கும், குறிப்பாக சுய ஜாதகத்தில் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியான துலாம் மிகவும் வலிமை பெற்று இருப்பது ஜாதகருக்கு வெளிநாடு யோகம், வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானம் என்ற வகையில் சிறப்புகளை தரும், தன்னிறைவான சுபயோகங்களை ஜாதகர் தங்கு தடையின்றி அனுபவிக்கும் வல்லமை உண்டாகும், மேலும் லக்கினம் வலிமை பெற்று இருப்பது ஜாதகர் வெளிநாடுகளில் இருந்து வரும் யோக வாழ்க்கையை சுயமாக சுவீகரிக்கும் தன்மையை தரும், பிரபல்ய யோகம், சமூக அந்தஸ்து, மதிப்பு மரியாதை, வெளிவட்டார பழக்க வழக்கங்கள் மூலம் ஜாதகருக்கு கிடைக்கும் சுபயோக வாழ்க்கை என்ற வகையில் பரிபூர்ண நன்மைகளை தரும்.

 மேலும் சுய ஜாதகத்தில்  5,12ம் வீடுகள் வலிமை பெறுவது , 5ம் பாவக வழியில் இருந்து தனது அறிவு திறன் சமயோசித புத்திசாலித்தனம் மூலம் வெளிநாடுகளில் சிறப்பான யோக வாழ்க்கை பெறுவதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கி தரும், ஜாதகரின் அறிவார்ந்த முயற்சிகள் மூலம் பொருளாதார ரீதியான வெற்றிகளை மிக எளிதாக பெறுவதற்கும், குடியுரிமை சார்ந்த நன்மைகளை பெறுவதற்கும் ஜாதகருக்கு ஓர் அங்கீகாரத்தை நல்கும், 12ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் வெளிநாடுகளில் பெரும் பொருளாதர தன்னிறைவை குறிப்பதுடன், திருப்தியுடன் கூடிய நிம்மதிகாரமான யோக வாழ்க்கையை நல்கும், தெளிவான சிந்தனை நல்ல உறக்கம், மற்ற நாடுகளில் உள்ள சீதோஷன நிலையை ஏற்றுக்கொள்ளும் திரேகம், வேற்று மதத்தினர், வேற்று இனத்தினருடன் இணக்கமான உறவை கையாளும் வல்லமையை தருவதும் அயன சயன ஸ்தானத்தின் வலிமையே என்றால் அது மிகையில்லை. 


லக்கினம் : விருச்சிகம்
ராசி : கும்பம்
நட்ஷத்திரம் : பூரட்டாதி 2 பாதம்

ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு லக்கின பாவக வழியில் இருந்து நீண்ட ஆயுள், சிறந்த உடல் மற்றும் மனநலம், வளரும் சூழ்நிலையில் சிறப்பு, கல்வியில் மேன்மை, பொதுமக்கள் தொடர்பில் யோகம், சிறந்த நிர்வாக திறமை, தனித்தன்மையான ஆளுமை திறன், எதிர்ப்புகளை சந்தித்து வெற்றிகொள்ளும் யோகம், அனைவரின் ஆதரவையும் பெரும் யோகம், வசீகரிக்கும் செயல்பாடுகள், எதிர்பாலின அமைப்பினரிடம் இருந்து பெரும் நன்மைகள் என்ற வகையில் ஜாதகருக்கு சிறப்பை தரும்.

7ம் பாவக வழியில் இருந்து வெளியூர் அல்லது வெளிநாடுகளில் இருந்து வரும் முன்னேற்றத்தை ஜாதகர் பரிபூர்ணமாக சுவீகரிக்கும் யோகம், பிரபல்ய யோகம், நல்ல நண்பர்கள், சிறந்த கூட்டாளிகள், வலிமை மிக்க கூட்டுத்தொழில், அதன் வழியிலான ஜீவன மேன்மை என்ற வகையில் சிறப்புகளை  தரும், ஜாதகருக்கு களத்திர ஸ்தானமான 7ம் பாவகம் ரிஷப ராசியில் 5 பாகைகளையும், மிதுன ராசியில் 23 பாகைகளையும் கொண்டு இருப்பது சிறப்பானது, ஜாதகரின் அறிவு திறன் வெளிநாடுகளில் சிறப்பான வரவேற்பை கொண்டுள்ளதாக அமைவதும், ஜாதகரின் சிறந்த மேலாண்மை திறன் வெளிநாடுகளிலேயே மிகவும் பிரகாசமாக அமைவதையும், ஜாதகர் தெளிவாக உணர்ந்துகொண்டு, அதன் வழியிலான வெற்றிநடை போடுவது வரவேற்கத்தக்கது,  ஜாதகரின் உழைப்பு மிக குறைவாக அமைந்த போதிலும் பெரும் நன்மைகள் அபரிவிதமானதாக இருப்பதற்கு காரணம் என்ன ? என்பதை அடுத்த வரிகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!

ஜாதகரின் 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த வலிமையுடன் இருப்பது வரவேற்கத்தக்கது மேலும் ஜாதகரின் ஜீவன ஸ்தானம் சிம்ம ராசியில் 3 பாகைகளையும், கன்னி ராசியில் 28 பாகைகளையும் கொண்டு இருப்பது சிறப்பான ஓர் விஷயமாக கருதலாம், இது ஜாதகருக்கு தொழில் நுட்பம் மற்றும் கைதேர்ந்த தொழில் மேலாண்மை திறனை வழங்கி இருப்பது கவனிக்கத்தக்கது, பெரும்பாலும் கைதேர்ந்த, திறமை வாய்ந்த, தொழில் நுட்பம் சார்ந்த அறிவுத்திறன் மிக்க அனைவரும் பெரிய அளவிலான வெற்றிகளை பெற்று விடுகின்றனரா ? என்றால் இல்லை என்பதே பதில், ஆனால் இவர் அபரிவிதமான வெற்றிகளை குவிக்க மேற்கண்ட விஷயங்கள் மட்டுமே கைகொடுக்கவில்லை, ஆம் அதிர்ஷ்டம் என்பதே ஜாதகருக்கு மிதந்தமிஞ்சிய யோக வாழ்க்கையை வாரி வழங்கிக்கொண்ட இருக்கின்றது என்பதே உண்மை, திறமை மட்டும் இருப்பது ஜாதகருக்கு வெற்றிகளை தருவதில்லை, அதிர்ஷ்டம் எனும் 11ம் பாவக வலிமையே திறமைக்கான அங்கீகாரத்தை உலகிற்கு எடுத்துரைத்து, திறைமைக்கான அதிர்ஷ்ட வாழ்க்கையை நிலைநிறுத்துகிறது என்பதை அடுத்த வரிகளில் தெளிவாக காண்போம்.

ஜாதகருக்கு மேற்கண்ட பாவகங்கள் வலிமை பெற்றது, 30 % விகித நன்மைகளை தந்த போதிலும் 2,4,5,8,11,12ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்டத்தை குறிக்கும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழுவீச்சில் 100% விகித நன்மைகளை தருவதே ஜாதகரின் வெற்றிக்கு அடிப்படை காரணமாக அமைகிறது, சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானத்துடன் 1,7ம் வீடுகள் சம்பந்தம் பெறுவதும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் வீடான துலாம் ராசி வலிமை பெறுவதும் ஜாதகரின் வெளிநாடு சார்ந்த அமைப்பில் இருந்து அதிர்ஷ்டத்துடன் கூடிய யோக வாழ்க்கையை வாரி வழங்குகிறது, 2,4,5,8,11,12ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்டத்தை குறிக்கும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் 11ம் பாவகம் ஜாதகருக்கு கன்னி ராசியில் 1 பாகையில் ஆரம்பித்து 28 பாகைகள் துலாம் ராசியில் வியாபித்து நிற்பது கவனிக்கத்தக்கது, மேலும் லாப ஸ்தானத்துடன் பொருளாதர மேன்மை மற்றும் சுகபோகத்தை குறிக்கும் வீடுகள் யாவும் ( 2,4,5,8,11,12ம் வீடுகள் ) சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கான யோக வாழ்க்கையை மிக பெரிய அளவில் வாரி வழங்குவது கவனிக்கத்தக்கது.

ஒரு ஜாதகருக்கு மிதம் மிஞ்சிய செல்வவளத்தை தாறுமாறாக வாரி  வழங்கும் வல்லமை பெற்றது மறைவு ஸ்தானம் என்று உணரப்பட்ட 6,8,12ம் வீடுகளே, ஜாதகருக்கு வரும் பொருளாதார வளர்ச்சி எப்படி வந்தது என்று மற்றவர்கள் கண்டுஅறிய இயலாவண்ணம், ஜாதகருக்கு தன்னிறைவான பொருளாதார முன்னேற்றத்தை வாரி வழங்கும் வல்லமை பெற்றது மேற்கண்ட 6,8,12ம் வீடுகள், அப்படிப்பட்ட வீடுகள் எல்லாம் ஜாதகருக்கு அதிர்ஷ்ட ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கான பொருளாதார வெற்றியை எதிர்பாரா அளவில் நிர்ணயம் செய்துள்ளது என்பதே உண்மை, இதற்குஎல்லாம் சிகரம் வைத்தார் போல் அமைவதுதான் அடுத்து வரும் பத்திகளில் நமக்கு ஆச்சரியங்களை வழங்க இருக்கின்றது.

ஆம் ஜாதகருக்கு கடந்த சனி திசை 19 வருடமும், 1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான  7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் , 4,12ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக சுப பலனை வாரி வழங்கியது இளமையில் சகல யோகத்தையும், திறமைக்கான வெற்றிகளையும் அங்கீகாரம் செய்தது, தற்போழுது நடைமுறையில் உள்ள புதன் திசை ஒருபடி மேலே சென்று 2,5,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அதிர்ஷ்டங்களை வாரி வழங்கிக்கொண்டு இருப்பது ஜாதகருக்கு நன்மையை தருகின்றது என்ற போதிலும், 3,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகித இன்னல்களை தருவது, செல்வம், சுகபோகம் உண்டு ஆனால் வாரிசு இல்லை என்ற நிலையை தந்துள்ளது, 9ம் பாவகம் ஜாதகருக்கு கடக ராசியில் ஆரம்பித்த போதிலும் அதில் 5 பாகைகளையே கொண்டுள்ளது, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பூர்வ புண்ணியமான சிம்மராசியில் 27 பாகைகளை கொண்டு 9ம் பாவகம் பாதக ஸ்தானமாக அமைவது ஜாதகருக்கு புத்திர பாக்கிய தடைக்கு அடிப்படை காரணமாக அமைகிறது என்பது இது தெளிவுபடுத்துகிறது.


குறிப்பு :

 சுய ஜாதகத்தில் அயல் தேச யோக வாழ்க்கையை குறிக்கும், 1,7,10,12ம் பாவகங்களுடன் அதிர்ஷ்டத்தை தரும் 11ம் பாவகமும் வலிமை பெற்று இருப்பது அவசியமாகிறது, மேலும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு துலாம் ராசி  மற்றும் மீன ராசி வலிமையையும் நாம் கருத்தில் கொண்டு " திரைகடல் ஓடி திரவியம் தேடுவது " சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வெள்ளி, 15 ஜூன், 2018

தொழிலில் ஏற்படும் பேரிழப்பை உணர்ந்து எச்சரிக்கையுடன் செயல்படுவது எப்படி? இதை ஜாதக ரீதியாக அறிந்துகொள்ள இயலுமா ?



  இன்னும் நமது கிராமங்களில் " வல்லவனையும் தட்டுமாம் வழுக்குப்பாறை " என்று சிலேடையாக சொல்வதுடன், மிகுந்த தொழில் நுணுக்கம் கொண்டுள்ள ஒருவரை கூட மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தி ஆரம்பித்த இடத்துக்கே கொண்டுவந்துவிடும் தன்மை பெற்றது "விதி" இதை மதியறிவு கொண்டு வெல்வது என்பது அவரவர் சுய ஜாதகத்தில் உள்ள 1,5,9ம் பாவகங்களின் வலிமை நிலையே என்றால் அது மிகையில்லை, ஒருவருக்கு வரும் யோக அவயோக நிலையை பற்றி வருமுன் தெளிவாக கட்டியம் கூற சுய ஜாதகத்தில் மேற்கண்ட 1,5,9ம் பாவகங்களின் வலிமை நிலை அவசியமாகிறது, மேற்கண்ட பாவகங்களின் வலிமை, ஜாதகருக்கு எதிர்வர இருக்கின்ற நன்மை தீமையை பற்றி சுய அறிவுபூர்வமாகவோ, குல தெய்வ ஆசியின் மூலமாகவோ, ஆன்மீக பெரியவர்களின் அறிவுறுத்தல் மூலமாகவோ தெள்ள தெளிவாக எடுத்துரைத்து காக்கும், ஜாதகருக்கு வரும் இழப்பில் இருந்து பாதுகாப்பும், யோக அமைப்பில் இருந்து விழிப்புணர்வும் தந்து அருள் புரியும், ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : துலாம் 
ராசி : கடகம் 
நட்ஷத்திரம் : ஆயில்யம் 

 மேற்கண்ட துலா லக்கின ஜாதகருக்கு லக்கினாதிபதி மற்றும் ஆயுள் ஸ்தான அதிபதியான சுக்கிரன் திசை 20/05/1998 முதல் 20/05/2018 தற்போழுது நடைமுறையில் உள்ளது, இந்த சுக்கிரன் திசை ஜாதகருக்கு 3,5,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சிறப்பான யோக பலனை பாக்கிய ஸ்தான வழியில் இருந்து தந்து கொண்டு இருப்பது வரவேற்கத்தக்க தக்க நன்மைகளை தருவதாகும், குறிப்பாக சுக்கிரன் திசையில் சனி புத்தி 20/03/2011 முதல் 20/05/2014 வரை ஜாதகருக்கு 2,4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் சிறப்பான ராஜ யோக பலனை 2,4,10 பாவக வழியில் இருந்து வாரி வழங்கி இருக்கிறது சுக்கிரன் திசை ஜாதகருக்கு 3ம் பாவக வழியில் இருந்து எதிலும் வெற்றி, புத்தி கூர்மை மூலம் ஆதாயம், சகல சௌபாக்கியம், போக்குவரத்து, ஏஜென்சி துறை லாபம், ஏற்றுமதி இறக்குமதி தொழில் வழியிலான நன்மைகள், வியாபார விருத்தி, நல்ல  சிந்தனைகள் தரும் வெற்றி, கனிம சுரங்க பொருட்கள் மூலம் லாபம், நுண்ணறிவு திறன்  மூலம் பெரும் அதிர்ஷ்டங்கள் என்ற வகையிலும், 5ம் பாவக வழியில் இருந்து மிகுந்த மனவலிமை, விரைவாக சிறந்த முடிவுகளை மேற்கொள்ளும் வல்லமை அதன் வழியிலான முன்னேற்றங்கள், சமயோசித புத்தி சாலித்தனம், ஆய்வு திறன், நல்ல பழக்கங்கள் மூலம் நன்மைகளை பெறுதல் என்ற வகையிலும், 9ம் பாவக வழியில் இருந்து நிறைவான அறிவு திறன், பயணங்கள் மூலம் லாபம், இடமாற்றம் சூழ்நிலை மாற்றத்தில் விருப்பம் மற்றும் சிறப்பான வளர்ச்சி பித்ருக்களின் ஆசி மூலம் வாழ்க்கையில் சுபயோகங்களை பெறுதல் என்ற வகையில் யோக பலனை வாரி வழங்கியது.

சுக்கிரன் திசையில் கடந்த சனி புத்தி சனி புத்தி 20/03/2011 முதல் 20/05/2014 வரை ஜாதகருக்கு 2,4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 2ம் பாவக வழியில் இருந்து தொழில் வழியிலான அபரிவித வருமானம், பேச்சு திறன் மூலம் வரும் வியாபர விருத்தி, லட்சியங்களை அடையும் வல்லமை, அதீத தனசேர்க்கையை சொந்த உழைப்பில் பெரும் வல்லமை, கவுரவம், அந்தஸ்து, புகழ், பரிசு அனைத்திலும் வெற்றி என்ற வகையிலும், 4ம் பாவக வழியில் இருந்து நல்ல தொழில் முன்னேற்றம், பெயரும் புகழும் உண்டாகும் தன்மை, மண் மணை வண்டி வாகன யோகம், ஆள் வசதி, பெரிய சொத்து சுக சேர்க்கை, அரசு மரியாதை மற்றும் கவுரவம், சமூக வாழ்க்கையில் வெற்றி, அரசியலில் ஆதாயம் என்ற வகையில் சிற்பபுகளை தரும், 10ம் பாவக வழியில் இருந்து தொழில் வழியிலான அபரிவித முன்னேற்றம், கம்பீரமான செயல்பாடுகள், தீர்க்கமான முடிவுகள் வழியில் பெரும் முன்னேற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சி, செய்தொழில் வழியிலான ராஜ யோகம் என்ற வகையில் சிறப்புகளை வாரி வழங்கி இருக்கிறது.

சுக்கிரன் திசையில் சனி புத்திக்கு அடுத்து வந்த புதன் புத்தி ( 20/05/2014 முதல் 20/03/2017 வரை ) ஜாதகருக்கு மிகுந்த சோதனை காலமாக மாறியது விதி செய்த கொடுமையாகவே கருதலாம், புதன் புத்தி ஜாதகருக்கு 6,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழுவீச்சில் ஜாதகரை படு குழியில் தள்ளியது, 6ம் பாவக வழியில் இருந்து வரம்பு மீறிய கடன், மிதமிஞ்சிய செலவுகள், வேலையாட்கள் வழியிலான இழப்புகள், பொருளாதர பின்னடைவு, எதிரிகள் தொந்தரவு, அனைத்து இடங்களில் இருந்து வரும் எதிர்ப்புகள், எதிர்பாராத கடன்கள், ஜாமீன் கொடுப்பதால் வரும் இன்னல்கள், வாங்கும் கடன் அனைத்தும் திடீர் இழப்பை சந்திக்கும் நிலை, நிலையற்ற பொருளாதரம், எதிர்பார்ப்புகள் யாவும் பொய்த்து போகும் தன்மை, எதிர்பாலின சேர்க்கையின் மூலம் திடீர் இன்னல்கள், நிம்மதி இன்மை, அனைத்திலும் தோல்வி, வழக்குகளில் சிக்கல்கள், சட்ட சிக்கல்கள், பொருள் இழப்பு என்ற வகையில் ஜாதகருக்கு கடுமையான இன்னல்களை தர ஆரம்பித்தது.

8ம் பாவக வழியில் இருந்து நீண்ட ஆயுளை நல்கிய போதிலும், பேரிழப்பு, விபத்து, துயரம், மற்றவர்களால் வரும் துன்பங்கள், தீயநண்பர்கள் சகவாச தோஷம், திட்டமிட்டு செயல்பட முடியாத நிலை, எதிர்த்து போராட வலிமையற்ற சூழல், உதவி செய்ய யாருமற்ற தன்மை, வாழ்க்கை துணை வழியிலான இழப்புகள் மற்றும் துன்பங்கள், தெய்வீக அனுகிரகம் இன்மை, முரண்பட்ட செயல்பாடுகள், தாங்க இயலாத துன்பம், சொத்துக்களை இழக்கும் சூழ்நிலை, சொத்துக்கள் அனைத்தும் வீண் விரயமாகும் தன்மை, திருப்தி இல்லாத மனநிலை, ஆயுள் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் வீடான ரிஷபத்தில் அமைவதால், ஜாதகருக்கு வரும் வருமானம் மற்றும் கடன் யாவும் திடீர் இழப்பை சந்திக்கும் சூழ்நிலை, எதிரியின் பிடியில் இழப்பை சந்திக்கும் சூழல், அனைத்தையும் இழந்து தவிக்கும் நிலைக்கு ஆளாகுதல் என்ற வகையில் ஜாதகருக்கு கடுமையான பாதிப்பை பாக்கியம் மற்றும் விரைய ஸ்தான அதிபதியான புதன் புத்தி தர ஆரம்பித்தது, மேலும் ஆயுள் பாவகம் ஸ்திர ராசி என்பதால் ஜாதகருக்கு வந்த இன்னல்கள் யாவும் வெகு காலம் ஆறாத ரணம், மறையாத சுவடை ஏற்படுத்தி ஜாதகருக்கு "நித்ய கண்டம் பூர்ண ஆயுசு" என்பதற்கு இணையான சூழலை உருவாக்கியது.

சுக்கிரன் திசை முடிவில் நடைபெற்ற கேது புத்தி ஜாதகருக்கு 3,5,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நன்மைகளை தந்தது, ஏற்பட்ட பாதிப்பில் இருந்து சிறிய அளவில் மீண்டு வரும் வாய்ப்பை நல்கியது, சுய ஜாதகத்தில் மேற்கண்ட பாதிப்பை ஜாதகர் 5,9ம் பாவக வழியில் இருந்து உணர்ந்த போதிலும் லக்கினம் எனும் முதல் வீடு ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது போதிய நிதி மேலாண்மை திறன் அற்றவர் என்பதனையும், திட்டமிட்டு செயல்படும் தன்மை அற்றவர் என்பதனையும் தெளிவுபடுத்துகிறது, மேலும் நண்பர்கள் கூட்டாளிகள், வாழ்க்கை துணை வழியிலான பேரிழப்புகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்க்கு ஆர்ப்பட்டவர் என்பதை தெளிவாக உணர்த்துகிறது.

தற்போழுது நடைமுறையில் உள்ள சூரியன் திசை ஜாதகருக்கு 3,5,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவது ஜாதகருக்கான புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைக்கும் வல்லமை கொண்டது, இருப்பினும் சூரியன் திசையில் எதிர் வரும் சந்திரன் புத்தி 1,7,11ம் பாவக வழியில் இருந்து கடும் நெருக்கடிகளை தரும், மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கே வந்துவிட்டதை போன்ற உணர்வை ஜாதகர் பெறுவார், சுக்கிரன் திசையில் நடைபெற்ற சுபயோக பலன்கள் சூரியன் திசையில் நடைமுறைக்கு வந்த போதிலும், யோக காலம் என்பது மிகவும் குறைவாகவே இருக்கும், ஜாதகர் சூரியன் திசையில் சந்திரன் புத்தியை எதிர்கொள்வது என்பது சற்று சவாலான விஷயமாகவே படுகிறது.

குறிப்பு :

சுய ஜாதகத்தில் யோக பலன்கள் பாவக வழியில் இருந்து வழங்கிய போதிலும், லக்கினம் வலிமையுடன் இருந்தால் மட்டுமே ஜாதகர் அதை முழுவதுமாக சுவீகரிக்க இயலும், லக்கினம் வலிமை இழப்பது அல்லது 6,8,12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது அல்லது பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது அனைத்தும் ஜாதகருக்கு மற்ற பாவக வழியில் இருந்து வரும் யோக பலன்களை, கிரகிக்கும் வல்லமையை தாராது என்பதுடன் ஜாதகராலே அது விரயமாகும், மேற்கண்ட ஜாதகருக்கு 2,4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிதமிஞ்சிய யோக பலனை தரும் என்ற போதிலும், 1,7,11ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர், அவரது வாழ்க்கை துணை, நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் ஜாதகரின் அதிர்ஷ்டமின்மை ஆகியவை ஜாதகருக்கு வரும் யோக பலனை கபளீகரம் செய்யும் என்பது கவனிக்கத்தக்கது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

திங்கள், 11 செப்டம்பர், 2017

தொழில் முன்னேற்றமும் சுய ஜாதகத்தில் பாவகங்களின் வலிமையும் !

 
ஒருவரின் வாழ்க்கை கௌரவ குறைவின்றி, சிறப்பாக இயங்க  அடிப்படையாக காரணமாக அமைவது அவரது சுய ஜாதகத்தில் உள்ள பாவகங்களின் வலிமை என்றால் அது மிகையில்லை, குறிப்பாக ஜாதகருக்கு நல்ல ஜீவனத்தை வழங்குவதில் தொழில் ஸ்தானம் எனும் 10ம் பாவக வலிமை முதன்மை வகிக்கிறது, மேலும் கேந்திர ஸ்தானம் எனும் 1,4,7,10ம் பாவகங்களும், கோண ஸ்தானம் எனும் 1,5,9ம் பாவகங்களும் சுய ஜாதகத்தில் வலிமை பெறுவது ஜாதகரின் வாழ்க்கையில் துன்பம் இல்லா சுபயோக வாழ்க்கையினை பெறுவதற்கு தடை ஏதும்  இருக்காது, மேலும் நடைபெறும் திசா புத்திகள் ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக பலனை மட்டும் ஏற்று நடத்தும் பொழுது ஜாதகரின் வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு குறை இல்லை என்றே சொல்லலாம், கீழ்க்கண்ட உதாரண ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமை மற்றும் அதன் அடிப்படையில் ஜாதகர் பெரும் நன்மைகளை இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : தனுசு
ராசி : துலாம்
நட்ஷத்திரம் : ஸ்வாதி 4ம் பாதம்

 ஜாதகர் தனுசு லக்கினம், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியை ஜாதகர் லக்கினமாக பெற்று இருப்பது கவனிக்க தக்க விஷயமாகும், மேலும் லக்கினம் எனும் முதல் வீடு தொடர்பு பெறுவது தனது  லக்கினத்திற்கு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் ( 9ம் பாவகம் ஜாதகருக்கு  கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பூர்வ புண்ணியம் என்று அழைக்கப்படும் சிம்ம ராசியில் அமைவது கூர்ந்து கவனிக்க வேண்டிய அம்சமாகும்  ) ஜாதகரின் லக்கினம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கியமாகவும், லக்கினம் தொடர்பு பெறுவது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பூர்வ  புண்ணியமாகவும் அமைவது ஜாதகரின் லக்கினம் பெரும் வலிமையை நமக்கு தெளிவு படுத்துகிறது, ஜாதகர் மிதம் மிஞ்சிய அறிவு திறனும், சமயோசித புத்திசாலித்தனமும் நிரம்ப பெற்றவர் என்பதை தெளிவு படுத்துகிறது, அடிப்படையில் ஓர் ஜாதகத்தில் லக்கினம் வலிமை பெறுவது என்பது ஜாதகரின் உயிர், உடல் மற்றும் மனம் சார்ந்த வலிமையை உறுதிபடுத்தும், ஜாதகருக்கு லக்கினம் பாக்கிய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர் பாக்கிய ஸ்தான வழியில் இருந்து ஸ்திரமான நன்மைகளை தொடர்ந்து பெறுவார் என்பது வரவேற்க்கதக்க சிறப்பு அம்சமாகும், தொழில் துறையில் சிறந்து விளங்க முதலில் லக்கினம் வலிமை பெற்று இருப்பது அவசியமாகிறது, லக்கினம் வலிமை பெற்றால் மட்டுமே ஜாதகர் தன்னிச்சையாக முடிவெடுக்கும் வல்லமை பெற்றவர் என்பதும் சுய ஆளுமை மற்றும் நிர்வாக திறன் கொண்டவர் என்பதும் உறுதியாகும், தான் செய்யும் தொழில் வழியிலான நன்மைகளை ஜாதகரே பெரும் யோகம் பெற்றவர் என்பதனையும் உறுதி படுத்தும், லக்கினம் வலிமை பெற வில்லை எனில் ஜாதகரின் உழைப்பு தொழில் வல்லமை அனைத்தும் மற்றவர்களுக்கு பயன்படும் நிலையை தரும்,மேலும் தொழில் ரீதியான பிரச்சனைகளை சமாளிக்கும் வலிமை இன்றி சுய ஆளுமை திறன் இன்றி செய்தொழிலில் பெருத்த நஷ்டங்களை எதிர்கொள்ளும் நிலையை தரும், எனவே சுய ஜாதகத்தில் லக்கினம் வலிமை பெறுவது என்பது தொழில் மட்டுமல்ல அனைத்திற்கும் நல்லது, மேற்கண்ட ஜாதகருக்கு லக்கினம் பாக்கிய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது இறைஅருளின் பரிபூர்ண கருணையையும், வருமுன் உணரும் வல்லமையையும் பெற்றவர் என்பதனையும் தெளிவு படுத்துகிறது, இதனால் ஜாதகர் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காண்பவர் என்பது உறுதியாகிறது.

சுய ஜாதகத்தில் 4ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகர் தான்  தொழில் ரீதியாகவும், வியாபார நோக்கத்திலும் சொத்து, பொருட்கள் மற்றும் வண்டி வாகனங்களை முதலீடு செய்யும் யோகம் பெற்றவர் என்பதுடன், தொழில் ரீதியான நடவடிக்கை மற்றும் திட்டமிடுதல்களை மிக சிறப்பாக செய்யும் செயல்படுத்தும் யோகம் பெற்றவர் என்பதனை உறுதிப்படுத்துகிறது, நல்ல குணமும் அனுசரித்தது செல்லும் மனமும் ஜாதகரை தொழில் ரீதியான வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்கும், மேலும் ஜாதகர் தமது சுய உழைப்பின் மூலம் சொத்து வண்டி வாகனம் மற்றும் பொருள் வரவை தங்கு தடையின்றி பெரு[பெறுபவர் என்பதனை உறுதிப்படுத்துகிறது.

சுய ஜாதகத்தில் 7ம் பாவகம் வலிமை பெறுவது மக்கள் தொடர்பு மற்றும் வியாபர நுணுக்கம், வியாபாரத்தில் வெற்றி என்ற வகையில் சுபயோகங்களை  வாரி வழங்கும், பல வெளிநாடுகள் அல்லது வெளியூர் வழியிலான வியாபர விருத்தியை தரும், அந்நிய நபர்கள் அறிமுகம் ஏற்றுமதி இறக்குமதி தொழில் வழியிலான லாபங்கள் அதிகரிக்கும், கூட்டு தொழில் அல்லது கூட்டாளிகள் மூலம் ஜாதகர் வாழ்க்கையில் நிகரில்லா வளர்ச்சியை பெறுபவர் என்பதனை மிக தெளிவாக உறுதிபடுத்துகிறது, மேலும் ஜாதகர் செய்யும் தொழில் குறுகிய காலத்தில் பெரும் வெற்றிகளை தரும் என்பதுடன், தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் பொருளாதர தன்னிறைவை எதிர்பாரா வண்ணம் வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

சுய ஜாதகத்தில் 10ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகர் சுய தொழில் செய்வதன் மூலம் அபரிவிதமான வெற்றிகளை தொடர்ந்து பெறுபவர் என்பதுடன் ஸ்திரமான தொழில் முன்னேற்றங்களை பெறுபவர் என்பதும் தெளிவாகிறது, ஜாதகரின் ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சத்ரு ஸ்தானமாக அமைவது ஜாதகர் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் தொழிலை தேர்வு செய்து வெற்றி காண்பார் என்பதுடன், ஜாதகரின் தொழில் எதிரிகள் மூலமே ஜாதகருக்கு தொழில் வெற்றிகள் தேடிவரும் என்பது கவனிக்க தக்க சிறப்பு அம்சமாகும்.

2,5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 2ம் பாவக வழியில் இருந்து கை நிறைவான வருமான வாய்ப்பை பெறுபவர் என்பதுடன் பொருளாதார முன்னேற்றத்தை தொடர்ந்து பெரும் அமைப்பை தரும், 5ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் அறிவு திறன் சமயோசித புத்திசாலித்தனம் தொடர்ந்து அதிர்ஷ்டம் மற்றும் தன வரவை தொடர்ந்து தரும், ஜாதகரின் புத்திசாலித்தனமான நடவடிக்கைகள் மிகப்பெரிய லாபங்களை வாரி வழங்கும், 11ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் தொடர் அதிர்ஷ்டத்துடன் கூடிய மிகுந்த தன லாபத்தை பெரும் யோகத்தை தரும், தன்னம்பிக்கையும், முற்போக்கு சிந்தனையுடன் கூடிய திட்டமிடுதல்கள் ஜாதகரின் வாழ்க்கையை மிகவும் யோகம் மிக்கதாக மாற்றும்.

1,3,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு இலக்கின வழியிலான சுபயோக பலன்களையும், 3ம் பாவக வழியிலனா சகல சௌபாக்கியம் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி மேல் வெற்றி என்ற நிலையை தரும், வியாபர விருத்தி என்பது ஜாதகருக்கு மிக அபரிவிதமாக அமையும், தோல்வி அற்ற நிலை என்பதுடன் மிகுந்த மன வலிமையை ஜாதகருக்கு வாரி வழங்கும், வீரியமிக்க செயல்திறன் மூலம் ஜாதகர் சகல நன்மைகளையும் பெறுவார், 9ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு அனுபவ அறிவு அதிக அளவில் அதிகரிக்கும், தெளிவான சிந்தனை மற்றும் முடிவெடுக்கும் திறன் இயற்கையாக அமைந்து இருக்கும், தனது வாழ்க்கையை மிகவும் பயனுள்ளதாக மாற்றத்தக்க வல்லமை பெற்றவர் என்பது சிறப்பு தகுதியாகும்.

சுய ஜாதகத்தில் ஜாதகருக்கு 8,12 ம் பாவகத்தை தவிர மற்ற பாவகங்கள் அனைத்தும் வலிமை பெற்று இருப்பது ஜாதகர் தொழில் அதிபர் என்ற நிலைக்கு உயர்த்தும் வல்லமை பெற்றது என்பது கவனிக்க தக்க சிறப்பு அம்சமாகும்.

சுய ஜாதகத்தில் 10பாவகங்கள் வலிமை பெற்றதுடன் தற்போழுது  நடைபெறும்  சனி திசை வலிமை பெற்ற லாப ஸ்தான பலனை ஏற்று நடத்துவதுடன், எதிர்வரும் புதன் திசை வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துவது வரவேற்க தக்க சிறப்பு அம்சமாகும், சுய ஜாதகத்தில் பாவகம் வலிமை பெறுவதுடன் நடைபெறும், எதிர்வரும் திசாபுத்திகள் வலிமை பெற்ற லாபம் மற்றும் ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகரின் தொழில் வெற்றிகளை வாரி வழங்கும் என்பதே மேற்கண்ட ஜாதகத்தில் உள்ள தொழில் சார்ந்த பாவக வலிமை நிலை, மேலும் ஜாதகர் தொழில் ரீதியாக மிக பெரிய வெற்றிகளை  பெறுவார் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

சனி, 22 ஏப்ரல், 2017

அட்சய திரிதியை சிறப்பும், வாழ்க்கையில் பெரும் சுபயோகங்களும் !


அட்சய திரிதியை 

நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளாகிய "இறை அருள் " மனித வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வழங்கும், சுபயோக நாள் மற்றும் நேரங்களில் " அட்சய திரிதியை " முதன்மை வகிக்கிறது என்றால் அது மிகையில்லை, "அட்சய திரிதியை" என்பது செல்வ வளம் தரும் நாளாக போற்றப்படுகிறது. இன்றைய தினம் நாம் செய்யும் நற்காரியங்கள் மேன் மேலும் வளரும் என்பது ஐதீகம். சித்திரை மாதம் அமாவாசைக்கு அடுத்த மூன்றாம் நாள் அட்சய திரிதியை நாளாகும்.

எதிர்வரும் அட்சய திரிதியை நாள் ( 29/04/2017 )  மேலும் சில சிறப்புகளை பெற்று இருப்பது கவனிக்கத்தக்க அம்சமாகும், ஏனெனில் நட்ஷத்திரங்களில் முதன்மையானதும், சந்திரனால் மிகவும் விரும்பப்படுவதுமான " ரோஹிணி " நட்ஷத்திரம் அன்றைய நாளில் அமைகிறது, மேலும் விருத்தியை குறிக்கும் ( சனி பெருக்கம் ) சனிக்கிழமை நாளில் இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து வருவது சுபயோகங்களை தரும் தனி சிறப்பான " அட்சய திரிதியை " நாளாக அமைவது கவனிக்கத்தக்க விஷயமாகும். ( கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் ராசியான ரிஷபத்தில் சந்திரன் உச்ச நிலையை பெறுவதுடன், ரோஹிணி நட்ஷத்திரத்தில் சஞ்சாரம் செய்வது நிலையான வருமான வாய்ப்பை நல்கும் அமைப்பாகும், மேலும் இந்தநாளில் அட்சய திரிதியை வருவது சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும் )

சாதாரணமாக ரோகிணி நட்ஷத்திரத்துடன் கூடிய சனிக்கிழமை நாளில், அமிர்த யோகத்தில் தங்கம் வாங்குவது சம்பந்தப்பட்ட அன்பர்களுக்கு, பெரியஅளவிலான " சொர்ண ஆகர்ஷ்ணத்தை " நல்கும், எதிர்வரும் அட்சய திருதியை நாளில் திரிதியை திதி, ரோஹிணி நட்ஷத்திரம், சனி கிழமை மற்றும் அமிர்த/சித்த யோகங்கள் அனைத்தும் ஒன்று கூடி வருவது, ஏழ்மை நிலையில் வாடிய குசேலனுக்கு பகவான் " ஸ்ரீ கிருஷ்ணன் " வாரி வழங்கிய பெரும் செல்வத்திற்க்கு நிகரான வாழ்க்கையை நமக்கும் வாரி வழங்கும், இந்த நாளில் தங்கம் வாங்குவது நமது வாழ்க்கையில் சகல வித சௌபாக்கியங்களையும் நிறைவாக தரும் என்பதில் சந்தேகமில்லை.

குறிப்பாக எதிர்வரும் அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்க நமது முன்னோர்களும், சாஸ்திர வல்லுனர்களும் ஏன் பரிந்துரை செய்தனர் என்றால் ? சுப யோகங்களுக்கு முழு முதற் சுப கிரகமாகவும், பொன்னவன் என்று சாஸ்திர வல்லுநர்களால் போற்றப்படுபவருமான " குரு பகவான் " பரிபூர்ணமாக நிறைந்து நிற்கும் உலோகம் "தங்கம்" அப்படி பட்ட தங்கத்தை நமது வீட்டிற்கு அட்சய திரிதியை நாளில் கொண்டுவரும் பொழுது இதுவரை இருந்த துன்பங்கள் யாவும் விலகி குருபகவானின் அருள் கருணையினால் தொடர்ந்து சுபயோகங்கள் மற்றும் அதிர்ஷ்டம் அனைவரது வாழ்க்கையிலும் நடைபெறும் என்ற விஷயத்தை அனுபவபூர்வமாக உணர்ந்த ஆன்மீக பெரியோர்களும், சாஸ்திர வல்லுனர்களும் " யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் " என்ற உயரிய நோக்கத்தின் அடிப்படையில் அனைவரும் பயனுற இந்த அட்சய திரிதியை   நாளை நமக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

எதிர்வரும் அட்சய திரிதியை ( 29/04/2017 ) நாளில், தாங்கள் ஓர் குண்டுமணி அளவு தங்கத்தை சுவீகாரம் செய்தாலும், அது தங்களது வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும், நீடித்த அதிர்ஷ்டத்தையும்  வாரி வழங்கும், சுப யோக நிகழ்வுகள்  தங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து நடைபெறும், குரு பகவானின் அருள் கருணை தங்களது வாழ்க்கையில் சகல விதங்களில்  இருந்தும் முன்னேற்றங்களை வாரி வழங்கும்.

 மேலும் "அட்சய திரிதியை" உடன்  சனி கிழமையில் ரோகிணி நட்ஷத்திரமும் அமிர்த/சித்த யோகமும் கூடி வருவது அளவில்லா " சொர்ண ஆகர்ஷ்ணத்தை" வாரி வழங்கும் என்பது எதிர்வரும் அட்சய திரிதியை நாளுக்கான தனி சிறப்பு என்பதை கருத்தில் கொண்டு ஏழை எளியவரும் வாழ்க்கையில் நலம் பெற இந்த நல்ல நாளை பயன்படுத்தி நலம் பெறுங்கள், எதிர்வரும் அட்சய திரிதியை நாளில் புதிய தங்கம் வாங்குவதுடன் சுப காரியங்கள் மற்றும்  புதிய தொழில் துவக்கம், புதிய வண்டி வாகனம், புதிய சொத்து, புதிய வீடு, புதிய வஸ்திரம் என்ற விஷயங்களை வாங்கும் பொழுது வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களும் வந்து சேரும், வசதி குறைவாக உள்ளோர் இந்த அட்சய திரிதியை யில் சிறிது தங்கம் வாங்கும் பொழுது,  அதனால் வரும் குரு பகவானின் கருணையினால் அடுத்த அட்சய திரிதியையில் மேற்கண்ட சுப யோகங்களை தங்கு தடையின்றி பெறுவார்கள் என்பது சாஸ்திர வல்லுநர்கள் மற்றும் முன்னோர்கள்  சத்திய வாக்கு.

அட்சய திரிதியை சிறப்பு :

செல்வத்திற்கு அதிபதியான குபேரன் தான் இழந்த சங்க நிதி, பதும நிதிகளை பெற்றது அட்சய திரிதியை நாளில்தான். பாண்டவர்கள் வன வாசத்தின் போது சூரியனிடம் இருந்து அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் பெற்றது இந்த நாளில்தான். 

அதேபோல் மணிமேகலையும் இந்த நாளில்தான் அட்சய பாத்திரம் பெற்றுள்ளார். அனைத்து வளங்களையும் இழந்து பிச்சாடனரான சிவபெருமான் தன் கையில் இருந்த கபாலத்தில் காசி அன்னபூரணியிடம் இருந்து உணவு பெற்று பிரமகத்தி தோஷத்தில் இருந்து விடுபட்டதும் இந்த நாள்தான். 

கனகதாரா ஸ்தோத்திரம் : 

ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி ஏழை பெண்ணுக்கு தங்க நெல்லிக்கனி மழை பெய்ய வைத்த நாளும் அட்சய திரிதியை நாள்தான். கிருஷ்ணா அவதாரத்தில் குசேலர் அளித்த அவலை சாப்பிட்டு அவரை செல்வத்திற்கு அதிபதியாக உயர்த்திய நாளும் இந்த நாள்தான். 

குபேரன் மகிமை :

 செல்வத்திற்கும் தன தான்யத்திற்கும் அதிபதியான குபேரரை வணங்கினால் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. குபேர வழிபாட்டின் போது லட்சுமியையும் வணங்கவேண்டும். இதனால் வழிபாட்டின் முழு பலனும் கிடைக்கும். குபேரர் நிலத்தில் விளையும் தானியங்களுக்கு அதிபதியாக திகழ்கிறார். இதனால் விவசாயிகள் தங்கள் விவசாய விளை பொருட்களை குபேரர் முன் வைத்து வழிபடுகின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் விவசாயம் செழிப்படையும் என்பது நம்பிக்கை. அறுவடை காலங்களில் குபேரனுக்கு காணிக்கையாக விளை பொருட்களை படைக்கின்றனர்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வெள்ளி, 16 டிசம்பர், 2016

வாழ்க்கையின் முன்னேற்றங்களை நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தின் பங்கு !


"ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
  கருதி இடத்தான் செயின்"

(செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.

அந்த கால நேரத்தை துல்லியமாக அறிந்துணர்ந்து செயல்பட உதவுவதே, ஜோதிட சாஸ்த்திரம் என்றால் அது மிகையில், சுய ஜாதகத்தை கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கொண்டு ஒருவரின் வாழ்க்கையில் நடைபெற்ற, நடைபெறுகின்ற, நடைபெறக்கூடிய நன்மை தீமை, யோக அவயோகங்களின் தன்மையை பற்றி ஜோதிடகணிதம் கொண்டு தெளிவுற கூற இயலும், குறிப்பாக ஒரு ஜாதகரின், உடல் நலம், மனநலம், கல்வி, தொழில், திருமணம், பொருளாதர முன்னேற்றம், புத்திரபாக்கியம், சொத்துசுகம், வண்டி வாகன  யோகம், புகழ் அந்தஸ்து, மனநிம்மதி மற்றும் ஆன்மீக வெற்றி என ஜாதகர் ஜாதகர் வினவும் ஒவ்வொரு கேள்விக்கும் துல்லியமான பதில்களை நல்குவதே, ஜோதிடசாஸ்த்திரம், சுய ஜாதக ஆலோசனையின் அடிப்படையில் மேற்கொள்ளும் காரியங்கள் நிச்சயம் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு தன்னிறைவான யோக வாழ்க்கையை வாரி வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை, கீழ்கண்ட ஜாதகருக்கு, சுய ஜாதக வலிமையின் அடிப்படையில், வழங்கும் ஆலோசனை பற்றியும், அவரது கேள்விகளுக்கு உண்டான பதில் பற்றியும் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


ஜாதகரின் கேள்வி :

தனது ஜாதகத்தில் உள்ள பாவகங்களின் வலிமை ?

1,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது லக்கினம் மற்றும் பாக்கிய ஸ்தான வழியில் இருந்து 200% விகித இன்னல்களையும்.

2,4,6,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, குடும்பம்,சுகம்,சத்ரு,ஜீவனம் மற்றும் விரைய ஸ்தான அமைப்பில் இருந்து ஸ்திரமான இன்னல்களையும்.

3,5,7ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, வீரியம், பூர்வபுண்ணியம், களத்திர ஸ்தான வழியில் இருந்து மிகுந்த யோக பலன்களையும்.

8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஆயுள் பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களையும் ( ஆயுள் பாவகம் சர நெருப்பு தத்துவ ராசி என்பதால் ஜாதகருக்கு பூர்ண ஆயுள் என்றபோதிலும் பித்தம் சார்ந்த உடல் தொந்தரவுகளை ஜாதகர் வாழ்நாள் முழுவதும் சந்திப்பார் )

11ம் வீடு அதிர்ஷ்டம் மற்றும் லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிதம் மிஞ்சிய யோக பலன்களை அளவில்லாமல் வாரி வழங்கும்.

எனவே ஜாதகர் 3,5,7,11ம் வீடுகள் வழியில் இருந்து பரிபூர்ண நன்மைகளையும்,

2,4,6,8,10,12ம் வீடுகள் வழியில் இருந்து இன்னல்களையும், 1,9ம் பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களையும் அனுபவிக்கும் சூழ்நிலையை தரும்.


தற்பொழுது நடைபெறும் திசா புத்தி வழங்கும் பலன்கள் ?

தற்போழுது நடைபெறும் குரு திசை ( 14/11/2003 முதல் 14/11/2019 வரை ) ஜாதகருக்கு 2,4,6,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகரின் வாழ்க்கையில் குடும்பம்,சுகம்,சத்ரு,ஜீவனம் மற்றும் விரைய ஸ்தான அமைப்பில் இருந்து ஸ்திரமான இன்னல்களை தொடர்ந்து வழங்கி கொண்டு இருக்கின்றது இதனால் ஜாதகரின் கல்வி பாதிக்கப்படும், வண்டி வாகனங்கள் மூலம் விரைய செலவு, உடல் உபாதை, விபத்து, தொழில் வேலை வாய்ப்பு இன்மை, மனஅழுத்தம் மற்றும் அதிக மன போராட்டங்களை வழங்கும்.

தற்போழுது நடைபெறும் செவ்வாய் புத்தி( 14/07/2016 முதல் 20/06/2017 வரை ) 3,5,7ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, வீரியம், பூர்வபுண்ணியம், களத்திர ஸ்தான வழியில் இருந்து எடுக்கும் முயற்ச்சி மற்றும் காரியங்களில் வெற்றி, குல தேவதை மற்றும் புத்திசாலித்தனம் மூலம் யோகம், நண்பர்கள் மற்றும் எதிர்ப்பால் இன அமைப்பினர் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் யோகம் உண்டாகும், எதிர் வரும் சனி திசை ஜாதகருக்கு பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவதால் மிகுந்த எச்சரிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்வது நல்லது.

ஜாதகருக்கு உகந்த  தொழில்  

சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவகங்களான பாக்கியம் மற்றும் லாப ஸ்தானம் தொடர்பான ஜீவன வாழ்க்கையை ஜாதகர் கூட்டாகவோ, அல்லது அடிமை தொழிலாகவோ ஏற்று ஜீவனம் முன்னேற்றம் பெறுவதே உகந்தது, குறிப்பாக ஜாதகர் ஆசிரிய பணி அல்லது வாக்கு வன்மையை தொழிலாக ஏற்று ஜீவனம் செய்யலாம், உணவு பொருட்கள் சார்ந்த தொழிலை தேர்வு செய்து கூட்டு முயற்சியில் நலம் பெறலாம், நீர் தத்துவம் சார்ந்த தொழில்கள் ஜாதகருக்கு பன்மடங்கு லாபம் தரும் இருப்பினும் தனிப்பட்ட முறையில் தொழில் செய்வது உகந்தது அல்ல கூட்டு முயற்ச்சியே நல்ல பலன் தரும், தானிய வியாபாரம் ஜாதகரின் வாழ்க்கையில் சகல நலன்களையும், மிதமிஞ்சிய முன்னேற்றங்களை வாரி வழங்கும்.

குறிப்பு :

எதிர்வரும் சனி திசை ஜாதகருக்கு பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்த்துவது உகந்தது அல்ல என்பதை ஜாதகர் உணர்வது அவசியமாகிறது, மேலும் தனது குடும்பத்தில் உள்ள பெரியோர் சொல்லும் வார்த்தைகளை மதித்து நடந்து வாழ்க்கையில் நலம் பெறுவது அவசியமாகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

தொழில் வெற்றிகளை வழங்கும் ஜீவன ஸ்தான வலிமையையும், அபரிவிதமான லாபங்களை வழங்கும் 11ம் பாவக வலிமையையும் !




தொழில் ஸ்தானம் வலிமை பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு, சிறப்பான ஜீவனத்தை தருவது என்பது இயற்கையானதே, ஜாதகரின் உழைப்பும், ஆர்வமும் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல முன்னேற்றங்களை தரும் என்பதில் சந்தேகம் இல்லை, இருப்பினும் சுய ஜாதகத்தில் லாப ஸ்தானம் வலிமை பெரும் பொழுதே ஜாதகரின் உழைப்பிற்கு ஏற்ற பலன்களை ஜாதகரால் அனுபவிக்க இயலும், ஒருவேளை சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று, லாப ஸ்தானம் ஏதாவது ஒரு வகையில் வலிமை இழப்பின் ஜாதகரின் உழைப்பிற்கு ஏற்ற பலன்கள் எதுவும் கிடைக்காது, மற்றவர்களுக்காக உழைக்கும் சூழ்நிலையும், தமது உழைப்பிற்கு ஏற்ற பலாபலன்களை மற்றவர்கள் சுவிகரிக்கும் நிலையையும் தரும், ஜாதகருக்கு எவ்வித லாபமும், உழைப்பிற்கு ஏற்ற பலனும் கிடைக்காது, எனவே சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகருக்கு தொழில் ரீத்யான திறமைகளையும், செய்யும் தொழில் வழியில் வல்லமையை தந்த போதிலும், லாப ஸ்தானம் வலிமை பெற்றால் மட்டுமே ஜாதகர் உழைப்பிற்கு உண்டான பலன்களை தான் பரிபூரணமாக அனுபவிக்க இயலும்.

ஜீவன ஸ்தான வலிமையையும், லாப ஸ்தான வலிமையையும், ஜாதகருக்கு வழங்கும் பலன்களை பற்றி ஓர் உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வோம் அன்பர்களே!


லக்கினம் : தனுசு 
ராசி : கும்பம் 
நட்சத்திரம் : சதயம் 4ம் பாதம்

ஜாதகருக்கு 10ம் வீடு ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது ஜாதகரின் ஜீவன மேன்மையை உறுதி செய்கிறது, மேலும் ஜாதகர் தான் செய்யும் தொழிலில் சிறப்பான திறமைகளையும், சிறந்த அனுபவங்களையும் பெற்றவராக திகழ்வது ஜீவன ஸ்தான வலிமையே காரணம், ஜீவன ஸ்தானம் ஜாதகருக்கு உபய ராசியில் ஆரம்பிப்பது, ஜாதகர் தான் செய்யும் தொழிலில் செய்யும் முதலீட்டின் தன்மையை தெளிவு படுத்துகிறது, ஜாதகரின் ஜீவன ஸ்தானம் கன்னி ராசியில், உபய மண் தத்துவத்தில் இயக்கம் பெறுவதும் ஜீவன ஸ்தான அதிபதியாக சனி பகவான் அமர்வதும், மண் தத்துவம் சார்ந்த மண்ணில் விளையும் பொருட்கள் மற்றும் மண்ணில் இருந்து கிடைக்கும் உலோகம்  போன்ற பொருட்கள் வழியில் இருந்து ஜீவனத்தை நடத்தும் யோகத்தை தந்தது, ஜீவன ஸ்தானம் உபய கன்னி ராசியாக அமைவதால் ஜாதகரின் முதலீடு என்பது வெறும் 30% விகிதத்தில்  அமைந்தது.

ஜாதகருக்கு 11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகர் பெறும் லாபம் மற்றும் அதிர்ஷ்டத்தின் தன்மையை தெளிவு படுத்துகிறது, லாப ஸ்தானம் ஜாதகருக்கு சர காற்று தத்துவ  ராசியான துலாம் ராசியில் அமைவது, தனது உழைப்பின் பலனை தனது அறிவு திறனின் மூலம் பன்மடங்காக அபிவிருத்தி செய்யும் யோகத்தை பெறுகிறார், ஜீவன ஸ்தானம் உபய ராசியிலும், லாப ஸ்தானம் சர ராசியிலும் அமைந்து வலிமை பெறுவது, ஜாதகர் குறைவான முதலீட்டில் பலமடங்கு லாபத்தை தன்னிறைவாக பெறுவதை காட்டுகிறது, மேலும் சுய ஜாதகத்தில் லக்கினம் வலிமை பெறுவது ஜாதகர் தாம் பெரும் லாபத்தின் பலனை அனுபவிக்கும் தன்மையையும், 2ம் பாவகம் வலிமை பெறுவது  நிறைவான நிலையான வருமானத்தை பெரும் யோகத்தையும், 3ம் பாவகம் வலிமை பெறுவது வியாபரம் மற்றும் கமிஷன் மூலம் அபரிவிதமான  வெற்றிகளையும், 5ம் பாவகம் வலிமை பெறுவது நுணுக்கமான அறிவு மற்றும் புத்திசாலிதனத்தையும், வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ளும் தன்மையையும், 7ம் பாவகம் வலிமை பெறுவது தொடர்ந்து மக்கள் ஆதரவையும், வியாபர வெற்றிகளையும், ஏற்றுமதி இறக்குமதி  தொழில் வெற்றிகளையும், வாழ்க்கை துணை மற்றும் கூட்டாளிகள், நண்பர்கள் வழியில் இருந்து அதிர்ஷ்டத்தையும்,  நன்மைகளையும் ஜாதகர் பரிபூரணமாக அனுபவிக்கும் தன்மையை தருவது  ஜாதகர் மற்றும் ஜாதகரின் முன்னோர்கள் செய்த பாக்கியமே.

மேலும் ( 30/10/1996 முதல் 31/10/2013 வரை நடைபெற்ற ) புதன் திசை 17 வருடம் ஜாதகருக்கு லாப ஸ்தான பலனை ஏற்று நடத்தியது செய்யும் தொழில் 100% விகித லாபத்தை தங்கு தடையின்றி வாரி வழங்கியது, மேற்கண்ட புதன் திசை காலத்தில் ஜாதகரின் வளர்ச்சி என்பது சமூகத்திலும்  சரி உலகளவிலும் சரி மிகப்பெரிய அந்தஸ்தையும், கௌரவ  பதவிகளையும் வாரி வழங்கியது, ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் லாப ஸ்தானம் வலிமை பெற்றதும் அல்லாமல், சரியான வயதில் லாப ஸ்தான பலனை ஏற்று நடத்தியது மிகப்பெரிய யோக வாழ்க்கை வாரி வழங்கியது.

தற்பொழுது நடைபெறும் கேது திசை ( 31/10/2013 முதல் 30/10/2020 வரை ) ஜாதகருக்கு 3ம் பாவக பலனை ஏற்று நடத்துவது வீரியமிக்க வெற்றிகளையும், வியாபர லாபங்களையும், நிறைவான சொத்து சுக சேர்க்கைகளையும் தங்கு தடையின்றி வாரி வழங்குகிறது. எனவே ஜாதகருக்கு கேது திசையும் மிகுந்த யோகத்தையே தருகிறது.

அடுத்து வரும் சுக்கிரன் திசையும் ஜாதகருக்கு பாக்கிய ஸ்தான பலனை ஏற்று நடத்துவது தனது வாழ்க்கையின் பரிபூர்ணத்துவத்தை அடைய செய்யும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை, மேலும் சுய ஜாதகத்தில் அனைத்து பாவகங்களும் வலிமை பெறுவதும், நடைபெறும் திசாபுத்திகள் வலிமை பெற்ற பாவகங்களின் பலனை ஏற்று நடத்துவதும், ஜாதகரின் வாழ்க்கையில் தன்னிறைவான பொருளாதார முன்னேற்றங்களை வாரி வழங்கும் என்பது  கண்கூடான உண்மை, ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது தொழில் வெற்றியையும், லாப ஸ்தானம் வலிமை பெறுவது பெற்ற வெற்றியை ஜாதகர் அனுபவிக்கும் யோகத்தையும் தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 12 டிசம்பர், 2015

ராகு திசை ( நடைமுறையில் உள்ள ) எனக்கு நன்மையை தருமா ? தீமையான பலன்களை தருமா ?


பொதுவாக ஒருவரின் சுய ஜாதகத்தில் எந்த ஒரு கிரகத்தின் திசையும் தான் ஏற்று நடத்தும் பாவக பலனை தங்குதடையின்றி வாரி வழங்கும், இதன் அடிப்படையில் தங்களின் சுய ஜாதக அமைப்பின் படி 5ம் பாவகத்தில் அமர்ந்துள்ள ராகு பகவான் தங்களுக்கு தனது திசையில் தரும் பலாபலன்களை இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பரே! 


5ம் பாவகத்தில் அமர்ந்த ராகு என்றவுடனே தங்களுக்கு ஒரு ஐயம் ஏற்படலாம், சுய ஜாதகப்படி மேஷ ராசியில் தானே ராகு அமர்ந்து இருக்கிறார், இது எப்படி 5ல் ராகு அமர்ந்தாக ஆகும் என்ற கேள்வி தங்களுக்குள் ஏற்ப்படுவது இயல்பே, அடிப்படியில் தங்களது ஜாதகத்தில் 5ம் பாவகம் மீன ராசியில் 351:21:13 பாகையில் ஆரம்பித்து மேஷ ராசியில் 20:34:02 பாகையில் முடிவடைகிறது, இந்த 5ம் பாவகத்திர்க்கு உற்பட்ட  11:16:13 பாகையில்  ( மேஷ ராசியில் ) ராகு பகவான் அமர்ந்து இருப்பதை கவனித்தால்,  ராகு பகவான் தங்களின் சுய ஜாதகத்தில் 5ம் பாவகத்தில் அமர்ந்திருப்பது தெளிவாகும், எனவே தங்களது ஜாதகத்தில் 5ம் பாவகத்தில் அமர்ந்த ராகு பகவான் தனது திசை 18 வருட காலங்களில் தங்களுக்கு வழங்கும் பலாபலன்கள் என்ன என்பதை இனி ஆய்வு செய்வோம் அன்பரே !

தங்களின் சுய ஜாதக அமைப்பின் படி தற்பொழுது நடைபெறும் ராகு திசை தங்களுக்கு 11ம் வீடு, அதிர்ஷ்டம் மற்றும் லாப ஸ்தானமாகி  11ம் பாவகத்துடனே சம்பந்தம் பெற்று யோக பலனை தருவது வரவேற்க்கதக்க அம்சமாக கருதலாம், 11ம் பாவக வழியில் இருந்து தாங்கள் அதிக தன்னம்பிக்கை, முற்போக்கு சிந்தனை , நேர்மறை எண்ணங்கள் மூலம் வாழ்க்கையை யோகமனதாக மற்றும் வல்லமை, அனைவராலும் லாபம் மற்றும் ஆதரவு கிடைக்க பெறுதல், எடுக்கும் காரியங்களில் வெற்றி, எதிர்பாராத உதவிகள், திடீர் முன்னேற்றங்கள், அதிர்ஷ்டகரமாக நிகழும் நிகழ்வுகள், பன்முக திறன்கள் மூலம் வாழ்க்கையை மிகவும் எளிமையாக நடத்தும் வல்லமை, அதிர்ஷ்டத்தின் பரிபூரணதுவத்தை அனுபவிக்கும் நிலையை தரும்.

மேலும் தங்களின் ஜாதகத்தில் 11ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 6ம் ராசியான கன்னியில் 8 பாகைகளும், 7ம் ராசியான துலாமில் 20 பாகைகளையும் கொண்டு இருப்பது உபய மண் தத்துவத்தில் இருந்தும், சர காற்று தத்துவத்தில் இருந்தும் லாப ஸ்தான பலன்களை வாரி வழங்கும், தங்களின் அறிவு சார்ந்த செயல்பாடுகள் மக்களிடம் சென்றடையும், மக்கள் செல்வாக்கு உண்டாகும், இதன் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றமும் அதிர்ஷ்டமும் தங்கு தடையின்றி கிடைக்க பெறுவீர்கள்.

பொது வாழ்க்கையிலும் அரசியலிலும் நல்ல முன்னேற்றம் உண்டாகும், வியாபாரத்திலும் ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் எதிர்பாராத முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும், தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகள்  பொதுமக்கள் வழியில் இருந்தும், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியில் இருந்தும் கிடைக்க பெறுவீர்கள், நினைக்கும் காரியங்கள் யாவும் வெற்றி பெரும், தேடுதல் தங்களுக்கு சிறந்த வாழ்க்கையை அமைத்து தரும், அதிக அளவில் தங்களின் 11ம் பாவகம் துலாம் ராசியிலேயே வியாபித்து இருப்பதால், அறிவு சார்ந்த தொழில்களும் நிர்வாக திறமையும் தங்களுக்கு எதிர்பாத வெற்றிகரமான யோக வாழ்க்கையை அமைத்து தரும்.

வாழ்க்கை துணை வழியில் இருந்து நல்ல அதிர்ஷ்டங்களையும் ஆதரவுகளையும் இனிவரும் காலங்களில் தாங்கள் அனுபவிக்க கூடும், சிறந்த கூட்டாளிகள் நல்ல நண்பர்கள் தங்களுக்கு வெகுவாக தாமாகவே முன்வந்து உதவுவார்கள், கேட்க்கும் இடங்களில் இருந்து நல்ல பதில் கிடைக்கு சிறப்பான உதவிகளும் தேடிவரும், தங்களுக்கு வரும் நல்ல வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவது தங்களின் சாமர்த்தியத்திலும் புத்திசாலிதனத்திலும் உள்ளது என்பதால், அதிக விழிப்புணர்வு இனிவரும் காலங்களின் தங்களுக்கு அதிக அளவில் தேவைப்படும்.

தங்களுக்கு தற்ப்பொழுது நடைமுறையில் உள்ள ராகு திசை லாப ஸ்தான பலனையே ஏற்று நடத்துவதால் மிகுந்த நன்மைகளையும் யோக பலன்களையும் தங்குதடையின்றி வாரி வழங்கும் 

 வாழ்த்துகள்.

கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் :

1) கூட்டு முயற்ச்சியில் எச்சரிக்கை தேவை 
2) தாம் மேற்கொள்ளும் முயற்ச்சியில் எந்த காரணத்தை கொண்டும் பின்வாங்குவது நல்லதல்ல.
3) பல முறை சிந்தனை செய்து ஒரு காரியத்தில் இறங்கவும்.
4) வீண் மன கவலையும், மன போராட்டத்தையும் தாங்கள் தவிர்ப்பது நல்லது, 1,9ம் வீடுகள் பாதிப்பதால் உடல் மன நலத்தில் அதிக அக்கறை கொள்வது சிறப்பான யோகத்தை தரும்.
5) வடக்கு திசை வாயிற்படி கொண்ட வீடு, வியாபர ஸ்தலங்கள் தங்களுக்கு அபரிவிதமான யோகத்தை வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வெள்ளி, 24 ஜூலை, 2015

பாதகமான பலன்களை, பாதகம் இல்லாமல் செய்யும், பாதக ஸ்தானம்!




 சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் தொடர்பு பெற கூடாத ஸ்தானம் பாதக ஸ்தானமே, ஏனெனில் மறைவு ஸ்தானம் என்று வர்ணிக்கப்படும் 6,8,12ம் பாவகங்களுடன் தொடர்பு பெரும் பாவகங்கள் தனது பாவக வழியில் இருந்து சில நன்மைகளை செய்யக்கூடும், ஆனால் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெரும் எந்த ஒரு வீடு ஜாதகருக்கு எவ்வித சிறு நன்மையையும் செய்ய வாய்ப்பில்லை, அதன் பாதிப்பில் இருந்து தப்புவதற்கும் சந்தர்ப்பங்களை தாரது என்பது கவனிக்க தக்கதுஇந்த , மேலும் ஒருவரது சுய ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் திசை அல்லது எதிர்வரும் திசை, பாதக ஸ்தான பலனை நடத்தும் பொழுது ஜாதகரின் வாழ்க்கை குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து 200% சதவிகித இன்னல்களை எவ்வித பாகுபாடும் அனுபவிக்கும் தன்மையை தரும், இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வோம் அன்பர்களே !



லக்கினம் : சிம்மம் 
ராசி : மகரம் 
நட்சத்திரம் : அவிட்டம் 1ம் பாதம் 

இந்த சிம்ம இலக்கின ஜாதகருக்கு, பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகமே பாதக  ஸ்தானமாக அமைகிறது, மேலும் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவது சகோதர  பாவகமான 3ம் வீடு, பூர்வபுண்ணியத்தை குறிக்கும் 5ம் வீடு, பாக்கியத்தை குறிக்கும் 9ம் வீடு, எனவே ஜாதகர் ஜாதகர் 3,5,9ம் பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை அனுபவிக்க வேண்டும் என்பது விதி அமைப்பு, ஆக ஜாதகர் மேற்கண்ட பாவக வழியில் இருந்து பெரும் இன்னல்கள்  எவ்விதம் அமையும் என்பதை சற்றே சிந்திப்போம் அன்பர்களே !

3ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் முயற்ச்சிகள் யாவும் பெரிய பின்னடைவை தரும், சகோதர வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க இயலாது, தன்னம்பிக்கை மற்றும் சுய கட்டுபாடு வெகுவாக குறையும், கமிஷன் தரகு தொழில்கள் ஜாதகரின் பொருளாதார வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும், திட்டமிடுதல்களும் செயல்திறனும் வெகுவாக குறையும், மிக முக்கியமாக தனது அறிவு திறனும் புத்திசாலித்தனமும் ஜாதகரின் வாழ்க்கைக்கு பலன் தாராது, பொதுமக்கள் சார்ந்த விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்துகொள்வது நல்லது, பொது காரியங்களில் இறங்கினால் தோல்வியே மிஞ்சும், நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும், எதையும் திட்டமிட்டு செயல் வடிவம் பெற இயலாது, திறமை   இருப்பினும் ஜாதகருக்கு பலன் தாராது.

5ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு உதவி செய்யும் ஆட்கள் மிக குறைவே எனலாம், அனைத்தையும் தானே எதிர்கொண்டு சமாளிக்க வேண்டி வரும், குல தெய்வத்தின் ஆசியை பெற ஜாதகர் மிகுந்த பிரயத்தனம் செய்யவேண்டி வரும், தனது பூர்வீகத்தில் உள்ள வரை ஜாதகரின் முன்னேற்றம் கடுமையாக பாதிக்கும், தன்னை சார்ந்தவர்கள் மூலம் மிக பெரிய இன்னல்களுக்கு ஆளாக்கும், சுய அறிவும் சமயோசித புத்திசாலித்தனமும் சரியான நேரத்தில் கைகொடுக்காது, வீண் விவகாரங்களில் ஈடுபடும் சூழ்நிலையை தரும், பொது வாழ்க்கையில் அளவில்லா இன்னல்களை வாரி வழங்கும், முரண்பட்ட சிந்தனையும் செயல்பாடுகளும் ஜாதகரின் வாழ்க்கையில் மிக பெரிய ஏமாற்றங்களையும், தொல்லைகளையும் வாரி வழங்கும்,  கற்ற கல்வி ஜாதகருக்கு எவ்வித நன்மையையும் தாரது, சுய அறிவு திறனும் வெகுவாக பாதிக்க படும், சூழ்நிலை கைதியாக தனிமையில் போராடும் சந்தர்ப்பங்களை ஜாதகரே ஏற்ப்படுத்தி கொண்டு தனது வாழ்க்கை முன்னேற்றத்தை தானே பாதிப்பிற்கு    உள்ளாக்குவார் என்பது கவனிக்கத்தக்கது.

9ம் பாவக வழியில் இருந்து சமுதாயத்தில் அவப்பெயர், பொதுமக்கள் வழியில் இருந்து வரும் எதிர்ப்புகள், நம்பிக்கைகள் வீணாகும் சூழ்நிலை, சரியான  சந்தர்பங்களை தவறவிடும் தன்மை, அவசர கதியில் செய்யும் செயல்கள் யாவும் ஜாதகரின் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்ற தடையாக அமையும் தன்மை, எதிர்பாராத இழப்புகள் நஷ்டங்கள், மற்றவர்களின் ஆலோசனையின் பேரில் செய்யும் செயல்கள் யாவும் ஜாதகரின் வாழ்க்கையை பாதிக்கும் தன்மை, பொருளாதார முன்னேற்றத்தில் ஏற்ப்படும் இடையூறுகள், மற்றவர்களின் தவறான வழிகாட்டுதல்கள் மூலம் தனது வாழ்க்கையை தானே கெடுத்து கொள்ளும் அமைப்பு, அனைத்து விஷயங்களை உணர்ந்த போதிலும் சூழ்நிலைக்கு அடிமை ஆகும் தன்மை, ஆன்மீக வாழ்க்கையில் ஏற்ப்படும் இடைஞ்சல்கள், சரியான குரு அமையாத தன்மை, முன்னோர்களின் ஆசிர்வாதமும் வழிகாட்டுதல்களும் இல்லாமல் சுயமாக வாழ்க்கையில் போராடும் சூழ்நிலை, பக்குவம் இல்லாத நடைமுறைகள், சுய கட்டுபாடு இன்றி வீண் பிடிவாதம் என ஜாதகரின் வாழ்க்கையை வெகுவாக பாதிக்கும் .

மேற்கண்ட பாதிப்புகளை ஜாதகர் தவிர்க்க இயலாது என்றாலும் கூட, நடைபெறும் எதிர்வரும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் மேற்கண்ட 3,5,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவக பலனை ஏற்று நடத்தாமல் இருப்பின் ஜாதகரின் வாழ்க்கையல் நன்மை உண்டாகும், நடைபெறும் திசை எதிர்வரும்  திசை தரும் பலன்களை பற்றி இனி சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !

தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை சனி ( 27/10/2013 முதல் 27/10/2032 வரை )

ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் சனி தசை 3,5,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றும், 1,7,11ம் வீடுகள் லாபம்  மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றும் பலன்களை தருவது லாப ஸ்தான வழியில் இருந்து நல்ல அதிர்ஷ்டமும் லாபமும் கிடைத்த போதிலும், பாதக ஸ்தான வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க இயலாது, மேலும் ஜாதகர் 3,5,9ம் பாவகங்களுக்கு   உண்டான பிரீதி பரிகாரங்களை தேடிகொள்வது பாதக ஸ்தான கர்மவினை பதிவுகளை கழித்து கொள்வதற்கு உண்டான வாய்ப்பை  வழங்கலாம்.

குறிப்பு :

ஒருவரது சுய ஜாதகத்தில் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெரும் பாவகங்களின் பலனை நடைமுறையில் அல்லது எதிர் வரும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் ஏற்று நடத்தாமல் இருப்பின் ஜாதகருக்கு பாதக ஸ்தானத்தல் எவ்வித இன்னல்களும் நடைமுறைக்கு வாராது, ஆனால் நடைமுறையில் அல்லது எதிர் வரும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் ஏற்று நடத்தினால் ஜாதகர் பாதக ஸ்தான அமைப்பில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க இயலாது அனுபவித்து கழித்து  கொள்வதே சால சிறந்தது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வெள்ளி, 8 மே, 2015

ஆயுள் பாவகமான 8ம் வீடு சுய ஜாதகத்தில் பாதிக்க படும் பொழுது ஜாதகர் எச்சரிக்கையுடன் கையாள வேண்டிய விஷயங்கள்!



ஒருவரின் ஜாதகத்தில் மறைவு ஸ்தானமாக கருதப்படும் 6,8,12ம் வீடுகளில், 8ம் வீடு ஆயுள் பாவகமாக வருகின்றது, பாரம்பரிய ஜோதிடத்தில் 6,8,12ம் வீடுகள் பாதிப்படைவதும்,வலிமை பெறுவதும் மிகுந்த இன்னல்களையே வழங்கும் என்பது பொதுவான கருத்து, இது முற்றிலும் தவறானதாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது, ஒருவரின் சுய ஜாதகத்தில் 12 பாவகங்களுக்கும் நன்மை தீமை பலன்களை வழங்கும் தன்மை உண்டு, ஒவ்வொரு பாவகமும் வலிமை பெரும் பொழுது ஜாதகர் குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து யோக பலன்களையும், ஒவ்வொரு பாவகமும் வலிமை இழக்கும் பொழுது ஜாதகர் குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து மிகுந்த அவயோக பலன்களையும் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும்.

குறிப்பாக, ஒருவரது சுய ஜாதகத்தில் லக்கினம் எனும் முதல் பாவகம் பாதிக்கப்படும் பொழுது ஜாதகர் தனது வாழ்க்கையை தானே பாதிப்பிற்கு ஆளாக்குவார், தனது உடலையும் மனதையும் பாதுகாக்க இயலாமல் தானே கெடுத்து கொண்டு, தன்னை சார்ந்தவர்களுக்கும் இன்னல்களை தருவார், இதை போன்றே 12 பாவக வழியில் இருந்து ஒவ்வொருவரும் யோக அவயோக பலன்களை அனுபவிக்கும் தன்மையை பெறுகின்றனர்.

நாம் இந்த பதிவில் சுய ஜாதகத்தில் ஆயுள் பாவகமான 8ம் வீடு சுய ஜாதகத்தில் பாதிக்கப்படும் பொழுது ஜாதகர் 8ம் பாவக வழியில் இருந்து எவ்வித இன்னல்களை எதிர்கொள்ள நேரும் என்பதை சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !

அடிப்படையில் 8ம் பாவகம் சுய ஜாதகத்தில் பாதக ஸ்தானத்துடனோ, அல்லது தொடர்பு பெற கூடாத வீடுகளுடனோ தொடர்பை  பெற்றால், ஜாதகர் ஆயுள் பாவகமான 8ம் பாவக வழியில் இருந்து இன்னல்களை அனுபவிக்கும் சூழ்நிலையை தரும், நடைமுறையிலோ அல்லது எதிர்வரும் திசாபுத்திகள் பாதிக்கபட்ட 8ம் பாவக பலனை ஏற்று நடத்தினால், ஜாதகரின் பாடு படு திண்டாட்டம் தான், குறிப்பாக பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்று திசாபுத்திகள் 8ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் ஜாதகர் நெருப்பில் இட்ட புழுபோல தவிக்கும் சூழ்நிலையை தரும்.

பொதுவாக ஆயுள் பாவகம் என்றவுடன் அனைவருக்கும் நியாபகம் வருவது, ஜாதகரின் ஆயுளுக்கு பங்கம் அல்லது கண்டம் ஏற்ப்படும் என்றுதான், பெரும்பாலும் இது நடைமுறையில் ஒத்து வருவதில்லை, ஜாதகரின் ஆயுள் பாவகம் எந்த தத்துவத்தில் இயங்குகிறது என்பதை கவனத்தில் கொண்டு பலன் காண்பதே சிறப்பு, மாறாக 8ம் பாவக வழியில் இருந்து வேறு சில இன்னல்களும் வரக்கூடும், அதாவது தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் வருமான இழப்பை முதலாவதாக சொல்லாம், ஜாதகர் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து அதிக அளவு இன்னல்களையும், கருத்து வேறுபாடு காரணமாக மன வாழ்க்கையில் பிரிவும், கணவன் மனை வழியில் இருந்து, தாங்க இயலாத வண்ணம் வரும் துன்பங்களையும் ஆயுள் பாவகமே நிர்ணயம் செய்கிறது, மேலும் எதிர்பாராத திடீர் செலவுகள், விபத்துகளை தவிர்க்க இயலாது, மற்றவர்களை நம்பி செய்யும் பணம் மற்றும் பொருள் முதலீடுகள் திடீர் இழப்பை சந்திக்கும், ஜாதகர் வெளிநாடுகளிலோ அல்லது வெளியூரிலோ இருப்பின் எதிர்பாராத திடீர் இழப்புகளை சந்திக்கும் தன்மையை தரும், ஜாதகர் முன்னேற்றம் கடுமையாக பாதிக்க படும், கூட்டு தொழில் செய்பவர்களுக்கு தனது கூட்டாளி வழியில் இருந்து எதிர்பாராத திடீர் இழப்புகளை சந்திக்கும் சூழ்நிலையை தரும்.

ஜாதகரின் சிந்தனை திறனும், செயல்பாடுகளும் கடுமையாக பாதிக்க படும், இதனால் உடல் நிலையும் மன நிலையம் வெகுவாக பதிக்கப்படும், உடல் ரீதியாக ஜாதகருக்கு கடுமையான பாதிப்பை தரக்கூடும், உடல் நிலை வெகுவாக பாதித்து உருமாற்றம் பெரும் சூழ்நிலைக்கும் ஜாதகர் தள்ளபடுவார், மேலும் மற்றவர்களுக்காக ஜாமீன் மற்றும் ஒப்பந்த கையெழுத்து செய்து கொடுத்திருந்தால் அதன் வழியில் ஜாதகர் கடுமையான இன்னல்களையும், பொருள் இழப்பையும் சந்திக்கும் சூழ்நிலையை பெற கூடும், தனது நண்பர்களுடனும் உறவுகளுடனும் சுமுகமான போக்கை கடைபிடிக்காமல், கருத்து வேறுபாடு காரணமாக பல இன்னல்களை ஜாதகர் சந்திக்கும் சூழ்நிலையை உருவாக்கும்.

சுய ஜாதகத்தில் ஒருவருக்கு ஆயுள் பாவகமான 8ம் பாவகம் பாதிக்க பட்டு இருப்பின் ஜாதகர் தனது வாழ்க்கை துணையை தேர்ந்து எடுக்கும் பொழுது அதிக கவனமாக இருப்பது நலம், அதாவது தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து ஜாதகர் பெரும் வருமானம் மற்றும் வருமான இழப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றம் மற்றும் முன்னேற்றம் அற்ற நிலை ஆகியவற்றை மிக தெளிவாக குறிப்பிடுவது ஆயுள் பாவகமே, மேலும் வாழ்க்கை துணையின் பேச்சு மற்றும் ஆதரவு போன்ற விஷயங்களையும் ஒருவரது சுய ஜாதகத்தில் உள்ள ஆயுள் பாவகமே நிர்ணயம் செய்வதால், ஜாதகர் தனது வாழ்க்கை துணையின் ஜாதக வலிமையை கருத்தில் கொண்டே தேர்ந்தெடுக்க வேண்டும், மாறாக அவசர கதியில் வாழ்க்கை துணையை தேர்ந்து எடுப்பின் ஜாதகரின் திருமணத்திற்கு பிறகு வரும் வாழ்க்கையில் பல இன்னல்களையும் துன்பங்களையும் தவிர்க்க இயலாது.

மேலும் மற்றவர்களை நம்பி செய்யும் முதலீடுகள் அனைத்தும் ஜாதகருக்கு இழப்பை தரக்கூடும் என்பதால், முதலீடு செய்யும் முன் அதிக கவனத்துடன் இருப்பது நலம், தனது முடிவில் உறுதியாக மற்றும் பிடிவாதமாக நில்லாமல் பெரியோரின் பேச்சை மதித்து நடந்துகொள்ளும் பொழுது ஜாதகருக்கு ஆயுள் பாவக வழியில் இருந்து வரும் திடீர் இழப்புகளையும், எதிர்பாராத விபத்துகளையும் தவிர்க்க இயலும், விபத்தின் மூலம் வரும் துன்பங்களையும், வீண் விரையங்களையும் தவிர்க்க ஜாதகர் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் அனைத்து விஷயங்களிலும் நடந்துகொள்வதும், அதிக கவனமுடனும் பொறுமையுடனும், அறிவில் விழிப்பு நிலையுடன் இருப்பது நலம் தரும்.

ஆயுள் பாவகமான 8ம் வீடு சுய ஜாதகத்தில் தனது பாவகத்துடன் தொடர்பு பெறுவது ஜாதகருக்கு நீண்ட ஆயுளை தரும் என்ற போதிலும், உடல் நிலையில் சிறு சிறு தொந்தரவுகளை தர தவறுவதில்லை, மேலும் காய தழும்புகள் உடலில் நிச்சயம் உண்டாகும், சிலருக்கு அறுவை சிகிச்சை மற்றும் ரண சிகிச்சை மேற்கொள்ளும் தன்மையை தருகிறது, மேற்கண்ட அமைப்பு சுய ஜாதகத்தில் உள்ளவர்களுக்கு, பெரிய அளவில் வாழ்க்கை துணை வழியில் இருந்து வீண் செலவுகளை தர தவறுவது இல்லை, வாழ்க்கை துணைக்கு இது நல்ல நிலை என்ற போதிலும், ஜாதகரின் வங்கி கணக்கில் வறட்ச்சி என்ற நிலையே  எப்பொழுதும் நிலைத்திருக்கும்.

சுய ஜாதகத்தில் அனைத்து பாவகங்களும் வலிமை பெற்று இருந்த போதும் ஆயுள் பாவகம் ஒன்று மட்டும் பாதிக்க பட்டதால் ஜாதகர் வாழ்க்கை துணை வழியில் இருந்து பெறும் இன்னல்கள் பற்றி அடுத்த பதிவில் விளக்கமாக காண்போம் அன்பர்களே !

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


சனி, 25 ஏப்ரல், 2015

சுய ஜாதகத்தில் நடைபெறும் திசா புத்திகள் யோக பலனை தரும் பொழுது ஜாதகர் என்ன செய்யலாம்? அவயோக பலனை தரும் பொழுது ஜாதகர் எதை தவிர்க்கலாம்?




ஒருவரது சுய ஜாதகத்தில் நடைபெறும் திசா புத்திகள் ஜாதகருக்கு யோக  பலன்களை தரும் பொழுது, ஜாதகருக்கு எந்த பாவக வழியில் இருந்து யோகத்தை வழங்குகிறது என்பதை தெளிவாக தெரிந்துகொண்டு வாழ்க்கையில் குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து வரும் நன்மைகளை பரிபூரணமாக அனுபவிக்கலாம், மாறாக ஜாதகருக்கு அவயோக பலன்களை தரும் பொழுது, ஜாதகருக்கு எந்த பாவக வழியில் இருந்து அவயோகத்தை வழங்குகிறது, என்பதை தெளிவாக தெரிந்து கொண்டு குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்கலாம், அல்லது விழிப்புணர்வுடன் செயல்பட்டு, துன்பங்களை களைந்து, நன்மைகளை பெறலாம், பொதுவாக ஒருவரது சுய ஜாதகத்தில் நடைபெறும் திசா புத்திகள் எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்ற ஒரு விஷயம் ஜாதகருக்கு சிறந்த ஜோதிடர்கள் மூலம் ஜாதக கணிதம் கொண்டு மிக துல்லியமாக தெரிந்துகொள்ள இயலும், அதன் அடிப்படையில் தனது வாழ்க்கையை மிகவும் சிறப்பாக நடத்தி செல்வதற்குண்டான வழிமுறைகளையும், விழிப்புணர்வுகளையும் ஜாதகரால் நிச்சயம் பெற இயலும்.

கிழ்கண்ட நமது நண்பருக்கு ( அவரது விருப்பத்தின் பேரில் ஜாதக பலன்களை வலைபதிவில் பதிவு செய்கிறது "ஜோதிடதீபம் " ) ஜாதக ரீதியான பலன்களையும் & தீர்வுகளை காண்போம் :




லக்கினம் : மிதுனம் 
ராசி : மீனம் 
நட்சத்திரம் : உத்திரட்டாதி 4ம் பாதம் 

ஜாதகருக்கு உபய கற்று தத்துவமான ( கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 3ம் ராசி ) மிதுன ராசியில் லக்கினம் 22:58:48 பாகையில் ஆரம்பித்து, சர நீர் தத்துவமான கடகத்தில் 19:09:36 பாகை வரை வியாபித்து இருக்கின்றது, மேலும் ஜாதகர் இரண்டு தத்துவ அமைப்பில் லக்கினத்தின் செயல்பாடுகளை பெறுகின்றார், உபய இயக்க நிலையில் உள்ள காற்று தத்துவம், சர இயக்க நிலையில் உள்ள நீர்ததுவம். ஆக ஜாதகருக்கு சிறந்த அறிவு திறனும், நல்ல மனமும் இயற்கையாக அமைய வேண்டும்,  ஆனால் லக்கினம் எனும் 1ம் பாவகம் ஜாதகருக்கு விரைய ஸ்தானமான 12ம்  பாவகத்துடன் தொடர்பு பெற்று 12ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் ராசியான ஸ்திர மண் தத்துவமான ரிஷப ராசியில் அமைகிறது, ஆக ஜாதகருக்கு லக்கினம் பாதிக்க படுகிறது என்பது உறுதியாகிறது, இந்த இலக்கின பாதிப்பு ஜாதகருக்கு  வருமான ரீதியான பிரச்சனைகளையே தரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாதகருக்கு  தற்பொழுது நடைபெறும் சுக்கிரன் திசை எவ்வித பலன்களை  தருகிறது என்பதை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே ! ஜாதகருக்கு சுக்கிரன்  திசை ( 23/09/2008 முதல் 23/08/2028வரை ) நடைமுறையில்  உள்ளது, தற்பொழுது நடைமுறையில் உள்ள சுக்கிரன் திசை ஜாதகருக்கு 2,4ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று யோக பலன்களை  தருவது வரவேற்க தக்க ஒரு சிறப்பு அம்சமாக கருதலாம், ஏனெனில் 2ம் வீடு ஜாதகருக்கு சிறந்த குடும்ப வாழ்க்கையையும், சிறந்த பேச்சு திறனையும், கை   நிறைவான வருமான வாய்ப்பையும் வாரி வழங்கும், 4ம் வீடு ஜாதகருக்கு சிறந்த வீடு, மண் மனை, வண்டி வாகன யோகத்தையும் வாரி வழங்கும், சிறந்த குண நலன்களுடன் ஜாதகரை திகழ செய்யும், புதிய சொத்துகள், வாகன யோகங்கள் ஜாதகருக்கு 100% விகிதம் உண்டாகும், தனது  சொந்த ஊரில் சுய  சம்பாத்தியம் மூலம் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை வாரி வழங்கும்,  தாய் மூலம் நன்மை உண்டாகும், கற்ற கல்வி ஜாதகருக்கு சிறந்த சுகபோக வாழ்க்கையை வாரி வழங்கும்.

ஆக ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் சுக்கிரன் திசை மிகவும் சிறப்பாக  இருப்பது உறுதியாகிறது, அடுத்து தற்பொழுது நடைமுறையில் உள்ள சுக்கிரன் திசையில் செவ்வாய் புத்தி ( 24/09/2014 முதல் 24/11/2015 வரை ) என்ன செய்கிறது? என்பதை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே! 

 சுக்கிரன் திசையில் செவ்வாய் புத்தி ஜாதகருக்கு 1,3,5,6,7,11,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று, இந்த 12ம் பாவகம் ஜாதகருக்கு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் ராசியான ரிஷபத்திலும், கால  புருஷ தத்துவ அமைப்பிற்கு 3ம் ராசியான மிதுனத்திலும் சம்பந்தம்  பெறுவது, ஜாதகருக்கு இலக்கின வழியில் இருந்து மன நிம்மதி இழப்பையும், உடல் நல பிரச்சனைகளையும், சகோதர ஸ்தான அமைப்பில் இருந்து எடுக்கும் முயற்சிகளில் பின்னடைவையும், எதிர்பாராத இன்னல்களையும், பூர்வபுண்ணிய ஸ்தான அமைப்பில் இருந்து சமயோசித செயல்பாடுகள் அற்ற நிலையையும், புத்திசாலிதனத்தில் ஏற்ப்படும் பின்னடைவையும்,  உதவிசெய்ய யாரும் அற்ற நிலையையும், எதிரி ஸ்தான அமைப்பில் இருந்து வரும்  கடன் தொந்தரவுகள், எதிரி தொல்லைகள், தனது செயல் தனக்கே எதிர்பதமாக அமையும் சூழ்நிலை, உடல் நல குறைபாடு,என்ற வகையிலும்,  களத்திர ஸ்தான அமைப்பில் இருந்து வாழ்க்கை துணை வழியில் இருந்தும்,  நண்பர்கள் வழியில் இருந்தும், கூட்டாளி மற்றும் வெளிவட்டார பழக்க  வழக்க அமைப்பில் இருந்து நிம்மதியற்ற சூழ்நிலையையும், லாப ஸ்தான அமைப்பில் இருந்து தனக்கு வரும் அதிர்ஷ்ட வாய்ப்புகளை ஜாதகர் உதறி தள்ளும் சூழ்நிலையையும், தன்னம்பிக்கை அற்ற சூழ்நிலையில் போராட்ட வாழ்க்கையை மேற்கொள்ளும் சந்தர்ப்பங்களையும், மனோ ரீதியான  போராட்டங்களையும் எதிர்கொள்ளும் சக்தி அற்ற நிலையையும், 12ம் பாவக வழியில் இருந்து வருமானம் அனைத்தையும் விரையும் ஆகும் சூழ்நிலையையும், மன நிம்மதி இழப்பு, அனைவராலும் துன்பம் மற்றும் தொல்லைகளை எதிர்கொள்ளும் தன்மையும், ஜாதகருக்கு தற்பொழுது நடைமுறையில்  உள்ள சுக்கிரன் திசை செவ்வாய் புத்தி வழங்குகிறது.

எனவே ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் சுக்கிரன் திசை யோக பலன்களையும், சுக்கிரன் திசை செவ்வாய் புத்தி அவயோக பலன்களையும்  தருவதால், ஜாதகர் செவ்வாய் புத்திக்கு ஏற்று நடத்தும் பாவகத்திர்க்கு உண்டான வழியில் இருந்து ( 1,3,5,6,7,11,12 ) அதிக அளவு இன்னல்களை அனுபவிக்கும் நிலையை தருகிறது, மேலும் 12ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு குடும்பம் மற்றும் வருமானத்தை குறிக்கும் ரிஷப ராசியிலும், வீர்யம், லட்சியம் மற்றும் சுய முயற்ச்சியை குறிக்கும் மிதுன ராசியிலும் அமைவதால், பாதிப்பின் தன்மையை ஜாதகரால் எதிர்கொள்ள இயலவில்லை, மேலும் வருமானம் என்பது ஜாதகருக்கு வெகுவாக குறையும், எடுக்கும் முயர்ச்சியும் வெற்றி பெறாத காரணத்தால், அதிக மன உளைச்சலுக்கும், போராட்ட வாழ்க்கையை எதிர்கொள்ளும் சூழ்நிலையையும் உருவாக்கும், இருப்பினும் இதன் பாதிப்பின் தன்மை 40% விகிதம்  என்பதாலும், நடைமுறையில் உள்ள சுக்கிரன் திசை யோக பலன்களை வாரி  வழங்குவதாலும், ஜாதகரின் துன்பம் சூரியனை கண்ட பனிபோல் விரைவில்  விலகும்.

ஜாதகருக்கு சுக்கிரன் திசையில் அடுத்து வரும் ராகு புத்தி  2,4ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று யோக பலன்களை  தருவது,   அளவில்லா வருமான வாய்ப்பையும், சொத்து சுக சேர்க்கையையும், வாரி வழங்கும், மேலும் தற்பொழுது நடைபெறும் செவ்வாய் புத்தியின்  தாக்கத்தில் இருந்து மீண்டு வரவும், சுக்கிரன் திசை, எதிர் வரும் ராகு புத்தியில் வரும் யோக பலன்களை அனுபவிக்க வடக்கு திசை வாயிற்படி கொண்ட  வீடுகளில் வசிப்பது சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றம் தரும், சுக்கிரன் திசையில் முழு பலன்களையும் அனுபவிக்கும் யோகம் உண்டாகும்.

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் பெரும்பாலான வீடுகள் பாதிக்க பட்டு இருந்த  போதிலும், தற்பொழுது நடைமுறையில் உள்ள சுக்கிரன் திசை நன்மையை வாரி   வழங்குவது வரவேற்க தக்க ஒரு அம்சமாக" ஜோதிடதீபம் "  கருதுகிறது, மேலும் ஜாதகருக்கு பாதிக்க பட்ட 12ம் பாவகம் ஸ்திர ராசியில் 6 பாகையும், உபய ராசியில் 23 பாகையும் வியாபித்து இருப்பதால், நடைபெறும் தீமையின் அளவு ஜாதகருக்கு பெரிய அளவில் இன்னல்களை தாராது என்பதை  நினைத்து மகிழ்ச்சி அடையலாம், எனவே ஜாதகர் தற்பொழுது நடைபெறும் செவ்வாய் புத்தியில் நடைபெறும் 1,3,5,6,7,11,12ம் பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை விழிப்புணர்வுடன் எதிர்கொண்டு வெற்றி அடையலாம், மேற்கண்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை ஜாதகர் தவிர்க்கலாம், மேலும் விபரங்களுக்கு தனிப்பட்ட ஆலோசனை ஜோதிடதீபத்தின் மூலம் பெறுவதால் மிகுந்த நன்மை அடையலாம்.

வாழ்த்துகள் !

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வெள்ளி, 24 அக்டோபர், 2014

ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் பாவகம் வழங்கும் தொழில் மேன்மை - மேஷ லக்கினம் பாகம் 5




 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் ராசியான மேஷ ராசியை லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு, ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று அமரும் பொழுது தரும் யோக பலன்களையும், வலிமை அற்று அமரும் பொழுது தரும் அவயோக பலன்களை பற்றியும் இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே! மேஷ லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு மகரம் ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் பாவகமாக அமையும், இந்த மகரம் மேஷ லக்கினதிர்க்கும் சரி, கால புருஷ தத்துவ அமைப்பிற்கும் சரி 10ம் வீடாகவே அமைகிறது, மேலும் சர மண் தத்துவ அமைப்பில் இயங்குகிறது, இந்த மகரம் மேஷ லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு 6,8,11,12ம் பாவகங்களுடன் தொடர்பு பெறாமல் இருந்தால் ஜாதகரின் ஜீவன மேன்மை மிகவும் சிறப்பாக இருக்கும் குறிப்பாக பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறாமல் இருப்பது மிகுந்த யோகத்தை தரும்.

மேஷ லக்கினத்திற்கு ஜீவன ஸ்தானம் தொடர்பு பெரும் பாவகங்களும், ஜாதகர் பெரும் நன்மைகளும்:

ஜீவன ஸ்தானம் ஒன்பதாம் பாவகத்துடன் தொடர்பு பெரும் பொழுது :

ஜாதகர் சிறந்த பேராசிரியாராக விளங்குவார், பல கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் தாளாளர், கல்வி துறையில் சிறந்து விளங்கும் மிக பெரிய  மனிதராக வலம் வரும் யோகத்தை தரும், சமுதாயத்தில் நல்ல அந்தஸ்து மற்றும் மிகுந்த நற்ப்பெயரை பெரும் யோகத்தை தரும், சிறு கல்வி நிறுவனமாக துவங்கி, மிகப்பெரிய கல்வி சாம்ராஜ்ஜியத்தை நிறுவும் தன்மை பெற்றவர்கள் எனாலாம், இந்த அமைப்பை பெற்ற அனைவரையும் நாம் ஏணியுடன் ஒப்பிடலாம், இவரது அறிவும் திறனும் மற்றவர்களுக்கு மிகப்பெரிய அளவில் வெற்றியை தரும், ஜாதகர் பொது நலவாதியாக இருப்பார், தன்னம்பிக்கையும் மன உறுதியும் ஜாதகருக்கு மிகவும் அதிகமாக காணப்படும், எந்த ஒரு சூழ்நிலையிலும் ஜாதகர் நேர்மையை விட்டுத்தர விரும்ப மாட்டார், நமது தேசத்தின் பல உயரிய விருதுகளை பெரும், உண்மையான தகுதி பெற்றவர்கள் இவர்களே என்றால் அது மிகையில்லை, தனுசு உபய நெருப்பு தத்துவ அமைப்பில் இருப்பதால், ஜாதகர் ஆன்மீகம் சார்ந்த ஜீவன வாழ்க்கையும், கல்வி துறை மற்றும் சாஸ்திரம், எழுத்து, பத்திரிகை துறையில் மிகப்பெரிய வெற்றிகளை வாரி வழங்கும்

மேற்கண்ட அமைப்பை பெரும் ஜாதகர்கள் பலர் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் நபர்களாக காணப்படுகிறார்கள், விளையாட்டு துறையில் தனி நபர் அல்லது குழுவாக செயல்படும் யோகம் பெற்றவர்கள், தனது வெற்றிக்காக  அல்லது தனது குழுவின் வெற்றிக்காக அயராது பாடுபடும் தன்மையை பெற்றவர்கள், எந்த ஒரு செயலையும் சரியான திட்டமிடுதலுடன் செய்து வெற்றி காணும் அன்பர்கள் இவர்களே ! இதை தவிர கிராமத்தில் ஊர் பெரியவர், அல்லது பஞ்சாயத்து தலைவர், தனது சமுகத்திற்கு தலைமை பொறுப்பேற்று நடத்தி செல்லும் தலைமை பதவியை அலங்கரிக்கும் நபர்கள், நகரம் அல்லது வட்டம் போன்றவற்றிற்கு தலைவர் செயலாளர், கட்சியில் நல்ல பொறுப்புள்ள பதவிகளில் சிறப்பாக செயலாற்றும் நபர்கள் அனைவரும் மேற்கண்ட அமைப்பை நிச்சயம் பெற்று இருப்பார்கள், அரசியல் ரீதியான பதவிகள் ஜாதகரை தேடிவரும், பொதுமக்களிடம் நல்ல மதிப்பு மரியாதையை பெரும் யோகம் பெற்றவர்கள் என்றால் அது மிகையில்லை.

குறிப்பு : ( பொதுமக்கள் அல்லது குழு ஆகியவற்றை சார்ந்த தொழில்களை, அல்லது  பதவிகளை அலங்கரிக்கும் தன்மை பெற்றவர்கள், இவர்கள் அனைவரும் தனித்து செயல்படுவதை விட ஜீவன அமைப்பில்  கூட்டு முயற்ச்சியில் பணியாற்றுவது சிறந்த யோகத்தை தரும்.)

ஜீவன ஸ்தானம் பத்தாம் பாவகத்துடன் தொடர்பு பெரும் பொழுது :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கும் லக்கினம் என்ற அமைப்பிற்கும் ஜீவன ஸ்தானமாக வருவதாலும், சர மண் தத்துவ அமைப்பாக மகரம் அமைவதாலும் , ஜாதகர் பன்முக தொழில் திறமை பெற்றவர் எனலாம், குறிப்பாக மண் தத்துவம் சார்ந்த தொழில்களில் கொடிகட்டி பறக்கும் யோகம்  பெற்றவர்கள், எவரது சுய ஜாதகத்தில் இந்த மகரம் வலுபெற்று அமர்ந்து இருக்கின்றதோ, அந்த ஜாதகர் சர நில தத்துவத்தை குறிக்கும் மனித உடலின் உள்ள உறுப்புகள் சார்ந்த ஆய்வில் சிறந்து விளங்குவார்கள், ஒரு மனிதனை பார்த்த உடன் அவர் எவ்வித உடல் ரீதியான பாதிப்பில் உள்ளார் இவருக்கு என்ன செய்தால் நலம் பெறுவார் என்பதை மிக துல்லியமாக கண்டுணர்ந்து செயல்படும் வல்லமையை இறை அருள் இவர்களுக்கு இயற்கையிலேயே கொடுத்து இருப்பது ஆச்சரியாமான ஒன்றாகவே ஜோதிடதீபம் கருதுகிறது, பல சிறந்த சித்த மருத்துவர்கள் அனைவரது ஜாதகத்திலும் மகரம் மிகவும் வலிமை பெற்று அமர்ந்து இருப்பதை காண முடிகிறது, மேலும் மருத்துவம் சார்ந்த அனைத்து துறைகளிலும் இவர்கள் சிறந்து விளங்க இந்த மகரம் வலிமை பெற்றதே காரணமாக அமைகிறது.

இது உடல் சார்ந்த அமைப்பை மற்றும் தெளிவு படுத்துவதில்லை, மண் தத்துவம் சார்ந்த அனைத்து விஷயங்களிலும் ஜாதகரை தன்னிகரற்று விளங்க வைத்துவிடுகிறது, குறிப்பாக நிலம், வீடு, வண்டி வாகனம், பல தொழில்களில் சிறந்து விளங்கும் யோகம், பல பெரிய நிறுவனங்களை சிறப்பாக நடத்தி முன்னேற்றம் காணும் வல்லமை, பல துறைகளில் சிறந்து விளங்கும் யோகம், ஜாதகர் செய்யும் தொழில்களில் தனிப்பட்ட யுக்திகளை பயன்படுத்தி வெற்றி காணும் அதி புத்திசாலித்தனம், சிறந்த அறிவாற்றல், புதிய மருந்து மற்றும் மருத்துவ உபகரணம் கண்டுபிடிக்கும் ஆற்றல், போக்கு வரத்து துறையில் சேவை சார்ந்த தொழில்களில் அபரிவிதமான வெற்றி, விவசாயம் சார்ந்த துறைகளில் எவரும் எதிர்பாராத வளர்ச்சியை பெரும் யோகம், அனைத்து விஷயங்களையும் நிர்வகிக்கும் வல்லமை, தனக்கு கிழ் வேலை பார்க்கும் அனைவரையும் தனது ஆணைக்கு கட்டுபட்டு நடக்கும் விதமான செயல்திறன், எந்த ஒரு பிரச்சனையையும் துணிவுடன் எதிர்கொள்ளும் திறனும், அதில் வெற்றி பெரும் யோகத்தையும் தரும்.

குறிப்பு : ( சுய ஜாதகத்தில் மேற்கண்ட அமைப்பு காணப்படுமாயின், ஜாதகர் எக்காரணத்தை கொண்டும் மற்றவரிடம் வேலை செய்வது, அல்லது கூட்டாக செயல்படுவது சரியானது அல்ல, ஜாதகர் செய்யும் தொழில் சிறியதாக இருந்தாலும் கூட தனித்து இயங்குவது சிறப்பான வெற்றிகளை குவிக்க உதவும், மேலும் இவர்களுக்கு அரசு துறை வேலை வாய்ப்பு என்பது எதிர்பாராத வகையில் திடீர் என கிடைக்கும்)

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் பாவகம் வழங்கும் தொழில் மேன்மை - பாகம் 2 (சனி வக்கிரகம்)

 
 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமான மகர ராசிக்கும், அதிர்ஷ்டம் மற்றும் லாப ஸ்தானமான கும்ப ராசிக்கும் அதிபதியான சனிபகவான் ஒவ்வொருவரின் சுய ஜாதகத்திலும் வலிமை பெற்று அமருவது ஜாதகரின் கர்ம ஸ்தானம் எனும் ஜீவன ஸ்தானத்திற்கு மிகப்பெரிய வலிமையை சேர்க்கும், தனிப்பட்ட முறையில் சுயமாக வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் தன்மையை தரும், குறிப்பாக ஜாதகரின் அறிவு திறனும், தன்னம்பிக்கையும் தான் செய்யும் தொழில் அமைப்பில் இருந்து 100 சதவிகித வெற்றியை வாரி வழங்கும், மேலும் சுய ஜாதகத்தில் சனிபகவான் ஜீவன பாவக அமைப்புடன் தொடர்பு பெரும் பொழுது, ஜாதகர் ஜீவன வழியில் எதிர்பாராத வெற்றிகளையும் திடீர் முன்னேற்றத்தையும் தொடர்ந்து பெற்றுகொண்டே இருப்பார், ஜீவன அமைப்பில் தோல்வி என்ற விஷயமே ஜாதகரிடம் எட்டிபார்க்கது என்பது வியக்கத்தக்க ஜாதக நிலையாகும்.

மகரம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன பாவக உரிமையை ஏற்றுகொள்கிறது, கும்பம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு லாப ஸ்தான உரிமையை ஏற்றுகொள்கிறது, இந்த இரண்டு ராசிக்கும் அதிபதியாக சனிபகவானே பொறுப்பேற்கிறார், இதில் மகரம் சர மண் தத்துவ அமைப்பில் செயல்படுகிறது, எனவே இயக்க நிலையில் இருக்கும் மண் தத்துவமான இயந்திரங்கள், மனித உடல், மற்றும் ஜீவன் உள்ள உயிர்கள், பொருட்கள் ஆகியவற்றின் கர்ம நிலைக்கு ஏற்ற நன்மை தீமை விஷயங்களை, சனிபகவான் ஆளுமை செய்கிறார், அவரவருக்கு ஏற்ற ஜீவனத்தை சரியான காலகட்டத்தில் சுய ஜாதகத்திற்கு உட்ப்பட்டு சிறப்பாக அமைத்து தருகிறார்.

மேலும் கும்பம் ஸ்திர காற்று தத்துவ அமைப்பில் செயல்படுகிறது, எனவே மகர ராசி அமைப்பில் ஏற்றுகொண்ட கர்ம வினைக்கு ஏற்ற, ஸ்திரமான அறிவாற்றலை சனிபகவான் ஒவ்வொருவருக்கும் வாரி  வழங்குகிறார், உலகத்தில் ஜீவனம் எனும் தொழில் அமைப்பை பலபேர் பலவித தொழில்களை செய்த போதிலும் , சிறந்த அறிவு திறனையும் புதிய முயற்ச்சிகளையும், புதிய அணுகுமுறையையும் தொழில் அமைப்பில் செயல்படுத்தி வெற்றி காண்பவரையே, உலகம் வியந்து போற்றும், இதற்க்கு அடிப்படை காரணமாக அமைவது ஸ்திர கும்ப ராசியும், சனிபகவனுமே என்றால் அது மிகையில்லை.

ஒருவரின் சுய ஜாதகத்தில் ஜீவன பாவகம் ஜாதகரின் ஜீவன அமைப்பை பற்றியும், அதன் வழியில் இருந்து ஜாதகர் பெரும் கௌரவம், அந்தஸ்து, மதிப்பு மரியாதை ஆகியவற்றையும், ஜாதகரின் கர்ம வினைபதிவினை ஜாதகர் எவ்விதம் அனுபவிக்கிறார் என்பதை பற்றியும் தெளிவாக அறிவுறுத்தும், லாப ஸ்தானம் ஜாதகர் தான் பெரும் புகழ், வெற்றி, மன உறுதி, ஜீவன வழியில் ஜாதகர் செய்யும் புதுமை, எடுக்கும் முயற்ச்சிகளில் ஜாதகர் பெரும் வெற்றி வாய்ப்புகள், குறுகிய காலத்தில் ஜாதகர் பெரும் எதிர்பாராத வெற்றிகள் என்ற விஷயங்களை அறிவுறுத்தும், மேற்கண்ட இரண்டு பாவகங்கள் ஒவ்வொருவருக்கும் ஜீவன அமைப்பை, தொழில் மற்றும் பணியை சரியாக அமைத்துக்கொள்ள 100 சதவிகிதம் வழிகாட்டும், இதன் அடிப்படையில் ஜாதகர் தனது ஜீவன வாழ்க்கையை அமைத்து கொண்டு வாழ்க்கையில் சகல நலன்களையும் ஜீவன வழியில் இருந்து பெறலாம்.

மேற்கண்ட அமைப்பில் சுயஜாதகத்தில் ஜீவனம், மற்றும் லாப ஸ்தானம் வலிமை பெற்று அமர்வது உடன், காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவனம் மற்றும் லாப ஸ்தானமான மகரம் மற்றும் கும்பம் நல்ல நிலையில் இருப்பது ஜாதகருக்கு ஜீவன வழியில் இருந்தும், ஜீவன வழியில் இருந்து ஜாதகர் பெரும் லாபத்தை உறுதிபடுத்தும், மேற்கண்ட விஷயத்துடன் ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் திசை மற்றும் புத்திகள் சாதகமாக அமைந்துவிட்டால் ஜாதகரின் ஜீவன வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த இயலாது, தன்னிகர் இல்ல தொழில் அதிபராக உருவாக்கி விடும்.

சுய ஜாதகத்தில் தொழில் ஸ்தானம் எனும் 10ம் பாவகம் வலிமை பெற்று அமர்ந்தாலும் கூட லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகமும் வலிமை பெறுவது ஜாதகரின் தொழில் வெற்றியின் பலன்களை 100 சதவிகிதம் அனுபவிக்க வைக்கும், ஒருவேளை 11ம் பாவகம் வலிமை பெறவில்லை எனில் ஜாதகர் உழைக்கும் உழைப்பு அனைத்தும் வீண் போக வாய்ப்பு உண்டு, ஒன்று ஜாதகரை சாந்தவர்கள் அனுபவிப்பார்கள், அல்லது ஜாதகரின் கூட்டாளி அனுபவிப்பர், இல்லை எனில் லாப ஸ்தானம் வலிமை பெற்ற ஜாதகரின் முதலாளி பரிபூரணமாக அனுபவிப்பார்கள்.

 எனவே ஒருவரின் சுய ஜாதகத்தில், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானத்திற்கும் லாப ஸ்தானத்திற்கும் அதிபதியான சனிபகவான் வக்கிரக நிலை பெறுவது மேற்கண்ட பாவக வழியில் இருந்து பெரும் யோக பலன்களை 10 சதவிகிதம் என்ற அளவிலேயே வழங்கும், சுய ஜாதகத்தில் சனி வக்கிரக நிலையில் இருப்பின், இதன் விளைவை கருத்தில் கொண்டு முறையாக வக்கிரக நிவர்த்தி பெறுவது, சுய ஜாதகத்தில் உள்ள யோக பலன்களை ( அதாவது ஜீவனம் மற்றும் லாபம் ) 100 சதவிகதம் அனுபவிக்க வைக்கும், சனிபெருக்கம் என்ற பொன்மொழிக்கு ஏற்ப ஜாதகரின் வாழ்க்கையில் ஜீவனம் பன்மடங்கு பெருகி, மிகப்பெரிய யோக வாழ்க்கையையும் தன்னிறைவான பொருளாதார வெற்றியையும் தங்கு தடையின்றி கொடுக்கும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 10 மே, 2014

திருமணதிற்கு பிறகு முன்னேற்றம் பெரும் யோக அமைப்பு !





சுய ஜாதக அமைப்பில் களத்திர ஸ்தானம் என்று வர்ணிக்கப்படும் 7ம் பாவகம் ஒருவருக்கு நல்ல நிலையில் வலிமை பெற்று இருக்குமெனில், அந்த ஜாதகரின் வாழ்க்கையில் பொருளாதார முன்னேற்றமும், கௌரவம், சமுதாய அந்தஸ்து, தன்னிறைவான வாழ்க்கை என்ற விஷயங்கள் அனைத்தும் திருமணத்திற்கு பிறகே நடைமுறைக்கு வரும், மேலும் களத்திர பாவகம் எனும் 7ம் வீடு தொடர்பு பெரும் பாவகம் சர ராசியாக இருப்பின் ஜாதகரின் யோக வாழ்க்கை, திருமணதிற்கு பிறகு விரைவாக குறுகிய காலத்தில் மிக பெரிய யோக வாழ்க்கையை தந்துவிடும்.

உதாரணமாக :


மேற்கண்ட ஜாதகருக்கு மிதுன லக்கினம்,  களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம்  சர ராசி மற்றும் லாபஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிகுந்த யோகத்தை தரும் அமைப்பாக கருதலாம், ஜாதகரின் வாழ்க்கையில் பொருளாதார ரீதியான தன்னிறைவு வாழ்க்கை, சமுதாய அந்தஸ்து, செய்யும் தொழில் வெற்றி என்ற வகையில் அனைத்து நன்மையையும் திருமண வாழ்க்கைக்கு பிறகே என்பது தெளிவாகிறது, மேலும் ஜாதகரின் இலக்கின மிகுந்த வலிமையுடன் இருப்பதால் ஜாதகர் களத்திர பாவக வழியில் இருந்து வரும் யோக பலன்களை 100 சதவிகிதம் தங்கு தடையின்றி அனுபவிக்கும் யோகத்தை தரும்.

பொதுவாக சுய ஜாதகத்தில் களத்திர பாவகம் வலிமை பெரும் பொழுது குறிப்பாக லாப ஸ்தானதுடன் தொடர்பு பெரும் பொழுது, ஜாதகர் காலத்திற பாவக வழியில் இருந்து யோக வாழ்க்கையை அனுபவிக்க பிறந்தவர் என்பது உறுதி, எனவே ஜாதகர் களத்திர பாவகம் குறிப்பிடும் நபர்கள் வழியில் இருந்து யோக வாழ்க்கையை பெறுவார், களத்திர பாவகம் தொடர்பு படுத்தும் முதல் நபர் ஜாதகரின் வாழ்க்கை துணை, ஜாதகர் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து சொத்து சுகம், தொழில் முன்னேற்றம், பொருளாதார முன்னேற்றம், சமுதாயத்தில் கௌரவம் மற்றும் அந்தஸ்து என்ற வகையில் நன்மைகளை பெறுவார்.

களத்திர பாவகம் தொடர்பு படுத்தும் இரண்டாவது நபர் ஜாதகரின் நண்பர்கள், மேற்கண்ட ஜாதக அமைப்பில் வாழ்க்கை துணைக்கு அடுத்ததாக ஜாதகரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்க்காக பாடுபடும் நபர்கள் ஜாதகரின் நண்பர்கள் என்றால் அது மிகையில், ஜாதகரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு அவரின் நண்பர்கள் துணை நின்று ஜாதகரை சிறப்பாக வழிநடத்தி செல்வார்கள், ஜாதகரின் வெற்றிக்கு அவரின் நண்பர்கள் உறுதுணையாகவும், பக்க பலமாகவும் நிற்பார்கள், எவ்வித சூழ்நிலையிலும் ஜாதகரை விட்டு பிரியாமல் துணை நிற்பது ஜாதகர் செய்த புண்ணியமே.

 களத்திர பாவகம் தொடர்பு படுத்தும் மூன்றாவது  நபர் ஜாதகரின் தொழில் முறை கூட்டாளிகள், ஜாதகருடன் தொழில் முறையில் கூட்டு சேரும் நபர்கள் யாவரும் மிகவும் நல்ல குணம் கொண்டவர்களாகவும், நேர்மையான நன்னடத்தை உள்ளவர்களாகவும் காணப்படுவார்கள், தன்னுடன் கூட்டு தொழில் புரியும் ஜாதகரின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை கொண்டவர்களாக காணப்படுவார்கள், ஜாதகரின் தொழில் முன்னேற்றத்தில் தானும் பலன் பெற்று ஜாதகரையும் மிக பெரிய இடத்திற்கு எடுத்து செல்லும் தன்மை பெற்றவர்களாக இருப்பர்கள்.

களத்திர பாவகம் தொடர்பு படுத்தும் நான்காவது நபர், பொது மக்கள் ஜாதகர் எடுத்து வைக்கும் முன்னேற்ற பாதையின் ஒவ்வொரு படிக்கட்டுகளாக அமைவது பொதுமக்களே என்றால் அது மிகையில்லை, ஒரு ஊருக்கு, ஒரு நகரத்திற்கு, ஒரு மாநிலத்திற்கு, ஒரு நாட்டிற்கு தலைமை பொறுப்பேற்கும் நபர்களின் ஜாதகத்தில் நிச்சயம் மேற்கண்ட களத்திர பாவகம் வலிமை பெற்று இருக்கும், சுய மரியாதை, கௌரவம், ஏகோபித்த மக்கள் ஆதரவு என்ற வகையில் காலத்திற பாவகம் ஜாதகருக்கு யோக பலன்களை வாரி வழங்கும் என்றால் அது மிகையில்ல, மேற்கண்ட நன்மைகள் யாவும் ஜாதகருக்கு நடைபெற வேண்டும் எனில் ஜாதகர் காலத்திற பாவகதிர்க்கு உண்டான திருமண வாழ்க்கை அமைந்தால் மட்டுமே சாத்தியம்.

மாறாக சுய ஜாதகத்தில் களத்திர பாவகம் வலிமை பெற்று, ஜாதகார் ஏதாவது ஒரு காரணதிற்காக திருமண வாய்ப்பை தட்டிகழிக்கும் பொழுது மேற்கண்ட பாவக வழியில் இருந்து வரும் ஒரு நற்பலன்களையும் அனுபவிக்க இயலாத சூழ்நிலையை தந்துவிடும், ஒரு வேலை தனக்கு அமைந்த வாழ்க்கை துணையின் (திருமணம் அல்லாத )  ஜாதகத்தில் களத்திர பாவகம் பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்று இருப்பின் ஜாதகரின் யோக நிலைகள் யாவும், பங்கபட்டு ஜாதகருக்கு எவ்வித யோக வாழ்க்கையையும் அனுபவிக்க இயலாத சூழ்நிலையை தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

புதன், 12 மார்ச், 2014

1,7,10ம் பாவகம் வலிமை பெரும் பொழுது ஜீவன வழியில் இருந்து ஜாதகர் பெரும் வெற்றி வாய்ப்புகள் !



 சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது, சம்பந்தபட்ட ஜாதகரின் வாழ்க்கையில் தொழில் மற்றும் வேலை வாய்ப்பில் மிகுந்த முன்னேற்றத்தை வாரி வழங்கும், தங்கு தடையின்றி ஜீவன முன்னேற்றத்தை தரும், ஜாதகர் எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளித்து வெற்றி காணும் யோக வாழ்க்கையை பெற்று தரும்.

 கிழ்கண்ட மகர இலக்கின ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே !




லக்கினம் : மகரம் 
ராசி : மீனம் 
நடசத்திரம் : ரேவதி 4ம் பாதம் 

 ஜாதகருக்கு 1,7,10ம் பாவகங்கள் ஜீவன ஸ்தானமான 10 ம் வீட்டுடனே தொடர்பு பெறுவது மிகுந்த யோகத்தை தரும் அமைப்பாக கருதலாம் , இதில் ஜீவன ஸ்தனத்துடன் தொடர்பு  பெரும் 1,7,10 ம் பாவகங்கள் ஜாதகருக்கு எவ்வித யோக பலன்களை வாரி வழங்கும் என்பதனை சற்று ஆய்வுக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே !

 உடல், உயிராகிய லக்கினம் ஜீவன ஸ்தானமான 10 ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சிறப்பான ஒரு விஷயமே, ஜீவன ஸ்தானம் ஜாதகருக்கு துலாம் ராசியில் அமைவதும், அந்த துலாம் ராசி கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் பாவகமாக வருவதும், சர காற்று தத்துவ அமைப்பை ஏற்று நிற்பதும் ஜாதகருக்கு பரிபூரண யோகத்தை வழங்கும , பொதுவாக சர காற்று தத்துவ ராசி நல்ல நிலையில் இருப்பது ஜாதகருக்கு தன்னிறைவான அறிவாற்றலை வாரி வழங்கும் , அடிப்படையில் இந்த ஜாதகருக்கு லக்கினம் ஜீவன ஸ்தனத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர் சிறு வயது முதல் தந்தையின் அரவணைப்பில் கட்டுப்பாட்டில் வளரும் சூழ்நிலையை தரும், மேலும் கௌரவமான வாழ்க்கை மேற்கொள்ளும் யோகத்தை தரும், தனது சுய அறிவாற்றல் கொண்டும், சுய உழைப்பை கொண்டும் வாழ்க்கையில் முன்னேற்றம் பெற்றவராக இருப்பார்.

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு  7ம் வீடான துலாம் ராசியுடன் ஜாதகரின் லக்கினம் தொடர்பு பெறுவதால், ஜாதகருக்கு அமையும் வாழ்க்கை துணை மிகுந்த யோகம் கொண்டவராக காணப்படுவார், ஜாதகரின் வாழ்க்கையில் முன்னேற்றம் என்பதே திருமண வாழ்க்கைக்கு பிறகுதான் என்றால் அது மிகையில், மேலும்  ஜாதகரின் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பவர்கள் மனைவி, நண்பர்கள், பொது மக்கள் என்ற அமைப்பில் ஜாதகருக்கு இலக்கின வழியில் இருந்து பலன் தரும்.

 களத்திர ஸ்தானமான 7ம் பாவகம் 10ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது, ஜாதகர் மனைவி வழியில் இருந்து யோக வாழ்க்கையை பெறுபவர் என்ற அமைப்பையும் தரும், மேலும் ஜாதகரின் வெளி வட்டார பழக்க வழக்கங்கள் மற்றும் தொடர்புகள் அனைத்தும் மிக பெரிய அந்தஸ்து கொண்ட நபர்களுடன் இருக்கும் என்பதே குறிப்பிடத்தக்கது, மேலும் அரசியல்வாதிகளின் அதாரவும் ஜாதகருக்கு பரிபூரணமாக கிடைக்கும், அரசு சார்ந்த அமைப்புகளில் இருந்து லாபம் பெரும் யோகத்தை தரும், குறிப்பாக ஜாதகர் வியாபாரம் செய்தால் பொதுமக்கள் ஆதரவும், அரசு ஆதரவும் தடையின்றி கிடைக்கும், மேலும் வாழ்க்கை துணை, நண்பர்களின் ஆதரவும் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும்.

 ஜாதகருக்கு வெளிநாடுகளில் இருந்து நிறைவான பொருள் வரவு உண்டாகும், வெளிநாடுகள் பலவற்றிற்கு சென்று வரும் யோகத்தை தரும், ஜீவன வாழ்க்கை வெளிநாடுகளில் அமைந்தால் ஜாதகர் பொருளாதார ரீதியான தன்னிறைவை குறுகிய காலத்தில் பெரும் யோகம் உண்டாகும், அல்லது வெளிநாடுகளில் இருந்து வரும் பொருட்களை வாங்கி விற்பனை செய்தாலோ, ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த தொழில்களை மேற்க்கொண்டாலோ கை நிறைவான வருமானம் தடையின்றி 100 சதவிகிதம் கிடைக்கும், ஜாதகரின் வாழ்க்கை குறுகிய காலத்தில் முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கும்

 ஜீவன ஸ்தானம் 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகர் சுய தொழில் செய்வதே வெற்றி மிகுந்த வாழ்க்கை பெற்றுத்தரும் என்பது உறுதியாகிறது, மேலும் ஜாதகர் வேறு ஒரு இடத்தில் பணியாற்றுகிறார் என்றால் ஜாதகரின் வெற்றி வாய்ப்புகள் யாவும், அவர் வேலை செய்யும் தொழில் நிறுவனத்திற்கு சென்று விடும், குறிப்பிட்ட நிறுவனத்திற்கு  மிக பெரிய முன்னேற்றத்தை பெற்று தந்து விடும், மாறாக ஜாதகர் சுயமாக தொழில் செய்தால் ஜாதகருக்கே பரிபூரண வெற்றிகளை வாரி வழங்கிவிடும், இந்த கருத்தை இங்கே பதிவு செய்ய காரணம் ஜாதகரின் ஜீவன ஸ்தானம் சர ராசியாக அமைவதாலும், துலாம் காற்று தத்துவ ராசியா இருப்பதாலுமே இதை குறிப்பிடுகிறோம், சர ராசி ஜாதகருக்கு 100 சதவிகித வெற்றியை தரும், காற்று தத்துவம் ஜாதகருக்கு செலவில்லா மக்கள் விளம்பரத்தையும், தொழில் நேர்மையையும் உலகுக்கு எடுத்து சொல்லும், துலாம் ராசி உலக புகழ் பெற வைக்கும்.

மேலும் ஜாதகரின் ஜீவன ஸ்தானம், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் வீடாக வருவது ஜாதகர் தனித்தும் தொழில் செய்து வெற்றி பெற முடியும், கூட்டு முயற்ச்சி, அல்லது கூட்டு தொழில் மூலமாகவும் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை பெற இயலும், ஜாதகர் சுய தொழில் ஆரம்பிக்க சரியான நேரம் எதுவென்றால் மேற்கண்ட 1,7,10ம் பாவகங்கள் ஜீவன ஸ்தானமான  10ம் வீட்டுடன் தொடர்பு பெற்று பலனை நடத்தும், திசை,புத்தி,அந்தரம்,சூட்சமம் இவைகளில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து தொழில் துவங்கினால் ஜாதகருக்கு நிச்சயம் 100 சதவிகித தொழில் வெற்றியை வாரி வழங்கும் என்பது நிச்சயம்.

ஜோதிடன் வர்ஷன் 
வாழ்க வளமுடன் 
9443355696,9842421435